இன்னைக்கு எனக்கு தமிழ் பத்தி கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்னு திடீர்னு ஒரு ஆசை வந்துச்சு. ஆமா திடீர்னுதான் :)) சத்தியமா திடீர்ன்னு தான்!
அன்னிய நாட்டு மோகத்தில் இப்பெல்லாம் திடீர் திடீர்னுதான் தமிழில் பேசும் நிலை எற்பட்டுள்ளது. சில தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட தயக்கம் எழுகிறது. உதாரணமாக முடி என்ற சொல்லுக்கு மயிர் என்றே தமிழ் சொல்ல சொல்கிறது. ஆனால யாரையாவது பாத்து நீ முடி அப்படினு சொன்ன சும்ம முழிச்சிட்டு போயிருவாங்க. ஆனா  “.........” னு சொன்னா நம்மள முடிச்சுட்டு போயிருவாங்க. ரெண்டுக்குமே ஒரே அர்த்தம்தான்.ஆனா மயிர்எனபதுக்கு மட்டும் ஏன் பிரச்சனைனு தெரியல.
டிஸ்கி : மயிர் நீங்கின் உயிர் வாழா கவரிமான் என சொல்ல கேட்டதுண்டு. அதனால் யாரும் முகம் சுழிக்க கூடாது சொல்லிபுட்டேன். 
அதே மாதிரி  தலை’ ,  ‘மண்டைஇந்த ரெண்டும் ஒரே உறுப்பைதான் குறிக்கிறது, அதுக்காக தலைவன்னு சொல்றதுக்கு பதிலா மண்டையன்னு சொல்லக்கூடாது. 
இவ்வாறாக வேடிக்கைக்காக சொல்லிக்கொண்டாலும் தமிழுக்குனு ஒரு மகத்தான வரலாறு இருக்கிறது.அதான் எனக்கும் திடீர்னு இந்த எண்ணம் வந்துருக்கு. அதான் இது. அதாவது இந்த பதிவு. 
டிஸ்கி : ஆரம்பிச்ச எடத்துல இருந்தே மறுபடியும் ஆரம்பிக்காதே !



இது சுவராஸ்யமா இருக்கும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் கொடுக்கமுடியாது. ஆனால் இப்பதிவு எங்கேயோ தமிழ் மொழி பற்றிய தேடலில் உள்ளவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்து தமிழுக்கு ஒரு அளவுகோல் காண ஒரு ஆரம்பம் கொடுக்கும் என்ற ஆசையில் எழுத வந்துள்ளேன். அவ்வாறு நான் எதிர்பார்ப்பது போல் எதாவது நடந்து விட்டால் நானும் தமிழின் வளர்ச்சியில் ஒரு பங்கு பெற்றவளாய் ஆகிவிடுவேனே. அதான் நம்ம ப்ளான்.
டிஸ்கி : வரலாற்று பிழையை உண்டாக்கிடாம சொல்லு!
  எனவே வாழும்போது அதாவது வீழும் முன்பு என் தமிழுக்கு அதன் வளர்ரச்சியில் பாடுபட்ட பலபேரின் அணிவகுப்பில் நானும் வரிசையின் கடைசிலேயாவது சேர்ந்துவிட வேண்டுமென ஒரு துடிப்பு, அதன் பிரதி பலந்தான் இந்த பதிப்பு. மொழியால் நான் தமிழ் மகள், இனத்தால் திராவிடம் என்ற என்னுடைய இந்த வடிவம்தான் இந்த பதிவை வடிக்கிறது. 
 
எங்க தமிழ் வாத்தியார் வரலாறு சொல்வார். அது தமிழுக்கான வரலாறு. தமிழுக்கென ஒரு பெரிய வரலாறு இருந்திருக்கு. இல்ல, இருக்கிறது. ஆனா வரலாறு வாத்தியார் எல்லா வரலாறும் சொன்னார், நம்ம தமிழுக்குனு ஒரு வரலாறு சொல்லாமலேயே விட்டுட்டாரேய்யா? சரி அவர மன்னிச்சுருவோம். ஏன்னா அவரு இப்ப வரலாறாயிட்டார். ஆமாங்க காலமாகிவிட்டார் :(
 
