என்ன கொடுமை பாத்தீங்களா? ரகசிய காமிரா வச்சு லாட்ஜ்,டிரஸ்ஸிங் ரூம்......இந்த மாதிரி இடத்துல தான் வச்சு வக்கிர புத்திக்காரங்க வீடியோ எடுத்தாங்க. இப்ப கதையே வேற! ஹாஸ்பிட்டல்ல வச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. கடவுளுக்கு அடுத்தப்படியா இருக்கும் டாக்டரே அதுவும் பெண் மருத்துவரே இந்த மாதிரி ரகசிய காமிரா மூலம் தன் மருத்துவமனைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்துருக்காங்க.

சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள  பட்டாபிராம் ரயில்வே கேட்டுக்கு பக்கத்துல இருக்குற கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் தான் இந்த வக்கிர செயலை செய்தது. அதுவும் இந்த ஹாஸ்பிட்டல் பிரசவத்துக்கு பெயர் போன இடம்.இந்த மாதிரி மருத்துவமனைகள் அதுவும் குறிப்பாக லேடி டாக்டர் என்பதால் தான் பலரும் நம்பி போறாங்க. ஆனா அந்த நாய்ங்க ஒட்டுமொத்த ஹாஸ்பிட்டல் மேலேயே சந்தேகம் வர அளவுக்கு நடந்துகிட்டானுங்க. அந்த ஹாஸ்பிட்டலில் இருக்கும் நர்ஸ்,லேப்,டெக்னீஷியன் என எல்லா ரூம்களிலும் சி.சி.டி.வி வகை காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை என்னன்ன அட்டூழியங்கள் நடந்தது என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

இத்தனைக்கும் இந்த மருத்துவமனையின் எம் டி  மற்றும் மகப்பேரு

மருத்துவரான செல்லாராணி ஏற்கனவே கிட்னி திருட்டு மற்றும் அரைகுறையாய் ஆப்ரேஷன் செய்து மீதியை வேற எடத்துல பாருன்னு கைவிரிச்சு சாகடிச்சவங்க. இப்படி இந்த மருத்துவமனையின் பெயர் கெட்ட பிறகும் பெண்கள் மறந்து போனத என்னன்னு சொல்ல?!

ஒரு நோயாளி கூச்சம்,அச்சம் முதலியவற்றால் தன் உடலை காண்பிக்க மறுத்தால் அதையும் மீறி டாக்டர் வற்புறுத்துனா அது சட்டப்படி குற்றமாக இருக்கையில் இவர் செய்தது என்னவென்று சொல்ல?!

ஆனாலும் அந்தம்மா சட்டத்தின் பல ஓட்டைகள் மூலம் குதிச்சு வந்துடுவாங்க என்பது வேற விஷயம். இப்ப இதன் மூலமா நான் சொல்ல வரது என்னன்னா முடிஞ்ச அளவுக்கு நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  சந்தேகக்கண்ணோடு தான் ஒவ்வொன்றையும் எதிர்க்கொள்ள வேண்டும். ஒரு இடத்துக்கு செல்லும் முன் அது நம்பகத்தன்மையான இடமா என ஆராய்ந்து தெளிந்து பின்னர் போகலாம்.

இப்ப வந்த விஷயத்துக்கு வரேன். பெரும்பாலும் இப்பலாம் எல்லாரும் பெரிய ஷோரூம்களில் ட்ரஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் விலை அதிகமான ட்ரஸ். அப்படி எடுக்குறது தப்பு இல்லை தான். அதிகமா விலை கொடுத்து வாங்கி பத்தாம போனா என்ன செய்ய என தயங்கி ட்ரயல் பாக்கலாம் என போகும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்குது,

இப்ப சைன்ஸ் எவ்வளவோ முன்னேறிடுச்சு. நம்மை சுற்றி காமிரா இல்லை என்று நினைப்போம். ஆனால் நம்மை சுற்றி உள்ள கண்ணாடியில் பொருத்தப்பட்டிருப்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அதை நம்மால் பார்க்க முடியாது.

