ஹாய் மக்கள்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க...

இஸ்லாமிய பெண்மணில கட்டுரை போட்டியாம்.. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணியும் ஒரு பத்தி கூட எழுத முடியல... ரொம்ப ரொம்ப யோசிச்சதுக்கு பிறகுதான் தெரிஞ்சுச்சு என்னால் எழுத முடியாததன் காரணம் என்னவென்று!!!

என்னன்னா...... தலைப்புக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம் :-) hi..hi..hi...

சரி நீங்களாவது கலந்துப்பீங்க என்பதால் இங்கே சொல்றேன்..


இஸ்லாமிய பெண்மணியில் சில நாட்களுக்கு முன் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்ப சொல்லியிருந்தாங்க. இந்த போட்டியில் கலந்து கொண்ட பலர்  கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் சொன்னதால  டிசம்பர் 31 வரை தேதியை நீட்டியிருக்காங்க... சோ இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க (எனக்கும் சேர்த்து தான்... ஏதோ ஆறுதல் பரிசு, அல்லது சான்றிதழ் க்காவது ட்ரை பண்ணலாமேன்னு தான்)

கட்டுரை போட்டியின் தலைப்பு:  "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா"

அனுப்ப வேண்டிய கடைசி தேதி : டிசம்பர் 31 இந்திய நேரம் இந்திய நேரம் இரவு 11.59 வரை.

அனுப்ப வேண்டிய முகவரி :   contest@islamiyapenmani.com

பரிசு விபரங்கள்: முதல் பரிசு: 5,000 ரூபாய்
                                    இரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்
                                      மூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்

பெரிய விஷயம்லாம் எதுவும் இல்ல! இப்ப முஸ்லீம் சமூகம் கல்வியில் பின் தங்கிய காரணங்களை அலசி ஆராய்ஞ்சி, இப்ப காணப்படும் வளர்ச்சி பற்றியும் மேற்கொண்டு  என்னன்ன செய்யலாம், என்னன்ன செய்ய கூடாதுன்னு ஆலோசணை வழங்கும் விதமாக கட்டுரை எழுதுங்க...  இந்த போட்டியில் ஆண் , பெண்  யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம்.  எந்த மதத்தவர்களும் கலந்துக்கொள்ளலாம்..

போட்டி பற்றிய முழு விவரங்கள் பாக்கணும்னா இத க்ளிக் பண்ணுங்க.. எதாவது ஐடியா கிடைக்கலாம்..

உங்க ப்ளாக்ல பேனர் வைக்கணும்னு நீங்க நினைத்தால் (எல்லாம் ஒரு ஒதவிதான் :-) இந்த கோட் யூஸ் பண்ணுங்க!  : (வெளம்பரத்துக்குலாம் இனிய இல்லம் பாயிஷா மார்க் கொடுக்குறாங்கப்பா... இபெ-யும் அது மாதிரி கொடுத்தா அதுலையாவது மார்க் வாங்கி தேத்திக்குவேன் அவ்வ்வ்வ்வ்)

இதான் பேனர்க்கான கோட்

<a href="http://goo.gl/6SlL7" target="_blank"><img border="0" src="http://3.bp.blogspot.com/-VcRWvvj_E7c/UMt3GKMjfoI/AAAAAAAADB8/-L5dpjackag/s1600/for+FB1.jpg" height="215" width="300" /></a>அப்பறமென்ன சகோஸ்... எல்லாரும் கலந்துக்கிட்டு வெற்றிகனி ஈட்ட வாழ்த்துறேன் வாழ்த்துறேன்....

பாயிஷா நடத்தும் போட்டியிலும் கலந்துக்கோங்க சகோஸ்
Ongoing event

லிங்க்: http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html
,

நான்பாட்டுக்கு சும்மா தான் இருந்தேன்! சில நாட்களுக்கு முன் ஒரு மெயில் வந்தது! அதில் ஒரு லிங்கும் கொடுத்து "நீங்க இதை செய்தே ஆகணும் என உங்களை மிரட்டிக்கேட்கிறேன்"ன்னு சொன்னாங்க! செம ஷாக்! ம்ம்ம்ம்ம் என்ன செய்ய பிரபலமாய்ட்டாலே இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிச்சுதானே ஆகணும்! ஹி..ஹி..ஹி..

மொக்கைகளின் திலகம் என்றென்றும் பதினாறு பானு தான் என்னை மிரட்டிய பதிவர்! இதுக்கெல்லாம் விக்கிபிடியா  லிங்க் தர முடியாது! த்தோ... இங்கே காப்பி பண்றேன் பாருங்க
//1. ஆமினா (இந்த பதிவை நீங்க எழுதியே ஆகணும்னு உங்கள மிரட்டறேன்....:))) // ஆதாரம் காண


அதாகப்பட்டது, சின்ன வயசுல, அறியாத வயசுல ஏதாவதொரு விஷயத்திற்கு நாமலே மொக்கையா ஒரு புரிதல் வைச்சிருப்போம்.
உதாரணமா "டீவில நடிகைங்க எப்படி டக்குடக்குன்னு அடுத்தடுத்து சேலை வேற போட்டுக்குறாங்க- அவங்களுக்கு மேஜிக் தெரியும் அதான்!"
இது போல் நம் வயதுக்கேற்ற விளக்கங்களை நாமே நமக்கு நாமே கொடுத்திருப்போம். இப்ப நெனச்சா அதெல்லாம் சிரிப்பா தோணும். நாமலா இப்படி முட்டாள்தனமா யோசிச்சோம்னு!

இப்ப என்ன பிரச்சனைன்னா!!
நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்! சின்ன வயசுல இப்படி எந்த சந்தேகமும் எனக்கு வந்ததில்லை! இதுக்கு என்ன காரணம்னு யோசிச்சு யோசிச்சு சிந்திச்சு சிந்திச்சு அதுக்கு பிறகு தான் விடை கிடைச்சுச்சு!

"ஆமி! நீயெல்லாம் பானு, சர்மிளா மாதிரி கிடையாது! நீ பொறக்கும் போது பெரிய அறிவாளி! புத்திசாலி! அதான்  உன் சின்ன வயசுல இந்த மாதிரி மொக்கை ஆராய்ச்சிகள்லாம் நீ செய்யல! அதுனால தான் உனக்கு அந்த மாதிரி மொக்கை தத்துவங்கள் எல்லாம் தெரியல...."

மனசாட்சி சொல்றதும் சரிதான்!

ஆக

சாரி பானு! மனச கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க! இது உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி தரக்கூடியதா இருக்கும். ஆனாலும் உண்மையை எவ்வளவு நாள் தான் பீரோக்குள்ள பூட்டி வைக்கிறது???  அதாவது.....

நான் ரொம்ப அறிவாளியா இருந்தேனாம் (கல்லெடுக்கப்படாது!) ரொம்ப புத்தியாசலியா இருந்தேனாம் ( நோ நோ... அழப்படாது) , என்னை மாதிரி யாராலும் திங்க் பண்ண முடியாதாம் ( நோ! சிரிக்கப்படாது)....

சரி சரி! உங்களுக்காக நான் கட்டிகாத்து வைத்த சில ரகசியங்களை சொல்றேன்! இத பார்த்து 'ஆமி நீ அப்பவே அப்படியா?'ன்னு கேட்டு கண்ணு வைக்க கூடாது சொல்லிட்டேன்!

1. சின்ன வயசுல  ரோட்ல நடந்து போறச்ச, வானத்தை பார்த்தா அதுவும் நம்ம கூட வரும்...  ஷாம்க்கு கிடைச்ச அறிவாளி அம்மா (நானேதான்) மாதிரி ஆமினாக்கு கிடைக்காததால் ஆமினாவே சுயமா சிந்திக்க ஆரம்பிச்சா! விளைவு????? ஆராய்ச்சி செய்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் பதில் கிடைத்தது!


மனுஷபயபுள்ளைகளுக்கு கால் இருக்குற மாதிரி வானத்துக்கும் ஸ்பெசல் கால் இருக்கு! அதான் அதுவும் நடக்குது!!! - எப்பூடி :-) :-) :-)

2. அதே சின்ன வயசுல ,  சந்திரனுக்கு ராக்கெட் போச்சுன்னு அடிக்கடி பெரியவங்க பேசிக்கிட்டாங்க. ஒடனே என் விஞ்ஞான மூளை வேலை செய்துச்சு!  வாசல்லையே உக்கார்ந்து நிலாவையே  பாத்துட்டிருந்தேன்!

-நிலாவில் தரையிறங்கிய ராக்கெட்டை எப்படியாவது பார்க்கணும்னு! அவ்வ்வ்

பட் என்னால பாக்கவே முடியல... எவ்வளவுதான் நானும் முயற்சி பண்றது! சாப்பாடு டைம் நெருங்கியதால நானே முடிவுக்கு வந்தேன்!
நிலாக்கு பின்புறமா தரையிறங்கியிருக்கானுங்க!அதான் நம்மால பாக்க முடியல! :-) :-) :-)

என் அக்கா , என்னை விட அதிபுத்திசாலி!

அக்கா- " ஆமி!நிலால மனுஷன் எறங்கினதா சொல்றாங்களே!  நீ நம்புறீயா???"

ஆமி- "ஆமாக்கா... போட்டோலாம் எடுத்து அனுப்புறாய்ங்களே"

அக்கா- "அதெல்லாம் எங்கேயாவது ஒரு மலைல போயி எடுத்துட்டு வந்திருப்பானுவ! நம்மகிட்டையே கத அளக்குறானுக!

ஆமி-"நீ சொல்றதும் சரிதான்.  அந்த நிலால ராக்கெட்ட நான் பாக்கவே இல்ல..அப்ப நிலாக்கு அவங்க போகலன்னுதானே அர்த்தம்???!!!!??????


எப்படி என் விஞ்ஞான மூளை :-)

____

ஷாம் என்னை மாதிரி தான் கேள்வி கேட்பான்னு நெனச்சு நிம்மதியா இருந்தேன்! அவன் கேக்குறதெல்லாம் "நிலா ஏன் சின்னதா அப்பறம் பெருசா ஆகுது?, எப்படி அலைலாம் வருது? மீன் தண்ணீக்குள்ள தானே இருக்கு! அதுக்கு சளிபிடிக்காதா? தேங்காய்க்குள்ள தண்ணீ எப்படி வந்துச்சு?"

இவனுக்கு  பதில் சொல்றதுக்கு செரமப்படுறத விட தப்பிக்க ரொம்ப சிரமப்படுறேன்! முடியல... கடைசி வரைக்கும் விடமாட்றான்... தெரியாதுன்னு சொன்னா நெத்தியில் கையை வச்சுட்டு  "அய்யோ...உனக்கெல்லாம் ஒன்னுமே தெரியாதாம்மா? ஏன்ம்மா"ன்னு   மானத்தை வாங்குறான்! அவ்வ்வ்வ்வ் (அவன் உண்மையதான் சொல்றான் என்பது வேற விஷயம் ஹி..ஹி..ஹி..)

முக்கியமான விஷயம்! இஸ்லாமிய பெண்மணியில் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கு! என்ன சொல்றாங்கன்னு ஒருக்கா போயி பாருங்க... க்ளிக்குக  அனைவரும் கட்டாயமாக கலந்துக்கோங்க!

தொடர்பதிவெழுத அழைக்கவிருக்கும் நபர்கள்

1. தல மெட்ராஸ் பவன் சிவா
2. சமீரா
3. ராஜி
4. அன்னு

, ,

ஹாய் மக்கள்ஸ்...

ச்ச.. பிரபலமாகிட்டாலே ரொம்பா பேஜாராக்கீது... :-)))))) இதுலவேற இந்த சர்மிபொண்ணு  "நியூஸ் பேப்பர் பார்த்தீயா? அந்த செய்தி பத்தி பதிவு போடு, ஆனந்த விகடன்ல வந்த கட்டுரை பாத்தீயா? அது பத்தி பதிவு போடு"ன்னு எக்கசக்க ப்ரஷர்... (நம்மல இன்னுமா உலகம் நம்புது.. சரி நீயே ஒரு கட்டுரை எழுதி தாயேன் என் ப்ளாக்ல போடுறேன்னு சொன்னா, போன் போட்டு நான்-ஸ்டாப்பா அர்ச்சணை கொடுக்குறா! (எங்கக்காக்கு என்னா தெறம என்னா தெறம.. திட்டும்போது கூட எதுகை மோனைலாம் பாலோ பண்ணுறா :-)

சரி சர்மிளாவுக்காக பதிவு போடலாம்னு யோசிச்சா 'காத்திரமான பதிவு' எதுவும் இப்போதைக்கு  பொறிதட்டல..  சோ உங்கள் துரதிஷ்ட்டம்... குட்டிசுவர்க்கத்தில் இன்னுமொரு மொக்கை பதிவு :-)
________

ஒருமுறை  நான்பாட்டுக்கு அமைதியா (?! இத எழுதும் போது எனக்கே சிரிப்பு வருது பாஸ்ஸூ) இருந்தேனா.. அப்ப இந்த மெட்ராஸ்பவன் சிவா சாட்ல வந்தாரு! 

சிவா- How r u madam?

ஆமி- ஓ நல்லாயிருக்கேனே!

சிவா- enna saappaadu innaikku

ஆமி- ப்ரைட் ரைஸ்

சிவா - bright rice? surf'la wash pannadhaa?

ஆமி- அய்யே...

சிவா- உங்க சமையல் எக்ஸ்ப்ரஸ்ல வந்த குறிப்புகளை செய்து பார்த்த  பல குடும்பதலைவிகள் மோசமான நிலையில் இருக்குறதாக தகவல் வந்துச்சு

ஆமி- (கோபமாக) இனி நான் சமையல் பத்தி பதிவே போட மாட்டேன்..விடுங்க!

சிவா- (கூலாக) இந்தியாவுக்கு கிடைச்ச 2வது சுதந்திரம்

ஆமி- க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(பயபுள்ளைக எவ்வளவு வெறுப்பா இருக்குதுங்க:-)
_____

ஷாம் பலநேரங்களில் பொறுப்பாய் நடந்துக்கொள்வான். அவனின் பெரியமனுஷத்தனமான வார்த்தைகள் கேட்கவே ஆசையாக இருக்கும். என் அம்மாவிற்கு ஒருமுறை  இருதயவலி ஏற்பட அம்மா சோர்ந்திருப்பதைப் பார்த்து  ஷாம் என் அம்மாவிடம் "கவலப்படாதம்மா... அல்லாஹ் இருக்கான்... ஷாம் இருக்கேன்.. ஒன்னுமாகாது" என்றான் இரண்டு வயதில்...

இந்த சம்பவத்தை மனசுல வச்சுக்கிட்டு நானும் ஷாம்மிடம் சொன்னேன்...
ஆமி- ஷாம்! அம்மாக்கு ரொம்ப  தல வலிக்குதுடா

ஷாம்- கம்யூட்டர் பாரும்மா சரியாகிடும்!

ஆமி- ???!!!!????!!!???!!!
(நம்மள பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கானோ :-)

________________

நேற்று டீக்கடை குழுமத்தில் தம்பி இர்ஷாத்தும், தம்பி ஹசனும் என்னை கலாய்ச்சுட்டிருந்தாங்க.... ஒரு கட்டத்தில் ஒரு சகோதரி "ஆமினா ஏற்கனவே காரமா இருக்காங்க..ஏன் மேலும் கோபப்படுத்துறீங்க"(அவ்வ்வ்வ்) என கேட்க
இர்ஷாத்- ஆமினா அக்கா கோவமே படமாட்டங்க... இல்லக்கா :-) சும்மா விளையாட்டுக்கு ஆமினா அக்கா!

