அப்பலாம் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றால் ஊரே கூடி பார்க்கும். ஹோம் அப்லையன்ஸ் ஷாப்களில் கால் கடுக்க மக்கள் கூட்டம் வேடிக்கை பார்க்க கூடி இருக்கும்.சின்ன வயசுல (இப்ப ப்ளாஸ்பேக் ஓடுது)......
எங்க அத்தா(அப்பா) மேட்ச் பார்ப்பாங்க. அந்த நேரத்துல கூட நான் புத்தகம் கையுமா தான் இருப்பேன்(வேற வழி இல்ல.இத நீங்க நம்பி தான் ஆகணும்). அதுனால அந்த மேட்ச் பாக்கல.
(அப்பவும் புத்தகம் கையுமா தான் இருந்த! ஆனா உருப்படியா படிக்கல)
அந்த நேரத்துல அத்தா என்னை கூப்பிட்டு அடிக்கடி போட்டு காமிச்ச ஷாட்டை பாருன்னு சொன்னாங்க. கிரிக்கெட் வீரர்களுக்கிடையே நடந்த பிரச்சனை தான் அது. எனக்கென்னவோ அதுல அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்லைன்னாலும் அத்தா சொன்னதுக்காக பாத்தேன்னு வச்சுக்கோங்களேன்....
எஸ் எஸ் மியூசிக்கும், சன்மியூசிக்கும் போட்டு பாருன்னா பார்த்திருப்ப. முக்கியமானத பாப்பீயா?!
அந்த வயசுல எனக்கு அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தல. என்னவர் கிரிக்கெட் ரசிகராக (தினமும் கிரிக்கெட் விளையாடுலைன்னா தூக்கம் வராத மனுஷன்) இருந்தாலும் கூட இப்ப வரைக்கும் எந்த மேட்சையும் ரசிச்சு பார்த்ததில்ல.
“முக்கியமான மேட்ச் வா” அப்படின்னு சொன்னா தான் வேண்டா வெறுப்பா போய் உக்காருவேன். அதுவும் 4 பால்க்கு 2 ரன் தான் அடிக்கனும், ஆனா அப்படியும் தோத்து போயிடுவாங்களே அந்த மாதிரி சீரியஸா இருக்கும் கடைசி கட்டத்தில் தான் பார்ப்பேன் :))
பாக்க வேண்டிய ப்ரோக்ராம்/சீரியல் பாக்க முடியாமல் ஓடுதுன்னு வயித்தெரிச்சல்ல, மேட்ச் பாக்காததுக்கு சொல்ற காரணத்தை பாரு!
இப்படி போய்ட்டு இருந்த என் வாழ்க்கையில் தான் திடீர்ன்னு ஒரு திருப்பம். 4 நாட்களுக்கு முன் என்னவர் யூடூப்பில் ஒரு வீடியோ தேடிட்டு இருந்தார். கிரிக்கெட் ரேர் வீடியோன்னு தலைப்பு வேற. ஆன்லைன்லையும் கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சாச்சான்னு மனசுல நான் சொல்லிகிட்டது அவருக்கு கேட்ருக்காது :)
அதை மட்டுமா சொல்லிக்கிட்ட. பாவம் வேற என்னன்ன சொன்னீயோ!
பரபரப்பா தேடிட்டு இருந்தவர் நேத்து தான் கண்டுபிடிச்சு அதையே பார்த்துட்டே இருந்தார். அவர் படிக்கும் காலத்தில் அந்த மேட்ச்சை பார்த்துள்ளார். அந்த க்ளிப் பாத்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பண்ணி சிஸ்ட்டத்தோடையும் கூகுள் சர்ச் கூடவும் மல்லுக்கட்டிட்டு இருந்து ஒரு வழியா கண்டு பிடிச்சதில் அவருக்கு மகிழ்ச்சி தான். எப்ப நம்மகிட்ட கம்யூட்டரை கொடுப்பாருன்னு அந்தபக்கம் இந்தபக்கமா சுத்திட்டு இருந்த எனக்கு அந்த வீடியோ கண்ணுல தட்டுபட்டுச்சு. எங்கேயோ பார்த்த காட்சி......... யோசனைலையே 1 மணி நேரம் போனது.
