மர்மக் கோட்டை
பாகம்-2
 முதல் பாகம் காண

தூக்குல தொங்கிட்டாரு அந்த ஸ்கூல் வாத்தியார் அந்த லெட்டர் படிச்சவுடனே!!! அப்படி என்னதான் அந்த லெட்டர்ல? அப்படினு அவர் மனைவி அத படிச்சிருக்காங்க. உடனே அவங்களுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு!. அந்தலெட்டர் அப்படியே ஒரு மளிகை கடைக்காரர் கைக்கு போயிருக்கு அதை படிச்ச அந்த மளிகை உடனே கடைய காலி பண்ணிட்டு ஊரைவிட்டு ஓடிருச்சு. அடுத்து அந்த மளிகையோட மனைவி கையில் அந்த லெட்டர் கிடைச்சிருக்கு. மனைவி அந்த லெட்டரை படிக்க விரிக்கும் அந்த நொடியில் காலிங்க் பெல் கூப்பிட்டது உடனே அதை கிச்சன்லேயே வச்சுட்டு யார்னு பார்க்க போய்ட்டு திரும்பி லெட்டர படிக்க வரும்போது அந்த லட்டர் பறந்து போயி அடுப்புல விழுந்து அழிஞ்சு போச்சு. கடைசிவரை அதுல என்ன இருக்குனு ஆமினாவுக்கு தெரியாமலே போயிருச்சு. அதுனால உங்களுக்கும் அதை என்னால சொல்லமுடியல :-(  சோ மர்மமா இருக்கிற எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்...சரி அந்த பூல் புலையா பாதில விட்டேன்ல?! அதை சொல்றேன் கேளுங்க...



Entranceல ஒரு மீசைக்கார ஆசாமி நின்னுகிட்டு  “மேடம்  டிக்கெட்!” அப்படின்னு  சொன்னார்.  “No Thanks” னு சொன்னேன். என்னது No thanks சா ?? அப்படினா உள்ளே போகாதே அப்படியே ரிவேர்ஸ் எடுத்துருனு மிரட்டி டிக்கெட்டை எங்கிட்ட விற்பனை செய்தார் (உள்ளே போறதுக்கு துட்டாம்). அவர்கிட்ட “சரி உள்ளே போயி போட்டோ எடுத்தா சண்டைக்கு வருவாங்களா?”னு ஐடியா கேட்டேன். ஹா ஹா னு அசிங்கமா சிரிச்சான் அந்த ஆளு. என்னயா ஒப்பாரி வைக்கிறே, ஏன் போட்டோ எடுக்க தடையானு கேட்டேன்..போம்மா போ, போயி முடிஞ்சா எத்தனை போட்டோ வேணும்னாலும் எடுத்துக்கோ தடையெல்லாம் இல்லனு ஒரு பூடகம் போட்டு வச்சான். ஹும்.... கொஞ்சம் ஓவராதான் போறான் இந்த மீச ..அப்படினு சத்தமா நினைச்சுகிட்டே நுழைவாயிலை கடந்தோம், நுழை வாயில் கடந்ததும் Again இன்னொரு வாயில்.அதாவது இரண்டாவது நுழைவு வாயில்.

நுழைவு வாயில் கடந்ததும்....இதான் வரும்!
அந்த வாயில் புதுப்பிக்கப்படாமல் பழமையுடன் பயமுறுத்தியவாறு நின்றது. அங்கே அது நம்மை முறைத்து பார்த்தது. நானும் விரைத்து பார்த்தேன். ஆனாலும் உள்ளுக்குள்ள பயம். அடப்பாவிகளா முகப்பு மட்டும் அழகா பெயிண்ட் அடிச்சு புதுசா வச்சுட்டு உள்ள ஆப்பா வைக்கிறீங்கன்னு சொல்லிட்டே போனேன். பார்க்கவே   பீதியாதான் இருந்துச்சு அதுக்காக பாதியில போயிறமுடியுமா என்ன?  ஏன்னா ஆமிக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரினு போன பகுதிலேயே நான் வாக்கு கொடுத்திருக்கேன் இல்லையா, ஸோ நாக்கு தவறக்கூடாது. அதுனால முன்னோக்கிய நடையில் மும்முரமாக சென்றோம்..நடுவில் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட சிறு நந்தவனம் அங்கே நறு மணம் கொண்ட பூக்கள் புற்களை திருமணம் செய்து கொண்டு புறாக்களை மடியில்  திரிய விட்டிருந்த அந்த ரம்மியமான காட்சி கண்ணுக்கு விருந்து கவலைகளுக்குமே அது மருந்து. இந்த இயற்கையின் எழிலை ரசித்ததை அடுத்து அந்த வாசலை கடந்தவுடன் நான் கண்டு வெள வெளத்து போய் நின்ற ஒரு மர்மக்கோட்டைதான் அந்த பூல்புலையா கோட்டை.

