வழக்கமா காலைல மட்டும் என்னோட வாக்கிங் வர பக்கத்து வீட்டு  மாமி இப்பலாம் சாயங்காலமும் வர ஆரம்பிச்சுட்டாங்க. செம குஷி..... இனி நிறைய மேட்டர் கரக்கலாம் :-)  மாமியின் திடீர் முடிவுக்கான காரணம் அவங்க வாயிலிருந்தே......  "முன்னெல்லாம் 6 மணி ஆயிட்டாலே கேட்டின் உள்புறம் திண்டுக்கல் பூட்டு தொங்கும். ஆனா இப்பலாம் எங்கே பார்த்தாலும் வீட்டு வாசல்ல ஊர்கத,நாட்டு நடப்பு பத்தி பொம்மனாட்டிகள் பேசிண்(டு)டிருக்குற பாக்க முடியுற்து.  எல்லாத்துக்கும் காரணம் அரசு கேபிள் தான்"
ஆகா...........சன்டீவி குழுமத்தின் சேனல்கள் வராததால்  குழு ஆரம்பிச்சு அவல் போட்டு மெல்ல ஆரம்பிச்சுட்டாங்களா??????...... :-( (அவனையும் அவளையும் கோயில்ல பார்த்தேங்குற விஷயத்த அவனும் அவளும் ஓடிபோய் கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்னு ஆக்குற  வரைக்கும் விடமாட்டாங்க)
***************
பரமக்குடி கலவரம் நடந்துகொண்டிருக்கும் போதே  சூட்டோட சூடா  துப்பாக்கி சூட்டில் இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிவாரணம் அறிவிச்சிருந்தாங்க.   இப்ப பரமக்குடி கலவர போராட்ட குழு ஊர் புல்லா போஸ்ட்டர் அடிச்சுட்டு வராங்க. அதுல உள்ள சில விஷயங்கள்
தமிழக அரசே!!!!!
 • காயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கு
 • இறந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை கொடு
 • துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் மேல் கொலை வழக்கு பதிவு செய் (இதுவரைக்கும் பூ கூட பறிக்கலன்னு நெனைக்கிறேன்)
 • விசாரணைக்கு அழைத்துச்சென்ற தலீத் மக்களை விடுதலை செய்
 • தேசிய மனித உரிமை ஆணையத்தின் மூலம் விஷாரணை நடத்து
 • சிபிஐ விசாரணைக்கு உட்படுத்து (ப.சி சிபிஐக்குலாம் மாத்த முடியாதுன்னு ஒரே போடு போட்டுட்டார்)
 • சமத்து போராளியின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவி
 • கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தேர்தல் புறக்கணிப்போம்
 • நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிஷனை எதிர்ப்போம் 
(இந்த மொற  பரமக்குடில அதிமுக ஜெய்ச்சது என்பதும் குறிப்பிட தக்கது.......)ஆனாலும் இம்முறை உள்ளாட்சி தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும்னு  அடிச்சு சொல்லிப்புட்டாங்கள?!!!!!)
 ***************
அம்மா வந்ததும் மொதல்ல வச்ச குறியே கலைஞர் குடும்பம்& அல்லக்கைகளுக்கு தான். நிலஅபகரிப்பு முதல் அரசு கேபிள் வரை ஆப்பு ஒன்றே அடிப்படை குறிக்கோளாக கொண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. அம்மா எய்த அம்புகளில் சில அம்மாக்கே குறி வச்ச கதையெல்லாம் டெல்லி  வரைக்கும் போய்  கூவம் அளவுக்கு மாறுனது  எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி தான் இந்த அரசு கேபிளும்னு நெனைக்கிறேன். சன் டைரக்டை முன்பெல்லாம் தெருக்கு ஒன்றிரண்டு வீட்டில் பாக்கலாம். அரசு கேபிள்ல பல குடும்பங்களின் உயிர்நாடியான சீரியல்கள் அடங்கிய சன்டீவி வராத எல்லாரும் டன்டனக்காக்கு மாறிட்டாங்க. 
(பழம் நழுவி போர்ன்விட்டால  விழுந்த கதையாக இருக்குமோ?)
***************
சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்தோம். திரும்ப இரவு 8க்கு மேல் ஆனது. மானாமதுரை வரும் முன்பே பஸ் நின்றது. ரயில் க்ராஸிங் போலன்னு நெனச்சுட்டிருக்கும் போதே எல்லாரும் பஸ்ல இருந்து கீழ இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏதோ ஆக்சிடன்ட்டாம்.வேடிக்கை பார்க்க! சில நிமிடங்களில் பஸ் மெதுவாக நகர்ந்தது. ஜன்னலோரம் அமர்ந்திருந்ததால் சிதைந்த உடலை பார்க்க நேர்ந்தது. (மேலும் விவரிக்க தேவையில்லன்னு நினைக்கிறேன். ). கிட்டதட்ட 65 வயது முதியவர். பைபாஸ் ரோட்டை கடக்கும் போது எதிர்பாரா விதமாக வேகமாக வந்த ஆம்னி வேன் மோதிவிட்டதாக பேசிக்கொண்டார்கள். அந்த வழியில் பயணப்படுபவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஊருக்கு உள்ளே நுழைந்தால் மட்டுமே ரோட் லைட் இருக்கும். அவுட்டர்ல ரோட் எங்கே இருக்கும்னு கூட தேடிட்டு இருக்கணும். 