அப்ப தான் அத்தா ஞாபகம் வந்து கிச்சன்ல இருந்து ஓடி வந்து என்னவர் கிட்ட அந்த வீடியோ எடுத்து தர சொல்லி கெஞ்சினேன். என்னவருக்கோ ஆச்சர்யம்.
திடீர்ன்னு ஓடி வந்து கேட்டா மனுஷன் பயப்படமாட்டாரா என்ன?
நானும் பார்த்தேன். என்னன்னா பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆமீர் ஷோகைல் இந்தியா பவ்லர் வெங்கடேஷ் பிரசாத் கொடுத்த பாலில் 4 அடிச்சுட்டு அவரை பார்த்து சைகைல என்னத்தையோ சொல்றார்.
என் கண்ணுக்கு (கிட்டதட்ட எல்லாருக்கும் அப்படின்னு தான் நெனைக்கிறேன்) அந்த சைகை “பாத்தீயா? இப்படி தான் போடணும். இனி நீ போடுற பால்க்கெல்லாம் இப்படி தான் அடிப்பேன்” என மிரட்டும் தொணியிலும், கர்வத்துடனும் சொல்லும் படி இருந்தது.
என்ன ஆச்சுன்னா அடுத்த பாலிலேயே அதே பவ்லர் போட்ட பாலுக்கு அவுட் ஆகிட்டார் அதே பேட்ஸ்மேன் ஆமீர். அதுக்கு பிறகு கண்டிப்பா எந்த ப்ளேயரும் ஏன் எந்த மனிதனும் கர்வம் கொள்ள முடியாது. கண்டிப்பாக தான் செய்யும் செயலுக்கு வருந்துவார்கள். வெட்கப்படுவார்கள்.
நானும் நினப்பதுண்டு... சண்டை போடும் போது தான் தான் இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது போல் “நல்லாவே இருக்க மாட்ட, உன்னை பழி வாங்காம விட மாட்டேன், அழிஞ்சே போயிடுவ” இதுக்கு மேலேயும் என்னன்னவோ சொல்லி சபதம் போடுவாங்க. முக்காலத்தையும் அறிந்தவன் நமக்கு மேலே உள்ளவன் என்பதை மறந்து விடுகிறார்கள்.அதை பார்த்த பிறகு தப்பி தவறி கூட யாரையும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ மனதினுள்ளோ திட்டவோ கோபமாய் பேசவோ கூடாது என சபதம் எடுத்துக்கொண்டேன்.
சோ எல்லாரும் இந்த யூடூப்பை பாருங்க. நான் சொல்ல வந்து விட்டு போன பலவற்றையும் அது சொல்லும். என்ன நெனைக்கிறீங்கன்னு மறக்காம எனக்கும் சொல்லிடுங்க :)
இல்லைன்னா அம்மணிக்கு தலை வெடிச்சுடும்
Tweet | ||||
அருமையாகத் தான் ரசித்திருக்கிறீர்கள் நம்மளுக்கு காதலியே அது தான்...
ReplyDeleteநல்ல போட்டிகள் நெஞ்சை விட்டு அகல்வதில்லை.
ReplyDeleteதெரியாத,பிடிக்காத விஷயங்களையும்கூட சுவாரசிய்த்தோட சொல்ரீங்க்ளே ஆமி. க்ரேட். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹ்ம்ம் இதுக்கு என்னா பில்ட் அப்
ReplyDeleteஆமி என்ன கிரிக்கெட்டு பக்கம்லாம் கூட சும்மா பூந்து வெள்ளாடுரீங்க????
ReplyDeleteபகிர்வு அருமை.. சில கிரிக்கெட் மேட்ச்கள் திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காது.
ReplyDeleteவர வர எல்லோரும் ஆ..வூனா... fப்ளாஷ் பேக்கிர்க்கு போய்விடுகிறார்கள் என்னேனே தெரியலை.பேச்சுலே நம்ம ஏரியா வாடை அடிக்கிதே (அத்தா) சரி..சரி கிரிக்கெட்னாலே பாவற்காய் சாப்பிடறமாதிரி எனக்கு,பதிவு போட்டு விட்டிர்கள்,பின்னூட்டம் போடா விட்டால் தூக்கம் வராது.
