மர்மக் கோட்டை
பாகம்-4

இந்த தடவ எந்த மேட்டரும் கிடைக்கல. சோ நேரடியா கதைக்கு வாங்க....

என்னை பாத்து தமிழ்ல பணம் கேட்டதும் பயங்கர அதிர்ச்சில Mr.Mr. னு முழிச்சுகிட்டு இருந்தேன், தமிழில் சொன்னா திருதிருன்னு முழிச்சுட்டு இருந்தேன். கொஞ்சம் துட்டு கொடுத்தா அவன் விட்டுக்கொடுப்பானு பர்ஸை எடுக்கும்போது என்னுடன் வந்த ஃப்ரெண்ட் அதற்கு உடன் படவில்லை  “அக்கா,அவங்களுக்கு பணம் மட்டும் எல்லா மொழியிலையும் கேக்க தெரியும். நீங்க சும்மா எதையும் ஒளறிகொட்டாதீங்கன்னு மண்டையில கொட்டி என் சேவிங்க்ஸ சேவ் பண்ணான். நானும் அவ்வண்ணமே பர்ஸை மூடிட்டு, ஒரு முடிவோட ‘’நீ மொதல்ல எல்லா இடங்களையும் சுத்திகாட்டு, அப்பறமா பணம் தரேன்னு சொல்லி கரார் காட்டி அந்த வழிகாட்டிய வழிக்கு கொண்டுவந்து வழிகாட்ட சொன்னேன். அவனும் ஒரு வழியா வழிக்கு வந்தான். அவன் வழியிலேயே நடந்து பூல்புலையா அடைந்தோம். இங்கேயும் இருட்டு. சூரிய கசிவு கூட இல்லை. இருட்ட பார்த்ததும் ஷாம் நகரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சார்.என் கையை இறுக்க பிடிச்சுட்டு “ஆனி நான் வரல” அப்படின்னு ஆனித்தரமா சொன்னான்(எனக்கு அவுக வச்ச பேரு ஆனி). அப்பறம் ஐஸ்க்ரீம் இல்லாமலே ஒரு வழியா அவனை சமாதானப்படுத்தி  வெளிச்சமான பக்கம் கூடிட்டு வந்ததும் ஆளு உற்சாகமா  “கியாவுவா ஆனி? ஷாம் இருக்கேன்.பயப்படாத”
என மழலை மொழியில் தைரியம் சொன்னதும் பயம் போய் எனக்கு பயங்கர சிரிப்பு தான் வந்தது.அது சரி. விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்? நம்ம புள்ள நம்ம மாதிரியே இருக்கானேன்னு நெனச்சு ரொம்ம்ம்ம்ம்ப பெருமப்பட்டேன் :)

மொத்தம் 999 பாதைகள் அதாவது வாசல் இருக்கு. அதுல ஒரு பாதை தான்
சரியானது. அந்த சரியான பாதையில் வந்தால் தான் மீண்டும் 786 என்ற எண்ணிடப்பட்ட வெளியே செல்லும் வழிக்கு செல்ல முடியும். இல்லைன்னா அப்படியே சுத்திட்டே இருக்க வேண்டியது தான். புதிர் தோட்டம் எல்லாரும் பாத்திருப்போம் இல்லையா (அட போட்டோஸ்லையும் டீவிலையும் தான்). அப்பறம் சின்ன பிள்ளைங்களுக்கு பேப்பரில் வருமே ஒரு பக்கம் பூனையும் கடைசி மூலையில் சாப்பாடும் இருக்கும். சரியான பாதையில் கோடு போட்டுட்டே வந்து அந்த சாப்பாடு உள்ள இடத்தை அடையணும். அதை மையமா வச்சு தான் இப்படி ஒரு கோட்டை. புதிர் தோட்டமாவது பரவாயில்லை. ஏன்னா வெளிச்சம் நமக்கு பயத்தை காட்டாது. ஆனா இங்கே எல்லாமே இருட்டு தான். ஆங்காங்கே படிகட்டுகள், சந்துகள், வளைவுகள், போட்டு இருக்கும் போதே எதிர்பாராத விதமா மேலே செல்ல 10 படிகட்டுகள் கொண்ட பாதை, அதே 10 படிகட்டுகள் கொண்ட இறங்கும் பாதை. சில பாதைகள் ஒரு ஆள் நுழையும் படியான குறுகிய சந்தாக இருக்கும். எல்லாமே முக்கோன பாதைகள். நடுவுல முக்கோண சுவர் இருக்கும். அதை சுற்றி பாதை. இப்படியே கோட்டை முழுக்க முக்கோண பாதைகள் தான். அதுனால சரியான வழி கண்டுபிடிப்பது சிரமம். நாங்க மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி அவர் பின்னாடியே போனதுனால எதுவும் கண்டுக்கல.  வரும் வழியை குறித்து வைத்துக்கொண்டே அடுத்த இடத்துக்கு நகர்ந்தோம்.

4 சுரங்கபாதை இருந்தது பூட்டப்பட்ட நிலையில் தான். ஆங்காங்கே சேதமடைந்த பகுதில் போல் இருந்தததை காட்டி கல்லை தொட்டு பார்க்க சொன்னார். வெண்டைக்காய் நறுக்கினால் கை எப்படி இருக்கும்? அது போல வழவழப்பு உணர்வு.  பெயிண்ட் இல்லாமலேயே அத்தகைய வழவழப்புக்கு காரணம் அதுவும் என்னான்னு தெரியல. அதுக்கப்பறம் கைடு எங்களை நிற்க வைத்து சுவற்றில் காது வைக்கும் படி சொல்லி எங்கேயோ சென்றார். அவர் பேசுவது ரகசியம் போல் எங்கள் காதில் விழுந்தது.அதாவது யாராவது நம்ம காதுல மெதுவா பேசுனா எப்படி இருக்கும்.  அதே மாதிரி. மீண்டும் வியந்தேன். மீண்டுமென் சந்தேகபுத்தி என்னுடன் வந்த பையனை தூரமாக போக சொல்லி பேச சொன்னேன். அவன் மெதுவாக பேசுவது  எனக்கு கேட்டது. ஆனால் என் மகன் கத்தும் ஓசை சுவற்றில் கேக்கவில்லை. அது ஏன்னு தான் தெரியல. இதுவும் எதிரிகள் வருவதை அனைவருக்கும் எச்சரிக்கை விட அமைக்கப்பட்டது. கீழே அந்த
பால்கனில கேட்டது கூட ஒத்துக்கலாம். ஏன்னா குரல் ஓசை கடத்தப்பட வரிகள் போன்ற அமைப்பு இருந்துச்சு. ஆனா இது வெறும் வழுவழுப்பான சுவர். எப்படி கேக்கும்? மர்மம் தான். சுவரை தட்டினால் மறுபடியும் நம்ம மூளைய தட்டுன மாதிரியே தான் சவுண்ட் வந்துச்சு. உள்ள ஒன்னுமே இல்லைன்னா எப்படி மேல இருக்குற மாடிய தாங்குதுன்னு கேட்டதுக்கு அதான் யாருக்கும் இன்னும் தெரியல.
2 மாடியையும் தாங்கிக்கணும், நடுவுல எந்த பில்லரும் இல்ல. ஆனா இதுவரை எந்த விரிசலும் கீழ் தளத்தில் இல்ல.அப்ப மண்டைல ஒன்னுமில்லைன்னா கவலபடவே கூடாது என்பதை இதுலயிருந்து தெரிஞ்சுக்கிட்டேன் :))
அங்கே பாத்த எல்லா விஷயமும் எனக்கு ஆச்சர்யமா தான் இருந்தது.

