பரமக்குடில ரோட்டுல போகும் போது  விரல் விட்டு எண்ணிட்டே வந்தா எப்படியும் கண்டிப்பா புரோட்டா கடை எண்ணிக்கை 150க்கும் மேல் தாண்டும். சாயங்காலம் ஆகிட்டா போதும் ஊரே சால்னா வாசன தான். எத்தன முறை சாப்பிட்டாலும் சளிக்காது. காரணம்  கமகம சால்னா . எத்தனையோ
இடங்களில் சாப்பிட்டும் பரமக்குடி சால்னா சுவையை அடிச்சுக்க முடியாதுன்னு சொல்ற அளவுக்கு ரொம்ப சுவையானது. முக்கியமா புளுடைமன், பாபா, விஷாகம் போன்ற கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோத காரணம் சால்னாவின் ருசி தான்... இப்படியே சால்னா புராணம் பாடிடே இருந்தா எப்படி? வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்

தேவையான பொருட்கள்
 •  சிக்கன்- 1/2 கிலோ
 • இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
 • கொத்தமல்லி- 2 கைப்பிடி
 • புதினா- 2 கைப்பிடி
 • பச்சை மிளகாய்-4
 • தக்காளி-2
 • வெங்காயம்-4
 • தேங்காய்-1/2 மூடி
 • நிலக்கடலை- 50 கிராம்
 • கசகசா- 3 ஸ்பூன்
 • முந்திரி குருணை- 8 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
 • மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
 • பட்டை- 1 துண்டு
 • ஏலக்காய்-3
 • கிராம்பு-4
 • அன்னாசி பூ- 2
 • பிரிஞ்சி இலை-1
 • பெரிய ஏலக்காய்- 3
 • எண்ணெய்- 4 மேசை கரண்டி

செய்முறை

 •  நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். 
 • அத்துடன் தேங்காயை சேர்த்து மைபோல் அரைத்துக்கொள்ளவும். 
 • கசகசாவை நீர் ஊற்றி கொதிக்க விட்டு(அரைபட சுலபமாக இருக்க) ஆறியதும் முந்திரி குருணையுடன் அரைத்துக்கொள்ளவும்.
 • பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை,ஏலக்காய், அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெரிய ஏலக்காய் ஆகியவற்றை போடவும்.
 • பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பின் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
 • அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லி,புதினா சேர்த்து சுருள வதக்கவும்.
 • தக்காளியை பிழிந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
 • பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.
 • சிக்கனை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
 • இப்போது எண்ணெய் பிரிந்து மேல வரும். அடுப்பை அணைத்துவிட்டு மெதுவாக மேலே உள்ள எண்ணெயை ஸ்பூன் கொண்டு எடுக்கவும். இதன் பெயர் லிமா.
 • மீண்டும் அடுப்பில் வைத்து அரைத்த விழுதுகளை சேர்த்து வாசனை போக கொதிக்கவிடவும்(10 நிமிடத்திற்கு)
 • அவ்வளவு தான் சால்னா ரெடி ;)
 • புரோட்டா, பூரி, சப்பாத்தி எல்லாத்துக்கும் சூப்பர் ஜோடி

அப்பறம் லிமா பத்தி சொல்ல மறந்துட்டேன்(கடைகளில் சாப்பிடும் நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கலாம். தெரியாதவர்களுக்காக...). அதிக காரம் சேர்ப்பது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது குழந்தைகள் சாப்பிட முடியாமல் இருக்கலாம். அதற்காக கடைகளில் இந்த கார எண்ணெய் லிமாவை பிரித்து தனியாக எடுத்துவிடுவார்கள். காரம் குறைவாக சேர்ப்பவர்கள் எடுக்க தேவையில்லை. அதே போல பெரியகடைகளில் லிமா பிரித்தெடுத்த உடனேயே சிக்கனை எடுத்து தனியாக வைத்துவிடுவார்கள் (எதுக்குன்னு நான் சொல்லியா தெரியணும்? எல்லாம் உடைந்து போகாமல் இருக்க தான் ;). சைவ விரும்பிகள் சிக்கன்க்கு பதிலாக உருளை, கோபி, மீல்மேக்கர் சேர்க்கலாம்.

, , ,

99 comments:

 1. முந்திரி குருனை எட்டு ஸ்பூனா?\\

  அப்ப ரொம்ப கமகம்முமே.