ஹசன் -வேணாம் இர்ஷாத்!  ஆமினா அக்காவுக்கு கோபம் வராது.. வந்துச்சுசுசு............ அவ்ளோ காமெடி-யா இருக்கும். :)

(நம்ம டெரர்ரா இருந்தாலும் பயபுள்ளைக நம்பமாட்டேங்குதுகளே... வா டூ டூ டூ டூ டூ....................)

________________

ஒரு மாலைபொழுது.. மொட்டை மாடியில் அம்மா மடியில் படுத்துக்கொண்டே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். என் மேல் ஷாம் படுத்துக்கொண்டே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான்... நீண்ட நேர வானியல் ஆராய்ச்சிக்கு பின் அம்மாவிடம் நான்...

ஆமி- ஏன் மா... முன்பெல்லாம் சாயங்கால நேரம் மாடியில் இருந்தால் கூட்டுக்கு திரும்ப எக்கசக்க பறவைகூட்டம் போகும்... பாக்கவே கொள்ள அழகா இருக்கும்.. இப்பலாம் அதுமாதிரி வரதில்லையே..

அம்மா- குருவிக்காரனுங்க எல்லாத்தையும் சுட்டுட்டானுங்க போல

ஆமி- ஙே... :( கேள்விகேட்டா ஒழுங்கா பதில் சொல்ல தெரியுதாம்மா உனக்கு.... போ மா!!


உடனே ஷாம் என்னிடம்...

ஷாம்- ஏன் ஆனி.. அந்த மூன் அன்னைக்கு பெரிசா இருந்துச்சுல? இப்ப ஏன் பாதியா இருக்கு... ஏன் இப்ப மட்டும் ஒயிட் கலர்ல இருக்கு? அன்னைக்கு எல்லோ கலர்ல தானே இருந்துச்சு!

ஆமி- அதுவா.. அது அப்படிதான் டா...

அம்மா செம கோபத்தோட என்னை முறைத்துவிட்டு,  திட்டின கதையெல்லாம் இங்கே வேணாமே அஹ்ஹூ அஹ்ஹூ:-)

டிஸ்கி : இனி ஆராச்சும் என்னை பதிவு போட சொல்லுவீங்க... மொக்க போட்டே கொலபண்ணிடுவேன் ... ஜெய்லானி  இஸ்கூலில் படிச்சவங்களாக்கும்:-)

, , ,

நிர்மலா பெரியசாமியால் ஜீ தமிழ் தொலைகாட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியை பார்க்க சொல்லி அம்மா அடிக்கடி சொல்வார். என்னதான் இருக்கு என மதியவேளைகளில் ஒருமுறை பார்த்த போது, அழுதுகொண்டே அப்பெண் சொல்லும் குடும்ப பிரச்சனையை புரிந்துகொள்ளமுடியவில்லை. எப்படியோ புரிஞ்சுக்கிட்டு பார்த்துக்கொண்டு வரும் நேரத்தில் திடீரென சண்டையில் முடிகிறது... இதெல்லாம் நமக்கு ஒத்துவராது :-)  என ஒதுங்கினாலும் அவ்வபோது விளம்பரம் பாடாய்படுத்தும் :( ... அந்த விளம்பரத்திலும் நான் மேலே சொன்ன அழுகை மற்றும் சண்டை தான்.... டி ஆர் பி ரேட் தான் முதன்மையான காரணம் இதற்கு.... ஒருமணி நேரமோ அரை மணி நேரமோ ஓடுகிறதென நினைக்கிறேன். (நான் டீவி பாக்குறதில்லைங்குறது இப்பவாவது நம்புங்க மக்கா...நம்புங்க!)

சிறுவயதில் வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சனைகளில் தாத்தா தான் நாட்டாமை. தாத்தா அருகில் அமர்ந்துகொண்டு, தாத்தா காலை பிடித்துக்கொண்டே  அவர்கள் பேசுவதை கேட்பதுண்டு (தேவர் மகன் சிவாஜியையும் அதில் வரும் நண்டு சுண்டுகளையும் கற்பன பண்ணிக்கோங்க)...  பிரச்சனைக்குரிய கணவன் மனைவியை (இது சித்தி-சித்தப்பா, மாமா-மாமி என குடும்ப உறுப்பினராகத்தான் இருக்கும்) தனித்தனியாக அழைத்து விசாரிப்பார். அதன் பின் இருவரையும் வைத்து அறிவுரை சொல்லி அனுப்புவார். அவ்வளவுதான் பிரச்சனை முடிந்தது...  (பெரியவங்க சண்டைல சின்னபசங்க ஏன் விட்டாங்க?ன்னு யோசனையா இருக்கா??? நானும் எங்க அக்காவும் "இது  என் காலு, அது உன் கால்" என தாத்தாவின் காலில் பாகப்பிரிவினை சண்டை போடுவதால் அந்த மொக்கை பிரச்சனைகளை காதில் வாங்குவதில்லை. அதுனால அவுங்களும் கண்டுக்கலையோ என்னவோ..)

ஏனோ அந்த நிகழ்ச்சியையும் அதில் வந்த சண்டைகளையும் பார்க்கும் போது வீட்டுல் நடந்த பஞ்சாயத்துகள் நியாபகத்துக்கு வந்தன...

1. குடும்பத்தில் பேசி முடிக்க முடியாத பிரச்சனையையா மீடியா தீர்த்துவிட போகிறது?

2. கணவனின் குறைகளை  நிகழ்ச்சியில் சொல்கிறார்கள். இது நிச்சயம் அந்த ஆணை அவமானப்படுத்தவே செய்யும். அதன் பின் எப்படி எல்லாவற்றையும் மறந்து அந்த ஆண் மீண்டும் இணைவானா... அப்படி மீண்டும் இணைந்தால் அவன் ஆயிரத்தில் ஒருவன் :-)

3. அடிதடியை  அனைவர் பார்க்கும் நிகழ்ச்சியில் காட்டுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீர்வு நோக்கி போய்விடுமா? இது மேலும் இரு குடும்பத்திற்கும் விரிசலைதானே உண்டாக்கும்...

4. இப்பலாம் கவுன்சிலிங் பண்றவங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்க கிட்ட நம் பிரச்சனையை சொன்னால் பிரச்சனையை முடிஞ்சளவு தீர்க்கவாவது பாப்பாங்க. அதை விடுத்து 'இதான் கணவன், இதான் மனைவி, இதான் பிரச்சனை என டிவியில் சொல்வதன் மூலம் என்ன சொல்ல வராங்க? பிரச்சனையை தீர்க்குறது எப்படின்னா???

என்னமோ....

எனக்கு நம்பிக்கை இல்ல... இது போன்ற நிகழ்ச்சிகளில் தீர்வு கிடைக்குமான்னு தெரியல.. கெடைச்சா நல்லது தான்! :-)

ஆங்க்... தாத்தா பத்தி சொன்னேன்ல??? இந்த பதிவின் அடுத்த சாரம் இதுதான்... இப்பலாம் கூட்டுகுடும்ப உறவு முறை சிதைஞ்சுட்டே வரதுனால  நம் பிரச்சனையை அடுத்தவர்களிடம் சொல்லும் நிலையே கூடிக்கொண்டு வருகிறது. நம் அருகில் அனுபவம் கொண்ட பெரியவர்கள் இப்போதெல்லாம் இல்லாததால், அல்லது இருக்க வைக்க விரும்பாததால் கோர்ட்களில் குடும்பநல வழக்குகள் அதிகமாய்ட்டே வருது....  (ஆமி! நீ மட்டும் என்ன கூட்டுகுடும்பத்துலையா இருக்க?ன்னு ஆரோ  சீண்டுதாக... வேண்டாம் அழுதுடுவேன்:-)

வேறொன்னும் இல்லைங்க.. என்னை பொறுத்தவரை, நான் பார்த்த வரை குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமே இந்த  பொண்ணு பெத்த அம்மா-அப்பாவாகதான் இருக்காங்க...  செல்லமாக வளர்ந்த தன் மகளை ஒரு சொல் கூட சொல்லவிடாது , கணவன் மனைவிக்குள் ஈகோவை உருவாக்குவதற்கு பெற்றோர்களே முக்கியகாரணமா இருக்காங்க...  இப்படிதான் செல்லமாக வளர்ந்த என் உறவு பெண், தன் அம்மாவிடம் முறையிடுகிறாள்...

பொண்ணு- அவர் துணியெல்லாம் நானே தொவைக்கவேண்டியிருக்குமா

அம்மா- அதுகளுக்கெல்லாம் துணி தொவைச்சு போடவா உன்ன கட்டிகொடுத்தேன்...  

(ஆமியாக இருந்தால் - அப்பன்னா வாசிங் மெஷின் வாங்கி கொடுமா... # கருத்துல கண்ணா இருக்கோணும் :-)))

பொண்ணு- காலைல போனா நைட் தான் வராரு.. நானே எல்லா வேலையும் பாக்க வேண்டியிருக்கு

அம்மா- நீ என்ன வேலைக்காரியா டீ?? இதென்ன கொடுமையா இருக்கு..

(ஆமியாக இருந்தால்- அப்பன்னா ஒரு வேலைக்காரப்பொண்ணு  அனுப்புமா... # நாங்களாம் ஆரு :-)))

___________________________

இப்படிதான்... தன் அம்மாவிடம் தன் குறைகளை சொல்ல போக அவர்களோ அதை பெரிதாக்கி  5 வருடங்கள் கழித்து டைவர்ஸில் வந்து முடிச்சு வைக்கிறாங்க சுவாகா!!! 

சரி கருத்துவேறுபாடு பிரிஞ்சுட்டாங்க.. அதன் பின் அப்பெண்ணுக்கு மறு வாழ்க்கை இருக்கு..இல்லைன்னு சொல்லல...  "இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ, இப்ப அம்மா அப்பா பாத்துப்பாங்க. அவங்க காலத்துக்கு பிறகு உன் நிலை? உன் குழந்தை நிலை? உன் பாதுகாப்பு? ன்னு கேள்வி அடுக்குனா  நம்மல ஏற எறங்க பாக்குதுங்க (மறுமணம் தீண்டாமை செயலோ? அட கூறுகெட்ட பக்கிகளா.....)

என்னமோ போங்க! ஆங் என்னன்ன இந்த பதிவுல சொல்லியிருக்கேன்?? சுருக்கமா சொல்லிடுறேன்...

1. சொல்வதெல்லாம் உண்மை - மீடியா குடும்ப பிரச்சனையை தீர்க்குமா இன்னும் விரிசலை ஏற்படுத்துமா?

2. நாட்டாம தாத்தா - இப்பலாம் அனுபவமுள்ள பெரியவங்க நம் பக்கத்தில் இல்லாததால நம் குடும்ப பிரச்சனைகளை நம்மால் எளிதில் தீர்த்துக்க முடியல... சாதாரண பிரச்சனையையும் இடியாப்ப சிக்கலாக்கிடுறோம்.

3. பிரச்சனைக்கு யாரு காரணம்-  அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், தெளிவற்ற பெற்றோர்களின் ஆலோசணைகள்...

தீர்வு- பெற்றோர்களே... கல்யாணம் பண்ணி கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சுடுச்சு... தயவு செய்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்க! தடுக்கி கீழ விழுந்தா அவங்களா எந்திரிக்கட்டும்... விட்டுதள்ளுங்க....

குளிக்குள் தள்ளப்பட்டால் மட்டுமே நீங்க என்ட்ரி கொடுங்க!  பெற்றோர்கள் ஒதுங்கியிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி கிடைக்கும்....

முற்றுப்புள்ளி :-)))))

, ,

நிரூபனுக்கு,

பெரும்பாலும் மடல்கள் என்றால் தம்பி, சகோதரன் என தான் ஆரம்பிக்கும் இல்லையா? சாரி..இப்பலாம் உங்களை அப்படி கூப்பிடுவற்க்கு மனம் வரவில்லை. ..

சமீபகாலமா உங்க கமென்ட்லாம் பாக்கும் போது நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கிறீர்களோ என எண்ணத்தோன்றுகிறது. ஏன்னா நீங்க வெளிநாட்டுக்கு போனதுல இருந்தே உங்க செயல்கள் எல்லாம் கொஞ்சம் இல்ல...ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது!

போகட்டும். அது எனக்கு தேவையற்ற விஷயம். ஆனால் விரைவில் மனக்குழப்பத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவளாக இம்மடலை தொடர்கிறேன்.

பதிவர் சந்திப்பில் மது பற்றிய மனிதாபிமானி பதிவில் அனைவரும்  இருபிரிவுகளாக பிரிஞ்சாங்க. 1. மதுவை ஆதரிப்போர். 2. மதுவை எதிர்ப்போர்.  ஆனால்  உங்களின் நிலைப்பாடோ, "கூட்டத்தில் எதையாவது சொல்லி சர்ச்சை உண்டாக்குவோம்" என்பதாகவே இருந்தது! அதன்படிதான் சில பதிவுகளில் இஸ்லாமிய பெண்கள் பதிவர் சந்திப்பு போகக்கூடாது என தான் இந்த மனிதாபிமானி சர்ச்சை ஏற்படுத்துகிறார் என சொல்லியிருந்தீர்கள். 

வெடிகுண்டு போடப்பட்ட 5வது நிமிடம் தலைப்புச்செய்திகளில் 'இன்ன அமைப்பினர் வெடிகுண்டு வைத்ததாக பொறுப்பேற்றார்கள்' என்று வருமே?! அதைவிடவும் மட்டமாக வதந்திபரப்புனீங்க. நீங்க சொன்னதையும் "ஓ இதான் செய்தியா" என்பதுபோல் சிலர் கமென்ட் போட்டது தான் உச்சக்கட்ட காமெடி!

என்னை தடுப்பது அவர்களின் நோக்கமாக இருந்தால் இருக்கவே இருக்கு என் கணவர் போன் நம்பர்,ஜீமெயில்,பேஸ்புக், கூகுள் +!  என் அண்ணா ஹைதர் அலி மூலமாக என்னை தடுக்கலாம்... இதெல்லாம் விட்டுட்டு சர்ச்சையை உண்டாக்குவதால் எப்படி என் வருகையை தடுக்க முடியும் என உங்களூக்கு ஆமாம் சாமி போட்டவர்கள் கூட யோசிக்கவில்லை! பலே..பலே... நீங்க பலரையும் காமெடிபீஸாக்கியிருந்தீங்க! உங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை உங்கள் பணி தொடரட்டும்!

உண்மை என்னன்னா, நான் வருவது சில இஸ்லாமிய பதிவர்களுக்கு தெரியும், இந்த சர்ச்சைகளால் நான் வருவதற்க்கு யோசித்த போது அவர்கள் தான் ஊக்கம் கொடுத்து வரச்சொன்னவர்கள். அவர்களில் யாரேனும் ஒருவர் நீங்கள் வருவதை பரிசீலியுங்கள் என்று சொல்லி இருந்தால் கூட நான் வந்தே இருக்க மாட்டேன். அப்படி பட்டவர்களின் மீது அவதூறை அள்ளி வீசினீர்கள்...

சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு! பதிவர் சந்திப்பிலும் கலந்து உங்கள் முகத்தில் கரியை பூசிவிட்ட திருப்தியில் அமைதியா இருந்தா... இப்ப மீண்டும் என்னன்னமோ உளறிட்டிருக்கிறதா சொன்னாங்க.

