சின்ன சின்ன பிரச்சனைகளில் சில்லரை பிரச்சனையும் ஒன்று. Bata செருப்புக்காரன் விலை வைப்பான் பாருங்க ரூபாய் 299.95னு அதாவாது 300 இல்லையாம். 300ரூபாய்னு சொன்னா விலை அதிகமா தெரிஞ்சுருமாம் அதுனால அவரு ரூ299.95. அதுக்கு அப்பறம்  சில்லரைக்கும் கண்டக்டருக்கும் எப்பவுமே ஏழரைதான். பஸ்ஸுல ஏறும் போதே கண்டெக்டர் குரல் கொடுப்பார். சில்லரைய ரெடியா வச்சுக்கோன்னு. அவர் பையில ஏற்கனவே தலைவர் வச்சுருப்பார். ஆனா எடுத்து கொடுக்க அலுப்பு. கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தவங்க கிட்ட வம்படியாய் மிச்சம் செய்த பணத்தில் அடுத்த ஒரு வருஷத்தில் ஒரு ட்ராவல்ஸ்க்கு ஓனராவே ஆகிடுவார் :)

பேப்பர் திறந்தாலே ஒரே கண்ட்ரக்டர் பேசஞ்சர் பிரச்சனை தான்.

ஒரு ஆள் வண்டில ஏறி நடத்துனர் சில்லரை இல்லன்னு சொல்றதுல தொடங்கி பிரச்சனை பேருந்து வேகத்திலையே ஓடி அந்த ஆள் இறங்கும் இடம் வரும் போது காசே கொடுக்காம போகும் கதைகளும் அதிகம்:)

இந்த பல சினிமா கையில் எடுத்து சொன்ன(?) போதும் கண்டுக்கொள்ளாத அரசு இப்ப தான் ஒரு முடிவுக்கு வந்துருக்கு.

விஷயம் என்னன்னா 2011ல ஒரு திட்டம் வரபோகுதாம்..
அதாவது குறிப்பிட கட்டண வசூலிப்புடன் Credit Card மாதிரி ஒரு Swipe Card கையிலகொடுத்திருவாங்க
, நாம்  ட்ராவல் பண்ணும்போது அந்த Card ஐ அதற்கான மெஷின்ல Swipe பண்ணுனா தீர்மானிக்கப்பட்ட கட்டணம் அந்த Card லிருந்து Deduct ஆயிரும்.

இப்படி போகும்போதும் வரும்போதும் Cardஐ தேய்ச்சுக்கிட்டே போகணும். கண்டக்டர்கிட்ட எதுவும் பேச்சு கொடுக்க தேவையே இல்ல. பிரச்சனையும் பாதி ஒழிஞ்சுடும். இந்த Card ஐ பயன்படுத்தி பேருந்து மட்டுமில்லாமல் ட்ரெயின்,மெட்ரோ, டேக்ஸி போன்றவற்றிலும் பயணம் செய்யலாம்.

இந்த திட்டத்தில் இன்னொரு ஆப்சனும் இருக்கு. அது எதுனா, இதுதான்....
உங்க மொபைல் போனை பயன்படுத்தியும் ட்ராவல் செய்து கொள்ளலாம். அதாவது உங்க மொபைலில் Chip ஒன்னு Attach செய்துவிடுவார்கள். உங்கள் பயணத்திற்கான கட்டணம் அந்த Chip அட்டாச் பண்ணியிருந்தால் உங்கள் மொபைல் போனிலிருந்து வசூலிக்கப்பட்டுவிடும். Cellular Service எஜெண்டிடமே இதை நீங்கள் Top-Up செய்து கொள்ளலாம்.

நிறுத்து
யாருப்பா அது?
இப்படி Card ட காட்டியே பயணம் செஞ்சா அப்ப கண்டக்டரின் கதி?, அவருக்கு வேலை இல்லையா?
அப்படிதான் நினைக்கிறேன்,
அப்ப அவருகூட இந்த சில்லரை பிரச்சனையெல்லாம் வராது அப்படிதானே?
வராது வராது


இப்போதைக்கு இந்த திட்டதை அறிமுகம் செய்ய Delhi, Bangalore, Jaipur, Bhopal, Indore and Mumbai போன்ற நகரங்கள்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமான தகவல்.

டிஸ்கி : என்ன திட்டம் தான் கொண்டு வந்தாலும் ஜன்னல் வழியா துண்டு போட்டு இடம் பிடிக்கும் பழக்கத்த மாத்த மாட்டோம்ல!!

