சங்கை மிகு ரமலானை நம் அடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மற்ற மாதங்களை போல் அல்லாமல் இப்புனித மாதத்தில் இறை நெருக்கம் பெற வேண்டி நம் இறைவழிபாடு இன்னுமின்னும் கூடுதலாகவே இருக்கும். ஆனால் பெண்களால் ஆசைபட்ட அளவிற்கு இறைவழிபாட்டில் ஈடுபட முடியாமல் போகிறது. காரணம் நோன்பின் சஹர் உணவையும் இப்தார் விருந்தையும் சேர்த்து இரவு உணவு மற்றும் குழந்தைகளை கவனிப்பது என நேரங்களை செலவழிப்பதில் கழிவதால் இறைவழிபாட்டிற்கான கால அளவு என்பது மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும்.  அப்படிப்பட்டவர்களுக்கான திட்டமிடுதல் ஆலோசனைகள் அடக்கியதே இந்த பதிவின் நோக்கம். 

என்னன்ன செய்யலாம்?

ப்போதே வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சுடுங்க. தூசி தட்டுவது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது, பெரிய பெரிய பெட்ஷீட், கார்ப்பெட், ப்ளாங்கெட் முதலியவற்றை சுத்தம் செய்துவிடுங்கள். ரம்ஜான்க்காக  வீடு அலங்கரிக்க கடைசி நோன்புகளில் மிகவும் சோர்வாக இருப்பதால் இவற்றை அன்று முறையாக செய்வது கடினமாகிவிடும் என்பதால் அனைத்தையும் இன்றிலிருந்தே ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிக்கலாம்.

நோன்புக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் என்னன்னன்னு இப்பவே லிஸ்ட் போட்டு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க. அப்பப்ப வெயிலில் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

நோன்பு நேரங்களில் வேலை சுலபமாக முடிய அசைவ உணவையே விரும்புவார்கள். ஒரு கிலோ இஞ்சிக்கு இஞ்சி,600 கிராம்  பூடு என்ற விகிதத்தில்  முன்பே அரைத்து உப்பு தூவி  பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகிக்கலாம்.

சின்ன வெங்காயத்தை உறித்து பாட்டிலில் அடைத்து வையுங்கள். அதோட புதினா கொத்தமல்லி ஆகியவற்றையும் தனித்தனியே ஆய்ந்து எடுத்து வைங்க.

பாத்திரங்களை அவ்வபோது கழுவி கொண்டால் பாத்திரம் சேராமல் இருக்கும். மொத்தமாக சேர்த்து கழுவ நினைத்தால் நிறைய நேரம் செலவழியக்கூடும்.

டைக்கு 3 நாட்களுக்கு சேர்த்தார் போல் அரைத்தெடுத்து கைபடாமல், எடுப்பதற்கு சுபலமாக மூன்று பாகங்களாக பிரித்து டப்பாக்களில் அடைத்து ப்ரீசரில் வைக்கலாம். பொரிப்பதற்கு 3 மணி நேரத்தில் அறைவெப்பநிலையிலேயே குளிர் போய்விடும்.

ட்லெட், சமோசா போன்றவற்றை முன்பே தயாரித்து ஒன்றோடொன்று ஒட்டாத வகையில் அடுக்கி பிரீஜ் செய்து வைத்து நோன்பு திறக்க அரைமணி நேரம் முன் வெளியெ எடுத்து வைத்து பின்னர் பொரிக்கலாம்.

மோசா, ப்ரெட் சான்விச் போன்றவற்றிற்கான ஸ்டப்பிங் மசாலாவை முன்பே  அதிகமா செய்து வைத்துக்கொண்டு அவ்வபோது தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே பூரிக்கு மாவு தயாராக இருப்பதால் வேலை சுலபம் :-)

ப்தார்க்கு எண்ணெய் வகைகளை விட பழங்கள் அதிகமா சேர்த்துக்கொள்ளுங்கள். ப்ரூட்  கஸ்ட்டர்ட்  அதிகமாக செய்து ப்ரிஜ்ஜில் வைச்சுடுங்க.