எனக்கு இஸ்லாமிய பெண்மணி தளத்தில்  எழுத விருப்பமில்லை எனவும், என்னை கட்டாயப்படுத்தி எழுத வைக்கிறாங்கன்னும் என்னன்னமோ சொல்லிட்டிருக்கீங்க. அப்படி எத்தன பதிவுதான் அங்கே போட்டிருக்கேன்னு எட்டியாவது வந்து பாத்திருக்கீங்களா??!! அதுல மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் எழுதிட்டு வராங்க எனவாவது தெரியுமா???  23 பதிவுகளில் என் போஸ்ட் மொத்தமே 2 தான்!

என்னை தவிர எல்லா பயபுள்ளைகளும் வீடு ஆபிஸ்வேலைன்னு பிசியா இருக்குறதுனால திரட்டிகளில் இணைக்கிறது, பேஸ்புக்கில் சேர் செய்றதுன்னு எல்லாவேலைகளையும் என் சுயவிருப்பத்தின் பேரில் செய்துட்டிருக்கேன். என்னால் ஆரம்பிக்கப்பட்ட தளம் பிரபலமாக்கப்பட வேண்டும் என்ற சுயநலமும் தான்!

என்னவோ  என்னை சுத்தி பத்து பேரு பெல்ட் வச்சுக்கிட்டு "எழுது எழுது" என அடிக்கிற மாதிரியும், நான் அழுதுட்டே இஸ்லாமிய பெண்மணியில் எழுதுற மாதிரியும்... என்னே உங்கள் கற்பனை திறன்!?! சத்தியமா போலி வதந்தி பரப்பும் வித்தையையும், மற்றவர்களை ஏமாற்றும் திறமையையும், ஈடு இணையற்ற கற்பனை வளத்தையும்  உங்க கிட்டதான் பிச்சை எடுக்கணும் நான்...

அததுக என்கிட்ட எதாவது விஷயம் சொன்னா பட்டுன்னு பேசிடுவேன்னு  பயந்துட்டிருக்குதுங்க! அப்பாவி பெண்ணாம், மிரட்டுறாங்களாம்... என்னய்யா கலர் கலரா ரீல்லு விடுறீங்க!!!!

பதிவுலகில் என்னவேண்டுமென்றாலும் எழுதி தொலைங்க. அனாவசியமாக என் உழைப்பை கொச்சைப்படுத்தாதீங்க!


பதிவுலக தத்துவம் :  உங்கள் எழுத்தின் தரத்தை வைத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது!

, , ,

உறவை முறித்து சென்ற பின்னும்
உன்னுள்ளத்தில் தொடரும்
என்னைபற்றிய  நினைவுகள்

பிரிவின் தனிமையில்
அவஸ்தைகளை எண்ணி
புழுவாய் துடிக்கும் உன் வேதனைகள்!


எங்கேனும் என் பெயரைக்கண்டால்
நான்தானோ என
வைராக்கியத்தை எறிந்து ஆராயும் உன் பார்வைகள்

எதார்த்தமாய் அமையும் சந்திப்புகளில்
கோபம் மறந்து உதிர்க்கும்
உன் நல விஷாரிப்புகள்

உன்னையும் அறியாது
உன்னில் அவ்வபோது எழும்பும்
என்னை நோக்கிய  சிந்தனைகள்!

என்ன நேர்ந்தபோதும்
அவளைவிட்டு விலகியிருக்க கூடாதென
என்றேனும் என்னையெண்ணி
நீ விடும் கண்ணீர் துளிகள்!

அடடா...
பிரிவும் இனிக்குதடா!
தனிமையையும் சுகமாக்கினாயடா...

டிஸ்கி- மாசத்தொருக்காவாவது பதிவு போடலன்னா பிரபலபதிவர்ன்னு ஒத்துக்க மாட்டாங்களாம்(அஹ்ஹூ...அஹ்ஹூ)-  காணாமல் போன கனவுகள் ராஜிக்கா கொடுத்த டிப்ஸ் :-)) அதுக்காக பேஸ்புக்கில் போட்ட அழுவாச்சி காவியத்தை லேசா டிங்கரிங் பண்ணி இங்கேயும் போட்டிருக்கேன் :-))))

, ,

பல 'எதிர்'பார்ப்புகளோடு தொடங்கிய பதிவர் சந்திப்பு மனநிறைவுடன் நடந்துமுடிந்தது! அதில் நானும் கலந்துகொண்டேன்.... ஒருவாரம் ஆகியும் இன்னும் பதிவர் பற்றிய நினைவுகள் நீங்கவில்லை.. 
சேமித்துவைக்கும் பொருட்களோடு பீரோவில் பத்திரமாய்....
சென்னை என்பதால் வருவதற்கு பெரிய சிரமம் எதுவும் இருக்கவில்லை. ரம்ஜானுக்கு சென்னை செல்லவேண்டி இருந்தது சில காரணங்களால் தடைபட்டது! ரம்ஜானுக்கு சென்னை சென்றிருந்தால் நிச்சயம் பதிவர் சந்திப்பில் கலந்திருக்க முடியாது. ஏனெனில் ஒருமாதம் முன்பே ட்ரைனில் டிக்கெட் முன்பதிவு செய்து 25 சனிகிழமை இரவு ரிட்டன் போட்டிருந்தேன்...  அது கேன்சல் ஆக பதிவர் சந்திப்புக்காவது போய்விட்டு வரலாம் என மீண்டும் 25 இரவுக்கு டிக்கெட் போட்டால் வெயிட்டிங் லிஸ்ட் கிட்டதட்ட 90க்கு மேல்! போட்டும்விட்டேன்!

பின் மனிதாபிமானி தளத்தில் என் கமென்ட் பார்த்து சிவா என்னிடம் "உங்கள் சகோதரன் மேல் நம்பிக்கை இருந்தால் வருவீங்க" என சொல்ல.... சிவா சொன்னதற்காகவே வர முடிவுசெய்தேன்! :-)  சாதிகா அக்காவிற்கு போன் செய்து  கலந்துக்கொள்ளவிருப்பதை சொல்ல, அவர் வீட்டுக்கு நேரடியாக வர சொன்னார்...

அங்கே சென்றால் எனக்கு முன்பே லெட்சுமி மாமி இருந்தாங்க! ஒன்றாகவே மண்டபம் சென்றோம்! இதாங்க நான் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டதன் பின்னணி வரலாறு! இதுவே இவ்வளவு நீளம்னு கடுப்பாய்ட்டீங்களா... கூல்...கூல்... இனி அங்கு நடந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பார்க்கலாம்!

சாதிகா அக்கா வீட்டில் காலை சாப்பாடு முடிச்சதும் கிளம்ப தயாரானோம். சிராஜ்ஜிற்கு போன் போட்டு 9 மணிக்கு மண்டபம் வந்துடுவோம் என சொல்ல அவரோ, "பத்துமணிக்கு மேலதானே பங்க்‌ஷன்? ஏன் சேர் கிடைக்காதுன்னு துண்டு போட்டு எடம் பிடிக்க போறீங்களா? அதெல்லாம் நிறையாவே போட்டிருப்பாங்க! விழால முக்கியமான ஆளு... நானே இன்னும் போகல" என சொல்லி முதல் பல்பு கொடுத்தார் (அட ஆண்டவா... இவருக்கு மட்டும் கொழுப்பை நாக்குல மொத்தமா வச்சு படைச்சுட்டீயா?)
ஷிவா ப்ளாக்கில் சுட்டது
மண்டபத்திலிருந்து காரில் இறங்கிய உடனே வாசலில் வரவேற்க கசாலி அண்ணா, சங்கவி, சிவா இருந்தார்கள்! 3 பேருமே ஒன்றாய் சேர்ந்து வரவேற்க, சிவாவிடம் என்னை தெரிகிறதா எனக்கேட்டேன். அவர் தெரியாதே என ஒரே வார்த்தையில் பிரகாசமான பல்பு கொடுத்தார்! பின் நாந்தான் ஆமினா என அறிமுகம் செய்தேன்.  அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் அதே கேள்வியை திரும்ப கேட்க  அவரும் தெரியாது என்றார்! சரி இவன் தான் ஷாம்...இப்பதெரியுதா என கேட்க அப்பவும் தெரியாது என்றார்! (எல்லாரும் சொல்லி வச்சு பல்பு கொடுக்க முடிவு பண்ணீட்டீங்களா அவ்வ்வ்)  நேத்துவரைக்கும் தங்கச்சி, மருமகன்னு பேசிட்டிருந்தீங்களே சாட்ல! அந்த குட்டிசுவர்க்கம் ஆமினா சத்தியமா நான் தான் என சொல்லினேன்! விட்டா அழுதுருப்பேன்!

இனி யார்கிட்டையும் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணேன் ஹி..ஹி..ஹி... அந்த நேரம் பைக்கிலிருந்து பறந்துவந்தாரு டீக்கடை ஓனரு சிராஜ்... ( நீங்கதான் விழால முக்கியமான உறுப்பினராக்கும்??!! இதான் உங்க டக்கா?) எண்ணங்களுக்குள் நான் பாரூக் அண்ணாவை அழைத்துவந்து கசாலி அண்ணா என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார். முன்பே அவருடன் பேசியிருந்தாலும் ஸ்ட்ரைட்னிங் முடி அடையாளம் காட்ட மறுத்துவிட்டது :-)
ஷிவா ப்ளாக்கில் சுட்டது
வாசலிலேயே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து  பின் அரங்கத்திற்கு செல்ல கிளம்பினோம். மாடி ஏறியதும் அங்கே பெயர் பதிவு செய்துக்கொண்டிருந்தார்கள். ஐடியை ஷாம் சட்டையில் மாட்டிவிட்டேன் :-)

அப்போது பட்டிக்காட்டான் ஜெய் பெரிய வணக்கம் போட்டு நீங்க தானே ஆமினா என்றார் (அட்ரா...அட்ரா.... சந்தேகமே இல்லாம நீ பிரபலபதிவர் தான் ஆமினா! இதுக்காகவே தனியா ஒரு பதிவு போட்டு உங்கள பாராட்டுறேன் ஜெய்! ).. சூரியன் எப்.எம் ல வேல பாத்தாரு போல... மூச்சு விடாம பேசினாரு!  கேமரா, விடியோ, ரூல்ஸ் என அனைத்தையும் ஒவ்வொன்றாய் விளக்க, பெண்பதிவர்களுக்காக, அவர்களின் விருப்பம், பாதுகாப்பிற்காக  இவ்வளவு ஏற்பாடா என வியந்து நின்றேன்!
என் சார்பில் அடையாள அட்டை போட்டுக்கொண்டான் :-)
எங்களுக்கு முன்பே ராஜி, சசிகலா, சரளா அனைவரும் இருந்தார்கள். ஷாம் ஐடியை பார்த்ததும் தூயா "இதுவரைக்கும் நான் தான் குட்டிபதிவர்ன்னு நெனச்சேன்! என்னை விட குட்டிபதிவரா இருக்கியேன்னு கலாய்ச்சாங்க!
பின்னூட்டப்புயல் சேக் தாவூத் உடன்
சேக்தாவூது எனக்கு டீ கொண்டு வந்து கொடுக்க, அப்ப என் மகனுக்கு என சண்டை போட்டேன் ;-) (டீயா இருந்தாலும் எங்க பங்கை விட்டுகொடுக்க மாட்டோம்ல?? அவ்வ்வ்வ்வ்வ்)
பார்த்த மாத்திரத்தில் அனைவர் மனதிலும் பதியகூடிய நபர் வல்லிம்மா
வல்லி அம்மா அனைவருக்கும் பூவும் குங்குமமும் கொண்டு வந்திருந்தார். பூமேல் என்னமோ ஆசை இருப்பதில்லை...   கிட்டதட்ட பூ சூடி 5 வருடங்களூக்கும் மேல் ஆகியிருக்கும்..  யாராவது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்லிவிடுவேன்.. ஆனால் வல்லிம்மா கொடுத்த போது வேண்டாம் என சொல்ல மனம் இல்லை.. இத்தனைக்கும் வைப்பீங்களா என தான் கேட்டார்! வைப்பேன் என்றேன்! அவர் முகத்தில் இருந்த காந்த ஈர்ப்பு அப்படி சொல்ல வைத்ததோ என்னவோ... கண்ணா என அழைத்தே அனைவரிடமும் பேசினார். விடைபெறும் போது கட்டிதழுவி நீண்டநாள் பழகிய நெருங்கிய உறவினர் போன்ற உணர்வை ஏற்படுத்தினார். ச்ச... அம்மா கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் போய்விட்டோமே என நொந்துக்கொண்டேன்!

மேடையில் ஒருவர் ஏறி தமிழ்தாய் வாழ்த்து பாட அப்போது தான் தெரிந்தது அவர் மதுமதி என்று! போட்டோக்கும் நேர்ல பாக்குறதுக்கும் சம்மந்தமே இல்ல.. ஒருவேள காதலில்  தோல்வி அடைந்த சமயத்துல தாடி வளர்த்து, துன்பத்திலும் சிரி என பெரியோர்களின் வாக்குபடி சிரிச்சுட்டே எடுத்த பழைய போட்டோ போல என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்!:-)
ஆஷிக் மற்றும் சேக் தாவூத் உடன்
தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் என்னிடமிருந்து போனவன் தான் ஷாம்! அப்பப்ப நான் இருக்கேனான்னு உறுதிபடுத்த வந்தான். மீதி நேரம் அவன் மாமாமார்களுடன் சுத்திக்கொண்டிருந்தான்! (பதிவர் ஆகுறதுக்கு இப்பவே ப்ராக்டீஸ் கொடுக்குறோமாக்கும் :-)  

பதிவர் அறிமுகப்படுத்த ஒவ்வொருவராய் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது  என்னை அழைக்க வேண்டாம் என பாலா கணேஷ் அவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் உடனே மேடையில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினார்.  அதன் பின்னும் என் பெயரை அழைக்க, நான் மேடை ஏற வரும் போதே மதுமதி மற்றும் ஜெய் விடியோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள்! ( பொதுவான நிகழ்ச்சியில் படம் பிடிப்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால், பொறுப்பாய் இருந்து,  முடிந்தளவு அவர்கள் பெண்பதிவர்களுக்காய் மெனக்கெட்டது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விஷயம்! பெண்பதிவர்கள் ராணிகளாய் நடத்தப்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனியான, சிறப்பான கவனிப்பு... இனி எப்போது பதிவர் சந்திப்பு நடத்தினாலும் கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என முடிவு செய்ய வைத்த விஷயங்களில் இதுவும் ஒன்று! )
அரசியல்பதிவர் கசாலி அண்ணா உடன் :-)
அதன் பின் சரக்கு,மப்பு என சில வார்த்தைகள் விடப்படும் போது விழாக்குழுவினர் முகத்தில் இருந்த கவலை மற்றும்  மேடைக்கு சென்று சிராஜ்  தொகுப்பாளரிடம் அது போல் பேச வேண்டாம் என தீர்மானத்தை உடனுக்குடன் சொன்னதுலாம் HATS OFF BROTHERS!
'தல' சுய அறிமுகத்தின் போது
பெண்களை போட்டோ எடுக்க வேண்டாம் என சொல்லியிருந்தாங்க! எந்தளவுக்கு இதை செயல்படுத்த போறாங்க என  யோசித்ததுண்டு! ஆனால் அதுக்காகவே சிவா நிறையா Chair இருந்தும்  எங்கும் உக்காரல போல அவ்வ்வ்! Sir விழா நடக்குற நேரம் முழுக்க நின்னுட்டே தான் கண்காணிச்சுட்டிருந்தார்! யாராவது போட்டோ எடுத்தா ஒடனே ஓடி வந்து தடுத்துட்டிருந்தார்...

