மர்மக் கோட்டை
பாகம்-3
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். ரெம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எப்பவுமே ஒன்னாவே சுத்துவாங்க, காலார நடந்து ஊரைக்கடந்து ஊருக்கு வெளியே அந்த NH சாலை யின் பாலத்தில் ஓரத்தில் அமர்ந்து ரெம்ப நேரமா அரட்டை அடிச்சுட்டு இருட்டியவுடன் வீடுதிரும்பவுது பொழுதுபோக்காக வச்சுருந்தாங்க.ஒருவன் சைலன் மற்றவன் தருனா.சைலன் க்கு மும்பையிலிருந்து அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் வந்தது, தருனா சைலனை ரயிவேஸ்டேஷன் வரை போய் Send-Off பண்ணிட்டு வந்தான். இதெல்லாம் நடந்து ஒர் வாரம் கழிச்சு...நள்ளிரவு 1 மணிக்கு சொந்த ஊரில் உள்ள ரயில்வேஸ்டேஷனில் மீண்டும் வந்து இறங்கினான் சைலன். போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதுனால வீட்டுக்கு நடந்து வருவதை தவிர வேறு வழியில்லை. வரும் வழியில் மரங்களும் செடிகளும் இருட்டுக்குள் ஒழிந்து ஊதக்காத்தை ஊதிக் கொண்டிருந்தது. ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. கும்மிருட்டு வேற, பீதிய
கிளப்புறமாதிரியான சூழலும் நேரமும் சேர்ந்து கொண்டது அந்த பகுதியில்.
கொஞ்ச தூரத்தில் லேசான நிலா வெளிச்சத்தில் இவனும்  தருனாவும் அரட்டை அடித்த அந்த பாலம் தெரிந்தது. அதில் யாரோ அமர்ந்திருப்பது போன்றும் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தால் அட தருனா வேதான். இந்நேரத்தில் இவன் இங்கே இருப்பது அவன் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.  “ஏன்டா இந்நேரத்தில் இங்கே இருக்க?”, “இல்லேடா மனசு சரி இல்ல, நீ ஏன்டா திரும்பி வந்துட்ட?”, “ இல்லேடா மும்பையில் ஒரே கலவரம் எல்லாரும்
 ஊருக்கு கிளம்பிட்டாங்க அதான் யாருக்குமே தகவல்கூட சொல்லமுடியாம திடீர்னு கிளம்ப வேண்டியதாயிருச்சு”. சரி வாடா வீட்டுக்கு போகலாம்னு தருனாவை கிளப்பினான். தருனா வீடு கடந்துதான் சைலன் வீடு, சோ தருனாவின் வீட்டு பக்கம் வந்ததும்  சரிடா நீ போனு சைலன் சொன்னபோது இல்லேடா உன் வீட்டு வரை வந்துட்டே போறேனு கூடவே சென்றான். சைலன் வீட்டைஅடைந்ததும் அம்மாவை கூப்பிட்டு கதவை திறந்தான் . சைலன், தருனாவை வலுக்கட்டாயமா கூப்பிட்டான், அவன் வலுக்கட்டாயமா மறுத்ததால் சரி பரவாயில்ல போடானு அவனை அனுப்பிவைச்சான். மகனின் திடீர் விஜயம் கண்ட அம்மா ஆச்சரயபட்டவாறு என்னடா இப்படி திடீர்னு?? உள்ளே வாடானு கூப்பிட்டாங்க. அம்மா கேட்டதை கண்டுக்காம என்னமா ஆச்சு தருனாவுக்கு, இந்நேரத்தில அந்த பாலத்துல போய் பயமே இல்லாம உக்காந்திருக்கான்? அவன் வீட்ல எதாவது பிரச்சனையாமானு கேட்டான். என்னடா சொல்றனு அம்மா அதிர்ச்சி ஆயிட்டாங்க.  “ஆமாம்மா! இப்ப அவனும் நானும்தான் வீடு
 வரை வந்தோம், ஏன் என்ன பிரச்சனைமா அவனுக்கு”னு கேட்டான்.  “அடப்பாவி முந்தா நேத்துதானடா அவன் தூக்குல தொங்கி செத்து போனான் என்னடா உளர்ர இப்படி, நீ அவனை பாத்தேனு சொல்றியேடா”னு பதறிட்டாங்க அம்மா. சைலனும்தான். அப்ப சைலன் கூட வந்தது ?....................மர்மமாக இருக்கும் எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்.

