பல 'எதிர்'பார்ப்புகளோடு தொடங்கிய பதிவர் சந்திப்பு மனநிறைவுடன் நடந்துமுடிந்தது! அதில் நானும் கலந்துகொண்டேன்.... ஒருவாரம் ஆகியும் இன்னும் பதிவர் பற்றிய நினைவுகள் நீங்கவில்லை.. 
சேமித்துவைக்கும் பொருட்களோடு பீரோவில் பத்திரமாய்....
சென்னை என்பதால் வருவதற்கு பெரிய சிரமம் எதுவும் இருக்கவில்லை. ரம்ஜானுக்கு சென்னை செல்லவேண்டி இருந்தது சில காரணங்களால் தடைபட்டது! ரம்ஜானுக்கு சென்னை சென்றிருந்தால் நிச்சயம் பதிவர் சந்திப்பில் கலந்திருக்க முடியாது. ஏனெனில் ஒருமாதம் முன்பே ட்ரைனில் டிக்கெட் முன்பதிவு செய்து 25 சனிகிழமை இரவு ரிட்டன் போட்டிருந்தேன்...  அது கேன்சல் ஆக பதிவர் சந்திப்புக்காவது போய்விட்டு வரலாம் என மீண்டும் 25 இரவுக்கு டிக்கெட் போட்டால் வெயிட்டிங் லிஸ்ட் கிட்டதட்ட 90க்கு மேல்! போட்டும்விட்டேன்!

பின் மனிதாபிமானி தளத்தில் என் கமென்ட் பார்த்து சிவா என்னிடம் "உங்கள் சகோதரன் மேல் நம்பிக்கை இருந்தால் வருவீங்க" என சொல்ல.... சிவா சொன்னதற்காகவே வர முடிவுசெய்தேன்! :-)  சாதிகா அக்காவிற்கு போன் செய்து  கலந்துக்கொள்ளவிருப்பதை சொல்ல, அவர் வீட்டுக்கு நேரடியாக வர சொன்னார்...

அங்கே சென்றால் எனக்கு முன்பே லெட்சுமி மாமி இருந்தாங்க! ஒன்றாகவே மண்டபம் சென்றோம்! இதாங்க நான் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டதன் பின்னணி வரலாறு! இதுவே இவ்வளவு நீளம்னு கடுப்பாய்ட்டீங்களா... கூல்...கூல்... இனி அங்கு நடந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பார்க்கலாம்!

சாதிகா அக்கா வீட்டில் காலை சாப்பாடு முடிச்சதும் கிளம்ப தயாரானோம். சிராஜ்ஜிற்கு போன் போட்டு 9 மணிக்கு மண்டபம் வந்துடுவோம் என சொல்ல அவரோ, "பத்துமணிக்கு மேலதானே பங்க்‌ஷன்? ஏன் சேர் கிடைக்காதுன்னு துண்டு போட்டு எடம் பிடிக்க போறீங்களா? அதெல்லாம் நிறையாவே போட்டிருப்பாங்க! விழால முக்கியமான ஆளு... நானே இன்னும் போகல" என சொல்லி முதல் பல்பு கொடுத்தார் (அட ஆண்டவா... இவருக்கு மட்டும் கொழுப்பை நாக்குல மொத்தமா வச்சு படைச்சுட்டீயா?)
ஷிவா ப்ளாக்கில் சுட்டது
மண்டபத்திலிருந்து காரில் இறங்கிய உடனே வாசலில் வரவேற்க கசாலி அண்ணா, சங்கவி, சிவா இருந்தார்கள்! 3 பேருமே ஒன்றாய் சேர்ந்து வரவேற்க, சிவாவிடம் என்னை தெரிகிறதா எனக்கேட்டேன். அவர் தெரியாதே என ஒரே வார்த்தையில் பிரகாசமான பல்பு கொடுத்தார்! பின் நாந்தான் ஆமினா என அறிமுகம் செய்தேன்.  அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் அதே கேள்வியை திரும்ப கேட்க  அவரும் தெரியாது என்றார்! சரி இவன் தான் ஷாம்...இப்பதெரியுதா என கேட்க அப்பவும் தெரியாது என்றார்! (எல்லாரும் சொல்லி வச்சு பல்பு கொடுக்க முடிவு பண்ணீட்டீங்களா அவ்வ்வ்)  நேத்துவரைக்கும் தங்கச்சி, மருமகன்னு பேசிட்டிருந்தீங்களே சாட்ல! அந்த குட்டிசுவர்க்கம் ஆமினா சத்தியமா நான் தான் என சொல்லினேன்! விட்டா அழுதுருப்பேன்!

இனி யார்கிட்டையும் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணேன் ஹி..ஹி..ஹி... அந்த நேரம் பைக்கிலிருந்து பறந்துவந்தாரு டீக்கடை ஓனரு சிராஜ்... ( நீங்கதான் விழால முக்கியமான உறுப்பினராக்கும்??!! இதான் உங்க டக்கா?) எண்ணங்களுக்குள் நான் பாரூக் அண்ணாவை அழைத்துவந்து கசாலி அண்ணா என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார். முன்பே அவருடன் பேசியிருந்தாலும் ஸ்ட்ரைட்னிங் முடி அடையாளம் காட்ட மறுத்துவிட்டது :-)
ஷிவா ப்ளாக்கில் சுட்டது
வாசலிலேயே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து  பின் அரங்கத்திற்கு செல்ல கிளம்பினோம். மாடி ஏறியதும் அங்கே பெயர் பதிவு செய்துக்கொண்டிருந்தார்கள். ஐடியை ஷாம் சட்டையில் மாட்டிவிட்டேன் :-)

அப்போது பட்டிக்காட்டான் ஜெய் பெரிய வணக்கம் போட்டு நீங்க தானே ஆமினா என்றார் (அட்ரா...அட்ரா.... சந்தேகமே இல்லாம நீ பிரபலபதிவர் தான் ஆமினா! இதுக்காகவே தனியா ஒரு பதிவு போட்டு உங்கள பாராட்டுறேன் ஜெய்! ).. சூரியன் எப்.எம் ல வேல பாத்தாரு போல... மூச்சு விடாம பேசினாரு!  கேமரா, விடியோ, ரூல்ஸ் என அனைத்தையும் ஒவ்வொன்றாய் விளக்க, பெண்பதிவர்களுக்காக, அவர்களின் விருப்பம், பாதுகாப்பிற்காக  இவ்வளவு ஏற்பாடா என வியந்து நின்றேன்!
என் சார்பில் அடையாள அட்டை போட்டுக்கொண்டான் :-)
எங்களுக்கு முன்பே ராஜி, சசிகலா, சரளா அனைவரும் இருந்தார்கள். ஷாம் ஐடியை பார்த்ததும் தூயா "இதுவரைக்கும் நான் தான் குட்டிபதிவர்ன்னு நெனச்சேன்! என்னை விட குட்டிபதிவரா இருக்கியேன்னு கலாய்ச்சாங்க!
பின்னூட்டப்புயல் சேக் தாவூத் உடன்
சேக்தாவூது எனக்கு டீ கொண்டு வந்து கொடுக்க, அப்ப என் மகனுக்கு என சண்டை போட்டேன் ;-) (டீயா இருந்தாலும் எங்க பங்கை விட்டுகொடுக்க மாட்டோம்ல?? அவ்வ்வ்வ்வ்வ்)
பார்த்த மாத்திரத்தில் அனைவர் மனதிலும் பதியகூடிய நபர் வல்லிம்மா
வல்லி அம்மா அனைவருக்கும் பூவும் குங்குமமும் கொண்டு வந்திருந்தார். பூமேல் என்னமோ ஆசை இருப்பதில்லை...   கிட்டதட்ட பூ சூடி 5 வருடங்களூக்கும் மேல் ஆகியிருக்கும்..  யாராவது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்லிவிடுவேன்.. ஆனால் வல்லிம்மா கொடுத்த போது வேண்டாம் என சொல்ல மனம் இல்லை.. இத்தனைக்கும் வைப்பீங்களா என தான் கேட்டார்! வைப்பேன் என்றேன்! அவர் முகத்தில் இருந்த காந்த ஈர்ப்பு அப்படி சொல்ல வைத்ததோ என்னவோ... கண்ணா என அழைத்தே அனைவரிடமும் பேசினார். விடைபெறும் போது கட்டிதழுவி நீண்டநாள் பழகிய நெருங்கிய உறவினர் போன்ற உணர்வை ஏற்படுத்தினார். ச்ச... அம்மா கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் போய்விட்டோமே என நொந்துக்கொண்டேன்!