  ப்ரோட்டாஅ சால்னா இனி பதிவுலகம் முழுவதும் கம கமக்கும் போல இருஎக்கே

  ReplyDelete
 2. நமக்கும் அசைவத்துக்கும் ரொம்ப தூரம்.

  ReplyDelete
 3. சால்னா சமையல் குறிப்புக்கு நன்றிங்க....

  ReplyDelete
 4. படத்த பார்க்கும் போதே வாசனையும் சுவையும் நாக்குல ஊருதே!
  சகோ நீங்க பரமக்குடியா?! என்னோட சொந்த ஊர் பார்த்திபனூர் தான்.

  ReplyDelete
 5. மிக மிக அருமை.பார்க்கவே ருசியாக இருக்கு,இந்த சால்னா செய்து பார்க்க வேண்டும் ஆமினா.

  ReplyDelete
 6. படிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது.(mouth watering !) சில விஷயங்களை நினைத்தலே நாக்கில் நீர் ஊறும். சிறு வயதில் மாங்காய் பறித்து அதில் உப்பும் மிளகு பொடியும் சேர்த்து அம்மியில் லேசாக சதைத்து சாப்பிடுவோம் அதை நினைதாலே நாக்கில் நீர் ஊறும். அது போல் ஆகிவிட்டது இதுவும். நம்ம ஆள்கிட்ட இதை செய்யசொன்னா ...? சே..செ வாந்தில்லாம் வராது.

  ReplyDelete
 7. கமகமன்னு வாசனை வருதுங்க :-))

  ReplyDelete
 8. வீட்டுக்கு பார்சல் அனுப்புவீங்களா ?... :-)

  ReplyDelete
 9. "அழகிய அனுபவம் பெற விரும்பினால் இங்கே வாங்க"
  good experience.
  colourful pictures.

  ReplyDelete
 10. அசத்தலுங்க .... அற்புதமா சொல்லி இருக்கீங்க.. அப்படியே கொஞ்சம் செய்து அனுப்பினால் இன்னும் நல்லா இருக்கும்

  ReplyDelete
 11. படங்களை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

  ReplyDelete
 12. செய்துடலாம்.குருமா மாதிரியே ஆனால், நிலக்கடலை சேர்த்து அரைப்பது தான் வித்யாசம்.

  ReplyDelete
 13. படிக்கும்போதே சாப்பிடனும் போல இருக்கே...

  ReplyDelete
 14. இருக்கிறீர்கள். அப்படி என்றால் சகோதரிக்கு எந்த ஊர்? நான் இளையான்குடியை சார்ந்தவன். ஹோட்டல் புளுடைமன்ட் இளையான்குடியை சார்ந்தவர்.

  ReplyDelete
 15. பரமக்குடி ஹோட்டல் செய்தியும் புதுசு!! நீங்கள் போட்டிருக்கிற புரோட்டோ சால்னாவும் புதுசுங்கோ!!

  ReplyDelete
 16. கட்டுரை எழுதிய கைகளெல்லாம் கரண்டியை பத்தி எழுத ஆரம்பித்தால் அப்போ சமையல் ப்ளாக்கின் நிலைமை ???
  நமக்கு ஏன் இந்த அடுப்பாங்கரை வேலை ?

  சரி..சரி எழுதிப்புட்டியே .....கருத்து சொல்லாமல் போனால் நல்லா இருக்காது நல்லாத்தான் சொல்லி தர்றியே பரமக்குடிக்கு போனால் கண்டிப்பா ப்ளூ டயமன்டிற்கு போறேன்.
  உங்கள் சமையலும் ஓக்கேதான்..!!!

  ReplyDelete
 17. அடி தூளு... சால்னா அருமை (புகைப்படங்களில்..) உப்பு கொஞ்சம் கம்மியா போடுங்க அக்கா..

