உழவர் சந்தை

திமுக ஆட்சியால் 1999க்கு பிறகு நடைமுறைபடுத்தும் போது ஏக வரவேற்பு.

எங்கள் ஊரில் ஏற்கனவே பெரிய மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், வாரசந்தை இருந்த போதிலும் உழவர் சந்தை திறக்கப்பட்ட பிறகு அனைவரும் விரும்பி செல்லும் இடமாக இருந்தது. காரணம் பொருட்களின் நியாயமான விலை, தரமான அளவு, ஒரே அளவு விலை நிர்ணயம், தினசரி விலை நிர்ணயத்தை கரும்பலகையில் எழுதி மக்களுக்கு அறிய தருதல். விவசாயிகளின் நேரடி விற்பனை, அதனால் விலை குறைவு, புது காய்கறிகள், அதிகாலை முதல் விநியோகம்(வேலைக்கு செல்பவர்களுக்கு எளிதாக), கண்காணிப்பு அதிகாரி, இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம், சுத்தமான சூழ்நிலை அமைப்பு என இத்தனை அம்சங்களும் அடங்கியதாலேயே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும்.

அதன் பின் வந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு குறைந்து கடைபிடித்த சட்டங்களும் காற்றில் கலந்து கரைந்து போனது. தினமும் எழுதி போடும் பெரிய பலகையில் போன வாரத்திற்கான காய்கறி விலைபட்டியல் அழிக்கப்படாமலேயே.... கடைகாரர்கள் தங்கள் இஸ்ட்டப்படி விலை நிர்ணயித்து விற்க தொடங்கி அதுவே வாடிக்கையானது. அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை. தோட்டி (சுத்தம் செய்பவர்) கூட சரிவர வேலை செய்யாமல் குப்பை மேடாகவே மாறிபோனது. பல உழவர் சந்தைகள் கூட மூடப்பட்டதாக தகவல் வந்தது.

இதனாலேயே படிப்படியாக அதன் மேல் நாட்டம் குறைந்து உழவர் சந்தை என்றாலே விலை அதிகமா இருக்கும் என சொல்லும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியது.

எங்கள் வீட்டிலிருந்து உழவர் சந்தை தாண்டி தான் பெரிய மார்க்கெட் என்றாலும் கூட இப்போதெல்லாம் உழவர் சந்தையை கண்டாலே ஙே தான். கூட கொஞ்ச தூரம் நடந்தாலும் தரமான நியாயமான விலைக்கு திருப்தியான மனசோட வாங்கிட்டு வரலாம். என்னைய ஏமாத்திட்டான்னு 3 நாள் வரைக்கும் வரவங்க போறவங்க கிட்ட ஒப்பாரி வைக்கிறதுக்கு இது தேவல என்றே தோன்றும்.

என்ன மாயமோ தெரியல. இப்ப  அதிகாரிகள் சுறுசுறுப்பாகிட்டாங்க.
******************
நேற்று அம்மாவை மீன் வாங்கி வர சொல்லியிருந்தேன். குழம்பில் போட வெண்டைக்காயும் தேவைப்பட்டது. சந்தைக்குள்ளேயே மீன் மார்க்கெட்டும் இருப்பதால் வேறு வழியில்லாமல் அங்கேயே வாங்க வேண்டிய சூழ்நிலை.