அந்த செருப்பு சமாச்சாரம் என்னனு கண்டுபிடிச்சீங்களா? என்னனு தெரியலை
இல்லையா? நானே சொல்லிர்ரேன் கடைசில சொல்றேன்... ஷாம் செருப்பு கூட கழட்ட சொல்லிட்டாங்க. நானும் ஆர்வமுடன் செருப்பை கழட்டிவச்சுட்டு, ஷாம் சாரோட செருப்ப கழட்ட ட்ரை பண்ணும்போது வழக்கம்போல அடம்புடிச்சு எதிர்ப்பு தெரிவித்தார். கடைசில ஐஸ்க்ரீம் கொடுத்து ஐஸ் வச்சதும் மனச மாத்திகிட்டார். (இதுக்கு பேருதான் ஐஸ் வைக்கிறது போல) அப்ப தான் அந்த வேலையாள் சொன்னார், “ஒரு வேளை கோட்டைக்குள்ள நீங்க தொலஞ்சுட்டா?”  (இதுக்கு முன்னாடி எல் ஐ சி ஏஜெண்டா இருந்துப்பார்போல...போகும் போதே அபசகுணமா சொல்றானேன்னு கொஞ்சம் நஞ்சம் மனசுல இருந்த தைரியமும் போய்யே போச்சு.) அதாவது சுற்றி பார்க்க வந்தவர்கள் முதலில் அந்த கோட்டையில் உள்ள சிறப்புகளை கண்டு களிக்க அதனுள் சுற்றி வருவார்கள். அதன் பிறகு வெளியே வர வழி தெரியாமல் சுற்றி வருவார்கள். நாம அவர்களை பார்க்கும்போது எதோ இண்ட்ரெஸ்ட்டா சுற்றி பார்க்கிறார்கள் என்றுதான் நினைப்போம். ஆனா வழி தெரியாமல் சுற்றி பார்ப்பார்கள் :) சில பேர் ஆர்வக்கோளாறால் ஏடா கூடாமான சந்து பொந்தெல்லாம் நுழைந்து போய் பார்ப்பார்கள்.(ஆர்வம் இருக்கலாம் ஆனா கோளாறு இருக்கலாமோ? இருந்தா இப்படிதான் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிக்கோனும்) அவ்வாறு உள்ளீடாய் சென்றவர்கள் திரும்ப வர வழி தெரியாமல் மாட்டிக்கொள்வார்கள். எல்லாம் ஆர்வக்கோளாறில் ஏற்பட்ட தகராறுதான்.    இப்ப ஏடாகூடா மாட்டிக்கொண்டவர்கள் ஈவ்னிங்க் ஆனாலும் சரியான வழி தெரியாமல் அங்கேயே சிக்கிவிடுவார்கள். இங்கேதான் அவர்கள் வாசலில் விட்டுசென்ற கால் செருப்பு கைகொடுக்கும்.ஆமாம்....நேரம் கடந்தபின்பு அங்கே உள்ள அலுவலர்கள் வாசலில் விட்டுசென்ற செருப்புகளை பார்த்து யாரோ உள்ளே வழிதெரியாம தடவிச்சுகிட்டு இருக்காங்கனு உணர்ந்து அவங்கள தேடி புடிச்சு கரைசேர்ப்பாங்க. ஆகையால் செருப்பு அணியும் பழக்கமில்லாத சில கிராமத்து வாசிகளானாலும் இங்கே போகும்போது ஒரு செருப்பு வாங்கி காலுக்கு போடலேனாலும் இந்த வாசல்ல வச்சிட்டு போனா ஊருக்கு திரும்ப உத்திரவாதம் இல்லை.

2ம் நுழைவு வாயில் கடந்ததும் பூல் புலையா கோட்டை
கால்மணி நேரமா கால் கடுக்க காத்திருந்ததுக்கு அப்பறம் தான் Guide வந்தார். Guideக்கு இவ்வளவு கிராக்கியா என கேட்டேன். “நாங்களே 4 வருஷம் ட்ரைனிங்  முடிச்ச பிறகு தான் இந்த கோட்டைக்கு இந்த வேலைக்கு வந்துர்க்கோம். புதுசா வரவங்களுக்கு மட்டும் போன உடனேயே திரும்பிட முடியுமா? அதான் வரவங்களாம் Guide இல்லாம போனா வழி கண்டுபிடிக்க சிரமம்னு காத்திருந்தாவது எங்ககிட்ட வராங்க என சொல்லி எங்களை அழைத்துச்சென்றார். ஆக மொத்தத்துல இங்கே வேலை  பாக்குறவங்களுக்கு 4 வருஷம் ட்ரைனிங் கூட எல் ஐ சி ல வேலை பார்த்த அனுபவமும் இருக்கும் போல. எல்லாருமே ஒரே மாதிரியாவே பேசுறாங்க :(
முதலில் நாங்கள் நுழைஞ்சதும் பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது
மெயின் ஹால்
அந்த மெயின் ஹால். உள்ளே நுழைந்ததும் கம்பீரமாய் நின்ற நவாப் ஆசாப் உத் தவ்லா வை பார்த்து ஆச்சர்யப்பட்டு தான் போனேன். எனக்கென்னமோ அவரை பாக்க கோமாளி மாதிரி தான் தெரிஞ்சது. ஆனாலுமவருக்கு அதிகமான மூளை தான். பல ஆச்சர்யங்கள் நிறைந்த கோட்டையை கட்டியிருக்காரே. அதுக்கே அவருக்கு கிரேட் சல்யூட் அடிக்கணும்) மெயின் ஹாலில் தான் 15 படிகட்டுகள் கொண்ட சிம்மாசனம் இருக்கு. அதுல உக்காந்துட்டு தான் எல்லா பஞ்சாயத்தும் பண்ணுவார்.. . அது மாதிரியே நிறைய போட்டோ,அவர் உபயோகப்படுத்திய தலைப்பாகை இருந்தது.அந்த  26 வயசுலையே அவர் அப்பா இறந்த பிறகு ஆட்சிக்கு வந்துருக்கார். கோழி சண்டை,பட்டம் விடுவது இந்த ராஜாவுக்கு விருப்பமான பொழுதுபோக்காம். இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே!   1784 ஆம் வருஷம் கட்டப்பட்ட கோட்டை அது.11 வருடங்கள் தேவைப்பட்டது இதை கட்டி முடிக்க. மேலும் நவதானியம் கொண்டு கட்டியுள்ளனர். ஒவ்வொரு சுவற்றையும் தட்டினால் டொக் டொக்குன்னு சவுண்ட் வரும். ஏன்னா உள்ள ஒன்னுமே இல்லையாம் (நம்ம தல மாதிரி )

