நிரூபனுக்கு,

பெரும்பாலும் மடல்கள் என்றால் தம்பி, சகோதரன் என தான் ஆரம்பிக்கும் இல்லையா? சாரி..இப்பலாம் உங்களை அப்படி கூப்பிடுவற்க்கு மனம் வரவில்லை. ..

சமீபகாலமா உங்க கமென்ட்லாம் பாக்கும் போது நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கிறீர்களோ என எண்ணத்தோன்றுகிறது. ஏன்னா நீங்க வெளிநாட்டுக்கு போனதுல இருந்தே உங்க செயல்கள் எல்லாம் கொஞ்சம் இல்ல...ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது!

போகட்டும். அது எனக்கு தேவையற்ற விஷயம். ஆனால் விரைவில் மனக்குழப்பத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவளாக இம்மடலை தொடர்கிறேன்.

பதிவர் சந்திப்பில் மது பற்றிய மனிதாபிமானி பதிவில் அனைவரும்  இருபிரிவுகளாக பிரிஞ்சாங்க. 1. மதுவை ஆதரிப்போர். 2. மதுவை எதிர்ப்போர்.  ஆனால்  உங்களின் நிலைப்பாடோ, "கூட்டத்தில் எதையாவது சொல்லி சர்ச்சை உண்டாக்குவோம்" என்பதாகவே இருந்தது! அதன்படிதான் சில பதிவுகளில் இஸ்லாமிய பெண்கள் பதிவர் சந்திப்பு போகக்கூடாது என தான் இந்த மனிதாபிமானி சர்ச்சை ஏற்படுத்துகிறார் என சொல்லியிருந்தீர்கள். 

வெடிகுண்டு போடப்பட்ட 5வது நிமிடம் தலைப்புச்செய்திகளில் 'இன்ன அமைப்பினர் வெடிகுண்டு வைத்ததாக பொறுப்பேற்றார்கள்' என்று வருமே?! அதைவிடவும் மட்டமாக வதந்திபரப்புனீங்க. நீங்க சொன்னதையும் "ஓ இதான் செய்தியா" என்பதுபோல் சிலர் கமென்ட் போட்டது தான் உச்சக்கட்ட காமெடி!

என்னை தடுப்பது அவர்களின் நோக்கமாக இருந்தால் இருக்கவே இருக்கு என் கணவர் போன் நம்பர்,ஜீமெயில்,பேஸ்புக், கூகுள் +!  என் அண்ணா ஹைதர் அலி மூலமாக என்னை தடுக்கலாம்... இதெல்லாம் விட்டுட்டு சர்ச்சையை உண்டாக்குவதால் எப்படி என் வருகையை தடுக்க முடியும் என உங்களூக்கு ஆமாம் சாமி போட்டவர்கள் கூட யோசிக்கவில்லை! பலே..பலே... நீங்க பலரையும் காமெடிபீஸாக்கியிருந்தீங்க! உங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை உங்கள் பணி தொடரட்டும்!

உண்மை என்னன்னா, நான் வருவது சில இஸ்லாமிய பதிவர்களுக்கு தெரியும், இந்த சர்ச்சைகளால் நான் வருவதற்க்கு யோசித்த போது அவர்கள் தான் ஊக்கம் கொடுத்து வரச்சொன்னவர்கள். அவர்களில் யாரேனும் ஒருவர் நீங்கள் வருவதை பரிசீலியுங்கள் என்று சொல்லி இருந்தால் கூட நான் வந்தே இருக்க மாட்டேன். அப்படி பட்டவர்களின் மீது அவதூறை அள்ளி வீசினீர்கள்...

சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு! பதிவர் சந்திப்பிலும் கலந்து உங்கள் முகத்தில் கரியை பூசிவிட்ட திருப்தியில் அமைதியா இருந்தா... இப்ப மீண்டும் என்னன்னமோ உளறிட்டிருக்கிறதா சொன்னாங்க.

எனக்கு இஸ்லாமிய பெண்மணி தளத்தில்  எழுத விருப்பமில்லை எனவும், என்னை கட்டாயப்படுத்தி எழுத வைக்கிறாங்கன்னும் என்னன்னமோ சொல்லிட்டிருக்கீங்க. அப்படி எத்தன பதிவுதான் அங்கே போட்டிருக்கேன்னு எட்டியாவது வந்து பாத்திருக்கீங்களா??!! அதுல மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் எழுதிட்டு வராங்க எனவாவது தெரியுமா???  23 பதிவுகளில் என் போஸ்ட் மொத்தமே 2 தான்!

என்னை தவிர எல்லா பயபுள்ளைகளும் வீடு ஆபிஸ்வேலைன்னு பிசியா இருக்குறதுனால திரட்டிகளில் இணைக்கிறது, பேஸ்புக்கில் சேர் செய்றதுன்னு எல்லாவேலைகளையும் என் சுயவிருப்பத்தின் பேரில் செய்துட்டிருக்கேன். என்னால் ஆரம்பிக்கப்பட்ட தளம் பிரபலமாக்கப்பட வேண்டும் என்ற சுயநலமும் தான்!

என்னவோ  என்னை சுத்தி பத்து பேரு பெல்ட் வச்சுக்கிட்டு "எழுது எழுது" என அடிக்கிற மாதிரியும், நான் அழுதுட்டே இஸ்லாமிய பெண்மணியில் எழுதுற மாதிரியும்... என்னே உங்கள் கற்பனை திறன்!?! சத்தியமா போலி வதந்தி பரப்பும் வித்தையையும், மற்றவர்களை ஏமாற்றும் திறமையையும், ஈடு இணையற்ற கற்பனை வளத்தையும்  உங்க கிட்டதான் பிச்சை எடுக்கணும் நான்...

அததுக என்கிட்ட எதாவது விஷயம் சொன்னா பட்டுன்னு பேசிடுவேன்னு  பயந்துட்டிருக்குதுங்க! அப்பாவி பெண்ணாம், மிரட்டுறாங்களாம்... என்னய்யா கலர் கலரா ரீல்லு விடுறீங்க!!!!

பதிவுலகில் என்னவேண்டுமென்றாலும் எழுதி தொலைங்க. அனாவசியமாக என் உழைப்பை கொச்சைப்படுத்தாதீங்க!


பதிவுலக தத்துவம் :  உங்கள் எழுத்தின் தரத்தை வைத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது!

, , ,

88 comments:

 1. ஐயய்யோ ! இங்கேயும் இதே பிரச்சனை தான் ஓடுதா ? !!!

  ReplyDelete
 2. //தத்துவம் : உங்கள் எழுத்தின் தரத்தை வைத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது!// பதிவின் ஹை லைட் இது தான் சகோதரி. நல்ல மட்டுக்கு ஒரு சூடு! போதும்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாம் அலைக்கும் சகோதரி..
  " சாது மிரண்டால் " அது இது தானா ...!!
  பயங்கரமா விளாசுரீங்க....!! சபாஷ்..!!!

  ReplyDelete
 4. ஆமினா,

  கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவது போல இருக்கு! :))))

  ReplyDelete
 5. @மாத்தியோசி - மணி கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவது போல இருக்கு! :))))///

  இப்போவாவது உணர்ந்தீங்களே இது போதும் நண்பரே

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி....!

  ReplyDelete
 7. எனக்கு இஸ்லாமிய பெண்மணி தளத்தில் எழுத விருப்பமில்லை எனவும், என்னை கட்டாயப்படுத்தி எழுத வைக்கிறாங்கன்னும் என்னன்னமோ சொல்லிட்டிருக்கீங்க.///

  உங்களுக்கு புரியலயா? மாத்தி யோசிக்கிறாங்க.
  இறை நாடினால் இஸ்லாமிய பெண்மணி-ல இன்னும் அதிகமதிகம் எழுதுங்க.... (நான் உங்கள ஊக்கப்படுத்துரனா? கட்டாயப்படுதுரனா?)

