நா ஏன் சீரியல் பாக்குறதில்லைங்குறதன் காரணத்தை, ரகசியத்தை, உண்மையை உலகுக்கு  போட்டு உடைக்கும் தருணம் இது! என்னைய தடுக்காதீங்க! விடுங்க!விடுங்க! நா இத இப்பவே சொல்லியே ஆகணும்!!!

  செம பில்டப்பா இருக்கோ:-)  சீரியல் பத்தி பேசுறோம்ல? அதெல்லாம் அப்படி தான் செமடாப்புல பில்டப்பு இருக்கும்!

சரி இப்ப என்ன்ன்ன்ன்ன்ன்னா மேட்டர்ன்ன்ன்ன்னா...  ஐ டோன்ட் லைக் அழுவாச்சி பக்கிஸ்... சீரியல் பிடிக்காதுன்னு சொல்றதுக்கான மொக்கையான காரணமா இருக்கோ! சரி சரி முட்டைய ஓரம்மா வைங்க! ஆம்லேட் போட ஒதவும்!

இரு பெண்கள் பேசிக்கொண்டாலே அது துளசியையும் செல்லம்மா பத்தியுமா தான் இருக்கு! இத்தனைக்கும் ஏன்??  ஹாஸ்பிட்டல்ல மூச்சி தெணறிட்டிருக்குற நெலமையிலையும் ரிசப்ஷன்ல சன்டீவிய போட சொல்லும் அளவுக்கு அதிமுக்கிய நடைமுறை பழக்கமாக மாறிடுச்சு!  இலங்கைக்கு எதிரா ஓட்டு போட்ட நாடு எதுன்னு கேட்டா பதில் வருமா??? ஆனா சீரியல்களின் எபிசோட் முதல் அதில் உள்ளவர்களின் பெயர் வரைக்கும் செம அத்துபடி நமக்கு! இந்த பதிவினூடாக காலைல பத்துமணில இருந்து ஆரம்பிச்சு நைட் 11 மணி வரைக்கும் கொலையா கொல்லும் மெகா சீரியல்ஸின் மொக்க விஷயங்களை நாமும் கொஞ்சம் கொலையா கொல்லபோறோம்!

நன்றி
அடுத்தபதிவில் சந்திக்கலாம்..
தொடரும்.. மலரும்... முற்றும்... பூக்கும்...  சாகும்...

ஹி..ஹி..ஹி.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு முட்டைல ஆசிட்ட மிக்ஸ்
பண்றீங்கோ?!! பின்ன என்ன? மிஞ்சி போனா ஒரு கல்யாணம் 8 மணி நேரத்துல நடந்துடும்! ஆனா இவனுங்க காட்டுற கல்யாண வீடாகட்டும் எழவு வீடாகட்டும் எல்லாமே மாசக்கணக்குல  நடக்குது! அபின்னு ஒரு அக்கா 2 கொழந்தையையும் பாட்டி ஆகுற வரைக்கும் கோலம் போடுறத விடாது போலனு செமையா பயந்தே போயிட்டேன்! ஒருவழியா போயிட்டாக! இப்ப கஸ்தூரி அக்கா தான் விடாது தொறத்துது!

சரி சீரியல்ல இருக்குற மொக்க விஷயத்த பாக்கலாம்! :

 •  ங்க பக்கத்துவீட்டு  பேச்சியம்மா, கண்ணாத்தா கூட கல்யாணத்துக்கு பொறவு சுடிதார்ல கலக்குதுங்க! ஆனா சீரியல்ல வர பக்கிங்க மட்டும் மொதல்ல மாடர்ன்னா இருக்குங்களாம்... கல்யாணம் ஆய்ட்டா சேல மட்டும் தான் போடுவாங்களாம்! எப்ப பா திருந்த போறீங்க??? அய்ய்யோ அய்யோ....
 • ருப்பு, வெள்ள தான் இப்ப இருக்குற ட்ரென்ட்!   ஆனா பாருங்க! கருப்பா இருக்குற ஆளையெல்லாம் போட மாட்டானுவ! வெயிலுக்கு காட்டாம வளத்த வெள்ளச்சிக்கு கருப்பு பெயின்ட் அடிச்சி விடுவானுவ! எதுக்குன்னு கேக்குறீங்களா???? 1000வது எபிசோட்க்கு பொறவு   ஒரு ட்விஸ்ட் வைக்கதேன்! பெயின்ட் முகக்ரீம் கம்பெனிக்கு செம வெளம்பரம்! வாழ்க வளமுடன்
   
