கங்கா. இவள் தான் இந்த கதையின் நாயகி. எல்லாருடனும் எளிதாய் பழகிவிடும் குணம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் ரசிக்கும் மனம். எப்போதும் இவளை சுற்றி பிரன்ட்ஸ் கூட்டம் இருந்துட்டே இருக்கும்.


இவர் தான் ஹீரோ. ராகுல்! கிட்ட தட்ட ஹீரோயின் போல் தான். இளமைகாலம் திரும்பாது என்னும் சொல்லே மந்திரமாய் எண்ணி ஜாலீயாய் திரிபவன். கிட்ட தட்ட தரடிக்கெட்டு! குட்டி சுவற்றில் நண்பர்கள் அனைவரும் உக்கார்ந்துக்கொண்டு  சிக்ரெட்டை ஊதிக்கொண்டே போகும்/வரும் பெண்களை கேலி செய்யும் முக்கிய அந்தஸ்த்தில் உள்ள வேலை.  இந்த வேலைக்கு தாராளமாய் பணம் பாக்கெட் மணியாய் அப்பாவிடமிருந்து பெறுவதால் இன்னும் அவனின் இளமைகாலம் பற்றி சொல்லவா வேண்டும்???பெண்கள் ஈசியா இவன் வட்டத்துக்குள் நுழைந்துவிடுவதால் கங்கா அவன் கண்ணுக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்.

கங்கா செல்லும் எல்லா இடங்களுக்கும் சென்று எப்படியாவது பேசிடலாம்னு நெனைச்சான். இதெல்லாம் கங்காவுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் பொழுது போகணுமே :-)  6 மாதம் இப்படியே சென்றது

ஒரு முறை ராகுலின் செல்போன் அடித்தது. "நான் கங்கா பேசுறேன். உங்கிட்ட பேசணும். காலைல வரமுடியுமா?" ஆச்சர்யத்திலிருந்து மீள சில நிமிடங்கள் தேவைபட்டது. சகஜநிலைக்கு வரும் போது போன் மட்டும் அவன் கையில்.  இது கனவா இல்ல உண்மையிலேயே போன் போட்டாளா என  சிந்தித்து சிந்தித்து தலையை கழட்டி கீழே வைக்கும் அளவுக்கு பாரம். அவளே தான்......உறுதிபடுத்தியபின்  தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான். உண்மையில் அவள் வருவாளா???


கங்காவிற்கு முன்பே அந்த இடத்தில் ராகுல் ஆஜர். "ஆச்சர்யமா இருக்கு. உங்க கிட்ட இருந்து போன் வரும்னு நெனச்சு கூட பாக்கல. என் நம்பர் உங்களுக்கு...............?"

அதென்ன பெரிய விஷயம் என்பது போல் புன்னகைத்தாள்.

"சரி... எதுக்கு கூப்டீங்க ?" ஆவலாய் கேட்டான்.

"என்ன? என்ன(ஐ) லவ் பண்றீயா?"

முதல் வார்த்தையே காதலை பற்றியது தான் என்பதை அவன் சற்றும் எதிர்பாத்திருக்கவில்லை. அடுத்து மீண்டும் ஒரு அதிர்ச்சி தந்தாள். அவன் பதில் சொல்ல எத்தனித்த போது.....

"அப்படியொரு எண்ணத்துல தான் என் பின்னாடி ரொம்ப நாளா சுத்திட்டிருக்கன்னு தெரியும். தேவையில்லாம மனச போட்டு கொளப்பிக்காத"

"ஏய்... லுக்.... நீயா தான் போன் போட்டு கூப்ட.... மூச்சே விடாம படபடன்னு பேசுற? எனக்கும் பேச டைம் கொடு.  நா போற இடத்துக்கெல்லாம் நீ வந்தா அது என் தப்பா? நா ஒன்னும் உன்னைய லவ் பண்ணல. புரிஞ்சதா?" என பொரிந்துதள்ளிவிட்டான்.

"இத தான் நானும் எதிர்பார்த்தேன். ரொம்ப தேங்க்ஸ்! "

ம்???? சரி என்னைய ஏன் கேக்குற? நீ என்னைய லவ் பண்றீயா என்ன?-இது ராகுல்

ஹா....ஹா....ஹா.... ஹேய்..... ஜோக்கா? நா கற்பனைக்கும் உன் லைப் ஸ்டைலுக்கும் இடையேயான தூரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே அதிகம்.  என் பின்னாடி சுத்துற மாதிரி ஒரு பீலிங்க். அதான் உன்கிட்டையே கேட்டுட்டேன். சரி வரட்டா?"

அவளின் பேச்சுகளுக்கு விடை தெரியாதவனாய் மௌனத்தில், கோபத்தில், இயலாமையில் ராகுல்...சந்தோஷமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் ஸ்கூட்டியில் பறந்தாள் தன் உயிர்தோழி ரம்யாவின் காதலில் தான் குறுக்கே இல்லை என்ற திருப்தியில்.........  இதுவரை போகும் இடமெல்லாம் ராகுல் தென்பட்டது தன்னை பார்க்க இல்லை எனவும், கூடவே இருக்கும் ரம்யாவிற்காக மட்டும் தான் என்பதையும் உறுதி படுத்தியவளாய் இந்த விஷயத்தை ரம்யாவிடம் சொல்லி அவளின் சந்தோஷத்தையும் வெட்கத்தையும் கண்டு உள்ளம் பூரித்தாள்.

கங்காவின் உள்ளம் கலங்கியது அவளின் நான்கு சுவறு படுக்கை அறைக்கும் ஈரம் தாங்கிய தலையணைக்கு மட்டுமே தெரியும். தன் காதலை தோழிக்கு விட்டு கொடுத்த வலி ஒருபுறம். ராகுல் தன்னை காதலிக்க வில்லை என்ற வேதனை ஒரு புறம் அவளை வாட்டி தீயிட்டு கொழுத்த தான் செய்தது.


வேலைக்காக ராகுலும் வெளிநாடு சென்றுவிட்டான். அவ்வப்போது ரம்யா ராகுலிடம் பேசிவதை கங்காவிடம் பகிர்ந்துக்கொள்வாள். ரம்யா செல்போனில்  பேசும் போது அவ்வபோது கங்காவிடம் பேச சொல்லி நீட்டுவாள்.  உள்ளத்தின் வேதனை விழியின் நீர் துளி காட்டி கொடுத்துவிடுமோ என்ற பயத்தில் நாசூக்காய் நழுவிவிடுவாள்.

3 வருடங்கள் கழிந்தது...

எதேச்சையாக பேருந்து நிறுத்தத்தில் அவளை கடந்து சென்ற காரில்  ராகுலை கண்டாள் கங்கா. ஒரே ஆச்சர்யம். நேற்று வரை ரம்யா ராகுலின் இந்திய வருகை பற்றி கூறவில்லை. ஒரு வேளை ரம்யாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க கூட இருக்கலாம். சிறுது தூரம் சென்ற கார் மீண்டும் திரும்பி அவளை நோக்கி வந்தது.

"ஹாய்... ராகுல்...! என்னை ஞாபகம் இருக்கா?"

ஹேய் கங்கா.... மறக்க கூடிய ஆளா நீ? எப்டி இருக்க?

ம்ம்ம்ம்ம்ம்......பார்த்தா தெரியல? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.

"எவ்வளவு நேரம் தான் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணுவ? இப்பவே லேட் ஆச்சு. நம்பிக்கை இருந்தா கார்ல ஏறலாம் :-) . ஒன்னை ஒன்னும் கடத்திடமாட்டேன்." சிரித்தபடியே கங்கா காரில் ஏறினாள். சிறிது நேரம் காருடன் சேர்த்து அவர்களின் மௌனமும் பயணித்தது. கங்காவே ஆரம்பித்தாள்.

ஆமா நீ எப்டி இருக்க? பாரின் லைப் எப்படி இருக்கு??

 "இன்னும் உன்னையே நெனச்சுட்டு........... ஏதோ இருக்கேன். அங்கே போயும் உன்னை மறக்க முடியாமதான் தவச்சுட்டிருக்கேன்."

"......................................"

"நீ என்னைய வேணாம்னு சொன்னாலும் கூட  இந்த நொடி வரைக்கும் உன்னைய.... உன்னைய மட்டும் தான் காதலிச்சுட்டிருக்கேன்."

"ர....ர்........ரம்யா??"

"அவ அப்பப்ப உன்னைய பத்தி சொல்ற விஷயங்கள் மட்டுமே எனக்கு திருப்தி கொடுத்துட்டிருந்துச்சு. அவளும் எவ்வளவோ ட்ரை பண்ணா... உன்னையும் என்னையும் சேர்த்து வைக்கிறதுக்கு.  பட் கல்நெஞ்ச காரியாச்சே நீ?" அவளிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாததால் அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.தான் இறங்கும் இடம் வந்த பின் காரைவிட்டு இறங்கி அவனிடம் எதுவும் சொல்லாமலேயே வீட்டுக்குள் சென்றுவிட்டாள். "ச்ச.... நிச்சயதார்த்தம் ஆன பொண்ணுகிட்ட இப்படி பேசுனது எவ்வளவு அநாகரிகமான விஷயம்??"என தன்னை தானே நொந்துக்கொண்டான்.

ஒரு வாரத்திற்கு பிறகு.....

ராகுலின் செல்போன் மணி ஒலித்தது.  "நான் கங்கா பேசுறேன். உங்கிட்ட பேசணும். வரமுடியுமா?"

அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு முன்பே அவள் அங்கே காத்துக்கொண்டிருந்தாள்.

அன்னைக்கு ஒருவார்த்தை கூட பேசாம போயிட்ட? எதுவும் தப்பா பேசிட்டேனா..  சரி இப்ப என்ன விஷயமா வர சொன்ன?

இனி உன்னை யாருக்காகவும் விட்டுகொடுக்க போவதில்ல. ஒரு நொடி கூட உன்னைய இனி பிரியமாட்டேன்" என அவன் மார்பில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள்.

அவளின் திடீர் மாற்றத்திற்கு காரணம் ஆராய்வதற்கு இடம் கொடுக்காமல் சந்தோஷம் அவன் உச்சி முதல் பாதம் வரை பரவியிருந்தது. அவளை பார்க்க இந்தியா வந்தவன் அவளே சொந்தமாக போகிறாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.


**********சுபம் :-)**********
எப்ப்ப்ப்ப்ப்ப்பா எந்த தொடர்பதிவுக்கும் ஒரு மாசம் வரைக்கும் மெனக்கெட்டதே இல்ல..... அதிரா மேல கொஞ்சம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-) 

என்னையும் நம்பி என்னை தொடர்பதிவுக்கு அழைத்த சமைத்து அசத்தலாம் ஐலேசா.....சாரி சாரி...... ஆசியா ஹி...ஹி...ஹி..... க்கு மிக்க நன்றி. கதையும் அதற்கேத்த பாட்டும் அமைக்க சொல்லியிருந்தாங்க (ஐ.... செலவு பண்ணாமலேயே டைரக்டர் ஆயிட்டோம்ல)  இனிமே நோகாம  நொங்கு திங்கிற தொடர்பதிவுக்கு கூப்டுங்கப்பா.... கதை எழுதி பாட்டு எழுதணுமா இல்ல பாட்ட செலக்ட் பண்ணி கதை எழுதணூமான்னு ஒன்ன்ன்ன்னும் புடிபடல. பாட்டுக்காகவே கதைய மாத்தியாச்சு :-)

யான் பெற்ற துன்பம் பெறுக இந்த பதிவுலகம்.... இதனை தொடர என் தம்பிகள் மற்றும் தோழிகள்
சிறகுகள் மது
நண்பர்கள் ராஜ்
தோழி கூடல் நிலா- நாகாராம்
உப்பு மடசந்தி-ஹேமா
காகித பூக்கள்- ஏஞ்சலின்
சாதாரணமானவள் 

யாராச்சும் எழுதாம எஸ்கேப் ஆனீங்கன்னு கேள்விபட்டேன்ன்ன்...... அவ்வளவு தான் சொல்லுபுட்டேன் ஹி..ஹி...ஹி...

, , ,

“மாத்தியோசி” என்ற தலைப்பின் கீழ் பதிவர்கள் தங்களுக்குள் மாற்றிப் பதிவெழுதலாமே! என்ற கருத்தை  சகோ.வரோ  முன் வைத்த போது    சகோதர்கள் துஸ்யந்தன், மதுரன், கே.எஸ்.எஸ்.ராஜ், மற்றும் ஆமினாவாகிய நான் :-)  அதற்கு விருப்பம் தெரிவித்திருந்தோம். அதன்படி சிறகுகள் ப்ளாக் ஓனர் சகோதரர் மதுரன் அவர்களின் சிறுகதை இன்று  என் குட்டிசுவர்க்கத்தை அலங்கரிக்கிறது.

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்
_________________________________________________________
நேரம் 12.30 ஐ தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில மணிநேரங்களில் எப்படியும் விடிந்துவிடும். நேரம் என்ன எனக்காக நிற்கவா போகிறது?..................... கலைவாணியின் மனம் ஓரிடத்தில் நின்றபாடில்லை.  என்ன செய்வது? எதிர்த்து நிற்பதும் முடியாத காரியம். எதிர்த்தால் அம்மா அடிப்பா… ஊரார் குசுகுசுப்பார்கள். வெளியில் தலைகாட்ட முடியாது. அம்மா நினைத்து நினைத்து திட்டிக்கொண்டே இருப்பா..
”பேசாமல் இருந்துவிடுவோமா? ஊரில் எனக்கு மட்டுமா நடக்கிறது! எல்லாருக்கும்தானே நடக்குது” மனம் பலவாறாக சிந்தித்தது.