  ReplyDelete
 8. @இக்பால்

  //இக்பால் செல்வன் said...

  ஐயய்யோ ! இங்கேயும் இதே பிரச்சனை தான் ஓடுதா ? !!!
  //

  நல்லவேள இத்தோட விட்டீங்க :-))

  ReplyDelete
 9. ஸலாம் சகோ.ஆமினா...

  இவர்கள் முகத்திரையை "ஈ டமிளன்ஸ்" பதிவு போட்டு கிழிச்சு... பல மாசம் ஆயாச்சு..!

  உங்கள் பதிவு... இட் இஸ் டூ லேட்... என்றாலும்... இப்போது அவசியமானதுதான்..!

  முற்றுப்புள்ளி .

  ReplyDelete
 10. @Nizam said...

  //தத்துவம் : உங்கள் எழுத்தின் தரத்தை வைத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது!// பதிவின் ஹை லைட் இது தான் சகோதரி. நல்ல மட்டுக்கு ஒரு சூடு! போதும்.
  //

  அப்படியெல்லாம் இல்லையாம் சகோ... அவங்களுக்கு இஸ்லாத்தை தாக்குவது குளிர்கால பொழுது போக்காம். அதுனால இன்னும் ஒரு வாரத்தில் இந்த பிரச்சனை முடிந்தாலும் மீண்டும் 3 மாதத்தில் தொடங்கிவிடும். கடந்த கால அனுபவம் :(

  ReplyDelete
 11. @Nasar
  அஸ்ஸலாம் அலைக்கும் சகோதரி..
  " சாது மிரண்டால் " அது இது தானா ...!!
  பயங்கரமா விளாசுரீங்க....!! சபாஷ்..!!!
  //

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  என்ன இப்படி சொல்லிட்டீங்க... இந்த பதிவையும் மிரட்டி போட வைக்கப்பட்ட பதிவுன்னு நாளைக்கு யாராவது கமென்ட் மழை பொழிவாங்க பாருங்க... பாசக்காரபயபுள்ளைங்க அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 12. @ஐடியா

  //ஆமினா,

  கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவது போல இருக்கு! :))))//

  நான் கண்ணாடி மாளிகையிலும் இல்லை... நான் எறிந்தது கல்லும் இல்லை.... சோ நோ வொர்ரீஸ் :-))))

  ReplyDelete
 13. @சகோ காட்டான்

  பகிர்வுக்கு நன்றி....!//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....!

  ReplyDelete
 14. @Peer Mohamed

  Super sister !!!
  //

  நன்றி சகோ

  ReplyDelete
 15. திருந்தாத ஜென்மங்களுக்காக எத்தனை போஸ்ட் போட்டாலும் டைம்தான் வேஸ்ட் சகோதரி

  ReplyDelete
 16. என்ன்ன்ன்ன்ன்ன்னாது??????

  ஆமினாவ மிரட்றாங்களா??? என்ன பாஸ் நீங்க..தெரியாத ஆள் சொன்ன சரிங்களாம்....அவங்கள பத்தி தெரிஞ்சுகிட்டே சொல்லலாமா??

  அவுக நம்மளைலாம் மிரட்டாம இருந்தா பத்தாதா???

  ReplyDelete
 17. இவர்கள் இன்னுமும் முப்பது வருசங்களுக்கு முன்னால் இருந்த முஸ்லிம் சமுதாயத்தையே நினைத்துக்கொண்டு கற்பனையில் மிதக்கிறார்கள் சிலபேர்கள். முஸ்லிம் வீடு தவறாமல் ஒவ்வொரு வீட்டிலும் இன்று (ஆண் அல்லது பெண்) ஒரு இஞ்சினியர் அல்லது டாக்டர்கள் இருப்பது பாவம் இவர்களுக்கு தெரியாது போலும். இஸ்லாமிய பெண்களை பற்றிய இவர்களது தப்பான அபிப்ராயம் எப்போது மாறுமோ? பூனை தன் கண்களை மூடிக்கொண்டு அடடா உலகமே இருட்டாக இருக்கு என்று நினைத்ததாம். அதுபோல் இருக்கு இவர்களின் நினைப்பு விடுக்க சகோதரி இன்னும் வீறுகொண்டு எழுதுங்கள் அனைத்து இஸ்லாமிய சகோதரிகளும்.

  சகோதரன்
  செய்யது
  துபாய்

  ReplyDelete
 18. ////விரைவில் மனக்குழப்பத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவளாக இம்மடலை தொடர்கிறேன். //////

  :-)

  ReplyDelete
 19. @ஹசன்

  @முஸ்லீம்

  எனக்கு இஸ்லாமிய பெண்மணி தளத்தில் எழுத விருப்பமில்லை எனவும், என்னை கட்டாயப்படுத்தி எழுத வைக்கிறாங்கன்னும் என்னன்னமோ சொல்லிட்டிருக்கீங்க.///

  உங்களுக்கு புரியலயா? மாத்தி யோசிக்கிறாங்க.
  இறை நாடினால் இஸ்லாமிய பெண்மணி-ல இன்னும் அதிகமதிகம் எழுதுங்க.... //

  இன்ஷா அல்லாஹ்... பதினாறுக்கும் மேற்பட்ட சகோதரிகளும் 4 அட்மின்களும் நிர்வகிக்கிறாங்க. வழக்கம் போல் தொடரும் ஹசன். நான் ஒரு ஆளா எழுதிட்டிருக்கேன் சரக்கு காலியா போக :-) நான் போனாலும் எழுத ஆட்கள் அதிகம் உண்டு அங்கே...

  //(நான் உங்கள ஊக்கப்படுத்துரனா? கட்டாயப்படுதுரனா?)//

  இல்ல இல்ல.. நீங்க என்னை மிரட்டுறீங்க! க்யூ ப்ரான்ச்க்கு உங்க கமென்ட்டை அனுப்புறேன்! . நேத்துத்தான் "தீவிரவாதி சிராஜ்" கமென்ட் போயிருக்கு... பின்னாடியே உங்க கமென்ட்டும் போகும் ஹி..ஹி..ஹி.

  ReplyDelete
 20. அட விடுங்க ஆமினா. பதிவுலகில் பல விஷயங்கள் ஊகத்தின் அடிப்படையில் எழுதுறாங்க. அதுக்கெல்லாம் அப்செட் ஆனால் நாம் தினம் அப்செட் ஆகணும் நானும் இதை இப்போ தான் உணர்கிறேன்

  நிரூபன் தான் எழுதியது உங்களை வருதியதே என வருந்துவார் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 21. // . நேத்துத்தான் "தீவிரவாதி சிராஜ்" கமென்ட் போயிருக்கு //

  ஏன்பா??? உங்க சண்டைல என்ன தீவிரவாதி ஆக்கிட்டீங்களா??? நான் சாதாரண மதவாதிப்பா.. அத தாண்டி வேற பட்டும் கொடுக்காதீங்க... வேணும்னா வஹ்ஹாபினு சொல்லுங்க மகிழ்ச்சியா ஏத்துக்குறேன்... எங்க சவுதி ஆபிஸ்லயும் பெருமை படுவாங்க... ஹா..ஹா..ஹா

  அடுத்த முறை என் கமெண்டுகளை வெறும் Q பிராஞ்சுக்கு மட்டும் அனுப்பாமல் X,Y மற்றும் Z பிராஞ்சுக்கும் அனுப்புமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. குரோமோசோம் பேரெல்லாம் சொல்லிக்கே போறே...