இப்படி சாதாரணமான அடிப்படை வசதி எதுவோ அதையெல்லாம் செஞ்சு கொடுக்குறத விட்டுட்டு இலவசத்த வாரி வழங்குறதெல்லாம் என்ன எழவுக்காக?????? யார் வீட்ல தான் பேன் மிக்ஸி இல்லாம இருக்கு? தாத்தா கொடுத்த டீவி ஒரு நாள் மழைக்கே  கோவிந்தாவாய்டுச்சு, உங்க லேப்டாப் எத்தன நாளைக்கு வரும்????  நாமலே பணம் கொடுத்து பொருட்களை வாங்குவதற்கும் அவங்க கொடுப்பதற்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. நம் பணம்-நம்வரிபணம், மக்களே சிந்திப்பீர்......
***************
ராஜீவ் காந்தி கொலை வழக்கின்  தூக்கு தண்டனை கைதிகளான  பேரறிவாளன், சந்தானம், முருகன் ஆகியோரின் கருப்பு வெள்ளை படம். விடுதலை செய்..!! தூக்கு தண்டனையை ரத்து செய்..!! என்பன போன்ற வாசகங்கள். கடைசியில் இவண் மூன்று தமிழர் உயிர் காப்போம் போராட்ட குழு. இந்த பேனர் பிரதான சாலை சந்திப்பில் காண நேர்ந்தது. அதன் கீழே மாம்பழம் விற்ற பெண்மணியிடம் மீதி சில்லரையை வாங்கும் போது எப்ப இந்த பேனர் வச்சாங்க என கேட்டப்ப "யாரு வச்சா எதுக்கு வச்சா யாரிவிங்கன்னே தெரியல"ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க......... அதே மாதிரி தான் கூடங்குளமும். எதுக்காக உண்ணாவிரதம் இருந்தாங்கன்னே பலருக்கும் தெரியல
***************
பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தது எதேச்சையாக காதில் விழுந்தது (கவனிக்கவும்......காத்துல வந்து காதுல  விழுந்துச்சு. ஒட்டு கேக்குற அளவுக்கு ISD கிடையாது ஹ்ஹும்)
நண்1- என்னவாம்?
நண்2 - வேற பொண்ண பாக்க போறாய்ங்களாம்
நண்1- அந்தபுள்ள மனசு எவ்வளவு வேதன பட்ருக்கும்?
நண்2- அதுக்காக என்னைய விட 2 வயசு மூத்தவள கட்டிக்க சொல்றீயா? நல்லவேள சீதனம் வரைக்கும் போகல...... டேய்...... அக்கா மாதிரிடா...........
நண்1- ..................  அப்ப உன்னைய விட 2 வயசு சின்னதா இருக்குறவலாம் தங்கச்சியா? போடா நீயும் ஒன் வெளக்கெண்ண ரீசனனும்......
நண்2- பல்லு வலியும் வயித்துவலியும் அவனவனுக்கு வந்தா தான் டே தெரியும்.
(ஆமி மனசாட்சி- அப்ப ஹார்ட் அட்டாக்லாம் வந்தா சொகமா இருக்குமோ?)
***************
சமீபத்திய ஆட்டத்தில் நூலிழையில் மும்பை இந்தியன்ஸ் ஜெயிச்ச மேட்சை எங்க வீட்டு கிரிக்கெட் அரக்கரண்டுகள் பாத்துட்டிருந்துச்சுங்க. (அதில் என்னவரும் அடக்கம் ஹி...ஹி...ஹி...) கடைசி 2 ஓவரில் என்னவரை பார்த்து........
நான் - டார்க்கெட் ரன் என்ன?
அவர்- 100
நான் - எனக்கொரு டவுட்டு...... சரியா பதில் சொல்லலைன்னா ஒரு வாரத்துக்கு கிரிக்கெட் விளையாட போக கூடாது சரியா?
அவர்- கிரிக்கெட் பத்தி எங்கிட்டேயேவா?  12 வயசுல இருந்து விளையாடுறேன். கேளு கேளு........
நான் - டார்க்கெட் ரன் என்ன?
அவர்- அதான் சொன்னேனே........100ன்னு
நான் - ரன்னுன்னா ஓடுறது தானே.... அதாவது பாய்ன்ட்,கோல் மாதிரி, ரைட்????
அவர்- ஆமா
நான் - அப்ப ஏன் பவுட்ண்ட்ரிஸ்லாம் ரன்னுன்னு சொல்றானுங்க? ஓடாம 4,6 எடுக்குறதுலாம் எப்படி ரன்னுல சேர்த்துக்க முடியும்?........ அப்ப அவனுங்க என்ன கேனையங்களா? இல்ல பாக்குற நாம்மலெல்லாமா?????
அவர் -..........????????????!!!!!!!!!!!!....................

