பரமக்குடியில் நடந்த கலவரம் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை ஏற்கனவே போதுமான அளவு செய்திகளில் கிழிக்கப்பட்டு விட்டதால் என்னால் முடிந்தளவு சில விஷயங்களை மட்டும்..........
பள்ளிகளில் படிக்கும் காலங்களில் இந்த மாதிரி கலவரம் நடந்தா பயங்கர கொண்டாட்டமா இருக்கும். ஏன்னா கண்டிப்பா ஒரு மாசம் ஸ்கூல் இருக்காது ( அசம்பாவிதத்தால் நடந்த உயிரிழப்பும் பொருட்சேதமும் கணக்கிடும் பருவமில்லாததால் அந்த கொண்டாட்டம்). 1,2,3ன்னு ஒவ்வொரு வகுப்பா முன்னேற முன்னேற வருடா வருடம் வரும் பண்டிகை போல் எதிர்பார்க்கப்பட்ட கலவரமும் மெல்ல மெல்ல குறைஞ்சு ஒரு கட்டத்துல கலவரம்னா என்னன்னு கேள்வி கேட்கும் அளவுக்கு தான் போன வருடம் வரை நெலமை இருந்துச்சு. ஆனா இந்த வருஷம்????????..........
(சுருக்கங்க கூறின்- கிட்ட தட்ட 15 வருஷத்துக்கு முன்பு நடந்த ஜாதி கலவரத்துக்கு பின் நடந்த கலவரம் இது)

கலவரத்துக்கு ஒருவாரம் முன்பு
புதிதாய் பார்த்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க போன போது சாவி கொத்தை கொடுத்து வீட்டுக்கு வரும் நாளை குறிக்க காலண்டரை எடுத்தார் ஹவுஸ் ஓனர். ஒடனே நா "இல்லல்ல.... அதெல்லாம் பாக்காதீங்க........ எனக்கு அதுலலாம் நம்பிக்க இல்ல. நாயித்து கெழம குடி வந்துடுவேன்"ன்னு சொன்னதும் அந்த தாத்தா "இல்ல தாயி..... திங்க கெழம வாங்க. நாயித்து கெழம அன்னிக்கு ஊர்வலம், பேரணின்னு பரபரப்பா இருக்கும். அதுக்காக தான் எப்ப
வரலாம்னு பாக்க காலண்டர எடுத்தேன்"ன்னு சொன்னார் (முதல் நாளே  பல்ப்)
**********
மகனுக்கு சாப்பாடு கொண்டு போக ஸ்கூல்க்கு போகும் போது சாலையெங்கும் இமானுவேல் சேகரன் அவர்களின் அன்னாந்து பார்க்கும் அளவு பேனர்கள். என்றும் இல்லாத அளவுக்கு ட்ராபிக். வழக்கத்தை விட அதிகமாக சென்ற சுமோ (சினிமா ரொம்ப பாப்பாங்க போல), ஒரு ட்ராபிக் போலீஸ் மட்டுமே நிற்கும் இடத்தில்(சில நேரம் அவரையும் தேடணும்) அதிகமாக போலீஸ்கள், தோரணங்கள், ஆர்ச்கள், அதில் எழுதப்பட்ட வசனங்கள் என ஒவ்வொன்றையும் தாண்டும் போது கண்டிப்பாக அனைவர் மனதிலும் படபடப்பு ஏற்படாமல் இருக்க முடியாது.
*********
தெரு கோடியின் பெட்டிகடைக்கு சென்ற போது அங்கே 7 பேர் பணம் வசூலித்து கொண்டிருந்தார்கள். பெட்டிக்கடை அக்கா 350 ரூபாய் கொடுத்து அதற்கான ரசீதும் வாங்கிக்கொண்டே "நம்ம சாதிக்கார பயல்களுக்காக  இத கூட செய்யலன்னா உயிரோட இருந்து என்ன பண்ண?" என சொல்லும் போதே அவர்களின் கண்களில் உள்ளத்தின் ஆவேசம் தெரிந்தது
*********
சனிகிழமையன்று.......
கடைவீதிக்கு வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க புறப்பட்டோம். மாலை மணி 6. காவல் நிலையத்தை தாண்டி தான் கடைவீதி.(சும்மாவே ஒரு போலீஸ்காரர தாண்டி போகும் போது கொல பண்ணவ மாதிரி பயந்துட்டு போவேன்) அன்னைக்கு சித்திர திருவிழாக்கு கூட வராத போலீஸ் கூட்டம் அங்கே இருந்துச்சு. பொதுமக்கள் போக முடியாத அளவுக்கு ஆக்ரமித்திருந்தார்கள். "புதிசா பெரிய போலீஸ் ஸ்டேஷன் தொறக்குந்தாங்கல நேத்து?. அதுக்காக தான் இவ்வளவு கூட்டம் போலன்னு நேத்து முடிஞ்சு போன திறப்பு விழா பத்தி மூளைக்கு பல்ப் எறிஞ்ச அளவுக்கு "நாளைக்கு நடக்க போகும் குருபூஜை விழாக்கு கலவரம் நடந்தாலும் நடக்கும். அதுக்காக தான் இந்த அதிரடி படைலாம் வந்துருக்கு போலன்னு மூளைக்கு எட்டல. ( முன்ன வச்ச கால பின்ன வைச்சு கடை வீதிக்கு போகாம இருக்க  தலை விதிக்கு கூட பிடிக்கல :-)

மளிகை சாமான் லிஸ்ட்ட வாங்கிய கடை ஓனர் 8 மணிக்குள்ள வந்து வாங்கிட்டு போய்டுங்க. இன்னைக்கு சீக்கிரமே கடை அடச்சுடுவோம்னு சொல்லிவிட்டு வேகவேகமான தன் வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.  ஜவுளி பர்சேஸ் முடிச்சு பில் போட போகும் போது வேலை செய்யும் பையன் முதலாளியை கெஞ்சிக்கொண்டிருந்தான். 8 மணிக்கு மேல பஸ் ஓடாதுன்னு சொல்லிட்டாங்கண்ணே.... ஊருக்கு போகணும்"னு சொல்லும் போது இன்னும் பயம் அதிகரித்தது. அம்மாவிடம் சொன்ன போது "என்ன பயம்? போன தடவ குருபூஜைக்கு அதிகரை வரைக்கும் வாக்கிங் போனேன். ஒன்னும் ஆகல? இவங்க சும்மா பீதிய கெளப்புறாங்க"ன்னு சொல்ல கொஞ்சம் தைரியம் எட்டி பார்த்தது. ஆனால் வெளியே வந்த போது சடசடவென சத்தம். ஒரு தாதா மாமூல் வசூலிக்க வந்தாலோ அல்லது கட்சி தலைவன் இறந்தால் ஒடனே தொண்டர்கள் கடையடைக்க சொல்லுவாங்களே.... அதே எபெக்ட். ரோந்து வந்த போலீஸ் ஒவ்வொரு கடையாக தட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. ஆஹா.... வசமால வந்து  மாட்டிக்கிட்டோமேன்னு அப்ப தான் அழுகாத கொற :-( கொஞ்சம் நேரத்திலேயே ரங்கநாதன் தெரு மயான அமைதியானது.  ஒரு வண்டியும் கண்ணுக்கு மாட்டல. ஆட்டோ டிரைவர்களும் வர மறுத்தனர்(உயிர் பயம். வேகமாக வீடு செல்ல வேண்டும் என்ற அச்சம்). எப்படியோ தெரிந்தவர் ஆட்டோவில் ஏறி ஊர்புல்லா சந்து பொந்துகளிலெல்லாம் சுத்தி வீடு சேர்ந்தாச்சு.
************
திண்ணையில் காற்றுக்காக உக்கார்ந்திருக்கும் போது எங்க தெருவிலுள்ள பசங்க 15 பேர்  போஸ்ட்டரும் பசை வாளியுமாக என்முன் வந்து "அக்கா செவத்துல ஒட்டிக்கவா?ன்னு சொன்னதும் என் அடுத்த சொல்லை கூட கேட்க பொறுமை இல்லாம ஒட்டிட்டிருந்தாங்க. போகும் போது "டேய் ஒரு எடம் பாக்கி வைக்காதீங்கடா... காலைல பாக்கும் போது கண்ணுல பட்டுட்டே இருக்கணும். எவனாவது வம்பு பண்ணா ஒடனே பசங்கல வர சொல்லு" என சொல்லிட்டே போன அந்த பசங்களோட வயசு 13 முதல் 17 வரைக்கும் தான் :-(

 கலவரம் அன்று
காலை முதலே மேள தாள சத்தம் விடாமல் காதுளில் ஒலி(ழி)த்து கொண்டிருந்தது. ஆங்காங்கே பந்தல் போட்டு பெரிய பெரிய அண்டாக்களில் பிரியாணி சமைச்சுட்டு இருந்தாங்க. பூஜைக்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக (அதுக்காக தான் பண வசூல் நடந்தது). எந்த அசம்பாவிதமும் நடக்காத நிம்மதியில் டீவி பார்த்துக்கொண்டிருந்தேன்.  காலை 10 மணி இருக்கும். பட்டாசு சத்தமும், புகையும் வீடு வரை புகுந்தது. நல்லா கொண்டாடுதுக பயபுள்ளைகன்னு நெனச்சுட்டிருக்கும் போதே வெளியே சென்ற என்னவரிடம் இருந்து போன். "ஊர் புல்லா ஒரே கலவரமா இருக்கு. வெளியே யாரும்  போகதீங்க. சூட்டிங் ஆர்டர் கொடுத்துட்டாங்க. ஆளுகள வெரட்ட கண்ணீர் புகை குண்டு வீசிட்டு இருக்காங்க. நிறைய கார்களுக்கு தீ வச்சுட்டாங்க"ன்னு சொன்னதும் தான் //பட்டாசு சத்தமும், புகையும் // துப்பாக்கி சத்தமும், கார் எரிஞ்சதால் வந்த புகையும் என தெரிந்தது.


கலவரத்தன்று கண்ணில் பட்ட சில நிகழ்வுகள்
 • பிற்சேர்க்கை- பெயரிலும் உருவத்திலும் மட்டும் ஆண் என்ற அடையாளத்தை சுமந்த சில காட்டுமிராண்டிகளால் ஒரு பெண் காவலாளி மானபங்கப்படுத்தும் போது போராட்டத்தில்/பூஜையில் கலந்துக்கொள்ள வந்த பெண்களும் வேடிக்கை பார்த்தது மனிதநேயமற்ற செயல்(நேரில் கலந்துக்கொண்டவர்கள் சொன்ன விஷயம்)
 • பிற்சேர்க்கை-கலவரத்தில் ஈடுபட்ட  இருவர்களை   ஐந்துமுனை ரோட்டில் இருந்து (அஞ்சுமுக்கு ரோடு) போலீஸாரால் ரத்தம் தெரிக்க அடித்து இழுத்து வரப்பட்டது போதாதென்று போலீஸ்ஸ்டேஷனில் ஏற்கனவே குழுமியிருந்த 50க்கும் மேற்பட்ட போலீஸும் அடித்ததை பார்த்த போது  "தனியா ஆள் மாட்டுனா இப்படியா கோழ மாதிரி அடிக்கிறது?"ன்னு  கேட்க தோணுச்சு (மானபங்கப்படுத்துனவங்க மேல கோபப்படுறதா இல்ல இப்படி அடிக்கிறவங்க மேல கோபப்படுறதா???)
 • பெட்ரோல் பங்கில் உள்ள மெஷின்கள் மற்றும் அங்கியிருக்கும் காலேஜ் பஸ்கள் அடிச்சு நொறுக்கிட்டு இருந்தாங்க. தீ வைக்க வரும் போது நல்லவேளையாக போலீஸால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.   தீ வைக்கப்பட்டால் கண்டிப்பாக பல உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் நாங்கள் உட்பட :-(
 •  சினிமாவில் மட்டுமே பார்த்த துப்பாக்கிகள் ஒவ்வொருவரின் கால்களையும் குறி பார்த்து பதம் பார்த்த போது  சில வினாடி இதயம் நின்று இயங்கியது போன்ற உணர்வு.
 •  லத்தியால் ரத்தம் வரும் அளவுக்கு அடி வாங்கியும் நகராமல் மேலும் தாக்க வந்த போராட்டக்காரர்களை பாக்கும் போது என்னத்த சொல்ல என்பது போன்ற உணர்வு தான் :-(
 • நெறைய பேருக்கு முட்டிக்காலில் குண்டடி. ஒருத்தனுக்கு தொடைல, மூனுபேருக்கு நெஞ்சுல, ஒருத்தனுக்கு கழுத்திலும் என கலவரத்தில் கலந்துக்கொண்டவர்கள் அவ்வப்போது கத்திக்கொண்டே தெருக்களில் ஓடிக்கொண்டிருந்தாங்க போலீஸின் தாக்குதலுக்கு அஞ்சி.
 • 2 பேருக்கும் நடக்கும் தகராறில் ஓரமா நிக்கிற பஸ்ஸும் போஸ்ட் மரத்துல இருக்குற லைட்டும் என்ன பாவம் செஞ்சுச்சுன்னு தெரியல. கல்லில் சுக்குநூறாக்கப்பட்டது. எங்கேயெல்லாம் குடிசை இருந்ததோ அங்கேயெல்லாம் தீ வைக்கப்பட்டது.
 • கலவரம் நடந்ததால் பாதி சமையல் முடிக்காமலேயே நிறுத்தப்பட்டது. சமைச்சு முடிச்ச உணவுகளை சாப்பிட ஆட்கள் வராததால் சாலைகளில் கொட்டப்பட்டது.
 • எங்கு பார்த்தாலும் கற்கள் மற்றும் இரத்த கரை படிந்த வேஷ்ட்டிகள். 
 • கலவரம் கட்டுக்குள் வந்த பின் நிமிடத்திற்கொரு முறை சாலையில் போலீஸ் ரோந்து வாகனம் தவிர ஈ, கொசு கூட இல்ல.

