உலகம் முழுவதும் வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் நீளுதுன்னா அதை விட வேலையை கையிலேயே வச்சுட்டு ஆட்களை தேடும் கம்பெனிகளின் பட்டியலும் நீண்டுகிட்டு தான் இருக்கு.

டிஸ்கி: எதுக்கு இவ்வளவு நீளமா நீட்டிகிட்டே இருக்க. மேட்டருக்கு வா அம்மணி

சுருக்கமா தான் எப்போவும் பேச தெரியாதே.ம்ம் சரி இதை கேளுங்க. இப்பலாம் ஆமிக்கு நல்ல நல்ல எண்ணங்களா வருது. அதுனால நல்ல நல்ல விஷயங்களாம் செய்யலாம்னு முடிவு பண்ணி சில காரியங்கள எறங்க போகுது.டிஸ்கி : இதுக்கு முன்னாடி எத்தன பேரோட வாழ்க்கையை கெடுத்தன்னுலாம் யாரும் கேட்கப்படாது.
நானும் நாளு வெட்டி ஆட்களை கூப்பிட்டு வேலை செய்யலாம்ல?  ஏன் இப்படி சுத்துற அப்படின்னு கேட்டா வேலை யாரு நீயா கொடுப்ப. நாங்க என்னமோ வேலை வா வான்னு கூப்பிடுற மாதிரியும், நாங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்லுற மாதிரியும் பேசுற அப்படின்னு மேல பாய ஆரம்புச்சுட்டாங்க :(

டிஸ்கி :நல்லவேளை  “வேலை இல்லாத நீ எங்கள வேலைக்கு போக சொல்லி அட்வைஸ் பண்றீயா?”ன்னு கேக்காம விட்டுட்டாங்களேன்னு சந்தோஷப்படு தங்கம்.

சும்மா சும்மா அட்வைஸ் (அதான் சுலபமா செய்ய முடிஞ்ச வேலை) பண்றதுக்கு பதிலா அவங்களாம் உருப்புடுற மாதிரி சில பல வழிமுறைகளை சொல்லலாம்னு களத்தில் குதிச்சேன்.டிஸ்கி : உனக்கு வர மெயிலை அப்படியே எல்லாத்துக்கு அனுப்புன. அதானே! இதுகெல்லாம் ஐ நா சபை ரேஞ்சுக்கு வழிமுறைன்னுலாம் சொன்னா அழுதுடுவாங்க.

என்ன செய்ய. எனக்கே பல வேலைகள். இதுல எப்படி நான் மத்தவங்களுக்கு வேலை தேடுவேன். அதுனால எனக்கு வர மெயிலையெல்லாம் திறந்து கூட பாக்காம அப்படியே எல்லாத்துக்கும் பார்வேர்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

ரிஸ்கி : ட்ராஸ்க்கு அனுப்பாம பார்வேர்ட் பண்ணுவதும்  பெரிய சேவை இல்லையா?

அந்த மாதிரி தான் இப்பவும். ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வரேன் (அப்ப இருந்து இதை தான் சொல்ற. மேட்டருக்கு வர மாட்டேங்குற).

அதாவது
எங்காளு (என்ற்ற வீட்டுக்கார் தானுங்க) பிரண்ட் வேலை செய்யும் இடத்தில் ஆட்கள் தேவையாம்.எங்காளும் எங்கிட்ட சொன்னார். நான் தான் ரொம்ப நல்லவளாச்சே! அதான் உங்க கிட்ட சொல்லிட்டேன்.

என்னா சொன்னாருன்னா....
12 ம் வகுப்பு அல்லது டிகிரி அல்லது டிப்ளமோ இதுல எதாவது படிச்சுருந்தா போதுமாம். சென்னையில் வேலையாம். மாதம் 6000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை சம்பளமாம். தமிழ்/தெலுங்கு/கன்னடம்/மலையாளம் இதுல ஒன்னு தெரின்சுருந்தா போதுமாம்(ஒரு வேளை உங்க பிரண்ட்க்கு தமிழ் தெரியாம வேறு தாய்மொழி இருந்தால் அதுக்காக தான் மற்ற மொழிகளையும் குறிப்பிட்டுள்ளேன்).
ஆங்கிலம் பற்றிய அறிவு இருக்கணுமாம். மேலும் பல விவரங்கள் வேண்டும்னா நான் சொல்ற நம்பருக்கு போன் போட்டு (ஆமி சொன்னா அப்படின்னு கேக்காதீங்கோ! என்னை அவருக்கு சத்தியமா தெரியாது.குட்டி சுவர்க்கத்துல வந்ததா சொல்லுங்கோ) விஷாரிச்சுக்கோங்க. வேற எதாவது சந்தேகம்னாலும் அவருகிட்டையே கேளுங்கோ!