, ,

21 comments:

  1. அங்கும் கார்டு ஸ்வைப் வந்து விட்டதா?நல்லது. தஇங்க எல்லாம் இபப் கார்டு தான் பஸ்சு டிரெயின் எல்லாத்துக்கும் ஒரே கார்டு. எங்க வேன்ண்ண போய் கொள்ளலாம்
    டிஸ்கி: நாமெல்லாம் தமிழர்கள் அப்ப்டி தான்.....

    ReplyDelete
  2. அக்கா இனிமே தான் வருமாம் :)

    பஸ்ஸிலல் பெல் இருக்கும். நாம் இறங்கும் இடம் வரும் போது அழுத்தினால் ட்ரைவர் நிறுத்திவிடுவார். இந்த சிஸ்ட்டம் 20 வருஷத்துக்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். 2 மாசத்துக்கு முன் தான் மதுரையில் அது போல் பஸ் பார்த்தேன். ஆனா கனெக்‌ஷனை கட் பன்ணிட்டாங்களாம். ஆளாளுக்கு சும்மா சும்மா தட்டிக்கிட்டே இருந்தா :)

    இந்த சிஸ்ட்டம் வந்தா உண்மையில் பயனுள்ளதாக தான் அமையும். காத்திருப்போம் :)

    ReplyDelete
  3. ஆமினா நல்ல செய்தி!..........ஆன என்ன நம் நாட்டில் திட்டம் அறிமுகம் செய்வது புதிதுதல்ல அதை நடைமுறைப்படுத்துவது என்பது கடினம்......சிங்கப்பூரில் இந்த கார்டு முறைத்தான்.....

    ReplyDelete
  4. சிங்கப்பூரிலும் கார்டுதான். கண்டக்டரும் இல்லை பிரச்சினையும் இல்லை.

    நாங்க இருக்கும் தீவில் கார்டும் கிடையாது. ஏன்னா பொதுப் போக்குவரத்து பஸ்கள் மிகக் குறைவு. அதில் ஏறுபவர்கள் அதை விடக் குறைவு. சொந்த வாகனம் இல்லென்னா ஷேர் ஆட்டோ மாதி ஷேர் டேக்சி அல்லது டேக்சிதான்.

    ReplyDelete
  5. ஜானகி!
    எவ்வளவோ பண்ணிட்டோம். இதை பண்ண மாட்டோமா?!

    இதை தவிர வேற வழியே இல்லைன்னு கொண்டு வந்தா கண்டிப்பா மக்களிடம் போய் சேரும். நீங்க சொல்வது போல் நடைமுறைபடுத்துவதில் பிரச்சனை வரலாம். ஆனா இப்பலாம் மக்கள் எவ்வளவோ முன்னேறிட்டாங்க. சில நுட்பங்கள் பற்றி தெரியுது. கண்டிப்பா இது வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் :) பாக்கலாம் :)

    ReplyDelete
  6. கவி!
    //அதில் ஏறுபவர்கள் அதை விடக் குறைவு//
    நாங்களாம் பஸ்ஸுல தொங்கிட்டே பயணம் பன்றோம்! :)

    இங்கே டாக்ஸி,ட்ரைனில் கூட கொண்டு வரபோவதாக சொல்கிறார்கள்.

    ReplyDelete
  7. ஆமா ஆமா பழையதிட்டங்கள்னு வந்துட்டா மாத்திரவேண்டியதுதானே, எத்தனை நாளைக்குதான் ஒரே வண்டில ஓடுறது. சலிப்பாதானே இருக்கும் இல்லையா? புதுசா புதுசா தாவுவதுதானே ஒரு முன்னேற்றம்.
    -இப்படிக்கு
    நாசமா போனவன்

    ReplyDelete
  8. //-இப்படிக்கு
    நாசமா போனவன்//

    போன முறை தான் சந்தேகத்தில் ஏர்வாடிக்கு போக போறீங்களாம்ல அப்படின்னு கேட்டேன். இப்ப தான் கன்பார்ம் ஆகுது.

    உண்மை தான் நாசமா போனவன் :) பழைசே கட்டிட்டு அழுகாம புதுமைக்கு ஏற்றார் போல் வாழணும்.

    ReplyDelete
  9. நம்ம ஊருக்கு , இது சிட்டியில மட்டுதான் ஒர்க் ஆகும் போல தெரியுது...!! நம்ம தாத்தா இலவசமா கிராமங்களுக்கு குடுத்துடுவார் எப்பூடி..!! ஹா..ஹா..!!

    ReplyDelete
  10. //நம்ம தாத்தா இலவசமா கிராமங்களுக்கு குடுத்துடுவார் எப்பூடி//
    இப்படியே இலவசமா கொடுத்து கொடுத்து தான் பலரை சோம்பேறியாக்கி வச்சுருக்காங்க.