  நடந்தது இது தான்
  இந்த முறை வழக்கத்தை விடவும் அதிக விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. அதில் சில (போஸ்ட்டர்களிலும் கலவரத்தில் கலந்துகொண்டவர்கள் சொன்னதன் அடிப்படையில் ).இந்த குருபூஜையையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தை விரிவுபடுத்த/மேம்படுத்த வேண்டும். வெங்கல சிலை திறக்கப்பட வேண்டும். தியாகி இமானுவேல் கொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவுதூண் அமைக்க வேண்டும்   மற்றும் முதல் நாள் அன்று மர்ம முறையில் இறந்த சிறுவனின் உடலை தங்கள் சமுதாயத்தை சேர்ந்த  தலைவர்கள் வந்த பின் தான் எடுக்கப்பட வேண்டும் முதலியவை. இந்த பூஜையில் கலந்துக்கொள்வதற்காக (அல்லது இறந்த சிறுவனின் உடலை மீட்பதற்காகன்னு 2 விதமாக காரணங்கள் சொல்லப்படுகிறது) வரவிருந்த ஜான் பாண்டியன் என்பவர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டதால் அவரை விடுவிக்க கோரி அவரின் ஆதரவாளர்கள்  திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால்  திடீரென போலீஸாரும் போராட்டத்தை அடக்க தன் வேலையை துவங்கிட்டாங்க. 

  புயலுக்கு பின்னும் புயலே.....
  கலவரம் நடந்த அன்று விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி பரிதவிக்கும் கொடுமை இல்லை. மட்டுமல்லாது ஒன்றுமறியா அப்பாவிகள் மாட்டியிருக்க வாய்ப்பில்லாமல் போனது நிம்மதியே. மதியம் 3 மணிக்கு மேல் கலவரம் கட்டுக்குள் அடக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் சிறிது சிறிதாய் கலைய தொடங்கினர். அத்துடன் நின்றுவிட்டதாய் எண்ணி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் போதே 144 தடை போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 2 பேருக்கு மேல் ஒன்றாக சென்றால் பார்த்த இடத்திலேயே சுட உத்திரவிடப்பட்டதால் தெருக்கள் வெறுச்சோடியிருந்தது. இருட்டான பின்பும் தெரு லைட்கள்  போடப்படவில்லை. பஸ்கள் ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தவிர எந்த வாகனத்திற்கும் பெட்ரோல் போட அனுமதிக்கப்படவில்லை. முழுவதும் கலவரம் அடங்கும் வரை நாட்கள் குறிப்பிடாமல் பள்ளிகள்,கல்லூரிகள், அலுவகங்களுக்கு விடுமுறை. உணவகங்கள் இயங்க வில்லை. இதனால் முழுவதுமாக மக்கள் வாழ்க்கை முடங்கி போனது. கலவரம் ஓய்ந்தும் வெளியே வர இன்னும் பலர் தயங்குகிறார்கள். சாலைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் ரோந்து வாகனங்களை கண்டு நம்மையும் சுட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் ஓடி ஒளியும் காட்சி வேதனை. காய்கறி வரத்து இல்லாததால் 2 மடங்கு விலை வைத்து விற்கப்படும் வெங்காயமும் தக்காளியும் வாங்க முடியாமல் நடுத்தர வர்க்கம் படும் திண்ட்டாட்டம் கொடுமையானது. (மார்க்கெட்ல அது மட்டும் தான் இருக்கு. கறிவேப்பிலை கூட கிடைக்கல. 50 கடைகள் இருக்கும் மார்க்கெடில்  2 கடைகள் மட்டும் இருந்தது :-(  எந்த ஒரு பொருளையும் அதிகமாக பணம் கொடுத்தால் கொடுப்போம் என்ற கள்ளச்சந்தை பரிமாற்றம் நிலவிவருகிறது (குறிப்பாக பெட்ரோல், அரிசி, காய்கறிகள்) வெளியூர்க்காரங்க ஊர்க்குள்ள வரவும், ஊரில் உள்ளவங்க வெளியூர் போகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் போக இடமும் இல்லாமல் மாற்று ஏற்பாடும் இல்லாமல் பல பேர் திண்டாடி வருகின்றனர். இறந்தவர்களின் உடலை வாங்க உறவினர் மறுக்க முடிவெடுத்துள்ளதால் மீண்டும் கலவரம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் :-(

  சில்லி கொஸ்டீன் 
  • வழக்கத்தை விட ஏன் இம்முறை அதிகப்படியான விழா  ஏற்பாடுகள்? 
  • ஏன் இத்தனை.இத்தகைய கோரிக்கைகள்
  • என்றும் இல்லாத அளவுக்கு ஏன் இத்தனை காவல் படையினர்?
  • சம்மந்தமில்லாமல் ஏன் திடீர் போராட்டம்?
  • பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஏன் உடனடியாக சுடுவதற்கான உத்தரவு?
  • பூஜைக்கு கலந்துக்கொள்ள வந்தவர்களின் கைகளுக்கு மண்ணெண்ணெயும் கற்களும் எப்படி வந்தது? 
  • நினைவிடத்துக்கு போகும் போது எதற்காக அநாகரிக பேச்சுக்கள், நடவடிக்கைகள்?
  • கலவரம் நடக்க போவது முன்பே கணிக்கப்பட்டவிட்டதன் மர்மன் என்ன என்ற சமானியனின் கேள்வி நியாயமானது தானே
  •  தவறு உண்மையில் யார் மீது? இரு தரப்பினரின்  நோக்கம் என்ன?

  , ,

  73 comments:

  1. ஆக மொத்தம் தமிழகம் இன்னும் முன்னேறாமல் அப்படியே இருக்கிறது என்பது உங்கள் பதிவின் மூலம் தெளிவாகி உள்ளது. உங்கள் பதிவில் உள்ள படங்கள் மூலம் தெரியவருவது என்னவென்றால் தமிழகத்து காட்டுமிராண்டிகள் பேண்ட் சட்டை போடும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.

   நிகழ்ச்சியை அப்படியே கண்முன்னால் கொண்டுவந்தது உங்கள் எழுத்து. தொடருங்கள் இந்த பணியை நானும் உங்களை தொடர்கிறேன். உங்களை போன்றவர்களிள் எழுத்துக்கல் மூலம்தான் உண்மை நிலைமையை அறிய முடிகிறது

   ReplyDelete
  2. நல்லவேளை எந்த விட முன் முடிவும் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லி இருக்கிறீர்கள். கலவரத்தை நேரில் பார்த்த உணர்வு இருக்கிறது. படித்து முடித்தவுடன் ஆயாச பெருமூச்சை விடுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

   ReplyDelete
  3. நடு நிலை பத்திரிக்கை வாசித்தது போல் இருந்தது...நல்ல கட்டுரை...ஆமீனா..

   ReplyDelete
  4. நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

   கத்திமேல் நடக்கும் பதிவு இது.
   நடுநிலையுடன் வார்த்தைகளை கையாண்டுள்ளீர்கள். சம்பவங்களை பக்க சார்பு இன்றி சொல்லியுள்ளீர்கள்.

   மொத்தத்தில்... கலவர பூமியில் இருந்து அது பற்றி நெஞ்சுரத்துடன் எழுதி தொகுக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த மிகவும் உயர்தரமான ஒரு நேரடி ரிபோர்ட்.

   மிக்க நன்றி சகோ.ஆமினா.

   ReplyDelete
  5. "சாதிகள் இல்லையடி பாப்பா...
   குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..."

   "தீண்டாமை ஒரு பாவச்செயல்...
   தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
   தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"

   "ஒன்று எங்கள் ஜாதியே...
   ஒன்று எங்கள் நீதியே...
   உலக மக்கள் யாவரும் இருவர் பெற்ற மக்களே..."

   "சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்"

   ---என்று வாயால் பாடினால்... ஏட்டில் எழுதினால் மட்டும் பத்தாது...


   "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; ...."(குர்ஆன் 49:13)

   ...என்பதை மனதார நம்பிக்கை கொள்ள வேண்டும்.

   இதுதான் 'நிரந்தர தீர்வுக்கு' வழி..!

   அதுவேண்டாம்....

   'தற்காலிக தீர்வு' போதும் என்றால்...

   அடுத்த மாதம் நடக்க இருக்கும் வேறொரு சமூகத்து குரு பூஜையில்...

   முதல்வரோ... மந்திரிகளோ... நடிகர்களோ... நாட்டாமைகளோ... இதேபோல எவரும் கலந்து கொள்ளக்கூடாது.

   அப்போது...

   பாதுகாப்பு காரணத்தினால் அவர்களின் சமூக தலைவர்களையும் குரு பூஜையில் கலந்து கொள்ள விடாது கைது செய்து முட்டாள்த்தனம்செய்யக்கூடாது...அரசு/போலிஸ்..!

   செய்வார்களா...?

   மாட்டார்கள் எனில்...
   முடியாது எனில்...

   இனி,

   முன்பு....

   "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்" என்று பெயர் மாற்றம் பெற்றது போல...

   அந்தந்த மாவட்டங்கள் அந்தந்த மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படுவது போல...

   எல்லா குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

   ஒரு கண்ணுக்கு அமிலமும் மற்றொரு கண்ணுக்கு பன்னீரும் வேண்டாம்....

   ReplyDelete
  6. கிட்டத்தட்ட திட்டமிட்டது என்பது போல தோன்றுகிறது.விளக்கமான பதிவு.

   ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

   சகோதரி ஆமினா,

   கத்தி மேல் நடப்பது போன்ற பதிவு. அல்ஹம்துலில்லாஹ். ரொம்ப நல்லா கையாண்டிருக்கீங்க. வார்த்தைகளை நன்கு யோசித்து கவனமாக போட்டிருப்பதாகவே நினைக்கின்றேன்.

   தரமான பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்..

   வஸ்ஸலாம்,

   உங்கள் சகோதரன்,
   ஆஷிக் அஹமத் அ

   ReplyDelete
  8. மிக அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்.
   நடந்ததை, நேரில் கண்டது போல உணர்ந்தேன்.
   நன்றிகள்

   ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் ஆமினா

   நடந்த சம்பவத்தை தெளிவாக எழுதி உள்ளீர்கள்.எப்பதான் திருந்துவார்களோ. எழுத்தின் மூலம் உங்கள் உணர்வுகள் புரிகிறது.

   ///என்றும் இல்லாத அளவுக்கு ஏன் இத்தனை காவல் படையினர்?///
   இதற்கு காரணமும் அவர்கள் தான்.

   திட்டமிட்ட செயல்.
   இப்ப அறிக்கை விட்டது கண் துடைப்பு நாடகம்.

   ReplyDelete
  10. கொஞ்சம் பிசகி இருட்ட்ந்தாலும் தவறாக எடுத்துக் கொள்ளப் படக் கூடிய பதிவு. அழகான முறையில் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி

   ReplyDelete
  11. நீங்கள அப்படியே கலவரத்தை நேரில் காட்டியுள்ளீர்கள். படித்த போது தமிழ் படங்களில் வரும் கலவரங்களை விட மோசமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.

   ReplyDelete
  12. /எல்லா குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்./
   இதைப்போல எல்லா மதம் சார்ந்த முட்டாள் பன்றிகளின் சேட்டைகளும் நிறுத்தப்படவேண்டும்

   ReplyDelete
  13. தினக்கூலி வேலை ஆட்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளானது கொடுமை.

   ReplyDelete
  14. நெட் சிக்னல் பிரச்சனையால் உடனே வர முடியவில்லை.

   அருமையான பதிவு சகோ.

   வாழ்த்தும் தமிழ் ஓட்டும்.

   ReplyDelete
  15. நிகழ்வுகளை அப்படியே கண் முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள் ஆமினா.

   ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
   வழக்கம்ப்போல்(?) நடைபெற்ற தமிழக கலவரம் -வித்தியாமான பார்வையில் அணுகி இருக்கிறீர்கள்.,
   எனினும் "வழக்கம்போல்" எனும் குறிப்பிடும் போதே வலிக்கிறது.

