போன முறை  கொலவெறியோட நடத்துன தாக்குதல பாத்து எங்க வீட்டு குட்டிபிசாசுங்க "எங்கே தெகிரியம் இருந்தா இந்த பாட்ட பத்தி எழுதுங்க"ன்னு சவால் (அதெப்படி ஆமி?  உங்க வீட்ல உள்ள சிறுசுகளும் உன்னைய மாதிரியே இருக்குதுங்க???)



சரி குட்டீஸ் விருப்பம். நிறைவேத்திடலாம்

அதாவது...
அதாகப்பட்டது....
எப்படி சொல்லி புரிய  வைக்கிறது??
 இந்த பாட்டு கஸ்தூரி ராஜாவின் மகனாகிய, செல்வராகவனின் தம்பியாகிய, ரஜினியின் மருமகனும் (யேய் போதும் நிப்பாட்டு!)

, ,

படு பயங்கரமா கோபத்தில் இருக்கேன். எல்லாம் இந்த வீணா போன பவர் கட்-னால தான்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிம்மதியா தூங்க முடியல... நிம்மதியா காலைல எழ முடியல... பின்ன என்ன எழவுக்கு தான் மிச்ச நேர கரன்டையும் விடுறாங்க ??? :-x

2020ல வல்லரசாம். இங்கே எல்லாரும் கற்காலத்த நோக்கி பயணிக்க வைக்கும் போது 2020ல வல்லராகுறதெல்லாம் கேக்க இப்ப காமெடியா இருக்கு! நெனப்புபொழப்ப கெடுக்கும்... இந்த லட்சணத்துல இந்தியா ஒளிர்கிறதாம் :-\

, ,


பிபோர் ஒரு இயர்( நாட் காது... தட்ஸ் மீன் வருஷம். ஆங் நாட் பிஸ்... தட்ஸ் மீன் அர்த்தம்... ஓ மை கடவுளே) .. ஐயாம் வாசிச்சிங்  3 பாகம் ஆப் தொடரிங் ஸ்டோரி. பட் கான்ட் தொடரிங் பிகாஸ்  மை டைம் இன்மை அன்ட் சோம்பேறிதனம். பட் 4 டேஸ்க்கு பிபோர் அந்த ஸ்டோரி ரைட்டர கேட்சிங் அன்ட்   லிங்க் வாங்கிங். சோ இன்னைக்கு புல் ப்ரீத்திங் ல புல்லா  வாசிச்சுடு (பாஸ்ட் டென்ஸ் ஹி..ஹி..ஹி..) அதாகப்பட்டது எ குட் ஒன் ப்ரம் தி வலைபதிவர்... ஐ வான் ஸ்பீக் அபவுட்  ஹிஸ் நினைவுகள் தொடரிங் ஸ்டோர்ரி. ( வீடியோல நல்லா தெரியுறேனா? ஆங்... ஓக்கே... இனி ஐ ஆம் தொடரிங் இன் மை மம்மி லாங்வேஜ் டமில்... எவரிபடி க்ளாப் பார் மை வேல்யுஅபிள் ஸ்பீச் ப்ளீஸ்.. அட கைத்தட்டுங்கப்பா... எல்.கே கிட்ட சொல்லி பிரியாணி வாங்கிதரேன்)

கதையின் ஆசிரியர்:-
நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பதிவர் எல்.கேயின் கதை தான் இது (நிஜமல்ல கதை. அதுக்கு மேல உங்க இஷ்ட்டம். அவர் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்குனதில்லன்னு சொன்னா கேக்கவா போறீங்க?? என்னது? அவர் தான் கதையோட ஹீரோவா????? நேக்கு தெரியாது  ஹி...ஹி...ஹி...). ஜனவரி 6ல் ஆரம்பித்து மார்ச் 24ல் முடிச்சாரு. மொத்தம்  20 பாகம். ஆனா நீங்க ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும். மொத்த கதையினையும் ருசிபார்க்கலாம்.

