ரெண்டு டப்பா இருக்கிறது ஒரு டப்பாவில் பொற்காசுகள், வெள்ளிக்காசுகள் என நிரப்பபட்டு திறந்த நிலையில் இருக்கிறது, மற்றொன்று மூடியே வைக்கப்பட்டுள்ளது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் பொற்காசுகள் இருந்தும் கூட அதை விடுத்து, மூடிய டப்பாவில் என்ன இருக்கிறது என்பதை அறியவே நம் மனசு அலைபாயும் அப்படினு அந்தா.. அவரு சொன்னாரு (யாருன்னுல்லாம் கேட்க கூடாது). அதுனால ரகசியமாக இருக்கிற எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்..அதை அறியவே எப்போதும் ஆர்வமா இருப்போம்
இல்லையா? அதுனாலதான் சினிக்கதைகளில் சில மினிக்கதைகளை மர்மமாக மிச்சம் வைத்து அதை ஃப்ளாஷ் பேக்னு ஒரு யுக்தி மூலம் அந்த மர்மமுடிச்சுகளை அவிழ்த்துவிடுவார்கள்.
இல்லையா? அதுனாலதான் சினிக்கதைகளில் சில மினிக்கதைகளை மர்மமாக மிச்சம் வைத்து அதை ஃப்ளாஷ் பேக்னு ஒரு யுக்தி மூலம் அந்த மர்மமுடிச்சுகளை அவிழ்த்துவிடுவார்கள்.
ஆமா.. மேடம் ஏன் இன்னைக்கு மர்மமாவே பேசுறாங்கனு எல்லாருக்கும் மர்மமா இருக்கா? அது ஒன்னுமில்லை போனவராம் நான் ஒரு மர்மக்கோட்டைக்கு போய் எக்கசக்கமா பயந்து போயி வந்தேன். ரெண்டு நாள் காய்ச்சலில் மீண்டு, மீண்டும் வந்துள்ளேன்
நுழைவு வாயில் |
காலைல வீட்டிலிருந்து கிளம்பி ரெடியானதுமே என்னவர் Guide இல்லாம எங்கேயும் போக கூடாதுன்னு எச்சரிக்கைவிடுத்தார். மகனை கூடிட்டு போக வேண்டாம் என சிலர் சுற்றறிக்கை விடுத்தனர் எச்சரிக்கை&சுற்றரிக்கை இதெல்லாம் மீறி ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அந்த இருட்டு பிரதேசத்தில் பிரவேசிக்க எத்தனித்தோம்:)
காலையிலேயே வீட்டை விட்டு கிளம்பியாச்சு. நானும் நான் பெத்த மகனும்(என்னைவிட பயங்கர தைரியசாலி), என் வீட்டுக்கு வந்த ஒரு ஹெஸ்ட்டும், எடுபுடிக்கும் ஹிந்தி பேசவும் ஒரு சின்ன பையன் இதுதான் எங்க டீம். அக்கா வண்டி புக் பண்ணியாச்சு இப்ப வந்துரும்னு சொல்லி முடிச்சான். வண்டியும் வந்துச்சு. அது ஆட்டோதான் வேற ஒன்னுமில்ல.இதுக்கு இவ்வளவு பெரிய பில்டப் தேவையே இல்லையேன்னு அவன ஒருமுற முறச்சுட்டு கிளம்பியாச்சு.
காலையில் காலை எடுத்து அந்த மர்மக்கோட்டையில் வைத்த கணம் முதல் மாலை திரும்பும் வரை திக் திக் வினாடிகள்தான். முதல்லேயே சொன்னாங்களே லக்னோ குடிமக்கள் “உள்ளே போனா உயிரோட திரும்புவே ஆனா உணர்வோட திரும்பமாட்டேனு”....கேட்டேனா? இல்லையே? ஆமிக்குத்தான் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறமாதிரினு வெட்டியா பில்டப் விட்டா....?!கடைசில பில்டப் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக்னு குட்டு வெளிப்பட்டுருச்சு.