மேடையில் ஒருவர் ஏறி தமிழ்தாய் வாழ்த்து பாட அப்போது தான் தெரிந்தது அவர் மதுமதி என்று! போட்டோக்கும் நேர்ல பாக்குறதுக்கும் சம்மந்தமே இல்ல.. ஒருவேள காதலில்  தோல்வி அடைந்த சமயத்துல தாடி வளர்த்து, துன்பத்திலும் சிரி என பெரியோர்களின் வாக்குபடி சிரிச்சுட்டே எடுத்த பழைய போட்டோ போல என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்!:-)
ஆஷிக் மற்றும் சேக் தாவூத் உடன்
தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் என்னிடமிருந்து போனவன் தான் ஷாம்! அப்பப்ப நான் இருக்கேனான்னு உறுதிபடுத்த வந்தான். மீதி நேரம் அவன் மாமாமார்களுடன் சுத்திக்கொண்டிருந்தான்! (பதிவர் ஆகுறதுக்கு இப்பவே ப்ராக்டீஸ் கொடுக்குறோமாக்கும் :-)  

பதிவர் அறிமுகப்படுத்த ஒவ்வொருவராய் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது  என்னை அழைக்க வேண்டாம் என பாலா கணேஷ் அவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் உடனே மேடையில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினார்.  அதன் பின்னும் என் பெயரை அழைக்க, நான் மேடை ஏற வரும் போதே மதுமதி மற்றும் ஜெய் விடியோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள்! ( பொதுவான நிகழ்ச்சியில் படம் பிடிப்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால், பொறுப்பாய் இருந்து,  முடிந்தளவு அவர்கள் பெண்பதிவர்களுக்காய் மெனக்கெட்டது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விஷயம்! பெண்பதிவர்கள் ராணிகளாய் நடத்தப்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனியான, சிறப்பான கவனிப்பு... இனி எப்போது பதிவர் சந்திப்பு நடத்தினாலும் கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என முடிவு செய்ய வைத்த விஷயங்களில் இதுவும் ஒன்று! )
அரசியல்பதிவர் கசாலி அண்ணா உடன் :-)
அதன் பின் சரக்கு,மப்பு என சில வார்த்தைகள் விடப்படும் போது விழாக்குழுவினர் முகத்தில் இருந்த கவலை மற்றும்  மேடைக்கு சென்று சிராஜ்  தொகுப்பாளரிடம் அது போல் பேச வேண்டாம் என தீர்மானத்தை உடனுக்குடன் சொன்னதுலாம் HATS OFF BROTHERS!
'தல' சுய அறிமுகத்தின் போது
பெண்களை போட்டோ எடுக்க வேண்டாம் என சொல்லியிருந்தாங்க! எந்தளவுக்கு இதை செயல்படுத்த போறாங்க என  யோசித்ததுண்டு! ஆனால் அதுக்காகவே சிவா நிறையா Chair இருந்தும்  எங்கும் உக்காரல போல அவ்வ்வ்! Sir விழா நடக்குற நேரம் முழுக்க நின்னுட்டே தான் கண்காணிச்சுட்டிருந்தார்! யாராவது போட்டோ எடுத்தா ஒடனே ஓடி வந்து தடுத்துட்டிருந்தார்...

நேற்று மதுமதியின்  ஒரு பதிவை படித்தபோது தான் புரிந்தது! அத்தனை வேலைகளுக்கும் டென்ஷன்களுக்கும் மத்தியிலும் மதுமதி அனைவரிடத்திலும்  புன்னகை பூக்க பேசியது ரொம்பவே ஆச்சர்யப்பட வைக்கிறது!  சாப்பிட போகும் ஒவ்வொருவரிடமும் நலம் விஷாரித்து பேசிக்கொண்டிருந்தார். சாப்பிட்டதும் விழாவை பார்த்துவிட்டுதானே செல்வீர்கள் என சொன்னபோதும், கட்டாயமாக இருப்போம் என சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும்  அவரின் பொறுப்பான வழிநடத்தலை காமித்தது! (நீங்களாம் கல்யாணத்துக்கே பந்தி வைக்கிற டைம்ல போற ஆளுன்னு அவருக்கு தெரிஞ்சுக்கு போல! அதான் கேட்டிருக்கார்....)
ஐஸ் சாப்பிட்டுவிட்டு வந்த போது :-)(வீடுதிரும்பல் ப்ளாக்கில் சுட்டது)
ராஜியின் மகனுடன் ஷாம் ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டான். ராஜி  கடைக்கு அழைத்து சென்று ஐஸ்க்ரீம் வாங்கி கொடுக்க ஷாம் "எங்கம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணும்" என்றானாம். சரி கைல வச்சுக்கோ என ராஜி சொல்ல, ராஜி கையில் இருந்த ஐஸ்க்ரீம்மை பறித்து சாப்பிட்டானாம்...  (நாங்களாம் இப்பவே இப்படின்னா பாத்துக்கோங்க! ) ராஜி சும்மா பம்பரம் மாதிரி சுத்திட்டே இருந்தாங்க... பலர் கூச்சம் துறந்து சகஜமாய் பேசிபழகியதற்கு இவரின் அணுகுமுறை முக்கியக்காரணம்னு சொல்லலாம். பலரிடம் தானாகவே சென்று பேசி அறிமுகம் செய்து நீண்டநாள் பழகியவர் போல் நடந்துக்கொண்டார். 
மனிதாபிமானி(ஹி..ஹி..ஹி...) சுய அறிமுகத்தின் போது!
பதிவர் அறிமுகம் முடிந்து, சாப்பிட கூப்டும் போக மனமில்லாமல் பேசிக்கொண்டே இருந்தோம். கசாலி அண்ணா மொபைலில் இருந்த என் மருமகன்  Rizal Ahamed விடியோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் அண்ணாவை சாப்பிட கூப்டு நான் அடம்பிடிச்ச போது நான்வெஜ் தான்  சாப்பிடணும்னு அடம்பிடிச்சார் :-)

சிபியிடம் சாதிகா அக்கா பதிவுலக 'மொய்க்கு மொய்' பற்றி பேசும் போது "சிபி கூட என் ப்ளாக் வரதில்லைன்னு அவரை மடக்கினேன்" ( எங்கே போனாலும் ப்ளாக்கிற்கு ஆள் திரட்டுறதுல குறியா இருப்போம்ல அவ்வ்வ்)
சிராஜ் கையில் தூக்குவாளி... (நோ உள்குத்து:-)
வீட்டில் பங்க்‌ஷன் என்றால் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கடைசி பந்தியில் தான் சாப்பிடுவோம். எங்களுக்கு பரிமாறுவதும் எதாவது ஒரு நெருங்கிய உறவினராகவே தான் இருப்பார். இந்த சந்திப்பிலும் அப்படியே... சிராஜ் மற்றும் கசாலி அண்ணா சாப்பாடு பரிமாறுனாங்க!  ஷாம்க்கு தனியாக இலை போட்டு சாப்பிடு வைக்கப்பட்டது! ஒடனே அங்கே வந்த சிவா, "இன்னைக்கு நீ யார் முகத்தில் முழிச்ச ஷாம்? இந்த நாள் உனக்கு அதிஷ்ட்ட நாள் டா. உங்கம்மா சமையல்ல இருந்து தப்பிச்சுட்ட என இன்னொரு பல்பு கொடுத்தார்! அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் "போஸ்ட்டர்க்கு பசை வேணும்னா  ஆமினாவின் சாம்பார் சாதம் சரியா இருக்கும்" என பல்பு மேல் பல்பு கொடுத்தார்! அவ்வ்வ்வ்வ்வ்
ஷாம் இலையில் எதுவும் இல்லாதாதுக்குகாரணம் அருகில் அமர்ந்திருக்கும் மாமாமார்கள் :-)
பின் ஷாம் சாப்பிட மறுக்க, சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது என்று  அவன் இலையில் உள்ளதெல்லாம் அவன் மாமாமார்ங்க ஆஷிக்,சேக்தாவூத் சாப்பிட்டாங்க :-) சாப்பாடு செம டேஸ்ட். ஆயிரத்தில் ஒருவன் சகோ.மணியிடம்  நேரடியாகவே ஆஷிக் மற்றும் சேக் பாராட்டுனாங்க! சாப்பிட்டு முடிஞ்சதும்  சிவா,சிராஜ் க்ரூப் சாப்பிட  ஆஷிக் மற்றும் சேக் பரிமாற போயிட்டாங்க!  அகில உலக புகழ் பெற்ற இலையை தலைகீழா மடிச்ச சர்ச்சை இங்கே தான் நடந்துச்சு ஹி...ஹி..ஹி...

