பலநாள் கனவு இது! கனவை நனவாக்க சாப்பாடு தண்ணி இல்லாம பாடுபட்டு, தூக்கம் அற்று, இராப்பகல் எனப்பாராது  உழைத்து உருவானது தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..................

ஹி..ஹி..ஹி.. இப்படியெல்லாம்  சொன்னா பொய் பேசிட்டு திரியுறீயான்னு கொலவெறியோட வருவாய்ங்க! :-)

எந்த பில்டப்பும் இல்லைங்க. உண்மைய சொல்லணும்னா "இரண்டே நிமிடத்தில் மனதில் எண்ணமாய்  ஜனித்து பத்துமணி நேரத்தில் பிறந்தவள் தான்"  எங்கள் புதிய தளமான "இஸ்லாமிய பெண்மணி". மதியம் ப்ளான் பண்ணோம். சாயங்காலம் ப்ளாக் உருவாக்கினோம். நைட் போஸ்ட் போட்டோம். காலைல எல்லார் பார்வைக்கும் வைத்தோம். ப்ளாக்ஸ்பாட்ல இருந்து டாட் காம்க்கு மாறினோம்.....அவ்வ்வ்வ்வளவே தான்!

பதறாத காரியம் சிதறாதுன்னு சொல்லுவாங்க. ஆனா இத்தளத்தின் விஷயத்தில் இந்த கூற்று பொய்யாகி போனது. ஒவ்வொரு படியும் அவசரத்தில் தான் ஏறினோம். ஆனா எந்த ஒரு இடத்திலும் தடுமாறவில்லை. கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். (சேர்ந்தாப்ல பதறினா செதறாது போல ஹி..ஹி..ஹி..)

ஆம்
பலரின் மனதில் இஸ்லாமிய பெண் என்றாலே  அடிமையாளவள், பிற்போக்குவாதிகளால் அடக்கி ஒடுக்கி ஆளப்பட்டு உரிமைகள் நசுக்கப்பட்டு மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டவள் என்ற எண்ணம் இருக்கு. எத்தனையோ பேர்  எத்தனையோ ஆதாரங்கள் காட்டியும் யாரும் கேட்பதாய் இல்லை. இஸ்லாமிய பெண் என்றாலே திறமை அற்றவள், படிப்பறிவு இல்லாதவள், உலகறிவு என்பதே இல்லை என்பது போல் பல இடங்களிலும் எண்ணங்கள் மாற்றப்பட்டுவிட்டது. அந்த எண்ணத்தை மாற்றவும், பலரின் திறமைகளை உலகுக்கு அறிய காட்டி அதன் மூலம் "இறைவனை தவிர யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை" என்பதை நிரூபிக்க வேண்டி உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய தளம் "இஸ்லாமிய பெண்மணி"

இத்தளம் முஸ்லீம் பெண்பதிவர்கள் மற்றும் பேஸ்புக்கில் மார்க்கப்பணி செய்யும் சகோதரிகளால் நடத்தப்படவிருக்கிறது.
 இஸ்லாம் சார்ந்த ஆக்கங்கள், பெண்கள் பற்றிய குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்,  விவாதங்கள், குர்ஆன் வசனங்களை மெய்பிக்கும் மருத்துவம்/அறிவியல் செய்திகள் என அனைத்துவிதமான விஷயங்களை அலசும் தளமாக இருக்கும்.   மேலும்  அனைத்து தரப்பினருக்கும் பயன்படக்கூடிய விஷயங்களும் இடம் பெறும். (சமையல் இருக்காது... டோன்ட் க்ரை :-)

தளத்தினை காண இங்கே சுட்டவும்- இஸ்லாமிய பெண்மணி
அறிமுகப்பதிவு காண - சிறகுகள் விரியட்டும்..

அறிமுகப்பதிவிற்கே நாங்கள் எதிர்பார்த்திராத அளவுக்கு ஆதரவும் உற்சாகமும் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் தளம் செயல்படும் (இறைவன் நாடினால்).

எங்கள் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்பினால் உங்கள் ஆக்கங்களை எங்களுக்கு அனுப்புங்கள். மற்ற சகோதரிகளையும் எழுத தூண்டுங்கள். அவர்களின் திறமையை உலகறிய செய்யுங்கள். அவர்களின் பெயர் சேர்த்து அவர்களின் ஆக்கமாகவே வெளியிட காத்திருக்கிறோம்.  
அனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - islamiyapenmani.com@gmail.com 
முஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளையும் மேற்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் மேற்கண்ட முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.

