அந்தா இந்தான்னு நாட்கள் ஓடி போய் எல்லோரும் ஆவலாய் எதிர்பார்த்த  தீபாவளியும் வந்தாச்சு!




எப்படியாவது வீட்டில் கொண்டாடிடணும்னு அடிச்சு புடிச்சு கூட்டத்தில் நசுங்கி வந்த குடும்ப தலைவர்கள் மற்றும் இளைஞர்கள்,
 
 ஒரு மாசம் முன்பே தீபாவளிக்கு என்னன்ன வேண்டும் என பெரிய லிஸ்டே போட்டு ஷாப்பிங் பண்ணி களைத்துப்போன குடும்ப தலைவிகள் மற்றும் பெண்கள்,

அம்மா செய்து வைத்த ஸ்வீட்லாம் எப்படி திருடி சாப்பிடலாம், என்ன டீவில என்ன ப்ரோக்ராம் பாக்கலாம், என்னன்ன பட்டாசுலாம் போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

முக்கியமான விஷயம்...

 வெடி போடும் போது பக்கத்துல பக்கெட் நீர் வச்சுக்கோங்க. கம்பி மத்தாப்புலாம் கொழுத்தியதும் அதுல போட்டுடுங்க

வெடி போட்டு முடிச்சதும் வாசலில் தண்ணி தெளிச்சு விடுங்க. வெடிக்காம இருக்கும் சில வெடிகள் நாம் அசரும் நேரம் சதி பண்ணும்.

சின்ன குழந்தைகளுக்கு தகுந்த வெடிகள் மட்டும் கொடுங்க.

அவங்க வெடி போடும் போது பெற்றோர்கள் பக்கத்துல இருங்க.

பெரிய ஊதுபத்தி இல்லைன்னா ஊதுபத்தியை ஒரு குச்சியில் கட்டி அதன் மூலம் வெடி போடுங்க.

சில புஸ்வானம் அழுத்தத்தின் காரணமா திடீர்ன்னு வெடிக்கும். கவனம் தேவை.

புதுசா மார்க்கெட்ல வந்த வெடி என்றால் அதை பற்றி நல்லா விஷாரிச்ச பிறகு வாங்குங்க.

அஜீரணத்துக்கு போடும் மாத்திரை, டானிக் எல்லாம் ரெடியா வச்சுக்கோங்க.

தீபாவளிக்கு பிறகு ஒரு வாரம் ரசம் சாப்பிடுங்க :)


பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்...............

16 comments:

  1. பாதுக்காப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @மதுரை சரவணன்

    தீபாவளி எப்படி போய்ட்டு இருக்கு?

    இங்கே நேத்து நைட் வரை பயங்கரமான வெடி சத்தம். இப்ப பயங்கரமா டீவி சத்தம் :)

    வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  4. @வெங்கட்

    இராமநாதபுரம் பக்கமா நீங்க? உங்க பதிவில் பார்த்தேன்.

    உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இங்கே எனக்குதான் ஒன்ணுமே கிடைக்கலியே அப்புறம் எதுக்கு ரசம் சாப்பிடனும் (( நா சுவீட்டை சொன்னேன் ))ஹா..ஹா.. !! :-))

    ReplyDelete
  7. மலிக்கா

    நல்லா இருக்கீங்களா? ம்ம் வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள்!

    ஜெய்லானி! ஸ்வீட் கிடைக்கலன்னா என்ன பயங்கரமா விருந்து சாப்பிட்டாலே ஒரு வாரத்துக்கு ரசமா வச்சு சாப்பிடணும் :)

    ReplyDelete
  8. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. யாரப்பா அது? அதிரை இர்ஷாத்தா? அடேங்கப்பா இப்ப தான் வர வழி தெரிஞ்சதோ :))

    சாஜித்க்கும் என் ஸ்பெஷல் வாழ்த்தை மறக்காம சொல்லிடுங்க

    ReplyDelete
  10. தீபாவளி வாழ்த்துக்கள் ஆமினா.

    ReplyDelete
  11. கண்மணி

    கண்மணி சொன்னா நம்ப மாட்டீங்க. இர்ஷாத் பார்த்ததும் உங்க ஞாபகம் தான் வந்துச்சு. என்னடா கண்மணிய இன்னும் காணாமேன்னு!

    உங்களுக்கும் உங்க குடும்பத்தில் உள்ளோர்க்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    தீபாவளி எப்படி போச்சு. உங்க இடத்தில் பயங்கர கொண்டாட்டமா? காலைல இருந்து மதியம் வரை இன்னைக்கு உண்மையிலேயே தீபாவளி தானான்னு ஒரே சந்தேகம். இப்ப எங்க வீட்டு வாசல்ல நிக்க முடியல. பயங்கர சத்தம் :)

    ReplyDelete
  12. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. @Dr.எம்.கே.முருகானந்தன்

    உங்களுக்கும் உங்க குடும்பத்தில் உள்ளோர்க்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  14. ஹய் ஆமினா

    உங்களுடைய பாதுகாப்பான தீபாவளி வாழ்த்து மற்றும் குறிப்புக்கு நன்றி!........உங்களுக்கு அறிவுக்கு அளவே இல்லை .........சிங்கப்புரில் அமைதியான தீபாவளி புதிதாய் இருந்தது.

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. ஜானகி தீபாவளி எப்படி போச்சு? தலை தீபாவளி வேற!

    மலேசியாவில் இருக்கும் போது வெடின்னா என்னன்னே தெரியாது. ராக்கெட் வெடி போட தான் அனுமதி. அதுவும் சத்தம் வராத அதிக புகை வராத வெடி தான் என பல கட்டுப்பாடுகள். இந்தியா வந்த பிறகு தான் பல வெடிகள் எனக்கு அறிமுகம்.

    ஊர் விட்டு ஊர் போனா இப்படி தான் :) அடுத்த வருஷ தீபாவளி பொங்கலை நம்மூரில் கொண்டாடுங்க. நானும் இப்பவே ப்ளான் பண்ணிட்டேன் :) அதுசரி உங்களுக்கும் அறிவுக்கும் அளவே இல்லை என சொன்னதன் உள்ளார்ந்த அர்த்தத்தை சொல்ல இயலுமா?!!:)

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)