எப்போதும் அம்மா போர்டை பார்ப்பது வழக்கம். போர்டில் 1 கிலோ 12 ரூபாய் என எழுதப்பட்டது. அந்த பெண்மணி தனியாக வைத்திருந்த சிலேட்டிலும் அதே விலை தான். வாங்கிவிட்டு அம்மா 12 ரூபாய் கொடுத்த போது 20 ரூபாய் என்றிருக்கார். 12 ருபானு தானே போர்ட்ல இருக்குன்னு சொன்னதுக்கு கால் கிலோ 5 ரூபா தான். இல்லைன்னா வேற கடைக்கு போங்க. இது தோட்டத்து காய் என மூஞ்சில் அடித்ததைபோல் சொல்லவும் உடனே  ஆபிஸ் ரூம்க்கு போய் புகார் செய்தார் அம்மா.  உடனேயே அந்த அதிகாரி தராசையும் எடைகற்களையும் எடுத்துக்கொண்டு வந்து மைக்கிலும் விலை குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறார். அந்த பெண்மணி கெஞ்சி கேட்டும் கொடுக்காமல் “உன்னைய மாதிரி இருக்குற ஆளுங்கனால தான் நல்ல விஷயங்களும் குப்பை தொட்டிக்கு போகுது. இனி நீ கட போட கூடாது ” என கண்டிப்பாக அதிகாரி சொன்னதை அம்மா சொல்லும் போது “8 ரூபாய்க்காக அதோட பொழப்ப கெடுத்துட்டீயே- இது அக்கா

ரொம்ப ஈசியா சொல்ற? இப்பவே வெளிய போய் 8 ரூபா சம்பாரிச்சு கொண்டு வா- இது அம்மா

வழக்கம் போல இருவருக்கும் பஞ்சாயத்தை தீர்த்து வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.

அரசு சரிவர செயல்படாத போதும் கூட வாங்கிய சம்பளத்திற்காகவாவது நாணயமாய் அதிகாரிகள்  செயல்பட்டால் எந்த துறையை சேர்ந்த எந்த திட்டமும் குப்பைக்கு போகாது என்பது மட்டும் அம்மா சொன்ன விஷயம் மூலம் புரிய முடிந்தது.

உங்கள் சகோதரி
ஆமினா
   ******************
அளக்கும் போது நிறைவாக அளவுங்கள்! நேரான தராசு கொண்டு

எடை போடுங்கள்! இதுவே சிறந்தது
(திருக்குர்ஆன் : 17 : 35)

 உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 8:27)

அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள்! (அல்குர்ஆன் 7:85)

, , ,

49 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்

  நியாயமான கருத்து. பகிர்வுக்கு நன்றி சகோ.!

  ReplyDelete
 2. பகிர்வு அருமை..

  ReplyDelete
 3. //அரசு சரிவர செயல்படாத போதும் கூட வாங்கிய சம்பளத்திற்காகவாவது நாணயமாய் அதிகாரிகள் செயல்பட்டால் எந்த துறையை சேர்ந்த எந்த திட்டமும் குப்பைக்கு போகாது //

  நிதர்சனமான உண்மை சகோ..

  நல்லதொரு பகிவிற்க்கு நன்றி

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 4. \\அரசு சரிவர செயல்படாத போதும் கூட வாங்கிய சம்பளத்திற்காகவாவது நாணயமாய் அதிகாரிகள் செயல்பட்டால் எந்த துறையை சேர்ந்த எந்த திட்டமும் குப்பைக்கு போகாது \\

  மறுப்பதற்கில்லை ஆமி...இது முற்றிலும் உண்மை...மனதில் பட்டதை வெளிப்படையாக பகிர்ந்தமைக்கு முதலில் உங்களுக்கு ஒரு சல்யூட்...

  ReplyDelete
 5. ரைட்டு, எட்டு ரூபாய்க்காக அந்தம்மா பொழப்ப உங்கம்மா கெடுக்கல, அந்தம்மாவே கெடுத்துக்கிச்சு

  ReplyDelete
 6. உங்கள் அம்மாவின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது! இப்படித் தட்டிக் கேட்டால்தான் சமூகம் திருந்தும்!

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு ஆமினா. எடையில் மோசம் செய்யக்கூடாது. எல்லோரும் பயன்படக்கூடிய இடுகை. நன்றி.

  ReplyDelete
 8. சரியா சொன்னீர்கள் சகோதரி, இது போன்ற தவறுகள் நிறைய இடங்களில் நடக்கின்றது.

