எங்கே பார்த்தாலும் பரதேசி பாலா வை சைக்கோவாக சித்தரிக்கும் விதமான பதிவுகளை கண்டபோது உள்ளம் கொதித்தது... ரத்த கண்ணீர் வந்தது... அய்யகோ...  -இப்படிதான் என் ஹஸ்ஸை வம்பிழுத்தேன்...  ஹி..ஹி..ஹி.. அவுக பாலா, வர்மா போன்றவர்களின் பேன், விசிறி, ஏசி, ஏர்கூளர்...எல்லாமே............

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ன்னு அத்தன படத்துலையும் எந்த ஹீரோவையாவது முழுவேக்காடா காட்டியிருக்காரா? எல்லாம் ஹால்ப் பாயில் தான்..  ஒரு பெண் மனசை பெண்ணால் தான் புரிஞ்சுக்க முடியும் என்பது போல :-) பாலாவால் தான்  ஒரு சைக்கோவை புரிஞ்சுக்க முடியும்...  பதிவர் வருண் ஒரு பதிவில் சொன்னது போல் உண்மையிலேயே சின்னவயசுல ஏதோ ஒருவிதத்துல பாதிக்கப்பட்டவரா இருப்பாரோ?...  பரதேசி கிளைமேக்ஸ் காட்சி எடுத்துட்டுட்டு மனசு நொந்து போயி சுடுகாட்ல 2 நாள் தூங்கி எழுந்துட்டு வந்தாராம் மனுஷன்... அய்யோ... என்னத்த சொல்ல!!! :-)

Jokes apart...

பாலா செய்தது தப்பாகவே இருக்கட்டும்... ஆனா பணத்துக்காகவும் , புகழுக்காகவும் உயிரினும் மேலான மானத்தை தூக்கி கழட்டி வீசிட்டு பொம்மை போல் தலையாட்டும் நடிகர்களுக்காக நாம் ஏன் பரிதாபப்படவேண்டும்??? ஒருத்தன் "உன்னை செருப்பால அடிப்பேன்..அதுக்கான பணம் வாங்கிக்கோ.. செருப்படி வாங்கிட்டு மீண்டும் என் பின்னாடியே கை கட்டி நிக்கணும்"ன்னு சொன்னா அவன் கொத்தடிமையாக, வேறு வழியே இல்லாமல் மாட்டிக்கொண்டவனாக, அதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளவனாக  இருந்தால் மட்டுமே என்னால் பரிதாபப்பட்டு, அந்த முதலாளியின் முகத்தில் காரிதுப்ப முடியும்...  நான் முன்னேறனும், நாலு பேர் பாராட்ட எப்படி வேணும் என்றாலும் கீழிறங்குவேன் என்பவர்களை என்ன செய்ய முடியும்??? இது பிசினஸ் டீல் மட்டுமே!!!

இது என் பார்வை மட்டுமே... ஒவ்வோர் பார்வை வேறுபடலாம்...

சரி நான் சொல்ல வந்த விஷயம் இது தான்...

படம் வெளியாகும் சமயத்தில் தன்னை ஒரு சைக்கோவாக காட்டி ஏன் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்?  காரணம் ஒன்றே ஒன்று தான்... வியாபாரதந்திரம்... மக்களை ஈர்க்கும் யுக்தி!!!

யூடுப் காட்சியில் முதலிலிருந்து அனைவரும் அடித்து, மிதித்து தன்னை சைக்கோ போல் காட்டிவிட்டு,  கடைசியா ஒரு காட்சியில் அது படமாக்கப்பட்ட ஒரு சீன்னாக காட்டப்பட்டிருக்கு.. அதில் தான் பாலா தந்திரத்தை புகுத்தியுள்ளார்.   யூடூப்பை பார்த்து பொங்கிஎழும் மக்கள் "ஓ இதெல்லாம் படத்துக்காக சொல்லிகொடுக்கப்பட்ட சீன் போல??!!"  என நினைக்கவும்,  மிச்ச அறைவாங்கிய காட்சிகள் படத்தில் வருமா என்ற ஆவலை தூண்டி தியேட்டர் பக்கம் வரவைக்கவும் பண்ணிய பக்கா ப்ளான்... Bala... I appreciate your granularity ...  இந்த நுணுக்கத்தை புரிஞ்சுக்காம தான் நம்ம மக்கள்ஸ் பொங்கி எழுந்திருக்காங்க...   தமிழ் திரையுலகில் தொடர்ந்து நல்ல பல  பைத்தியங்களை உருவாக்கவும்., (சாரி டங்க் ஸ்லிப் ஆய்டுச்சு :-) படங்கள் என வாசிச்சாலும் வித்தியாசம் இருக்காது :-) சினிமா உலகின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டவும் மனமார்ந்த வாழ்த்துக்களுடன்.....

,