(என்ன தான் வெளக்கம் சொன்னாலும் எடக்கு மடக்கா கேள்வி கேட்பேன்னு அதுக்கப்பறம் அவர்  வாய தெறக்கல......ஒரு வாரம் சாயங்காலம் போகாம இருக்குறதெல்லாம் தண்டனையே இல்லையாம். ஈவ்னிங் ஸ்நாக்ஸ்ன்னு ஒன்ன கொடுத்து அவர டெஸ்ட் பண்ண சொல்றது தான் இருக்குறதுலையே பெரிய கொடுமையாம்........)
***************
ரொம்ப நாளா ஆசை. ப்ளாக் டெம்ப்ளேட்டை எனக்கு பிடிச்ச மாதிரியே வெள்ள கலருல மாத்திக்கணும்னு.  லெட்சுமி மாமிகிட்ட ஐடியாலாம் கேட்டேன். அவங்க சொல்றேன்னு சொல்லி கடைசி வரைக்கும் அந்த ரகசியத்த சொல்லவே இல்ல:-) நாமலே முயற்சிக்கலாம்னா அந்தளவுக்கெல்லாம் நமக்கு மூள வேல செய்யாது. அப்படியும் முயற்சி பண்ணி ஒரு டெம்ப்ளேட்ட வச்சா அதுல சில பல பட்டன்கள் எடுக்கல. முக்கியமா ஓட்டுபட்டை :-) எங்கிருந்தாலும் வரவும்னு சொன்னதும் ப்ளாக்கர் நண்பன் ஓடி வந்து ஹெல்ப் பண்ணாரு. பழைய டெம்ப்ளேட்ட பேக் அப் பண்ணி வச்சுரூக்கீங்க தானே?ன்னு அவர் கேட்ட மொத கேள்விக்கே அப்படின்னா என்னா?ன்னு பதில் சொன்னப்பவே தல சுத்தி மயக்கம் போட்டுருப்பாரு :-) ஒரு வார போராட்டத்துக்கு எல்லா வசதிகளுடன் கூடிய இந்த டெம்ப்ளேட்ட மாத்தி கூடவே பல்பும் கொடுத்தாரு(இதெல்லாம் ப்ளாக்கர் வாழ்க்கையில சகஜமப்பா..............)

நான் - thanks brother
ப்ளாக்கர் நண்பன் - welcome sister
நான் - பாண்டிச்சேரிக்கா?
ப்.ந- நான் அந்த ஊர் இல்லையே
நான் - அந்த பாண்டிச்சேரி சகோக்கு நீங்க சொந்தக்காரர்ன்னு கேள்விபட்டேன்
ப்.ந - உங்க சொந்தக்காரங்க எல்லாருமே உள்ளூர்ல தான் இருக்காங்களா?
நான் - ???????!!!!!!!!!! முதல் பல்பு
ப்.ந- பெருமையுடன் வழங்குவது ப்ளாக்கர் நண்பன்
நான் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

