invisible ல இருக்குறவங்கல கண்டுபிடிக்கணும்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன்... ஹூம்...ஹூம்ம்... நம்ம மூளைக்கு எட்டவே இல்ல . ஆனா நான் ஒளிஞ்சுருந்தா மட்டும் திருட்டுபயபுள்ளைக என்னைய கண்டுபிடிச்சு மூஞ்சுல இருக்குற மூக்கை வெட்டிட்டுதான் அடுத்தா வேலையே பாக்குறேங்குதுக :( சரி சும்மா விளையாடுதுகன்னு பதில் போடாம விட்டா கொலவெறியோட பதில் வந்துடும் “நீ ஒளிஞ்சுட்டு இருக்கன்னு தெரியும். ஒழுங்கா மரியாதையா வந்துடு”ன்னு :(

முடியல.....என்ன பண்ண? மூஞ்சை தொங்க போட்டுட்டு மனம் நிறையா அவமானங்களை தாங்கிட்டு பெரிய பல்ப்ஸ் நிறையா வாங்கி வச்சு வீடு தான் ப்ரகாசமா எறியுதே ஒழிய என் மூளை இன்னும் இருட்டாவே கெடக்கு!!!

இதுக்கு என்ன தீர்வுன்னு ராப்பகலா யோசிச்சேன். தூங்காமா யோசிச்சேன், சாப்பிடாம யோசிச்சேன், இவ்வளவு ஏங்க இன்னும் கொஞ்ச நாள் விட்டா பைத்தியமாவே போயிருப்பேனோ என்னவோ?!! (அப்படியாவது போயிருக்க கூடாதான்னு சொல்றதுலாம் கேக்குது. பிறவி பயனை அடைய வேண்டாவோ???). கீழ்பாக்கத்துல இடம் ரெடியாகிடுச்சுன்னு மெயில் வேற வருது. இது பத்தாததுக்கு என் ரங்க்ஸ்  போறதா இருந்தா  நீ ஏர்வாடிக்கு தான்போகணும். ஏன்னா அது தான் நான் அடிக்கடி பாக்க வந்துட்டு போக வசதியா பக்கத்துல இருக்குன்னு நக்கல் வேற!!!

வட போனாலும் பரவாயில்ல,கொள்க போனாலும் பரவாயில்லன்னு என் நோஸ் வச்சுருந்தவன்கிட்ட  கிட்ட கெஞ்சி கூத்தாடி (இதுக்கு ரங்க்ஸ் ரெகமண்ட் மெயில் வேற) எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டு அவரும் பாவப்பட்டு,பரிதாபப்பட்டு எனக்கும் சொல்லி கொடுத்துட்டார். நம்ம மனசு தான் திறந்த நிலை புத்தகமாச்சே!! அதான் அங்கே போட்டுக்க இடம் இல்லாம இங்கே வந்து கொட்டிக்கிறேன். தெரியாதவங்க அள்ளிக்கோங்கோ!! தெரிஞ்சவங்க கொஞ்சம் பாவம் புண்ணியம் பாத்து திட்டாம ஓரமா வேடிக்க மட்டும் பாருங்க. அப்படியும் முடியலன்னா எதையாவது ஒளறி கொட்டுங்க...ஒரே சமயத்துல பலபேர்கிட்ட திட்டு வாங்க என்னால முடியவே முடியாது!!!

படத்தை பாருங்க.எதாவது புரியுதா? ம் ? சொல்லுங்க?? பாத்ததும் புரிஞ்சுருந்தா நீங்க புத்திசாலின்னுலாம் சொல்ல மாட்டேன். ஆனா புரியாம இருந்தா கீழ விளக்கத்த பாருங்க. ஆனா நீங்களும் என் இனம்னு ஒத்துக்கோணும் சரிங்களா கண்ணுகளா???
வேற பெருசா ஒன்னுமில்ல.

GO OFF THE RECORD பண்ணிக்கோங்க.
ஆப்லைன்ல இருக்குற பிரண்ட்க்கு ஹாய் சொல்லுங்க.
மெசேஜ்க்கு கீழ சிகப்பா எதாவது மெசேஜ் சொல்லுச்சுன்னா உண்மையிலேயே அவங்க ஸ்பாட்ல இல்லைன்னு அர்த்தம்.
அப்படிலாம் வராம வெறும் கருப்பு கலர் லெட்டர்ஸ் வந்தா/எதுவும் வரலைன்னா ஆள் பதுங்கியிருக்குன்னு அர்த்தம் :)

அவ்வளவுதேன்

டிஸ்கி 1: நிறைய முறை இருந்தாலும் இது என்னை மாதிரி உள்ளவங்களுக்கு எளிதான முறை என்பதால் இம்முறை போட்டேன். முறைக்காமல் பார்க்கவும்.

