நேற்று இரவு 8 மணியிருக்கும். ஷாம்க்கான பொருட்களை உடனடியாக வாங்க மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்து கடைதெருவிற்கு சென்றோம் இருவரும்.

கடையில் நுழையும் முன் முகப்பில் யாருமில்லாததை பார்த்து கடைக்குள் செல்ல தயங்கி, யோசித்து பின் அவர் முஸ்லிம் என்பதால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றேன். உடனே உள்ளிருந்து பதில் வந்தது சந்தோஷமாக... வ அலைக்கும் சலாம் வரஹ்...........

புதிய டிசைன்னை எடுத்துக்கொண்டு வருகிறேன் என பக்கத்து கடைக்கு சென்றார். நான் மட்டுமே கடையில் இருந்தேன். சட்டென கண்ணில்பட்டது கலிபாக்கள் வரலாறு எனும் புத்தகம். ஆஹா.. நாம் வைத்திருக்கும் பொருள்போலவே வேறெவரும் வைத்திருந்தால் மனதில் சட்டென தோன்றுமே ஒருவித மகிழ்ச்சி..அதற்கு அளவே இல்லை..

எல்லாம் முடித்துவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு கிளம்பும் முன், முஆவியா குறித்த வரலாறு புக்ஸ் எதுவும் இருக்கா உங்களிடம் என்றேன். அதெல்லாம் நாம ஏன் படிக்கணும் என்பது போலவே பேச்சை ஆரம்பித்தார். ஏன் படிக்க கூடாது என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் எதுவும் என்காதில் விழவில்லை. உடன்பாடும் ஆர்வமும் இல்லாததால் உள்வாங்கிக்கொள்ளவும் இல்லை. அல் ஜன்னத் (அல்லது வேறு ஏதோ ஒரு பத்திரிக்கையின் பெயர் சொன்னார்) பத்திரிக்கை பக்கம் பேச்சு சட்டென மாற, அதெல்லாம் நான் படிச்சதில்ல, சமரசம் மட்டும் வாங்குவேன் என்றேன்! சமரசமா? தௌஹீத் கொள்கைக்குள் (ததஜ இல்ல அவ்) வாங்க, உங்க எண்ணங்கள் எல்லாம் சுன்னத் ஜமாத்தை சார்ந்தே இருக்குன்னார். எனக்கு தூக்கிவாரி போட்டது. முஆவியா புக்கும் சமரசம் படிக்கிறேன்னு சொன்னதும் ஒரு தப்பா ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன் ... (பொதுவாகவே தவ்ஹீத் சிந்தனையில் உள்ளவர்கள் எங்கள் ஊரில் மிககுறைவு. அதுவும் பெண்கள் என்றால் சொல்லவேவேண்டாம்.. அதனால் என்னை அவ்வாறு நினைத்திருக்கக்கூடும்)

சமரசம் ஏன் படிக்க வேண்டாம்ன்னு சொல்றீங்க? ஒன்றரை வருஷமா படிக்கிறேன். நீங்கள் சொல்லும் போல் எவ்வித அபத்தமும் நான் பார்த்ததில்லையே என்றேன். 4 வருடங்களுக்கு முன் அதனை வாசித்ததாகவும் அப்போது அப்துல் காதர் ஜெய்லானி பற்றிய கட்டுரை வந்ததாகவும் , அதில் அவருக்கு அருள் இருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள பெண்ணை (யா அப்துல் காதர் ஜெய்லானி என்றவுடன் அவர்க்கு காதில் எட்டி) காப்பாற்றியதாகவும் வந்தது. இதுபோன்றவர்கள் , இதுபோல் செய்வதாக காட்டுவது மார்க்கத்திற்கு முரணானது இல்லையா என்றார். இன்றும் எமனேஷ்வரத்தில் மதர்சாவில் அந்த புக் இருக்கு! நீங்க நம்பலைன்னா நான் உங்களுக்கு காட்டுறேன் என்றார்.

எனக்கு அதிகம் ஞானம் இல்லாத விஷயத்தில் ஏன் கருத்து சொல்லணும்ன்னு தலையை மட்டும் ஆட்டினேன். மணியையும் பார்த்தேன்... அது இரவு 9  ஐ நெருங்கிக்கொண்டிருந்தது...  பேச்சு எப்ப முடியும், எப்ப முடிக்கலாம்ன்னு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகாத்துட்டே இருந்தேன். ஆனால் அவர் அதே ஜெய்லானி கதை ஏன் இஸ்லாத்திற்கு முரணானதுன்னு விளக்கிட்டே இருந்தார். விடவே இல்ல...

சட்டென ஆச்சர்யம்!

