ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அசைபோட்டு பார்க்கும் நினைத்தாலே இனிக்கும், அது ஒரு அழகிய நிலாக்காலம்  தருணங்களில்  முதலிடம் பள்ளிகூடத்திற்கு தான். ஏன்னா அங்கே தான் இளமையின் வருடங்களை கட(த்)ந்தியிருப்போம் இல்லையா.. பல விஷயங்கள் இன்றும் இனிக்கிறது. சொற்ப விஷயங்கள் ஆறாத வடுவாய் நிலைக்கிறது. அது ராக்கிங் செஞ்சு மாட்டுனதாகவும் இருக்கலாம். பெயில் ஆனதுனால அப்பா ஸ்கூல்க்கே வந்து எல்லோருக்கும் முன்னாடி அடிச்சு போட்டு நம்ம 'கெத்'த கெடுத்ததாகவும் இருக்கலாம். இந்த இரு தருணங்களை அசைபோடுவதில் என்றுமே ஒரு சுகம் தான். டைரிகளில் குறித்து வைக்காமலும் பல நினைவுகள் நெஞ்சில் தங்கும் மாயம் இறைவன் மட்டுமே அறிந்தது. பள்ளிகளை கடந்து போகும் போது உடன் வருபவிடமோ அல்லது குழந்தையிடமோ 'இது தான் நா படிச்ச ஸ்கூலாக்கும்' என சொல்வதில் தான் எத்தனை சந்தோஷங்கள்.......
(ம்ம்ம்........போதும் போதும்........மேட்டருக்கு வா..........)

இப்படியாக ஒரு மாலைபொழுதில் அசைபோட்ட போது தான் சரஸ்வதி டீச்சர பத்தி கொஞ்சமாவது சொல்லணும்னு தோணுச்சு. அப்படி என்ன தான் பண்ணாங்களாம்? எல்லாரை போலவும் ஒரு கல்லா இருந்த என்னை சிற்பமாக செதுக்குனாங்கன்னு டயலாக் விடுவ அதானே? ம்ஹூம்..........

என் வழில அவங்க என்னைக்குமே குறுக்க வந்ததில்ல. அதான் அவங்கள பத்தி சொல்ல ஆர்வம் பெருகியது. ஏன்னா நாங்களாம் நல்லா படிக்கிற புள்ளைங்களாம் (யாருகிட்ட மெஹந்தி போடுற? ஏற்கனவே இரண்டு கைலையும் போட்டிருக்கோம்னு நீங்க சொன்னாலும் பரவாயில்ல.....)

ஒரு நல்ல ஆசிரியரை எப்படி கண்டுபிடிக்கலாம்னு நீங்க நெனைக்கிறீங்க? அவங்க பேசும் பேச்சு வழக்கை வைத்தா? அவங்க க்ளாஸில் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சியடைவதை வைத்தா? இப்படியாக நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் நாம் பார்க்கும் பார்வையை மட்டுமே வைத்துக்கொண்டு தெரிந்துகொள்கிறோம். ஆனா இதையெல்லாம் தாண்டிய உள்ளார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய மனதை அறிவது அரிதான விஷயம். புதிரான நடவடிக்கைகளை புரிந்துக்கொள்ளவவே பல நாட்களை அவகாசம் கேட்கும். இந்தனை நாட்களின் அவகாசத்திற்கு பிறகு நான் புரிந்துகொண்டதை போல்.....

முதல் அடி.........

ஆறாம் வகுப்பில் ஒன்றாய் முதல் வரிசையில் அமர்ந்ததால் அறிமுகமான எங்கள் நட்பு 7ம் வகுப்பிலும் தொடந்தது முதல் மிட்-டெர்ம் டெஸ்ட் முடிவுகள் சரஸ்வதி டீச்சரின் கைகளில் இல்லாதவரை. என்ன மதிப்பெண்கள் என ஆவலாக எதிர்பார்த்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.........

