கங்கா. இவள் தான் இந்த கதையின் நாயகி. எல்லாருடனும் எளிதாய் பழகிவிடும் குணம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் ரசிக்கும் மனம். எப்போதும் இவளை சுற்றி பிரன்ட்ஸ் கூட்டம் இருந்துட்டே இருக்கும்.


இவர் தான் ஹீரோ. ராகுல்! கிட்ட தட்ட ஹீரோயின் போல் தான். இளமைகாலம் திரும்பாது என்னும் சொல்லே மந்திரமாய் எண்ணி ஜாலீயாய் திரிபவன். கிட்ட தட்ட தரடிக்கெட்டு! குட்டி சுவற்றில் நண்பர்கள் அனைவரும் உக்கார்ந்துக்கொண்டு  சிக்ரெட்டை ஊதிக்கொண்டே போகும்/வரும் பெண்களை கேலி செய்யும் முக்கிய அந்தஸ்த்தில் உள்ள வேலை.  இந்த வேலைக்கு தாராளமாய் பணம் பாக்கெட் மணியாய் அப்பாவிடமிருந்து பெறுவதால் இன்னும் அவனின் இளமைகாலம் பற்றி சொல்லவா வேண்டும்???



பெண்கள் ஈசியா இவன் வட்டத்துக்குள் நுழைந்துவிடுவதால் கங்கா அவன் கண்ணுக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்.

கங்கா செல்லும் எல்லா இடங்களுக்கும் சென்று எப்படியாவது பேசிடலாம்னு நெனைச்சான். இதெல்லாம் கங்காவுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் பொழுது போகணுமே :-)  6 மாதம் இப்படியே சென்றது

ஒரு முறை ராகுலின் செல்போன் அடித்தது. "நான் கங்கா பேசுறேன். உங்கிட்ட பேசணும். காலைல வரமுடியுமா?" ஆச்சர்யத்திலிருந்து மீள சில நிமிடங்கள் தேவைபட்டது. சகஜநிலைக்கு வரும் போது போன் மட்டும் அவன் கையில்.  இது கனவா இல்ல உண்மையிலேயே போன் போட்டாளா என  சிந்தித்து சிந்தித்து தலையை கழட்டி கீழே வைக்கும் அளவுக்கு பாரம். அவளே தான்......உறுதிபடுத்தியபின்  தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான். உண்மையில் அவள் வருவாளா???


கங்காவிற்கு முன்பே அந்த இடத்தில் ராகுல் ஆஜர். "ஆச்சர்யமா இருக்கு. உங்க கிட்ட இருந்து போன் வரும்னு நெனச்சு கூட பாக்கல. என் நம்பர் உங்களுக்கு...............?"

அதென்ன பெரிய விஷயம் என்பது போல் புன்னகைத்தாள்.

"சரி... எதுக்கு கூப்டீங்க ?" ஆவலாய் கேட்டான்.

"என்ன? என்ன(ஐ) லவ் பண்றீயா?"

முதல் வார்த்தையே காதலை பற்றியது தான் என்பதை அவன் சற்றும் எதிர்பாத்திருக்கவில்லை. அடுத்து மீண்டும் ஒரு அதிர்ச்சி தந்தாள். அவன் பதில் சொல்ல எத்தனித்த போது.....

"அப்படியொரு எண்ணத்துல தான் என் பின்னாடி ரொம்ப நாளா சுத்திட்டிருக்கன்னு தெரியும். தேவையில்லாம மனச போட்டு கொளப்பிக்காத"

"ஏய்... லுக்.... நீயா தான் போன் போட்டு கூப்ட.... மூச்சே விடாம படபடன்னு பேசுற? எனக்கும் பேச டைம் கொடு.  நா போற இடத்துக்கெல்லாம் நீ வந்தா அது என் தப்பா? நா ஒன்னும் உன்னைய லவ் பண்ணல. புரிஞ்சதா?" என பொரிந்துதள்ளிவிட்டான்.

"இத தான் நானும் எதிர்பார்த்தேன். ரொம்ப தேங்க்ஸ்! "

ம்???? சரி என்னைய ஏன் கேக்குற? நீ என்னைய லவ் பண்றீயா என்ன?-இது ராகுல்

ஹா....ஹா....ஹா.... ஹேய்..... ஜோக்கா? நா கற்பனைக்கும் உன் லைப் ஸ்டைலுக்கும் இடையேயான தூரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே அதிகம்.  என் பின்னாடி சுத்துற மாதிரி ஒரு பீலிங்க். அதான் உன்கிட்டையே கேட்டுட்டேன். சரி வரட்டா?"

