TV CLOUD STICK    துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழுவினர். அது மாதிரி, என் கதைய காப்பி அடிச்சுட்டாங்க, என் ட்யூனை திருடிட்டாங்க, என்ற முனு முனுப்புகளை நாம் கிசு கிசுக்களில் படித்திருக்ககூடும். இதே வாய்க்கா தகராறுகள் தொழில் நுட்ப உலகிலும் ஏராளம்.


    செல்போனின் பரிணாம வளர்ச்சி பாதையில் அனைவரும் அமெச்சூர் போட்டோ கிராபர்களாகினோம். வீடியோ ஜாக்கிகளாகவும் ஆனோம். எதையும் எப்படியும் பயன்படுத்தலாம், Computer, TV ஆகலாம், TV, Computer ஆகலாம், இதுதான் இன்றைய தொழிழ் நுட்பம் அறிவிக்கிறது.

Inline image 2    

      மொபைல் போனில் இயங்கிவரும் அப்ளிகேஷன், மொபைல் ஆப்ரேட்டிங்க சிஸ்டம் (Operating System) எனப்படும். இதில் தற்போது இரண்டு முக்கியமான ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் (OS)

 1)    1) ‘I’ OS (Operating System)                
 2) ‘Android’ OS

    முதலாவது OS ஆப்பிள் போனிலும், இரண்டாவது Samsung Galaxy போன்ற போன்களிலும் நிறுவப்பட்டு வருகிறது.

    இரண்டும் வெவ்வேறு நிறுவனங்கள். ஆரம்பத்தில் கூகிளுடன் இணங்காத ஆண்ட்ராய்டை பின்னாளில்  Android ன் வளர்ச்சியை கண்டு Google அதை வாங்கிகொண்டது.

    

    Android அறிமுகமான நேரங்களில் ஒட்டு மொத்த உலகிலும் எங்கோ ஒரு சில மூலைகளில் உள்ள ஐடி மூளைகளுக்கு மட்டுமே Android குறித்த விஷயங்கள் புலப்படுவதாக இருந்ததால் சந்தையில் அதற்கு நல்லதொரு ஆரம்பம் கிட்டவில்லை. ஆண்ட்ராய்ட் என்பது புரியாதிருப்பினும் ஆங்காங்கே அட்லீஸ்ட் உச்சரிக்கப்பட்டது, மற்றபடி அது குறித்த எந்த ஒரு தகவலும் பிரபல்யம் இல்லை.

    இந்த நேரத்தில்தான் கிட்டதட்ட Android ஐ ஓட்டி ஆண்ட்ராய்ட் மாதிர்யே ஒரு மொபைல் ஆப்ரேட்டிங் அப்ளிகேஷனை டெவலப் செய்து, அதையொரு மொபைல் போனில் செலுத்தி அறிமுகப்படுத்தினார்கள். அதுதான் ஐ போன். அந்த போனில் I என்ற ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் பயன்படுத்தியதால் அது ஐ போன் என பெயரிடப்பட்டது.அந்த மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் ஆப்பிள் போன், i-Phone என்று பெயருடன் நல்ல பெயரை சம்பாதித்தது. (அந்த நேரத்தில் நம்மூர் வி.ஐ.பி களில் முதன் முதலில் i-Phone வாங்கியது நடிகை த்ரிஷாதான் என்பது ஒரு கலர்ஃபுல் தகவல்). My phone is i-Phone என்று பெருமை கொள்ளும் அளவில், விளம்பர விரும்பிகளையும், வியாபார பிரமுகர்களையும் சுண்டி இழுத்தது.  இதையெல்லாம் அமைதியாக பார்த்து கொண்டு ஒரு மூலையில் அழுது கொண்டு இருந்த ஒரு தொழில் நுட்பம்தான் Android Operating System. ஏன் அழுகை?

    ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் Source Codeம், Apple Phone முதலான இன்னும் சில Apple product ல் பயன்படுத்தி வந்த ’I' என்ற Operating Applicationsன் Source Codeம் கிட்டதட்ட ஒரேமாதிரி இருந்ததால் ஆப்பிள் நிறுவனத்தார் Android ன் ஆக்கங்களை திருடிவிட்டனர் என்ற ஆதங்கமே அந்த அழுகை. பட் காலம் சென்ற Steve Jobs    Androidஐயும் கூகிள் கூட்டத்தையும் கரிச்சு கொட்டிகொண்டே இருந்தார். அவர் ஆண்ட்ராய்டை திருடன் என பழியுரைத்தார்.     இணையம் முதல் இட்லி சாம்பார் வரை உலகில் அனைத்தையும் தானே ஆதிக்கம் கொள்ள வேண்டும் என்ற கூகிள் ஆண்ட்ராய்டை விலைக்கு வாங்கிகொண்டதும் வேறு கதை (You tube வாங்கியது போல்)

    இப்படி பல பரிதாப சர்ச்சைகளில் நீந்தி கொண்டிருக்கும் அந்த ANDROID, Samsung Mobile க்கு மறு வாழ்வு அளித்ததை தொடர்ந்து "TV CLOUD STICK" என்ற ஒரு புது தொழில் நுட்ப சாதனத்தை அறிமுகப்படுதியது, அதுதான் TV CLOUD STICK அல்லது Wi-fi TV CLOUD STICK,

Inline image 3
    இந்த CLOUD STICK ஐ உங்கள் வீட்டு டிவியில் உள்ள HDMI Cable க்கான Slot ல் செருகி இணைத்து விட்டால் ஒரு தற்காலிக கம்ப்யூட்டாராக உங்கள் டிவி உருமாறிக்கொள்ளும். அதே Cloud Stick ன் இன்னொரு பகுதியில் Pen Drive செருகுவதற்கான Slot ஒன்று காணும், அதில் Mouse ஐ இணைத்துக் கொண்டு இணையத்தில் பயணிக்கலாம். சகலமும் டிவியில் இணைக்கபட்ட பின்பு Android Application செயல்படுவதற்கு திரையில் விரிந்து நிற்கும். இனி உங்கள் செயல்தான். கம்ப்யூட்டர் மானிட்டரை போல் நிறைய ஐகான்கள் டிவி திரையில் பரவி கிடக்கும். அதன் மூலமாக Browsing ஐ இனிதே தொடங்கலாம். அவ்வளவுதான்....டிவியில் இண்டெர்நெட் வந்தாச்சு..கேம் விளையாடலாம், யுட்யூப், ஜிமைல், ஃபேஸ்புக், டுவிட்டர் என எல்லாவற்றையும் இயக்கலாம்.
    டச் ஸ்க்ரீன் போன் பயன்படுத்தியவர்களுக்கு இதில் ஒரு பரீட்சயம் இருக்கும். ஆப்பிள் போன் பயன்படுத்தியவர்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும் இந்த CLOUD STICK., Android நீங்கலாக வேறு சில அப்ளிகேஷன் சப்போர்ட்டோடும் வருகிறது. அத்துடன் மெமரி கார்ட் போட்டு அதில் உள்ளவற்றையும் திரையில் கொண்டுவரலாம். பலதரப்பட்ட Audio&Video Format களை அணாயசமாக Play பன்னும் இந்த TV Cloud stick, Games கூட விளையாடும் அளவில் இதன் Graphic Card மேம்படுத்தப்பட்டதாக உள்ளது.


    இப்ப வரும் எல்லா டிவிலேயும் இதனை இணைப்பதற்கான HDMI Slot இருக்கிறது அந்த Slot பக்கத்தில் HDMI னு எழுதியும் இருப்பார்கள். பழைய மாடல் டிவிலேயும் இருக்கும்னு நினைக்கிறேன்,ஆனால் பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டிவில இருக்காது. ஒன்னும் குழப்பமே வேண்டாம், சிம்பிள் அந்த CLOUD STICK வாங்கிற அளவுக்கு வந்துட்டீங்கனாலே  HDMI ஐ ஸ்லாட் எதுனும் தெரிந்துவிடும். அல்லது ...டிவில பார்ப்பதற்கு எரிச்சலா எதாவது Slot(துளை மாதிரி) இருக்கு இல்லையா? அதாவது எதுக்கு இருக்குனே தெரியாமல் தேமேனு இருக்கும் பாருங்க, அதுதான் HDMI Slot.
இதுக்கு Reliance, BSNL மாதிரி USB Modem மே வாங்கிக்கலாமே, அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்
USB Modem க்கு கம்ப்யூட்டர் வேனும், பட் இந்த Cloud Stick, TVஐ கம்ப்யூட்டரா மாத்தி Internet ஐ டிவியில் கொண்டு வரும். இதுதான் அடிப்படையான வித்தியாசம்.
Further More Technical Specification, Go through the link is below
http://www.95925.cmstrial.net/webapps/p/95925/293631/728879.