ஆமினா.......நீ கடைசி பென்ச் மூலைக்கு போ. உன் பக்கத்துல நாக லெட்சுமிய உக்கார வை. கண்மணி உன் பக்கத்துல அந்த ராசம்மாவ உக்கார வை" என முதல்,இரண்டாம் வரிசையில் உள்ளவர்கள் அனைவரும் பின்னுக்கு தள்ளப்பட்டதுடன் நடுநடுவே போன வருடத்தில் பெயில் ஆகி எங்களுக்கு அறிமுகமில்லாதவர்களின் அருகிலும் , ஒரே வகுப்பிலிருந்தும் இதுவரை பழகாத மார்க் கம்மியாக வாங்குபவர்களின்  அருகிலும் உக்கார வைத்து நல்லா படிச்சவங்களோட மரியாதையைய கெடுத்துட்டாங்க......


"ஒரு மாசமா இந்த டீச்சர் நோட்டம் விட்டுட்டே இருந்து நம்மல பிரிச்சுடுச்சு பாத்தீயா" இதான் எங்க க்ரூப் அடிக்கடி புலம்பும் குற்றச்சாட்டு.

அடுத்த அடி.......

என்ன தவறு செய்தோம் என்பதனை அறியாமலேயே எங்களுடன் பாராபட்சமாக நடந்துக்கொள்ளும் முறை. என்னதான் நாங்கள் டீச்சரை குஷிபடுத்த/ஐஸ் வைக்க முயன்று படித்தாலும்.......அதிகமாக படித்தாலும்........இன்னும் இன்னும் ஆழமாக படித்தாலும்........... இன்னும் இன்னும் இன்னும் அதிக மார்க் முன்பை விட வாங்கிய போதும் அவ்வபோது ஒதுக்கப்பட்டவர்களாய் நாங்கள். (அப்படி என்ன தான் பா தப்பு பண்ண? )


நாக லெட்சுமி, ராசம்மாள், முத்துக்குமாரி போன்ற கிராமத்தார்/படிக்காதவர்கள்/முன்பு பெயிலானவர்கள் தான் ஆசிரியரை எப்பவும் சூழ்ந்திருப்பார்கள். சரஸ்வதி டீச்சர் வீட்டிலும் அதிகமாக இவர்களை பார்க்க முடியும். விடுமுறை தினங்களிலும் எப்போதும் டீச்சர் வீடு கலகலப்பாவே இருக்கும் மாணவிகளின் வருகையால்......

அடுத்த அடி......
முந்தைய  வருட கல்வியாண்டில் பெயிலான 3 பேரை லீடர், அசிஸ்ட்டன் லீடர், இன்னொரு அ.லீடர் ஆக நியமித்ததால் வருடா வருடம் முறையாக கிடைத்த மரியாதையான  எல்லா பதவியையும் விட்டுகொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் (ஆட்சி போய்டுச்சு :-(

இப்படியாக அந்த வருட பல இன்னல்களுக்கும்,கொடுமைகளுக்கும்.ஆறா துயரங்களுக்கும் உள்ளாக்கபட்ட போதும் (எம்மா........தாங்க முடியல..... என்னா பீலீங்கு என்னா பீலிங்கு) நல்ல மதிப்பெண்களை பெற்று அடுத்த வகுப்புக்கு முன்னேறினோம். மேலும் எங்கள் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற வில்லை என்றாலும் கூட ஆசிரியரால் அதிகமாக பாசம் கொடுத்து கண்காணித்த ஆசிரியரின் அபிமானிகள் குறிப்பிடும்படியான நல்ல மதிப்பெண்கள் பெற்று எங்கள் க்ரூப்பிலும் சேர்ந்து சாதனை படைத்தார்கள் (இத விட அந்த புள்ளைங்க மறுபடியும் குட்டிசுவரா போறதுக்கு வேற வழிவேணுமா?:-)