எனக்கு தெரிஞ்ச சின்ன டிப்ஸ்! உள்ளே போகும் போதே உங்க மொபைலை எடுத்துட்டு போய்டுங்க. யாருக்காவது கால் பண்ணுங்க. அப்படி கால் போச்சுன்னா அறையில் காமிரா இல்லை என்று அர்த்தம். நாட் ரீச்சபிள் போன்றவை வந்தா ஒடனே எஸ்கேப் ஆகிடுங்க. ஏன்னா அத்தகைய காமிரா இருக்கும்பட்சத்தில் மொபைல் சிக்கனலை வெளியே செல்ல அனுமதிக்காது!

என்ன? இனி எல்லாரும் உஷாராகிடுவீங்க தானே!

 படங்கள்:கூகுளிடம் சுட்டது :) 

, ,

40 comments:

 1. நானும் வேறு தளத்தில் படிச்சேன். என்னத்தை சொல்ல? இந்த ஜென்மங்களுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் தகும்.

  ReplyDelete
 2. //எனக்கு தெரிஞ்ச சின்ன டிப்ஸ்! உள்ளே போகும் போதே உங்க மொபைலை எடுத்துட்டு போய்டுங்க. யாருக்காவது கால் பண்ணுங்க. அப்படி கால் போச்சுன்னா அறையில் காமிரா இல்லை என்று அர்த்தம். நாட் ரீச்சபிள் போன்றவை வந்தா ஒடனே எஸ்கேப் ஆகிடுங்க. ஏன்னா அத்தகைய காமிரா இருக்கும்பட்சத்தில் மொபைல் சிக்கனலை வெளியே செல்ல அனுமதிக்காது!//

  இதை டெஸ்ட் செய்து பார்த்துருக்கீங்களா? அப்படி செய்திருக்கும் பட்சத்தில் இது மிகவும் நல்ல உத்தி.

  ReplyDelete
 3. நல்ல தலைப்பு பற்றி எழுதியிருக்கீங்க.கேமரா இருக்கான்னு டெஸ்ட் பண்ண நீங்க சொன்ன வழி சுலபமா இருக்கு.மருத்துவ மனைகளில் கூடவா இந்த கொடுமை நடக்குது.இனி மக்கள் உஷாரா இருக்கணும்.

  ReplyDelete
 4. வேதனைத‌ரும் விஷ‌ய‌ம் இது ஆமீனா ஆனா அந்த‌ டாக்ட‌ர‌ க‌ண்டிப்பா த‌ண்டிக்க‌னும்.

  ReplyDelete
 5. ம்ம்ம் காலம் கெட்டுக் கிடக்கு. நாமதான் பாதுகாப்பா எச்சரிக்கையா இருக்கணும்.
  டிப்ஸ் ஏற்கெனவெ படிச்சிருக்கேன். செயல்படுத்தவும் செய்கிறேன்.

  இன்னும் ஒரு டிப்ஸ் கண்ணாடியில் நம் நகத்தை வைத்து பார்த்தால் அதன் பிம்பமும் நகமும் ஒன்றை ஒன்று தொடாமல் இருந்தால் அது சாதாரன கண்ணாடி இல்லேன்னா மறுபக்கம் இருந்து நம்மை பார்க்கமுடியும்.

  ReplyDelete
 6. அவசியமான பதிவு, தப்பிக்க வழியும் சொல்லியிருப்பதற்கு நன்றி.

  ReplyDelete
 7. //நானும் வேறு தளத்தில் படிச்சேன். என்னத்தை சொல்ல?// எனக்கும் இது மெயிலில் வந்த செய்தி தான். அதை படித்து ரொம்ப மனசு கஷ்ட்டமா போச்சு.