அவளின் பேச்சுகளுக்கு விடை தெரியாதவனாய் மௌனத்தில், கோபத்தில், இயலாமையில் ராகுல்...



சந்தோஷமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் ஸ்கூட்டியில் பறந்தாள் தன் உயிர்தோழி ரம்யாவின் காதலில் தான் குறுக்கே இல்லை என்ற திருப்தியில்.........  இதுவரை போகும் இடமெல்லாம் ராகுல் தென்பட்டது தன்னை பார்க்க இல்லை எனவும், கூடவே இருக்கும் ரம்யாவிற்காக மட்டும் தான் என்பதையும் உறுதி படுத்தியவளாய் இந்த விஷயத்தை ரம்யாவிடம் சொல்லி அவளின் சந்தோஷத்தையும் வெட்கத்தையும் கண்டு உள்ளம் பூரித்தாள்.

கங்காவின் உள்ளம் கலங்கியது அவளின் நான்கு சுவறு படுக்கை அறைக்கும் ஈரம் தாங்கிய தலையணைக்கு மட்டுமே தெரியும். தன் காதலை தோழிக்கு விட்டு கொடுத்த வலி ஒருபுறம். ராகுல் தன்னை காதலிக்க வில்லை என்ற வேதனை ஒரு புறம் அவளை வாட்டி தீயிட்டு கொழுத்த தான் செய்தது.


வேலைக்காக ராகுலும் வெளிநாடு சென்றுவிட்டான். அவ்வப்போது ரம்யா ராகுலிடம் பேசிவதை கங்காவிடம் பகிர்ந்துக்கொள்வாள். ரம்யா செல்போனில்  பேசும் போது அவ்வபோது கங்காவிடம் பேச சொல்லி நீட்டுவாள்.  உள்ளத்தின் வேதனை விழியின் நீர் துளி காட்டி கொடுத்துவிடுமோ என்ற பயத்தில் நாசூக்காய் நழுவிவிடுவாள்.

3 வருடங்கள் கழிந்தது...

எதேச்சையாக பேருந்து நிறுத்தத்தில் அவளை கடந்து சென்ற காரில்  ராகுலை கண்டாள் கங்கா. ஒரே ஆச்சர்யம். நேற்று வரை ரம்யா ராகுலின் இந்திய வருகை பற்றி கூறவில்லை. ஒரு வேளை ரம்யாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க கூட இருக்கலாம். சிறுது தூரம் சென்ற கார் மீண்டும் திரும்பி அவளை நோக்கி வந்தது.

"ஹாய்... ராகுல்...! என்னை ஞாபகம் இருக்கா?"

ஹேய் கங்கா.... மறக்க கூடிய ஆளா நீ? எப்டி இருக்க?

ம்ம்ம்ம்ம்ம்......பார்த்தா தெரியல? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.

"எவ்வளவு நேரம் தான் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணுவ? இப்பவே லேட் ஆச்சு. நம்பிக்கை இருந்தா கார்ல ஏறலாம் :-) . ஒன்னை ஒன்னும் கடத்திடமாட்டேன்." சிரித்தபடியே கங்கா காரில் ஏறினாள். சிறிது நேரம் காருடன் சேர்த்து அவர்களின் மௌனமும் பயணித்தது. கங்காவே ஆரம்பித்தாள்.

ஆமா நீ எப்டி இருக்க? பாரின் லைப் எப்படி இருக்கு??

 "இன்னும் உன்னையே நெனச்சுட்டு........... ஏதோ இருக்கேன். அங்கே போயும் உன்னை மறக்க முடியாமதான் தவச்சுட்டிருக்கேன்."

"......................................"

"நீ என்னைய வேணாம்னு சொன்னாலும் கூட  இந்த நொடி வரைக்கும் உன்னைய.... உன்னைய மட்டும் தான் காதலிச்சுட்டிருக்கேன்."

"ர....ர்........ரம்யா??"