***************
இந்த சீசன் சிறந்த நகைச்சுவை
 • கேடியின் உண்ணாவிரத நாடகம்
 • வாழ்வளிப்பார் என எண்ணியே சபையில் ஊமையாய் இருந்தவர்களின் கனவை அம்மா  அழித்ததால் தனி கூட்டணி அணி
***************
தத்தோபித்தோவம்- உனக்கு பிடிச்ச மாதிரியே எல்லாரும் பேசணும்னு எதிர்பாக்காத! நியாயம் உன் பக்கமாக தான் இருக்கும்னு எதிர்பாக்காத! கடைசி வரைக்கும் எது உண்மை என தெரியாமலேயே போய்டும்.
***************
என் டைரியிலிருந்து- தொந்தரவு செய்யும் கசப்பான நினைவுகளை மறக்க  புதிய  பாதையில் திரும்பி பார்க்காமல் பயணிக்கிறேன். அதிலேயே மூழ்கி கண்ணீர் வடித்தால்  ஒரு பெண்ணாய் தோற்றுவிடுவேனோ என்ற பயத்தில்...........
THE END :-)

, , ,

43 comments:

 1. வர வர இப்பஎல்லாம் ரொம்ப சுவாரசியமன பதிவுகளா போடுறிங்க அமீனா, கண்ணுபட்டிடப்போகிறது.

  ReplyDelete
 2. ஆமி சாரிப்பா. நீங்களே டெம்ளேட் வெள்ளைக்கலருக்கு மாத்திட்டீங்களே?
  டெம்ப்ளேட் மாத்தும்போது ஓட்டுப்பட்டைலாம் காணாமப்போயிடும் மறுபடி தேடித்தேடி சேர்க்கரதுக்குள்ள தாவு தீந்துடும். உங்களுக்கு புரியும் படி எனக்கு சொல்லத்தெரியுமான்னு யோசனையா இருந்தது. மறுபடி சாரி. பதிவெல்லாம் அமர்க்களமா போடுரீங்க. சமீபத்ல ஒருபதிவுல தமிழ்வாசி பிரகாஷ் டெம்ப்லேட் மாத்துவதுபத்தி சொல்லி இருந்தானே பாத்தீங்கதானே?

  ReplyDelete
 3. ம்ம் அம்புட்டு தானே இன்னும் இருக்க

  இம்புட்டு கொரிக்கை வைக்கிற தலித்துகள் அஞ்சு முக்குல கடை வச்ச பாவத்துக்ககாக கலவர அன்னைக்கி கொள்ளையடிச்ச பொருள்களுக்கு இவிய்ங்கே என்ன நஷ்ட ஈடு கொடுக்குறாய்ங்களாம்

  தினமும் தண்ணி அடிச்சுட்டு அப்புடியா அஞ்சு முக்குல இருக்குற பிஸ்மி புரோட்ட ஸ்டால், பாவா புரோட்ட ஸ்டால் கடைகளுக்குள் புகுந்து ஒரப்பு சல்னாவும் பொரோட்டவும் வாங்கி தின்னுபுட்டு காசு கேட்ட மண்டையே ஒடைக்கிற தலித் ரவுடிகள் இந்த மக்களுக்கு என்ன நஷட ஈடு கொடுக்கிறாய்ங்களாம்

  கொஞ்சம் கேட்டு சொல்லும்மா ஆமீனாம்மா

  ReplyDelete
 4. ஸலாம் சகோ.ஆமினா...

  வம்பு வேண்டும் என்று வீம்பு போல..!

  இருக்கட்டும்..!

  அப்புறம்...

  //நான் - ???????!!!!!!!!!! முதல் பல்பு//

  அதாவது அவருகிட்டே இது முதல் பல்பு...! அப்படித்தானே...?

  நம்ம கிட்டே வாங்கி வாங்கி வங்கியில் சேமிச்சு வச்சதெல்லாம் மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்..!

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா நீங்க வாங்குன பல்பு தான் டாப்பு. இதெல்லாம் தான் ஊர்வம்பா?