ReplyDeleteஎன்னுடைய கருத்து, கிரிக்கெட் என்பது சுறு சுறுப்பா இயங்குற மனிதனை சோம்பேறியாக்கும் ஒரு சூதாட்டம்,அதில் மூழ்கி விட்டால் போதைக்கு அடிமையானவர்களே மீட்டு விடலாம்,இந்த விளையாட்டிற்கு அடிமைப் பட்டவர்களே மீட்கவே முடியாது.
இப்படித்தான் ஜெர்மனி நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், பிரிட்டன்,ஆஸ்த்திரிலியா போன்ற நாடுகளில் விளையாடப் படும் கிரிக்கட் போட்டினை பார்த்து விட்டு, ஜெர்மனியிலும் இவ்விளையாட்டை அறிமுகப் படுத்தி செமக் காசைக் கொல்லையடிக்கணும் என்று திட்டம் தீட்டி, அரசுக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அரசு தலைவரும் ஒப்புதல் இட்டு, அதற்கொரு கமிட்டி தேர்ந்தெடுத்து, உலக நாடுகளை வரவழைத்து, போட்டிகள் ஆரம்பம் ஆகும் முன்பே தலைமை வகிக்க, ஜெர்மனியின் தானைத் தலைவர் அண்ணன் மாண்பு மிகு டாக்டர் ஹிட்லர் அவர்களை வரவழைத்து, விளையாட்டும் ஆரம்பம்.
ஜெர்மனி வீரர்களின் அபார ஆட்டத்தால் பிரிட்டிஷ் அணியினர் பயந்துதான் போனார்கள்,டாக்ட்டர் ஹிட்லர் அவர்களுக்கு ரொம்ப சந்தோசம்,ஏன் என்றால் தோல்வியையே தம் வாழ் நாளில் சந்திக்காத அண்ணன் அவர்கள், வீரர்கள் விட்டுக்லாசுவதைப் பார்த்து பெருமைப் பட்டார்,மணிக்கணக்கில் விளையாட்டு நடந்து கொண்டு இருந்தது,ஹிட்லரும் ரொம்ப ஆர்வமாக இருந்தார், முடிவை தெரிவதற்கு,
காலையில் ஏழு மணிக்கு ஆரம்பித்த விளையாட்டு நடுப் பகல் ஆகியும் இன்னும் முடிவு தெரியாததால், மெதுவா கமிட்டி தலைவரிடம் சொரன்டினார் ஹிட்லர்,கமிட்டி தலைவரோ கொஞ்சம் பொறுங்கள் எஜமான்,சாப்பாடுலாம் ஆர்டர் பண்ணிவிட்டேன், விளையாட்டை முடித்து விட்டுத்தான் நீங்கள் போகணும் என்று அன்பு கட்டளை இட்டார் விளையாட்டு கமிட்டி தலைவர்.
என்ன செய்ய, அன்பு கட்டளையை மீற முடியுமா ? பொறுமையாக இருந்தார்,ஏன் என்றால் அவர் பார்த்த விளையாட்டெல்லாம் பூட்பால்தான் அது ஒன்னரை மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்பதால், இந்த விளையாட்டும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.
இரவு பொழுது ஆகியும் விளக்கைப் போட்டு ஆடினார்கள், பொறுமையிழந்த ஹிட்லர் நீங்கள் விளையாடுங்கள் நாளைக்கு வருகிறேன் என்று கோபமாக போய் விட்டார்,மறுநாள் அதிகாலை வாக்கிங் போன ஹிட்லருக்கு பெரும் அதிர்ச்சி,வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் மக்கள் கூட்டமோ சிறிதளவும் கவலையில்லாமல் கரவோசம் போட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்,சரியாக பத்து மணிக்கு ஹிட்லர் வந்தார் மைதானத்திற்கு,கமிட்டி தலைவரை அழைத்து யார் வெற்றி பெற்றார் என்று கேட்டார்,கமிட்டி தலைவரோ எசமான் இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் முடிவு சொல்லிடறேன் என்று சொல்லி முடிப்பதற்குள்.....
டுமீல்..டுமீல்..என்று ஹிட்லர் கையிலிருந்த துப்பாக்கி கமிட்டி தலைவர் நெஞ்சை குறி பார்க்க.. நிமிடத்தில் உயிரிழந்தார்,ஜெர்மன் வீரர்கள் அனைவரையும் வருசையாக நிற்க வைத்தார்,வீரர்களும் சந்தோசமாக அதிபர் நமக்கு பதக்கம் தரப் போகிறார் என்று பல கனவுகளுடன் அணி வகுத்து நின்றனர்.