எனக்கு 5 மாத்திரை, அஞ்சு க்கு 2 1/2 மாத்திரை.
என்ன திடீர்னு மருத்துவம் பேசுறேனு பாக்குறீங்களா? இல்ல இது மருத்துவம் இல்ல தமிழின் மகத்துவம். அதாவது தமிழில் உள்ள குறில் நெடில் எழுத்துக்களுக்கு அதன் ஒலிகளுக்கேற்ப மாத்திரை குறிப்பிடுவார்கள். நெடிலுக்கு 2 மாத்திரையும், குறிலுக்கு ஒரு மாத்திரையும், மெய்யெழுத்துக்கு 1/2 மாத்திரையும். அவ்வகையில் பார்க்கும்போது
ஆ = 2 (நெடில் என்பதால்)
மி = 1(குறில் என்பதால்)
னா = 2(இதுவும் நெடில்)

ஆக மொத்தம் 5, என் பெயருக்கு 5 மாத்திரை.

வைரமுத்து சொன்னாரே சல சல ரெட்டைக் கிழவி தக தக ரெட்டைக் கிழவி இதுவும் இலக்கணம்..எப்படினு நீங்க கேட்டாதான் விளக்கம் சொல்லுவேன். இல்லேனா விலகி செல்லுவேன். அப்பறம் நான் பாட்டுக்கு  பாட்ட பாடிகிட்டு இருந்தா நீங்க கொட்டாவி விட ஆரம்பிச்சிருவீங்க.அதுனால கேட்டால் மட்டுமே சொல்லப்படும்.. இம்மாதிரியான விஷயங்கள்தான் இலக்கணம்.

குறத்தி குறி கூறுவதும் குறவனுடன் பேசி அளவளாவுவதுமாகிய செய்திகள் தலைமைபெறப் பாடும் குறவஞ்சி ஒரு பிரபல விதமாகும். இவ்வாறாக குறவனுக்கும் குறத்திக்கும் உள்ள அருமையான குசும்பை (காதலை தானுங்க) கூறுவது இது குற்றாலக்குறவஞ்சியாக போற்றப்பட்டது.  இதுபோல பிள்ளைத்தமிழ், தாண்டகம், தூது இவ்வாறான பெயர்களில் நம்ம பாட்டியோட காலத்தில் தொகுப்புகளாக காணப்பட்டது. இவையெல்லாம் சிற்றிலக்கியங்கள். அதாவது தமிழரின் காதல், வீரம், மானம், விருந்தோம்பல், போர், வாழ்க்கை, தொழில், நில வகைகள், கொடை  இவையெல்லாம் சின்ன சின்ன பாட்டுல அழகான ஆனால் என்னை மாதிரி ஞான சூனியங்களுக்கு புரியாத மாதிரி சூத்திரங்களாக வடிக்கப்பட்டு இன்று படிக்கப்படாமல் பழமையேறிக்கொண்டு இருக்கிறதுதான் இந்த சிற்றிலக்கியங்கள். 
 டிஸ்கி: இப்பவாவது ஒத்துக்கிட்டீயே
மேலும் சமய இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், நெறிநூல்கள் இவையெல்லாம் முந்தைய தமிழர்களால் தமிழுக்கு ஆக்கப்பட்டு தமிழின் சரித்திரம் தழைத்தோங்கியது...இப்பகூட எப்பாவாது அப்பப்ப ஆராய்ச்சி செய்யனும்னு தமிழின் வரலாறு தேடி எங்கேயாவது இருந்து ஒரு குழு புறப்பட்டுகொண்டுதான் இருக்கிறது, அவ்வாறான தொன்மையான தேடல்களுக்கும், தமிழின் வளர்ச்சியில் நானும் ஒரு கல் எடுத்து வைக்கவேண்டும் என இன உணர்விலும், இந்த பதிவு.
டிஸ்கி : மறுபடியும் ஆரம்பத்துக்கே வந்தாச்சா! நடத்து நடத்து...
அந்த நோக்கில் இணையத்தில் தேடி திரிந்தபோது தேடலின் பலனாய் கிடைத்ததே இந்த இணைய முகவரி அது தமிழ் இணையக்கல்வி கழகத்தின் முகவரி
http://www.tamilvu.org/library/libindex.htm இதுதான் அது. அந்த இணையம். இங்கே போய் பாருங்கள். இந்த பதிவில் தமிழின் பெருமைகளை நான் சொல்ல நினைத்த  சொற்ப விஷயங்களை, தொட்டு சென்றது உட்பட ஏராளாமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே ஒரு தடவை விஜயம் செய்துவிடுங்கள். ஆர்வம் இல்லாதவர்கள் கூட சென்று பாருங்கள். உங்களுக்கும் எதாவது பலன் கிடைத்தால் நலன்தானே.