சதீஷ் குமார்
contact no : +919791443834
                   +919885441345ஆக இதன் மூலமா சொல்ல வரது என்னன்னா யாராவது என்னை மாதிரி நல்ல உள்ளங்கள் இதை பார்த்தா வேலை இல்லாமல் பாவமாய் சுற்றும் வாலிபர்களுக்கு சொல்லிடுங்க.

முக்கியமான விஷயம். இது மாதிரி எனக்கு தெரிஞ்ச வேலை வாய்ப்பு பற்றிலாம் இங்கே சொல்லுவேன். ஆனா உத்திரவாதம் தர மாட்டேன். ஏன்னா சம்பளத்துல எனக்கு பாதி நீங்க கொடுக்கப்போறதில்ல பாருங்க. அதான் :)
 

டிஸ்கி :பன்னீர் சோடா கொண்டு வாங்கப்பா.

16 comments:

 1. அனைவருக்கும் பயனுள்ள தகவலை தந்திருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே . தொடரட்டும் தங்களின் சேவை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. என்ன வேலைன்னு கடைசி வரைக்கும் சொல்லலையே..!! ( டெபாசிட்டா உங்க கிடனியை வையுங்கன்னு சொல்லமாட்டாங்களே ஹா..ஹா.. ))

  ReplyDelete
 3. //டிஸ்கி :பன்னீர் சோடா கொண்டு வாங்கப்பா.//

  ஆஹா..கிடைக்காத ஊரில பன்னீர் சோடா நினைப்பை உண்டு பன்னிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. பனித்துளி சங்கர்

  வாங்க சங்கர். வந்ததில் மிக்க மகிழ்ச்சி!

  // பகிர்வுக்கு நன்றி நண்பரே //
  நண்பரே என்னும் இடத்தில் தோழி ஆக்கி படித்துக் கொண்டேன் :)

  வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!!!!!

  ReplyDelete
 5. ஜெய்லானி

  எழுதி எழுதி கலச்சு போச்சு. அதான் சொல்லல. என்ன வேலைன்னு சதீஷ் கிட்டவே கேட்டுக்கோங்களேன் !

  (வேலை பத்தி சொல்லணும்னா பெரிய பதிவா போடணும். அதான் நம்பரை கொடுத்து கேக்க சொல்லிட்டேன்:)

  //( டெபாசிட்டா உங்க கிடனியை வையுங்கன்னு சொல்லமாட்டாங்களே ஹா..ஹா.. )) //
  ஹாஸ்பிட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை என வரும் போது தான் கிட்னி டெபாசிட். இப்ப இல்ல :)))

  ReplyDelete
 6. //ஆஹா..கிடைக்காத ஊரில பன்னீர் சோடா நினைப்பை உண்டு பன்னிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்//

  நாங்க மட்டும் வச்சுட்டா வஞ்சகம் பண்றோம். இங்கே சர்பத் கூட கிடைக்காது :)

  ReplyDelete
 7. ஆமி பயனுள்ள பதிவு!

  இப்படி பன்னீர் சோடா, சர்பத் னு கிடைக்காததை எல்லாம் சொல்லி ஏன்பா என் வயித்தெரிச்சலை கிளப்புறீங்க :(

  ReplyDelete
 8. eemppa sarpath pooddu kudikka veeNdiyathu thaanee?

  ReplyDelete
 9. ஆமி, தினம், தினம் ஒரு மேட்டர் எங்கேந்து கிடைக்குது?

  ReplyDelete
 10. //கிடைக்காததை எல்லாம் சொல்லி ஏன்பா என் வயித்தெரிச்சலை கிளப்புறீங்க :( //

  யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும் கவி! அதான் இப்படி :)

  ReplyDelete
 11. கோமு
  பேசவா சொல்லிக்கொடுக்கணும்? :) சரக்கு இருக்குற வரை போட வேண்டியது தான்.

  ReplyDelete
 12. ஆமினா, வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தொண்டு

  ReplyDelete
 13. ஜலீலாக்கா!!

  சர்பத் போட்டு ரெடியா வைங்க! வந்து குடிக்கிறேன்.

  வருகைக்கு நன்றிக்கா!

  ReplyDelete
 14. மனோ!

  மிக்க நன்றி மனோ. அதுக்காக தொண்டுன்னுலாம் சொல்லி என்னை வெட்கப்பட வைக்க கூடாது அவ்வ்வ்வ்வ் :)

  ReplyDelete
 15. இந்த ஆமினா பொன்னு ரொம்ப நல்ல மனசுல்ல பொன்னுங்க,ஒருத்தருக்கு வேலை வாங்கிதரதுன்னா சும்மாவா,கிரேட்.உங்க பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. சுந்தரி!

  நீங்களாவது ஒத்துக்குறீங்களே! ரொம்ப.........சந்தோஷம் :)

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)