டிஸ்கி 2: இதுக்கு இவ்வளவு பெரிய பில்டப் தேவையே இல்லைன்னு நீங்க சொல்லலாம். என்ன செய்ய ??? இங்கே பொழம்பாம எங்கே பொழம்ப போறேன் :)

83 comments:

 1. அட..பரவால்லியே..நானும் இத..இத தான் தேடிட்டு இருந்தேன்.நீங்க க்ண்டு பிடித்துக்கொடுத்திட்டீங்க ஆமினா.

  ReplyDelete
 2. சூடா ஒரு பார்சல் வடை எனக்கு.

  ReplyDelete
 3. ஆமி, இதுக்கு போய் பதிவா?? நான் ஒளிஞ்சு இருந்து தான் பழக்கம். சில பாசக்கார பிள்ளைங்க விடமாட்டாங்க. சாட் பண்ண வரச் சொல்றாங்க. ஒரு விடலை நான் டீன் ஏஜ் பெண்ணாக்கும் என்று நினைச்சு ஒரே வழிசல்.

  சொல்லிட்டீங்க இல்ல இனிமே கண்டு பிடிச்சு, நோஸை வெட்டிட்டு தான் மறு வேலை.

  ReplyDelete
 4. யப்பா பயங்கர கண்டு பிடிப்பா இருக்கே..!! அவ்வ்வ்வ்
  ;)

  ReplyDelete
 5. //ஆனா நான் ஒளிஞ்சுருந்தா மட்டும் திருட்டுபயபுள்ளைக என்னைய கண்டுபிடிச்சு மூஞ்சுல இருக்குற மூக்கை வெட்டிட்டுதான் அடுத்தா வேலையே பாக்குறேங்குதுக//

  ஹி..ஹி.. புத்திசாலி ;)

  ReplyDelete
 6. :-).. ஹா ஹா ஹா.. சிம்பிளாக சொன்னாலும் நல்லாவே விளக்கியிருக்கீங்க..

  இனி யாரும் உங்களை ஏமாத்த முடியாது.. :-)

  ReplyDelete
 7. அடேங்கப்பா.. ஆமி.. செம கில்லாடிதான். எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 8. எல்லாரும் ஜோரா ஒரு வாட்டி கைதட்டுங்கப்பா....பில்டப்பை பார்த்து நானும் ரொம்ப பெருசா எதிர்பார்த்தேன்...

  ம்..யாருக்கெல்லாமோ நோபல் பரிசு கொடுக்கறானுங்க....

  ReplyDelete
 9. சகோ ஒங்க புலம்பல் பிடித்து இருந்தது அதான் ஒட்டு போட்டு விட்டேன்

  (ஏனா நானும் புலம்பிக்கிட்டுதான் இருந்தேன் நான் ஒங்க கட்சி)

  அப்புறம் நான் நேத்துதான் என்னுடைய ப்ளாக்கில் ஒட்டுப்பட்டையை சேர்த்தேன்
  பாத்து செய்யுங்க

  ReplyDelete
 10. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...... (நான் என்ன சொல்ல வர்றேன் தெரியுமா அத நீங்க சொல்லுங்க ...!!)

  ReplyDelete
 11. அடுத்து எஸ்கேப்பு ரூட் போட்டுட்டீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா...

  ReplyDelete
 12. ஆமி , இப்ப நான் சாட் ஹிஸ்டரி சேவ் செய்யவேண்டாம் என்ற ஒப்சனை குடுத்து இருந்தால் தான் வேலை செய்யும். நான் சாட் ஹிஸ்டரி சேவ் செய்கிறேன் என்றால் வேலை செய்து.

  எப்படி எப்படி எப்படி

  ReplyDelete
 13. நட்ட நடு ராத்திரியில் பதிவு பட்ட இப்படிதான் பதில் போடுவோம்

  ReplyDelete
 14. @ ஸாதிகா அக்கா

  //.நானும் இத..இத தான் தேடிட்டு இருந்தேன்.நீங்க க்ண்டு பிடித்துக்கொடுத்திட்டீங்க ஆமினா. //
  என்னை அறிவாளின்னு சொல்லாம சொல்றீங்க அப்படி தானே? ;))) (இதுக்கு பேரு தான் தற்பெருமையோ)

  நன்றி அக்கா

  ReplyDelete
 15. @ஸாதிகா அக்கா

  //சூடா ஒரு பார்சல் வடை எனக்கு.//
  கொரியர்ல அனுப்பிட்டேங்கா! வந்துடுச்சா?!!! :)