ருக்மணி அம்மா, ரஞ்சினி அம்மா, சீனா ஐயா, தமிழ்வாசி ப்ரகாஷ், எல்.கே  உடன் பேசிவிட்டு அரங்கத்திற்கு சென்றால் யாரோ ஒருவர் மேடையில் அமர்ந்திருந்தார்!

காலை முதல் ஒவ்வொரு பிரபலபதிவரையும் கூட இவர் யார் இவர் யார் என நான் கேட்க, இவர் தான் கேபிள் சங்கர், இவர் தான் சுரேகா, இவர் தான் ஜாக்கி என சொல்லி சொல்லி சோர்வடைந்த சாதிகா அக்காவிடம் மேடைல இருக்காரே இவர் யாருக்கா என கேட்டது தான் உச்சகட்டம்!  அடக்கொடுமையே.. இவர்தான் பட்டுகோட்டை ப்ரபாகர் என சொன்னார்! ஓ இவர்தானா என வழிந்துக்கொண்டேன் அவ்வ்வ்வ்... 
பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பீச் பார்த்துட்டுதான் போகணும் என சாதிகா அக்கா சொல்லியிருந்தாங்க. பட்  அக்கா வேறெங்கோ செல்லவேண்டியிருந்ததாலும், காலையிலேயே  வந்துவிடுவேன் என என் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்ததாலும் உடனே செல்லவேண்டியதாகிவிட்டது! புத்தகவெளியீடு முடிந்ததும் கிளம்பிவிட்டோம்! ஆனாலும் போக மனமே இல்லை! ருக்மணி அம்மாவிடம் விடைபெற அவர்கள் கை பிடித்து பேசினாங்க... ஷாம் தலையை தடவி வாழ்த்து சொன்னாங்க!

சிவாவிடம் விடைபெற்ற போது வாசல் வரை வழியனுப்ப வந்தார். கூடவே  கறிவேப்பிலை சாதம் (சிவா கமென்ட் பார்க்க) பற்றிய பஞ்சாயத்து வைத்தார். நாட்டாமை கசாலி அண்ணா தான்!  அண்ணாவை நைஸாக நான் மிரட்ட  கறிவேப்பிலை, கருவேப்பிலை 2மே சரிதான் என தீர்ப்பு சொன்னார் :-)

மண்டபத்தின் கீழே வரை வழியனுப்ப சிவா, சிபி, சேக், கசாலி அண்ணா வந்திருந்தாங்க...  அப்போது சிபி என்னை பார்த்து "என் பதிவுக்கெல்லாம் இனி வந்து ஓட்டு போடலன்னா உங்க பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு போடுவேன்"ன்னு மிரட்டினார்! என் ப்ளாக்ல கமென்ட் போடலன்னா நானும் மைனஸ் ஓட்டு போடுவேன்னு பதிலுக்கு டீல் பேசினேன் அவ்வ்வ்வ்வ்

 இறுதிவரை வழியனுப்ப இவர்கள் வந்தது  உண்மையிலேயே நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை தந்தது! மொத்தத்தில் இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்! அங்கும் கூட கேட்டரிங் ஆட்கள், வரவேற்க வாசலில் பொம்மை என எல்லாமே அந்நியமாய் தெரியும்.. ஆனால் இந்த சந்திப்பிலோ வாசலில் வரவேற்க , ஜூஸ், டீ கொடுக்க, சாப்பாடு பரிமாற, சாப்பாட்டின் நடுநடுவே என்ன வேண்டுமென கேட்க, ஜாலியாய் பேச என எல்லா வேலைகளுக்கும் பதிவர்களே செயல்பட்டு "நாமெல்லாம் ஒரே குடும்பத்தவர்கள்" என்ற உணர்வை ஏற்படுத்தியது!

விழாக்குழுவனருக்கு,
மனமார்ந்த பாராட்டுக்கள்! பல விஷயங்களில் சபாஷ் போட வைத்தீர்கள்...  ஒவ்வொரு விஷயங்களிலும் உங்கள் திட்டமிடல்  அடுத்தமுறையும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது! சூப்பர் சகோஸ்! இந்த திருவிழாவில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்வான தருணங்களாக மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்!

டிஸ்கி :       2 பதிவா போட நெனச்சேன் :-) மக்கள் கத்துவாங்க என்பதால் ஒன்னா போட்டுட்டேன்! விடாம படிச்சுருங்க! அப்பப்ப கேள்விகேட்டு மடக்குவேன் :-))))

, , ,

90 comments:

 1. நீங்கள் சந்திப்பிற்கு வருவீர்கள் என நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.சனி காலை சகோ. ஸாதிகாவிடம் பேசும்போது கூட அவர் சொல்லவில்லை.. மிக்க மகிழ்ச்சி.

  //பெண்பதிவர்கள் ராணிகளாய் நடத்தப்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனியான, சிறப்பான கவனிப்பு... இனி எப்போது பதிவர் சந்திப்பு நடத்தினாலும் கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என முடிவு செய்ய வைத்த விஷயங்களில் இதுவும் ஒன்று! )//

  இது போதும் சகோ..

  உங்களுக்கான பாணியில் அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் சிறப்பு..

  ReplyDelete
 2. அடுத்த முறையாவது பள்ளி விடுமுரையில் பதிவர் சந்திப்பு வர வேண்டும். கலந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. //துன்பத்திலும் சிரி என பெரியோர்களின் வாக்குபடி சிரிச்சுட்டே எடுத்த பழைய போட்டோ போல என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்//

  ஆமாம் சகோ.திருமணம் முடித்து ஒரு வருடம் கழித்து எடுத்த படம் தான்..

  ReplyDelete
 4. தங்கச்சி ஆமினா,லேட்டா பதிவு போட்டாலும் சுப்பராக உங்களுக்கே உரித்தான் நகைச்சுவையுடன் பதிவிட்டு விட்டீர்கள்.பதிவு முழுவதையும் பாரா விடாமல் வரி விடாமல் ஏன்..எழுத்துக்கூட விடாமல் படித்து முடித்தேன் சிரித்துக்கொண்டே,//இறுதிவரை வழியனுப்ப இவர்கள் வந்தது உண்மையிலேயே நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை தந்தது! மொத்தத்தில் இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்! அங்கும் கூட கேட்டரிங் ஆட்கள், வரவேற்க வாசலில் பொம்மை என எல்லாமே அந்நியமாய் தெரியும்.. ஆனால் இந்த சந்திப்பிலோ வாசலில் வரவேற்க , ஜூஸ், டீ கொடுக்க, சாப்பாடு பரிமாற, சாப்பாட்டின் நடுநடுவே என்ன வேண்டுமென கேட்க, ஜாலியாய் பேச என எல்லா வேலைகளுக்கும் பதிவர்களே செயல்பட்டு "நாமெல்லாம் ஒரே குடும்பத்தவர்கள்" என்ற உணர்வை ஏற்படுத்தியது! // சரியாக சொன்னீர்கள் ஆமினா.என்னுள்ளும் அதே உணர்வுதான்.பகிர்வுக்கு நன்றி ஆமினா.என் பதிவில் உங்களது இந்த லிங்கையுமிணைத்து விட்டேன்.:)

  ReplyDelete
 5. லேட்டஸ்ட்டா வந்தாலும் கலக்கலா இருக்கு பதிவு..... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. @மதுமதி

  //நீங்கள் சந்திப்பிற்கு வருவீர்கள் என நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.சனி காலை சகோ. ஸாதிகாவிடம் பேசும்போது கூட அவர் சொல்லவில்லை.. மிக்க மகிழ்ச்சி.//

  18ம் தேதி டிக்கெட் போட்ட போதே சாதிகா அக்காவிடம் வந்தாலும் வருவேன்னு பிட்டு போட்டிருந்தேன். முதல்நாள் ட்ரைன்ல ஏறி அமர்ந்ததும் தான் போன் போட்டு அக்காவிடம் வருவதை உறுதி செய்தேன் :-)

  உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ! அருமையாய் ஏற்பாடு செய்திருந்தீர்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள்!