பார்க்கும்போதே மிரட்டியது அந்த கோட்டையின் தோற்றம், அவ்வளவு கூட்டம் இருந்தும் கூட  அச்சம் ஆட்டியது . அந்த கோட்டை என்னை நோக்கி “தைரியமா வரியா? மவள வா வா வந்து பாரு! வந்துட்டு எப்படி போறேனு நானும் பார்க்கிறேன்” என்று மல்லுக்கு நின்றது. அதன் தோற்றம் இவ்வாறாகதான் திகிலா இருந்தது. நான் மட்டும் தனியா போயிருந்தா எதுக்கு வம்புனு ஜகா வாங்கிருப்பேன். ஆனா கூட என்னோட ஒரு கெஸ்ட் வந்திருக்காங்க. அவங்க முன்னாடி நம்ம மானம் போயிரக்கூடாதுனு கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கிட்டேன். பார்க்கவே படு பயங்கரமாவும், பயமாவும் இருந்துச்சு.(மேலே உள்ள போட்டோ பாருங்க. இப்படி இருந்தா பயம் வாராதா என்ன?)


அந்த கோட்டையின் இடது புறத்தில் சின்னதா ஒரு கோட்டை(பவ்லி), வலது புறத்தில் ஓர் அழகிய மசூதி. சா பூ திரி போட்டு செலக்ட் பண்றதுக்குள்ள என்னை இழுத்துட்டு போய்ட்டான் என் மகன். லெஃப்ட்ல கட் பண்ணி அந்த பவ்லி கோட்டைக்குள் நுழைந்தேன். அந்த கோட்டைக்கென பிரத்யோகமா நியமிக்கப்பட்டிருந்த ஒரு Guideன் வழிகாட்டுதலுடன் உள்ளே சென்று பார்வையிட ஆரம்பித்தோம். அங்கே..

10 படி ஏறி உடனே மூச்சு வாங்கிட்டே 30 படில இறங்குனா அங்கே ஒரு தடாகம், “இங்கே தான் இந்த வரலாற்று ஆத்மாக்கள் நீராடியதா?” என்ற என் வினாவுக்கு இங்கே No குளியல்னு சொல்லி வச்சார், விளக்கம் அப்பறம் சொல்றேனு தள்ளிவச்சார். இதை மைண்ட்ல வச்சுகோங்க அப்பறமா இதை பத்தி உள்ளே போய் விளக்கமா பேசலாம்னு Guide சொன்னார். “ஙொய்யாலே! இத முன்னமே சொன்னா இவ்வளவு கஷ்ட்டப்பட்டு இறங்கியிருக்க மாட்டேனே?! :(  நீங்களும்
படிகட்டின் முடிவில் இருப்பது தடாகம்
மைண்ட்ல வச்சுக்கோங்க. உள்ளே போயிட்டு வந்து சொல்றேன்...).மீண்டும் அவர் பின்னாடி சென்றோம். மீண்டும் இங்கேயும் மூச்சு வாங்கி 30 படி மேல ஏறி கோட்டையின் பின்பக்கம் சென்றோம். இங்கே சூரியப்பார்வை படாததால் இருள் குடி கொண்டுள்ளது. இந்த இருட்டு பிரதேசத்தில் குருட்டு நடை போட்டு மெல்ல மெல்ல முன்னேறினோம்..இப்ப இந்த இருட்டில் தான் ஆமி மண்டயில் பல்ப் எரிந்தது. அந்த மீசைக்கார நண்பா சொன்னது (முடிஞ்சா போட்டோ எடுத்துக்கோனு...) நினைவில் வந்தது. என்னதான் Flash வச்சு போட்டோ எடுத்தாலும் கேமராவுக்கு எதையும் விட்டுக்கொடுக்காத இருட்டு. குளிர் இல்லை ஆனாலும் நடுக்கம், அவசர பட்டு வந்துட்டோமோனு ஒரு பட படப்பு. இங்கேயும் மூச்சு வாங்கியது பயத்தால். இங்கேயும் அதே மாதிரி நீர் நிரம்பிய தடாகம்(முதலில் பார்த்தோமே அதே தான்). இந்த இடத்தை பத்தி சுவராஸ்யமா ஒரு தகவல் சொன்னார்...

அதை அடுத்த பகுதியில்னு சொல்லாம்னுதான் நினைச்சேன் ஆனா அடிக்க வந்துருவீங்களே அதுனால இதுலேயே சொல்லிர்ரேன். அதாவது...