ஆட்டோவில் பயணித்து 45 நிமிடங்கள் கரைந்து போனபின்பு அந்த கோட்டையை அடைந்தோம். சாலையோரத்தில் அதன் தலைவாயில். மக்கள் வெள்ளம் போக்குவரத்து நெரிசலுமாக அந்த பகுதியே உற்சாகப்படிருந்தது கண்டு எனக்கும் செம உற்சாகம். அந்த கோட்டையின் முகப்பே பழங்கால வரலாற்றை பத்திரமாக கொண்டுள்ளது. அவை புதுபிக்கபட்ட போதிலும் பொழிவுற்ற போதிலும் அதன் அமைப்புகள் அந்த காலத்தை விட்டுக்கொடுக்காமல் அடம்பிடித்து கொண்டு இருக்கிறது.
லக்னோவை ஆண்ட நவாப் ஆசாப் உத் தவ்லா(1775-1797) என்பவர் 1784 ஆம் ஆண்டு தன்னை தாக்கவரும் எதிரிகளை குளப்பும் நோக்கத்தில் கட்டிய கோட்டைக்கு பெயர் தான் இமாம்பாரா.
ashaf-ud daula (or) nawab ud daula |
Tweet | ||||
என்னங்க ஆமி, ரொம்ப ஆர்வமா படிச்சுக்கிட்டே வந்தேன் பொசுக்குனு தொடரும் போட்டுட்டீங்களே.?
ReplyDeleteலெட்சுமிம்மா!
ReplyDeleteஎல்லாத்தையும் ஒரே நேரத்துல படிச்சா பொசுக்குன்னு போய்டூமே! அதான் தொடரும் போட்டேன் :)
மாமி .. ஒ.. சாரி ..ஆமி மர்மக் கோட்டை விறு விருப்பாத்தான் போகிறது,நீங்கள் கண்ட மர்மத்தை சீக்கிரமா சொல்லிடனும்,இல்லாவிட்டால்...நான் பேசமாட்டேன் சட்டம்தான் பேசும்.
ReplyDeleteஅந்நியன் 2
என்னது சின்ன புல்ல தனமா இருக்கு.ரகசியம் என்ன சீக்கிரம் சொல்லுங்க.அய்யோ!அய்யோ!
ReplyDeleteஎன்ன ஆமி இப்படி சர்ப்ரைஸா பாதில
ReplyDeleteவிட்டுட்டு போயிட்டீங்க. உடனே பாக்கி யையும் சொல்லிடுங்க.
அப்போ சீக்கிரமா லக்னோ வுக்கும் சேர்த்து ஒரு டிக்கெட்டை போட்டுட வேண்டியதுதான் .. ஆர்வத்தை கிளப்பிட்டிங்களே..!!
ReplyDeleteஅது சரி , கோட்டை ராத்திரி 10 மணிக்கு திறந்து இருக்குமா...(( ஏன்னு கேட்டா பகல்ல எனக்கு கண்ணு தெரியாது அதான் ஹி..ஹி..!! ))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDelete//நீங்கள் கண்ட மர்மத்தை சீக்கிரமா சொல்லிடனும்,இல்லாவிட்டால்...நான் பேசமாட்டேன் சட்டம்தான் பேசும்.//
என்ன சகோ...இப்படி சொல்லி பயமுடுத்துறீங்க? எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். அதுக்காக அனா ஆவன்னான்னா சட்டத்த பேசவிட கூடாது....
சீக்கிரமா சொல்லிடுறேன் :)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஐயூப்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteபாசித் எப்படி இருக்கீங்க?!