  ReplyDelete
 18. @சித்ரா
  //mouth-watering recipe//
  ;)
  மிக்க நன்றி சித்ரா

  ReplyDelete
 19. @ஜலீலாக்கா
  //
  ப்ரோட்டாஅ சால்னா இனி பதிவுலகம் முழுவதும் கம கமக்கும் போல இருஎக்கே//

  மிக்க நன்றிக்கா

  ReplyDelete
 20. @எல்.கே
  //நமக்கும் அசைவத்துக்கும் ரொம்ப தூரம்.//
  பஸ் பிடிச்சாவது வந்துட மாட்டீங்களா? அட கோபி, ஆலு வச்சு செஞ்சு பாக்க சொல்லுங்க ;)

  ReplyDelete
 21. @மாணவன்
  மிக்க நன்றி மாணவன் :)

  ReplyDelete
 22. @பாலாஜி
  உங்க ஊருக்கு பக்கத்துல இருக்குற வீர சோழனும் என் ஊர் தான் ;)

  ReplyDelete
 23. @ஆசியா

  மிக்க நன்றி ஆசியா

  கண்டிப்பா செய்து பாருங்க.. சுவைக்கு நான் கேரண்டி ;)

  ReplyDelete
 24. @இனியவன்
  //நம்ம ஆள்கிட்ட இதை செய்யசொன்னா ...? சே..செ வாந்தில்லாம் வராது.//

  பாவம் ஏன் அவங்கள தொந்தரவு பண்ணனும்??? நீங்களே செய்து கொடுத்து அவங்கள அசத்திடுங்க :)

  உங்க நினைவலைகளீல் கூடவே சேர்ந்து நானும் கொஞ்சம் நேரம் பயணம் செய்து வந்தேன் :)

  ReplyDelete
 25. @அமைதி சாரல்
  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 26. @இளங்கோ
  அனுப்பிட்டா போச்சு ;)

  ReplyDelete
 27. @கீதா
  //"அழகிய அனுபவம் பெற விரும்பினால் இங்கே வாங்க"
  good experience.
  colourful pictures//
  நன்றி கீதா ;)

  ReplyDelete
 28. @அரசன்
  மிக்க நன்றி அரசன்

  ReplyDelete
 29. //sakthistudycentre-கருன் said...

  படங்களை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது.//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 30. @அமுதா
  நிலகடலை சேர்க்காம சால்னா செய்யவே மாட்டாங்க எங்க ஊர்ல ;)

  ReplyDelete
 31. @ஹாஜா

  சாப்பிட்டாச்சா என்ன? :)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 32. @பெரோஸ்
  //இளையான்குடியை சார்ந்தவன்//
  அப்படியா ?
  // ஹோட்டல் புளுடைமன்ட் இளையான்குடியை சார்ந்தவர்.//
  கூடுதல் தகவலுக்கு நன்றிங்க.... கருவகட்டை ஹோட்டல், சால்னா பத்தி மட்டும் தான் தெரியும். அவர பத்தி சரியா தெரியல...

  ReplyDelete
 33. @எம். அப்துல் காதர்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 34. @அந்நியன்
  //நமக்கு ஏன் இந்த அடுப்பாங்கரை வேலை ?//
  உண்மையிலேயே இந்தியாவில் பெண் சுதந்திரம் இருக்குங்க.... ;)

  அப்படியே பாபா, விஷாகம் கடைக்கும் போய்ட்டு வாங்க... அப்பறம் பண்ண விளம்பரத்துக்கு ஆள் வரலைன்னா என்னைய சாத்திடுவாங்க :)

  ReplyDelete
 35. @பாரத் பாரதி
  //உப்பு கொஞ்சம் கம்மியா போடுங்க அக்கா..// எங்கேயோ இடிக்கிதே???!! :)

  ReplyDelete
 36. //நம்ம ஆள்கிட்ட இதை செய்யசொன்னா ...? சே..செ வாந்தில்லாம் வராது.//

  பாவம் ஏன் அவங்கள தொந்தரவு பண்ணனும்??? நீங்களே செய்து கொடுத்து அவங்கள அசத்திடுங்க :)//

  சும்மாதான் சொன்னேன் அவங்களும் சமைக்கிறதுல எக்ஸ்பர்ட் தான். ஆனா இந்த சால்னா மேட்டரை சொன்ன டயரி எடுத்துட்டு வந்து எழுதி இம்சையை கூட்டுவாங்க.

  ReplyDelete
 37. @இனியவன்
  //ஆனா இந்த சால்னா மேட்டரை சொன்ன டயரி எடுத்துட்டு வந்து எழுதி இம்சையை கூட்டுவாங்க. //

  ஹா...ஹா...ஹா,,,,

  ReplyDelete
 38. எட்டு டீஸ்பூன் முந்திரி..உடம்பு என்னத்துக்காகிறது?ஆமினா,லக்னோவில் தமிழ்நாட்டு அரசு இலவச அரிசி வழங்குவது போல் இலவச முந்திரி வழங்குகின்றதா என்ன?ஒகே...அவசியம் உங்கள் முறையில் சால்னா வைத்து விடுகின்றேன்.பரோட்டாவை கண்ணிலேயே காட்டலியே?