  ReplyDelete
 7. @ஜோசபின்

  //அடுத்த முறையாவது பள்ளி விடுமுரையில் பதிவர் சந்திப்பு வர வேண்டும். கலந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்!//

  கவலைப்படாதீங்க! இந்த முறை நம் (பெண்பதிவர்கள்) பெரும்பான்மையை நிரூபிச்சிருக்கோம். ஆக இனி நாம போட்டதுதான் சட்டம்! :-)

  அடுத்த முறை கட்டாயம் வாங்க!

  ReplyDelete
 8. மதுமதி said...

  //துன்பத்திலும் சிரி என பெரியோர்களின் வாக்குபடி சிரிச்சுட்டே எடுத்த பழைய போட்டோ போல என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்//

  ஆமாம் சகோ.திருமணம் முடித்து ஒரு வருடம் கழித்து எடுத்த படம் தான்..
  //

  மன்னி இதை பார்த்தா நான் பொறுப்பில்லைங்கோ! :-) ஹா..ஹா..ஹா...

  ReplyDelete
 9. பின் அண்ணாவை சாப்பிட கூப்டு நான் அடம்பிடிச்ச போது நான்வெஜ் தான் சாப்பிடணும்னு அடம்பிடிச்சார் :-)
  ////ஆமாம்... அன்று நான்... வெஜ்தான் சாப்பிட்டேன்.

  ReplyDelete
 10. பின் அண்ணாவை சாப்பிட கூப்டு நான் அடம்பிடிச்ச போது நான்வெஜ் தான் சாப்பிடணும்னு அடம்பிடிச்சார் :-)
  ////ஆமாம்... அன்று நான்... வெஜ்தான் சாப்பிட்டேன்.//ஆமினா செம பல்பு..

  ReplyDelete
 11. வணக்கம் ஆமினா அக்கா, நலமா?
  நல்லதோர் பதிவினைச் சந்திப்பினை நேரே தரிசித்தது போல் உணர்வு ஏற்படும் வண்ணம் கொடுத்திருக்கிறீங்க.
  நன்றி,
  உங்க போட்டோவைப் பார்க்கலாமேன்னு வந்தா ஏமாற்றிட்டீங்களே!!

  ReplyDelete
 12. நான் இன்னும் பதிவர் சந்திப்பு பட்றி பதிவு எழுதவில்லை.உங்கள் பதிவு அருமை சகோதரி.இலக்கிய எழுத்தாளர்கள் எழுதுவதுபோல இருக்கிறது பதிவு.கலந்துகொன்ட நிகழ்வை மிக இனிமையாக எழுதுவது கடினம்.வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 13. @சாதிகா அக்கா

  உங்கள் வீட்டில் அனைவரும் அன்பாய் பழகியதும், கூட பிறந்தவள் போல் நீங்கள் நடந்துகொண்டதும் உண்மையிலேயே வார்த்தையில் விவரிக்க முடியாது. சேக் தாவூத் கூட 2 பேரும் ஒரே குடும்பமா என கேட்டிருந்தார் :-)

  என்னை வழியனுப்பி வைத்துவிட்டு நான் வீடு சேர்ந்தேனா என அடிக்கடி போன் செய்து உறுதிபடுத்தும் போது மகிழ்ச்சியாக இருந்தது. சொந்தக்காரங்க வீட்டில் இருந்து கிளம்பியது போலவே இருந்துச்சு!

  அன்புக்கு மிக்க நன்றி அக்கா! அடுத்த முறை சென்னை வந்தால் உங்க வீட்டுக்கு வராமல் விடுவதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன் :-)

  ReplyDelete
 14. @கசாலி அண்ணா

  //பின் அண்ணாவை சாப்பிட கூப்டு நான் அடம்பிடிச்ச போது நான்வெஜ் தான் சாப்பிடணும்னு அடம்பிடிச்சார் :-)
  ////ஆமாம்... அன்று நான்... வெஜ்தான் சாப்பிட்டேன். //

  ப்ச்... உங்கள நம்பி நானும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணேன்! எனக்கும் நான்வெஜ் வாங்கிகொடுப்பீங்கன்னு!!! அந்த சாபம் தான் மேலே உள்ளது போல ஹி..ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 15. @சாதிகா அக்கா

  ///ஆமினா செம பல்பு..//

  நாங்க இப்படிதான் கொடுத்து கொடுத்து வாங்கிப்போம் (அவ்வ்வ்வ்வ்)

  ReplyDelete
 16. @பாரூக் அண்ணா

  //நான் இன்னும் பதிவர் சந்திப்பு பட்றி பதிவு எழுதவில்லை.உங்கள் பதிவு அருமை சகோதரி.//

  மிக்க நன்றி அண்ணா! உங்க பதிவுக்காக வெயிட்டீங். உங்க எழுத்தில் பதிவர் சந்திப்பு பற்றிய சுவாரசிய நிகழ்வுகள் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

  //இலக்கிய எழுத்தாளர்கள் எழுதுவதுபோல இருக்கிறது பதிவு.//
  நீங்களும் பல்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா??? வை திஸ் கொலவெறி ???!!!

  //கலந்துகொன்ட நிகழ்வை மிக இனிமையாக எழுதுவது கடினம்.வாழ்த்துக்கள் சகோதரி//
  மிக்க நன்றி அண்ணா.. உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம். வருகைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 17. @ கசாலி அண்ணா

  லேட்டஸ்ட்டா வந்தாலும் கலக்கலா இருக்கு பதிவு..... வாழ்த்துக்கள்
  //

  சென்னையிலிருந்து லேட்டா வந்ததுனால லேட்டா பதிவு போடவேண்டியாகிடுச்சு! :-) மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 18. ஆஹா!.. நான் சொல்ல நெனச்சத நிறுபன் சொல்லீட்டாரு! ஆனாலும் நானும் சொல்லித்தான் ஆகனும்! நேர்ல வந்து உங்க கூட கும்மி அடிச்ச மாதிரி இருந்துச்சு! சூப்பரா எழுத்துலையே படம்பிடிச்சுக் காட்டீட்டிங்க! நன்றி!

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  உறவினர்கள் ஒன்று கூடலை அழகாக சொல்லியுள்ளீர்கள். :) :) :)

  ஷாமை நான் மிஸ் பண்ணிட்டேன்.

  ReplyDelete
 20. இந்த பதிவு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

  //எண்ணங்களுக்குள் நான் பாரூக் அண்ணாவை அழைத்துவந்து கசாலி அண்ணா என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார். //

  அப்போ நீங்க அண்ணனை மிரட்டியுருக்கீங்கன்னு நினைக்கிறேன். அதனால தான் அண்ணன்,

  //இலக்கிய எழுத்தாளர்கள் எழுதுவதுபோல இருக்கிறது பதிவு.//

  என்று சொல்லியுருக்காங்க...

  //"எங்கம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணும்" என்றானாம். //

  ஷாம் மீது நீங்கள் சர்வாதிகாரமாக நடந்துக் கொள்கிறீர்கள்.

  அப்புறம், நிறைய பேரிடம் பல்பு வாங்கியுள்ளீர்கள்.