  இன்னும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை வானதி. முன்பு செய்த குற்றங்களிலேயே தப்பித்து வந்த கூட்டம். சட்டம் எப்போதும் பணத்தின் பக்கம் தான் சாயும். பார்க்கலாம்

  வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 8. டாக்டர் கந்தஸ்வாமி அவர்களுக்கு,

  நிறைய இடங்களில் டெஸ்ட் செய்திருக்கேன். ஆனா இதுவரை எதுவும் மாட்டல. என் பகுதியில் சமீபத்தில் தான் பெரிய பிரபலமான மால் துணிக்கடையில் இத்தகைய காமிரா ரகசியமாக வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் என் நண்பர் எழுதிய கட்டுரையில் சொல்லப்பட்ட பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. இன்னும் நிறைய முறைகளில் கண்டுபிடிக்கலாம்.

  வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 9. @சுந்தரி
  எல்லாரும் நம்பிக்கையா இருப்பாங்க. அதுனால கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு இல்லாத அக்ரமங்களாம் செய்றாங்க.

  கண்ணுக்கு முன்னே இருக்க எப்படி மக்கள் இவ்வளவு நாளா கண்டுபிடிக்கலன்னு தான் தெரியல.

  மிக்க நன்றி சுந்தரி

  ReplyDelete
 10. அடப்பாவிகளா??

  உங்கள் டிப்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்..

  ReplyDelete
 11. @கண்மணி

  இந்த மெயில் வந்ததுல இருந்து எங்கே போனாலும் சந்தேகத்திலேயே மனசு ஒட்ட மாட்டேங்குது கண்மணி!

  கண்டிப்பாக இத்தகைய குற்றங்கள் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையே கொடுக்கணும். தீவிரவாதிகளையே அரசு செலவுல வச்சு பராமரிக்கும் இந்த நாட்டுல இந்த டாக்டருக்கு குறைந்த பட்ச தண்டனை கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றி கண்மணி

  ReplyDelete
 12. கண்டிப்பா கவி! எல்லாம் நம்ம கையில் தான் இருக்கு. இந்த கண்ட்ராவிக்காக தான் மெட்டீரியல் மட்டும் எடுத்துட்டு வந்துடுவேன். என்னுடன் வரும் பெண் சொல்லியும் கண்டுக்கொள்வதாக இல்லை. சொன்னாலும் கேட்காமல் செல்பவர்களை என்னவென்று சொல்ல! இறைவன் தான் காக்க வேண்டும்.

  உங்க டிப்ஸ் நல்லா இருக்கு கவி. இதை செயல்படுத்துகிறேன்.மற்றவர்களுக்கும் சொல்றேன்...

  ReplyDelete
 13. அரபு தமிழன்
  இப்ப தான் உங்க ப்ளாக் போய்ட்டு வந்தேன். அழகான பதிவு படிச்சு வியந்து போனேன்!

  மிக்க மகிழ்ச்சி.
  வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 14. அமுதா கிருஷ்ணன்!
  ஷாக் ஆகிட்டீங்களா? :)
  வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 15. பயனுள்ள பதிவு
  //என் நண்பர் எழுதிய கட்டுரையில் சொல்லப்பட்ட பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று.//
  இணைப்பைத் தாருங்களேன்

  ReplyDelete
 16. @ தமிழ் வினை

  இதுவரை இன்னும் பப்ளீஸ் ஆகல தமிழ் வினை!

  வேறு ஏதேனும் லிங்க் கிடைத்தால் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 17. இப்பதான் மலிக்காவின் ப்ளாக்ல இதைப் படிச்சிட்டு வந்தேன் ஆமினா! அங்கே கொட்டிய ஆத்திரத்தை இங்கேயும் கொட்டிட்டு போறேன். வேற நம்மால என்னதான் செய்யமுடியுது...? :( அந்த ஏரியா மக்களும், அங்கு செல்லும் பேஷண்ட்களுமா சேர்ந்து அந்த ஜென்மங்களை இழுத்து வந்து நல்லா கும்மிப்போட்டு, அந்த ஹாஸ்பிட்டலே இல்லாமல் ஆக்கிடணும்.