காரில் இருந்து இறங்கியதுமே பனிரெண்டு வீரர்களையும் ரெண்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு,தூ..சோம்பேறிகளா.. மக்களை நான் முன்னுக்கு கொண்டு போகணும்னு கனவு கண்டுகொண்டு இருக்கேன், நீங்களோ சோம்பேறிகளா ஆக்குகிரிர்களே என்று கர்ஜித்து விட்டு, மக்களைப் பார்த்து எச்சரித்தார்,இனிமேல் கிரிக்கெட்டு,பைக்கட்டுன்னு எவனாவது வந்தியே.... தொலைச்சுப் புடுவேன் என்று முழங்கி விட்டு போயி விட்டார்,இன்னைக்கும் வரைக்கும் ஜெர்மனியில் கிரிக்கட் என்ற விளையாட்டும் கிடையாது,அது என்னனு யாருக்கும் தெரியாது.
ஹிட்லர் அவர்களின் எச்சரிக்கை இன்னும் முழங்கி கொண்டு இருக்கு ஜெர்மனியில்.
//எனக்கும் கிரிக்கெட்க்கும் பல கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்//அப்படீன்னு சொல்லிட்டு இத்தனை ரசித்து எழுதி இருக்கீங்களே ஆமினா.
ReplyDelete//Blogger ம.தி.சுதா said...
ReplyDeleteஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...///
நானும் பலமுறை ட்ரை பண்றேன். முடியலையே :(
நன்றி ம.தி.சுதா
//அருமையாகத் தான் ரசித்திருக்கிறீர்கள்////
ReplyDeleteஅப்படியா தெரியுது? :)
//நம்மளுக்கு காதலியே அது தான்..//
உண்மையான ஆள் கோவிச்சுக்க போறாங்க. என்னவர்,என் அண்ணா, தம்பி என எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா நான் சில மேட்ச்களை மட்டும் பார்ப்பேன்.
//KANA VARO said...
ReplyDeleteநல்ல போட்டிகள் நெஞ்சை விட்டு அகல்வதில்லை.//
உண்மை சகோ!!! வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் பல
நன்றி லெட்சுமிம்மா.....
ReplyDelete@எல்.கே
ReplyDelete///ஹ்ம்ம் இதுக்கு என்னா பில்ட் அப்//
நாங்களாம் யாரு? :)))))))))
கோமு
ReplyDeleteஅந்த வீயியோ என்னவோ என்னை ரொம்ப கவர்ந்துச்சு. அதான் கிரவுண்ட் பக்கம் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன் சேக் அண்ணா!!!
ReplyDelete@ஸாதிகா அக்கா
ReplyDeleteஅக்கா நான் சும்மா எழுதுனதே அந்த அளவுக்கு போச்சு போல. மத்தபடி எனக்கும் கிரிக்கெட்க்கும் ஆகவே ஆகாதுக்கா. இப்பவாவது பைனல் மேட்ச் 20-20 பாப்பேன்னு வச்சுக்கோங்களேன். ஆனாலும் 50 யும் இன்னிங்க்ஸ் மேட்சும் சுத்தமா பிடிக்காது.
//பேச்சுலே நம்ம ஏரியா வாடை அடிக்கிதே (அத்தா//
ReplyDeleteஎந்த ஏரியான்னு சொல்லவே இல்லையே :))
11 முட்டாள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்ன்னு யாரோ அமெரிக்கா ஆள் சொன்ன ஞாபகம்...
கிட்லர் மேட்டர் இப்ப தான் கேள்விபடுறேன். எந்த ஒரு செயலும் மக்களை நல்வழிபடுத்துவதாக இருக்கணுமே ஒழிய தீய வழிக்கு இட்டு செல்ல கூடாது தான்
கருத்துக்கு நன்றி அந்நியன்
நானும் அந்த மேட்ச லைவா பார்த்திருக்கேன்!! wow!! what a great moment!!! thanks for கொசுவத்தி!!!