எங்கேங்கேயோ சுத்தி, கீழ இறங்கி மறுபடியும் மேல ஏறி, சந்துகளில் எல்லாம் நுழஞ்சு மூச்சு வாங்கி இதுக்கு மேல என்னால முடியாது என சொல்லும் நேரத்தில்  எங்கிருந்தோ என்னை காப்பாத்த எதோ வருவது போல தூரத்துல் ஒளிப்ரகாசம். வேற ஒன்னுமில்ல மேல் பகுதி வந்துச்சாம். மொட்டை மாடியில இருந்து பாதி லக்னோவையும் பார்த்து வியந்தேன். நிறைய கட்டடங்கள் பாதி இடத்த மறச்சுச்சு. மேல நின்னு தூரத்துல யாராவது படையெடுத்து வந்தா தெரியும்படி அமைந்திருந்தார்களாம். எந்தந்த ஏரியா பேரெல்லாமோ சொன்னார். இந்தியா மேப்ல டெல்லி குறிக்கவே படாத பாடு பட்டேன். அவர் சொன்னதையா மனப்பாடம் பண்ண முடியும்? கோட்டைக்கு  

மேலேயிருந்து பாத்தா மசூதி ,அப்பறம் கொஞ்சம் தள்ளி கடைசி அரசன் வஜித் அலிசா கட்டுன கோட்டை (அதாவது அந்தபுறம்-இப்போ மியூசியம்), ரூமி தர்வாசா (பாம்பேக்கு இந்தியா கேட் மாதிரி இந்த லக்னோக்கு இந்த கேட்டாம்:), கோம்தி ஆறு அருகிலேயே இருந்தது(இந்த ஆத்துல இருந்து தான் நம்ம ஆத்துக்கு ஆத்துமீன் சப்ளை ஆகும்). அதுனால நல்ல இதமான காற்று சுவாசிக்க சுகமா இருந்தது. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என சொல்லும் போது தான் கைட் நான் மேலே சொன்ன வரலாறுகளையெல்லாம் சொன்னார்.

முகலாய அரசர்கள் லக்னோவை நிர்வகிக்கும் பொறுப்பை முதல் நவாப்பிடம் கொடுத்ததால் பைசாபாத்தில் இருந்த தன் தலைநகரை லக்னோக்கு மாற்றி சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தார். மக்கள் பஞ்சத்தில் வாடும் போது வேலையில்லாத தம் நாட்டு மக்களை அழைத்து இந்த கோட்டை மற்றும் ரூமி தர்வாஷா கட்ட சொல்லி அதன் மூலம் அவர்களுக்கு வேலைகிடைக்க செய்தாராம். அதற்கு தகுந்த கூலியும் கொடுக்கப்பட்டதால் பஞ்சத்தின் பிடியில் இருந்து மக்கள் மீண்டனர் (ஒரே கல்லுல 2 மாங்கா). அதுனால தான் அந்த ராஜாவை இன்னும் மக்கள் ஆஹா ஓஹோன்னு கொண்டாடுறாங்க. கடைசி அரசரான வஜித் அலி ஷா போர்மீது நாட்டமில்லாமல் சுகபோகத்தில் தன் வாழ்க்கை கழித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் மக்களுக்கு அதிகமாகவே உதவி புரிந்ததாகவும், கட்டடகலையில் அதிகாகவே ஆர்வம் காட்டினார் எனவும் சொல்றாங்க. லக்னோவில் மற்ற கோட்டைகளை கட்டியவர் இவரே. கட்டிடத்தை உருவாக்கிய கிதாயத்துல்லாஹ் நினைவாக அவருக்கும் கோட்டையில் சமாதி கட்டியுள்ளார்கள்(சாதாரண நவாப்க்கு கட்டிய கோட்டைக்கே இன்ஞினியர்க்கு ராஜ மரியாதைன்னா, கட்டுனவன் கைய வெட்டிட்டான், கண்ண புடுங்கிட்டான்னு செவிவழியா வந்த செய்திய வச்சு பரப்பப்பட்ட செய்தியை என்னால் நம்பமுடியவில்லை.)

 ஆங்கிலேயர்கள் படையெடுத்து வரும் போது எல்லாரும் ஓடி
போனாங்களாம். ஆனா இந்த கடைசி அரசன் மட்டும் போகலையாம். ஏன் அப்படின்னு கேட்டதுக்கு கீழ இருக்கு பாருங்க. அந்தசெருப்பு எடுத்து குடுக்க ஆள் இல்ல. அதான் என்னால போக முடியலன்னு சொன்னாராம்.அப்படின்னு நகைச்சுவையாக மக்கள் சொல்வதை அவரிடம் கேட்டால் அதிகாரபூர்வ தகவல் இல்லை என சொல்லிட்டார். அந்த இடத்த விட்டு போகவே மனசு இல்லை.ஏன்னா மறுபடியும் இறங்கி கஷ்ட்டப்படணுமான்னு நெனச்சு வருத்தப்பட்டுட்டு இருந்தேன். இருட்டாக போகுது சீக்கிரம் வாங்க அப்படின்னு அவசரப்படுத்துனாங்க. டேய்...அது ஏற்கவனே அப்படி தான் டா இருக்கு? அப்பறம் எதுக்கு பில்டப்? ஓக்கே வரேன்னு சொல்லி எந்துருச்சேன்.