  ReplyDelete
 16. @வானதி
  தெரியா தனமா இதை செக் பண்ண நான் இன்விசிபில் மோட் ல வச்சு என்னவர் ஜீடால்க்ல இருந்து செக் பண்ணேன். பதிவு போட்ட அவசரத்தில் அப்படியே கண்டுக்கல. பாத்தா ஏகப்பட்ட திட்டுகள் எனக்காக காத்துட்டு இருக்கு. என்னன்னு கேட்டா “நீ தானே சொல்லி கொடுத்த.அதை வச்சு உன்னையே கண்டுபிடிச்சுட்டேன்”அப்படின்னு நக்கல் வேற...அவ்வ்வ்வ்

  //ஒரு விடலை நான் டீன் ஏஜ் பெண்ணாக்கும் என்று நினைச்சு ஒரே வழிசல். //
  தேவதையில் உங்களை பார்த்த பிறகுமா? சும்மா ஜோக்குக்கு ;)

  ReplyDelete
 17. @ஜெய்லானி
  //யப்பா பயங்கர கண்டு பிடிப்பா இருக்கே..!! அவ்வ்வ்வ்//
  எல்லாம் உங்களோட சேர்ந்ததுனால வந்த விளைவுகள்....;) அவ்வ்வ்....

  ReplyDelete
 18. @ஜெய்லானி

  //ஆனா நான் ஒளிஞ்சுருந்தா மட்டும் திருட்டுபயபுள்ளைக என்னைய கண்டுபிடிச்சு மூஞ்சுல இருக்குற மூக்கை வெட்டிட்டுதான் அடுத்தா வேலையே பாக்குறேங்குதுக//

  ஹி..ஹி.. புத்திசாலி ;)
  //
  என்ன பண்ண???

  ReplyDelete
 19. @பாபு
  //இனி யாரும் உங்களை ஏமாத்த முடியாது.. :-) //
  தப்பு தப்பு...இனி யாரையும் நான் ஏமாத்த முடியாது :(
  நன்றி தம்பி

  ReplyDelete
 20. @Starjan சேக் அண்ணா

  //அடேங்கப்பா.. ஆமி.. செம கில்லாடிதான். எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டியதுதான்.//

  யாரு?? உங்க தங்கச்சியாச்சே?? :))

  மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 21. @ப்ரதாப்
  :))
  //ம்..யாருக்கெல்லாமோ நோபல் பரிசு கொடுக்கறானுங்க.... //
  எனக்கும் ஒன்னு கொடுங்கடான்னு சொன்னா கேட்டா தானே!! எதாவது கண்டுபிடின்னு சொல்றானுங்க. அதான் முதல் படி எடுத்து வச்சுருக்கேன் ;)

  ReplyDelete
 22. @ஹைதர் அலி
  //சகோ ஒங்க புலம்பல் பிடித்து இருந்தது அதான் ஒட்டு போட்டு விட்டேன்//
  சகோதரன்னா இப்படி தான் இருக்கணும். நம்ம 2 பேரும் பாசமலர்களுக்கு எடுத்துகாட்டு இல்லையா? அதான் நான் பொலம்புனா நீங்களும் பொலபுறீங்க!! :)))
  //அப்புறம் நான் நேத்துதான் என்னுடைய ப்ளாக்கில் ஒட்டுப்பட்டையை சேர்த்தேன்
  பாத்து செய்யுங்க //
  சொல்லிட்டீங்கள? கள்ள ஓட்டு போட்டே தொகுதியில உங்கள ஜெய்க்க வச்சுடுறேன் ;)

  ReplyDelete
 23. @அப்துல் காதர்
  //எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...... (நான் என்ன சொல்ல வர்றேன் தெரியுமா அத நீங்க சொல்லுங்க ...!!) //
  எப்பவும் அடுத்தவங்களுக்கோ அல்லது அடுத்தவங்க எனக்கோ பல்ப்ஸ் கொடுத்து தான் பழக்கம். எனக்கு நானா கொடுக்குறதில்லன்னு சபதம் எடுத்துருக்கேன் :)
  ஆனா ஒன்னு.... பிறவி பலன அடஞ்சுட்டேன் ;)

  ReplyDelete
 24. @சித்ரா
  //அடுத்து எஸ்கேப்பு ரூட் போட்டுட்டீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா... //
  :)))
  இப்ப தான் சின்ன புள்ளியா ஆரம்பிச்சுருக்கேன். அடுத்து எல்லாத்தையும் கொலபண்ணிட்டு தான் அடுத்த வேலையே :))

  ReplyDelete
 25. @LK

  //ஆமி , இப்ப நான் சாட் ஹிஸ்டரி சேவ் செய்யவேண்டாம் என்ற ஒப்சனை குடுத்து இருந்தால் தான் வேலை செய்யும். நான் சாட் ஹிஸ்டரி சேவ் செய்கிறேன் என்றால் வேலை செய்து.