   Delete
 22. இதுல என்ன காமெடின்னா.. எனக்கு SMS அனுப்பின புத்திசாலி.. அதில் சொல்லி இருந்தாங்க என்னுடைய போன் நம்பர், போட்டோலாம் பிளாக்கர் மீட்ல இருந்த போஸ்டுகள்ள தேடி தேடி எடுத்தாராம்.. அய்யா அதி புத்திசாலி... எதுக்கு அவ்ளோ கஷ்டம்?? அதான் என் பிளாக்லே போன் நம்பர் மற்றும் போட்டோ போட்டு இருக்கனே???? அய்யோ...அய்யோ... பெட்டிஷனயாவது ஒழுங்கா அனுப்புனிகலா இல்ல வேற யாருக்கும் அனுப்பிட்டீங்களா????

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா

   Delete
  2. ஹா..ஹ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா

   Delete
 23. மிக தெளிவான பதிவு

  //பதிவுலகில் என்னவேண்டுமென்றாலும் எழுதி தொலைங்க. அனாவசியமாக என் உழைப்பை கொச்சைப்படுத்தாதீங்க!///

  இதுதான் சகோதரி ஆமீனா
  மொத்த அவதூறுகளையும் ஒரே வரியில் அடித்து நொறுக்கியிருக்கார்.

  சில ஈழப்பதிவர்கள் எங்கள் இஸ்லாமிய பெண்களை விமர்சிப்பதாக நினைத்துகொண்டு அவர்களையே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் பார்க்க:

  ////பெண்களை வைத்துப் போரிடும் வீரர்களிற்கான வசைமாரிப் பதிவு!//

  இது நீருபன் வைத்திருந்த சமீபத்திய தலைப்பு உண்மையில் பெண்களை வைத்து போராடியவர்கள் யார் விடுதலைப்புலிகளில் உயிரை நீத்த பெண் போராளிகளை இதை விட வேறு யாரும் அசிங்கப்படுத்தி விட முடியாது.

  எங்கள் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் இன்னும் சொல்லப் போனால் எங்களை அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் எத்தனையோ முறை இந்த ஈனப்பதிவர்களுக்கு எதிராக எழுதிய பதிவுகளை வேண்டாம் அண்ணே விடுங்க என்று சொல்லி முடக்கியிருக்கிறார்

  ReplyDelete
 24. என்னது? தென்றல் புயலா மாறியிருக்கு.

  ReplyDelete
 25. @ சிட்டிசன்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  ரொம்ப லேட்டாதான் புரிஞ்சுக்கிட்டேன் சகோ


  ஆனால் இப்பதிவு தேவையில்லாமல்அவதூறு சொல்வதற்காகவும், தன்னை இஸ்லாமிய பெண்களின் கண்ணீரை துடைக்க வந்த மகான் என்பது
  போலும் காட்டிக்கொண்டிருப்பதன் விளைவாக எழுதப்பட்டது!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

  ReplyDelete
 26. @சகோ தாரிஹ்

  //திருந்தாத ஜென்மங்களுக்காக எத்தனை போஸ்ட் போட்டாலும் டைம்தான் வேஸ்ட் சகோதரி//

  ம்... வேஸ்ட் தான் சகோ. ஆனாலும் சும்மா வாய் மூடிட்டிருந்தா என் பெயர் வைத்து போறபோக்கில் எதையாவது அடிச்சு விடலாம்னு பாக்குறாங்க. அதுக்காக தான் இந்த பதிவு!

  நன்றி சகோ

  ReplyDelete
 27. @சிராஜ்

  //
  அவுக நம்மளைலாம் மிரட்டாம இருந்தா பத்தாதா???//

  என் ப்ளாக்ல என்னையே தாக்கி கமென்ட் போட்டதுக்காக உங்க கமென்ட் A FOR APPLE ப்ரான்ச்க்கு அனுப்பப்படுகிறது! அடுத்த முறை இது போல் என்னை தாக்கினால் B FOR BALL, C, FOR CAT ப்ரான்ச்க்கும் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 28. // A FOR APPLE ப்ரான்ச்க்கு அனுப்பப்படுகிறது! அடுத்த முறை இது போல் என்னை தாக்கினால் B FOR BALL, C, FOR CA //

  பாவம் வருண் பிரகாஷ் சீரியஸா சொன்ன விஷயத்த காமெடி ஆக்கிட்டீங்க எல்லாம் சேர்ந்து.. ம்ம் நடத்துங்க...மாட்டப் போறது நான் தானே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மிரட்ராங்கலாமாம்... அதுக்கு அப்புறம் நம்ம தலைமை அந்த நம்பர்க்கு முயற்ச்சி பண்ணைல செல் ஸ்விட்ச்ட் ஆப்னு வந்துச்சு.. அய்யோ..அய்யோ....

  ReplyDelete
 29. @syedabthayar721

  அதான் பிரச்சனை சகோ. எங்களையெல்லாம் இன்னும் பாட்டிகாலத்துல இருக்குறவங்க மாதிரியே தான் பாக்குறாங்க. அவங்க 1980 க்கு பிறகு காலண்டரை கிழிக்கவே இல்ல போல.....

  அதுமட்டுமல்லாது இஸ்லாமிய பெண்கள் என்றாலே திறமை அற்றவர்கள்ன்னு நெனச்சுட்டிருக்காங்க. என்ன கொடுமை இது !! புர்கா ஒடம்புக்குத்தான் மூளைக்கு இல்லைன்னு இவங்களுக்கு எப்ப புரியபோகுதுன்னு தெரியல...

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 30. //என் ப்ளாக்ல என்னையே தாக்கி கமென்ட் போட்டதுக்காக உங்க கமென்ட் A FOR APPLE ப்ரான்ச்க்கு அனுப்பப்படுகிறது! அடுத்த முறை இது போல் என்னை தாக்கினால் B FOR BALL, C, FOR CAT ப்ரான்ச்க்கும் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//

  ஹாஹா

  ReplyDelete
 31. சகோ ஆமினா!

  you can't start the next chapter of your life. if you re-reading the last one.

  இது நான் சொல்லலிங்கோ யாரோ ஒரு பெரியவர் சொல்லிருக்கார்!

  ReplyDelete
 32. பதிவுலகில் என்னவேண்டுமென்றாலும் எழுதி தொலைங்க. அனாவசியமாக என் உழைப்பை கொச்சைப்படுத்தாதீங்க! //ம்ம் ஆமினா அக்காள் இப்படிச்செல்லிய பின் தனிமரம் என்ன கருத்தைச் சொல்ல உள்குத்து எல்லாம் ப்டிக்க் நேர்ம் இல்லை ஆமினா அழுவாச்சி அறியும்! ஹீ உங்கள் எழுத்தை துணிந்து செய்யுங்க வாசிக்க த்னிமரம் எப்போதும் தயார் சுதந்திரமாக !

  ReplyDelete
 33. அஸ்ஸலாமு அலைக்கும்,
  ஹிட்டு பைத்தியங்கலூக்ககா ஒரு பதிவா,
  என்ன போங்க, இஸ்லாமிய பெண்மணியில் எழுத வேண்டிய பதிவைப்பற்றிய வேலையை பாருங்கள்.
  இவர்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள், காணாமல் போய் விடுவார்கள்.

  ReplyDelete
 34. என்ன மேடம் நீங்க எல்லாம் நண்பர்கள்னு இத்தனை நாளா நினைச்சுகிட்டு இருந்தேன், என்ன ஆச்சு?

