வாங்க வாங்க..............

இப்ப உங்கள எல்லாரையும் நான் கடந்த காலத்துக்கு கூடிட்டு போறேன்.  அட பஸ் டிக்கெட்லாம் கேட்க மாட்டேன். கவலபடாம பின்னாடியே வாங்கோ.......... 5 வயசுல தான் என்னை நம்பி ஒரு பள்ளிகூடத்தையே ஒப்படைக்க  முடிவுபண்ணி எங்க அப்பா,அம்மா,தாத்தா,மாமா எல்லாரும்  ஆத்துல விளையாடிட்டு இருந்த என்னை தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. மொத நாள் நைட்டே அவங்க பேசுனத கேட்டு அப்பவே ப்ளான் பண்ணி தான் எல்லாரும் எந்திரிக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிட்டேன் என்பது வேறு கதை.

மழைக்கு கூட ஒதுங்க கூடவே கூடாதுன்னு நெனச்ச எனக்கு பேரிடியாக விழுந்தது அந்த முதல்நாள் பள்ளிகூட வாசல்படியை மிதித்தது. கொள்கை போச்சே........

பெரிய வாத்தியார் என்னை கூப்பிட்டு “எங்கே கழுத்த சுத்தி கையால மூக்கு
தொடு” அப்படின்னு சொன்னதும் ஒரு முறை நின்ன இடத்துலேயே கழுத்த சுத்திக்கிட்டு நேரடியா நோஸை தொட்டா என்னை நோஸ் கட் பண்ணிட்டார். இப்பலாம் முடியாது. அடுத்த வருஷம் வாங்கன்னு சொல்லிட்டார் மனுஷன். அப்ப என் கண்ணுக்கு அவர் நல்லவரா தெரிஞ்சாரு. அப்பறம் மண்டைல கொட்டி என்னை வீட்டுக்கு கூடிட்டு வந்து ப்ராக்டீஸ் கொடுத்தாங்க. கொஞ்சம் நாள்ல நம்மளோட விளையாண்ட பிள்ளைங்களாம் காணாம போகவும் வேற வழியே இல்லாம நானும் ஒத்துக்கிட்டு மறுபடியும் அந்த பெரிய வாத்தியார்கிட்ட அவர் சொன்னத அந்த குவாலிபிகேஷனை செஞ்சு காமிச்சு நாளு வார்த்த கத்துக்க ஒன்னாங்க்ளாஸ்(க்ளாஸ்ல 1 போட்டுருக்குமான்னு கேள்வி கேட்க்கப்படாது)  உள்ளே போயிட்டேன். அந்த வயசுலையே என் கண்ணுக்கு அது நரகமா தெரிஞ்சதுன்னா பாத்துக்கோங்களேன்.

எல்லா டீச்சர் தலைலையும் 2 கொம்பு மொழச்சு, கைல இருக்குற பிரம்பு ஆயுதம் மாதிரியும், என்னை மாதிரி சோகமா உக்காந்துட்டு இருந்த பிள்ளைங்களாம் நரகவாசிங்க வேதனைய அனுபவிச்சுட்டு இருக்குற மாதிரி கற்பன பண்ணிக்கிட்டேன். ஏன் அந்த கோர சம்பவத்த மறுபடியும் நெனச்சுட்டு? :-( அனா ஆவன்னா சொல்லி கொடுத்தாங்க. நானும் பிள்ளைங்களோட சேர்ந்து கூட்டத்துல கோவிந்தா போட்டேன். இது கத்துக்கவே 1 வருஷம் ஆச்சு. அடுத்து 2 வது. டீச்சர் போர்ட்ல அதே அ, ஆ எழுத அதை அப்படியே என் சிலேட்டில் டிபனுக்கு போக மிச்சம் இருந்த குச்சில அப்படியே வரஞ்சேன். ஆனா பாருங்க இ மட்டும் வரமாட்டேன்னு அடம் பிடிச்சது. அப்பறமென்ன பல அடிகள்,திட்டுகள் வாங்கிய பொறவு அதையும் வரஞ்சாச்சு. எனக்கு தமிழ் பிடிக்காததுக்கு காரணமே இந்த 2ம் வகுப்புல தான் ஆரம்பிச்சுச்சு.  அடேங்கப்பா மொத்தம் 247 எழுத்தாம். அதெல்லாம் கத்துக்குறதுக்குள்ள நான் சீத்தலை சாத்தனராகிட்டேன் :( 247 யும் மனப்பாடம் பண்ணனும்னா சும்மாவா?

அப்பறம் 3ங்க்ளாஸ். அங்கே தான் இங்க்லீஸ் காரங்க விட்டுட்டு போன இங்க்லீஸ் சொல்லி கொடுத்தாங்க. A FOR APPLE ஆரம்பிச்சு Z முடிக்கும் போது பாத்தா எங்கள அடுத்த வகுப்புக்கு அனுப்பிட்டாங்க. அப்பறம் மனக்கணக்குன்னு சொன்னாங்க, வாய்ப்பாடுன்னு சொன்னாங்க எல்லா கருமாந்திரத்தையும் கத்துக்கிட்டு வந்தாச்சு. இந்த கஷ்ட்ட காலத்துலையும் நம்ம பக்கம் காத்து அடிச்சது. ரம்ஜான்,தீபாவளி,பொங்கல் எதுவந்தாலும் முன்ன 4 நாள் பின்ன 3 நாள் லீவு எடுத்துக்குவோம். அதுமட்டுமா? அம்மா(அம்மை) போட்டா ஒரு மாசம் லீவு, மாமா, சித்தப்பா, ஒன்னுவிட்ட அத்த மகன், 2 விட்ட சித்தி மகன், எத்தன கிலோ மீட்டர் இடைவெளின்னே தெரியாத தூரத்து ஒறவுக்காரங்க இப்படி யார்வீட்டிலையாவது விசேஷம்,கல்யாணம் நடந்தா அத சாக்கா வச்சு 4 நாள் லீவு, இது போக பெரிய டீச்சர்க்கு எடுபிடி வேலை என சந்தோஷமா நாட்கள் கழிஞ்சது. அது ஒரு காலம்!! அழகிய காலம்!!!......

இப்ப என்ன விஷயம்ன்னா என் மகன் பொறந்துருக்கும் போது பாக்க வந்தவங்க “எந்த ஸ்கூல்ல சீட் வாங்குனீங்க” அப்படின்னு கேட்டாங்க. அப்படியே தூக்கு வாரி போட்டுச்சு. அத விட்டு தள்ளுங்க. நேத்து என் மகனோட பார்க் போனேன். என்னை பாத்து “இப்பவே நல்லா ஊர சுத்திக்கோங்க. அப்பறம் மூச்சுவிட கூட நேரமிருக்காது” அப்படின்னு எச்சரிக்கை விட்டுட்டு போனாங்க என்னோட வாக்கிங் வர சக தோழிகள். உடனே என்னை பாத்து என் மகன் “எப்ப மே ஸ்கூல்க்கு ஆஜாவ் ஆனி”ன்னு அவன் பாசைல கேட்டதும் என் கண்ணே கலங்கிடுச்சு. இந்த வயசுலலாம் நம்ம ஸ்கூலுக்குபோக கூடாதுன்னு உலக நாயகன் ரேஞ்சுக்கு நடிச்சோம். ஆனா என் மகன் என்னை பாத்து எப்ப ஸ்கூலுக்கு போக அப்படின்னு கேட்டுட்டானே....

வேகமா வீட்டுக்கு போனேன். கப் நிறையா காப்பியும் சிப்ஸும் எடுத்துட்டு டீவியையும் போட்டுட்டு சோபாவில் உக்காந்தேன். இந்த பில்டப்லாம் எதுக்காகன்னு நெனைக்கிறீங்க? அப்படிலாம் செஞ்சா தான் எனக்கு யோசிக்க தெரியும்.
சிந்தனைலாம் பழசையும் புதுசையும் மனசு அசைபோட்டுட்டே  பக்கத்துல சிப்ஸ்’ஐ ஆட்டோமெட்டிக்கா கை வாய்க்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டது.

