அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள். எல்லார் வாழ்விலும் இன்பம் கிடைத்திடவும், அதுவே நிலைபெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக....
எதுவும் சொல்லாம போனா எப்படி? அதுனால சும்மா எதாவது சில விஷயங்கள் சொல்லிட்டு போயிடுறேன்.
விஷயம் நம்பர் 1-
இந்த வருஷம் நிறைய மக்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணித்தார்கள். அவர்களின் கடமையை நல்லமுறையில் நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிய வேண்டுவோம்
விஷயம் நம்பர் 2-
நிறைய விஷயங்கள் ஏற்கனவே நிறையா பேர் சொல்லிட்டாங்க. முக்கியமா நான் தொடர்ந்து படிக்கும் பயணிக்கும் பாதை சென்று பெருநாள் தொழுகையின் சட்டங்கள் முக்கியத்துவம் மற்றும் குர்பானியின் சட்டதிட்டங்களை படித்து பயன்பெறவும்.
விஷயம் நம்பர் 3-
தயவு செய்து யாரும் பக்ரீத் என உச்சரிக்க வேண்டாம் அப்படின்னு என் நண்பர் எனக்கு சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன். தியாக திருநாள் அல்லது ஈத்துல் அல்ஹா என்பதே சரியானது.
விஷயம் நம்பர் 4-
அதிகாலை குளியல்,புத்தாடை, நறுமணம், தொழுகை, விருந்து என நல்லபடியாக நாட்கள் கழியவும் உறவினர்களோடு சேர்த்து கொண்டாடவும் இந்நன்னாள் அமைய வாழ்த்துகிறேன்.
இந்த வருஷம் நிறைய மக்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணித்தார்கள். அவர்களின் கடமையை நல்லமுறையில் நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிய வேண்டுவோம்
விஷயம் நம்பர் 2-
நிறைய விஷயங்கள் ஏற்கனவே நிறையா பேர் சொல்லிட்டாங்க. முக்கியமா நான் தொடர்ந்து படிக்கும் பயணிக்கும் பாதை சென்று பெருநாள் தொழுகையின் சட்டங்கள் முக்கியத்துவம் மற்றும் குர்பானியின் சட்டதிட்டங்களை படித்து பயன்பெறவும்.
விஷயம் நம்பர் 3-
தயவு செய்து யாரும் பக்ரீத் என உச்சரிக்க வேண்டாம் அப்படின்னு என் நண்பர் எனக்கு சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன். தியாக திருநாள் அல்லது ஈத்துல் அல்ஹா என்பதே சரியானது.
விஷயம் நம்பர் 4-
அதிகாலை குளியல்,புத்தாடை, நறுமணம், தொழுகை, விருந்து என நல்லபடியாக நாட்கள் கழியவும் உறவினர்களோடு சேர்த்து கொண்டாடவும் இந்நன்னாள் அமைய வாழ்த்துகிறேன்.
ஈத்துல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்!!!!
Tweet | ||||
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் ஆமினா அக்காள்.
ReplyDeletefபால்லோவர்ஸ் வைப்பதற்கு ஸ்டார் ஜான் அண்ணன் அபு ஆயிஷா அக்காள் தளத்தில் சில விளக்கங்களை கொடுத்திருந்தார். அதனைப் பார்த்து நானுன் முயற்சி செய்தேன் வர வில்லை அதான் விட்டு விட்டேன்.
யோசனைகளை சொன்னால் நல்லா இருக்கும்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயூப்
ReplyDelete//அதனைப் பார்த்து நானுன் முயற்சி செய்தேன் வர வில்லை அதான் விட்டு விட்டேன்.//
நானும் முதல் முறை ப்ளாக் ஆரம்பிக்கும் போது பாலோவர்ஸ் கெட்ஜெட் வரவே இல்ல. எவ்வளவோ முயற்சித்தேன். அப்பறம் தான் ஜெய்லானி பார்த்துட்டு பாலோவர்ஸ் வைக்கலன்னா ப்ளாக் வச்சுருக்குறது வேஸ்ட்டுன்னு புதுசு ஒன்னு ஓபன் பண்ணி தந்தார். ஒரு வேளை அதே பிரச்சனையாக கூட இருக்கலாம். எனக்கு இதுல அவ்வளவா அனுபவம் இல்ல. ஆனாலும் ப்ளாக்கர் டாஸ்போர்டில் இருக்கும் ஆட் என்ற ஆப்ஷன் மூலம் உங்க ப்லாக்கை பின் தொடர்கிறேன். சிலருக்கு இது தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் சிரமப்படுவார்கள் இல்லையா?!