உடனே இப்ப வந்த வழியெல்லாம் குறிச்சு வச்சீங்க தானே? அப்ப நீங்களா கீழ இறங்குறீங்களான்னு கேட்டதும் ஆமிக்கு ஹார்ட் அட்டாக்.  “பயபடாதீங்க. நான் பின்னாடியே வரேன்” அப்படின்னு சொன்னதும் ஏதோ அரமனசோட ஒத்துகிட்டு கீழ இறங்க படிகட்டு தேடுனா(மாடிலையும் நிறைய பாதை) செங்குத்து படிகட்டு. “மேடம் பாத்து இறங்குங்க. இல்லைன்னா சுரங்கத்துக்குள்ள விழுந்தா தூக்கா ரொம்ப கஷ்ட்டப்படணும்னு எச்சரிக்கை. அடஙொய்யாலே நல்லா தானே இருந்த? மறுபடியுமா ஆரம்பிச்சுட்ட அப்படின்னு நெனச்சுட்டு கீழ இருந்த சுரங்கத்த பாக்காம ஒவ்வொருபடியா கெழவி மாதிரி பாத்து பாத்து இறங்குனேன். 15 படி தான். ஆனா அதுக்கே 15 நிமிஷம் ஆச்சு. நான் தான் முதல்ல கீழ போனதுனால அப்படியே என்னை யாரோ புடிச்சு இழுத்துட்டு போற மாதிரியெல்லாம் கற்பன வருது. அதுமட்டுமா? எங்க தாத்தாவோட தாத்தா,பாட்டி கூட என்னை பாத்து சிரிக்குற மாதிரியும் கனவெல்லாம் வருது.ஓவ்வொரு ஆளா கீழ இறங்கினதுக்கு பிறகு
தான் எங்க தாத்தா பாட்டி டாடா காட்டுனாங்க. எல்லாரும் கீழ வந்தும் கைடு வரல. மறுபடியும் மேல போய் ஒரு பையனை பாக்க சொன்னேன். அங்கே இல்லையாம். அப்பவே என் முகம்லாம் வேர்த்துருச்சு. ராம்கோபால் வர்மா எடுத்த பூத்,ராத், பூங் 1,பூங் 2 திரில்லர் படத்தையே  காமெடிபீஸாக்குவோம். காமெடி பீஸ் மாதிரி தெரிஞ்சவன் கட்டுன இந்த இடம் நம்மள ரொம்ப பயம் காட்டுதேன்னு அழாத கொற தான். எங்கிருந்தோ ஒரு குரல் திடீர்ன்னு கேட்டதும் அலறி அடிச்சுட்டோம். ஒளிஞ்சுட்டே எங்களுக்கு தைரியம் சொல்றாராம் நான் எங்கேயும் போகலைன்னு. என்ன ஆனாலும் எல்லாரும் ஒரே வழில தான் போகணும்னு முடிவு பண்ணி வெளிச்சம் உள்ள பக்கத்தை தேடி போய் அந்த வழியிலையே போனா எங்கே சுத்தி எங்கே வந்தாலும் ஒரே இடத்துலையே கொண்டு வந்து விடுது.எந்த முன்னேற்றமும் இல்ல. சட்டுன்னு பாத்தா எதிரில் கைட் பாத்துட்டு ஒளியுறார். நாங்களும் வேகமா வந்த இடத்துக்கு போனா மறுபடியும் ஆள் இல்ல. இப்படியே தான் ஒரு அரை மணிநேரம் நாங்களும் அவரும் ஒளிஞ்சாம் புடிச்சு பேய் ஸ்பெஷல் விளையாட்டு விளையாண்டோம். இப்படி போய்ட்டு இருக்கும் போதே அங்காங்கே சில டூரிஸ்ட் புலம்பிட்டே வராங்க “இம்மாம்பெருசா இமாம்பாரா கட்டிட்டிட்டு தம்மா துண்டு லைட்ட வைக்கலையே என்ன மனுஷன்” அப்படின்னு அவங்க பாசைல ராஜாவ திட்டிட்டே போனாங்க.  அடுத்த முக்கோணத்துக்கு எப்ப போறது? அப்படின்னு ஒரு குரல். அப்ப தான் தெரிஞ்சது ஒரே இடத்துலையே பத்து சுத்து சுத்துருக்கோம்னு. அசடு வழிஞ்சு அடுத்த பாதைக்கு போனோம். “அந்த பாதையிலேயா போறீங்க. அங்கே ஒரு சுரங்கபாதை இருக்கும்”னு அசால்ட்டா சொன்னதும் சட்டன் ப்ரேக் போட்டு நடைய நிப்பாட்டுனோம்.  எக்கச்சக்க பயம் தலைக்காட்டுனதும் தான் என்னால முடியாது, நீயே கூடிட்டு போன்னு கத்துனேன். எவ்வளவு நேரம் தான் அழாத மாதிரி நடிக்க முடியும்?


மாடில இருந்து டக்குன்னு எங்க முன்னாடி குதிச்சார் பாருங்க. ஷாம் கூட
எங்களோட சேர்ந்து கத்த ஆரம்பிச்சுட்டான். “சரி நீங்க நான் எப்படி போகணும்னு சொல்றேன், ஆனாலும் நீங்களா தான் போகணும்”னு டீல் விட்டார். நோ டீல் சொல்ல முடியாம பூம்பூம் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு சம்மதிச்சோம். எங்கிருந்தோ ரகசியமா பேசுற மாதிரி குரல் எங்களை வழிநடத்துவது போல் இருந்தது, அந்த குரல் சொல்லும் வழியெல்லாம் நாங்களும் போனோம். எப்படியோ படாதபாடுபட்டு வெளிய வந்தா 786 நம்பர் போட்ட அதே வாசல். அடடா திரும்பி இந்த வாசலுக்கே வந்துருக்கோம் பாத்தீயான்னு ஆச்சர்யமா சொன்னபோது மறுபடியும் ஞாபகப்படுத்தினார்.  “இந்த பாதைமட்டும் தான் சரியானது. மத்த பாதைல போனா உள்ள நுழைய முடியாது. உள்ள நுழைஞ்சவங்க இந்த பாதைய தவிர்த்து வேற எந்த பாதையிலையும் வெளிய வர முடியாது”ன்னு சொல்லிட்டே கீழ இறங்கும் போது 4 பேரை கூடிட்டு வந்தாரு. அவங்களும் கைட் கிட்ட பணம் கொடுத்து தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடிபோனாங்க. மறுபடியும் தலைய சொரிஞ்சுட்டே “கொடுக்குற சம்பளம் கட்டுபடியாகாது ல. அதான் யாராவது வழிதெரியாம இருந்தா வழிகாட்டி பணம் வாங்கிக்குவோம். கீழ சொல்லிடாதீங்க”அப்படின்னு சொன்னார். நான் கூட இந்த சம்பளத்துக்கா 4 வருஷம் ட்ரைனிங் எடுத்தாங்கன்னு ரொம்ப பீல் பண்ணேன். கிம்பளம் அதிகமா கிடைப்பதை பார்த்துட்டு லேசா புன்னகை மட்டும் உதிர்த்துட்டு எல்லாத்தையும் பொருமையா, அவசரப்படுத்தாம நிதானமா எல்லா வரலாறுகளையும், நகைச்சுவையோடும் சொல்லி உற்சாகப்படுத்தியதால் என்னால் முடிஞ்ச சின்ன தொகைய கைல கொடுத்துட்டு வந்தேன்.

மசூதியையும் பாத்துட்டு அப்படியே போய்டுங்கன்னு சொன்னார்.
அதுக்கெல்லாம் கைட் தேவைபடாதுன்னு வைக்கல. நாங்களும் சும்மா வாசல் மட்டும் நின்னு கேன்பேக்ல தூங்கிட்டு இருந்த கேமரால போட்டோஸ் எடுத்துட்டு இருந்தோம். அப்ப தான் ஒரு இடம் தட்டுபட்டது. மசூதியின் வாசல்லையே இருந்தது அந்த இடம். அதாவது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் இடமாம். தண்டனை மக்கள் முன்னிலையில் தான் நிறைவேற்றப்படுமாம். அந்த இடத்தை தொட்டுபார்க்கவே கை காலெல்லாம் ஆடிடுச்சு. அப்பறமென்ன அந்தபுறம் அரண்மனைய பாக்கலாமா? இப்ப அதை மியூசியமா ஆக்கியிருக்காங்க. நிறைய விஷயங்கள் பாக்கலாம்னு சொன்னான் என்னுடன் வந்த பையன். ஆனா குளிர் நேரமென்பதால் 5 மணிக்கே இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. வாசல்ல லக்னோ ஸ்பெஷல் கபாப் (திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி),பானிபூரி, சௌமின்  சுட சுட சாப்பிட்டுட்டு அப்படியே மறுபடியும் வண்டி புக் (?) பண்ணி வீடுவந்து சேர்ந்தோம்...
இவ்வளவு தாங்க என் சொந்த கதை சோக கதை கடந்து வந்த பாதை. லக்னோக்கு வந்தா கண்டிப்பா யாரும் மிஸ் பண்ணாதீங்க.லக்னோன்னு சொன்னாலே படா இமாம்பாரா தான்.... அடுத்த மாசம் சோட்டா இமாம்பாராக்கு போயிட்டு 10 பாகமா வெளாவரியா போட்டுடுறேன் டீல் ஓக்கேவா? :)))))))

73 comments:

  1. ////அடுத்த மாசம் சோட்டா இமாம்பாராக்கு போயிட்டு 10 பாகமா வெளாவரியா போட்டுடுறேன் டீல் ஓக்கேவா? :)))))))////

    ஓகே.. ஓகே டபுள் ஓகே...

    ReplyDelete
  2. அப்ப லக்னோ வந்த நீங்க எங்கக் கூட வந்து சுத்தி காட்டுவீங்கதானே ??

    ReplyDelete
  3. மர்ம நாவல் படிப்பது மாதிரி படிச்சு முடிச்சாச்சு ஆனி.. ச்சே ஆமி :))

    //லக்னோக்கு வந்தா கண்டிப்பா யாரும் மிஸ் பண்ணாதீங்க//

    படா இமாம்பாராவை மிஸ் பண்ணாம இருக்கணும்னா முதல்ல உங்களை மிஸ் பண்ணக்கூடாது. ஏன்னா நீங்க ஏற்கனவே போய் வந்த தைரியசாலி! போனா உங்களோடதான் போகணும். பத்திரமா கைய புடிச்சு கூட்டிப் போவீங்கள்ல தோழி? :‍-)

    இப்படியொரு சின்ன டீமோட போய் வர்றதுக்கு எனக்கெல்லாம் சுத்தமா மனசுல தெம்பில்லபா :) அந்த வகையில் உண்மையா உங்களுக்கு துணிச்சல்தான்!!

    ReplyDelete
  4. இன்றுதான் தங்களின் தளம் காணக்கிடைத்தது அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள் படைப்புகளும் அருமை வாழ்த்துகள்

    நேரம் கிடைத்தால் என்வாசலும் வந்துசெல்லுங்கள்
    உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்
    என்றும் நேசமுடன்

    ReplyDelete
  5. சூப்பர்,கைடை விட நீங்க தான் ஆமி செம கைடு,திரில்லிங் குறையாமல் ஆர்வமாக கூட்டிட்டு போய் திரும்ப 786 கேட்டுக்கு கூட்டி வந்தது அருமை.

    ReplyDelete
  6. ஆமினா, சுவையா இருந்துது. நிறைய கேள்விகள் வருது. அதெல்லாம் அங்கே போய் நேரில பாத்து/கேட்டுத்தான் புரிஞ்சுக்கணும் போல.

    ReplyDelete
  7. ஒரே மூச்சில் நான்கு பாகத்தையும் வாசித்து தள்ளிவிட்டேன். ரொம்ப அற்புதமானதும் த்ரில்லிங்கானதுமான அனுபவமாக இருந்தது. நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி. மேலும் மேலும் இதுமாதிரி தந்து அசத்துங்கள்.

    ReplyDelete
  8. த்ரில் குறையாமல் எழுதுறீங்க ஆமினா.இனிமே பிளாக் உலகில் ஒரு பி.டி சாமி உருவாகி விடுவார்.(இனி திகில் கதை சீக்கிரம் எழுத ஆரம்பியுங்கள் என்பதை சொன்னேன்.)

    ReplyDelete
  9. நேரில் வந்து பார்த்தது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்......

    ReplyDelete
  10. கொடுத்துவச்சவங்க நீங்க.....
    லக்னோவில இருக்கீங்களே

    இந்த குளுருக்கு இதமா சூடா கபாப்,
    துன்டே கபாப்ல வகை வகையா,
    ஜாலியா பிரகாஷ்ல குல்பி,
    முக்குக்கு முக்கு ப்ரெட் ஆம்லெட், பானி பூரா,
    ஆஹா அந்த டிக்கா,
    ப்ரெஷா சீப்பா காய்கறி, பன்னீர்,
    கத்தியால வெட்டி எடுத்த எரும தயிர்,
    காலையில சூடா ஜாங்கிரி,
    சீப்பான ஷார் ஆட்டோ, சுமோ,
    முக்கியமா லஞ்சத்தே நேரா கேட்டு வாங்கி
    சிறப்பா வேலய முடிச்சி தர்ற பழக்கம்....

    ReplyDelete
  11. சூப்பர் பதிவு.. நிறைய விஷயங்கள்

    ReplyDelete
  12. ஆமி,தனித்தனிப்பகுதியாவும் படிச்சேன் இப்ப 4 பகுதியையும் ஒருமுறை சேத்துப்படிச்சதும் உங்க எழுத்துத்திறமை மேல தனி மரியாதையே வந்துடுத்து. ரொம்ப அழகா ரசிச்சு எழுதரீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஆமி,உங்ககூடவே லக்னோ சுத்திபாத்தஎபக்ட். ப்ளாக் அழகா வடிவமைச்சிருக்கீங்க. எழுத எடுத்துக்கொள்ளும் விஷயங்களும் சூப்பரா செலக்ட்பண்ரீங்க. அடுத்த ட்ரிப் எங்க??/???