நாளை விடிந்ததும் கலைவாணியின் பூப்புனித நீராட்டுவிழா. வீட்டு முற்றத்தில் ஊரே கூடி பந்தல் போட்டு அலங்காரம் செய்துகொண்டிருக்கிறது. தாயும் தந்தையும் பூரிப்பில் அங்குமிங்குமாக நடந்து வேலைகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை “எங்கள் மகளும் வயதுக்கு வந்துவிட்டாள். நாளை அவளுக்கு சேலை உடுத்தி, நகைகள் அணிவித்து ஊரார் முன் கொண்டாடப்போகின்றோமே” என்ற பூரிப்பு. ஊராருக்கோ நாளை ஒரு கொண்டாட்டம்.
ஆனால் கலைவாணிக்கோ அது ஒரு உரிமை பிரச்சினை. அம்மாவும் அப்பாவும் நாளை சந்தோசமாக கொண்டாடப்போகிறார்களே என்பதை விட, இந்த ஆணாதிக்க சமூகத்தின் முன் நாளை என்னை காட்சிப்பொருளாக்கப்போகிறார்களே என்ற எண்ணம்தான் உறுத்திக்கொண்டிருந்தது.
கூடவே இவர்களை எதிர்த்து என்னால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வியும் குழப்ப மெதுவாக கட்டிலில் சாய்ந்தாள். எவ்வளவோ முயன்றும் தூக்கம் வர மறுத்தது. இரவு கொடுத்த பத்தியச்சாப்பாடு மேசையில் அப்படியே கிடந்தது.
ஜன்னல் வழியே அறைக்குள் படர்ந்திருந்த நிலவொளி கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர்ந்துசெல்ல சில மணிநேரங்கள் அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் நீண்டதொரு பெருமூச்சை விட்டபடியே எழுந்து கதிரையில் உட்கார்ந்தாள்.
”நான் வயதுக்கு வந்ததை மேடை போட்டு, மந்திரம் ஓதி உலகுக்கு அறிவிக்க இவர்கள் யார்?” ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டதை உலகுக்கு அறிவிப்பதில் அவள் பெற்றோருக்காகட்டும், சொந்தங்களுக்காகட்டும் அப்படி என்ன சந்தோசம்?.......
எங்கள் வீட்டில் ஒரு ஆடு தயாராகிவிட்டது. நரிகளே ஓடிவாருங்கள் தசைகளை உண்பதற்கு தயாராகுங்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்களா?
ஒரு ஆண் வயதுக்கு வந்தால் அது பற்றி அலட்டாத சமூகம் பெண்கள் வயதுக்கு வருவதை மட்டும் ஊரறிய கொண்டாடுகிறதே?
தன்னை ருசிக்க காத்திருக்கும் ஓர் ஆணாதிக்க சமூகத்தின் வெறிக்கொண்டாட்டமாகவே அந்த பூப்புனித நீராட்டுவிழாவை அவளால் பார்க்கமுடிந்தது.

”நாளை நடக்கும் அவர்களின் விழாவில் என் சுதந்திரங்கள்கூட பலிகொடுக்கப்பட்டுவிடுமே!! விரும்பிய ஆடை அணியமுடியாது, விரும்பிய இடம் செல்லமுடியாது, எல்லோருடனும் பேசமுடியாது, ஆண்களுடன் கண்டபடி கதைக்கக்கூடாது, பொது இடத்தில் முன்னுக்கு நிக்கக்கூடாது….. இப்படி எத்தனையோ…”
“மொத்தத்தில் நாளையிலிருந்து வேள்விக்காக பொத்தி பொத்தி வளர்க்கப்படும் ஆடுபோல நானும் ஆகிவிடுவேனே”
இதுவரை அடக்கிவைத்திருந்த அவளது கோபங்கள் கண்களிண் வழியாக உடைந்து கண்ணீராக வெளியேறின.
“என்ன நடந்தாலும் சரி! இவர்களின் தாளத்துக்கு நான் ஒருபோதும் ஆடப்போவதில்லை” நெஞ்சை சுட்ட கோபத்தினால் எழுந்த உறுதி மனதில் ஒருவித வெறுமையுடன் கூடிய அமைதியை தந்தது அவளுக்கு. அந்த அமைதியுடனேயே இலேசாக கண்ணயர்ந்து போனாள் கலைவாணி.

“ அம்மா கலை…. எழும்பும்மா... எழும்பி கெதியா குளி..” அம்மாவின் குரல் தூக்கத்தை கலைக்க மெதுவாக எழுந்து கட்டிலிலேயே சாய்ந்துகொண்டாள். ”இரவு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் சரி” தனக்குள் தானே கறுவிக்கொண்டாள். 


“என்னடி பிள்ளை இன்னும் குள்ளிக்கேல்லயே….. கெதியா எழும்பு.. போய் குளி” படபடத்தவாறே வந்த அம்மாவை ஒருகணம் வெறித்துப் பார்த்த கலைவாணி “அம்மா எனக்கு விருப்பம் இல்லை. நான் வெளிக்கிட மாட்டன்” என்றாள்.
அம்மா ஸ்தம்பித்துப்போய் திரும்பினாள். ”என்ன பிள்ளை சொல்லுற? ஏன் உன்ர வயதுப் பிள்ளையள் இப்பிடியே சொல்லுதுகள்? உன்ர அப்பன் என்னத்துக்கு கஷ்ரப்பட்டு உழைக்கிறார். உன்ன நல்ல இடத்தில கட்டிக்குடுக்கத்தானே. இப்படி கொண்டாடாட்டி சனம் நாலுவிதமா கதைக்குங்கள். உனக்கு ”ஒண்டும்” ஆகேல்ல எண்டு கதைச்சா உன்ர வாழ்க்கையே நாசமா போயிரும்”
“இல்லையம்மா அது வந்து….”
“ஒண்டும் கதைக்காத.. நீ சின்னப்பிள்ளை. உனக்கு இப்ப ஒண்டும் தெரியாது! சனம் ஒவ்வொரு விதமா கதைச்சா உன்ன எவன் கட்ட வருவான்? பிறகு நானும் கொப்பரும் மருந்த குடிச்சு சாகவேண்டியதுதான்…. நாங்க என்னத்துக்கு இவ்வளவு கஷ்டப்படுறம்…..”
அம்மா விசும்பத்தொடங்கிவிட்டாள். ”இஞ்ச பார்… நாளைக்கு நாங்க உயிரோட இருக்கோனும் எண்டா பேசாம வெளிக்கிடு…. இல்லாட்டி உன்ர எண்ணத்துக்கு நட……..” என்று கூறிவிட்டு விசுக்கென்று வெளியே போய்விட்டாள் அம்மா.

”அவளுக்கென்ன தெரியும்.. பழமையிலேயே கட்டுண்டவள். ஆண்கள் எம்மை அடக்கிவைத்திருக்க போட்ட எழுத்தில்இல்லாத சட்டத்தையெல்லாம் பண்பாடாக கருதி ஏற்றுக்கொண்டிருக்கிறாள். அவளை பொறுத்தவரை இந்த பூப்புனித நீராட்டுவிழா ஒரு சம்பிரதாயம். நாளை என்னை காட்சிபொருளாக்கி ரசித்துக்கொண்டிருப்பவர்களின் முன்னால் நான் கூனிக்குறுகி உட்கார்ந்திருக்கப்போவது அவளை பொறுத்தவரை ’அடக்கமான பெண்’ அவளுக்கு இப்போது சொன்னாலும் புரியப்போவதில்லை.
”என்ன செய்வது? அப்பாவும் அம்மாவும் என்னை கஷ்ரப்பட்டு வளர்த்தவர்கள். அதற்காக என் உரிமைகளை விட்டுக்கொடுக்கலாமா?”
”ஒருவேளை நான் மறுத்துவிட்டால் அம்மா சொன்னதுபோல தற்கொலை செய்துகொண்டால்???”
அம்மா அழுத்தக்காரி. சொன்னதை செய்துவிடுவாள்.
நீண்டநேர சிந்தனைக்கு பின் கட்டிலை விட்டு எழுந்தாள்.
“என் உரிமைகளைவிட அம்மா அப்பாதான் முக்கியம்… ஆனால் ஒன்று…. என் பிள்ளைக்கும் இதே நிலை வர நான் அனுமதிக்கப்போவதில்லை…”


by
மதுரன் ரவீந்த்ரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரும்பதங்கள்
கொப்பர் :- அப்பா
கெதியா :- விரைவாக, சீக்கிரமாக
_____________________________________

மாத்தியோசித்தவர்கள் :-)

மதுரனின் பதிவு குட்டிசுவர்க்கத்தில்-  நிலவுகள் விற்பனைக்காக

சகோ வரோவின்  ப்ளாக்கில்-  என் பதிவு பழமையிலேயே புதுமை கண்ட இஸ்லாம் பாகம்-2

துஷ்யந்தனின் ப்ளாக்கில் வரோ வின் பதிவு  ஊரில ஹீரோ! வெளிநாட்டில ஸீரோ!

மதுரனின் ப்ளாக்கில் ராஜ்'ன் பதிவு   குஸ்பு என்றும் இளமையான பூ

ராஜ்'ன் ப்ளாக்கில் துஷ்யந்தனின் பதிவு  நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். அதை ஏன்  விமர்சிக்க வேண்டும்?

, , ,

maam is disturb me now-u! i am happy how??!!
என்னடா எல்லாரும் கொலவெறின்னு ஒரு தலைப்பையே வச்சு பதிவு போடுறாங்களேன்னு ஒரே ஆராய்ச்சி.. ஆராய்ச்சி முடிவுல தான் தெரிஞ்சது தி ஹிந்து கவர் ஸ்டோரி, ஒரு வாரத்தில் யூடூப்பில் 40 லட்சம் ஹிட்ஸ் (இப்ப 9,415,759 , இளசுகள் முனுமுனுக்கும்(??!!) பாடல், இதுவரைக்கும் தமிழ்பாட்டுக்கு இல்லாத வரவேற்பு..... எல்லாத்துக்கும் காரணம் வொய் திஸ் கொலவெறி??????

முதல் தடவ கேட்டதும் பிடிச்சு போச்சு.  பாட்ட டவுன்லோட் பண்ணி (மொதமொத சொயமா டவுன்லோட் பண்ண பாட்டு இதுதேன் அவ்வ்வ்வ்.....) கேட்டேன். மொத தடவையிலேயே கப்புன்னு மனசுல வரிகள் உக்கார்ந்துச்சு (?!!)

ஆஹா....ஆஹா.... என்னமா பாடியிருக்காரு.... அட...அட,...அட.....

பாட்ட முழுக்க அப்படியே ஒரு பேப்பர்ல எழுதி மனப்பாடம் பண்ணுட்டிருந்தேன். ஒடனே என் அம்மம்மா (பாட்டி) பரிச்சைக்கு படிக்குறீயா?"ன்னு கேக்குறாக. (கொலவெறின்னு வர்ர எடத்துல மட்டும் ஹொல்வெர்டி ;-)

சரின்னு மனப்பாடம் பண்ணி படிச்சா எங்க மாம்ஸ் (தாய் மாமா) இங்க்லீஸ் பாட்டுலாம் படிப்பீயா? நல்லாயிருக்கு"
ஒடனே நான் "ஆமா  தமிழ்ல என்ன பாட்ட எழுதுறானுவ? அதான் இங்க்லீஸ்க்கு மாறிட்டேன் மாம்ஸ்-u......

ஆக மொத்தத்துல படரிலீஸ்க்கு பொறவு எனக்கு எங்க வீட்ல மட்டும் எனக்கு கொலவெறியோட க்ளைமேக்ஸ் சீன் தான்னு  முடிவே பண்ணியாச்சு. அவ்வ்வ்வ்வ்.....

இந்த பாட்டு இங்க்லீஸ் பேசுறவுகள கேவலப்படுத்துற மாதிரி இருக்காம். தமிழ்ல்ல சாகடிக்கிற மாதிரி இருக்காம். இருக்குற இங்கிலிபீஸே மறந்து போய்டுமாம். ச்சச்ச... அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ.  on behalf of............. ன்னு யாரோ போட்டப்பவே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு டிக்ஸனரி(டிஸ்கவரி இல்ல), கூகுள் ட்ரான்ஸ்லேட் முழுக்க தேடிட்டிருந்தேன் ;-) ஆனா பாருங்கோ. மொத தடவ அந்த பாட்ட கேட்டப்பவே டிக்ஸ்னரி இல்லாம கப்புன்னு இங்கிலீஸ்லாம் புடிச்சுக்கிட்டேன். என்னமா வரி சேத்துருக்காக????

distance la moon-u moon-u
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u


இந்த வரிக்கே எல்லாரும் தலமுடிய பிச்சுட்டு அலையலாம். ச்சச்ச... பைத்தியமா இல்ல...
எப்படி எல்லாம் அவங்க யோசிச்சுருந்தா இப்படிலாம் எழுதியிர்ப்பாங்கன்னு யோசிச்சு தலமுடியெல்லாம் போய்டும்னு சொல்றேன். இனி எம்மவன் மூன் என்ன கலர் ன்னு கேட்டா நா முழிப்பேன்???? இப்படியே எல்லா ஜிகேயும் ஒவ்வொரு பாட்டுலையும் கோர்த்தாங்கன்னா அடுத்த வருஷம்லாம் ரைம்ஸ் புத்தகத்துல இவுக பாட்டா தான் வரும். ஏற்கனவே மேல கொடுத்த வரிலாம் நல்லா பாருங்க. அழகான ரைம்ஸ் தானே அது? ஆக சின்ன வயசுல ரைம்ஸ் படிக்காதவங்க இந்த பாட்டு வரப்ரசாதம். இந்த கொலவெறி பாட்டு  மூலமா அந்த குறையை போக்கியிருக்கார் தனுஷ்... இப்படியான நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட பாட்டையா மொக்கைன்னு சொல்றீக? வொய் திஸ் கொலவெறி??? 

அது யாருப்பா  பொம்பளைய கேவலப்படுத்துற மாதிரி வரி இருக்குன்னு சொன்னது?? அவர் எந்த அளவுக்கு அந்த பொண்ணுனால வேதனப்பட்டிருந்தா 33 தடவ கொலவெறின்னு சொல்லி ஒரு பாட்டு படிப்பாரு. ஒரு பொண்ண கேவலப்படுத்துனா ஒலகம் முழுக்க எல்லா பொண்ணுங்களையும் கேவலப்பத்துறானுவன்னு பீதிய கெளப்புறது? வொய் திஸ் கொலவெறி....