நன்றி : பக்ருதீன் (ஆஷிக் )

, , ,

சமீபத்தில் ராஜீவ் கொலைவழக்கின் மூன்று குற்றவாளிகள் விடுதலை குறித்து  ஹிந்துஸ்தான் டைம்ஸால் அவர்களின் தளத்தில்   நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் பங்குகொண்ட சகோதரர்கள் அதிர்ச்சியாகி  முகநூலில் பதிந்த செய்தி கண்ணில் பட்டது...   தாங்கள் தளத்தில் ஓட்டுபோட்டபோது இருந்த ரிசல்டானது  அடுத்த நாள் அவர்களின் பத்திரிக்கையில்   மாற்றியமைக்கப்பட்டுள்ளது என கொந்தளித்தனர்.  ( http://goo.gl/8PCQnl )

மோடியின் பொய்புரட்டுகள் பரிட்சயமனாதலால், அவரின் பேஜ் ஐடிக்களின் அலப்பறைகள் மற்றும் அவருக்காக செயல்படும் மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் மோசடியும் அவ்வபோது பகிரப்படுவதால் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை என்றாலும் நேற்று பத்திரிக்கைதுறையில் பணியாற்றும் சகோதரர் பீர் முஹம்மத்  tag செய்த விசயம் கவனத்தை ஈர்த்தது...
கருத்துகணிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல! அதன் முடிவுகள் ஒருவரின் மனபோக்கை தீர்மானிக்க மற்றும் மாற்றியமைக்க  சக்தி பெற்றது. ஒருவேளை நாம் மட்டும் தான் தவறான புரிதலில் இருக்கிறோமா என  ஒருவரின் இறுதி முடிவுகள்  மற்றும்  அசைக்கமுடியா நம்பிக்கைகளையும்  பதம் பார்க்கக்கூடியது.  இத்தகைய சக்திவாய்ந்த ஒரு களத்தை    தான்   இந்தியாவில் செயல்படும் கருத்துகணிப்பு நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக  ஒட்டுமொத்தமக்களையும் முட்டாளாக்கியுள்ள  விஷயம்  அம்பலமாகியுள்ளது.

அவர்களின் மோசடியை  News Express  எனும் தனியார் செய்தி தொலைகாட்சி , தங்கள் நடத்திய புலனாய்வில் வெளிபடுத்தியுள்ளது.  Operation Prime Minister என பெயரிடப்பட்ட  இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில் இந்தியாவில் பிரபலமாக  இயங்கிகொண்டிருக்கும் 11 மோசடி நிறுவனங்களை வெளிச்சமிட்டு காட்டியது.

தேர்தல் ஆணையம் ,  அரசியல் கட்சிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கருத்து கணிப்பு குறித்து அவர்களின் கருத்துக்களை அறிய  விடுத்த அழைப்பு தான்  இந்த    புலனாய்வை ஆரம்பிக்க உந்துதலாக  அமைந்தது. அதன் பிறகே களத்தில் இறங்கினர்.  அவர்களின் ஆய்வுக்கு பிறகு தங்கள் சேனலில் நேற்று  அதிர்ச்சிகர செய்திகள் பலவற்றை வெளியிட்டனர்.  கடந்த காலத்தில் எப்படியெல்லாம் மோசடி நடைபெற்றது என இந்த புலனாய்வில் ஆழமாக  குறிப்பிடவில்லை எனினும் திரித்து கூறப்படும்  முடிவுகளுக்கு வெவ்வேறு கட்டணங்களில் பணம் வாங்கப்பட்டதும்,  சில அரசியல் கட்சிளுக்கு ஆதரவாக  போலியான முடிவுகள் சமர்பிக்கப்பட்டத்தையும்  தங்கள் செய்தி சேனலில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அவர்கள்  வெளியிட்டதகவலில் சில துளிகள் :

இந்த கருத்துகணிப்பு ஏஜேன்சி தலைமை எப்போதும் இருவித கோப்புகளை பராமரிக்கின்றது. அரசியல் கட்சிகளின் சார்பில்  அணுகப்படும்போது இவர்கள்  பணத்திற்காக  , திரித்து மாற்றியமைக்கப்பட்ட தரவை கொடுக்க  தயாராகவே உள்ளது.

வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் , எதிர்மறையான டேட்டாக்களை நீக்குதல், சாதகமான எரர் மார்ஜின் உயர்த்துதல் என உண்மையான தரவுகளை எந்த அளவிற்கு மாற்றவும் தயாராகவே உள்ளனர்.

இப்படியாக திரித்து முடிவுகள் தருவதற்கு கருத்துகணிப்பின்  கரு பொறுத்து வெவ்வேறு வகையில் கட்டணத்தை வசூலிக்கின்றனர். பிரபல செய்தி சேனல்களில், செய்திதாள்களில் இவற்றை வெளியிடவும் உறுதியளித்துள்ளனர். 

இப்படியான பொய்யான கருத்துகணிப்பு முடிவுகள் தான்  செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், டிவிகளிடம் கொடுக்கப்பட்டு மக்கள் மன்றத்தில் முன்வைக்க்கப்பட்டுகிறது. இதனை நம்பி மக்களும் முட்டாளாக்கப்படுகின்றனர்.

 இந்த புலனாய்வில் முக்கியமாக மாட்டியுள்ள கட்சி பிஜேபி தான்.

சமீபத்தில் உபி யில் இன்ன அரசியல் கட்சி  , இத்தனை இடங்களில் வெற்றிபெறும் என சொல்லப்பட்ட கருத்து கணிப்பு  முடிவு உண்மையானதல்ல என  நியூஸ் எக்ஸ்ப்ரஸ் செய்தி நிறுவனம்  கூறியுள்ளது.

______

இந்த  புலனாய்வில்மூலம்   பிரபலமான கருத்து கணிப்பு நிறுவனமான  சி-வோட்டர் செயல்பாடுகள்  குறித்தும்  முணுமுணுக்கப்படுகிறது.  இந்தியா டுடே குழுமம், இந்தப் புலனாய்வுக்கு மதிப்பளித்து தனது இதழுக்காகவும் ஹெட்லைன்ஸ் டுடே/ஆஜ் தக் சேனலுக்காகவும் சி-வோட்டர் நிறுவனம் மூலம் எடுக்கவிருந்த கருத்துக் கணிப்புக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.  விளக்கம் கேட்டு நோட்டீஸ்ஸும் அனுப்பியுள்ளது.

இவ்வளவு கோடிகள் செலவளித்து பொய்யான கருத்துகணிப்பு முடிவுகள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன??

"Make the lie big, make it simple, keep saying it, and eventually they will believe it”

இப்படிதான் துரோகிகளையும், விஷமிகளையும்   ஹீரோவாக ஏற்றுள்ளோம்!  நாடு எங்கே உருப்படபோகுதுன்னு சிந்திக்கிறதுக்கு முன்னாடி நம்மல எப்படியெல்லாம் ஈசியா முட்டாளாக்குறாங்கன்னு சிந்திப்போமா? ப்ளீஸ்...

நன்றி:
சகோ பீர் முஹம்மத் (ஜெர்னலிஸ்ட்)
சகோ நசீம்
அவுட்லுக் இந்தியா.காம்
, , , , ,

நேற்று இரவு 8 மணியிருக்கும். ஷாம்க்கான பொருட்களை உடனடியாக வாங்க மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்து கடைதெருவிற்கு சென்றோம் இருவரும்.

கடையில் நுழையும் முன் முகப்பில் யாருமில்லாததை பார்த்து கடைக்குள் செல்ல தயங்கி, யோசித்து பின் அவர் முஸ்லிம் என்பதால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றேன். உடனே உள்ளிருந்து பதில் வந்தது சந்தோஷமாக... வ அலைக்கும் சலாம் வரஹ்...........

