படம்: தளபதி
பாடியவர்: எஸ்.ஜானகி.
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏந்தான் நீரோ
தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ
எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு எதுன்னு தூக்கத்துல கூட கேட்டாலும் சொல்லிடுவேன் இந்த பாட்டுதான்னு. நல்லா ஞாபகம் இருக்கு. இந்த படத்துக்கு போகும் போது நாங்க டார்ச்லைட் கொண்டுட்டு தான் போனோம்.
நம்ம மணிரத்னம் படம் இல்லையா. அதான் :)
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் உடல் மெய்சிலிர்க்கும். பாடும் போது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வரும். தாய்,மகனின் வேதனையை அழகான வரிகள்ல சொல்லி நம் நெஞ்சில் இடம் பதிக்கும் இசையையும்,வரிகளையும் பத்தி சொல்லிட்டே போகலாம். அம்மாவென தெரிந்தும் சொல்ல முடியாமல் தவிக்கும் மகனின் பரிதவிப்பை பார்க்கும் போதே அழுகை தான் வரும். சந்தோஷ் சிவன் தன் ஒளிப்பதிவால் வரிகளுக்கும் இசைக்கும் உயிர் கொடுத்திருப்பார். ரஜினியின் அம்மாவாகிய (?) ஸ்ரீவித்யா தலையில் இருந்து மல்லிகை பூ ஒன்று கீழே விழும். அதை ரஜினி எடுப்பார். தியேட்டரில் பார்க்கும் போது அந்த பெரிய ஸ்கீரினில் அழகா அந்த பூ மட்டும் எல்லா இடத்தையும் ஆக்ரமித்திருக்கும். அந்த வித்தை சந்தோஷ் ஒளிப்பதிவால் தான் முடியும்.
_________________________________________________________________________________
படம்:கருத்தம்மா
பாடியவர்: ஸ்வர்ணலதா
போறாளே பொன்னுத்தாயி பொல
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
ஸ்வர்ணலதாவுக்கு தேசிய விருது(silver lotus award) வாங்கி தந்த பாடல். ஊரைவிட்டு போகும் ஒரு பெண் அந்த ஊரை ,விட்டுப்போன ஞாபகங்களை, தன் நிறைவேறா காதல் நினைவலைகளை சுமந்துக்கொண்டு பற்றி சொன்ன ஒவ்வோர் வரிகளும் அழகு தான். மெல்லிய இசையில் நம்மை அந்த கிராமத்திற்கே கொண்டு சென்றார் ரஹ்மான். வைரமுத்து சொல்லவே வேண்டாம் மனுஷன் அழகான வார்த்தைலாம் கோர்த்திருப்பார்.
அதுல எனக்கு பிடிச்ச வரின்னு சொன்னா இதான்.
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா
___________________________________________________________________________________
படம்-சிந்துபைரவி
பாடியவர்-கே.எஸ் சித்ரா
நான் ஒரு சிந்து காவாடி சிந்து
ராகம் புரியவில்ல
இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. சிடீ தேயுற அளவுக்கு ராஜ் டீவில போட்டும் இதுவரை படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனாலும் இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் அம்மாவுக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் மனநிலை கண்டு நமக்கு ஒரு இனம் புரியாத உணர்வு உண்டாகும். அப்படி எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது இந்த வரிகளில் தான்.
பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
எவ்வளவு வலிகள் மனசுல இருந்தா ஒரு பொண்ணு இப்படி சொல்லுவா? ம் ஒரே மம்மி செண்டிமெண்ட் தான் :( நான் இப்பவே ஊருக்கு போகணும்போல இருக்கு :(
___________________________________________________________________________________
படம்-புதியமுகம்
பாடியவர்: சுஜாதா
நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று என்காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதலென்பதா
இளமை பொங்கிவிட்டதா
இதயம் சிந்திவிட்டதா
சொல் மனமே
மனசுல திடீர்ன்னு காதல் வந்தா ஒடனே வயித்துக்குள்ள பட்டாம் பூச்சி பறக்கும். அப்பறம் கழுத்துக்கும் தொண்டைக்கும் நடுவுல உருவமே இல்லாம ஒரு உருண்ட பாடாபடுத்தும். அந்த மாதிரி நேரத்துல பாடுன பாட்டு இது. மியூசிக்கோட சேர்த்து பாட்டும் அருமையா இருக்கு. படம் என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் புரியாது. அதுனால அப்பவே வணீக ரீதியா தோத்துப்போனது.ஆனாலும் இந்த மாதிரி நல்லபாட்டு இருந்ததுனாலவோ என்னவோ மக்களிடம் அதிகமக பேசப்பட்டது. அழகான இந்த வரிகளை கொடுத்த வைரமுத்து சார் இதே படத்துல ஒரு பாடலில் வரும் ஒரு வரிக்காக கொட்டு வாங்கினதும் குறிப்பிடத்தக்கது. எப்படி அவர் அப்படி சொல்ல போச்சுன்னு பயங்கர சர்ச்சை. அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விஷயம். நீங்க பாட்டுக்கு வாங்க.
