இந்த மாசத்துல ஒரு நாள்ல தேர்தல் வரபோவுதாம்ல? ஊரே ஒரே விளம்பர மயம் தான்....... எந்த ஆட்டோவ பார்த்தாலும் மைக்செட்டோட அலையுது. வாக்கு கேட்க வந்த சிலர் சொன்ன காரணங்களை தான் இந்த பதிவுல மேலோட்டமா பாக்க போறோம். வாரீகளா??????

ஒரு நாள்
முனியம்மா வீட்டுக்கு வந்தாக. “எக்கா..... வரணூம் வரணும்னு நெனச்சுட்டே இருப்பேன்... வர நேரம்லாம் வீட்ல பூட்டு தொங்குது... இப்பவாச்சும் பாக்க முடியுதே..... நல்லார்க்கீயாக்கா??” சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் திருமண விஷேஷம் என்றாலும் போகாதவங்க எங்கம்மா...அவங்கள போயி..........
(ஆயிரம் பொய்ய சொல்லியாவது ஒரு முறை தேர்தல் எலக்‌ஷன்ல ஜெயிச்சுட்டா தப்பில்லையோ)

சரிக்கா.... நீயும் ஒரு பொண்ணு, நானும் ஒரு பொண்ணு, பொண்ணுக்கு பொண்ணு நம்ம தான் ஒதவிக்கணும். மறக்காம ஓட்டு போட்டுடுக்கா”

இது தான் முனியம்மாவின் தேர்தல் பிரச்சாரம்....
(வாக்குறுதி கொடுத்துட்டாலும் அத என்ன செய்யவா போறேன்... சொல்லாதத செய்ய மாட்டோம். செய்யாதத சொல்லவே மாட்டோம்)
_______________________
அடுத்து மொக்கராசு
“மாமி போன தடவ ஜெயிக்க வச்ச மாரி இந்த தடவையும் ஜெயிக்க வச்சுடுங்க....... மறக்காம குருவி முட்டாய் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க...”  டேய்...... மாமிக்கு நல்ல தரமான குற்றால துண்டு எடுத்துகொடு........

(அவனவன் 1000 ரூபாய் கொடுத்து வாக்கு கேக்க வருவாய்ங்கன்னு நெனச்சேன்....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... பட் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு)
___________________________

வீட்ல யாரும்மா........ கொஞ்சம் வெளிய வாங்க!

ஷாம்- ஆர் நீங்க

அம்மா கூப்டு தம்பி

ஷாம்- மாட்டேன் வெளையாட போறேன்

சரியான வாலு பையன் (வழிந்துக்கொண்டே)

பின்னர் அம்மா வாசலுக்கு போனாங்க. வாக்கு கேட்க வந்தவங்க தான்.  “சாரும் ட்ரைவர், நானும் ட்ரைவர்....... இந்த மொற ஒரு ட்ரைவர் நிக்கிறதுனால எப்படியாவது ஜெயிக்க வச்சுடுங்க மேடம்”

(இந்த ஒரு தகுதி போதுமா? அடப்பாவிகளா..... என்ன தான் செய்ய போறீங்க... ஒரு பயலும் வாயவே தொறக்கலையே.........) 

அம்மா கையில் இருந்த காகிதத்தை பிரித்தேன்.......
  • இந்த வார்டிலேயே பிறந்து வளந்தவன் என்ற பெயரில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொடுப்பேன்.
  • அரசு நல திட்டங்களை வாங்கி தருவேன்எந்த பிரச்சனையானாலும் என்னை தொடர்பு கொள்ளவும் தொலைபேசி எண்...................  “

இதான் இவரோட தேர்தல் வாக்குறுதியாம். அடக்கொடுமையே :-(

___________________________

இப்ப இதை எழுதும் போதே ஆட்டோவில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

“உங்கள் வெற்றி வேட்பாளன் இம்சை அரசனுக்கு வாக்களிகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம், பாசத்துடன் கேட்டுக்கொள்கிறோம், நேசத்துடன் கேட்டுக்கொள்கிறோம், பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்”

எப்படியெல்லாம் கெஞ்சுறாய்ங்க???
___________________________

இன்னொரு ஆட்டோவில்
நமது வெற்றி வேட்பாளர் கு.ரங்குசாமி உங்கள் இல்லங்களை நோக்கி கடும் வெயில் என கூட பாராமல் வெப்பத்தை பொருட்படுத்தாமல் வந்துக்கொண்டிருக்கிறார்