தொண்ட வரண்டு போச்சு... சோடா ப்ளீஸ்.....

ஆங்க்...
சொல்ல மறந்துட்டேன்...
தலைப்புல இருக்குற மெரட்டல் பத்தி சொல்லலையே...
த்தோ சொல்றேன்....

1.உங்களுக்கு  தெரிஞ்சவங்ககிட்ட இந்த தளம் பற்றி சொல்லி வைச்சுடுங்க.  
2.கீழ  சேர் பட்டனை அழுத்தி அவுகவுக வாலில் சேர் பண்ணுங்க.
3. எத்தன க்ரூப்ல மெம்பரா சேர்ந்திருக்கீங்களோ அத்தனை க்ரூப்லையும் சேர் பண்ணிடுங்க...
4. அவுகவுக ப்ளாக்ல எங்கள் தளத்திற்கான இணைப்பு கொடுத்துடுங்க. படம் ரொம்ப முக்கியம்  அமைச்சரே :-) :-)
5. புதியதளத்தில் பாலோவர்ஸ்ஸாகிடுங்க (பயபுள்ளைக என்னதான் சொல்ல வருதுன்னு பாருங்களேன் :-)

ஹி..ஹி..ஹி.. அன்பு மிரட்டல் தான் வேறொன்னும் இல்ல! கோச்சுக்காதீங்க... இதெல்லாம் நான் சொல்லமலேயே நீங்க செய்வீங்கன்னு தெரியும் ஹி..ஹி..ஹி... (பின்ன இப்படிலாம் தலைப்பு வைக்கலன்னா  எப்பதான் நானும் பிரபல பதிவராவுறது அவ்வ்வ்வ்வ்வ்)

வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா

டிஸ்கி- கள்ளஐடியின்  மைனஸ் ஓட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன.. எங்கே அஞ்சே  நிமிஷத்துக்குள்ள 25 ஓட்டையும் வரிசையா போட்டுடுங்க பாக்கலாம்...... ஜெட்ட்ட்ட்டா வேலை செய்யணும்

முக்கிய  அறிவிப்பு : வலையுலகில் எத்தனையோ பேர் ஒன்றாய் இணைந்து ப்ளாக் வைத்திருக்கும் போது  'எங்களை பற்றிய உண்மை நிலைகளை அறிய ஒன்றிணைந்து  தளம் உருவாக்கியது'  தவறுன்னு சொன்னா  ஹி..ஹி..ஹி..ஹி... சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை :-) :-) :-) வாழ்க ஜனநாயகம்! வளர்க நடுநிலைமை!

சிறகுகள் விரியட்டும்!!!!

, , ,

48 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  போலி விமர்சனத்திற்கு எதிராய்
  எழுத்து வானில்..

  இஸ்லாமிய பெண்மணியின்
  கருத்து
  சிறகுகள் விரியட்டும்...

  ReplyDelete
 2. மிரட்டலான தலைப்பு போட்டு என்னைப் படிக்க வெச்சிட்டியே!
  கெட்டிக்காரப் பொண்ணுமா நீ!
  உன் வலைப்பதிவு விரைவில் பிரபலமடைய என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மாஷா அல்லாஹ். மிக்க மகிழ்ச்சி.

  நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையை தடுப்பார்கள் - (குர்ஆன் 9-71)

  சிஸ்டர், இது எங்களுக்கு நன்றாகவே நினைவிருக்கின்றது. ஆகையால் எங்களால் முடிந்த உதவி நிச்சயம் இருக்கும்.

  உங்கள் குழுமத்தில் உள்ள சில சகோதரிகளின் பெயரை அறிந்தேன். ரொம்ப terror-ஆக தான் இருக்கின்றார்கள். :) :)

  இறைவன் உதவ மனமார்ந்த பிரார்த்தனைகளுடன்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 4. லையுலகில் எத்தனையோ பேர் ஒன்றாய் இணைந்து ப்ளாக் வைத்திருக்கும் போது 'எங்களை பற்றிய உண்மை நிலைகளை அறிய ஒன்றிணைந்து தளம் உருவாக்கியது' //நல்ல முயற்ச்சி அக்காள்.

