ஆவலா எதிர்பார்த்திட்டு இருந்த நோன்பு வந்துருச்சு.....நோன்புன்னு சொன்னாலே சட்டுன்னு நெனப்புக்கு வரது நோன்பு கஞ்சி தான்.  வருஷத்துக்கு ஒரு முறை தான் கிடைக்கும் என்பதாலோ என்னவோ ஒரு மாசம் முழுக்க தினமும் குடிச்சாலும் சளிக்காது.


எங்க ஊர்ல  நோன்பு கஞ்சி வாங்க போகணும்னு சொன்னாலே மொதல்ல பெரிய க்யூ தான் ஞாபகத்துக்கு வரும். ஆனாலும் அசர மாட்டோம்ல? எப்படியும் வாங்கியே தீரணும். காரணம்  என்னன்னே  விவரிக்க முடியாத சுவை, மணம், அதையும் மீறி அதிலுள்ள சத்துக்கள் தான்.  சாயங்காலம் ஒரு கப் குடிச்சாலே போதும் எனர்ஜி வந்த பீல் கிடைக்கும்!!!


ஒவ்வொரு ஊர்லையும் செய்யும் நோன்பு கஞ்சிகளின் செய்முறையும் சுவையும் வேறுபடலாம்.  சென்னையில்  இருந்த போதும் லக்னோல இருக்கும் போதும் நான் ரொம்பவே மிஸ் பண்ண விஷயத்துல எங்க ஊர் நோன்பு கஞ்சியும் அடக்கம்.  இத  சும்மாலாம் ஒன்னும் சொல்லல...   அடிச்சு கேட்டாலும் இத தான் சொல்லுவேன் :)  அப்பறம்  எங்க ஊர்ல நோன்பு கஞ்சி செய்றதுல பயங்கர எக்ஸ்பர்ட்  கிட்ட ஐஸ் வச்சு கத்துகிட்டு நானும் இப்ப அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுட்டேன் (வீட்ல உள்ளவங்க பாவம் தான்... வேற என்ன செய்ய? ஆயிரம் பேர கொண்டா தானே அரை வைத்தியனாக முடியும் ; ). பட் நீங்க பயப்படாம செய்யலாம். ஏற்கனவே பல முறை செஞ்சு பல பேரை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு கிடைத்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த குறிப்பு குட்டி சுவர்க்கத்தில் வெளியிடப்படுகிறது :))


எங்க ஊர் நோன்பு கஞ்சி இப்படி தான் செய்வாங்க...!!

தேவைப்படும் பொருட்கள்:-

 • பாஸ்மதி or பச்சரிசி- 100 கிராம்
 • கடலைபருப்பு-50 கிராம்
 • பாசிபருப்பு-50 கிராம்
 • வெந்தயம்- 2 ஸ்பூன்
 • நெய்- 1 மேசை கரண்டி
 • தேங்காய் எண்ணெய்- 1 மேசைகரண்டி
 • பட்டை-2
 • ஏலக்காய்-3
 • கிராம்பு-3
 • அன்னாசிபூ-2
 • பிரிஞ்சி இலை- 1
 • வெங்காயம்-2
 • தக்களி-2
 • இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
 • புதினா- கால் கப்
 • கொத்தமல்லி-கால் கப்
 • கறிவேப்பிலை- 1 கொத்து
 • பச்சை மிளகாய்-3
 • கேரட்- 1
 • முந்திரி- 10
 • பெரிய பூடு- 15
 • தேங்காய் பால்- 1 கப்
 • உப்பு- தேவைக்கு

செய்முறை :-
 • பாஸ்மதியை பாதியாக குருணை போல் மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும்.
 • அரிசி,கடலைபருப்பு, பாசி பருப்பு, வெந்தயம் தனிதனியாக ஊற வைக்கவும்.(அரிசியை தவிர அனைத்தும் 3 மணி நேரம் ஊற வேண்டும். அரிசிக்கு 1/2 மணி நேரம் போதுமானது)
 • வெங்காயம் நீள வாக்கில் நறுக்க வேண்டும். தக்களியை நான்காக நறுக்கவும். கொத்தமல்லி புதினாவை காம்புடன் சேர்த்து நறுக்கவும். கேரட்டை மெல்லிய அரைவட்டமாக நறுக்கவும்.
 • அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
 • பின்னர் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ, பிரிஞ்சி இலை ஒன்றன் பின் ஒன்றன்றாக சேர்க்கவும்.
 • பட்டை முறிந்ததும் முந்திரி, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
 • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 • அதன்பின் தக்காளி,புதினா,கொத்தமல்லி,பச்சை மிளகாய், கேரட்,பூடு  சேர்த்து கிளறவும்
 • தேவைக்கு தண்ணீர் (மதிப்பாக 1 1/2 லிட்டர். அரிசிபருப்பு சேர்த்த பின் பதம் பார்த்து நீர் தேவைப்பட்டால் சுடுநீர் சேர்த்துக்கொள்ளவும்)    மற்றும் உப்பு சேர்த்து  கொதிக்க விடவும்.
 • பின் ஊற வைத்த அரிசி,கடலைபருப்பு,பாசிபருப்பு,வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். 
 • அடிக்கடி கிளற வேண்டும் .இல்லையேல் அடி பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. வெந்ததும்  இறக்க போகும் 5 நிமிடத்திற்கு முன் தேங்காய் பாலை சேர்த்து கிளறவும். 