,

அன்புள்ளம் கொண்ட என் தம்பி மாயாவிற்கு,

           நீ இறந்துவிட்டதாய் நேற்று முதல் வந்த செய்தியை கேட்டு உள்ளம் நொந்து போனேன் சகோதரா. உன் ஆசை நிறைவேற்றப்படாமலேயே பாதியில் நிற்கும் போது எப்படி நீ இவ்வுலகம் விட்டு போயிருக்க முடியும்? உன் கனவுகள் மெய்ப்பட நீ ஆரம்பித்த வேலைகள் இலக்கை அடையாமல் பாதி வழியிலேயே நிற்கும் போது எப்படி உன்னால் உயிர்விட்டிருக்க முடியும்?

        பக்கத்துவீட்டு பாட்டியாம். சிறுவயதிலிருந்தே கவனித்து வருகிறேன். போனவாரம் இறந்து விட்டதை கண்டு அழுகாத மனம் உன் இழப்பை இன்னும் நம்ப முடியாமல் இருப்பது தான் நீ எங்களிடம் காட்டிய அன்பின் சாட்சியா மாயா? முகம் அறியவில்லை, முன்பின் குரல் கேட்டு பேசியதில்லை... ஆனாலும் ரத்த உறவாய் என் நெஞ்சில் இணைந்துவிட்ட என் சகோதரனை பிரிந்தது கண்டு உச்சி முதல் பாதம் வாரை சோகம் பாரங்களாய் பரவி மூளைக்குள் ஊறும் சிறு புழு   என்னை கொல்லும் அளவுக்கு  வேதனை அனுபவிக்கிறேன். இது தான்  நீ வாழ்ந்த வாழ்க்கையின் ஆதாரமா மாயா? இறக்கும் பொழுது ரத்தம் சம்மந்தமே இல்லாத ஒரு 100 பேராவது நமது சாவிற்காக கண்ணீர் விட்டு அழவேண்டும். அது தான் சாதனை என்று உன் நண்பர் சொன்னதாக சொன்னீயே... இன்று எத்தனை பேர் கண்ணீர் விட்டு கதறுகிறோம் என பார் மாயா. போதும்.விளையாட்டு இது என சொல்லிவிட்டு போ...

   
        நேற்று முதல் ஐந்தாறு முறை  மாத்திரையிட்டும்  போகாமல் இருக்கும் பாரத்தை சொல்லப்படாமல் மறைத்த அந்த ஒற்றை வார்த்தையை இறக்கிவிட்டால் மனம் லேசாகும்  சகோதரா. அதை என்னிடமிருந்து வாங்கிச்செல்லவாவது என் முன்னால் நீ தோன்றிட கூடாதா?

        உன்னுடன் பழக வாய்ப்பு அருகில் இருந்தும் அதை பயன்படுத்தாத எனக்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் தகும் நண்பா. இப்படியான பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து தான் எனக்கு உன் நட்பை கொடுக்காமல் இருந்தாயா?

  
      காலை முதல் காத்திருக்கிறேன். அதெல்லாம் பொய் என சொல்ல நீ வருவாய் என. இதுவரை நடக்கவில்லை என்றாலும் மனம் ஒப்புக்கொள்ளவில்லையே. நீ இருக்கிறாய் என்றே என் மனதை தேற்ற துடிக்கிறேன். உன் பெயரிட்டு வரும் எந்த செய்தியும் படிக்க என் மனம் மறுக்கிறது. நீ வருவாய் என்ற என் உறுதியினை அவை சிதைத்துவிடுமோ என்ற பயம். இதை முட்டாள்தனம் என எவரேனும் எண்ணினாலும் பரவாயில்லை மாயா. எல்லாமே வதந்தி என சொல்ல வாயேன் ப்ளீஸ். இவ்வுலகை விட்டு மறையவில்லை; மாயமாய் சிலநாட்கள் இருக்கிறேன், தொந்தரவு செய்யாதீர்கள் என  என்றாவது சொல்லிவிட்டுபோயேன்

உன் வரவுக்காக காத்திருக்கும்
உன்னை தன் ரத்த உறவாய் பார்க்கும்
உன் அக்கா
ஆமினா முஹம்மத்
 

எல்லாரும் நல்லாக்கீகளா? (நல்லா இல்லைன்னா மட்டும் என்ன பண்ண போற?
சாப்டீயளா? (சாப்டளைன்னா மட்டும் சரவண பவன்க்கு கூடிட்டு போகப்போறீயா?)
புள்ளகுட்டிலாம் சவுக்கியமா? (ஏன் I.A.S படிக்க வச்சு டாக்டராக்க போறீயா? இல்ல M.B.B.Sக்கு படிக்க வச்சு டாக்குடரு விஜயா ஆக்க போறீயா?)