__________________________________________________________________________________
படம்-ரேனிகுண்டா
பாடியவர்-பாம்பே ஜெயஸ்ரீ
விழிகளிலே விழிகளிலே
புதிய பூ பூத்ததே
விடுகதையாய் தொடர்ந்தகதை
விடியலைப் பார்த்தே
அழகான உலகினில் நாளும்
அணிந்தோமே பலவித வேடம்
அதுயாவும் கலைகிற நேரம்
படித்தோமே புதுபுதுப் பாடம்
ரேனிகுண்டான்னு ஒரு படம் வந்துருக்குன்னு என் காதுக்கு தகவல் வந்ததும் “ஓ பேரரசு படத்த தமிழ்லையே பாக்கமாட்டேன். நீ தெலுங்குல பாக்க சொல்றீயானு” என் தம்பிய திட்டிமுடித்ததும் தான் அவன் என்னை தமிழ் படம் தான் என சொல்லி திட்ட ஆரம்பித்தான். நல்லபடம். ஆனாலும் அதுல இருக்குற பாடலாம் எனக்கு ஞாபகம் இல்ல. இந்த பாட்டு மட்டும் முதல்முறை கேக்கும் போதே மனதில் பெவிக்விக் போட்டு ஒட்டிடுச்சு. தன் சோகமான நாட்களில் தன்னம்பிக்கையாய் எதிர்க்கொள்ளும் பெண் பாடுவது போல் அமைந்த பாடல். கேக்கும் போதே நம்ம கஷ்ட்டம்லாம் பறந்து போய் நமக்கும் புத்துணர்வு கிடைப்பது போல் இருக்கும்.
__________________________________________________________________________________
படம்- 7/ஜீ ரெய்ன்போ காலனி
பாடியவர்- ஸ்ரேயா கோஷல்
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
இந்த படம் வெளிவந்த போது அநேகமாக எல்லாரும் முணுமுணுக்கும் பாடலாகவே இருந்திருக்கும். தனிமையில் கேட்க அவ்வளவு அருமையா இருக்கும். “என்னை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரி ஸ்ரேயா கோஷல்” என லதா மங்கேஷ்கர் சொன்னபோது இந்தியாவே அந்த பாடகி பக்கம் திரும்பியது. அன்று தான் ஸ்ரேயா கோஷல் பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். இன்று வரை எனக்கு பிடித்த பாடகிகளில் முதலிடம் ஸ்ரேயாவுக்கு தான். இந்த படத்தில் இதுபோல் இரு பாடல். எனக்கு என்னவோ பெண் பாடும் பாட்டில் தான் அதிக ஈர்ப்பு.
பேசிபோன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?
பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா?
இது எனக்கு பிடித்த வரிகள். இறந்து போன காதலி தன் காதலனை கவலைகொள்ளாதே! இன்றும் உன்னுடன் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வது போல் அமைந்த பாடல்.
___________________________________________________________________________________
படம்-லேசா லேசா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
படம் அவ்வளவா போகலன்னாலும் சில பாடல்கள் பிரபலமானது. அதுல உள்ள வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணுங்ககிட்ட கேட்டா இந்தபாட்டு தான் சொல்லுவாங்க.
வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
நான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
(வெவ்வேறு..)
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒரு வரியில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
என்னை கவர்ந்த வரிகள்னு தான் சொல்லணும். உண்மை காதலை பிரதிபலிப்பது போலவே இருக்கும்.
_________________________________________________________________________________
படம் -பாக்கியலெட்சுமி
பாடியவர்- சுசீலாம்மா
பாடியவர்- சுசீலாம்மா
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
பழைய பாடல்களாம் வெறுக்கும் வயதில் இந்த பாடலை உதாசீனப்படுத்தியதுண்டு. சமையலறையில் அம்மா இந்த பாடலை பாடிக்கொண்டே சில நேரம் சமைப்பாங்க. அப்பலாம் 2 பக்கமும் காதுல பஞ்சு வச்சு அடச்சுட்டு இருப்பேன். ஆனா இப்பலாம் அம்மா இந்த பாட்டு பாடமாட்டாங்களான்னு ஏங்குவேன். சுசீலாம்மா எந்த மேடை கச்சேரிகளிலும் முன்னுரிமை கொடுத்து பாடும் பாடல்கள் இரண்டு. ஒன்று இது தான்.
கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் மயங்குது எதிர் காலம்
கணவனை இழந்த ஒரு விதவை பெண்ணின் துயரத்தை உணர்வுபூர்வமான கவிதைவரிகளில் சொல்லியிருப்பாங்க
________________________________________________________________________________
படம்- உயர்ந்த மனிதன்
பாடிவர் -சுசீலாம்மா
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.
சுசீலாம்மாக்கு முதலில் தமிழில் தேசியவிருதை வாங்கி கொடுத்தபாடல். காட்சி அமைக்கப்பட்ட விதமும் இதில் பக்காவா இருக்கும். முன்னுரிமை கொடுக்கும் 2 பாடல்களில் இதுக்கு தான் முதல் இடம். இந்த பாட்ட பாடாம மேடையவிட்டு இறங்கவே மாட்டாங்க. இதுவும் அம்மா எனக்கு அறிமுகப்படுத்திய பாட்டு தான். வரிகளை புரிந்து படிக்க ஆரம்பித்த பின் தான் நிறைய பழைய பாடல்கள் என் பேவரைட் லிஸ்ட்டில் சேர்ந்துச்சு.
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..
மயக்கம் கொண்டதேன்
அச்சம்,படம்,நாணம்,பயிர்ப்பு என்ற பெண்ணுக்குரிய குணங்கள் யாவும் வெளிப்பட்டு நம்மை மயக்க வைக்கும் வரிகளை கொண்ட கவிதை.
__________________________________________________________________________________
படம் : இந்திரா
பாடியவர் : ஹரிணி
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
அட அட அட நம்மை சொல்ல வைக்கும் பாடல். ஹரிணி அசல் சின்ன குழந்தை பாடுனத (அவங்க குரலே அப்படி தான் என்றாலும் இதில் வித்தியாசம் தெரியும்) மாதிரியே படிச்சுருப்பாங்க. புதிதாய் கேட்பவர்கள் நல்லா கவனிச்சு கேட்டா தான் ஹரிணி வாய்ஸ்ன்னு தெரியும். ஹரிஹரனும் இந்த பாடலை பாடினாலும் முதல் அறிமுகம் செய்யப்பட்ட பாடலேயேயே அவரை தோற்கடித்து விட்ட குரலுக்கு சொந்தக்காரின்னு தான் சொல்லுவேன். ஏன்னா ஹரிஹரன் பாடிய பாடல் எனக்கு அவ்வளவா பிடிக்காது.
