எல்லாரும் ஆவலோடு இல்லாம பயத்தோடு எதிர்பார்த்த நாளாகவே தான் குருபூஜை இருந்தது....


சிறுவயதில் பெருநாளையொட்டி வந்த குருபூஜையில் பூஜைக்கு முதல் நாள் துணிமணி எடுத்துக்கொண்டு  அசால்ட்டாய் வந்த ஞாபகம்,பள்ளியில் அபிராமம் தோழி தென்னரசி சொன்ன விழா நிகழ்ச்சிகளும் இன்னும் கண்முன்னே....

ஆனால் தீபாவளிக்கு அடுத்த நாள் முதலே ஆங்காங்கே குவிக்கப்பட்ட போலீஸ் கண்டு கொஞ்சம் நடுக்கம் தான்.

சம்மந்தமே இல்லாம ஏன் அங்கங்கே போலீஸ் சேர் போட்டு உக்காந்து ஊர்கதை பேசிட்டிருக்காங்கன்னு  ஆச்சர்யமா கடந்து போனேன். உள்ளுக்குள் எங்கேயும் நம்மல கூப்டு விஷாரிச்சுடுவாங்களோன்னு ஒரு பயம் :-)) பின்பு தான் தெரிந்தது!!


பாவம் அவ்வபோது ஏமாற்றிய மழைக்காக அவர்கள் ஓடும் போதும்,

மேலதிகாரி சொகுசு காரில் கடந்து போகும் போது உடனே எழுந்து சல்யூட் அடிப்பதும் சத்தியமா இதுவரைக்கும் டீவிலதான் பாத்துருக்கேன். பெண்போலீஸ்களும் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்பது  பலருக்கும் உறுத்தலா இருந்தாலும் சரியா தவறான்னு விவாதம் பண்ணும் அளவுக்கு பக்குவம் இல்ல.  (நீ  இன்னும் வளரணும் தம்பி(ங்கச்சி)!!!:-)) அந்த டாப்பிக்குள்ளையும் போக இந்த பதிவுக்கு அவசியம் இல்லை :-) ஆனாலும் அங்கேயும் சிலர் குடும்பகதை பேசிட்டிருந்தது பார்த்து கொஞ்சம் மகிழ்ச்சி தான்.... உள்ளுக்குள்ள பயமில்லாம இருக்காங்க போலன்னு!!!!

நான்கு நாட்கள் அவர்கள் விழிப்பாய் செயல்பட்டதுக்கு கிடைத்த பலன் தான் இந்த அமைதியோ என்று தான் நான் நினைக்கிறேன். ஆங்காங்கே யாரேனும் கூடி பேசினால் கூட விரட்டிவிடுவதும் அவ்வப்போது தெருக்களில் ரோந்து வருவதுமாக 4 நாட்கள் ஐந்துமுனைபகுதியில் இருந்து (கலவரம் நடந்த இடம்)  ஓட்டப்பாலம் வரையிலான பகுதிகள் அவர்கள் வசமாய் இருந்தது! 

இந்த பகுதிகளில் தான் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அதிகமாக பஸ்கள் நிறுத்துவதற்கான இடவசதி இருப்பதால் எப்போதும் பஸ் ஆக்ரமித்திருக்கும். இரு பெட்ரோல் பங்க், மருத்துவமனை, கோயில் முன் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டதால் ஞாயிற்று கிழமை அன்று பல இடங்கள் வெறிச்சோடி கிடந்தது (எங்கே போயி நிப்பாட்டிருப்பாங்கன்னு விஷாரிக்கலாம்னு நெனச்சேன்... அதுலாமா நமக்கு தேவை ஹி...ஹி...ஹி... அதுனால விட்டுடலாம்)



நிறைய கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சில தைரியசாலிகள் முதல் நாள் வரைக்கும் போட்டிருந்தாங்க. சிலர் 3 நாட்களாய் காணாம். எப்பவும் போல காய்கறி விலை அதிகமாகிவிட்டது. கால்கிலோ தக்காளி 10 ரூபாயாம்.... 100 கிராம் கத்திரிக்காய் 6 ரூபாயாம்...... ஒரு முட்டை 3ரூபாய்.50பைசா..........