எங்க வீட்டுல உள்ள வாண்டுங்க எல்லாம் எப்பவும் புத்தகம் கையுமா தான்
இருக்குங்க. ஒரு முறை புத்தகத்தை வாங்கி பாத்தா நான் காலேஜ்ஜில் எப்பவோ போட்ட கணக்குலாம் 5ம் வகுப்பு புத்தகத்தில். ஊரில் பெருநாள் கொண்டாட ரம்ஜானுக்கு முதல் நாள் மாலை ட்ரையின் பிடித்து காலையில் சேர்ந்து கொண்டாடிவிட்டு அன்று மாலையே அடுத்த ட்ரைனில் ஊருக்கு ஓட்டம். ஏன்னா லீவ் கொடுக்க மாட்டாங்களாம். மே மாத விடுமுறையில் எங்கள் ஊரே கலைகட்டும். ஆனால் இப்போதெல்லாம் அன்று கூட எல்லா ஸ்கூல் கேட்டும் திறந்துள்ளது. விடுமுறையில் கூட பாடம் நடத்துறாங்களாம். இது போக காலைல டியூசன், சாயங்காலம் கம்யூட்டர் க்ளாஸ், அதுக்கு அப்பறம் ஸ்போக்கன் ஹிந்தி, டான்ஸ் இத்யாதி..இத்யாதி......  இவ்வளவு எதுக்கு? பெரிய வாத்தியார் எவ்வளவு நல்லவர்ன்னு இப்பதாங்க புரிஞ்சுக்கிட்டேன். எவ்வளவு சிம்பிளான மேட்டரை தகுதின்னு சொல்லி கழுத்தை சுத்தி மூக்க தொட சொன்னார்? ஆனா இந்த ப்ரின்ஸிப்ள் எல்லாம் ரொம்ப மோசமானவங்க. 20 கிலோவாவது இருக்கும். மொத்தம் 10 பொது அறிவு புஸ்த்தகமாம். அதை அதை நானும் என்னவரும் படிக்கணுமாம். அதுல இருந்து 4 கேள்வி கேப்பாங்களாம். சரியா சொன்னா தான் மகனை சேர்ப்பாங்களாம். அடக்கொடுமையே. பிள்ளை படிக்க அனுப்புனா மறுபடியும் நமக்கு பிள்ளைங்களோடு சேர்த்து படிக்க சொல்லி தராங்க. எங்குட்டு போயி சொல்லுவேன்??? அதுக்கு தான் தனியா டொனேஷன் வாங்குறாங்களோ என்னவோ? (பள்ளிகூடத்துல ஓடு மாத்தணும்னு பெரிய வாத்தியார் எல்லார்கிட்டையும் 5 ரூபாய் வசூல் பண்ணார். அடுத்த நாளே எல்லா அம்மாமார்களும் அலைகடலென சுனாமியாக திரண்டு வந்துட்டாங்கள?!!). அப்பறம் சொல்ல மறந்துட்டேனே சிலேடுன்னா கடங்கார கடகாரன் என்னாதுன்னு கேட்டுபுட்டான்.  எல்லா புள்ளைகளும் பேனா,நோட்ல தான் எழுதுங்களாம். நானெல்லாம் 5 ம் வகுப்புக்கு போகும் போது தானே பேனாவையே தொட்டேன். சரி அதுவும் ஒரு வகைல நல்லது தான். என்னை மாதிரி டிபனுக்கு பதிலா குச்சி யூஸ் பண்ண மாட்டான்ல?!!!!


எல்லாம் படிச்சு கிழிச்சாச்சே... வேற என்ன இருக்கு
பிஞ்சு உள்ளங்கள் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவத்தை பெற்றிருக்காங்களா அல்லது திணிக்கப்படுகிறதா என தெரியல. ஒரு சின்ன விஷயத்திலும் தன் குழந்தைகள் தான் முதலிடத்தில் வர வேண்டும் என்ற மனபோக்கு பெற்றோர்களிடத்தில் வளர்ந்துவருவதை நினைத்து கவலைகொள்வதா? அல்லது அவர்களின் ஆசைகள் அனைத்தும் கட்டாயங்களாக திணிக்கப்படுவதை நினைத்து நாம் பெற்ற சந்தோஷங்கள் எல்லாம் இவர்களுக்கு எப்போதும் எட்டா கனியாக விளங்குவதை நினைத்து கவலை கொள்வதா?

இரவு பத்து மணியானாலும் எங்களை தேடாமல் சுதந்திரமாய் விளையாடவிட்ட என் அம்மாவிற்கும், என் பிள்ளை கேட்டை விட்டு வெளியே போக மாட்டான். உள்ளேயே விளையாடுவான் என பிள்ளை வளர்ப்பை பற்றி தற்பெருமை கூறும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்? கத்துக்கும் போது கத்துக்கட்டும் என அசால்ட்டாக என் இளவயதை இனிமையாக கழிக்கவிட்ட என் அம்மாவிற்கும் பள்ளிக்கு போகும் முன்பே எல்லாவற்றையும் சொல்லி கொடுத்துவிட வேண்டும் என போராடும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்? சும்மா வியாக்கானம் பேசும் போது அப்படிலாம் குழந்தையை செய்ய கூடாது, இப்படி செய்ய விட கூடாது என சொல்ல நல்லா தான் இருந்தது. ஆனா அந்த குறிப்பிட்ட எல்லைக்கு வந்த பிறகு எவையெல்லாம் தவறென சொன்னோமோ அவையெல்லாம் கூட எல்லாம் அவன் நன்மைக்கு தான். இப்ப கத்துக்கிட்டா தானே எல்லாம் அறிந்த மனிதனாக அவனை நம் சமுகத்துக்கு அனுப்ப முடியும் என எண்ண தோணுதே?! இக்கால குழந்தைகளும் எவ்வளவு அழகா இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டுவிட்டன. முன்னலாம் நாம்ம மறுபடியும் சின்ன குழந்தையா இருந்தா வைகையாத்துல எப்பவாவது அணைல இருந்து திறந்துவிடும் தண்ணீல குளிச்சுட்டு, ஊருக்கு வெளியே இருக்கும் குளத்தில் நீந்திக்கொண்டு, 1 மணி நேரத்துக்கு 2 ரூபாய் சைக்கிளில் பக்கத்து கிராமம்வரை போய் பனைமரத்துல பிரண்ட் அப்பா பறிச்சு கொடுத்த நொங்கு சாப்பிட்டுட்டு அடடா என்ன சுகமான நாட்கள். இதெல்லாம் திரும்ப கிடைச்சா எப்படி இருக்கும்னு ஏங்குவேன். இப்ப வானத்துல இருந்து தேவதை என்ன வரம் வேண்டும்னு கேட்டா குழந்தையா மட்டும் ஆக மாட்டேன்னு சொல்லிடலாமா அப்படின்னு நெனச்சுட்டு இருக்கும் போது கை பக்கத்துல இருந்த பவுலில் எதையோ இழந்ததை மாதிரி தேடுச்சு. சிப்ஸ்லாம் காலியாயிடுச்சு :(

வாய்க்கு தீனியில்லாத போது மூளையும் மனதும் கூட வேலைநிறுத்தம் பண்ணுது. சிப்ஸ் இல்லைன்னா இதுக்கு மேல எனக்கு யோசிக்க முடியாதே..!!!! இதுக்கு மேல புலம்புனா நான் எங்கேயும் அறிவாளியாகிடுவேனோன்னு எனக்கே பயம் வருது :( 

மறுபடியும் வாங்கிட்டு எப்பவாது பயங்கரமா யோசிக்கும் போது என் மிச்ச புலம்பல்ஸையும்  சொல்லி புலம்புறேன் மக்காஸ்!!!!!!!!

,

85 comments:

  1. ஆமினா நீங்க ரொம்ப ஸ்மார்ட்டுங்க நீங்க இரண்டாங்க்ளாஸ்லேயே இங்க்லீஷ் கத்துக்க ஆரம்பிசிட்டீங்க நானெல்லாம் 12 த்ல தான் A B C D...கத்துக்க ஆரம்பிச்சேன் இன்னும் கத்து முடிக்கலைங்க.........சிப்ஸ் தீரதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்லிய்ருந்துங்கனா ஒரு பெரிய பாக்கெட் வாங்கி அனுப்பி இருப்பேனே... இப்ப பாதியில ஸ்டாப் பண்ணிடிங்க..........மோசங்க நீங்க.