  ReplyDelete
 9. வணக்கம் அக்காச்சி,
  உழவர் சந்தை இன்றும் சிறப்போடு மலர்ந்து கொண்டிருந்தால் நன்றாக நன்மைகள் பல கிடைக்கும் அல்லவா..

  விலை ஏமாற்றி விற்கும் தில்லு முல்லு சம்பவத்தினைப் படிக்கும் போது, எனக்கு பார்த்திபன் வடிவேலுவின் காதல் கிறுக்கன் காமெடி தான் நினைவிற்கு வருகிறது.

  நியாயம் இவ் உலகில் இருந்தால் நாம் ஏன் இப்படி வேதனைப்படப் போகிறோம்?

  ReplyDelete
 10. அந்தக்கடையில் இந்த போர்ட் இருந்ததை அம்மா பார்க்கவில்லையா?

  > இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.

  ReplyDelete
 11. வணக்கம் சகோதரி நல்லாச் சொல்லியுள்ளீர்கள்....நல்ல பதிவு...

  ReplyDelete
 12. உங்க அம்மா செய்தது சரிதான், இப்பிடி பட்டவங்களுக்கு பட்டாதான் புத்திவரும்...!!!!

  ReplyDelete
 13. நானே இது போன்ற விஷயங்களில் ஙே தான். துணிச்சலாக கேட்ட அம்மா, அதை உடனடியாக கவனித்த அதிகாரி ஆகியோருக்கு க்ரேட் சல்யூட்

  ReplyDelete
 14. Assalamu alikum
  good post sister
  jazakallahu kair

  ReplyDelete
 15. Innonu solla maranthutean
  tomorrw ungal son'uku birth day !
  Allah ungalukum ungal pillaikalukum neenda aayuladan immaiulum marumaiyelum vetriyazhpanaga!
  Aameen
  enakum naalai pirantha naal athan ungal pillai birth day neyabakam vaitherukeren :))

  ReplyDelete
 16. Innonu solla maranthutean
  tomorrw ungal son'uku birth day !
  Allah ungalukum ungal pillaikalukum neenda aayuladan immaiulum marumaiyelum vetriyazhpanaga!
  Aameen
  enakum naalai pirantha naal athan ungal pillai birth day neyabakam vaitherukeren :))

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அழைக்கும்
  நல்ல பதிவு சகோதரி

  ReplyDelete
 18. anony

  //Innonu solla maranthutean
  tomorrw ungal son'uku birth day !
  Allah ungalukum ungal pillaikalukum neenda aayuladan immaiulum marumaiyelum vetriyazhpanaga!
  Aameen
  enakum naalai pirantha naal athan ungal pillai birth day neyabakam vaitherukeren :))//

  அறுசுவைல இருந்து வந்துருக்கீங்களா?

  நம்பவே முடியல.... நா யாகிட்டையும் சொல்லலையே... எப்படி தெரிஞ்சது உங்களுக்கு???

  உங்க பேரு சொல்லியிருக்கலாமே :-(

  என் மகனின் இந்த வருடத்தின் முதல் வாழ்த்து உங்களிடம் தான். மறக்க முடியாத அனுபவம் + வாழ்த்து

  ரொம்ப ரொம்ப நன்றி பா. எதிர்பார்க்கவே இல்ல :-)

  ReplyDelete
 19. இதை தானே எங்க ஊர்களில (யாழ்) சந்தை என்பார்கள்.. நீங்கள் குறிப்பிட்ட பெரும்பாலான விடயங்கள் பொருந்தும் ...

  ReplyDelete
 20. ஸலாம் சகோ.ஆமினா,
  அவசியமான பகிர்வு.
  அந்த அதிகாரிதான் இப்பதிவின்நாயகன். எனினும்...

  பொதுவாக இவர் போன்ற கடமையுணர்ச்சி கொண்ட அதிகாரிகள்...