இது ஆங்கிலத்தின் புதிய சகாப்தம். இத பாலோ பண்ணி  பேச ஆரம்பிச்சா பட்டிக்காட்டான் கூட இனி  ஒப்பாரி வைக்கிறதுக்கு பதிலா oh god-u...... she is dead now-u. i am  happy how-u??? ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க. பொறவு என்ன? அப்துல் கலாம் என்ன கனவு காண சொல்றது?  ஒலகம் முழுக்க கொலவெறி இங்க்லீஸ் மொழி பேசி 2020ல இந்தியா எப்படியும் வல்லரசாய்டும்.

this-u song-u for lkg boys-u. I will not do home work-u!!!
ஆக இந்த படம்  ரிலீஸ் ஆவுறதுக்குள்ள பட்டி தொட்டிலாம் இங்க்லீஸ் பரவி குப்பைதொட்டிக்கு தமிழ் போய்டும். ஜெட்டு வேகத்துல சாவுதய்யா டமில்-U :-( :-( :-(

குறிப்பு- இந்த பாட்டை சில காரணங்களுக்காக வெறுத்தாலும்/ பிடிச்சாலும் கூட எப்பவும் குத்து சாங்க் நிலைக்காதுங்குறதுனால லூஸ்ல விடவேண்டிய விசயம் தான். உயிரே படத்துல வரும் பூங்காற்றிலே உன் சுவாசத்தை... எனும் பாட்டை இன்று வரையில் இனிக்கும் நமக்கு ரயில்ல ஏறி பாட்டு பாடுவானுங்களே அது என்ன பாட்டு (மறந்தே போச்சு)... இப்படித்தான். மறந்து போய்டும். சோ கொஞ்ச நாள்ல குப்பைல போகக்கூடிய பாட்டுக்காக மெனக்கெட்டு ஆ ஊ ன்னு கத்த எனக்கு ஜீவன் இல்ல :-(

 இந்த பாட்ட  எதிர்க்கும் முன் டாஸ்மாக், சீரழியும் இளைஞர்கள், சிக்ரெட் பத்தி பேசலாமே? சாரி... உண்ணாவிரதம் இருந்து கலாச்சாரத்த  கட்டி காப்பாத்துலாமே?!!!  ஆந்திரால போய் கார்த்தி  "நிச்சயமாக  தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு பிடிக்கும்... தெலுங்கு ரசிகர்கள் தான் ஒவ்வொரு சீனுக்கும்,  ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி,  விசிலடிச்சு ரசிக்கிறாங்க.. ஆனால்  தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை.. " சொன்னதுக்கு என்ன வகையான எதிர்ப்பு தெரிவிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல் :-) அப்பறம் ஆர்யாவும் ஜெய்ராமும் எதிர்த்தவர்கள் எங்கே???!! ஹி...ஹி..ஹி.. கோர்த்துவிட்டாச்சு.

 பாட்டு கேட்க

, ,


இஸ்லாத்தை பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கலாம். குர்ஆன் சொல்லும் விஷயங்கள் அறியப்பெறாத காரணத்தால் இஸ்லாம் என்ன சொல்கிறது என தெரியாமல் கூட இருக்கலாம். அப்படிபட்டவர்களுக்காக இஸ்லாம் பழைய காலத்திலேயே (கிட்டதட்ட கிபி 600க்கு முன்பிருந்தே…) இன்றைய புதுமையான விஷயங்களை தன்னகத்தே கொண்டு இன்று வரை தீயமாற்றம் பெறாமல் வளர்ந்துள்ளது என அறியத்தரவே இப்பதிவின் நோக்கம். என் கருத்துக்கள் தவறாய் இருக்கும் பட்சத்தில் சுட்டிகாட்டுங்கள் திருத்திக்கொள்ள வாய்ப்பாய் அமையும்.

பூப்பெய்தும் விழா

பாரம்பரியம்,கலாச்சாரத்தை எடுத்துசொல்ல கூடிய விழாவாய் இருந்த போதிலும் இன்று பலரால் வெறுக்கப்படும் அல்லது விமர்சனப்படுத்தப்படும்  ஒரு விழாவாக இப்போது நிலவுகிறது. இந்த வீட்டில் பருவமடைந்த பெண் இருக்கிறாள் என வரன் தேடுவோர்க்கு எளிதாய் தெரியவேண்டி நடத்தப்படுதாக சொல்லப்படுகிறது.

இது தேவையான ஒன்றா? கலாச்சாரத்தை கட்டி காப்பாத்துறோம் என்ற பேரில் பெண்களை இழிவுபடுத்துவதா?

 புதிதான; அர்த்தம் புரியாத சூழலுக்கு இழுக்கப்பட்டுள்ளோம் என்பதை கூட யோசித்து விடைபெற பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் அச்சிறுமிக்கு.
சகஜ சூழலுக்கு தன்னை மாற்றும் முன்பே அவளை அலங்கார பொம்மையாய் எல்லோர்க்கும் முன்னிலையில் பிரகடனப்படுத்துவது மன உளைச்சலுக்கு இட்டு செல்லாதா?

என்னை கேட்டால் இப்படியான சூழலில் அவளுக்கு தேவையான ஆறுதல்களும் அதை பற்றிய விழிப்புணர்வும் தருவது தான் அக்காலகட்டத்திற்கு அவளுக்கு தரும் பெரிய பரிசு. இப்போதாவது அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரென்று தெரியாமல் இருக்கிறோம். ஆனால் அக்கால கட்டத்தில் ஒருவரை ஒருவர் தெரியாமலோ அல்லது எவ்விதத்தில்லாவது உறவினராக இல்லாமலோ இல்லை. அப்படியிருக்க பருமடைந்த பெண் இந்த வீட்டில் இருப்பாள் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். பின் ஏன்தான் இந்த நோக்கத்திற்காகதான் நடத்துகிறோம் என்று சப்பைகட்டு கட்டி இந்த தேவையில்லாத சடங்குகள்?  இப்படி ஊர் கூட்டி விஷேஷம் நடத்தப்படுவதால் பலன் என்னவோ மொய் கறக்க நினைக்கும் பெற்றோர்களுக்கும், இன்னும் மாமனார் வீட்ல எவ்வளவு கறக்கலாம் என எந்நாளும் துடித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் தகப்பனார் வீட்டார்க்கும்  தான். இஸ்லாம் இத்தகைய தேவையற்ற  சடங்குகளை வெறுக்கிறது. இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்றை செய்வதும் புதிதுபுதிதாய்  சம்ப்ரதாய சடங்குகளை புகுத்துவதும் வெறுக்கப்பட்ட செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியது:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும்.(ஆதார நூல்-புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (ஆதார நூல்: முஸ்லிம்)


திருமண முடிவு
 இன்றைய காலகட்டத்தில் சுயமாய் முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் விரும்பியோ வெறுத்தோ வழங்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கை… என் கையில்… ஆகையால் நான் தான் தீர்மானிப்பேன் என்ற குரல் சமீப காலமா தான் ஓங்கியிருக்கு.  அதுவும் வலுக்கட்டாயமாய் தான் இந்த உரிமையை மீட்டுள்ளோம். ஆனால் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை பெண்களிடம் சம்மதம் கேட்பது என்பது எங்காவது படித்த குடும்பத்தில் மட்டுமே நிகழும் விஷயம். “அவளுக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்? நாம பாத்து எவன கட்டணும்னு சொல்றோமோ அவனுக்கு வாக்கப்பட வேண்டியது தான்”என சொல்லி சொல்லி எத்தனை கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்திருக்கும்? எத்தனை பெண்கள் விருப்பமில்லாத அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள்?

ஆனால்……………………

விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)

பாருங்கள்…. அக்காலத்திலேயே பெண்ணின் திருமண விருப்பத்தை உறுதிபடுத்திய பின்னரே; அவள் இன்னாரை திருமணம் செய்ய வாய் மொழியாக சம்மதம் தெரிவித்த பின்னரே திருமணம் நடத்தப்படவேண்டும் என கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் விருப்பமில்லாதவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டால் அத்திருமணத்தை ரத்து செய்ய கோரும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது.  விருப்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உளவியல் ரீதியாக அவள் அனுபவிக்கும் எண்ணற்ற வேதனைகளை,மனக்குழப்பங்களை,தடுமாற்றங்களை அறிந்து அன்றே இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஒரே மதம் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே. கணவன் இறந்து போனால்  மொட்டை அடிச்சுட்டு, வெள்ளை சேலை உடுத்தி, தாலி அறுத்து பொட்டை அழித்து வளையலை உடைத்து, பூவை உருவி…… (முன்பு உடன்கட்டை வேற) ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் பெண்ணை மீண்டும் மீண்டும் மரண வேதனை கொடுக்கும் சடங்குகளோ சம்ப்ரதாயங்களோ இஸ்லாத்தில் கிடையாது. மேலும் தாலி மெட்டி போன்ற பெண்ணை திருமணமானவள் என்று அடையாளப்படுத்தும் ஒரே காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அர்த்தமற்ற விஷயங்கள் இல்லை.

சமீபத்தில் கணவன் இறந்த பெண்ணிற்கு நடத்தபட்ட சடங்குகளை பார்க்கையில் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தம் தொண்டையை அடைத்தது. படத்தில் காட்டுவது போன்று ஏற்கனவே இருக்கும் அலங்காரங்களை அழிக்கவில்லை. வாசலுக்கு கொண்டு வந்து சில விதவை பெண்களின் மூலம் சடங்கு நடத்தப்பட்டது. அழகாய் போட்டு வைத்து,பூ சூடி, கண்ணாடி வளையல்கள் இட்டு வீதியில் அமர வைக்கப்பட்ட அந்த பெண்ணிடம் முகம்பார்க்கும் கண்ணாடி கொடுத்து கடைசியாய் ஒரு முறை பார்த்துக்கொள் என்கிறார்கள். பின் ஒன்றன் பின் ஒன்றாக எல்லா அலங்காரங்களையும் கோர முகத்துடன் அழிக்கப்பட்டது……  இவையனைத்தையும் வீதியில் போவோர் வருவோர் அக்கம்பக்கத்திலுள்ளோர் வேடிக்கை பார்க்கும்படி தான் செய்யப்படுகிறது…. இவையெல்லாம் எதற்கு? இதுக்கு பிறகு உனக்கு வாழ்க்கை இல்லை என சொல்வதற்காகவா?
காலம் மாறிவிட்ட போதிலும் கூட சமூகத்தில் தனக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக விதவை பெண்ணானவள் விருப்பமிருந்தும் மறுமணம் செய்ய தயங்குகிறாள். அல்லது மற்றவர்களால் அவ்வாறு செய்யக்கூடாது என தடுக்கப்படுகிறாள். ஆனால் இஸ்லாத்தில் மறுமணம் செய்ய பெண்ணுக்கு முழு உரிமை உண்டு.  அவளின் விருப்பத்தை/பாதுகாப்பை மறுக்கவோ தடை செய்யவோ எவருக்கும் உரிமை இல்லை.

 வரதட்சணை :-
திருமண சந்தையாய் மாறிவிட்ட இக்கால திருமண நிகழ்ச்சி எல்லாருக்கும் நன்கு தெரியும்.  பெண் வீட்டார் குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்குகின்றனர். அப்படியிருந்தும் கூட  “இன்னும் பணம் வாங்கிட்டு வா” என மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டு தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு துரத்துவதும், அவ்வாறு கிடைக்கவில்லை என்றால்  பெண்களை கொடுமைப்படுத்தி சாகும் அளவுக்கு பிரச்சனையை கொண்டு வருவதும் செய்திதாள்களின் மூலமாகவும் அண்டை வீட்டிலோ நம் நெருங்கிய வட்டத்திலோ அடிக்கடி கேள்விபடும் விஷயம். ஆனால் இஸ்லாத்தில் ஆண் தான் திருமணத்திற்கான தொகையை பெண்ணுக்கு பணமோ பொருளோ கொடுக்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இஸ்லாமிய ஆண் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அப்பெண்ணிற்கு குறிப்பிட்ட தொகை (மஹர்) கொடுக்க வேண்டும். பெண் வீட்டார் எள்ளளவும் செய்யத்தேவையில்லை. அதுவுமில்லாமல் அத்தொகையை நிர்ணயம் செய்வதற்கும் பெண்களுக்கே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. என்னவன் எவ்வளவு எனக்கு கொடுக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன். இவ்வளவு மணக்கொடை கேள் என யாரும் சொல்ல அனுமதி இல்லை . மேலும் மணக்கொடையாய் கொடுக்கப்பட்ட பணத்தையோ பொருளையோ முழுவதுமாக அனுபவிக்கும் உரிமையும் பெண்களுக்கு மட்டுமே!

நீங்கள் மணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.  அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வோடு புசியுங்கள்-(ஆதார நூல்-அல்குர்ஆன் 4 : 4)

:-)

பாத்தீங்களா? இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை? மணமகனை தேர்ந்தெடுப்பதும் பெண்கள் தான். திருமணத்தொகை பெறுவதும் பெண்கள்தான். எல்லாவற்றையும் விட பிடித்தமானவரை திருமணம் செய்யும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளது. இத்தகைய பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லதொரு சட்டங்கள் போன வருஷமோ முந்துன வருஷமோ ஏற்பட்டதல்ல…. நபி (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே  நடைமுறைபடுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய உரிமையெல்லாம் மகளிர் அமைப்புகள் மூலமாகவோ,போராட்டமோ, உண்ணாவிரதோ செய்து பெறப்பட்டதில்லை. 33 சதவீதம் தா என்று இன்றளவும் கெஞ்சிக்கொண்டிருக்கவும் இல்லை.  ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என நிரூபிக்கும் பல சான்றுகள் திருக்குர்ஆனில் கொட்டி கிடக்கிறது!  என்றோ எங்களுக்கு சுதந்திர காற்று அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்டுவிட்டது. இப்ப சொல்லுங்க…. இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தும் மதமா (மார்க்கமா?)? இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்தும் மதமா (மார்க்கமா?)? 

இன்னும் அதிகமதிகம் உள்ளது. பதிவு நீள்வதால் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பழைமை காலத்திலேயே கடைபிடித்த நவீன விஷயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்.

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

, , ,

எல்லாரும் ஆவலோடு இல்லாம பயத்தோடு எதிர்பார்த்த நாளாகவே தான் குருபூஜை இருந்தது....


