தமிழக அரசின் நிறுவனம் அதாவது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 2 நாளைக்கு முன்னாடி ஒரு அறிவிப்பு கொடுத்தது. அதை எல்லாரும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். படிக்காதவங்களுக்காகவே அல்லது நியூஸ் பேப்பர் பக்கமே போவதில்லை என சொல்லும் சகோக்களுக்காக இந்த பதிவு. (சட்டுபுட்டுன்னு மேட்டருக்கு வா. )


என்ன விஷயம் தெரியுமா? அரபு நாடுகளில் உள்ள பல பெரியகம்பெனி மற்றும் முன்னணி கம்பெனிகளுக்கு வேலை செய்ய ஆள் இல்லையாம். அதுனால வேலைஆட்கள் வேண்டுமாம். ஆனாலும் எல்லாரும் போய்விட முடியாது. சில தகுதிகள் வேண்டும்.கீழே படிங்க புரியும்சில முக்கிய குறிப்பு:
 • அதுவும் 21 வயசுல இருந்து 35 வயசுக்குள்ள இருக்கும் நபர்கள் தான் வேண்டும்.
 • பத்தாம் வகுப்பு மட்டும் பாஸாகி இருக்குறவங்களுக்கு இங்க்லீஸ், ஹிந்தி தெரிஞ்சுருந்தா ஹோட்டல்களில் வேலை. அல்லது அலுவலக வேலை.
 • ஐடிஐ முடிச்ச வேலை அனுபவமுள்ள  பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை மற்றும் அதிக வேலைவாய்ப்பு இருக்கு.
 • அவரவர் செய்யும் வேலை, அவர்களின் தகுதி, அவர்களின் அனுபவம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் சம்பளத்தோட சேர்த்து இதர வசதிகளும் செய்து கொடுப்பாங்க.

இவ்வளவு தான். இந்த தகுதி இருக்குறவங்க, இந்த வேலைக்கு போகணும்னு ஒத்த காலில் நிற்பவர்கள் மேலே சொல்லப்பட்ட தகுதிகளுக்கான சான்றிதழ் எடுத்துட்டு ( பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஐடிஐ முடித்த சான்றிதழ், அனுபவத்திற்காக முன்பே வேலை செய்த கம்பெனி கொடுக்கும் சான்றிதழ், இன்னபிற சான்றிதழ்கள் ), பாஸ்போர்ட், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என எல்லா தெளிவான விவரங்களுடன் முதல் நிலை தேர்வில் கலந்துக்கொள்ளலாம்.

நடக்கும் இடம் : திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்
 
நடக்கும் நாட்கள் : நவம்பர் 20, 21

நான் சொன்னது கொஞ்சம் புரிஞ்சு மிச்சம் புரியல, பாதி புரிஞ்சு மீதி புரியல, இல்ல சுத்தமாவே புரியல என்பவர்கள் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு மேலும் பல தகவல்கள்,சந்தேகங்கள் கேட்டுக்கொள்ளவும்.
9940393617, 9952940460, 9940276356

தயவு செய்து வேலை இல்லாதவர்களுக்கும் வேறு வேலை தேடுபவர்களுக்கும் இந்த தகவலை சொல்லிடுங்க. மற்றவர்களை வாழ வைத்த புண்ணியம் உங்களுக்கு கிட்டும்

, ,

31 comments:

 1. நீங்க ரொம்ப் ந்்் வஙக...

  ReplyDelete
 2. ஜலீலாக்கா நீங்களாவது ஒத்துக்குறீங்களே! :)

  ReplyDelete
 3. Very Good Job.
  Thanks For u r Information.


  Vassalam.

  M.Syed
  Abu Dhabi

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  செய்யது உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி! முடிந்தவரை எல்லாருக்கும் தெரியப்படுத்தி பயனடையச்செய்யுங்கள்!

  ReplyDelete
 5. //நீங்க ரொம்ப் நல்லவஙக...// நானும் ஒத்துக்கொள்கிறேன்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 6. அண்ணா சும்மாவே இங்கே அடிக்குற குளிர்ல நடுங்கி போய் இருக்கேன். நீங்க வேறையா?!

  நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் (வாழ்க வளமுடன்) வாழ்த்துக்கும் :)

  ReplyDelete
 7. அப்படியே அரபு நாடுகளில் தற்போது உள்ள வீட்டு /ரூம் வாடகை, உணவு செலவு, குறைந்த பட்ச ஊதியம் எதிர்பார்த்தல் பற்றிய விபரங்களும் பகிர்ந்தால் கூடுதல் உதவியாக இருக்கும். ,

  ReplyDelete
 8. Eid Al Adha Wishes!
  Thank you for sharing Job informations.
  for more Job oppourtunities.., pl visit
  http://saigokulakrishna.blogspot.com

  ReplyDelete
 9. //அப்படியே அரபு நாடுகளில் தற்போது உள்ள வீட்டு /ரூம் வாடகை, உணவு செலவு, குறைந்த பட்ச ஊதியம் எதிர்பார்த்தல் பற்றிய விபரங்களும் பகிர்ந்தால் கூடுதல் உதவியாக இருக்கும்//

  ராம்ஜி
  அத்தகைய கூடுதல் தகவல் கிடைக்கும்பட்சத்தில் கண்டிப்பாக வெளியிடுகிறேன் :)

  வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 10. சாய் கோகுல கிருஷ்ணா!

