வருத்தத்துடம் இந்த அறிவிப்பை தெரிவிப்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்:-)

நம்ம ப்ளாக்ல ஏதோ ஆர்வ கோளாறுல நம்மூர் புரோட்டா சால்னா பத்தி போஸ்ட்  போட்டா எக்கசக்க ஆதரவுகள் (அதிகமா பார்வையிடப்பட்டதே அந்த இடுகை தான்). ஆக மக்களும் நம்மல நம்பதானே செய்றாகப்பூ......... அப்ப ஒடனே ஒரு கட்சிய ஆரம்பிச்சுட வேண்டியதுதேன்........

ஜலீலாக்கா, ஆசியா, மேனகா, கீதா இன்னும் பல சமையல் ராணிகள் அளவுக்கு தெரியலைன்னாலும் ஏதோ நம்ம அளவுக்கு கொஞ்சூண்டு.......வந்ததையாவது போடலாம்னு ஒரு விபரீத ஆச

ஆக இதன் மூலமா தெரிவிக்கிறது என்னான்னா.........

ஏதோ பயபுள்ள ஆசபட்டுடுச்சு... நாமளும் நல்ல மனசோட உதவுவோம்னு நீங்களாவே மனசுக்குள்ள நெனச்சு ஒருமனதா முடிவெடுத்துட்டு, பின்னால வரப்போற  பின்விளைவுகள பத்தி கொஞ்சங்கூட யோசிக்காம அப்படிக்கா கீழ உள்ள லிங் வழியா அங்கே வந்துடுங்கோ மக்கா......

இன்னும் ஒரு பதிவ கூட போடல.....
பத்து பேராவது என் பின்னாடி வந்தாதேன் திறப்பு விழா கொஞ்சம் கலகட்டும்னு இ....ந்.......தா அவுக சொன்னாக....... இல்லல்ல........ அ.........ந்..........தா........ அவுக சொன்னாக (சரி விடுங்க)

திறப்பு விழா நடைபெறும் நாள்- இன்னைல இருந்து இந்த மாசத்துக்குள்ள

நேரம்- உங்க நேரம்

பரிசுகள் கட்டாயம் வரவேற்கப்படுகின்றன :-))

இடம்

சமையல் எக்ஸ்ப்ரஸ்



டிஸ்கி
தெரிஞ்ச கொஞ்சூண்டு சமையல் குறிப்ப குட்டி சுவர்க்கத்திலேயே பதியலாம் தான். ஆனா தேட கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும்னு ஒரு எண்ணம். தட்ஸ் வை..........................






,

43 comments:

  1. சலாம் ஆமினா!

    சமையலுக்கு தனியாவா...?! ஓகே, ஒகே... எப்படியோ எங்களுக்கும் உங்க சமையல சொல்லிக் கொடுத்தா சரிதான் :) Followers ல முதல் ஆளா வந்து துண்டு போட்டு இடம் பிடிச்சாச்சு :) இப்போ நீங்கதான் பரிசு கொடுக்கணும் :))

    ReplyDelete
  2. அடிச்சிபிடிச்சி சமையல் எக்ஸ்பிரஸ்'குள்ளே ஓடினால், அங்கே நோ போஸ்ட்'ன்னு இருக்கு அவ்வ்வ்வ், ஒருவேளை என் கண்ணுக்குத்தான் பவர் பத்தாதா...???

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    இது விபரீத முடிவு அல்ல.அருமையான ஐடியா
    வாழ்த்துக்கள் .தொடருங்கள்.
    ஆனால் புது புது சமையல் போடணும்.இன்று பதிவு போட்டு,அழைப்பு அனுப்பி இருக்கலாமே

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //சமையல் எக்ஸ்ப்ரஸ்//---வருக..! வருக..! தங்கள் வரவும் இனிதே நல்வராவாகுக..!

    ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீருக்கு அடுத்து மனித உயிர் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது உணவு.