    ReplyDelete
  14. ஆமி நா ஜபல்பூர்லேந்து கிளம்பி நேரா லக்னோல உங்க வீட்லயே வந்து இறங்கிடவா?

    ReplyDelete
  15. புகைப்படங்களுடன் அருமையான விளக்கங்கள்.

    தமிழ்மணம் இணைக்கவில்லையா? வாசகர் வருகை அதிகரிக்குமே

    ReplyDelete
  16. ஆமி என்ன ஒரு ரசனை, (அந்தப்புரம் படம் தெரியலியே.) ரொம்ப ரசனையான எழுத்து. மிகவும் அருமை ஆமி. தொடர்ந்து கலக்குங்கள்.

    ReplyDelete
  17. தொடர்ந்து ஆச்சர்யங்கள்...

    ReplyDelete
  18. அப்பாடா,,,ஒரு வழியா முடிஞ்சுதே....

    செம இன்ட்ரஸ்டிங்க்....கூடிய சீக்கிரம் வர்றதுக்கு பிளான் பண்ணனும்...இதுமாதிரி ரஸ்க்லாம் நமக்கு....:)))

    ReplyDelete
  19. ரொம்ப அருமையா படிக்க படிக்க திரிலிங்கா இருந்தது ஆமீனா. உங்ககூடவே பயணித்ததுபோலவே உணர்வு. கைட் ரொம்ப நல்லா கைட் பண்ணிருக்கான். கரெக்டா பத்திரமா வழிகாட்டிருக்கான். நன்றி அவனுக்குதான் சொல்லணும். எவ்வள்வு பெரிய கோட்டை. பார்க்கணும் போல இருக்கு. இன்ஷா அல்லாஹ்! வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பா பார்க்கவேண்டிய கோட்டை.

    ஆமீக்கு கீழக்கரை ஏர்வாடியோ.. ஊர் ராமநாதபுர மாவட்டமென்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை படித்தேன்.

    எழுத்து நடை ரொம்ப அருமை. தொடர்ந்து இதுமாதிரி வேறெங்கும் போன அனுபவம் இருந்தா எழுதுங்க.

    நல்வாழ்த்துக்கள் ஆமீனா.

    ReplyDelete
  20. @மதி.சுதா
    எப்படிங்க இதெல்லாம்? எனக்கும் இந்த டெக்னிக் சொல்லி குடுங்க

    ReplyDelete
  21. @மதி.சுதா
    //ஓகே.. ஓகே டபுள் ஓகே...//
    3 ஓக்கே செல்லிடு அதெம்ன்ன டபுள் ஓக்கே? :)).

    ReplyDelete
  22. @எல்.கே
    //அப்ப லக்னோ வந்த நீங்க எங்கக் கூட வந்து சுத்தி காட்டுவீங்கதானே ??//
    எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க. ஆனா கமிஷன் கரேக்ட்டா வந்தா தான் கரேக்டா சுத்தி காமிப்பேன் :))

    ReplyDelete
  23. //மர்ம நாவல் படிப்பது மாதிரி படிச்சு முடிச்சாச்சு ஆனி.. ச்சே ஆமி :)) //

    :)))))))))))

    நீங்க ம் மட்டும் சொல்லுங்க அஸ்மா லக்னோவையே சுத்தி காமிக்கிறேன்.

    //அந்த வகையில் உண்மையா உங்களுக்கு துணிச்சல்தான்!!//
    அந்தகோட்டை பாக்குறதுக்கு முன்னாடி என்னவர்கிட்ட நச்சரிச்சுட்டே இருந்தேன். ஆனா பிஸியா இருந்ததுனால கூடிட்டு போகல. அப்ப நானே போறேன்னு சண்ட கூட போட்டேன். இப்ப எங்கிட்ட சண்ட போடுறார் இப்ப தனியா போய்ட்டு வாயேன்னு........ இதுக்கு மேல என்னால முடியாதுன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன் :))))))))

    நன்றி அஸ்மா

    ReplyDelete
  24. @நேசமுடன் ஹாசிம் said..

    //நேரம் கிடைத்தால் என்வாசலும் வந்துசெல்லுங்கள் //

    ஏன் உள்ளலாம் விடமாட்டீங்களா? வாசல் வரைக்கும் தானா? அதெல்லாம் முடியாது.... :)))))))))

    கண்டிப்பாக வருவேன் சகோ
    வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் பல

    ReplyDelete
  25. வருகைக்கும்கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா

    ReplyDelete
  26. கொர்ர்..கொர்ர்..கொர்ர் .. ஏங்க கதை சொல்றதை நிருத்திட்டிக..இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள் நல்லா தூக்கம் வருது.
    சரி..சரி அப்புறம் பாட்டி வடை சுட்டக் கதை சொல்லணும் சரியா ?

    அந்தக் கதைதான் எங்களுக்கு பிடிக்கும். ராம்நாட்டில் எந்த ஊரு உங்களுக்கு ?

    ReplyDelete
  27. //நிறைய கேள்விகள் வருது. அதெல்லாம் அங்கே போய் நேரில பாத்து/கேட்டுத்தான் புரிஞ்சுக்கணும் போல//

    ஈசியான கொஸ்டீன் எதாவது இருந்தா எங்கிட்டையே கேளுங்க ஹுசைனம்மா :)) கஷ்ட்டமான கேள்வியா இருந்தா.... ஸ்கூல்ல முழிச்சுட்டு இருந்த மாதிரியே முழிக்கணும் :))))

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  28. //ஒரே மூச்சில் நான்கு பாகத்தையும் வாசித்து தள்ளிவிட்டேன்//
    ரொம்ப நன்றிங்க...

    நட்ச்சத்திர வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சகோ :)))))))))

    ReplyDelete
  29. //(இனி திகில் கதை சீக்கிரம் எழுத ஆரம்பியுங்கள் என்பதை சொன்னேன்.)//

    எழுதுன 10 கதைக்கு மேல கரு கிடைக்காம அழஞ்சுட்டு இருக்கேன் ஸாதிக்காக்கா. என்னை நம்பி திகில் கதை வேற எழுத சொல்றீங்களா? நீங்க எதையும் தாங்கும் இதயம் :))))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  30. @ NKS.ஹாஜா மைதீன்

    நன்றி சகோ

    ReplyDelete
  31. //கொடுத்துவச்சவங்க நீங்க.....
    லக்னோவில இருக்கீங்களே//

    எங்கே கொடுத்து வச்சேன்???? பாருங்க உங்கள மாதிரி தமிழ் ஆளுங்க நிறைய பேரு இந்த லக்னோல தான் இருக்காங்க. இதுவரை ஆசைக்குன்னு கூட ஒரு தமிழ் ஆளை ஏன் தமிழ் தெரிஞ்ச ஆளை பாக்கல... இப்ப கொல்கத்தால இருக்கீங்க தானே?