  ReplyDelete
 5. உங்களின் கூட்டு முயற்சிக்கு எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. /// டிஸ்கி- கள்ளஐடியின் மைனஸ் ஓட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன.. எங்கே அஞ்சே நிமிஷத்துக்குள்ள 25 ஓட்டையும் வரிசையா போட்டுடுங்க பாக்கலாம்...... ஜெட்ட்ட்ட்டா வேலை செய்யணும்////

  பயபுள்ளைக மைனஸ் ஓட்டுக்களாக போட்டு தாக்கபோகுது பாருங்களேன் :-):-):-)

  Syed Abthayar
  Dubai

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..வபர..
  //இரண்டே நிமிடத்தில் மனதில் எண்ணமாய் ஜனித்து பத்துமணி நேரத்தில் பிறந்தவள் தான்" எங்கள் புதிய தளமான "இஸ்லாமிய பெண்மணி//
  க்ரேட்..! இதுவே இஸ்லாமிய பெண்களின் உரிமைகளையும், ஆற்றல்களையும், தன்நம்பிக்கையையும் போதியளவு எடுத்துக்காட்டுகிறது

  ReplyDelete
 8. theliva irukkeenge. wowwww

  ReplyDelete
 9. //(சமையல் இருக்காது... டோன்ட் க்ரை :-)//

  அப்பாடா....க்ரேட் எஸ்கேப்!!

  ReplyDelete
 10. Unga yarukkum pulla kutti padikka vaikkira velai illaya?

  I sincerely wish you to come up in life with out these useless activities. Otherwise, you have to beg for reservation. :(

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அளிக்கும் அமீனா சகோ

  மிரட்டல்னு தலைப்ப பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போனன்.. இன்ஷால்லாஹ் அறிமுக பதிவே சூப்பர் ...
  சகோதரிகளின் கூட்டு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
  இன்ஷால்லாஹ் முடிந்தால் என்னுடைய பங்களிப்பும் நிச்சயமாக வழங்குவேன் ...

  சிறகுகள் விரியட்டும் .. எட்டு திக்கும்

  ReplyDelete
 12. சகோதரியே முயற்சிக்கு வாழ்த்துக்கள் எம்முடைய ப்ளாக் பக்கம் கொஞ்சம் தலைவைத்துப் பாருங்கள்...
  http://citukuruvi.blogspot.com/2012/04/blog-post_20.html

  ReplyDelete
 13. இஸ்லாமிய பெண்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  உங்கள் அனைவருக்கும் நான் என் மனதில் பட்ட சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். அது சரியா தவறா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நான் ஓன்றும் அறிவு ஜீவி அல்ல ஒரு எளிமையான சாதாரண மனிதன் தான்.


  நீங்கள் இஸ்லாத்தை பற்றி இங்கு பேசும் போது அல்லது கருத்து தெரிவிக்கும் போது அதை ஒரு போதனையாக செய்யாதீர்கள் அல்லது மாற்று மதத்தவரின் மீது தீணிக்க முயற்சி செய்யாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு எளிதில் புரியும்படி விளக்குங்கள். அதாவது வாழ்ந்து காட்டுங்கள்.

  உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் இஸ்லாத்தை வெறுக்கும் ஒரு குடும்பத்தார் இருப்பதாக வைத்து கொள்ளுங்கள். முதலில் மதம் அல்ல உங்களின் கண்ணியமான வாழ்க்கை அவர்களுக்கு உங்கள் மீது ஒரு ஈடுபாட்டை கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சியை நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு அருகில் உள்ளவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் நீங்கள்தான் முதன் முதலில் சென்று உதவ வேண்டும் பரிவு காட்ட வேண்டும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படிபட்ட செயல்களின் மூலம்தான் நீங்கள் ஒரு உண்மையான முஸ்ஸிம் என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதை நீங்களும் மற்ற முஸ்லிம்களும் செய்தால் நீங்கள் யாருக்கும் போதனை செய்ய வேண்டியது இல்லை.


  நீங்கள் இந்த வலைத்தளத்தை நல்ல நோக்கில் ஆரம்பித்து இருப்பதால் நான் மேலும் ஓன்றை கூற விரும்புகிறேன். இங்கு பயனுள்ள விஷயங்களை பதிவது மட்டுமல்லாமல் பயனுள்ள கருத்துக்களூக்கு மட்டும் பதில் அளியுங்கள். மதத்தை மதமாக நினைத்து கேள்வி கேட்போரின் பின்னுட்டங்களுக்கும் கருத்துகளுக்கு கருத்து அளியுங்கள் ஆனால் மலமாக நினைத்து சாக்கடைடையை அள்ளி வீசுபவர்களுக்கு பதில் அளித்து சந்தனமாக மணம் வீசக் கூடிய இந்த வலைத்தலத்தை சாக்கடையாக ஆக்கிவிட வேண்டாம்.