நூலகம் பற்றி சில
 இவ்வளவையும் சொல்லிட்டு அந்த நூகலம் பத்தி சொல்லாம போனா நல்லா இருக்குமா? கண்டிப்பா இருக்காது தானே! 

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்..
தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், கவிதை-உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் சுமார் 400 புத்தகங்களை வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகும்? புத்தக அலமாரி தாங்குமா? சொந்தமாக வாங்க முடியவில்லை என்றாலும் நூலகத்துக்கு சென்று படித்தால், இவ்வளவற்றையும் படிக்க எவ்வளவு காலம் ஆகும்?

கவலையே வேண்டாம். இத்தனையும் உங்களுக்கு இலவசம். உங்கள் புத்தக அலமாரியில் இவற்றுக்கு இடஒதுக்கீடும் வேண்டாம். நூலகத்துக்கு பாதம் தேய நடக்கவும் வேண்டாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் கணினியில் இணைய இணைப்பை சொடுக்கினால் போதும். அத்தனையும் உங்கள் மவுஸின் கட்டுப்பாட்டில்.

அதிசயமாக இருக்கிறதா? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகத்தை இணையத்தில் திறந்தோமானால் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்நூலகம் மொத்தம் பல்வேறு செயல்பாடுகளை கொண்டு தனித்துவத்தோடு இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில் தொடங்கி புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம் என்று அறுவகை இலக்கணம் வரை தமிழின் ஆதார இலக்கணநூல்கள் 20 தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள், நாலடியார் தொடங்கி அத்தனை பதிணென்கீழ்க்கணக்கு நூல்களும் நூலகத்தில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் தொடங்கி தமிழின் முக்கிய காப்பியங்கள் அனைத்தும் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவை மட்டுமன்றி சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், சித்தர்பாடல்கள் என்று திகட்ட திகட்ட தமிழமுதம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் ரோமன் வரிவடிவத்திலும் தனியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அகராதிகள் தளத்தில் உண்டு. தமிழ் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) பத்து தொகுதிகள் கிடைக்கிறது. பல்வேறு துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் புதிய கலைச்சொற்களை தொகுத்து கொடுக்கிறார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தொகுத்த சுவடிகளை, சுவடிக் காட்சியகமாக கண்முண்ணே விரிகிறது. சுவடிகளை இணையத்தில் விளக்கங்களோடு வாசிக்கலாம்.



 

இவை மட்டுமல்லாது, பண்பாட்டுக் காட்சியகம் ஒன்றும் சிறப்பாக இங்கே இயங்குகிறது. இதில் திருத்தலங்கள், திருவிழாக்கள், கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள் என்று தமிழருக்கான பாரம்பரியப் பெருமைகள் அனைத்துமே ஒலி-ஒளி காட்சிகளாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குறித்தோ அல்லது தமிழர் குறித்தோ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகம், போதும் போதுமென்று சொல்லக்கூடிய அளவுக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது.

ஒருமுறை இந்நூலகத்துக்குள் நுழைந்துவிட்டால் தமிழ் நம்மை ஈர்த்து இங்கேயே உட்கார வைத்துவிடும்.

அப்பறம் முக்கியமான விஷயம். இதையும் கேட்டுடுங்க. அந்த இணையத்துல எழுத்துரு சரிசெய்யும் பணி இன்னும் Under Construction னாம். எனவே சில பகுதிகளை வாசிப்பதில் கொஞ்சம் தகராறு இருக்கலாம். எனவே அதற்கான எழுத்துருவை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுதல் அவசியமாகும். மேலும் படிப்பதில் சிரமம் ஏற்பட்டால் என்னை கேளுங்கள், நான் உதவுகிறேன்.

இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் வருகைகளை பெற்றுள்ள இந்த நூலகத்துக்கு நீங்களும்தான் போய்ப் பாருங்களேன்.

(மீண்டும் ஒரு முறை) இணைய முகவரி : http://www.tamilvu.org/library/libindex.htm

என்னடா சின்னபொன்னு இன்னைக்கு பழைய விஷயம் பேசுதேனு அதிர்ச்சியா இருக்குதா?


டிஸ்கி : சைக்கிள் கேப்புல உன்னை நீயே சின்ன பொண்ணுன்னு சொல்லிக்கிட்டா தான் உண்டு.

நாளைக்கு தமிழுக்கு நீ என்னடி பன்னுன ஆமினா அப்படினு எதிர்பாராதா விதமா மனசாட்சி சேம் சைட் கோல் போட்டுச்சுனா?? அதுக்குதான் கொஞ்சம் அங்கே இங்கே தேடி தமிழினம் என்ற உணர்வில் இந்த பதிவு


டிஸ்கி : மறுபடியும் ஆரம்பத்துல இருந்தா? முடியவே முடியாது. 





 

, ,

25 comments:

  1. ஆமி நீங்க சின்னப் பொண்ணுதான் ஒத்துக்கறேன். அதுக்காக இப்படி பொடியாவா எழுதறது :(. ஏற்கெனவே பொட்டி முன்னாடி நிறைய நேரம் உட்கார்ந்து இருக்கேன்னு என் கண்ணு ஸ்ட்ரைக் பண்ணி வீங்கிப் போய் கிடக்கு. அதையும் கண்டுக்காம உங்க பதிவைப் படிக்க ஓடோடி வந்தா... :(. ஃபாண்ட் அளவை கூட்டுங்க ஆமி... அப்புறமா வந்து படிக்கறேன் :)

    ReplyDelete
  2. கவி
    நேத்து நைட் எழுதி முடிச்ச பிறகு தான் பார்த்தேன். கலைல மாத்தலாம்னு நெனச்சு சோம்பேறியா தூங்கிட்டேன்.தூக்கத்துலையே ஞாபகம் வந்து ஓடி வந்து பார்த்தா நீங்க. இப்ப சரியாச்சா?

    ReplyDelete
  3. ஆமி, நான் தமிழுக்கு கடந்த 6 மாசமாகத்தான் அறிமுகம். அதனால என்னால கொச்சையாகத்தான் எழுத முடியுது. இலக்கணம் பற்றியோ, தமிழ் நூல்கள் பற்றியோ இன்னமும் சரியாக அறிந்திருக்கவில்லை. நீங்கள்கொடுத்திருக்கும் லிங்கில் போய்ய்ப்பார்க்கனும்.
    எந்த அளவுக்கு என் மண்டேல ஏறு தெரியலை.
    இந்த ”டிஸ்கி” எப்படி ஆட் பன்ரீங்க?

    ReplyDelete
  4. கோமு
    கண்டிப்பா ஒரு முறை விசிட் அடிங்க. நிறையா கத்துக்கலாம். என்னன்ன வார்த்தைகளுக்கு சரியான எழுத்து என்பதையும் அதில் தெரிஞ்சுக்கலாம். கண்டிப்பா மூளைக்கு ஏறிடும். கவலைபடாதீங்கோ :)

    டிஸ்கி யா? :)))))))))
    கோமு நீங்க எப்பவும் எழுதுவதுபோல் தான். ஆனா அதுக்கு மட்டும் செலக்ட் பண்ணி போல்ட் பண்ணி சைஸ்க்கு லார்ஜ் கொடுத்து A என்பதில் நமக்கு பிடிச்ச கலர் கொடுதுடணும். அப்ப இப்படி வரும். (எல்லாமே நான் முன்ன சொல்லி கொடுத்தேனே படம் இணைப்பு! அந்த வரிசையிலேயே இருக்கும் :)

    ReplyDelete
  5. இதை படிக்கும் போது பழையபடி ஸ்கூல் போய் விட்ட உணர்வு வந்துடுச்சி :-))

    ReplyDelete
  6. ஜெய்லானி!