(சாயங்காலம் வந்தா செண்டிமெண்ட் க்ரியேட் பண்ண முடியாம போய்டுமோ??? )

இதையெல்லாம் விட்டு தள்ளுங்க, முனியம்மாவுக்கும் அம்மா தலையாட்டுனாங்க. மொக்கராசுக்கும் ஓட்டு போட்டுடுறேன்னு சொல்லியிருக்காங்க, ட்ரைவர் வேட்பாளருக்கும் கண்டிப்பான்னு சொல்லியிருக்காங்க. இன்னும் எத்தன பேர் வந்தாலும் அதையே தான் சொல்லுவாங்க. இதையெல்லாம் பாக்குறதே பெரிய வேடிக்கை தான். ஒவ்வொரு முறையும் அம்மா அவர்களை வழியனுப்பும் வரை படும் பாடு ரொம்பவே நகைச்சுவையா இருக்கும்.


இதுல வேற அடிக்கடி என்னையும் ஒரு முறை வீட்டுக்குள் எட்டி பார்த்து “தங்கச்சி நீயும் போட்டுடுமா” என சொல்ல  கொள்ள காலமா நானும் அப்படி தாண்ணே நெனைக்கேன். ஆனா பாருங்க 3 வருஷமா எழுதி போட்டுட்டே இருக்கேன். ஒரு இந்திய பிரஜை தன் ஜனநாயக கடமையை செய்யவே விடமாட்டாய்ங்க போல......... என சொல்ல சிரித்துக்கொண்டே போனாங்க..
   (என்ன கொடும சார் இது????)

டிஸ்கி- பெயர்களும் சின்னங்களின் பெயர்களும்  மட்டும் மாற்றப்பட்டுள்ளது :-)

, ,

56 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....

    நடப்பு நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை.

    எங்க வீட்டுக்கு வந்தவங்க ''எங்கள மறந்துடங்க எங்க சின்னத்தை மறந்துடாம ஓட்டு போடுங்கன்னு சொன்னாங்க''

    ஒருவேளை ஓட்டு போட்ட அப்புறம் அவங்கள மறந்துடனுமோ.....?

    ReplyDelete
  2. @சகோ ஹசன்
    வ அலைக்கும் சலாம் வரஹ்....

    //ஒருவேளை ஓட்டு போட்ட அப்புறம் அவங்கள மறந்துடனுமோ.....?//

    நீங்க கஷ்ட்டப்படவே தேவையில்ல சகோ..... அவங்களே மறந்துடுவாங்க :-)

    ReplyDelete
  3. எங்க ஊர்ளையும் இந்த கூத்துகள் நடக்குது..

    ReplyDelete
  4. ஆமி..இங்க நானும் புலம்பிட்டுதான் இருக்கேன். காலையில எழுப்பி விடறதே வேட்பாளர்கள்தான்..அவங்க ஓட்டு கேட்குறத பாத்தா எனக்கு ,இப்ப நான் நடந்து வந்து ஓட்டு கேட்குறேன்,ஜெயிச்சுட்டா சைக்கிள் கூட இல்லாத எனக்கு பைக்கோ ,காரோ,கண்டிப்பா கிடைச்சுடும்.எந்த வகையில எல்லாம் லஞ்சம் வாங்க முடியுமோ வாங்கி லைப்ல செட்டில் ஆயிடுரேன்.தயவு செய்து என்னை ஜெயிக்க வச்சுடுங்கன்னு கெஞ்சுற மாதிரிதான் இருக்கு.வீட்ல ஒரு வேலையும் பாக்க முடியல ..ஓட்டு கேட்டு காலிங் பெல் அடிச்சிட்டேதான் இருக்கு.இந்த பதிவ கூட டைப் பண்ண முடியல ........

    ReplyDelete
  5. //நீயும் ஒரு பொண்ணு, நானும் ஒரு பொண்ணு, பொண்ணுக்கு பொண்ணு நம்ம தான் ஒதவிக்கணும். மறக்காம ஓட்டு போட்டுடுக்கா”//

    நியாயம் தான்..:)...சரி இவங்க ஆம்பிளைங்க கிட்ட எப்டி கேப்பாங்க..நீயும் நானும் மனித பிறவி அதனால ஓட்டு போடுங்கன்னு சொல்வாங்களோ..:(

    குருவி முட்டாய்...
    சின்னம் பேர கேட்ட உடனையே ஓட்டு போடனும்போல இருக்கு,,,

    சுவாரஸ்யமா மக்களை கவர்ரமாதிரி சின்னம் வச்சுருக்காக..அவங்களுக்கே ஓட்டு போட்டுடுங்க,,,

    (நீங்க...ம்ம்ஹும்ம் கள்ள ஓட்டுதான் போடமுடியும்..:) உங்க விடல போடா சொல்லிருங்க..
    இன்னும் வேறேன்னன்னா சின்னமேல்லா இருக்கு சகோ...