   //"ஊர் புல்லா ஒரே கலவரமா இருக்கு. வெளியே யாரும் போகதீங்க. சூட்டிங் ஆர்டர் கொடுத்துட்டாங்க. ஆளுகள வெரட்ட கண்ணீர் புகை குண்டு வீசிட்டு இருக்காங்க. நிறைய கார்களுக்கு தீ வச்சுட்டாங்க" //

   எவ்வளவு வேதனையான தருணங்கள் ... அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபலிப்பு இவ்வாக்கியத்தில் ஒளிந்துருக்கிறது;
   தீயணைக்கும் வண்டிக்கும் தீவைத்தது கொழுத்தியதுதான் உச்சக்கட்ட கொடுமை...!!! செய்திகளில் பார்க்கும் போது....விவரிக்க வார்த்தையில்லை.,

   ReplyDelete
  17. உண்மைய தெரிஞ்சிக்கிட்டேன்...நன்றி ஆமீனா..
   continue...

   ReplyDelete
  18. ஆமி உண்மையில் கலவரத்தை நெரில் பார்த்த எபக்ட் தான் . நல்லா உணர்வு பூர்வமா சொல்லி இருக்கீங்க. எனக்கும் 45 வருடம் முன்னே இதேபோல ஒரு கலவரத்தில் மாட்டிண்ட அனுபவம் உண்டு. பூனாவில் அந்த நிகழ்ச்சிகள்
   கண்முன்னே வந்தது. இது ரொம்பவே கொடுமையான விஷயம்.யார் யார்ரோ
   கலவரம் பன்ராங்க யார் யாரோ அவதிப்படுராங்க. என்ன சொல்ல?

   ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

   ஒரு கருப்பன் வெள்ளையனைவிடவோ, அல்லது ஒரு வெள்ளையன் கருப்பனை விடவோ, அல்லது ஒரு அரபி, அரபி அல்லாதவனை விடவோ அல்லது ஒரு அரபி அல்லாதவன் அரபியைவிடவோ உயர்ந்தவன் இல்லை உங்கள் நற்செயல்களை வைத்தே உங்கள் உயர்வு உள்ளது

   - நபிமொழி

   கள ஆய்வு மிக அருமை. துப்பாக்கி சூடு நடந்தது வருந்தத்தக்கதே. ஆனால் வாகனங்கள் எறிக்கப்பட்டதும், குடிசைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதும் அதை விட வருந்தத்தக்கது.

   //பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஏன் உடனடியாக சுடுவதற்கான உத்தரவு? //

   பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல் சுட உத்தரவா? யார் சொன்னது. இதை நான் எதிர்க்கிறேன்.

   ReplyDelete
  20. /வீட்டுக்கு வரும் நாளை குறிக்க காலண்டரை எடுத்தார் ஹவுஸ் ஓனர்/

   நாங்களும் ஊருக்கு வரும்/போகும்போதும் காலண்டரைப் பாத்து நாள் குறிச்சுட்டுத்தான் வருவோம்!! ஆக.15, டிச.6, ஜன்.26, இப்படி நல்ல நாட்கள்ல வந்தா சிறப்பு கவனிப்பு இருக்குமாமே ஏர்போர்ட்டுகள்ல!

   போன வாரம் தன் மகளுக்குத் திருமணம் முடித்திருந்த ஒரு தோழியிடம் பெண் அழைப்பு குறித்து கேட்டபோது அவர் சொன்ன பதில், உங்க ஹவுஸ் ஓனர் சொன்ன அதே பதில்தான் - “சனிக்கிழமை விநாயக சதுர்த்தி ஊர்வலம் இருக்கு; அதுல கலவரம் இல்லைன்னா, ஞாயித்துக்கிழமை கூப்பிடணும்; இருந்துதுன்னா நிலைமையப் பாத்துகிட்டு ஒருநாள் போகணும்!!”

   //சில்லி கொஸ்டீன்//
   அந்த கொஸ்டீன்களை எடுத்து ஊறுகாய் ஜாடில ஊறப்போட்டு வைங்க, பத்திரமா இருக்கட்டும். அடுத்த கலவரத்துல கேக்கறதுக்கு வேணும்ல?!!

   ஆமா, இப்ப தாமசம் ராம்நாட்டிலயா? புனேவுல இல்லியா? படங்கள் எல்லாம் நீங்க எடுத்ததா?

   ReplyDelete
  21. mm சினிமாவில் பார்ப்போம் நேரில் பார்த்து நடந்தை எழுதியதால் பகீருன்னு இருக்கு
   ஏன் இப்படி எப்ப தான் இவரக்ள் திருந்துவார்கள்

   ReplyDelete
  22. இந்த சம்மர் வெகேஷன் லிவு முடிந்து திரும்பும் போது தான் விநாயகர் சதூர்தி ஊர்வலம் வரும்
   ஏதாவது கலவரத்தி மாட்டி கொண்டு குறித்த தேதியில் ஊர் வ்ந்து சேரலானா உடனே ஆபிஸில் சீட்டு கிழிந்துடும் ஆகையால் எப்போதுமே அவர் அதுக்கு முன் தான் ரிட்டன் புக் செய்வது..

   ReplyDelete
  23. @அவர்கள் உண்மைகள்
   //தமிழகத்து காட்டுமிராண்டிகள் பேண்ட் சட்டை போடும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
   //
   வேஷ்ட்டி கட்டியவர்களும் இன்னும் காட்டுமிராண்டிகளாகவே இருக்குறாங்க எந்த முன்னேற்றமும் இல்லாம :-(

   ReplyDelete
  24. //Anonymous said...

   /எல்லா குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்./
   இதைப்போல எல்லா மதம் சார்ந்த முட்டாள் பன்றிகளின் சேட்டைகளும் நிறுத்தப்படவேண்டும்//

   ********மக்களின் வாழ்க்கையை முடக்கும், அப்பாவிகளை காவு வாங்கும், பொது சொத்துக்களையும் தனி மனித சொத்துக்களையும் சேதப்படுத்தும், பெண்களை மானபங்கப்படுத்தும், உள்நோக்கத்துடன் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படகூடிய சேட்டைகள்****** என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சகோ :-)

   ReplyDelete
  25. @ஹூசைனம்மா

   // படங்கள் எல்லாம் நீங்க எடுத்ததா?//

   கூகுள்ல எடுத்தது மா. நான் எடுத்த படங்கள் எல்லாம் மாடியில் இருந்து எடுத்ததால் சரியா வரல. என்னவர் எடுத்த படங்கள் எல்லாம் ரத்தகரை அதிகம் இருந்ததால் போட மனமில்லை :-( தேவைபட்டால் இனொரு பதிவில் சேர்க்கிறேன்

   ReplyDelete
  26. @குலாம்
   //தீயணைக்கும் வண்டிக்கும் தீவைத்தது கொழுத்தியதுதான் உச்சக்கட்ட கொடுமை...!!!//
   இல்ல சகோ
   "நீங்களே அடிப்பீங்க... அப்பறம் நீங்களே மருத்து போடுவீங்களாடா??" என சொல்லி கொண்டே ஆம்புலன்ஸை உடைத்தது தான் உச்சகட்ட கொடுமை :-(

   ReplyDelete
  27. @ராஜகிரி சகோ
   வ அலைக்கும் சலாம் சகோ

   ////பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஏன் உடனடியாக சுடுவதற்கான உத்தரவு? //

   பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல் சுட உத்தரவா? யார் சொன்னது. இதை நான் எதிர்க்கிறேன்.//

   எத பேச்சு வார்த்தைன்னு சொல்றீங்க??? தீர்வு எட்டப்படுவதற்கான ஆலோசனைக்கும் முடிவுக்கும் இடம் கொடுக்காம பேருக்கு (உப்புக்கு சப்பாணியான ஆட்களை கொண்டு) நடந்த பேச்சுவார்த்தையையா? அந்த பேச்சு வார்த்தையும் 10 நிமிடங்களில் தான். அதற்க்குள் பெயராலும், உருவத்தாலும் மட்டும் ஆண் என்ற அடையாளத்தை சுமந்த சில காட்டுமிராண்டிகளால் ஒரு பெண்போலீஸ் மானபங்கப்படுத்தபடும் வரை

   ReplyDelete
  28. நிகழ்வுகள் திறமையாகக் கோர்க்கப்பட்டு போராளிகள் மேல் படிப்பவருக்கு வெறுப்புணர்ச்சியைத்தூண்டும் விதமாக எழுதப்பட்டிருக்கின்றன. பலே.

   ReplyDelete
  29. ஜாதி மத பிரச்சினைகளை பற்றி பெண் பதிவர் எழுதுவதை நான் விரும்பவில்லை.

   நீங்கள் நடந்த சம்பவத்தை எழுதியிருந்தாலும் இது பல தரப்பினரும் பார்க்க கூடிய தளம் ஆகையால் இது போன்ற பதிவுகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது என எனது சிறிய வேண்டுகோள்.

   இப்பதிவில் ஒரு குறையும் இல்லைதான்...ஆனால் சிலரின் கருத்துக்களும் மனக் கஷ்ட்டங்களும் நமக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை.

   நன்றி.

   ReplyDelete
  30. நெஞ்சம் பதற வைத்த பதிவு சகோதரி ஆமினா .
   இதெல்லாம் உண்மையில் எனக்கு புதியவை .வெளிநாட்டில் குடியேறியபின் அவ்வபோது சென்னை வருவதோடு சரி .படிக்கவே பயம்மா இருக்குது உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் .மனதில் நிறைய கேள்விகள் .உங்களை தொடர்கிறேன் சகோதரி .இம்முறை சென்னையில் நிறைய பெண் காவலர்களை பார்த்தேன் பரவாயில்லை நல்ல முன்னேற்றம் என்று நினைத்திருந்தேன் இந்த பதிவில் நீங்க குறிப்பிட்டதை படிக்கும் வரையில் .

   ReplyDelete
  31. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் இந்த மாதிரி கலவரம் நடந்தா பயங்கர கொண்டாட்டமா இருக்கும். ஏன்னா கண்டிப்பா ஒரு மாசம் ஸ்கூல் இருக்காது//

   ஹா...ஹா...இது வேறையா..,
   இதனைத் தானே ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு என்று சொல்லுவாங்க.

   ReplyDelete
  32. "நம்ம சாதிக்கார பயல்களுக்காக இத கூட செய்யலன்னா உயிரோட இருந்து என்ன பண்ண?" என சொல்லும் போதே அவர்களின் கண்களில் உள்ளத்தின் ஆவேசம் தெரிந்தத//

   இப்படித் தான் உணர்ச்சிகளுக்கு அடிமையாக ஆவேசத்தில் கலவரம் பண்றாங்களா..

   கொடுமை..

   ReplyDelete
  33. பிற்சேர்க்கையினைப் படிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கண்டிப்பா இனிமே ஒரு கலவரம் பண்ணக் கூடாது என்று தோன்றும்..

   ReplyDelete
  34. //எல்லா குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்//

   காந்தியைத் தேசப்பிதாவென நாடுமுழுவதும் சிலைகள் வைத்து, விடுமுறையளித்து, கொண்டாடுகிறார்கள். அண்ணா, காமராஜ், எம்ஜிஆர், பெரியார், ராஜீவ், இந்திரா என்று அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் மாலையணித்து மரியாதை செய்து சூழரைப்புக்கள் ஏற்பது நிகழ்கின்றன. ஆனால் தன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்னீத்தவனுக்கு அம்மக்கள் செய்தால் அது தவறு. நிறுத்தப்படவேண்டும். இது என்ன நியாயம் ஆசீக்?

   அவர்கள் மரியாதை செய்வது சரி. ஆனால் பொது அமைதிக்குக் குந்தகம் வராமல் இருக்கவேண்டும் எனச்சொன்னால் நியாயம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி எல்லாவற்றையும் நிறுத்திவிடலாம்;

   மீலாடி நபி ஊர்வலம் நடத்தினால் இந்து முன்னனியருக்கு ஆகாது.
   விநாயகர் ஊர்வலம் நடத்தினால் தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக்கழகத்துக்கு ஆகாது.
   ரம்ஜான் கொண்டாடினால் இந்துத்வாவினருக்கு ஆகாது.
   தீபாவளி கொண்டாடினால் முசுலீம்களில் தீவிரவாதிகளுக்கு ஆகாது.
   பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடினால் பார்ப்ப்னருக்கு ஆகாது.
   வாஞ்சிநாதன் நினைவைக் கொண்டாடினால் திகவினருக்கு ஆகாது.
   காமராஜரைக்கொண்டாடினால் தேவர்களுக்கு ஆகாது.
   தேவரைக்கொண்டாடினால் பள்ளர்களுக்கு ஆகாது.


   இப்படிச் சொல்லிக்கொண்டே போய், அனைத்தையும் நிறுத்துக என்றால் அது நியாயம். மாறாக ஒரு இனத்தவர் அவர்களுக்கு உழைத்து மடிந்த ஒருவரைக் கொண்டாடுவது மட்டும் நிறுத்தப்படவேண்டும் என்பது பயங்கர வாதம். ஜனநாயகப் படுகொலை.

   ReplyDelete
  35. @Anonymous said...