"அவ அப்பப்ப உன்னைய பத்தி சொல்ற விஷயங்கள் மட்டுமே எனக்கு திருப்தி கொடுத்துட்டிருந்துச்சு. அவளும் எவ்வளவோ ட்ரை பண்ணா... உன்னையும் என்னையும் சேர்த்து வைக்கிறதுக்கு.  பட் கல்நெஞ்ச காரியாச்சே நீ?" அவளிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாததால் அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.



தான் இறங்கும் இடம் வந்த பின் காரைவிட்டு இறங்கி அவனிடம் எதுவும் சொல்லாமலேயே வீட்டுக்குள் சென்றுவிட்டாள். "ச்ச.... நிச்சயதார்த்தம் ஆன பொண்ணுகிட்ட இப்படி பேசுனது எவ்வளவு அநாகரிகமான விஷயம்??"என தன்னை தானே நொந்துக்கொண்டான்.

ஒரு வாரத்திற்கு பிறகு.....

ராகுலின் செல்போன் மணி ஒலித்தது.  "நான் கங்கா பேசுறேன். உங்கிட்ட பேசணும். வரமுடியுமா?"

அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு முன்பே அவள் அங்கே காத்துக்கொண்டிருந்தாள்.

அன்னைக்கு ஒருவார்த்தை கூட பேசாம போயிட்ட? எதுவும் தப்பா பேசிட்டேனா..  சரி இப்ப என்ன விஷயமா வர சொன்ன?

இனி உன்னை யாருக்காகவும் விட்டுகொடுக்க போவதில்ல. ஒரு நொடி கூட உன்னைய இனி பிரியமாட்டேன்" என அவன் மார்பில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள்.

அவளின் திடீர் மாற்றத்திற்கு காரணம் ஆராய்வதற்கு இடம் கொடுக்காமல் சந்தோஷம் அவன் உச்சி முதல் பாதம் வரை பரவியிருந்தது. அவளை பார்க்க இந்தியா வந்தவன் அவளே சொந்தமாக போகிறாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.


**********சுபம் :-)**********
எப்ப்ப்ப்ப்ப்ப்பா எந்த தொடர்பதிவுக்கும் ஒரு மாசம் வரைக்கும் மெனக்கெட்டதே இல்ல..... அதிரா மேல கொஞ்சம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-) 

என்னையும் நம்பி என்னை தொடர்பதிவுக்கு அழைத்த சமைத்து அசத்தலாம் ஐலேசா.....சாரி சாரி...... ஆசியா ஹி...ஹி...ஹி..... க்கு மிக்க நன்றி. கதையும் அதற்கேத்த பாட்டும் அமைக்க சொல்லியிருந்தாங்க (ஐ.... செலவு பண்ணாமலேயே டைரக்டர் ஆயிட்டோம்ல)  இனிமே நோகாம  நொங்கு திங்கிற தொடர்பதிவுக்கு கூப்டுங்கப்பா.... கதை எழுதி பாட்டு எழுதணுமா இல்ல பாட்ட செலக்ட் பண்ணி கதை எழுதணூமான்னு ஒன்ன்ன்ன்னும் புடிபடல. பாட்டுக்காகவே கதைய மாத்தியாச்சு :-)

யான் பெற்ற துன்பம் பெறுக இந்த பதிவுலகம்.... இதனை தொடர என் தம்பிகள் மற்றும் தோழிகள்
சிறகுகள் மது
நண்பர்கள் ராஜ்
தோழி கூடல் நிலா- நாகாராம்
உப்பு மடசந்தி-ஹேமா
காகித பூக்கள்- ஏஞ்சலின்
சாதாரணமானவள் 

யாராச்சும் எழுதாம எஸ்கேப் ஆனீங்கன்னு கேள்விபட்டேன்ன்ன்...... அவ்வளவு தான் சொல்லுபுட்டேன் ஹி..ஹி...ஹி...

, , ,

36 comments:

 1. ஃஃஃஃபெண்கள் ஈசியா இவன் வட்டத்துக்குள் நுழைந்துவிடுவதால் கங்கா அவன் கண்ணுக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்.ஃஃஃ

  ஹ...ஹ... இந்த தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் தான் இவன் என நினைக்கிறேன் (லொல்ஸ்)

  ReplyDelete
 2. அருமையாக உள்ளது அக்கா கட்டாயம் தொடருபவர்களது லிங்கை பதிவிட்டதும் நாற்றில் இடுங்கள்..