  ReplyDelete
 6. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், சந்தானம், முருகன் ஆகியோரின் கருப்பு வெள்ளை படம். விடுதலை செய்..!! தூக்கு தண்டனையை ரத்து செய்..!! என்பன போன்ற வாசகங்கள். கடைசியில் இவண் மூன்று தமிழர் உயிர் காப்போம் போராட்ட குழு. இந்த பேனர் பிரதான சாலை சந்திப்பில் காண நேர்ந்தது. அதன் கீழே மாம்பழம் விற்ற பெண்மணியிடம் மீதி சில்லரையை வாங்கும் போது எப்ப இந்த பேனர் வச்சாங்க என கேட்டப்ப "யாரு வச்சா எதுக்கு வச்சா யாரிவிங்கன்னே தெரியல"ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க......... அதே மாதிரி தான் கூடங்குளமும். எதுக்காக உண்ணாவிரதம் இருந்தாங்கன்னே பலருக்கும் தெரியல//

  இது உண்மைதான் ஆமீனா, பலபேருக்கு இந்த போராட்டங்கள் பற்றி தெரியவும் இல்லை, புரியவும் இல்லை, கூடங்குளம் போராட்டம் பற்றி என் வலைதள நண்பனே பயங்கரமாக எதிர்த்தான், அவனுக்கு நிதானமாக எல்லாம் சொல்லி விளக்கிய பின்தான் போராட்டத்தின் அவசியம் உணர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவாக குரல் குரல் கொடுத்தான்.

  ReplyDelete
 7. வம்பு நல்லாத்தான் இருக்கு..

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா

  ஊர் வம்புகள் அருமை.

  ஐடியா யாரு சகோ முகமது அவர்களா ?

  ஆமினா இப்பலாம் உங்கள் பதிவுகள் சமூகபிரச்ச்னையை பற்றிதான்

  தொடருங்கள் .....

  ReplyDelete
 9. படித்தேன் ரசித்தேன் சிந்தித்தேன்...

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

  பதிவுல ஏன் பல்பு படம் இருக்குன்னு யோசிச்சேன். இப்ப தான் தெரிது, நான் கொடுத்ததுன்னு. ஓகே பத்திரமா வச்சிக்கோங்க.

  //தத்தோபித்தோவம் & என் டைரியிலிருந்து//

  The End-னு போட்டிருக்கீங்களே, இனி இதெல்லாம் வராது தானே?

  :):) :)

  குறிப்பு: நான் கொடுத்ததை திரும்ப வாங்க மாட்டேன். பல்பையும் சேர்த்து...!

  ReplyDelete
 11. //"முன்னெல்லாம் 6 மணி ஆயிட்டாலே கேட்டின் உள்புறம் திண்டுக்கல் பூட்டு தொங்கும். ஆனா இப்பலாம் எங்கே பார்த்தாலும் வீட்டு வாசல்ல ஊர்கத,நாட்டு நடப்பு பத்தி பொம்மனாட்டிகள் பேசிண்(டு)டிருக்குற பாக்க முடியுற்து. எல்லாத்துக்கும் காரணம் அரசு கேபிள் தான்"//

  உண்மைதான்,இப்போ நம்பறேன்.அப்புறம் புது சட்டை அழகு.

  ReplyDelete
 12. சுவாரஸ்யமான தொகுப்பு

  ReplyDelete
 13. டைரி....கவலை வேண்டாம். எங்கள் பிரார்த்தனைகள் உண்டு.

  ReplyDelete
 14. @அம்பலத்தார்

  //கண்ணுபட்டிடப்போகிறது.//
  எல்லார் 'கண்ணு'லையும் 'படட்டும்'னு தான் ப்ளாக்ல போடுறோம் :-)

  ReplyDelete
 15. @மாமி
  எதுக்கு மாமி சாரிலாம். அப்படியா பழகியிருக்கோம்? உங்கள ஆன்லைன்ல பாக்க முடியல. இல்லைன்னா சண்டையே போட்டிருக்கலாம் ஹி...ஹி...ஹி...
  ப்ரகாஷ் கொடுத்த லிங்க்ல போய் டெம்ப்ளேட் மாத்தி அதுக்கப்பறம் அது சரியா வேல செய்யாம மாத்த தெரியாம முழிச்சப்ப தான் ப்லாக்கர் நண்பன் வந்தார். நன்றி மாமி

  ReplyDelete
 16. @ஹைதர் அலி அண்ணா
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  //
  இம்புட்டு கொரிக்கை வைக்கிற தலித்துகள் அஞ்சு முக்குல கடை வச்ச பாவத்துக்ககாக கலவர அன்னைக்கி கொள்ளையடிச்ச பொருள்களுக்கு இவிய்ங்கே என்ன நஷ்ட ஈடு கொடுக்குறாய்ங்களாம்
  //