சிறுவயதில் பெருநாளையொட்டி வந்த குருபூஜையில் பூஜைக்கு முதல் நாள் துணிமணி எடுத்துக்கொண்டு  அசால்ட்டாய் வந்த ஞாபகம்,பள்ளியில் அபிராமம் தோழி தென்னரசி சொன்ன விழா நிகழ்ச்சிகளும் இன்னும் கண்முன்னே....

ஆனால் தீபாவளிக்கு அடுத்த நாள் முதலே ஆங்காங்கே குவிக்கப்பட்ட போலீஸ் கண்டு கொஞ்சம் நடுக்கம் தான்.

சம்மந்தமே இல்லாம ஏன் அங்கங்கே போலீஸ் சேர் போட்டு உக்காந்து ஊர்கதை பேசிட்டிருக்காங்கன்னு  ஆச்சர்யமா கடந்து போனேன். உள்ளுக்குள் எங்கேயும் நம்மல கூப்டு விஷாரிச்சுடுவாங்களோன்னு ஒரு பயம் :-)) பின்பு தான் தெரிந்தது!!


பாவம் அவ்வபோது ஏமாற்றிய மழைக்காக அவர்கள் ஓடும் போதும்,

மேலதிகாரி சொகுசு காரில் கடந்து போகும் போது உடனே எழுந்து சல்யூட் அடிப்பதும் சத்தியமா இதுவரைக்கும் டீவிலதான் பாத்துருக்கேன். பெண்போலீஸ்களும் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்பது  பலருக்கும் உறுத்தலா இருந்தாலும் சரியா தவறான்னு விவாதம் பண்ணும் அளவுக்கு பக்குவம் இல்ல.  (நீ  இன்னும் வளரணும் தம்பி(ங்கச்சி)!!!:-)) அந்த டாப்பிக்குள்ளையும் போக இந்த பதிவுக்கு அவசியம் இல்லை :-) ஆனாலும் அங்கேயும் சிலர் குடும்பகதை பேசிட்டிருந்தது பார்த்து கொஞ்சம் மகிழ்ச்சி தான்.... உள்ளுக்குள்ள பயமில்லாம இருக்காங்க போலன்னு!!!!

நான்கு நாட்கள் அவர்கள் விழிப்பாய் செயல்பட்டதுக்கு கிடைத்த பலன் தான் இந்த அமைதியோ என்று தான் நான் நினைக்கிறேன். ஆங்காங்கே யாரேனும் கூடி பேசினால் கூட விரட்டிவிடுவதும் அவ்வப்போது தெருக்களில் ரோந்து வருவதுமாக 4 நாட்கள் ஐந்துமுனைபகுதியில் இருந்து (கலவரம் நடந்த இடம்)  ஓட்டப்பாலம் வரையிலான பகுதிகள் அவர்கள் வசமாய் இருந்தது! 

இந்த பகுதிகளில் தான் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அதிகமாக பஸ்கள் நிறுத்துவதற்கான இடவசதி இருப்பதால் எப்போதும் பஸ் ஆக்ரமித்திருக்கும். இரு பெட்ரோல் பங்க், மருத்துவமனை, கோயில் முன் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டதால் ஞாயிற்று கிழமை அன்று பல இடங்கள் வெறிச்சோடி கிடந்தது (எங்கே போயி நிப்பாட்டிருப்பாங்கன்னு விஷாரிக்கலாம்னு நெனச்சேன்... அதுலாமா நமக்கு தேவை ஹி...ஹி...ஹி... அதுனால விட்டுடலாம்)நிறைய கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சில தைரியசாலிகள் முதல் நாள் வரைக்கும் போட்டிருந்தாங்க. சிலர் 3 நாட்களாய் காணாம். எப்பவும் போல காய்கறி விலை அதிகமாகிவிட்டது. கால்கிலோ தக்காளி 10 ரூபாயாம்.... 100 கிராம் கத்திரிக்காய் 6 ரூபாயாம்...... ஒரு முட்டை 3ரூபாய்.50பைசா..........

சில மக்கள் தைரியமா வெளியே வந்தாங்க. ஆனா என்னை மாதிரி பலர் வீட்டுக்குள்ளையே:-)  பூஜைக்காக கலந்து கொள்ள வருபவர்கள் பண்ணும் கேலி,கிண்டல்,கத்தல்,கோஷங்கள் எல்லாமே எரிச்சல் ஊட்டுவதால் பெரும்பாலும் சந்துபொந்துகளில் சுற்றிதான் மற்றைடங்களுக்கு போகவேண்டிய நிலை. காலை 11 மணில இருந்து ஆரம்பிச்சு சாயங்காலம் 7 மணி வரை கொஞ்சம் பதற்றமாதான் கலவரப்பகுதிகள் இருந்தது. சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டதாக சொல்லியிருந்தாங்க. கடைதெருக்கு போய்விட்டு வந்த அம்மா  குறிப்பா ஐந்துமுனைபகுதியில் இளையான்குடி செல்லும் சாலை தடுக்கப்படிருந்தது என்று சொல்லியிருந்தாங்க. மற்றதெல்லாம் சரியா கவனிக்கலையாம் :-( ஆக மொத்தத்துல பரமக்குடி காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள்!!!

வழக்கம் போல் எல்லா அரசு/தனியார் அமைப்புகளும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. எதாவது எழுத மேட்டர் கிடைக்குமான்னு காத்திட்டிருந்தவங்களுக்கு அல்வா தான்

எல்லாம் நல்லபடியா நடந்து முடிந்ததில் பரமக்குடி மக்கள் ஏகத்துக்கும் குஷி..... கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களே ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்ற திருப்தியில் (அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் மனநிலைபாடு சந்தோஷத்தை கொடுத்தது)


ஒரே ஒரு குறை தான்... எவ்வளவோ காசு செலவு பண்ணி வரீங்க..... விழாவ நடத்துறீங்க.... தலைக்கு 500 ரூபாய் கொடுத்தாலே போதும். 5 பேர் சேர்ந்து ஒரு சுமோவிலோ காரிலோ பயணப்படலாம். அதவிட்டுட்டு சன்னல்க்கு வெளியே, சுமோவுக்கு மேலன்னு உக்கார்ந்தும் தொங்கிட்டும், தொத்திக்கிட்டும் வரணுமா? ஐய்யோ....... ஐய்யோ.................. சின்னபுள்ளத்தனமாவ்ல இருக்கு!!! 

டிஸ்கி - எந்த பெயிண்டையாவது பூசிக்கிட்டு வர கமெண்ட்ஸ் பப்ளிஸ் ஆகாது :-))
டிஸ்கி - மழை பெய்ததால் போட்டோ சரியா எடுக்க முடியல (ஒழுங்கா எடுத்துட்டாலும்....)

, , ,

இது தான் என் முதல் பிறந்த நாளாம்

என்னை உருவாக்கியவள் கூட

என்னை ரசித்தவள் கூட

என்னை அனுதினமும் நேசித்தவள் கூட

இந்நாளை மறந்துவிட்டாள்!! :-(

குழந்தையாய் என்னை பராமரித்தவள்
இன்று காலை முதல் என்னை ஏங்க வைத்தாள்.......

பார்த்து பார்த்து என்னிடம் கதைப்பவள்
இன்று ஏனோ அங்குமிங்குமாய் சுற்றியதால்
என்னை காணாது போய்விட்டாள்......

வெறுமையில் இருக்கும் போதெல்லாம் புத்துணர்ச்சி கொடுத்து
எல்லோரையும் பார்க்க வைத்தவள்
இன்று ஒருமுறை கூட என்னை பார்க்கவராமல்
வேறு வேலைகளில் மூழ்கிவிட்டாள்!!!

சற்று முன் தான் ஞாபகம் வந்ததாம்-இதோ
ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறாள்......
என் சோகம் தீர்க்க!!!

இப்படிக்கு
குட்டிசுவர்க்கம்
**********************


ஆமி - ஹாப்பி பர்த் டே டூ மை டியர் குட்டி சுவர்க்கம்!!! :-))


இன்னைல இருந்து ஒரு வாரத்துக்கு என்னைய நம்பி (ஐய்யோ பாவம்)  சீனா ஐய்யா வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்துருக்காங்க. 

அதனால் அனைவரும் தங்கள் ஆதரவை எனக்கு அளிக்குமாறு (அரசியல் வாதி மாதிரி இருக்கோ? :-) சரி வேற மாதிரி சொல்லலாம்.

ஒரு வாரத்திற்கு  அங்கே நான் பதிவு போடுறேன். எல்லாரும் மறக்காம வந்துருங்க மக்கா....


இடம் -  வலைச்சரம்

உழவர் சந்தை

திமுக ஆட்சியால் 1999க்கு பிறகு நடைமுறைபடுத்தும் போது ஏக வரவேற்பு.

எங்கள் ஊரில் ஏற்கனவே பெரிய மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், வாரசந்தை இருந்த போதிலும் உழவர் சந்தை திறக்கப்பட்ட பிறகு அனைவரும் விரும்பி செல்லும் இடமாக இருந்தது. காரணம் பொருட்களின் நியாயமான விலை, தரமான அளவு, ஒரே அளவு விலை நிர்ணயம், தினசரி விலை நிர்ணயத்தை கரும்பலகையில் எழுதி மக்களுக்கு அறிய தருதல். விவசாயிகளின் நேரடி விற்பனை, அதனால் விலை குறைவு, புது காய்கறிகள், அதிகாலை முதல் விநியோகம்(வேலைக்கு செல்பவர்களுக்கு எளிதாக), கண்காணிப்பு அதிகாரி, இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம், சுத்தமான சூழ்நிலை அமைப்பு என இத்தனை அம்சங்களும் அடங்கியதாலேயே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும்.

அதன் பின் வந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு குறைந்து கடைபிடித்த சட்டங்களும் காற்றில் கலந்து கரைந்து போனது. தினமும் எழுதி போடும் பெரிய பலகையில் போன வாரத்திற்கான காய்கறி விலைபட்டியல் அழிக்கப்படாமலேயே.... கடைகாரர்கள் தங்கள் இஸ்ட்டப்படி விலை நிர்ணயித்து விற்க தொடங்கி அதுவே வாடிக்கையானது. அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை. தோட்டி (சுத்தம் செய்பவர்) கூட சரிவர வேலை செய்யாமல் குப்பை மேடாகவே மாறிபோனது. பல உழவர் சந்தைகள் கூட மூடப்பட்டதாக தகவல் வந்தது.

இதனாலேயே படிப்படியாக அதன் மேல் நாட்டம் குறைந்து உழவர் சந்தை என்றாலே விலை அதிகமா இருக்கும் என சொல்லும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியது.

எங்கள் வீட்டிலிருந்து உழவர் சந்தை தாண்டி தான் பெரிய மார்க்கெட் என்றாலும் கூட இப்போதெல்லாம் உழவர் சந்தையை கண்டாலே ஙே தான். கூட கொஞ்ச தூரம் நடந்தாலும் தரமான நியாயமான விலைக்கு திருப்தியான மனசோட வாங்கிட்டு வரலாம். என்னைய ஏமாத்திட்டான்னு 3 நாள் வரைக்கும் வரவங்க போறவங்க கிட்ட ஒப்பாரி வைக்கிறதுக்கு இது தேவல என்றே தோன்றும்.

என்ன மாயமோ தெரியல. இப்ப  அதிகாரிகள் சுறுசுறுப்பாகிட்டாங்க.
******************
நேற்று அம்மாவை மீன் வாங்கி வர சொல்லியிருந்தேன். குழம்பில் போட வெண்டைக்காயும் தேவைப்பட்டது. சந்தைக்குள்ளேயே மீன் மார்க்கெட்டும் இருப்பதால் வேறு வழியில்லாமல் அங்கேயே வாங்க வேண்டிய சூழ்நிலை.

எப்போதும் அம்மா போர்டை பார்ப்பது வழக்கம். போர்டில் 1 கிலோ 12 ரூபாய் என எழுதப்பட்டது. அந்த பெண்மணி தனியாக வைத்திருந்த சிலேட்டிலும் அதே விலை தான். வாங்கிவிட்டு அம்மா 12 ரூபாய் கொடுத்த போது 20 ரூபாய் என்றிருக்கார். 12 ருபானு தானே போர்ட்ல இருக்குன்னு சொன்னதுக்கு கால் கிலோ 5 ரூபா தான். இல்லைன்னா வேற கடைக்கு போங்க. இது தோட்டத்து காய் என மூஞ்சில் அடித்ததைபோல் சொல்லவும் உடனே  ஆபிஸ் ரூம்க்கு போய் புகார் செய்தார் அம்மா.  உடனேயே அந்த அதிகாரி தராசையும் எடைகற்களையும் எடுத்துக்கொண்டு வந்து மைக்கிலும் விலை குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறார். அந்த பெண்மணி கெஞ்சி கேட்டும் கொடுக்காமல் “உன்னைய மாதிரி இருக்குற ஆளுங்கனால தான் நல்ல விஷயங்களும் குப்பை தொட்டிக்கு போகுது. இனி நீ கட போட கூடாது ” என கண்டிப்பாக அதிகாரி சொன்னதை அம்மா சொல்லும் போது “8 ரூபாய்க்காக அதோட பொழப்ப கெடுத்துட்டீயே- இது அக்கா

ரொம்ப ஈசியா சொல்ற? இப்பவே வெளிய போய் 8 ரூபா சம்பாரிச்சு கொண்டு வா- இது அம்மா

வழக்கம் போல இருவருக்கும் பஞ்சாயத்தை தீர்த்து வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.

அரசு சரிவர செயல்படாத போதும் கூட வாங்கிய சம்பளத்திற்காகவாவது நாணயமாய் அதிகாரிகள்  செயல்பட்டால் எந்த துறையை சேர்ந்த எந்த திட்டமும் குப்பைக்கு போகாது என்பது மட்டும் அம்மா சொன்ன விஷயம் மூலம் புரிய முடிந்தது.

உங்கள் சகோதரி
ஆமினா
   ******************
அளக்கும் போது நிறைவாக அளவுங்கள்! நேரான தராசு கொண்டு

எடை போடுங்கள்! இதுவே சிறந்தது
(திருக்குர்ஆன் : 17 : 35)

 உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 8:27)

அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள்! (அல்குர்ஆன் 7:85)

, , ,

முக்கிய அறிவிப்பு :- இந்த பதிவினை தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. மேலும் ஓட்டுபட்டையும் நீக்கியுள்ளேன்.