//என்னது சின்ன புல்ல தனமா இருக்கு.ரகசியம் என்ன சீக்கிரம் சொல்லுங்க.அய்யோ!அய்யோ//
இப்ப தான் முதல் எபிசோட் போட்டுருக்கேன். அதுக்குல்ளையும் முடிக்கணுமா? அவ்வ்வ்வ்வ்வ்.........
கோமு
ReplyDelete//உடனே பாக்கி யையும் சொல்லிடுங்க.//
அஸ்க்கு பிஸ்க்கு,அப்பள வட (என் மகனிடம் கற்றுகொண்டது :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஜெய்!
எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க. கோழி அடிச்சு கொழம்பு வைச்சு விருந்து வைக்கிறேன் :) தெம்பா போய் கோட்டையை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம் :)
பச்சபுள்ள ஆசைப்பட்டா 12 மணிக்கு கூட கோட்டைக்கு விடுவாங்க :) ஹீ...ஹீ...ஹி...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteஉங்களுடைய இந்த பதிவு சமூக சிந்தனையோடு கலந்து கலகலப்பாக செய்தால் நன்றாக இருக்கும் என்பது
என்னுடைய தனிப்பட்ட கருத்து
குறிப்பாக
முகலாயர்கள் சில அழிவுப் பணிகளையும் செய்தார்கள் எனினும் அவர்கள் அழிவு வேலையைக் காட்டிலும் ஆக்கப்பணி அதிகமாகப் புரிந்தார்கள். பல நூற்றாண்டுக் காலம் நிகழ்ந்த ஆக்கப்பணி அனைத்தும் அவர்கள் கையாலேயே நிகழ்ந்தது அல்லது அவர்களுடைய தூண்டுதலால் நடந்தது. அவர்கள் கல்வி ஒளியைப் பரப்பினார்கள்;சிந்தனையைத் திருத்தினார்கள் நாட்டின் பொருள்களையும் கருவிகளையும் அந்தக்காலதரத்திற்கேற் பபயன்படுத்தினார்கள் அமைதியும் நீதியும் நிரைந்த ஆட்சிமைப்பை நிறுவினார்கள். இஸ்லாமியக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் அவர்கள் புரிந்த பணி தரத்தில் மிகச்சிறந்தது என்று சொல்ல இயலாது;சில குறைகள் இருக்கத்தான் செய்தன ஆனாலும் நாட்டின் முந்தைய நிலையையும் ஒப்பீட்டுப் பார்க்கும் போது அது மிகவும் உயர்ந்தாக இருந்தது
அதற்குப்பின் அவர்களுக்குள்ளும் ஆக்கப்பணி தேய்ந்து அழிவுப்பணி விரியத் தொடங்கியது
கட்டுமானம் முன்னேற்றம் சீர்திருத்தம் ஆகிய பனிகளை விடுத்து இறைவனால் அருளப்பட்ட சக்திகளையும் கருவிகளையும் விரயமாக்கத் துவங்கினார்கள் அதனைப் பயன்படுத்தினாலும் வாழ்வைக் கெடுக்கும் காரியங்களிலேயே பயன்படுத்தினார்கள். சொகுசு வாழ்விலும் உடல் சுகத்திலும் மூழ்கிக் கிடந்தார்கள்! ஆட்சியாளர்கள் வெள்ளையாரிடம் தோற்றுப்போய் டில்லி செங்கோட்டையிலிருந்து வெளியேற நேர்ந்தபொழுது, இளவரசர்கள்-ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டி இருந்தவர்கள்- தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒடவும் முடியாத நிலையில் இருந்தார்கள் ஏனேனில் அவர்கள் பூமியில் நடக்கும் பழக்கத்தையும் நீண்ட நாட்களுக்கு முன்பே விட்டுவிட்டிருந்தார்கள்! இந்த இழிநிலையில் விழும் அளவுக்கு, அவர்கள் சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்
இறைவனின் முதல் முக்கிய நியதி என்னவேனில், “அவன் ஆக்க வேலையை விரும்புகிறான்;அழிவு வேலையை விரும்புவதில்லை” என்பதே
ஒரு சரித்திர இடத்தை சுற்றிப்பார்க்க நேரிடும்போது அதனால் நமக்கு என்ன படிப்பினை கிடைக்கிறது என்ற விஷயம் நம்முடைய முதற்கவனமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து
மற்றபடி அருமையாக எழுதுகிறீர்கள்
வாழ்த்துக்கள்
படிப்பதற்கு முன்பே ஒட்டு போட்டு விட்டேன்
மர்மமா அச்சோ.