ஆக டீச்சரின் நோக்கம் எங்களை ஒதுக்குவது அல்ல........
ஒதுங்கிய மாணவிகளின் திறமையை வெளிக்கொணருவது

ஆசிரியர் கடைபிடித்த சில லாஜிக்குகள்
  • டீச்சர் அதிகமா பாசம் வைத்திருப்பதை உணர்ந்து இன்னும் பாசம் அதிகமாக்க முயன்று அவர்கள் படித்தது
  • படிச்சவங்க மட்டும் தான் லீடராக முடியுமா என்ற தாழ்வுமனப்பான்மை நீக்குவது
  • அத்துடன் சக மாணவிகள் தன்னை தலைவியாக நினைப்பதால் முன்மாதிரியாக நாம் திகழ வேண்டும் என நினைப்பது
  • நன்றாக படிக்க கூடியவர்களை தனிதனியாக பிரித்து உட்கார வைப்பதால் வெட்டி பேச்சுக்கள் :-) குறைந்து படிக்க அதிக நேரம் ஒதுக்குவது
  • நன்றாக படிப்பவர்களுடன் குறைவாக படிப்பவர்களை பழக விட்டால் அவர்களின் மனதில் ஒரு வித புரட்சி உணர்வு வந்து இவங்கள போல நாமலும் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாவது
  • அடிக்கடி டீச்சர் அவங்கள வீட்டுக்கு கூடிட்டு போவதால் அங்கே கூடுதலாக படிப்பதற்கான நேரம்  ஏற்படுத்தப்படுவது ( சீக்கிரமா வீட்டுக்கு போனா அம்மா வீட்டுவேலை செய்ய சொல்லுவாங்க. லீவ் நேரத்துல ஆடு மேய்க்க போக சொல்லுவாங்க. ஆக டீச்சர் இப்படி செஞ்சாங்க)
  • நன்கு படிக்கும் மாணவிகளையும் மொத்தமாக ஒதுக்கி விடாமல் அவர்களை அவ்வபோது போட்டிகளுக்கு பெயரை கொடுத்து அப்போட்டிக்கு வேண்டிய விஷயங்களை தானே முன்வந்து ஆலோசனை+உதவி செய்வது
  • "நீ நல்லா படிக்கிற புள்ளையாச்சே.... உன்னால முடியாததுன்னு ஒன்னா இருக்கு" என உசுப்பேத்தி விட்டு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்வது

இப்படியாக இரு பக்கமும் சம தராசில் வைத்து வழிநடத்துவதும், உளவியல் ரீதியாக கையாளுவதற்கும் ஒரு திறமை வேண்டும். பல வருடங்கள் கடந்தும், எத்தனையோ ஆசிரியர்களை பெற்றும் "உன் டீச்சர் பேரு என்ன?"என யாராவது வினவினால் முதலில் வாய்  உச்சரிப்பது சரஸ்வதி டீச்சர் என தன்னிச்சையாக அவரை நோக்கியே எண்ணங்கள் செல்வதற்கும்  கண்டிப்பாக ஒரு திறமை வேண்டும்.

சமபரப்பில் சாலை அமைப்பது பெரிதல்ல. மலை பகுதிகளில் பாதை ஏற்படுத்துவது தான் சவாலான விஷயம். அதில் தான் திறமையை நிரூபிக்க முடியும். சரியான திட்டமிடல் இல்லாத பட்சத்தில் அடிக்கடி மண்சரிவுண்டாகும்........


டிஸ்கி 1
ஆமினாவை ந....ல்....லா.......... படிச்சவங்க க்ரூப்ல சேர்த்து எழுதுனதுக்கு நானும் உங்களை போலவே ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளேன் :-) உண்மை எனக்கும் கூட பாவக்கா ரேஞ்சுக்கு கசக்குதுன்னா பாருங்களேன் ஹி...ஹி...ஹி...