உலகிலேயே மிகப்பெரிய ஹால் எந்த வித பில்லரும் இல்லாம இன்று வரை 
ஆங்காங்கே படங்கள், பொருட்கள்..
கம்பீரமா நிக்குது. 50 மீட்டர் நீளமும், 15 மீட்டர் உயரமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது(நிரூப்பிக்கப்பட்ட உண்மை). நீங்களே கற்பன பண்ணி பார்த்து சொல்லுங்களேன். என்ன ஆச்சர்யம்னா அதுக்கு மேலேயே இன்னொரு கட்டடம் வேற இருக்கு. அப்ப எப்படி பில்லர் இல்லாம ஸ்ட்ராங்கா நிக்குது என்பது புரியாத  புதிர் தான். விடை தேட அவ்வப்போது உலகநாடுகளில் இருந்து குழுவினர் வந்தும் விடை கிடைக்காமல் செவத்துல அடிச்ச பந்து மாதிரியே போய்ட்டாங்க. அந்த காலத்துலேயே எப்படிலாம் யோசிச்சுருக்காங்க? அப்படின்னு ஆச்சர்யமா பாத்துட்டு இருக்கும் போதே Guide“அங்கங்கே இருக்கு பாருங்க சின்ன சின்ன துவாரம்.. அது வழியா காத்து போக வர முடியுறதுனால தான் இந்த ஹால் ஸ்டெடியா நிக்குது.இல்லாட்டிக்கா இடிஞ்சு விழுந்துடும்”னு மறுபடியும் அவன் ஸ்டைல்ல பேச ஆரம்பிச்சான். அதே மாதிரி ஆங்காங்கே நிறைய துவாரங்கள் காற்று போக இருப்பதால் தான் அடைசலா இருந்த கோட்டையிலும் ஏசி போட்ட மாதிரி அப்படியொரு குளிர். நீங்க கோவிலுக்கு போககூடியவரா இருந்தா (செட்டிநாடு வீடுகளில் கூட இதே முறையை கையாளுவர்) கண்டிப்பா உங்களுக்கு தெரியும் வெளியே எப்படி வெயில்லா இருந்தாலும் பிரகாரம் கூலிங்கா இருக்கும்... ஹாலுக்கு நடுவுலையே நவாப்பின் ஷமாதி. தான் இறந்து போகும் போது நான் அமருமிடத்தில் தான் எனக்கு சமாதி அமைக்க வேண்டும் என அவர் சொன்னதாகவும் அதனால் அவர் மகன் அவர் நினைவாக
 அவர் உக்காந்து பஞ்சாயத்து பண்ற இடத்துலையே சமாதி கட்டிட்டாங்க. சமாதினா படத்துல கல்லறை காமிப்பாங்களே?! அது மாதிரி இல்ல. அவர் பாடி உள்ள 18 அடி ஆழத்துல இருக்கு. மேலே துணி கொண்டு அந்த இடத்தை மூடி வச்சு யாரும் அந்த இடத்த கடந்து போக கூடாதுன்னு சுத்தியும் கம்பி கேட் போட்டுருக்காங்க. இந்த கீழ் தளத்தை  3 பாகமா பிரிச்சுருக்காங்க. அதாவது நடுவில் மெயின் ஹால், ஹாலுக்கு இடப்புறம் சைனீஸ் ஹால், வலப்புறம் இந்தியன் ஹால் . இந்த 2 ஹாலும் சைனா மற்றும் இந்திய
 வேலைபாடுகளை கொண்டுள்ளதால் அதனடிப்படையில் அப்படி சொல்லி அழைக்கப்படுது.