அவ்வளவுதேன்..... அனைவரும் சைவ கஞ்சியைதான் விரும்புவாங்க. கைமா சேர்ப்பதாக இருந்தா இஞ்சிபூண்டு சேர்த்ததும் கைமா சேர்த்து சுருள வதக்கணும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியுடன் பக்கோடா அல்லது கடலைவடை நல்ல காம்பினேஷன்.   எங்க வீட்டு குட்டீஸ் எல்லாருக்கும்  நோன்பு கஞ்சியில் உளுந்த வடை,பஜ்ஜியை சின்ன சின்னதா கட் பண்ணி போட்டு  ஊற வச்சு கொடுக்கணூம் :)

உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

இந்த குர் ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை)பிரித்துக்காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்குரான் 2:185


, , ,

94 comments:

 1. ஆமாங்கோ சூப்பரா இருக்கும்!
  அதில சிக்கன் போட்டும் செய்வாங்கதானே? நாங்கெல்லாம் கோயில்திருவிழா எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு வீட்டில தெரியாம திருட்டுத்தனமா கஞ்சி குடிச்சவய்ங்க!
  :-)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்(பிரியாணி கிடைக்காது என்றாலும்) !! :-)

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  முதல் முறையா நோன்பு கஞ்சியை மிஸ் பண்றேன். ரொம்ப கவலையா இருக்கு..

  :( :( :(

  ReplyDelete
 4. நமக்கு இதுக்கெல்லாம் வழியில்ல. ஒரே தடவைதான் நான் சாப்பிட்டு இருக்கேன்.

  ReplyDelete
 5. உங்களுக்கே . உங்களுக்கே. உங்களுக்கே.

  தொழுகை

  ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

  கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

  ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

  அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

  இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

  ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

  தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

  ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

  உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

  இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

  உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

  தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

  நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

  உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

  பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

  "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

  இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

  தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

  இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

  தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

  நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

  தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.


  தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.  வாஞ்சையுடன் வாஞ்சூர்.

  ReplyDelete
 6. //ஒரு மாசம் முழுக்க தினமும் குடிச்சாலும் சளிக்காது. ///

  ஆனா சளி பிடிக்கும் ஹி ஹி குளிர்ச்சி தானே

  ReplyDelete
 7. சலாம் சகோ
  நாங்க நோன்போடு இருக்கோம் படித்துவிட்டு நப்சை
  அடக்க முடியல ...இங்கே (MALAYSIA) நோன்பு காஞ்சி மாதிரி ஒன்னு கிடைக்கும் ..இன்ஷா அல்லா ஒரு நாள் இதை செய்து பார்க்க வேண்டியது தான் .....

  இன்று முதல் நோன்பு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 8. ஆஹா..
  இந்த கஞ்சிக்கும் பிரியாணி வாசனைவரும்,
  நானும் ஒரு முறை குடித்திருக்கிறேன்..

  ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அவ்வ்வ்வ்வ் கஞ்சி போச்சேஏ:)).

  //நோன்புன்னு சொன்னாலே சட்டுன்னு நெனப்புக்கு வரது நோன்பு கஞ்சி தான்//

  எனக்கும்தான், வாழ்வில் ஒரே ஒருமுறைமட்டும் பள்ளிவாசலில் இருந்து கிடைத்துக் குடித்திருக்கிறேன்.... ஆஆஆஆஆஆ அதன் சுவை இப்பவும் நாக்கில இருக்கு.

  நல்ல ரெசிப்பி.

  ReplyDelete
 10. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு எனது ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ரமலான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. கஞ்சி அருமை.

  //எங்க ஊர்ல நோன்பு கஞ்சி வாங்க போகணும்னு சொன்னாலே மொதல்ல பெரிய க்யூ தான் ஞாபகத்துக்கு வரும். ஆனாலும் அசர மாட்டோம்ல? //

  எதுக்குத்தான் க்யூ இல்லை?

  அதானே....சொல்றதை பார்த்தால் ரெண்டு மூனு சுற்று வாங்கின மாதுரி தெரியுது.

  ReplyDelete
 13. எனக்கு இந்த சைவ நோன்பு கஞ்சின்னா ரொம்ப பிடிக்கும்.உங்க செய்முறையில் செய்து பார்க்கிறேன்...நோன்பு வாழ்த்துக்கள்!! நாளைக்கு தானே நோன்பு ஆரம்பம்??

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

  சகோதரி,

  மாஷா அல்லாஹ்...மிக அழகா எழுதிருக்கீங்க...ஜசாக்கல்லாஹு க்ஹைர்...

  அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரமலான் மற்றும் பெருநாள் வாழ்த்துக்கள்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா

  ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அருமையான செய்முறை சரியான நேரத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.ஆமினா.

  நோன்பு கஞ்சி : ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் விதம்..!