ReplyDeleteஅப்படியெல்லாம் சொல்லமாட்டேன் நமக்கும் ரிஸ்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் வரும் லீவில் நேர அங்கே ஆமி க்கா வீட்டுக்குவந்து ஸ்டே அப்படியே ரிஸ்கெல்லாம் ரஸ்காக்கிவிட்டு வருவதுன்னு முடிவே பண்ணிட்டேன்..
//ஹைதர் அலி said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..//
வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ!
படிப்பதற்கு முன்னே ஓட்டுப்போட்டதற்கு மிக்க நன்றி :)
செவிவழியாகவும், அங்கு போனதில் கிடைத்த பல வரலாற்று தகவல்களை கண்டிப்பாக இடையிடையில் பகிர்ந்துக்கொள்வேன். அந்த கோட்டைக்கு போய் பல வரலாற்று விஷயங்கள் கற்றுக்கொண்டது உண்மை தான். ஆனால் காலபோக்கில் அத்தகைய கதைகள் மாற்றப்பட்டிருக்கலாம்.அல்லது செவிவழி செய்தியாக மட்டுமே இருக்கலாம். எதையும் உறுதியாய் சொல்ல என்னால் இயலாத காரியமே. அதனால் தான் மிகவும் கவனமாக எழுத வேண்டும். நீங்கள் சொன்ன முகலாய வரலாறு பலவும் அவரவர் தங்கள் வசதிக்கேற்றார் போல் மாற்றியதால் தான் வரலாறு சார்ந்த பலவிஷயங்களும் சிதைக்கப்பட்டவிட்டது. அதனால் தான் உண்மை நிலை எதுவென்று முழுமையாக அறியாமல் எதையும் சொல்லிவிடமுடியாது.
நவாப் பத்தி நமக்கு தேவையில்லாதவிஷயம் என நான் குறிப்பிட்டிருப்பதால் அதை விடுத்து மர்மம் பற்றிய விஷயம் மட்டுமே சொல்ல போகிறேன் என்ற எண்ணம் வேண்டாம்.நான் சொல்ல வரும் விஷயங்கள் பலவும் வரலாறு பற்றி சொல்லாமல் வெறும் கதையை மட்டுமே சொல்லி நழுவிவிடமுடியாது. அப்படி செய்தால் அதில் அர்த்தமும் இருக்காது. அதிகமாகவே விஷயம் இருக்கும். கண்டிப்பாக பகிர்ந்துக்கொள்கிறேன்.
சகோ நீங்க இப்படி எனக்கு சொல்வதால் ரொம்ப உற்சாகத்தில் உள்ளேன். என்னை ஊக்கப்படுத்தி மேலும் எழுது என அன்பு கட்டளையுடுவது போல் உள்ளது. இப்படி நீங்க சொன்னதுக்காகவே நிறைய விஷயங்கள் சொல்லணூம்னு தோணுது. எல்லாவற்றிற்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
@மலிக்கா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//மர்மமா அச்சோ.
அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் நமக்கும் ரிஸ்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் //
ம்ம் நாங்களும் அப்படி சொல்லிட்டு தான் உள்ள போனோம் :)
//ஆமி க்கா வீட்டுக்குவந்து ஸ்டே அப்படியே ரிஸ்கெல்லாம் ரஸ்காக்கிவிட்டு வருவதுன்னு முடிவே பண்ணிட்டேன்..//
முடிவெடுத்துட்டா நழுவ கூடாது. கண்டிப்பா வாங்க. ஊருக்கு போகும் போது ஒருமூட்டை ரஸ்க் தூள் கொண்டுட்டு போயிடலாம் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா
அப்படியே வாங்க உங்களை தொடருக்கு அழைத்துள்ளேன்
ReplyDeletehttp://niroodai.blogspot.com/2010/11/blog-post_23.html//
நாங்களும் எழுதிட்டோமுல்ல வந்துபாருங்க.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..தங்களது படைப்பு அருமை.சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது நல்லா இருக்கு,தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
ரஜின்
போய் பார்த்திட்டு வந்து சேர்ந்தாச்சு அல்லவா??? அதுவே பெரிய சாதனை தான் போங்கள். எனக்கு இப்படி அரண்மனை, கோட்டை எல்லாம் பார்க்கவே பயம்.
ReplyDeleteமலிக்கா என்னையும் ஒரு ஆளா நெனச்சு மதிச்சு கூப்பிட்டதுக்கு மிக்க நன்றி :)
ReplyDeleteஇப்ப தான் என் தோழிகிட்ட கேட்டேன் பொண்ணுங்க பாடுற மாதிரி பாட்டுலாம் சொல்லு நான் செலக்ட் பன்றேன்னு. அவ முதல்ல சொன்ன பாட்டே மல மல மருதமலை என்னும் சமூக சிந்தனை அதிகம் கொண்ட பாட்டு தான் :) இனி யாரையும் நம்பி பிரோஜனம் இல்லைன்னு நானே மதியம் மண்டைய பிச்சு எப்படியோ செலக்ட் பண்ணிட்டேன். அடுத்த பதிவு அதான் :)
வானதி
ReplyDeleteகண்டிப்பா பெரிய சாதனை தான். ஆனா வீட்டுக்கு வந்து அதே ஞாபகமாவே இருந்துச்சு:(
//எனக்கு இப்படி அரண்மனை, கோட்டை எல்லாம் பார்க்கவே பயம்.//
என்ன வானதி இப்படி சொல்லிட்டீங்க? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி
வ அலைக்கும் சலாம் வரஹ்..
ReplyDeleteசகோ ரஜின்
உற்சாகப்படுத்தும் விதமாக சொன்ன கருத்துக்களுக்கும் முதல் வருகைக்கும் மனமார்ந்த நன்றி சகோ
ஆமீனா.. என்ன இதெல்லாம் ரொம்ப சஸ்பென்சோட முடிச்சிருக்கீங்க.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.. சீக்கிரம் சொல்லுங்க..
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteஇதுதான் நான் முதல் தடவையாக பார்ப்பது. தலைப்பே மிக பயங்கரமாய் இருந்ததால் தமிழிஷில் முதலில் நிற்கிறது போல. ஆனால், திடீர்னு நிறுத்திட்டீங்களே...சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதுங்க. இனி ரெகுலரா பிரசண்ட் மேடம்!!.
வாழ்த்துக்கள், சில மாதங்களிலேயே, நல்ல வளர்ச்சி, நல்ல எழுத்து நடை. கலக்குங்க!! :)
வ ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteசேக் அண்ணா!
மிக்க நன்றி... சீக்கிரமே சொல்லிடுறேன் :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
ReplyDeleteஅன்னு எப்படி இருக்கீங்க. உங்கள பயணிக்கும் பாதை ப்ளாக்கில் அதிக தடவ பாத்துருக்கேன். பேச தான் வாய்ப்பு கிடைக்கல.
//இனி ரெகுலரா பிரசண்ட் மேடம்!!. //
அன்னு இனிமே ரெகுலரா பிரண்ட் போடலன்னா ப்ளாக்குக்கு வந்து மொக்க போடுவேன் :)
மிக்க நன்றி பா.