  கண்ணாடியில் கை வைத்தால், நம்ம கை கண்ணடியோடு ஒட்டாமல் நகர்ந்து தெரியும்னு கவி சொன்ன டிப்ஸ்தான் எனக்கு ஏற்கனவே தெரியும். உங்க டிப்ஸ் சொன்னவுடன்தான் யோசித்துப் பார்த்தால் புரிகிறது. சில கடைகளில் நின்று ஃபோன் செய்தால் டவரே கிடைக்காது. அது கேமராவினால்தானோ...? நல்ல டிப்ஸ், நன்றி ஆமினா!

  ReplyDelete
 18. ஆமி இப்படியெல்லாம்கூட நடக்குதா. இனிமே நாமதான் கேர்ஃபுல்லா இருந்துக்கணும்.மத்தவங்க சொன்ன டிப்ஸ்களையும் கவனத்தில் கொள்ளணும்

  ReplyDelete
 19. மருத்தவப் படிப்பு படித்துவிட்டு, மக்களுக்கு சேவை செய்யப் போறோம்னு கிளம்பிய டாக்டர்களில், இந்த பைத்தியகார டாக்டரும் ஒருத்தன்.
  நோயாளி பரிசோதனை அறையில் கேமரா வைத்தது, சிந்திக்கக் கூடிய விஷயம்.கேமரா பொதுவாக இப்போ எதுக்கு பயன் படுத்துகிறார்கள் என்றால், பெரிய, பெரிய அங்காடி கடைகளில் திருட்டு குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்காகவே பயன் படுத்துகிறார்கள்,மற்றும் பொது இடங்கள்,விமான நிலையங்களிலும் பயன் படுத்துகிறார்கள் பாதுகாப்பிற்காக,நோயாளிகள் வந்து போகும் மருத்துவமனைக்கு கேமரா ஏன் வந்துச்சு? அதுவும் பரிசோதனை அறையில் !!!
  தவறு செய்த அந்த டாக்டரை பிடித்து, அரசிடம் ஒப்படைத்தால் அந்த அயோக்கியன் அஞ்சே நிமிசத்தில் வெளியே வந்துவிடுவான்,காரணம் சொசைட்டியில் அவன் ஒரு விஐபி.

  அரசு,சட்டம்,நீதியரசர்கள்,போலீசுகள்,மற்றும் பல கிரிமினல் வக்கீல்களை, தமது பையில் வைத்திருக்கும் அந்த பச்சோந்தி பயலுக்கு, இதுவெல்லாம் கால் தூசு,நீங்களும் நானும் கோபப் பட்ரதுனாலே, இந்த அயோக்கியனை ஒன்னும் செய்து விட முடியாது,

  என்னுடைய கேள்வி ?
  ஏன் ?ஆண் மருத்தவரிடம் இளம்பெண் நோயாளி சோதனை அறைக்கு போக வேணும் ?
  பெண் மறுத்தவர் இல்லையா ?
  அப்படி பெண் மறுத்தவர் இல்லாதப் பட்ச்சத்தில் தம் கணவரையோ அல்லது தம் பெற்றோரையோ அழைத்துச் செல்லாதது ஏன் ?

  தண்டனை :

  குற்றம் நிரூபிக்கப் பட்டதால் அந்த அயோக்கிய டாக்டருக்கு அந்நியனின் தண்டனைப் பிரிவு 307எ, மற்றும் 307பி, பிரிவுகளின் படி அவனின் இரு கண்களையும் பழுக்க வைத்த கம்பியில் 16 நிமிடம் கண்ணில் வைத்து கட்டிவிட வேண்டும்,இது அவன் பார்த்து ரசித்ததற்கு.

  தண்டனைப் பிரிவு 303, 309,301,பிரிவுகளின்படி அவனின் அங்கங்களை ஒவ்வொன்றாக வெட்டி, மக்கள் பார்வைக்காக பேருந்து நிலையத்திலோ, அல்லது ரயில் நிலையத்திலோ, கண்ணாடிப் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

  குறிப்பு : இந்தப் பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டி எடுக்கும் போது அவன் கண்டிப்பாக உயிருடன் இருக்க வேண்டும்.