  எப்படி எப்படி எப்படி //
  ஐயகோ....... இதையெல்லாம் கேட்கவா ஆண்டவா என்னை படச்ச?? அவ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 26. @ எல்.கே
  //நட்ட நடு ராத்திரியில் பதிவு பட்ட இப்படிதான் பதில் போடுவோம் //

  நான் போடும் போது அமெரிக்கால பகல்ன்னு சொன்னாங்களே... அச்சச்சோ ஏமாந்துட்டேனா??? ஆனாலும் நட்ட நடு ராத்திரில பதிவு போட்டதுக்காக காலங்காத்தாலேயே என்னை சுவத்துல முட்டிக்க வச்சுருக்க கூடாது ;(

  ReplyDelete
 27. @ ஜீ
  :))
  வருகைக்கும், திட்ட வந்து புன்னகையை உதிர்த்திட்டு போனதுக்கும் நன்றி....

  ReplyDelete
 28. //தேவதையில் உங்களை பார்த்த பிறகுமா? சும்மா ஜோக்குக்கு //
  நான் ப்ளாக் வைச்சிருக்கிறதே அந்த விடலைக்கு தெரியாது, ஆமி.

  ReplyDelete
 29. //நான் ப்ளாக் வைச்சிருக்கிறதே அந்த விடலைக்கு தெரியாது, ஆமி.//

  ஹா...ஹா....

  சிரிக்கிறதா அழுறான்னே தெரியலையே.... ஆனாலும் நீங்க கொடுத்து வச்சவங்க ஹீ..ஹீ...ஹீ....

  ReplyDelete
 30. //நான் ப்ளாக் வைச்சிருக்கிறதே அந்த விடலைக்கு தெரியாது, ஆமி//

  அவ்வளவு விசிறியா உங்களுக்கு

  ReplyDelete
 31. //காலங்காத்தாலேயே என்னை சுவத்துல முட்டிக்க வச்சுருக்க கூடாது ;/

  சுவர் என்ன ஆச்சு ??

  ReplyDelete
 32. இன்விசிபிளில் இருக்கும்போதும் சிலர் வந்து ஹாய் சொல்லுவாங்க. எப்படி இருக்கது தெரிஞ்சதுன்னு கேட்டா சொல்ல மாட்டாங்க.இதானா விஷயம்!!

  தேங்க்யூ.

  ReplyDelete
 33. ஆத்தா... !கண்டுபிடிச்சீட்டிகளே...! அடேங்கப்பா...! இன்னா அறிவு...?

  நானேல்லாம் காலைல கம்ப்பிட்டரை ஸ்டார்ட் பண்ணினா நைட்டுதான் ஷட்டவுன் பண்றது... ஆணா, இடையே ஆறேழு மணிநேரம் துண்டு துண்டா காணாம போய்டுவேன்... சிலநேரம் எனக்கும் கம்ப்பிட்டருக்கும் உள்ள இடைவெளி இருபது முப்பது கிலோமீட்டர் கூட ஆகிடும்...

  அப்பல்லாம், மறதியா ஆஃப்லைன் போடாம வந்திட்டா..."இவன் ஆன் லைனிலேயே இருந்துகொண்டு பதில் கொடுக்க மாட்டேங்கிறான் பாரு", "கமென்ட் ரிலீஸ் பண்ண மாட்றான் பாரு..." என்று எல்லாரும் தப்பா நினைக்கிராங்களே... ஆணா, இப்போ ஆஃப்லைன் போட்டாலும் எனக்கு ஆப்புன்னா இதுக்கு இன்னா சொலுஷன் சகோ...? நீங்களே கண்டு பிடிச்சு அடுத்த பதிவு போடுங்க..!

  ReplyDelete
 34. பெரியாளா இருப்பீங்க போலிருக்கே...

  ReplyDelete
 35. நான் ஜிமெயில் ஓபன் செய்தால் தான கண்டுபிடிக்க முடியும். நான் ஓப்பனே செய்யலைனா?

  எப்படி என் சாமர்த்தியம்?

  ReplyDelete
 36. நன்றிங்க ... மிக்க நன்றி ...
  எனக்கும் இதை எப்படி கண்டுபிடிக்கிறது என்பது பெரிய கஷ்டமா இருந்தது ... இப்போ கத்துகிட்டேன் ...
  இதுபோல் நிறைய பயனுள்ள பல தகவல்களை தொடர்ந்து பதிய என் வாழ்த்துகள் ..
  (அப்போதான் நிறைய விசயங்களை நாங்க கத்துக்க முடியும் ஹ ஹா ஹ ஹா )

  ReplyDelete
 37. கம்பியூட்டர்ல நீங்க பெரிய ஆளுதாங்க. இன்று முதல் நீங்க பொலம்பல் சாரி..... பொம்பள பில்கேட்ஸ் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள்..

  ReplyDelete
 38. ரைட்டு! நடத்துங்க! என்ன ஒரு வில்லத்தனம்!

