வெளியூரில் இருந்து வந்த உறவினர் ஒருவரை சொந்தபந்தங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு கைக்கு வந்தது ( சரி சரி ஒத்துக்குறேன். சாயங்காலம் டீ போட்டு குடிக்க அலுப்புபட்டுதேன் :-) மாலை நேரம் புறப்பட்டோம்.

ரோட்ல போயிட்டிருக்கும் போதே வழிமறித்த ஒரு  பெண்மணி என் உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது அந்த பெண் என் உறவினரிடம் "உங்க மகள (கணவனை இழந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது) இப்ப கட்டி கொடுத்தாச்சா?? எத்தனநாள் தான் வச்சுட்டிருப்பீங்க?"
உடனே என் உறவினர் , "சீ...சீ....சீ.... அதெல்லாம் எங்க இதுல கிடையாது"
________

பருவம் அடைந்த உடன் தன் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார் உறவினர். இப்ப படிப்பு தானே முக்கியம். ஏன் இப்படிலாம்? என கேட்டதற்கு "ஐய்யே..... அதெல்லாம் நம்ம இதுல கிடையாது. பொண்ணுங்க வீட்டோட இருந்தா தான் பாதுகாக்க முடியும்"

________

15 வயதே ஆன பெண்ணுக்கு திருமணம் நடத்தப்பட்டது. நல்லா படிக்கிற புள்ளையாச்சே ஏன் இப்படி கட்டி கொடுக்குறீங்க சீக்கிரமா? என கேட்டதுக்கு மணப்பெண்ணின்  அப்பா "எங்க 'இதுல' அதெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்ததும் ஒடனே கட்டி கொடுத்துடணும்.

_______

இவையெல்லாம் ஒரு முஸ்லீமால்(?????????!!!!!!!!) தான் சொல்லப்பட்டது. இது அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வாததால் நீங்கள் அதிர்ச்சி ஆகவில்லை தானே? இப்படியே தான் தன் சமூகத்தை மேம்படுத்துவதாய் நினைத்து  அதன் நல்ல சட்டதிட்டங்களை கொச்சைபடுத்துகின்றனர் சிலர். ஆனால் இதனை ஆழமாய் யாரும் ஆராய்வதில்லை.  இதன் விளைவு என்ன தெரியுமா? :-)


ஹேமா- ஸ்கூட்டி வாங்க போறதா சொன்னியே? என்ன ஆச்சு?
ஆமி- இல்ல....... எங்க அம்மம்மா அதெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.
ஹேமா- உங்க இதுல இப்படி தான் போ. (சளிப்புடன்)

ஆக்சுவலி ஏன் என் அம்மம்மா வேணாம்னு சொன்னாங்க என்ற காரணத்தையெல்லாம் அவ கேட்கல. பாட்டி வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு சொன்ன அடுத்த நிமிஷமே சளிப்பை வெளிபடுத்தினாள். . தப்பு அவளிடத்தில் இல்லை. இஸ்லாம் மார்க்கத்தை தழுவியும்,  இஸ்லாமியராய் பிறந்தும் பலருக்கு முழுமையாய் இஸ்லாம்/குர் ஆன் சொல்லும் சட்டதிட்டங்கள், நபி வாழ்ந்த வாழ்க்கை முறை போன்ற அடிப்படை விஷயங்களும் தெரியாதவர்கள் அதிகம் (இருவருடங்களுக்கு முன் நானும் அப்படியே). அதை பற்றி என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்களை மட்டும் இப்பதிவில் பார்க்கலாம்.

சில விஷயங்கள் தெரிந்தாலும் அதை நடைமுறைபடுத்தினால் சமுதாயத்தில் தனித்து காட்டப்பட்டு தனிமைபடுத்தப்படுகின்றனர். இதனாலேயே பலபேரு தூங்குற மாதிரி நடிக்கிற கொழந்தைங்க தான். (பத்து முட்டாள்கள் அடங்கிய ஒரு குழுவில் ஒரு முட்டாள் மட்டும் திடீர்ன்னு அறிவாளியாய்ட்டா மிச்சம் இருக்குறவிங்களாம் வித்தியாசமா பாப்பாய்ங்களே???? அதே மாதிரி தான். தானும் அறிவாளியாகுறதில்ல... அடுத்தவனையும் விடுறதில்ல........). இது தவறுன்னு தெரியும், ஆனாலும் தட்டி கேட்கமாட்டோம்ல???? பின்ன? பின்விளைவுகள் தான் ரொம்ப மோசமா இருக்கே........


சில உதாரணங்கள்
முன்பெல்லாம் எங்கள் ஊரில் மஹர் என்ற சொல்லையே அகராதில இருந்து எடுத்திருந்தாங்க. பாதி பேருக்கு அப்படின்னா என்னன்னு கூட தெரியாது. பொண்ணு வீட்டுக்காரங்க ஒரு லட்சம் கொடுத்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒரு பவுன்ல செயின் தரணும். இது தான்  மஹர் என்ற அளவிலேயே எல்லோர்க்கும் சொல்லிக்கொடுக்கப்பட்டது/கருத்து திணிக்கப்பட்டது.  எதிர்க்கும் சிலர் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கருத்தால் ஒடுக்கப்பட்டனர். தனிமைபடுத்தப்பட்டனர். எதுக்கு வம்பு... நாமளும் கூட்டத்தோட கோவிந்தா போட்டுட்டு போய்ட வேண்டியது தான்னு பலர் கம்முன்னிருந்துடுவாங்க.