சில மக்கள் தைரியமா வெளியே வந்தாங்க. ஆனா என்னை மாதிரி பலர் வீட்டுக்குள்ளையே:-)  பூஜைக்காக கலந்து கொள்ள வருபவர்கள் பண்ணும் கேலி,கிண்டல்,கத்தல்,கோஷங்கள் எல்லாமே எரிச்சல் ஊட்டுவதால் பெரும்பாலும் சந்துபொந்துகளில் சுற்றிதான் மற்றைடங்களுக்கு போகவேண்டிய நிலை. காலை 11 மணில இருந்து ஆரம்பிச்சு சாயங்காலம் 7 மணி வரை கொஞ்சம் பதற்றமாதான் கலவரப்பகுதிகள் இருந்தது. சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டதாக சொல்லியிருந்தாங்க. கடைதெருக்கு போய்விட்டு வந்த அம்மா  குறிப்பா ஐந்துமுனைபகுதியில் இளையான்குடி செல்லும் சாலை தடுக்கப்படிருந்தது என்று சொல்லியிருந்தாங்க. மற்றதெல்லாம் சரியா கவனிக்கலையாம் :-( ஆக மொத்தத்துல பரமக்குடி காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள்!!!

வழக்கம் போல் எல்லா அரசு/தனியார் அமைப்புகளும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. எதாவது எழுத மேட்டர் கிடைக்குமான்னு காத்திட்டிருந்தவங்களுக்கு அல்வா தான்

எல்லாம் நல்லபடியா நடந்து முடிந்ததில் பரமக்குடி மக்கள் ஏகத்துக்கும் குஷி..... கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களே ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்ற திருப்தியில் (அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் மனநிலைபாடு சந்தோஷத்தை கொடுத்தது)


ஒரே ஒரு குறை தான்... எவ்வளவோ காசு செலவு பண்ணி வரீங்க..... விழாவ நடத்துறீங்க.... தலைக்கு 500 ரூபாய் கொடுத்தாலே போதும். 5 பேர் சேர்ந்து ஒரு சுமோவிலோ காரிலோ பயணப்படலாம். அதவிட்டுட்டு சன்னல்க்கு வெளியே, சுமோவுக்கு மேலன்னு உக்கார்ந்தும் தொங்கிட்டும், தொத்திக்கிட்டும் வரணுமா? ஐய்யோ....... ஐய்யோ.................. சின்னபுள்ளத்தனமாவ்ல இருக்கு!!! 

டிஸ்கி - எந்த பெயிண்டையாவது பூசிக்கிட்டு வர கமெண்ட்ஸ் பப்ளிஸ் ஆகாது :-))
டிஸ்கி - மழை பெய்ததால் போட்டோ சரியா எடுக்க முடியல (ஒழுங்கா எடுத்துட்டாலும்....)

, , ,

27 comments:

  1. //தலைக்கு 500 ரூபாய் கொடுத்தாலே போதும். 5 பேர் சேர்ந்து ஒரு சுமோவிலோ காரிலோ பயணப்படலாம். அதவிட்டுட்டு சன்னல்க்கு வெளியே, சுமோவுக்கு மேலன்னு உக்கார்ந்தும் தொங்கிட்டும், தொத்திக்கிட்டும் வரணுமா? //

    சரியான கேள்வி சகோ..

    எப்போதுதான் திருந்துவார்களோ..?

    படங்கள் க்ளிக்கிய விதம் அருமை சகோ..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. நீங்க பூஜைக்கு போனீங்களா இல்லையா

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும். வலைசரத்தில் ஒரு வாரம் போனதே தெரியவில்லை. அருமையாக எழுதி இருந்தீர்கள். மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.ஆமினா,
    நல்லபாடியா முடிந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.

    ஆக, இதிலிருந்து தெரிவது என்னவென்றால்...
    "கலவரம் நடக்க காரணமாவதும், அது நடக்காமல் இருக்க காரணமாவதும் போலிஸ்தான்...
    அதாவது அவர்களை இயக்கும் அரசு நடந்து கொள்ளும் விதத்தில்தான்...
    எல்லாமே இருக்கிறது"
    ---என்று மிக மிக மிகத்தெளிவாக அறிந்து கொண்டேன்.

    புகைப்படங்களுடன் செய்தியினை சிறப்பாக அறியத்தந்தமைக்கு நன்றி ஜர்னலிஸ்ட்.

    ReplyDelete
  5. எதுவும் கடந்து போகும்...

    நேரடி ரிப்போர்ட் அருமை...

    மேகமூட்ட படங்கள் இயற்கை ஆயிருந்தன...