  ReplyDelete
 39. நானும் நேத்தே ஆத்தா நீங்க எதுல பாஸானீங்க ந்னு ஓடி வந்தேன்., ஹி
  ஹி
  கமெண்ட் போட்டேன் வந்து சேரல் போல

  இனி நாங்களும் உஜராகிடுவோமுல்ல

  ReplyDelete
 40. நாஞ்சிலாருக்காக எல்லா ஜோரா ஒரு தடவை கை த்ட்ட்டிக்குங்க்க

  ReplyDelete
 41. ஸலாம்..சகோ ஆமினா,அருமையான கண்டுபிடிப்புதான்...
  நான் என் பக்கத்துல உள்ள friend கிட்ட செக் பண்ணுனா அவர் offline la இருந்தாலும்,கருப்பு லெட்டர்லதா வருது...சரி போகட்டு,,,invisible இருக்கட்டும்,,எனக்கு இன்னோரு பிரச்சனை..அத கண்டுபுடிக்க ஏதாச்சும் வழி இருந்தா கண்டுபுடிச்சு சொல்லுங்களேன்..அது என்னன்னா..

  சில பேர் offline'ல இருப்பாங்கள்ல...அவங்க நெஜமாவே offline'ல தா இருக்காங்களா? இல்ல,offline பண்ணீட்டு,system பக்கத்துலையே இருக்காங்களான்னு'தா கண்டு புடிக்கனும்...உங்க திறமை மேல நம்பிக்கை இருக்கு.கொஞ்சம் சொல்லுங்கோலேன்...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 42. இவ்வளவு நாளும் கண்ணாமூச்சி ஆடிகிட்டு இருந்தவங்க எல்லாம் அம்பேல் தான்,கண்டிபிடிச்சிட்டியே ஆமி.

  ReplyDelete
 43. ம் ம்.. பெரிய பரிசு பார்சல்ல வந்துக்கிட்டு இருக்கு சகோ ;)

  ReplyDelete
 44. எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டியதுதான் விடயம் ஆமினா....

  ReplyDelete
 45. //இப்போ ஆஃப்லைன் போட்டாலும் எனக்கு ஆப்புன்னா இதுக்கு இன்னா சொலுஷன் சகோ...//

  ஆகா.. அற்புதம்..
  உங்களுக்கு அடுத்த வழக்கு-க்கு விஷயம் கிடைச்சாச்சு போல..
  நடத்துங்க...

  ReplyDelete
 46. உபயோகமான பதிவு, ஆமினா!!

  ReplyDelete
 47. நீங்கள் என்னனமோ பேசிக்கொள்கிரிர்கள் சத்தியமா இது என்னென்னு தெரியலை, நமக்கு இன்னும் ஒட்டு பெட்டியையே இன்னும் பொறுத்த முடியவில்லை இதுலே வேறே, ஒழுஞ்சி இருக்கிற ஆளை நான் எப்படி கண்டு பிடிக்கிறது ?

  எல்லோரும் ரொம்ப சந்தோசமா உங்களுக்கு நன்றி சொல்லுகிறார்கள்,நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்,ஏன் என்றால் நானும் கொஞ்சம் மூளையை கசக்கி அது என்னனு கண்டு பிடிப்போம்லே..நான் நிறையாப் பேருக்கு ஒட்டு போடறது இல்லை மன்னிக்கவும்.ஏன் என்றால் ஒட்டு விசயத்தைப் பத்தி ஒன்னும் தெரியாதுனாலே ஓட்டுப் போட தெரியலை,இனி வரும் காலங்களில் கண்டிப்பா எல்லோருக்கும் ஒட்டு போட்டு விடுகிறேன்.

  நன்றி ஆமினா நான் உங்களை காமராஜ் காலத்து ஆளுன்னு சொன்னதுக்கு மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து அண்ணான்னு சொல்லிட்டுப் போரியளாக்கும்.!!!

  ReplyDelete
 48. @ LK
  //அவ்வளவு விசிறியா உங்களுக்கு //

  பின்ன??? வானதிய யாருன்னு நெனச்சுட்டீங்க??? :))

  ReplyDelete
 49. @ எல்கே
  ////காலங்காத்தாலேயே என்னை சுவத்துல முட்டிக்க வச்சுருக்க கூடாது ;/

  சுவர் என்ன ஆச்சு ?? //
  இந்த கொலவெறி தாக்குதலுக்கு காரணமானவர கூடிட்டு வான்னு சொல்லுது. வாரேளா???? :))

  ReplyDelete
 50. @எம்.எம்.அப்துல்லா
  //இதானா விஷயம்!!//
  இதே தான் விடாதீங்க. இனிமே யாராவது இருந்தாலும் கண்டபடி கத்துங்க :)