 • தென்ன மாயமோ தெரியல! மந்திரமோ புரியல! ஒட்டுமொத்தமா எல்லா அம்மணிகளும்  மாமியார்கிட்ட ரொம்பதேன் பம்முதுங்க! அதே மாதிரி ஒன்னு விடாம எல்லா சீரியல்ஸ் அத்தைகளும்  வில்லியாவே இருக்காங்க! கொட்டோ கொட்டுன்னு மழ பெய்யும் போது மாமியார் வீட்ட விட்டு அனுப்புறதும்! இவுக எதையும் தட்டி கேட்காம இருக்குறதும், மாமியாரின் திட்டுக்களை "தேன் வந்து பாயுது காதினிலே"ங்குற கணக்கா கண்டுக்காம இருக்குறதும்............. சரி சரி இதெல்லாம் சீரியல்ல பாத்தாதான் உண்டு ;-)
   
 • துல பெரிய கொடுமை என்னான்னா  ரோட்ல மயக்கம் போட்டு ஒருத்தன் விழுந்தா கூட "எனக்கென்ன போச்சுன்னு" சொல்லும் மனிதநேயம் நிறைந்த நம்மாளுங்க  சீரியல் ஆத்தாக்களின் பொய் அழுகையை "ஐய்யோ பாவமே, இப்படி ஆச்சே! ச்சே! இப்படியெல்லாமா கொடும நடக்கும்"னு லைவ் கமென்ட்ரி கொடுக்குறது பார்த்தா...... ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவேமுடியாது! (பலருக்கு இரக்க குணம் உண்டு என்பதை சீரியல் பாக்கும் போது தான் தெரியுது!)
 • விங்க அறுக்குறதே தாங்கமுடியலன்னு செவத்துல முட்டிட்டிருந்தா..... ஹிந்தி டப்பிங் சீரியல் மூலமா  அறுக்காம நேரடியாவே சாவடிக்கிறாய்ங்க! அடிக்கடி டூயட் சாங்க் வேற!  ஒரு ரியாக்‌ஷன்க்கே ஒரு எபிசோட் ஓட்டிடுறாய்ங்க! தெய்வமே என்னைய காப்பாத்து!
 • நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?!  உருது,அரபில பேசலையே?!"ன்னு சொன்னாங்க!  இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு மூளைய தட்டி எழுப்பிட்டிருக்கும் போதே "ஆமா..... உங்க(?????????!!!) தர்கால பேய்,பைத்தியம்லாம் தெளிய வைக்கிற சக்தி இருக்காம்ல?!  உண்மையா?ன்னு ஒரு அடுத்தடுத்த கேள்வி  கேட்டா!  
  உனக்கு எப்படி இந்த அளவுக்கு அறிவு வந்துச்சுன்னு கேக்கும் போது தான் பயபுள்ள சொல்லுது... டெய்லி நாதஸ்வரம்,தபேலா,கித்தார்  போன்ற ஒலக பிரசிதிப்பெற்ற காவியங்களை பாத்திட்டிருக்கான்னு! 

நம்ம கலைஞர் சரியாதான் யோசிச்சு  எலவசமா  கலர்  டீவி கொடுத்திருக்காரு! அதனாலேயே குட்டீஸ்க்கும் பெரிசுகளுக்கும் நடக்கும் ரிமோட் சண்டை இப்பலாம் இல்ல,நெஹி,லேது!  முன்னலாம் சொந்தக்காரங்க  வீட்டுக்கு சாயங்காலமா போகும் வழக்கம் இருந்துச்சு! அம்ம்ம்ம்ம்ம்ம்மாடி இப்பலாம் சாயங்காலம் 6 டூ பத்து திருடன் வீட்டுக்குள்ள வந்தாலும் கண்டுக்க மாட்டாய்ங்க! நாம போனாவா வாங்கன்னு சொல்லி உபசரிச்சுட போறாங்க?!!

பொழுது போக்குக்காக ஏற்படுத்திக்கொண்ட விஷயங்கள் பலவற்றிற்கும் நாம் அடிமையாகிவிட்டது போல்  தான் இந்த சீரியல்களும்!  சரியான மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கூடியவிரைவில்  சைக்கோக்கள் வீட்டில் உருவாவது கேரண்டி!