டிஸ்கி 2
ஞாபகம் வரும் போது சொல்றேன் (அடிங்.......)

,

35 comments:

  1. நானும் ஒரு ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன்..

    ReplyDelete
  2. ஆஹா....சுட சுட வாசித்திருக்கிறேனோ....

    உண்மைதான் ஆமினா....
    எங்க ஸ்கூல்லயும்..அப்படி நடந்திச்சி..
    ஒட்டி இருக்கும் தோழியை பிரிவதும்...
    வருடாவருடம் கிடைக்கும் பதவிகள் பரிபோவதும் .கசப்பானதாக இருந்தது உண்மையிலும் உண்மைதான்...

    பிரதிபலன் நல்லதாகவே கிடைத்துவிட்டதில்தான் எங்களுக்கு கொஞ்சமேனும் திருப்தி....

    ReplyDelete
  3. நன்றி சகோ கருன்
    நன்றி சகோ நிகாஷா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க அன்றி சகோ

    ReplyDelete
  4. //இப்படியாக இரு பக்கமும் சம தராசில் வைத்து வழிநடத்துவதும், உளவியல் ரீதியாக கையாளுவதற்கும்ம்.//
    உண்மையில் இப்படிப்பட்ட ஆசிரியை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் .

    ReplyDelete
  5. எதோ நினைவுகள் மலருதே மனதிலே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே.....!!!!

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //
    ஆக டீச்சரின் நோக்கம் எங்களை ஒதுக்குவது அல்ல........
    ஒதுங்கிய மாணவிகளின் திறமையை வெளிக்கொணருவது//

    அட அழகாய் சொல்லி இருக்கீங்க ஆமினா.

    ReplyDelete
  8. எனக்கு கூட படிக்காத பிள்ளைகள் தான் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  9. ஸலாம் டு யூ சகோ.ஆமினா,
    ...ம்ம்ம்... பின்னூட்டம்...
    //ஞாபகம் வரும் போது சொல்றேன்//

    ReplyDelete
  10. அனைவரும் குறைந்தது ஐம்பது ஆசிரியர்களையாவது பார்த்து விடுகிறோம் பள்ளி பருவத்தில், ஆனால் ஆசிரியர் என்று கூறியதும் பலர் நம் நினைவுகளில் வர அடம் பிடிக்கிறார்கள்... நினைவுக்கு வருபவர்கள் இரண்டே பேர், ஒன்று நம்மை வாழ வைத்தவர்கள் மற்றொருவர் நம் வாழ்க்கையை அழித்தவர்கள்... மொத்தத்தில் நம் வாழ்க்கையை திசை திருப்பியவர்களை ஏனோ மனம் மறக்க மறுக்கிறது

    ReplyDelete
  11. எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கலியே?

    ReplyDelete
  12. நல்ல பதிவு. எனக்கு சில ஆசியர்களை நினைச்சா ஆசையாக இருக்கும். சிலரை நினைச்சா பயம் தான் மிஞ்சும்.

    ReplyDelete
  13. சரஸ்வதி ரீச்சரின் அணுகுமுறை சிறந்த முறை.
    அரவணைப்பும் உற்சாகமும்தான் முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுத்தியிருக்கின்றார்.

    ReplyDelete
  14. நடுநடுவே போன வருடத்தில் பெயில் ஆகி எங்களுக்கு அறிமுகமில்லாதவர்களின் அருகிலும் , ஒரே வகுப்பிலிருந்தும் இதுவரை பழகாத மார்க் கம்மியாக வாங்குபவர்களின் அருகிலும் உக்கார வைத்து நல்லா படிச்சவங்களோட மரியாதையைய கெடுத்துட்டாங்க.....///

    இதை எந்த நிலையில் எழுதினிங்கன்னு தெரியாது ஆனா மிக நெருடலான விசயமா இருக்கு எனக்கு..