  ஜட்ஜ்மென்ட் இஸ் ஓவர்.

  சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

  அந்நியன் :
  .

  ReplyDelete
 20. @அஸ்மா
  மலிக்கா சொன்ன மெயில் தான் எனக்கும் வந்தது அஸ்மா. ஏற்கவனே பண்ண தப்புலாம் மக்கள் மறந்துட்டாங்க. இனியாவது திருந்துனா சரி தான். இப்படி பட்ட நாய்களுக்கு பெரிய தண்டனையே ஒதுக்குறது தான். அதை சரியா செய்தாலே போதும்.

  எத்தனை பெண்களின் மானம் பறிபோனதோ? நினைக்கும் போதே மனது பாரமாகிவிட்டது.

  நன்றி அஸ்மா

  ReplyDelete
 21. என்ன கோமு இப்படி கேட்டுட்டீங்க?இதுக்கு மேலேயும் நடக்குது. பாவம் மக்கள் தான் உணரமாட்டேங்குறாங்க. எல்லாவற்றையும் சந்தேகமா பாக்குறது தப்பு தான். ஆனா அப்படி செய்றது தான் நல்லதோன்னு தோணுது.!

  நன்றி கோமு

  ReplyDelete
 22. ஐயூப்

  சமீபத்தில் தமிழகம் முழுவது நடத்திய சோதனையில் 160க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் மாட்டினார்கள். பெருசா பரபரப்பா நியூஸ் போட்டாங்க. கைது பண்ணாங்களாம். அதுக்கடுத்து சத்தமே காணாம். இப்ப எங்க ஊர் பக்கத்திலுள்ள கிராமங்களில் மீண்டும் போலி டாக்டர்களின் நடமாட்டம். சட்டம் கடுமையா இல்லைன்னு தானே அர்த்தம்.

  சரியா வேலை செய்றாங்களான்னு நோட்டமிட கேமரா வைக்கிறாங்களாம் மருத்துவமனைகளில். அடப்பாவிகளா ரிசப்ஷனில் வச்சா ஒத்துக்கலாம். செக்கப் ரூமில் (மருத்துவர் தான் பரிசோதனையே செய்வார். அப்படியுருக்க) எந்த வேலையாட்களை நோட்டமிட கேமரா வைக்கப்பட்டது என அப்போதே மக்கள் உஷாராகிருக்க வேண்டாமா?!

  //ஏன் ?ஆண் மருத்தவரிடம் இளம்பெண் நோயாளி சோதனை அறைக்கு போக வேணும் ?
  பெண் மறுத்தவர் இல்லையா ?//
  நம்மூர் பெண்கள் ஆப்ட்ரால் ஒரு புடவையின் ஓரத்தையே ஆண் டெய்லரிடம் தான் தைக்கிறாங்க. அவர் தான் நல்லா தைப்பாராம். என்ன சொல்ல?

  மாட்டியது பெண் டாக்டர். வீடியோவை காண்பித்தது கணவருக்கு. ஆக இருவருக்கும் தானே உங்கள் சட்டப்படி தண்டனை :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அந்நியன்! :)

  ReplyDelete
 23. விழிப்புணர்வான பதிவுக்கு நன்றி

  தொடர்ந்து இதுப்போன்ற பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. நான் ஆரம்பத்திலேயே எழுதினேன் .இதுல உஷாரா இருக்க வேண்டியது நாமதான் http://kjailani.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete
 25. @தொப்பி தொப்பி
  மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கு!

  ReplyDelete
 26. ஜெய் இப்ப தான் உங்க பதிவு படிச்சுட்டு வரேன். சரியா சொன்னீங்க. நாம் தான் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும்.

  நன்றி ஜெய்!