  ReplyDelete
 3. @மதிசுதா

  மதுவ தானே சொல்றீங்க :-)

  ReplyDelete
 4. என்னையும் நம்பி தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு
  ...........இந்த தொடர்பதிவு கதையா ஆ ஆ ..
  டிசம்பர் இறுதி வரை மிகவும் பிசி .அதன்பின் எழுதுகிறேன் .

  ReplyDelete
 5. @ஏஞ்சலின்

  நிதானமா வந்து எழுதுங்க பா

  ReplyDelete
 6. ஆமி, கலக்கிட்டீங்க. நல்ல பொறுமை தான் போங்கள். கதை, அதுக்கேத்த வீடியோ லிங்.

  ReplyDelete
 7. தொடர் பதிவு எழுதியமைக்கு நன்றிங்க அமீனா...:)

  ReplyDelete
 8. அடடே இதெல்லாம் வேற நடக்குதா? பாட்டு, கதை கதை பாட்டுனு ஆரம்பத்துல புரியல இப்போ சிக்கிடுச்சு. (கதையின் கரு).

  நல்ல முயற்சி. கதைக்கு பாடலா? பாடலுக்கு கதையா? (எதுவோ ஒண்ணுனு சொல்றீங்களா? )

  ReplyDelete
 9. @வானதி

  பொறுமைன்னுலாம் இல்ல வானதி. மெனக்கெட்டது கதை எழுதியும் பாட்டு செலக்ட் பண்ண முடியல, பாட்டு செலக்ட் பண்ணி கதைய மாத்த முடியல... இதுலையே நேரம் அதிகமா செலவாய்டுச்சு :-)

  மிக்க நன்றி வானதி

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி சகோ கோவிந்த்ராஜ்

  ReplyDelete
 11. @ஆசியா

  //அமீனா...:)//
  ஏய்.ஆமின......தேவையா உனக்கு இது? இல்ல தேவையான்னு கேக்குறேன் :-)

  வருகைக்கு நன்றி ஏசியா :-)

  ReplyDelete
 12. @தம்பி பிரபு

  முழுசா படிச்சு தெரிஞ்சுக்கட்டும்னு தான் கடைசில கருவ வச்சாச்சு.... ஹி...ஹி...ஹி.. //சமாளிபிசேஷன்//

  வருகைக்கு நன்றி தம்பி

  ReplyDelete
 13. ஆஹா.... இது ரெம்ப வித்தியாசமான தொடர் பதிவா இருக்கே.... ஹே ஹே.... பாடல்கள் அதற்கேற்ற கதைகள்... ஹும் கலக்கீட்டிங்க அக்கா :)

  ReplyDelete
 14. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கதை எழுதுற அளவுக்கு எல்லாம் நான் வேர்த் இல்லை இருந்தாலும் எழுதுறன் என்ன பாட்டும் அதுக்கு பொருத்தமான கதையும் இல்லை கதையும் அதுக்கு பொருத்தமாக பாட்டும்(ரெண்டும் ஒன்னுதானே)எழுதனும் அம்புட்டுதானே எழுதிட்டா போச்சி

  ReplyDelete
 15. சுவாரஸ்யமான கதை அருமையாக இருக்கு.கங்காவின் பாத்திர படைப்பு பிரமாதம்

  ReplyDelete
 16. இப்ப தான் அனைத்து பாட்டையும் பார்த்து முடித்தேன்.கதையும் பாடலும் நல்லாயிருக்கு.

  ReplyDelete
 17. ஆமினா....நானுமா....மாட்டிவிட்டீங்களா.முடிந்தளவு முயற்சி செய்கிறேன் தோழி.ஆனால் உடனடியாக இல்லை.துஷிக்குட்டியைக் கேட்டிருக்கலாமே.கலக்குவார்.

  உங்கள் கதையைப் பார்த்தால் காதல் கதை சிறப்பாக வருமோ என்று யோசிக்கிறேன்.உங்கள் கதையும் பாட்டுக்களும் அருமை !

  ReplyDelete
 18. உங்களப்போல கவிஞர்களுக்கு கதை சரியா வரும் எனக்கு தெரியாதே :(

  இந்த வறண்ட தலைய யூஸ்பண்ணி பதிவு சேர்க்கறதே பெரிய விஷயம். இதுல தொடர்பதிவு எப்புடி??!!!