ஏன் ஆமி இப்படீல்லாம்?! நான் ரொம்ப பயந்த அப்பாவியாக்கும். இப்பூடி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கக் கூடாது. என்னவோ ஏதோன்னு பயமா இருக்குதுல்ல :(.
ReplyDeleteசீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க.
ரொம்ப பயந்த அப்பாவியாக்கும்//
ReplyDeleteஇங்கே மட்டும் என்னத்துல வாழுதாம்? :(
//சீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க.//
ரெடியாகிடுச்சு.. சீக்கிரமே போடணும் :)
//அக்கா வண்டி புக் பண்ணியாச்சு இப்ப வந்துரும்னு சொல்லி முடிச்சான். வண்டியும் வந்துச்சு. அது ஆட்டோதான் வேற ஒன்னுமில்ல//
ReplyDeletehahha:)))
எனது உபி நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்...உள்ளே மாட்டிகிட்டா வெளியேற ரொம்ப கஷ்டம்னு ஒரு நாள் கண்டிப்பாக வந்த பார்க்கவேண்டும்.
ReplyDeleteஇதைப்பற்றி நிறைய எழுதுங்கள்.கண்டிப்பாக படங்களை போட மறக்கவேண்டாம்... சரித்திரம் படிக்க படிக்க சலிக்காதவை...
// சரித்திரம் படிக்க படிக்க சலிக்காதவை...//
ReplyDeleteஆமாமா சரித்திரம் படிக்க நல்லா இருக்கும். ஆனா அதுல பரீட்சை வச்சாத்தான் ரொம்ப கஷ்டம் :(. எத்தனை வருஷங்களையும் பெயர்களையும்தான் மனப்பாடம் பண்றது :(
//அக்கா வண்டி புக் பண்ணியாச்சு இப்ப வந்துரும்னு சொல்லி முடிச்சான். வண்டியும் வந்துச்சு. அது ஆட்டோதான் வேற ஒன்னுமில்ல//
ReplyDeletehahha:)))//
நீங்க வேற! அந்த ஆட்டோ வரதுக்குள்ள நான் என்னன்ன கற்பன பண்ணி வச்சுருப்பேன்னு நீங்களே கற்பன பண்ணிக்கோங்களேன்.....
//உள்ளே மாட்டிகிட்டா வெளியேற ரொம்ப கஷ்டம்னு //
ReplyDeleteஉண்மை தான். வழிகாட்டி இல்லாமல் உள்ள போனா திரும்பவே முடியாது. அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவங்க கூட சரியா வழி கண்டுபிடிக்க தெரியாது. என்னவர் அவங்க பிரண்ட்ஸ் கூட போய் அதுல ஒரு ஆள் சொன்னாராம் நான் கூடிட்டு போறேன்னு! மாடி வரை போயாச்சு..ஆனா கீழே வர முடியலையாம்.......... அதான் நான் போகும் போது படிச்சு படிச்சு சொல்லிவிட்டார் கைடு இல்லாம போக கூடாதுன்னு :)
கண்டிப்பா வாங்க......ஒரு த்ரில்லான அனுபவம் கிடைக்கும்..
நிச்சயமா இந்த கோட்டைய பத்தி நிறையா போட்டோவோட சொல்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதாப்
//ஆனா அதுல பரீட்சை வச்சாத்தான் ரொம்ப கஷ்டம் :(. எத்தனை வருஷங்களையும் பெயர்களையும்தான் மனப்பாடம் பண்றது :(//
ReplyDeleteகவி எனக்கு மார்க் போறதே அதுல தான் :( நானும் என்னன்னமோ பண்ணீ மண்டைல ஏத்துவேன். ஆனா அங்கே போனதும் எல்லா சரக்கும் ஒன்னா கலந்து என்னை கன்ப்யூஸ் பண்ணிடும்.....
கத கூட அடிக்க முடியாது :(