சைனீஸ் ஹால்
முதலில் நுழைஞ்சது சைனீஸ் ஹால்.... மேலே அந்நாந்து பார்த்து என் தலை தான் சுளுக்கியது. அவ்வளவு உயரம், அழகான வேலைபாட்டோடு. நம்ம வீட்டுல அழகா பூ வைக்க சொல்லி கொத்தனார் கிட்ட சொன்னாலே பயங்கர சிரமப்பட்டு சின்னதா பார்மாலிட்டிக்கு டிசைன் செஞ்சுட்டு போவாங்க. ஆனா நுணுக்கமா செஞ்சுருந்த அந்த மேல் தோற்ற அமைப்பை என்னன்னு சொல்றது?.. ஆங்காங்கே மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது. ராணிகள் (பன்மைக்கு காரணம் யூகிச்சு வைங்க. அப்பறமா சொல்றேன்) அமர இருக்கை போல் இருந்தது. ஆங்காங்கே துவாரங்கள் இருந்தது. மேலே அமர்ந்த படி தான் கீழ நடக்குற நாட்டிய நடனங்களை,நாடகங்களை,இசை கச்சேரிகளை ரசிப்பாங்க. அப்பறம் வலது  பக்கம் இருந்த இந்தியன் ஹால். ரொம்ப இருட்டா இருந்ததுனால மேற்கூரை வேலைபாடு சரியா தெரியல. ஆனாலும் சைனீஸ் ஹால் மாதிரி தான் 
இந்தியன் ஹால்

இருக்கைகள், வேலைபாடு, துவாரங்கள் இருந்தது. மொத்தமா கோட்டைக்கு பொதுவான பெயர் இமாம் பாரா. மேலே மாடியில் உள்ள பகுதி தான் பூல்புலையா. ஆனா அந்த பூல்புலையா வச்சு தான் இந்த கோட்டை பேமஸ் ஆச்சு. ஸோ எல்லாரும் பூல்புலையான்னு சொல்ல ஆரம்புச்சுட்டாங்க அப்படின்னு சொன்னதும் இன்னும் ஆர்வம் அதிகமாச்சு. பில்லர் இல்லாம இருக்குற புகழ்பெற்ற ஒரு கட்டிடத்தையே மறக்க வச்சு இமாம்பாராக்கு வான்னு சொன்னா பூல்புலையாவா என எல்லாரும் சொல்லும் அளவுக்கு இருக்கும் அந்த சிறப்பின் ரகசியம் என்னவாதான் இருக்கும்னு தெரிஞ்சுக்க இதயம் வேகமா துடுச்சுச்சு. அப்ப எங்கே அந்த பூல் புலையா என கேட்டேன். இப்ப எல்லாரும் மேல போக போறோம்னு சொன்னான் ( மொதல்ல இவன் வாயில பினாயில் ஊத்தி கழுவ சொல்லுடான்னு சத்தமா சொன்னது பாவம் ஹிந்தி,இங்க்லீஸ் தெரிஞ்ச Guideக்கு தமிழ் தெரியல. இல்லைன்னா உண்மைக்குமே என்னை மேல அனுப்பியிருப்பான். ) அதை முடித்து பூல் புலையா செல்ல அழைத்தார். நானும் ஆர்வமுடன் வெளியே வந்தேன். வெளியே உள்ள படிகட்டின் வழியாக தான் மேலே செல்ல முடியும். உள்ளேயும் படி உள்ளது. ஆனால் மிகவும் குறுகிய செங்குத்தான படைவீரர்களுக்காக அமைக்கப்பட்ட படிகட்டுகள் என்பதாலும் ஒரு ஆள் மட்டுமே செல்லும்படியான குறுகிய பாதை என்பதாலும் அதை அடைச்சுட்டாங்க. அதுனால மீண்டும் வாசலுக்கு வந்து, பிறகு மாடிக்கு செல்லும் இடத்துக்கு கூடிட்டு போனாங்க. அதுக்கு முன்னாடியே எதாவது கடைசியா சாப்பிடுறதா இருந்தா பக்கத்து கடைல சாப்பிட்டுட்டு வந்துடுங்கன்னு சொன்னதும் படபடன்னு வந்து மயக்கம் போட்டு விழுக போன நேரத்துல தான் என்னுடன் வந்த ஹிந்தி பையன் சொன்னான் “அக்கா இதுவரை பாத்த இடம்லாம் கொஞ்ச நேரத்துலையே பாத்தாச்சுல. ஆனா மேலே உள்ள கோட்டை சுத்தி பாக்கணும்னா எப்படியும் 4 மணி நேரம் ஆகும். அதான் கூல்ட்ரிங்க்ஸ்,ஜூஸ் சாப்பிட்டுட்டு தெம்பா வர சொன்னார்”அப்படின்னு சொன்னதும் தான் தெம்பே வந்துச்சு. எமன்க்கு கொஞ்ச நாள் பி.ஏ வா வேலை பாத்துருக்கான் போல :(
 வேண்டிய அளவுக்கு வாட்டர்பாக்கெட், ஜூஸ் வாங்கிட்டு மாடிக்கு செல்ல புறப்பட்டோம். அடேங்கப்பா மறுபடியும் படிகட்டா?
மாடிக்கு செல்லும் வழி
 ஆக மொத்தம் 80 படிகட்டாம்... இப்படி இதுல 4 முறை ஏறி இறங்குனாலே மனுஷனுக்கு பாதி வெயிட் கொறஞ்சுடும். மேலே போனதுக்கு பிறகு நிறையா வாசல் இருந்தது. 786 என்ற எண்ணிட்ட வாசலில் உள்ளே நுழைந்த பிறகு நாங்க சென்றது சைனா ஹாலின்  மேற்புறத்திற்கு. அதாவது மேலே ராணி இருக்கைகளாம் இருந்த இடத்துக்கு. மேலிருந்து அதுவும் சப்போர்ட்டே இல்லாம செவத்துல அப்பிக்கிட்ட மாதிரி இருக்குற இருக்கைல 15 மீட்டர் ஆழத்த பாக்க முடியாம கண்ண இருக்க மூடிட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தா தலை சுத்தி நானே கீழ விழுந்து மேல போயிருப்பேன். ஆனாலும் நான் ரசிச்ச விஷயம் கீழ இருக்கும் போது பாத்து வியந்த அந்த அழகிய வேலைபாடு எட்டும் தூரத்தில் தொட்டுபார்த்து  பரவசப்பட்டது தான். 