எதற்கும் நன்கு அனுபவம் பெற்றவர்களிடம் விஷாரிக்கவும். இல்லைன்னா புது ப்ளாக் தான் ஆரம்பிக்கணும் ஐயூப்.
இதையும் ஒரு முறை செய்து பாருங்க. இது தான் நாம்ம ஏற்கனவே செஞ்சுட்டோம்,மறுபடியும் சொல்றான்னு திட்டாதீங்க. ஆனாலும் தெரியாத மற்றவர்களுக்கும் பயன்படும்.
ப்ளாக்கர் டாஸ்போர்ட் =>டிசைன் => Page Elements
இப்படி வந்தா Add a Gadjet அப்படின்னு இருக்கும். அதுல ஒன்னை க்ளிக் பண்ணினால் புது பேஜ் ஓபன் ஆகும். (Basics என்ற பக்கத்தில்)
Followers என நான்காவதாக அமைந்த ஆப்ஷனுக்கு வலப்புறத்தில் உள்ள + குறியை க்ளிக் பண்ணினா வந்துடும்.
அப்பறம் ஆமினா என சொன்னா மட்டும் போதுமே. அக்கா வேண்டாம் :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteசகோதரி ஆமினா அவர்களுக்கும்
மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும்
என்னுடைய இனிய தியாக திருநாள்
வாழ்த்துக்கள்
வ அலைக்கும் சலாம் வரஹ்...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html
உலகெங்கும் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
ReplyDeleteசகோதரி,உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி இர்ஷாத்!
ReplyDeleteவலைச்சரத்தில் குட்டி சுவர்க்கம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த தியாக திருநாள் வாழ்த்துக்கள்
அப்துல் பாஸித்
ReplyDeleteஉங்களுக்கு என் மனம்கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
சாதிகா அக்கா
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி!
உங்களுக்கும் என் மனம் நிறைந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஓ அப்படி சொல்லக்கூடாதா இன்று தெரிந்து கொண்டேன்..
ReplyDeleteஉங்களுக்கு திருநாள் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் மற்ற இஸ்லாமிய தோழர் தோழிகளுக்கும் தியாக திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன் > ஜெய்லானி <
அன்புத் தோழி ஆமினா! உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள். பெருநாள் தொழுகை முடித்து இப்போதான் வந்ததால், சாப்பாட்டையும் முடித்துவிட்டு எல்லோருக்கும் வாழ்த்து சொல்கிறேன்:)
ReplyDeleteதங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சேர்த்து தியாகத்திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
ஆமினா..உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).. ஆமீனா அக்கா., இன்றுதான் உங்கள் தளம் கண்டுகொண்டேன். நல்ல நல்ல பகிர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மேலும் வலையுலகில் பிரகாசிக்க என்னுடைய வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.
முத்து லெட்சுமி
ReplyDelete//ஓ அப்படி சொல்லக்கூடாதா இன்று தெரிந்து கொண்டேன்..//
ம். ஆமாம்... :)
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி!
மீரா
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி. விஜயவாடா எப்படி இருக்கு? நான் கேட்டேன்னு சொல்லுங்க. ஜனவரி அங்கே தான் இருப்பேன். முடிஞ்சா மீட் பண்ணலாம் :)
ஜெய்!
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெய்! உங்களுக்கும் என் மனமார்ந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.லேட்டா சொல்றேனோ ? :)
நீங்க நேத்து நல்லா தூங்கிட்டீங்க. அதான் விஸ் பண்ண முடியல (நான் சொன்னதே எனக்கேவா?)
அஸ்மா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்னைக்கு தான் எங்களுக்கு பெருநாள். உங்க அடை தான் செய்தேன். முதல் முறையிலேயே சூப்பரா வந்துடுச்சு (பயந்துட்டே,நடுங்கிட்டே செய்தேன் தெரியுமா? :)
இப்ப தான் சமைச்சு முடிச்சுட்டு சாப்பிடாம கூட உங்களுக்கு பதில் போடுறேன்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அஸ்மா!