ஜூஸ், ரோஸ் மில்க் போன்றவற்றை 2 நாட்களுக்கு சேர்த்து செய்துவிடலாம்.

சுண்டல் செய்வதென்றால் அரைகிலோ அளவிற்கு ஊறவைத்து வேகவைத்து எடுத்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவைக்கு எடுத்து தாளித்துக்கொள்ளலாம்.

ப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கும் 3 நாட்களுக்கு சேர்த்தார் போல் மாவு பிசைந்து 3 பாகங்களாக பிரித்து ப்ரீசலில் வைக்கலாம்.

சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து    எண்ணெய் விடாமல் லேசாக  இரு பக்கம் திருப்பி போட்டு பின்னர்  ஆறவைத்து மொத்தமாக ப்ரிஜ்ஜில்  கொள்ளலாம். தேவைப்படும் வேளையில்  எண்ணை விட்டு சுட்டு சாப்பிடலாம்.

நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள்) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.

புளியை கரைத்து ப்ரீஜ் செய்து வைக்கலாம். ரசம், புளிகுழம்பு  வகைகள் உடனே செய்துமுடிக்கலாம். புளி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளலாம் (1/4 கிலோ புளிக்கு 4 டம்ளர் நீர் விட்டு குக்கரில் 2 விசிலுக்கு வைத்து ஆறியதும் வடிகட்டி ஐஸ் க்யூப் டப்பாக்களில் ஊற்றி வைக்கலாம்.

ம்மூர்ல தேங்காய் பொடி கிடைக்காது. குருமா, குழம்பு வகைகளுக்கு தேங்காய், தேங்காய் பால் சேர்க்க வேண்டி வரும். தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். தேங்காய் பால் எடுத்து ப்ரீஜ் செய்து வைத்தும் உபயோகிக்கலாம்.

குழம்பு வகைகளை 2 நாட்களுக்கு சேர்த்தால் போல் அதிகமாக செய்துடுங்க.

ள்ளிவாசல் மூலமாக நோன்பு கஞ்சி கிடைத்துவிடும். அவ்வாறு கிடைக்கபெறாதவர்கள் நோன்பு கஞ்சி செய்ய அதிகமாகவே மெனக்கெடுவார்கள். அப்படி செய்யகூடியவர்கள் அரிசியை முன்பே பொடித்துக்கொள்ளுங்கள். பாசிபருப்பை கருகாமல் வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ பொரித்த அரிசிக்கு கால் கிலோ பச்சை பருப்பு மற்றும் ஒரு மேசைகரண்டி வெந்தயம் கலந்து வைக்கவும். தேவைக்கு அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் எடுத்து உபயோகிக்கலாம்.

நோன்பு நேரத்தில் பல வீடுகளில் நோன்பு திறந்தவுடன் சாப்பிட ஒரு சமையல், ஷகருக்கு ஒரு சமையல்னு இருக்கும்.. அதற்கு பதிலாக நோன்பு திறந்தவுடன் நம்மால் அதிகம் சாப்பிட இயலாது அப்போது அதிக உணவு சாப்பிட வேண்டும் என்பதை விட, ஆரோக்கியமான உணவு சாப்பிட முயற்சிக் கொள்ள வேண்டும்..
நோன்பு திறக்க பழ வகைகள் தேவையான அளவு நறுக்கி வைத்து, ஜூஸ் மற்றும் சிம்பிள் ஆ செய்யக் கூடிய ஓட்ஸ் சூப், ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி, உப்புமா என்று எளிதில் சமைக்கக் கூடிய நேரத்தை தின்னாத சிம்பிள் சமையல் செய்யலாம். இதனால் இஃப்தாருக்கு சமைக்க வேண்டிய நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தை ஷகருக்கு சமைக்க பயன்படுத்தலாம்

திலும் ஷகருக்கு தேவையான கொழம்பு, கூட்டு அனைத்தையும் நோன்பு திறக்கும் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் நோன்பு திறந்த பின் செய்ய வேண்டிய அமல்களான குர்-ஆன் ஓதுதல், இரவுத் தொழுகை அனைத்தும் பாதிக்கப்படாது, சோறு வடிப்பதை மட்டும் இரவுத் தொழுகை முடிந்த பின்னோ அல்லது ஷகருக்கு சற்று முன் எழுந்தோ வைத்துக் கொள்ளலாம்.. நேரம் பற்றாத நிலையில் குக்கரில் சாதத்தை வைத்துக் கொள்ளலாம்..நேரத்தோடு தூங்க இயலும், தஹஜத்துக்கு எழுவதற்கு ஏதுவாகும்.

பெரும்பாலும் நாம் சஹர் செய்துட்டு உடனே படுத்துவிடுகிறோம். இதனால் பலவேளைகளில் பஜர் தொழுக முடியாமல் போய்விடுகிறது. சஹர் முடிந்ததும் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தால் பஜர் நேரம் வந்ததும் தொழுதுவிடலாம். தெம்பாக இருக்கும் போதே வீட்டுவேலை செய்துமுடிச்சுட்டா பின்னர் அலுப்பாக இருக்காது. டூ இன் ஒன் :-)

அப்பறம் இதையும் பாருங்க எக்கசக்கமான உபயோகமான ஆலோசணைகள் இருக்கு - ரமலானுக்கு தயாராவோமா?

அப்பறமென்ன? சமையல் செய்யும் நேரத்தை குறைத்து இம்மை வாழ்வின் நலத்திற்கும்  மறுமை வாழ்வின் வெற்றிக்கும் தேவையான அமல் செய்யும் நேரத்தை அதிகப்படுத்தி இறையன்பையும் இறை நெருக்கத்தையும் பெறுவோமாக

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்


நன்றி- ஜலீலா அக்கா, முபி ஜன்னத், யாஸ்மின் மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம்

டிஸ்கி- இது தவிர வேறேதும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க..

, ,

சமீபத்தில் மீண்டும் அந்த செய்தி கேட்க நேர்ந்தது...

"பட்டும் புத்திவரல... இன்னும் அப்படியே தான் இருக்கான்" என்று புலம்பினார் உறவினர்..

அப்போதுதான் மரணதண்டனை பக்கம் கவனம் திரும்பியது... கூடவே ஒரு நண்பர் பேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு படமும் நியாபகத்திற்கு வந்து இப்பதிவை எழுத தூண்டியது...

சரி தூக்குதண்டனை பற்றி நண்பர்கள் , தோழிகளிடம்  கருத்துகேட்ட போது அவர்களின் ஒருமித்த பதில்:
1. உயிரை எடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு
2. தூக்கு தண்டனை கொடுத்ததுனால சமூகத்தில் குற்றங்கள் குறைந்ததா என்ன? அப்படியே தானே இருக்கு?
இது சரியான கருத்து தானா? இல்லை தவறான புரிதலா?? இதை முடிவு செய்யும் முன் சில சம்பவங்களை பார்த்து விடுவோம்...

 நண்பர் பகிர்ந்த ஒரு குற்றவாளியின் புகைப்படம் பற்றி!
எப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்.
வாழ்க சட்டம்! வளர்க அதன் ஓட்டை

அந்த குற்றவாளி பற்றி சிறு விளக்கம் :-  கை இல்லாத ஊன முற்றவனாம்... சவுமியா என்ற கேரள பெண்ணை ரயிலில் போய்க்கொண்டிருக்கும் போது கற்பழிக்க முயற்சி செய்திருக்கிறார்.  பயந்து போயி ஓடும் ரயிலில் இருந்து குதித்திருக்கிறார் அந்த பெண். தலையில் பலத்த அடி... அந்த கொடூர நாய்  அப்போதும் விடாமல், அவனும் குதித்து தண்டவாளத்தில் வைத்து  கற்பழித்திருக்கிறான்.  வெகுவிரைவிலேயே அவனுக்கு மரணதண்டனையும் இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது...