  ReplyDelete
 35. //சிராஜ் said...
  என்ன்ன்ன்ன்ன்ன்னாது??????

  ஆமினாவ மிரட்றாங்களா??? என்ன பாஸ் நீங்க..தெரியாத ஆள் சொன்ன சரிங்களாம்....அவங்கள பத்தி தெரிஞ்சுகிட்டே சொல்லலாமா??

  அவுக நம்மளைலாம் மிரட்டாம இருந்தா பத்தாதா???//

  சிராஜ்...நெக்கலா? மேடம், நேத்து செஞ்ச மைசூர் பாக்கை எடுத்து அவர் மண்டைல அடிங்க.

  ReplyDelete

 36. //ரஹீம் கஸாலி said...
  ஹா..ஹ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா//


  கறிவேப்பிலை சாதம் ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க. இதை விட வயிறு வலிக்கும்.

  ReplyDelete
 37. ஆமினா....

  //மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்! //

  சகோ நிரூபன் தன்னுடைய தளத்தில் இவ்வாறு கூறி உள்ளார்....நீங்கள் அப்படி கூறி உள்ளீர்களா??? என்று தெரிந்து கொள்ள ஆசை...விளக்கமாக தேவை இல்லை.. ஆம் இல்லை என்று சொன்னால் போதுமானது...

  ReplyDelete
 38. //என்னவோ என்னை சுத்தி பத்து பேரு பெல்ட் வச்சுக்கிட்டு "எழுது எழுது" என அடிக்கிற மாதிரியும், நான் அழுதுட்டே இஸ்லாமிய பெண்மணியில் எழுதுற மாதிரியும்... //
  ஹ ஹ ஹா.... புரை ஏறிடிச்சு..... can't stop :))

  //... போலி வதந்தி பரப்பும் வித்தையையும், மற்றவர்களை ஏமாற்றும் திறமையையும், ஈடு இணையற்ற கற்பனை வளத்தையும் உங்க கிட்டதான் பிச்சை எடுக்கணும் நான்... //
  You are wrong Ami.... இதே வித்தைகளை உபயோகித்துதான் அகதிகளாயிருந்த யூதர்கள் குடுத்த இடத்தின் மடம் பிடுங்க ஆரம்பித்தார்கள். ஹஹ்.... நிரூபன் மாதிரியான so called (shameless) namesake refugees, அவங்களை மிஞ்ச வேண்டாம்?? பெரிய்ய்ய்ய்ய இடம் இல்லாட்டியும் ஒரு Barஆவது :)) Y-not :)

  ReplyDelete
 39. அவசியமான பதிவு. தொடருங்கள் சகோதரி.

  ReplyDelete
 40. சலாம் ஆமினா!

  //எனக்கு இஸ்லாமிய பெண்மணி தளத்தில் எழுத விருப்பமில்லை எனவும், என்னை கட்டாயப்படுத்தி எழுத வைக்கிறாங்கன்னும் என்னன்னமோ சொல்லிட்டிருக்கீங்க//

  ஓ.. இப்படிலாம் கதை ஓடுதா? கற்பனை திறன் அதிகம்தான் போல அவங்களுக்கு! :-) இருந்தாலும் இதுமாதிரி சின்ன பதிலடியாச்சும் கொடுக்கதான் வேணும் ஆமி. ஆனா அதுக்காக‌ உங்கள வச்சே அந்த குரூப் இன்னும் நாலு பதிவு தேத்தினாலும் தேத்திடுவாங்க‌ :)))

  ReplyDelete
 41. @மு.ஜபருல்லாஹ்

  ////விரைவில் மனக்குழப்பத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவளாக இம்மடலை தொடர்கிறேன். //////

  :-)
  //

  :-)
  வருகைக்கு நன்றி அண்ணா

  ReplyDelete

 42. @சகோ மோகன்

  ஊகத்தை எப்படிதான் மக்களும் அப்படியே ஏற்கிறார்கள் என்று தான் புரியவில்லை சகோ மோகன். அந்தளவுக்கா நம்மெல்லாம் படிச்ச முட்டாள்கள்?

  சத்தியமா எந்த அப்செட்டும் இல்ல சகோ. இப்படி தான் பல பெண்பதிவர்களை எழுத விடாம முடக்கினாங்க! அந்த வகையில் அடுத்த பலிகடாவாக என்னை ஆக்குறாங்க. ஆனா இப்பதான் எனக்கு அதிகமா எழுத ஆசையா இருக்கு....

  //நிரூபன் தான் எழுதியது உங்களை வருதியதே என வருந்துவார் என்று நினைக்கிறேன் //
  ROFL

  இவங்ககிட்டலாம் நியாயம் எதிர்பார்க்க முடியாது என்பது பல நாட்களுக்கு முன்பே நான் கற்றுக்கொண்ட பாடம்!

  பலர் விலகியிருக்க... நீங்க இங்கே வந்து கமென்ட் போட்டதுக்கு மிகவும் நன்றி சகோ

  சமீபகாலமாக உங்களை சுற்றிநடக்கும் பதிவுலக அரசியலை அவதானித்துதான் வருகிறேன். நீங்களும் லூஸ்ல விடுங்க.. பத்து பைசாவுக்கும் ப்ரோஜனம் இல்ல! தொடர்ந்து எழுதுங்க...

  நன்றி சகோ

  ReplyDelete
 43. @சிராஜ்

  //அடுத்த முறை என் கமெண்டுகளை வெறும் Q பிராஞ்சுக்கு மட்டும் அனுப்பாமல் X,Y மற்றும் Z பிராஞ்சுக்கும் அனுப்புமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...//

  வாய் மட்டும் இல்லைன்னா... அட அல்லாஹ்....

  :-))))

  ReplyDelete
 44. புதிய வாசகர்கள் என்ன பிரச்சனைன்னு இரு தரப்பு பதிவையும் படிச்சி பார்த்தாலே தெரியும் யார்..மொள்ளமாரி ,முடிச்சவுக்கினு... எழுத்தின் தரம் அவ்வளவு கேவலமா இருக்கு...தின மலர்ல வேலைக்கு சேர எல்லா துகுதியும் உங்களுக்கு இருக்குங்கோவ்....

  ReplyDelete
 45. @சிராஜ்

  இதுல என்ன காமெடின்னா.. எனக்கு SMS அனுப்பின புத்திசாலி.. அதில் சொல்லி இருந்தாங்க என்னுடைய போன் நம்பர், போட்டோலாம் பிளாக்கர் மீட்ல இருந்த போஸ்டுகள்ள தேடி தேடி எடுத்தாராம்.. அய்யா அதி புத்திசாலி... எதுக்கு அவ்ளோ கஷ்டம்?? அதான் என் பிளாக்லே போன் நம்பர் மற்றும் போட்டோ போட்டு இருக்கனே???? அய்யோ...அய்யோ... பெட்டிஷனயாவது ஒழுங்கா அனுப்புனிகலா இல்ல வேற யாருக்கும் அனுப்பிட்டீங்களா????

  //

  அந்த சகோவின் கம்ப்ளைன்டை ஏற்று குடிசைமாற்று வாரியம் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததன் காரணமாக ட்ராபிக் போலீஸ் உங்களை திஹார் ஏசி ஜெயில்ல போட்ட மாதிரியும், அங்கே இருந்துட்டு இந்த கமென்ட்டை போட்டதாக என் 9ம் அறிவு சொல்லுது! ஹி..ஹி..ஹி...