  (ஓ.. எட்டு ரூபாய் கூட்டி விக்கிறியா... அப்படீன்னா என்னுடைய கமிஷன் கரீக்ட்டா சாயந்திரம் ஏன் டேபிளுக்கு வந்துடனும்..!)

  ....என்று சொல்லாத, இந்த- இதேபோன்ற நேர்மையை மக்களை ஏமாற்றும் பெரும் முதலாளிகளிடமோ, அரிசியல் ஆளுமை & அதிகாரம் பெற்ற பெரும் வணிகர்களிடமோ காட்ட முடிவதில்லை.

  அப்படியும் நடந்தால்... இன்னும் வியக்கத்தக்க பல மாற்றங்கள் நாட்டில் நிகழும். விலைவாசி குறையும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்.

  விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி சகோ.ஆமினா.

  தங்கள் அம்மா செய்தது சரியான செயல். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. எட்டு ரூபாய்க்காக அந்தம்மா பொழப்ப உங்கம்மா கெடுக்கல, அந்தம்மாவே கெடுத்துக்கிச்சு ஹா ஹா

  ReplyDelete
 22. ரொம்ப ஈசியா சொல்ற? இப்பவே வெளிய போய் 8 ரூபா சம்பாரிச்சு கொண்டு வா- இது அம்மா//

  சூப்பரா சொல்லியிருக்காங்க... இன்றைய நிலையில் நேர்மையா ஒரு ரூபாய் சம்பாதிப்பது என்பதே பெரிய விடயந்தான்.. அம்மாவின் தைரியத்துக்கும், நேர்மைக்கும் மனம் கனிந்த பாராட்டுக்களுடன் நன்றி...

  ReplyDelete
 23. //அறுசுவைல இருந்து வந்துருக்கீங்களா?நம்பவே முடியல.... நா யாகிட்டையும் சொல்லலையே... எப்படி தெரிஞ்சது உங்களுக்கு???உங்க பேரு சொல்லியிருக்கலாமே :-(என் மகனின் இந்த வருடத்தின் முதல் வாழ்த்து உங்களிடம் தான். மறக்க முடியாத அனுபவம் + வாழ்த்துரொம்ப ரொம்ப நன்றி பா. எதிர்பார்க்கவே இல்ல :-) //
  sister neengal'than oru pathivil solli irunthirgal!
  En pearil than comment panninean aanal anony pear vanthu vittathu :)
  ungal paiyan sam kettathaga sollavum by s.jaffer khan

  ReplyDelete
 24. @சகோ பாசித்

  //அஸ்ஸலாமு அலைக்கும்

  நியாயமான கருத்து. பகிர்வுக்கு நன்றி சகோ.!//

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 25. @சகோ ரியாஸ்
  //பகிர்வு அருமை..//
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 26. @சம்பத் குமார்
  ////அரசு சரிவர செயல்படாத போதும் கூட வாங்கிய சம்பளத்திற்காகவாவது நாணயமாய் அதிகாரிகள் செயல்பட்டால் எந்த துறையை சேர்ந்த எந்த திட்டமும் குப்பைக்கு போகாது //

  நிதர்சனமான உண்மை சகோ..

  நல்லதொரு பகிவிற்க்கு நன்றி

  நட்புடன்
  சம்பத்குமார்//
  மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 27. @கருத்து கந்தசாமி
  //\\அரசு சரிவர செயல்படாத போதும் கூட வாங்கிய சம்பளத்திற்காகவாவது நாணயமாய் அதிகாரிகள் செயல்பட்டால் எந்த துறையை சேர்ந்த எந்த திட்டமும் குப்பைக்கு போகாது \\