    எத்தன வருஷம் லக்னோல இருந்தீங்க? ஏன்னா எல்லா விஷயத்தையும் புட்டுபுட்டு வைக்கிறீங்களே.....

    //துன்டே கபாப்ல வகை வகையா// சாருகான் சல்மான் கான் சாப்பிட்ட கடை என்பதற்காகவே அங்கே போய் இப்ப அதுக்கு அடிமையாகிட்டேன்

    ஆமா நீங்க எங்கே இருந்தீங்க?

    ReplyDelete
  32. @கண்மணி

    மிக்க நன்றி கண்மணி

    ReplyDelete
  33. @ரியாஸ்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  34. //ரொம்ப அழகா ரசிச்சு எழுதரீங்க//

    நீங்க ரசிச்சு படிச்சேன்னு சொல்லுங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா...

    ReplyDelete
  35. //அடுத்த ட்ரிப் எங்க??/???//

    சோட்டா இமாம்பாரா தான் :)) பயங்கர குளிர்னால லக்னோவிட்டு வெளியே போக முடியல கோமு.

    வரூகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. //ஆமி நா ஜபல்பூர்லேந்து கிளம்பி நேரா லக்னோல உங்க வீட்லயே வந்து இறங்கிடவா?//
    ஜபூல்பூர்ல இருந்து சார்பாக் ரயில்வே ஸ்டேஷன் வரை தான் ட்ரைன் இருக்கு? :))

    நீங்க எப்ப வரீங்கன்னு மட்டும் தந்தி அனுப்புங்க சித்ரா.....

    ReplyDelete
  37. நன்றி தொப்பி தொப்பி..

    //தமிழ்மணம் இணைக்கவில்லையா? வாசகர் வருகை அதிகரிக்குமே//

    நானா மாட்டேங்குறேன்? என்னன்னே தெரியல. ஆட் பண்ணியும் ஓட்டுபட்டை வேலை செய்யல. ஆனா தமிழ்மணம்ல சேர்ந்துடுச்சு :(

    ReplyDelete
  38. //(அந்தப்புரம் படம் தெரியலியே.) //
    அப்படியா ? எனக்குலாம் தெரியுதே...

    சரிவிடுங்க. பேஸ்புக்ல நிறையா போட்டோ ஆட் பண்ணிடுறேன். இல்லைன்னா நேரடியாவே உங்களுக்கு அனுப்பிடுறேன்

    ReplyDelete
  39. //அப்பாடா,,,ஒரு வழியா முடிஞ்சுதே....// பெருமூச்சு விட்டாச்சா?? :))

    சீக்கிரம் வாங்க பிரதாப்... உங்க வருகையை லக்னோவே ஆவலா எதிர்பாக்குது

    ReplyDelete
  40. ஆமி, நல்லா இருக்குப்பா. எனக்கு படிக்கவே மூச்சு வாங்குது. எப்படித்தான் இம்பூட்டு எழுதி, படங்கள் இணைத்து. நல்ல பொறுமைசாலி தான் போங்கள்.
    (தொடர்பதிவு ரெடியாகிட்டு இருக்கு. விரைவில் வெளிவரும் )

    ReplyDelete
  41. @வானதி
    //எனக்கு படிக்கவே மூச்சு வாங்குது. //

    இதை படிக்குற நீங்களாம் தான் பொறுமை சாலி பா. என்னவர்க்கு வாசிச்சு காமிச்சு உண்மையிலேயே எனக்கு மூச்சு வாங்கிடுச்சு :)) இதை 2 பாகமா பிடிச்சு போட மனசில்லாத்தால பெருஷா இருந்தாலும் பரவாயில்லன்னு போட்டேன்.
    பொறுமையா படிச்சதுக்கு நன்றி பா. உங்க ரசனையை காணா ஆவலாக உள்ளோம் :))

    ReplyDelete
  42. ஹுஸைனம்மா said...
    ஆமினா, சுவையா இருந்துது. நிறைய கேள்விகள் வருது. அதெல்லாம் அங்கே போய் நேரில பாத்து/கேட்டுத்தான் புரிஞ்சுக்கணும் போல.//

    அதேதான் ஆமிக்கா..

    ஆனாலும் விறுவிறுவென கூட்டிபோய் கூட்டிவந்துட்டிங்க திரில் திரிலாவே இருந்துச்சுபா..

    சூப்பர் பூல்புலையா..

    ReplyDelete
  43. ஸலாம்.சகோ.
    அருமையா விவரிக்குரீங்க.அந்த இடத்த சுத்திப்பாத்த அனுபவம்.ஆனா நீங்க அங்கங்க கிலியான சம்பவங்கள அழகா நகைச்சுவையா சொல்ரது,ரசிக்கிறமாதிரி இருக்கு."கொய்யாலெ"இந்த வார்த்தைப்பயன்பாட்டை நான் கடந்த சில பதிவுகளாகவே நோட் பண்ணிட்டு வர்ரேன்.நீங்களும் என்ன மாதிரியே ஒரு பெரிய்ய்ய ரெவுடியாத்தான் இருப்பீங்கன்னு தெரியுது..பரவாஇல்லை,நிங்க லக்னோ'ல இருக்குரதால ஒரு உறை,2கத்தி பிரச்சனை இல்லை.
    (just kidding)
    அப்ரொ இந்த கெய்டு பசங்க இருகாங்களே.கண்டிப்பா நமக்கு அந்த இடத்தப்பத்தி தெரியாதுன்னு,கொஞ்சம் ஓவராவே ஸீன் போடுவானுங்க.

    மத்தபடி,என்ன இந்தப்பதிவு ஒரு 25 எபிசோட் போகுமா??

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  44. //அதேதான் ஆமிக்கா..

    ஆனாலும் விறுவிறுவென கூட்டிபோய் கூட்டிவந்துட்டிங்க திரில் திரிலாவே இருந்துச்சுபா..

    சூப்பர் பூல்புலையா..//

    மலிக்கா அப்ப வந்து உங்க சந்தேகத்தை தீர்ர்த்துட்டு போங்க. நிறைய இடம் இருக்கு சுத்தி பாக்க

    மிக்க நன்றி மலிக்கா

    ReplyDelete
  45. @ரஜின்
    வ அலைக்கும் சலாம் வரஹ்... //.நீங்களும் என்ன மாதிரியே ஒரு பெரிய்ய்ய ரெவுடியாத்தான் இருப்பீங்கன்னு தெரியுது//

    பப்ளீக்...பப்ளீக்.....