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்
இந்த வரிக்கு ஸ்ருதி அதிகமா கொண்டு வந்துருப்பாங்க. அப்படி கேக்கும் போது ஆமி நீலாம் வேஸ்ட் அப்படின்னு சொல்ல வைக்கும். நல்ல திறமை.
___________________________________________________________________________________
படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியது: சின்மயி
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
பொதுவா மணிரத்னம் வெளிநாடுகளில் படம் எடுக்க விரும்பாதவர்.இந்த படத்தில் மட்டும் இந்த பாட்டுக்கு (கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே) ஸ்ரீலங்காவில் எடுத்திருப்பார்கள். நம் இந்தியாவிலும் இவ்வளவு அழகான இடங்கள்லாம் இருக்கான்னு நம்மை வாய்பிளக்க வைக்கும் லொகேஷன்களில் தான் அவரின் படபிடிப்பு எல்லாம். ஏன் நான் கூட இந்த பாடலை கேட்ட பிறகு தான்,பார்த்த பிறகு தான் என் ஊருக்கு அருகிலேயே (ராமேஸ்வரம் பக்கத்தில் உள்ள இடங்களில் காட்சியாக்கியிருப்பார்கள்) அழகிய பகுதிகள்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். தன் குழந்தையை நோக்கி தன் மனதில் உள்ளதெல்லாம் சொல்லும் அம்மா. ஆனாலும் அதை உதாசீனப்படுத்துவது போலவே விலகும் மகள் என எல்லா சீனுமே டச்சிங்கா இருக்கும். தேசிய விருது கிடைத்தது. சிம்ரனுக்கும் இந்த படத்தில் கிடைக்க வேண்டிய தேசியவிருது தன் சொந்த குரலில் நடிக்காததால் கிடைக்காமல் போனது.
__________________________________________________________________________________
இவ்வளவுநேரம் பொறுமையா என் மொக்கைகளை படிச்சு இவ்வளவு தூரம் வந்ததுக்கு முதலில் மனமார்ந்த நன்றி. என் ரசனைக்கு ஏற்ப எல்லாத்தையும் போட்டுருக்கேன். பிடிக்கலைன்னா மன்னிச்சு. ஆனா பிடிச்சுருந்தா அப்படியே வரிசையா ஓட்டு போட்டுட்டு போயிடணும் சொல்லிபுட்டேன். அப்பறம் இன்னும் முடியல.இது தொடர்பதிவு இல்லையா? அதனால யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு ஒரு நல்ல எண்ணத்துல சில பேரை புடிச்சு இழுக்கப்போறேன். யாருன்னா
கவிசிவா
ஆனந்தி
வானதி
ஆசியாஓமர்
அமுதா
யாராவது வந்து பதவியை ஏத்துக்கோங்கப்பா....
பதிவு போட்டதும் மறக்காம ரோஜா பூந்தோட்டத்தில் சொல்லிடுங்க....
Tweet | ||||
முதல்வடைய்யா இருக்காதுன்னு நெனக்கிறேன்.
ReplyDeleteஆகா கலக்கிடீங்க ஆமினா க்கா.
பாடல்களின் தேருவு சூபரப்பூஊஊஊஊஊஊஉ
பாரத் கேட்ட விமர்சனம் இங்குயிருகுமுன்னு நெனக்கிறேன். நமக்கெல்லாம் ஞானம் பத்தாதுங்கோ ஒங்கலபோல..
ஆஹா, நல்ல பதிவு, அதுவும் இந்தபடம் பார்க்க ”கையில் டார்ச் லைட் கொண்டுபோனோம்”
ReplyDeleteசெமைக்குறும்புதான் உங்களுக்குஆமினா.
அருமையான பாட்டுக்கள்..தொடர் பதிவுகிற்கு கூப்பிட்டு இருக்கீங்க..நன்றி. முயற்சிக்கிறேன்.
ReplyDeleteநீங்க சொன்னதுல தளபதி, சிந்துபைரவி, கருத்தம்மா பாடல்கள்மட்டுமே ஒருமுறை கேட்டிருக்கேன் நல்லரசனை ஆமி உங்களுக்கு. ஆமா அ....ன்....த
ReplyDeleteபூல் புலையா என்னாச்சு. அம்போன்னு பாதிலியே நிக்குது.
ஒவ்வொரு பாட்டும் அருமையா இருக்கு
ReplyDeleteநல்ல தேர்வு,போறாளே பொன்னுத்தாயும்,ஒரு தெய்வம் தந்த பூவேவும்(அதிக முறை கேட்ட பாடல்) மற்ற பாடல்களும் அருமை.முயற்சிக்கிறேன்.அழைப்பிற்கு மிக்க நன்றி.
ReplyDelete//பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
ReplyDeleteஅம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே//
இந்த வரிகள் மனதை என்னவோ செய்து பிழிகிறது.
//நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.//
இந்தப் பாட்டைப் பாடிப் பார்க்கும் போது மனம் அப்படியே பறக்குற ஃபீலிங்.
வோட்டு மட்டும் போட்டு போயிருக்கேன்..கொஞ்சம் ப்ரீ ஆய்ட்டு வந்து படிச்சு பார்க்கிறேன் ஆமி இந்த போஸ்ட் ஐ...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDelete//முதல்வடைய்யா இருக்காதுன்னு நெனக்கிறேன்//
சுட சுட பொரிச்சதும் முதல் வட உங்களுக்கு தான்.
//நமக்கெல்லாம் ஞானம் பத்தாதுங்கோ ஒங்கலபோல..//
அடப்போங்க மலிக்கா...