  :D :D :D

  ReplyDelete
 21. //இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)//

  மொத்தம் எத்த்த்த்த்த்த்த்தன பல்புபுபுபுபுபுபுபுபுபு ??????

  ReplyDelete
 22. உங்கள் பெயர் ரொம்ப பிரபலம். நீங்க ஒரு பிரபல பதிவர் தான். அன்று உங்களை பார்த்து நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளவும் உங்களிடம் ஒரு ஹலோ சொல்லவும் முடியாமல் போனது வருத்தமாய் இருக்கு. அடுத்த முறை பார்க்கலாம்

  உங்கள் பதிவை மிக மிக ரசித்தேன். குறிப்பாய் பெண்களை ராணி போல பார்த்து கொண்டனர் என்ற இடம்....நெகிழ வைத்தது

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பு தங்கை ஆமினா,
  பதிவர் சந்திப்புக்கு நீங்களும் சாதிகா அக்காவும் வந்ததே மண்டபத்திற்கு வந்த பிறகு தான் தெரிந்தது. உங்களையும் சாதிகா அக்காவையும் மருமகன் தன்வீர் ஷாமையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பதிவர் சந்திப்பில் நடந்த சில சுவாரசியங்களை முகநூலில் நகைச்சுவையாக பகிர வேண்டும் என்று தோணியது. ஆனால் டேய் உனக்கு நகைச்சுவைலாம் சரிப்பட்டு வராது என்று என் உள் மனசு சொல்லியதால் அந்த அதீத முயற்சியை ஒத்தி வைத்து விட்டேன். ஆனாலும் என் மேல் ஒரு பழி விழுந்ததை இந்த சந்தர்ப்பத்திலாவது துடைத்து தான் ஆக வேண்டும்.

  ReplyDelete
 24. ஷாம் ரொம்பவும் துறுதுறுப்பான சுட்டி பையன். பரமக்குடி பாசையில் பிச்சுருவேன் பிச்சு என்று சிலரை மிரட்டியதை கண்டு நான் கொஞ்சம் மிரண்டு தான் போய்டேன். ஏன்னா நான்லாம் அமைதி விரும்பியாக்கும். மாஷா அல்லாஹ். ஹீ இஸ் வெரி கியூட். ஷாம்க்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தான் ஷாம் இலையை மொத்தமாக காலி பண்ணியவர். ஆனால் அந்த பழி என் மேலும் விழுந்து விட்டது. ஷாம் இலையில் இருந்து எனக்கு வந்தது வெங்காய சட்னி மட்டும் தான். ஷாம்க்கு பக்கத்தில் யார் உட்கார்ந்து இருந்தவர் என்பதை போட்டோவில் பார்த்து கொள்ளவும்.

  ReplyDelete
 25. மேலும் அன்று நான் சந்தித்த அனைவருமே புதிதாக சந்தித்தவர்கள் தான். என்னை எப்போதும் ஒருவர் இரண்டு லிட்டர் பேண்டா பாட்டில் மாதிரி இருந்துகிட்டு என்று ஒருவர் சொல்லுவார். அவரை அன்று தான் சந்தித்தேன். மனுஷன் என்னா ஹைட்டு என்னா வெய்ட்டு. முன்னாபாய் எம்.பி.பி.எஸ் கதாநாயகன் ரேஞ்சுக்கு பலரை அவர் கட்டிபிடித்து கைகுலுக்கிய போது எல்லோரும் கொஞ்சம் அண்ணாந்து தான் பார்த்தார்கள். மேலும் அவர்களால் முழுவதுமாக அவரை கட்டிபிடிக்கவும் முடியலை. அவரை குண்டு என்று சொன்னால் உடனே ரெண்டு சொந்தக்கார சில்வண்டுகளை அனுப்பி திட்டுவார். அவங்களும் அவங்களோட அண்ணனுக்கு ஆதரவாக எங்க அண்ணன் வானத்தைப்போல விஜயகாந்த் ரேஞ்சு என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிவிட்டு போவார்கள்.

  ReplyDelete
 26. இணையத்தில் ரன்னிங் கமென்ட் கொடுத்து அலப்பறை கொடுக்கும் டீக்கடை சிராஜ் அண்ணனை நேரில் பார்க்கும் போது பூவினும் மெல்லிய மனிதராகவே தெரிந்தார். அண்ணே நான் உங்களை ரப் அண்ட் டப்பாக எதிர்பார்த்தேன். பட் ஏமாத்திட்டீங்க. அண்ணன் சில சமயம் ஒரு சில போன் கால்களை ரொம்பவும் பயந்துகிட்டே எடுத்தார். கண்டிப்பா அந்த கால் எங்க மச்சியோட (மயனி அல்லது அண்ணி) அழைப்பாக தான் இருக்கும். அந்தளவுக்கு பம்மி பம்மி அதுவும் மண்டபத்திற்கு வெளியே சென்றெல்லாம் போய் பவ்யமாக பேசினார். மண்டபத்தில் அரசர்குளத்து காரவுக ஆதிக்கம் கொஞ்சம் அதிகம் தான். ரஹீம் கஸ்ஸாலி , பாருக் பாய், ஷர்புதீன் போன்றவர்களை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி. (ஷர்புதீன் பாய் உங்களுக்கு தனியா ஒரு நாளைக்கு கச்சேரி இருக்கு.)

  ReplyDelete
 27. சந்திப்புக்கு வந்ததில் இன்னொரு அஜெண்டாவும் இருந்தது. அது மெட்ராஸ்பவன் சிவா அவர்களை சந்திப்பது என்பது தான். ஆஷிக் மூலம் சிவா "ஜி" அவர்களை அறிந்திருக்கிறேன். மேலும் மனதில் எண்ணியதை தைரியமாக சொல்லும் அவருடைய பாங்கையும் சில இடங்களில் கவனித்ததால் அவரை சந்திக்க வேண்டும் என்பதும் ஒரு அஜெண்டாவாக ஆக்கி கொண்டேன். இன்னும் சில பதிவர் நண்பர்களையும் சந்தித்தேன்.

  ஆமினா நீங்க மிஸ் பண்ணியது அருமையான போண்டாவும் சட்னியும் தான். அவ்ளோ ருசி. காதுக்கு இனிமையாக பிகேபி உரையாற்ற வயிற்றுக்கு ருசியாக போண்டா இருந்தது.

  ReplyDelete
 28. சந்திப்பில் கலந்து கொண்டது பற்றி மகிழ்ச்சி!

  ReplyDelete
 29. அருமையான பதிவு. அசத்தல் கவரேஜ்

  ReplyDelete
 30. @சாமூண்டிஸ்வரி

  // நேர்ல வந்து உங்க கூட கும்மி அடிச்ச மாதிரி இருந்துச்சு! சூப்பரா எழுத்துலையே படம்பிடிச்சுக் காட்டீட்டிங்க! நன்றி!//

  வாங்க சாமூ! நீங்களாம் வந்திருந்தா இன்னும் கலகட்டியிருக்கும்! அடுத்தமுறையேனும் கனவுகாணாம நேரடியா வந்துடுங்க ;-)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா!

  ReplyDelete

 31. @பாசித்
  வ அலைக்கும் சலாம் வரஹ்
  //ஷாமை நான் மிஸ் பண்ணிட்டேன். //
  விடுங்க விடுங்க!
  பாசித் மாமா கல்யாணத்துக்கு போகலாம்னு சொல்லி வச்சுருக்கேன் ஷாம்மிடம்! இன்ஷா அல்லாஹ் :-)

  ReplyDelete

 32. @பாசித்
  //இந்த பதிவு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.//
  இன்று முதல் தொழில்நுட்பபதிவராகிய நீங்கள் புலனாய்வுபதிவர் என அன்போடு அழைக்கப்படுவீர்கள்!

  //அப்போ நீங்க அண்ணனை மிரட்டியுருக்கீங்கன்னு நினைக்கிறேன். அதனால தான் அண்ணன்,

  //இலக்கிய எழுத்தாளர்கள் எழுதுவதுபோல இருக்கிறது பதிவு.//

  என்று சொல்லியுருக்காங்க...