  நான் அதிராம்பட்டினத்தில் பள்ளிப்பருவ காலத்தில் (அப்போது அங்கே சுமார் 14 பள்ளிகளில் கஞ்சி காய்ச்சுவார்கள்) நண்பர்களாக அனைத்து மஸ்ஜிதுகளுக்கும் நோன்பு திறக்க செல்வதும்... எந்த பள்ளியின் நோன்பு கஞ்சி,
  மசாலா மணம்...
  சுவை...
  அதிக இறைச்சித்துண்டுகள்...
  மற்றும் பல சமோசா, ரால் வாடா, சுண்டல் அயிட்டங்கள்...
  ஆகிய இவற்றில் எது 'டாப்#1' என்று நண்பர்களுடன் கலந்து பேசி மார்க் போட்டு... முதல் வாரமே விரைவாக ஒரு முடிவுக்கு வந்து,
  பின்னர் அந்த குறிப்பிட்ட பள்ளியில் அனைத்து நண்பர்களும் ஜமாவாக தொடர்ந்து அங்கே நோன்பு திறக்க செல்வதும்...

  ம்ம்ம்...

  அது ஒரு வசந்த காலம்...!

  கூப்பிட்டாலும் திரும்ப வராது..!

  சகோ.ஆமீனா..!

  இவ்வருட புனித ரமலானின் முதல் நோன்பினை எதிர் நோக்கியிருக்கும் தங்களுக்கும் நோன்பு நோற்கும் அனைத்துலக சகோதரர்களுக்கும்... இந்த அருட்கொடை மாதத்தில் அதிக நற்செயல்கள் செய்து பன்மடங்கு நன்மைகளை இறைவனிடம் டெபாசிட் செய்துகொள்ள எனது
  நல்வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 17. அழகான விவரணை& செய்முறை
  :-)


  காயல்பட்டினத்து கஞ்சியை பற்றி யாரிடமாவது கேட்கவும்!

  ReplyDelete
 18. ரமலான் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. ரமழான் வாழ்த்துக்கள் சகோ..

  ReplyDelete
 20. நோன்புக்கஞ்சி பிரமாதம் வர்ணனை அதை விட பிரமாதம்.படத்தி போடாமல் விட்டுட்டிங்க?

  ReplyDelete
 21. நோன்பு வாழ்த்துக்கள்............

  ReplyDelete
 22. ஸலாம் சகோ...ஊர் கஞ்சியா???...அதுக்கு இருக்குர டேஸ்டே தனிதான்...மறக்க முடியாது...

  ஆனா இங்க வந்து கடந்த இரண்டு வருஷமா கஞ்சிய மிஸ் பண்ணல....

  நம்ம ஜலீலாக்கா தயவுல கஞ்சி அரும்மையா ரூம்லையே செஞ்சு..திருப்தியா நோன்பு திறந்திட்டு இருக்கோம்..

  இந்த வருஷமும்,சூப்பரா முதல் நோன்புக்கே கஞ்சி செஞ்சாச்சு...

  ஊர் கஞ்சியோட டேஸ்ட கிட்டதட்ட மேச் பண்ணியாச்சு..

  இந்த வெஜ்’ன்னாலே ஒரே அலர்ஜி...
  சோ ஒன்லி நான்வெஜ் கஞ்சிதான்..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 23. உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.//

  வணக்கம் சகோ, உங்களுக்கும் எங்கள் இதயம் நிறைந்த ரமலான் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

  ReplyDelete
 24. நோன்புக் கஞ்சி பற்றி, இன்று தான் என் வாழ்வில் முதன் முதலாக அறிந்து கொண்டேன் சகோ.

  பகிர்விற்கும், செய்முறை விளக்கத்திற்ற்கும், நன்றி சகோ.

  ReplyDelete
 25. @ஜீ
  //அதில சிக்கன் போட்டும் செய்வாங்கதானே?//
  ஆமா சகோ.. சிக்கன்/மட்டன் கைமா போடுவாங்க :)
  //வீட்டில தெரியாம திருட்டுத்தனமா கஞ்சி குடிச்சவய்ங்க! //
  அந்த குரூப்பா நீங்க??? :) 1 ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் டீச்சர்க்கு தெரியாம சாயங்காலம் ப்ரண்ட்ஸோட நோன்பு கஞ்சி வாங்கிய ஞாபகம் வந்துச்சு :) ஆக நாங்களும் அதே குரூப்தான்... கூல் :)

  //வாழ்த்துக்கள்(பிரியாணி கிடைக்காது என்றாலும்) !! :-) //
  ஹா...ஹா...ஹா....
  பிரியாணி இல்லைன்னாலும் பரவாயில்லன்னு வாழ்த்து சொன்ன மனசுக்காக சீக்கிரமே குட்டிசுவர்க்கத்துல பிரியாணி விநியோகம் பண்ண ஏற்பாடு செய்துடலாம் சகோ :)
  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல!!!

  ReplyDelete
 26. @ சகோ பாஸித்
  வ அலைக்கும் சலாம் வரஹ்......
  //முதல் முறையா நோன்பு கஞ்சியை மிஸ் பண்றேன். ரொம்ப கவலையா இருக்கு..