உங்கள போல எனக்கு கவித வரதே! அது பெரிய விஷயம் இல்லையா? :)
மிக்க நன்றி மலிக்கா
//இந்தபடம் பார்க்க ”கையில் டார்ச் லைட் கொண்டுபோனோம்”
ReplyDeleteசெமைக்குறும்புதான் உங்களுக்குஆமினா.//
லெட்சுமி இன்னொரு உண்மை சம்பவம் சொல்லவா? எங்க வீட்டு வாண்டுக ,பெரியவங்க எல்லாரும் டீவி பாத்துட்டு இருந்தாங்க இதே தளபதி படத்தை. அப்ப ஒரு வாண்டு படமே தெளிவா தெரியல அப்படின்னு சொல்ல உடனே என் மாமியார் (அவங்க அப்பாவி) லைட் போட்டு இப்ப தெரியுதான்னு கேட்டாங்க பாக்கணுமே எங்க வீட்டில் இருந்த மணிரத்னம் விசிறிகள் எல்லாருக்கும் முகம் சிவந்து போச்சு :)
நன்றி லெட்சுமி
அமுதா
ReplyDeleteமுயற்சித்து சீக்கிரமா போட்டுடுங்க :)
கோமு இங்கே வந்து நான் கூட பல தமிழ் பாட்டுலாம் கேக்கமுடியாம போச்சு.
ReplyDelete//ஆமா அ....ன்....த
பூல் புலையா என்னாச்சு. அம்போன்னு பாதிலியே நிக்குது//
ஏன் பாதில நிக்குது? இன்னும் 2 நாளில் மேலே நிப்பாடிடுவோம் ஓக்கேவா?
ஆவலா கேட்டதுக்கு நன்றி கோமு!
// THOPPITHOPPI said...
ReplyDeleteஒவ்வொரு பாட்டும் அருமையா இருக்கு//
நன்றி சகோ!
@ஆசியா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!
//முயற்சிக்கிறேன்//
பாட்டு எழுதி சீக்கிரமா போட தானே...ஓக்கே ஓக்கே சீக்கிரமா போட்டுடுங்க. எல்லாரும் இப்படி ஓடுனா நானும் என்ன தான் பண்ணுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@அரபு தமிழன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சிந்துபைரவி பாட்டு கேட்டா எனக்கும் அப்படி தன். ஏதோ இனம்புரியாத வேதனை நிலவும்..
மிக்க நன்றி சகோ
@ஆனந்தி
ReplyDelete//வோட்டு மட்டும் போட்டு போயிருக்கேன்..கொஞ்சம் ப்ரீ ஆய்ட்டு வந்து படிச்சு பார்க்கிறேன் ஆமி இந்த போஸ்ட் ஐ..//
ஓக்கே ஆனந்தி பட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு :)
//என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
ReplyDeleteகர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே//
ரசனை..
//இந்த படத்துக்கு போகும் போது நாங்க டார்ச்லைட் கொண்டுட்டு தான் போனோம். //
கிண்டல்.
//கண்களில் கண்ணீர் வரும். தாய்,மகனின் வேதனையை அழகான வரிகள்ல சொல்லி நம் நெஞ்சில் இடம் பதிக்கும் //
சோகம்.
//ஸ்ரீவித்யா தலையில் இருந்து மல்லிகை பூ ஒன்று கீழே விழும். அதை ரஜினி எடுப்பார். தியேட்டரில் பார்க்கும் போது அந்த பெரிய ஸ்கீரினில் அழகா அந்த பூ மட்டும் எல்லா இடத்தையும் ஆக்ரமித்திருக்கும்.//
கவிதை....
//மனசுல திடீர்ன்னு காதல் வந்தா ஒடனே வயித்துக்குள்ள பட்டாம் பூச்சி பறக்கும். //
ஆஹா..
//“என்னை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரி ஸ்ரேயா கோஷல்” என லதா மங்கேஷ்கர் சொன்னபோது இந்தியாவே அந்த பாடகி பக்கம் திரும்பியது.//
புதிய தகவல்..
உருகுதே... மருகுதே பாட்டு கேட்டு இருக்கீங்களா...
//பாரத் கேட்ட விமர்சனம் இங்குயிருகுமுன்னு நெனக்கிறேன்.//
ReplyDeleteகேட்டது கிடைத்தது..
விமர்சனங்கள் மிக அருமை..
//வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
ReplyDeleteநான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா//
வாலிப வாலி..
கலக்கல் பதிவு தந்த ஆமீனா அவர்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteதொடர் பதிவு எழுத உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்... பதிவு வெளியிட்ட உடன் தகவல் சொல்லவும்..
http://bharathbharathi.blogspot.com/2010/11/12.html
எல்லா பாடல் தெரிவுகளும் அருமைங்க.. //இந்த படத்துக்கு போகும் போது நாங்க டார்ச்லைட் கொண்டுட்டு தான் போனோம்.
ReplyDeleteநம்ம மணிரத்னம் படம் இல்லையா. அதான் ://
நாங்களெல்லாம் மணிரத்னம் படம் பகல்ல மட்டும்தான் பார்ப்பமில்ல ஹா ஹா...
உங்க குட்டி சுவர்க்கத்தை இன்றுதான் பார்க்கிறேன்.. அப்படி பின் தொடர்ந்தும் விட்டேன்..
அருமையான பாடல் தேர்வு விமர்சனங்களும் அருமை சகோ
ReplyDeleteஅருமையான பாடல் தேர்வு.. எல்லாமே சூப்பர்.
ReplyDeleteஎன்னையும் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறீங்க. கொஞ்சம் டைம் தாங்க.
ReplyDeleteஎல்லாமே நல்ல தேர்வுகள். இப்படி எல்லா பாட்டையும் நீங்களே எழுதினா நான் என்ன செய்வேன் ஹஹா.
விமர்சனங்கள் மிக அருமை.. //
ReplyDeleteமிக்க நன்றி பாரத்.