ஹைஸ் அண்ணா!
ReplyDeleteஎப்படி இருக்கீங்க? வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி அண்ணா...
ஆனந்தி
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல. தெரியாம முதல் முறை ஒரு பதிவு போட்டீங்க போல (தெரியாம தானே). :)
மின்மினி!
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
மின்மினி நேத்தே உங்க ப்ளாக்கை பார்த்தேன் வலைச்சரத்தின் மூலம். நல்லா எழுதுறீங்க. உங்க வாயால என்னை பாராட்டி அதை கேட்க ரொம்ப சந்தோஷம். தரையில காலே இல்லைன்னா பாத்துக்கோங்களேன்.....
வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி மின்மினி!
உங்களுக்கும் என் மனமார்ந்த ஈத் உல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்
அதுசரி ஆமினா அக்கான்னுலாம் சொன்னதுனால எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது. அடுத்த முறை பேர சொல்லி கூப்பிடணும் சொல்லிட்டேன். இல்லைன்னா மறுபடியும் அழுகுவேன் (எப்படிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு )
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...! பெருநாள் உங்களுக்கு இன்னைக்குதானா? enjoy..!
ReplyDeleteஅது என்ன ஆமினா... 'உங்க அடை செய்தேன்'ன்னு சொல்றீங்க? நீங்க செஞ்சது உங்க அடைதாம்ப்பா.. :))
//முதல் முறையிலேயே சூப்பரா வந்துடுச்சு//
மாஷா அல்லாஹ்! நீங்க (அடையில்) கேட்டிருந்த சந்தேகங்களுக்கு பதில் கொடுத்திருந்தேனே,பார்த்தீங்கதானே?
//பயந்துட்டே,நடுங்கிட்டே செய்தேன் தெரியுமா? :)//
இதுக்கெல்லாம் பயந்து நடுங்கலாமா? சரியா வராட்டா என்ன.. அப்படியே எனக்கு பார்சல் பண்ணி, எனக்கு பனிஷ்மெண்ட் கொடுத்துட வேண்டியதுதானே? :))
முக்கியமா என் ப்ளாக்கில் உள்ளவைப் பற்றி சொல்லி, எல்லா மக்களையும் பயன்பெற தூண்டிய உங்களுக்கு (இன்ஷா அல்லாஹ்) இறைவன் நற்கூலி வழங்குவான்! இப்போதான் அதைப் பார்க்கிறேன், நன்றி தோழி.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஅஸ்மா
ஆமாம் ஆமா அது நான் செஞ்சதுனால என் அடை தான் :)
//சரியா வராட்டா என்ன.. அப்படியே எனக்கு பார்சல் பண்ணி, எனக்கு பனிஷ்மெண்ட் கொடுத்துட வேண்டியதுதானே?//
தூக்கத்துல கூட அந்த தப்பு பண்ண மாட்டேன் அஸ்மா. ஏன்னா அடை பயங்கர டேஸ்ட். நெய்,சின்ன வெங்காயம் வாசனையே சாப்பிட வச்சுச்சு
//இறைவன் நற்கூலி வழங்குவான்!// ஆமீன்
அஸ்மா அந்தந்த நேரத்துக்கு தகுந்தபடி பதிவு போடுறது நீங்க தான். அதான் உங்க ப்ளாக்கும் உங்க எழுத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு பிறகு தான் உங்கள தெரியும்னுலாம் இல்ல. அறுசுவைல அசைவம் சாப்பிடலாமா என்ற விவாதத்தில் நீங்க கொடுத்த பதிலை பார்த்ததில் இருந்து உங்க எழுத்துக்குல்லாம் நான் அடிமையாகிட்டேன். என் பிரண்ட்ஸ்க்கு கூட அந்த லிங்க் கொடுத்து படிக்க வச்சேன். எல்லாருக்கும் நல்ல தெளிவை கொடுக்கும் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். அதற்காகவே அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ளோர்களுக்கும் அருளும்,நல்கூலியும் வழங்கி நீண்ட ஆயுளும் கொடுப்பான்.
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி குரு!