 Guide சொன்னார் “இப்ப நாம் நிக்கும் இடத்தில் தான் காவளாலிகள் நிற்பார்கள். இடையில் ஒரு சுவர். அந்த பக்கம் அதாவது வெளிபக்க வாசலில் யார் வந்தாலும் வந்தவரின் பிம்பம் தண்ணீரில் தலைகீழாக தெரியும்.(இந்தக்கால Security Camera மாதிரி) இந்த டெக்னீக் மூலம் யாராவாது ஒற்றனோ எதிரியோ அந்த வாசல் பக்கம் வந்தா இந்த தடாகத்து நீரில் தலைகீழாக காவலாளியின் பார்வைக்கு வந்துவிடுவார்கள், ஆனால் காவலர்கள் நிற்கும் இடம் இருட்டாக இருப்பதாலும், முன்னாடி சுவர் இருப்பதாலும் எதிரிகளால் இவர்களது உருவத்தை காணமுடியாது. உடனே எல்லாரும் அலர்ட்டாகி பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கிவிடுவார்கள் என்று விளக்கினார் அந்த Guide. அதைப்போலவே அந்த பக்கமா சுற்றி கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் உருவம் அந்த தண்ணீரில் தெளிவாக தெரிந்ததை Guide எங்களுக்கு உதாராணாமாக காட்டினார். நாங்களும் கண்டுவியந்தோம். நாங்கள் நிற்கும் இடம் இருட்டாய் இருப்பதால் அவர்களால் எங்களை காணமுடியாது. எங்களின் பின்பம் நீரிலும் தெரியாது. இதுக்கு தான் டா நம்மாளுகளுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகமா இருக்கோன்னு சின்னதா ஒரு எண்ணம் ஓடிட்டு இருந்துச்சு. தன் எதிரிகளை அவர்களுக்கே தெரியாமல் நோட்டமிட்டு வரும் முன் காக்க எத்தகைய சின்ன ஒரு சாதாராண விஷயத்தை அடிப்படையாக கொண்டு அற்புதமான வடிவமைப்புடன் கட்டியிருக்கிறார்கள் என நினைத்து ஆச்சர்யமும், பெருமையும் கொண்டேன்... (இந்தியண்டா...............:))

அடுத்து... கோட்டையின் நடுவில் பெரிய அகன்று விரிந்த ஒரு கிணறு,  அதன்
ஆழம் அறியப்படாத ஒன்று. இதுவரை தண்ணீரும் வற்றியதில்லையாம்.அந்த கிணத்துக்குள் சென்றவர்கள் இதுவரை யாருமே திரும்பியதில்லையாம். ஏற்கனவே அந்த இடம் இருண்டு போய் பார்க்கவே பயமா இருக்கும்போது அந்த நேரம் பாத்து இந்த கிணத்துல பல பேர் விழுந்து செத்துருக்காங்கன்னு சொல்லும்போது பயம் கவ்விக்கொண்டது. அடப்பாவி இதை முன்னமே சொல்லியிருந்தா இந்த பக்கமே வந்துருக்க மாட்டேனே...அதுவுமில்லாம எந்த தடுப்பும் இல்லை. நீங்களே பாருங்களேன் போட்டோவில்... தப்பு தவறி எவனாவது ஓடி விளையாடினா போச்சு :( உடனே அந்த இடத்தை காலிபண்ணிட்டோம்.

கிணறு
ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்க படையெடுத்து வந்த போது கஜானாவை காப்பாற்ற கஜானா சாவியை இந்த கிணற்றுக்குள்தான்  வீசுச்சாம் அந்த  மகாராணி அம்மா  (அந்தக்காலத்துலேயே சாவி கொத்தை பொம்பளைங்க ஆக்ரமிச்சுட்டாங்க போல). அந்த சாவி மட்டும் இப்ப கிடைத்தால் உலக வங்கிகளில் இந்தியா வாங்கிய கடனை அடைத்து விடலாமாம்.(எனக்கும் நம்பமுடியலைதான்). அப்ப இந்தியா இந்த  கிணத்துக்குள்தான் இருக்கு போல. வருங்கால இந்தியா இந்த இறந்த கால கிணற்றுக்குள். அப்ப ஏன் அந்த சாவிய எடுக்கல, மன்மோஹன்சிங்குக்கு நீச்சல தெரியலையாம் அதுனால சாவிய எடுக்கலையாம். பழங்கால வரலாற்று சம்பவமாக சொல்லப்படுவதால் இதன் நம்பகத்தன்மைப் பற்றி நானறியேன். Guide சொன்ன இந்த விசித்திரமான அல்லது சுவராஸ்யமான தகவலை கேட்டதோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.