தீக்குச்சி உரசும் இடம்
அப்பறம் அங்கிருந்து வந்து மெயின் ஹாலுக்கு இருக்கும் இடத்திற்கு வந்தோம். பால்கனி போல் அமைக்கப்பட்ட பாதை(சிவப்பு பார்டர் மாதிரி இருக்கு பாருங்க) எங்கள தனியா விட்டுட்டு Guide வேகமா ஓடி போய் நாங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக நின்று தீக்குச்சியை உரசினார். 50 மீட்டர் தூரத்தில் அவர் பற்ற வைக்கும் தீக்குச்சி ஓசை எங்களுக்கு விழுந்தது. அடேங்கப்பா என அதிசயத்தில் வாய் பிளந்து  நின்றேன். எதுவும் நம்மல ஏமாத்துறாங்களான்னு என்னோட வந்த அந்த பையைனை போக சொல்லி பொருத்த சொன்னேன்.
தீப்பெட்டி உரசுவது கூட கேட்டது. முடிவே இல்லாமல் சுவற்றில் வரிவரிகளாக இருந்தது. அதில் காதை வைக்க சொன்னார். நானும் வைத்தேன். அங்கிருந்து அவர் பேசுவது எனக்கு கேட்டது. யாரேனும் பகையாளி வரும் ஓசை இதன் மூலம் அறிவார்களாம்.  எல்லாரையும் உஷாரா இருக்க சொல்ல தகவலை அந்த வரிகளின் மூலம் சொல்லி தயாராகிவிடுவாங்க. நம்மூர்ல சின்ன புள்ளைங்க 2  தீப்பெட்டி டப்பாவுல நீளமான நூல் கட்டி பேசுவாங்க. பாத்திருக்கீங்களா? அதாவது ஒரு முனையிலிருந்து ஓசை மற்றொரு முனைக்கு செல்லும். அதே போல் தான் அந்தமுடிவில்லாமல் இருக்கும் பள்ளமான வரிகளில் வழியாக நாம் நடக்கும்/பேசும்/சொல்லும் சத்தம் எல்லாமே கேக்கும். ஆக மொத்தத்துல எவனாவது ரகசியம் பேசணும்னு இங்கே வந்து பேசுனா ஸ்பீக்கரே இல்லாம ஊருக்கே தம்பட்டம் அடிக்கலாம்.  என்னமா யோசிக்கிறாங்க? செல்போனுக்கு இது பரவாயில்லையே.ரீசார்ஜ் செய்யதேவையில்ல, பணம் போட தேவையில்ல...... இதுகெல்லாம் இப்படி ஆச்சர்யபட்டா எப்படிங்க? வாங்க மெயின் இடத்துக்குன்னு சொல்லி கூடிட்டு போனார்.  போகும் போதே இருட்டு இடம். அங்கே அந்த Guide என்னிடம் “மேடம் 50 ரூபாய்” என்ற படியே தலையை சொரிந்துக்கொண்டே தமிழில் கேட்டான் பாருங்க என் உசுரு என் கையிலையே இல்ல.  உடம்பெல்லாம் வியர்த்து போச்சு.......மூச்சு வாங்குது. நான் கொஞ்சமா ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா மிச்ச கதைய சொல்றேன். ஓக்கேவா?