    இலவசமா கொடுப்பார் ஓக்கே. அதுல பணம் எல்லாமே அவங்க போட்டுடுவாங்களா? அப்படி கொடுக்கும் போது எனக்கு இன்பார்ம் பண்ணிடுங்க ஜெய்... எவ்வளவு நாளா தான் காசு கொடுத்தே பயணம் போறது?:)

    நன்றி ஜெய்

    ReplyDelete
  11. ஆனந்தி!

    எல்லா வேலையும் முடிஞ்சதா? ஆதி பெர்பாமென்ஸ் எப்படி இருந்தது? மிக்க நன்றி ஆனந்தி... இந்த செய்தி சொன்னது என் நண்பன். அவனுக்கு உங்க வாழ்த்தை சொல்லிடுறேன் :)

    ReplyDelete
  12. ஆமி இங்க மும்பைல லோக்கல் ட்ரெயினில் போக இதுபோல கார்டு இருக்கு. அதுக்குண்டானமிஷினில் வைத்து,போகவேண்டிய இடம், எவ்வளவு நபர்களென்று
    பட்டனைத்தட்டினால் டிக்கட் கையில் வந்து விழுகிரது. நம் கார்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குன்னும் காட்டிடரது.ஓரளவு சவுரியமாவே இருக்கு

    ReplyDelete
  13. இது போல நம்ம ஊர் பக்கம் எப்ப வருமோ,இந்த கண்டக்டர்களின் தொல்லையிலிருந்து மக்கள் தப்பிப்பார்கள்.

    ReplyDelete
  14. கோமு நீங்க சொல்வது ஸ்மார்ட் கார்ட் தானே! சென்னையிலும் இருக்கு. ஆனா மெஷின்லாம் மழையிலும் வெயிலிலும் இருந்து துரு புடிச்சு போச்சு!

    மக்கள் யாரும் யூஸ் பன்றது இல்ல. பல இடங்களில் வச்சதோட சரி. உபயோகிக்க முடியாத நிலை. எப்படி யூஸ் பண்ரதுன்னு தெரியாம கியூவிலேயே நின்னு வாங்கிக்குறாங்க. அதை பற்றி ரயில்வே நிர்வாகமும் மக்களிடத்தில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தல. பணக்கார வர்க்கத்திர்கு மட்டும் உபயோகமா இருக்கு :)

    ReplyDelete
  15. //இது போல நம்ம ஊர் பக்கம் எப்ப வருமோ,இந்த கண்டக்டர்களின் தொல்லையிலிருந்து மக்கள் தப்பிப்பார்கள்.//

    சுந்தரி! 2011 ந்னு சொல்லியிருக்காங்க. கண்டிப்பா 2021ல் நம்மூருக்கு வந்துடும் :)

    ReplyDelete
  16. இதாவது பரவாயில்லை. இங்கே அமெரிக்காவில் எல்லாமே 199.99 இப்படி எல்லாவற்றுக்கும் .99 பைசான்னு போட்டு கொல்வாங்க. இங்கே ப்ஸ்ஸில் கண்டக்டர் இல்லை. ஏறும்போதே டிக்கட் ட்ரைவர் முன்னாடி இருக்கும் பாக்ஸில் போட வேண்டும்.

    ReplyDelete
  17. namma ellorum sillaraiya koduthutta conducterukku velai illamal poividum........

    ReplyDelete
  18. பாமர மக்கள் என்ன பன்னுவார்கள்

    ReplyDelete
  19. //இங்கே ப்ஸ்ஸில் கண்டக்டர் இல்லை. //

    நல்லதா போச்சு என்ன வானதி! கண்டக்டர் இல்லைன்னா பாதி தொல்லை நீங்கும்.நம்மூர் எலக்ரிக் ட்ரைனிலும் கண்டக்டர் இல்லைன்னு எங்க சொந்தக்காரங்க கூட சொல்லி திட்டுவாங்க ஹீ....ஹீ...ஹி...

    ReplyDelete
  20. //namma ellorum sillaraiya koduthutta conducterukku velai illamal poividum.......//

    //பாமர மக்கள் என்ன பன்னுவார்கள்//

    சரி தான் பாஸித்! ஆனாலும் எல்லா நேரத்துலையும் சில்லரை வச்சுருப்பது என்பது சாத்திமே இல்லை இல்லையா? அவங்களுக்கு(கண்டக்டர்களுக்கு) பொழப்பே அது தான். அப்ப அவங்க தானே வச்சுருக்கணும். தோளில் பை தொங்கப்போட்டிருப்பாங்க. அதுல சில்லரை அதிகமாவே இருக்கும். ஆனா எடுத்துகொடுக்க அலுப்பு. இப்படி செஞ்சா என்ன சொல்றது?

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)