  அஞ்ச்முக்குல ரோட்ல எரிக்கப்பட்ட கடைகள், சூறையாடப்பட்ட பொருட்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்ட கல்லூரி வாகனங்கள், தனிநபர் வாகனங்கள், உடைக்கப்பட்ட சில வீடுகள், ஹாஸ்பிட்டல் (பாரதி கிளினிக்), பெட்ரொல் பங்க் போன்ற தனி நபர் உடைமைகளையும் சேர்த்து தான் அரசுக்கு 2 கோடி நட்டம்னு கணக்கு கொடுத்துருக்காங்களே...... படிக்கலையா நீங்க? :-)

  //
  கொஞ்சம் கேட்டு சொல்லும்மா ஆமீனாம்மா//

  :-)

  பெரும்பான்மை சமூகத்தினர் வசிக்கும் இடத்தில் சிறுபான்மையினரும் கூட ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்களாகி விடுகின்றனர். ஆனால் பார்ப்பவர்கள் கண்ணுக்கு அப்பாவி மக்கள். இன்னும் பொன்னையாபுரம், காந்திநகர் போன்ற இடங்களுக்கு போக பயப்படும் மக்கள் இருக்காங்க. ஆனா இத சொன்னா யாராச்சும் நம்புவாங்கன்னு நெனைக்கிறீங்க? தலீத் எதிரின்னு முத்திர குத்திடுவாங்க.

  நீங்க சொன்ன சம்பவங்கள் அடிக்கடி நடப்பதும் மேலே கூறப்பட்ட வகை தான்.

  இரு பக்கங்களிலும் ஓட்டை இருக்கு சகோ. எந்த பக்கத்தையும் ஆதரித்து/தாக்கி பேச முடியல. கலவரம் செய்த தலீத்கள் மேல் தவறென்றால் கலவரத்தை (வேண்டுமென்றே)உண்டாக்கவென்றே ஜான்பாண்டியனை கைது செய்த போலீஸாரை என்ன சொல்வது?

  ReplyDelete
 17. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  //
  நம்ம கிட்டே வாங்கி வாங்கி வங்கியில் சேமிச்சு வச்சதெல்லாம் மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்..!//
  எதுக்கு சகோ மறக்க போறேன். மண்ண அள்ளி போட்டத தவிர்த்து எல்லா பல்புக்கும் பதில் கொடுத்துட்டேன்னு நெனைக்கிறேன்.
  விவாதத்திற்குரிய விஷயங்களை தவிர்த்து சுவாரசியமான பல்புகள் கொடுத்திருந்தா அல்லது இனி வாங்கினா பல்போ பல்பு பகுதியில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 18. @நாஞ்சில் மனோ
  //இது உண்மைதான் ஆமீனா, பலபேருக்கு இந்த போராட்டங்கள் பற்றி தெரியவும் இல்லை, புரியவும் இல்லை//
  ஓட்டு போட்டு அரசியலை மாற்றியமைக்கும் திறனே நம் கையில் தான் இருக்கு, ஆனா நம்மில் பலருக்கு என்ன நடக்குது என்றே தெரியாததை நினைக்கும் போது கொஞ்சம் அவமானமாக தான் இருக்கு (நானும் பல விஷயங்களில் தெளிவில்லாமல் தான் இருக்கேன்). போராட்டங்கள் நடத்தப்படும் முன் அதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் புகுத்திவிட்டு களத்தில் இறங்கினால் நிச்சயம் வெற்றி தான் (இறைவன் நாடினால்)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 19. @ஆயிஷா அபுல்
  வ அலைக்கும் சலாம் வரஹ்
  அவரின்றி எதுவும் அசையாது குட்டிசுவர்க்கத்தில் :-)

  ReplyDelete
 20. @சகோ பாசித்
  வ அலைக்கும் சலாம் வ ரஹ்.....
  //The End-னு போட்டிருக்கீங்களே, இனி இதெல்லாம் வராது தானே?//
  இனி வராது சகோ :-) :-) :-)

  //குறிப்பு: நான் கொடுத்ததை திரும்ப வாங்க மாட்டேன். பல்பையும் சேர்த்து...!//
  எங்கே போயிட போறீங்க? அதே ப்ளாக்கர் நண்பன் ப்ளாக்கில் தானே? புதுசாவே பார்சல் அனுப்பி வைக்கிறேன் சகோ