என் கழக கண்மணிகளே!!!! (நம்ம தாத்தா பேசுனத டீவில பார்த்ததால் வந்த காய்ச்சல்)
இந்த வலை ஆரம்பிச்சு 1 மாசத்துக்குள்ள நாம்ம பெரிய சாதனபண்ணிட்டோம். என்னன்னா 2 இடத்துல இருந்து நமக்கு விருது வந்துருக்கு. ( சத்தியமா பெட்டி எதுவும் கையாமாத்தல........). ஆக இந்த இனிய தருணத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். எல்லாரும் அப்படிக்கா என்னோட மேடைக்கு வாங்க. எல்லாரும் மொத்தமா போய் அந்த 2 விருதையும் வாங்கிட்டு வந்துடலாம்.....

நன்றி ஆசியா ஒமர், நன்றி வானதி

, ,

38 comments:

 1. /நம்ம தல மாதிரி )//

  சிறு திருத்தம். உங்கள் தலை மாதிரி

  ReplyDelete
 2. நெறைய பேறு இந்த மாதிரி தமிழ் தெரியாதுன்னு நினச்சு தமிழில் பேசி பல்ப் வாங்கி இருக்காங்க..

  ReplyDelete
 3. பக்கத்துல உக்காந்து கதை சொல்லுறமாதிரி இருந்துச்சி..அழகான எழுத்து நடை..

  ReplyDelete
 4. அதுல ஒவ்வொரு இடத்துல ஜோக் பன்றீங்க!!கைடு நாலே அப்படி தான்!

  ReplyDelete
 5. உங்கள் உற்சாகம் எனக்கு ஆர்வம் தருகிறது.வரதட்சணை பற்றி மேலும் உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்.I like your writings too.

  ReplyDelete
 6. ரியலா பார்த்த மாறியே ஒரு ஃபீலிங் வர வச்சிட்டிங்க போங்க...

  ReplyDelete
 7. //LK said...

  /நம்ம தல மாதிரி )//

  சிறு திருத்தம். உங்கள் தலை மாதிரி//

  ஹா.....ஹா.....ஹா.....
  அது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம். எப்ப இங்கே வந்து ஐக்கியமானீங்களோ அப்பவே நீங்களூம் என் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க :)))))

  ReplyDelete
 8. //நெறைய பேறு இந்த மாதிரி தமிழ் தெரியாதுன்னு நினச்சு தமிழில் பேசி பல்ப் வாங்கி இருக்காங்க//

  அனுபவம் பேசுதோ? :) நான் பல்ப் வாங்குறதுலாம் இந்த மாதிரி இருக்குறவங்க தான். பேரம் பேசும் போது ரொம்ப கம்மியா கேக்க சொல்லுவேன். ஒடனே அதுக மொழியில கத்த ஆரம்பிச்சுடுங்க :(

  ReplyDelete
 9. //பக்கத்துல உக்காந்து கதை சொல்லுறமாதிரி இருந்துச்சி..அழகான எழுத்து நடை.//

  மிக்க நன்றி ஹரிஸ்!!!
  அடிக்கடி வாங்க நிறைய கதை சொல்றேன் :)

  ReplyDelete
 10. //கைடு நாலே அப்படி தான்!//

  அந்த வகைல எனக்கு கிடைச்ச கைட் ரொம்ப..........நல்லவர் தான். பொதுவாவே நாம்ம நல்லா ஜாலியா பேசுனா அவங்களுக்கும் உற்சாகம் வரும். பொறுமையா சுத்தி காமிச்சு விளக்கமா சொன்னார் பாசித்.

  ReplyDelete
 11. //உங்கள் உற்சாகம் எனக்கு ஆர்வம் தருகிறது//

  மிக்க நன்றிங்க. கண்டிப்பா வரேன். வந்து எல்லாரையும் ஒரு வழி பண்ணிட்டு தான் மறு வேலை......... :)))

  ReplyDelete
 12. ///Basith said...

  ரியலா பார்த்த மாறியே ஒரு ஃபீலிங் வர வச்சிட்டிங்க போங்க...//

  அப்படியா பாசித்!!
  மிக்க நன்றி.... e-card நல்லா இருந்தது!!!!

  ReplyDelete
 13. தருனா எதுக்கு தூக்கு போட்டான்?சொல்ல வில்லையே ம்ம்...
  நம்ம தலை மாறினு உங்களையும் சேர்த்ததில் சந்தோஸம் ஹீ ஹீ!!!
  இந்தியாகாரன் தான் கரண்ட் மிச்சம் பன்னுவானே!அதான் இருட்டா இருக்கும்!!

  ReplyDelete
 14. காமிக் ஹாரர் மூவி பார்த்த எஃபக்ட் இருந்தது... :)
  அந்த "ராணிகள்" மேட்டரை பத்தி சொல்லுறேன்னு சொல்லிட்டு எதுவும் சொல்லலை... கொஞ்சம் விலாவாரியாக சொல்லுங்க..:))

  முக்கியமான அடுத்த(பூல்புலையா) பதிவில் அதிகம் படங்களையும் விவரங்களையும் எதிர்பார்ககிறோம்.