ReplyDelete@வைகை
ReplyDeleteஒருவர் பாத்த ஒரு நிகழ்ச்சியை நாமும் பார்த்தோம் என அறியும் போது சந்தோஷமா இருக்கும் இல்லையா? அதே மாதிரி தான் நான் பாத்த அதே மேட்ச் என்னவரும் பாத்ததா சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... :))
//thanks for கொசுவத்தி!!!//
:)))))))))))))
நாங்க ஆல் அவுட்க்கு மாறி ரொம்ப நாளாச்சே :))
நல்லாருக்கே.. கிரிக்கெட் அது எங்கள் உயிர்..
ReplyDelete@Riyas
ReplyDelete//கிரிக்கெட் அது எங்கள் உயிர்..//
ப்ரியரா இருக்கலாம். அதுக்காக பயங்கரமா இப்படியா ரசிக்கிறது :)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
good.....but cricket is very intresting game....
ReplyDeleteஓஹ்...இதுக்கு பேர்தான் கிரிக்கெட்டா ..? நா என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன்...!! ஹி..ஹி..
ReplyDelete//வேற வழி இல்ல.இத நீங்க நம்பி தான் ஆகணும் //
ReplyDeleteஓகே நம்பியாச்சு :))
//ஆனா உருப்படியா படிக்கல//
அதான பார்த்தேன்..
//சீரியல் பாக்க முடியாமல் ஓடுதுன்னு வயித்தெரிச்சல்ல//
பாவம் அவரே எப்போவோ ஒரு நல்ல தான் பார்க்கிறார். அதுவும் பொறுக்கலையா :)
ஆஹா கடைசில தத்துவம் சொல்லி சூப்பரா முடிச்சிட்டீங்களே சகோ.. நைஸ் :)
//.but cricket is very intresting game....//
ReplyDeleteம். நான் கிரிக்கெட்டை மட்டமா பேசல. அதுவே கதின்னு இருக்குறவங்கள தான் சொன்னேன் சகோ. மத்தபடி நல்ல கேம் தான். இப்பலாம் டி-20 மட்டும் தான் பாக்குறது. அதுவும் மினி வேல்ட் கப் மட்டும் ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹாஜா....
@ஜெய்லானி சகோ
ReplyDelete//ஓஹ்...இதுக்கு பேர்தான் கிரிக்கெட்டா ..? நா என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன்...!! ஹி..ஹி.//
எங்கே யார் சொன்னாங்க?
அதுசரி....
உங்களுக்கு தான் உங்களையே ஞாபகம்(அமீனிசியா) இல்லையே :) ஹி...ஹீ....ஹீ....
நான் சும்மா இருந்தாலும் இந்த விரல்லாம் சும்மா இருக்க மாட்டேங்குது ஜெய்!!!
@பாலாஜி
ReplyDelete//ஓகே நம்பியாச்சு :))// வேற வழி ? ;)
//அதான பார்த்தேன்.. //
நீங்களும் புத்தகத்த பாக்குற செட் தானா?
//அதுவும் பொறுக்கலையா :)//
ஹீ...ஹீ...ஹீ.......பெண்சுதந்திரம் :)
தத்துவமா? எங்கே எங்கே??? ஓ அதுவா? நல்ல மூட்ல எதையாவது ஒளறி வச்சுருப்பேன்....
இவ்வ்வ்வ்வ்வ்ளவு ரசிச்சு படிச்சதுக்கு நன்றி சகோ....
இந்த பிரச்சனை ரொம்ப பிரபலம். இதுமாதிரி நிறைய வீடியோக்களை யுட்யுப் இந்=பாக் மேட்சுகளில் பார்க்கலாம்.
ReplyDelete(இம்ரான் கான், ஷொயிப் அக்தர் இதில் பிரபலம்)
இந்தியா==பாக். மேட்ச் வெறும் கிரிக்கெட் போட்டி மட்டும் இல்லை, இருநாடுகளுக்கு இடையேயான தன்மானபிரச்சனை.
@நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteநிறைய பிரச்சனை உள்ள வீடியோ ஏன் funny வீடியோஸ் கூட ரசிச்சுருக்கேன். ஆனா இது மட்டும் என்னை ரொம்பவே யோசிக்க வச்சுச்சு :)
//, இருநாடுகளுக்கு இடையேயான தன்மானபிரச்சனை//
இந்த நிலை இப்ப மாறிட்டு வர மாதிரி எனக்கு தெரியுது ப்ரதாப். எல்லாரும் ஒரே வட்டத்துலையே சுத்திட்டு இருந்தா பிரச்சனை தான் கூடும். வெறும் விளையாட்டா மட்டும் எடுத்துட்டு போனா சகோதரத்துவம் பெறும்.