நேற்று மதுமதியின்  ஒரு பதிவை படித்தபோது தான் புரிந்தது! அத்தனை வேலைகளுக்கும் டென்ஷன்களுக்கும் மத்தியிலும் மதுமதி அனைவரிடத்திலும்  புன்னகை பூக்க பேசியது ரொம்பவே ஆச்சர்யப்பட வைக்கிறது!  சாப்பிட போகும் ஒவ்வொருவரிடமும் நலம் விஷாரித்து பேசிக்கொண்டிருந்தார். சாப்பிட்டதும் விழாவை பார்த்துவிட்டுதானே செல்வீர்கள் என சொன்னபோதும், கட்டாயமாக இருப்போம் என சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும்  அவரின் பொறுப்பான வழிநடத்தலை காமித்தது! (நீங்களாம் கல்யாணத்துக்கே பந்தி வைக்கிற டைம்ல போற ஆளுன்னு அவருக்கு தெரிஞ்சுக்கு போல! அதான் கேட்டிருக்கார்....)
ஐஸ் சாப்பிட்டுவிட்டு வந்த போது :-)(வீடுதிரும்பல் ப்ளாக்கில் சுட்டது)
ராஜியின் மகனுடன் ஷாம் ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டான். ராஜி  கடைக்கு அழைத்து சென்று ஐஸ்க்ரீம் வாங்கி கொடுக்க ஷாம் "எங்கம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணும்" என்றானாம். சரி கைல வச்சுக்கோ என ராஜி சொல்ல, ராஜி கையில் இருந்த ஐஸ்க்ரீம்மை பறித்து சாப்பிட்டானாம்...  (நாங்களாம் இப்பவே இப்படின்னா பாத்துக்கோங்க! ) ராஜி சும்மா பம்பரம் மாதிரி சுத்திட்டே இருந்தாங்க... பலர் கூச்சம் துறந்து சகஜமாய் பேசிபழகியதற்கு இவரின் அணுகுமுறை முக்கியக்காரணம்னு சொல்லலாம். பலரிடம் தானாகவே சென்று பேசி அறிமுகம் செய்து நீண்டநாள் பழகியவர் போல் நடந்துக்கொண்டார். 
மனிதாபிமானி(ஹி..ஹி..ஹி...) சுய அறிமுகத்தின் போது!
பதிவர் அறிமுகம் முடிந்து, சாப்பிட கூப்டும் போக மனமில்லாமல் பேசிக்கொண்டே இருந்தோம். கசாலி அண்ணா மொபைலில் இருந்த என் மருமகன்  Rizal Ahamed விடியோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் அண்ணாவை சாப்பிட கூப்டு நான் அடம்பிடிச்ச போது நான்வெஜ் தான்  சாப்பிடணும்னு அடம்பிடிச்சார் :-)

சிபியிடம் சாதிகா அக்கா பதிவுலக 'மொய்க்கு மொய்' பற்றி பேசும் போது "சிபி கூட என் ப்ளாக் வரதில்லைன்னு அவரை மடக்கினேன்" ( எங்கே போனாலும் ப்ளாக்கிற்கு ஆள் திரட்டுறதுல குறியா இருப்போம்ல அவ்வ்வ்)
சிராஜ் கையில் தூக்குவாளி... (நோ உள்குத்து:-)
வீட்டில் பங்க்‌ஷன் என்றால் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கடைசி பந்தியில் தான் சாப்பிடுவோம். எங்களுக்கு பரிமாறுவதும் எதாவது ஒரு நெருங்கிய உறவினராகவே தான் இருப்பார். இந்த சந்திப்பிலும் அப்படியே... சிராஜ் மற்றும் கசாலி அண்ணா சாப்பாடு பரிமாறுனாங்க!  ஷாம்க்கு தனியாக இலை போட்டு சாப்பிடு வைக்கப்பட்டது! ஒடனே அங்கே வந்த சிவா, "இன்னைக்கு நீ யார் முகத்தில் முழிச்ச ஷாம்? இந்த நாள் உனக்கு அதிஷ்ட்ட நாள் டா. உங்கம்மா சமையல்ல இருந்து தப்பிச்சுட்ட என இன்னொரு பல்பு கொடுத்தார்! அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் "போஸ்ட்டர்க்கு பசை வேணும்னா  ஆமினாவின் சாம்பார் சாதம் சரியா இருக்கும்" என பல்பு மேல் பல்பு கொடுத்தார்! அவ்வ்வ்வ்வ்வ்
ஷாம் இலையில் எதுவும் இல்லாதாதுக்குகாரணம் அருகில் அமர்ந்திருக்கும் மாமாமார்கள் :-)
பின் ஷாம் சாப்பிட மறுக்க, சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது என்று  அவன் இலையில் உள்ளதெல்லாம் அவன் மாமாமார்ங்க ஆஷிக்,சேக்தாவூத் சாப்பிட்டாங்க :-) சாப்பாடு செம டேஸ்ட். ஆயிரத்தில் ஒருவன் சகோ.மணியிடம்  நேரடியாகவே ஆஷிக் மற்றும் சேக் பாராட்டுனாங்க! சாப்பிட்டு முடிஞ்சதும்  சிவா,சிராஜ் க்ரூப் சாப்பிட  ஆஷிக் மற்றும் சேக் பரிமாற போயிட்டாங்க!  அகில உலக புகழ் பெற்ற இலையை தலைகீழா மடிச்ச சர்ச்சை இங்கே தான் நடந்துச்சு ஹி...ஹி..ஹி...

ருக்மணி அம்மா, ரஞ்சினி அம்மா, சீனா ஐயா, தமிழ்வாசி ப்ரகாஷ், எல்.கே  உடன் பேசிவிட்டு அரங்கத்திற்கு சென்றால் யாரோ ஒருவர் மேடையில் அமர்ந்திருந்தார்!

காலை முதல் ஒவ்வொரு பிரபலபதிவரையும் கூட இவர் யார் இவர் யார் என நான் கேட்க, இவர் தான் கேபிள் சங்கர், இவர் தான் சுரேகா, இவர் தான் ஜாக்கி என சொல்லி சொல்லி சோர்வடைந்த சாதிகா அக்காவிடம் மேடைல இருக்காரே இவர் யாருக்கா என கேட்டது தான் உச்சகட்டம்!  அடக்கொடுமையே.. இவர்தான் பட்டுகோட்டை ப்ரபாகர் என சொன்னார்! ஓ இவர்தானா என வழிந்துக்கொண்டேன் அவ்வ்வ்வ்... 
பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பீச் பார்த்துட்டுதான் போகணும் என சாதிகா அக்கா சொல்லியிருந்தாங்க. பட்  அக்கா வேறெங்கோ செல்லவேண்டியிருந்ததாலும், காலையிலேயே  வந்துவிடுவேன் என என் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்ததாலும் உடனே செல்லவேண்டியதாகிவிட்டது! புத்தகவெளியீடு முடிந்ததும் கிளம்பிவிட்டோம்! ஆனாலும் போக மனமே இல்லை! ருக்மணி அம்மாவிடம் விடைபெற அவர்கள் கை பிடித்து பேசினாங்க... ஷாம் தலையை தடவி வாழ்த்து சொன்னாங்க!

சிவாவிடம் விடைபெற்ற போது வாசல் வரை வழியனுப்ப வந்தார். கூடவே  கறிவேப்பிலை சாதம் (சிவா கமென்ட் பார்க்க) பற்றிய பஞ்சாயத்து வைத்தார். நாட்டாமை கசாலி அண்ணா தான்!  அண்ணாவை நைஸாக நான் மிரட்ட  கறிவேப்பிலை, கருவேப்பிலை 2மே சரிதான் என தீர்ப்பு சொன்னார் :-)

மண்டபத்தின் கீழே வரை வழியனுப்ப சிவா, சிபி, சேக், கசாலி அண்ணா வந்திருந்தாங்க...  அப்போது சிபி என்னை பார்த்து "என் பதிவுக்கெல்லாம் இனி வந்து ஓட்டு போடலன்னா உங்க பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு போடுவேன்"ன்னு மிரட்டினார்! என் ப்ளாக்ல கமென்ட் போடலன்னா நானும் மைனஸ் ஓட்டு போடுவேன்னு பதிலுக்கு டீல் பேசினேன் அவ்வ்வ்வ்வ்

 இறுதிவரை வழியனுப்ப இவர்கள் வந்தது  உண்மையிலேயே நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை தந்தது! மொத்தத்தில் இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்! அங்கும் கூட கேட்டரிங் ஆட்கள், வரவேற்க வாசலில் பொம்மை என எல்லாமே அந்நியமாய் தெரியும்.. ஆனால் இந்த சந்திப்பிலோ வாசலில் வரவேற்க , ஜூஸ், டீ கொடுக்க, சாப்பாடு பரிமாற, சாப்பாட்டின் நடுநடுவே என்ன வேண்டுமென கேட்க, ஜாலியாய் பேச என எல்லா வேலைகளுக்கும் பதிவர்களே செயல்பட்டு "நாமெல்லாம் ஒரே குடும்பத்தவர்கள்" என்ற உணர்வை ஏற்படுத்தியது!

விழாக்குழுவனருக்கு,
மனமார்ந்த பாராட்டுக்கள்! பல விஷயங்களில் சபாஷ் போட வைத்தீர்கள்...  ஒவ்வொரு விஷயங்களிலும் உங்கள் திட்டமிடல்  அடுத்தமுறையும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது! சூப்பர் சகோஸ்! இந்த திருவிழாவில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்வான தருணங்களாக மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்!

டிஸ்கி :       2 பதிவா போட நெனச்சேன் :-) மக்கள் கத்துவாங்க என்பதால் ஒன்னா போட்டுட்டேன்! விடாம படிச்சுருங்க! அப்பப்ப கேள்விகேட்டு மடக்குவேன் :-))))

, , ,

சங்கை மிகு ரமலானை நம் அடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மற்ற மாதங்களை போல் அல்லாமல் இப்புனித மாதத்தில் இறை நெருக்கம் பெற வேண்டி நம் இறைவழிபாடு இன்னுமின்னும் கூடுதலாகவே இருக்கும். ஆனால் பெண்களால் ஆசைபட்ட அளவிற்கு இறைவழிபாட்டில் ஈடுபட முடியாமல் போகிறது. காரணம் நோன்பின் சஹர் உணவையும் இப்தார் விருந்தையும் சேர்த்து இரவு உணவு மற்றும் குழந்தைகளை கவனிப்பது என நேரங்களை செலவழிப்பதில் கழிவதால் இறைவழிபாட்டிற்கான கால அளவு என்பது மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும்.  அப்படிப்பட்டவர்களுக்கான திட்டமிடுதல் ஆலோசனைகள் அடக்கியதே இந்த பதிவின் நோக்கம். 

என்னன்ன செய்யலாம்?

ப்போதே வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சுடுங்க. தூசி தட்டுவது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது, பெரிய பெரிய பெட்ஷீட், கார்ப்பெட், ப்ளாங்கெட் முதலியவற்றை சுத்தம் செய்துவிடுங்கள். ரம்ஜான்க்காக  வீடு அலங்கரிக்க கடைசி நோன்புகளில் மிகவும் சோர்வாக இருப்பதால் இவற்றை அன்று முறையாக செய்வது கடினமாகிவிடும் என்பதால் அனைத்தையும் இன்றிலிருந்தே ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிக்கலாம்.

நோன்புக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் என்னன்னன்னு இப்பவே லிஸ்ட் போட்டு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க. அப்பப்ப வெயிலில் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

நோன்பு நேரங்களில் வேலை சுலபமாக முடிய அசைவ உணவையே விரும்புவார்கள். ஒரு கிலோ இஞ்சிக்கு இஞ்சி,600 கிராம்  பூடு என்ற விகிதத்தில்  முன்பே அரைத்து உப்பு தூவி  பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகிக்கலாம்.

சின்ன வெங்காயத்தை உறித்து பாட்டிலில் அடைத்து வையுங்கள். அதோட புதினா கொத்தமல்லி ஆகியவற்றையும் தனித்தனியே ஆய்ந்து எடுத்து வைங்க.

பாத்திரங்களை அவ்வபோது கழுவி கொண்டால் பாத்திரம் சேராமல் இருக்கும். மொத்தமாக சேர்த்து கழுவ நினைத்தால் நிறைய நேரம் செலவழியக்கூடும்.

டைக்கு 3 நாட்களுக்கு சேர்த்தார் போல் அரைத்தெடுத்து கைபடாமல், எடுப்பதற்கு சுபலமாக மூன்று பாகங்களாக பிரித்து டப்பாக்களில் அடைத்து ப்ரீசரில் வைக்கலாம். பொரிப்பதற்கு 3 மணி நேரத்தில் அறைவெப்பநிலையிலேயே குளிர் போய்விடும்.

ட்லெட், சமோசா போன்றவற்றை முன்பே தயாரித்து ஒன்றோடொன்று ஒட்டாத வகையில் அடுக்கி பிரீஜ் செய்து வைத்து நோன்பு திறக்க அரைமணி நேரம் முன் வெளியெ எடுத்து வைத்து பின்னர் பொரிக்கலாம்.

மோசா, ப்ரெட் சான்விச் போன்றவற்றிற்கான ஸ்டப்பிங் மசாலாவை முன்பே  அதிகமா செய்து வைத்துக்கொண்டு அவ்வபோது தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே பூரிக்கு மாவு தயாராக இருப்பதால் வேலை சுலபம் :-)

ப்தார்க்கு எண்ணெய் வகைகளை விட பழங்கள் அதிகமா சேர்த்துக்கொள்ளுங்கள். ப்ரூட்  கஸ்ட்டர்ட்  அதிகமாக செய்து ப்ரிஜ்ஜில் வைச்சுடுங்க.

ஜூஸ், ரோஸ் மில்க் போன்றவற்றை 2 நாட்களுக்கு சேர்த்து செய்துவிடலாம்.

சுண்டல் செய்வதென்றால் அரைகிலோ அளவிற்கு ஊறவைத்து வேகவைத்து எடுத்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவைக்கு எடுத்து தாளித்துக்கொள்ளலாம்.

ப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கும் 3 நாட்களுக்கு சேர்த்தார் போல் மாவு பிசைந்து 3 பாகங்களாக பிரித்து ப்ரீசலில் வைக்கலாம்.

சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து    எண்ணெய் விடாமல் லேசாக  இரு பக்கம் திருப்பி போட்டு பின்னர்  ஆறவைத்து மொத்தமாக ப்ரிஜ்ஜில்  கொள்ளலாம். தேவைப்படும் வேளையில்  எண்ணை விட்டு சுட்டு சாப்பிடலாம்.

நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள்) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.

புளியை கரைத்து ப்ரீஜ் செய்து வைக்கலாம். ரசம், புளிகுழம்பு  வகைகள் உடனே செய்துமுடிக்கலாம். புளி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளலாம் (1/4 கிலோ புளிக்கு 4 டம்ளர் நீர் விட்டு குக்கரில் 2 விசிலுக்கு வைத்து ஆறியதும் வடிகட்டி ஐஸ் க்யூப் டப்பாக்களில் ஊற்றி வைக்கலாம்.

ம்மூர்ல தேங்காய் பொடி கிடைக்காது. குருமா, குழம்பு வகைகளுக்கு தேங்காய், தேங்காய் பால் சேர்க்க வேண்டி வரும். தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். தேங்காய் பால் எடுத்து ப்ரீஜ் செய்து வைத்தும் உபயோகிக்கலாம்.

குழம்பு வகைகளை 2 நாட்களுக்கு சேர்த்தால் போல் அதிகமாக செய்துடுங்க.