அப்படியே நாங்கள் நடந்து போன வழியில் சில இடங்களில் மட்டும் சூரியன் கண்டும் காணாமலும் இருந்தது. அந்த பகுதிகள் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தட்டு தடுமாறிதான் போனோம். குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் இரண்டு சுரங்கப்பாதைகள் இருந்தது. டெல்லி, ஆக்ரா (தன்னை நியமித்த முகலாய அரசை அடிக்கடி பார்த்துட்டு வரவும்) அலகாபாத், பைசாபாத்(தன் கட்டுபாட்டில் இருந்த நகரங்களுக்கு செல்லவும்) என பல நகரங்களுக்கும் இதன் வழியாகத்தான் அக்கால ராஜாக்கள்லாம் செல்வார்களாம். இந்த கோட்டையில் 12 சுரங்கப்பாதகள் உள்ளன. எங்கே செல்லும் இந்த பாதை என்ற கணக்கிலதான் இந்த பாதையின் பயணமும். பல அபாய வளைவுகளை அநியாயமாக கொண்டுள்ளது. இந்த பாதையின் பயணம் எங்கே சென்று எங்கே முடிகிறது என்பதுவும் அறியப்படாதவையாக உள்ளது. கட்டிடத்தை டிவமைத்த கிதாயத்துல்லாஹ் குழுவினர், நவாப்மற்றும் தளபதி இவர்களுக்கு மட்டும் தான் தெரியும் எனவும் அவர்களை தவிர்த்து வேறு யாரும் சென்றதில்லை எனவும் சொன்னார்.  இதனுள் சென்றவர்களுக்கும் அது One Way தானாம். இதுவரை திரும்பி வராமல் அங்கேயே பிசியா இருக்காங்களாம். இந்த பாதையின் போக்கு தெரியாததால் வேற யாரும் ஆர்வக்கோளாறூல போயி அவங்க குடும்பங்களுக்கு டாட்டா காட்டிரக்கூடாதுனு அங்கே கேட்டை போட்டு பூட்டை தொங்கவிட்டார்கள் (அப்ப ஏற்கனவே உள்ளே போனவங்க என்னாச்சு?....ப்ச் அவங்க வந்தா காலிங்க் பெல் அடிப்பாங்கப்பா! அப்ப போய் கேட்டை திறந்து விட்டுக்கலாம்) இப்படியாக பல வேடிக்கைகளையும் வினோதங்களையும் சொல்லிய அந்த Tourist Guide எந்த சந்துபொந்துகளிலோ சுற்றி  எங்களை வாசலில் கொண்டு வந்து சேர்த்தார். அப்பா...டா....னு பெருமூச்சு விட்ட போது கூட வந்த பையன் பேச்சு கொடுத்தான் எங்கிட்ட, நாம தன்னால மறுபடியும்  போகலாமானு கேட்டான். எங்கே? வீட்டூக்கா?  வா போயிரலாம் னு அவசரமானேன். உடனே அவன்
அவசரமா குறுக்கிட்டு, நாம பாக்கவேண்டிய முக்கியமான மெயின் கோட்டையே அங்கேதான் இருக்கு, அதை கோட்டை விட்டுராதீங்கனு ஆர்வமூட்டினான். ஏன்னா எல்லாம் அடங்கிய அதியசம்,ஆச்சர்யம் அங்கு தான் உண்டாம். நானும்  “ஹா! எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா?” என வீர வசனம் பேசிவிட்டு அந்த பக்கமா கிளம்பினேன். அந்த வாசலை நெருங்கியவுடன் அங்கேயும் ஒரு மீசை நின்னுச்சு. மீசை வச்சாலே வர்ரவங்களுக்கு எதாவது தொல்லை கொடுக்கனும்போல. வாசலில் நுழையும் போதே அந்த மீச எங்களை தடுத்து நிறுத்தி செருப்பு கழட்டிட்டு போங்கன்னு சொன்னார்.
அத்துடன் அதற்கான காரணத்தையும் சொன்னார் பாருங்க..செம்ம சுவராஸ்யம் அது. அப்படி என்ன சுவராஸ்யம்னு கேட்கிறீங்களா? ம்ஹும்..அதை அடுத்த பகுதியில்தான் சொல்வதாய் உத்தேசம்.
உங்களால் முடிஞ்சா யூகித்து சொல்லுங்க பாப்போம். கண்டிப்பா உங்களால் முடியாதுனு அடிச்சு சொல்வேன். அப்படி நீங்க கரெக்டா சொல்லிட்டா நிச்சயமா நீங்க ப்ரிளியண்ட்தான். ஆனால் உங்களால் சொல்லவே முடியாது. சோ நானே சொல்லிர்ரேன். ஆனா அடுத்த பகுதியில்............ :-)

அப்பறம் எனக்கு வந்த மெயில் தகவல்!! தெரிஞ்சவங்க கிட்ட சொல்லிடுங்க!!!
We are looking sales Engineer for abu dhabi
Qualification ; Graduation mechanical engineering
experience in Scaffolding marketing in uae
salary negotiable

Gypsum foreman- must be experience in interior designer work

if some body are interested ; pls send ur bio datas to :rahim699@gmail.com

 படங்கள்- நன்றி கூகுள் :)




, , ,

54 comments:

  1. nalla kilappu raangappaa பீதிய....