தமிழ்மண நிர்வாகி சமீபத்தில் எம் சக சகோதர பதிவர்களை இழிவாக பேசியதற்காக என் வேதனைகளை பதிவு செய்கிறேன். அதனை தொடர்ந்து வந்த அவரின் பின்னூட்டத்தில்  இஸ்லாமிய முகமனை இழிவாக கேலி செய்ததற்காக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட மெயிலுக்கு மற்றைய தமிழ்மண நிர்வாகிகள் விளக்கம் அளிக்காத வரை இந்த பதிவினை இணைக்க போவதில்லை.
************************************
 உறவினர் ஒருவரை வங்கியில் சந்திக்க நேர்ந்தது. நகைக்கடன் வாங்கும்/மீட்கும் பிரிவில் நின்றுக்கொண்டிருந்தார்.  சில தினங்களுக்கு முன்பு தான் தன் சம்மந்தி ( தன் பெண்ணின் மாமியார்) இறந்ததாக தகவல் சொல்லி சென்ற நினைவு. நல விஷாரிப்புக்கு பின்னும் நாகரிகம் கருதி அந்த மாமியிடம் என்ன காரணம் என்றும் கேட்கவில்லை. அம்மாவிடம் விசாரித்த போது தான் சொன்னாங்க "கத்தம் பாத்திஹா(??!!) ஓதுவாங்கல? (காரியம்/தவசம்) யார்வீட்ல ஆள் இறந்து போனாங்களோ அந்த வீட்ல சம்மந்தம் பண்ண பொண்ணுவீட்டுக்காரங்க தான் கத்தத்துக்கு வரவங்களுக்கு சாப்பாடு போடணும்". பதில் பேச முடியவில்லை.

வரதட்சணை, சீர்ன்னு எல்லா பணபறிப்பு பத்தியும் தெரியும். ஆனா இந்த காரணம் ரொம்பவே புதுசு......... ஒருவேள சில ஏரியால மட்டும் தான் இந்த முறை இருக்கா அல்லது எனக்கு தான் தெரியலையான்னு தெரியல. ஆனா  எந்த வகையிலலாம் பணம் பறிக்கணுமோ அதுக்காக புதுசுபுதுசா  காரணத்த தேடி கண்டுபிடிக்கவே ரூம் போட்டு யோசிப்பாங்கன்னு மட்டும் தெரியுது. 
________________
தோழி ஹேமாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் அவள் வீட்டு தரப்பிலிருந்து 7 வகை சாப்பாடு செய்து, தாம்பூல தட்டில் பழங்கள், தேங்காய், வெத்தல பாக்கு மற்றும் சில ஆயிரங்களை வைத்து கொடுத்த போது வாங்கிக்கொண்டே மாப்பிள்ளை வீட்டார்,  “என் மகளுக்கு ஐய்யாயிரமும் 9 வக சாப்பாடும்ல போட்டேன்?” என சொன்னார். மனதில் கோபம் இருந்தும் வெளிபடுத்தாமல் “ஏதோ எங்கனால முடிஞ்சதுமா” என அடுத்த வேலையில் மும்முரமானார்கள் பெண்வீட்டார். என் தோழியின் கண்ணில் கண்ணீர்.......

குழந்தைக்காகவும், கர்ப்பவதியின் மன மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்படும் நிகழ்ச்சியில் அப்பெண்ணுக்கு மன உளைச்சல் தான் மிச்சம். 5ம் மாதத்தில் குங்குமப்பூ கொடுக்கும் நிகழ்ச்சி வேறு நடந்ததாம். அந்த குங்குமபூவையும் பெண்வீட்டார்  தான் கொடுக்கணுமாம். (விட்டா குழந்தைக்கு மொட்ட போடணும்.அதுக்கு சலூன் கடக்காரனுக்கு மாச மாசம் 25 ரூபா கொடுத்துடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க)
____________
வீரசோழன் என்னும் ஊரில் சில காலம் வசித்த போது அவ்வபோது மாலை வேளைகளில் தாம்பூல தட்டுக்கள் ஏந்தி பெண்கள் கூட்டம் போவது கண்டதுண்டு. காரணம்  “உன் மகள் கர்ப்பவதி ஆகிவிட்டாள்” என மாப்பிள்ளை வீட்டார் சொன்ன அன்றே பெண் வீட்டார் ஒற்றைபடை எண்ணிக்கையில் பழ வகைகளும், தேங்காய், ஹார்லிக்ஸ், பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் துணிமணி சகிதம் சீர் கொண்டு போக வேண்டுமாம். (பாவம் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரால் வாங்க முடியாது பாருங்க)

____________

தன் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆணுக்கு அன்பின் வெளிப்பாடாய் சிறு பொருள் ஒன்றை எவனோ ஒருவன் கொடுத்து வேரொன்றை நட்டுவிட்டு  போக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவாறு பரிமாணம் புகுத்தப்பட்டு இன்று வரதட்சணை,சீர், சீமந்த சாப்பாடு,பிரசவ செலவு, தாய்மாமன் சீர், தலதீபாவளி/ரம்ஜான்க்கு புத்தாடை என பல விழுதுகளை தாங்கிய அசைக்க முடியாத ஆலமரமாகி ஊரையே  நாசம் செய்துவிட்டது......

 ஆசைபட்டதெல்லாம் கேட்ட நொடியிலேயே வாங்கி தர  சக்தியுடையவர்கள் கூட மகனை திருமணம் செய்து கொடுக்கும் போது மட்டும் ( சாகும் வரை) திருஓட்டை ஏந்திய பிச்சைக்காரர்களாக மாறும் பெற்றோர்கள்........ஐய்யோ பரிதாபம் (இறைவா இந்த பிச்சைஎடுக்கும் இழிநிலையை ஒருபோதும் எங்களுக்கோ இனிவரும் எங்கள் சந்ததியினருக்கோ கொடுக்காமல் பாதுகாத்திடு)

ஆசையாய்,அன்பாய் வளர்த்து, படிக்க வைத்து பராமரித்த மகனை(மாட்டை) 25 வயதுக்கு மேல் திருமண சந்தையில் அதிகமாய் பணம் கொடுப்பவர்களுக்கு விற்கும் வியாபாரிகள்............ ஐய்யோ கேவலம்

தன் ரத்தத்தில் உருவான முதல் உயிரை வயிற்றில் சுமந்தும் அதை பராமரிக்க அருகதை இல்லாமல் மாமனார் வீட்டுக்கு அனுப்பும் கணவன்மார்கள்......... ஐய்யோ வெட்ககேடு


பிச்சைக்காரர்களின் நியாயமான (??!!) காரணங்கள்
அதானே மொற!! (எவுக தான் இத கண்டுபிடிச்சாக? கைல கெடச்சா...........!!!)

பணம் கொட்டி படிக்க வச்சுருக்கோம்ல? சும்மாவா??!! ( அடடே...... அப்ப பொண்ண பெத்ததும் வீட்டுவேலைக்கு அனுப்பி வச்சுடுவாகளோ?)

அவுக வீட்டு பொண்ணுக்கு தானே இனி சம்பாதிச்சு கொடுக்க போறான் ( ஐய்யோடா...... வரதட்சணைய நாங்க வச்சு காலத்த தள்ளிக்கிறோம். இனி மகன் சம்பாதிக்கிறதெல்லாம் மருமகளுக்கு தான்னு எழுதி கொடுக்க தயாரா? அல்லது மருமக சம்பளத்த அவ அம்மா வீட்டுக்கே கொடுக்கலாம்னு சொல்ல தைரியம் இருக்கா?)

அதெல்லாம் வாங்கலன்னா பையனுக்கு கொற இருக்குன்னு நாலு பேரு நாலுவிதமா  சொல்லுபுடுவாகளே ( பார்ர்ர்ர்டா.......அதிகமா ஒரு பொண்ணுக்கு பணத்த கொடுத்து தள்ளிவிட்டா அப்ப அந்த பொண்ண பத்தி அதே நாலு பேரு நாப்பதாயிரம் விதமா நார் போல் கிழிக்க மாட்டாகளா?)


நிறையா கொண்டு வந்தா அந்த பொண்ணுக்குதேனே பெரும..... ( என்ன ஒரு நல்லெண்ணம். உங்க மானத்த அடகு வச்சுட்டு மருமகளுக்கு பெரும சேக்குறீகளாக்கும்?)

கடைசி வரைக்கும் அந்த புள்ளைய நாங்க தானே வச்சு வரவு செலவு பாக்க போறோம். அப்ப கொஞ்சமாவது செய்யலைன்னா எப்படி? (நோ கமெண்ட்ஸ்.... வாமிட் வந்துடும்)

இப்படியாக
பெண்ணுக்கு நிச்சய தார்த்தம் அன்று வரும் பட்டாளம் படைகளுக்கு சாப்பாடு

திருமணத்திற்கு வரதட்சணை

குடிக்குறதுக்கு டம்ளர்ல இருந்து பெட்சீட் வரைக்கும் சீர்வரிசைகள்

மண்டப செலவு, ரிசப்ஷன் செலவு, கல்யாண விருந்து செலவு

மறுவீட்டுக்கு அழைக்க போகும் போது சீர்

கர்ப்பம் ஆனா சீர்

குங்குமபூ கொடுக்கும் நிகழ்ச்சி

வளைகாப்பில் 5,7,9,13...... வகை சாப்பாடு, பணம்

தலை தீபாவளி/ரம்ஜான்/பொங்கல்................க்கு துணிமணியுடன் பணம்

பிரசவ செலவு

பிறந்த குழந்தைக்கு செயின், மோதிரம், கொழுசு,.....................

இது வரைக்கும் பெத்தவங்க பாடு. அடுத்தது வைக்கப்படும் ஆப்பு தாய்மானனுக்கு........

மொட்டை போட, காதுகுத்த இதெல்லாம் தாய்மாமன் கால்ல உக்காந்து செஞ்சா  மட்டும் தான் முடி இறங்கும்/ காதுல ஓட்டை விழும் போல

பருவம் எய்தியதும் நடத்தும் விழா (?!!)

அப்பறம் பழையபடி திருமண படலம்.... அதுலையும் தாய்மாமா சீர்,துணி நகை(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... சோடா ப்ளீஸ்....... )இன்னும் எதையாவது விட்டு வச்சுர்க்காங்களா? இல்ல நான் தான் தெரியாததுனால விட்டுட்டேனா???

இனைக்கு காலத்துல அரசன் இருந்தா பன்மையன்றி ஒரு பெண் பிள்ளை பெற்றால் போதும் நடுரோட்டுக்கு வந்துடலாம் (ஆரம்பிச்சு விட்டதே இவங்களா தான் இருப்பாங்களோன்னு டவுட்டு)

மாப்பிள்ளை வீட்டாருக்கு
தயவு செய்து அவரவரின் நிலையிலிருந்து யோசித்து பாருங்கள். வரதட்சணை கொடுக்க இயலாமல் எத்தனை பெண்களின் கனவுகள் கண்ணீரில் மூழ்கிகிடக்கிறது? எத்தனை எத்தனை கனவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது? எத்தனை பேரின் இளமை புதைகுழிக்குள் திணிக்கப்பட்டுள்ளது? இன்றில்லை என்ற போதும் என்றாவது உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். உயிரை எவ்வாறு மீட்பீர்கள்? இளமையை எவ்வாறு திருப்பி தருவீர்கள்? வாழாவெட்டிகளின் கண்ணீருக்கு என்ன பதிலை தர போகிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் இதற்கு பிறகு பெண் வாரிசு வராமல் போய்விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருமண செலவில் பாதியை கூட சுமக்க வேண்டாம். உபரி வருமானங்களையாவது விட்டுக்கொடுக்கலாமே..... :-( பிச்சை எடுப்பதை விடவா ஒரு இழிநிலை இருக்க முடியும்? இறுதியில் இறைவனிடத்தில் இக்குற்றத்திற்காக என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

யோசிங்க


மனமாற்றம் நிகழும் போது மட்டுமே ஒவ்வோர் விழுதுகளும் வெட்டப்பட்டு மரம் கூட இருந்த இடமும் சுவடும் தெரியாமல் போகும்.
வெட்டப்படும் என்ற நம்பிக்கையில்........

உங்கள் சகோதரி
ஆமினா


தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை- அல்குர்ஆன்

, , ,


கேரள எல்லையோர பகுதியான ஆரியங்காவு என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ள பாலாறு அருவி இது.

பிற்சேர்க்கை:- 

//இந்த அருவி செல்ல

செங்கோட்டை யிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் புளியரை என்ற ஊரை அடுத்து உள்ள S வளைவு தாண்டி ஆரியங்காவு ( கேரளா ) என்ற ஊருக்கு முன்பாக உள்ளது. கூட்டம் இல்லாமல் குளிக்க அருமையான இடம். மலை மேல் இருப்பதால் climate ரம்மியமாக இருக்கும்.//
இடம் பற்றிய துல்லியமான தகவலுக்கு நன்றி சகோ ரப்பானி

பட உதவி :-) - என்ட்ர  வூட்டுக்காரவுக

,

இந்த மாசத்துல ஒரு நாள்ல தேர்தல் வரபோவுதாம்ல? ஊரே ஒரே விளம்பர மயம் தான்....... எந்த ஆட்டோவ பார்த்தாலும் மைக்செட்டோட அலையுது. வாக்கு கேட்க வந்த சிலர் சொன்ன காரணங்களை தான் இந்த பதிவுல மேலோட்டமா பாக்க போறோம். வாரீகளா??????