//கலக்கல் பதிவு தந்த ஆமீனா அவர்களுக்கு நன்றிகள்//
இந்த மாதிரி வாய்ப்புகள் கொடுத்தமைக்கு மலிக்கா மற்றும் உங்களுக்கு தான் நன்றிசொல்லணும்.
//ரசனை, கிண்டல், சோகம், கவிதை, ஆஹா..//
ஒவ்வொரு பாட்டையும் ரொம்பவே ரசிச்சீங்க என்பதை இதன் மூலம் வெளிப்படுத்திட்டீங்கனு எடுத்துக்குறேன் (நம்மல பத்தி நாம தானே சொல்லிக்கணும் :)
@பாரத்
ReplyDelete//உருகுதே... மருகுதே பாட்டு கேட்டு இருக்கீங்களா//
ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல் பாடினது. ஸ்ரேயாவுக்கு அதிகம் பாராட்டு வாங்கி தந்த பாட்டு. ஜீ.வீ இசை அருமையா இருக்கும்.
ஒரு நேரத்தில் சக்க போடு போட்ட பாட்டு. அந்த படத்தில் வெற்றிகொண்ட பாட்டுகளில் அதிகம் மக்களின் வரவேற்பை பெற்ற பாடலிது தான். எல்லா சேனல்களிலும் அதிகமான நேயர் விருப்பங்கள், ஒளிபரப்பட்ட பாடல் என்றால் இது தான். எல்லாவற்றிகும் மேல்
//கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்//
ரொம்ப பிடித்த வரிகள். அதான் சொன்னேனே எனக்கு ஸ்ரேயான்னா ரொம்ப பிடிக்கும். இங்கே (வடநாடுகளில்) அதிகமா விருதுகுவிக்கும் பாடகி. எந்த அவார்ட் பங்க்ஷன்க்கும் ஸ்ரேயா பேர் இல்லாம இருக்காது.
@பாரத்
ReplyDelete//வாலிப வாலி.. //
உண்மை தான். அந்த வரிகளை கேக்கும் போதெல்லாம் எப்படி தான் இப்படிலாம் யோசிக்கிறாங்கன்னு நெனப்பேன் :)
@ரியாஸ்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//நாங்களெல்லாம் மணிரத்னம் படம் பகல்ல மட்டும்தான் பார்ப்பமில்ல ஹா ஹா...//
ச்ச இது எனக்கு தெரியாமபோச்சே!!
நல்ல டிப்ஸ். இப்ப தான் கொடைக்கானல்ல ரெஸ்ட் எடுக்குறார். அடுத்த ராவணன் 2 எடுத்தா உங்க ஐடியா தான் பாலோ பண்ணனும் ஹீ...ஹீ...ஹீ......
//இன்றுதான் பார்க்கிறேன்.. அப்படி பின் தொடர்ந்தும் விட்டேன்.. //
மிக்க நன்றி சகோ!
தினேஷ்குமார்
ReplyDeleteமிக்க நன்றி சகோ... நான் சும்மா மொக்கைய தான் போட்டேன். ஆனா நீங்க கவிதையிலேயே கலக்கிட்டீங்க பாஸ்......
@சேக் அண்ணா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்...
மிக்க நன்றி அண்ணா.... எல்லாம் உங்க ஊக்கம் தான் :)
@வானதி
ReplyDelete//இப்படி எல்லா பாட்டையும் நீங்களே எழுதினா நான் என்ன செய்வேன் ஹஹா. //
வானதி பிரச்சனையே இல்ல. அதான் போட்டேனே மேலேயே அதெல்லாம் கொஞ்ச நேரத்துல 50க்கும் மேல பாட்டு எடுத்தாச்சு. உங்களுக்கும் சிக்கும் :)
மிக்க நன்றி வானதி... டைம் தானே எடுத்துக்கோங்க. ஆனா நாள் எடுத்துக்காதீங்க (எப்பூடீ....)
//நேற்று இல்லாத மாற்றம் என்னது?
ReplyDeleteகாற்று என்காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதலென்பதா
இளமை பொங்கிவிட்டதா
இதயம் சிந்திவிட்டதா
சொல் மனமே//
அல்லாஹூ...ஒரு கால்த்தில இந்த பாட்டை கேட்டு கேட்டு கேட்டு வெருத்துப்போயிருந்தேன். திரும்பவும் அந்த வர்களைப் படிச்சவுடனே தானாய் ஒரு ஸ்மைல். இது நம்மளை விடாதோன்னு ...ஹி ஹி
@அன்னு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைகும் வரஹ்....
//அல்லாஹூ...ஒரு கால்த்தில இந்த பாட்டை கேட்டு கேட்டு கேட்டு வெருத்துப்போயிருந்தேன்//
அப்படியா? அப்ப ரொம்ப ரசிச்சு கேட்டுருப்பீங்க போல...
அன்னு ஒரு பாட்டு நல்லா வந்துச்சுன்னா எப்.எம், டீவில மியூசிக் சேனல், காலர் டியூன், டிங்டோன், பக்கத்துவீட்டுல ஹோம் தியேட்டரில் அலறல், கல்யாண வீடு, ரோட்டுல டைம்பாஸ்க்காக மொபைல்ல பாட்டு அப்படின்னு அந்த பாட்ட கேட்டு கேட்டு நமக்கு சளிப்ப ஏற்படுத்துவிட்டுடுவாங்க கவனிச்சுருக்கீங்களா? அதே போல் தான் நிறைய பாட்டுக்கள் இந்த பட்டியலில் விட்டுபோனது. முன்பே வா என் அன்பே வா பாட்டு அப்ப்டி தான் நான் வெறுக்குற பாட்டாவே மாறிடுச்சு. அதுனால தான் விரும்புற புதுப்பாட்டுலாம் முடிஞ்சவரை அந்த சீசன் போற வரை கேக்காம விட்டுடுவேன் :)) வருகைக்கு நன்றி தோழி!