    ஹா....ஹா.....ஹா.....
    தாவூத் இபுறாகிம், சோட்டா சகீல் போன்ற நல்லோர்களை கண்டுத்த மண்ணில் இருந்துக்கொண்டு நல்ல குணங்கள் இல்லாம இருந்தா எப்பூடி??? :))

    //அப்ரொ இந்த கெய்டு பசங்க இருகாங்களே.கண்டிப்பா நமக்கு அந்த இடத்தப்பத்தி தெரியாதுன்னு,கொஞ்சம் ஓவராவே ஸீன் போடுவானுங்க./// உண்மை தான். சுத்தி காட்டாமலேயே எங்கள எங்கேங்கோயோ அலைய வச்சு சுத்தி காமிச்சுட்டார் :))

    வருகைக்குன்,கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  46. உங்கள் பின்னூட்டங்களை பல்வேறு வலைப்பூக்களில் படித்தோம்.
    அனல் பறக்கிறது. மனதில் பட்டதை அப்படியே சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  47. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோதரி அவர்களுக்கு
    உங்களுக்கு நல்ல எழுத்து திறமை இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
    (எதாவது பின்னூட்டம் போடனும் என்பதற்காக அல்லது எதாவது புகழ்ந்து சொல்ல வேண்டும் என்றோ நான் எழுதவில்லை)
    நல்ல இயல்பான நடை

    ஆமா ஒங்க ப்ரபைலில் ராசி என்று கேட்டு இருந்த இடத்தில் துலாம் ராசி என்று இருந்தது இப்போது கணவில்லை என்ன காரணம்?

    ReplyDelete
  48. அருமையான எழுத்து நடை எங்கிருத்து கத்துகிடீங்க. தொடர்ந்து இந்த மாதிரியா டேம்ப்டேசன் குறையாம எழுதுங்க சகோ. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  49. @பாரத் பாரதி

    //அனல் பறக்கிறது//
    சுட்டவங்க சண்டைக்கு வராதவரை நான் பொழச்சேன் :))

    மிக்க மகிழ்ச்சி பாரதி..
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  50. @அப்துல் காதர்

    //அருமையான எழுத்து நடை எங்கிருத்து கத்துகிடீங்க.//
    எல்லாம் உங்கள மாதிரி நல்லா எழுதுறவங்க கிட்ட இருந்து தான் :))

    மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  51. @ ஆமினா
    //எங்கே கொடுத்து வச்சேன்???? பாருங்க உங்கள மாதிரி தமிழ் ஆளுங்க நிறைய பேரு இந்த லக்னோல தான் இருக்காங்க. இதுவரை ஆசைக்குன்னு கூட ஒரு தமிழ் ஆளை ஏன் தமிழ் தெரிஞ்ச ஆளை பாக்கல... இப்ப கொல்கத்தால இருக்கீங்க தானே? எத்தன வருஷம் லக்னோல இருந்தீங்க? ஏன்னா எல்லா விஷயத்தையும் புட்டுபுட்டு வைக்கிறீங்களே.....//

    நான் இந்திரா நக‌ர்ல இருந்தேங்க. 2 வருஷம் தான். அது ஒரு கனாலக்காலங்க....

    போய் இறங்குனதே ஒரு தமிழ் குடும்பம் வீட்ல தான். அவர் bsip ல வேல பாக்குறார். அவர் லக்னோ தமிழ் சங்கத்துல முக்கியமானவர். மேல் அதிக தகவல்களுக்கு நம்ம wordpress, blogspot தளத்துல ஒரு பின்னூட்டம் போடுங்க (சே, ஒரு பின்னூட்டம் வாங்குறதுக்கு ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதா இருக்கு :‍‍).

    நெறய தமிழ் குடும்பம் RDSO colony ல இருந்தாங்க. சில‌ பாங்குல தமிழ் மக்கள் மேனேஜரா இருப்பாங்க. உஷாரா வாட்ச் பண்ணுங்க. அந்த சமயத்தில ஒரு தமிழ் DSP / SP இருந்தார். இது தவிர மாயாவதி அக்காவோட முக்கிய அரசியல் ஆலோசகர் ஒரு தமிழர் தான்னு பேச்சு.

    அட என்னங்க, எந்திரன் தமிழ்ல அங்க ரிலீஸ் ஆகலியா. (fame cinemas தமிழ் படம் ரிலீஸ் பண்ணுவாங்களே).

    cantonment area ல ஒரு மலயாளி கட இருந்தது. அங்க சின்ன வெங்காயம், நல்லெண்ணய் கூட கிடைக்கும் (ரேட் ஆனா டெரரா இருக்கும்).

    ReplyDelete
  52. அடச்சே, வோட்டு இல்ல கேட்டிருக்கணும்.....

    ReplyDelete
  53. @ வார்த்தை

    உங்கள பிடிக்கணும்னா எங்கேங்கேயெல்லாமோ சுத்த வேண்டியிருக்கு. எது தான் உங்க ப்ளாக்? அட்ரஸ் கொடுங்க :)

    எழுத்துக்கள் அப்படின்னு இருக்குற ப்ளாக் தானே? நேத்தே தேடி அழுத்துபோயிட்டேன்.

    லக்னோல தமிழ் சங்கம்? நீங்க சொல்லி தான் தெரியுது எனக்கு:) இங்கே வந்து கொஞ்ச நாள் (6 மாசம்) தான் ஆகுது. அப்படியே அமினாபாத், ஷஹ்ரா கஞ்ச், ஆலம்பாக் வரைக்கும் சுத்துறதோட சரி. முடிஞ்சா அது பற்றிய விவரம் சொல்லுங்க எனக்கு. தமிழ் ஆளுங்கள கண்டுபிடிக்க 2 வழி.1 ரயில்வே ஸ்டேஷன் இன்னொன்னு தமிழ்படம் போடுற தியேட்டர்ன்னு என் பிரண்ட் சொன்னாங்க. எங்கே நம்ம மக்கள் தான் எங்கேயும் நமக்கிட்ட எதாவது உதவின்னு வந்துடுவாங்களோன்னு கழுவுற மீன்ல நழுவுற மீனா ஆகிடுறாங்களே? :))))

    ReplyDelete
  54. //அடச்சே, வோட்டு இல்ல கேட்டிருக்கணும்.....//

    வேர்ட் பிரஸ் ப்ளாக் ஸ்பாட்டை தான் கடை மாத்தியாச்சுல? :)) நான் ஆல்ரெடி உங்கள பாலோ பண்ணிட்டு தான் வரேன்... கமெண்ட் கூட போட்டேன் பாருங்க.

    இப்போதைக்கு எந்த ப்ளாக்ஸ்பாட்ன்னு சரியா விலாசம் கொடுத்துடுங்க :))

    ReplyDelete
  55. //அப்படியே அமினாபாத், ஷஹ்ரா கஞ்ச், ஆலம்பாக் வரைக்கும் சுத்துறதோட சரி. //

    ஊரே அவ்வளவு தாங்க சுத்தி பாக்க. நானு ரொம்ப சுத்துனது கிடையாது.