சீரியல்ஸின் உன்னத உயர்நோக்கு கொள்கைகள் ஏதேனும் விடுபட்டிருப்பின்  மன்னிச்சூ மன்னிச்சூ மன்னிச்சூ!!!! மொக்கை  விமர்சனங்களை வரவேற்கப்படுகின்றன! குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து துரதிஷ்ட்டசாலிகளுக்கு பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை  டீவிடியும், முகவையின் விடிவெள்ளி ரித்திஷ் குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும்! ஹி..ஹி..ஹி..

டிஸ்கி: குட்டிசுவர்க்கத்தில் இருந்த ப்ளாக்ஸ்பாட்டை தூக்கியாச்சு! அந்த இடத்தில் .com மாத்தியாச்சு!

,

சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல  எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. இன்னொருத்தர் மசாலா மிக்ஸ்ங்குறாரு.. நானும் ரொம்ப நாளா யோசிச்சேன்.. ஒன்னும் சரிபட்டுவரல (ப்ளாஸ்க்ல இருந்தா தானே டம்ளர்க்கு காப்பி வரும் ஹி..ஹி..ஹி..)  அருசுவை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு சகலகலா வள்ளி வனிதா அக்காவை பத்தி தெரியாம இருக்காது. வனிதா அக்காவை தெரிஞ்ச யாருக்கும் 'சொல்ல விரும்பினேன்' பத்தி தெரியாம இருக்காது. அன்றன்றைய நாளில் நம் மனதில் உதித்த எண்ணங்கள், சந்தித்த மனிதர்கள், நடந்த காமெடிகள், ஊர்வம்பு, அரசியல் என சொல்ல விரும்பினேன் தலைப்பின் கீழ் சுவாரசியமான அரட்டை போகும்!  நானும் அதையே கப்புன்னு புடிச்சுக்கிட்டேன் :-) இனி இந்த தலைப்பின் கீழ் நானும் சொல்ல விரும்புவதை சொல்ல போறேன்! (ப்ளாக்ல சொந்த விஷயம்லாம் எழுதாதீங்கன்னு யாரும் போர்கொடி தூக்கிட்டு வந்துடாதீங்கப்பா... நமக்கு இந்தளவுக்குதேன் வரும்! என்னன்னா.... எப்படின்னா..... சுருக்கமா சொல்லணும்னா... சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ.... அவ்வ்வ்வ்வ்)

புன்னகை சிந்தி அன்பை அள்ளுங்க! :
எங்க வீடு ஊருக்கு வெளியே இருப்பதால் எது வாங்க வேண்டும் என்றாலும் டவுன்க்குதான் வரணும். சேர் ஆட்டோ நெஹி... சோ மினிபஸ்தான். எப்பவும் செம நெரிசலா இருக்கும்! 15 நிமிஷம் பயணப்படும்  எனக்கே செம எரிச்சலா இருக்கும்! அப்ப ட்ரைவருக்கும் கண்டாக்கருக்கும் ஹி..ஹி..ஹி.. கன்டக்டருக்கும் சொல்லவா வேண்டும்?  மெயின் ஸ்டாப்க்கு முன்னாடியே நம்ம வீடு! (அப்ப எனக்கும் சொத்துல பாதிய தான்னு கேட்டுடுவாய்ங்களோ?? நமக்கென்ன கவல? ஹவுஸ் ஓனர்ல வருத்தப்படணும்)  எப்பவும் ஒரு ஆளுக்காக நிறுத்துவதில்லை. ஆனா நாமதான் செம சோம்பேறியாச்சே! சில முறை கெஞ்சிபார்த்து நொந்துட்டேன். ம்ஹூம்... கடமையில் கண்ணா இருந்தாரு!  3 முறை தொடர்ச்சியாக என் வீட்டருகில் ஒரு பெண்மணி கை அசைத்து பஸ்ஸில் ஏற அந்த கேப்பில் நானும் டக்குன்னு இறங்கிட்டேன். இறங்குவதற்கு முன் ட்ரைவரிடம் "ரொம்ப நன்றிங்கண்ணா" என மகிழ்ச்சியோட சொல்ல மறக்கவில்லை மூன்று முறையும்!  இப்பlல்லாம் எங்க ட்ரைவர் அண்ணா என் வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டுடுவார். கன்டக்டர் தம்பிக்கும் கரேக்ட்டான சில்லரையை (புன்னகையோடு) கொடுத்து அவர் வேலையை சுலபமாக்குவதால் அவரும் நம்ம தோஸ்த் ஆய்ட்டார். ட்ரைவர் அண்ணாவே மறந்தாலும் கன்டக்டர் தம்பி வேகமா விசில் அடிச்சு வீட்டு வாசலில் பஸ் நிறுத்த வச்சுடுவார். நாம்(ன்) செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட  எந்தஅளவுக்கு அன்பும் மரியாதையும் பெரிய அளவில் கிடைக்கும்னு உணர்த்திய விஷயம் அது!
 