   நிகழ்வுகள் திறமையாகக் கோர்க்கப்பட்டு போராளிகள் மேல் படிப்பவருக்கு வெறுப்புணர்ச்சியைத்தூண்டும் விதமாக எழுதப்பட்டிருக்கின்றன. பலே.//

   வாங்க சகோ....
   நிகழ்வுகளை நேரில் பார்த்திருப்பதால் இவ்வாறு சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். எவையெவை கோர்க்கப்பட்டது என சொல்லுங்கள். முடிந்தால் அது பற்றி விவாதிக்கலாம்...

   ReplyDelete
  36. @அந்நியன்
   //ஜாதி மத பிரச்சினைகளை பற்றி பெண் பதிவர் எழுதுவதை நான் விரும்பவில்லை.//
   இத நேத்து நீங்க சொல்லியிருந்தா கண்டிப்பா அடுத்த வரும் பதிவுகளை பற்றி சிறிது யோசிச்சுருப்பேன். இருப்பினும் இவ்வார்த்தைக்காக உங்கள் மேல் வெறுப்போ கோபமோ வரவில்லை. ஏதோ ஒன்று தான் உங்கள இப்படி சொல்ல வச்சுருக்க்குன்ன்னு தெரியுது.

   என் பார்வையை வெறும் சமையலிலும் கைவினையிலும் சுருக்க எனக்கு விருப்பமில்லை சகோ. இந்த நொடில என் மனசுல என்ன படுதோ அத கண்டிப்பா எழுதுவேன். நாளைக்கே சமையல் குறிப்பு மட்டும் தான் கொடுக்கணும்னு தோனுனா கண்டிப்பா சமையல் மட்டும் கொடுப்பேன். விலகணும்னு தோணூச்சுனா தல காட்டவே மாட்டேன். என் ப்ளாக்கில் எந்த ஒரு பதிவும் என் விருப்பத்திற்காக மட்டுமே...... யாருடைய வற்புறுத்தலும் தனிபட்ட கருத்துக்களும் என்னில் திணிக்க முடியாது சகோ

   //இது பல தரப்பினரும் பார்க்க கூடிய தளம் ஆகையால் இது போன்ற பதிவுகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது //
   இது கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க முடியாது, உங்களின்
   அக்கறை நன்றாக புரிகிறது. ஆனால் சகோ இந்த பதிவின் மூலம் அப்படியாவது எது உண்மை எது பொய்யென எல்லாருக்கும் தெரியட்டுமே சகோ. அப்படி இல்லையென்றாலும் ஆவேசத்துடன் இருக்கும் சிலருக்கு சில நிறை குறைகள சொல்லும் போது அவர்களின் மனதில் சிறு தொய்வை ஏற்படுத்தினால் அது எனக்கு கிடைச்ச வெற்றி இல்லையா? எல்லாரும் பாக்குறாங்க என்பதற்காக வாய் மூடிட்டு நிக்கணும்னு சொல்றீங்களா?

   //ஆனால் சிலரின் கருத்துக்களும் மனக் கஷ்ட்டங்களும் நமக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை.//
   நான் தகாத வார்த்தையில் யாரையும் திட்ட வில்லையே........ மேலும் இது என் பார்வையில் எழுதபட்ட பதிவு. அவரவருக்கு மாற்று கருத்து இருப்பின் தெரிவித்து விவாதிக்கலாம். மனசுக்குள்ளையே இது நடுநிலை பதிவு இல்லைன்னு திட்டிட்டும் போகலாம். அவரவரின் கருத்துக்கும் மதிப்ப்பளிக்கிறேன். அதற்காக "இவங்க தப்பா நெனைப்பாங்களோ, இவங்க மனசுக்குள்ள திட்டுவாங்களோ?"ன்னு ஆராய்ச்சி செய்ய எனக்கு அவசியம் இல்லை. இந்த பதிவு பிடிக்கலைன்னா எதிர்ப்பு தெரிவிக்க எவ்வளவோ வழி இருக்கே சகோ....

   நான் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் யாரை பற்றி எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் மட்டுமே தீர்மானிப்பேன். யாருக்காகவும் என் அடையாளத்தை விட்டு கொடுக்கப்போவதில்லை. மன்னிக்கவும் சகோ.......... இத்தகைய நிகழ்வுகள் அடுத்து வரும் காலங்களில் என் பார்வையில் பட்டால் கண்டிப்பாக பதிவிடுவேன் இறைவன் நாடினால் :-)

   ReplyDelete
  37. //இது என்ன நியாயம் ஆசீக்?//

   சகோ.அனானிமஸ்...

   நான் இதை மட்டுமா சொல்லி இருக்கேன்..?

   நான் இதை மட்டும் சொல்லி இருந்தால் உங்கள் குற்றச்சாட்டை ஏற்பேன்.

   ஆனால்... அது மட்டுமா அங்கே இருக்கிறது..?

   இதற்கெல்லாம் உங்கள் விமர்சனத்தை வைத்து விட்டு அப்புறமாக உங்கள் குற்றச்சாட்டை பெயருடன் இணையுங்கள் சகோ.

   அந்த வரிக்கு முன்னும் பின்னும் உள்ளன வற்றை பார்க்க மறந்தது ஏன்..? சொல்லாமல் மறைத்தது ஏன்..?

   குறிப்பு:-
   \\...முட்டாள்த்தனம்செய்யக்கூடாது...\\
   என்பது //..முட்டாள்த்தனம்செய்யவேண்டும்..//
   என்று வந்திருக்க வேண்டும்.

   இதனால்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னாலும் என்னால் நம்ப முடியாது.

   காரணம்...

   \\அனைத்தும்\\

   என்று நான் சொன்னதற்கு நீங்கள் சொல்லும் அருஞ்சொற்பொருள்...

   //ஒரு இனத்தவர் அவர்களுக்கு உழைத்து மடிந்த ஒருவரைக் கொண்டாடுவது மட்டும் நிறுத்தப்படவேண்டும்//

   என்பதுதான்...

   இது...
   உங்களின் எழுத்து பயங்கர வாதம்.
   கருத்துப்படுகொலை.

   இப்படித்தான் ஒரு வரியை எடுத்துகொண்டு குதர்க்கவாதம் செய்வீர்களா..?

   இது அநியாயம் அநானி..!

   ReplyDelete
  38. @ சகோ.ஆமினா...

   சகோ.அந்நியன் ௨ -க்கு தங்கள் பதில்...

   மிகவும் சரியானதே.

   //இத்தகைய நிகழ்வுகள் அடுத்து வரும் காலங்களில் என் பார்வையில் பட்டால் கண்டிப்பாக பதிவிடுவேன் இறைவன் நாடினால் :-)//

   ---வரவேற்கிறேன்..!

   ReplyDelete
  39. யார் தடுத்தாலும், இது போல் உண்மைகளை வெளிக் கொணர முயற்ச்சியுங்கள்.. பெண் என்பதால் தவறேதும் இல்லை.. ஒரு வேலை அரசின் பார்வை உங்கள் மேல் பதியலாம் என்ற கவலை அந்நியனுக்கு இருந்திருக்க கூடும் என்பது என் கருத்து.. உங்கள் பதிவின் இணைப்பை இன்று என் பதிவில் இட திட்டமிட்டுள்ளேன்,

   ReplyDelete
  40. என் கிராமத்தை சுற்றி தலித்துகளும் தேவர்களும் மற்றும் ஏனைய ஜாதியினரும் இருந்தாலும் எல்லோருமே போற்றகூடியவர்கள் காரணம் அவர்களின் பேச்சு தோரனையும் பழகும் விதங்களும் எனக்கு மட்டுமில்லாது சுற்று வட்டார மக்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.

   நடந்த சம்பவங்கள் அனைத்தும் அரசியல் வாதிகளால் பிணைக்கப்பட்டு ஆளும் கட்சிக்கு தர்ம சங்கடங்களை உண்டு பன்னுவதற்கே பின்னப்பட்டுள்ளது.

   பாவம் அப்பாவிகள்.

   எதற்கு சிலைகள்?

   காந்தி காமராஜர் அண்ணா கருணாநிதி பசும்பொன் இமானுவேல் எம்ஜீஆர் இன்னும் எத்தனை எத்தனை சிலைகள் இந்த இந்தியாவில்?

   ஜாதி கலவரம் ஏற்ப்படுவதே இந்த சிலைகளால்தான் கல்லாய் போன இந்த சிலைகளினால் இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் பலியிடுவதற்கு?

   இவ்வளவு பிறச்சனைகள் நடந்து கொண்டு இருக்கும் தருவாயில் ராஜபாளையத்தில் உள்ள மறவர் மகா சபை வளாகத்தில் உள்ள தேவர் சிலைக்கு செருப்பு மாலை போடுகிறான் இதை எல்லாம் நினைத்து பார்க்கையில் எவ்வளவு சங்கடமாக உள்ளது.

   நாம் யாருக்காவும் பயப்பட தேவை இல்லை தைரியமாக எதையும் எப்பவும் எழுதலாம் அதற்காக நான் சொன்னேன் என்பதற்காக உங்கள் சமூக ஆர்வத்தை குறைத்து கொள்ள வேண்டாம்.
   மதக் கலவரத்தை அடக்கிடலாம் ஆனால் ஜாதிக் கலவரத்தை ரானுவமே வந்தாலும் ஒன்னுமே செய்ய முடியாது.

   காரணம் மேல் ஜாதிக்கு ஒரு சழுகை கீழ் ஜாதிக்கு ஒரு சழுகை சிறுபான்மையினருக்கு ஒரு சழுகை தாழ்த்த பட்டோருக்கு ஒரு சழுகைனு இந்திய இறையான்மையை கூறு போட்டு வைத்திருக்கின்றான் இதுனாலதான் இவ்வளவு பிரச்சனைகள்.

   மீலாடி நபி ஊர்வலம் நடத்தினால் இந்து முன்னனியருக்கு ஆகாது.
   விநாயகர் ஊர்வலம் நடத்தினால் தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக்கழகத்துக்கு ஆகாது.
   ரம்ஜான் கொண்டாடினால் இந்துத்வாவினருக்கு ஆகாது.
   தீபாவளி கொண்டாடினால் முசுலீம்களில் தீவிரவாதிகளுக்கு ஆகாது.
   பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடினால் பார்ப்ப்னருக்கு ஆகாது.
   வாஞ்சிநாதன் நினைவைக் கொண்டாடினால் திகவினருக்கு ஆகாது.
   காமராஜரைக்கொண்டாடினால் தேவர்களுக்கு ஆகாது.
   தேவரைக்கொண்டாடினால் பள்ளர்களுக்கு ஆகாது.

   சகோ அனானி சொல்வதிலும் நியாயம் தெரிகிறது.

   அவரவர் ஜாதிக்கும் மதத்திற்க்கும் கிடைக்க வேண்டிய சழுகைகளை அரசிடம் போராடித்தான் பெற வேண்டும் ஆனால் இப்போ நடந்துள்ள சம்பவம் ஒரு மாணவனை அடித்து கொன்றதாலும் இரு பிரிவினருக்கிடையில் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகளால்தான் இந்த சம்பவம் நடந்தேரியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும் அவசரப்பட்டு முன் எச்சரிக்கை என ஜான் பான்டியனை கைது செய்திருக்ககூடாது.

   அதன் விளைவுதான் இந்த துப்பாக்கி சூடு.

   போலிஸ்காரர்களையும் குற்றம் சொல்ல முடியாது அவர்களின் கடமையை அவர்கள் செய்துள்ளார்கள் ஆனால் அவசரப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கப்பட்டு உத்தரவிட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

   எத்த்தனையோ கலவரங்கள் அறிவாள் மற்றும் கோடாலியுடன் நடந்தேறி இருக்கின்றது அப்பவெல்லாம் துப்பாக்கி என்றே பேச்சுக்கே இடம் இல்லை இப்போ வெறும் கைய்யுடன் இருந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஏழு உயிர்களை கொன்றது மன்னிக்க முடியாது.

   சட்டங்கள் திருத்தப் படவேண்டும்.

   இது ஒன்றுதான் வழி.

   ReplyDelete
  41. //என் பார்வையை வெறும் சமையலிலும் கைவினையிலும் சுருக்க எனக்கு விருப்பமில்லை சகோ. இந்த நொடில என் மனசுல என்ன படுதோ அத கண்டிப்பா எழுதுவேன். நாளைக்கே சமையல் குறிப்பு மட்டும் தான் கொடுக்கணும்னு தோனுனா கண்டிப்பா சமையல் மட்டும் கொடுப்பேன். விலகணும்னு தோணூச்சுனா தல காட்டவே மாட்டேன். என் ப்ளாக்கில் எந்த ஒரு பதிவும் என் விருப்பத்திற்காக மட்டுமே...... யாருடைய வற்புறுத்தலும் தனிபட்ட கருத்துக்களும் என்னில் திணிக்க முடியாது சகோ//

   //நான் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் யாரை பற்றி எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் மட்டுமே தீர்மானிப்பேன். யாருக்காகவும் என் அடையாளத்தை விட்டு கொடுக்கப்போவதில்லை. மன்னிக்கவும் சகோ.......... இத்தகைய நிகழ்வுகள் அடுத்து வரும் காலங்களில் என் பார்வையில் பட்டால் கண்டிப்பாக பதிவிடுவேன் இறைவன் நாடினால் :-)//

   கையை கொடுங்க சகோ...
   you are really great
   உங்கள் தைரியத்திற்கும், தன்மானத்திற்கும் எனது வணக்கங்கள்.
   (வணக்கம் உங்களுக்கு ஏற்புடையது இல்லை எனில் வாழ்த்துக்கள் என் வைத்துக்கொள்ளுங்கள்)

   ReplyDelete
  42. ஸலாம் சகோ.அந்நியன் 2...