    //அரசு நல திட்டங்களை வாங்கி தருவேன்//
    எதோ மளிகை கடையில சாமான் வாங்கிதர்ற மாதிரி சொல்றாங்க....

    இந்த நேரத்துல ஊர்ல இருக்க முடியாம போச்சே...:)

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  6. இதெல்லாம் கேட்டு,பார்த்து பழகி போச்சு ஆமினா...

    ReplyDelete
  7. ஆமி நானும் இந்தஊருல 20 வர்ஷமா குப்பை கொட்டிகிட்டு இருக்கேன் ஓட்டர்லிஸ்ட்ல என் பேரு சேக்கவே மாட்டேங்குராங்களே? நனும் எங்கல்லாம் போயி அப்லிகேஷன் கொடுக்கனுமோ கொடுத்துட்டுவந்தேன் ஒன்னும் வேலைக்கே ஆகல்லே.

    ReplyDelete
  8. ஆமி புது வீட்டிற்கு வாழ்த்துக்கள்...அங்கு கமெண்ட் போடமுடியவில்லை,இறால் 65 மிக அருமையாக இருக்கு...

    ReplyDelete
  9. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான், ஆனா இங்க கூத்தாடியே ரெண்டு பட்டு கிடக்காங்க, அதனால் நமக்கு எல்லாம் கொண்டாட்டம்...

    ReplyDelete
  10. 19 ஆம் தேதி வந்து எப்ப தான் இந்த களேபரங்கள் முடியும் என்று இருக்கிறது??

    ReplyDelete
  11. கொடுமை ஆரம்பிச்சாச்சு ஒடுங்கலேய் ஒடுங்கலேய்....!!!

    ReplyDelete
  12. வாரவிங்க எல்லாரும் நூறு ரூவா வீதம் தந்தாலே ஆயிரம் ரெண்டாயிரம் தேரும்போல இருக்கே...!!!

    ReplyDelete
  13. இப்போ நான் உங்க பதிவுக்கு ஓட்டு போடணும்னா எம்புட்டு பணம் தருவிக...???

    ReplyDelete
  14. இப்போ இந்த பதிவுக்கு ஓட்டு போடணுமா? வேண்டாமா? நீங்களே சொல்லுங்க அக்கா ! ஹி ஹி ஹி

    ReplyDelete
  15. எங்க வீட்டுக்கும் ஒரு அம்மா வந்தாங்க ஓட்டு கேட்க கூட வந்தவர் சொன்னார். அந்தம்மா ரொம்ப பாவம் அதனால ஓட்டு போட்டிருங்க.??? எனக்கு ஒரு டவுட்டு தேர்தல் என்றால் என்ன என்பதே இவர்களுக்கு தெரியாதோ ஓட்டு என்பது பாவப்பட்டவர்க்கு போடும் பிச்சையா என்ன??

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    //“எக்கா..... வரணூம் வரணும்னு நெனச்சுட்டே இருப்பேன்... வர நேரம்லாம் வீட்ல பூட்டு தொங்குது... இப்பவாச்சும் பாக்க முடியுதே..... நல்லார்க்கீயாக்கா??” சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. //

    ஹா..ஹா..ஹா.. என்னாலயும் சிரிப்பை அடக்க முடியல..

    குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு...

    அரசியல்வாதி பேச்சு, ஜெயிச்சா போச்சு...!

    வேற என்னத்த சொல்ல..?

    ReplyDelete
  17. மறக்காம ஓட்டு போட்டுவிடுங்க..:))

    ReplyDelete
  18. தினம் நிறைய பேர் தேடித் தேடி வருகிறார்கள்.
    இன்னும் ஒரு வாரத்துக்கு.
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  19. //(அவனவன் 1000 ரூபாய் கொடுத்து வாக்கு கேக்க வருவாய்ங்கன்னு நெனச்சேன்....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... பட் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு)//இங்கே ஒரு கர்ஷீப்பைக்கூட காணுமே?