  இன்னுமா உங்கள பிடிச்சுட்டு போகல! :-)) lol

  ReplyDelete
 46. @ஹைதர் அண்ணா

  பெண்பதிவர்களை மட்டம் தட்டி, அவர்களை எழுத விடாமல் ஆக்க எப்படியும் கீழே இறங்கி வேலை செய்யும் அவர்களுக்கு மத்தியில்,

  ஏன் அது எழுதல, ஏன் இந்த விஷயத்தை அலசல என என்னை எழுத தூண்டும் உங்களை போன்றவர்கள் ரொம்பவே பாராட்டுக்குரியவர்கள்...

  // எத்தனையோ முறை இந்த ஈனப்பதிவர்களுக்கு எதிராக எழுதிய பதிவுகளை வேண்டாம் அண்ணே விடுங்க என்று சொல்லி முடக்கியிருக்கிறார் //

  வேண்டாம்ண்ணே... சாக்கடை மீது கல்லெறிந்தால் நம் மீது தான் தெறிக்கும். இந்த பதிவும் நான் போட்டிருக்க கூடாது தான். ஆனால் அவர்களின் ஹிட்ஸ் வெறிக்கு என்னை வச்சு விளையாடுறாங்க.. அதுக்காகதான் இந்த பதிவு!

  வருகைக்கு நன்றி அண்ணா...

  ReplyDelete
 47. //ஹா..ஹ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா//

  சிராஜ் ஜெயில்ல இருந்து கமென்ட் போடுறத பார்த்து உங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருதா.. கண்டனங்கள் lol

  //குரோமோசோம் பேரெல்லாம் சொல்லிக்கே போறே...//
  அரசர்குளம் கண்டெடுத்த டாக்குட்டரு அவரு :-)

  //என்னது? தென்றல் புயலா மாறியிருக்கு.//
  ஐய்... என்னைய தானே சொன்னீங்க...
  பின்னாடி "ஓ ஒருதென்றல் புயலாகி வருதே..." சாங்க் கேக்குது! ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 48. @சிராஜ்

  // அதுக்கு அப்புறம் நம்ம தலைமை அந்த நம்பர்க்கு முயற்ச்சி பண்ணைல செல் ஸ்விட்ச்ட் ஆப்னு வந்துச்சு.. அய்யோ..அய்யோ....//

  அய்யோ... சொல்லாதீங்க! எனக்கு ரொம்ப பய்ய்ய்ய்ய்யம்மா இருக்கு!

  இதுக்குதான் என் போட்டோ போடுறதில்ல ஹா..ஹா..ஹா...

  ReplyDelete
 49. @நன்பேண்டா...!

  //என் ப்ளாக்ல என்னையே தாக்கி கமென்ட் போட்டதுக்காக உங்க கமென்ட் A FOR APPLE ப்ரான்ச்க்கு அனுப்பப்படுகிறது! அடுத்த முறை இது போல் என்னை தாக்கினால் B FOR BALL, C, FOR CAT ப்ரான்ச்க்கும் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//

  ஹாஹா
  //

  நீங்க கமென்ட் போடலன்னா நீங்க போட்ட போஸ்ட் பாத்திருப்பேனான்னு தெரியல... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

  நடுநிலை பார்வைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
 50. @Riyas

  சகோ ஆமினா!

  you can't start the next chapter of your life. if you re-reading the last one.

  இது நான் சொல்லலிங்கோ யாரோ ஒரு பெரியவர் சொல்லிருக்கார்!

  //

  சர்த்தான்...

  நன்றி ரியாஸ்

  ReplyDelete
 51. @தனிமரம்

  //தனிமரம் said...

  பதிவுலகில் என்னவேண்டுமென்றாலும் எழுதி தொலைங்க. அனாவசியமாக என் உழைப்பை கொச்சைப்படுத்தாதீங்க! //ம்ம் ஆமினா அக்காள் இப்படிச்செல்லிய பின் தனிமரம் என்ன கருத்தைச் சொல்ல உள்குத்து எல்லாம் ப்டிக்க் நேர்ம் இல்லை ஆமினா அழுவாச்சி அறியும்! ஹீ உங்கள் எழுத்தை துணிந்து செய்யுங்க வாசிக்க த்னிமரம் எப்போதும் தயார் சுதந்திரமாக !
  //

  இது உள்குத்து இல்ல தனிமரம்.. நேரடியாவே பேரு போட்டுட்டேன் பாருங்க... :-)

  உங்களை போன்ற மனசாட்சி உள்ளவர்களால் தான் மற்றவர்களை திட்டும் போதும் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கு.. உங்கள் மனம் புண்பட்டுவிடகூடாதென்று பார்த்து பாத்து எழுதவேண்டியிருக்கு...

  நன்றி சகோ.. உங்க கமென்ட் பலருக்கும் சாட்டையடி!

  ReplyDelete
 52. சலாம் சகோ....

  இனி தினம் ஒரு பதிவிட்டு இவர்களின் முகத்திரையை கிழித்து கொண்டே இருக்க வேண்டும்...

  ReplyDelete
 53. @
  azeem basha

  அஸ்ஸலாமு அலைக்கும்,
  ஹிட்டு பைத்தியங்கலூக்ககா ஒரு பதிவா,
  என்ன போங்க, இஸ்லாமிய பெண்மணியில் எழுத வேண்டிய பதிவைப்பற்றிய வேலையை பாருங்கள்.
  இவர்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள், காணாமல் போய் விடுவார்கள்.

  //

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  டைம் வேஸ்ட் தான் என்ன செய்ய சொல்றீங்க! போஸ்ட்லாம் போட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என நம் சகோஸ் சொல்லியும் சில புரிதலுக்காகவே இந்த பதிவு போட்டேன்.

  இஸ்லாமிய பெண்மணி வழக்கம் போலவே வெற்றிநடை போடும் இன்ஷா அல்லாஹ்..

  //இவர்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள், காணாமல் போய் விடுவார்கள்.//

  உண்மை தான் சகோ

  ReplyDelete
 54. @Jayadev Das

  என்ன மேடம் நீங்க எல்லாம் நண்பர்கள்னு இத்தனை நாளா நினைச்சுகிட்டு இருந்தேன், என்ன ஆச்சு?
  //

  அத ஏன் ஜெயதேவ் கேக்குறீங்க.. அது பெர்ர்ர்ரிய கத :-)


  எல்லாரும் உங்கள மாதிரியே இருந்துடுவாங்களா? கருத்தில் மட்டுமே மோதி இப்பவும் நீங்களும் நானும் நண்பர்களா இருக்கோம். எவ்வளவு சண்டையிலும் உங்க ப்ளாக்கிற்கு நானும் என் ப்ளாக்கிற்கு நீங்களும் வர்ரோம்... எந்த ப்ளாக்லையாவது பாத்துக்கிட்டா ஹலோ சொல்லிக்கிறோம்... இந்த பக்குவம் பலரிடத்திலும் இருப்பதில்லை... அதன்விளைவே இது போன்ற பதிவுகள்..

  வருகைக்கு நன்றி சகோ.ஜெயதேவ்

  ReplyDelete
 55. @சிவா

  //
  சிராஜ்...நெக்கலா? மேடம், நேத்து செஞ்ச மைசூர் பாக்கை எடுத்து அவர் மண்டைல அடிங்க. //

  நைட் ஒன்றைக்கு வந்து என்னைய கலாய்ச்சு கமென்ட் போடணுமாக்கும்?? இந்த கொடுமைய எங்கே போயி சொல்லுவேன்! :-)

  ReplyDelete
 56. @சிவா

  //கறிவேப்பிலை சாதம் ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க. இதை விட வயிறு வலிக்கும். //

  தன்வீர் போலீஸ் ஆனதும் முதல் என்கவுன்ட்டர் நீங்க தான்! அம்மாவை யார் திட்டுறாங்களோ அவங்கள சுட்டுடுவாராமாம்... :-)))

  ReplyDelete
 57. @சிராஜ் said...