  ReplyDelete
 27. good topic aamina... i surely follow ur steps.. ok thanks for ur sharing

  ReplyDelete
 28. @ தோசை
  நன்றி ரவிக்குமார்! இப்ப தான் உங்க ப்ளாக் பார்த்தேன். ப்ளாக் நேமும் இந்த பதிவின் தலைப்பும் ஒன்றுதான். அதான் இந்த பக்கம் எட்டி பாத்தீங்களா? :)

  ReplyDelete
 29. super pathivu mikka nandri ...i appriciate that........

  ReplyDelete
 30. வாங்க பாஸித்!

  மிக்க நன்றி உங்க உற்சாகம் மிகுந்த பாராட்டுக்கு!

  ReplyDelete
 31. அடிச்சு பஞ்சராக்கிடனும் அவங்களை.சத்தியமா நெனச்சா ரொம்ப டென்ஷனா இருக்கு.எனக்கு இன்னமும் சந்தேகம் நம்மூரில் பிரசவத்துக்கு பின் பல மருத்துவமனைகளிலும் மயக்கமாக்கிடறாங்க அது ஏன்னு தெரியல...
  எனக்கு தெரிஞ்ச டிப்ஸ் அப்படியே தைத்த துணியை போட்டு பார்க்க வேண்டும் அல்லது துணிகடையில் போட்டு பார்க்க வேண்டும் என்றால் முழுக்க உடம்பை மறைக்கும்படியான உள்ளாடைகளை அணிந்து செல்வது நல்லது.பெண்களுக்கான பனியன் கிடைக்கும் .இதனால் போனாலும் குறைந்த பட்சம் மானம் தான் போகும்

  ReplyDelete
 32. தளிகா

  என்னை பொறுத்த வரை மானத்தை காப்பாத்த கண்ட கண்ட இடங்களில் துணி போட கூடாது என தான் சொல்லுவேன். நம்ம அளவு நமக்கே தெரியும் தானே? அப்பறம் எதுக்கு போட்டு பாத்து வாங்கணும்? மானத்தை விட பணமா பெரிய விஷயம்? இல்ல கொஞ்சம் பெரிய சைஸா வாங்கி கூட பக்கத்துல இருக்குற டைலரிடம் ஆல்ட்ரைட் பண்ணிக்கலாம். நம்ம பாதுகாப்பு நம்ம கையில் தானே இருக்கு!
  //முழுக்க உடம்பை மறைக்கும்படியான உள்ளாடைகளை அணிந்து செல்வது நல்லது//
  கண்டிப்பா எல்லாரும் இதையாவது செய்யலலாம்.

  நன்றி தளிகா உங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும்

  ReplyDelete
 33. யார்கிட்ட சொல்லி என்ன ப்ரியோஜனம்..ஒரு ஆண் டெயிலரிடம் தன்னுடைய ஜாக்கெட்டை பத்தின ஆல்டெரேஷனை சொன்ன லட்சணத்தை கேட்டே நான் மயக்கமாகிட்டேன்.இந்த மாதிரி ஜென்மங்களாவது இப்படி செய்யலாம்..என்றாலும் இம்மாதிரி உயிரை காக்கும் மருத்துவர்கள் இப்படி செய்தால் சிக்குவது அப்பாவிகள் தான்.
  இந்த ஃபோன் சிக்னல் விஷயம் சும்மா ரீல் என்று சமீபத்தில் படித்தேன்...எப்பவுமே இம்மாதிரி விஷயங்களுக்கு பின்னால் ஒருவர் மட்டும் இருப்பது அபூர்வம் பலரும் அந்த வஞ்சகத்தில் ஈடுபட்டிருக்க கூடும்..அதில் யாராவதுஒருவராவது முன்வந்தால் இம்மாதிரி சம்பவங்கள் நடக்காது.
  போலி டாக்டர்கள் முதல்,துணி கடை,மருத்துவமனை கேமரா வரை எது பார்த்தாலும் நர்ஸ்கள் அதை பொருத்தியவர்கள் அங்கு பணி செய்யும் ஊழியர்கள் என சிலர் அதனை அறியாமல் இருக்க முடியாது..ஏனோ அவர்களும் வெளியில் சொல்லாமல் இவ்வளவு பெரிய விஷய்த்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்:-(