    //எங்கே நம்ம மக்கள் தான் எங்கேயும் நமக்கிட்ட எதாவது உதவின்னு வந்துடுவாங்களோன்னு கழுவுற மீன்ல நழுவுற மீனா ஆகிடுறாங்களே?//

    இது யுனிவர்சல் பிராப்ளம். ஆனா சேகர் ஸார் அப்டி இல்ல. அவங்க வீட்ல‌ மியூசுவல் பண்ட், LIC , income tax இந்த மாதிரியும் டீல் பண்றாங்க. பயம் வேண்டாம் நாமளா கேட்டா மட்டும் தான் அத பத்தி பேசுவாங்க.

    ReplyDelete
  56. @ ஹைதர் அலி
    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    மிக்க நன்றி சகோ

    அந்த ராசி மேட்டரா? நமக்கும் ராசிகும் ஆகாது :) அது சும்மா போட்டேன். அதுல என்ன தான் வருதுன்னு சும்மா வைக்கும் போது ராசி கேட்டுச்சு. என் பெயரின் முதல் எழுத்துக்கு தகுந்த மாதிரி வச்சு பார்த்தேன் ப்ளாக்குக்கு வந்த புதுசுல. அப்பறம் எப்படி திருத்தணும்னு தெரியாமலேயே விட்டுட்டேன் :))

    ReplyDelete
  57. @ஸ்டார்ஜன் அண்ணா

    ஆமாண்ணா பவ்லிக்கு தனி கைட், பூல்புலையாக்கு தனி கைட். பவ்லி காட்டுன கைட் நரசிம்ம ராவ் மாதிரியே இருந்தார். கால்ல சக்கரம் கட்டிட்டே எங்கள கூடிட்டு போனான் :) ஆனா 2வதா வந்தவர் ரொம்ப நல்லவர்.

    //வாய்ப்பு அமைந்தால்// அமைச்சு வச்சு வாங்கண்ணா.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete
  58. //சரி..சரி அப்புறம் பாட்டி வடை சுட்டக் கதை சொல்லணும் சரியா ?//

    நிலால வட சுட்ட கதையா? இல்ல மரத்தடில சுட்டு காக்கா சுட்ட கதையா? நம்மனால ஒருத்தவங்க நிம்மதியா தூங்குறாங்கன்னா நமக்கு புண்ணியம் இல்லையா :))))

    //ராம்நாட்டில் எந்த ஊரு உங்களுக்கு ?//
    ராமநாதபுறத்த தப்பா எழுதும் போதே தெரியுது நீங்களும் ராம்நாட் பக்கம்னு :))

    ReplyDelete
  59. @வார்த்தை

    தகவல்களுக்கு ரொம்ப நன்றிங்க....

    இன்ஷா அல்லாஹ் அந்த பக்கமா போகும்போது தலைவரை பாத்துட்டு போறேன் :)

    ReplyDelete
  60. சலாம் ஆமி நேர்ல பாத்தமாதிரியே இருக்கு உன் வர்னனை நம்ம ஊர் பாசைல கலக்கிட்டேடா சஸ்பென்ஸை ஒரு வழியா முடித்து விட்டாய் வாழ்த்துக்கள்டா

    ReplyDelete
  61. @பாத்திமாம்மா

    வஸ்ஸலாம்

    மிக்க நன்றிம்மா...

    ReplyDelete
  62. படிக்கவே இண்டரஸ்டிங்கா இருக்கு. அப்போ அங்கே வந்தா தனியா கைடு வைக்க தேவை இல்லை...கமிஷன் நோ பிராப்ளம்..(எனக்கு உயிர் மேலே அவ்வளவு பயம் )ஹி..ஹி...

    ReplyDelete
  63. @ ஜெய்லானி

    //அப்போ அங்கே வந்தா தனியா கைடு வைக்க தேவை இல்லை...கமிஷன் நோ பிராப்ளம்.//

    உங்கள தான் கிணத்து பக்கம்லாம் சுத்தி காமிக்கிறேன்னு சொல்லியிருக்கேன். அப்பறம் எதுக்கு கவலைபடுறீங்க???

    ReplyDelete
  64. ஆமி ரொம்பவே அருமையா இருந்தது. நானே நேரில் பார்ப்பது போல் இருந்தது, நான் அவ்வளவு தைரியசாலி இல்லை.அதனால் என்னால் அங்கு போய் பார்க்க முடியாது. நீங்க சொல்லிருக்கிறதை படிக்கவே பயமாயிருக்கு,இதில் அதை நேரில்வேறு பார்ப்பதா? அய்யோ சாமி ஆளை விடுங்க.

    ReplyDelete
  65. @ சுமி
    இப்படிலாம் சொன்னா எப்படி?? ஒரு முறை நேர்ல வாங்க. யாரையாவது மாட்டிவிட்டா தான் என் மனசே ஆறும் ஆங்.... :))

    ReplyDelete
  66. ஆமினா நல்ல அனுபவப் பதிவு.. இண்ட்ரெஸ்டிங் ஆக இருந்தது.. பூல்புலையாக்கு ஒரு விசிட் அடிக்கனும் போல் உள்ளது.. நல்ல தைரியசாலிதான் நீங்க.. ;)

    ReplyDelete
  67. அப்பாடா, இவ்வளவு நாள் கழிச்சு இப்பத்தான் எல்லா பகுதியையும் படிச்சு முடிச்சேன். திகிலோட படிச்சாலும் அப்பப்ப காமெடியிலும் பின்றீங்க போங்க. ஆமா, முத கோட்டைல அந்த் குளம் தண்ணி குளிக்க இல்லைன்னு சொன்னீங்களே...பின்ன எதுக்குன்னு அப்புறம் சொல்லலை? (ஹ நாங்க யாரு...!!)

    சரி, அடுத்து எந்த மர்ம பங்களா?

    ReplyDelete
  68. @சாந்தினி

    எப்ப வரீங்க ;)

    ReplyDelete
  69. @அன்னு

    அடுத்த மர்ம பங்க்ளாவா?? ஊர்ல கட்டுட்டு இருக்கேன் !!! வருவீங்க தானே ;)

    ReplyDelete
  70. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நல்ல இண்டேறேஸ்டிங்கா போட்டுருகிங்க.

    ReplyDelete
  71. @கார்பன் கூட்டாளி

    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    வாங்க சகோ....

    //நல்ல இண்டேறேஸ்டிங்கா போட்டுருகிங்க.//
    நான் ரொம்ப ரசிச்ச இடம் சகோ... அதுனால அப்படி எழுதியிருக்கேன்னு நெனைக்கிறேன் :-)

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)