    காதை தொட்டா அட்மிஷன் கிடைப்பது நம்ம காலம் ஆனா இப்ப காசை தொட்டா அட்மிஷன் கிடைக்கும் இந்த காலமங்க...காலம் ரொம்ப மாறி போச்சு

    ReplyDelete
  2. கடந்தகால நிகழ்வுகளை யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

    பகிர்வுக்கு நன்றி

    தொடருங்கள்........

    ReplyDelete
  3. //முன்னலாம் நாம்ம மறுபடியும் சின்ன குழந்தையா இருந்தா வைகையாத்துல எப்பவாவது அணைல இருந்து திறந்துவிடும் தண்ணீல குளிச்சுட்டு, ஊருக்கு வெளியே இருக்கும் குளத்தில் நீந்திக்கொண்டு, 1 மணி நேரத்துக்கு 2 ரூபாய் சைக்கிளில் பக்கத்து கிராமம்வரை போய் பனைமரத்துல பிரண்ட் அப்பா பறிச்சு கொடுத்த நொங்கு சாப்பிட்டுட்டு அடடா என்ன சுகமான நாட்கள். இதெல்லாம் திரும்ப கிடைச்சா எப்படி இருக்கும்னு ஏங்குவேன்//

    அது ஒரு காலம் அழகிய காலம்...
    பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி நெகிழ வைத்துவிட்டீர்கள் அருமை...

    ReplyDelete
  4. //வாய்க்கு தீனியில்லாத போது மூளையும் மனதும் கூட வேலைநிறுத்தம் பண்ணுது. சிப்ஸ் இல்லைன்னா இதுக்கு மேல எனக்கு யோசிக்க முடியாதே..!!!! இதுக்கு மேல புலம்புனா நான் எங்கேயும் அறிவாளியாகிடுவேனோன்னு எனக்கே பயம் வருது :(//

    :-)

    ReplyDelete
  5. நம்மைப்போல கிராமத்து பின்னணி கொண்டவர்களுக்கு இந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்!! மலரும் நினைவுகளுக்கு நன்றி ஆமினா!!

    ReplyDelete
  6. அப்பறம் தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை சரிசெய்யுங்கள்!

    ReplyDelete
  7. சுவாரசியமாக சொல்ல வந்ததை அழகாக சொல்லீருக்கீங்க,ரொம்ப அருமையாக யோசிக்கிறீங்க,நான் வேண்டுமானால் ஒரு பாக்ஸ் சிப்ஸ் அனுப்பி வைக்கட்டுமா?அப்பதான் அடிக்கடி இப்படி அருமையான இடுகை கிடைக்கும்.

    ReplyDelete
  8. ஆமினா.உங்கள் ஞாபகசக்திக்கு ஒரு பெரிய பூங்கொத்து.ஒன்றாவது வகுப்பில் நடந்தவற்றை இவ்வளவுதூரம் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களே!!!எனது சிறு வயது பள்ளி அனுபவமும் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.பள்ளி செல்ல அடம் பிடித்து,எங்களை கவனித்துக்கொள்ளும் ஒரு உறவினர் ஒருவர் வழு கட்டாயமாக பள்ளிக்கு இழுத்து செல்வது,அவரை பள்ளியில் கிளாஸுக்கு வெளியில் இருக்கும் திண்டில் உட்காரச்சொல்வதும்,அவர் இருக்காரா என்பதை அவ்வப்பொழுது திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே இருப்பதும்,திடீரென அவர் எஸ்கேப் ஆனதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து...பள்ளி நிர்வாகியாக எங்கள் தாத்தா இருக்கப்போய்..எனது அத்தனை அமர்களத்துக்கும் ஈடு கொடுத்து..அப்பப்பா..இப்பொழுது என் மூன்று வயது பேரன் பிளே ஸ்கூல் போகின்றான்.வாசலில் வேன் ஹார்ன் சப்தம் கேட்டதும் துள்ளி,துடித்துக்கொண்டு பள்ளி செல்லும் அவனது ஆர்வத்தை பார்க்கையில் ஆச்சரியமாகத்தான் உள்ளது.எல்லாம் காலமாற்றங்கள்.

    ReplyDelete
  9. பாதிக்கதை என் கதை மாதிரியே இருக்கு அவ்வ்வ்வ்வ்...

    மலரும் நினைவுகள்....ஆனா என் பிள்ளையை ரெண்டரை வயசிலேயே ஸ்கூல்ல சேர்த்துட்டேன்.(( அது ரெண்டு வயசிலேயே போரேன்னு அடம் பிடிச்சது வேர கதை ))

    ReplyDelete
  10. என் அனுபவத்தை போட்டா உங்க பூல் புலையாவிட பயங்கர டெரரா இருக்கும் ஹி..ஹி...

    ReplyDelete
  11. இவ்வளவு யதார்த்தமான நிகழ்வு எழுத்து வடிவில் கொடுப்பது அவ்வளவு எளிது இல்லை..
    ஆனால் நீங்கள் ரொம்ப அருமையா எழுதி இருக்கின்றீர்..
    எனக்கும் என் சிறு வயது பள்ளிப்பருவம் எட்டிப்பார்க்கிறது...
    நல்ல தொடர் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. ஆமி மலரும் நினைவுகளை சூப்பரா சொல்லி இருக்கீங்க. இதுபோலத்தான் நம்ம எல்லாருக்குமே சில பசுமை நிறைந்த நினைவுகள் இருக்கும். அதை எழுத்தில் கொண்டுவந்து எல்லாரையும் ரசிக்கவைக்கவும் ஒரு திற்மை வேனும்.
    அது உங்கிட்ட நிறையவே இருக்கு. கீப் இட் அப்.

    ReplyDelete
  13. ஆமி எதைப்பத்தி எழுதினாலும் சுவாரஸ்யமா எழுதரீங்க.ரொம்ப நல்லாஇருக்கு,மலரும் நினைவுகள்.
    உங்கபையனுக்கு சிலேட்டு, குச்சின்னா என்னன்னு தெரியுமா?

    ReplyDelete
  14. #பிள்ளை படிக்க அனுப்புனா மறுபடியும் நமக்கு பிள்ளைங்களோடு சேர்த்து படிக்க சொல்லி தராங்க. எங்குட்டு போயி சொல்லுவேன்??? #

    இந்த கொடுமை எல்லா இடத்திலும் நடக்குது.....

    ReplyDelete
  15. மலரும் நினைவுகள் அருமை.

    ReplyDelete
  16. 5 வயசுல பள்ளிக்கு போன அந்த காலம் b/w ஸ்க்ரீன்ல,அப்டீ ஒரு நிமிசம் கண்ணு முன்னாடி ஓட ஆரபிச்சுருச்சு...பள்ளி மற்றும்,அப்போதைய சூழல்,புதிய நட்பு,புதிய விஷயங்கள் என எல்லாமே புதிதாய் இருந்ததால்,அந்த அனுபவம் எனக்கு பிடித்து இருந்தது.அந்த நாட்களில் நான் கண்ட பல சம்பவங்கள்,உங்களுடைய சம்பவங்களுடன் ஒத்துப் போகிறது.ம்ம்.பெரும்பாலும்,இது எல்லோரும் பார்த்த ஒன்றாகத்தான் இருக்கும்;

    குறிப்பாக பெண் பிள்ளைகள்,குச்சியை விரும்பி சாப்பிடுவது.இதுல இன்னோரு சுவாரஸ்யம் என்னன்னா,பொம்புள புள்ளைங்கள்ளா சின்ன வயசுல,என்ன சொன்னாலும்,"அப்புடியா??" அப்டீன்னு அப்பட்டமா நம்பீருவாங்க..அவங்கள ஏமாத்துரது ஒரு மேட்டரே இல்லாத அளவுக்கு அப்பாவிகளா இருப்பாங்க.. அப்டித்தா எவனாச்சும் சொல்லிருப்பான்னு நெனைக்கிறேன், இந்த குச்சி மேட்டரை..குச்சி சாப்பிடு,எழுத்து நல்லா வரும்ன்னா,,ஏ எதுக்குன்னு கேக்காம சகட்டுமேனிக்கு அரைக்க ஆரம்பிச்சுடுவாங்க...இது எல்லா ஊர்லையும் நடந்து இருக்குன்னு,நீங்க சொல்லும்போதுதா தெரியுது.