மன்னிப்புகேட்டா மானம் போகுமா? லூஸ்ல விடுங்க பாஸு:
பத்து நாட்களுக்கு முன் அக்காவுக்கும் எனக்கும் செம சண்ட! எப்படியெல்லாம் வார்த்தை விட்டால் ஒருவர் மனதால் நோகுவார் என்பது அக்காவுக்கு கைதேர்ந்த விஷயம். என்ன தான் நம்ம பக்கம் நியாயம் இருந்தாலும் வாய் தொறக்கவே முடியாது!  சண்டையின் உச்சமாக "என் வீட்டு வாசப்படி மிதிச்சுடாத"ன்னு சொல்லிட்டு போயிட்டா. நானும் பத்து நாளா யோசிச்சேன். சரி வாசப்படியை மிதிக்காம தாண்டி போய்டலாம் இல்லைன்னா ஏணிப்படி மூலமா பால்கனி வழியா வீட்டுக்கு போய்டலாம்னு முடிவு பண்ணி போனேன். செய்யாத தப்புக்கும் அக்காவிடம் மன்னிப்பு கேட்டேன். அப்பறம் என்ன? அக்கா பயங்கரமா பீல் பண்ணா... மானம் போகும்னு கவலப்பட்டா கஷ்ட்டப்பட்டு சமைக்கணுமே? அவ்வ்வ்வ்வ்வ்...
 இப்பலாம் டீயை தவிர வேற எதுவும் வீட்டில் செய்றதில்ல ஹி...ஹி...ஹி.. உக்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு சாப்டுறது எவ்வளவு சொகமான அனுபவம் :-) இதனால என்ன சொல்ல வர்ரேன்னா (போதும்.. என்னன்னு புரியுது... நீ சீக்கிரம் முடிக்கப்பாரு) போகும் போது என்னத்த கொண்டுட்டு போகப்போறீங்க? விரோதமும், மனகசப்புகளையுமா? லூஸ்ல விடுங்க பாஸு!

எங்கே போனார் அந்த பதிவர்?? :
பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதலில் ஹைதர் அண்ணாவை தான் அண்ணா என உரிமையுடன் கூப்பிட்டேன். அவரும் என்னை தங்கை எனவே அழைக்க ஆரம்பித்தார்(நாங்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என அப்போது தெரியாது) அதை பார்த்த பதிவர் தொப்பி தொப்பி  "எனக்கும் இப்படியாக உங்களை அக்கா அல்லது தங்கச்சி என சொல்ல ஆசையாக இருக்கு" என சொன்னார். அன்றிலிருந்து அவரும் எனக்கு சகோதரர் ஆனார்.  நான் ப்ளாக் எழுதாமல் இருந்த 6 மாத இடைவெளியில் மறக்காமல் அடிக்கடி பின்னூட்டம் மூலம் நலம் விஷாரித்து ஒரு உண்மையான அண்ணனாகவே நடந்துக்கொண்டார்(என்னால் தான் பதில் போட முடியவில்லை). எப்போதும் நம் எண்ணங்களோட ஒத்துபோகாதவர்களின் பேச்சு, எண்ணம், ரசனை, நடவடிக்கைகளை கண்காணிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும் (உளவியலாம்). இவர்கள் எப்போதும்  தர்க்கரீதியாய் எவரிடத்திலும் பேசக்கூடிய திறமைபெற்றவர்கள். தொப்பி தொப்பியும் அப்படிதான்.  அவரின் பல பதிவுகளில் நடக்கும் விவாதசண்டை செமையா இருக்கும். பதில்களுக்கு அவர் கொடுக்கும் பதிலடிகளும் செம நெத்தியடி! நச் தான்!  அண்ணாவின் தியேட்டர் பற்றி, ஆம்வே பற்றி, பணம் பறிக்கும் விளம்பரம் பற்றி, மதத்தின் பெயரால்  நடத்தப்படும் கொள்ளை பற்றிய சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய  பதிவுகள் என்றுமே மறக்க முடியாதவை!   நான் ரீஎன்ட்ரி கொடுப்பதற்கு ஒரு வாரம் முன் கடைசியாய் பதிவு போட்டார். அதன் பின் எப்பதிவும் காணவில்லை. சில மாதங்களுக்கு முன்  என் பதிவுக்கு அவரின் ஓட்டு பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் மீண்டும் ஏமாற்றமே! அவர் எழுத வரவில்லை! ஏன் ஒதுங்கிவிட்டார் என தெரியவில்லை! ஒரு வாரமாக சாட்டில் மாட்டிக்கொண்ட  அநேகரிடம் தொப்பி தொப்பியை தெரியுமா என கேட்டால் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் அண்ணாவை பாராட்டியும் அவரின் பதிவுலக ஒதுங்கலை நினைத்து வருத்தமும் தெரிவித்தனர். தரமான எழுத்தும், நடுநிலையான தன்மையும் கொண்ட பதிவர்கள் நெடுநாள் அருகில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய நல்ல எண்ணங்கள் நம்மை விட்டு நீங்காது என்பதற்கு சான்று அது!  அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் மீண்டும் ப்ளாக்கில் எழுத வைக்க  முயற்சி செய்யுங்க! திறமையானவங்க ஒதுங்கி இருப்பது வருத்தமா இருக்கு :'( 


இம்புட்டுதூரம் வரைக்கும் பொறுமையா படிச்ச ஜீவன்களுக்கு(ஐய்யோ பாவம்!) என் நன்றிங்கோ
கெளம்புறேனுங்க (ஆமி-நோ நோ இதுக்கெல்லாம் சின்ன புள்ள மாதிரி அழப்படாது! மக்கள்ஸ்- அடபக்கி! கதற கதற அறுத்துட்டிருந்தா அழமாட்டாகளா???)

, , , , ,

எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது.

எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்!

உன் வீட்டின் செல்ல மகாராணியாய் நான். என் அப்பா அம்மாவின் செல்ல பிள்ளையாய் நீ என ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் வீட்டில் செய்த விளையாட்டுக்கு அளவெங்கே?

உன் அம்மாவின் மடியில் தலைவைத்து தூங்கும் போது வெளியில் பொறாமைபடுவதாக நீ காட்டிக்கொண்டாலும் அதை ரசித்தாய் என்பது எனக்கு தெரியும் உன் கண்ணாடியாய் நான்!

என் ஒருவரி சொல்லை வைத்து நான் நினைத்ததையும் நினைக்க போவதையும் சொல்லிவிடும் என் மனசாட்சியாய் நீ!

 ஒளிவு மறைவென்பது நம் அகராதியில் எங்கேயிருந்தது? ஒருவருக்கொருவர் டைரியாய் நாம்!

உன் பிடிவாதத்தை ரசிக்கும் திறன் உனக்கு மட்டுமே தெரியும். எதுவெல்லாம் என் குறை என சொல்வேனோ அவையெல்லாம் ரசிக்கிறாய். எவையெல்லாம் என் சிறப்பு என பெருமைப்பட்டுக்கொள்வேனோ அவையெல்லாவற்றையும் மட்டம் தட்டி என் கோபத்தை தூண்டுவாய்!

பருவ வயதில் நம் நட்பு அடுத்த பரிமாணமாய் காதலை நோக்கி பயணிக்க எத்தனித்த போது நட்பு மட்டுமே நம்மை கடைசிவரை ஒன்றிணைக்கும் என்று முடிவெடுத்ததால் சலன பாதையை எளிதாகவே கடந்துவிட்டோம். பேசி தீர்க்க முடியாத பிரச்சனை உலகில் இல்லை என நீ அடிக்கடி சொல்வதன் அர்த்தம் அன்றுதான் தெரிந்தது! மனதிலேயே பூட்டியிருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்றும் சாகாமல் சாகும் வித்தையை இருவரும் கண்டிருப்போம்!