இப்ப என்ன மேட்டருன்னா... தொர  ஜெயில்ல கொடுக்குற  சாப்பாடுலாம் சாப்பிட மாட்டாராமாம்...  காலைல இட்லி, மதியம் பிரியாணி, நைட் பரோட்டான்னு மெனு கொடுக்குறாராமாம்.. இதெல்லாம் கொடுக்கலைன்னா தலைவரு உண்ணாவிரதம் இருப்பாராமாம்...

ஆயுள் தண்டனை இவனை எந்தளவுக்கு மாற்றத்தை கொடுத்தது????  பயம் எதாவது வந்துச்சா??? எப்படியும் கருணை மனு போட்டு நம்மல விட்டுடுவாய்ங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!  6 மாசம் கழிச்சு நீதிமன்றத்திற்கு கூடிட்டு வரும் போது பாக்கணுமே சார்ர! அடேங்கப்பா... சின்னதம்பி பிரபு தோத்துபோயிடுவாரு :-)

சரி உறவினர் சொன்ன அந்த நபர் பற்றி சில விளக்கங்கள் :

பெயரில் மட்டுமே முஸ்லீம்மை தாங்கிக்கொண்டிருக்கும் இவர் ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக  சிறை சென்றவர்.  பண வசதியின் காரணமகாக  6 மாதத்தில் திரும்ப வந்துவிட்டார்.  அந்த 6 மாத காலத்தில் போலிசாரால்  எவ்வளவு சித்ரவதை அனுபவித்தார் என்பதை அவர் மூலமே பலமுறை கேட்டதுண்டு. என் அவதானிப்புபடி சில காலங்கள் மட்டுமே அந்த பயத்துடன் இருந்தார்... மீண்டும் அடிக்கடி அம்மாவின் "பட்டும் திருந்தல" என்ற வார்த்தை அவ்வபோது ஒலித்துக்கொண்டிருக்கும்!

சரி இவருக்கு கொடுக்கப்பட்ட சிறை தண்டனையும், அபராத தொகையும் எந்த அளவுக்கு குற்றங்களை குறைத்தது??? இவருக்கு அதிகப்படியான தண்டனை விதித்திருந்தால் சமூகத்தில் குற்றங்கள் குறையுதோ இல்லையோ, அவர் வீட்டு வாரிசுகள் "ஜெயில்க்கு போனா என்ன? எங்க வீட்ல எப்படியாவது கூடிட்டு வந்துடுவாங்க" என சொல்ல மாட்டார்கள் இல்லையா? வாரிசுக்கு வாரிசுகள் என குற்றத்திற்கான தண்டனையின் வீரியத்தை உணர்ந்து கட்டுகோப்பாக வளர்ப்பார்கள் இல்லையா??? இனிமே எல்லாரும் பணத்தை முன்கூட்டியே நீதிமன்றத்துல அபராதமா கட்டி அதுக்கப்பறம்  பொழுதுபோக்குக்காக கற்பழிச்சாலும் ஆச்சர்யப்படுவதற்கில்ல!

டுத்து,
என் பள்ளியின் அருகில் நடந்த சம்பவம். மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திட்டார்  மாமியார்.... அப்பெண்ணின் கணவனும், மாமியாரும் சும்மா கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்தாங்க... ஜெயிலில் இருந்து திரும்பி வந்த சில மாதங்களில்  அந்த வீட்டை விற்க ஆட்களை கூடிட்டு  வந்திருந்தாங்க.. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்கள் பேசிகொண்டிருந்த காட்சி இன்னும் கண்ணில்...  அவ்வளவுதான்... வீட்டை வித்துட்டு  சென்னை மதுரைன்னு போய்ட்டா அங்குள்ள  எவனுக்கு என்ன சேதி தெரிய போகுது??? மாமியார் வீட்ல ஜெயில் கம்பிக்கு பெயின்ட் அடிச்சுட்டிருந்தவன் புதுமாப்பிள்ளையாகிடுவான்... பாவம் இன்னொரு குடும்பம், இன்னொரு அப்பாவி பெண்.....,அடுத்து மீண்டும் முளைக்கும்  மாமியார் கொடுமைன்னு போக வேண்டியது தான்....

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட சிறுவன் பற்றி முன்பு எம்மூரில் மிக பரபரப்பாக பேசினாங்க... இப்ப மூச்! அவ்வளவுதான்.. சட்டம் தன் கடமையை செய்யும்.. பணம் வாங்கி :) காக்கா கொத்திடுச்சாம்... அதுனால செத்துட்டானாம்! ப்ரேத பரிசோதனை ரிப்போர்ட் அப்படிதான் சொல்லுதாம்! :) :'(
பிரியாணி கொடுப்பீங்கன்னு நம்பி
தானே ஜெயிலுக்கு சுத்திபாக்கலாம்னு
வந்தேன்??!!!


ப்பறம் இன்னொரு விஷயம்.... பல பேரை கொன்ற, மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி கசாப் இப்ப என்னா பந்தாவா போறாரு.. வராரு... அட அட அட! பேசாம நம்மலும் ஜெயிலுக்கு போனா சம்பாதிக்காம 3 வேளைக்கும் சாப்பிடலாம் போல... வாவ்வ்வ்வ்வ்வ்... ஜெயிலுக்கு போறதுக்கும் குடுத்து வச்சுருக்கணும் மக்கான்னு இவனுங்கள பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்... எப்பவாது விசாரணைன்னு கோர்ட்க்கு கூட்டிட்டு போவானுங்க... ச்ச.. அதென்ன பெரிய விஷயம்? சம்மந்தம் சம்மந்தமில்லாம பதில் சொல்லி ஜட்ஜ் மண்டைய போட்டு பிச்சிக்க வைக்க தான் பயிற்சி எடுத்திருக்கோமே.... அந்த வித்தை பத்தாதா? எப்படியும் சமாளிச்சுக்கலாம்! - இப்படிதான் நெனைப்பானுவ!

ஆக... இன்னொரு தீவிரவாதிக்கு நம்ம எளிமையான வழியை உருவாக்கி கொடுத்துட்டோம் இல்லையா? :'(  மீண்டும் ஒரு சம்பவம் நடந்து ஆயிரம் மக்களை கொல்ல திட்டம் தீட்ட முயற்சித்தாலும் மனதில் துளி அளவும் பயம் இருக்காது அத்தீவிரவாதிக்கு... ஏன்னா விசாரணைன்னு சொல்லி எப்படியும் நாட்களை கடத்துவாய்ங்கன்னு தெரிஞ்சு போச்சு...

இதுல வேற எத்தனையோ நாடு தூக்குதண்டனையை ரத்து பண்ணுச்சாம்! ஐநா ல கூட தீர்மானம் கொண்டு வந்தானுவளாம்...! பயபுள்ளைங்க வேற மரண தண்டனை வேண்டாம்னு 'மரணதண்டனை எதிர்ப்பு மாநாடு'ன்னு கூட்டுதுங்க.. இத பார்க்கும் குற்றவாளிகள் அல்லது குற்றம் செய்ய நினைப்பவர்கள் நாம தெகிரியமா கொலை, கற்பழிப்பு செய்வோம்,நம்ம விசாரணை முடியைரதுக்குள்ள மரணதண்டனையை முழுக்க ரத்து பண்ணிடுவாய்ங்கன்னு தொலைநோக்குதிட்டம் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை :-)

என் கேள்வி.............

1. உயிரை எடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே  உள்ளது.. மனிதர்களுக்கில்லை எனில் ஒரு உயிரை கொடூர முறையில் பறித்தவனுக்கு யார் உரிமை கொடுத்தது?