  ReplyDelete
 39. @ஸாதிகா அக்கா
  //எட்டு டீஸ்பூன் முந்திரி..உடம்பு என்னத்துக்காகிறது//
  கண்டிப்பா இந்த முறையில் செய்து பாருங்க... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்;)

  புரோட்டா அடுத்த பதிவுல காட்டிடுறேன் ;)

  ReplyDelete
 40. Salaams 2 U Sister Aminaa,
  Saalnaa really superb.
  I have learned a new method here.
  Thanks.

  ReplyDelete
 41. செஞ்சி பார்துடவேண்டியதுதான்

  ReplyDelete
 42. இப்பதிவை வண்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு முறை என்னை போன்றோரை எண்ணி பார்த்திருந்தால் இப்படியொரு பதிவை போட்டிருப்பீர்களா.??? வீட்ல அம்மா இதெல்லாம் கேட்டா வெளக்காமாற தூக்கிகிட்டு வீடு வீடா துறத்துவாங்க.. நானே செய்யனும்னாலும் டைம் கிடைக்கிறதில்ல.. இப்படி இருக்கையில இப்படி விதவிதமா போட்டோவேற எடுத்து.. என்ன கொடும இது..??? சரி அசைவம் நமக்கு இல்லன்னு உட்டுட்டு ஆறுதல் பண்ணிகிடலாம்னு பாத்தா கடைசியில
  //சைவ விரும்பிகள் சிக்கன்க்கு பதிலாக உருளை, கோபி, மீல்மேக்கர் சேர்க்கலாம்//

  வாட் ஈஸ் திஸ்..??? ஐ ஆம் டோட்டலி டிசப்பாயின்டட்..

  ReplyDelete
 43. ஆமி பின்னூட்டம் கொடுக்க முடியாம ஒரு குறிப்பைக்கொடுத்துட்டீங்களே.

  ReplyDelete
 44. என்ன ஆமினா மேடம். ப்ளாக்குலேயே நிறைய நேரம் செலவழிக்கிறதா வீட்டுகாரரிடம் இருந்து கம்பிளையண்டா? அதுனால கிச்சனில் கணவருக்காக சிறிது நேரம் செலவழித்து ,கணவருக்காக தான் சமைத்ததை அப்படியே போட்டோ எடுத்து போட்டு டூ இன் ஒன் போல கணவரையும், ப்ளாகையும் கவனித்து விட்டிர்கள். நல்ல சூப்பர் சமத்து தாங்க நீங்க...அப்படியே ஒரு விசா எடுத்து யூ.எஸ் வந்து சமைத்து போட்டீங்கனா நல்லா இருக்கும்

  ReplyDelete
 45. Ha ha ha...

  படங்களும் விளக்கமும் அருமை அருமை நானும் முயற்ச்சி பண்ணிப்பார்க்கப் போறேன் மிக்க நன்றி

  ReplyDelete
 46. சால்னா சூப்பராயிருக்கு...அறுசுவையில் நீங்க கொடுத்த தேங்காய்ப்பால் சாதம் செய்தேன்..கறிவேப்பிலை வாசனையுடன் கமகமன்னு இருந்தது...மிக்க நன்றி ஆமினா!!

  ReplyDelete
 47. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

  மிக மிக அருமை.

  சுவைக்கு கேரண்டி தரும்போது
  செய்து பார்த்துட வேண்டியதுதான்.

  ReplyDelete
 48. //வெங்காயம்-4//

  சால்னா பெரிய பட்ஜெட் தான் போல.

  //அன்னாசி பூ//

  ஆச்சர்யம்

  ReplyDelete
 49. பரமக்குடி சால்னா பற்றி கூறுவதை பார்த்தால், ரொம்ப அருமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. சமைத்து பார்த்து விட வேண்டியது தான்.

  ReplyDelete
 50. ஆமினா...நல்லாயிருக்கும்போல இருக்கே.செய்து பாக்கணும் கண்டிப்பா !

  ReplyDelete
 51. @சகோ ஆஷிக்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 52. @பர்கான்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 53. @தம்பி கூர்மதியன்
  ஹா...ஹ..ஹா....