    அபப்டி நல்ல படிக்கிறவங்களுக்கு தனி மரியாதை இருக்கு சத்தியமா யோசித்து பார்க்க கூட முடியலை..

    அதோட ஒரே வகுப்புல இருந்துகிட்டு அவங்க நல்ல படிக்கலை அதான் அவங்க கூட பழ்கலை அப்படிங்கிறது..சரி விடுங்க

    எனக்கு இது பிடிக்கலை

    ReplyDelete
  15. மலரும் நினைவுகள் எனக்கும் ஏற்படுத்தி விட்டீர்கள்...

    அடித்த ஆசிரியர்...அடிபட்ட ஆசிரியர்...பாடம் சொன்னவர்...பாடம் கற்றுக்கொண்டவர்...வழிகாட்டியவர்...குழி தோண்டியவர்...எத்தனையோ வகை...

    ஆனாலும் இன்னும் மனதில் இருப்பவர்...'நல்ல அறிவு...நிறைய கண்டிப்பு...கொஞ்சம் விளையாட்டு..கொஞ்சம் சிரிப்பு...நிறைய வழிக்காட்டுதல்...கொஞ்சம் நட்பு...கூடவே மரியாதை'...இவை உள்ளவர்களே...

    ReplyDelete
  16. இப்படியொரு டீச்சர் கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும் ஆமினா!!

    ReplyDelete
  17. @கணேஷ்

    உயிருக்குயிராய் பழகிய தோழிகள் பலரும் இன்று முகம் கொடுத்து கஊட பேசுவதில்லை. ஏன்னா அவங்கல்லாம் இன்ஜினியரிங் மாணவிகள் தன சக தோழியிடம் என்னை அறிமுகப்படித்தவே யோசிப்பாங்க. எதிரில் வபார்த்தால் ஒரு ஹாய் சொலவதோடு சரி. இதுக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கிறிங்க?


    பொதுவாவே கவனிச்சுருந்தா உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். எப்பவும் அதிகம் படித்தவர்கள் கடைசி பெஞ்ச் மாணவர்களுடன் பழகுவது கம்மி. கசப்பான விஷயமாகினும் அது தான் உண்மை. அதை மனதில் கொண்டு தான் டீச்சரும் முடிவெடுத்து தனித்தனியாக பிரித்து அமர வைத்தது. இது தீண்டாமை இல்லை சகோ.., ஒரு வித மென்டாலிட்டி தான்.

    இவ்வளவு ஏன்.........
    மூத்த பதிவர்கள் புதிய பதிவர் உடன் மேலோட்டமாய் பழகுவது எதுனால?

    மரியாதைய கெடுத்துட்டாங்கன்னு சொன்னது இக்காலத்திற்கேர்ப ஒரு நகைச்சுவைக்காக. ஏழாம் வகுப்பு மாணவிக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை என்பதை நீங்களும் அறிவீங்க.

    இருப்பினும் நெரூதலை ஏற்படுத்தியமைக்கு சாரி சகோ. அடுத்த முறை எழுதும் போது கவனத்துடன் எழுத்துக்களை கையாளுகிறேன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  18. எத்தனை டீச்சர்கள் கிட்ட படிச்சாலும் இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர்தான் ஞாபகத்துல நிக்கிறாங்க..

    ReplyDelete
  19. சிறந்த ஆசிரியர்கள்.. நாம் வாழ்க்கையில் பெறும் சிறந்த பரிசு,,

    இன்று என் வலையிலும் ஒரு ஆசிரியர் பற்றித்தான்..

    ReplyDelete
  20. நல்ல பதிவு

    எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கலயே

    ReplyDelete
  21. @அமுதா
    உண்மை தான்.
    வினையம் இல்லாமல் பழக கூடிய பண்பு, கள்ளங்கபடமற்ற அன்பு அவர்களிடம் இருந்து பார்க்க முடியும்.