வரவர சரக்கு கம்மியாய்ட்டே  போயி ஒரு வட்டத்துல (எத்தன நாள்தான் கட்டத்த சொல்றது?)  மொத்தமா தீர்ந்து போச்சு(கொள்ள காலமா அப்படிதானே எழுதிட்டிருக்க.. இப்ப மட்டும் என்ன புதுசா???) அதுனால இனிமே பதிவு போடவேண்டாம்னு நெனச்சுட்டிருக்கும் போது மண்டைல பல்பு எறிஞ்சுடுச்சு... அதெப்படி? நாம இல்லைன்னா பயபுள்ளைக ரொம்ப சந்தோஷமா இருக்குங்களே... விடுவோமா? (நல்லவையே நினை என்பது உன் அதிகாரத்திலேயே இல்லையா?)

யோசிச்சேன்.....யோசிச்சேன்... 4 வேளையும் சாப்பிட்டு யோசிச்சேன், ஆப்பிள் பழத்த சின்ன சின்ன துண்டா எங்காள கட் பண்ண சொல்லி ஊஞ்சல்ல உக்கார்ந்துக்கிட்டு ஆடுக்கிட்டே, சாப்டுக்கிட்டே யோசிச்சேன். சன்டீவில காலைல இருந்து நைட்டு தூங்குறவரைக்கும் போடுற நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான பல அழுவாச்சி காவியங்களை ஒன்னுவிடாம பார்த்துட்டே யோசிச்சேன்.  அப்ப தான் மறுபடியும் மண்டைக்குள்ள ப்ரகாசமா லைட்டு எறிஞ்சுடுச்சு... இனி அடுத்தவரின் பதிவு பார்த்து நாமளும் எழுதணும்னு... அது காப்பி பேஸ்ட்டு இல்லங்கண்ணா ... கான்சப்ட் மட்டும் எடுத்து (திருடி ஹி...ஹி..ஹி..) என் மூளைய கசக்கி, ராப்பகலா யோசிச்சு, அதுக்கு தலைப்பு வைக்க பாடாத பாடு பட்டு, சில இடங்களில் போல்ட் பண்ணி, சில இடங்களில் கலர் கொடுத்து, பதிவுக்கு சம்மந்தமே இல்லாத போட்டோவ தேடி கண்டுபிடிச்சு என் கற்பனையும்  புகுத்தி எழுதுவதால் (சொந்தமா யோசிச்சு பதிவு போட்டவிங்க கூட இந்த அளவுக்கு பில்டப் கொடுக்க மாட்டாய்ங்க ஹி..ஹி..ஹி..) இத ஆரும் காப்பிபேஸ்ட்டு சொல்லப்படாது சொல்லிபுட்டேன். இது ஒரு "அடுத்தவிங்க சரக்கு" பதிவு :-)  காப்புரிமை குட்டிசுவர்க்கத்துக்கே

(@பாலா..... பதிவர்களின் வகைகள் 2ம் பாகம் போட்டீங்கன்னா  குட்டிசுவர்க்கம் ஆமினா தோற்றுவித்த அடுத்தவிங்க சரக்கு பதிவர்கள்... என்ற வார்த்தை வரணும் சரியா??... வரலாறு மிக முக்கியம் பாலா சார் அவ்வ்வ்வ்)

பதிவுலக வருங்கால சூப்பர் ஸ்டார் தாமரைகுட்டியின் வேண்டுகோளுக்கிணங்க( 2 நிமிஷத்துக்குள்ள படிச்சு முடிக்கிற மாதிரி பதிவு போடவாம்) இந்த பதிவை இத்துடன் முடிக்கிறேன். நாளைய பதிவை படிக்க 1/2 மணி நேரம் ஒதிக்கி வச்சுட்டு வாங்க மக்கா...