ள்ளிவாசல் மூலமாக நோன்பு கஞ்சி கிடைத்துவிடும். அவ்வாறு கிடைக்கபெறாதவர்கள் நோன்பு கஞ்சி செய்ய அதிகமாகவே மெனக்கெடுவார்கள். அப்படி செய்யகூடியவர்கள் அரிசியை முன்பே பொடித்துக்கொள்ளுங்கள். பாசிபருப்பை கருகாமல் வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ பொரித்த அரிசிக்கு கால் கிலோ பச்சை பருப்பு மற்றும் ஒரு மேசைகரண்டி வெந்தயம் கலந்து வைக்கவும். தேவைக்கு அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் எடுத்து உபயோகிக்கலாம்.

நோன்பு நேரத்தில் பல வீடுகளில் நோன்பு திறந்தவுடன் சாப்பிட ஒரு சமையல், ஷகருக்கு ஒரு சமையல்னு இருக்கும்.. அதற்கு பதிலாக நோன்பு திறந்தவுடன் நம்மால் அதிகம் சாப்பிட இயலாது அப்போது அதிக உணவு சாப்பிட வேண்டும் என்பதை விட, ஆரோக்கியமான உணவு சாப்பிட முயற்சிக் கொள்ள வேண்டும்..
நோன்பு திறக்க பழ வகைகள் தேவையான அளவு நறுக்கி வைத்து, ஜூஸ் மற்றும் சிம்பிள் ஆ செய்யக் கூடிய ஓட்ஸ் சூப், ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி, உப்புமா என்று எளிதில் சமைக்கக் கூடிய நேரத்தை தின்னாத சிம்பிள் சமையல் செய்யலாம். இதனால் இஃப்தாருக்கு சமைக்க வேண்டிய நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தை ஷகருக்கு சமைக்க பயன்படுத்தலாம்

திலும் ஷகருக்கு தேவையான கொழம்பு, கூட்டு அனைத்தையும் நோன்பு திறக்கும் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் நோன்பு திறந்த பின் செய்ய வேண்டிய அமல்களான குர்-ஆன் ஓதுதல், இரவுத் தொழுகை அனைத்தும் பாதிக்கப்படாது, சோறு வடிப்பதை மட்டும் இரவுத் தொழுகை முடிந்த பின்னோ அல்லது ஷகருக்கு சற்று முன் எழுந்தோ வைத்துக் கொள்ளலாம்.. நேரம் பற்றாத நிலையில் குக்கரில் சாதத்தை வைத்துக் கொள்ளலாம்..நேரத்தோடு தூங்க இயலும், தஹஜத்துக்கு எழுவதற்கு ஏதுவாகும்.

பெரும்பாலும் நாம் சஹர் செய்துட்டு உடனே படுத்துவிடுகிறோம். இதனால் பலவேளைகளில் பஜர் தொழுக முடியாமல் போய்விடுகிறது. சஹர் முடிந்ததும் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தால் பஜர் நேரம் வந்ததும் தொழுதுவிடலாம். தெம்பாக இருக்கும் போதே வீட்டுவேலை செய்துமுடிச்சுட்டா பின்னர் அலுப்பாக இருக்காது. டூ இன் ஒன் :-)

அப்பறம் இதையும் பாருங்க எக்கசக்கமான உபயோகமான ஆலோசணைகள் இருக்கு - ரமலானுக்கு தயாராவோமா?

அப்பறமென்ன? சமையல் செய்யும் நேரத்தை குறைத்து இம்மை வாழ்வின் நலத்திற்கும்  மறுமை வாழ்வின் வெற்றிக்கும் தேவையான அமல் செய்யும் நேரத்தை அதிகப்படுத்தி இறையன்பையும் இறை நெருக்கத்தையும் பெறுவோமாக

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்


நன்றி- ஜலீலா அக்கா, முபி ஜன்னத், யாஸ்மின் மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம்

டிஸ்கி- இது தவிர வேறேதும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க..

, ,

சமீபத்தில் மீண்டும் அந்த செய்தி கேட்க நேர்ந்தது...

"பட்டும் புத்திவரல... இன்னும் அப்படியே தான் இருக்கான்" என்று புலம்பினார் உறவினர்..

அப்போதுதான் மரணதண்டனை பக்கம் கவனம் திரும்பியது... கூடவே ஒரு நண்பர் பேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு படமும் நியாபகத்திற்கு வந்து இப்பதிவை எழுத தூண்டியது...

சரி தூக்குதண்டனை பற்றி நண்பர்கள் , தோழிகளிடம்  கருத்துகேட்ட போது அவர்களின் ஒருமித்த பதில்:
1. உயிரை எடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு
2. தூக்கு தண்டனை கொடுத்ததுனால சமூகத்தில் குற்றங்கள் குறைந்ததா என்ன? அப்படியே தானே இருக்கு?
இது சரியான கருத்து தானா? இல்லை தவறான புரிதலா?? இதை முடிவு செய்யும் முன் சில சம்பவங்களை பார்த்து விடுவோம்...

 நண்பர் பகிர்ந்த ஒரு குற்றவாளியின் புகைப்படம் பற்றி!
எப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்.
வாழ்க சட்டம்! வளர்க அதன் ஓட்டை

அந்த குற்றவாளி பற்றி சிறு விளக்கம் :-  கை இல்லாத ஊன முற்றவனாம்... சவுமியா என்ற கேரள பெண்ணை ரயிலில் போய்க்கொண்டிருக்கும் போது கற்பழிக்க முயற்சி செய்திருக்கிறார்.  பயந்து போயி ஓடும் ரயிலில் இருந்து குதித்திருக்கிறார் அந்த பெண். தலையில் பலத்த அடி... அந்த கொடூர நாய்  அப்போதும் விடாமல், அவனும் குதித்து தண்டவாளத்தில் வைத்து  கற்பழித்திருக்கிறான்.  வெகுவிரைவிலேயே அவனுக்கு மரணதண்டனையும் இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது...

இப்ப என்ன மேட்டருன்னா... தொர  ஜெயில்ல கொடுக்குற  சாப்பாடுலாம் சாப்பிட மாட்டாராமாம்...  காலைல இட்லி, மதியம் பிரியாணி, நைட் பரோட்டான்னு மெனு கொடுக்குறாராமாம்.. இதெல்லாம் கொடுக்கலைன்னா தலைவரு உண்ணாவிரதம் இருப்பாராமாம்...

ஆயுள் தண்டனை இவனை எந்தளவுக்கு மாற்றத்தை கொடுத்தது????  பயம் எதாவது வந்துச்சா??? எப்படியும் கருணை மனு போட்டு நம்மல விட்டுடுவாய்ங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!  6 மாசம் கழிச்சு நீதிமன்றத்திற்கு கூடிட்டு வரும் போது பாக்கணுமே சார்ர! அடேங்கப்பா... சின்னதம்பி பிரபு தோத்துபோயிடுவாரு :-)

சரி உறவினர் சொன்ன அந்த நபர் பற்றி சில விளக்கங்கள் :

பெயரில் மட்டுமே முஸ்லீம்மை தாங்கிக்கொண்டிருக்கும் இவர் ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக  சிறை சென்றவர்.  பண வசதியின் காரணமகாக  6 மாதத்தில் திரும்ப வந்துவிட்டார்.  அந்த 6 மாத காலத்தில் போலிசாரால்  எவ்வளவு சித்ரவதை அனுபவித்தார் என்பதை அவர் மூலமே பலமுறை கேட்டதுண்டு. என் அவதானிப்புபடி சில காலங்கள் மட்டுமே அந்த பயத்துடன் இருந்தார்... மீண்டும் அடிக்கடி அம்மாவின் "பட்டும் திருந்தல" என்ற வார்த்தை அவ்வபோது ஒலித்துக்கொண்டிருக்கும்!

சரி இவருக்கு கொடுக்கப்பட்ட சிறை தண்டனையும், அபராத தொகையும் எந்த அளவுக்கு குற்றங்களை குறைத்தது??? இவருக்கு அதிகப்படியான தண்டனை விதித்திருந்தால் சமூகத்தில் குற்றங்கள் குறையுதோ இல்லையோ, அவர் வீட்டு வாரிசுகள் "ஜெயில்க்கு போனா என்ன? எங்க வீட்ல எப்படியாவது கூடிட்டு வந்துடுவாங்க" என சொல்ல மாட்டார்கள் இல்லையா? வாரிசுக்கு வாரிசுகள் என குற்றத்திற்கான தண்டனையின் வீரியத்தை உணர்ந்து கட்டுகோப்பாக வளர்ப்பார்கள் இல்லையா??? இனிமே எல்லாரும் பணத்தை முன்கூட்டியே நீதிமன்றத்துல அபராதமா கட்டி அதுக்கப்பறம்  பொழுதுபோக்குக்காக கற்பழிச்சாலும் ஆச்சர்யப்படுவதற்கில்ல!

டுத்து,
என் பள்ளியின் அருகில் நடந்த சம்பவம். மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திட்டார்  மாமியார்.... அப்பெண்ணின் கணவனும், மாமியாரும் சும்மா கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்தாங்க... ஜெயிலில் இருந்து திரும்பி வந்த சில மாதங்களில்  அந்த வீட்டை விற்க ஆட்களை கூடிட்டு  வந்திருந்தாங்க.. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்கள் பேசிகொண்டிருந்த காட்சி இன்னும் கண்ணில்...  அவ்வளவுதான்... வீட்டை வித்துட்டு  சென்னை மதுரைன்னு போய்ட்டா அங்குள்ள  எவனுக்கு என்ன சேதி தெரிய போகுது??? மாமியார் வீட்ல ஜெயில் கம்பிக்கு பெயின்ட் அடிச்சுட்டிருந்தவன் புதுமாப்பிள்ளையாகிடுவான்... பாவம் இன்னொரு குடும்பம், இன்னொரு அப்பாவி பெண்.....,அடுத்து மீண்டும் முளைக்கும்  மாமியார் கொடுமைன்னு போக வேண்டியது தான்....

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட சிறுவன் பற்றி முன்பு எம்மூரில் மிக பரபரப்பாக பேசினாங்க... இப்ப மூச்! அவ்வளவுதான்.. சட்டம் தன் கடமையை செய்யும்.. பணம் வாங்கி :) காக்கா கொத்திடுச்சாம்... அதுனால செத்துட்டானாம்! ப்ரேத பரிசோதனை ரிப்போர்ட் அப்படிதான் சொல்லுதாம்! :) :'(
பிரியாணி கொடுப்பீங்கன்னு நம்பி
தானே ஜெயிலுக்கு சுத்திபாக்கலாம்னு
வந்தேன்??!!!


ப்பறம் இன்னொரு விஷயம்.... பல பேரை கொன்ற, மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி கசாப் இப்ப என்னா பந்தாவா போறாரு.. வராரு... அட அட அட! பேசாம நம்மலும் ஜெயிலுக்கு போனா சம்பாதிக்காம 3 வேளைக்கும் சாப்பிடலாம் போல... வாவ்வ்வ்வ்வ்வ்... ஜெயிலுக்கு போறதுக்கும் குடுத்து வச்சுருக்கணும் மக்கான்னு இவனுங்கள பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்... எப்பவாது விசாரணைன்னு கோர்ட்க்கு கூட்டிட்டு போவானுங்க... ச்ச.. அதென்ன பெரிய விஷயம்? சம்மந்தம் சம்மந்தமில்லாம பதில் சொல்லி ஜட்ஜ் மண்டைய போட்டு பிச்சிக்க வைக்க தான் பயிற்சி எடுத்திருக்கோமே.... அந்த வித்தை பத்தாதா? எப்படியும் சமாளிச்சுக்கலாம்! - இப்படிதான் நெனைப்பானுவ!

ஆக... இன்னொரு தீவிரவாதிக்கு நம்ம எளிமையான வழியை உருவாக்கி கொடுத்துட்டோம் இல்லையா? :'(  மீண்டும் ஒரு சம்பவம் நடந்து ஆயிரம் மக்களை கொல்ல திட்டம் தீட்ட முயற்சித்தாலும் மனதில் துளி அளவும் பயம் இருக்காது அத்தீவிரவாதிக்கு... ஏன்னா விசாரணைன்னு சொல்லி எப்படியும் நாட்களை கடத்துவாய்ங்கன்னு தெரிஞ்சு போச்சு...

இதுல வேற எத்தனையோ நாடு தூக்குதண்டனையை ரத்து பண்ணுச்சாம்! ஐநா ல கூட தீர்மானம் கொண்டு வந்தானுவளாம்...! பயபுள்ளைங்க வேற மரண தண்டனை வேண்டாம்னு 'மரணதண்டனை எதிர்ப்பு மாநாடு'ன்னு கூட்டுதுங்க.. இத பார்க்கும் குற்றவாளிகள் அல்லது குற்றம் செய்ய நினைப்பவர்கள் நாம தெகிரியமா கொலை, கற்பழிப்பு செய்வோம்,நம்ம விசாரணை முடியைரதுக்குள்ள மரணதண்டனையை முழுக்க ரத்து பண்ணிடுவாய்ங்கன்னு தொலைநோக்குதிட்டம் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை :-)

என் கேள்வி.............

1. உயிரை எடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே  உள்ளது.. மனிதர்களுக்கில்லை எனில் ஒரு உயிரை கொடூர முறையில் பறித்தவனுக்கு யார் உரிமை கொடுத்தது?

2. ஒருவனுக்கு ஆசிரியர் கொடுக்கும் தண்டனை  மாணவர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் போது, ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையால் சமூகத்தில்  குற்றங்கள் 100 சதவீதம் ஒழியவில்லை என்றாலும் பயம்மாவது ஏற்படுத்தாதா? ஐய்யோ.. இப்படி செஞ்சா நம்ம உயிரும் போய்டும்னு பயம் வராதா? அப்பாலிக்கா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... அதையும் சொல்லிடுறேன்... தண்டனைகள் அதிகமா உள்ள நாட்டில் தான் குற்றங்கள் கம்மியா இருக்கு!  நீங்க வேணும்னா கூகுளார் கிட்டையும் விக்கி பய கிட்டையும் கேளுங்க! சொல்லுவானுவ!

3. தினசரிகளில் செய்தி செவியேற்கும்போது "இவனையெல்லாம் நடுரோட்ல அடிச்சு சாவடிக்கணூம்"ன்னு தானாகவே  சொல்லும் நாக்கு  சில காலங்கள் கழிந்ததும் அந்த குற்றத்தின் வீரியத்தை மறந்து "மரணதண்டனை லாம் வேண்டாம்" என சொல்வது எப்படி நியாயமாகும்? நாட்கள் கடந்ததும் குற்றத்தின் அளவு குறைந்துவிட்டதோ??? அல்லது பாதிக்கப்பட்டவர் நம் உறவினர் இல்லையே.., எவனோ ஒருத்தன் பாதிக்கப்பட்டா நமக்கென்ன என்ற சுயநல/அலட்சிய போக்கா??

4. பாதிக்கப்பட்டவங்க பார்வையில் இருந்து சட்டத்த அனுகுங்க... அவஙகளுக்கு தான் தெரியும் இழப்பின் வலி...குற்றம் செஞ்சவனின் பார்வையில் இருந்து சட்டத்த அணுகாதீங்க... அப்டி செஞ்சா இப்ப இருக்கிற மாதிரி குற்றங்களின் எண்ணிக்கை கூடுமே ஒழிய குறையாது..

5.  சிட்டிசன், ரமணான்னு பாக்கும் போது கை தட்றோம்... மேடைன்னு வந்துட்டா ஆச்சா, பூச்சான்னு மரணதண்டையே ஒழிகன்னு கோஷம் போடுறோம்..  அப்ப என்னதான்பா பண்ணனும்னு சொல்றீங்க கொலை குற்றவாளிய?