சமுதாயத்தில் முஸ்லீம் பெண்கள் ஆணாதிக்க குணம் கொண்ட முஸ்லீம் ஆண்களால் ஒடுக்கப்பட்டுள்ளவர்கள் என்ற எண்ணம் இன்று வரை அழியாத கரையாக இருப்பதற்கு இப்படி எக்குதப்பா இஸ்லாத்தையும் குர் ஆனையும் புரிந்துக்கொண்டிருப்பவர்களால் தான்.

எங்கே தன் பேச்சை கேட்க மறுத்துவிட்டுவிடுவாளோ.... தன் பேச்சுக்கள் எடுபடாதோ? தன்னை விட இவள் கருத்துக்கள் சிறந்ததாய் அனைவரும் ஏற்பார்களோ என்ற சைக்கோ மனநிலையில் "நீ என் பேச்சை தான் கேட்கணும். பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூற தகுதியற்றவர்கள். இது தான் நம்ம இஸ்லாத்தில் சொல்லி கொடுத்தது" என  தன்னை காப்பாற்ற இஸ்லாத்தை ஆயுதமாக  இழுக்கும் சைத்தான்கள் இருக்கவே செய்கிறார்கள். நம்ம பெண்கள் தான் கணவனே கண் கண்ட தெய்வம்னு பொழம்புறவங்களாச்சே... ஒடனே "நீங்க சொன்னா சரிதாங்க"ன்னு  ஓடிப்போயி அடுப்பாங்கரைல்ல அப்பளம் சுட்டுட்டிருப்பாங்க. ஆதாரம் எடுத்து கொடுன்னு ஒரு வார்த்தை கேட்டா ஒருவரும் வாய் திறக்க முடியாது என்பதை இந்த பெண்களும் மறந்து விடுகின்றனர்.

நபிமார்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை பற்றிய பெரும்பாலான ஹதீஸ் ஆதாரங்கள்,   பெண்கள் மூலமாக தான் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த பெண்கள் அன்று இஸ்லாமிய ஆண்களால் ஒடுக்கப்பட்டிருந்தால் எப்படி நமக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கும்?  ஆனால் சபையில் அனைவரும் இருக்க, தன் கருத்தை ஒரு பெண் கூற முனைந்தால் அவள் வாய்க்கு பெவிக்விக் தான்??!!!!.  பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண்கள் ஆண்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கருத்து கூறக்கூடாது என தங்களுக்குள்ளாகவே சட்டம் வகுத்து அதற்கு  இஸ்லாமியச்சாயமும் பூசி அழகுபார்த்தனர் சில பிறவிகள்.

தனக்கு விருப்பமில்லை எனில்  அங்கு விருப்பு வெறுப்புக்களை மட்டுமே
விவாதிக்கப்பட வேண்டுமே தவிர உடனே, "இஸ்லாம் அப்படி தான் சொல்லுது"ன்னு நல்லொழுக்கங்களையும் நன்மைகான பாதையை  மட்டுமே காட்டும் இஸ்லாம் மார்க்கத்தை இழுப்பது எவ்விதத்திலும் நியாயமான  செயல் இல்லையா?  இஸ்லாம் என்ற ஒத்த வார்த்தை சொன்னா  உடனே விவாதங்கள் அங்கே எழாது, தன் விருப்பமும் எளிதாய் நிறைவேறி விடும் என்று நினைக்கும் சுயநலவாதிகளால் தான் இஸ்லாம் கூறாத இணைவைக்கும் செயல்களும், மூடபழக்கவழக்கங்களும் அரங்கேறி விடுகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வை பற்றி உண்மையை தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் (ஆதார நூல்- 2: 171)

தீர்வு
குர்ஆன் தமிழாக்கத்தை படிங்க. 


இது மற்ற  சகோதர/சகோதரிகளுக்கு
உங்கள் பார்வைக்கு முன் ஒரு முஸ்லீமானவன் தவறு செய்து அதை நியாயப்படுத்த முயன்றால் தட்டிகேளுங்கள். அவன் "இது தான் என் மார்க்கம் சொல்லி கொடுத்தது" என்றால் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆதாரம் கேளுங்கள். குர் ஆனும், ஹதீஸ்களும் அந்த தவறை தான் முஸ்லீம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது எனில் அதன் பின்னர் "முஸ்லீம்கள் தவறானவர்கள் தான்" என்று திட்டி தீர்க்க உங்களுக்கு உரிமை உண்டு (கவனிக்கவும் குர் ஆன் பரிந்துரைத்தால்)  இல்லைன்னா என்கிட்ட சொல்லுங்க. நாளைக்கே ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு போட்டுடலாம் . சரிதானே??? :-)
_______________________பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (ஆதார நூல்- குர்ஆன் 2-228) 

நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்.(ஆதார நூல்- குர்ஆன் 9-71)
மறுமணத்துக்கு யாரும் தடை விதிக்க கூடாது (பார்க்க- குர்ஆன் 2:232)
பெண்களுக்கு விவாகரத்து உரிமை உள்ளது (பார்க்க- குர்ஆன்- 22:28)

***************************

இன்னும் அதிக  முற்போக்கு விஷயங்கள் குர் ஆனில் கொட்டிக்கிடக்கின்றன.  அடுத்தடுத்த பதிவுகளில் மார்க்கத்தில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்...
, ,

தன்னை விட இளையனிடம் தன் பலத்தை காட்ட நினைப்பது தான்
ஆதிக்கம் என்று பொருள்கொள்கிறோம். இதையே தான் கொஞ்சம் மாத்தி.......... ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்த முற்படும் போது அங்கே ஆணாதிக்கம்  உருவாகுது. இதற்கு ஆண்கள் தான் முழுக்க முழுக்க காரணம்னு நம் சமுதாயத்தில் ஒரு தோற்றம் வலுப்பெற்றது. என்னை பொறுத்த வரையில்  ஆண்கள் சரியா தான் இருக்காங்க. பெண்களுக்கு தன்னை ஆண்களிடத்தில் அடிமை என காட்ட முயலும்  முட்டாள்தனம் தான் எதற்கு என்று தெரியவில்லை. அவர்களிடத்தில் ஆணாதிக்கம் உருவாகியதற்கும் அதை அழியாமல் பாதுகாத்து வருவதற்கும் முழு பொறுப்பு பெண்கள் தான் என்பதை பற்றிய பதிவு தான் இது

காலை 5 மணிக்கு வாக்கிங் போயிட்டு வரும் போது நிறைய பெண்கள் வீடுதிரும்பிடுவாங்க. நம்ம தான் சோம்பேறி ஆச்சே... நமக்கு முன்னாடியே சீக்கிரமா வந்து எப்படி தன் நலனின் மேல் அக்கறைபடுறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். அப்ப தான் ஒரு பெண் சொன்னார் "நீங்க என்ன ஆம்பிள்ளைங்க வர நேரத்துல வாக்கிங் வரீங்க?" . உடனே நான் ஐய்யய்யோ எனக்கு இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குறதா தெரியாது. தனித்தனியா நேரம் ஒதுக்கியிருக்காங்களா? எத்தன மணிக்கு பெண்கள் வரணும்?. அதற்கு அவர், இல்லை நானாதான் சொல்றேன். எப்பவும் ஆம்பிளைங்க 5 மணிக்கு மேல வரதுனால "நாங்களாம்" அவங்க வரதுக்கு முன்னாடியே போய்டுவோம்" ஒன்னும் பதில் சொல்ல முடியல....

கல்யாண பெண்ணுக்கு அவங்க அம்மா அட்வைஸ் பண்ணிட்டிருக்குறத கவனிச்சுருக்கீங்களா?
  • யார் என்ன சொன்னாலும் அமைதியா இரு. (நீ தான் இனி ஜடமாச்சே)
  • அவங்க என்ன சொல்றாங்களோ அதகேட்டு நடந்துக்கோ (நீ தான் இனி மெஷின் ஆச்சே)
  • சத்தமா பேசாத (நீ தான் இனி ஊமையாச்சே)
  • வீட்ல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்பறமாதான் சாப்பிடணும். (நீ தான் வேலக்காரி ஆச்சே)
  • வீட்ல பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாத ( நீ தான் இனி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாச்சே...)என்னது???? உன் தனிபட்ட கருத்தா??? ஹைய்ய்யோ ஹைய்ய்யோ.... காமெடி பண்ணாத.. அப்படி ஒன்னு இனி உன் அகராதியில் இல்லையாக்கும்)
  • மாமியார்,நாத்தனார் திட்டினாலும் ஒன்னும் எதிர்த்து பேசிடாத (இனி நீ தான் உணர்ச்சியற்ற பொம்மை ஆச்சே)
  • அவங்க என்ன சொன்னாலு சரிசரின்னு சொல்லி பொறுமையா போ (ஆமா சாமி போடு)

இப்படி நிறைய விஷயங்கள் சொல்லி அனுப்புவாங்க. இது கேக்குற பொம்மையும் சாரி சாரி பொண்ணும் இப்படிதேன் இருக்கணும் போலன்னு  புகுந்த வீட்டுக்குள் நுழையும் போதே  அடிமைசாசனத்தை எழுதி கொடுத்துடுவா. இத அப்பாவோ அண்ணாவோ சொல்லி கொடுப்பதில்லை. அடுத்த அடிமையை தயாராக்கும் பழைய அடிமை தான்... தன் உணர்வுகளை தீயிலிட்டு கொழுத்தி தன் பிறந்த வீட்டின் பெருமையை காப்பாற்ற நினைப்பதில் எந்த அளவுக்கு திருப்தி அவங்களுக்கு கிடைக்கும்னு தெரியல.. யாராச்சும் சந்தோஷமா இருக்கீங்களா... இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இப்படி நிறைய விசயங்கள் சமுதாயத்தில் பாக்க முடியும்
1. தன் மருமகன் வந்ததும் முகத்தை மறைத்து வாங்க என்று அழைத்த உடன் ஒளிந்துக்கொள்ளும் மாமியார்

2. அனைத்து ஆண்களும் சாப்பிட்ட பின் சாப்பிடும் வீட்டுப்பெண்கள்

3. திருமண விஷேஷங்களில் முதல் பந்தியும் இரண்டாம் பந்தியும் ஆண்களுக்கு விட்டுகொடுத்து கடைசி பந்தியில் சாப்பிட நினைக்கும் பெண்கள்

4. தன் வீட்டில் உள்ள ஆண்கள் சிறுவேலைகளை செய்தாலும் தடுத்து "இதெல்லாம் பொம்ப்ளைங்க செய்ய வேண்டியது" என கூறும் பைத்தியங்கள்

5.சட்டியில இருக்குற கறி,மீனையெல்லாம் அரிச்சு எடுத்து கணவனுக்கு வைத்துவிட்டு கஞ்சி சாப்பிடுபவள்.

6.வரதட்சணையை, சடங்குகளை தீர்மானிக்கும் பெண்கள்


இப்படியாக ஒவ்வொரு செயலுக்கு பின்னும் தன்னை மட்டமானவளாய் காட்டிக்கொண்டு ஆண்களை உயர்த்திவிட முயற்சி செய்ததன் விளைவு தான் ஆண்களிடத்தில் தற்போதிருக்கும் "நா ஆம்ப்ளை டீ" என்ற குணம்.


தன் மகளை அடித்துக்கொண்டிருக்கும் மகனை அப்பவே ஓங்கி கன்னத்துல ஒன்னு விட்டா அவனும் எல்லாரும் சமம் என புரிஞ்சுருப்பான். அத விட்டுட்டு "ஆம்பிள புள்ளைய போயி அடிக்கிறீயான்னு மகளை திட்டுனா....???? இத பாத்து வளரும் அந்த சிறுவனும் காலர தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சுடுவான். அடுத்த ஆணாதிக்கவாதி ரெடி...

 நாலு எடத்துக்கு போற ஆம்பிள்ளைங்க மொதல்ல சாப்பிடட்டும்னு விட்டுகொடுக்கும் பெண்களுக்கு  தெரியல மறைமுகமா அவள் தன்னை அயம் எ வெட்டி அன்ட்  ஒதவாக்கரையாக காட்டிகொண்டிருக்கிறோம் என்பதை....

 எனக்கு மட்டும் ஏன் டா தாலி,மெட்டி? அப்ப நீ கல்யாணம் ஆனவன்னு அடையாளபடுத்த என்ன வச்சுருக்கன்னு கேட்குறத விட்டுட்டு காலைல எழுந்ததும் தாலியை கண்ணுல ஒத்திக்கிடுறதும்,  அது தவறி விழுந்தாலும்  "அச்சச்சோ அவருக்கு எதுவோ ஆக போகுதுன்னு ஜோசியம் சொல்வதும்...... அப்பப்பப்பா.... இதெல்லாம் எந்த ஆண்களும் எதிர்பார்ப்பதில்லைங்குறது வேற விஷயம். ஆனாலும் இவுகதான் தன்னை அடிமைன்னு காட்டிக்கணுமே...

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சகிப்புதன்மை இருக்கவேண்டுங்குறத சம்ரதாயம் மூலமா சொல்லிகொடுக்கணுமாம்? எப்படி? அதாவது கணவன் சாப்பிட்ட  இலையில் பெண்கள் சாப்பிடணும்... என்னைக்காவது ஏன் நா மட்டும் சகிச்சுக்கணும். அவர என் எச்சில் இலையில் சாப்பிட சொல்லுங்கன்னு சொல்லி பார்த்தாதான் என்னவாம்? 


என்னமோ காலைல 4 மணிக்கு எந்திரிச்சு மெஷின் மாதிரி வேலை பார்த்துட்டு இரவு எல்லாரும் உறங்கிய பின் படுக்கைக்கு செல்வதை தியாயம்னு மேடைல சொல்றதெல்லாம் ஐய்யோ... கடவுளே........... கஷ்ட்டகாலம்.. ஏன்பெண்கள் அவர்களை இன்னும் சுருங்கிய எல்லைக்குள்ளாகவே வைத்திருக்க வேண்டும்? அப்பறம் இன்னொரு க்ரூப் அலையுது...  நாங்க ஊசி போட்டு  மீச வச்சா சரியா தவறா? பச்சை பச்சையா கேள்விகள் கேட்டா சரியா தவறா?? ஆண்கள் கொழந்தை பெத்துக்கிட்டா என்ன... அப்பதான் ஊருக்குள்ள ஆண்,பெண் என்ற பேதம் இருக்காது கத்திக்கிட்டே பத்து பயபுள்ளைகளோட ரோட்டுல டான்ஸ் ஆடி பிரச்சாரம் செய்யும்... கொடுமை!


முற்போக்குவாதிகளே... முதலில் ஆண்களை  வசைப்பாடுவதை விட்டுவிட்டு பெண்களின் மனநிலையை மாற்றுங்கள்.இல்லைன்னா எத்தன காலம் ஆனாலும் பெண்களின் அடிமை குணம் மாறாது... இப்படி தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் பெண்கள் இருக்கும் வரையில் ஆணாதிக்கமும் ஓயாது. எதிர்த்து கேள்வி கேட்டா ஒரு பய வாய் தொறக்கணுமே? கேட்டுதான் பாருங்களேன் பெண்களே....

யோசிங்கோ

ஆக ஆண்களிடத்தில் ஆதிக்க மனப்பான்மை வளர்த்துவிட்டது பெண்களே பெண்களே பெண்களே என கூறி பட்டிமன்றத்தை (ஹி..ஹி...ஹி..) நிறைவு செய்கிறேன்

காளிமார்க் சோடா ப்ளீஸ்........

டிஸ்கி : பெண்கள் தாராளமா கமென்டில் திட்டலாம்... வாங்கிகட்டிக்க அயம் ரெடி அவ்வ்வ்வ்வ்

, , ,

தேர்தல் நடந்தப்ப எங்கம்மாவும் அத்தையும் டெரர் விவாதத்துல இருந்தாங்க. அதாவது மாமி ரெட்ட இலைக்கு ஓட்டு போட்டது அம்மாவுக்கு பிடிக்கல. அதுக்கு எங்கம்மா ஒரு காரணத்த சொன்னாங்க பாருங்க "கலைஞரு என்னன்ன செஞ்சாரு? கலர் டீவி பொட்டி, ஒத்த ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி…. அதெல்லாம் அனுபவிச்சுட்டு நன்றிய மறந்துட்டு  இப்படி பண்ணலாமா????????

ஹா...ஹா...ஹா...ஹா... இது செம காமெடி! சூப்பரா சொல்லியிருக்காங்க இல்ல?

இப்படிதான் பக்கத்துவீட்டு ஆன்டி கிட்ட பால்விலை,பஸ் டிக்கெட் விலை உயர்வு பத்தி புலம்பிட்டிருந்தேன். ஆனா அவங்க வாயை திறக்கவே இல்ல. ஒரு கட்டத்துல பொருமை இழந்து என்ன ஒன்னும் பேச மாட்ரீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "எனக்கு மாசம் மாசம் ஆயிரம் ரூபா ஒதவிதொக கொடுக்குற அம்மாவ கொற சொல்லி பேசலாமா?" 

ஹா ஹா ஹா இது செம காமெடி ! சூப்பரா சொல்லியிருக்காங்க இல்ல?


இப்படியாகத்தான்  நம்ம மக்கள்ஸ் இருக்காங்க.. பதிவுலகிலும் இப்படியான காமெடிகளை நீங்க அடிக்கடி பாக்கலாம். ஒருத்தன் ஒரு விஷயத்த பிடிக்குதுன்னு சொன்னாலும் கும்முவானுவ. பிடிக்கலைன்னு சொன்னாலும்  இலவசமா கொடுத்தவன ஆதரிக்காம வெறுக்குறானுவன்னு காமெடி பண்ணுவாய்ங்க. தெனமும் காமெடிதேன் போங்க....

நாம்ம என்ன சொல்லவரோம்னுலாம் காதுல கூட வாங்கமாட்டாங்க. ஆனாலும் செய்நன்றி மறவாச் செம்மல் திருநாட்டில் பொறந்தவுகன்னு  நிரூபிச்சுடுவாங்க.

சரி நமக்கென்ன மக்கா? அமெரிக்காகாரன் இலவசமா கொடுத்த ப்ளாக் இருக்கு.  அமெரிக்கா இந்தியா மேல் ஹிரோஷிமா தாக்குதல் நடத்துனாலும்  அமெரிக்கா வாழ்கன்னு கோஷம் போடுவோம் சரிதானே? நமக்கு விருப்பு வெறுப்பா முக்கியம்? எவன் இலவசமா கொடுத்தாலும் அவன காக்கா பிடிக்குறதும், நான் உனக்கு அடிமைன்னு காட்டுறதும் தானே முக்கியம்?

வாழ்க அமெரிக்கா


,

என்னதான் மூடநம்பிக்கைக்கு அழிவுகாலம் வந்துடுச்சுன்னு  வசனம் பேசுனாலும் கூட  அங்காங்கே கழுதைக்கும் மனுஷனுக்கும் கல்யாணம் போன்ற கேவலமான செய்திகளை கேட்கும் போது   incredible india--ன்னு இததேன் சொல்றாய்ங்களோன்னு நெனச்சுபாக்குறதுண்டு. தாஜ்மஹாலும் விவேகானந்தர் பாறைகளும் மட்டுமல்ல நம் கலாச்சாரத்தை கேமராவுடன் அலையும் அயல்நாட்டவருக்கு எடுத்துகூற...  வெறும் கட்டடங்களும் சிற்பங்களும் சிலைகளையும் தாண்டி மக்களின் வாழ்க்கை முறைகள் தான் இங்கே முதல் ஆதாரம்.
(சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுறதே வேலையா போச்சு... விஷயத்துக்கு வா :-)

ஜனவரி 2ம் தேதி வாக்கில் லக்னோவில் அனைவரின் செல்போனுக்கும் ஒரு தகவல் பறந்தது  பறவைகாய்ச்சல் போல்.....  புதுவருடத்தில்  உலகம் அழிய போகிறது. இரவில் தூங்குபவர்கள் சிலையாகி/கல்லாகி  விடுகிறார்கள்(??!!). அதனால் யாரும் இரவில் தூங்கவேண்டாம்......   இந்த விஷயத்த கேட்டு படிக்காதவங்க மட்டுமில்ல ... படிச்சவங்க தான் ரொம்ப பயந்துட்டாங்க. ஏன்னா இந்த படிச்சபயபுள்ளைகளுக்கு தானே மாயன் காலண்டர பத்தி தெரியும்??? (இந்த காரணத்துக்காகதான் நாலாம் ரொம்ப படிக்கல ஹி..ஹி...ஹி...)

காலையில் என்னவர் ஆபிஸ் போன போது வாசலில் தீமூட்டிய விறகுகள் புகை மட்டும் கக்கியபடி பனியில் நனைந்துக்கொண்டிருந்தது. வேலை செய்பவர்கள் எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. எழுப்பிய பின் தான் விஷயம் அவருக்கு தெரிந்தது. ஊர்ல எல்லாபயளும் உயிருக்கு பயந்து  குளிர்காய்ந்துக்கொண்டே விடியவிடிய முழுச்சுட்டிருந்துருக்காய்ங்க. நம்ம மட்டும் தூங்கியிருக்கோமேன்னு :-)  யாரோ ஒரு லூசுபக்கி மெசேஜ் அனுப்புனா அத நம்புறதா என விஷாரிச்சபோது தான் உத்திரபிரதேஷ் முழுவதும்  ஒரே மெசேஜ் பார்வர்ட் ஆனது  தெரிஞ்சது.  தூங்கி எழுந்தவர்கள் மனுஷங்களா வந்ததை பார்த்தும் கூட நம்பமாட்டேன்னு ஒரே அடம்... (அட மடப்பதர்களா... ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தமுடியாது- விவேக் சொன்னது:-)

போலீஸ் தான் பாவம். இரவு முழுவதும் ரோந்தில் ஈடுபட்டு மக்களுக்கு sms வெறும் வதந்திதான்னு  எடுத்துசொல்லி  வீட்டிற்குள் போகும்படி பணித்தார்கள். (எப்பவுமே நம்ம ஏரியா பக்கம் இப்படி போலீஸ் வந்து பாத்துருக்க???? அப்ப ஏதோ நடக்க போகுதுன்னு தானே அர்த்தம்?ன்னு சில கும்பல் வேற நியூஸ் பரப்பிடுச்சுங்க). 3 நாட்கள் தொடர்ந்தும் இப்படியாக தான் இரவு பகலாகவும், பகல் இரவாகவும் கழிந்தது. இன்னும் கிராமபுறங்களில் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை என டிரைவர்கள் சொல்லி வருத்தப்பட்டார்கள். பல கடைகளும் பூட்டப்பட்டிருந்தது. மக்களின் வாழ்க்கை நிலை எவ்விதத்திலும் பாதிக்கல (அவங்கதான் பகல்ல தூங்குறாங்களே பின்ன கட அடச்சாதான் என்ன அடைக்கலன்னா தான் என்ன?) ஒட்டு மொத்த மக்களும் முட்டாளாக்கப்பட்ட விஷயம் இப்போது தான் கேள்விபடுகிறேன் :-(

(இம்சை அரசன் 23ம் புலிகேசிக்கு  ஒற்றன் லேட்டா வந்து நியூஸ் கொடுத்தானே? அதே போல் நேற்று என்னவருக்கு போன் போட்டு "உங்க ஊர்ல தூங்குறவங்களாம் கல்லாய்ட்டாங்களே அப்படியா??" என கேட்டது தான் தாமதம். (ஹி...ஹி..ஹி... வாங்கிய திட்டுக்களை அப்படியே சொல்ல நா என்ன  சுயசரிதையா எழுதிட்டிருக்கேன். சோ அந்த சீன் வேணாம்.  நல்லவேள லீவ்க்கு நா லக்னோக்கு போகல.. இல்லைன்னா நானும் கல்லாய்ருப்பேன் ஹி...ஹி...ஹி.. :-))

உலகம் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கு :-)   சுட்டிகாட்டப்பட்ட அறிகுறிகளும் அதற்கேற்றார் போல் கண்முன்னே நிகழும் காட்சிகளும் ஆதாரங்களாய்  ஏன் அறிவியலும் கூட அதையே  தான் உறுதிபடுத்துகிறது. ஆனால் இந்தமாதிரி வதந்திகளை பார்த்து முட்டாளாகும் மக்களை தான் பார்க்க பாவமா இருக்கு :-)

  மறுஉலக வாழ்க்கைக்கு இன்றே சம்பாதித்தால் நாளைக்கே உலகம் அழிஞ்சா நமக்கென்ன??? :-)  மறு உலக வாழ்க்கைக்கு நன்மைகளை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? :-) நன்றே செய்... இன்றிலிருந்தே செய்...

டிஸ்கி- முதல் பாராவுக்கும் இந்த லக்னோவிஷயத்துக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கே மறந்து போச்சு :-) நீங்களே ஊதி பெருசாக்கிக்கோங்க.