  இந்த புலம்பல் தான் எனக்கு வேண்டும் ;)

  ReplyDelete
 54. @லெட்சுமிம்மா

  பரவாயில்லமா.... அடுத்த முறை அசைவம் கொடுக்குரதா இருந்தா தலைப்புலையே கொடுத்துடுறேன்... அதுக்கு மட்டும் வராம அட்ஜஸ் பண்ணிக்கோங்க ;)

  ReplyDelete
 55. @அவர்கள் உண்மைகள்
  உண்மைய எப்படி கண்டுபிடிச்சீங்க? ;))

  வருகைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 56. @மகா தேவன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 57. @மேனகா

  ரொம்ப நன்றி மேனகா... தேங்காய் சாதத்தையும் மறக்காம சொன்னதுக்கும் சேர்த்து :)

  ReplyDelete
 58. @ஆயிஷா
  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  கண்டிப்பா செய்து பாருங்க பா

  மிக்க நன்றி

  ReplyDelete
 59. @பலே பிரபு
  //சால்னா பெரிய பட்ஜெட் தான் போல.//
  இன்னுமா???????

  அன்னாசி பூ பாத்ததில்லையா? எல்லா கடைகளிலுமே கிடைக்குமே..... ;)

  ReplyDelete
 60. @சகோ இளம்தூயவன்
  ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும் .... செய்து பாருங்க

  நன்றி சகோ

  ReplyDelete
 61. @ஹேமா
  கண்டிப்பா ஹேமா....

  வருகைக்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 62. @சிவகுமார்
  :)
  அனுப்பிட்டா போச்சு... ஒரு வாரம் கழிச்சு வந்தா நான் பொறுப்பில்ல ;)

  ReplyDelete
 63. ஆமி, நோ, கமெண்ட்ஸ், சாரி.

  ReplyDelete
 64. @கோமு
  //ஆமி, நோ, கமெண்ட்ஸ், சாரி.//
  :)

  ReplyDelete
 65. ஸலாம் சகோ..கொஞ்சம் டிலே..

  என்ன போங்க..2011ல போயி பரொட்டா,சால்னான்னு...இதெல்லா சாப்பிடுவத நான் 2007லயே நிருத்தியாச்சி..இப்பல்லாம்,பிஸ்ஸா,பர்கர்,சாண்ட்விச்,இப்டித்தா போய்ட்டி இருக்கு..
  ஆமா இந்த சால்னாவ மேற்படி ஐடங்களுக்கு சைட் டிஸ்'ஆ யூஸ்பன்னலாமா??

  வீட்லா இப்போ பிஸ்ஸா செஞ்சு பழகிக்க சொல்லிட்டேன்.???

  பரமக்குடி சால்னாவா இது?? முந்திரி,அன்னாசி பூ'லாமா போடுராக???

  என்னவோ போங்க..

  ம்ம்..ஜலீலாக்கா,ஆசியாக்காவுக்கு போட்டியா கடைய போட்டுடீங்க..

  ஆனா பாக்குரதுக்கு சூப்பரா இருக்கு சகோ..

  ஆமா சகோ..சால்னா'ல உப்பு போடலன்னா நல்லா இருக்காதே,,..உங்க லிஸ்ட்லையும் உப்ப கானோம்..குறிப்புலையும் உப்ப காணோமே சகோ..

  எவ்வள்வோ எக்ஸ்பர்ட்ஸ் எல்லா விசிட் பண்ணி கமெண்ட் குடுத்துட்டு போய்ட்டாங்க...ஹ்ம்ம்...

  எப்புடித்தா என் கண்ணுல மட்டும் இதெல்லா சிக்குதோ தெரியல..

  உப்ப போட்டுருங்க...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 66. //இந்த புலம்பல் தான் எனக்கு வேண்டும் ;)
  //

  என்ன ஒரு வில்லத்தனம்.!!!

  ReplyDelete
 67. ///ம்ம்..ஜலீலாக்கா,ஆசியாக்காவுக்கு போட்டியா கடைய போட்டுடீங்க.//

  .அன்பு ரஜின் இது வரை நான் எங்கு யாருக்கும் போட்டியா கடைய போட்டதில்லை,

  எனக்கு போட்டியாதான் நிறைய பேர் கடைய் போட்டு கொண்டு இருக்காங்க

  ஹிஹி ஹி

  ReplyDelete
 68. செம விருந்து !!!