  //"எங்கம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணும்" என்றானாம். //

  ஷாம் மீது நீங்கள் சர்வாதிகாரமாக நடந்துக் கொள்கிறீர்கள்.//

  சிராஜ் கிட்ட எவ்வளவு பணம் வாங்குனீங்க??? அவ்வ்வ்வ்

  ReplyDelete
 33. @rifath a.r

  //இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)//

  மொத்தம் எத்த்த்த்த்த்த்த்தன பல்புபுபுபுபுபுபுபுபுபு ?????? //

  அக்காவுடைய குட்டிசுவர்க்கமே பல்புகளால் தான் பிரகாசமா ஓடிட்டிருக்கு ! ஏன் பா கண்ணு வைக்கிற???

  ReplyDelete


 34. @மோகன் குமார்
  //உங்கள் பெயர் ரொம்ப பிரபலம். நீங்க ஒரு பிரபல பதிவர் தான்.//

  ஆ...................................... ஒரு வாரத்துக்கு தூங்க மாட்டேன் போங்க :-)))))))))) இப்பவே கால் 2ம் தரைல இல்ல ஹி..ஹி..ஹி...

  எனக்கும் பலருடன் பேசமுடியவில்லை என்ற வருத்தம்! தொடர்ந்து விழா நிகழ்சிகள் நடைபெற்றதால் எல்லாரும் பரபரப்பிலேயே இருந்தார்கள். நிகழ்ச்சி இறுதியில் பேசலாம் என நினைத்தேன்! அதற்குள் Call மேல் Call வந்ததால் முழுமையாக பங்குபெற முடியவில்ல(எதிர்கட்சிகள் வழிமேல் விழி வைத்து பல்பு கொடுக்க காத்திருப்பதால் ஆங்கில வார்த்தை அவ்வ்வ்)

  இறைவன் நாடினால் அடுத்த சந்திப்பில் சந்திக்கலாம் சகோ

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

  ReplyDelete
 35. சலாம் சகோ...

  சுவாரஸ்யமாக தொகுத்து உள்ளீர்கள்....உங்கள் மகன் கியூட்டா இருக்கான்...

  ReplyDelete
 36. நன்றாக கவர் செய்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. கேட்டரிங் ஏற்பாடு அண்ணன் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள்.. நானில்லை:-)

  ReplyDelete
 37. மிக இயல்பான, அன்பான பதிவு. வளர்க

  ReplyDelete
 38. ஆமினா மண்டபத்தில் நுழைந்ததில் இருந்து கடைசிவரை ஒனறு விடாம எழுதியது எனக்கு நானும் அங்கு இருந்து பார்த்தமாதிரி இருக்கு.
  சூப்பரானா தொகுப்பு

  ReplyDelete
 39. இந்த பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு்ம விழா நிறைவைத் தந்திருக்கிறது என்பதை அறிய வந்ததில் மேலும் மகிழ்ச்சி. அழகாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து வருகிறேன். நன்றிம்மா.

  ReplyDelete
 40. அருமைங்க.. எல்லாருமே எல்லாத்தையும் எழுதிடீங்க, இன்னும் நான் எழுதுறதுக்கு என்ன இருக்கு.. சூப்பர்

  ReplyDelete
 41. அழகான, அர்த்தமுள்ள, தரமான பதிவு! :-)

  ReplyDelete
 42. அருமை சகோ, நானும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது..........அழகாக எழுதியுள்ளீர்கள்

  ReplyDelete
 43. நல்லதொரு பதிவு சகோதரி !!! உண்மையில் மதுமதி உட்பட பதிவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் கடும் உழைப்பு பாரட்டப்பட வேண்டிய ஒன்றே !

  ReplyDelete
 44. ஸலாம் சகோ.ஆமினா,
  லைவ் ரிலே மாதிரி செமை ஃப்லோவில் எழுதி இருக்கீங்க..! ஆனால் லேட்; ஆனாலும் அருமை..!


  ///மொத்தத்தில் இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்!///-----உங்கள் பதிவை படித்தவர்கள் இந்த முடிவுக்குத்தான் சகோ வர முடியும்.

  உங்களுக்கும் விழா குழுவினருக்கும் மகிழ்வுடன் நன்றிகள் ப்ளஸ் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 45. வ அலைக்கும் சலாம் வரஹ்...

  உங்க பின்னூட்டங்கள் எல்லாம் பார்த்து நான் கூட நீங்க ரொம்ப டெரர்ர்ன்னு கற்பனை பண்ணி வச்சுருந்தேன்! ஆனா அன்று எங்க கற்பனையெல்லாம் தவிடுபொடி! குடும்பத்தில் உள்ள நபர் போன்றே இருந்தது உங்களிடம் பேசியது...

  காலையில் வந்ததும் அறிமுகம் செய்து பேசியது, டீ கொடுத்தது, மதியம் அரட்டை, ஒன்றாய் சாப்பிட்டது என கடைசியாக ஆட்டோவில் ஏறும் வரை வழியனுப்பி ஷாம்க்கு பை சொன்னதெல்லாம் மறக்கவே முடியாத ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள்! மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்!

  //ஆனால் டேய் உனக்கு நகைச்சுவைலாம் சரிப்பட்டு வராது என்று என் உள் மனசு சொல்லியதால் அந்த அதீத முயற்சியை ஒத்தி வைத்து விட்டேன்.//
  ஹா..ஹா..ஹா... உங்களை 'அனல் தெரிக்கும் மேடைபேச்சாளன்', 'சீரியஸ் பின்னூட்ட புயல்' ஆகவே கற்பனை பண்ணிட்டேனா... நீங்க நகைச்சுவையா போட்டிருந்தாலும் திட்டினது போலவே தான் தெரிஞ்சுருக்கும் அவ்வ்வ்வ்வ்! ஆனாலும் உங்க மனதைரியத்தை பாராட்டுறேன் :-)

  ReplyDelete
 46. @சேக் தாவூத்

  //ஏன்னா நான்லாம் அமைதி விரும்பியாக்கும்.//
  அஹ்ஹூ அஹ்ஹூ (இருமல் ;-)

  //மாஷா அல்லாஹ். ஹீ இஸ் வெரி கியூட்.//
  ஜஸக்கல்லாஹ் ஹைர் அண்ணா

  //ஷாம்க்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தான் ஷாம் இலையை மொத்தமாக காலி பண்ணியவர். ஆனால் அந்த பழி என் மேலும் விழுந்து விட்டது. ஷாம் இலையில் இருந்து எனக்கு வந்தது வெங்காய சட்னி மட்டும் தான். ஷாம்க்கு பக்கத்தில் யார் உட்கார்ந்து இருந்தவர் என்பதை போட்டோவில் பார்த்து கொள்ளவும். //

  அடேடே... அப்படியா? இலையில் இருந்து எடுக்கும் போது சேக்கிற்கு என சொல்லி தானே எடுத்தார்! திட்டமிட்ட சதி என்பது இதுதானோ :-)))))

  ReplyDelete
 47. @சேக்தாவூத்

  //இணையத்தில் ரன்னிங் கமென்ட் கொடுத்து அலப்பறை கொடுக்கும் டீக்கடை சிராஜ் அண்ணனை நேரில் பார்க்கும் போது பூவினும் மெல்லிய மனிதராகவே தெரிந்தார்.//

  HAA..HAA..HAA... ROFL

  அவர் சம்பாரிக்கிற பணம்லாம் உங்களுக்கு கொடுத்தே காலியாகிடும்போல! உண்மைய சொல்லுங்க எவ்வளவு கொடுத்தாக?...

  பூவினும் மெல்லிய என்ற வார்த்தையை எப்படி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம சொல்ல உங்களுக்கு மனசு வந்துச்சு???? :-)))

  ReplyDelete
 48. @சேக் தாவூத்

  ‎// அது மெட்ராஸ்பவன் சிவா அவர்களை சந்திப்பது என்பது தான்.//

  உண்மை தான் சேக்! அவரை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது! ப்லாக் ஆரம்பித்ததில் இருந்தே நல்ல பழக்கம். கன்னியமாக பழகக்கூடியவர், தனது ப்ளாக்கிலும் இதையே பின்பற்றுவார்.