6. ஏற்கனவே இந்திய நீதி மன்றங்கள்ள நிலுவையில் உள்ள கேஸ்களின் எண்ணிக்கை கோடிகளை தொட்டுவிட்டது..இதில் குற்றவாளிகல மன்னிச்சு மன்னிச்சு வெளில விட்டுகிட்டு இருந்தா... வெளங்கிடும்.... இயல்பான வழிகள்ள யோசிங்க..உணர்ச்சிவசப்பட்டு அசாதாரணமா யோசிக்காதீங்க....

குறிப்பு : சில பேர் ரொம்ப புத்திசாலித் தனமா தூக்கு போட்ட பிறகு அவன் குற்றமற்றவன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்கன்னு கேட்பாங்க... ஐயா விசாரணை முடிஞ்சு 100% உறுதியான குற்றவாளியதான் தூக்குல போட சொல்றோம், மற்றவங்கள இல்ல...
அப்படின்னா, குற்றமற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பது மட்டும் ஓக்கேவா??? நீதித்துறையையும், விசாரணை முறையையும் நேர்மை ஆக்குங்கப்பா... அது தான் இன்றைய கட்டாய தேவை... குற்றத்துக்கு அபராதம்னு, 3 மாசம் ஜெயில்ன்னு காமெடி பண்ணாம கொஞ்சம் நல்லபுள்ளையா சீரியஸ்ஸான பனிஷ்மென்ட் கொடுத்துபாருங்க! காமெடி பண்றதே சட்டத்துக்கு வேலையா போச்சு! ஹைய்யோ...ஹைய்யோ


நன்றி-கூகுள் இமேஜ்,

, , ,

ஹாய் மக்கள்ஸ்..... எப்டி இருக்கீங்கோ???

நேரடியாவே விஷயத்துக்கு வரேன். தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பதிவு எழுதியதன் பிண்ணனி ரொம்பவே உணர்வுபூர்வமானது... உளவுபூர்வமானது, தமிழ்மணபூர்வமானது, இன்ட்லீபூர்வமானது... ஹி..ஹி...ஹி..

ஒரு மாசமா நானும் new post போறதும்,  தமிழ் எழுத்துக்கள் அப்ப மட்டும் என்கிட்ட ஸ்ட்ரைக் பண்றதுமா ஒரு மாசப்பொழுது ஓடி போச்சு! அப்ப தான் ஒரு உண்மை தெரிஞ்சது... அட ஆமி... சட்டியில இருந்தா தானே அகப்பைல வரும்... இப்போதைக்கு உன் கிட்ட சரக்கு இல்ல! நீ இன்று போயி நாளை வா'ன்னு ஹோம் தியேட்டர்  ஸ்பீக்கர் எபெக்ட்ல  மனசாட்சி  ஒப்பாரி வச்சுட்டிருந்துச்சு!

சரி நம்மல மாதிரி இன்னும் எத்தன பேரு மனசாட்சி இப்படி கேலி பண்ணி சித்ரவத பண்ணும்னு ச்சூ..ச்சூ...ச்சூ.... உச்சு கொட்ட ஆரம்பிச்சேன்! அந்த பரிதாபத்தின் விளைவே இந்த பதிவு  (நேரடியா விஷயத்துக்கு வரேன்னு மொத வரில போட்ட்டீயே இன்னும் அதுக்குள்ளையே தான் சுத்திட்டிருக்கீயான்னு யாரோ கல்லுலாம் எடுக்குறாங்க. நோ...நோ... நமக்கு அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமை வழங்கியிருக்கு! உரிமையை ஏன் விட்டு கொடுப்பானேன்  ;-)

சரி உண்மையாவே விஷயத்துக்கு வரேன் (இது சரிபட்டு வராது)

பதிவு போட சரக்கில்லைன்னா என்னன்ன செய்யலாம்???

எதிர்பதிவு :-
dashboard பக்கமா கொஞ்ச நேரம் சுத்துங்க! எவுகளாச்சும் சூடான தலைப்புல ஒரு கட்டுரை போட்டிருப்பாக! இப்ப கண்ண மூடிக்கிட்டு,  "ஆதரிக்கிறேன்" என்ற இடத்தில் மறுக்கிறேன்னு போடுங்க. மறுக்கிறேன்னு சொல்ற எடத்துல ஆதரிக்கிறேன்னு போடுங்க. அவ்வளவு தான். எதிர் பதிவு தயார்! இதுக்கு என்னா தலைப்புன்னு யோசிக்கிறீங்களா? அதுகெடக்கு எழவு!  அந்த பதிவர் பேர போட்டு பக்கத்துல எதிர்பதிவுன்னு போடுங்க.. அவ்வளவு தான். (பதிவர் என்ற வார்த்தை ரொம்ப முக்கியம் :-) அப்ப தான் ஹிட்டு அள்ளலாம்....

உதாரணம்:
பதிவர் மெட்ராஸ் பவன் சிவாவின்  பதிவுக்கு எதிர்பதிவு
(சிவாவுக்கு மட்டும் யாராலும் எதிர்பதிவு போடவே முடியாது.. நான் வேணும்னா சவால் விடுறேன்! யாராச்சும் சிவாக்கு எதிரா ஒரு எதிர்பதிவு போடுங்க பாக்கலாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

ஒடனே சிராஜ் பொங்கி வருவாரு - எதிர்பதிவுக்கு எதிர்பதிவுன்னு தலைப்போட.. அப்படி உங்க பதிவுக்கு எதிர்பதிவு போட்டார்ன்னா  நீங்க பிரபலமாய்ட்டீங்கன்னு அர்த்தம் இல்ல... உங்க மூலமா அவர் ப்ரபலமாக போறாருன்னு  அர்த்தம். ஜாக்ரத மக்காஸ்.... பதிவுலகில் குழம்பிய குட்டைக்குள் திமிங்கலம்  பிடிக்கும் ஒரே பதிவர் அவுகதான்!

காப்பி பேஸ்ட் சேவை :-
அப்பறம் அப்படிக்கா பிரபலமாகாத ப்ளாக் பக்கம் போயி அவுக பதிவுகளை ஓபன் பண்ணுங்க. தப்பி தவறி படிக்கலாம் செஞ்சுடாதீங்க (அடப்பாவிப்பயலே.. உனக்கு இவ்வளவு தெறமையான்னு நீங்க கண்ணீர் வடிச்சு சென்டிமேன்ட்ல மேட்டர க்கோட்ட விட்டுடுவீக). கண்ண மூடிக்கிட்டு அப்படியே காப்பி-பேஸ்ட் பண்ணுங்க. அவ்வளவுதான். வெட்டி ஒட்டும் பதிவு தயார்!

இத செய்யும் போது கவனிக்க வேண்டியது:-
    1. நீங்க அவுகளுக்கு பாலோவர்ரா இருக்க கூடாது
    2. அவுக உங்களுக்கு பாலோவர்ரா இருக்க கூடாது.
அப்படியும் சில பயபுள்ளைக நம்ம இலவச சேவைய பொருக்காம அங்குட்டு போயி பத்த வச்சு, ஒருவேள உங்கள் சமூக நல சேவையை ஒரிஜினல் ரைட்டர் கண்டுபிடிச்சாங்கன்னா ஒடனே ஒலக சரித்திரம் வாய்ந்த பதிவுலக திருவாசகத்தை போட்டு இன்னொரு பதிவு தேத்தலாம்.

அவ்வாசகம் பின்வருமாறு :

இன்னைக்கு பிரபலமாய்ட்டிருக்குற பத்திரிக்கைங்க கூட இப்படிதான்யா சுட்டு போடுது. நீ என்ன பெரிசா பேச வந்துட்ட?"
அவ்வளவுதான்.. பிரச்சனை ஓவர். இந்த வாசகத்தை மையமா வச்சு நீங்க முன்கூட்டியே ஒரு பதிவை தயார் செய்து ட்ராப்ட்ல போட்டு வச்சுக்கிட்டா அடிக்கடி பிரச்சனை வந்தா அடிக்கடி  டைப் பண்ணிட்டிருக்க தேவையில்ல பாருங்க :-)

அடுத்தவிங்க சரக்கு-
இந்த புகழ்பெற்ற டிங்கரிங்க் பதிவை  அகில உலக பதிவுலக சாராஜ்யத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை குட்டிசுவர்க்கத்திற்கே ! அதாகப்பட்டது என்னான்னா... ஒன்னுமில்ல... எதாவது ஒரு பதிவர் ராப்பகலா யோசிச்சு பதிவ தேத்தியிருப்பாரு.. கான்சப்ட்ட மட்டும் கற்பூரம்மா கப்புன்னு பிடிச்சுக்கிட்டு உங்க ஸ்டைலில் பதிவு போடணும்.. அவ்வளவுதேன். அடுத்தவிங்க சரக்கு எனும் டிங்கரிங் பதிவு தயார்!

உள்குத்து பதிவு!
என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி  ஓ அது கேரண்டியா :-)   சரி விடுங்க :-)))

இது  1500 ஹிட்ஸ் என்பது நம்மல மாதிரி பொடி பொடி ஆளுங்களுக்கு... பெரிய பெரிய தலைங்கலாம் போட்டா சொல்லவா வேண்டும்??? ... உள்குத்து யாருக்கு போடணும்னுலாம் வரைமுறையே வேணாம்.. நமக்கு தேவை சரக்கு! சோ சா பூ திரி போட்டு முடிவு பண்ணிக்கோங்க... யாரை தாக்கலாம்னு! நானும் சா பூ திரி போட்டு பார்த்ததுல சர்மிளாவ தாக்கலாம்னு முடிவு ஆகியிருக்கு! (நா என்ன சொன்னாலும் இவ தான் என்னை திருப்பி தாக்க மாட்டா... பிகாஸ் ஐயாம் ஹெர் லவ்வபிள் சிஸ்ட்டர் :-)

டிஸ்கி:ஓக்கே மக்காஸ்... இதான் மேட்டரு! இனி பதிவு போடல, சரக்கில்லைன்னு அழப்படாது!
அதோட முக்கியம்! இந்த பதிவுக்கு யாரும் உள்குத்தோ எதிர்பதிவோ போட்டுடாதீக நல்லா இருப்பீக!!புண்ணியமா போகும்!  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

,

உன் ஆணாதிக்கத்தில்
அடிமைபட்டிருக்கும் என் பெண்ணியம்

உன் சுயநலத்தில் 
சுட்டெரிக்கப்படும் என் சுயஅடையாளம்

உன் அனுமதிக்காய் காத்திருக்கும் நொடியில் -என்
சம்மதத்திற்காய் கதற  காத்திருக்கும் என் அழுகை

உன் நெருஞ்சி வார்த்தைகளில்
மரணத்தை துணைக்கழைக்கும் என் நெஞ்சம்

மொத்தத்தில்
சிறகுகள் அசையவிடாது
 சிறை செலுத்தும் உன் முயற்சியில்
 கைகளையே  துண்டிக்க துடிக்கும் என் காதல்

உன் தலைமைக்காய் 
 திணிக்கப்படும்  கட்டளைகளில்
மரணிப்பது  முற்போக்காகினும்
தலையசைக்கும்  பொம்மையாகவே  அவதாரமெடுக்க
வரம் கேட்கும் என் காதல்!


_______________
                          

சமையல் எக்ஸ்ப்ரஸ்ஸில்- கோபி ரைஸ்
இஸ்லாமிய பெண்மணியில்- இஸ்லாம் கற்று தரும் சுயநலம்?!!

,

அன்பின் தமிழ் நெஞ்சங்களே,

ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது.மருத்துவ அறிக்கை


திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் வந்து பணி செய்துக் கொண்டிருந்தார்.

லிப்ஃட்டில் செல்ல தேவைப்படும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்டீல் ரூம்(அறை) ஒன்றை இணைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கையில் லிப்ஃட் ரூமுக்கு மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையில், இணைப்பு வேலை நடந்துக் கொண்டிருந்த சம‌யம், க‌ட்டப்பட்டிருந்த கயிறு தீடீரென்று அறுந்து விட்டதால், மூன்றாம் தளத்திலிருந்து, அதனுடன் இணைக்கப்பட்ட ரோலர்வீலோடு, மிகவும் வேகமாக, நேரடியாக அந்த ஸ்டீல் ரூம் தரை தளத்தை மோதியது. இந்த கடும் அதிர்ச்சியின் எதிர்வினையால் (அதிர்ச்சியில் மேலே நோக்கி சென்ற ஒரு கணத்தில்), ரூமிற்கு மேலை உட்கார்ந்திருந்த‌ சகோதரரின் நடு முதுகெலும்பு பகுதியின், குமிழ் எலும்புகள் ஒன்றோடொன்று மோதி, பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

அதன் விளைவாக, தலை முதல் வயிற்றுக்கு சற்று மேல்பகுதி வரை உணர்வுகளோடும், மறுபாதியான, அதற்கும் கீழே உணர்வுகளே இல்லாமலும் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கான அத்தியாவசிய அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியே அனுப்பி விட்டது.

முழு லிப்ஃட் பணி எடுத்த பெரிய கம்பெனி, "என் கம்பெனியில் வேலை செய்யவில்லை" என்று தட்டிக்கழித்து விட்ட பின்பு, அவர் வேலை பார்த்த கம்பெனியும், "சின்ன கம்பெனி, நாங்கள் என்ன செய்ய முடியும், முடிந்தவரை ஆயிரம் இரண்டாயிரம் தருகிறோம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய‌ கான்ட்ராக்ட்க‌ள் எடுத்து ந‌ட‌த்தும் க‌ம்பெனியாத‌லால், எந்த‌ பெரிய‌ உத‌வியும் அவ‌ர்க‌ளிட‌மிருந்து கிடைக்க‌வில்லை.

கேர‌ளாவின் கோட்ட‌ய‌த்தில் உள்ள‌ ஒரு ஆஸ்ப‌த்திரியில் அவ‌ரை சேர்த்து, சிகிச்சை அளிக்க‌ அவ‌ரின் உற‌வின‌ர்களும், ந‌ண்ப‌ர்க‌ளும் முய‌ற்சி செய்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

ரியாத் பத்தா - ஷிஃபா அல்‍ஜஜீரா ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில், ரியாத் சமுதாய சேவகர் ஷிஹாப் மற்றும் கேரள சமூக‌ சேவை அமைப்பின் உதவியுடன் ஒரு அறையில் தங்கியிருந்து, ஊருக்கு போகும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவ‌ர்க‌ளை திருமணத்திற்காக‌ க‌ரைசேர்க்கும், மிக‌ப்பெரிய‌ பொறுப்புட‌ன் வ‌ந்த‌ அவ‌ருக்கு நேர்ந்த‌ க‌தி, மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.

ஏழ்மையான அந்த சகோதரருக்கு, உத‌வ‌ வேண்டி ந‌ல்லுள்ள‌ம் ப‌டைத்த‌ உங்க‌ளிட‌ம் வேண்டுகோள் விடுக்கிறோம். விமான‌த்தில், ஸ்ட்ரெச்ச‌ர‌ர் வ‌ச‌தியுள்ள‌ சீட்டில் தான் அவ‌ர் த‌ற்போதுள்ள‌ நிலையில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடியும். ஏர் இந்தியா விமான‌த்தில், கொச்சினிற்கு நேர‌டியாக‌த் தான் ப‌ய‌ணித்து, கோட்ட‌ய‌ம் செல்ல‌ திட்ட‌மிட்டிருக்கிறார்க‌ள். இத‌ற்கு நிறைய‌ செல‌வு ஆகும்.