ஒரு நாள்
முனியம்மா வீட்டுக்கு வந்தாக. “எக்கா..... வரணூம் வரணும்னு நெனச்சுட்டே இருப்பேன்... வர நேரம்லாம் வீட்ல பூட்டு தொங்குது... இப்பவாச்சும் பாக்க முடியுதே..... நல்லார்க்கீயாக்கா??” சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் திருமண விஷேஷம் என்றாலும் போகாதவங்க எங்கம்மா...அவங்கள போயி..........
(ஆயிரம் பொய்ய சொல்லியாவது ஒரு முறை தேர்தல் எலக்‌ஷன்ல ஜெயிச்சுட்டா தப்பில்லையோ)

சரிக்கா.... நீயும் ஒரு பொண்ணு, நானும் ஒரு பொண்ணு, பொண்ணுக்கு பொண்ணு நம்ம தான் ஒதவிக்கணும். மறக்காம ஓட்டு போட்டுடுக்கா”

இது தான் முனியம்மாவின் தேர்தல் பிரச்சாரம்....
(வாக்குறுதி கொடுத்துட்டாலும் அத என்ன செய்யவா போறேன்... சொல்லாதத செய்ய மாட்டோம். செய்யாதத சொல்லவே மாட்டோம்)
_______________________
அடுத்து மொக்கராசு
“மாமி போன தடவ ஜெயிக்க வச்ச மாரி இந்த தடவையும் ஜெயிக்க வச்சுடுங்க....... மறக்காம குருவி முட்டாய் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க...”  டேய்...... மாமிக்கு நல்ல தரமான குற்றால துண்டு எடுத்துகொடு........

(அவனவன் 1000 ரூபாய் கொடுத்து வாக்கு கேக்க வருவாய்ங்கன்னு நெனச்சேன்....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... பட் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு)
___________________________

வீட்ல யாரும்மா........ கொஞ்சம் வெளிய வாங்க!

ஷாம்- ஆர் நீங்க

அம்மா கூப்டு தம்பி

ஷாம்- மாட்டேன் வெளையாட போறேன்

சரியான வாலு பையன் (வழிந்துக்கொண்டே)

பின்னர் அம்மா வாசலுக்கு போனாங்க. வாக்கு கேட்க வந்தவங்க தான்.  “சாரும் ட்ரைவர், நானும் ட்ரைவர்....... இந்த மொற ஒரு ட்ரைவர் நிக்கிறதுனால எப்படியாவது ஜெயிக்க வச்சுடுங்க மேடம்”

(இந்த ஒரு தகுதி போதுமா? அடப்பாவிகளா..... என்ன தான் செய்ய போறீங்க... ஒரு பயலும் வாயவே தொறக்கலையே.........) 

அம்மா கையில் இருந்த காகிதத்தை பிரித்தேன்.......
 • இந்த வார்டிலேயே பிறந்து வளந்தவன் என்ற பெயரில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொடுப்பேன்.
 • அரசு நல திட்டங்களை வாங்கி தருவேன்எந்த பிரச்சனையானாலும் என்னை தொடர்பு கொள்ளவும் தொலைபேசி எண்...................  “

இதான் இவரோட தேர்தல் வாக்குறுதியாம். அடக்கொடுமையே :-(

___________________________

இப்ப இதை எழுதும் போதே ஆட்டோவில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

“உங்கள் வெற்றி வேட்பாளன் இம்சை அரசனுக்கு வாக்களிகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம், பாசத்துடன் கேட்டுக்கொள்கிறோம், நேசத்துடன் கேட்டுக்கொள்கிறோம், பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்”

எப்படியெல்லாம் கெஞ்சுறாய்ங்க???
___________________________

இன்னொரு ஆட்டோவில்
நமது வெற்றி வேட்பாளர் கு.ரங்குசாமி உங்கள் இல்லங்களை நோக்கி கடும் வெயில் என கூட பாராமல் வெப்பத்தை பொருட்படுத்தாமல் வந்துக்கொண்டிருக்கிறார்

(சாயங்காலம் வந்தா செண்டிமெண்ட் க்ரியேட் பண்ண முடியாம போய்டுமோ??? )

இதையெல்லாம் விட்டு தள்ளுங்க, முனியம்மாவுக்கும் அம்மா தலையாட்டுனாங்க. மொக்கராசுக்கும் ஓட்டு போட்டுடுறேன்னு சொல்லியிருக்காங்க, ட்ரைவர் வேட்பாளருக்கும் கண்டிப்பான்னு சொல்லியிருக்காங்க. இன்னும் எத்தன பேர் வந்தாலும் அதையே தான் சொல்லுவாங்க. இதையெல்லாம் பாக்குறதே பெரிய வேடிக்கை தான். ஒவ்வொரு முறையும் அம்மா அவர்களை வழியனுப்பும் வரை படும் பாடு ரொம்பவே நகைச்சுவையா இருக்கும்.


இதுல வேற அடிக்கடி என்னையும் ஒரு முறை வீட்டுக்குள் எட்டி பார்த்து “தங்கச்சி நீயும் போட்டுடுமா” என சொல்ல  கொள்ள காலமா நானும் அப்படி தாண்ணே நெனைக்கேன். ஆனா பாருங்க 3 வருஷமா எழுதி போட்டுட்டே இருக்கேன். ஒரு இந்திய பிரஜை தன் ஜனநாயக கடமையை செய்யவே விடமாட்டாய்ங்க போல......... என சொல்ல சிரித்துக்கொண்டே போனாங்க..
   (என்ன கொடும சார் இது????)

டிஸ்கி- பெயர்களும் சின்னங்களின் பெயர்களும்  மட்டும் மாற்றப்பட்டுள்ளது :-)

, ,மேக்கப் போடாம இருக்கேன்னு சொன்னா கேக்க மாட்ட..... போட்டோ எடுக்காத என்னை

நிம்மதியா தூங்கலாம்னு பாத்தா முடியாது போலேயே :-(

திருடுன  டீய  குடிக்க விடுதுகளா பயபுள்ளைக

,

வருத்தத்துடம் இந்த அறிவிப்பை தெரிவிப்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்:-)

நம்ம ப்ளாக்ல ஏதோ ஆர்வ கோளாறுல நம்மூர் புரோட்டா சால்னா பத்தி போஸ்ட்  போட்டா எக்கசக்க ஆதரவுகள் (அதிகமா பார்வையிடப்பட்டதே அந்த இடுகை தான்). ஆக மக்களும் நம்மல நம்பதானே செய்றாகப்பூ......... அப்ப ஒடனே ஒரு கட்சிய ஆரம்பிச்சுட வேண்டியதுதேன்........

ஜலீலாக்கா, ஆசியா, மேனகா, கீதா இன்னும் பல சமையல் ராணிகள் அளவுக்கு தெரியலைன்னாலும் ஏதோ நம்ம அளவுக்கு கொஞ்சூண்டு.......வந்ததையாவது போடலாம்னு ஒரு விபரீத ஆச

ஆக இதன் மூலமா தெரிவிக்கிறது என்னான்னா.........

ஏதோ பயபுள்ள ஆசபட்டுடுச்சு... நாமளும் நல்ல மனசோட உதவுவோம்னு நீங்களாவே மனசுக்குள்ள நெனச்சு ஒருமனதா முடிவெடுத்துட்டு, பின்னால வரப்போற  பின்விளைவுகள பத்தி கொஞ்சங்கூட யோசிக்காம அப்படிக்கா கீழ உள்ள லிங் வழியா அங்கே வந்துடுங்கோ மக்கா......

இன்னும் ஒரு பதிவ கூட போடல.....
பத்து பேராவது என் பின்னாடி வந்தாதேன் திறப்பு விழா கொஞ்சம் கலகட்டும்னு இ....ந்.......தா அவுக சொன்னாக....... இல்லல்ல........ அ.........ந்..........தா........ அவுக சொன்னாக (சரி விடுங்க)

திறப்பு விழா நடைபெறும் நாள்- இன்னைல இருந்து இந்த மாசத்துக்குள்ள

நேரம்- உங்க நேரம்

பரிசுகள் கட்டாயம் வரவேற்கப்படுகின்றன :-))

இடம்

சமையல் எக்ஸ்ப்ரஸ்டிஸ்கி
தெரிஞ்ச கொஞ்சூண்டு சமையல் குறிப்ப குட்டி சுவர்க்கத்திலேயே பதியலாம் தான். ஆனா தேட கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும்னு ஒரு எண்ணம். தட்ஸ் வை..........................


,

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அசைபோட்டு பார்க்கும் நினைத்தாலே இனிக்கும், அது ஒரு அழகிய நிலாக்காலம்  தருணங்களில்  முதலிடம் பள்ளிகூடத்திற்கு தான். ஏன்னா அங்கே தான் இளமையின் வருடங்களை கட(த்)ந்தியிருப்போம் இல்லையா.. பல விஷயங்கள் இன்றும் இனிக்கிறது. சொற்ப விஷயங்கள் ஆறாத வடுவாய் நிலைக்கிறது. அது ராக்கிங் செஞ்சு மாட்டுனதாகவும் இருக்கலாம். பெயில் ஆனதுனால அப்பா ஸ்கூல்க்கே வந்து எல்லோருக்கும் முன்னாடி அடிச்சு போட்டு நம்ம 'கெத்'த கெடுத்ததாகவும் இருக்கலாம். இந்த இரு தருணங்களை அசைபோடுவதில் என்றுமே ஒரு சுகம் தான். டைரிகளில் குறித்து வைக்காமலும் பல நினைவுகள் நெஞ்சில் தங்கும் மாயம் இறைவன் மட்டுமே அறிந்தது. பள்ளிகளை கடந்து போகும் போது உடன் வருபவிடமோ அல்லது குழந்தையிடமோ 'இது தான் நா படிச்ச ஸ்கூலாக்கும்' என சொல்வதில் தான் எத்தனை சந்தோஷங்கள்.......
(ம்ம்ம்........போதும் போதும்........மேட்டருக்கு வா..........)

இப்படியாக ஒரு மாலைபொழுதில் அசைபோட்ட போது தான் சரஸ்வதி டீச்சர பத்தி கொஞ்சமாவது சொல்லணும்னு தோணுச்சு. அப்படி என்ன தான் பண்ணாங்களாம்? எல்லாரை போலவும் ஒரு கல்லா இருந்த என்னை சிற்பமாக செதுக்குனாங்கன்னு டயலாக் விடுவ அதானே? ம்ஹூம்..........

என் வழில அவங்க என்னைக்குமே குறுக்க வந்ததில்ல. அதான் அவங்கள பத்தி சொல்ல ஆர்வம் பெருகியது. ஏன்னா நாங்களாம் நல்லா படிக்கிற புள்ளைங்களாம் (யாருகிட்ட மெஹந்தி போடுற? ஏற்கனவே இரண்டு கைலையும் போட்டிருக்கோம்னு நீங்க சொன்னாலும் பரவாயில்ல.....)

ஒரு நல்ல ஆசிரியரை எப்படி கண்டுபிடிக்கலாம்னு நீங்க நெனைக்கிறீங்க? அவங்க பேசும் பேச்சு வழக்கை வைத்தா? அவங்க க்ளாஸில் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சியடைவதை வைத்தா? இப்படியாக நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் நாம் பார்க்கும் பார்வையை மட்டுமே வைத்துக்கொண்டு தெரிந்துகொள்கிறோம். ஆனா இதையெல்லாம் தாண்டிய உள்ளார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய மனதை அறிவது அரிதான விஷயம். புதிரான நடவடிக்கைகளை புரிந்துக்கொள்ளவவே பல நாட்களை அவகாசம் கேட்கும். இந்தனை நாட்களின் அவகாசத்திற்கு பிறகு நான் புரிந்துகொண்டதை போல்.....

முதல் அடி.........

ஆறாம் வகுப்பில் ஒன்றாய் முதல் வரிசையில் அமர்ந்ததால் அறிமுகமான எங்கள் நட்பு 7ம் வகுப்பிலும் தொடந்தது முதல் மிட்-டெர்ம் டெஸ்ட் முடிவுகள் சரஸ்வதி டீச்சரின் கைகளில் இல்லாதவரை. என்ன மதிப்பெண்கள் என ஆவலாக எதிர்பார்த்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.........

ஆமினா.......நீ கடைசி பென்ச் மூலைக்கு போ. உன் பக்கத்துல நாக லெட்சுமிய உக்கார வை. கண்மணி உன் பக்கத்துல அந்த ராசம்மாவ உக்கார வை" என முதல்,இரண்டாம் வரிசையில் உள்ளவர்கள் அனைவரும் பின்னுக்கு தள்ளப்பட்டதுடன் நடுநடுவே போன வருடத்தில் பெயில் ஆகி எங்களுக்கு அறிமுகமில்லாதவர்களின் அருகிலும் , ஒரே வகுப்பிலிருந்தும் இதுவரை பழகாத மார்க் கம்மியாக வாங்குபவர்களின்  அருகிலும் உக்கார வைத்து நல்லா படிச்சவங்களோட மரியாதையைய கெடுத்துட்டாங்க......


"ஒரு மாசமா இந்த டீச்சர் நோட்டம் விட்டுட்டே இருந்து நம்மல பிரிச்சுடுச்சு பாத்தீயா" இதான் எங்க க்ரூப் அடிக்கடி புலம்பும் குற்றச்சாட்டு.

அடுத்த அடி.......

என்ன தவறு செய்தோம் என்பதனை அறியாமலேயே எங்களுடன் பாராபட்சமாக நடந்துக்கொள்ளும் முறை. என்னதான் நாங்கள் டீச்சரை குஷிபடுத்த/ஐஸ் வைக்க முயன்று படித்தாலும்.......அதிகமாக படித்தாலும்........இன்னும் இன்னும் ஆழமாக படித்தாலும்........... இன்னும் இன்னும் இன்னும் அதிக மார்க் முன்பை விட வாங்கிய போதும் அவ்வபோது ஒதுக்கப்பட்டவர்களாய் நாங்கள். (அப்படி என்ன தான் பா தப்பு பண்ண? )


நாக லெட்சுமி, ராசம்மாள், முத்துக்குமாரி போன்ற கிராமத்தார்/படிக்காதவர்கள்/முன்பு பெயிலானவர்கள் தான் ஆசிரியரை எப்பவும் சூழ்ந்திருப்பார்கள். சரஸ்வதி டீச்சர் வீட்டிலும் அதிகமாக இவர்களை பார்க்க முடியும். விடுமுறை தினங்களிலும் எப்போதும் டீச்சர் வீடு கலகலப்பாவே இருக்கும் மாணவிகளின் வருகையால்......