    ReplyDelete
  2. படிக்க படிக்க ரொம்ப விறுவிறுப்பா இருக்கு ஆமீனா.. அடுத்தது எப்போ?...

    ReplyDelete
  3. @ ஜே

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணம் தான் :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!!

    ReplyDelete
  4. மிக்க நன்றி சேக் அண்ணா!!

    ரெடியாச்சுண்ணா!! 2 நாளில் அடுத்த பாகம் போட்டுடுவேன்.இன்ஷா அல்லாஹ்....
    போட்டோ இல்லாம சொன்னா புரிஞ்சுக்குறது கொஞ்சம் கஷ்ட்டம். எல்லா போட்டோவும் போட்டு விளக்கமா சொன்னாலும் பக்கம் ரொம்ப நீளமா போகுது :( அதுக்காக தான் கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்ண்ணா!!
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! தொடர்ந்து வாங்க :)

    ReplyDelete
  5. மிக சுவாரஸ்யமான எழுத்து நடையுடன், திகிலும் கலந்து அசத்துகிறீர்கள்.

    ReplyDelete
  6. ஆமி ரெண்டாம் பாகமும்சூப்பர். நல்லா அனுபவிச்சு சுவாரஸ்யமா எழுதரீங்க.
    பாராட்டுக்கள்; என்ப்ளாக்ல ஒருசின்ன சந்தேகம் கேக்கவா? ந்யூ போஸ்ட்பக்கம்
    ஆட் இமேஜில் போட்டோ அப்லோட் ஆகமாட்டேங்குதே.

    ReplyDelete
  7. ஆமி வழக்கம் போல ரெண்டாம் பதிவும் சூப்பரா சொல்லி இருக்கீங்க.
    நானும் உங்க கூட அங்கியே இருந்தாப்ல ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  8. ஸலாம்.சகோ ஆமினா அவர்களே.
    எழுத்து அருமை,சுவாரஸ்யம் குறையாமல் நகைச்சுவை இழையோட,அங்கங்கு கவித்துவ வர்ணனைகளுடன் எழுதுவது,திறமைதான்.ஆனா,கடைசி வரை அந்த பூல்புலையா பத்தி சொல்லவே இல்லையே..ஏதோ திகில் அப்டி இப்டீன்னு இந்த பசங்கள்ளா பேசிக்கிறாங்களே,அப்டீன்னா என்ன???

    ஆனா பேசிட்டு இருக்கும்போதே,அடுத்த பதிவுல சொல்ரேன்னு சொன்னா??மொளகாய கடிச்ச மாறி கோவம் வருது..என்ன பன்றது.தண்ணியகுடிச்சுட்டு...படிக்கத்தா முடியும்..

    சரி அடுத்த பதிவுலையாவது,திகில்ஸ் இருக்கான்னு பாப்போம்.

    நாங்கள்ளா...திகிலுக்கே திகிலூட்றவங்க...ம்ம்ம்

    (just kidding)

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  9. //சிநேகிதன் அக்பர் said...

    மிக சுவாரஸ்யமான எழுத்து நடையுடன், திகிலும் கலந்து அசத்துகிறீர்கள்.//

    மிக்க நன்றி சகோ!!!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

    ReplyDelete
  10. @லெட்சுமிம்மா!!

    மிக்க நன்றி லெட்சுமிம்மா....
    நீங்க ரசிச்சு படிச்சுருக்கேன்னு சொல்லுங்க ;)
    கோமுகிட்ட என் மெயில் ஐடி வாங்கிக்கோங்க. நான் அங்கே விளக்கமா சொல்றேன்!!!

    ReplyDelete
  11. நன்றி கோமு!!

    அப்படிலாம் சொல்லி தப்பிச்சுட முடியாது. சீக்கிரமா டூர் போக ப்லான் பண்ணுங்க ;)

    ReplyDelete
  12. @ரஹின்

    வஸ்ஸலாம் .
    மிக்க நன்றி சகோ!!