  ReplyDelete
 15. ஆர்வக்கோளாரில் ஆஸ்கர் விருதுக்கு ட்ரை பண்ணிட போறீங்க........ஹிஹி
  ......................................
  இன்னும் பலவிருதுகள் வாங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. //நம்ம தலை மாறினு உங்களையும் சேர்த்ததில் சந்தோஸம் ஹீ ஹீ!!!
  இந்தியாகாரன் தான் கரண்ட் மிச்சம் பன்னுவானே!அதான் இருட்டா இருக்கும்!!//
  நிரூபிச்சுட்ட பாத்தீயா? கரண்ட் மிச்சம் பண்ண இல்ல.1784ல கரண்ட் பத்தி தெரிஞ்சுருக்காது..... :)))

  //தருனா எதுக்கு தூக்கு போட்டான்?சொல்ல வில்லையே ம்ம்...//
  அவனுக்கு என்ன கஷ்ட்டகாலமோ??
  மர்மமா இருக்குற விஷயம் தான் சுவாரசியமானது. அத போய் கேட்டா எப்படி சொல்வது? :))))

  ReplyDelete
 17. //கொஞ்சம் விலாவாரியாக சொல்லுங்க..:))//

  நம்மலாம் யாரு?....... ஹீ...ஹீ...ஹீ.....

  பைலில் உள்ள எல்லா போட்டோவையும் ப்ளாக்க்குக்கு மாத்திட்டு தான் அடுத்தா வேலையே.....

  ReplyDelete
 18. //ஆர்வக்கோளாரில் ஆஸ்கர் விருதுக்கு ட்ரை பண்ணிட போறீங்க........ஹிஹி
  .................................//

  ஆல்ரெடி அந்த வேலை தான் நடந்துட்டு இருக்கு. ஆனா அதுக்கு பெரிய பெட்டியா கொடுக்கனுமாம் :))

  வாழ்த்துக்கு நன்றிங்க. நேத்து உங்க திரட்டி பார்த்தேன். இணைக்க தெரியல. இப்ப பார்த்தேன். தெரிஞ்சுடுச்சு :) நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 19. ஓ! அவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலைக்கு கைடா வராங்களா?
  செருப்பு மேட்டர் நான் ரசித்துப் படித்தேன்.

  நல்ல நடை, ஆமி.

  ReplyDelete
 20. அந்த கஷ்ட்டத்துக்கும் பலன் இருக்கு. எக்கசக்கமாவே இருக்கு!!!!
  அடுத்த பதுவுல சொல்ரேன் வானதி!!!

  மிக்க நன்றி

  ReplyDelete
 21. ஆமி இணைத்திருந்த படங்களும்கட்டுரைசொல்லும் விதமும் சூப்பர்.ஜாக்ரதை. நம்ம சங்கரோ,கே,எஸ் ரவிக்குமாரோ உங்ககிட்ட கதைகேக்க வந்துடப்போராங்க.

  ReplyDelete
 22. ஆமி எப்படி ஆமி இவ்வளவு அழகா
  சொல்ரீங்க? படங்களும் ஜோரா இருக்கு.
  இதெல்லாம் எப்படின்னு எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்.

  ReplyDelete
 23. //ஜாக்ரதை. நம்ம சங்கரோ,கே,எஸ் ரவிக்குமாரோ உங்ககிட்ட கதைகேக்க வந்துடப்போராங்க//

  வந்தவங்களையெல்லாம் அனுப்பிட்டேன் லெட்சுமிம்மா... நேரா ஹாலிவுட் போறதா ப்லான் :))))))

  தொடர்ந்து படிச்சு கருத்து சொல்வதற்கு மிக்க நன்றிம்மா!!!!

  ReplyDelete
 24. //இதெல்லாம் எப்படின்னு எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்//
  எதை சொல்லிகொடுக்கணும் கோமு? நீங்க ப்ரீயா இருக்கும் போது வாய்ஸ் சாட்க்கு வாங்க. எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்!!!!

  மிக்க நன்றி கோமு!

  ReplyDelete
 25. நான் ஃப்ரீயா எப்பவேணாலும் இருக்க முடியும் உங்ககிட்ட கால்ஷீட் எப்ப கிடைக்கும் அதைச்சொல்லுங்க.

  ReplyDelete
 26. தெரிந்துக் கொள்ளவேண்டிய இடங்கள் இந்தியாவிலேயே எவ்வள‌வோ இருக்கு! அதில் இந்த 'பூல் புலையா'வ உங்க மூலமா தெரிஞ்சிக்கிட்டோம் ஆமினா. நன்றிமா!

  இன்றுதான் 3 பாகங்களையும் படித்து முடித்தேன். அருமையாக உள்ளது ஆமினா! ஃபோட்டோக்களும் சூப்பர். எவ்வளவுதான் நல்ல கதையாக இருந்தாலும் கற்பனையான கதைகள் படிக்க எனக்கு பிடிக்காது. அதெல்லாம் ஸ்கூல் பருவத்தோடு நிறுத்தியாச்சு :) ஆனால் இதுபோன்ற அனுபவக் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். மீதியையும் போடுங்கள் ஆமினா!