2. ஒருவனுக்கு ஆசிரியர் கொடுக்கும் தண்டனை  மாணவர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் போது, ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையால் சமூகத்தில்  குற்றங்கள் 100 சதவீதம் ஒழியவில்லை என்றாலும் பயம்மாவது ஏற்படுத்தாதா? ஐய்யோ.. இப்படி செஞ்சா நம்ம உயிரும் போய்டும்னு பயம் வராதா? அப்பாலிக்கா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... அதையும் சொல்லிடுறேன்... தண்டனைகள் அதிகமா உள்ள நாட்டில் தான் குற்றங்கள் கம்மியா இருக்கு!  நீங்க வேணும்னா கூகுளார் கிட்டையும் விக்கி பய கிட்டையும் கேளுங்க! சொல்லுவானுவ!

3. தினசரிகளில் செய்தி செவியேற்கும்போது "இவனையெல்லாம் நடுரோட்ல அடிச்சு சாவடிக்கணூம்"ன்னு தானாகவே  சொல்லும் நாக்கு  சில காலங்கள் கழிந்ததும் அந்த குற்றத்தின் வீரியத்தை மறந்து "மரணதண்டனை லாம் வேண்டாம்" என சொல்வது எப்படி நியாயமாகும்? நாட்கள் கடந்ததும் குற்றத்தின் அளவு குறைந்துவிட்டதோ??? அல்லது பாதிக்கப்பட்டவர் நம் உறவினர் இல்லையே.., எவனோ ஒருத்தன் பாதிக்கப்பட்டா நமக்கென்ன என்ற சுயநல/அலட்சிய போக்கா??

4. பாதிக்கப்பட்டவங்க பார்வையில் இருந்து சட்டத்த அனுகுங்க... அவஙகளுக்கு தான் தெரியும் இழப்பின் வலி...குற்றம் செஞ்சவனின் பார்வையில் இருந்து சட்டத்த அணுகாதீங்க... அப்டி செஞ்சா இப்ப இருக்கிற மாதிரி குற்றங்களின் எண்ணிக்கை கூடுமே ஒழிய குறையாது..

5.  சிட்டிசன், ரமணான்னு பாக்கும் போது கை தட்றோம்... மேடைன்னு வந்துட்டா ஆச்சா, பூச்சான்னு மரணதண்டையே ஒழிகன்னு கோஷம் போடுறோம்..  அப்ப என்னதான்பா பண்ணனும்னு சொல்றீங்க கொலை குற்றவாளிய?

6. ஏற்கனவே இந்திய நீதி மன்றங்கள்ள நிலுவையில் உள்ள கேஸ்களின் எண்ணிக்கை கோடிகளை தொட்டுவிட்டது..இதில் குற்றவாளிகல மன்னிச்சு மன்னிச்சு வெளில விட்டுகிட்டு இருந்தா... வெளங்கிடும்.... இயல்பான வழிகள்ள யோசிங்க..உணர்ச்சிவசப்பட்டு அசாதாரணமா யோசிக்காதீங்க....

குறிப்பு : சில பேர் ரொம்ப புத்திசாலித் தனமா தூக்கு போட்ட பிறகு அவன் குற்றமற்றவன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்கன்னு கேட்பாங்க... ஐயா விசாரணை முடிஞ்சு 100% உறுதியான குற்றவாளியதான் தூக்குல போட சொல்றோம், மற்றவங்கள இல்ல...
அப்படின்னா, குற்றமற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பது மட்டும் ஓக்கேவா??? நீதித்துறையையும், விசாரணை முறையையும் நேர்மை ஆக்குங்கப்பா... அது தான் இன்றைய கட்டாய தேவை... குற்றத்துக்கு அபராதம்னு, 3 மாசம் ஜெயில்ன்னு காமெடி பண்ணாம கொஞ்சம் நல்லபுள்ளையா சீரியஸ்ஸான பனிஷ்மென்ட் கொடுத்துபாருங்க! காமெடி பண்றதே சட்டத்துக்கு வேலையா போச்சு! ஹைய்யோ...ஹைய்யோ


நன்றி-கூகுள் இமேஜ்,

, , ,