    அதுமாதிரி,இந்த அல்லக்கை வேல பாகுரது இருக்கே...எப்பப்பா,டேபில்ல இருக்குர சாக்பீஸ் எடுத்து வச்சு,இல்லாத நேரத்துல குடுத்து நல்லபேர் வாங்குரது,பக்கத்து கிளாஸ்ல போய் டஸ்டர் வாங்கிட்டு வர சொன்னா மொத ஆளா ஓடுரது,கிளாஸ் முடிஞ்ச ஒடனே போர்ட அழிச்சு,ரெடி பண்ரது...ஹெட் மாஸ்டர் ரூம்ல போய் அட்டண்டன்ஸ்,வைக்கிர/எடுக்குர வேலைய கண்ணும் கருத்துமா செய்ரது...எல்லாத்துக்கும் மேல நல்லா வேர படிச்சுர்ரது..படிக்கிறதுன்னா என்ன? மொட்ட மனப்பாடம்தா...இதுனால இந்த புள்ளைங்க கிளாஸ்ல பண்ர சேட்டைலா அடிபட்டு போய்டும்..பேக்ல,ஸ்னாக்ஸ்,மாங்கா,இந்த மாதிரி ஐடங்கள வச்சுக்கிட்டு,கிளாஸ் நடக்கும்போதே சாப்புட்ரது.நோட்டு எடுத்துட்டு வர மறந்துட்டா,அடி இல்லாம எஸ்கேப் ஆகுரது..இதுமாறி எஸ்கேபிஸத்துக்குதா,அந்த அல்லக்கை வேலை எல்லாம்...

    அது எல்லாமே,அழகிய நினைவுகள்தான்.

    ஆனா இந்த காலத்து பிள்ளைங்களோட
    ஆக்டிவிடீஸ்'அ பாக்கும்போதுதா,நெஜமாவே ஜெனரேஷன் கேப் அப்டீங்கிரத உணர முடியுது,,,

    நம்மதா ஷார்ப் அப்டீன்னு,நெனச்சுட்டு இருந்தது போக,நம்மலவிட ஷார்ப்பா அவங்க இருக்குரத பாக்கும் போது,வியப்பாத்தான் இருக்கு.இவங்களோட இத வயசுல நாம ந்ந்ன் இப்படி இல்லைன்னு,யோசிக்க தோனுது...ஆனா அதே இளவயதுல,அவங்க நம்மலவிட சிறப்பா இருக்கிறது சந்தோஷத்தையும் தருது...

    நல்ல பதிவு/பகிர்வு...

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  17. //இரண்டாங்க்ளாஸ்லேயே இங்க்லீஷ் கத்துக்க ஆரம்பிசிட்டீங்க நானெல்லாம் 12 த்ல தான் A B C D..கத்துக்க ஆரம்பிச்சேன் இன்னும் கத்து முடிக்கலைங்க..//

    ஹா...ஹா...ஹா... அப்ப நாமெல்லாம் ஒரே கட்சின்னு சொல்லுங்க...

    ஆனா யாரு சொன்னது? நான் 3ங் க்லாஸ்ல தான் A B C D கத்துக்கிட்டேன். வரலாறு மிக முக்கியம் சகோதரரே!!!

    இப்பவே சிப்ஸ் அனுப்புனா தான் சரியா வரும் :)

    அட ஆமாம்ங்க. ப்ரீ கே ஜீ சேர்க்க என் மகனுக்கு சென்னையில் பெரிய அமவுண்டா கேட்டாங்க. அதுல மயக்கம் போட்டவ தான். இன்னும் தலை சுத்திட்டே இருக்கு :))

    ReplyDelete
  18. @ மாணவன்
    //
    கடந்தகால நிகழ்வுகளை யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை//

    மிக்க நன்றி மாணவன்

    ReplyDelete
  19. @மாணவன்

    //பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி நெகிழ வைத்துவிட்டீர்கள் அருமை.//

    அப்படியா ?? மிக்க நன்றி சகோ !!!

    ReplyDelete
  20. @ வைகை

    //நம்மைப்போல கிராமத்து பின்னணி கொண்டவர்களுக்கு இந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்!! //

    உண்மை தான் வைகை. இயற்கையை ரசித்தவர்களால் தான் நல்ல முறையில் வர்ணிக்க முடியும் என்பது போல் தான் கிராமிய அனுபவங்களும்.......

    மிக்க நன்றி

    ReplyDelete
  21. //அப்பறம் தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை சரிசெய்யுங்கள்!//

    ம் ஆமாம்.
    நானும் என்னன்னவோ செய்து பார்த்துட்டேன். முடியல. மெயில் அனுப்பியிருக்கேன். விருது நிகழ்ச்சிக்காக ரொம்ப பிஸியா இருக்காக போல. வந்ததும் பஞ்சாயத்த வச்சுடலாம் :)

    ReplyDelete
  22. மலரும் நினைவுகள் சூப்பர்..

    சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க..

    ReplyDelete
  23. //,நான் வேண்டுமானால் ஒரு பாக்ஸ் சிப்ஸ் அனுப்பி வைக்கட்டுமா?//

    நல்ல மனசுங்க உங்களுக்கு!!! சீக்கிரமா அனுப்புங்க. ஆனா நீங்க செஞ்சதா இருக்கணும் :))

    மிக்க நன்றி ஆசியா

    ReplyDelete
  24. @ ஸாதிகா அக்கா

    பூங்கொத்து ரொம்ப அழகா இருக்குக்கா....
    பக்கத்து வீட்டு பில்ளைங்க படிக்குறத பாத்துட்டு என் மகனும் ரொம்ப அடம்பிடிக்கிறான். வேர வழியில்லாம ப்ளே ஸ்கூல்க்கு அனுப்பிட்டு இருக்கேன். நீங்க சொன்னது போலவே ரொம்ப ஆர்வமா போறான். அவனுக்காக மெனக்கெட தேவையே இல்லாமல் போய்விட்டது :)

    உங்கள் மலரும் நினைவுகள் அருமை....

    ReplyDelete
  25. //பாதிக்கதை என் கதை மாதிரியே இருக்கு அவ்வ்வ்வ்வ்...//

    நீங்க 2ம் வகுப்பு வரை தான் படிச்சீங்க தானே?!! அதான் பாதி கதை உங்க கதை மாதிரி இருக்கு

    ReplyDelete
  26. //என் அனுபவத்தை போட்டா உங்க பூல் புலையாவிட பயங்கர டெரரா இருக்கும் ஹி..ஹி...//

    பிஞ்சுலையே தீவரவாதியாகிட்டீங்கன்னு சொல்ல வரீங்களா ஜெய்? :))

    சும்மா போடுங்க. நாங்க படிச்சு பயப்படுற மாதிரி நடிக்கிறோம். ஆனா சந்தேகம் கேட்டு மட்டும் பயமுடுத்தாதீங்க :)))))

    //அது ரெண்டு வயசிலேயே போரேன்னு அடம் பிடிச்சது வேர கதை ))//
    உங்கள மாதிரி இல்லைன்னு சொல்லுங்க

    ReplyDelete
  27. //எனக்கும் என் சிறு வயது பள்ளிப்பருவம் எட்டிப்பார்க்கிறது...//

    அப்படியா? சும்மா அப்படியே ஒரு ரவுண்ட் போயிட்டு வாங்க... கலக்குங்க!!!