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!!
நல்ல சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க..
ReplyDelete@பாபு
ReplyDeleteமிக்க நன்றி பாபு!!!!
Keep it up all in all princess:))
ReplyDelete@ அந்நியன்2
ReplyDeleteயார் அது பின்னூட்டம் போடுற இடத்துல பதிவு போட்டு இருக்காரு,
//@ அந்நியன்2
ReplyDeleteயார் அது பின்னூட்டம் போடுற இடத்துல பதிவு போட்டு இருக்காரு//
அந்நியன் இதுவரை மிரட்டி,பஞ்சாயத்து வச்சு தான் பாத்துருப்பீங்க.தொண்டைய புடுச்சுட்டே பேசி ரொம்ப போர் அடிக்குதாம். அப்பப்ப இன்பாக்ஸ்ல வேற ஆட்டோ வந்துடும் வீட்டுக்குன்னு மிரட்டல் வருதாம். அதான் கதை,ஜோக் சொல்ற அந்நியனா மாறிட்டார் :))
Swarasiya padhivu pukundhu vilaiyadunka.
ReplyDeleteNeenkal then mavattathai poorvikamaka kondavara.attha endru kooruvathal ketten
நன்றி ஆனந்தி!!!
ReplyDelete:)))))))))))
@ ஐத்ரூஸ்
ReplyDeleteஆமாம். இராமநாதபுரம் மாவட்டம் தான் பூர்விகம்...
அத்தான்னு இந்த ஏரியா பக்கம் தான் கூப்பிடுவாங்கன்னு நீங்களாம் சொல்லி தான் தெரிஞ்சுக்குறேன் :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
ஆமினா,
ReplyDeleteஎல்லா பக்கங்களையும் வாசித்தேன்,ரசித்தேன்,மகிழ்ந்தேன்
ஆர்வமாக படிக்கத்தூண்டும் நடை வாழ்த்துக்கள்
யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் எழுதியிருக்கீங்க அருமை
ReplyDeleteதொடரட்டு உங்கள் பொன்னான பணி
நன்றி
நட்புடன்
மாணவன்
நல்லா இருக்கு. இந்த விளையாட்டு பார்த்தே பல வருடங்களாகி விட்டது. ரொம்ப விறு விறுப்பா இருக்கும் கிரிக்கெட் பார்க்கும் போது.
ReplyDeleteஆமா! நம்ம அஸாருதீன் அம்பயரிடம் போய் என்ன சொன்னார்???
//ஆமா! நம்ம அஸாருதீன் அம்பயரிடம் போய் என்ன சொன்னார்???//
ReplyDeleteஎன்னைய அவன் அப்படி சொல்லிட்டான்னு வாத்திகிட்ட ஸ்டூடண்ட்லாம் சொல்லிட்டு இருக்காங்க :)))
நல்ல பகிர்வு, அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள் சகோதரி
ReplyDeleteஆமி கிரிக்கெட் பார்ப்பதில் நானும் உங்களை மாதிரிதான். எங்க வீட்டுல அம்மா கூட ஒன் டே மேட்ச் இருக்குன்னா வெறும் ரசம் சாதம்தான் வைப்பங்க :(. அப்புறம் அண்ணா அப்பா அம்மா அண்ணா ஃப்ரெண்ட்ஸுன்னு எல்லாம் டிவி முன்னாடியே தவம் கிடப்பாங்க. எனக்குத்தான் கடுப்பா இருக்கும்.
ReplyDeleteஆனா விளையாட்டுலயும் நல்லதை கத்துக்கனும்ங்கற உங்க அப்ரோச் பிடிச்சுருக்கு :)
ஆமி கிரிக்கெட்டையும் விட்டுவைக்கலியா? ம் ம்ம் ம் நடக்கட்டும்.கொஞ்ச நாள்ல பேட் பிடிக்கப்போவீங்களோ?