  நான் மேலே கூறிய கருத்துக்கள் மனத்தையும் மனித நேயத்தையும் நேசிக்கும் ஒரு சாதாரணமான ஒருவனின் கருத்து.
  இதில் நான் தவறாகவோ அல்லது உங்கள் மனதை காயப்படுத்துவதாகவோ இருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்ள்கிறேன்.

  இஸ்லாம் பெண்களின் முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் அக்கா..... நீ கலக்குவே.....

  ReplyDelete
 15. மிரட்டிய அந்த பெண்மணி நீங்க தானா..அநியாயத்துக்கு பயந்துட்டேன்...-:)

  வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு...

  ReplyDelete
 16. 55 vilunthuduchu.... vaalthukkal :))

  ReplyDelete
 17. வ அலைக்கும் சலாம் வரஹ்...

  //போலி விமர்சனத்திற்கு எதிராய்
  எழுத்து வானில்..

  இஸ்லாமிய பெண்மணியின்
  கருத்து
  சிறகுகள் விரியட்டும்...//

  நன்றி சகோ

  ReplyDelete
 18. @முனைவர் பரமசிவம்

  //மிரட்டலான தலைப்பு போட்டு என்னைப் படிக்க வெச்சிட்டியே!
  கெட்டிக்காரப் பொண்ணுமா நீ!
  உன் வலைப்பதிவு விரைவில் பிரபலமடைய என் வாழ்த்துகள்.//

  ஹா..ஹா..ஹா..

  வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 19. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  //சிஸ்டர், இது எங்களுக்கு நன்றாகவே நினைவிருக்கின்றது. ஆகையால் எங்களால் முடிந்த உதவி நிச்சயம் இருக்கும். //
  இன்ஷா அல்லாஹ் சகோ

  //உங்கள் குழுமத்தில் உள்ள சில சகோதரிகளின் பெயரை அறிந்தேன். ரொம்ப terror-ஆக தான் இருக்கின்றார்கள். :) :)//

  ஹா..ஹா..ஹா..
  பின்ன நானே கொஞ்சம் ஆடி தான் போயிருக்கேன்.. எல்லாம் பெரிய பெரிய தலைங்க :-)

  பிரார்த்தனைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

  ReplyDelete
 20. @தனிமரம்
  //லையுலகில் எத்தனையோ பேர் ஒன்றாய் இணைந்து ப்ளாக் வைத்திருக்கும் போது 'எங்களை பற்றிய உண்மை நிலைகளை அறிய ஒன்றிணைந்து தளம் உருவாக்கியது' //நல்ல முயற்ச்சி அக்காள்.//

  உங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சி தருது நேசன்

  மிக்க நன்றி

  ReplyDelete
 21. @அப்துல்
  //theliva irukkeenge. wowwww//
  ஹா..ஹா..ஹா..
  நன்றீங்க

  ReplyDelete
 22. சிவா
  //! சிவகுமார் ! said...

  //(சமையல் இருக்காது... டோன்ட் க்ரை :-)//

  அப்பாடா....க்ரேட் எஸ்கேப்!!
  //

  என்னைய கலாய்ச்சு பதிவு போடப்போறேன்னு சொன்னப்பவே உஷாராகிட்டேன் ஹி..ஹி..ஹி... இந்த வரி சேர்க்கும் போது உங்களதான் நெனச்சேன்.. கரீக்க்ட்டா பிடிச்சுட்டீங்க :-)

  ReplyDelete
 23. @ஜபருல்லாஹ் அண்ணா
  நன்றி அண்ணா

  ReplyDelete
 24. @அனானி
  //Unga yarukkum pulla kutti padikka vaikkira velai illaya?//
  ஏன் அந்த வேலைக்கு நீங்க வரபோறீங்களா??? இப்போதைக்கு தேவையில்ல... தேவைப்பட்டா சொல்லி அனுப்புறேனுங்க

  ReplyDelete
 25. @பீனிக்ஸ் பறவை

  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  //மிரட்டல்னு தலைப்ப பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போனன்.. இன்ஷால்லாஹ் அறிமுக பதிவே சூப்பர் ...
  சகோதரிகளின் கூட்டு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
  இன்ஷால்லாஹ் முடிந்தால் என்னுடைய பங்களிப்பும் நிச்சயமாக வழங்குவேன் ...