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  28. @ லெட்சுமிம்மா

    எல்லாம் உங்களை போன்றவர்களின் ஆசீர்வாதங்கள் தான் ம்மா!!!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  29. @ கோமு

    //உங்கபையனுக்கு சிலேட்டு, குச்சின்னா என்னன்னு தெரியுமா?//

    வீட்டு சுவர் தான் அவங்களுக்கு சிலேடு. பேனாவும், மார்கரும் தான் குச்சி...

    ஹவுஸ் ஓனர் பாத்துட்டு பெயிண்ட் அடிச்சு குடுத்துடு போங்கன்னு சொல்லிட்டார் :(

    வருகைக்கு மிக்க நன்றி கோமு

    ReplyDelete
  30. //
    இந்த கொடுமை எல்லா இடத்திலும் நடக்குது.....//

    ஆமாம் ஹாஜா..

    எதை தொட்டாலும் காசு கொடுக்க வேண்டிய நிலை இப்போ இருக்கு...

    இன்னும் போக போக எப்படி இருக்குமோன்னு தெரியல

    ReplyDelete
  31. //இளம் தூயவன் said...

    மலரும் நினைவுகள் அருமை.//

    மிக்க நன்றி இளம் தூயவன்

    ReplyDelete
  32. @ ரஜின்

    //அந்த நாட்களில் நான் கண்ட பல சம்பவங்கள்,உங்களுடைய சம்பவங்களுடன் ஒத்துப் போகிறது//
    பக்கத்து பக்கத்து ஊருனால நமக்கு அப்படி தெரியுதோ என்னவோ? :))

    நான் தான் ஸ்கூலுக்கு லீடர் (உண்மைய சொன்னா சிந்திக்கணும், சிரிக்க கூடாது). அதுனால என்னை கண்டா எல்லாரும் கொஞ்சம் பயப்படுவாங்க. சோ நீங்க சொல்றது போல குச்சி சாப்பிடுற மேட்டர்லாம் தெரியல. ஆனாலும் பசங்க சொன்னா உண்மையிலேயே பெண் பசங்க கேட்டுடுவாங்க (ஒரு வேளை வளர்ந்த சூழல் அப்படி கேட்க வைக்க சொல்லுதோ என்னவோ).

    நீங்க சொல்ற வேலைலாம் நிறையா முந்திட்டு பார்ப்போம் ரஜின். அப்ப தான் டீச்சர்க்கிட்ட பாராட்டு வாங்க முடியும். வீட்டுக்கு போகும் போது நல்லா நடந்துக்கிட்டவங்களூக்கு சிவப்பு பேனாவில் கையில் ஸ்டார் வரஞ்சுவிடுவாங்க. அப்படியே அம்மாகிட்ட காமிக்கணுங்குறதுக்காக பத்திரமா கையை கொண்டு போவோம்.

    அல்லக்கை வேலைலாம் நாங்க பெரிய பெரிய வேலை தான் பாப்போம் ரஜின். முக்கியமா டீச்சர் வீட்டுகு காய்கறி வாங்கி கொடுக்குறது, வீட்டை சுத்தப்படுத்துவது... இந்த மாதிரி. அம்மாவும் கேட்கமாட்டாங்க. நாங்களும் சொல்ல மாட்டோம். ஏன்னா அது தானே எங்களுக்கு விடுதலை மாதிரி :))

    மிக்க நன்றி ரஜின்

    ReplyDelete
  33. //பதிவுலகில் பாபு said...

    மலரும் நினைவுகள் சூப்பர்..

    சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க..
    //

    மிக்க நன்றி பாபு

    ReplyDelete
  34. பெட்ரோல் போட்டாத்தான் வண்டி ஓடுமிற மாதிரி, கிரைண்டர் ஓடினாத்தான் மூளை வேலை செய்யும் போல!! வீட்டுல சார் நிலைமை பாவம்தான்!!

    அனுபவங்கள் அருமை. நான் படிக்கும்போது, எங்க வகுப்பறையை நாங்கதான் கூட்டிப் பெருக்கணும். அதைப் போட்டி போட்டு செய்வோம் நாங்க. இப்ப அப்படி ஸ்கூல்ல சொன்னாங்கன்னா, பெற்றோர்கள் பெரும்படையாப் போய் மிரட்டிடுவாங்க. அப்படி சொல்ற அளவுக்கு பள்ளிக்குப் பிள்ளைகளோட உணர்வுபூர்வமான உறவும் இல்லை இப்போ!!

    //என் மகன் “எப்ப மே ஸ்கூல்க்கு ஆஜாவ் ஆனி”ன்னு அவன் பாசைல கேட்டதும்//

    பையர் இப்பவே பல பாஷைகள்ல வெளுக்கிறாரே!! :-))))

    ReplyDelete
  35. //வீட்டுல சார் நிலைமை பாவம்தான்!!//
    விதி வலியது.......:))

    இப்ப விருந்தாளி வேற வந்துருக்காங்க. ஆந்திராவிலிருந்து. இப்ப புதுசா தெலுகு வேற சேர்த்துட்டான் ஹூசைனம்மா... எனக்கு தான் இப்போதெல்லாம் அவன் என்ன பேசுறான்னு தெரியல :(
    ஸ்கூல் பெருக்குறது, அடிபைப்ல தண்ணி அடிச்சுட்டு வாசல் தெளிக்குறது, பெரிய கோலமா போடுறதுன்னு பயங்கர கஷ்ட்டமான வேலைலாம் நாங்க தான் செய்வோம் :))

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  36. ஆமி, ஊரில் ஆசிரியைகளை நினைச்சா எனக்கு இப்பவும் வயத்தை கலக்கும். என்ன அழிட்சாட்சியம் பண்ணுவார்கள் ஒரு சில ஆசிரியர்கள். இங்கு அமெரிக்காவில் பிள்ளைகளை ஆசிரியர்கள் தொடக்கூடாது. அப்படி எங்க ஊரிலும் ரூல்ஸ் வந்தா நல்லது.
    நல்ல கொசுவத்தி.

    ReplyDelete
  37. //என்ன அழிட்சாட்சியம் பண்ணுவார்கள் ஒரு சில ஆசிரியர்கள்.//

    அட ஆமாம் வானதி!!!
    ஹைஸ்கூல் டீச்சர்ஸ் கூட நல்லபடியா நடந்துக்குறாங்க. ஏன்னா அதிகமான பேர் பார்க்க கூடிய இடம். கேள்வி கேட்க ஆள் அதிகம். ஆனால் இந்த ப்ரைமரி ஸ்கூல் டீச்சர்ஸ் பண்ற அலம்பல் தாங்க முடியாது. ஏன்னா ஒரு 2 இல்லைன்னா 3 டீச்சர்ஸ் தான் இருப்பாங்க. 2 டீச்சர் மூத்த ஆசிரியர் என்பதால் 3 வது கேட்காது. 1,2ம் க்ளோஸ் பிரண்டா இருக்கும். இல்லைன்னா எதிரியா இருக்கும். எப்படி இருந்தாலும் போட்டி போட்டு வேலை வாங்குங்க :( எங்க ஸ்கூலில் நான் தான் முதலில் சைக்கிள் வாங்கியிருந்தேன். கொண்டுட்டு போனா அன்னைல இருந்து டீச்சர்ஸ்க்கு சைக்கிள் ட்ரைவரா மாறிட்டேன் :(

    இங்கேயும் மாணவர்களை அடிக்க கூடாதுன்னு சட்டம் வந்துடுச்சு பா. அதுனால எல்லாரும் அடக்கி வாசிக்கிறாங்க. அப்படியும் சில இடங்களில் நடந்துட்டு தான் இருக்கு!!!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வானதி

    ReplyDelete
  38. அடேங்கப்பா...உங்க காலத்திலேயே படிப்பிற்கு இவ்வளவு முக்கியத்துவமா ?
    உங்கள் பதிவை படிக்க..படிக்க நாமளும் அந்தக் காலக் கட்டத்தில் பிறந்திருக்கக் கூடாதுன்னு மனம் ஏங்குது,அன்றைய முதல்வர் காமராஜர்,கல்வியில் அதிகக் கவனம் செலுத்தியதுனாலே இன்று நீங்கள் ஒரு நல்ல ஆசிரியராக விளங்குகிறீர்கள் ஆமி....