அடுத்த அடி......
முந்தைய  வருட கல்வியாண்டில் பெயிலான 3 பேரை லீடர், அசிஸ்ட்டன் லீடர், இன்னொரு அ.லீடர் ஆக நியமித்ததால் வருடா வருடம் முறையாக கிடைத்த மரியாதையான  எல்லா பதவியையும் விட்டுகொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் (ஆட்சி போய்டுச்சு :-(

இப்படியாக அந்த வருட பல இன்னல்களுக்கும்,கொடுமைகளுக்கும்.ஆறா துயரங்களுக்கும் உள்ளாக்கபட்ட போதும் (எம்மா........தாங்க முடியல..... என்னா பீலீங்கு என்னா பீலிங்கு) நல்ல மதிப்பெண்களை பெற்று அடுத்த வகுப்புக்கு முன்னேறினோம். மேலும் எங்கள் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற வில்லை என்றாலும் கூட ஆசிரியரால் அதிகமாக பாசம் கொடுத்து கண்காணித்த ஆசிரியரின் அபிமானிகள் குறிப்பிடும்படியான நல்ல மதிப்பெண்கள் பெற்று எங்கள் க்ரூப்பிலும் சேர்ந்து சாதனை படைத்தார்கள் (இத விட அந்த புள்ளைங்க மறுபடியும் குட்டிசுவரா போறதுக்கு வேற வழிவேணுமா?:-)

ஆக டீச்சரின் நோக்கம் எங்களை ஒதுக்குவது அல்ல........
ஒதுங்கிய மாணவிகளின் திறமையை வெளிக்கொணருவது

ஆசிரியர் கடைபிடித்த சில லாஜிக்குகள்
 • டீச்சர் அதிகமா பாசம் வைத்திருப்பதை உணர்ந்து இன்னும் பாசம் அதிகமாக்க முயன்று அவர்கள் படித்தது
 • படிச்சவங்க மட்டும் தான் லீடராக முடியுமா என்ற தாழ்வுமனப்பான்மை நீக்குவது
 • அத்துடன் சக மாணவிகள் தன்னை தலைவியாக நினைப்பதால் முன்மாதிரியாக நாம் திகழ வேண்டும் என நினைப்பது
 • நன்றாக படிக்க கூடியவர்களை தனிதனியாக பிரித்து உட்கார வைப்பதால் வெட்டி பேச்சுக்கள் :-) குறைந்து படிக்க அதிக நேரம் ஒதுக்குவது
 • நன்றாக படிப்பவர்களுடன் குறைவாக படிப்பவர்களை பழக விட்டால் அவர்களின் மனதில் ஒரு வித புரட்சி உணர்வு வந்து இவங்கள போல நாமலும் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாவது
 • அடிக்கடி டீச்சர் அவங்கள வீட்டுக்கு கூடிட்டு போவதால் அங்கே கூடுதலாக படிப்பதற்கான நேரம்  ஏற்படுத்தப்படுவது ( சீக்கிரமா வீட்டுக்கு போனா அம்மா வீட்டுவேலை செய்ய சொல்லுவாங்க. லீவ் நேரத்துல ஆடு மேய்க்க போக சொல்லுவாங்க. ஆக டீச்சர் இப்படி செஞ்சாங்க)
 • நன்கு படிக்கும் மாணவிகளையும் மொத்தமாக ஒதுக்கி விடாமல் அவர்களை அவ்வபோது போட்டிகளுக்கு பெயரை கொடுத்து அப்போட்டிக்கு வேண்டிய விஷயங்களை தானே முன்வந்து ஆலோசனை+உதவி செய்வது
 • "நீ நல்லா படிக்கிற புள்ளையாச்சே.... உன்னால முடியாததுன்னு ஒன்னா இருக்கு" என உசுப்பேத்தி விட்டு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்வது

இப்படியாக இரு பக்கமும் சம தராசில் வைத்து வழிநடத்துவதும், உளவியல் ரீதியாக கையாளுவதற்கும் ஒரு திறமை வேண்டும். பல வருடங்கள் கடந்தும், எத்தனையோ ஆசிரியர்களை பெற்றும் "உன் டீச்சர் பேரு என்ன?"என யாராவது வினவினால் முதலில் வாய்  உச்சரிப்பது சரஸ்வதி டீச்சர் என தன்னிச்சையாக அவரை நோக்கியே எண்ணங்கள் செல்வதற்கும்  கண்டிப்பாக ஒரு திறமை வேண்டும்.

சமபரப்பில் சாலை அமைப்பது பெரிதல்ல. மலை பகுதிகளில் பாதை ஏற்படுத்துவது தான் சவாலான விஷயம். அதில் தான் திறமையை நிரூபிக்க முடியும். சரியான திட்டமிடல் இல்லாத பட்சத்தில் அடிக்கடி மண்சரிவுண்டாகும்........


டிஸ்கி 1
ஆமினாவை ந....ல்....லா.......... படிச்சவங்க க்ரூப்ல சேர்த்து எழுதுனதுக்கு நானும் உங்களை போலவே ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளேன் :-) உண்மை எனக்கும் கூட பாவக்கா ரேஞ்சுக்கு கசக்குதுன்னா பாருங்களேன் ஹி...ஹி...ஹி...

டிஸ்கி 2
ஞாபகம் வரும் போது சொல்றேன் (அடிங்.......)

,

வழக்கமா காலைல மட்டும் என்னோட வாக்கிங் வர பக்கத்து வீட்டு  மாமி இப்பலாம் சாயங்காலமும் வர ஆரம்பிச்சுட்டாங்க. செம குஷி..... இனி நிறைய மேட்டர் கரக்கலாம் :-)  மாமியின் திடீர் முடிவுக்கான காரணம் அவங்க வாயிலிருந்தே......  "முன்னெல்லாம் 6 மணி ஆயிட்டாலே கேட்டின் உள்புறம் திண்டுக்கல் பூட்டு தொங்கும். ஆனா இப்பலாம் எங்கே பார்த்தாலும் வீட்டு வாசல்ல ஊர்கத,நாட்டு நடப்பு பத்தி பொம்மனாட்டிகள் பேசிண்(டு)டிருக்குற பாக்க முடியுற்து.  எல்லாத்துக்கும் காரணம் அரசு கேபிள் தான்"
ஆகா...........சன்டீவி குழுமத்தின் சேனல்கள் வராததால்  குழு ஆரம்பிச்சு அவல் போட்டு மெல்ல ஆரம்பிச்சுட்டாங்களா??????...... :-( (அவனையும் அவளையும் கோயில்ல பார்த்தேங்குற விஷயத்த அவனும் அவளும் ஓடிபோய் கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்னு ஆக்குற  வரைக்கும் விடமாட்டாங்க)
***************
பரமக்குடி கலவரம் நடந்துகொண்டிருக்கும் போதே  சூட்டோட சூடா  துப்பாக்கி சூட்டில் இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிவாரணம் அறிவிச்சிருந்தாங்க.   இப்ப பரமக்குடி கலவர போராட்ட குழு ஊர் புல்லா போஸ்ட்டர் அடிச்சுட்டு வராங்க. அதுல உள்ள சில விஷயங்கள்
தமிழக அரசே!!!!!
 • காயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கு
 • இறந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை கொடு
 • துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் மேல் கொலை வழக்கு பதிவு செய் (இதுவரைக்கும் பூ கூட பறிக்கலன்னு நெனைக்கிறேன்)
 • விசாரணைக்கு அழைத்துச்சென்ற தலீத் மக்களை விடுதலை செய்
 • தேசிய மனித உரிமை ஆணையத்தின் மூலம் விஷாரணை நடத்து
 • சிபிஐ விசாரணைக்கு உட்படுத்து (ப.சி சிபிஐக்குலாம் மாத்த முடியாதுன்னு ஒரே போடு போட்டுட்டார்)
 • சமத்து போராளியின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவி
 • கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தேர்தல் புறக்கணிப்போம்
 • நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிஷனை எதிர்ப்போம் 
(இந்த மொற  பரமக்குடில அதிமுக ஜெய்ச்சது என்பதும் குறிப்பிட தக்கது.......)ஆனாலும் இம்முறை உள்ளாட்சி தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும்னு  அடிச்சு சொல்லிப்புட்டாங்கள?!!!!!)
 ***************
அம்மா வந்ததும் மொதல்ல வச்ச குறியே கலைஞர் குடும்பம்& அல்லக்கைகளுக்கு தான். நிலஅபகரிப்பு முதல் அரசு கேபிள் வரை ஆப்பு ஒன்றே அடிப்படை குறிக்கோளாக கொண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. அம்மா எய்த அம்புகளில் சில அம்மாக்கே குறி வச்ச கதையெல்லாம் டெல்லி  வரைக்கும் போய்  கூவம் அளவுக்கு மாறுனது  எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி தான் இந்த அரசு கேபிளும்னு நெனைக்கிறேன். சன் டைரக்டை முன்பெல்லாம் தெருக்கு ஒன்றிரண்டு வீட்டில் பாக்கலாம். அரசு கேபிள்ல பல குடும்பங்களின் உயிர்நாடியான சீரியல்கள் அடங்கிய சன்டீவி வராத எல்லாரும் டன்டனக்காக்கு மாறிட்டாங்க. 
(பழம் நழுவி போர்ன்விட்டால  விழுந்த கதையாக இருக்குமோ?)
***************
சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்தோம். திரும்ப இரவு 8க்கு மேல் ஆனது. மானாமதுரை வரும் முன்பே பஸ் நின்றது. ரயில் க்ராஸிங் போலன்னு நெனச்சுட்டிருக்கும் போதே எல்லாரும் பஸ்ல இருந்து கீழ இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏதோ ஆக்சிடன்ட்டாம்.வேடிக்கை பார்க்க! சில நிமிடங்களில் பஸ் மெதுவாக நகர்ந்தது. ஜன்னலோரம் அமர்ந்திருந்ததால் சிதைந்த உடலை பார்க்க நேர்ந்தது. (மேலும் விவரிக்க தேவையில்லன்னு நினைக்கிறேன். ). கிட்டதட்ட 65 வயது முதியவர். பைபாஸ் ரோட்டை கடக்கும் போது எதிர்பாரா விதமாக வேகமாக வந்த ஆம்னி வேன் மோதிவிட்டதாக பேசிக்கொண்டார்கள். அந்த வழியில் பயணப்படுபவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஊருக்கு உள்ளே நுழைந்தால் மட்டுமே ரோட் லைட் இருக்கும். அவுட்டர்ல ரோட் எங்கே இருக்கும்னு கூட தேடிட்டு இருக்கணும். 

இப்படி சாதாரணமான அடிப்படை வசதி எதுவோ அதையெல்லாம் செஞ்சு கொடுக்குறத விட்டுட்டு இலவசத்த வாரி வழங்குறதெல்லாம் என்ன எழவுக்காக?????? யார் வீட்ல தான் பேன் மிக்ஸி இல்லாம இருக்கு? தாத்தா கொடுத்த டீவி ஒரு நாள் மழைக்கே  கோவிந்தாவாய்டுச்சு, உங்க லேப்டாப் எத்தன நாளைக்கு வரும்????  நாமலே பணம் கொடுத்து பொருட்களை வாங்குவதற்கும் அவங்க கொடுப்பதற்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. நம் பணம்-நம்வரிபணம், மக்களே சிந்திப்பீர்......
***************
ராஜீவ் காந்தி கொலை வழக்கின்  தூக்கு தண்டனை கைதிகளான  பேரறிவாளன், சந்தானம், முருகன் ஆகியோரின் கருப்பு வெள்ளை படம். விடுதலை செய்..!! தூக்கு தண்டனையை ரத்து செய்..!! என்பன போன்ற வாசகங்கள். கடைசியில் இவண் மூன்று தமிழர் உயிர் காப்போம் போராட்ட குழு. இந்த பேனர் பிரதான சாலை சந்திப்பில் காண நேர்ந்தது. அதன் கீழே மாம்பழம் விற்ற பெண்மணியிடம் மீதி சில்லரையை வாங்கும் போது எப்ப இந்த பேனர் வச்சாங்க என கேட்டப்ப "யாரு வச்சா எதுக்கு வச்சா யாரிவிங்கன்னே தெரியல"ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க......... அதே மாதிரி தான் கூடங்குளமும். எதுக்காக உண்ணாவிரதம் இருந்தாங்கன்னே பலருக்கும் தெரியல
***************
பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தது எதேச்சையாக காதில் விழுந்தது (கவனிக்கவும்......காத்துல வந்து காதுல  விழுந்துச்சு. ஒட்டு கேக்குற அளவுக்கு ISD கிடையாது ஹ்ஹும்)
நண்1- என்னவாம்?
நண்2 - வேற பொண்ண பாக்க போறாய்ங்களாம்
நண்1- அந்தபுள்ள மனசு எவ்வளவு வேதன பட்ருக்கும்?
நண்2- அதுக்காக என்னைய விட 2 வயசு மூத்தவள கட்டிக்க சொல்றீயா? நல்லவேள சீதனம் வரைக்கும் போகல...... டேய்...... அக்கா மாதிரிடா...........
நண்1- ..................  அப்ப உன்னைய விட 2 வயசு சின்னதா இருக்குறவலாம் தங்கச்சியா? போடா நீயும் ஒன் வெளக்கெண்ண ரீசனனும்......
நண்2- பல்லு வலியும் வயித்துவலியும் அவனவனுக்கு வந்தா தான் டே தெரியும்.
(ஆமி மனசாட்சி- அப்ப ஹார்ட் அட்டாக்லாம் வந்தா சொகமா இருக்குமோ?)
***************
சமீபத்திய ஆட்டத்தில் நூலிழையில் மும்பை இந்தியன்ஸ் ஜெயிச்ச மேட்சை எங்க வீட்டு கிரிக்கெட் அரக்கரண்டுகள் பாத்துட்டிருந்துச்சுங்க. (அதில் என்னவரும் அடக்கம் ஹி...ஹி...ஹி...) கடைசி 2 ஓவரில் என்னவரை பார்த்து........
நான் - டார்க்கெட் ரன் என்ன?
அவர்- 100
நான் - எனக்கொரு டவுட்டு...... சரியா பதில் சொல்லலைன்னா ஒரு வாரத்துக்கு கிரிக்கெட் விளையாட போக கூடாது சரியா?
அவர்- கிரிக்கெட் பத்தி எங்கிட்டேயேவா?  12 வயசுல இருந்து விளையாடுறேன். கேளு கேளு........
நான் - டார்க்கெட் ரன் என்ன?
அவர்- அதான் சொன்னேனே........100ன்னு
நான் - ரன்னுன்னா ஓடுறது தானே.... அதாவது பாய்ன்ட்,கோல் மாதிரி, ரைட்????
அவர்- ஆமா
நான் - அப்ப ஏன் பவுட்ண்ட்ரிஸ்லாம் ரன்னுன்னு சொல்றானுங்க? ஓடாம 4,6 எடுக்குறதுலாம் எப்படி ரன்னுல சேர்த்துக்க முடியும்?........ அப்ப அவனுங்க என்ன கேனையங்களா? இல்ல பாக்குற நாம்மலெல்லாமா?????
அவர் -..........????????????!!!!!!!!!!!!....................