  :( :( :( //
  அதுனால தான் உங்க கமெண்ட் மிஸ் ஆகாம வந்துருக்கு :) ஏன் கவல? சகோ ரஜின்ன பிடிங்க. அவர் தான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருக்காராம். என்னான்னு கேளுங்கோ :)
  ரமலான் வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 27. @பலேபிரபு
  //நமக்கு இதுக்கெல்லாம் வழியில்ல//
  அதான் வழி அமைச்சு கொடுத்தாச்சே :)) வீட்ல செய்ய சொல்லுங்க!!

  ReplyDelete
 28. @வாஞ்சூர் அப்பா
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
  அறிவியலோடு ஒன்றிய கட்டுரை. ஜஸக்கல்லாஹு க்ஹைர்

  ReplyDelete
 29. @ரியாஸ் அஹ்மத்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  //ஆனா சளி பிடிக்கும் ஹி ஹி குளிர்ச்சி தானே //
  ஏன் சளிக்கு உங்கள மட்டும் பிடிச்சுருக்காம்? :))
  வெந்தயம் போட்டுருக்குறதுனால குளிர்ச்சி தான்... ஆனாலும் இப்ப இருக்குற வெயிலுக்கு இதான் சரியா இருக்கும் :)

  //இன்ஷா அல்லா ஒரு நாள் இதை செய்து பார்க்க வேண்டியது தான் .....//
  இன்ஷா அல்லாஹ்...... அதான் மதனி பக்கத்துலையே இருக்காங்களே... சீக்கிரமா செய்துட்டு சொல்லுங்க :)

  வாழ்த்துக்களூக்கு மிக்க நன்றி சகோ. உங்களூக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. @கருன்
  ஆமா ஆமா... அதே தான்.... ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபக சக்தி ஆகாது :)
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 31. @அதிரா
  //அவ்வ்வ்வ்வ் கஞ்சி போச்சேஏ:)).//
  அதிரா வீட்டுக்கு தான் போகுதோ? :)
  மிக்க நன்றி அதி. செய்து பாருங்க நேரம் கிடைக்கும் போது :)

  ReplyDelete
 32. @பொ.முருகன்
  வாழ்த்துக்களூக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 33. @மாய உலகம்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 34. @அந்நியன்
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  ////எங்க ஊர்ல நோன்பு கஞ்சி வாங்க போகணும்னு சொன்னாலே மொதல்ல பெரிய க்யூ தான் ஞாபகத்துக்கு வரும். ஆனாலும் அசர மாட்டோம்ல? //

  எதுக்குத்தான் க்யூ இல்லை?//
  ஐ... என்ன இப்படி டக்குன்னு சொல்லிட்டேள்? எங்க ஊர்லலாம் ஏடிஎம் வந்ததுனால பேங்க்லலாம் ஈ ஓட்டிட்டு இருக்காங்கோ
  இந்த நாளைக்கு இந்த ஏரியா தான் வரணும்னு ரூல்ஸ் இருக்குறதுனால ரேஷன் கடக்காரங்களாம் ஹாயா இருக்காங்கோ
  ஆன்லைன் புக்கிங் பிரபலமானதுனால ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுண்டர்ல உள்ளவங்களாம் வேல இல்லாம ப்ரீயா இருக்காங்கோ....
  இப்ப சொல்லுங்க? நா சொன்னது சரியா தப்பா? :)

  //அதானே....சொல்றதை பார்த்தால் ரெண்டு மூனு சுற்று வாங்கின மாதுரி தெரியுது. //
  எல்லாரும் ஒரே குட்டைல ஊருன மட்ட தானே சகோ? நீங்க என்ன செஞ்சீங்களோ அத தானே உங்க சகோதரியும் செய்யும் :) எப்பூடி?? :)

  ReplyDelete
 35. @மேனகா
  எனக்கும் சைவ கஞ்சி தான் மேனகா பிடிக்கும். எங்க ஊர்லையும் பெரும்பாலும் சைவ கஞ்சி தான் செய்வாங்க. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. இன்று நோன்பு ஆரம்பிச்சுடுச்சு :)

  ReplyDelete
 36. @சகோ ஆஷிக் அஹ்மத்
  வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரல்லாத்துஹூ
  நன்றி சகோ

  ReplyDelete
 37. @ஆயிஷா அபு
  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமாந்த ரமதான் வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 38. @ஆயிஷா அபு
  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமாந்த ரமதான் வாழ்த்துக்கள் தோழி@ சகோ முஹம்மத் ஆஷிக் சிட்டிசன் ஆப் தி வேல்ட் :)
  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  //ஆகிய இவற்றில் எது 'டாப்#1' என்று நண்பர்களுடன் கலந்து பேசி மார்க் போட்டு... முதல் வாரமே விரைவாக ஒரு முடிவுக்கு வந்து,//
  நேத்து தான் எங்க வீட்டு பசங்க மார்க் போட்டுட்டு இருந்தாங்க :)
  //கூப்பிட்டாலும் திரும்ப வராது..!//
  இதுக்கு எதாவது சொல்லனுமே.... என்ன சொல்லலாம்??? :))

  வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 39. @சர்புதீன்
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  //
  காயல்பட்டினத்து கஞ்சியை பற்றி யாரிடமாவது கேட்கவும்! //
  :)
  எனக்கு எங்க ஊர் .... உங்களுக்கு உங்க ஊர்.......... அவங்கவுங்களூக்கு அவுங்கவுங்க ஊர் :))