பாடம் சொல்லிகொடுக்க அம்மா ஏற்பாடு செய்த பீஸ் வாங்காத டியூசன் மாஸ்ட்டர் நீ! அன்றைய நாளின் என் மேல் உள்ள உன் கோபத்தை என் தலையில் அடித்து தீர்த்துக்கொள்ளும் "2 மணி நேர எதிரி" நீ!  காலேஜ்க்கு என்னை அழைத்துச்செல்லும் டூவீலர் ட்ரைவர்  நீ?  யார்யாரெல்லாம் என்னை சுற்றி இருக்க வேண்டுமென தீர்மானித்த என் பாதுகாவலன் நீ!

நீ என்ன மார்க்கெட்டில் இருக்கும் கத்திரிக்காயா? அதை நினைத்ததும் வாங்கி விட முடியும்! நீ மண்ணில் இருக்கும் வைரம்! உன்னுடன் பழகுவது அனைவருக்கும் எளிதான விஷயமாய் இருக்க கூடாது... நிறைய பேர் ஏங்க வேண்டும், தகுதியானவருக்கு மட்டுமே நட்பு கிடைக்க வேண்டும்  என மொக்கையான தத்துவத்தில்  என் தனித்தன்மையை காத்தவன் நீ! :-)

நம்மை ஒரு சேர பார்க்கும் யாவருக்கும் வரும் சந்தேகப்பார்வை சர்வசாதாரணமானது. அது தெரிந்தும் "நமக்கென்ன?" என என் கைபிடித்து இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து போவாய்... புன்னகையுடன் நான் "அதானே??!!"

என் அன்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எல்லாரை விடவும் அதில் நான் தனித்துவமாய் தெரிய வேண்டும் என்பாய்! புது ப்ரன்ட் கிடைச்சுருக்குன்னு சொன்னால் "கூட்டத்தில் கோவிந்தா போட நான் தாயார் இல்லை"என கோபித்துக்கொண்டு போவாய்! உன்னை எடை போடுவது எனக்கு எளிதான விஷயம் அல்ல !

என்னதான் உன் பக்கம் நியாயம் இருந்தும் சண்டை போட்டு கொண்டு போன சில மணி நேரங்களில் என் செல்போனுக்கு உன்னிடமிருந்து மெசேஜ் வந்திருக்கும். "எனக்கு கத்தி அழுகணும் போல இருக்கு. ஆபிஸ் என்பதால் முடியவில்லை"

நம் திருமணத்திற்கு பின் நம் நட்பு நீடிக்க வாய்ப்பு குறைவாகவோ அல்லது முற்றும் இல்லாமல் இருக்கும் என்பதை நாம் முன்பே பேசி அதற்காய் நம் மனதை பக்குவப்படுத்தி இருந்தாலும் நமக்குள் பிரிவு என்ற பயம் பலநேரங்களில் அழுகையை தந்திருந்தது. யாருடைய ப்ரார்த்தனையோ என்னை புரிந்துக்கொண்டவன் என்னவனாகவும், நம் நட்பை நேசித்தவள் உன்னவளாகவும் கரம் பிடித்தோம்.  ஆனாலும் சில மனக்கசப்புகளை தவிர்க்க விருப்பப்பட்டு இடைவெளி உருவாக்கினோம்.  என் மேல் உனக்கான உரிமைகளை விடுவித்துக்கொண்டாய். உன் மேல் உள்ள அக்கறையை உன் மனைவிக்கு ஒப்படைத்துவிட்டிருந்தேன்.