ReplyDeleteசலாம் ஆமி கிரிக்கெட் எனக்குப் பிடிக்கும்
ReplyDeleteஇப்போ அதை பார்பதில்லை அதில் நடக்கும்( தவறுகள்) தான் காரணம் ஒரு காலத்தில் குடும்பமே டிவி முன்னாடியேதான் கிடப்பது இப்போ சுத்தமா பார்ப்பதேயில்லை உன் எழுத்து
நடை எனக்கு ரொம்பபுடிச்சிருக்குடா
நல்ல சுவாரஸ்யமான பதிவு
ReplyDelete@ myth-buster
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
தொடர்ந்து வாங்க :)
@கவிசிவா
ReplyDeleteஅம்மா கூட பாக்குறாங்களா? பாவம் கவி நீங்க :))
அந்த நேரத்துல நான் என்ன சொன்னாலும் காதுல விழாது. ஆனா மிக்ஸி சவுண்ட்,குக்கர் விசில் சவுண்ட் மட்டும் அந்த நேரத்துல விழுந்துட கூடாது என்னவர்க்கு :(
@உமா
ReplyDelete//கொஞ்ச நாள்ல பேட் பிடிக்கப்போவீங்களோ?// ஆல்ரெடி பிடிச்சுட்டேன் பா என் மகன் பேட்டை :)
அவங்க அத்தாவ க்ரவுண்ட்க்கு போக விடமாட்டான். அவரும் கூடிட்டு போக மாட்டார். அந்த நேரத்துல அவன் கண்ணுக்கு நான் தான் மாட்டுவேன் :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமா
வ அலைக்கும் சலாம் வரஹ்....
ReplyDeleteநீங்க கிரிக்கெட் ரசிகையா? சொல்லவே இல்ல.... இந்த தடவநடக்குற வேல்ட் கப் சென்னையிலும் நடக்குமாம்.. போய்டுவோமா ?:))))))))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!!
@சிவ தர்ஷன்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@மாணவன்
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
@கவிதா
ReplyDelete///எல்லா பக்கங்களையும் வாசித்தேன்,ரசித்தேன்,மகிழ்ந்தேன் //
மிக்க நன்றி கவிதா உங்க வருகைக்கும் வாசிப்புக்கும் ரசிப்புக்கும் :))
மகிழ்ந்ததை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்
ஆமி எல்லாபதிவும் சூப்பாரா எழுதரீங்க.
ReplyDeleteபலவிஷயங்களிலும் நல்ல ரசனை உங்களுக்கு.வாழ்த்துக்கள். சித்ரா.எம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.
ReplyDeleteவாவ்...!
நல்ல விஷயங்களை இப்படியும் சொல்ல முடியுமா?
//முக்காலத்தையும் அறிந்தவன் நமக்கு மேலே உள்ளவன் என்பதை மறந்து விடுகிறார்கள்.//--எச்சமயத்திலும் இதை மறக்காமல் இருப்பதே இறையச்சம் மூலமாக வரும் நல்லொழுக்கத்தின் அடித்தளம். இது எப்போதும் இருக்கும் இப்படிப்பட்டவர்களுக்குத்தான் அங்கே வேர்ல்டுகப் கிரிக்கெட் தெரியாமல், அதற்கு பதிலாக...//அதை பார்த்த பிறகு தப்பி தவறி கூட யாரையும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ மனதினுள்ளோ திட்டவோ கோபமாய் பேசவோ கூடாது என சபதம் எடுத்துக்கொண்டேன்.//--என்று தன் நல்லொழுக்கம் மேலும் மெருகேறும் சந்தர்ப்பம் தெரியும்.
{{{{{ 47:17.யார் (இறைநம்பிக்கை மூலம்) நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு (இறையச்சைத்தை)-தக்வாவை (இறைவன்) அளிக்கின்றான்.}}}}}
இப்பதிவு படித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@ சித்ரா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சித்ரா
@ ஆஷிக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்.....
//நல்ல விஷயங்களை இப்படியும் சொல்ல முடியுமா?//
கெட்ட விஷயங்களிலும் தனக்கு தேவையான நல்ல அறிவையும், நல்ல அனுபவத்தையும் பெற முயல்பவனால் தான் நேர்வழியில் செல்ல முடியும் இல்லையா சகோ?
உற்சாகம் நிறைந்த உங்க பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ஆஷிக்..