புதிய டிசைன்னை எடுத்துக்கொண்டு வருகிறேன் என பக்கத்து கடைக்கு சென்றார். நான் மட்டுமே கடையில் இருந்தேன். சட்டென கண்ணில்பட்டது கலிபாக்கள் வரலாறு எனும் புத்தகம். ஆஹா.. நாம் வைத்திருக்கும் பொருள்போலவே வேறெவரும் வைத்திருந்தால் மனதில் சட்டென தோன்றுமே ஒருவித மகிழ்ச்சி..அதற்கு அளவே இல்லை..

எல்லாம் முடித்துவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு கிளம்பும் முன், முஆவியா குறித்த வரலாறு புக்ஸ் எதுவும் இருக்கா உங்களிடம் என்றேன். அதெல்லாம் நாம ஏன் படிக்கணும் என்பது போலவே பேச்சை ஆரம்பித்தார். ஏன் படிக்க கூடாது என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் எதுவும் என்காதில் விழவில்லை. உடன்பாடும் ஆர்வமும் இல்லாததால் உள்வாங்கிக்கொள்ளவும் இல்லை. அல் ஜன்னத் (அல்லது வேறு ஏதோ ஒரு பத்திரிக்கையின் பெயர் சொன்னார்) பத்திரிக்கை பக்கம் பேச்சு சட்டென மாற, அதெல்லாம் நான் படிச்சதில்ல, சமரசம் மட்டும் வாங்குவேன் என்றேன்! சமரசமா? தௌஹீத் கொள்கைக்குள் (ததஜ இல்ல அவ்) வாங்க, உங்க எண்ணங்கள் எல்லாம் சுன்னத் ஜமாத்தை சார்ந்தே இருக்குன்னார். எனக்கு தூக்கிவாரி போட்டது. முஆவியா புக்கும் சமரசம் படிக்கிறேன்னு சொன்னதும் ஒரு தப்பா ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன் ... (பொதுவாகவே தவ்ஹீத் சிந்தனையில் உள்ளவர்கள் எங்கள் ஊரில் மிககுறைவு. அதுவும் பெண்கள் என்றால் சொல்லவேவேண்டாம்.. அதனால் என்னை அவ்வாறு நினைத்திருக்கக்கூடும்)

சமரசம் ஏன் படிக்க வேண்டாம்ன்னு சொல்றீங்க? ஒன்றரை வருஷமா படிக்கிறேன். நீங்கள் சொல்லும் போல் எவ்வித அபத்தமும் நான் பார்த்ததில்லையே என்றேன். 4 வருடங்களுக்கு முன் அதனை வாசித்ததாகவும் அப்போது அப்துல் காதர் ஜெய்லானி பற்றிய கட்டுரை வந்ததாகவும் , அதில் அவருக்கு அருள் இருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள பெண்ணை (யா அப்துல் காதர் ஜெய்லானி என்றவுடன் அவர்க்கு காதில் எட்டி) காப்பாற்றியதாகவும் வந்தது. இதுபோன்றவர்கள் , இதுபோல் செய்வதாக காட்டுவது மார்க்கத்திற்கு முரணானது இல்லையா என்றார். இன்றும் எமனேஷ்வரத்தில் மதர்சாவில் அந்த புக் இருக்கு! நீங்க நம்பலைன்னா நான் உங்களுக்கு காட்டுறேன் என்றார்.

எனக்கு அதிகம் ஞானம் இல்லாத விஷயத்தில் ஏன் கருத்து சொல்லணும்ன்னு தலையை மட்டும் ஆட்டினேன். மணியையும் பார்த்தேன்... அது இரவு 9  ஐ நெருங்கிக்கொண்டிருந்தது...  பேச்சு எப்ப முடியும், எப்ப முடிக்கலாம்ன்னு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகாத்துட்டே இருந்தேன். ஆனால் அவர் அதே ஜெய்லானி கதை ஏன் இஸ்லாத்திற்கு முரணானதுன்னு விளக்கிட்டே இருந்தார். விடவே இல்ல...

சட்டென ஆச்சர்யம்!

நாம் முன்பு எங்கோ பார்த்த அதே ரெட் கலர் புக்கை புரட்டி கொண்டிருந்தார். "இந்தா பாருங்க... "மார்க்கத்தின் குரு இறைவனுக்கு சமமாக முடியுமா?"ங்குற தலைப்புல என்ன சொல்லியிருக்காங்க"ன்னு சொல்லிட்டிருக்கும் போதே சட்டென பொரிதட்டியது.
நாம் வச்சிருக்குற புக் அடுத்தவங்க வச்சிருந்தாலே செம சந்தோஷமா இருக்கும்... நாம் தயாரித்த அதே எதிர்குரல் புக்கை வச்சி எனக்கே அவர் விளக்கம் கொடுக்கும் போது........அல்லாஹு அக்பர்! அப்படியொரு மகிழ்ச்சி மனதில்...