டிஸ்கி- ஒருவேள அப்படி நடந்துருந்தா.... தூங்கியவர்கள் கல்லானார்கள்- இவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என சொல்லி ஒரு கும்பல் பணம் பாக்கும் பாருங்க.... ஊரெல்லாம் காலே வைக்க முடியாத அளவுக்கு  கல்லானந்தா கோயில்கள்தான் :-)

-ஆமினா முஹம்மத்

நம்புவோர் உலக அழிவை எதிர் பார்த்திருங்கள் அஃது நம்பாதோர் அதற்காக காத்திருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.  (ஆதாரம்- குர்ஆன் 77-7)

, , ,

முக்கிய அறிவிப்பு :- இறைவனின் மகத்தான கிருபையால் இம்மாணவனுக்கு உதவி செய்ய அமெரிக்க தன்னார்வ தொண்டுநிறுவனம் முன்வந்துள்ளது.  பல இக்கட்டான சூழ்நிலைகளையும்  தாண்டி அந்த மாணவனுக்கு இந்த கல்விஉதவி பெற  வைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் முயன்ற அனைத்து உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றி( உழைத்தவர்கள் ஒன்றா இரண்டா தனித்தனியாக பெயர் கூற? :-). பலரிடத்திலும் பகிர்ந்து இந்த உதவியை கிடைக்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். அதற்கான கூலியை இறைவன் உங்களுக்கு அளிப்பான்.

 சென்னை,வடபழனியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வருபவர் சகோதரர் ஷாஹுல் ஹமீது.  பல சிரமங்களுக்கு மத்தியில் தன்னுடைய மகனை பி.இ முதலாம் ஆண்டு படிக்க வைத்து வருகிறார், அவர் தற்போது கல்லூரி கட்டணம் கட்ட சிரமப்பட்டு கொண்டிருப்பதால் சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு:

ஷாஹுல் ஹமீது,

தொலை பேசி:

இந்த தகவலை பலருக்கும் சேர்க்க உதவிய சகோதரர் மெட்ராஸ்பவன் சிவகுமாருக்கும், தகவலை திரட்ட உதவிய சகோதரர் எதிர்குரல் ஆஷிக்கிற்கும் மிக்க நன்றி.

இந்த தகவலை பலருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் உங்களுக்கும் நன்மையில் பங்குண்டு. செய்வீர்களா?

குறிப்பு- படங்களை பெரிதாக பார்க்க இங்கே க்ளிக்கவும்
புரிந்தவர்கள் போற்றுகிறார்கள், 
பிடித்தவர்கள் தழுவுகிறார்கள், 
புரியாதவர்கள் குழம்புகிறார்கள், 
பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள். 
இதுதான் இன்று இஸ்லாம் நோக்கியுள்ள காட்சிகள். எங்கே தெளியும் என்று ஏக இறைவனுக்கே வெளிச்சம் உடனே டக்குனு I Accept Islam அப்படினு சொல்லி ஜாகிர்நாயக் முன்னிலையிலோ சவுதி பேரரசிலோ தனது விருப்பத்தை தெரிவித்து கலிமா சொல்லிவிடுகிறார்கள்.
எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆன் படிக்கும் வாய்ப்பு கிடைத்து ஆள் எஸ்கேப் From Eternal Life's Punishment. பாவம் சில பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் நரக நெருப்புக்கு முழு உடலையும் தானம் செய்து விடுகிறார்கள். அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தியாகம் செய்ய முடியாதுப்பா.

Wayne Parnell, Cricket Player இஸ்லாத்தை தழுவியதை சமீபத்தில் படித்திருப்பீர்கள். ஆனால் எனக்கு தெரியாது, லேட்டாதான் அறிந்தேன். (தமிழ் வாழ்க)
ஜனவரியில் தழுவினார், ஜூலையில் அறிவித்தார். இரண்டுமே 2011ல்தான்...விளையாட்டு பிள்ளைதானே....விளையாட்டாய் சொல்றாங்களோ என்னவோனு கூட...
அதன் நிமித்தமாக.....
You tube ல்அந்த Player ரின் Video Play பன்னி பார்க்கும்போது, இறுதியில் ஒரு இணையமுகவரியை பரிந்துரைத்தார். அது ஏற்கனவே பிரபலமான ஒன்று என்றாலும், எனக்கு தெரியாமல் போனது ஒரு பிராப்ளம்தான்.
அந்த இணைய முகவரிதான் இதுஇஸ்லாம் என்ற வெளிச்சத்திலிருந்து விலகி இருப்போருக்கு இஸ்லாத்தில் இணைய இந்த இணையம் கூட காரணமாகலாம். இதை அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நாமும் ஒரு மூலகாரணமாகலாம். அப்பறம் என்ன கியாமத் டேய்ஸ்ல ஒரே ஜாலிதான் :-)
எனக்கும் ஒரு ப்ளாக் இருந்தால் இதை அதில் டிஸ்ப்ளே பன்னுவேன். இப்ப இங்கே Supply பன்றேன்.

நானும் இந்த சைட்ல போயி பார்த்தேனே..,Live Chat la போனவுடனே ஒருத்தங்க வந்து Welcome பன்றாங்க. ஒரு வேள அல்ரெடி Auto Message சா இருக்குமோனு Typical ல இல்லாமல் ஒரு டைப்பா சில கேள்விகள் கேட்டு பாத்தேன். கரெக்ட்டான ரியாக்‌ஷந்தான் வந்துச்சு. Non Muslim க்குதான் அங்கே முக்கியத்துவம், நான் முஸ்லீம்தானே Non Muslim இல்லையே.... அதனால் அயம் எஸ்கேப் From there.

Non Muslim & New Muslim களுடன் இஸ்லாம் குறித்து சந்தேகங்கள் குறித்து சாட்டிங்க பன்றதுக்கு 24 நேரமும் யாராவது காத்துகிட்டு இருக்காங்க. மாஷாஅல்லாஹ். அருமையான சேவை. இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ் இன்ஷாஅல்லாஹ்...