  சிறகுகள் விரியட்டும் .. எட்டு திக்கும்//

  ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

  ReplyDelete
 26. @சிட்டுக்குருவி
  வாழ்த்துக்கு நன்றிங்க

  ReplyDelete
 27. @அவர்கள் உண்மைகள்
  வாழ்த்துக்களுக்கு நன்றிங்க

  //நீங்கள் இஸ்லாத்தை பற்றி இங்கு பேசும் போது அல்லது கருத்து தெரிவிக்கும் போது அதை ஒரு போதனையாக செய்யாதீர்கள் அல்லது மாற்று மதத்தவரின் மீது தீணிக்க முயற்சி செய்யாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு எளிதில் புரியும்படி விளக்குங்கள். அதாவது வாழ்ந்து காட்டுங்கள்.//

  திணிப்பும் வற்புறுத்தலும் எங்கள் நோக்கம் இல்ல.. போக போக புரிஞ்சுப்பீங்க. தொடந்து வாசிங்க

  ReplyDelete
 28. @தாமர
  //வாழ்த்துக்கள் அக்கா..... நீ கலக்குவே.....//

  தேங்க்ஸ் டா தம்பி

  ReplyDelete
 29. @ரெவெரி
  //மிரட்டிய அந்த பெண்மணி நீங்க தானா..அநியாயத்துக்கு பயந்துட்டேன்...-:)

  வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு...//

  ஹி..ஹி..ஹி...
  எங்கேடா ஆள காணோமேன்னு நெனச்சேன். உங்கள் வருகையும் வாழ்த்தும் ரொம்ப உற்சாகப்படுத்துது. நன்றி ரெவெரி

  ReplyDelete
 30. @அன்னு
  ..55 vilunthuduchu.... vaalthukkal :))//

  ஹி..ஹி..ஹி...
  வெளம்பர உதவி :-)

  இன்னும் செரமம் பாக்காம 45 ஓட்டையும் நெரப்பிட்டா ரெக்கார்ட்டாகிடும் அவ்வ்வ்

  ReplyDelete
 31. சலாம்! சிறந்த முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களின் எழுத்து நடையும் நன்றாக உள்ளது. தொடருங்கள்.

  ReplyDelete
 32. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் சகோ.!

  ReplyDelete
 33. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

  மாஷா அல்லாஹ் அருமையான முயற்சி சகோ.சகோதரிகளின் இந்த கூட்டு முயற்சிக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமின் வெற்றியை அளிப்பானாக இன்ஷா அல்லாஹ்.

  உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்,

  ReplyDelete
 34. அஸ்ஸலாமு அலைக்கும்
  இஸ்லாமிய மார்க்கம் ஆண்களுக்கானது பெண்கள் அங்கே சிறுமைப்பட்டுள்ளார்கள் என்பதே பிரதான விமர்சனம்.இதில் என்னதான் இஸ்லாமிய மார்க்கத்து ஆண்கள் விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் கேட்பதாக இல்லை.மார்க்கத்தில் கொடுக்கப்பட்ட பெண்களுக்கான கண்ணியம்,உரிமைகள்,சலுகைகளை சகோதரிகளே முன்வந்து சொல்வதினால் விமர்சக‌ர்களின் தவறான எண்ணங்கள் கலையப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.இதை கருத்தில் கொண்டே சகோதரிகள் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து தனி பிளாக் உருவாக்கியதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.உங்களுடைய முயற்சிக்கு அல்லாஹ் உதவுவானாக.

  ReplyDelete
 35. அட அல்லாஹ்..நா இதுக்கு பின்னூட்டமே போடலயா...

  ஸலாம் சகோ..
  மாஷா அல்லாஹ் உங்களது பதிவுகளைக் காண எதிர்பார்ப்புடன்..

  இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆரம்பியுங்கள்...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 36. அட இந்த ஐடியா நல்லாருக்கே... வாழ்த்துக்கள். எனக்கும் ஒரு டோக்கன்....இன்ஷா அல்லாஹ் மெயில் செய்கிறேன்.