தங்களால் இயன்ற உதவியை imthias@imthias.com என்ற முகவரிக்கு அனுப்பினால், உங்களிடம் நேரடியாக வந்தோ அல்லது வங்கிமாறலோ பெற்று உரியவரிடம் சேர்ப்பித்து அவரின் உறுதிப்பத்திரம் பெற்று அனுப்புகிறோம்.

அவரின் புகைப்படம், வீடியோ மற்றும் மருத்துவ ரிப்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

அன்புடன்,
இம்தியாஸ்
செயலாளர் : ரியாத் தமிழ்ச் சங்கம் மற்றும் சவூதி தமிழ்ச் சங்கம்
தலைவர் : தஃபர்ரஜ்
தொலைபேசி - 0540753261

May Allah accept all our good deeds,

The following the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam BranchInshaAllah I shall handover the money to the concerns.


Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

----------------------------------------

HELP WANTED FROM KIND-HEARTED PEOPLE :

This letter is in regard to one of a Tamilian who was severely injured while working in Riyadh and is seeking all of our help.

Habibur Rahman from Melappalayam Tirunelveli District after completing his alim course from Usmaniyya arabic college , had to go to Riyadh to work and thereby support his family in poverty .

In his work , while he was trying to attach a built steel room onto the elevator , the rope that was tied with the rollerwheel , got cut , and fell right onto the steel room floor base and he was severely injured , his spine bones collapsed . . He wasn't able to feel anything from below his ribs. He was taken to the hospital for first aid treatment ...After a short treatment , the hospital administration sent him out.Don't know why !

The company that was in charge of the entire lift project declined that Habirur Rahman worked for them and they cannot offer help. The sub-contract company that he worked for, gave only Saudi Riyals 1000 or 2000 and said they can't do more. So his family and friends are trying to get him to a hospital in Kottayam in Kerala for further treatment. Meanwhile he is staying in a Riyadh baddha - aljazeera hospital room with the help of Br.Shihab and Kerala association

Br.Habib Rahman has three sisters. His family , being poor ,he took the responsibility of three sisters' wedding and everything .Now he himself is in a very bad condition.

So please if you could help with anything ,Allah SWT will reward you immensely. His family is trying to fly him in Air India ( with wheel chair assistance because he cannot sit ) to Cochin and then to Kottayam. It is definitely going to cost a lot.

So whatever your help would be , send them to imthias@imthias.com. We'll send them to concerned person as soon as possible.


Regards,
Imtiaz
Secretary
Riyadh and Saudi Tamil Sangam
Chairman: Taffaraj
Phone - 0540753261

May Allah accept all our good deeds, Kindly find below the bank details, you may transfer the bank below;

The following is the account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch


InshaAllah I shall handover the money to the concerns.
Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

Contact Person in India:
Mohamed Sheikh Farook : 0091-9952247585 (Patient’s father)
Account Number: 1109191937051,
Canara Bank, Melapalayam, Tirunelveli-627005
Tamil Nadu, INDIA.

டிஸ்கி:

அன்பின் நல்லுள்ளங்களே!

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

பாதிக்கப்பட்ட ஒரு தமிழருக்கு வேண்டி உதவிகோரி மின்னஞ்சல் அனுப்பியதில் பல பகுதிகளிலிருந்தும் அனைவரும் தாராளமாக உதவி செய்ததில் இறைவனின் உதவியால் இதுவரை 13,900ம் ரியாலும் 25,000ம் ரூபாயும் வசூலாகியுள்ளது.

இன்னும் சிலர் எனது வங்கிகணக்கிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

அவரை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள்:-

· அவரை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்த தினத்தன்று ஏர்-இந்தியா விமானத்தின் வேலைநிறுத்தத்தால் அனுப்ப முடியாமல் போனது.

· சவூதியா விமானத்தில் பன்மடங்குத் தொகை கட்டவேண்டியிருந்ததால் ஆரம்பத்தில் யோசித்தாலும் பின்னர் வேறுவழியின்றி அனுப்பலாம் என நெருங்கி முயற்சி செய்தபொழுது இருக்கைகள் இல்லை. ஸ்டெச்சரில் வைத்து அனுப்ப குறைந்தது 4 இருக்கைகள் மேலும் அவருடன் ஒரு ஆள் செல்ல வேண்டிய நிர்பந்தம்.

· இருப்பினும் பல முயற்சிகள் இருக்கைகளுக்காக நடந்து கொண்டுள்ளது, கிடைத்துவிட்டால் இன்னும் சிலதினங்களில் நேரடியாக கேரளத்தில் உள்ள மருத்துவமனைக்கே அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது.

· அவரின் முதற்கட்ட மருத்துவ செலவிற்கு நீங்கள் செய்த உதவியில் ஒரு லெட்சம் ரூபாய்க்குண்டான காசோலையை அவருடன் அனுப்புகிறோம், மருத்துவம் தொடங்கியவுடன் பாக்கியுள்ள தொகையை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம், மெளலவி. ஹபீப்ரஹ்மான் அவர்களின் வேண்டுகோளின்படி அவருடைய தகப்பனாருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.

-----------------------------------------

நன்றி - சுவனப்பிரியன்

உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................
மேலும் வாசிக்க கீழே உள்ள தலைப்பில் சுட்டவும்.
 


(கமென்ட் பாக்ஸ் மூடி வச்சுருக்கேன் :-)  

,

பலநாள் கனவு இது! கனவை நனவாக்க சாப்பாடு தண்ணி இல்லாம பாடுபட்டு, தூக்கம் அற்று, இராப்பகல் எனப்பாராது  உழைத்து உருவானது தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..................

ஹி..ஹி..ஹி.. இப்படியெல்லாம்  சொன்னா பொய் பேசிட்டு திரியுறீயான்னு கொலவெறியோட வருவாய்ங்க! :-)

எந்த பில்டப்பும் இல்லைங்க. உண்மைய சொல்லணும்னா "இரண்டே நிமிடத்தில் மனதில் எண்ணமாய்  ஜனித்து பத்துமணி நேரத்தில் பிறந்தவள் தான்"  எங்கள் புதிய தளமான "இஸ்லாமிய பெண்மணி". மதியம் ப்ளான் பண்ணோம். சாயங்காலம் ப்ளாக் உருவாக்கினோம். நைட் போஸ்ட் போட்டோம். காலைல எல்லார் பார்வைக்கும் வைத்தோம். ப்ளாக்ஸ்பாட்ல இருந்து டாட் காம்க்கு மாறினோம்.....அவ்வ்வ்வ்வளவே தான்!

பதறாத காரியம் சிதறாதுன்னு சொல்லுவாங்க. ஆனா இத்தளத்தின் விஷயத்தில் இந்த கூற்று பொய்யாகி போனது. ஒவ்வொரு படியும் அவசரத்தில் தான் ஏறினோம். ஆனா எந்த ஒரு இடத்திலும் தடுமாறவில்லை. கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். (சேர்ந்தாப்ல பதறினா செதறாது போல ஹி..ஹி..ஹி..)

ஆம்
பலரின் மனதில் இஸ்லாமிய பெண் என்றாலே  அடிமையாளவள், பிற்போக்குவாதிகளால் அடக்கி ஒடுக்கி ஆளப்பட்டு உரிமைகள் நசுக்கப்பட்டு மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டவள் என்ற எண்ணம் இருக்கு. எத்தனையோ பேர்  எத்தனையோ ஆதாரங்கள் காட்டியும் யாரும் கேட்பதாய் இல்லை. இஸ்லாமிய பெண் என்றாலே திறமை அற்றவள், படிப்பறிவு இல்லாதவள், உலகறிவு என்பதே இல்லை என்பது போல் பல இடங்களிலும் எண்ணங்கள் மாற்றப்பட்டுவிட்டது. அந்த எண்ணத்தை மாற்றவும், பலரின் திறமைகளை உலகுக்கு அறிய காட்டி அதன் மூலம் "இறைவனை தவிர யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை" என்பதை நிரூபிக்க வேண்டி உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய தளம் "இஸ்லாமிய பெண்மணி"

இத்தளம் முஸ்லீம் பெண்பதிவர்கள் மற்றும் பேஸ்புக்கில் மார்க்கப்பணி செய்யும் சகோதரிகளால் நடத்தப்படவிருக்கிறது.
 இஸ்லாம் சார்ந்த ஆக்கங்கள், பெண்கள் பற்றிய குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்,  விவாதங்கள், குர்ஆன் வசனங்களை மெய்பிக்கும் மருத்துவம்/அறிவியல் செய்திகள் என அனைத்துவிதமான விஷயங்களை அலசும் தளமாக இருக்கும்.   மேலும்  அனைத்து தரப்பினருக்கும் பயன்படக்கூடிய விஷயங்களும் இடம் பெறும். (சமையல் இருக்காது... டோன்ட் க்ரை :-)

தளத்தினை காண இங்கே சுட்டவும்- இஸ்லாமிய பெண்மணி
அறிமுகப்பதிவு காண - சிறகுகள் விரியட்டும்..

அறிமுகப்பதிவிற்கே நாங்கள் எதிர்பார்த்திராத அளவுக்கு ஆதரவும் உற்சாகமும் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் தளம் செயல்படும் (இறைவன் நாடினால்).

எங்கள் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்பினால் உங்கள் ஆக்கங்களை எங்களுக்கு அனுப்புங்கள். மற்ற சகோதரிகளையும் எழுத தூண்டுங்கள். அவர்களின் திறமையை உலகறிய செய்யுங்கள். அவர்களின் பெயர் சேர்த்து அவர்களின் ஆக்கமாகவே வெளியிட காத்திருக்கிறோம்.  
அனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - islamiyapenmani.com@gmail.com 
முஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளையும் மேற்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் மேற்கண்ட முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.

தொண்ட வரண்டு போச்சு... சோடா ப்ளீஸ்.....

ஆங்க்...
சொல்ல மறந்துட்டேன்...
தலைப்புல இருக்குற மெரட்டல் பத்தி சொல்லலையே...
த்தோ சொல்றேன்....

1.உங்களுக்கு  தெரிஞ்சவங்ககிட்ட இந்த தளம் பற்றி சொல்லி வைச்சுடுங்க.  
2.கீழ  சேர் பட்டனை அழுத்தி அவுகவுக வாலில் சேர் பண்ணுங்க.
3. எத்தன க்ரூப்ல மெம்பரா சேர்ந்திருக்கீங்களோ அத்தனை க்ரூப்லையும் சேர் பண்ணிடுங்க...
4. அவுகவுக ப்ளாக்ல எங்கள் தளத்திற்கான இணைப்பு கொடுத்துடுங்க. படம் ரொம்ப முக்கியம்  அமைச்சரே :-) :-)
5. புதியதளத்தில் பாலோவர்ஸ்ஸாகிடுங்க (பயபுள்ளைக என்னதான் சொல்ல வருதுன்னு பாருங்களேன் :-)

ஹி..ஹி..ஹி.. அன்பு மிரட்டல் தான் வேறொன்னும் இல்ல! கோச்சுக்காதீங்க... இதெல்லாம் நான் சொல்லமலேயே நீங்க செய்வீங்கன்னு தெரியும் ஹி..ஹி..ஹி... (பின்ன இப்படிலாம் தலைப்பு வைக்கலன்னா  எப்பதான் நானும் பிரபல பதிவராவுறது அவ்வ்வ்வ்வ்வ்)

வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா

டிஸ்கி- கள்ளஐடியின்  மைனஸ் ஓட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன.. எங்கே அஞ்சே  நிமிஷத்துக்குள்ள 25 ஓட்டையும் வரிசையா போட்டுடுங்க பாக்கலாம்...... ஜெட்ட்ட்ட்டா வேலை செய்யணும்

முக்கிய  அறிவிப்பு : வலையுலகில் எத்தனையோ பேர் ஒன்றாய் இணைந்து ப்ளாக் வைத்திருக்கும் போது  'எங்களை பற்றிய உண்மை நிலைகளை அறிய ஒன்றிணைந்து  தளம் உருவாக்கியது'  தவறுன்னு சொன்னா  ஹி..ஹி..ஹி..ஹி... சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை :-) :-) :-) வாழ்க ஜனநாயகம்! வளர்க நடுநிலைமை!

சிறகுகள் விரியட்டும்!!!!

, , ,


நா ஏன் சீரியல் பாக்குறதில்லைங்குறதன் காரணத்தை, ரகசியத்தை, உண்மையை உலகுக்கு  போட்டு உடைக்கும் தருணம் இது! என்னைய தடுக்காதீங்க! விடுங்க!விடுங்க! நா இத இப்பவே சொல்லியே ஆகணும்!!!

  செம பில்டப்பா இருக்கோ:-)  சீரியல் பத்தி பேசுறோம்ல? அதெல்லாம் அப்படி தான் செமடாப்புல பில்டப்பு இருக்கும்!

சரி இப்ப என்ன்ன்ன்ன்ன்ன்னா மேட்டர்ன்ன்ன்ன்னா...  ஐ டோன்ட் லைக் அழுவாச்சி பக்கிஸ்... சீரியல் பிடிக்காதுன்னு சொல்றதுக்கான மொக்கையான காரணமா இருக்கோ! சரி சரி முட்டைய ஓரம்மா வைங்க! ஆம்லேட் போட ஒதவும்!

இரு பெண்கள் பேசிக்கொண்டாலே அது துளசியையும் செல்லம்மா பத்தியுமா தான் இருக்கு! இத்தனைக்கும் ஏன்??  ஹாஸ்பிட்டல்ல மூச்சி தெணறிட்டிருக்குற நெலமையிலையும் ரிசப்ஷன்ல சன்டீவிய போட சொல்லும் அளவுக்கு அதிமுக்கிய நடைமுறை பழக்கமாக மாறிடுச்சு!  இலங்கைக்கு எதிரா ஓட்டு போட்ட நாடு எதுன்னு கேட்டா பதில் வருமா??? ஆனா சீரியல்களின் எபிசோட் முதல் அதில் உள்ளவர்களின் பெயர் வரைக்கும் செம அத்துபடி நமக்கு! இந்த பதிவினூடாக காலைல பத்துமணில இருந்து ஆரம்பிச்சு நைட் 11 மணி வரைக்கும் கொலையா கொல்லும் மெகா சீரியல்ஸின் மொக்க விஷயங்களை நாமும் கொஞ்சம் கொலையா கொல்லபோறோம்!

நன்றி
அடுத்தபதிவில் சந்திக்கலாம்..
தொடரும்.. மலரும்... முற்றும்... பூக்கும்...  சாகும்...

ஹி..ஹி..ஹி.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு முட்டைல ஆசிட்ட மிக்ஸ்
பண்றீங்கோ?!! பின்ன என்ன? மிஞ்சி போனா ஒரு கல்யாணம் 8 மணி நேரத்துல நடந்துடும்! ஆனா இவனுங்க காட்டுற கல்யாண வீடாகட்டும் எழவு வீடாகட்டும் எல்லாமே மாசக்கணக்குல  நடக்குது! அபின்னு ஒரு அக்கா 2 கொழந்தையையும் பாட்டி ஆகுற வரைக்கும் கோலம் போடுறத விடாது போலனு செமையா பயந்தே போயிட்டேன்! ஒருவழியா போயிட்டாக! இப்ப கஸ்தூரி அக்கா தான் விடாது தொறத்துது!