சால்.....பூள்...த்ரீ......ஏய்...ய்..எ ..அந்நியன் அவுட்டு.அந்நியன் வெளியேப் போ
ReplyDelete//அந்நியன் அவுட்டு.//
ReplyDeleteஅப்படி என்ன அசம்பாவிதம் நடந்து போச்சு...
எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு :)
நீங்கள் எல்லோரும் பாட்டுப் போட்டி,பரிசுப் போட்டின்னு கலக்குறியே, நான் மட்டும் மூஞ்சிக்கு முன்னாடி முடியை தொங்கப் போட்டுக்கிட்டு, தொண்டையை இருக்கப் பிடிச்சிக்கிட்டுப் பேசுனுமாக்கும்?
ReplyDeleteநாட்டாமையா நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு,பயவுள்ளைக அந்நியன் வேஷம் போடச் சொல்லுச்சுனுப் பார்த்தால், இன் பாக்ஸில் தினம் இருபது வார்னிங் லெட்டர் வருது, நல்ல நல்ல வார்த்தைகளில் !!!
அருமையாக தேர்வு செய்து அழகாக பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
///னக்கு ரொம்ப புடிச்ச பாட்டு எதுன்னு தூக்கத்துல கூட கேட்டாலும் சொல்லிடுவேன் //
ReplyDeleteமுதல் கேள்வி.:- உங்களுக்கு தூக்கத்தில காது கேக்குமா..?
இரண்டாவது கேள்வி :- அப்போ உங்களுக்கு தூக்கத்துல பேசுற வியாதி இருக்கா...?
7/ஜி ரெயின் போ பாட்டு இன்னும் காதுக்குள்ளே கேட்டுகிட்டே இருக்கு..!!
ReplyDeleteகிட்ட தட்ட 6 பாட்டு நான் செலக்ட் பண்ணி வச்சிருந்தேன் இப்ப நீங்க போட்டுட்டீங்க .. அவ்வ்வ்வ்
இனி வேறதான் நா செலக்ட் செய்யனும் .. ((இதுக்குதான் பந்திக்கு முந்துன்னு சொல்றாங்களோ என்னவோ..!! ))
ஆமினா(என்ன பேருங்க இது ? இப்பதான் கேள்விப் படறேன் )
ReplyDeleteரொம்ப அருமையான பாடல்கள் . ஜானகி அம்மா பாட்டு ஒன்னு கூட இல்லையா ??
@அந்நியன்
ReplyDelete//பாட்டுப் போட்டி,பரிசுப் போட்டின்னு கலக்குறியே//
ஆரு அப்படி போனது? அவங்களாம் கெட்டபுள்ளைங்க. நானும் உங்கள மாதிரி எப்படி இருக்கேன் பாத்தீங்களா?
//மூஞ்சிக்கு முன்னாடி முடியை தொங்கப் போட்டுக்கிட்டு// இதுகெல்லாம் வருத்தப்படலாமா? எல்லாருக்கும் முடி பின்னாடி தான் வளரும். உங்களுக்கு முன்னாடி வளரத பாத்து பெருமைபடுங்க அந்நியன்.
//இன் பாக்ஸில் தினம் இருபது வார்னிங் லெட்டர் வருது, நல்ல நல்ல வார்த்தைகளில் !!! // நாலு நல்ல நல்ல வார்த்தையெல்லாம் கத்துக்குற பாக்கியம் உங்களுக்கு கெடச்சுருக்கு போல! எஞ்சாய் :))))
@மாணவன்
ReplyDeleteமிக்க நன்றி மாணவன்.....
//தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//
ம் அதுக்காக தானே வந்துருக்கேன் :) கண்டிப்பா தொடரலாம்.......
@ஜெய்லானி
ReplyDelete//இதுக்குதான் பந்திக்கு முந்துன்னு சொல்றாங்களோ என்னவோ..!! )) //
ரிப்பீட்டூஉஉஉ..................
//முதல் கேள்வி.:- உங்களுக்கு தூக்கத்தில காது கேக்குமா..?
ReplyDeleteஇரண்டாவது கேள்வி :- அப்போ உங்களுக்கு தூக்கத்துல பேசுற வியாதி இருக்கா...?//
அதெல்லாம் தெரியாது. ஆனா ஜீ.கே கொண்டீன்க்கு பாஸ் சொல்ல தெரியும். தென் எனி கொன்ஸ்டீன்? :))
எங்களுக்கும் தப்பிக்க தெரியும்ல :))))
@எல்.கே
ReplyDelete//ஆமினா(என்ன பேருங்க இது ? இப்பதான் கேள்விப் படறேன் )//
என்ன இப்படி சொல்லிட்டீங்க? இதுக்கு முன்னாடி இந்த பேர கேட்டதே இல்லையா?? :))
//ஜானகி அம்மா பாட்டு ஒன்னு கூட இல்லையா ?? //
சாரி சகோ! அடுத்த வாய்ப்பு தட்டி பறிச்சு மறுபடியும் ஜானகி அம்மா பாட்ட சேத்துடலாம். எனக்கு பிடிச்ச பாட்டு ஊருசனம் தூங்கிடுச்சு ஏற்கனவே ஒரு பதிவுல வந்ததுனால இதுல சேக்கல :)
அருமையான பாட்டுன்னு சொன்னதுக்கு மிக்க
நன்றி!
ஆமினா...ஒரு வழியா படிச்சுட்டேன்...சூப்பர் ஆமி...யப்பா...என்னா தொகுப்பு...எவ்வளவு அழகா ரசிச்சிருக்கிங்க...கிரேட் ஆமி...வாழ்த்துக்கள்...))))