  வாழ்த்துக்க்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 11. Hi சாய் கோகுல கிருஷ்ணா!

  You Also doing good job. thanks to you. I visit u r site many time. (Yaam Petra Inbam ivvaiyagamum Peravendum.)

  Thanks

  M.Syed
  Abu Dhabi

  ReplyDelete
 12. nalla thakaval.

  anaivarukkum payan tharum pathivukal mattume ida manamaarntha vazththukkal

  ReplyDelete
 13. நன்றி முகம்மட்! முடிந்தவரை முயற்சி செய்கிறேன் :)

  அன்பு மனைவி
  ஆமினா

  ReplyDelete
 14. அரபா நோன்பு சிறக்க வாழ்த்துக்கள்.
  பெருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நல்ல பயனுள்ள தகவல்.அநேகருக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.நன்றி ஆமினா.

  ReplyDelete
 16. தொடரட்டும் ஆமினாவின் சமூகப் பணி!

  ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ஆமினா!

  ReplyDelete
 17. பயனுள்ள பதிவுகள்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  ♫வாழ்த்துக்கள்♫

  ReplyDelete
 18. ஐடிஐ முடிச்ச வேலை அனுபவமுள்ள பிளம்பர், ???

  இது தப்பா தெரிகிறதே விளக்கவும் சகோதரி.

  எல்லோருக்கும் இனியம் கனிந்த ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்.! உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் உரித்தாகுக எனக் கூறி வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 19. அமெரிக்காவில் எங்காச்சும் வேலைக்கு ஆள் தேவைன்னா சொல்லுங்க, ஆமி.

  ReplyDelete
 20. பாரத் பாரதி!

  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 21. ஸாதிகா அக்கா!

  உங்க பாராட்டு எனக்கு இன்னும் அதிக ஊக்கம் தருது! மிக்க நன்றி அக்கா!

  இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. @ கவி!
  //தொடரட்டும் ஆமினாவின் சமூகப் பணி! //

  :) :) :)

  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 23. தொப்பி தொப்பி!
  உங்க வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 24. அயூப்
  //ஐடிஐ முடிச்ச வேலை அனுபவமுள்ள பிளம்பர், ???

  இது தப்பா தெரிகிறதே விளக்கவும் சகோதரி.//
  தப்பா தெரியுதா? எனக்கு ஒன்னும் தெரியலையே (உண்மையிலேயே எனக்கு தெரியாது தெரியாது தெரியவே தெரியாது :)

  இப்ப புரியுதான்னு பாருங்க....
  ஐடிஐ கல்வித் தகுதியுடன் ஆங்கிலப் புலமை, பணி அனுபவமும் உள்ள பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.

  ஐடிஐ துறையில் என்னன்ன படிப்புகள் இடம்பெறும் என எனக்கு தெரியாது அயூப். எனக்கு வந்த தகவலின் படி போட்டுள்ளேன். ஒரு வேளை ஐடிஐயில் பிளம்பர் என்ற ஒன்று இல்லை என சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அப்படி தானே!

  ReplyDelete
 25. //அமெரிக்காவில் எங்காச்சும் வேலைக்கு ஆள் தேவைன்னா சொல்லுங்க, ஆமி//
  என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க? வானதிக்கு இல்லாததா? :)
  வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 26. அஸ்லாம் அலைக்கும்

  //மற்றவர்களை வாழ வைத்த புண்ணியம் உங்களுக்கு கிட்டும்//

  :)) Nice...

  ReplyDelete
 27. //அஸ்லாம் அலைக்கும்

  //மற்றவர்களை வாழ வைத்த புண்ணியம் உங்களுக்கு கிட்டும்//

  :)) Nice...//

  வ அலைக்கும் சலாம் வரஹ்....

  :)) வருகைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பிரதாப்

  ReplyDelete
 28. தோழி நல்ல சேவை எனது பாராட்டுகள்

  ReplyDelete
 29. @பாஸித்

  மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு! அது மேலும் என்னை உற்சாகப்படுத்துகிறது

  ReplyDelete
 30. //நான் சொன்னது கொஞ்சம் புரிஞ்சு மிச்சம் புரியல, பாதி புரிஞ்சு மீதி புரியல, இல்ல சுத்தமாவே புரியல என்பவர்கள் .//

  ஹி ஹி....சொந்தமாகவே நிறைய மூளை வெச்சிருக்கீங்க போல..கொஞ்சம் அனுப்பி வைங்கப்பா...அமெரிக்கா வந்ததில இருந்து மூளைய மட்டும் கண்ணுல காட்டவே மாட்டேங்கறாங்க!!

  :))

  ReplyDelete
 31. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //ஹி ஹி....சொந்தமாகவே நிறைய மூளை வெச்சிருக்கீங்க போல..கொஞ்சம் அனுப்பி வைங்கப்பா...//
  அன்னு அத ஏன் கேக்குறீங்க. எல்லாருக்கும் கிலோ கணக்குல குடுத்துட்டு இருக்கேன். நீங்க அமெரிக்கான்னு சொன்னதுனால 2 கிலோ பார்சல் பண்ணிடுறேன் :)

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)