    வாயில் உணவை போட்டவுடன் அதை புரட்டிஒதுக்கி புரட்டி பற்கள் கொண்டு நன்கு அரைக்க நாக்கு மிக அவசியம். ஆனால், அதற்கு சுவை அறியும் திறனும் கூடவே இருப்பதால்...

    சமையல் குறிப்பு பதிவுகள் மிக மிக அவசியம்.

    அந்த வகையில்... இந்த பதிவுகளை நான் எப்போதும் கோலாகலமாக குதூகலத்துடன் கொண்டாடி வரபேற்பதுண்டு.

    ஆனால்,
    சகோ.ஆமினா...
    ஒரே ஓர் எச்சரிக்கை..!

    நீங்கள் போடும் சமையல் குறிப்பு இதுவரை வேறு யாரும் பதியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

    இல்லையேல்...

    நான்... follower போட்டதுடன் நிறுத்திக்கொண்டு அந்த "எக்ஸ்ப்ரஸ் வண்டி"யிலிருந்து ச்செயினை பிடித்து இழுத்து நிறுத்தி இறங்கி ஓடியே போய்விடுவேன்..!

    ஜாக்கிரதை..!

    [அறியவும்:
    நான் போட்ட ஒரே ஒரு 'சமையல் குறிப்பு' -டோப்பிடஹான்' பதிவு... அதுவரை இணையத்திலேயே சொல்லப்படாதது..!]

    ReplyDelete
  5. இனிய மாலை வணக்கம் அக்கா,

    சமையல் எக்ஸ்பிரஷ் தொடங்கிறீங்களா..

    நான் போன் பண்ணி ஆடர் பண்ணினா நம்ம வூட்டுக்கும் சாப்பாடு அனுப்பி வைப்பீங்களா...

    உங்களின் இந் நல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சமையல் குறிப்பா, சாரி... என்னை மாதிரி சமைக்க யாராலும் முடியாது என்று என் தந்தையும் என் மனைவியும் செர்டிபிகாடே கொடுத்திருக்காங்க, அதை கெடுத்துக்க விரும்பல...

    ReplyDelete
  7. ஆசையா ஓடோடி வந்தேன் இன்னும் ரெசிபி போடல்லியா .

    ReplyDelete
  8. புதுவூடு கட்டி பால்காய்ச்சும்போது, முழுசா கட்டமின்னயே பால் காச்சிடுவாங்க. முழுசா கட்டிட்டுப் பால் காச்சினா, கண்ணு பட்டுடுமாம். அத மாதிரி, நீங்களும் பதிவு போட முன்னாடியே அழைப்பு வக்குறீஹ.. :-)))

    //பரிசுகள் கட்டாயம் //
    எங்கூட்ல நான் சமச்சத சாப்பிடும்போது கிடைக்கிற ‘பாராட்டு’ல பாதியை, ஏன் முழுசாவே அனுப்பி வைக்கிறேன்!! :-))))

    ReplyDelete
  9. சமையல் எக்ஸ்ப்ரஸ்...வாழ்த்துக்கள்..

    ஆமீனா...இந்த வலைப்பக்கத்திலே தொடரலாமே...

    ReplyDelete
  10. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அஸ்மா நலமா

    அடுத்து உங்களுக்கு மெயில் அனுப்ப முடியல சாரி :-)

    //எப்படியோ எங்களுக்கும் உங்க சமையல சொல்லிக் கொடுத்தா சரிதான் :)//
    ஆஹா..... அஸ்மா ஜோக்கா? உங்க கிட்ட தான் நிறையா கத்துக்க வேண்டி இருக்கு

    முதல் பின்னூட்டம், முதல் பின் தொடர்பவர்...... என்னை ஊக்குவிப்பதில் அஸ்மாவின் பங்கு ரொம்பவே அதிகம் ஆரம்ப நாளிலிருந்து

    நன்றி- பரிசு :-)

    ReplyDelete
  11. @மனோ

    என்ன ஆச்சு சகோ

    இந்த வரிய படிச்சீங்களா இல்லையா?
    //இன்னும் ஒரு பதிவ கூட போடல.....
    பத்து பேராவது என் பின்னாடி வந்தாதேன் திறப்பு விழா கொஞ்சம் கலகட்டும்னு//

    ஹி...ஹி...ஹி...