    ReplyDelete
  20. நீங்க கடைசியா போட்டுள்ள கார்டூன் கனகச்சிதம்

    ReplyDelete
  21. ஆமி அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

    http://ponsenthilkumar.blogspot.com/2011/10/2.html

    ReplyDelete
  22. சிரிக்கவா அழவான்னு தெரியலை ஆமினா...

    ReplyDelete
  23. ஸலாம் சகோ.ஆமினா,

    //அவனவன் 1000 ரூபாய் கொடுத்து வாக்கு கேக்க வருவாய்ங்கன்னு நெனச்சேன்.......//

    ---வார்டு கவுன்சிலர் ஆகி 5G spectrum ஊழலா பண்ண முடியும்..? ஏதோ "ஏழைக்கேத்த இழந்தவடை" தர்றாங்கன்னு போவிகளா.. அதைவிட்டுட்டு...!

    எனக்கு நல்லவேளைத்தான் போலிருக்கிறது... இந்த கூத்துக்களிலிருந்தெல்லாம் விடுமுறை..!

    ReplyDelete
  24. ///குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு...

    அரசியல்வாதி பேச்சு, ஜெயிச்சா போச்சு...!///

    அலைக்கும் ஸலாம் வரஹ்....
    சகோ.அப்துல் பாஸித்...
    கலக்கல் கமெண்ட்..!

    பிளாக்கர் நண்பன் 'பஞ்ச் டையலாக்' எல்லாம் விட ஆரம்பிருச்சு..!?!?!? இனி என்ன வெல்லாம் நடக்குமோ..!

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ சொல்லவந்தத நச்சுனு நகைசுவையுடன் அருமையாக சொல்லி இருக்கிறீங்க

    ReplyDelete
  26. நல்ல நகைச்சுவை. எப்படி ஓட்டு கேட்பார்கள் என்பதை மறந்து போன என்போன்றவர்களுக்கு ஞாபகபடுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  27. இம்சை அரசனுக்கு ஒட்டுக்கள் போட்டாச்சு!

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    குருவி மிட்டாய்
    முனிம்மா
    கு.ரங்கசாமி

    ஆமா நீங்க யாரை பத்தி சொல்றீங்கன்னு புரியலையே :)

    ஹி.ஹி. எப்படியோ கோத்து விட்டாச்சு

    ReplyDelete
  29. நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை.

    ReplyDelete
  30. @கருண்

    //எங்க ஊர்ளையும் இந்த கூத்துகள் நடக்குது..//

    எங்கே காணினும் கொடுமையப்பா :-)
    நன்றி சகோ கருன்

    ReplyDelete
  31. @

    ராதா

    //கெஞ்சுற மாதிரிதான் இருக்கு//
    அன்புடன்,பரிவுடன்,பாசத்துடன் கேக்கும் போது கூட “அம்மா தாயே பிச்ச போடுங்கம்மா”ன்னு கேக்குற மாதிரியே இருக்கு :-(

    சொன்ன வாக்குகளை நிறைவேற்றும் பட்சத்தில் கேலி பண்ணுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனா இப்ப இப்படி கெஞ்சி கேட்டுட்டு தேர்தல் முடிஞ்சதும் கண்டுக்காத மாதிரியே போவாய்ங்க பாருங்க.... அப்ப தான் பத்திட்டு வருது.....
    அன்னைக்கு பிச்ச கேட்டவனாடா நீயி?ன்னு மனசுல நெனச்சுட்டு போய்டுவேன் :-)

    ReplyDelete
  32. @சகோ ரஜின்
    ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீக.... வாங்க வாங்க :-)

    //(நீங்க...ம்ம்ஹும்ம் கள்ள ஓட்டுதான் போடமுடியும்..:)//
    அந்த வார்த்தைய சேர்க்கும் போதே நெனச்சேன்... யாராச்சும் வந்து மடக்குவாங்கன்னு :-(

    //எதோ மளிகை கடையில சாமான் வாங்கிதர்ற மாதிரி சொல்றாங்க....//
    அதாச்சு பரவாயில்ல சகோ..... என்னமோ இவங்க காசு போட்டு சொந்தமா வாங்கி தரமாதிரியே பந்தா காட்டுறது தான் ஓவர் :-(

    //இந்த நேரத்துல ஊர்ல இருக்க முடியாம போச்சே...:)//
    ஏன் கவல படுறீங்க... சகோ ஹசன் சொன்னது போலவும், நான் சொன்னது போலவும் போட்டோ எடுக்கலாமே செல்போன் டவர்ல இருந்து :-))