    நான் படிக்கும் போது கலைஞர்தான் முதல்வர் அதுனாலே நான் படிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை.
    இத்தனை வருசத்திற்குப் பிறகும் உங்கள் மலரும் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டதில் நாங்கள் ரொம்ப சந்தோசம் அடைகிறோம்.

    வாழ்த்துக்கள் ஆமி.

    ReplyDelete
  39. வாய்க்கு தீனியில்லாத போது மூளையும் மனதும் கூட வேலைநிறுத்தம் பண்ணுது. சிப்ஸ் இல்லைன்னா இதுக்கு மேல எனக்கு யோசிக்க முடியாதே..!!!! இதுக்கு மேல புலம்புனா நான் எங்கேயும் அறிவாளியாகிடுவேனோன்னு எனக்கே பயம் வருது :(


    .....நல்லா சிரிச்சேன். நன்றிங்க.

    ReplyDelete
  40. ஆமி, சூப்பர்.ப்ளாக் எப்படிஎழுதனும், எதைப்பத்தி எழ்தலாம்னு ஒருகோர்ஸ்
    ஆரம்பிச்சுடுங்க. முத ஆளா நா சேந்துக்கரேன். என்கூட பெரிய பட்டாளமே வரும் ரெடியா?

    ReplyDelete
  41. ஆமீ.. சின்ன வயசு ஞாபகங்களை சொல்லி பீல் பண்ண வச்சிட்டீங்களே.. ஒண்ணாப்புல கொஞ்சம் டிமிக்கி கொடுத்தாலும் அதுக்கப்பறம் பள்ளிக்கூடம் போவுறதுக்கு அடம்பிடிக்கலைப்பா.

    இப்ப உள்ள பசங்கள் ரொம்ப விவரமானவங்க. அப்பவுள்ள காலம் இப்ப கிடைக்கவே கிடைக்காது. :((

    நல்லா கொசுவர்த்தி விட்டுருக்கீங்க ஆமீனா.

    ReplyDelete
  42. சகோ ஆமினா அவர்களே..

    //பக்கத்து பக்கத்து ஊருனால நமக்கு அப்படி தெரியுதோ என்னவோ? :))//

    நீங்க உ.பி..ஆனா நா

    நான் தான் ஸ்கூலுக்கு லீடர் (உண்மைய சொன்னா சிந்திக்கணும், சிரிக்க கூடாது).
    சகோ ஸ்கூலுக்கே லீடரா?பெரிய பெரிய பதவிலைலா இருந்துருக்கீங்களே..(கமல் சொல்ர மாதிரி,பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாதுன்னு சொல்லீர்க்களாம்.)ஆனா சிந்திக்கனும் சிரிக்க கூடாதுன்னா எப்டி...சிந்திச்சாலே சிரிப்பு தானே சகோ வருது...(just kidding)

    அல்லக்கை வேலைகள்'னு சொன்னது - just for fun only -

    ரஜின்

    ReplyDelete
  43. //இரவு பத்து மணியானாலும் எங்களை தேடாமல் சுதந்திரமாய் விளையாடவிட்ட என் அம்மாவிற்கும், என் பிள்ளை கேட்டை விட்டு வெளியே போக மாட்டான். உள்ளேயே விளையாடுவான் என பிள்ளை வளர்ப்பை பற்றி தற்பெருமை கூறும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்?//

    நாம் அனுபவித்த சுதந்திரமெல்லாம் நம் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லைதான்! இதை நாங்களும் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. ஆனால் காலமாற்றத்தில் இப்போதுள்ள சூழல்தான் இன்றைய குழந்தைகளுக்கு உகந்ததாகத் தெரிகிறது ஆமினா! என்ன செய்ய...

    உங்களின் முந்திய பதிவையும் இப்போதான் பார்த்தேன். ஷாம் சூப்பர், மாஷா அல்லாஹ்! கவிதையும் மடை திறந்த வெள்ளமாக கொட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். 7 வருஷங்களுக்கு முன் என் மகனுக்காக எழுதிய கவிதை(?) அப்படியே பத்திரமா பெட்டகத்தில் தூங்குது. போடலாமா வேண்டாமா என்ற யோசனைதான் :)

    ReplyDelete
  44. @அந்நியன்

    பயங்கரமா சிரிச்சது உங்க கமெண்ட் பாத்துட்டு தான் அந்நியன்.....
    பாட்டியின் கதை எப்பவும் கேட்க கேட்க அருமை தான் இல்லையா :)))

    அதுசரி,
    யாரு முதல்வரா இருந்தா எப்படி படிப்பாங்கன்னு உங்க பொது அறிவு கேள்வி எல்லாருக்கும் பயன்படும் :)))

    நன்றி சகோ

    ReplyDelete
  45. @ சித்ரா

    //
    .....நல்லா சிரிச்சேன். நன்றிங்க.//

    மிக்க நன்றி சித்ரா

    ReplyDelete
  46. "கடந்தகால நிகழ்வுகளை யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை"

    உண்மை...

    ReplyDelete
  47. @ சித்ரா.எம்
    //என்கூட பெரிய பட்டாளமே வரும் ரெடியா?//
    போர்க்கொடியும் போர்க்கருவிகளும் தூக்கிட்டா? :)))

    நீங்க ப்ளாக் ஆரம்பிங்க சித்ரா. தன்னால வந்துடும்

    ReplyDelete
  48. @ஸ்டார்ஜன் சேக் அண்ணா

    //சின்ன வயசு ஞாபகங்களை சொல்லி பீல் பண்ண வச்சிட்டீங்களே.. //
    சந்தோஷமான நாட்கள் தானே அண்ணா..... சந்தோஷமா பீல் பண்ணுங்க :)
    அதுக்கப்பறம் அடம்பிடிக்கலையா? அப்ப நீங்களாம் பெரிய அறிவாளியாகியிக்கீங்கன்னு சொல்லுங்க. அதான் நான் இப்படி இருக்கேனோ ? :))

    ReplyDelete
  49. @ ரஜின்

    //
    //பக்கத்து பக்கத்து ஊருனால நமக்கு அப்படி தெரியுதோ என்னவோ? :))//

    நீங்க உ.பி..ஆனா நா //
    :))

    //பெரிய பெரிய பதவிலைலா இருந்துருக்கீங்களே..//
    அப்பவே பெரிய பதிவின்னா இன்னும் 3 வருஷத்துல பாருங்க. ஒரு வேளை முதல்வரானாலும் ஆகலாம் ஹி...ஹி....ஹி.....

    அல்லக்கை மேட்டர நான் எதுவும் சீரியஸா சொல்லலையே? நானும் ஜோக் தான் பண்ணேன்.

    மிக்க நன்றி சகோ ரஜின்

    ReplyDelete
  50. //ஆனால் காலமாற்றத்தில் இப்போதுள்ள சூழல்தான் இன்றைய குழந்தைகளுக்கு உகந்ததாகத் தெரிகிறது ஆமினா! என்ன செய்ய...//
    அத நெனச்சு தான் அப்பப்ப மனச தேத்திக்கிறேன் அஸ்மா. அப்பலாம் அவ்வளவா ட்ராபிக் இருக்காது,மக்கள் நெருக்கம் இருக்காது, ஊருக்குள்ள எந்த பக்கம் போனாலும் சொந்தக்காரங்க அதுனால ஆக்சிடண்ட் ஆகிடுமோ என்ற பயமோ, கடத்தல் சம்பவங்கள் நடந்துருமோன்னு பயம் இல்லாம இருந்துச்சு. ஆனா இப்ப கைல பொத்தி பொத்தி வளத்தாலும் கொத்திட்டு போய் பணம் கேக்குற கொடுமைலாம் நடக்குதே :(

    அஸ்மா அந்த கவிதையும் ஷாம் பொறந்த 1 மாசத்துல எழுதுனது. மாத்தி கொஞ்சம் சேர்த்துருக்கேன். நீங்களும் கண்டிப்பா போடுங்க தயவு செய்து. எத்தனை வருஷங்களானும் குழந்தை குழந்தை தானே!! அறுசுவையில் முன்பு உங்கள் கவிதை படித்தேன். கண்டிப்பாக ரசிச்சு தான் எழுதியிருப்பீங்க!!!