  ReplyDelete
 27. //உங்ககிட்ட கால்ஷீட் எப்ப கிடைக்கும் அதைச்சொல்லுங்க.//
  அந்தளவுக்கு இன்னும் வளரல கோமு...நான் இருக்குற நேரம் நீங்க வரதில்ல. மதியம் வந்துடுங்க. ஒரு கை பாத்துடலாம் :)

  ReplyDelete
 28. அஸ்மா....

  எனக்கும் கதைகளை விட வரலாற்றினை பற்றிய கதைகள் ரொம்பவே பிடிக்கும். பொறுமையா எல்லாவற்றையும் படிச்சதுக்கு நன்றி அஸ்மா !!! அடுத்த பாகத்தை கூடியவிரைவில் போடுகிரேன்

  ReplyDelete
 29. ஆமினா...இந்த பயணக்கட்டுரை எழுத நிறைய முயற்சி எடுத்திருக்கிங்க இல்லையா? ஒவ்வெரு படத்தையும் அழகா தேர்வு பண்ணி...இந்த இந்த இடம் னு குறிப்பிட்டு...சின்ன குழந்தைக்கு கூட படத்தை பார்த்தாலே எல்லாமே விளங்கிரும்...நல்ல உரையாடல் தமிழ் இல் வருணனை வேறு...நல்லா இருக்கு "ஆல் இன் ஆல் அழகு ராணி"...!!(நோ உள்குத்து...மனசில் இருந்து வரும் பாராட்டு...:) )
  keep it up aami..!!!

  ReplyDelete
 30. நன்றி ஆனந்தி!!

  ஆல் இன் ஆல் அழகு ராணியே என்னை பாத்து அப்படி சொல்லும் போது துள்ளி குதிக்க தோணூது :)

  ReplyDelete
 31. வித்தியாசமாகவும் விபரமாகவும் எழுதியள்ளீர்கள் நன்றிகள்...

  என் தள வருகைக்கம் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 32. ஆமி பூல்புலையா படங்களும், கட்டுரையும் சூப்பரா இருக்கு. நான் மட்டுமில்லை எல்லாருமே ரொம்ப விரும்பி படிக்கிராங்கன்னு எல்லாரோட பின்னூட்டமும்சொல்லுதே.

  ReplyDelete
 33. Blogger ம.தி.சுதா said...

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ம.தி. சுதா.

  நல்லா எழுதுறீங்க !!! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. @உமா

  மிக்க நன்றி பா.

  தொடர்ந்து படிங்க :)

  ReplyDelete
 35. ரொம்ப நல்லா போரடிக்காம எழுதி இருக்கீங்க ஆமி!

  செருப்பு மேட்டர் ஓகே. ஆனா நம்ப மக்களை இவங்க சரியா புரிஞ்சுக்கலியோ! இறந்த வீட்டுல கூட செருப்பை லவட்டிக்கற ஆளுங்களாச்சே! இங்க எப்படி டோக்கன் கொடுத்திடுவாங்களோ :)

  ReplyDelete
 36. //இறந்த வீட்டுல கூட செருப்பை லவட்டிக்கற ஆளுங்களாச்சே! //

  அதுக்கும் துட்டாம்- இந்த வரி விட்டு போச்சு கவி.

  ஒரு ஜோடிக்கு 10 ரூபாய்ன்னு வாங்குனாங்க. எங்க பாட்டிய மட்டும் கூடிட்டு போயிருந்தா அங்குள்ளவங்கள ஒரு வழி பண்ணியிருக்கும் :)))

  ReplyDelete
 37. ஹாய் ஆமி,இப்பத்தான் உங்க பூல்புலையா மூணு பாகத்தையும் படிச்சு முடிச்சேன்.ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க,ஆமி.போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு,ஆமி.ரொம்ப அழகா கதை சொல்ற மாதிரி சொல்லியிருக்கீங்க.உங்ககூட நானும் அந்த கோட்டைக்குள் வந்த மாதிரி இருக்கு!!அழகாக சுவாரஸ்யத்தை கூட்டி,அதிலும் ஆங்காங்கு உங்கள் நகைச்சுவையை புகுத்தி ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கீங்க.உங்க எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு,ஆமி.அழகான எழுத்துக்கு அழகான பரிசு கொடுக்கலாம்னு பார்த்தா பக்கத்துல இல்லாம போயிட்டீங்களே!!!

  ReplyDelete
 38. @ஸ்ரீ

  //ஆமி.அழகான எழுத்துக்கு அழகான பரிசு கொடுக்கலாம்னு பார்த்தா பக்கத்துல இல்லாம போயிட்டீங்களே!!!//
  இதுக்குலாம் வருத்தப்படலாமா? அட்ரஸ சொல்லுங்க. நேரா வீட்டுலையே வந்து வாங்கிக்கிறேன் :)

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீ

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)