  மறுப்பதற்கில்லை ஆமி...இது முற்றிலும் உண்மை...மனதில் பட்டதை வெளிப்படையாக பகிர்ந்தமைக்கு முதலில் உங்களுக்கு ஒரு சல்யூட்...//
  என்னது ஆளாளுக்கு சல்யூட்? நா என்னமோ கார்கில்க்கு போயிட்டு வந்த மாதிரி :-)

  வருகைக்கு நன்றி கருத்து

  ReplyDelete
 28. @சூர்யஜீவா
  //ரைட்டு, எட்டு ரூபாய்க்காக அந்தம்மா பொழப்ப உங்கம்மா கெடுக்கல, அந்தம்மாவே கெடுத்துக்கிச்சு//
  நீங்க சொன்னா சரி தான். அக்காகிட்ட சொல்லிடுறேன் :-)
  மிக்க நன்றி சகோ நச் கருத்துக்கு

  ReplyDelete
 29. @ஸ்டார்ஜன் அண்ணா
  //நல்ல பகிர்வு ஆமினா. எடையில் மோசம் செய்யக்கூடாது. எல்லோரும் பயன்படக்கூடிய இடுகை. நன்றி.//

  உண்மை தான் அண்ணா.
  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 30. @இளம்தூயவன்
  //சரியா சொன்னீர்கள் சகோதரி, இது போன்ற தவறுகள் நிறைய இடங்களில் நடக்கின்றது.//

  கொடுத்த காசுக்கு தரமாக இல்லையென்றாலும் நியாயமாகவாவது இருந்தால் ஓரளவுக்கு மனம் சாந்தம் பெறும் இல்லையா?
  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 31. @தம்பி நிரூ
  //வணக்கம் அக்காச்சி,
  உழவர் சந்தை இன்றும் சிறப்போடு மலர்ந்து கொண்டிருந்தால் நன்றாக நன்மைகள் பல கிடைக்கும் அல்லவா..

  விலை ஏமாற்றி விற்கும் தில்லு முல்லு சம்பவத்தினைப் படிக்கும் போது, எனக்கு பார்த்திபன் வடிவேலுவின் காதல் கிறுக்கன் காமெடி தான் நினைவிற்கு வருகிறது.

  நியாயம் இவ் உலகில் இருந்தால் நாம் ஏன் இப்படி வேதனைப்படப் போகிறோம்?//

  இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்? அதானே....... ஹி...ஹி...ஹி...


  ஒவ்வொருவரும் இறைவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் வந்தாலே நியாயம் தானாக பிறந்துவிடும் இல்லையா தம்பி

  அழகான கருத்துக்கு மிக்க நன்றி மா

  ReplyDelete
 32. @சிவகுமார்

  //அந்தக்கடையில் இந்த போர்ட் இருந்ததை அம்மா பார்க்கவில்லையா?

  > இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.//

  வேணா....அழுதுடுவேன்.............

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 33. @ராஜ்
  //வணக்கம் சகோதரி நல்லாச் சொல்லியுள்ளீர்கள்....நல்ல பதிவு...//
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 34. @ஜாபர் கான்
  //Assalamu alikum
  good post sister
  jazakallahu kair///

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  நியாபகம் வைத்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோ. உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள். என்றும் மனதில் மகிழ்ச்சியும் வாழ்க்கையில் வெற்றியும் அடைய பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 35. @தாரிக்
  //அஸ்ஸலாமு அழைக்கும்
  நல்ல பதிவு சகோதரி//

  வ அலைக்கும் சலாம் வரஹ்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 36. @கந்தசாமி
  //இதை தானே எங்க ஊர்களில (யாழ்) சந்தை என்பார்கள்.. நீங்கள் குறிப்பிட்ட பெரும்பாலான விடயங்கள் பொருந்தும் ...//
  எங்க ஊர்லையும் சந்தை தான் சகோ

  மிக்க மகிழ்ச்சி

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 37. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்

  //....என்று சொல்லாத, இந்த- இதேபோன்ற நேர்மையை மக்களை ஏமாற்றும் பெரும் முதலாளிகளிடமோ, அரிசியல் ஆளுமை & அதிகாரம் பெற்ற பெரும் வணிகர்களிடமோ காட்ட முடிவதில்லை.