    போட்டுடலாம் சீக்கிரமே

    ReplyDelete
  12. @ஆயிஷா
    வ அலைக்கும் சலாம் வரஹ்....

    //ஆனால் புது புது சமையல் போடணும்.//

    அந்தளவுக்கெல்லாம் எக்ஸ்பர்ட் இல்ல ஆயிஷா. ஏதோ நம்மனால முடிஞ்சது மட்டும் :-(

    //இன்று பதிவு போட்டு,அழைப்பு அனுப்பி இருக்கலாமே//
    மெயில் தானே சொல்றீங்க?
    மெயில் காண்டக்ட்ல உள்ளவங்க எல்லாருமே ப்ளாக் பாலோவர்ஸா இருக்குறதுனால எதுக்குன்னு மெயில்னு விட்டுட்டேன் சகோ :-)

    ReplyDelete
  13. @சகோ ஆஷிக்
    வ அலைக்கும் சலாம் வரஹ்

    நாக்கு?// :-)
    எதோ சொல்ல வாரீக.... புரியுது. ஆனா விளக்கமா சொல்லுற அளவுக்கு இன்னும் புரியல :-)

    ஏதோ எனக்கு தெரிஞ்சது மட்டும் போட்டுட்டு போய்டுவேன் சகோ.... ஏற்கனவே செய்ற புளிகுழம்பு கருவாட்டு குழம்புன்னு இல்லாம கொஞ்சம் வித்தியாசமா என்னைக்காவது பண்ணா அத இடுகையிடுவேன். குக்கிங்ல ரொம்பலாம் வல்லுநர் கிடையாது மதனி அளவுக்கு

    ReplyDelete
  14. @தம்பி நிரூ

    //நான் போன் பண்ணி ஆடர் பண்ணினா நம்ம வூட்டுக்கும் சாப்பாடு அனுப்பி வைப்பீங்களா...//

    அடுத்த மாசம் ஆரியபவன் தொடங்கிடலாம் :-)

    ReplyDelete
  15. @சூர்ய ஜீவா
    //அதை கெடுத்துக்க விரும்பல...//
    ஹா...ஹா...ஹா...

    இருந்தாலும் ஆதரவு கொடுத்ததுக்கு நன்றிங்கோ.... இனி விரும்பாமலேயே கெடுத்துக்குவீக

    ReplyDelete
  16. @ஏஞ்சலின்

    எங்கே போயிட போறீங்க.... பின்னாடியே வந்துடும் குறிப்பும் :-)

    ReplyDelete
  17. @ஹுசைனம்மா

    //அத மாதிரி, நீங்களும் பதிவு போட முன்னாடியே அழைப்பு வக்குறீஹ.. :-)))//

    ஹீ...ஹீ...ஹீ....

    எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா பண்ணி தொலைக்கலாம்னு தான் :-)

    ReplyDelete
  18. @ரெவெரி

    //ஆமீனா...இந்த வலைப்பக்கத்திலே தொடரலாமே...//

    கருத்துக்கு நன்றீ சகோ

    சமையலுக்குன்னு மட்டும் இருந்துட்டா கொஞ்சம் பெட்டர்ன்னு தோணுது சகோ..

    முன்னாடி நா குட்டிசுவர்க்கத்தில் தான் சமையல் பதிவு போட்டுட்டிருந்தேன். சிலரின் ஆலோசனையால் இனி போட வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தேன். அதுமில்லாமல் எல்லாத்தையும் மொத்தமா இங்கேயே போட்டுட்டா எழுத்துக்கள் சம்மந்தமான இடுகை போட ஆர்வம் இல்லாம போகுது :-(

    அதுனால தான் தனி ப்ளாக் சகோ....