  ReplyDelete
 40. @சித்ரா
  மிக்க நன்றி சித்ரா

  ReplyDelete
 41. @ரியாஸ்
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  மிக்க நன்றி சகோ
  உங்களுக்கும் என் ரமலான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. @ஆகுலன்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 43. @சாதிகா அக்கா
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
  இன்னைக்கு ஈவ்னிங் கஞ்சி வந்ததும் போட்டோ எடுத்து பிற்சேர்க்கையுட்டுடுறேன் :)
  ரமலான் வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 44. @சகோ ரஜின்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  //.ஊர் கஞ்சியா???//
  இல்லல்ல... தலைப்பு பாக்கலையா? நோன்பு கஞ்சி :)
  //ஆனா இங்க வந்து கடந்த இரண்டு வருஷமா கஞ்சிய மிஸ் பண்ணல...//
  அல்ஹம்துலில்லாஹ்
  //இந்த வெஜ்’ன்னாலே ஒரே அலர்ஜி...
  சோ ஒன்லி நான்வெஜ் கஞ்சிதான்..//
  நீங்களாம் பெரிய ஆளுங்க சகோ... எங்க சாய்ஸ் எப்பவும் வெஜ் தான் :)

  ReplyDelete
 45. @நிரூபன்
  மிக்க நன்றி சகோ
  இப்ப தான் தெரியுமா? ஒரு முறை செய்து பாருங்க :)

  ReplyDelete
 46. என்னடா ஊர விட்டு வந்தோம் அதுக்கு பிறகு இத குடிக்க வாய்ப்பு இல்லாம போச்சேனு வருத்த பட்டுகிட்டு கிடந்தேன்... நன்றி அமினா!! உங்க ரீ ரிட்டனுக்கு பிறகு இப்ப தான் இங்க வர்றேன்............. வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 47. ரமலான் நல்வாழ்த்துக்கள் ஆமினா

  ReplyDelete
 48. அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே.. இலங்கைக்கு வந்தால் எங்கள் வீட்டில் நோன்பு கஞ்சு தரலாம்... எல்லாரும் வரலாம்..No problem..அனைவருக்கும் என் இனிய ரமலான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 49. @தம்பி கூர்மதியன்
  //உங்க ரீ ரிட்டனுக்கு பிறகு இப்ப தான் இங்க வர்றேன்............. //
  :)
  நா இல்லாத நேரத்துலையும் ஞாபகம் வச்சு நான் மறக்கலன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி... அந்த பின்னூட்டத்துக்கு பதிலளிக்க முடியல சாரி தம்பி

  ரீ ரிட்டனுக்கு பிறகு இன்னும் ஒரு பதிவையும் நான் பாக்கலையே உங்க ப்ளாக்கில்... எழுத ஆரம்பிங்க பழையபடி!!!

  ReplyDelete
 50. @பிரஷா
  நன்றி ப்ரஷா

  ReplyDelete
 51. @நஜ்மீர்
  வ அலைக்கும் சலாம்

  நண்பர்களாம் ப்ளைட் பிடிச்சு வராங்களாம்..... வீட்ட ரெடியா வச்சுக்கோங்க :)

  ReplyDelete
 52. அருமையா சொல்லிருக்கிங்க ..
  ரமலான் வாழ்த்துகள்

  ReplyDelete
 53. ரமலான் நல்வாழ்த்துக்கள் ஆமினா :)

  ReplyDelete
 54. //இல்லல்ல... தலைப்பு பாக்கலையா? நோன்பு கஞ்சி :)//

  அடடடடா!!!!..முடியல....நோன்பு நாளாச்சே,கொஞ்சம் உக்கிரம் கம்மியா இருக்கும்னு தப்பாம நெனச்சுட்டேன் சகோ.. :)

  அப்புறம் ப்ரோபைல் போட்டோ ஷாம்..அப்பா!! அப்டி பவ்யமா???அடக்க ஒடுக்கமா??..அவனப்பத்து கொஞ்சம் கத்துக்க கூடாதா?? :)
  (எங்கையாவது வெய்டீஸ்ல உட்டுட்டு போயிடீங்கள??)
  அதென்ன பேன்ட் பூரா பாக்கெட்.. :))

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 55. //பட்டை-2
  ஏலக்காய்-3
  கிராம்பு-3
  அன்னாசிபூ-2
  பிரிஞ்சி இலை- 1
  வெங்காயம்-2
  தக்களி-2...
  முந்திரி- 10
  தேங்காய் பால்- 1 கப்//

  பட்டியலைப் பாத்தா, கஞ்சியா, பிரியாணியான்னு டவுட் வருது!! :-)))) நோம்பு திறந்தவுடனே இப்படி ஹெவியா கஞ்சியா!! :-))))))

  ReplyDelete
 56. வாழ்த்துகள் தோழி.நாங்களே காய்ச்சி நாங்களே குடிக்கன்னு செய்முறையும் தந்திட்டீங்களா.நன்றி !