  ReplyDelete
 34. //இந்த ஃபோன் சிக்னல் விஷயம் சும்மா ரீல் என்று சமீபத்தில் படித்தேன்..//
  தளிகா,
  உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி, செல்போன் மூலமா Spy Camera வை உணர்ந்து கொள்ளுதல் என்பதை
  நீங்கள் ரீல் என்று சொல்கிறீர்கள், ஆனால் இணையத்தில் பல இடங்களில் Spy camera இருப்பதை அறிந்து கொள்ள
  இப்படி ஒரு டெக்னீக் பலனளிக்கும் என சொல்லப்பட்டிருந்தது, மட்டுமின்றி எனக்கு நம்பகமானவர்களிடமும் இது குறித்து
  கருத்து கேட்டபின்பே எழிதியுள்ளேன்.மேலும் இதுதான் ஒரே தீர்வு என்றும் நான் சொல்லவில்லை.
  நான் குறிப்பிடுள்ளது போல் ட்ரெஸ்ஸிங் ரூமில் செல்போன் செயல்படவில்லையெனக்கருதி நாம் அந்த ரூமிலிருந்து வெளியேற்விட்டால் அதில்
  நமக்கு ஒரு நஷ்ட்மும் இல்லை.ஆனால் ஒரு வேளை Dressing Room ல் கேமரா இருந்து விட்டால்???
  எனவே ஒரு விதத்தில் நீங்கள் இப்படி ஒரு கருத்து போட்டதும் நல்லதுதான். ஏனென்றால் புயல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும்
  இந்த டெக்னாலாஜி உலகில் எவ்வளவு அலர்ட்டா இருந்தாலும் அதையும் ஏய்த்துவிட்டு மோசடி நடக்கும் நுனுக்கங்களும் வளர்ந்து கொண்டு இருக்கிறது
  நேற்றுவரை நமக்கு உறுதுனையா இருக்கும் ஒரு விஷயம் சில மோசமான நுட்பங்களை கண்டுபிடித்து கையாள்வதன் மூலம் இன்றூ அது தோற்கடிக்கப்படலாம்.
  ஏன்னா இந்த ஏமாத்துவேலை பன்றவங்க நம்மளவிட புத்திசாலி. ஒரு டெக்னாலஜியை கொண்டு வந்து அது பறிய ரகசியம் தெரிந்ததும் வேற அதைவிட நல்ல ஒரு புதுடெக்னிக் கையாளலாம்.
  சரி விடுங்க, இன்னொனு சொல்றேன்...
  கொஞ்சம் பர்ஸ்லைருந்து பணத்தை எடுத்து நான் சொல்ற ஒரு Device ஐ வாங்கி பர்ஸுக்குள் வச்சுகோங்க, சர்ச்சைக்குறிய இடங்களிலெல்லாம் இதை Use பன்னிகோங்க
  [உங்க பர்ஸை டச் பண்ணாம பேசலாம்னு நினைச்சேன்,
  ஆனா நீங்க புலம்ப வச்சுட்டீங்க.
  அதான் உங்களுக்கு செலவு இழுத்து வைக்கலாம்னு இதை சொல்லிருக்கேன்] :-))
  என்ன புரியலையா? :))

  இங்கே போங்க என்னனு புரியும்
  http://www.spyville.com/spy-finder.html

  இங்கே போங்க என்னனு தெரியும் :)
  http://ep.yimg.com/ca/I/spyville_2131_59328064

  //ஏனோ அவர்களும் வெளியில் சொல்லாமல் இவ்வளவு பெரிய விஷய்த்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்:-(//
  அத நெனச்சா தான் தளி வேதனையா இருக்கு.