   //////சகோ அனானி சொல்வதிலும் நியாயம் தெரிகிறது.///////

   என்ன நியாயம் கண்டீர்கள் சகோ.அய்யூப்..?

   சொல்லுங்கள்...
   அனானி சொன்னவற்றில், இவை நீங்கள் எடுத்துப்போட்டவைதானே..!

   //மீலாடி நபி ஊர்வலம் நடத்தினால் இந்து முன்னனியருக்கு ஆகாது.//---வாவ்..! அப்படியா..? மிலாடி நபிக்கு ஊர்வலமா..? எப்போது.. எங்கே.. நடந்துச்சு..? யார் போனாங்க..?

   //விநாயகர் ஊர்வலம் நடத்தினால் தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக்கழகத்துக்கு ஆகாது.//---அடடே..! அப்படியா..? இந்த வாரம் விநாயக சதுர்த்தி யிலே அப்படி ஏதும் நியூஸ் அல்லது அறிக்கை ஏதும் த மு மு க விடம் இருந்து வந்ததா..? அல்லது... சட்டசபையிலே ஜவாஹிருல்லா எம் எல் ஏ சொன்னாரா..?


   //ரம்ஜான் கொண்டாடினால் இந்துத்வாவினருக்கு ஆகாது.//---அப்படில்லாம் சொல்றாங்களா..?


   //தீபாவளி கொண்டாடினால் முசுலீம்களில் தீவிரவாதிகளுக்கு ஆகாது.//---அட..! அப்படியா..?

   //பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடினால் பார்ப்ப்னருக்கு ஆகாது.//---அப்படியா..?

   //வாஞ்சிநாதன் நினைவைக் கொண்டாடினால் திகவினருக்கு ஆகாது.//---அப்படியா..?

   //காமராஜரைக்கொண்டாடினால் தேவர்களுக்கு ஆகாது.//---அப்படியா..?

   //தேவரைக்கொண்டாடினால் பள்ளர்களுக்கு ஆகாது.//---அப்படியா..?

   சகோ.அந்நியன்...

   நீங்க பதில் சொல்லுங்க. இவற்றில் என்ன நியாயம் என்ன உண்மை இருக்கு என்று.

   ReplyDelete
  43. ///ரம்ஜான் கொண்டாடினால் இந்துத்வாவினருக்கு ஆகாது.
   தீபாவளி கொண்டாடினால் முசுலீம்களில் தீவிரவாதிகளுக்கு ஆகாது.///

   பெயர் குறிப்பிடாமல் anonymous என்று எழுதி இருக்கும் (தைரியமான) நபருக்கு..

   இந்துத்வாவினருக்கு என்று எழுதி இருக்கும் நீங்கள் ஏன் முஸ்லீம்களில் தீவிரவாதிகளுக்கு என்று எழுதி உள்ளீர்கள்..

   முஸ்லீம்களுக்கு என்று எழுதி இருக்கலாமே..?

   ஏன் இந்து தீவீரவாதிகள் என்று எழுத வில்லை?

   உங்கள் உள்நோக்கம் என்ன..?

   இது ஆமீனா அவர்களுக்கு சொந்தமான தளம் என்பதால் வேற ஏதும் சொல்ல விரும்பவில்லை..

   இது போன்ற விமர்சனத்தை சகோதரி நீங்கள் பரிசலீத்து வெளியிடாமல் இருக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுக்கோள்..

   மத வெறி என்பது அவர் அவர்கள் மதத்தின் மேல் இருக்க வேண்டும்.. மற்ற மதத்தின் மீது அல்ல...

   சகோதரி ஆமீனா நீங்கள் உங்கள் கருத்தை சொல்ல முழு உரிமையும் உண்டு.. தொடரட்டும் உங்கள் (தைரியமான) பதிவு..

   ReplyDelete
  44. முதல் முதலாக தங்களின் தளத்திற்கு வந்திருக்கிறேன்.
   நடுநிலையான அசல் அலசல்.. எந்த ஒரு செய்ய ஆரம்பிக்கும் பொழுதும்..
   இறைவன் நாடினால் என்று கூறுவது ரொம்ப நல்ல இருக்கு..
   இதே போல ஒரு டிவி நிகழ்ச்சியில் இஸ்லாமிய நண்பர் நிகழ்ச்சி முடியும் போது
   விரும்பினால் நாளை சந்திக்கலாம் என்று கூறுவார் ரொம்ப நல்ல இருக்கும்

   ReplyDelete
  45. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

   அனானியின் ஆதங்கமும் மனக் குமுறல்களும் அவர் இட்ட கருத்துக்களிலே தெரிகின்றது இப்ப நடந்து முடிந்த சம்பவம் என்பது தலித்துகள் தமது கோரிக்கைகளை வலியுருத்தி ஆயுதங்களை கைய்யில் எடுத்து நடு ரோட்டிற்கு வந்து போராட வில்லை இரண்டு நபர்களின் குடும்ப பிரச்சினையால் தலித் இனத்தை சேர்ந்த மாணவனை ஒரு ஜாதியின் கும்பல் அடித்து கொன்று விடுகிறது பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் முன் எச்சரிக்கை என்று பாதிக்கப் பட்டவர்களின் தலைவரை கைது செய்தால் கோபம் வருமா வராதா?

   கண் துடைப்பிற்க்காக அவசரம் அவசரமாக கொலை செய்தவர்களை கைது செய்கிறது போலிஸ் இதை முன் கூட்டிய செய்து இருந்தால் பிரச்சினைகளுக்கு வழியில்லாமல் போயிருக்கும்.

   நகர் புரங்களைவிட கிராமபுரங்களில் மீலாது விழா ஊர்வலம் நடக்கின்றது அதிலேயும் பிரச்சனைகள் வருவதால் இப்பொழுது அதுவும் குறைந்து வருகின்றது.

   விநாயக சதூர்த்தி ஊர்வலம் என்பது மத அடிப்படையை கொண்டது ஆகையால் அதை யாரும் தடுத்து நிறுத்தவோ அவ்வூர்வலத்திற்கு குந்தகம் விளைவிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது ஆனால் பல மதத்தினர் குறிப்பாக இஸ்லாமியனர் குடியிருக்கும் பகுதிக்கோ அல்லது மசூதியின் வழியிலோ ஊர்வலம் செல்வதற்கு போலிசால் தடை விதிக்கப் பட்டிருக்கும் அத்தடையினை உடைத்தெரிந்து மதக்கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே இயக்கம்தான் தமுமுக அவ்வகையில் தமுமுகவிற்கு சில விசமிகளின் செயல்கள் பிடிக்காமல் இருப்பதினால்தான் அவ்வூர்வலத்தின் மீது ஒரு கண் மற்றபடி ஒன்றும் இல்லை.

   அவரவர் மதத்தின் அடிப்படையில் அவரவர் பண்டிகைகளை கொண்டாடுகிறோம் இரு பக்கமும் இரு தீவிரவாதமும் இருக்கத்தான் செய்கிறது மனித நேயம் குறைந்து வருகின்றது என்பதே சரி சில பேர்கள் செய்யும் குழப்பத்தால் பல பேர் பாதிக்கப் படுகிறார்கள் அனைவரும் சேர்ந்தே இப்பிரச்சினைககளுக்கு முற்று புள்ளி வைக்கனும் என்பதே எனது ஆசை.

   நண்பனுக்கு நண்பனே எதிரியாக் இருக்கும் போது பெரியார் வாஞ்சிநாதன் காமராஜ் தேவர் பள்ளர் இவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

   அனானியும் சரி உலக தரப்பு பத்திரிக்கைகளும் சரி மற்றும் ஊடகங்களும் சரி அய்யூப் என்ற ஒரு தனி மனிதன் செய்யும் தவற்றிற்கு முஸ்லிம் தீவிரவாதி என்று முத்திரை குத்தியாலே அவர்களின் மனம் குளிரும்.

   ReplyDelete
  46. சலாம் ஐய்யூப் அண்ணா
   ஆஷிக் அண்ணாவின் கேள்விக்கான உங்களின் பதில் என்பதால் நான் தலையிட போவதில்லை, ஆனா பதிவின் கருக்கு அப்பாற்பட்ட, திசை திருப்பும் விவாதம் வேண்டாமே ப்ளிஸ். இதனால் பதிவுக்கு தேவைப்படும் விவாதம் நடக்காமல் போக வாய்ப்புண்டு. சில விஷயங்கள் மட்டும்......
   //இரு பக்கமும் இரு தீவிரவாதமும் இருக்கத்தான் செய்கிறது//
   இப்படி சொல்லும் நீங்க தான்
   //அனானியும் சரி உலக தரப்பு பத்திரிக்கைகளும் சரி மற்றும் ஊடகங்களும் சரி அய்யூப் என்ற ஒரு தனி மனிதன் செய்யும் தவற்றிற்கு முஸ்லிம் தீவிரவாதி என்று முத்திரை குத்தியாலே அவர்களின் மனம் குளிரும்.//
   இப்படி சொல்லியிருக்கீங்க
   _______
   தனிமனிதன் செய்யும் தவறுக்கு எப்படி மொத்த மதத்தையும் தீவிரவாதியாக பாவிக்க முடியும்??

   ReplyDelete
  47. @சகோ தவ்பீஹ்

   //இது போன்ற விமர்சனத்தை சகோதரி நீங்கள் பரிசலீத்து வெளியிடாமல் இருக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுக்கோள்.. //

   நன்றி சகோ

   ReplyDelete
  48. Avargal Unmaigal has left a new comment on your post "பரமக்குடி கலவரம் (முன்பும் பின்பும் நடந்தது என்ன?)...":

   //நான் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் யாரை பற்றி எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் மட்டுமே தீர்மானிப்பேன். யாருக்காகவும் என் அடையாளத்தை விட்டு கொடுக்கப்போவதில்லை. மன்னிக்கவும் சகோ..........///

   சரியான *பதில்* ஆமினா. நான் மனதில் நினைப்பதை அழகாக வார்த்தையால் எழுதியுள்ளிர்கள். *மதிக்கிறேன்* உங்களையும் உங்கள் எழுத்தையும். யார் உங்கள் எழுத்தை தொடர்கிறார்களோ இல்லையோ நான் கடைசி வரையில் தொடர்வேன் என்று உறுதியளிக்கின்றேன். வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் உங்களுக்கு ஆதரவு தரும் உங்கள் துணைவருக்கும்
   ____________________________________
   //நான் கடைசி வரையில் தொடர்வேன் என்று உறுதியளிக்கின்றேன்//
   அதனால, உங்க கமென்ட்ல சில மாற்றங்களை(*) செய்ததை நீங்க தவறாக நினைக்கமாட்டீங்க என்ற நம்பிக்கையில்....... :-) நினைக்கல தானே???

   ReplyDelete
  49. தவறாக நினைக்க நீங்கள் தவறாக மாற்றம் செய்யவில்லையே . நீங்கள் 100% இஸ்லாமியராக இருப்பதால் அந்த மாற்றம் என்பதை ப்ரிந்து கொண்டேன்

   ReplyDelete
  50. //இரு பக்கமும் இரு தீவிரவாதமும் இருக்கத்தான் செய்கிறது//
   இப்படி சொல்லும் நீங்க தான்
   //அனானியும் சரி உலக தரப்பு பத்திரிக்கைகளும் சரி மற்றும் ஊடகங்களும் சரி அய்யூப் என்ற ஒரு தனி மனிதன் செய்யும் தவற்றிற்கு முஸ்லிம் தீவிரவாதி என்று முத்திரை குத்தியாலே அவர்களின் மனம் குளிரும்.//
   இப்படி சொல்லியிருக்கீங்க.

   வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

   இதுதானே உண்மை இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டி காண்பிக்கவும்.


   //ஆனா பதிவின் கருக்கு அப்பாற்பட்ட, திசை திருப்பும் விவாதம் வேண்டாமே ப்ளிஸ். இதனால் பதிவுக்கு தேவைப்படும் விவாதம் நடக்காமல் போக வாய்ப்புண்டு. சில விஷயங்கள் மட்டும்....//

   மன்னிக்கவும் யாரையும் திசை திருப்பவோ யார் மீதும் பலியை சுமத்தவோ நான் விரும்ப வில்லை நடந்த சம்பவங்களை மறப்போம் அனைவர் மனதிலும் அமைதியை நிலை நாட்ட இறைவனிடம் பிறார்த்திப்போம்.