  அவர் சாட்டில் வந்து அவ்வாறு சொல்லியிருக்காவிட்டால் நான் வந்திருப்பேனா என்னன்னு தெரியல.. அருமையான மனிதர்! பல பதிவுலக சர்ச்சைகளில் நடுநிலை கடைபிடித்தவர்! இன்னும் சொல்லிட்டே போகலாம்.. தல தல தான்!

  ReplyDelete
 49. @குட்டன்

  சந்திப்பில் கலந்து கொண்டது பற்றி மகிழ்ச்சி!
  //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 50. ///மொத்தத்தில் இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்!//

  Fantastic words

  ReplyDelete
 51. @முரளிகண்ணன்

  அருமையான பதிவு. அசத்தல் கவரேஜ்
  //

  நன்றி சகோ!

  ReplyDelete
 52. @NKS.ஹாஜா மைதீன்

  சலாம் சகோ...

  சுவாரஸ்யமாக தொகுத்து உள்ளீர்கள்....உங்கள் மகன் கியூட்டா இருக்கான்...//

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 53. @மணி ஜி.

  நன்றாக கவர் செய்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. கேட்டரிங் ஏற்பாடு அண்ணன் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள்.. நானில்லை:-)
  //

  எழுதும் போதே குழப்பமாக இருந்துச்சு! யாரேனும் சுட்டிகாமித்தால் மாற்றலாம் என்று நினைத்திருந்தேன்! பதிவர் சந்திப்பில் 2வரும் ஒருவரே என நினைத்தேன்! நேற்று வீடுதிரும்பல் ப்ளாக்கில் மணிஜீ என போட்டு வேற போட்டோ இருந்தது! அப்போது தான் இதில் எந்த மணி என குழப்பம் வந்தது! :-)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 54. @தருமி

  வருகைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 55. @ஜலீலா அக்கா
  நீங்க ஊரில் இருப்பதாகவே நினைத்தேன்! அதனால் சந்திப்பில் உங்களை எதிர்பார்த்தேன். அதன் பிந்தான் நீங்க இல்லைன்னு தெரிஞ்சது. உடல்நிலை நலம் தானே அக்கா? வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

  ReplyDelete
 56. @பால கணேஷ்

  இந்த பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு்ம விழா நிறைவைத் தந்திருக்கிறது என்பதை அறிய வந்ததில் மேலும் மகிழ்ச்சி. அழகாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து வருகிறேன். நன்றிம்மா.

  //

  பதிவர் சந்திப்பு பற்றி பேசும்போதெல்லாம் சாதிகா அக்கா உங்களை பற்றி அதிகம் குறிப்பிட்டாங்க. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி சகோ

  உங்கள் அனைவரின் உழைப்பும் கண்டு அன்று வியந்துதான் போனேன்! உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோ

  ReplyDelete
 57. @சீனு
  //அருமைங்க.. எல்லாருமே எல்லாத்தையும் எழுதிடீங்க, இன்னும் நான் எழுதுறதுக்கு என்ன இருக்கு.. சூப்பர் //

  ச்ச...ச்ச.. அப்படியெல்லாம் சொல்லப்படாது! நீங்க பம்பரமா சுற்றிய கதையை நிச்சயம் எழுதுங்க :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 58. @வருண்
  //அழகான, அர்த்தமுள்ள, தரமான பதிவு! :-)//

  :-))))

  நன்றி சகோ

  ReplyDelete
 59. சாரி சகோ... உங்க பதிவ கவனிக்கலை. நாந்தான் லேட்டா வந்துருக்கேன் போல.

  வீட்ல புறப்பட்டதுலேர்ந்து நிகழ்ச்சி முடிஞ்சி போனதுவரை அழகா விவரிச்சிருக்கீங்க. நீங்களெல்லாம் வந்தது எங்களுக்கு கூடுதல் பலம்+மகிழ்ச்சி, சிவா லேடீஸ் விசயத்துல ரொம்ப அக்கரை எடுத்துகிட்டான் அதனாலதான் சிவாவுக்கு உங்களை கவனிக்கிற பொறுப்பை ஒப்படைத்தோம், சிவாவுக்கு ஒரு நன்றியச் சொல்லிடுங்க.

  இனிமேல் உங்கள் பதிவுகளில் என் கமெண்ட் கண்டிப்பா இருக்கும். உங்க பதிவுகள் மிஸ் பண்ணாம இருக்க ஃபாலோவர் ஆயிட்டேன் :)

  ReplyDelete
 60. @abd sham
  அருமை சகோ, நானும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது..........அழகாக எழுதியுள்ளீர்கள்//

  வாங்க தம்பி

  வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 61. @இக்பால் செல்வன்
  //நல்லதொரு பதிவு சகோதரி !!! உண்மையில் மதுமதி உட்பட பதிவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் கடும் உழைப்பு பாரட்டப்பட வேண்டிய ஒன்றே ! //
  உண்மை தான் சகோ. நேர்த்தியான திட்டமிடல்! அதிகமான உழைப்பு! அருமையாக விழாவை நடத்திசென்றார்கள்

  ReplyDelete
 62. @சிட்டிசன்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  //ஆனால் லேட்; ஆனாலும் அருமை..!//

  ரம்ஜான்க்கான விடுமுறையை விட்டுகொடுக்க கூடாது எனும் உயரிய கொள்கையோட சென்றதால் அக்கொள்கையை நிறைவேற்றிவிட்டு ஊர் வந்து சேர ஒரு வாரம் ஆனது! சகோ.சலாதீன் பதிவு போடுறேன்னு ஏமாத்துறீங்களா என கேட்க நேற்று உடனே எழுத ஆரம்பித்தேன்! இல்லைன்னா இன்னும் லேட்டா வந்திருக்கும் அவ்வ்வ்வ்வ்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 63. @Student Drawings

  ///மொத்தத்தில் இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்!//

  Fantastic words
  //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 64. //இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)//

  அருமை,கலக்கல்,வாழ்த்துக்கள்,தொடருங்கள்,நன்றி :-)

  இதுவரை முகம்காட்டாத சில மர்ம நபர்களின் புகைப்படம் போட்டதுக்கும் நன்றி..

  ReplyDelete
 65. @பட்டிக்காட்டான் ஜெய்

  வாங்க சகோ! இதான் முதல் வருகை இல்லையா? மிக்க மகிழ்ச்சி
  //சாரி சகோ... உங்க பதிவ கவனிக்கலை. நாந்தான் லேட்டா வந்துருக்கேன் போல. //

  சாரிச்சுட்டேன்! இனி கரேக்ட்டா வந்துடணும் :-)))

  //சிவாவுக்கு ஒரு நன்றியச் சொல்லிடுங்க//
  நான் மண்டபத்திலேயே சொல்லிவிட்டேன்! பாராட்டிவிட்டும் வந்தேன்! தல எப்பவும் பெர்பெக்ட்தான்

  உங்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகளும் பாராட்டுக்களும் சகோ!

  ReplyDelete
 66. @Riyas

  //இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)//

  அருமை,கலக்கல்,வாழ்த்துக்கள்,தொடருங்கள்,நன்றி :-)//

  சூப்பர், சான்சே இல்ல, கலக்கிட்டீங்க, அடேங்கப்பா, பென்டாஸ்டிக், பெர்பெக்ட், உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...-இதுபோன்ற வார்த்தைகளை போடாததுக்கு வன்மையான கண்டனங்கள் ஹா...ஹா..ஹா...

  // இதுவரை முகம்காட்டாத சில மர்ம நபர்களின் புகைப்படம் போட்டதுக்கும் நன்றி..//

  :-))))))))

  ReplyDelete
 67. :-))

  சிரிச்சு மாளவில்லை!