சரி சீரியல்ல இருக்குற மொக்க விஷயத்த பாக்கலாம்! :

 •  ங்க பக்கத்துவீட்டு  பேச்சியம்மா, கண்ணாத்தா கூட கல்யாணத்துக்கு பொறவு சுடிதார்ல கலக்குதுங்க! ஆனா சீரியல்ல வர பக்கிங்க மட்டும் மொதல்ல மாடர்ன்னா இருக்குங்களாம்... கல்யாணம் ஆய்ட்டா சேல மட்டும் தான் போடுவாங்களாம்! எப்ப பா திருந்த போறீங்க??? அய்ய்யோ அய்யோ....
 • ருப்பு, வெள்ள தான் இப்ப இருக்குற ட்ரென்ட்!   ஆனா பாருங்க! கருப்பா இருக்குற ஆளையெல்லாம் போட மாட்டானுவ! வெயிலுக்கு காட்டாம வளத்த வெள்ளச்சிக்கு கருப்பு பெயின்ட் அடிச்சி விடுவானுவ! எதுக்குன்னு கேக்குறீங்களா???? 1000வது எபிசோட்க்கு பொறவு   ஒரு ட்விஸ்ட் வைக்கதேன்! பெயின்ட் முகக்ரீம் கம்பெனிக்கு செம வெளம்பரம்! வாழ்க வளமுடன்
   
 • தென்ன மாயமோ தெரியல! மந்திரமோ புரியல! ஒட்டுமொத்தமா எல்லா அம்மணிகளும்  மாமியார்கிட்ட ரொம்பதேன் பம்முதுங்க! அதே மாதிரி ஒன்னு விடாம எல்லா சீரியல்ஸ் அத்தைகளும்  வில்லியாவே இருக்காங்க! கொட்டோ கொட்டுன்னு மழ பெய்யும் போது மாமியார் வீட்ட விட்டு அனுப்புறதும்! இவுக எதையும் தட்டி கேட்காம இருக்குறதும், மாமியாரின் திட்டுக்களை "தேன் வந்து பாயுது காதினிலே"ங்குற கணக்கா கண்டுக்காம இருக்குறதும்............. சரி சரி இதெல்லாம் சீரியல்ல பாத்தாதான் உண்டு ;-)
   
 • துல பெரிய கொடுமை என்னான்னா  ரோட்ல மயக்கம் போட்டு ஒருத்தன் விழுந்தா கூட "எனக்கென்ன போச்சுன்னு" சொல்லும் மனிதநேயம் நிறைந்த நம்மாளுங்க  சீரியல் ஆத்தாக்களின் பொய் அழுகையை "ஐய்யோ பாவமே, இப்படி ஆச்சே! ச்சே! இப்படியெல்லாமா கொடும நடக்கும்"னு லைவ் கமென்ட்ரி கொடுக்குறது பார்த்தா...... ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவேமுடியாது! (பலருக்கு இரக்க குணம் உண்டு என்பதை சீரியல் பாக்கும் போது தான் தெரியுது!)
 • விங்க அறுக்குறதே தாங்கமுடியலன்னு செவத்துல முட்டிட்டிருந்தா..... ஹிந்தி டப்பிங் சீரியல் மூலமா  அறுக்காம நேரடியாவே சாவடிக்கிறாய்ங்க! அடிக்கடி டூயட் சாங்க் வேற!  ஒரு ரியாக்‌ஷன்க்கே ஒரு எபிசோட் ஓட்டிடுறாய்ங்க! தெய்வமே என்னைய காப்பாத்து!
 • நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?!  உருது,அரபில பேசலையே?!"ன்னு சொன்னாங்க!  இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு மூளைய தட்டி எழுப்பிட்டிருக்கும் போதே "ஆமா..... உங்க(?????????!!!) தர்கால பேய்,பைத்தியம்லாம் தெளிய வைக்கிற சக்தி இருக்காம்ல?!  உண்மையா?ன்னு ஒரு அடுத்தடுத்த கேள்வி  கேட்டா!  
  உனக்கு எப்படி இந்த அளவுக்கு அறிவு வந்துச்சுன்னு கேக்கும் போது தான் பயபுள்ள சொல்லுது... டெய்லி நாதஸ்வரம்,தபேலா,கித்தார்  போன்ற ஒலக பிரசிதிப்பெற்ற காவியங்களை பாத்திட்டிருக்கான்னு! 

நம்ம கலைஞர் சரியாதான் யோசிச்சு  எலவசமா  கலர்  டீவி கொடுத்திருக்காரு! அதனாலேயே குட்டீஸ்க்கும் பெரிசுகளுக்கும் நடக்கும் ரிமோட் சண்டை இப்பலாம் இல்ல,நெஹி,லேது!  முன்னலாம் சொந்தக்காரங்க  வீட்டுக்கு சாயங்காலமா போகும் வழக்கம் இருந்துச்சு! அம்ம்ம்ம்ம்ம்ம்மாடி இப்பலாம் சாயங்காலம் 6 டூ பத்து திருடன் வீட்டுக்குள்ள வந்தாலும் கண்டுக்க மாட்டாய்ங்க! நாம போனாவா வாங்கன்னு சொல்லி உபசரிச்சுட போறாங்க?!!

பொழுது போக்குக்காக ஏற்படுத்திக்கொண்ட விஷயங்கள் பலவற்றிற்கும் நாம் அடிமையாகிவிட்டது போல்  தான் இந்த சீரியல்களும்!  சரியான மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கூடியவிரைவில்  சைக்கோக்கள் வீட்டில் உருவாவது கேரண்டி!

சீரியல்ஸின் உன்னத உயர்நோக்கு கொள்கைகள் ஏதேனும் விடுபட்டிருப்பின்  மன்னிச்சூ மன்னிச்சூ மன்னிச்சூ!!!! மொக்கை  விமர்சனங்களை வரவேற்கப்படுகின்றன! குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து துரதிஷ்ட்டசாலிகளுக்கு பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை  டீவிடியும், முகவையின் விடிவெள்ளி ரித்திஷ் குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும்! ஹி..ஹி..ஹி..

டிஸ்கி: குட்டிசுவர்க்கத்தில் இருந்த ப்ளாக்ஸ்பாட்டை தூக்கியாச்சு! அந்த இடத்தில் .com மாத்தியாச்சு!

,

சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல  எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. இன்னொருத்தர் மசாலா மிக்ஸ்ங்குறாரு.. நானும் ரொம்ப நாளா யோசிச்சேன்.. ஒன்னும் சரிபட்டுவரல (ப்ளாஸ்க்ல இருந்தா தானே டம்ளர்க்கு காப்பி வரும் ஹி..ஹி..ஹி..)  அருசுவை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு சகலகலா வள்ளி வனிதா அக்காவை பத்தி தெரியாம இருக்காது. வனிதா அக்காவை தெரிஞ்ச யாருக்கும் 'சொல்ல விரும்பினேன்' பத்தி தெரியாம இருக்காது. அன்றன்றைய நாளில் நம் மனதில் உதித்த எண்ணங்கள், சந்தித்த மனிதர்கள், நடந்த காமெடிகள், ஊர்வம்பு, அரசியல் என சொல்ல விரும்பினேன் தலைப்பின் கீழ் சுவாரசியமான அரட்டை போகும்!  நானும் அதையே கப்புன்னு புடிச்சுக்கிட்டேன் :-) இனி இந்த தலைப்பின் கீழ் நானும் சொல்ல விரும்புவதை சொல்ல போறேன்! (ப்ளாக்ல சொந்த விஷயம்லாம் எழுதாதீங்கன்னு யாரும் போர்கொடி தூக்கிட்டு வந்துடாதீங்கப்பா... நமக்கு இந்தளவுக்குதேன் வரும்! என்னன்னா.... எப்படின்னா..... சுருக்கமா சொல்லணும்னா... சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ.... அவ்வ்வ்வ்வ்)

புன்னகை சிந்தி அன்பை அள்ளுங்க! :
எங்க வீடு ஊருக்கு வெளியே இருப்பதால் எது வாங்க வேண்டும் என்றாலும் டவுன்க்குதான் வரணும். சேர் ஆட்டோ நெஹி... சோ மினிபஸ்தான். எப்பவும் செம நெரிசலா இருக்கும்! 15 நிமிஷம் பயணப்படும்  எனக்கே செம எரிச்சலா இருக்கும்! அப்ப ட்ரைவருக்கும் கண்டாக்கருக்கும் ஹி..ஹி..ஹி.. கன்டக்டருக்கும் சொல்லவா வேண்டும்?  மெயின் ஸ்டாப்க்கு முன்னாடியே நம்ம வீடு! (அப்ப எனக்கும் சொத்துல பாதிய தான்னு கேட்டுடுவாய்ங்களோ?? நமக்கென்ன கவல? ஹவுஸ் ஓனர்ல வருத்தப்படணும்)  எப்பவும் ஒரு ஆளுக்காக நிறுத்துவதில்லை. ஆனா நாமதான் செம சோம்பேறியாச்சே! சில முறை கெஞ்சிபார்த்து நொந்துட்டேன். ம்ஹூம்... கடமையில் கண்ணா இருந்தாரு!  3 முறை தொடர்ச்சியாக என் வீட்டருகில் ஒரு பெண்மணி கை அசைத்து பஸ்ஸில் ஏற அந்த கேப்பில் நானும் டக்குன்னு இறங்கிட்டேன். இறங்குவதற்கு முன் ட்ரைவரிடம் "ரொம்ப நன்றிங்கண்ணா" என மகிழ்ச்சியோட சொல்ல மறக்கவில்லை மூன்று முறையும்!  இப்பlல்லாம் எங்க ட்ரைவர் அண்ணா என் வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டுடுவார். கன்டக்டர் தம்பிக்கும் கரேக்ட்டான சில்லரையை (புன்னகையோடு) கொடுத்து அவர் வேலையை சுலபமாக்குவதால் அவரும் நம்ம தோஸ்த் ஆய்ட்டார். ட்ரைவர் அண்ணாவே மறந்தாலும் கன்டக்டர் தம்பி வேகமா விசில் அடிச்சு வீட்டு வாசலில் பஸ் நிறுத்த வச்சுடுவார். நாம்(ன்) செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட  எந்தஅளவுக்கு அன்பும் மரியாதையும் பெரிய அளவில் கிடைக்கும்னு உணர்த்திய விஷயம் அது!
 


மன்னிப்புகேட்டா மானம் போகுமா? லூஸ்ல விடுங்க பாஸு:
பத்து நாட்களுக்கு முன் அக்காவுக்கும் எனக்கும் செம சண்ட! எப்படியெல்லாம் வார்த்தை விட்டால் ஒருவர் மனதால் நோகுவார் என்பது அக்காவுக்கு கைதேர்ந்த விஷயம். என்ன தான் நம்ம பக்கம் நியாயம் இருந்தாலும் வாய் தொறக்கவே முடியாது!  சண்டையின் உச்சமாக "என் வீட்டு வாசப்படி மிதிச்சுடாத"ன்னு சொல்லிட்டு போயிட்டா. நானும் பத்து நாளா யோசிச்சேன். சரி வாசப்படியை மிதிக்காம தாண்டி போய்டலாம் இல்லைன்னா ஏணிப்படி மூலமா பால்கனி வழியா வீட்டுக்கு போய்டலாம்னு முடிவு பண்ணி போனேன். செய்யாத தப்புக்கும் அக்காவிடம் மன்னிப்பு கேட்டேன். அப்பறம் என்ன? அக்கா பயங்கரமா பீல் பண்ணா... மானம் போகும்னு கவலப்பட்டா கஷ்ட்டப்பட்டு சமைக்கணுமே? அவ்வ்வ்வ்வ்வ்...
 இப்பலாம் டீயை தவிர வேற எதுவும் வீட்டில் செய்றதில்ல ஹி...ஹி...ஹி.. உக்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு சாப்டுறது எவ்வளவு சொகமான அனுபவம் :-) இதனால என்ன சொல்ல வர்ரேன்னா (போதும்.. என்னன்னு புரியுது... நீ சீக்கிரம் முடிக்கப்பாரு) போகும் போது என்னத்த கொண்டுட்டு போகப்போறீங்க? விரோதமும், மனகசப்புகளையுமா? லூஸ்ல விடுங்க பாஸு!

எங்கே போனார் அந்த பதிவர்?? :
பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதலில் ஹைதர் அண்ணாவை தான் அண்ணா என உரிமையுடன் கூப்பிட்டேன். அவரும் என்னை தங்கை எனவே அழைக்க ஆரம்பித்தார்(நாங்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என அப்போது தெரியாது) அதை பார்த்த பதிவர் தொப்பி தொப்பி  "எனக்கும் இப்படியாக உங்களை அக்கா அல்லது தங்கச்சி என சொல்ல ஆசையாக இருக்கு" என சொன்னார். அன்றிலிருந்து அவரும் எனக்கு சகோதரர் ஆனார்.  நான் ப்ளாக் எழுதாமல் இருந்த 6 மாத இடைவெளியில் மறக்காமல் அடிக்கடி பின்னூட்டம் மூலம் நலம் விஷாரித்து ஒரு உண்மையான அண்ணனாகவே நடந்துக்கொண்டார்(என்னால் தான் பதில் போட முடியவில்லை). எப்போதும் நம் எண்ணங்களோட ஒத்துபோகாதவர்களின் பேச்சு, எண்ணம், ரசனை, நடவடிக்கைகளை கண்காணிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும் (உளவியலாம்). இவர்கள் எப்போதும்  தர்க்கரீதியாய் எவரிடத்திலும் பேசக்கூடிய திறமைபெற்றவர்கள். தொப்பி தொப்பியும் அப்படிதான்.  அவரின் பல பதிவுகளில் நடக்கும் விவாதசண்டை செமையா இருக்கும். பதில்களுக்கு அவர் கொடுக்கும் பதிலடிகளும் செம நெத்தியடி! நச் தான்!  அண்ணாவின் தியேட்டர் பற்றி, ஆம்வே பற்றி, பணம் பறிக்கும் விளம்பரம் பற்றி, மதத்தின் பெயரால்  நடத்தப்படும் கொள்ளை பற்றிய சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய  பதிவுகள் என்றுமே மறக்க முடியாதவை!   நான் ரீஎன்ட்ரி கொடுப்பதற்கு ஒரு வாரம் முன் கடைசியாய் பதிவு போட்டார். அதன் பின் எப்பதிவும் காணவில்லை. சில மாதங்களுக்கு முன்  என் பதிவுக்கு அவரின் ஓட்டு பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் மீண்டும் ஏமாற்றமே! அவர் எழுத வரவில்லை! ஏன் ஒதுங்கிவிட்டார் என தெரியவில்லை! ஒரு வாரமாக சாட்டில் மாட்டிக்கொண்ட  அநேகரிடம் தொப்பி தொப்பியை தெரியுமா என கேட்டால் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் அண்ணாவை பாராட்டியும் அவரின் பதிவுலக ஒதுங்கலை நினைத்து வருத்தமும் தெரிவித்தனர். தரமான எழுத்தும், நடுநிலையான தன்மையும் கொண்ட பதிவர்கள் நெடுநாள் அருகில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய நல்ல எண்ணங்கள் நம்மை விட்டு நீங்காது என்பதற்கு சான்று அது!  அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் மீண்டும் ப்ளாக்கில் எழுத வைக்க  முயற்சி செய்யுங்க! திறமையானவங்க ஒதுங்கி இருப்பது வருத்தமா இருக்கு :'( 


இம்புட்டுதூரம் வரைக்கும் பொறுமையா படிச்ச ஜீவன்களுக்கு(ஐய்யோ பாவம்!) என் நன்றிங்கோ
கெளம்புறேனுங்க (ஆமி-நோ நோ இதுக்கெல்லாம் சின்ன புள்ள மாதிரி அழப்படாது! மக்கள்ஸ்- அடபக்கி! கதற கதற அறுத்துட்டிருந்தா அழமாட்டாகளா???)

, , , , ,