    ReplyDelete
  22. @சகோ ஆஷிக்
    வ அலைக்கும் சலாம் வரஹ்

    ReplyDelete
  23. @சூர்யஜீவா
    //அனைவரும் குறைந்தது ஐம்பது ஆசிரியர்களையாவது பார்த்து விடுகிறோம் பள்ளி பருவத்தில், ஆனால் ஆசிரியர் என்று கூறியதும் பலர் நம் நினைவுகளில் வர அடம் பிடிக்கிறார்கள்... நினைவுக்கு வருபவர்கள் இரண்டே பேர், ஒன்று நம்மை வாழ வைத்தவர்கள் மற்றொருவர் நம் வாழ்க்கையை அழித்தவர்கள்... மொத்தத்தில் நம் வாழ்க்கையை திசை திருப்பியவர்களை ஏனோ மனம் மறக்க மறுக்கிறது//
    இத தான் சகோ நானும் சொல்ல வந்தேன்.... சரியா சொல்ல முடியாம போய்டுச்சு. எனக்கும் என்னை ஆதரித்த ஆசிரியர்கள் நினைக்கும் போது சந்தோஷமா இருக்கும். எங்கேயாவது பார்த்தால் வண்டியிலிருந்து இறங்கியேனும் நலம் விஷாரிப்பேன் அவர்களுக்கு என்னை தெரியாத போதும். அதே போல் ஒதுக்கிய/ வாழக்கையை திசை திருப்பிய ஆசிரியர்களை எங்கேனும் பார்த்தால் கோபத்தில் கண்டும் காணாதது போல் வந்துவிடுவேன். கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  24. @மாதவி
    //சரஸ்வதி ரீச்சரின் அணுகுமுறை சிறந்த முறை.
    அரவணைப்பும் உற்சாகமும்தான் முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுத்தியிருக்கின்றார்.//
    உண்மை தான் மாதவி. கண்டிப்பாக என்றைக்கும் கண்டிப்பால் ஒரு மாணவனை நல்வழிபடுத்த முடியாது. அன்பு வார்த்தைகளுக்கு மட்டுமே உள்ளத்தில் ஆணி பதிக்க கூடிய சக்தி உண்டு என்பதை நானும் ஒத்துக்குறேன். வருகைக்கு நன்றி மாதவி

    ReplyDelete
  25. @ரெவரி
    ஆனாலும் இன்னும் மனதில் இருப்பவர்...'நல்ல அறிவு...நிறைய கண்டிப்பு...கொஞ்சம் விளையாட்டு..கொஞ்சம் சிரிப்பு...நிறைய வழிக்காட்டுதல்...கொஞ்சம் நட்பு...கூடவே மரியாதை'...இவை உள்ளவர்களே...//

    அப்படி பட்டவர்களால் மட்டுமே கடைசி வரையில் ஒரு மாணவனின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடிக்க முடியும் இல்லையா?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  26. நன்றி ஏஞ்சலின்
    நன்றி சகோ மனோ
    நன்றி ரத்னவேல் ஐய்யா
    நன்றி சாதிகா அக்கா
    நன்றி அமுதா
    நன்றி சகோ ஆஷிக்
    நன்றி சகோ சூர்யஜீவா
    நன்றி சகோ சண்முகவேல்
    நன்றி சகோ மாதவி
    நன்றி சகோ கனேஷ்
    நன்றி சகோ ரெவெரி
    நன்றி மேனகா
    நன்றி அமைதி சாரல்
    நன்றி சகோ ரியாஸ்
    நன்றி சகோ வைரை சதீஷ்

    உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோஸ்

    ReplyDelete
  27. இது தான் நா படிச்ச ஸ்கூலாக்கும்' என சொல்வதில் தான் எத்தனை சந்தோஷங்கள்.......


    ஆமி நான் எவ்வளவு பெரிய அனுபவங்கள் மிஸ் பண்ணி இருக்கேன் தெரியுமா. ஏன்னா ஸ்கூல் பக்கமே போனதில்லியே.