  ஆமினா....

  //மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்! //

  சகோ நிரூபன் தன்னுடைய தளத்தில் இவ்வாறு கூறி உள்ளார்....நீங்கள் அப்படி கூறி உள்ளீர்களா??? என்று தெரிந்து கொள்ள ஆசை...விளக்கமாக தேவை இல்லை.. ஆம் இல்லை என்று சொன்னால் போதுமானது...

  //

  இல்லை!

  ReplyDelete
 58. @அன்னு

  அன்னு said...

  //என்னவோ என்னை சுத்தி பத்து பேரு பெல்ட் வச்சுக்கிட்டு "எழுது எழுது" என அடிக்கிற மாதிரியும், நான் அழுதுட்டே இஸ்லாமிய பெண்மணியில் எழுதுற மாதிரியும்... //
  ஹ ஹ ஹா.... புரை ஏறிடிச்சு..... can't stop :))

  //

  பின்ன?? எனக்கும் ஒவ்வொரு நேரம் சிரிப்பா தான் வருது... என்னமோ நாமெல்லாம் சுயபுத்தியே இல்லாதவங்க மாதிரி மட்டமான பிரச்சாரம் பண்ணிட்டிருக்காங்க!

  ReplyDelete
 59. @சுவனப்பிரியன்

  நீங்க வர்ர வர்ர செம பிரபலாய்ட்டே வரீங்க... ஹா..ஹா..ஹா..

  வருகைக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 60. @அஸ்மா

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  அட ஆமா அஸ்மா. என்னமோ இபெ எனக்கு சொந்தமான தளம் மாதிரியும் நான் மட்டுமே மத்தவங்க பேச்சை கேட்டு நடத்துற மாதிரியும் தான் கலர் கலரா கத கட்டுறாங்க!

  கண்டிப்பா அஸ்மா. இவரை மதிச்சு பதிவுலாம் போடணுமான்னு யோசனையா இருந்துச்சு.. ஆனாலும் நாம் மறுப்பு சொல்லாத பட்சத்தில் பலரால் உண்மையென்று நம்பப்பட்டுவிடுமென்று தான் இதை எழுதுகிறேன்

  நன்றி அஸ்மா!

  (இவங்களாம் என்னை இபெக்கு ஓனராக்குறத பார்த்து என்னைய நீக்கிடாதீங்க... அவ்வ்வ்- நாடோடி படத்துல கஞ்சா கருப்பு என்பவரை ஹோட்டல் ஓனர் என சொன்ன காமெடி சீன் தான் நியாபகத்துக்கு வருது ஹி..ஹி..ஹி..)

  ReplyDelete
 61. @
  நாகூர் மீரான்

  புதிய வாசகர்கள் என்ன பிரச்சனைன்னு இரு தரப்பு பதிவையும் படிச்சி பார்த்தாலே தெரியும் யார்..மொள்ளமாரி ,முடிச்சவுக்கினு... எழுத்தின் தரம் அவ்வளவு கேவலமா இருக்கு...தின மலர்ல வேலைக்கு சேர எல்லா துகுதியும் உங்களுக்கு இருக்குங்கோவ்....

  //

  ஹா..ஹா..ஹா...

  சீக்கிரமே ப்ளாக் தொடங்குங்க சகோ... இவங்களுக்கு உங்கள மாதிரி ஆளுங்க தான் தேவ :-)


  ReplyDelete
 62. @NKS.ஹாஜா மைதீன்

  வ அலைகும் சலாம் வரஹ்...


  //இனி தினம் ஒரு பதிவிட்டு இவர்களின் முகத்திரையை கிழித்து கொண்டே இருக்க வேண்டும்...//

  சீ ச்சீ....

  ReplyDelete
 63. என்ன நீங்களும் ப்ளாக் ஆரம்பிங்கன்னு சொல்லுறீங்க...சிராஜும் இதையே தான் சொன்னாரு....அப்ப ஆரம்பிசுரலாமா...அதிரடி ஹாஜா சொன்னாரே 7 வோட்டு வேணும்னு ...இப்போதைக்கு நீங்களும் சிராஜும் மட்டும் தான் இருக்கிங்க...இன்னும் 5 ஒட்டு சேர்ந்ததும் ஆரம்பிச்சுருவோம்.... இன்ஷா அல்லாஹ்...ஏன்னா கடைய தெறந்து வச்சு காத்து வாங்க கூடாதுல்ல.. கொஞ்சம் லைட்டாவாது உசாரோட இருக்கனும்ல...

  ReplyDelete
 64. @நாகூர் மீரான்

  // என்ன நீங்களும் ப்ளாக் ஆரம்பிங்கன்னு சொல்லுறீங்க...சிராஜும் இதையே தான் சொன்னாரு....அப்ப ஆரம்பிசுரலாமா...அதிரடி ஹாஜா சொன்னாரே 7 வோட்டு வேணும்னு ..//

  பதிவ போட்டுட்டு டீக்கடையில் சேர் பன்ணுங்க.... 30 நிமிடத்திற்க்குள் மினிமம் 20 வோட்டுக்கு நாங்க கேரண்டி... ஆனா போஸ்ட் கண்ணீயமா இருக்கணும்.. பேட் வேர்ஸ்ட், ஓரளவுக்கு மேல தாக்குதல் இருந்தா நீக்கப்படும்..உங்களுக்கு தெரியாத ரூல்ஸ் இல்ல... டீக்கடையில் சட்டதிட்டதுக்கு உட்பட்டு இருந்தா, உங்க போஸ்ட் ஹிட்டடிக்க நாங்க கேரண்டி...... அட்ரா..அட்ரா..அட்ரா...

  ReplyDelete
 65. // நீங்க வர்ர வர்ர செம பிரபலாய்ட்டே வரீங்க... ஹா..ஹா..ஹா..//

  என்னது வர்ர வர்ர வா??? ஹெல்லோ எந்த உலத்தில இருக்கீங்க?? அண்ணன் பதிவுலக வஹாபிகளின் தலைவர் ஆகி ரொம்ப நாள் ஆகுது... இந்த பட்டம் நாமா கொடுத்தது இல்ல....தானா வந்தது...

  இப்ப ரீசண்ட்டா மௌலவி வேற ஆயிட்டார்...அவன் அவன் கஷ்டப்பட்டு 7 வருஷம் படிச்சு மௌலவி ஆகுறான்... அண்ணன் நோகாம தினம் ஒரு போஸ்ட் போட்டு மௌலவி ஆயிட்டார்.... உண்மையான மௌலவி இந்த கூத்தைலாம் பார்த்தா சத்தியமா ரூம் போட்டு அழுவாங்க.... ஹா..ஹா...ஹா...

  அண்ணன்கிட்ட நேத்து சாட்ல "மௌளவி சுவன்பிரியன்" கிற வார்த்தைய சொன்னேன்...விழுந்து விழுந்து சிரிச்சார்...

  ReplyDelete
 66. // //மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்! //

  சகோ நிரூபன் தன்னுடைய தளத்தில் இவ்வாறு கூறி உள்ளார்....நீங்கள் அப்படி கூறி உள்ளீர்களா??? என்று தெரிந்து கொள்ள ஆசை...விளக்கமாக தேவை இல்லை.. ஆம் இல்லை என்று சொன்னால் போதுமானது...