  அவர்கள் உண்மைகள் சொல்வது போல் கண்ணியமான கருத்துக்களுக்கு (அது மாற்று கருத்தாக இருந்தாலும்...ஆனா அது அழகான முறையில் பகிரப்பட்டதாக இருக்கணும்) மட்டும் பதிலளித்தால் புதிய தளம் ஜோராக ஜொலிக்கும்...... ஆரம்பத்தில் அனானிகளாக வருபவர்கள் பின்னாளில் வருகையை நிறுத்திவிடலாம்... அல்லது நல்ல முறையில் கேட்க பழகிக்கொள்ளலாம்....

  ReplyDelete
 37. இறைவன் நம்முடைய முயற்சிகளுக்கு வெற்றியைத் த‌ருவானாக!

  ReplyDelete
 38. vazhthukkal amena enakku tamil typing theriyadhu so thanglish than unga blog nan thodarnthu vasikkiren rasikayum kuda thangal melum kirukka vazhthukkal!

  ReplyDelete
 39. ரொம்ப சந்தோஷம் புஷ்பா.. அடிக்கடி வாங்க. நிச்சயம் தொடர்ந்து கிறுக்குவேன் :-)

  உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புஷ்பா

  ReplyDelete
 40. ஹாய், உங்க பதிவில் கடைசி ரெண்டு வரிதான் படிக்க முடிஞ்சது, நீங்க சொன்ன மாதிரியே நெகடிவ் வோட்டு போடப் போனேன், "No such post" ன்னு சொல்லுது, கொஞ்சம் சரி பண்ணுங்க, ரெண்டு மைனஸ் ஒட்டு போடணும். அதுல ஒன்னு நல்ல ஒட்டு. ஹி....ஹி....ஹி....

  ReplyDelete
 41. எப்படியாவது கஷ்ட்டபட்டு பத்து நாள் பட்டினி கெடந்தாலும் பரவாயில்லைன்னு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போங்கண்ணே...

  ஹி..ஹி..ஹி...

  என்னது இந்திரா காந்தி செத்து போயிட்டாங்களா??!! - இந்த காமெடி எனக்கு நியாபகத்துக்கு வருதே ஏன் ROFL

  ReplyDelete
 42. \\என்னது இந்திரா காந்தி செத்து போயிட்டாங்களா??!!\\
  அது
  'செத்து போயிட்டாங்களா?'
  இல்லை,
  'சுட்டுக் கொன்னுட்டங்களா?'

  அதுசரி, இந்த பிளாக்கில் என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் நான் மைனஸ் ஒட்டு போட வேண்டும், ஓட்டுப் பட்டை இன்னும் சரியாகலை, கொஞ்சம் சரி பண்ணுங்க!! நீங்க தரையில் விழுந்து புரண்டு சிரிச்சிகிட்டு இருக்கிறதுக்கு நான் காரணமெல்லாம் சொல்ல முடியாது!!

  ReplyDelete
 43. வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் மோட்டார் பைக்குக்கு மேல கவர் போட்டு மூடி வைக்கலாம், அது ஒன்னும் சொல்லாது, ஏன்னா அது ஜடம். மேலும் தூசி படியாம இருக்கும். அனா, இதையே மனுஷாளுக்கும் செய்யலாமா? எந்த காரணத்துக்கு ஒரு பெண்ணை தலை முதல் கால் வரை துணி போட்டு மூடி உலவ விடுகிறீர்களோ, அதே காரணத்துக்கு ஏன் ஆணுக்கும் போட்டு மூடக் கூடாது? ஒரு பெண் தான் நினைத்தபடி உடை கூட உடுத்த முடியாதா? ஐந்து பெண்டாட்டிகளில் ஒருத்தியாக நீ வாழ வேண்டும் என்றாலும், வறுமை காரணமாக மறுப்பே பேசாமல், ஆடு மாடு போல வாழ வேண்டுமா? அவனுக்கு சலிப்பு தட்டியவுடன் மூன்று முறை தலாக் சொல்லி விரட்டி விட்டால் தெருவில் நிற்க வேண்டுமா? இதற்குப் பெயர் பெண் சுதந்திரமா? பெண்ணை அடிமைப் படுத்தி, அவளை ஒரு commodity ஆகப் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவதற்கு மதத்தைப் பயன் படுத்துவதா? இது அநியாயம், ஏற்பதற்க்கில்லை.