  ReplyDelete
 51. @ஆஷிக் அண்ணா
  //ஆணா, இப்போ ஆஃப்லைன் போட்டாலும் எனக்கு ஆப்புன்னா இதுக்கு இன்னா சொலுஷன் சகோ...?//
  எங்களுக்கு எதாவது கஷ்ட்டம் வந்தா உங்க கிட்ட புலம்புவோம். உங்களுக்கே கஷ்ட்டம்னா யாருகிட்ட போய் முறையிடுவோம்?? :)) (எதோ ஒரு பழைய படத்துல யாரோ நடிப்பு திலகத்துக்கிட்ட சொல்லிவாங்க. அந்த ஸ்டைலில் படிச்சுக்கோங்க)

  இந்த பதிவுக்கே பல பேரு என்னை தேடிட்டு இருக்காங்களாம். இதுல அடுத்த பதிவா?? அந்த விஷயத்த போட்டா நானே மாட்டுக்குவேன் :)

  ReplyDelete
 52. @வெறும்பய
  //பெரியாளா இருப்பீங்க போலிருக்கே... //
  அந்தளவுக்குலாம் பெரிஷா கற்பன பண்ணாதேங்கோ. வெறும் டம்மி பீஸ் தான்..அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 53. @தொப்பி தொப்பி
  //நான் ஜிமெயில் ஓபன் செய்தால் தான கண்டுபிடிக்க முடியும். நான் ஓப்பனே செய்யலைனா?

  எப்படி என் சாமர்த்தியம்? //
  அட காலக்கொடுமையே!!! எத்தன தடவ தான் செவத்துல முட்டிக்கிறது சகோ?!!! :)

  ReplyDelete
 54. @அரசன்
  //இதுபோல் நிறைய பயனுள்ள பல தகவல்களை தொடர்ந்து பதிய என் வாழ்த்துகள் ..
  (அப்போதான் நிறைய விசயங்களை நாங்க கத்துக்க முடியும் ஹ ஹா ஹ ஹா ) //
  உங்களுக்காகவே ரெடியாகிட்டு இருக்கு சகோ. எதுக்கும் ஹாஸ்பிட்டல்ல 10 பாட்டீல் க்ளுகோஸ் ஏத்துக்கோங்க :)
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!

  ReplyDelete
 55. @பாரத் பாரதி
  //கம்பியூட்டர்ல நீங்க பெரிய ஆளுதாங்க. இன்று முதல் நீங்க பொலம்பல் சாரி..... பொம்பள பில்கேட்ஸ் என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள்.. //
  பரவாயில்லையே...
  இதுக்கே இந்த பட்டம்னா நாளைக்கு கட்சி ஆரம்பிக்க போறேன்ன்னு சொன்னா நாளைகழிச்சு என்னை முதலமைச்சராக்கிட ஆள் ரெடி..............

  ReplyDelete
 56. @வைகை
  //ரைட்டு! நடத்துங்க! என்ன ஒரு வில்லத்தனம்! //
  ஹா...ஹா..ஹா...
  நன்றி சகோ

  ReplyDelete
 57. @ஜலீலாக்கா
  //நானும் நேத்தே ஆத்தா நீங்க எதுல பாஸானீங்க ந்னு ஓடி வந்தேன்., ஹி
  ஹி
  கமெண்ட் போட்டேன் வந்து சேரல் போல

  இனி நாங்களும் உஜராகிடுவோமுல்ல //
  எக்கோ கேட்ட மாதிரி இருந்துச்சுக்கா....அப்பவே நெனச்சேன். நம்ம சொந்த பந்தம் தான் இப்படி கூவி அழைக்கிறாங்கன்னு...... ஆனா கமெண்ட் இப்ப தான் வந்து சேந்துருக்காங்க :)

  விடாதீங்கோ.... எல்லாத்தையும் ஒரு கை பாத்திருங்கோ!!!! :))

  ReplyDelete
 58. @ ஜலீலாக்கா

  //நாஞ்சிலாருக்காக எல்லா ஜோரா ஒரு தடவை கை த்ட்ட்டிக்குங்க்க //
  ஆஹா....நீங்க அவுங்களே தானா...............

  ReplyDelete
 59. @ரஜின்
  வஸ்ஸலாம்.
  நீங்க இந்த பதிவை ரொம்ப ரசிச்சு படிச்சுருக்கீங்கன்னு தெரியுது. அதான் இந்த அளவுக்கு தெளிவா?? பேசுறீங்க. கீப் இட் அப்... ஏர்வாடில வேப்ப மரத்துக்கிட்ட தான் உக்காருவேன். உங்களுக்கும் இடம் போட்டு வைக்கிறேன் வந்துடுங்கோ!!!........ உங்க ஊருல இருந்து ரொம்ப பக்கம் தானே... வசதியா இருக்கும்...!!!! :))