  ReplyDelete
 69. நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

  ReplyDelete
 70. தங்கை ஆமினா அவர்களுக்கு

  அண்ணேகிட்ட உண்மையை மறைக்க கூடாது

  இந்த சால்னாவை மச்சான் தானே செய்தாரு

  சமையலில் எங்க மச்சான அடிஞ்சிக்க்க
  ஆளே இல்லை

  ReplyDelete
 71. @ரஜின்
  வ அலைக்கும் சலாம் வரஹ்....

  //ஆமா இந்த சால்னாவ மேற்படி ஐடங்களுக்கு சைட் டிஸ்'ஆ யூஸ்பன்னலாமா??//
  எந்த ஐட்டங்களுக்குன்னு விவரமா சொன்ன்னா சொல்லலாம் ;))

  //பரமக்குடி சால்னாவா இது?? முந்திரி,அன்னாசி பூ'லாமா போடுராக???//
  பரமக்குடி வந்தா கேட்டு பாருங்களேன்... பக்கம் தானே? :)

  //ம்ம்..ஜலீலாக்கா,ஆசியாக்காவுக்கு போட்டியா கடைய போட்டுடீங்க//
  அட... அந்தளவுக்குலாம் எனக்கு சத்தியமா சமைக்க வராது சகோ. ஏதோ சரக்கில்லாத நேரங்களில் எடுத்து விட்டு சமாளிச்சுக்குவேன். அவ்வளவு தான். அதையே என்னவர் என்னைய கொல்றது பத்தாதான்னு கத்துறார் :( சோ நோ போட்டி...

  //எப்புடித்தா என் கண்ணுல மட்டும் இதெல்லா சிக்குதோ தெரியல..//
  1ங் க்லாஸ் புள்ள மாதிரி எழுத்து கூட்டி படிச்சா இப்படி தான் ஆகும் ;)

  ReplyDelete
 72. @தம்பி கூர்மதியன்
  ;)

  ReplyDelete
 73. @ஜலீலாக்கா

  //.அன்பு ரஜின் இது வரை நான் எங்கு யாருக்கும் போட்டியா கடைய போட்டதில்லை,

  எனக்கு போட்டியாதான் நிறைய பேர் கடைய் போட்டு கொண்டு இருக்காங்க
  //

  உங்களுக்கே போட்டியா? யாரது ?? சொலுங்கக்கா.....
  சத்தியமா நான் இல்ல ஹி...ஹி...ஹி....

  ReplyDelete
 74. @விஜய்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 75. @ஹைதர் அலி அண்ணா

  //அண்ணேகிட்ட உண்மையை மறைக்க கூடாது

  இந்த சால்னாவை மச்சான் தானே செய்தாரு

  சமையலில் எங்க மச்சான அடிஞ்சிக்க்க
  ஆளே இல்லை//
  எங்கேயாவது நான் ஒளறி கொட்டிட்டேனா?????

  9 வது படத்துல லிமா எடுக்கும் போது அவர் கை தெரிஞ்சதுன்னு அதை கூட கஷ்ட்டப்பட்டு கட் பண்ணியும் கண்டு பிடிச்சுட்டீங்களே... :((

  உண்மை தான்.
  காமிரா- ஆமினா
  சமையல் செய்தவர்- முஹம்மத் (என்னவர்;)

  ReplyDelete
 76. sakthistudycentre-கருன்

  கண்டிப்பா வரேன்... ;)

  ReplyDelete
 77. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...
  ஆஹா...,அப்படியே போய்ட்டு இருக்கும் போது ஏதோ கமகமக்கும் வாசனை என்னை இழுக்க உள்ளே நுழைந்தேன்.ஆளையே தூக்கும் பரோட்டா சால்னா....
  பார்க்கும் போதே நாலு பரோட்டாவை பிச்சி போட்டு இந்த சால்னாவை ஊற்றி ஊறவிட்டு சாப்பிட்டால் எப்பைட் இருக்குமுன்னு தோணுச்சு....
  ரொம்ப நல்லா இருக்கு ஆமினா...
  உங்கள் ஊரின் லிமா பற்றிய விளக்கம் படிக்க புதுசா இருந்துச்சு.
  நேற்று தான் எங்கள் வீட்டில் பரோட்டா... இல்லையென்றால் உடனே செய்து பார்த்திருப்பேன்.பரவாயில்லை அடுத்தவாரத்தில் மீண்டும் ஒருமுறை செய்துட மாட்டேனா என்ன...
  வாழ்த்துக்கள் ஆமினா.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 78. தோழி தங்கள் கருத்தை பார்த்தேன். நீங்கள் விரும்பாதவற்றை கொடுக்க தேவை இல்லை, என நான் முதலாவது பதிவிலேயே கூறி உள்ளேன். நீங்கள் உங்கள் பெயரை மட்டும் கூட,இல்லை என்றால் உங்கள் தள முகவரி மட்டும் கூட அனுப்பினால் நான் சந்தோஷமாக பதிவு செய்வேன்.