    ReplyDelete
  33. @மேனகா
    //இதெல்லாம் கேட்டு,பார்த்து பழகி போச்சு ஆமினா...//
    எனக்கும் தான் மேனகா... அவங்க வரும் போதே அத தான் மனசும் நெனைக்கும்..... கொஞ்ச நாளைக்கு நமக்கு அடிம கெடச்ச சந்தோஷம் தான் :-)

    ReplyDelete
  34. @மாமி
    //ஆமி நானும் இந்தஊருல 20 வர்ஷமா குப்பை கொட்டிகிட்டு இருக்கேன் ஓட்டர்லிஸ்ட்ல என் பேரு சேக்கவே மாட்டேங்குராங்களே? நனும் எங்கல்லாம் போயி அப்லிகேஷன் கொடுக்கனுமோ கொடுத்துட்டுவந்தேன் ஒன்னும் வேலைக்கே ஆகல்லே.//

    நானும் தான் மாமி ஆறு வயசுல இருந்து சொல்லிட்டிருக்கேன்... இப்ப வரைக்கும் தர மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க :-) வாழ்க்கைல ஒரு தடவையாவது ஓட்டு போடணும்ங்குற என் ஆசை நிறைவேறாமலையே போய்டும் போல :-(

    ReplyDelete
  35. @மேனகா
    //ஆமி புது வீட்டிற்கு வாழ்த்துக்கள்...அங்கு கமெண்ட் போடமுடியவில்லை,இறால் 65 மிக அருமையாக இருக்கு...//

    நன்றி மேனகா
    ஏன் போட முடியல? :-)

    ReplyDelete
  36. @சூர்ய ஜீவா
    //ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான், ஆனா இங்க கூத்தாடியே ரெண்டு பட்டு கிடக்காங்க, அதனால் நமக்கு எல்லாம் கொண்டாட்டம்...//

    படிகட்டுல, மொட்ட மாடில, வீட்டு வாசல்ல இப்படி எல்லா எடத்துலையும் வச்சு படிச்சு பார்த்துட்டேன் சகோ இந்த கமெண்ட்ட .... என் தலைல இன்னும் பல்பு எறியவே இல்ல... யார் ரண்டு பட்டு போனாங்க (நமக்கு அரசியல் வீக் :-)

    ReplyDelete
  37. @அமுதா
    //19 ஆம் தேதி வந்து எப்ப தான் இந்த களேபரங்கள் முடியும் என்று இருக்கிறது??//

    என்ஜாய் அமுதா,.... இதுக்கெல்லாம் சளிச்சுக்கிட்டா ஆகுமா.... அவங்களையே 5 வருஷத்துக்கு ஒருக்கா தான் பாக்குறோம் :-))

    ReplyDelete
  38. @நாஞ்சில் மனோ
    //கொடுமை ஆரம்பிச்சாச்சு ஒடுங்கலேய் ஒடுங்கலேய்....!!!//
    அதான் கடல் தாண்டி ஓடிட்டீங்களே தல.....

    ReplyDelete
  39. @நாஞ்சில் மனோ
    //வாரவிங்க எல்லாரும் நூறு ரூவா வீதம் தந்தாலே ஆயிரம் ரெண்டாயிரம் தேரும்போல இருக்கே...!!!//

    என்னைய பார்த்தா யாருக்கும் கொடுக்கணும்னு தோணல போல சகோ..... எனக்கு ஓட்டு இல்லைன்னு எப்படியோ கண்டு பிடிச்சுட்டாங்களோ??!! :-))

    ReplyDelete
  40. @நாஞ்சில்
    //இப்போ நான் உங்க பதிவுக்கு ஓட்டு போடணும்னா எம்புட்டு பணம் தருவிக...???//

    ஹி...ஹி..ஹி..
    அருவா பறக்கும் :-)

    ReplyDelete
  41. ((சொல்லாதத செய்ய மாட்டோம். செய்யாதத சொல்லவே மாட்டோம்))கலக்கல்

    ReplyDelete
  42. சகோ விஜயன்

    அடடா... இப்படி வேற ஒரு யுக்தியா?? வெளங்கிடும்... ஆளாளுக்கு இனி கண்ணீர் வடிச்சுட்டு வந்தா கள்ள ஓட்டு போடுறத தவிர வேற வழியே இல்லாம போய்டும் :-)

    ReplyDelete
  43. @சகோ பாசித்
    வ அலைக்கும் சலாம் வரஹ்

    //குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு...