  ReplyDelete
 68. கண்ட நிகழ்ச்சியை அருமையா எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 69. உங்களது எழுத்துத் திறமை பிரமிக்க வைக்கிறது. உங்களது இயல்பான எழுத்து நடை படிக்க படிக்க அலுப்பு தட்டாமல் சுவாரஸ்யமாக இருக்கிறது. தேர்ந்த எழுத்தாளரைப் போல் எழுதுகிறீர்கள். நான் இப்போது தான் முதல்முறையாக உங்க ப்ளாக்கிற்கு வருகிறேன் சகோதரி. இனி.. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 70. உங்களது எழுத்துத் திறமை பிரமிக்க வைக்கிறது. உங்களது இயல்பான எழுத்து நடை படிக்க படிக்க அலுப்பு தட்டாமல் சுவாரஸ்யமாக இருக்கிறது. தேர்ந்த எழுத்தாளரைப் போல் எழுதுகிறீர்கள். நான் இப்போது தான் முதல்முறையாக உங்க ப்ளாக்கிற்கு வருகிறேன் சகோதரி. இனி.. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 71. மிகவும் சுவாரசியமாக இருந்தது பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் மிகவும் அனுபவித்து எழுதி உள்ளீர்கள் தோழி !!!...உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .இதுபோன்ற
  அனுபவம் என்றுமே தொடரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 72. @Gopi Ramamoorthy

  :-))

  சிரிச்சு மாளவில்லை!
  //

  :-)நன்றி சகோ  ReplyDelete

 73. @Rabbani

  கண்ட நிகழ்ச்சியை அருமையா எழுதி இருக்கீங்க

  //
  மிக்க நன்றி சகோ.ரப்பானி

  ReplyDelete

 74. @Rabbani

  கண்ட நிகழ்ச்சியை அருமையா எழுதி இருக்கீங்க

  //
  மிக்க நன்றி சகோ.ரப்பானி

  ReplyDelete

 75. @உதயம்
  //உங்களது எழுத்துத் திறமை பிரமிக்க வைக்கிறது. உங்களது இயல்பான எழுத்து நடை படிக்க படிக்க அலுப்பு தட்டாமல் சுவாரஸ்யமாக இருக்கிறது. தேர்ந்த எழுத்தாளரைப் போல் எழுதுகிறீர்கள். நான் இப்போது தான் முதல்முறையாக உங்க ப்ளாக்கிற்கு வருகிறேன் சகோதரி. இனி.. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி!//

  நீங்கள் இந்தளவுக்கு சொல்லும் அளவு எதுவும் இல்ல சகோ. வீட்டில், பிரன்ட்களிடத்தில் பேசுவது போலவே தான் எழுதியிருக்கேன்.

  ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ. உங்க பாராட்டு என்னை இன்னும் மெருகேற்றும். நன்றி

  ReplyDelete
 76. @அம்பாளடியாள்

  ஆம் தோழி. ரொம்பவே ரசித்த நிகழ்ச்சி! அந்நியமாய் எதுவும் தெரியவில்லை...

  முகம் பார்த்து பழகும் உறவினர்கள் விஷேஷங்களிலேயே பல குறைகள் காண முடியும். யாரோ ஒருவர் வீட்டு பங்க்‌ஷன் என்பது போல் தோணும். ஆனால் அங்கே வந்த யாரையும் முன்பின் நேரில் சந்திக்காதவர்கள்! ஆனாலும் பலநாள் பழகியவர்கள் போல் நடந்துக்கொண்டார்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

  ReplyDelete
 77. நல்ல தெளிவான பகிர்வு..விழாவை நேரில் பார்த்த உணர்வை எற்படுத்திவிட்டது எனலாம்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 78. தோழி மீண்டும் தூண்டும் நினைவலைகளை உங்கள் பதிவு .......வரி வரியாய் அந்த நாளை வரிசைபடுத்தி சொல்லி அசத்திடீங்க

  ReplyDelete
 79. அஸ்ஸலாமு அலைக்கும்.
  விழாவில் கலந்துக் கொள்ள முடியாத குறையை நிகழ்வை நேரில் பார்த்த மன நிறைவு தந்தது உங்களது அருமையான
  எழுத்தாற்றல் . மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி உங்களுக்கு . பேரன் ஆஷிக் அதிகமாக சாப்பிடமாட்டார் .ஆனால் அவர் பக்கத்தில் உள்ள சகோதரர் சேக்தாவூத் நல்லா சாப்பிட்டிருப்பார்
  JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
  "Allah will reward you [with] goodness."

  ReplyDelete
 80. நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 81. லேட்டா பதிவு போட்டாலும், படிக்கும்போது சந்தோசமா இருக்கு ஆமினா.

  ReplyDelete
 82. ஆமி சூப்பரா எழுதிட்டே. நான்லாம் போட்டோக்கள ப்போட்டே ஒப்பேத்திட்டேன் உன் அளவுக்கு சுவாரசியமால்லாம் எழுத வராதும்மா. உன்னையும் முகம் தெரியாத பல பதிவர்களையும் சந்தித்தது இன்னமும் மனசுல அப்படியே நிக்குது இனி எங்க பதிவர் சந்திப்பு நடந்தாலும் தவராம போயி முத ஆளா கலந்துக்கனும்னு தோனுது.ஒவ்வொருவரைப்பற்றியும் நன்னா சொல்லி இருக்கே. வாழ்த்துகள் இந்த பதிவர் திருவிழா இவ்வளவு சிறப்பாக நடக்க கடுமையாக உழைத்த பதிஉலக நண்பர்களுக்குத்தான் நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் போய்ச்சேரனும். ஒவ்வொரு விஷயத்தயும் கவனித்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாங்க.எத்தனை காசு கொடுத்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கவே கிடைக்காது. நாமெல்லாம் ரொம்ப லக்கிதான் வேர என்ன சொல்ல.

  ReplyDelete
 83. அஸ்ஸலாமு அலைக்கும்,

  @ ஆமினா,

  அப்படியே லைவ் ரிலே பார்த்த மாதிரி இருக்கு உங்க பதிவு. அல்ஹம்துலில்லாஹ். நீங்க பேசாம ஏதாவது மீடியாவுல சேர்ந்து ரன்னிங் கம்மென்ட்ரி கொடுக்கலாம் :-) :-)

  அப்புறம் ஒரு முக்கியமான விசயம். மருமகன் ஷாமோட சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாதுன்னு நான் எடுத்ததெல்லாம் சரிதான். பட் அதுல பெரும்பான்மைய சாப்டது எனக்கும் ஷேக்கும் நடுவுல உட்கார்ந்திருந்த ஷர்புதீன் தான் :-)

  @ நீடூர் அலி அப்பா,

  சரியா சொன்னீங்க. :-) :-)

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 84. ஷாமைத்தான் நான்லாம் ரொம்ப மிச் பண்றேன். தூயா போன் பண்ணும்போது ஷாம்கிட்ட பேசினியாம்மான்னு கேட்பா. ஷாம்க்கு எல்லா வளங்களும் கிடைச்சு பெரிய ஆளா வரனும். நான் அவன் பெரியம்மான்னு சொல்லி, நான் மகிழனும். அவனுக்கு என் ஆசிர்வாதங்கள் தங்கச்சி.

  ReplyDelete
 85. ஐஸ்கிரீம் சாப்பிட்டது ஷாம். ஆனா, கும்முனது என்னை.ஷாம் மட்டும் என் கையில கிடைச்சான்.., அவனை கட்டிபிடிச்சு கன்னத்துல ஒரு கடி கடிச்சுப்பேன்.

  ReplyDelete
 86. சுவாரஸ்யமாக பகிர்வு.. நேரில் நானும் கலந்துக்கொண்ட உணர்வு...

  ReplyDelete
 87. அஸ்ஸலாமு அலைக்கும்,
  பதிவர் சந்திப்பை பற்றி வந்த பதிவுகளிலே உங்கள் பதிவுதான் அருமையாக இருந்தது.கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டது போல இருந்தது. நானும் இன்று முதல் உங்கள் FOLLOWER.

  ReplyDelete
 88. எங்க மேடம் உங்க படத்தைக் காணோம்!!
  மேடம் இன்னொரு விஷயம், நானும் கடை திறந்திருக்கேன், முடிஞ்சா வந்திட்டுப் போங்கமேடம்!!

  http://jayadevdas.blogspot.in/2012/09/18.html

  ReplyDelete
 89. This comment has been removed by the author.

  ReplyDelete
 90. பதிவர் சந்திப்பைப் பற்றிய உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)