   அனானி சொன்ன கருத்திற்க்கு நான் ஆதரவு தெரிவித்தேன் அதில் சில சந்தேகங்களை சகோ ஆஷிக் விளக்குமாறு கேட்டிருந்தார் மீலாடி நபி ஊர்வலத்தை பற்றியும் விநாயகர் சதூர்த்தி பற்றியுமான தமுமுகவின் நிலைப்பாடினை பற்றியும்.

   அதற்குத்தான் சில சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை இடவேண்டிய கட்டாயமாகி விட்டது.

   எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் வாழ்வது சில நாள்கள்தான் அதில் நன்மையை செய்து தீமைகளை தடுப்பதில் முழு கவனம் செலுத்துவோம்.

   இத்தோடு எனது க(ரு)த்தை முடித்து கொள்கிறேன்.

   ReplyDelete
  51. தங்கள் மீது அமைதி நிலவுவதாக அன்பின் சகோ.அய்யூப்...

   அந்த அனானி.சகோ... எனக்குத்தான் பதில் அளித்து இருந்தார்.

   பொதுவாக அரசை பொறுத்த மட்டிலும், நடுநிலை பொதுமக்களை பொறுத்த மட்டிலும் சாதியை ஒழித்து சாதியற்ற சமநிலை சமுதாயத்தை உருவாக்கவே நினைக்கிறோம்.

   மத சம்பிரதாயங்கள் அவரவர் உரிமைகள். அதை காப்பது அரசுக்கு கடமை.

   ஆனால்... அதேநேரம்... இந்த சாதித்தலைவர்களுக்கான குருபூஜைகள் ஹிந்து மத வழிபாட்டு சம்பிரதாய அம்சத்தில் இல்லை என்பதையும் நாம் மறக்க கூடாது.

   நான் //எல்லா குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்// என்றதால்...சாதிப்பிரச்சினையில் மதப்பிரச்சினையை மிக லாவகமாக நுழைத்து திசை திருப்புகிறார்.


   சாதிவெறியை மதவெறி கொண்டே தணிக்கும் போக்கு பொதுவாக நிலவுகிறது.

   சாதியையும் மதத்தையும் குழப்பிக்கொண்டு இருக்கிறார். உங்களையும் குழப்பிவிட்டார்.

   இறைநாடினால் அந்த அனானி சகொவுக்கு பதிலாக இதுபற்றி ஒரு பதிவை விரிவாக நாளை வெளியிடுகிறேன்.

   ReplyDelete
  52. கலவரத்தை நினைத்தாலே வருத்தமா தான் இருக்கு

   இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

   தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

   ReplyDelete
  53. இப்போது வலைத்திரட்டியில் தோன்றுவதில்லையாதலால் பதிவை நான் கண்டுபிடிக்கச் சிரமமாயிற்று பெயரில்லாமல நான் போட்ட கருத்துக்களுக்கு வந்த எதிர்வினைகள் எனக்கு கொஞ்சம் நகைச்சுவையைத் தந்தது. உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் போகும்போது மயர்வர மதிநலம் வராது என்பதை பின்னூட்டங்கள், குறிப்பாக, ஆசிக்கின் - தெரிவிக்கின்றன.

   அது கிடக்க.

   ஆசிக், திண்ணையில் என் கட்டுரையைப் படிக்கவும்; 'விநாயகர் சதுர்த்தி என்றாலே பயம. '

   இவர் செய்வது அவருக்குப்பிடிக்காது. அவர் செய்வது இவருக்குப்பிடிக்காது என்பது ஒரு வாதத்திற்காக என்னால் சொல்லப்பட்டது. அவை ஒவ்வொன்றுக்கும் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. அப்படியே ஆராய்ச்சி வேண்டுமென்றால் என் திண்ணைக்கட்டுரையைப்படிக்கவும்.

   பொதுக்கருத்தை உணர்ந்தாலே போதும். அஃதாவது. இரு சார்பு நிலைகள். ஒருவருக்குச் சரி. மற்றவருக்குச் சரியாகத் தோன்றவில்லை. இப்படி இரு சார்பு நிலைகளில் சில சமயங்களில் மோதல் வரும் என்றால் இரண்டையுமே நிறுத்திவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்பது ஜனநாயகப்படுகொலை. U cant throw the baby with bathwater.இரு குருபூஜைகளையும் நிறுத்து என்பது மக்கள் தங்களுக்குப்பிடித்தவரைப்போற்றுதலுக்குத் தடை செய்வதாகும். They have every right to pay respects to their men who lived and died for them. Can I ask Ashiq not to respect anyone whom he loves and who have died for him sacrificing his or her life? எனவே ஆசிக் விரும்புவது அடிப்படைக்கருத்துப்பிழை. If u feel that such occasion can create troubles to social amity, the best course of action is not to stop it completely, but regulate it with suitable and effective mechanism. இதைத்தான் எதிர்னோக்க வேண்டும். என்ன பதில் ? ஆஷிக். சொல்லுங்கள்.

   பதிவாளர் ஆமினாவுக்கு

   என்பதிவில் என்னவேண்டுமானாலும் எழுதுவேன். என் உரிமை என்கிறீர்கள். அதற்கு நீங்கள் தனிநபர் பதிவு மட்டுமே எழுதி தனிப்பட்டவர்கள் படிப்பதற்கென்றே போட்டுவிட்டால் பிரச்சினையில்லை. பொதுமன்றத்தில் வைக்கிறீர்கள். நச்சுக்கருத்துக்களைப் பரப்புவோரும் உங்களைப் போலவே சொல்லிப் பொதுமன்றத்தில் வைக்கலாமே? முகனூல் அப்படித்தானே பயன்படுத்தப்படுகிறது ? பல வலைபதிவுகள் ஒரு இனம், ஒரு சமூகம், ஒரு கொளகை இவைகளைப்பற்றி வெறுப்பை உருவாக்கத்தானே எழுதப்படுகின்றன?

   தனிநபர் ஒழுக்கம் பொது ஒழுக்கம் என்று இருவகை. தனிநபர் ஒழுக்கம் உங்களையும் உங்களச்சார்ந்தவர்களையும் மட்டுமே சேர்ந்தது. பொது ஒழுக்கம் சமூகத்தை மொத்தமாகப்பாதிக்கும். பதிவுலக்ததில் உங்கள் பதிவு வாசிக்கப்படுகிறது. பொதுமக்களால், உங்கள் நண்பர்காலும் உறவினர்களாலும் மட்டுமல்ல என்பதை நினைவில் வைத்து எழுதுங்கள். இன்று வேதனையுடன் பரபரப்பாகவும் பேசப்படும் பொருளைப் பற்றி எழுதும்போது, 'நான் என்னவேண்டுமானாலும் எழுதுவேன் என் உரிமை' என்றால், எங்கும் எல்லாரும் அப்படியே வாதிட்டு எழுதுவார்கள். ஒரே குழப்பம், கூச்சல், கோபங்கள், என்று போகும். பொது அமைதிக்கே பங்கம்.

   ஒரு எ.கா:

   பதிவில் இறுதியில் பல கேள்விகள் போட்டிருக்கிறீர்கள். அதிலொன்று: ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதால் என்று எழுதியிருக்கிறீர்கள். பதிவில் முதலிலிருந்து உங்கள் நேரடி அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் நேரில் பார்த்தவை; கேட்டவை. ஆனால் இறுதியில் பெண்காவலரை மான பங்கப்படுத்தியதால்..என்பதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா ? பத்திரிக்கைகள் எழுதியவை போலிசு இருவரை அடித்துக்கொன்றதற்கு சொல்லிய சாக்குகள். 50 போலீசார் ஒருவனை தரையில் போட்டு அடித்துக் கொன்றார்கள் என்று ப்ரிசிலியா பாண்டியன் சொல்கிறார். போலிசு அவன் பெண் காவலரை மானப்பங்கப்படுத்தினான் என்கிறது.

   ஆக, இரு பக்கம் வெவ்வேறானது. ஆனால் நீங்களோ அங்கில்லாதவர். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள் என்று வீட்டுக்காரர் எச்சரிக்கை பண்ண வீட்டில் அடைபட வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் போலிசு சொன்னதை உண்மையில் நீங்கள் பார்த்தது அல்லது நடந்தது போலவே போடுகிறீர்கள். இது என்ன? பொறுப்புணர்வா ? இல்லை பொது ஒழுக்கமா ? இல்லை நான் என்னவேண்டுமானாலும் எழுதுவேன் என்பீர்களா?

   ஆமினா: எனவேதான் சொல்கிறேன். நேரடியாகப்பார்த்த விசயங்களை மட்டும் எழுதுங்கள். அதேவேளையில் எந்தவொரு அஜன்டாவும் வேண்டாம். படிப்பவரின் மனச்சாயல் தனக்கு விரும்பியபடி வரவேண்டும் என எழுதுவது மனச்சாயலை உருவாக்குவதே. அஃதொரு அஜன்டாவாகும்.


   காவ்யா.

   ReplyDelete
  54. ஆனால்... அதேநேரம்... இந்த சாதித்தலைவர்களுக்கான குருபூஜைகள் ஹிந்து மத வழிபாட்டு சம்பிரதாய அம்சத்தில் இல்லை என்பதையும் நாம் மறக்க கூடாது.

   நான் //எல்லா குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்// என்றதால்...சாதிப்பிரச்சினையில் மதப்பிரச்சினையை மிக லாவகமாக நுழைத்து திசை திருப்புகிறார்//

   ஆசிக்!

   சேகரன் கிருத்துவர். அவருக்குக் குருபூஜை என்றால் அதற்கும் இந்துமதத்திற்கும் என்ன தொடர்பு? இந்து வழிபாட்டு சம்பிரதாயத்தைப்பற்றி உங்களுக்கேன் அக்கறை?

   அது கிடக்க.

   இந்து வழிபாட்டு சம்பிரதாயம், அல்லது இந்து வழிமுறைகள் என்பது இன்று இந்திய சமூகம், குறிப்பாகத் தமிழ் சமூகத்தில் பல பரிமாணங்களில் நம்மையறியாமலே ஊடுருவிக்கிடக்கிறது. வடநாட்டில் மசூதிகளுக்குப்போனால், அவர்கள் ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்களைத்தூவுதல் போன்றவற்றையும் இன்னும் பல் - இசுலாம் வழிபாட்டு முறைகளிலில்லாதவைகளை- வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

   குருபூஜை என்பது சிலைகளை, வைத்து கல்லறைகளிலோ, அல்லது மணிமண்டபங்களிலோ, தியானிப்பது, அல்லது இந்து கிராமிய வழிபாட்டுவழக்கங்கள் - கும்மியடித்தல், முளைப்பாறியெடுத்தல் போன்று - இவற்றை பயன்படுத்துதலே. இதற்கும் இந்துமதம் எனபதற்கும் நேரடி தொடர்பில்லை. எவராவது ஒருவர், முத்துராமலிங்கம் கிருஸ்ணரின் 11 வது அவதாரம் என்று சொன்னால் மட்டுமே அது இந்துமதத்தின் நேரடி தொடர்பு. இன்னொரு நோக்கம் என்னவென்றால், மு.ராவின் தொண்டர்கள், அல்லது அவர் ஜாதியாட்களைத்தவிர பிற இந்துக்களுக்கு இதில் யாதொரு கவனமோ அக்கறையோ தொடர்போ இல்லை. எனவே இது இந்து மதமசார்ந்த விடயமல்ல.

   நீங்கள் மில லாவகமாக இப்பிரச்சினையை மத வழியாகத் திசை திருப்புகிறீர்கள்.

   குருபூஜைகள் நிறுத்தப்படக்கூடாது அவர்கள் விரும்பினால். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வருமென்றால் அதை எப்படி நேராமல் தடுக்க திட்டம் போட்டு செயல்படுத்தினால் போதும். ஆனால் அச்செயல் பாட்டை முட்டாள்தனமாகப் பண்ணினால் கலவரம் வெடிக்கும்.

   ReplyDelete
  55. Ashiq!

   In what ways such pujas r conducted is out of qn. In fact, the appropriate word is 'ceremonies', not 'pujas.' When v say 'ceremonies', religion does not get linked.

   It s an occasion to commemorate the two leaders by the respective community ppl only. This s the vital point for ur notice.

   So, lets not waste time over the procedures they adopt at the spots.

   The riots don't happen at the spots, but along the way the concerned ppl go on 'pilgrimage'

   Your advocacy to stop the pujas s autocratic and totalitarian. Only in such dictatorships r totalitarian regimes, ppl will b stopped from holding such ceremonies if the dictator wills. Communist Russia and China banned religions, as u know.

   In democracies, we shd allow ppl to worship anyone they like, in any manner they like, provided they dont attack the rivals, thereby causing harm to general peace.

   Still v shd not prevent the pujas themselves. It is advisable to devise ways to segregate them by using logistics, say for e.g. what route they shd take; and how many ppl in batches, whether trafficking in human via trucks s to b allowed; wheather the leaders shd b followed by retinue and entourage etc.