  //

  இல்லை! ///

  என்னங்க இப்படி பொசுக்குன்னு "இல்லை" னு சொல்லிட்டீங்க... நீங்க ஆமாம் அதுக்கு என்னன்னு சொல்வீங்க, அதுக்கு பிறகு எப்படி உங்கள நக்கல் அடிக்கலாம்னு யோசிச்சு வச்சேன்..இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே?????

  ReplyDelete
 67. மத ரீதியா எழுதும் மனிதர்கள் கூட!? தங்களது கருத்துக்கு எதிராக எழுதும் ஒருவரை, அல்லது கோபத்தை தூண்டும் மனிதர் ஒருவரை நான் என்று விளிப்பது முதற்கொண்டு ஆபாச வார்த்தைகள் கொண்டு திட்டுவது வரை நடக்கிறது., பெண் என்பதால் நீங்கள் கொஞ்சம் கோபம் வந்தாலும் அடங்கி வாசிக்கலாம்., ஆனால் தங்களது கருத்தை மட்டும் பதிவு செய்துவிட்டு போவதென்பது பதிவுலகில் நடக்காது என்பது தெரிந்ததால்தான் மதம் / மத ரீதியான மனிதர்கள் குறித்து எழுதவதை விட்டுவிட்டேன்.

  உலகை புரிந்துகொண்டு விட்டேன் என்பதே அபத்தம்தான், இந்த கருத்தை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன் என்பதும் கூட அபத்தம்தான்., காரணம் நான் / நாம் ஒரு அற்பம்., எரும்புகளுக்குள் உள்ள சண்டையை நீங்கள் எப்படி பார்கிறீர்களோ அது போலவேதான் நாம் இடும் சண்டையும் யாரோ கிண்டலாக பார்த்துகொண்டு இருக்கலாம், சிலர் அதனை கடவுள் என்பர், சிலர் அதனை வேறு பெயரிட்டு அழைப்பர்!

  ReplyDelete
 68. //பதிவ போட்டுட்டு டீக்கடையில் சேர் பன்ணுங்க.... 30 நிமிடத்திற்க்குள் மினிமம் 20 வோட்டுக்கு நாங்க கேரண்டி... ஆனா போஸ்ட் கண்ணீயமா இருக்கணும்.. பேட் வேர்ஸ்ட், ஓரளவுக்கு மேல தாக்குதல் இருந்தா நீக்கப்படும்..உங்களுக்கு தெரியாத ரூல்ஸ் இல்ல... டீக்கடையில் சட்டதிட்டதுக்கு உட்பட்டு இருந்தா, உங்க போஸ்ட் ஹிட்டடிக்க நாங்க கேரண்டி...... அட்ரா..அட்ரா..அட்ரா...//

  சிராஜ்... சாக்கடை குள்ள கெடக்குறது நம்ம கிட்ட வம்புக்கிழுக்கு...நாம ஒதுங்கி போறோம்... ஆனாலும் நம்மள விடல...சரி வெளில நின்னு அடிப்போம்னு பார்த்த நம்மள கடிச்சிட்டு சாக்கடைகுள்ள ரொம்ப ஆழமா போயிருச்சி ..அப்ப அத அடிக்க கொஞ்சம் சாக்கடைல இறங்க வேண்டியது ஆயிட்டு... அதுக்காக எப்பவும் நாம அதிலேவா இருக்க முடியும்....இக்பால் செல்வன் தளத்துல(http://www.kodangi.com/2012/09/muslim-men-raped-ambassador-stevens-before-murder.html#.UFRQ_o0ge3Y) மூன்று கமெண்ட்ஸ் போட்டேன் ...பாருங்க..பாஸ் ஆயிருவன்னான்னு சொல்லுங்க...ஜமாய்க்கலாம்..

  //டீக்கடையில் சட்டதிட்டதுக்கு உட்பட்டு இருந்தா,//

  டீக்கடைனா இனிப்பை பதிவுல கலந்து ஒரு கலக்கு கலக்கலாம்... அது போல கழுவி ஊத்துறது ரொம்ப முக்கியம் ஆச்சே... இதுவும் சட்ட திட்டத்துல உண்டா...

  ReplyDelete
 69. @சகோ மீரான்

  என்ன இப்படி சொல்லிட்டீங்க.. இதான் நல்ல நேரம்.. ஒடனே களத்தில் குதிங்க..

  தீவிரவாதி சிராஜ்ஜும் இப்படிதான்.. முன்பு இந்த மாதிரி ஒரு பிரச்சனையில் வாலண்டியரா பதிவுலகில் புகுந்து இப்ப A,B,C,D......Z ப்ரான்ச்ன்னு செம பிரபலமா இருக்காக... :-)

  இப்பவே களத்தில் குதிச்சுடுங்க :-)

  ReplyDelete
 70. @சிராஜ் said...

  // நீங்க வர்ர வர்ர செம பிரபலாய்ட்டே வரீங்க... ஹா..ஹா..ஹா..//

  என்னது வர்ர வர்ர வா??? ஹெல்லோ எந்த உலத்தில இருக்கீங்க?? அண்ணன் பதிவுலக வஹாபிகளின் தலைவர் ஆகி ரொம்ப நாள் ஆகுது... இந்த பட்டம் நாமா கொடுத்தது இல்ல....தானா வந்தது...

  இப்ப ரீசண்ட்டா மௌலவி வேற ஆயிட்டார்...அவன் அவன் கஷ்டப்பட்டு 7 வருஷம் படிச்சு மௌலவி ஆகுறான்... அண்ணன் நோகாம தினம் ஒரு போஸ்ட் போட்டு மௌலவி ஆயிட்டார்.... உண்மையான மௌலவி இந்த கூத்தைலாம் பார்த்தா சத்தியமா ரூம் போட்டு அழுவாங்க.... ஹா..ஹா...ஹா...

  அண்ணன்கிட்ட நேத்து சாட்ல "மௌளவி சுவன்பிரியன்" கிற வார்த்தைய சொன்னேன்...விழுந்து விழுந்து சிரிச்சார்...
  //

  ஹி..ஹி..ஹி.. இப்படிதான் முன்னாடி வகாபி மகுடம்னு ஒருத்தர் சொன்னத அப்படியே கப்புன்னு பிடிச்சுக்கிட்டு எல்லாரும் அதையே சொல்ல ஆரம்பிச்சாங்க.. வகாபின்னா என்னன்னே தெரியாம... அது மாதிரி இதுவா :-))))

  அப்ப எனக்கும் எதாவது பட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க சகோஸ் அஹ்ஹூ அஹ்ஹ்ஹூ

  ReplyDelete
 71. @சிராஜ்

  //அதுக்கு பிறகு எப்படி உங்கள நக்கல் அடிக்கலாம்னு யோசிச்சு வச்சேன்//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 72. @சர்புதீன்

  உங்க பின்நவீனத்துவ குறீயீடுகளடங்கிய பின்னூட்டத்தை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எனக்கு எலக்கிய அறிவு கெடையாது..

  அடுத்த பின்னூட்டம் தமிழில் போடுங்க

  நன்றி

  ReplyDelete
 73. மிரட்டி எழுத வைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நகைப்பிற்குரியது. கடைசியில நீங்க சொல்லியிருக்கற பதிவுலக தத்துவம் ஒன்றே போதும்.... வேற வார்த்தைகளே தேவையில்லம்மா.

  ReplyDelete

 74. //அடுத்த பின்னூட்டம் தமிழில் போடுங்க// LOL

  நீங்க கண்ணாடி வீட்டிற்கு குடிபோனதை பற்றி சொல்லவேயில்ல :-)

  ReplyDelete
 75. //அப்ப எனக்கும் எதாவது பட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க சகோஸ் //

  பதிவுலக அன்னை ஆமினா,...