    //.ஏதோ திகில் அப்டி இப்டீன்னு இந்த பசங்கள்ளா பேசிக்கிறாங்களே,அப்டீன்னா என்ன???
    //

    உண்மை தான். என்னால் அந்த அனுபவத்தை எழுத்தில் கொண்டு வரமுடியுமா என்னன்னு தெரியல. நேர்ல பாக்குறவங்களுக்கு தான் அதன் அருமை தெரியும். புல்லா இருட்டு தான். கூகுளில் படம் எடுக்கும் போது கூட ரொம்ப சிரமமா இருந்துச்சு. ஒரு இருட்டு கோட்டையில் நுழைந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அது போல் கற்பனை செய்துக்கொல்ளுங்கள். ஏன் திகில், என்ன ஆச்சர்யம் அப்படிங்குறத அடுத்த பதிவுல சொல்றேன் :)

    //மொளகாய கடிச்ச மாறி கோவம் வருது..என்ன பன்றது.தண்ணியகுடிச்சுட்டு...படிக்கத்தா முடியும்..//
    ஹா...ஹா...ஹா.... ரொம்ப கொலவெறில இருக்கீங்க போல... உங்க பக்கம் கொஞ்ச நாள் தலகாட்ட கூடாது :)

    ReplyDelete
  13. வ அலைக்கும் சலாம் சகோ.சும்மாதா சொன்னேன்,எப்போமே,நாம பயத்த வெளிக்காட்டிக்க கூடாது.கிட்டத்தட்ட உங்களப்போல.

    அதா அப்டி எழுதி இருந்தேன்,நேர்ல பாத்த அனுபவம் எழுத்தில் நல்லாவே தெரிகிறது.உங்களது பயம் உள்பட

    ரஜின்

    ReplyDelete
  14. http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html

    உங்களுக்கு விருது கொடுத்து இருக்கேன் .பெற்று கொள்ளவும்.

    ReplyDelete
  15. பதிவு அருமை.very interesting.

    ReplyDelete
  16. @ஆமீனா

    மிக மிக அருமையான தொடர். இது வரை கேள்விப் பட்டது இல்லை...ஆமா அந்த கிணத்தில இறங்கி சாவிய எடுத்து இருக்கலாம்ல ??

    ReplyDelete
  17. இப்படி அடுத்த பதிவு அடுத்த பதிவுன்னு ஒருவருசத்துக்குஇதை வச்சே ஓட்டலாம்னு ஐடியாவா? :)

    அப்போ படங்கள் நீங்க எடுத்தது இல்லயா?

    அடுத்த பதிவை விரைவில் எழுதுங்கள்..

    ReplyDelete
  18. //,எப்போமே,நாம பயத்த வெளிக்காட்டிக்க கூடாது.கிட்டத்தட்ட உங்களப்போல.
    //
    அதே தான் :))

    மிக்க நன்றி ரஜின்!

    ReplyDelete
  19. //http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html

    உங்களுக்கு விருது கொடுத்து இருக்கேன் .பெற்று கொள்ளவும்.//

    விருதுக்கு மிக்க நன்றி ஆசியா!!

    ReplyDelete
  20. ஏங்க.. உங்கள் மனதில் என்ன எழுத்தாளர் ராஜேஷ் குமார் நினைப்பா ?ரொம்ப சஷ்ப்பென்சாவும், திகிலாகவும் கதையைக் கொண்டு போறியளே.சொல்ல வந்ததை பக்குவமா சொல்லுங்க, சின்னப் பசங்க நாங்கப் பயந்திடப் போறோம்

    ReplyDelete
  21. //ஆமா அந்த கிணத்தில இறங்கி சாவிய எடுத்து இருக்கலாம்ல ??//

    எத்தன நாளா இந்த ஆசை? அந்த கிணறு வத்துனதில்லையாம். ஆழமும் எவ்வளவுன்னு தெரியலையாம். போனவங்க திரும்புனதில்லையாம். இதெல்லாம் கேட்ட பிறகு எவன் போவான்? அந்த கிணத்த பாத்ததுக்கு அப்பறம் எங்க வீட்டு கிணறு பக்கமே போறதில்ல தெரியுமா :((

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி எல்.கே

    ReplyDelete
  22. //இப்படி அடுத்த பதிவு அடுத்த பதிவுன்னு ஒருவருசத்துக்குஇதை வச்சே ஓட்டலாம்னு ஐடியாவா? :)//

    இப்படிலாம் ரகசியத்த பப்ளீக் பண்ண கூடாது சொல்லிபுட்டேன் :)) மொத்தமே 4 பாகம் தான் கவலபடாதீங்க......

    ReplyDelete
  23. //Mohamed Ayoub K said...