   On this score, the govt of Jeyalalitha s partial to thevars and oppressive to pallars. This s the point I hav highlighted in many comments in other places.

   (Dont spend so much emotions on this matter. It s neither urs nor mind. It is third party. We discuss as persons concenred over general public good - thats all)

   ReplyDelete
  56. பதிவாளர் ஆமினாவுக்கு

   என்பதிவில் என்னவேண்டுமானாலும் எழுதுவேன். என் உரிமை என்கிறீர்கள். அதற்கு நீங்கள் தனிநபர் பதிவு மட்டுமே எழுதி தனிப்பட்டவர்கள் படிப்பதற்கென்றே போட்டுவிட்டால் பிரச்சினையில்லை.//

   அன்பு காவ்யா

   என்ன வேண்டுமானாலுமா? நான் எப்ப தோழி அப்படி சொன்னேன்? என் கருத்தை மட்டும் தான் படிச்சீங்களா? பெண்பதிவர்கள் ஜாதி மதம் பத்தி எழுதுவது அந்நியனுக்கு பிடிக்கலைன்னு சொன்னார். அதுக்காக தான் ///நான் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் யாரை பற்றி எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன்//
   மறுபடியும் அந்த லைனை வாசிச்சுட்டு மறூபடியும் கீழ உள்ளத படிங்க.
   ம் படிச்சுட்டீங்களா?
   அதாவது என்ன எழுத வேண்டும்? (நகைச்சுவை பதிவா? மொக்கை பதிவா? சமூக/சமுதாய பதிவா? ஜாதி,மத பதிவா? இஸ்லாமிய பதிவா? )
   எப்படி எழுத வேண்டும் ( நகைச்சுவையா எழுதனுமா? சீரியஸா எழுதணூமா? படம் போட்டு எழுதணுமா? ஆபாசம் இன்றி எழுதணுமா? என் மதம் எனக்கு கற்பித்த நெறிமுறைகளுக்கு உட்பட்டு எப்படி எழுத வேண்டும் ?)
   யாரை பற்றி எழுத வேண்டும்? (நன்மை செய்தவர். தீயவர், நண்பர், உறவினர், அரசியல்வாதி, இன்னபிற)
   இத்தனையும் நான் தான் தீர்மானிக்கிறேன். புரியுதா?
   இப்படி தான் எழுதுவேன் என்று தீர்மானிப்பதற்கும் எப்படி வேணும்னாலும் எழுதுவேன் என்று நீங்க சொன்னது போல் சொல்வதற்கும் உள்ள முரண்பாடு உங்களுக்கு தெரியுதா?

   அதற்கு நான் தனிநபர் பத்தி மட்டும் எழுதுறதுக்கு எதுக்கு காவ்யா ப்ளாக்? நீங்க? இத்தனை வாசகர்கள்? அதுக்கு டைரி எழுதிட்டு போய்டலாமே? எந்த ஒரு விஷயமும் தனிநபரையோ பொது மக்களையோ பாதிக்காத வரை அவை பொதுவில் வைக்கப்படுவதில்லை. விவாதிக்கப்படுவதில்லை. ஊரே பேசுற ஒரு விஷயத்தை நீங்க பேசாதீங்க, தனிநபர் பத்தி எழுதுங்கன்னா இது மட்டும் ஜனநாயக படுகொலை இல்லையா? எழுத்து சுதந்திரத்தை கொலை செய்யும் எண்ணம் இல்லையா?

   ஓ!!!! நீங்க பத்திரிக்கைல உள்ளவங்க எழுதுனா மட்டும் தான் அத உண்மைன்னு நம்பிவேன். அவங்க சொன்னா தான் சரியா இருக்கும். அதுக்கெல்லாம் நான் கேள்வி கேட்கமாட்டேன். ஆனா அதுவே தனியா ஒரு ஆள் எழுதுனா தனிநபர் பத்தி மட்டும் தான் எழுதணும்னு னு சொல்றீங்களா?

   ReplyDelete
  57. //பொதுமன்றத்தில் வைக்கிறீர்கள். நச்சுக்கருத்துக்களைப் பரப்புவோரும் உங்களைப் போலவே சொல்லிப் பொதுமன்றத்தில் வைக்கலாமே? முகனூல் அப்படித்தானே பயன்படுத்தப்படுகிறது ? பல வலைபதிவுகள் ஒரு இனம், ஒரு சமூகம், ஒரு கொளகை இவைகளைப்பற்றி வெறுப்பை உருவாக்கத்தானே எழுதப்படுகின்றன?//

   முதலில் அந்நியனுக்கான என் பதில்லுக்கு உங்களின் புரிதல் தவறானது. ஆகா அடுத்தடுத்து வரும் உங்களின் பதில்களும் அதன் தாக்கம் தெரிகிறது. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காய்வா.....ஒரு சமூகம் ஒரு கொள்கை ஆகியவற்றை பற்றி வெறுப்பை உருவாக்கும் எழுத்துக்கும் பொதுவாய் ஒரு விஷயத்தின் நிறை குறைகளை பற்றி விவாதிப்பதற்கும் வித்தியாசம் தெரியாம தான் எல்லாரும் ஒரு பதிவை படிக்கிறாங்களா??? விநாயகர் சதுர்த்தி பற்றிய மதம் சார்ந்த விஷயத்தை நீங்கள் பொதுமன்றத்தில் வெளியிடும் போது உங்களூக்கு அது தனிநபர் சார்ந்த பதிவு இல்லைன்னு தெரியலையா? இல்ல நா என் மதம் பத்தி என்ன வேணும்னாலும் எழுதுவேன் நீ எழுத கூடாதுன்னு சொல்லுவீங்களா? அப்படியும் இல்லைன்னா அந்த ஊர்வலத்தில் உள்ள மத அரசியல் பத்தி மக்களுக்கு புரிய வைக்க தான் எழுதுனேன்னு நீங்க சொன்னா "அதே போல் ஒரு தலீத்/ஆதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தலைவருக்கான சடங்கு இன்று அரசியல் ஆதாயத்தால் கொடிய மிருகமாக மாற்றப்படுவதை தான் நான் எழுதுனேன் :-) சோ மத-அரசியல் பத்தி எழுதுனதுக்கு உங்களுக்கு பொது ஒழுக்கம் தேவைப்படாத/கடைபிடிக்காத போது மற்றவர்களிடம் நீங்க பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

   ReplyDelete
  58. //பதிவுலக்ததில் உங்கள் பதிவு வாசிக்கப்படுகிறது. பொதுமக்களால், உங்கள் நண்பர்காலும் உறவினர்களாலும் மட்டுமல்ல என்பதை நினைவில் வைத்து எழுதுங்கள்.//

   அதே தான் நானும் சொல்றேன் காவ்யா. பதிவுலகத்தில் என் பதிவு வாசிக்கப்படுகிறது. என் நண்பர்களாலும் உறவினர்களாலும் மட்டுமல்ல.... பொதுமக்களால் என்பதை நினைவில் வைத்து தான் எழுதுவதால் நேத்து என்னவருடன் வாக்கிங் போனதையும் , ஓரமா ரோட்ல நடந்து போய்ட்டு இருக்கும் போது முள் குத்துனத பற்றியும் இங்கே விவாதிக்கல. மாறாக கலவரத்தில் என்ன நான் கண்டேனோ? என்ன கேள்விபட்டேனோ? என்ன விவரங்களை சேகரித்தேனோ அதை அனைவருக்கும் தெரியப்படுத்தவே இங்கே பதிவிட்டேன். மறுபடியும் சொல்றேன் கலவரத்தில் என்ன நான் கண்டேனோ? என்ன கேள்விபட்டேனோ? என்ன விவரங்களை சேகரித்தேனோ அதை எழுதியுள்ளேன். என்ன வேணும்னாலும் கண்மூடித்தனமா எழுதுல. நீங்க என் தனிபட்ட பதிலையும் பதிவையும் சம்மந்தப்படுத்தி பேசுறீங்க. அதுவும் தவறா புரிஞ்சுட்டு :-)

   ReplyDelete
  59. //பதிவில் இறுதியில் பல கேள்விகள் போட்டிருக்கிறீர்கள். அதிலொன்று: ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதால் என்று எழுதியிருக்கிறீர்கள். பதிவில் முதலிலிருந்து உங்கள் நேரடி அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் நேரில் பார்த்தவை; கேட்டவை. ஆனால் இறுதியில் பெண்காவலரை மான பங்கப்படுத்தியதால்..என்பதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா ? //

   நீங்க சொன்ன இந்த வரிகளில் இருந்தே உங்க கேள்விக்கு பதில் சொல்றேன். அதாவது நீங்களே சொல்லிட்டீங்க ///நீங்கள் நேரில் பார்த்தவை; கேட்டவை.//
   குறிப்பாக கேட்டவை
   நிற்க
   அதுக்கப்பறமும் என் பதிவில் //கலவரத்தன்று கண்ணில் பட்ட சில நிகழ்வுகள்// என்று குறிப்பிட்டுள்ளேன். நான் விவரங்களை சேகரிக்கும் போது சிலர் என்னிடம் சொன்னதால் அதுவும் கண்ணில் பட்ட சில விஷயங்களில் தானே அடங்கும்? அதையும் குறிப்பிட்டேனே //நேரில் கலந்துக்கொண்டவர்கள் சொன்ன விஷயம்)//
   இதுக்கப்பறமும் நேரில் பார்த்தீர்களா என எப்படி கேட்டீங்க?
   போலீஸ் சாக்கு போக்கு சொல்ல தான் மானபங்கம் மேட்டர சொன்னாங்கன்னு என்பதை சொல்றீங்க. என்ன ஒரு அநியாயம்? அப்ப சும்மா இருந்தவங்கள போலீஸ் தான் வம்பிழுத்தாங்க. அவங்க தான் கலவரத்த உண்டாக்குனாங்கன்னு சொல்றீங்களா காவ்யா?
   பரமக்குடிக்கு வந்தோ போன் மூலமாவோ விஷாரிச்சு பாருங்க தோழி........ மானபங்கப்படுத்தப்பட்டது போலீஸ் தன்னோட வேலையை காப்பாற்ற சொன்ன சாக்கு போக்கா என!!!! 50 பேர் சேர்ந்து ஒருவரை அடித்ததும் உண்மை. ஒரு பெண் போலீஸ் மானபங்கப்படுத்தப்பட்டதும் உண்மை. நல்லா விஷாரிச்சு அதுக்கப்பறம் மறுபடியும் வாங்க. யார் பக்கமும் நியாயம் அநியாயம் கூறி இந்த பதிவை எழுத வில்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்க காவ்யா. ஒருவரை உயர்த்தியோ தாழ்த்தியோ பேச எனக்கு எந்த ஆதாயமும் இல்லை.
   *****நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்( அல்குர்ஆன் 2:42)********
   *****தெரியாத விசயத்தில் விவாதம் செய்யாதீர்கள்- நாயகம் (ஸல்) ******

   //ஆனால் போலிசு சொன்னதை உண்மையில் நீங்கள் பார்த்தது அல்லது நடந்தது போலவே போடுகிறீர்கள்.//
   மீண்டும் ஒரு முறை பதிவையும் அதில் கூறப்பட்ட வார்த்தைகளையும் படிங்கோ.....

   ஒன்றை பற்றி விவாதிக்கும் போதோ நிறைகுறைகளை படிக்கும் போதோ புரிஞ்சு படிங்கணும் தோழி. இது என்ன? பொறுப்புணர்வா ? இல்லை பொது ஒழுக்கமா ?

   ReplyDelete
  60. //ஆமினா: எனவேதான் சொல்கிறேன். நேரடியாகப்பார்த்த விசயங்களை மட்டும் எழுதுங்கள்.//

   இந்த ஒரு வார்த்தையை வைத்து நான் ஆயிரம் கேள்விகளை கேட்க முடியும் :-)

   ஆனா காவ்யா

   ஒரு பொண்ணு காதலிக்கப்பட்டவனால் கைவிடப்பட்டு நீதி கேட்டு வரும் போது
   *நீ வீடியோ ஆதாரத்த கொண்டுட்டு வா.அப்ப தான் நா நம்புவேன் அப்படின்னு சொலுவீங்களா?
   *நீங்க ரென்டு பேரும் காதலிச்சத நான் பாக்கல. அதுனால நீ ஏமாத்தப்படலன்னு சொல்லுவீங்களா?
   *உடன் சம்மந்தப்பட்டவர்களை விஷாரித்து தீர்ப்பு சொல்லுவீங்களா??

   ReplyDelete
  61. நல்ல பதிவு.இந்த பதிவர் திரைப்பட டைரக்டர் ஆனால் நிச்சயம் வெற்றிப்பட அல்லது award இயக்குனராக முடியும்.சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை படித்திருக்கிறீர்களா ?அந்த பார்முலாவின் படி யும்,neo realism என்று சொல்லப்படும் படிப்பவர் அல்லது பார்ப்பவர் அறிவை விரிவடைய செல்லும் வித்தை இவரிடம் இருக்கிறது....பார்த்த கேட்ட சம்பவங்களை அழகாக தொடுத்து விறுவிறுப்புடன் பதிவாக்கியுள்ளார்......