    விரைவில் வெளியிட்டு சந்தோஷப்படுத்த வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  51. @பிரஷா

    //
    "கடந்தகால நிகழ்வுகளை யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை"

    உண்மை... //

    மிக்க நன்றி ப்ரஷா!!!!!!!!!!!

    ReplyDelete
  52. // அது ஒரு காலம் அழகிய காலம்...//

    திரும்பக் கிடைக்காத அந்த நினைவுகளை மிக அருமையாய் பகிர்ந்தமை ரொம்ப அழகு!

    -----------------
    ஜெய்லானி said

    //(( என் பிள்ளை ரெண்டு வயசிலேயே போரேன்னு அடம் பிடிச்சது வேர கதை )) //

    அப்பவே பெரிய ஞாநியோட பிள்ளைன்னு தெரிஞ்சு போச்சு தல!! :))
    -----------------

    ஜெய்லானி said...

    //என் அனுபவத்தை போட்டா உங்க பூல் புலையாவிட பயங்கர டெரரா இருக்கும் ஹி..ஹி... //

    நீங்க அவ்வளவு பெரிய டெரரா பாஸ்!! (பேசும்போது நல்லாதான்யா பேசுறாங்க) :))

    -----------------------

    ReplyDelete
  53. @ அப்துல் காதர்

    //திரும்பக் கிடைக்காத அந்த நினைவுகளை மிக அருமையாய் பகிர்ந்தமை ரொம்ப அழகு!//

    மிக்க நன்றி சகோ!!!!

    //நீங்க அவ்வளவு பெரிய டெரரா பாஸ்!! //
    உங்களுக்கு தெரியாதா? உண்மையில் அவர் டெரர் தான். டெரரா கும்மி அடிப்பார்.........

    ReplyDelete
  54. அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
    http://tamilblogs.corank.com/

    ReplyDelete
  55. என்னுடைய பதிவை இன்ட்லியில் இணைத்தமைக்கு ரொம்ப நன்றிங்கோ....
    உங்க புண்ணியத்துல 33 ஓட்டு.

    ReplyDelete
  56. @வார்த்தை

    //உங்க புண்ணியத்துல 33 ஓட்டு.//

    ஹா...ஹா...ஹா...
    ஜோக் எதுவும் பன்ணலையே!!!

    நல்ல பதிவுகளுக்கு எப்போதும் ஆதரவு அதிகம் கிடைக்கும் சகோ

    ReplyDelete
  57. //5 வயசுல தான் என்னை நம்பி ஒரு பள்ளிகூடத்தையே ஒப்படைக்க முடிவுபண்ணி//

    எப்டி இப்டி. அப்பரேந்தே இப்டிதானா இல்ல இப்டிதானா அப்பருந்தே.....

    ReplyDelete
  58. //மொத நாள் நைட்டே அவங்க பேசுனத கேட்டு அப்பவே ப்ளான் பண்ணி தான் எல்லாரும் எந்திரிக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிட்டேன் என்பது வேறு கதை. //

    அஞ்சு வயசுல இவ்ளோ கிரிமினல்தனமா...!!!!!!

    ReplyDelete
  59. //வேகமா வீட்டுக்கு போனேன். கப் நிறையா காப்பியும் சிப்ஸும் எடுத்துட்டு டீவியையும் போட்டுட்டு சோபாவில் உக்காந்தேன். இந்த பில்டப்லாம் எதுக்காகன்னு நெனைக்கிறீங்க? அப்படிலாம் செஞ்சா தான் எனக்கு யோசிக்க தெரியும்.//

    அடச்சே.... (தலையில் அடித்துகொள்கிறேன்).

    ReplyDelete
  60. //ஆனால் இப்போதெல்லாம் அன்று கூட எல்லா ஸ்கூல் கேட்டும் திறந்துள்ளது. //

    //அப்படிலாம் குழந்தையை செய்ய கூடாது, இப்படி செய்ய விட கூடாது என சொல்ல நல்லா தான் இருந்தது. ஆனா அந்த குறிப்பிட்ட எல்லைக்கு வந்த பிறகு .....//

    உண்மையிலேயே வேதனையான விஷயம் இது.

    ReplyDelete
  61. //இப்ப வானத்துல இருந்து தேவதை என்ன வரம் வேண்டும்னு கேட்டா குழந்தையா மட்டும் ஆக மாட்டேன்னு சொல்லிடலாமா அப்படின்னு நெனச்சுட்டு இருக்கும் போது கை பக்கத்துல இருந்த பவுலில் எதையோ இழந்ததை மாதிரி தேடுச்சு. சிப்ஸ்லாம் காலியாயிடுச்சு :(//


    அடச்சே.... ( மறுபடியும், தலையில் அடித்துகொள்கிறேன்). அப்டியே போயிருங்க.....கொலவெறிய தூண்டாதீங்க......
    நல்லா சீரியஸா போயிட்டு இருக்குறப்ப .....

    ReplyDelete
  62. ஆனா..... நல்லா ப்ரெஸன்ட் பண்ணியிருக்கீங்க...

    ReplyDelete
  63. @ வார்த்தை
    //எப்டி இப்டி. அப்பரேந்தே இப்டிதானா இல்ல இப்டிதானா அப்பருந்தே.....//

    நமக்கு எப்பவும் ஒரு சொல் ஒரு வாக்கு பாஸ்....மாறவே மாட்டோம்ல.
    அப்ப இருந்தே இப்படி தான். இப்ப எப்படியோ அப்பவும் இதே மாதிரி தான் :))

    ReplyDelete
  64. @வார்த்தை

    //அஞ்சு வயசுல இவ்ளோ கிரிமினல்தனமா...!!!!!!//

    ஹா...ஹா...ஹா...
    பேர காப்பாத்த வேண்டாவோ???? நாளைக்கு நம்மள வரலாறு தப்பா பேசிட கூடாதில்லையா?

    ReplyDelete
  65. //அடச்சே.... (தலையில் அடித்துகொள்கிறேன்).//

    நான் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா யோசிச்சா உங்களுக்கு ஏங்க பொறாமை? எங்கேயும் உங்கள விட அறிவாளியா வந்து இந்தியாவை காப்பாத்த போறேனோன்னு பயந்துடாதீங்க. தப்பி தவறி கூட அந்த கொடுமைலாம் பண்ணிட மாட்டேன் :))

    ReplyDelete
  66. @ வார்த்தை
    //உண்மையிலேயே வேதனையான விஷயம் இது.//

    இப்பவே இப்படினா
    இன்னும் ஒரு 10 வருஷம் போனா என்ன நிலமையோ தெரியல :(

    ReplyDelete
  67. @வார்த்தை

    //அடச்சே.... ( மறுபடியும், தலையில் அடித்துகொள்கிறேன்).//

    பாத்துங்க. எவ்வளவு தான் அந்த களிமண்ணையும் தட்டுவீங்க? அப்பறம் சீத்தலை சாத்தனாருக்கு அடுத்த வாரிசா உங்கள பிரகடனப்படுத்துடுவாங்க :))

    ReplyDelete
  68. //ஆனா..... நல்லா ப்ரெஸன்ட் பண்ணியிருக்கீங்க...//

    இப்பவாவது வழிக்கு வந்தீங்களா?

    ஆனாலும் கொலவெறியோட இருக்குறதுனால கொல்கத்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்டோம்ல :))

    ReplyDelete
  69. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    ReplyDelete
  70. //இப்ப உங்கள எல்லாரையும் நான் கடந்த காலத்துக்கு கூடிட்டு போறேன். அட பஸ் டிக்கெட்லாம் கேட்க மாட்டேன். கவலபடாம பின்னாடியே வாங்கோ..........//

    இப்படி ஆரம்பித்தவுடன் உங்களையும் பத்தோடு பதினொன்றாக எழுதும் ஒரு பதிவர் என்றே நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்

    சிலர் கசப்பான மருந்தை அப்படியே தருவார்கள்.சிலர் சிறிய இனிப்புடன் தருவார்கள்.இதில் நீங்கள் இரண்டாமவர்.