(என்ன தான் வெளக்கம் சொன்னாலும் எடக்கு மடக்கா கேள்வி கேட்பேன்னு அதுக்கப்பறம் அவர்  வாய தெறக்கல......ஒரு வாரம் சாயங்காலம் போகாம இருக்குறதெல்லாம் தண்டனையே இல்லையாம். ஈவ்னிங் ஸ்நாக்ஸ்ன்னு ஒன்ன கொடுத்து அவர டெஸ்ட் பண்ண சொல்றது தான் இருக்குறதுலையே பெரிய கொடுமையாம்........)
***************
ரொம்ப நாளா ஆசை. ப்ளாக் டெம்ப்ளேட்டை எனக்கு பிடிச்ச மாதிரியே வெள்ள கலருல மாத்திக்கணும்னு.  லெட்சுமி மாமிகிட்ட ஐடியாலாம் கேட்டேன். அவங்க சொல்றேன்னு சொல்லி கடைசி வரைக்கும் அந்த ரகசியத்த சொல்லவே இல்ல:-) நாமலே முயற்சிக்கலாம்னா அந்தளவுக்கெல்லாம் நமக்கு மூள வேல செய்யாது. அப்படியும் முயற்சி பண்ணி ஒரு டெம்ப்ளேட்ட வச்சா அதுல சில பல பட்டன்கள் எடுக்கல. முக்கியமா ஓட்டுபட்டை :-) எங்கிருந்தாலும் வரவும்னு சொன்னதும் ப்ளாக்கர் நண்பன் ஓடி வந்து ஹெல்ப் பண்ணாரு. பழைய டெம்ப்ளேட்ட பேக் அப் பண்ணி வச்சுரூக்கீங்க தானே?ன்னு அவர் கேட்ட மொத கேள்விக்கே அப்படின்னா என்னா?ன்னு பதில் சொன்னப்பவே தல சுத்தி மயக்கம் போட்டுருப்பாரு :-) ஒரு வார போராட்டத்துக்கு எல்லா வசதிகளுடன் கூடிய இந்த டெம்ப்ளேட்ட மாத்தி கூடவே பல்பும் கொடுத்தாரு(இதெல்லாம் ப்ளாக்கர் வாழ்க்கையில சகஜமப்பா..............)

நான் - thanks brother
ப்ளாக்கர் நண்பன் - welcome sister
நான் - பாண்டிச்சேரிக்கா?
ப்.ந- நான் அந்த ஊர் இல்லையே
நான் - அந்த பாண்டிச்சேரி சகோக்கு நீங்க சொந்தக்காரர்ன்னு கேள்விபட்டேன்
ப்.ந - உங்க சொந்தக்காரங்க எல்லாருமே உள்ளூர்ல தான் இருக்காங்களா?
நான் - ???????!!!!!!!!!! முதல் பல்பு
ப்.ந- பெருமையுடன் வழங்குவது ப்ளாக்கர் நண்பன்
நான் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

***************
இந்த சீசன் சிறந்த நகைச்சுவை
 • கேடியின் உண்ணாவிரத நாடகம்
 • வாழ்வளிப்பார் என எண்ணியே சபையில் ஊமையாய் இருந்தவர்களின் கனவை அம்மா  அழித்ததால் தனி கூட்டணி அணி
***************
தத்தோபித்தோவம்- உனக்கு பிடிச்ச மாதிரியே எல்லாரும் பேசணும்னு எதிர்பாக்காத! நியாயம் உன் பக்கமாக தான் இருக்கும்னு எதிர்பாக்காத! கடைசி வரைக்கும் எது உண்மை என தெரியாமலேயே போய்டும்.
***************
என் டைரியிலிருந்து- தொந்தரவு செய்யும் கசப்பான நினைவுகளை மறக்க  புதிய  பாதையில் திரும்பி பார்க்காமல் பயணிக்கிறேன். அதிலேயே மூழ்கி கண்ணீர் வடித்தால்  ஒரு பெண்ணாய் தோற்றுவிடுவேனோ என்ற பயத்தில்...........
THE END :-)

, , ,

3 நாட்களுக்கு முன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க ஸ்டுடீயோக்கு  செல்ல நேர்ந்தது. எப்பவும் கொசு விரட்டும் அல்லது யூஸ் ஆகாத கேமராவ தொடச்சு தொடச்சே வெளுக்க வைக்கும் வேலையில் ஈடுபடும் போட்டோக்ராபர் அன்னைக்கு படுபயங்கர பிசி. கூட்டம் வாசல் வரை படர்ந்தது. எல்லாருமே கிராமத்தாளுங்க. சிலர் எங்க ஊர் பாட்டீஸ்.

"இந்த மவராசி வந்தாலே இதே பொழப்புத்தேன். அத மாத்த,இத மாத்தன்னு மனுஷ உயிர வாங்கிட்டுதேன் மறுசோலி பாக்கும்" இதான் என் காதில் முதலில் விழுந்த வாக்கியம். என்னத்துக்கு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நம்ம அம்மாவ தான் இப்படி புகழ்றாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. பரவால்லையே பாட்டீங்க கூட அரசியல்ல பயங்கரமா கலக்க ஆரம்பிச்சுட்டாங்க..... வெயிட் பண்ற நேரத்துக்கு இதையாவது கேட்டுட்டு இருப்போம்னு ஐடியா ;-)

, ,

பரமக்குடியில் நடந்த கலவரம் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை ஏற்கனவே போதுமான அளவு செய்திகளில் கிழிக்கப்பட்டு விட்டதால் என்னால் முடிந்தளவு சில விஷயங்களை மட்டும்..........
பள்ளிகளில் படிக்கும் காலங்களில் இந்த மாதிரி கலவரம் நடந்தா பயங்கர கொண்டாட்டமா இருக்கும். ஏன்னா கண்டிப்பா ஒரு மாசம் ஸ்கூல் இருக்காது ( அசம்பாவிதத்தால் நடந்த உயிரிழப்பும் பொருட்சேதமும் கணக்கிடும் பருவமில்லாததால் அந்த கொண்டாட்டம்). 1,2,3ன்னு ஒவ்வொரு வகுப்பா முன்னேற முன்னேற வருடா வருடம் வரும் பண்டிகை போல் எதிர்பார்க்கப்பட்ட கலவரமும் மெல்ல மெல்ல குறைஞ்சு ஒரு கட்டத்துல கலவரம்னா என்னன்னு கேள்வி கேட்கும் அளவுக்கு தான் போன வருடம் வரை நெலமை இருந்துச்சு. ஆனா இந்த வருஷம்????????..........
(சுருக்கங்க கூறின்- கிட்ட தட்ட 15 வருஷத்துக்கு முன்பு நடந்த ஜாதி கலவரத்துக்கு பின் நடந்த கலவரம் இது)

கலவரத்துக்கு ஒருவாரம் முன்பு
புதிதாய் பார்த்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க போன போது சாவி கொத்தை கொடுத்து வீட்டுக்கு வரும் நாளை குறிக்க காலண்டரை எடுத்தார் ஹவுஸ் ஓனர். ஒடனே நா "இல்லல்ல.... அதெல்லாம் பாக்காதீங்க........ எனக்கு அதுலலாம் நம்பிக்க இல்ல. நாயித்து கெழம குடி வந்துடுவேன்"ன்னு சொன்னதும் அந்த தாத்தா "இல்ல தாயி..... திங்க கெழம வாங்க. நாயித்து கெழம அன்னிக்கு ஊர்வலம், பேரணின்னு பரபரப்பா இருக்கும். அதுக்காக தான் எப்ப

, ,

அறுசுவையில் எழுதிய பெரிய கதை :-)


டிஸ்கி:- இது போல் உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ இந்த கதையில் உள்ளது  போல் அனுபவம் ஏற்பட்டால்  "குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய என் டைரியில்  --க்கு  என் அனுபவ பதிவு இது..! என்ற வரியை  சேர்க்கவும். தேவையில்லாம யாரும் பல்ப் வாங்க கூடாது பாருங்க!!!

என் வீட்டின் எதிரில் நீ குடிவந்தாய். அன்று தான் முதன் முதலாக உன்னை சந்தித்தேன். அந்த நாள் கண்டிப்பாக என் வாழ்வில் மறக்க முடியாத நாள் தான். எப்படி முடியும்? கருப்பு நாளில் நான் கண்ட திருநாள் அல்லவா அது! ஆசையாய் நான் எழுதிய பல கவிதைகள் அடங்கிய என் டைரியை என் தாத்தா வேண்டுமென்றே பழைய புத்தகங்களோடு சேர்த்து சொற்ப

, ,

ரம்ஜான் பர்சேஸ் முடிக்க நைட் ரொம்ப லேட்  ஆச்சு. ரொம்ப நேர காத்திருப்புக்கு பின் ஒருட்டில் இருந்து வந்த ஆட்டோவை வழிமறிச்சு :-) ஏறியாச்சு. நான் எந்த இடமென சொல்லாமலேயே சரியாக என் வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது(அந்தளவுக்கா பெரிய ஆளு?) கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்தார் ட்ரைவர். டபுள்  ஆச்சர்யம். ஏன் என்பது போல் நான் பார்த்த பார்வையை பார்த்து
"என்னை ஞாபகம் இல்லையா? கலீல்!!" என சொன்னதும் சடன் ப்ரேக் போட்டது போல கொஞ்சம் ஆடி அப்பறம் ஸ்டெடி ஆனேன்.

, ,


இப்படியொரு பதிவு போட ரொம்ப வருத்தமா தான் இருக்கு. இன்னைக்கு விட்டா இனி அடுத்த வருஷம் தான் சொல்ல முடியும். கெட்ட விஷயத்த ஏன் தள்ளி போடுவானே? அதான் இன்னைக்கு சொல்லிடுறேன். பையனின் படிப்பு குறித்து பேச வாய் திறந்த போதே நீங்க 50 ரூபா கொடுத்துட்டீங்களான்னு கேட்டாங்க அந்த டீச்சர்.  ரம்ஜானுக்காக ஒரு வாரம் ஸ்கூல் பக்கம் போகாததால் அவங்களோட ஏற்பாடு தெரியாமல் இருந்தது.  நாம எப்ப அந்தம்மாகிட்ட கடன் வாங்குனோம்? இடையில அமினீசியா வந்துடுச்சோன்னு???திருதிருன்னு முழிச்சேன்.........

என் சந்தேகம் அவங்களுக்கு புரிஞ்சுடுச்சு போல!!! காரணத்த சொன்னாங்க.

, , ,

உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்........
ரமலானில் நீங்கள் செய்த நன்மைகளுக்கு ஏக இறைவனிடம் பன்மடங்கு கூலி கிடைக்கவும்,  மேலும் மேலும் வாழ்வில் முன்னேற்றங்களும் செழிப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்
என்னன்ன சமைக்கலாம்னு என்னை மாதிரி முடிவெடுக்காம நிறைய பேர் இருப்பீங்கன்னு தெரியும்.  என்ன குழம்பு வைக்கலாம்னு  குழப்பமா இருக்குன்னு குழம்பியிருக்குறவங்களுக்காக சில மெனுக்கள் இருக்கு. செய்து அசத்துங்க  :-) அதுக்கப்பறம் பெருநாளைக்கு உங்கள யாரும் சமைக்க சொல்லவே மாட்டாங்க...ஹி...ஹி...ஹி.....

சாத  வகைகள்
திண்டுக்கல் பிரியாணி
சிக்கன் பிரியாணி (எளிய முறை)
சிக்கன் பிரியாணி (லேயர் முறை)
வெஜ் பிரியாணி
குஸ்கா
தேங்காய் பால் சாதம் (எளிய முறை)

குழம்பும் கறியும்
தாளிச்சா
கல்யாண தாளிச்சா
எள்கத்திரிக்காய் க்ரேவி
பெப்பர் சிக்கன்
தேங்காய் கறி
 ஆந்திரா சிக்கன் கிரேவி

ஏதோ இப்போதைக்கு என்னால முடிஞ்சது ;-) அதுனால அதிகமா கொடுக்க முடியல.....:-))

முக்கிய குறிப்பு :-))
ஒரு பத்து நாளைக்கு என் கடைக்கோ மத்தவங்க கடைபக்கமோ வர முடியாது (ஆமி பிஸின்னு சொன்னா சிரிப்பீங்களோ????...... ஆனாலும் அதான் உண்மை ஹி...ஹி...ஹி.... எல்லாரும் நல்லா கவனிச்சுக்கோங்க... நானும் பிஸியாயிட்டேன் நானும் பிஸியாயிட்டேன்). யார்கிட்டையும் நான் வம்பிழுக்கலன்னு கவலபடாதீங்கோ :-)) மொத்தமா என்கவுண்டர் பண்ணிடலாம் ஹி...ஹி...ஹி...

போன பதிவுல யார் கமென்டுக்கும் பதில் சொல்ல முடியல..... அதுனால பலபேர் சந்தோஷமா இருக்குறதா நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த சோக செய்தியை கேட்டு ஜீரணிக்கவே முடியல. அதுளையும் பத்து நாள் ஊருக்கு போறேன்னு வேற சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு நெனக்கிறவங்களுக்கு எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்து பொருமையா சண்ட போடலாம்.

நல்லபடியா பெருநாள் கொண்டாடிட்டு நல்லபடியா வந்து சேருங்க இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்...........

, ,