  ReplyDelete
 57. ரமலான் வாழ்த்துக்கள்

  கஞ்சியை பார்க்கும் பொழுதே வெட்கத்தை விட்டு சொல்றேன், அட இதிலென்ன வெட்கம், கஞ்சியை படத்தில பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊருதுங்க .

  அருமை

  நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 58. @அரசன்

  மிக்க நன்றி சகோ :)

  ReplyDelete
 59. @ஹரிணிநாதன்
  மிக்க நன்றி ஹரிணி :)

  ReplyDelete
 60. @ஹுசைனம்மா
  //பட்டியலைப் பாத்தா, கஞ்சியா, பிரியாணியான்னு டவுட் வருது!! :-))//
  அதான் எங்க ஊரு நோன்பு கஞ்சி :))

  ReplyDelete
 61. @ஹேமா
  //நாங்களே காய்ச்சி நாங்களே குடிக்கன்னு செய்முறையும் தந்திட்டீங்களா.நன்றி !//
  அது அப்படி இல்ல ஹேமா
  நீங்க காய்ச்சி அப்படியே எனக்கும் அனுப்பி விடுங்கன்னு அர்த்தம் :))

  மிக்க நன்றி ஹேமா

  ReplyDelete
 62. @எம் ஆர்
  //கஞ்சியை பார்க்கும் பொழுதே வெட்கத்தை விட்டு//
  பாவம் அத எதுக்கு விடுறீங்க... கெட்டியா பிடிச்சுக்கோங்க :))
  செய்து சாப்பிட்டு பாருங்க சகோ !!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 63. @சகோ ரஜின்

  ////இல்லல்ல... தலைப்பு பாக்கலையா? நோன்பு கஞ்சி :)//

  அடடடடா!!!!..முடியல....நோன்பு நாளாச்சே,கொஞ்சம் உக்கிரம் கம்மியா இருக்கும்னு தப்பாம நெனச்சுட்டேன் சகோ.. :)//
  எப்பவும் ஒரே மாதிரியா இருக்கணும்ங்குறத இதன் மூலமா கத்துருப்பீங்கன்னு நெனைக்கிறேன் :))

  //அப்புறம் ப்ரோபைல் போட்டோ ஷாம்..அப்பா!! //
  என்னாச்சு சகோ? அது ஷாம் அப்பா இல்ல.... ஷாம்... தன்விர் ஷாம்.... :))
  ஷாம் அப்பா சின்ன வயசுல எடுத்த போட்டோலாம் எங்கிட்ட இல்லைங்க சகோ:(

  //அப்டி பவ்யமா???அடக்க ஒடுக்கமா??//
  இதுக்கான என் பதில்
  //அப்புறம்
  நூலை போல சேலை...அப்டீன்னு சொல்வாங்க...சகோ அந்த மோதல்வரி என்ன? எனக்கு மறந்து போச்சு???
  அப்டித்தா ஷாம்'ன்னு நெனைக்கிறேன்

  அன்புடன்
  ரஜின்// :))

  //அவனப்பத்து கொஞ்சம் கத்துக்க கூடாதா?? :)//
  ஒன்று இரண்டு பத்து வரைக்கும் தெரியும் சகோ... அதென்ன அவனபத்து? புதுவிதமான பத்தா இருக்கே??? நீங்க வேணும்னா சொல்லிகுடுங்க... நா கத்துக்குறேன்.... ஏன்னா அவனபத்துங்குற எங்கேயும் கத்து கொடுக்குறதா தெரியல :))


  //எங்கையாவது வெய்டீஸ்ல உட்டுட்டு போயிடீங்கள??)
  அதென்ன பேன்ட் பூரா பாக்கெட்.. :))//
  ஸ்டைல்....... ஸ்டைல்......... ஸ்டைல்......... :))

  நீதி- எதுக்கும் அசர மாட்டோம்ல?

  ReplyDelete
 64. ஸலாம்,,,
  தங்கச்சி...தங்கச்சி...முடியல:)
  (எம்மா! ஃபுல் ஃபாம்ல..இருக்குர நெரத்துலைய நா வாயக்குடுக்கனும்...)

  மச்சான கேட்டேன்னு சொல்லுமா!!!
  ஐயயோ!!..இதுக்கு கேட்டா தரமுடியாதுன்னுல பதில் வரும்..:)..
  ம்ம்..கவனம்..

  இல்ல இல்ல...மச்சான விசாரிச்சேன்னு சொல்லுமா...போதும்,,,

  தமிழ் டைப்பிங் இல்லாததால வந்த ஸ்பெலிங் மிஸ்டேக்குக்கு இவ்ளோவா???

  (ஒரு காலத்துல நாம கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு புடிச்சுட்டு இருந்தோமோ!!!..)

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 65. @சகோ ரஜின்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  //.மச்சான விசாரிச்சேன்னு சொல்லுமா...போதும்,,,//
  எதுக்குண்ணா? அவர் என்ன தப்பு பண்ணார்? எதுக்கு அவர நீங்க விஷாரிக்கணும்? :))

  ReplyDelete
 66. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

  செய்முறை விளக்கம் எல்லாம் அருமை தோழி.

  என்னதான் நாம் செயதாலும் பள்ளி கஞ்சி டேஸ்ட் வராது.