  ReplyDelete
 60. @ஆசியா
  //இவ்வளவு நாளும் கண்ணாமூச்சி ஆடிகிட்டு இருந்தவங்க எல்லாம் அம்பேல் தான்,கண்டிபிடிச்சிட்டியே ஆமி. //
  பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சும்மாவா சொன்னாங்க?? :))

  ReplyDelete
 61. @பாலாஜி

  //ம் ம்.. பெரிய பரிசு பார்சல்ல வந்துக்கிட்டு இருக்கு சகோ ;) //
  காஸ்ட்லியா இருந்தா தான் வாங்கிக்குவேன். சோ மதிப்புள்ள பொருளா போட்டு அனுப்புங்கோ.... பத்து கிலோ தங்க நகைன்னா ஓக்கே. அதுக்கு கொறச்சலா வந்தா திரும்ப உங்களுக்கே ரிட்டர்ன்.......

  ReplyDelete
 62. @பிரஷா
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 63. @பாரத் பாரதி
  //ஆகா.. அற்புதம்..
  உங்களுக்கு அடுத்த வழக்கு-க்கு விஷயம் கிடைச்சாச்சு போல..
  நடத்துங்க... //
  :))

  ReplyDelete
 64. @சிவக்குமார்
  //உபயோகமான பதிவு, ஆமினா!! //
  நன்றி சகோ...
  நீங்க தான் என்னைய சரியா புரிஞ்சு வச்சுருக்கீங்க :))

  ReplyDelete
 65. @அந்நியன்
  //நீங்கள் என்னனமோ பேசிக்கொள்கிரிர்கள் சத்தியமா இது என்னென்னு தெரியலை, //
  எனக்கே ஒன்னும் விளங்குனபாடு இல்ல. இதுல உங்களுக்கு எங்கே புரிய போகுது, நாமெல்லாம் ஒரே கட்சி,ரத்தத்தின் ரத்தம் அந்நீயன் :))
  //..நான் நிறையாப் பேருக்கு ஒட்டு போடறது இல்லை மன்னிக்கவும்//
  ப்ச்.. இப்படிலாம் சொல்லாதீங்க. எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது. பல பேரை ஊக்கப்படுத்துறீங்க அண்ணா! அதுவே பெரிய கிப்ட் தான். தமிழ்மணம் ஓட்டுபட்டைய வச்சுட்டு நானே ஓட்டு போட தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். அப்பறமா தான் ஜெய் சொல்லி கொடுத்தாங்க.

  //நன்றி ஆமினா நான் உங்களை காமராஜ் காலத்து ஆளுன்னு சொன்னதுக்கு மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து அண்ணான்னு சொல்லிட்டுப் போரியளாக்கும்.!!! //
  இப்பவாவது வாபஸ் வாங்கிக்கோங்க அண்ணா... இல்லையேல் அண்ணா தாக்குதல் தொடரும்......
  :))

  ReplyDelete
 66. //@ரஜின்
  வஸ்ஸலாம்.
  நீங்க இந்த பதிவை ரொம்ப ரசிச்சு படிச்சுருக்கீங்கன்னு தெரியுது. அதான் இந்த அளவுக்கு தெளிவா?? பேசுறீங்க. கீப் இட் அப்... ஏர்வாடில வேப்ப மரத்துக்கிட்ட தான் உக்காருவேன். உங்களுக்கும் இடம் போட்டு வைக்கிறேன் வந்துடுங்கோ!!!........ உங்க ஊருல இருந்து ரொம்ப பக்கம் தானே... வசதியா இருக்கும்...!!!! :))//

  ஹ்ம்ம்..ஒருத்தன் புத்திசாலித்தனமா பேசிட்டா பொருக்காதே,,,நீங்க பல்பு வாங்குனீங்ககிரதுக்காக,எனக்கும் ஒரு செட்டு ஆடர் பண்ரதா???என்ன கொடும சகோ...

  தெரியலன்னா தெரியலன்னு சொல்லனும்,அத உட்டுபோட்டு,..ஹ்ம்,,,சரி சரி,,,மன்னிச்சுட்டேன்,,,

  இந்த வீடியோவ பாருங்க,,,இப்புடித்தா..இதுல அவருக்கு என்ன நெலமையோ அதுதா இப்போ எனக்கும்,,,SAME BLOOD...

  http://www.youtube.com/watch?v=8C4T68v5MiI

  ReplyDelete
 67. //தமிழ்மணம் ஓட்டுபட்டைய வச்சுட்டு நானே ஓட்டு போட தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்.//

  அதுசரி,,,,ஓட்டுபட்டைய வச்சுட்டு,உங்களுக்கு நீங்களே,,,கள்ளஓட்டு குத்தலாம்னு பாத்துருக்கீங்க,,,ம்ம்ஹ்ம்ம்..

  ReplyDelete
 68. ஆமி உருப்படியா பதிவுபோட்டாகூட
  பின்னூட்டத்ல எத்தனை மொக்கை?
  அதுக்கும் சொல்ர பதில்களில் என்ன ஒரு நக்கல். ஆஹா!!!!!! சூப்பராபோகுதே.