  அப்படியும் நடந்தால்... இன்னும் வியக்கத்தக்க பல மாற்றங்கள் நாட்டில் நிகழும். விலைவாசி குறையும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்.

  விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி சகோ.ஆமினா.

  தங்கள் அம்மா செய்தது சரியான செயல். வாழ்த்துக்கள்.//

  சிறு துளி மாற்றம் பெரிய அளவில் பரவும் என நம்புவோம் :-)

  உங்கள் வருகைக்கும் நச் கமெண்ட்க்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 38. @மாய உலகம்
  //எட்டு ரூபாய்க்காக அந்தம்மா பொழப்ப உங்கம்மா கெடுக்கல, அந்தம்மாவே கெடுத்துக்கிச்சு ஹா ஹா//
  எங்கோ கேட்ட குரல்.........

  ReplyDelete
 39. @மாய உலகம்
  //ரொம்ப ஈசியா சொல்ற? இப்பவே வெளிய போய் 8 ரூபா சம்பாரிச்சு கொண்டு வா- இது அம்மா//

  சூப்பரா சொல்லியிருக்காங்க... இன்றைய நிலையில் நேர்மையா ஒரு ரூபாய் சம்பாதிப்பது என்பதே பெரிய விடயந்தான்.. அம்மாவின் தைரியத்துக்கும், நேர்மைக்கும் மனம் கனிந்த பாராட்டுக்களுடன் நன்றி...//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஷ்

  ReplyDelete
 40. @சகோ ஜாபர் கான்
  //sister neengal'than oru pathivil solli irunthirgal!.//

  அப்படியா! சொல்லியிருப்பேன். சொல்லியிருப்பேன் :-)

  மறக்காம சொன்னதுக்கு மீண்டும் நன்றிகள் :-)

  ReplyDelete
 41. @ஐடியா மணி
  //உங்கள் அம்மாவின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது! இப்படித் தட்டிக் கேட்டால்தான் சமூகம் திருந்தும்!//

  உண்மை தான் சகோ

  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 42. @நாஞ்சில் மனோ
  //உங்க அம்மா செய்தது சரிதான், இப்பிடி பட்டவங்களுக்கு பட்டாதான் புத்திவரும்...!!!!//

  ம்ம்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 43. @தம்பி பலே பிரபு

  //நானே இது போன்ற விஷயங்களில் ஙே தான். துணிச்சலாக கேட்ட அம்மா, அதை உடனடியாக கவனித்த அதிகாரி ஆகியோருக்கு க்ரேட் சல்யூட்//

  கருத்துக்கும் உத்துழைப்பிற்கும் நன்றி தம்பி

  ReplyDelete
 44. உங்க திருமகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆமின அக்கா

  ReplyDelete
 45. @சாதிகா அக்கா

  மிக்க நன்றி அக்கா

  ReplyDelete
 46. @ராக்கெட் ராஜா

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தம்பி

  ReplyDelete
 47. நல்லதொரு பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரி மிக்க நன்றி பகிர்வுக்கு ....

  ReplyDelete
 48. அருமையான பதிவு ஆமினா....
  கடமை தவரவில்லை என்கிற நிம்மதியே திருப்திதரும் இது சிலருக்குத்தான்....
  அனைவருத் கடைபிடித்தால் நாடு எப்படியெல்லாம் முன்னேரும்....

  ஆமா...
  உங்க மகனுக்கு பிறந்தநாளா....
  லேட்டானாலும் பரவலை...

  ஸாலிஹான ஒரு முஃமினாக வாழ வாழ்த்துக்கள் ...
  ஆமினா...
  பையனுக்கு எத்தனைவயதாகிறது....சொல்லமாட்டீங்களா....

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)