ReplyDelete//என்ன இப்படி சொல்லிட்டீங்க? இதுக்கு முன்னாடி இந்த பேர கேட்டதே இல்லையா?? :))///
ReplyDeleteஇதுவரை இல்லை.
////என்ன இப்படி சொல்லிட்டீங்க? இதுக்கு முன்னாடி இந்த பேர கேட்டதே இல்லையா?? :))///
ReplyDeleteஇதுவரை இல்லை ////
அப்படியா? ரொம்ப பிரபலமான நேம் தான். ஒரு வீட்டில் கண்டிப்பாக குறைந்தது 4 பேருக்காவது இந்த பெயர் இருக்கும்..
இனி அடிக்கடி கேள்விபடுவீங்க:)
உண்மையிலேயே ஹரிணி குழந்தையாக இருந்தபோது பாடிய பாடல்தான் நிலா காய்கிறது பாடல்... நன்றி
ReplyDelete//உண்மையிலேயே ஹரிணி குழந்தையாக இருந்தபோது பாடிய பாடல்தான் நிலா காய்கிறது பாடல்//
ReplyDeleteஹரிணி 17 வயசுல பாடுன பாட்டு ஆனா வாய்ஸ் பாத்தா ஏதோ 7முதல் 10 வயசு குழந்தை பாடுன மாதிரி இருக்கும் என்பதால் அப்படி சொன்னேன் பாலா...
மிக்க நன்றி
நல்ல ரசனை...
ReplyDeleteஎல்லாமே சூப்பர் பாட்டு....
/ஏன்னா ஹரிஹரன் பாடிய பாடல் எனக்கு அவ்வளவா பிடிக்காது./
ReplyDeletesame blood..)) எனக்கும் சில பாட்டுகள் தான் பிடிக்கும்...(ஹிந்துஸ்தானி பாதிப்பு அதிகமாய் இருக்குனு நினைசுருக்கேன்...அதான் அவளவாய் பிடிக்காது...):)))
/உண்மையிலேயே ஹரிணி குழந்தையாக இருந்தபோது பாடிய பாடல்தான் நிலா காய்கிறது பாடல்... நன்றி /
He said true :) ஹரிணி ஸ்கூல் இல் பாட்டு பாடியபோது ரஹ்மான் வந்து தலைமை தாங்க வந்தபோது.....அப்போ இந்த குட்டிபொன்னுவின் குரல் பிடிச்சு போயி தான் அந்த பாடல் சான்ஸ் ..:))
//ஆமினா...ஒரு வழியா படிச்சுட்டேன்...சூப்பர் ஆமி...யப்பா...என்னா தொகுப்பு...எவ்வளவு அழகா ரசிச்சிருக்கிங்க...கிரேட் ஆமி...வாழ்த்துக்கள்...)))) //
ReplyDeleteமிக்க நன்றி ஆனந்தி!!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க :)
/// /ஏன்னா ஹரிஹரன் பாடிய பாடல் எனக்கு அவ்வளவா பிடிக்காது./
ReplyDeletesame blood..)) எனக்கும் சில பாட்டுகள் தான் பிடிக்கும்...(ஹிந்துஸ்தானி பாதிப்பு அதிகமாய் இருக்குனு நினைசுருக்கேன்...அதான் அவளவாய் பிடிக்காது...):)))//
ஆனந்தி அந்த பாட்டை அவர் ஒரு மேடையில் பாடினார் பாருங்க. அதோட எனக்கு அந்த பாட்டு கேக்குற எண்ணமே போச்சு.... அத விஜய் டீவில ஒளிபரப்பு செஞ்சுருந்தாங்க... முன்பெல்லாம் ஹரிஹரன் குரல் ரொம்ப பிடிச்சது. போக போக தான் தான் எல்லாம் தெரிந்தவர் போன்ற கர்வத்தில் நல்ல பாடலை மாற்றி தனக்கு ஏற்ப பாடியதில் தான் பிடிக்காமல் போனது.....
//ஹரிணி ஸ்கூல் இல் பாட்டு பாடியபோது ரஹ்மான் வந்து தலைமை தாங்க வந்தபோது.....அப்போ இந்த குட்டிபொன்னுவின் குரல் பிடிச்சு போயி தான் அந்த பாடல் சான்ஸ் ..:))//
அப்படியா ஆனந்தி எனக்கு இந்த விஷயம் தெரியாது.... நான் விக்கிபீடியாவில் படித்தேன். 17 வது வயதில் பாடிய பாடல் என்று!!
http://en.wikipedia.org/wiki/Harini
உங்கள் பாட்டு செலக்சன் சூப்பர் எல்லா பாட்டும் எனக்கும் புடிக்கும்!!!!!
ReplyDelete//உங்கள் பாட்டு செலக்சன் சூப்பர் எல்லா பாட்டும் எனக்கும் புடிக்கும்!!!!!//
ReplyDeleteநன்றி பாசித்! பாதி உங்க அண்ணாத்தே செலக்ஷன்........
wiki paththi therila..))) but harini interview il ketu irukken...))))
ReplyDeleteஅப்படியா ஆனந்தி!!
ReplyDeleteநீங்க சொன்ன தகவல் எனக்கு புதிது...
எனக்கு தெரியாது எப்படி அவங்க இந்த துறைய வந்தாங்கன்னு! நீங்க சொல்லி தான் தெரிஞ்சுக்கிட்டேன் தேங்க்ஸ்..
ஹாய் ஆமி உங்க பாடல் தொகுப்பு அருமை.அதை விட வுங்க குட்டி சோ ஸ்வீட்.இதிலே நான் ரொம்ப ரசித்தது நினைத்து நினைத்து பார்தால் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.சின்னதாயவள்,போராளே,
ReplyDeleteநேற்று இல்லாதமாற்றம்,நாளை இந்த போன்ற பாடல்கள் அருமையோ அருமை.பாடல் பற்றி நீங்க சொன்ன விதம் நல்லாயிருந்தது.