நாம் முன்பு எங்கோ பார்த்த அதே ரெட் கலர் புக்கை புரட்டி கொண்டிருந்தார். "இந்தா பாருங்க... "மார்க்கத்தின் குரு இறைவனுக்கு சமமாக முடியுமா?"ங்குற தலைப்புல என்ன சொல்லியிருக்காங்க"ன்னு சொல்லிட்டிருக்கும் போதே சட்டென பொரிதட்டியது.
நாம் வச்சிருக்குற புக் அடுத்தவங்க வச்சிருந்தாலே செம சந்தோஷமா இருக்கும்... நாம் தயாரித்த அதே எதிர்குரல் புக்கை வச்சி எனக்கே அவர் விளக்கம் கொடுக்கும் போது........அல்லாஹு அக்பர்! அப்படியொரு மகிழ்ச்சி மனதில்...

சட்டென வேறு உலகத்தில் இருந்து நிகழ் உலகத்துக்கு வந்தபின் (ஹி...ஹி..ஹி... கொஞ்சம் மெதந்துட்டிருந்தது உண்மைதான் அவ்வ்) இதவிடுங்க! அந்த புக்கை கொடுங்க என்றேன். ஒன்னும் புரியாமல் என்னிடம் கொடுத்தார். அதில் என் பெயர் இருக்கும் இடத்தை சுட்டிகாட்டி , "இந்த ஆமினா முஹம்மத் நான் தான்" என்றேன் பெருமைபொங்க அவ்வ்


அவர் முகத்தில் செம மகிழ்ச்சி. நீங்களா அது? நீங்க கடைக்குள் சலாம் சொல்லி வரும்போதே நெனச்சேன். இப்படி சலாம் சொல்றவங்க ரொம்ப ரேர். நீங்க சொன்னதும் மனசுக்குள்ள அல்ஹம்துலில்லாஹ்ன்னு சொல்லிக்கிட்டேன். இப்படியெல்லாம் எழுதுறீங்க, அப்பறம் ஏன் முஆவியா புக்லாம் கேக்குறீங்க என்றார் அவ்வ்வ்வ்வ் ... அதுல ஒன்னும் தப்பில்லையே.. எல்லாமே தெரிஞ்சு வச்சுக்குறது நல்லதுதானே என்றேன். மிகுந்த மகிழ்ச்சியில் எங்களுக்காக துஆ செய்தார். அனைவரையும் பாராட்டினார். அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி கொடுக்கணும்ன்னு துஆ செய்தார். அல்லாஹ்விற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தேன். அதன் பின் விடைபெற்று கிளம்பிவிட்டேன்!

வீடு திரும்பும் வழியெல்லாம் மிகுந்த பூரிப்போடு புன்னகை பூக்க (நல்லவேள ஷாம்மை கூடிட்டு வந்தேன். இல்லைன்னா ரோட்ல தனியா சிரிச்சுட்டே போகுது பாரு அரவேக்காடு ன்னு நெனச்சிருப்பாங்க அவ்வ் ) வந்தேன். அல்லாஹு அக்பர். காரணம் எனக்காக அல்ல... என்னை பாராட்டியதற்காகவும் அல்ல... அந்த எதிர்குரல் புக்கை எடுக்கும் முன்பே தலைப்பை மனப்பாடமாக சொன்னார், சரியாக அந்த பேஜ்ஜை ஓபன் செய்தது அந்த புக்கில் அவருக்கு இருந்த பிணைப்பை காட்டியது. அதிலிருந்து எனக்கு விளக்கம் கொடுக்க எத்தனித்தபோது , "நோக்கம் நிறைவேறிய பலனை" உணர முடிந்தது.
#இதற்கு_தானே_ஆசைப்பட்டாய்_உம்மத்_டீக்கடை_குழுமமே!!

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்

தகவலுக்காக : எதிர்க்குரல் புக்கை முதன் முதலாக பணம் கொடுத்து வாங்கியது ஒரு நான் - முஸ்லிம் தான். புக் பேரில் Sirajudeen Mustafa Kamal ஒரு ஸ்டாலில் எதிர்குரலை அறிமுகப்படுத்தியதை எதேச்சையாக அவர் கவனித்துள்ளார். அந்த நபர் தான் வாங்கிய புத்தகத்திற்கு வேறொரு கடையில் பில் போட்டு முடிந்த போது சிராஜ் இல்லாததால் ரொம்ப தூரம் தேடி வந்து வாங்கிச்சென்றார். உற்சாகத்தை விதைத்த மறக்கமுடியாத தருணம். அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்

எதிர்குரல் புக் பற்றி தெரியாதவர்கள் இந்த லிங்க்  படிங்க :

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...

,