  ReplyDelete
 79. பரோட்டா சால்னா அருமை. கடைகளில் செய்யும்போது முந்திரி சேர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். படங்களும் அருமை ஆமினா! கார எண்ணெயை 'தாளிச்ச எண்ணெய்'னுதான் சொல்வோம். ஆனா 'லிமா' புது பெயரா இருக்கே.. அது என்ன பாஷை ஆமினா? சும்மா தெரிஞ்சிக்கலாம்ணுதான்.. :)

  ReplyDelete
 80. நல்ல ரிச்சான சால்னா... இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா ட்ரை பண்றேன்....விருந்தாளிகள் வரும்போது பண்ணினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 81. @அப்சரா
  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  ரொம்ப நன்றி அப்சரா... சமையல் எக்ஸ்பர்ட் என்னைய வாழ்த்தும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு ;)

  கண்டிப்பா அடிச்சு,பிடிச்சாவது செய்துட்டு எனக்கு ரிசல்ட் சொல்லிடுங்க

  ReplyDelete
 82. @பலே பிரபு

  சந்தேகத்தை போக்கியமைக்கு மிக்க நன்றி மற்றும் கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறேன் சகோ :)

  ReplyDelete
 83. @அஸ்மா
  //கடைகளில் செய்யும்போது முந்திரி சேர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.//
  அதான் எங்க ஊர் கடைகளுக்கும் மற்ற ஊர் கடைகளுக்கும் இருக்கும் வித்தியாசம்னு நெனைக்கிறேன் ;) எங்க வீட்டு விஷேசங்களில் மாலை, அல்லது காலை டிபனுக்கு புரோட்டா ஆர்டர் கொடுப்போம். புரோட்டா கடைல செஞ்சுட்டு எங்க வீட்டுக்கு வந்து சால்னா செய்து கொடுத்துட்டு போவாங்க. அப்ப மசாலா நான் தான் அரைச்சு கொடுப்பேன்(மிக்ஸில தான்). அதுனால எனக்கு தெரியும். நீங்க வேணூம்னா விஷாரிச்சு பாருங்களேன்...

  எனக்குமே லிமான்னு அது பேரு தெரியாது அஸ்மா. சிவப்பு கலர்ல மேல மிதக்குமே அந்த எண்ணெய் தானேன்னு பெருஷா கேப்பேன். அப்ப தான் என்னவர் தான் சொன்னார். அப்பறம் நிறைய எடத்துல கடைகளீல் சாப்பிடும் போது கேட்டுருக்கேன்.

  நன்றி அஸ்மா

  ReplyDelete
 84. @பானு
  கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க பானு. செய்யுறதுக்கு முன்னாடி எனக்கு போன் போடுங்க. நானும் விருந்துல ஒரு பிடி பிடிக்கிறேன்

  ReplyDelete
 85. //விரல் விட்டு எண்ணிட்டே வந்தா எப்படியும் கண்டிப்பா புரோட்டா கடை எண்ணிக்கை 150க்கும் மேல் தாண்டும்//

  இருக்கிறதே 10+10 விரலுகதான். அதையும் அங்கங்கே விட்டுட்டு வந்தா, எப்புடி எண்ணுறது? அதுவும் 150-ஆ??? :-))))

  //தேங்காய்-1/2 மூடி,
  கசகசா- 3 ஸ்பூன்,
  முந்திரி குருணை- 8 ஸ்பூன்//

  ஏயம்மா... அதுலயும் தனியா தெளிச்சு எடுக்கிற அளவுக்கு எண்ணெய் வேற!! ரொம்ப ரிச்சானவங்களுக்குத்தான் இது சரிவரும். நாங்க வெயிட்லதான் ஏற்கனவே ரொம்ப ரிச், ஸோ... இந்தப் பழம் புளிக்கும்...