  ReplyDelete
 69. மிகவும் அருமை

  ReplyDelete
 70. ஆமி கலக்கலோ கலக்கல்தான்.இன்னமும் இது போல பதிவு போடுங்க என்னைப்போல கத்துக்குட்டி களுக்கு உபயோகமா இருக்கும்.

  ReplyDelete
 71. தலைப்பு நல்லாயிருக்கு..

  ReplyDelete
 72. @ரஜின்
  //ஹ்ம்ம்..ஒருத்தன் புத்திசாலித்தனமா பேசிட்டா பொருக்காதே,,,நீங்க பல்பு வாங்குனீங்ககிரதுக்காக,எனக்கும் ஒரு செட்டு ஆடர் பண்ரதா???என்ன கொடும சகோ...//
  அது வேற ஒன்னுமில்ல ரஜின். இராம்நாட்காரனுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லாருக்கும் பொறாமை. அதான் ;) நீங்க சொன்னத அப்படியே சேதுபதி அரண்மனை கல்வெட்டில் செதுக்கிடுங்க. இனி வரபோற சந்ததிகள் படிச்சு நல்லறிவை பெறட்டும் ;))))

  //இந்த வீடியோவ பாருங்க,,,இப்புடித்தா..இதுல அவருக்கு என்ன நெலமையோ அதுதா இப்போ எனக்கும்,,,SAME BLOOD...//
  ஆஹா...அப்ப நான் தான் கவுண்டமணின்னு சொல்றீங்களா??/ அப்ப எனக்கு ஒரு செந்தில் கிடைச்சாச்சா???
  ஹா....ஹா....ஹா.....(இது வில்லி சிரிப்பு) ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இனி ரஜின் பாடு தான் திண்டாட்டம் :)))

  ReplyDelete
 73. //
  அதுசரி,,,,ஓட்டுபட்டைய வச்சுட்டு,உங்களுக்கு நீங்களே,,,கள்ளஓட்டு குத்தலாம்னு பாத்துருக்கீங்க,,,ம்ம்ஹ்ம்ம்.. //
  நீங்களாம் நேர்மையா இருக்குறதுனால தான் உங்க பதிவுக்கு முதல் தமிழ்மணம் ஓட்டு நான் போடுறேன்.....
  இப்பவாவது ஒத்துக்கோங்க. பெரிய ஆளா வரணும்னா குறுக்கு வழியில தான் வரணும். ஏன்னா மெயின் ரோடு ரொம்ப ட்ராபிக் :))
  (சும்மா சொன்னேன் பா. நீங்கபாட்டுக்கு தீவிரவாதி ரேன்ச்க்கு கற்பன பண்ணிடாதீங்கோ :))

  ReplyDelete
 74. கோமு
  //ஆமி உருப்படியா பதிவுபோட்டாகூட
  பின்னூட்டத்ல எத்தனை மொக்கை?
  அதுக்கும் சொல்ர பதில்களில் என்ன ஒரு நக்கல். ஆஹா!!!!!! சூப்பராபோகுதே//
  எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம்ல கோமு! அதான் இப்படி ;)

  ReplyDelete
 75. @ Several tips
  //மிகவும் அருமை //
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 76. @லெட்சுமிம்மா
  //என்னைப்போல கத்துக்குட்டி களுக்கு உபயோகமா இருக்கும். //
  நானுமே கத்துக்குட்டி தான் மா. ஆஷிக் கிட்ட ஒவ்வொன்னா கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போடுறேன். எல்லா புகழும் என் நண்பன் ஆஷிக்-க்கு தான்....

  ReplyDelete
 77. @பாரத்... பாரதி...
  //தலைப்பு நல்லாயிருக்கு.. //
  ஏதோ அப்போதைக்கு மனசுல வந்தது :)
  மிக்க நன்றி பாரதி

  ReplyDelete
 78. ஹ்ம்ம்.. மறைந்திருந்தாலும் விட மாட்டீர்கள் போல.

  ReplyDelete
 79. @ கார்பன் கூட்டாளி
  //ஹ்ம்ம்.. மறைந்திருந்தாலும் விட மாட்டீர்கள் போல.//

  நம்மளாம் கட்டபொம்மன்,திப்புசுல்தால் நாட்டுல பொறந்துருக்கோம். மறையலாமா??? அதான் இப்படி :)))

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 80. இதிலும் கலக்குறீங்க...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 81. @ myth-buster

  //இதிலும் கலக்குறீங்க...வாழ்த்துக்கள்//

  உங்க அளவுல பாதியாவது வந்தா தானே உங்க பேரை காப்பாத்த முடியும் ;)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 82. உபயோகமான தகவல், நன்றி ..

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)