  அப்புறம் சகோ ரஜின் மாட்னீங்களா

  ? ஹா ஹா ஹா


  //(ஒரு காலத்துல நாம கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு புடிச்சுட்டு இருந்தோமோ!!!..)//

  ஒரு காலத்தில் அல்ல.கொஞ்சநாள் தான் ஆகுது

  ReplyDelete
 67. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 68. ரமலான் வாழ்த்துகள்..

  பண்டிகைக்கு பிரியாணி செஞ்சு வைங்க ;-))

  இது எனக்கும் பிடிச்ச கஞ்சி.. மாசத்துக்கொருக்கா செய்வேன். இப்ப உங்க குறிப்புப்படியும் செஞ்சு பார்க்கணும்.

  ReplyDelete
 69. இன்று என் வலையில்

  உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்த மாதம் விரதம் இருப்பது உங்கள் நண்பர்கள் அண்டை வீட்டார்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள்.

  அவங்க ஏன் இப்படி பட்டினி கிடக்கனும்?

  அதுக்கு பயிற்சியா எதுக்கு ?

  ReplyDelete
 70. //அவர் என்ன தப்பு பண்ணார்? எதுக்கு அவர நீங்க விஷாரிக்கணும்? :))//

  ரைட்டு உடுங்க..
  எப்புடி போனாலும் கேட்டு போட்டா ஒரு மனுஷன் என்னதா பண்ணுவான்..:)

  //அப்புறம் சகோ ரஜின் மாட்னீங்களா//
  நோட்டட்'ஆ:)

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 71. ஆயிஷா
  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  உண்மை தான் ஆயிஷா.... நானும் எப்படியெல்லாமோ ஐஸ் வச்சு கேக்குறேன். சொல்ல மாட்றாங்க :)
  //ஒரு காலத்தில் அல்ல.கொஞ்சநாள் தான் ஆகுது //
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுங்குறது இதானோ ஆயிஷா? :))
  ரஜின் அண்ணாவ :)விட போறதா இல்ல :))

  ReplyDelete
 72. @கீதா
  மிக்க நன்றி கீதா

  ReplyDelete
 73. @அமைதிசாரல்
  //பண்டிகைக்கு பிரியாணி செஞ்சு வைங்க ;-))//
  மும்பைக்கே வந்து கொடுத்துட்டு போறேன் :)

  ReplyDelete
 74. @சகோ ரஜின்
  //எப்புடி போனாலும் கேட்டு போட்டா ஒரு மனுஷன் என்னதா பண்ணுவான்..:)//
  நா எப்பண்ணா உங்கள அடிச்சேன்? கேட்க தானே செஞ்சேன்? அநியாயமா இப்படி தங்கச்சி மேல பழிய போடலாமா? :))

  :))

  சரி விடுங்கண்ணா... இதோட நிப்பாட்டிகிறேன் :) நீங்க படிக்கிற வேலைய பாருங்கோ... அடுத்த தடவ மாட்டும் போது பாத்துக்குறேன் :)

  ReplyDelete
 75. எவ்வளவு க்ளோசப் ஃபோட்டோ!

  ReplyDelete
 76. supper கஞ்சி..
  vaalththukkal..

  ReplyDelete
 77. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  முதல் நோன்பு அன்றே உங்கள் பதிவை பார்த்தேன்.

  அப்போதே இதை செய்ய வேண்டும் என்ற அவா வந்தது.

  ஆனால் என் பணிச்சுமை காரணமாக செய்ய இயலவில்லை.

  இன்று டூட்டி இல்லை.

  ஆகவே, இன்று சஹருக்கு எழுந்த போதே அனைத்தையும் ரெடி செய்து விட்டேன் (காரணம் ரெடி பண்ணாமலிருந்தால் நாளை செய்துக்கலம் என்ற சோம்பேரித்தனம் வந்துவிடும்)

  இன்று ஜும்மா முடிச்சிட்டு மற்ற வேலைகள் செய்தேன்.

  அல் ஹம்துலில்லாஹ் உங்கள் பதிவை பார்த்து இப்போ செய்துக்கொண்டே இருக்கிறேன்.

  உங்கள் என்னைபோன்ற செய்ய நினைக்கும் அன்பர்களுக்கு பக்க துணை.

  இவண்

  ஹிதாயத் நம் பத்ர்./ (OreH HerO)

  சவுதி அரேபியா...

  ReplyDelete
 78. ஆமி நீங்க நீண்ட ஓய்வுக்குப்பிறகு
  பதிவுலகத்துக்கு மீண்டும் வந்ததுக்குப்பிறகு இப்பதான் வரேன்
  இனிய ரமதான் வாழ்த்துக்கள்.
  சைவ கஞ்சி செய்துபாத்துடலாம்னு தான் தோனுது. செய் முறை விளக்கம் கூட சுலபமாச் சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 79. @ஹிதாயத்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  உங்கள் பின்னூட்டம் கண்டு ரொம்ப மகிழ்ச்சி :)

  நேரம் கிடைக்கும் போது என்ன ரிசல்ட் வந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க :)

  ReplyDelete
 80. @லெட்சுமிம்மா
  உங்க கிட்ட பேசணும்னு தான் நெட் ஓபன் பண்ணேன்... பார்த்தா உங்க கமெண்ட் வந்துச்சு......