  என்னப் போல ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி ஜிம்பிளா எதாவது செய்முறை போடுங்கக்கோவ்!! ;-)))))))

  ReplyDelete
 86. ஆஹா...இதுக்காக நான் மறுபடியும் செய்யதம்மாள்ல படிக்க முடியுமா????

  அடுத்த தடவை இந்தியாக்கு போறப்ப டெல்லில ஸ்டாபோவர் போட்டுரணும் போலவே... :))

  ReplyDelete
 87. மனைவிக்கு இந்த ஞாயிறு இன்னொரு வேலை. பிரிண்ட் அவுட் ரெடி சகோதரி

  ReplyDelete
 88. @ஹூசைனம்மா

  ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டா பதில் சொல்றேனோ? :-)

  எப்பவாவது யாராவது வந்தா அவங்களுக்கு கொடுத்து ஆராய்ச்சி பண்ணவாவது உதவும்ல :-)

  ReplyDelete
 89. @அன்னு

  ஓ நீங்க அந்த ஏரியாவா???? சொல்லவே இல்ல :-)

  ReplyDelete
 90. @வேலன்

  ஓ அப்படியா......... ரொம்ப சந்தோஷம் ப்ரதர்.......

  சாப்பிட்டுட்டு எப்படி வந்துச்சுன்னு மறக்காம கமென்டுங்க :-)

  ReplyDelete
 91. இதயா.......18 February 2012 at 03:26

  ஏனுங்க.... தாசன் புரோட்டாக்கடையை விட்டுட்டீங்களே..........

  ReplyDelete
 92. எனக்கு சொன்னத வச்சு சொன்னேனுங்க..

  ஊர் நெலவரம் சரியாதெரியாது

  ReplyDelete
 93. ஆமினா அக்கா,

  இந்த பரோட்டா சால்னா ரெஸிப்பி படிக்கும்போதே சுவையாக இருக்கும் என்று உறுதியாக தெரிகிறது.

  வரும் ஞாயிறன்று friends குள்ளாக ஒரு சின்ன get-together இருக்கு.office friends ம் வராங்க. அன்று இந்த சால்னா செய்ய ஆவலாக இருக்கிறோம்.

  1. தக்காளி(2), வெங்காயம்(4) போன்றவை கிராம் அளவில் தந்து உதவமுடியுமா.

  2.//முந்திரி குருணை- 8 ஸ்பூன் என்று கொடுத்திருக்கீங்க.//
  இந்த ரெஸிப்பிக்கு பயன்படுத்தும் முந்திரி கிராம் அளவில் தரமுடியுமா(8 ஸ்பூன் குருணை வரும் அளவிற்கு).

  நீங்க மேலே உள்ள செய்முறை அளவுகளின் படியே பதில்கள் தாங்க அக்கா.நாங்க ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு செய்து கொள்கிறோம்.

  உங்களுக்கு time கிடைக்கும்போது எப்போதும்போல் தெளிவான உங்கள் பதில் தாங்க அக்கா.நாங்கள் சுவைபட செய்வதற்கு உதவியாக இருக்கும்.

  உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  நன்றி.

  ReplyDelete
 94. @சகோ ராஜ்

  மகிழ்ச்சி தருகிறது உங்கள் தொடர் வருகை

  தக்காளி- 50 கிராம்
  வெங்காயம்- 100 கிராம்

  முந்திரி குருணை- 20 கிராம் சரியாக இருக்கும் சகோ


  செய்துட்டு சொல்லுங்க
  நன்றி

  ReplyDelete
 95. அன்பு சகோதரிக்கு,
  உண்மையில் பரமக்குடி சால்னாவை மிஞ்ச முடியாது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஊரில் இருந்து சேலம் செல்லும்போது நிச்சயம் பரமக்குடியில் நின்று சாப்பிடாமல் செல்வதில்லை. நீண்ட நாட்களாக சால்னா செய்ய ஆசை. இந்தவாரம் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். சலாம் (வரஹ்).

  ReplyDelete
 96. வ அலைக்கும் சலாம் வரஹ்...

  இன்ஷா அல்லாஹ் செய்து பார்த்துட்டு சொல்லுங்க :-)

  ReplyDelete
 97. அன்புடையீர் வணக்கம்
  தஙடகளது பதிவுகளை எனக்கு மெயிலில் அனுப்பித் தர இயலுமா?
  நன்றி.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்
  snrmani@rediffmail.com

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)