  ReplyDelete
 21. @சிவகுமார்
  பொதுவான விஷயங்கள் தான். அப்படி ஆச்சே இப்படி ஆச்சேன்னு ஒப்பாரி வைக்காம அடுத்தது என்னன்னு முடிவு பண்ணி எப்பவும் பிசியாவே வச்சுட்டா வாழ்க்கையில எந்த கஷ்ட்டமும் எளிதாக கடக்கும் பக்குவம் வரும். இந்த மெசேஜ சொல்ல நெனச்சேன். தட்ஸ் ஆல்...... ப்ரார்த்தனைகளுக்கு நன்றி :-)

  ReplyDelete
 22. நன்றி சகோ அம்பலத்தார்
  நன்றி சகோ ஹைதர் அலி
  நன்றி சகோ பலே பிரபு
  நன்றி மாமி
  நன்றி நாஞ்சில் மனோ
  நன்றி சாதிகா அக்கா
  நன்றி சகோ ஆஷிக்
  நன்றி சகோ சண்முகவேல்
  நன்றி சகோ பாசித்
  நன்றி சகோ வேடந்தாங்கல் கருண்
  நன்றி சகோ ஆயிஷா அபுல்
  நன்றி சூர்யஜீவா
  நன்றி சிவகுமார்

  ReplyDelete
 23. இங்கே பலரும் சொன்னதுபோல் நீங்கள் சமுதாய நடப்புகளை கொஞ்சம் அதிகமாக பார்ப்பது தெரிகிறது, ஊர் வம்பு பேசும்போது அக்கம் பக்கம் பார்த்து பேசவும் .

  ReplyDelete
 24. ஒரே பதிவில் ஊர் வம்பு, வீட்டு வம்பு எல்லாத்தயும் சொல்லிட்டிங்களே..

  டெம்பளேட் அவ்வளவாக ஈர்க்கவில்லை,,

  ReplyDelete
 25. @சகோ நாசர்
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //ஊர் வம்பு பேசும்போது அக்கம் பக்கம் பார்த்து பேசவும் .//

  :-)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  @சகோ ரியாஸ்
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  //டெம்பளேட் அவ்வளவாக ஈர்க்கவில்லை,,//
  சீக்கிரமே வேற மாத்திடலாம் :-)

  ReplyDelete
 26. யாரு வச்சா எதுக்கு வச்சா யாரிவிங்கன்னே தெரியல"ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க......... அதே மாதிரி தான் கூடங்குளமும். எதுக்காக உண்ணாவிரதம் இருந்தாங்கன்னே பலருக்கும் தெரியல????/

  ஆகா இதுக்குப்பின்னாலும் ஏதும் இருக்கா?
  நல்ல தகவல்கள் சுவையுடன் தந்தீர்கள்..
  ஆனால் நீண்ட பதிவு...அரைவாசியை வைத்து நாளைக்கு போட்டிருக்கலாமே வாசிக்க சுகமாய் இருக்கும் அன்பு உறவே..
  கடைசி வரியும் மனசைக்கவர்ந்தது..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 27. இனிய இரவு வணக்கம் அக்கா,

  நகைச்சுவை, அரசியல், டைம்மிங் காமெடி, டெம்பிளே மாத்தும் ஐடியா கேட்டு பல்பு வாங்கிய அனுபவம் எனக் கலந்து கட்டி ஊர் வம்பினைத் தந்திருக்கிறீங்க.

  ரசித்தேன்.

  ReplyDelete
 28. //சாதாரணமான அடிப்படை வசதி எதுவோ அதையெல்லாம் செஞ்சு கொடுக்குறத விட்டுட்டு இலவசத்த வாரி வழங்குறதெல்லாம் என்ன எழவுக்காக//

  இப்படி எல்லோரும் கேட்க ஆரம்பிச்சா நம்ம நாடு எங்கோ போயிருக்கும். Sighhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

  ReplyDelete
 29. ஊர் வம்பை விலைக்கு வாங்கறீங்க ஆமீனா...சுவாரசியம்...

  ReplyDelete
 30. ஆமி..எல்லாம் கலந்து கட்டி ஊர் வம்பு பதிவு அருமை.ஆமி, பாத்து....வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிராதிங்க..

  ReplyDelete
 31. சலாம் சகோ
  எப்படி இருக்கீங்க ..ராக் ஸ்டார் பாட்டு கேட்டீங்களா . நல்ல இருக்கு சூப்பர் கேட்டு பாருங்க ...

  he he asusual very good post sis

  ReplyDelete
 32. வம்புகள் நல்லா இருக்கு.
  எழுத்து நடை சுவராஸ்யம்.