    மிக்க நன்றி.....
    எதுக்கு ஸ்கூல் போகணும். அந்த லிங்குக்கு ஓடுங்க :)

    ReplyDelete
  7. ஆமி தங்கள் பதிவில் பொருள்பிழை உள்ளது :).
    தமிழ் கூறும் பதிவுலகில் டிஸ்கி என்றால் அது கடைசியில் போடுவது. முதலில் போட்டால் அது முஸ்கி! இடையிடையே போட்டால் அது மிஸ்கி!

    ReplyDelete
  8. // ஜெய்லானி said...
    இதை படிக்கும் போது பழையபடி ஸ்கூல் போய் விட்ட உணர்வு வந்துடுச்சி :-))//

    ஸ்கூல்ல எல்லாம் படிச்சீங்களா? கிண்டர் கார்டனோட நிறுத்திட்டதா சொன்னீங்க :)

    ReplyDelete
  9. //ஸ்கூல்ல எல்லாம் படிச்சீங்களா? கிண்டர் கார்டனோட நிறுத்திட்டதா சொன்னீங்க :) //

    ஆமாங்க கவி , எங்கேயோ கேட்ட குரல் அதான் சொன்னேன் ..ஹா..ஹா.!!
    //ஆமி தங்கள் பதிவில் பொருள்பிழை உள்ளது :).
    தமிழ் கூறும் பதிவுலகில் டிஸ்கி என்றால் அது கடைசியில் போடுவது//
    டிஸ்கிக்கு முதல்ல தமிழ்ல என்னன்னு சொல்லுங்க ..!! :-))

    ReplyDelete
  10. //தங்கள் பதிவில் பொருள்பிழை உள்ளது :)//

    ஆஹா அது வேறையா! ஆனந்தி பார்த்து நானும் போட்டேன் :)

    சரி அத விடுங்க. ஜெய்லானி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க!

    ReplyDelete
  11. //டிஸ்கிக்கு முதல்ல தமிழ்ல என்னன்னு சொல்லுங்க ..!! :-)) //
    நல்ல நேரத்துல வந்து காப்பாத்துனீங்க ஜெய்லானி!

    ReplyDelete
  12. //ஆஹா அது வேறையா! ஆனந்தி பார்த்து நானும் போட்டேன் :) //
    ஹும்..உடனே மத்தவங்கள மாட்டிவிட்டுர்ரது, அது நான் இல்ல அவங்கதான்னு.
    ஆனந்தியும் இப்படிதான் பன்னிருக்குனு கம்பெனிக்கு ஆனந்தியயும் சேத்துகிர்ரது.பாவம் ஆனந்தி அதுபாட்டுக்கு ஒரு ஓரமா கடையபோட்டு நடத்திகிட்டு இருக்கு,அதுகிட்ட போய் ஏன் ஒரண்ட இழுக்கனும். ஆமினா ஆள் தெரியாம மோதாதீங்க, ஆனந்தியோட ப்ளாக்குல போய் பாருங்க, பார்ட்டி எவ்வளவு பயங்கரவாதினு தெரியும். அந்த ”ரத்தருசியில் மதுரை மச்சான்ஸ்” ஒரு மிரட்டல் பதிவு போட்டுச்சே அதை படிச்சிருக்கீங்களா? ஒரே வெட்டு, குத்துதான். பாத்துப்பா! ஜாக்கிரதை.
    ஹும்..ஆமினா! ஆனந்தி எழுத்துல குறை கண்டுபுடிக்கிற அளவுக்கு நீங்க அறிவு ஜீவியா ஆயிட்டீங்களோ? பொதுவா டிஸ்கி, முஸ்கி,மிஸ்கி இதெல்லாமே சும்மா ஒரு ஒப்பேத்தல்தான்,இதுல லாஜிக் வேறையா? பார்ரா....
    அன்புடன்
    ஆஷிக்

    ReplyDelete
  13. ஹூம்.....

    ஆஷிக் கொஞ்சம் நாளா உங்களுக்கு என்னமோ ஆச்சுன்னு சொன்னாங்க. இப்ப சரியாச்சா? பைத்தியம் மாதிரி பித்து புடிச்சு நைட்லலாம் எல்லாரையும் எழுப்பி எனக்காக நீ பேசேன் நீ பேசேன்னு சொல்லி சொல்லி ஒரு வழியா ஆகிட்டீங்களாம்ல உண்மையா? உங்கள கண்டாலே துபாயே ஒதுங்கி ஓடி போகுதாம்ல உண்மையா? இது பத்தாதுன்னு துபாய்ல வைத்தியம் பாக்க முடியாதுன்னு ஏர்வாடிக்கு அனுப்ப போறாங்களாமே உண்மையா? என்ன செய்ய? விதி வலியது...............