    ஏங்க.. உங்கள் மனதில் என்ன எழுத்தாளர் ராஜேஷ் குமார் நினைப்பா ?ரொம்ப சஷ்ப்பென்சாவும், திகிலாகவும் கதையைக் கொண்டு போறியளே.சொல்ல வந்ததை பக்குவமா சொல்லுங்க, சின்னப் பசங்க நாங்கப் பயந்திடப் போறோம்/

    இது உண்மையிலேயே அந்நியனா? அந்நியன் கெட்டப்ல வந்த சிறுவனா? :))

    அந்த அளவுக்குள்ளால் ஆசை இல்லைங்க. அவருக்கும் மேல பேர வாங்கணும்னு ஆசை :))

    தமிழ்ல இது பத்தி இதுவரை எந்த கட்டுரையும் இல்லாததுனால கொஞ்சம் விரிவா சொல்லவேண்டியதா போச்சு... வேற ஒன்னுமில்ல!!

    ReplyDelete
  24. //Blogger asiya omar said...

    பதிவு அருமை.very interesting.//

    மிக்க நன்றி ஆசியா!!

    ReplyDelete
  25. ஆமினா அழ‌கான‌ எழுத்து ந‌டை அச‌த்துறே...தொட‌ர்ர்ர்ர்ந்து எழுதுங்க‌ம்ம‌ணி..வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  26. ஆமீனா நல்ல பதிவுங்க....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. //அஹமது இர்ஷாத் said...

    ஆமினா அழ‌கான‌ எழுத்து ந‌டை அச‌த்துறே...
    யாரது? இர்ஷாத்தா???????
    இன்னைக்கு தான் இந்த பக்கம் காத்தடிக்குது......!!! அடிக்கடி வாங்கோ!!!

    //தொட‌ர்ர்ர்ர்ந்து எழுதுங்க‌ம்ம‌ணி..//
    சரீ.....ங்கண்ணு :)

    ReplyDelete
  28. நன்றி நித்திலம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

    ReplyDelete
  29. எப்புடி இப்படிலாம் அப்பாடி கலக்குறிங்க போங்க!!!பயத்தை மறைக்க(எப்டிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு அய்யோ!அய்யோ!)எனக்கு இது ஒரு புது அனுபவம்....இங்க பாருங்க நானே
    ஒரு சோம்பேறி என்னையவே படிக்க வச்சிட்டிங்க போங்க!!ஸ்கூலையே புக்ஸ்ல பாடம் ஃபுல்லா படிக்க மாட்டேன்...பிராமாதம்...!!!மீசை என்றாலே ”கெத்”.அதுக்குனு ஒரு மரியாதை இருக்குல.

    ReplyDelete
  30. //ஸ்கூலையே புக்ஸ்ல பாடம் ஃபுல்லா படிக்க மாட்டேன்..//

    உண்மைய சொல்லு... அந்த நாயக்கர்கள் பத்தி நல்ல விதமா பதில் எழுதுனது நீதானே !?( அத போட்டோ வேற எடுத்து அனுப்புறீயா? :))))

    நன்றி பாஸித் தம்பி....... :)

    ReplyDelete
  31. அய்யோ அப்டிலாம் நான் பன்ல!இது வீண் பழி சுமத்துகிறீர்கள்!அபாண்டம்...

    ReplyDelete
  32. //அய்யோ அப்டிலாம் நான் பன்ல!இது வீண் பழி சுமத்துகிறீர்கள்!அபாண்டம்...//

    இதுகெல்லாம் இப்படி கத்தலாமா? போகும் போது அக்கா குச்சி முட்டாயும் குருவிமிட்டாயும் வாங்கி தரேன் ஓக்கேவா? :))

    ReplyDelete
  33. எனக்கு அந்த கிணத்தை பார்த்தாதான் தலையை சுத்துது..அவ்வ்வ்வ்

    எழுத்து நடை சூப்பர்..!! என்னது 4 பாகமா மொத்தம் 40 பாகம் போடுங்க ..படிக்க நான் ரெடி :-))

    ReplyDelete
  34. சகோ
    எழுத்து நடை இயல்பாக இருவர் ஜாலியாக பேசிக்கொள்வது போல் இருக்கிறது வாழ்த்துக்கள்
    (ஆனந்த விகடன், குமுதம்,குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் அதிகமாக படிக்கிறீங்க போல தெரியுது)

    ReplyDelete
  35. கம்பெனி மிட்டாய்,பிஸ்கட் டா தாங்க ஓகே!!!!

    ReplyDelete
  36. //கம்பெனி மிட்டாய்,பிஸ்கட் டா தாங்க ஓகே!!!!//

    அம்பானி கம்பெனியா? டாடா கம்பெனியா சொல்லவே இல்ல :)))

    ReplyDelete
  37. ஆமி, நல்லா இருக்கு. கொஞ்சம் பயமாவும் இருக்குபா. ஆரம்பத்தில் லெட்டர் சமாச்சாரம் எகிப்தில் உள்ள மம்மி கதை போல இருக்கே. தொடருங்க.