  ReplyDelete
 33. "கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு"ன்னு பாடின வாயால "வெள்ள தான் டெம்பிளேட்டுக்கு ஏத்த கலரு"ன்னு பாடிடுவீங்களோ?(ஜோக்கு!)

  ReplyDelete
 34. ஆமா, நானும் டெம்ப்லேட் மாத்தும்போது அது சரியாவே வல்லே. சொல்லிக்கொடுத்த ஃப்ரெண்ட் சரியாதான் சொன்னாங்க நமக்கு அவ்வளவு புத்திசாலித்தனமெல்லாம் கிடையாதே,சரியாபுரிஞ்சுக்காம நா ஒன்னு சொல்லி நீ ஒன்னு புரிஞ்சுண்டா இன்னும் காமெடி ஆயிடும் இல்லியா?சொல்லிக்கொடுக்கவும் ஒரு திறமை வேனுமே. அதெல்லாம் எனக்கி கிடையாதுப்பா.சரியாபுரிஞ்சுண்டியே அதுவே போதும் அப்படியும் நம்க்கு ஒரு ஆலோசனைன்னா சொல்லித்தர நிறையபேரு ஓடி வந்து ஹெல்ப் பன்ராங்க இல்லியா அது எவ்வளவு நல்ல விஷயம்.

  ReplyDelete
 35. பழைய டெம்ப்ளேட்டைவிட இதுதான் நல்லாருக்கு,

  ReplyDelete
 36. @விடிவெள்ளி
  //அரைவாசியை வைத்து நாளைக்கு போட்டிருக்கலாமே//

  இனி வரும் பதிவுகளில் கவனம் செலுத்துகிறேன் சகோ

  வருகைக்கு மிக்க நன்றி

  @ராதாராணி
  //வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிராதிங்க..//
  இல்ல ராதா
  நம்மை சுற்றியுள்ள சமுதாய விஷயங்களை பேசுவது நம் உரிமை. அவை மறுக்கப்பட்டால் அது சர்வாதிகாரமாகிவிடாதா ??? ஹி...ஹி...ஹி... இப்படி சொல்லி தான் தப்பிச்சுட்டு வரேன் :-)

  @சகோ ரியாஸ்
  வ அலைக்கும் சலாம் வரஹ்....

  @சகோ யோகா
  //"வெள்ள தான் டெம்பிளேட்டுக்கு ஏத்த கலரு"ன்னு பாடிடுவீங்களோ?(ஜோக்கு!///
  ஹா....ஹா...ஹா....
  ஜோக் சொன்னா சிரிக்கணுமாமே :-)

  @சகோ புதுகை அப்துல்லா
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //பழைய டெம்ப்ளேட்டைவிட இதுதான் நல்லாருக்கு,//
  அப்ப இதையே கன்டினீவ் பண்ணிடலாம் :-)

  ReplyDelete
 37. நன்றி சகோ ரியாஸ்
  நன்றி சகோ நாசர்
  நன்றி தம்பி நிரூ
  நன்றி சகோ விடிவெள்ளி
  நன்றி சகோ அவர்கள் உண்மைகள்
  நன்றி சகோ ரெவெரி
  நன்றி பாத்திமா
  நன்றி ராதா
  நன்றி சகோ ரியாஸ் அஹ்மத்
  நன்றி சகோ யோகா
  நன்றி மாமி
  நன்றி சகோ அப்துல்லா


  உங்களனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.....

  ReplyDelete
 38. ஊர்வம்பு சூப்பர்

  ReplyDelete
 39. அஸ்ஸராமு அலைக்கும் ஆமினா....
  வம்பு நல்லா இருந்தது...படிப்பனையா இருந்தது...யோசிக்க வைத்தது...

  சமூகப்பிரச்சனைகளை தொடருங்கள்...
  சில பிரச்சனைகள் எனக்குப் புரியமாட்டேங்குது..
  .(பொது அறிவு கொஞ்சம் கம்மி)

  ReplyDelete
 40. ஆமினாவின் புலம்பல் நல்லாத்தான் இருக்கு:).

  ReplyDelete
 41. ஊர்வம்பு புலம்பல் சிந்திக்கவைக்கிறது... ரசிக்கவைக்கிறது... சகோ

  ReplyDelete
 42. நன்றி சகோ வைரை சதீஷ்
  நன்றி சகோ நிகாஷா
  நன்றி அதிரா
  நன்றி சகோ மாய உலகம்

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)