  தமிழ் மணத் தாரகை ...

  நாற்றை(தளம்)நாற வைத்த நாயகி ....

  ......இந்த பேருங்க எப்படி இருக்கு ...

  ReplyDelete
 76. //என்னவோ என்னை சுத்தி பத்து பேரு பெல்ட் வச்சுக்கிட்டு "எழுது எழுது" என அடிக்கிற மாதிரியும், நான் அழுதுட்டே இஸ்லாமிய பெண்மணியில் எழுதுற மாதிரியும்... //

  ஆமினா, சீரியஸா வாசிச்சுகிட்டு வரும்போது படக்குன்னு இப்படி ஒரு காமெடி வரி!! அப்படியே மைண்ட்ல, “பாடாமல் பாடுகிறேன், ஆடாமல் ஆடுகிறேன்...”ன்னு ஜெயலலிதா அடி வாங்கிகிட்டே ஆடுற சீன் ஞாபகத்துக்கு வந்துடுச்சு!! ;-)))))))

  ReplyDelete
 77. //இதுல என்ன காமெடின்னா.. எனக்கு SMS அனுப்பின புத்திசாலி.. அதில் சொல்லி இருந்தாங்க என்னுடைய போன் நம்பர், போட்டோலாம் பிளாக்கர் மீட்ல இருந்த போஸ்டுகள்ள தேடி தேடி எடுத்தாராம்.. அய்யா அதி புத்திசாலி... எதுக்கு அவ்ளோ கஷ்டம்?? அதான் என் பிளாக்லே போன் நம்பர் மற்றும் போட்டோ போட்டு இருக்கனே???? //


  அது உங்க ப்ளாக் படிக்கறவங்களுக்கு மட்டும் தான் தெரியும் பாஸ்.... அப்புறம் மதியம் ஃபோன் பண்ணேன்ல அதயும் சொல்லிடுங்க...... வேற யார் கேட்டாலும் நம்பர் குடுங்க :) அது என்னோட பெர்ஸனல் நம்பர் தான்

  ReplyDelete
 78. //அதுக்கு அப்புறம் நம்ம தலைமை அந்த நம்பர்க்கு முயற்ச்சி பண்ணைல செல் ஸ்விட்ச்ட் ஆப்னு வந்துச்சு.. அய்யோ..அய்யோ....//


  அவரையும் பேச சொல்லுங்க என் நம்பர் 9167962781 எப்போ வேணாலும் கூப்புடலாம் 24/7 :)))))))))))

  ReplyDelete

 79. அஸ்ஸாலமு அலைக்கும் வரஹ்..

  முதலில் பதிவுக்கு என் பாராட்டுக்கள் ஆமி..வழமை போலவே லாவகமான எழுத்து நடை.:)

  //ஆனால் விரைவில் மனக்குழப்பத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவளாக இம்மடலை தொடர்கிறேன். //

  :) :-) :-))

  //என்னை தடுப்பது அவர்களின் நோக்கமாக இருந்தால் இருக்கவே இருக்கு என் கணவர் போன் நம்பர்,ஜீமெயில்,பேஸ்புக், கூகுள் +! என் அண்ணா ஹைதர் அலி மூலமாக என்னை தடுக்கலாம்//

  ஹி ஹி..இப்டி எல்லாம் நீங்க புத்திசாலிதனமா கேள்வி கேக்க கூடாது ஆமீ..

  //எனக்கு இஸ்லாமிய பெண்மணி தளத்தில் எழுத விருப்பமில்லை எனவும், என்னை கட்டாயப்படுத்தி எழுத வைக்கிறாங்கன்னும் என்னன்னமோ சொல்லிட்டிருக்கீங்க.//

  அடுத்தவுங்க எழுதின பதிவையெல்லாம் நீங்க எழுதினதா சொல்லிருக்காங்களே.. சட்டத்தில இதுக்கெல்லாம் கேஸ் போட முடியாதாப்பா..??.:))
  அப்ப என் பதிவும் உங்க பேர்ல வந்திடுச்சாப்பா??? சோ சேட்..:)

  //என்னவோ என்னை சுத்தி பத்து பேரு பெல்ட் வச்சுக்கிட்டு "எழுது எழுது" என அடிக்கிற மாதிரியும், நான் அழுதுட்டே இஸ்லாமிய பெண்மணியில் எழுதுற மாதிரியும்... //

  இப்டிலாம் சிரிப்பு காட்டாதீங்கப்பா..வயிறு வலிக்குதுல்ல :) :-) :-))

  எந்த பதிவு உங்களை இப்படி எழுத வைத்ததோ அந்த பதிவுக்கு எனது கண்டனங்கள்..தேவையில்லாமல் ஒரு பொண்ணை குறித்து எழுதுவது எந்த விதத்தில் நியாயமுன்னு தெரியல..இனியாவது தங்களின் இது போன்ற போக்கை அவர்கள் மாற்றி கொள்ளட்டும்..இங்கு பதிவு எழுதும் அனைவரும் சுயசிந்தனையோடு தான் எழுதுகிறோம் என்பதையும்,அடுத்தவர்களின் கட்டாயத்திற்கு அடிபணியும் முட்டாள்கள் இல்லை என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்து கொள்கிறேன்..

  ReplyDelete
 80. // அது உங்க ப்ளாக் படிக்கறவங்களுக்கு மட்டும் தான் தெரியும் பாஸ்.... அப்புறம் மதியம் ஃபோன் பண்ணேன்ல அதயும் சொல்லிடுங்க...... வேற யார் கேட்டாலும் நம்பர் குடுங்க :) அது என்னோட பெர்ஸனல் நம்பர் தான் //

  பாவம் வருண் நீங்க...ரொம்ப மெனக்கெட்றீங்க... சரி சரி விடுங்க.. இதெல்லாம் எனக்கு பெரிய மேட்டரே இல்ல... கண்டுக்கவும் மாட்டேன்.. ஆனா இனிமே மதியத்துக்கு மேல போன் பண்ணுங்க.. 1 மணி வரை நமக்கு ஸ்லீப்பிங் டைம்... தூங்கைல என்ன பேசுறேன்.. யார்கிட்ட பேசுறேன்னு கூட தெரியாது....

  ReplyDelete
 81. சர்புதீன்..

  // உலகை புரிந்துகொண்டு விட்டேன் என்பதே அபத்தம்தான், இந்த கருத்தை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன் என்பதும் கூட அபத்தம்தான்., காரணம் நான் / நாம் ஒரு அற்பம்., எரும்புகளுக்குள் உள்ள சண்டையை நீங்கள் எப்படி பார்கிறீர்களோ அது போலவேதான் நாம் இடும் சண்டையும் யாரோ கிண்டலாக பார்த்துகொண்டு இருக்கலாம், சிலர் அதனை கடவுள் என்பர், சிலர் அதனை வேறு பெயரிட்டு அழைப்பர்!//

  நல்ல டாக்டரா பாருங்க... ரொம்ப முத்திடுச்சு...மூஞ்சிக்கு நேரா மோதுரவங்க கூட பிரச்சனைகுரியவர்கள் இல்லை.. இன்னைக்கு அடிச்சிகிட்டு நாளைக்கு சேர்ந்துக்கலாம்.. பட் நீங்கள்லாம் ரொம்ப டேஞ்சரஸ் ஆட்கள்...

  ReplyDelete
 82. // @சர்புதீன்

  உங்க பின்நவீனத்துவ குறீயீடுகளடங்கிய பின்னூட்டத்தை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எனக்கு எலக்கிய அறிவு கெடையாது.. //

  ROFL.....

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)