    உங்களுக்கு நான் கொடுத்த விருதினை வந்து பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி.


    http://vanathys.blogspot.com/2010/11/blog-post_27.html

    ReplyDelete
  38. //என்னது 4 பாகமா மொத்தம் 40 பாகம் போடுங்க ..படிக்க நான் ரெடி :-))//

    உங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும்? :))

    //எனக்கு அந்த கிணத்தை பார்த்தாதான் தலையை சுத்துது..அவ்வ்வ்வ்
    //
    இப்படி நிறைய பேருக்கு சுத்தி தான் கீழே விழுந்துடுராங்க ஜெய். வீட்டுல காதல ஒத்துக்கலைன்னா இந்த கிணறே சரணம்னு உள்ள போயிடுறாங்க. அதான் அந்த கிணத்த மூடும் பணி நடந்துட்டு இருக்கு :)

    ReplyDelete
  39. @ஹைதர் அலி

    மிக்க நன்றி சகோ!!

    /(ஆனந்த விகடன், குமுதம்,குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் அதிகமாக படிக்கிறீங்க போல தெரியுது)//
    அந்த புக்லாம் பாத்து பல வருஷங்கள் ஆச்சு. என்னை சுத்தி நீங்களாம் இருந்து ஊக்கம் கொடுக்குறதுனால இப்படிலாம் முடியுது!!

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  40. //ஆமி, நல்லா இருக்கு. கொஞ்சம் பயமாவும் இருக்குபா. //

    ஆத்தா.....நா பாஸாயிட்டேன்....

    வானதி என்னை நம்பி பெரிய விருது கொடுத்த உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். எனக்கு தலையும் புரியல, வாலும் புரியல :))))

    ReplyDelete
  41. பயமா நமக்கா ஹி ஹி அதெல்லாம் வரவே வராது. மர்மக்கிணறென்ன மந்திரக்கோட்டையென்னா நமக்கெல்லாம் ஜுஜிபி அப்படின்னு சொல்ல-----------------------------ல அப்படின்னெல்லாம் நினைக்காதீங்கக்கோ வருவோம் அதையும் ஒருகை பாத்துருவோமுல்ல.திகில் கலந்த பயந்துடுவோமா. ஆனால் நல்ல சுவாரஸ்யமாக சொல்லுறீங்ககோவ்.

    ReplyDelete
  42. எதாச்சும் ஒரு கம்பெனி!!

    ReplyDelete
  43. //திகில் கலந்த பயந்துடுவோமா.//

    ஹா...ஹா....ஹா.....

    நாமெல்லாம் யாரு? கீழே விழுந்தாலும் முடில மண்ணு ஒட்டாதுல :)

    ReplyDelete
  44. ஆமி போனதே போனீங்க அந்த கிணத்துக்குள்ள இருந்து சாவியை எடுத்திருக்கலாம்ல :)

    ReplyDelete
  45. @கவிசிவா

    எத்தன நாள் ஆசைங்க உங்களுக்கு?

    ReplyDelete
  46. ஆமி...உங்களுக்கு ஒரு விருது தருகிறேன்...)) பொம்பளை ராஜேஷ்குமார் னு...))) என்னவோ க்ரைம் நாவல் படிக்கிற மாதிரி இருக்கு...கலக்குங்க..கலக்குங்க...:)))

    ReplyDelete
  47. ஆனந்தி எதுவும் உள்குத்து இல்லையே? :))

    மிக்க நன்றி!!!!!!

    ReplyDelete
  48. ஒரு ப்ளான் ரெடி பண்ணி ஒடனே ஒரு விசிட் அடிங்க :))

    ReplyDelete
  49. சலாம் ஆமி நான் வந்துட்டேன்ன்ன்ன்
    பூல்புலையா ரொம்ப விறுவிறுப்பா இருக்குடா (ராஜேஷ் குமார் நாவல் மாதிரி)இருக்குடா

    ReplyDelete
  50. சலாம்.ஆமி நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்
    பூல்புலையா நல்லா விறுவிறுப்பாக இருக்கு

    ReplyDelete
  51. @பாத்திமாம்மா

    வ அலைக்கும் சலாம் வரஹ்....

    ஹாய் பாத்திமாம்மா....எப்படி இருக்கீங்க..

    தொடர் கமெண்ட் தொடர்ந்து பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி எனர்ஜி கொடுத்துச்சு...

    மிக்க நன்றிம்மா!

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)