   ReplyDelete
  62. ஆமி ..சமூக நிகழ்வுகள்,பிரச்னைகள் பற்றி எழுதும் தைரியம்,துணிச்சல் உங்கள் பதிவுகளில் தெரிகிறது.தொடருங்கள் .

   ReplyDelete
  63. ஸலாம் சகோ.காவ்யா..!

   அனானி வேடத்தை கலைத்தமைக்கு முதற்கண் என் நன்றி.

   //..மயர்வர மதிநலம் வராது..//---உணர்ச்சிகள் இந்நேரத்தில் கட்டுக்குள் யாருக்கு இருக்கும்; யாருக்கு இருக்காது என்பதை நீங்களே ஆய்ந்தறிந்து கொள்ளவும்.

   //என்ன பதில் ? ஆஷிக். சொல்லுங்கள்.//

   உங்கள் குழப்பத்திற்கும் திரிபுக்கும் தவறான புரிதலுக்கும் பதிலாகத்தான் "குருபூஜைகள் அவசியமா..?" எனும் இந்த பதிவையே எழுதியுள்ளேன். படித்து தெளியவும்.

   //சேகரன் கிருத்துவர். அவருக்குக் குருபூஜை என்றால் அதற்கும் இந்துமதத்திற்கும் என்ன தொடர்பு?//---அப்படியென்றால்... பரமக்குடி சென்றவர்கள் அனைவரும் கிருத்துவர்களா..? பூஜை செய்ய பாதிரியார்கள்தான் வருகிறார்களா..?

   //இந்து வழிபாட்டு சம்பிரதாயத்தைப்பற்றி உங்களுக்கேன் அக்கறை?//--- ஒரு சக குடிமகன் என்ற முறையில் பிற சமயத்தவரும் பிற சாதியினரும் இந்த துப்பாக்கி சூடு/ ஊரடங்கு உத்தரவு / கடையடைப்பு / வன்முறை இவற்றால் பாதிக்கப்படுகிறார்களே..? அவர்களுக்கு இதுபற்றி எல்லாம் கேட்கும் பேச்சுரிமை எழுத்துரிமையை மறுப்பீர்களா..?

   நாளை, டாக்டர் மன்மோகன் சிங் என்ற ஹிந்து மதம் அல்லாத பிரதமர் பரமக்குடி வந்து விசாரித்தாலும் இதே கேள்வியைத்தான் அவரைப்பார்த்து கேட்பீர்களா சகோ.காவ்யா..?

   சாதிப்பிரச்சினையில் மதத்தை திணித்தது நீங்கள்.

   நான் சொல்வது என்ன..?

   "மதம் என்பது அரசியல் சாசன அடிப்படை உரிமை. சாதி அரசியல் சாசனத்துக்கு எதிரானது".

   அதாவது...

   "சமூக தீமையான சாதி எனும் அஸ்திவாரத்தின் மீது கட்டமைக்கப்படுகின்ற குருபூஜைகள் எனும் கட்டிடமும் சமூக தீமைதான்" என்பதே..!

   "அஸ்திவாரம் இடிக்கப்படட்டும்... கட்டிடம் அப்படியே இருக்கட்டும்" என்றால் அது கோமாளித்தனம்..!

   "அரசியல் சாசனத்துக்கு எதிரான சாதிக்கு வித்திட்டு வளர்க்கும் குருபூஜைகளும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதினானதே" என்பதே..!

   அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒன்றுக்காக எப்படி அந்த அரசிடமே சென்று பாதுகாப்பும் பங்களிப்பும் கேட்பீர்கள் சகோ.காவ்யா..?

   இப்போது சொல்லுங்கள்... யார் குழம்பி இருப்பது..? நீங்களா.. நானா..? யார் திசை திருப்புவது..? நீங்களா.. நானா..?

   ReplyDelete
  64. //சட்டம் ஒழுங்கு பிரச்சினை வருமென்றால் அதை எப்படி நேராமல் தடுக்க திட்டம் போட்டு செயல்படுத்தினால் போதும்.//---அடிப்படை உரிமையை காக்கத்தான் காவல் பாதுகாப்பு எல்லாம் தருவார்கள்..!

   சட்டத்துக்கு எதிரான சாதிக்கும் அது தொடர்பான குருபூஜைக்கும் அதனால் பிரச்சினை வரும் என்றால்...

   சமதீதி காக்க அனைத்து குருபூஜைகளும் தடை செய்யப்பட வேண்டும்..!

   ஒரு சாதித்தலைவர் பெயரில் ஓடிய அரசுப்பேருந்தின் மீது கல்வீச்சு நடந்ததால்... கொளுத்தப்பட்டதால்... அதை மட்டும் அரசு நீக்க வில்லையே..? எல்லா பேருந்தின் பெயரையும் மாற்றியது. சாதிவெறி தற்காலிகமாய் அடங்கிற்று.

   ஏற்கனவே நடந்த அதைத்தானே இப்போது கேட்கிறேன்...?

   //'ceremonies', not 'pujas.' 'pilgrimage'// அடடா..! ரொம்ப யோசிச்சிட்டீங்க. நைஸாக தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதி எஸ்கேப்..!

   ஆனால், ஒரு விஷயம் உங்களுக்கு புரியவே இல்லை. இங்கே நான் 'குருபூஜை மத விஷயம் கிடையாது' என்றது... 'அது fundamental rights -இல் வராது' என்று அழுத்தமாய் சொல்லவே. அடிப்படை உரிமைப்பிரச்சினைக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால்தான் ஏனென்று கேட்கலாம்.

   ///the govt of Jeyalalitha s partial to thevars and oppressive to pallars.///---வாறே வா... இதுதான் நல்ல பாயின்ட்.

   இதுக்குத்தான் சொல்றேன்...

   இந்த முதல்வர் ஜெ. பரமக்குடியில் எப்படி நடந்து கொண்டாரோ.. அதேபோல அடுத்து வரும் இன்னொரு குருபூஜையிலும் 'நடுநிலையுடன்' நடந்து கொள்ள வேண்டும்.

   //It s neither urs nor mine. It is third party.//---இதை எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா..? சமூக நலனில் அவ்ளோதானா உங்கள் ஆர்வம்..?

   நீங்கள் திண்ணையில் உடகார்ந்து எழுதுவீர்களோ...

   அல்லது

   தெருவில் நடந்து கொண்டு எழுதுவீர்களோ...

   தெரியாது... ஆனால்,

   சரியானதை-உண்மையை-நேர்மையாய் சிந்தித்து எழுதவும் சகோ.காவ்யா. // thats all //

   ReplyDelete
  65. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் இந்த மாதிரி கலவரம் நடந்தா பயங்கர கொண்டாட்டமா இருக்கும். ஏன்னா கண்டிப்பா ஒரு மாசம் ஸ்கூல் இருக்காது

   ஹி.ஹி ..ஹி ...அப்போ நீங்களும் எங்களமாதிரித்தான்.கலவரக்காறறினால் அதிகம் பாதிக்கப் படுவது பொதுமக்கள்தான் அதிலும் ஏழைகளும் பள்ளி மாணவர்களும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......

   ReplyDelete
  66. இது வரைக்கும் கலவரமொன்றை நேரில் பார்த்தில்லை....
   பார்க்கும் சந்தர்ப்பமும் அமையவல்லை...

   நேரில் காண்பித்தது போன்ற மன உணர்வை தந்துவிட்டீங்க சகோ....

   ReplyDelete
  67. மனிதத்தை மனிதன்தின்னும் காலமிது அடுத்த சந்ததி எப்படி வாழுமோ...

   அன்புச் சகோதரன்...
   ம.தி.சுதா
   மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

   ReplyDelete
  68. சாதிகளின் பெயரால் வாக்குகளை வாங்கி தேர்தலில் வெற்றிபெற தமிழக அரசியல்வாதிகள் எதுவும் செய்வார்கள்!!
   தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கின்றோம் என்று தலித்துகளைக் கைதுசெய்வதும், தலித்துக்களால் பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைதுசெய்வதும், தமிழகப் பொலிசாரின் கொள்கையாக இருக்கின்றது.
   இம்மானுவேல்சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்தி முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக தமிழகத்தில் வளரவிடக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நோக்கமாக இருக்ககின்றது.
   - நல்லையா தயாபரன்

   ReplyDelete
  69. அமீனா,
   தலித் அரசியல் என்னவென்றே தெரியாத நீங்கள் ஏதோ ஊர்த் தெருச்சண்டையை விவரிப்பது போல் பரமக்குடி சம்பவத்தை விவரித்திருக்கிறீர்கள். அதன் பின் இருக்கும் அரசியலை நீங்கள் உணர்ந்த மாதிரியே தெரியவில்லை.

   பெண் போலீசை மானபங்கப்படுத்த முயன்றார்கள் என்று சொல்லும் போலீஸ் மானபங்கப்படுத்த முயன்றவர்களை ஏன் தடுக்கவில்லை..அங்கே தானே போலீஸ் நின்று கொண்டிருந்தார்கள்... ஏன் கைது செய்யவில்லை..?

   //ஜான் பாண்டியன் என்பவர்..
   உங்களுக்கு ஜான் பாண்டியன் யார் என்றும் தெரிந்திருக்கவில்லை. தேவேந்திர குல வெள்ளாளர்களை தலித்துகள் என்று மொத்த சமூகமும் இழிவாகக் கருதியபோது...நாம் வீரர்கள் என்று அவர்களை நெஞ்சு நிமிர்த்த வைத்தவர்.. அவர்களால் தலைவராக கருதப்படுபவர்.

   தேவரின் குருபூஜைக்கும், இம்மானுவேல் சேகரரின் குருபூஜைக்கும் என்ன வித்தியாசம் ? தெரியுமா உங்களுக்கு ?

   தேவரின் குருபூஜைக்கு ஜெயலலிதா முதல் எல்லா கட்சித் தலைவர்களும் விஜயம் செய்வார்கள், கத்தியின்றி, ரத்தமின்றி தேவர் பூஜை "பிரச்சனை'களின்றி நடைபெறும். ஆனால் இமானுவேலின் குருபூஜைக்கும் ஜான்பாண்டியனைத் தவிர. இடது சாரிகளைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை. ஏன் ?

   இமானுவேலை 57ல் உயர்சாதிக்காரர்கள் வெட்டிக் கொன்றதன் காரணம், அதற்கு முந்தைய நாள் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முத்துராமலிங்க த்தேவர் வந்த போது கீழ்ச்சாதிக்கார இமானுவேல் எழுந்து நிற்கவில்லை. அதை வெறுப்பாக வெளியில் வந்து முத்துராமலிங்கத்தேவர் 'கீழ்ச்சாதிக்காரப் பயமுன்னாடி என்ன அசிங்கப்படுத்திவிட்டார்கள்' என்பதாகப் பொரும அடுத்த நாள் இமானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

   மேலும் எழுதலாம்..

   ReplyDelete
  70. @அம்பேத்கன்

   நான் ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லையே? என் கண் முன்னே நடந்த சம்பவங்களை தானே எழுதியுள்ளேன். கலவரம் நடப்பதற்கு முன்பும் பின்பும் இருந்த நிலையை தான் தலைப்பிட்டேனே தவிர "தேவர்-தலீத் பிரச்சனைக்கான காரணம் என்ன?" என தலைப்பிடவில்லையே..... விவரங்கள் சேகரிச்சுட்டு தான் இருக்கேன். முடிஞ்சா இதே தலைப்பில் பதிவிடலாம் என்ற எண்ணம் தான். அப்போது நீங்கள் குறிப்பிட்ட " மரியாதை கொடுக்காத" விஷயம் பற்றி பேசலாம்.
   மானபங்கம் நடந்த பின் தான் சலசலப்பு வரதொடங்கியது. அது தான் உண்மை. மேலும் மானபங்கம் படுத்தும் போது ஏன் தடுக்கவில்லை என்பதெல்லாம் சின்னபுள்ளதனமான கேள்வி (மானபங்கம்-கற்பழிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்)

   //அடுத்த நாள் இமானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்டார்.//
   எங்கே பகை உருவானது என்ற வரலாறுக்கும் எப்படி கலவரம் உண்டானது என்ற விஷயத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மேலும் ஜான்பாண்டியன் அவர்களை பற்றி என்ன தேவை வந்தது இதில் அவரின் வரலாறு பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

   இங்கே போலீஸ்க்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் இடையே நடந்த விஷயம் மட்டும் தான் எழுதியுள்ளேன். நீங்கள் சொல்வது போல் உயர்-தாழ் ஜாதியினர் பற்றி எழுதவில்லை.

   ReplyDelete
  71. @அனானி

   தைரியம் இருந்தால் உங்கள் உண்மையான பெயரில் அதே கமெண்டை அனுப்புங்கள். உடனே பப்ளீஸ் பண்றேன். தைரியம் இல்லாத அரைவேக்காடுகளோட சரிசமமாய் பேசுவது வெட்கக்கேடு :-)

   ReplyDelete

  இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)