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    புதிய தளத்தின் பதிவுகள் சிறப்பாக அமையப்பெற்று, சிறப்பாக பதிவுகள் மூலம் தளம் அற்புதமான வளர்ச்சி பெற என்னுடைய பிரார்த்தனைகள்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  20. சமையல் எக்ஸ்பிரஸ் !புது ரெசிபியா தினமும் கொடுங்க ...நான் வர்றேன் உங்க பின்னாலே ..

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்.

    ReplyDelete
  22. சில படங்களை காணலையே.

    ReplyDelete
  23. @சகோ ராஜா

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  24. @சகோ ஆஷிக்

    வ அலைக்கும் சலாம் வரஹ்....

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  25. @பிரபு

    இமாவும் அப்படி தான் சொன்னாங்க.... பட் எனக்கு எல்லாமே தெரியுது. ப்ளாக்கர் நண்பன் கிட்ட கேட்டுருக்கேன்..... பாக்கலாம் :-)

    ReplyDelete
  26. @ராதா ராணி

    உங்க அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆன பொறவு தினமும் பதிவு போடுறேன் ராதா.... :-)

    மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு

    ReplyDelete
  27. புது வீட்டுக்கு வாழ்த்துகள். விழாவுக்கு வந்தவங்களுக்காக சமைச்சு வெச்சிருப்பீங்கன்னு ஓடி வந்தேன். :-)))

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் இனி நீங்களும் சமையல் ராணிதான்,,

    ReplyDelete
  29. திறப்பு விழா நடைபெறும் நாள்- இன்னைல இருந்து இந்த மாசத்துக்குள்ள

    நேரம்- உங்க நேரம்

    பரிசுகள் கட்டாயம் வரவேற்கப்படுகின்றன :-))

    இடம்

    சமையல் எக்ஸ்ப்ரஸ்

    வாழ்த்துக்கள் சகோதரி .உங்க சமயல்க்கட்டு வளம்பெற...மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் இன்று என் தளத்தைக் காண வாருங்கள் .......

    ReplyDelete
  30. எல்லா ஓட்டும் போட்டாச்சு ......

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. என்னது புதிதாக ப்ளாக் ஆரம்பிக்கப் போறீங்களா? இதுதான் அந்த விபரீத முடிவா??? ஹா ஹா ஹா இதோ வருகிறேன் சகோதரி!

    ReplyDelete
  33. நானும் இப்போதான் சமையல் பழகுறேன்.பிளீஸ் ஆண்கள் செய்யுற மாதிரி கொஞ்சம் ஈசியா கத்துக்கொடுங்க!!!

    ReplyDelete
  34. @அமைதி சாரல்

    விருந்துக்கு நீங்க தான் வரல.....

    டின்னர் பார்ட்டி வச்சேனே... அதுவும் தலைவாழை விருந்து :-)

    ReplyDelete
  35. @ரியாஸ்
    சலாம் சகோ

    ராணிலாம் இல்லைங்கோ.... மொத்தமா எண்ணி பார்த்தாலே ஒரு 100 சமையல் தெரியும்.... வாரத்துக்கு 2ன்னு போட்டு கொஞ்ச காலத்த ஒப்பேத்திடலாம்னு நெனச்சு ஆரம்பிச்சேன்

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  36. @அம்பாளடியாள்

    மிக்க நன்றி அம்பாளடியாள்

    ReplyDelete
  37. நன்றி சகோ விக்கி
    நன்றி சகோ ஐடியா மணி
    நன்றி சகோ விச்சு
    என் சமையல் எல்லாமே அப்படிதான் இருக்கும்... அப்படி தான் தெரியும்... பெருசாலாம் சமையல்ல சாதிக்கல ;-)

    ReplyDelete
  38. சமையல் செய்யுங்க... டிப்ஸ் கொடுங்க எதுவாக இருந்தாலும் செஞ்சி சாப்பிட்டு பாப்போம்ல... எங்களுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடற மாதிரி

    ReplyDelete
  39. நல்ல சூப்பரா ஸ்வீட்டோட ஆரம்பிச்சுடுங்க ஆமி

    ReplyDelete
  40. நன்றி மாய உலகம்

    ReplyDelete
  41. மாமி

    டூ லேட் :-)

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)