    அப்ப இந்த டிஸ்கி முஸ்கி இஸ்கி க்குலாம் எந்த லாஜிக்கும் இல்லையா? உன்னை நம்பி தான் போட்டேன். நீ தான் சொன்ன மனசாட்சி பேசுற மாதிரின்னு. நீ தான் பொறுப்பு சொல்லிட்டேன்

    ReplyDelete
  14. நல்ல லிங்கு கொடுத்துள்ளீர்கள்... நன்றி.

    ReplyDelete
  15. ஆமினா ....
    .உங்க தமிழ் அழகாய் இருக்கு. தமிழ் மீதுள்ள் ஆர்வம் உங்கள் பக்கம் என்னை வர வைத்தது. நன்றி பயனுள்ள் பதிவு.

    ReplyDelete
  16. @மதுரை சரவணன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்...

    ReplyDelete
  17. @நிலாமதி

    வாங்க நிலா! எப்படி இருக்கீங்க. உங்க கவிதை படிச்சேன். ரொம்ப அருமையா இருந்தது!

    கருத்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  18. ஆமினா, நான் கோமுவோடஃப்ரெண்ட். இப்ப உங்களுக்கும். உங்கப்ளாக்ல பதிவுகளெல்லாமே வித்யாசமா, சுவாரஸ்யமா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. லெட்சுமி!

    உங்களை பற்றி நிறையவே கேள்விபட்டுருக்கேன். சுந்தரி அடிக்கடி சொல்லுவாங்க. என் ப்ளாக்குக்கு வந்ததில் மிக்க சந்தோஷம். அதைவிட என்னை பிரண்ட் என சொன்னது டபுள் சந்தோஷம்

    மிக்க நன்றி
    (பெயர் சொல்லி அழைத்ததற்கு வருத்தமில்லை என நினைக்கிறேன். ஏன்னா நீங்க என் தோழி ஆச்சே :)

    ReplyDelete
  20. ஆமி தமிழ் பற்றி நீங்க எழுதியதை படித்ததும் நியாபகம் வருதே,நியாபகம் வருதே தமிழ் புத்தகம் எடுத்து படித்த நியாபகம் வருதே.பள்ளி,கல்லூரியில் தமிழில் எப்பவும் நான் தான் நல்ல மதிப்பெண் வாங்குவேன்.திருமணம் ஆகி ஆந்திரா வந்ததிலிருந்து தமிழ் இலக்கியம் பற்றி மறந்திருந்தேன்.எல்லாவற்றையும் நியாபகப்படுத்திவிட்டீர்கள் ஆமி.உபயோகமான லிங்க் கொடுத்ததற்க்கு நன்றி.

    ReplyDelete
  21. சுந்தரி!
    நான் கூட தமிழில் அதிகமா மார்க் வாங்குவேன் (தமிழில் மட்டும் :)!

    நன்றி சுந்தரி!

    ReplyDelete
  22. சூப்பர் ஆமி ஆயிரம் இருந்தாலும் தமிழ் தமிழ் தான் சும்மாவா சொன்னார்கள் தேன் போன்ற இனிய மொழினு

    எனக்கு எப்பவுமே தமிழ் மேல் தீராத பற்று உண்டு அது உங்களது தமிழ் நூலகம் பார்த்ததும் பன்மடங்காயிடுத்து

    ReplyDelete
  23. மீரா!
    நானும் அத தான் சொல்றேன் மீரா. முகப்பாவனையோடும் உணர்ச்சியோடும் சரியா சொல்ல முடியும் விஷயம் தமிழில் மட்டும் தான். நானும் பலமுறை உணர்ந்துள்ளேன். உங்களுக்கு தமிழ் பிடிக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும் மீரா. அறுசுவையில் இலக்கியங்கள் பற்றி எழுதியுருந்தீர்கள்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீரா!

    ReplyDelete
  24. வாழ்த்துகள்

    இடுகைக்கு, இன்னும் எழுதுங்கள்

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)