    அரசியல்வாதி பேச்சு, ஜெயிச்சா போச்சு...!//

    பன்ச் பாசித் :-)

    ReplyDelete
  44. @ஸ்டார்ஜன் அண்ணா
    //மறக்காம ஓட்டு போட்டுவிடுங்க..:))//
    வச்சுட்டா வஞ்சகம் பண்றாங்க :-))

    ReplyDelete
  45. @ சகோ ரத்ன வேல்

    அதே தான் சார்... 5 வருஷத்துக்கு நாமலே நெனச்சாலும் அவங்கள பாக்க முடியாது... இப்பவே பாத்துக்க வேண்டியது தான் :-)

    ReplyDelete
  46. @ஸாதிகா அக்கா
    //இங்கே ஒரு கர்ஷீப்பைக்கூட காணுமே?//
    அங்காங்கே பண பட்டுவாடா நடந்திட்டிருக்கு க்கா... நாமலெல்லாம் போட்டு குடுத்துடுவோம்னு தப்பு கணக்கு போட்டுட்டு :-) குடுக்காம இருக்காய்ங்க..... ஹா...ஹா...ஹா....

    ReplyDelete
  47. @காட்டுபூச்சி
    //நீங்க கடைசியா போட்டுள்ள கார்டூன் கனகச்சிதம்//

    முதல் வருகைக்கு நன்றி சகோ.... கருத்துக்கும் நன்றி :-)

    ReplyDelete
  48. @ஏமரா மன்னன்
    //ஆமி அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
    //
    நன்றி கருத்து கந்தசாமி

    ReplyDelete
  49. @ரெவெரி
    //சிரிக்கவா அழவான்னு தெரியலை ஆமினா.//
    சிரிட்டு அழலாம்... அழுதுட்டும் சிரிக்கலாம்..... (நூடுல்ஸ் விளம்பர ஸ்டைலில் :-)

    நன்றி சகோ ரெவெரி

    ReplyDelete
  50. @சகோ ஆஷிக்
    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    //ஏதோ "ஏழைக்கேத்த இழந்தவடை" தர்றாங்கன்னு போவிகளா.. அதைவிட்டுட்டு...!//

    அட நீங்க வேற..... ஆழ்துளை கிணறும் சிண்டெக்ஸும் போட பல லட்சத்துக்கும் மேல செலவாகுதாம்.... கரண்ட் பில், பராமரிப்பு தனியா கட்டிக்கணும்... அப்படியான்னு கேக்குரவங்களுக்கு வேட்பாளர் புதுசா கட்டுன அடுக்கு மாடி வீட்ட தான் காமிக்கணும்.

    தேர்தலுக்கு பிறகு தலைல துண்ட போட்டுட்டு உக்காரணும்ங்குறத சிம்பாலிக்கா இப்பவே துண்ட குடுத்து காட்டுறாங்க போல :-)

    ReplyDelete
  51. @சகோ ரப்பானி
    //அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ சொல்லவந்தத நச்சுனு நகைசுவையுடன் அருமையாக சொல்லி இருக்கிறீங்க//

    வ அலைக்கும் சலாம் சகோ

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  52. @ தமிழ் ஹை
    //நல்ல நகைச்சுவை. எப்படி ஓட்டு கேட்பார்கள் என்பதை மறந்து போன என்போன்றவர்களுக்கு ஞாபகபடுத்தியதற்கு நன்றி.//

    ஹா....ஹா...ஹா....

    ReplyDelete
  53. @மாய உலகம்
    //இம்சை அரசனுக்கு ஒட்டுக்கள் போட்டாச்சு!//
    உங்க ஊர்ல அதுக்குள்ளையும் தேர்தல் வந்துடுச்சா :-)

    ReplyDelete
  54. @ சகோ ராஜகிரி
    //ஆமா நீங்க யாரை பத்தி சொல்றீங்கன்னு புரியலையே :)//

    அதான் எனக்கும் வேணும்...

    ஹி...ஹி...ஹி.....

    ReplyDelete
  55. @சகோ சே.குமார்
    //நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை.//
    நன்றி சகோ

    ReplyDelete
  56. @சகோ சாருஜன்
    //((சொல்லாதத செய்ய மாட்டோம். செய்யாதத சொல்லவே மாட்டோம்))கலக்கல்//

    ஏதோ ஒரு ப்ளோல வந்துச்சு... இப்ப படிச்சா எனக்கே அர்த்தம் தெரியல... அதான் அரசியலோ :-)

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)