  மிக்க நன்றிம்மா... செய்துட்டு சொல்லுங்க :)

  ReplyDelete
 81. ஆமி, சூப்பர். உங்க பதிவு எதுவும் ரீடரில் வரவேயில்லை. நான் நீங்க இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை என்று நினைத்தேன்.
  இவ்வளவு பொருட்கள் போட்டு செய்வதால் மிகவும் ரிச்சாக இருக்கும்.

  ReplyDelete
 82. சகோதரம் எனக்கும் இது குடிக்கணுமுண்ணு ரொம்ப நாள் ஆசை...

  ReplyDelete
 83. நோன்பு கஞ்சி மிக அருமை, அதில் உள்ள அன்னாச்சி பூ மனம் தான் எங்க விட்டீல் யாருக்கும் பிடிக்காது

  நாங்களும் சின்ன குழந்தைகள் இல்லை பெரியவர்கலுமே கஞ்சி வடை அல்லது பகோடாவை போட்டு சாப்பிடுவோம்

  ReplyDelete
 84. @வானதி

  :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 85. @மதி சுதா

  செய்து பாருங்க சகோ

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 86. @ஜலீலாக்கா

  சலாம்

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா

  ReplyDelete
 87. உங்க நோன்புக் கஞ்சியை 2முறை செய்து சாப்பிட்டென்,நல்ல சுவை..இதனுடன் சிறிது ஸ்வீட் கார்ன் சேர்த்து செய்தேன்.

  ReplyDelete
 88. அழகா விவரிச்சு இருக்கீக.அக்கா.

  ReplyDelete
 89. Hi Amina madam,
  This is my most favourite one and every year we get from
  the neighbour house on nombu times and it is very very tasty.This recipe seems to be
  Yummy and I would like to make this today.
  I am a beginner in cooking,I have few queries on this recipe,
  Could u plz help me?
  Basmati or pacharisi which gives more good taste.
  1 cup of coconut milk,it should be thick coconut milk or thin coconut milk.
  Vendhayam & ginger garlic paste are in spoon measures,tsp or tbsp for both.
  Carrot,onion,tomato in gram measures.
  Please reply for the queries and give us the chance to try this yummy nombu kanji.

  Thanks.

  ReplyDelete
 90. Basmati or pacharisi which gives more good taste.

  பள்ளிவாசல்களில் பச்சரிசிதான் யூஸ் பண்ணுவாங்க... பாஸ்மதி நல்ல சுவை கொடுக்கும்.

  //1 cup of coconut milk,it should be thick coconut milk or thin coconut milk.//
  கெட்டியான தேங்காய் பாலே எடுங்க. சுவை கொடுக்கும்


  //Vendhayam & ginger garlic paste are in spoon measures,tsp or tbsp for both.//

  டீஸ்பூன்

  //Carrot,onion,tomato in gram measures.//
  கேரட்- 75 கிராம்
  ஆனியன்- 150 கிராம்
  தக்காளி- 100 கிராம்

  ReplyDelete
 91. Thanks for replying me for my queries and for your quick reply.
  It encourages me in making it & thanks a lot.
  Just a clearification,
  It is said that periya poondhu -15,is it 15 periya pallu or poodu?
  Plz clearify.
  When we add poodu along with carrot and saute,do we have to add poondu pal,whole
  or finely chopped .
  Please reply,I get back to you with my feedback.
  Thanks again for your quick reply.

  ReplyDelete
 92. சாரி.. நான் நேத்து பதில் கொடுத்துட்டு தூங்க போய்ட்டேன்.. இப்பதான் பாக்குறேன்!

  periya poondhu -15,is it 15 periya pallu or poodu?- பெரிய சைஸ்ல இருக்கும் பூண்டு 15 பல் எடுக்கணும்.

  பெரிய பூண்டு பல் முழுசாவே சேர்க்கணும். வத்த குழம்பு , பூண்டு குழம்புக்கெல்லாம் முழுசா சேர்ப்போமே...அது போலவே....


  செய்து பார்த்துட்டு சொல்லுங்க... :-)

  ReplyDelete
 93. Hi Amina madam,
  Thanks a lot for the reply & it encourages us.Thank u somuch.
  We prepared and had it justnow.It is so yummy in taste that we feel
  like having it more and more.As u said above in the recipe,not able to express
  the taste of this kanji.Lovely recipe Amina madam,this recipe is more
  tasty than the one we had before in our town.
  Thanks for this recipe.
  If we want to try non- veg version ,do we have to add mutton keema
  Or chicken keema to it,Which would be really tasty,What would be the measure if we like to make it(keema)?
  While doing nombu kanji today,I had 2 doubts but I did it by guessing.
  Can u clearify it?
  Basmati rice should be broken half & then soak for 30mins right?
  The texture of rice should be coarse or fine,how the texture will be.
  Please explain clearly (it will help the beginners like us)as we like to make nombu kanji often.
  Even if the kanji cameout so good ,I like to know the texture of rice before
  soaking it as we can follow nexttime when we make it.
  Green chillies should be slit half or chopped finely.
  Your reply will help us to clear our doubts which we had
  while making today.
  Thanks.

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)