_______________________
என் நண்பன் மெயிலில் எனக்கு supply பண்ணத நான் என் ப்ளாக்கில் டிஸ்ப்ளே பண்றேனுங்க :-)

, ,

கிருஸ்துமஸ் அன்று தான் ஆமியின் விடுமுறை பயணம் சென்னையில் தொடங்கியது (கெட்டக்காலம்).  சென்னைக்கு வந்துட்டுட்டு ஈஏ பாக்கலைன்னா நீயெல்லாம் மனுஷ ஜென்மமா என எல்லாரும் நாக்கை அவுட் பண்ணும்படியாக பேசிடுவாய்ங்க :-( ஒடனே புறப்பட்டோம். எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வாசலில் வண்டி நின்றது. இந்த இடத்துல தான் ஒரு பல்பு வாங்கிய ப்ளாஸ்பேக்..... ரா...ரா...ரா..(ரோசாப்பூ சின்ன ரோசாப்பு டியூன் செட் ஆகும்:-)

போனவருடம் சென்னை சென்றிருந்த போது  கண்ணூல ஒரு பெரிய கட்டடம் தட்டுபட்டுச்சு. EA-ன்னு எழுத்து வேற. நமக்கென்ன தெரியும்?? அந்த பிரம்மாண்ட கட்டடத்தின் வாசலில் ஒரு ஆட்டோக்காரர் கிட்ட திநகர்க்கு போக (அந்த நேரத்துல பொடிநடையா ராயபேட்டைல இருந்து திநகர்க்கு நடந்து போய்ருக்கலாம்) பேரம் பேசி, இடையிடையே ராயபேட்டையிலேயே  பொறந்து வளந்தவ கணக்கா டயலாக்லாம் விட்டு  180 ரூபாயை 80 ரூபாயாக்கிட்டு தான் ஆட்டோவில் ஏறினேன். ஆமினவா கொக்கா???

ஆட்டோ ரங்கநாதன் தெருவை நெருங்கிக்கொண்டிருக்கும் போது


ஆமி-அண்ணா....
ஆட்டோக்காரர்- என்னா?????
ஆமி- எக்ஸ்ப்ரஸ் அவன்யூ எக்ஸ்ப்ரஸ் அவன்யூன்னு சொல்லுறாய்ங்களே.... திநகர்ல இருந்து எப்படி போகணூம்??
ஆட்டோ- க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
(ஒழுங்கா EXPRESS AVENUE ன்னு போட வேண்டியது தானே? EAன்னு சுருக்கமா போட்டது அவிங்கதப்பு அவ்வ்வ்வ்வ்)

இப்படியாக எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டி கடைசியில் ஆட்டோக்காரர் கண்ணுல தீப்பொறி பாத்த அந்த நிகழ்ச்சி கண்ணு முன்னாடி.... சரி சரி விட்டு தள்ளு. ஒன்றா இரண்டா பல்புகள்? எல்லாம் சொல்லவே ஒரு பதிவு போதுமா?

சரி அவ்வளவு தான் ப்ளாஸ்பேக் முடிஞ்சுடுச்சு. இப்ப உள்ளே போகலாம்......


கிருஸ்துமஸ் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் அதிகமா இருக்கும்னு நெனச்சுட்டு தான் போனேன். ஆனால் பிரம்மாண்ட ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அவற்றுள் சில...
குரங்கு கைல பூமால = ஆமி கைல கேமரா =அதுனால சிரிச்சுருப்பாரோ... நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது அவ்வ்வ்வ்
அட லூசுப்பயலுகளா....... அங்கங்கே கிப்ட் தொங்க விடுறதுக்கு எனக்காச்சும் கொடுத்தா ஊர்க்கு திரும்பும் போது பந்தாவா போவேன்ல????

இந்த பொம்மை வீடு மட்டும் மால்க்கு வெளியே இருந்தா 4000 ரூபாய் வாடகைக்கு விடப்படும்னு போர்ட் மாட்டிடுவானுங்க...

அங்கே எனக்கு மிகவும் பிடித்த அமைப்பு இது தான். தத்ரூபமா செஞ்சுருக்காங்க (முன்ன பின்ன கரடிய பாத்திருந்தா தானே)

 எப்பவும்  மிஷின் மாதிரி நிக்காத கால்கள் கொண்ட மனிதர்கள் வாழும் சென்னையில் இந்த டம்மி ரயிலில்  அனைத்தையும் சுத்தி பார்க்க  200க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் கால்கடுக்க நின்றது பார்த்து சிப்பு சிப்பா தான் வந்துச்சு....வரிசையில் நின்றுகொண்டிருந்த 200க்கும் மேற்பட்டவர்களை தவிர என்னை போன்ற ஏனைய தொலைநோக்கு பார்வையும், சிந்தனையும் கொண்ட அறிவாளி  உள்ளங்கள் இப்படி தான் சுத்தி பார்த்தோம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப தெளிவாக ஹே...ஹே..... 2வது மற்றும் மூன்றாவது தளத்தில் இருந்து........
அனைவருக்கும் (தாமதமான) கிருஸ்துமஸ் தின  நல்வாழ்த்துக்கள்


, ,