சட்டென வேறு உலகத்தில் இருந்து நிகழ் உலகத்துக்கு வந்தபின் (ஹி...ஹி..ஹி... கொஞ்சம் மெதந்துட்டிருந்தது உண்மைதான் அவ்வ்) இதவிடுங்க! அந்த புக்கை கொடுங்க என்றேன். ஒன்னும் புரியாமல் என்னிடம் கொடுத்தார். அதில் என் பெயர் இருக்கும் இடத்தை சுட்டிகாட்டி , "இந்த ஆமினா முஹம்மத் நான் தான்" என்றேன் பெருமைபொங்க அவ்வ்


அவர் முகத்தில் செம மகிழ்ச்சி. நீங்களா அது? நீங்க கடைக்குள் சலாம் சொல்லி வரும்போதே நெனச்சேன். இப்படி சலாம் சொல்றவங்க ரொம்ப ரேர். நீங்க சொன்னதும் மனசுக்குள்ள அல்ஹம்துலில்லாஹ்ன்னு சொல்லிக்கிட்டேன். இப்படியெல்லாம் எழுதுறீங்க, அப்பறம் ஏன் முஆவியா புக்லாம் கேக்குறீங்க என்றார் அவ்வ்வ்வ்வ் ... அதுல ஒன்னும் தப்பில்லையே.. எல்லாமே தெரிஞ்சு வச்சுக்குறது நல்லதுதானே என்றேன். மிகுந்த மகிழ்ச்சியில் எங்களுக்காக துஆ செய்தார். அனைவரையும் பாராட்டினார். அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி கொடுக்கணும்ன்னு துஆ செய்தார். அல்லாஹ்விற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தேன். அதன் பின் விடைபெற்று கிளம்பிவிட்டேன்!

வீடு திரும்பும் வழியெல்லாம் மிகுந்த பூரிப்போடு புன்னகை பூக்க (நல்லவேள ஷாம்மை கூடிட்டு வந்தேன். இல்லைன்னா ரோட்ல தனியா சிரிச்சுட்டே போகுது பாரு அரவேக்காடு ன்னு நெனச்சிருப்பாங்க அவ்வ் ) வந்தேன். அல்லாஹு அக்பர். காரணம் எனக்காக அல்ல... என்னை பாராட்டியதற்காகவும் அல்ல... அந்த எதிர்குரல் புக்கை எடுக்கும் முன்பே தலைப்பை மனப்பாடமாக சொன்னார், சரியாக அந்த பேஜ்ஜை ஓபன் செய்தது அந்த புக்கில் அவருக்கு இருந்த பிணைப்பை காட்டியது. அதிலிருந்து எனக்கு விளக்கம் கொடுக்க எத்தனித்தபோது , "நோக்கம் நிறைவேறிய பலனை" உணர முடிந்தது.
#இதற்கு_தானே_ஆசைப்பட்டாய்_உம்மத்_டீக்கடை_குழுமமே!!

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்

தகவலுக்காக : எதிர்க்குரல் புக்கை முதன் முதலாக பணம் கொடுத்து வாங்கியது ஒரு நான் - முஸ்லிம் தான். புக் பேரில் Sirajudeen Mustafa Kamal ஒரு ஸ்டாலில் எதிர்குரலை அறிமுகப்படுத்தியதை எதேச்சையாக அவர் கவனித்துள்ளார். அந்த நபர் தான் வாங்கிய புத்தகத்திற்கு வேறொரு கடையில் பில் போட்டு முடிந்த போது சிராஜ் இல்லாததால் ரொம்ப தூரம் தேடி வந்து வாங்கிச்சென்றார். உற்சாகத்தை விதைத்த மறக்கமுடியாத தருணம். அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்

எதிர்குரல் புக் பற்றி தெரியாதவர்கள் இந்த லிங்க்  படிங்க :

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...

,