    //என் சிலேட்டில் டிபனுக்கு போக மிச்சம் இருந்த குச்சில அப்படியே வரஞ்சேன்.

    அடேங்கப்பா மொத்தம் 247 எழுத்தாம். அதெல்லாம் கத்துக்குறதுக்குள்ள நான் சீத்தலை சாத்தனராகிட்டேன் ://

    இவைகளை வாசிக்கும் போது உதட்டில் ஒரு சிறு புன்னகை தோன்றியது.

    ஆனால் அடுத்த வரிகள் பல என் உள்ளத்தை தொட்டன. மிக அழகிய பதிவு. விஞ்ஞான வளர்ச்சி நம் வாழ்க்கையை சுருக்கி விட்டது, ஏதோ ஒரு சிறிய வருத்தம் இந்த நிலையை யோசித்து. ஆயிரம் விளையாட்டுகள் வந்துவிட்டன இன்று என் கணிபோறிக்குள் ஆனாலும் அவை எல்லாம் நான் சிறு வயதில் விளையாடிய நோண்டிக்கும், பாண்டிக்கும், பல்லாங்குழிக்கும், பெயர் மறந்த இன்னும் பலவுக்கும் ஈடாகுமா என்று தெரியவில்லை.இதை புலம்பலாக நினைக்க இடம் கொடுக்கவில்லை இந்த மனம். எனக்கு மிகவும் பிடித்த பதிவாக இது என்றும் இருக்கும். இரு இனிய பதிவை பகிந்தமைக்கு மிக்க நன்றி.
    இதில் தொடர்பதிவாக மீண்டும் எழுதினால் என்னையும்
    ஒரு பதிவர் ஆக மதித்து அழைக்கவும்.
    ஏனோ நிறைய எழுத தோன்றுகிறது இதனை படித்தவுடன்.

    ReplyDelete
  71. @ஆமினா said... 68
    //@வார்த்தை

    //அடச்சே.... ( மறுபடியும், தலையில் அடித்துகொள்கிறேன்).//

    பாத்துங்க. எவ்வளவு தான் அந்த களிமண்ணையும் தட்டுவீங்க? அப்பறம் சீத்தலை சாத்தனாருக்கு அடுத்த வாரிசா உங்கள பிரகடனப்படுத்துடுவாங்க :))//

    TOTAL DAMAGE

    ReplyDelete
  72. @மதி சுதா

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  73. //இப்படி ஆரம்பித்தவுடன் உங்களையும் பத்தோடு பதினொன்றாக எழுதும் ஒரு பதிவர் என்றே நினைத்துவிட்டேன். மன்னிக்கவும்/
    :)

    இந்த விளையாட்டுக்கள் எல்லாமே இருந்ததா என எங்க வீட்டு பிள்ளைங்க கேக்குதுங்க :) பல விளையாட்டுக்கள் சொல்லி கொடுத்த பிறகு “இவ்வளவு இட்ண்ட்ரஸ்டிங்கான விளையாட்டுலாம் விளையாண்டுருக்கீங்களா?” அப்படின்னு ஏக்கமா கேக்கும் போது மனதும் வலிக்கத்தான் செய்கிறது. எத்தனையோ வளர்ச்சி ஏற்பட்டாலும் ஏனோ மனது பழமையையை தான் தேடுது...

    உங்களுக்கு வருத்தம் இல்லையென்றால் உண்மையிலேயே இப்பதிவு (பெருமைக்காக சொல்லல. சொல்ல வந்த கருத்து மட்டும் குரிப்பிட்டேன்:) உங்கள் மனதை தொட்டிருந்தால் தயவு செய்து தொடர்பதிவாக எழுதுங்கள். கண்டிப்பாக சின்ன வயதில் அடைந்த அனுபவங்கள் சுகமானதாகவே இருக்கும். எல்லோரும் எழுத முன்வருவாங்க. உங்கள் ப்லாக்கில் ஆவலுடன் எதிர்பார்ப்பேன் :)

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  74. @ வார்த்தை

    //TOTAL DAMAGE//
    ஹி...ஹீ....ஹீ.......

    இதுக்கு தான் அறிக்கை விடும் போது பாத்து விடணும். நாங்களாம் தனியா அறிக்கை சரிபார்ப்பு செயற்குழுவே வச்சுருக்கோம்ல ;))

    ReplyDelete
  75. அற்புதம் ஆமினா..என்ன ஒரு அலசல்..நாம படிச்ச சூழ்நிலைக்கும்,இப்ப வுள்ள நிலைமைக்கும் ரொம்பவே தூரம் ஆமி...அப்போ எல்லாம் நாம வகுப்பில் படிக்கும்போது முதல் மார்க் கே அனேகமா 80 மார்க் தான் இருக்கும்...இப்போ 100 மார்க்கே 10 பசங்க ஒரு வகுப்பில் எடுக்குறாங்க...80 மார்க் எடுத்த மாணவன் இப்போ கடைசி தரம் லிஸ்ட் இல் சேர்க்கும் நிலைமை...போட்டி உலகம் ஆய்டுச்சு..எதையுமே நிதானமா கூட யோசிக்க முடில...ம்ம்...ரொம்ப புடிச்சிருந்தது நகைச்சுவையோட நீங்க அழகா உங்க இளமை பருவத்தில் தொடங்கி..அப்படியே...சொல்ல வந்த கான்செப்ட் ஐ தெளிவா சொல்லி முடிச்சது...வாழ்த்துக்கள் ஆமி..நல்லா எழுதுறிங்க...(யாரு ஆல் இன் ஆல் அழகு ராணி ஆச்சே..:)) )

    ReplyDelete
  76. நல்லாருக்குங்க சகோதரி....

    ReplyDelete
  77. நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  78. @ரஹீம் கஸாலி

    நல்லாருக்குங்க சகோதரி....//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  79. //myth-buster said...

    நல்ல பதிவு, வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றிங்க சகோ

    ReplyDelete
  80. //அனேகமா 80 மார்க் தான் இருக்கும்...இப்போ 100 மார்க்கே 10 பசங்க ஒரு வகுப்பில் எடுக்குறாங்க//

    முன்னலாம் சொந்தக்காரங்க 100 பேரு இருந்தா அதுல 1 ஆள் பிள்ளை தான் 1 ரேங்க் எடுக்கும். இப்ப கேட்டா அந்த 100 பேரு குழந்தையும் 1,2,3 க்குள்ள எடுக்குதுக....
    பசங்க அறிவு வளந்துருக்கு. அதோட பெற்றோர்களின் கவனம் முன்புவிட இப்போது அதிகமாவே இருக்குன்னு அடிச்சு சொல்லலாம் இல்லையா ஆனந்தி!!!

    //(யாரு ஆல் இன் ஆல் அழகு ராணி ஆச்சே..:)) )//
    ஸ்ஸப்ப்ப்பா.......
    முடியல
    அழுதுடுவேன்....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  81. //இரவு பத்து மணியானாலும் எங்களை தேடாமல் சுதந்திரமாய் விளையாடவிட்ட என் அம்மா // நானும் கொடுத்து வைத்தவன்..ஆமினா. என் தாயும் அப்படித்தான்.

    ReplyDelete
  82. இங்கே பார்க்க
    http://balepandiya.blogspot.com/2010/12/blog-post_19.html

    ReplyDelete
  83. @சிவகுமார்
    //நானும் கொடுத்து வைத்தவன்..ஆமினா. என் தாயும் அப்படித்தான்.//

    நம்மலாம் குடுத்து வச்சவங்க சகோ... நல்ல அப்பா அம்மா கிடைச்சுருக்கு...

    நம்ம புள்ளைங்க தான் பாவம் ;)

    ReplyDelete
  84. ஏங்க ஆமினா இப்படி பண்ணிடீன்களே இது நா பச்ச புல்லையா இருந்தப்ப நடந்த கதை . ஆனா சூப்பரா எடிட் பண்ணிடீன்க போங்க .வாழ்த்துக்கள் .

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)