    தொடர்ந்து மிரட்டுங்கள் ...-:)

    ReplyDelete
  6. இந்த 4 நாட்கள் போலீஸ் பட்ட கஷ்டங்களை பார்க்கும் பொது என்னை அறியாமல் அவர்கள் மேல் மரியாதையை வந்தது.! பாவம் இரவு பகல் பாராமல் கொசுக்கடியில் அவர்கள் ஆற்றிய பணியை நினைக்கும் போது போலீஸ் பற்றி நான் வைத்திருந்த தவறான எண்ணம் மாறியது. Really hats off to them

    ReplyDelete
  7. நல்ல வேளை. பிரச்னை ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  8. அடுத்துவருக்கு இடைஞ்சல் தரும் கொண்டாட்டங்கள் தேவைதானா. இது உங்க ஊரின் தலைவிதி போலும்.

    ReplyDelete
  9. ////ஒரே ஒரு குறை தான்... எவ்வளவோ காசு செலவு பண்ணி வரீங்க..... விழாவ நடத்துறீங்க.... தலைக்கு 500 ரூபாய் கொடுத்தாலே போதும். 5 பேர் சேர்ந்து ஒரு சுமோவிலோ காரிலோ பயணப்படலாம். அதவிட்டுட்டு சன்னல்க்கு வெளியே, சுமோவுக்கு மேலன்னு உக்கார்ந்தும் தொங்கிட்டும், தொத்திக்கிட்டும் வரணுமா? ஐய்யோ....... ஐய்யோ.................. சின்னபுள்ளத்தனமாவ்ல இருக்கு!!!
    /////

    நல்ல கேள்வி

    எல்லாம் ஒரு பந்தாதான்

    ReplyDelete
  10. எந்த சார்பும் இல்லாத உண்மை எழுதும் பரமக்குடி நிருபர் வாழ்க... ஆனாலும் அந்த கடைசி வரிகளில் உள்குத்து வெளிகுத்து எல்லாம் படிச்சுட்டு இன்னும் சிரிச்சுகிட்டு இருக்கேன்

    ReplyDelete
  11. இனிய காலை வணக்கம் ஆமினா அக்கா,
    நலமா?
    நல்ல சேதியினைத் தந்திருக்கிறீங்க.
    மகிழ்ச்சியாக இருக்கிறது.
    அவலங்கள் நிகழ்ந்த மண்ணில் மீண்டும் அமைதி நிலவுகின்றது,
    விழாவும் சிறப்புற நிகழ்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  12. Assalamu alikum nice post sister! Keep it up!

    ReplyDelete
  13. கலவரங்கள் இல்லாமல் விழா நடப்பது என்பது ஆச்சரியாமான விசயமே... இந்நிலை தொடரட்டும். பகிர்வும் போட்டோவும் அருமை.

    ReplyDelete
  14. நேரடி ரிப்போர்ட் அதிரடி..

    ReplyDelete
  15. திரும்பியது அமைதி.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. ஆஹா மறுபடியும் கிளம்பிட்டாங்களா ஒடுலேய் மனோ ஒடுலேய் வேகமா....

    ReplyDelete
  17. நல்லா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  18. hi tech வளர்ச்சி கண்டாலும், audi, benz, bugatti என்று பல பிராண்டு வந்து கார் தந்தாலும், நம்ம ஊருல நம்ம சனங்களுக்கு கொஞ்சம் show காட்றது மாதிரி ஏதாச்சும் இருக்குதா.. பாவம்.. let them enjoy

    ReplyDelete
  19. 5 பேர் சேர்ந்து ஒரு சுமோவிலோ காரிலோ பயணப்படலாம். //
    அதுல இருக்கிற கிக் இதில வருமா? என்ன நீங்க சின்ன பிள்ளையாவே இருக்கீங்க

    ReplyDelete
  20. அதவிட்டுட்டு சன்னல்க்கு வெளியே, சுமோவுக்கு மேலன்னு உக்கார்ந்தும் தொங்கிட்டும், தொத்திக்கிட்டும் ...
    செம குத்தல்,இல்ல நக்கல்...

    ReplyDelete
  21. எழுதும் கலை ஒருவரிடம் இருந்து விட்டால் எத்தகைய நிகழ்வையும் அருமையாக காட்டிவிட முடியும்..

    ///பாரேன் இந்த பயலுக்குள்ள எவ்ளோ திறமை இருக்குன்னு..//

    ம்ம்ம்.. கலக்குங்க சகோதரி

    ReplyDelete
  22. சிறந்த பதிவு உளம் நிறைந்த பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  23. இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  24. கருத்தைகவரும் பதிவு,கண்ணை கவரும் படங்கள்! அப்புறம், தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. கருத்தைகவரும் பதிவு,கண்ணை கவரும் படங்கள்! அப்புறம், தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!

    http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html

    தமீழ உணர்ச்சி கவிஞசர் காசியானந்தனின் கவிதை வரிகளில் இருந்து நான் பெற்ற கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)