பிரசவ வலியில் துடித்த போது எனக்கு தைரியம் சொல்ல அம்மா ரொம்ப மெனக்கெட்டார். நீ மட்டும் என்னுடன் சேர்ந்து அழுதுக்கொண்டிருக்கிறாய். "அவ கத்துறத பாக்க முடியல! வலிக்காம சிசேரியன்  பண்ணிடுங்க" என டாக்டரிடம்  சொன்ன படுபாவி நீ!  "நல்லாயிருப்பீயா நீ???" என என் கையில் கோர்த்திருந்த உன் விரல்களை முறுக்கிவிட்டது இன்றும் இனிக்கும் தருணங்களாக ! இதை நினைக்கும் போதே சிரித்துக்கொள்கிறேன் :-) என் குழந்தையை முதலில் வாங்கியது நீதான் என்று நினைக்கிறேன். மயக்கம் தெளிந்து இமை திறக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் என்னவனுக்கு உன் மடிக்கணினி மூலமாக என் குழந்தையினை காண்பித்து வர்ணித்துக்கொண்டிருந்தாய். 6 மணி நேரத்திற்கு முன்  நான் வலியில் கத்தும் போது "இரு லாப்டாப் எடுத்துட்டு வரேன்" என  காரில் இருந்து நீ இறங்கி போன போது "என்னை விட உனக்கு வேலைதான் முக்கியமா??" என கோபத்தில் நான் கத்தியது கண்ணில் வந்து நிற்க கண்ணீரை இறக்கியது! சிறு சிறு விஷயங்களால் பெரிய பெரிய ஆச்சர்யங்களை தருபவன் நீ..... மறுபிறவி எடுத்து வந்த பெண் முதலில் பார்க்க நினைப்பது குழந்தையையும் கணவனையும் தான் என்பதை எப்படி தெரியும் உனக்கு? 

நீ வீட்டுக்கு வந்தாலே காதில் பஞ்சடைத்துக்கொள்ள தோணும். உன் மருமகனின் உடலில் காணும் கொசு கடித்த ஒவ்வொரு சிவப்பு புள்ளிக்கும் 100 வார்த்தைகள் வசைகளாக  எனக்கு  கிடைக்கும்! கைகளால்  முடியாததை வார்த்தைகளில் காட்டுவாய் என தெரியும். என் மடியில் அவன் இருந்த நாட்களை விட உன் தோள்களில் இருந்த நாட்களே அதிகம். என் கைபிடித்து அவன் நடந்த நாட்களை விட உன் பைக்கில் ஊர் சுற்றிய நாட்கள் அதிகம். என் மகனாய் பிறந்ததால் அவனுக்கும் உன் விலைமதிப்பில்லாத அன்பு கிடைத்துவிட்டது! அவனும் அதிஷ்ட்டசாலிக்கெல்லாம் அதிஷ்ட்டசாலி...

இரத்த சம்மந்தமே இல்லாமல் நட்பினால் இணைந்த நம் உறவு என்னும் அற்புத பொக்கிஷம் இதோ அடுத்த தலைமுறையும் எடுத்துக்கொண்டது... நம் குழந்தைகளும் நண்பர்களாக!

மனம் முழுவதும் சந்தோஷங்கள் பரவ உன் தோளில் தலை சாய்த்து நம் குழந்தைகளின் விளையாட்டுக்களை ரசித்துக்கொண்டிருக்கிறேன்

"அம்மா...அம்மா.... எந்திரி! எனக்கு காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சு!"-மகன் எழுப்புகிறான்.
அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்... , ,முன்னெச்சரிக்கை :அப்பறம் முன்கூட்டியே சொல்லிக்கிடுதேன். எனக்கு மத்தவங்கள மாதிரியெல்லாம் இரக்க குணம் சத்தியமா சத்தியமா சத்தியமா இல்லைங்க. பரிதாபப்படுவேன் அவ்வளவுதேன் ஹி...ஹி...ஹி... சோ அங்காங்கே கோபப்படுத்தும் சில விஷயங்கள் இருந்தால் மன்னிச்சூ!!!!!!!!!!!

நேத்து தான் ஒருத்தர் என் பதிவுலகின் அடுத்த புரட்சி-அடுத்தவிங்க சரக்கு லிங்க் காமிச்சு அதில் சில சந்தேகங்களை கேட்டிருந்தார் ஹி..ஹி..ஹி.. (ஆனாலும் உனக்கு ரொம்ப லொள்ளுலே... அதுவே மொக்கபதிவு! அதில கேள்வியா??????) அப்ப தான் நியாபகம் வந்துச்சு... அடுத்தவங்க சரக்கை  நம்ம சரக்கா மாத்தி நம்ம சரக்கா கொடுக்குறதா வாக்கு கொடுத்தோமே.. நிறைவேத்தாம இருக்கோமேன்னு (நீ அரசியல்ல தெகிரியமா நொழையலாம் ஆமி:-)

, ,