ஹாய் சுந்தரி!!
ReplyDeleteஎப்படி இருக்கீங்க? அப்ப நம்ம ரெண்டுபேரோட ரசனையும் ஒன்னா இருக்குன்னு சொல்லுங்க )))
மிக்க நன்றி சுந்தரி!!
செலக்ஷன், வர்ணனை அத்தனையும் அருமை!!
ReplyDeleteஅருமைங்க ஆமீனா வேலைப்பளு அதான் பதிவுகள் படிக்க முடியல.
ReplyDeleteஆமி நான் இன்னிக்குத்தான் உங்க ப்ளாக் பம் வந்தேன்.கோமு மேடம் சொன்னாங்க.உங்க ப்ளாக் ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்குன்னு. நான் ப்ளாக் எதுவும்தொடங்கலியே, பின்னூட்டம் அனுப்பமுடியுமான்னுகேட்டேன் எல்லாம் முடியும்னு சொன்னாங்க வந்திட்டேன். உண்மைலயே சூப்பரா இருக்குங்க. uma.k
ReplyDeleteஆமி,னான்chitra.mஅறுசுவைத்தோழிதான். கோமு மேடம் சொல்லித்தான் நீங்கல்லாம் ப்ளாக் தொடங்கி இருக்கும் விஷயமே தெரிஞ்சுது.உடனே வந்துட்டேன். இன்மேலதான் ஒவ்வொருத்தர் ப்ளாக்கா போயி பின்னூட்டம் கொடுக்கணும். ரியல்லி உங்க ப்ளாக் சூப்பரா இருக்கு.
ReplyDelete// எம் அப்துல் காதர் said...//
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிக்க நன்றி சகோ!!
தொடர்ந்து வாங்க
@கண்மணி!
ReplyDeleteஅதானே ஆளையே கொஞ்ச நாளா காணாமா? பரவாயில்ல கண்மணி... எங்கே ஓட போகுது...பொறுமையா படிங்க :) ஆனா அப்பப்ப மறக்காம தலைய காட்டிடுங்க. உங்களுக்கு ப்ளாக் எதுவும் இருக்கா பா? என்னால கண்டுபிடிக்க முடியல :(
ஹாய் உமா!!
ReplyDeleteஎப்படி இருக்கீங்க? மிக்க மகிழ்ச்சி உங்களை பார்த்ததும்...இனி தொடர்ந்து வந்துடுங்க..
பையன் நல்லா இருக்காரா? கேட்டதாக சொல்லுங்க உமா!
நான் சித்ரான்னு சொன்னாலே போதுமே நான் கண்டிபுடிச்சுருப்பேனே :))
ReplyDeleteஎப்படி இருக்கீங்க? மத்தியப்ரதேஷ்ல சீசன் எப்படி இருக்கு? இங்கே பயங்க குளிர் :(
அடிக்கடி வந்துடுங்க சித்ரா :) பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் பல!!!
எப்பங்க அடுத்த பதிவு?
ReplyDelete@பாரத்
ReplyDeleteஅத தாங்க ரெடி பண்ணிட்டு இருக்கேன்..... இன்னைக்குள்ள போடுறதா ப்ளான்....
இன்ஷா அல்லாஹ்.....
ஆர்வமா (அப்படி தானே! கொல வெறியோட கேட்டுடலையே:) கேட்டதுக்கு மிக்க நன்றி சகோ!
நல்லதொரு தொகுப்பு....
ReplyDeleteஅதிலும் தளபதியில் வரும் அந்தப் பாட்டு மிக அருமை.. ரஜினியின் நடிப்பும் நன்றாகவே இருக்கும்..
@ சாமகோடாங்கி
ReplyDeleteஉங்க பெயர் பிரகாஷ் என நினைக்கிறேன். சரியா?
மிக்க நன்றி சகோ!
உண்மை தான் அதில் வரும் வசனங்கள் , பிண்ணணி இசை என எல்லாமே அருமையாக இருக்கும்......
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!!
ஹாய் ஆமி,ப்ளாக் அருமையா இருக்கு.இனிமேல் தொடர்ந்து வந்துடுவேன்.எல்லா பாடல்களுமே அருமை.தாய்மை,காதல்,சோகம்,ஏக்கம் எல்லா விதமான உணர்வுகளையும் சொல்லற பாட்டா போட்டிருக்கீங்க.
ReplyDeleteஹாய் நித்திலா!!
ReplyDeleteஎப்படி இருக்கீங்க? மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்!!
தொடர்ந்து வந்துடுங்க :)
தொடர் பதிவு ோட்டாச்சு ஆமினா..
ReplyDeleteதட்டி கழிக்காம போட்டதுக்கு மிக்க நன்றி அமுதா!!
ReplyDeleteஉங்க ரசனைய பாக்க இதோ அங்கே தான் வந்துட்டு இருக்கேன்......
நல்ல பாடல்கள்..
ReplyDeleteதளபதி படத்துல வர்ற பாடலை எத்தனை முறைப் பார்த்தாலும் கண்ணுல நீர் தேங்கிடும்..
@ பாபு
ReplyDeleteஎத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல் தான்....
தெருவில் எங்கேயாவது இப்பாடல் கேட்டால் கூட வண்டியிலிருந்து இறங்கி கேக்கும் அளவுக்கு பிடிச்ச பாட்டு இது!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாபு!!!
பாட்டு வரிகள் விபரம் தேடத்தான் சிரமம்,ரெடியாகிட்டு இருக்கு ஆமினா.சிம்பிளாக போட்டுவிடுகிறேன்,தேடினால் மண்டை காயுது.
ReplyDeleteஉங்க நிலமை புரியுது ஆசியா.....
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது செய்யுங்க பா. அவசரம் ஒன்னுமில்ல....
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
ReplyDelete