  ReplyDelete
 44. //ஓட்டுப் பட்டை இன்னும் சரியாகலை, கொஞ்சம் சரி பண்ணுங்க!//

  அதான்... அப்படியேதான்....இதே மாதிரி காலை மதியம் மாலை இரவுன்னு நாலுவேளைக்கும் செக் பண்ணிட்டு போங்க! ரொம்ப அலுப்பா இருந்தா திரட்டி ஓனருக்கு போன் போட்டு கம்ளைன் பண்ணுங்க!

  பட்

  KEEP ON TRYING .... சாதிச்சுட்டேன்னு சொல்லோணும்! அத என் காது குளிர கேக்கோணும்! :-)

  ReplyDelete
 45. // எந்த காரணத்துக்கு ஒரு பெண்ணை தலை முதல் கால் வரை துணி போட்டு மூடி உலவ விடுகிறீர்களோ,//

  ஆண்களால பெண்களுக்கு தொல்லை உண்டாகக்கூடாதுன்னு தான் இஸ்லாம் ஹிஜாப்பை (கவனிக்க- முகம் மூட சொல்லல! ஹிஜாப் என்றால் கண்ணியமான உடை... அவ்வளவே! ) போட சொல்லியிருக்கு

  //அதே காரணத்துக்கு ஏன் ஆணுக்கும் போட்டு மூடக் கூடாது?//
  ஆண்களால் தான் பெண்ணை பாலியல் ரீரியாதாக துன்புறுத்த முடியும். பட் பெண்கள் ஆண்ணை அவ்வாறு துன்புறுத்துவதில்லை பாருங்க!... அதுனால தான்! அப்பறம் உடல் அமைப்பில் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்பதால் ஆணுக்கும் போட்டு மூடல!

  // ஒரு பெண் தான் நினைத்தபடி உடை கூட உடுத்த முடியாதா?//

  ஏன் முடியாது?? போடலாமே???? தளர்வா இருக்கணும். கை முகம் தவிர எதுவும் தெரிய கூடாது... இதான் விதி! இது சுடிதார், சேலை என எதுவாகவும் இருக்கலாம்!

  ஓ ஒரே பின்னூட்டத்தில் இருவேறு கேள்விகளா? அதுக்கு முன்னாடி இஸ்லாம் என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் வெளியே போயி படிச்சுட்டு வாங்கோளேன்!

  ஏன் மறுப்பு சொல்ல முடியாது? பெண்களுக்கும் விவாகரத்து செய்யும் உரிமை இருக்குன்னு தெரியுமா???

  ஏன் நடுத்தெருல நிக்கணும்? அதற்கு தான் மஹர் தொகை கொடுக்கப்பட்டிருக்கே....! திருமணம் என்பது கடுமையான ஒப்பந்தம்... நம் சமூகத்தில் நடத்தப்படுவது போன்ற விளையாட்டு நிகழ்ச்சி இல்லைங்க.

  நீங்க நெனைக்கிற மாதிரி சந்தை பொருளோ ஜடப்பொருளோ இல்ல... சும்மாலாம் ஒருத்தன் 4 வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்க... ஏகப்பட்ட நிபந்தனை இருக்கு! அத கேக்குற நமக்கே நாக்கு தள்ளிடும்... நீங்க வேற! கொஞ்சம் நெட்ல சர்ச் பண்ணி பாருங்களேன்.. என்னன்ன நிபந்தனைன்னு !

  சில வசனங்கள் சுறுக்கமாக :-
  மனிதர்களீல் சிறந்தவர் மனைவியில் சிறந்தவராக இருப்பவரே!

  பெண்களை வெறுகாதீர்கள். நீங்கள் வெறுக்கும் விஷயத்தில் நன்மைகள் இருக்கலாம்.

  பெண்களுக்கு நன்மையே நாட வேண்டும்;

  அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை ஆண்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது...

  கணவனுக்கு மனைவி மேல் எந்தளவுக்கு உரிமை இருக்கோ அதே அளவு மனைவிக்கும் கணவன் மீது உள்ளது

  பெண்ணுக்கு கற்பு போல் ஆண்களுக்கும் கற்புண்டுன்னு சொல்லுது

  பெண்கள் பார்வை தாழ்த்த சொல்லும் இஸ்லாம் ஆண்களையும் பார்வை தாழ்த்த சொல்லுது

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)