  ReplyDelete
 35. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோதரி அவர்கள்
  கோவிச்சுகிர மாட்டீக அப்புடியின்ன
  வெளிப்படையாக என்னுடைய கருத்தை
  சொல்லலாம் என்று நினைக்கிறேன்
  இந்த பதிவியுள்ள அந்த படம் ரோம்ப ஆபாசமாக இருக்கிறது
  பத்திரிக்கை விற்க வேண்டும்என்பதற்காக
  சில நாலந்தர பத்திரிக்கைகள் இது போன்ற படங்களை போட்டு ஆண்களை கவர்ந்து விற்பனையை கூட்டுவதற்காக செய்கின்ற உத்தி
  மற்றபடி சமூக அக்கறையேன்று சொல்லுவதேல்லாம் சும்மா
  ஆனால் நீங்கள் சமூக அக்கறையோடு பதிவு இட்டுள்ளீர்கள் நீங்கள் அந்த ஆபாசமான படத்தை தவிர்த்து இருக்கலாம் அல்லவா?
  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பார்வைகள் செய்யும் விபாச்சரமும் இருக்கிறது என்று
  அதற்கு இந்த படம் வழி ஏற்ப்படுத்தி விடலாம்
  அடுத்த பதிவில் கவனம் கொள்ளுங்கள்

  சகோதரன்
  ஹைதர் அலி

  ReplyDelete
 36. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோதரி அவர்களுக்குநீங்க கோவிச்சுக்கிர மாட்டீக அப்புடியின்ன வெளிப்படையாக என்னுடைய கருத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன்
  இந்த பதிவியுள்ள அந்த படம் ரோம்ப ஆபாசமாக உள்ளது
  (இவ்வளவுக்கும் ஹஸ்பிட்டலில் நடந்த சம்பவத்திற்கும் அந்த படத்திலுள்ள பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)
  சில நாலந்தர பத்திரிக்கைகள் விற்பனையை கூட்டுவதற்காக இது போன்ற படங்களை இட்டு பணம் செய்கின்ற உத்தி அவர்களை பொறுத்த வரை சமூக அக்கறை என்பதல்லாம் சும்மா
  ஆனால் நீங்கள் சமூக அக்கறையோடு பாதிக்கப்பட்ட பெண் இனத்தை சேர்ந்தவர் என்ற முறையிலும் பதிவு இட்டுயிருக்கிறீர்கள் நீங்கள் அந்த படத்தை தவிர்த்து இருக்கலாம் அல்லவா?
  முஹம்மது நபி(ஸல) அவர்கள் கூறினார்கள்
  விபச்சாரத்தில் பல வகைகள் இருக்கின்றன அவைகளில் ஒன்று கண்களால் செய்யக்கூடிய விபச்சாரம்
  இந்த படம் கண்களால் செய்யக்கூடிய விபச்சாரத்திற்கு வழி வகுத்து விடலாம்
  அதனால் அடுத்த பதிவுகளில் கவனமாக இருங்கள்
  உங்கள் மனதை புன்படுத்தியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும்

  சகோதரன்
  ஹைதர் அலி

  ReplyDelete
 37. வ அலைக்கும் சலாம் வரஹ்....
  சுட்டி காண்பித்தமைக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 38. சகோ உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்
  சுட்டி காட்டியவுடன் அந்த படத்தை தூக்கி விட்டீர்கள்
  அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

  ReplyDelete
 39. எதுக்கு நன்றி சகோ?

  எல்லாம் தெரிந்தவன் யாருமில்லை அல்லாஹ்வை தவிர!

  எனக்கு தெரிஞ்ச விஷயங்கள் பலருக்கு தெரியாது. அது போல் பலருக்கு தெரிந்த விஷயம் எனக்கு தெரியாது. தெரியாததை தெரிந்துக்கொள்வதிலும் தெரியாமல் செய்ததை திருத்திக்கொள்வதிலும் என்றும் நான் தயங்கியதில்லை. எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன் .........

  ReplyDelete
 40. உங்கள் பதிவை வலைசரத்தில் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு கருத்துக்களை பகிரவும்.தாரிக்

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_9654.html

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)