    ReplyDelete
  28. இப்படிப்பட்ட ஆசிரியை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. இன்னைக்கு நீங்க இம்புட்டு பெருமையா சொல்றதால நம்புரோமுங்க!

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!

    உண்மைதான் சகோ. பள்ளிப்பருவம் என்பது அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத இனிய அனுபவம். கள்ளத்தனங்கள் இல்லாத அழகிய வாழ்வு (ஆனால் இன்று அப்படி இல்லை).

    //ஒரே வகுப்பிலிருந்தும் இதுவரை பழகாத மார்க் கம்மியாக வாங்குபவர்களின் அருகிலும் உக்கார வைத்து நல்லா படிச்சவங்களோட மரியாதையைய கெடுத்துட்டாங்க......//

    இப்படி எழுதி என்னை போன்ற மார்க் கம்மியா வாங்குபவர்களின் மனதை புண்படுத்தியமைக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். மார்க் அதிகம் வாங்குபவர்களிடம் எவ்வித பாரபட்சமின்றி பழகும் எங்களின் நல்ல மனது உங்களுக்கு ஏன் வரவில்லை சகோ.?

    //ஏழாம் வகுப்பு மாணவிக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை என்பதை நீங்களும் அறிவீங்க. இருப்பினும் நெரூதலை ஏற்படுத்தியமைக்கு சாரி சகோ. அடுத்த முறை எழுதும் போது கவனத்துடன் எழுத்துக்களை கையாளுகிறேன்
    //

    சரி, மன்னிச்சிட்டேன் சகோ! :) :) :)

    ReplyDelete
  31. எங்க ஸ்கூல்லயும் சில டீச்சர்கள், ஸ்டடி டைம்ல, நல்லா படிக்கிற புள்ளை + படிக்கச் சிரமப்படுற புள்ளைன்னு குரூப் சேத்து வச்சு படிக்கச் சொல்லுவாங்க. ஆச்சர்யகரமா, சில சமயம், மார்க் குறைவா எடுக்கற பிள்ளைங்க, நல்லாப் படிக்கிற பிள்ளைங்களவிட, சில பாடப்பகுதிகளை தெளிவா விளக்கிச் சொல்லுவதைப் பாத்து ஆச்சர்யப்பட்டுமிருக்கேன்.

    //இன்ஜினியரிங் மாணவிகள் தன சக தோழியிடம் என்னை அறிமுகப்படித்தவே//
    இதற்கு படிப்பு காரணம்னு என்னால நினைக்க முடியலை. அடிப்படையிலேயே நமக்குச் சிலரைப் பிடிக்கும்/பிடிக்காமப் போயிருக்கும். அதனால இருக்கலாமாயிருக்கும்.

    ReplyDelete
  32. @லெட்சுமி மாமி

    நம்பவே முடியல

    ReplyDelete
  33. @ சகோ பாசித்

    வ அலைக்கும் சலாம் வரஹ்

    //சரி, மன்னிச்சிட்டேன் சகோ! :) :) :)//
    எங்கிட்டேயேவா???

    ReplyDelete
  34. @ஹூசைனம்மா

    நா நிறைய பாத்துருக்கேன் ஹுசைனம்மா. பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஒரு தோழி இப்போது மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். ஊருக்கு வருவது அரிது. அதனால் தொடர்பில்லாமல் போனது. சமீபத்தில் கடைவீதியில் பார்க்கும் போது ஆசையாய் அருகில் வந்தேன். ஆனா காருக்குள் இருந்தே ஹாய் சொல்லி அவள் உறவினருடன் பேச தொடங்கிவிட்டாள். இன்னும் அதிகம் அதிகம்.........

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  35. நன்றி மாமி
    நன்றி சகோ சே.குமார்
    நன்றி சகோ விக்கி
    நன்றி சகோ பாசித்
    நன்றி ஹூசைனம்மா

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)