  நீங்க என்னய தப்பா புரிஞ்சிருக்கீங்க. நான் அவள் இல்லை :)

  ReplyDelete
 19. அழகான டேம்லட் வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 20. @துஷி
  //ஆஹா.... இது ரெம்ப வித்தியாசமான தொடர் பதிவா இருக்கே.... //

  ஆமா துஷி :-( ரொம்ம்ம்ம்ப மூளைய யோசிக்க வச்சுட்டாங்க அவ்வ்வ்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி

  ReplyDelete
 21. @ராஜ்
  ஹி...ஹி...ஹி.. நானே எழுதும் போது தாதா பேன் எழுத கூடாதா ஹா...ஹா...ஹா...ஹா....

  சீக்கிரமே எழுதி ஆச்சர்யமூட்டியதற்கு நன்றி தம்பி. உங்கள் பதிவு அருமை

  ReplyDelete
 22. @ஆசியா
  மிக்க நன்றி ஆசியா

  ReplyDelete
 23. @ஹேமா
  //துஷிக்குட்டியைக் கேட்டிருக்கலாமே.கலக்குவார்.//

  ஹி..ஹி...ஹி.. பேஸ்புக்ல கூட சரியா வரதில்ல அவர். அதான் பாவம் பார்த்துவிட்டுட்டேன். ஆனா நீங்க பிடிச்சுக்கோங்க :-)

  எப்ப எழுதுனாலும் பரவாயில்ல ஹேமா. ஆனா எழுதிடுங்கோ :-))

  ReplyDelete
 24. @நாகா
  அட... இப்படிலாம் சொன்னா தப்பிச்சுடலாம்னு ஆரு சொன்னா?? அதெல்லாம் உங்கள பத்தி நல்லாவே தெரியும். எழுதுங்க :-)

  ReplyDelete
 25. @தம்பி தாரிஹ்
  //அழகான டேம்லட் வாழ்த்துக்கள் அக்கா//
  மிக்க நன்றி சகோ தாரிஹ்

  ReplyDelete
 26. இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க //

  பட்டுன்னு சொல்லவா படாம சொல்லவா. ஹி ஹி

  மனம் மணக்கும் திருமறை மனனம்.
  http://niroodai.blogspot.com/2011/12/blog-post_22.html

  ReplyDelete
 27. ஸலாம்

  என்னாது உங்க சுவர்க்கதுல template லாம் மாதுராங்கள.. சொல்லவே இல்லை .. G + ஆளவே காணோம் ...

  மூன்றாம் பாலினம் pdf வடிவில் அறிய

  இங்கே கிளிக் செய்தால் டவுன்லோட் உடனே ஆகும்

  ReplyDelete
 28. ஸலாம்

  படிக்காம comment போற்றுகேன் .. சாரி

  நானும் ஒரு ப்ளாக் create பண்ணனும் ...

  ReplyDelete
 29. ஹல்லோ...

  தொடர்பதிவுன்னா என்னனே எனக்கெல்லாம் தெரியாதுங்க.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க. நீங்க எதிர்பார்க்கற அளவு நம்ம கிட்ட சரக்கு இல்லைங்க. (உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்லைன்னு பொலம்ப வெச்சுட்டீங்களே...) Sorry Ameena

  ReplyDelete
 30. ஆமினா...பதிவு போட்டாச்சு.நீங்க இன்னும் பாக்கல...!

  ReplyDelete
 31. @மலிக்கா

  //பட்டுன்னு சொல்லவா படாம சொல்லவா. ஹி ஹி//

  பட்டுன்னு சொன்னாலும் பரவாயில்ல படாம சொன்னாலும் பரவாயில்ல... பட்டு சேல மட்டும் பார்சல்ல அனுப்பிடுங்க (எப்புடி :-)

  ReplyDelete
 32. @சாதாரணமானவள்

  //தொடர்பதிவுன்னா என்னனே எனக்கெல்லாம் தெரியாதுங்க..//

  :-)

  பரவாயில்ல தோழி

  ReplyDelete
 33. @ஹேமா

  ரொம்ப நன்றி ஹேமா....

  ReplyDelete
 34. iwwalaw periya kathaya? shappa.. very nice anyway

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)