ReplyDeleteவேண்டாம் வரதட்சணை
ReplyDeleteபெருநாள் சிறப்பாக கொண்டாடடிருப்பீர்கள்,நான் தான் லேட்டாக வந்திருக்கேன்.வாழ்த்துக்கள் பல.
ReplyDelete@ வேண்டாம் வரதட்சணை
ReplyDeleteநல்ல சிந்தனை!
மொதல்ல “பணம் வேண்டாம்னு சொன்னா மாப்ளைக்கு எதாவது கொறை இருக்கும்”அப்படின்னு பொண்ணு வீட்டுக்காரங்களை தூண்டிவிடும் சைத்தான்களின் வாயில் ஆசிட் ஊத்தணும், இல்ல சைனைட் கொடுத்துடணும். அப்ப தான் இதுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்க முடியும்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
ஆசியா லேட்டா வந்தா என்ன? நாங்க 3 நாளா கொண்டாடிட்டு தான் இருக்கோம். லக்னோவில் ரொம்ப விஷேஷமா கொண்டாடுராங்க. இன்னும் குர்பானி கறி வந்துட்டே இருக்கு :)
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி ஆசியா
எனது கருத்துக்கு எதிராக பின்னூட்டம் போட்டால் நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏன் DELETE செஞ்சிங்க?. அந்த கருத்து மற்றவர்கள் படிக்க வேண்டிய ஒன்று என்று நானே மறுப்புதேரிவிக்காமல் வைத்திருந்தேன்
ReplyDelete@தொப்பி தொப்பி
ReplyDeleteஅதில் நீங்க சொன்ன கருத்துக்கள் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா நீங்க சொன்ன வழிமட்டுமே தீர்வு இல்லை என்ற கருத்தை முன்னிறுத்தி தான் கருத்துச்சொன்னேன். ஆனால் அக்கருத்து உங்களை எதிர்ப்பதாக(கண்டிப்பா பாக்குரவங்களுக்கு அப்படி தான் தெரியும்) அமைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் தான் நானே அழித்தேன். எதிர்கருத்துக்களூக்கு பயப்படாத உள்ளத்திற்கே பாராட்ட வேண்டும்.
மிக்க நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு ஆமீனா..
இன்னும் நிரையா வேனும் தோழி
ReplyDeleteபதிவுகள்
@சேக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்....
வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
உங்களுக்கும் என் தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்!
@பாஸித்!
ReplyDeleteமிக்க நன்றி..உங்க ஆதரவு இருந்தா கண்டிப்பா நிறையா எழுதுவேன்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteபயணிக்கும் பாதை வழியாக பயணப்பட்டு இங்கு வந்தேன்.சகோதரி ஈதுல் அல்ஹா குறித்த நல்ல விசயங்களை தந்திருக்கிறீர்கள் கைர்., //அனைத்து தோழ தோழியர்களுக்கும் என் மனமார்ந்த இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள் // இங்கு தோழர் தோழியர்களுக்கு பதிலாக சகோதர, சகோதரி என்று பயன்படுத்தியிருந்தால் வார்த்தையில் மேலும் வழு கூடியிருக்கும் என்பது எனது எண்ணம். நம்மை கடந்து சென்ற தியாக திருநாளை நல்ல முறையில் கழித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் அல்லாஹ் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும் நல்லருள் புரிவனாக
//G u l a m said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்//
வ அலைக்கும் சலாம் வரஹ்....
நீங்க சொன்ன பிறகு தான் கவனித்தேன். மன்னிக்கவும். அடுத்த முறை சரியாக பார்த்துக்கொள்கிறேன் :)
மிக்க நன்றி!
நல்லபடியாக நாட்கள் கடந்தது. இவ்வருடம் சிறப்பாக அமைந்தமைக்கு அல்லாஹ்விற்கு தான் நன்றி சொல்லவேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி அண்ணா!
ஜஸாகல்லாஹ் கைர்.,
ReplyDelete//மன்னிக்கவும். அடுத்த முறை சரியாக பார்த்துக்கொள்கிறேன் //
ஒரு சின்ன நினையுட்டலே ., மன்னிப்பெல்லாம் தேவையில்லை சகோதரி..
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்!
நன்றி குலாம் அண்ணா!!
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDelete