தகவல் அறியும் உரிமை சட்டம்---கொஞ்ச நாளாவே இந்த வார்த்தையை கேட்டுட்டே இருக்கேன். அதாவது எப்பவாவது பொழுது போகலைன்னா நியூஸ் பாக்கும் போதோ, அதுவுமில்லைன்னா ஷாம் கிழிச்ச பேப்பர்ஸை குப்பையில் போடும்போதோ (டீவிக்களும், செய்தி தாள்களும் கூலிக்கு மாரடிக்க ஆரம்பித்ததில் இருந்தே இப்படி தான்) படிச்சுருப்பேன். அதுல முக்கியமான ஒன்னு குறிப்பிட்டு சொல்லணும்னா சாப்பாடு வாங்கும் போது பொட்டலத்தில் வந்த பேப்பரில் வந்தசெய்தி.  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சோனியா காந்தியின் கரண்ட் பில், டெலிபோன் பில் எவ்வளவுன்னு கேட்டுருப்பாங்க போல... அத படிச்சதும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான விஷயமா பட்டுச்சு. அதுல எவ்வளவு பில் வந்துச்சு? எவ்வளவு அரசு கட்டுச்சு? எவ்வளவு சொந்தமா அவங்க கட்டுனாங்க?ன்னு எல்லா தகவலும் இருந்தது. நீங்களும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அந்த தகவல்களாம் உண்மையா என்னன்னுலாம் எனக்கு சத்தியமா தெரியாது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்

சமீப நாட்களா அதாவது கிட்டதட்ட 2 மாசமா தமிழ்நாட்டுல ரொம்ப பாபுலரா டீவியிலும் செய்திகளிலும் ஓடிட்டு இருக்குற செய்திகளை பாக்க போனேன். (வேற எந்த செய்தி? பிரபு தேவாவுக்கும் நயந்தாராவுக்கும் கல்யாணம் ஆச்சா? வனிதாக்கும் விஜயகுமாருக்கும் நடக்குற பஞ்ஜாயாத்து எந்த லெவல்ல இருக்கு?? போன்ற நாட்டுக்கு அதி முக்கியமான விஷயங்களை பாக்கதேன் ;)) அதுல எனக்கு பிடிச்ச அதே தகவல் அறியும் உரிமை சட்டம்ங்குற வார்த்தை. இன்னைக்கு எவனுக்கு ஆப்புன்னு ஆசையா பாக்க ஓடினா அந்த சட்டத்துக்கே ஆப்பு....ம்ம்ம்.... சாதாரணமா கலெக்டரு, நீதிபதின்னு தகவல் கேக்குறச்ச ஒன்னுமே ஆகலையாம். மத்தியில் உள்ளவங்கள கேள்வி கேட்டதும் தான் ஐய்யோ குத்துதே அம்மா வலிக்குதேன்னு கத்துவாங்களாம்.

2005ல தான் இந்த சட்டம் வந்துருக்கு. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் பலர் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல விவரங்களை பெற முடிந்தது. அது மட்டுமில்லாம நிறைய ஊழல்கள் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. ஆனா எனக்கு போன வருஷம் தான் இது மாதிரி ஒன்னு இருக்குன்னே தெரியும். மொத்தம் 68 நாடுகளில் இது போன்ற அமைப்பு இருக்கு. மக்களாகிய நாம் தான் அரசுக்கு வரி செலுத்துறோம். அதை வச்சு தான் அவங்களுக்கு சம்பளம். அதை வச்சு தான் அவங்க நாட்டை நிர்வாகம் பண்ணனும். சோ இங்கே நாம்ம தான் மொதலாளி. அப்ப நாம் நம்ம கொடுக்குற பணம் எந்த வகைல செலவாகுதுன்னு வரவு செலவு பத்தி கேட்க நமக்கு உரிமை இருக்கு தானே!!?? அதை நிரூபிக்கும் வகையில் கொண்டு வந்தது தான் இது. மக்கள் எந்த துறையை பத்தி தகவல் பெற விரும்புறாங்களோ அந்த அதிகாரிக்கு மனு ஒன்னு எழுதி போடணும். சம்மந்தபட்டவர் மனு கொடுத்த 30 நாளுக்குள்ள மனுதாரர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்கணூம். இல்லைன்னா அதிகாரிக்கு வேலை கோவிந்தா !!! அதுலையும் கொடுத்த தகவல் திருப்தியா இல்லாத பட்சத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

இப்ப நான் எங்க தெருல இருக்குற ரோடு போட எவ்வளவு பணம் செலவாச்சுன்னு நகராட்சில கேக்குறேன். இல்லைன்னா வார்ட் மெம்பருக்கு மனு போடுறேன்னு வச்சுக்கோங்க. கேக்குற நான் பெண்ணாக இருப்பதாலோ அல்லது வார்ட் மெம்பர் கட்சியில் இருப்பதால் அவரால் எனக்கு ஆபத்து என நினைத்தாலோ விசாரணைக்கு செல்லாமல் இருக்கலாம். ஆனாலும் மனுக்கான விவரங்கள் தரப்படும் மற்றும் விசாரணை நடத்தப்படும். இது ஒன்னு பத்தாதா எனக்கு???? :)

இந்தியாவில தமிழ்நாட்டுல தான் அதிகமா இதை பயன்படுத்துறாங்கன்னு 
சர்வே வேற சொல்லுதாம். ஒவ்வொரு மாநிலத்துலையும் 250 மனுக்குள் வந்தா தமிழ்நாட்டுகாரங்ககிட்ட இருந்து 40,000 மனு வருஷத்துக்கு வருதுன்னு சொல்லிகிறாங்க(நமக்கு தான் நாட்டு மேல அவ்வளவு அக்கறையோ??). நமக்கு தெரியாது. இப்படி அவுக கிட்ட கேள்வி கேட்டு நாங்க என்னத்த தெரிஞ்சுக்க போறோம் இல்ல அவங்க தான் என்னத்த கிழிச்சுடுவாங்கனு தானே கேக்குறீங்க??. ஒரு ஆளை கேள்வி கேட்டாலே போதுமே. உடனே அந்த துறையை சார்ந்த துரைகள் சரியா வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. இல்லைன்னா நமக்கிட்ட கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு ஒழுங்கான பிள்ளைகளா நடக்கவாவது முயற்சி பண்ணுவாங்கல.

 இப்ப என்னன்னா இதுல சில திருத்தங்களை கொண்டு வரப்போறாங்களாம். அதுக்கு நம்மள வேற கூட்டுக்கு சேக்குறாங்க. நாமளும் நமக்கு தெரிஞ்சதை 27ந்தேதிக்குள் usrti-​dopt​@nic.in இங்கே சொல்லிடணூம். நம்ம சொல்றதையா அவங்க கேக்க போறாங்கண்ணு கேக்குறீங்களா? அட நாளைக்கு சொல்ல வேண்டாமா மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு

கொண்டுட்டு வர போறதா சொல்ற சில முக்கிய திருத்தங்கள்

//தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும்//
நமக்கு எது பத்தின விவரங்கள் தேவையோ அதை பத்தி கேக்கணும்னா பல கேள்வி கேட்டே ஆகணும். இப்படி ஒரு திருத்தம் வந்தா உண்மையான பலனே கிடைக்காம போய்டுமே. அப்ப என்னத்துக்கு இந்த சட்டம்??? நம்ம தாத்தா ஐயா :) சொத்து பத்தி இலவசமா தெரியனும்னா உன் சொத்து கணக்க சொல்லு அப்படின்னு ஒன்னை மட்டும் கேட்டா எனக்கு எல்லாமே கிடைச்சுடுமா? எந்த வருஷத்துல எந்த வேலைல என்ன சம்பளம் கிடைச்சுச்சு? எந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு? எங்கெங்கே சொத்து இருக்குன்னு சொன்னா தானே அதை பத்தி முழுவிவரம் எனக்கு கிடைக்கும்....

//தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம். //
மனுவில் அதிகமா வார்த்தை இருந்தா ஈசியா குப்பை தொட்டிக்கு அனுப்பவும், குறையா அதாவது 250 வார்த்தைக்குள்ள அடிச்சு புடிச்சு நாம்ம சொல்ல வந்த மேட்டரை சுருக்கி சொன்னா புரியல/ தெளிவா இல்லைன்னு தட்டி கழிக்கவும் தான் இந்த திருத்தம். பின்ன என்ன? என்னை பத்தி சொல்றதுக்கும், என்ன சம்மந்தமா எனக்கு தகவல் வேண்டும்னு பொருள் மட்டும் போடுறதுக்கே 250 வார்த்தை எனக்கு பத்தாது. இதுல இப்படி ஒன்னு கொண்டு வந்தா எங்குட்டு போயி முட்டுவேன்??:(

// தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும். //

ஹா...ஹா...ஹா....
மக்களோட வீக்னஸ் பாயிண்ட் பாத்து அடிக்கிறாகளாம். அதாவது இப்படிலாம் சொல்லி பயமுடுத்துனா தான் நம்மள கேள்வி கேக்க பயப்படுவான் பயபுள்ளைன்னு சொல்லாம சொல்றாகளாம்.

//மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும். //
என் தொகுதி எம்,பி மோசமானவன். அவன பத்தி தெரிஞ்சுக்கணும்னு சொன்னா நான் யாருகிட்ட போயி இது உண்மைன்னு கையெழுத்து போடுன்னு சொல்லுவேன்????

//மனுதாரர் விசாரணைக்கு வரலைன்னா மனு நிராகரிக்கப்படும். மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டால் விவரங்கள் தர தேவையில்லை, விசாரணையும் நடக்காது//
நான் முன்னமே சொன்ன மாதிரி மிரட்டலுக்கு பயந்துநான் மனு மட்டும் கொடுத்துட்டு வீட்டுல ஒளிஞ்சிருந்தாலும் நடக்க வேண்டியது எல்லாமே அதுவாட்டுக்கு நடக்கும். இப்ப இப்படி பண்ணா எப்படி மக்களா முன்வந்து மனு கொடுப்பாங்க?. அப்ப நான் மனு கொடுத்துட்டு வந்தா என்னை யாராவது மிரட்டுனா அதோடு சரி. சம்மந்தப்பட்டவங்க பத்தின எந்த விவரங்களும் வெளியே வராது. அப்ப இனி ஆளாளுக்கு பி,ஏ க்கு பதிலா அடியாட்களை வச்சு எவன் மனு கொடுத்தானோ அவனை போயி மிரட்டுன்னா போதும். அப்படி தானே????

இப்படி தான் சில திருத்தங்கள் இருக்கும்னு சொல்றதே அந்த திட்டத்தோட சாராம்ஸத்தை சாகடிக்கிற மாதிரி இருக்கு. இதுல ஆலோசனை வேற நடத்தி செயல்படுத்த போறாங்களாம். அடப்பாவிகளா இப்ப தான் ஆசைக்கு ஒரு கேள்வியாவது கேக்கலாம்னு மனு எழுதுனேன். அதுக்குள்ளையும் இப்படி பயமுறுத்தி என்னை பொலம்ப வச்சுட்டாங்களே??? நான் என்ன சொல்வேன்?? என்னத்த சொல்வேன்??? எங்கே போயி சொல்வேன்?? யாருகிட்ட போயி சொல்வேன்?????? :( நீங்களாவது எதையாவது சொல்லிட்டு போங்க.....!!!!!

74 comments:

 1. //அடப்பாவிகளா இப்ப தான் ஆசைக்கு ஒரு கேள்வியாவது கேக்கலாம்னு மனு எழுதுனேன். அதுக்குள்ளையும் இப்படி பயமுடுத்தி என்னை பொழம்ப வச்சுட்டாங்களே??? நான் என்ன சொல்வேன்?? என்னத்த சொல்வேன்??? எங்கே போயி சொல்வேன்?? யாருகிட்ட போயி சொல்வேன்?????? :( நீங்களாவது எதையாவது சொல்லிட்டு போங்க.....!!!!!//

  அதான் எங்ககிட்ட சொல்லிட்டீங்களே...

  ஹிஹிஹி...

  ReplyDelete
 2. “அதுக்குள்ளையும் இப்படி பயமுடுத்தி என்னை பொழம்ப வச்சுட்டாங்களே???”

  இந்த வரிகளில் சின்ன எழுத்துப் பிழை திருத்தம் “பயமுறுத்தி” என்றும் “புலம்ப” அல்லது “பொலம்ப” என்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்...

  ReplyDelete
 3. //தகவல் தாராயோ????//

  சிறப்பாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க.....

  ReplyDelete
 4. //அடப்பாவிகளா இப்ப தான் ஆசைக்கு ஒரு கேள்வியாவது கேக்கலாம்னு மனு எழுதுனேன். அதுக்குள்ளையும் இப்படி பயமுடுத்தி என்னை பொழம்ப வச்சுட்டாங்களே??? நான் என்ன சொல்வேன்?? என்னத்த சொல்வேன்??? எங்கே போயி சொல்வேன்?? யாருகிட்ட போயி சொல்வேன்?????? :(//

  ம்ம்...இப்பிடிப் பொலம்பித்தான் தீர்த்துக்கணும், நம்ம சோகத்தை...

  ReplyDelete
 5. சிறப்பாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க..

  ReplyDelete
 6. சட்டங்கள் பற்றி என்மனதில் ஒரு திட்டங்களுமே இல்லை...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன்

  பின்னணியும்.

  ReplyDelete
 7. ரொம்ப உருப்படியான(?) திருத்தங்கள்தான்!

  ஆமினா.. உங்க கிட்ட ஏற்கனவே சொல்லணும்னு நினைத்து மறந்து மறந்து போகுது. அதனால இங்கே சொல்லிடறேன். உங்க ஊர்ல, உங்க பேர்ல ஒரு அக்காவும் என் பேர்ல ஒரு தங்கையும் எனக்கு ரொம்ப பழக்கம்:-) அவங்களை உங்களுக்கும் தெரிஞ்சிருக்குமோ..?

  ReplyDelete
 8. தகவல் அறியும் சட்டம் பற்றி கூடுதல் தகவல் தந்த எங்கள் சகோதரி ஆமியை எந்தவித தகவலும் முன்னறிவிப்பும் இன்றி வாழ்த்துகிறோம்!!!

  ReplyDelete
 9. இந்த சட்டம் கொண்டு வரும் போது இவ்வளவு விழிப்புணர்வையும் இத்தனை கேள்விகளையும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை, ஆனால் இப்ப குத்துது கொடையுது கதைதான்!

  ReplyDelete
 10. //ஒரு ஆளை கேள்வி கேட்டாலே போதுமே. உடனே அந்த துறையை சார்ந்த துரைகள் சரியா வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. இல்லைன்னா நமக்கிட்ட கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு ஒழுங்கான பிள்ளைகளா நடக்கவாவது முயற்சி பண்ணுவாங்கல.//
  மிகச் சரி சகோ!
  இந்தச் சட்டத்தாலதான் ஒரு சில தில்லுமுல்லாவது மக்கள் மத்தியில தெரிய வருது. அதுலயும் திருத்தம்னு சொல்லிட்டு ஆப்படிக்க ஆரம்பிக்கிராங்களே :(

  ReplyDelete
 11. சட்டம்..இதுக்கும் அந்நியனுக்கும் அண்ணன் தம்பி உறவு போல வாழ்த்துக்கள்.Amina

  ஆமி..இப்பலாம் நீங்கள் கருப்பு கவுனை மாட்டிகிட்டு மெட்ராஸ் ஹை கோர்ட்டிற்கு ஹாயா போகுவதைப் பார்த்தால் அந்நியனை உள்ளே பிடிச்சு போட்டுரிவியே போல தெரியுது.எதுக்கும் உங்களிடம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.

  ReplyDelete
 12. @ மாணவன்

  //அதான் எங்ககிட்ட சொல்லிட்டீங்களே...

  ஹிஹிஹி... //

  நீங்களாவது கேட்டீங்களே.. ;)

  ReplyDelete
 13. @மாணவன்
  //இந்த வரிகளில் சின்ன எழுத்துப் பிழை திருத்தம் “பயமுறுத்தி” என்றும் “புலம்ப” அல்லது “பொலம்ப” என்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்... //
  நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு வாதாடாம மெதுவா சொன்னதுக்கு மிக்க நன்றி சகோ... மாத்திட்டேன் ;)

  ReplyDelete
 14. @மாணவன்
  ////தகவல் தாராயோ????//

  சிறப்பாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க..... //
  ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 15. @சுந்தரா
  //ம்ம்...இப்பிடிப் பொலம்பித்தான் தீர்த்துக்கணும், நம்ம சோகத்தை... //
  ஜனநாயக நாட்டுல பொறந்துட்டு இப்படிலாம் பண்ணலன்னா எப்படி?? :)
  வருகைக்கு மிக்க நன்றி சுந்தரா

  ReplyDelete
 16. @அந்நியன்
  //சிறப்பாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க.. //
  இது உண்மையிலேயே எங்க அண்ணன், நாளை இந்தியாவின் விடிவெள்ளி, உலக நம்பிக்கை நட்சத்திரம் அந்நியன் தானா???

  மிக்க நன்றி அண்ணா ;)

  ReplyDelete
 17. @மதி.சுதா
  //சட்டங்கள் பற்றி என்மனதில் ஒரு திட்டங்களுமே இல்லை...//
  உங்கள மாதிரி தாங்க நானும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இருந்தேன். நீ தான் மொதலாளி அவங்க தொழிலாளின்னு சொல்லி ஆசை காட்டிட்டாங்க ;)
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 18. @அஸ்மா
  //ரொம்ப உருப்படியான(?) திருத்தங்கள்தான்!//
  கேக்குறவன் லூசுபயலா இருந்தா எலி ஏரோப்ளென் ஓட்டுறேன்னு சொல்லுமாம். அதுவும் கேக்குற கேனையன்களுக்கெல்லாம் ஞாபக சக்தி அதிகம் வேற. அதான் தலைல ஏறி மொளகா அரைக்கிறாங்க....

  அஸ்மா நீங்க இப்படி மொட்டையா சொன்னா எப்படி?? நானே அரைகுறை.
  உங்க கிட்ட பேசுறதா இருந்தா எப்படி காண்டாக்ட் பண்ணனும். நானும் அப்சராக்கு குடுப்பீங்க. அந்த கேப்புல எடுத்துக்கலாம்னு நெனச்சேன். ம்ஹூம்...முடியல :(

  ReplyDelete
 19. @அப்துல்
  //தகவல் அறியும் சட்டம் பற்றி கூடுதல் தகவல் தந்த எங்கள் சகோதரி ஆமியை எந்தவித தகவலும் முன்னறிவிப்பும் இன்றி வாழ்த்துகிறோம்!!! //
  ஓ வாழ்த்துறீங்களா??? நல்லா வாழ்த்துங்க.. வாழ்த்துங்க. வாழ்த்துனவங்க சும்மா வாழ்த்த கூடாதாம்ல ?!! உண்மையா??? சகோ நீங்க பெரிய ஆளுன்னு நிரூபிக்க வேண்டாமா? சீக்கிரம் பேங்க்ல பணம் போட்டுவிடுங்க ;)

  //எந்தவித தகவலும் முன்னறிவிப்பும் இன்றி //
  வேகமா படிச்சதுனால வாழ்த்துகிறோம் என்ற இடத்துல கைது செய்கிறோம்னு படிச்சுட்டேன். நைட் புல்லா போலீஸ் ஸ்டேஷன்ல கம்பி எண்ற மாதிரியே கனவு வருது அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 20. @வைகை
  //இந்த சட்டம் கொண்டு வரும் போது இவ்வளவு விழிப்புணர்வையும் இத்தனை கேள்விகளையும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை, ஆனால் இப்ப குத்துது கொடையுது கதைதான்! ///
  ஆமாம் சகோ. என் பிரண்ட்ஸ் கிட்ட இது பத்தி எதாவது தெரியுமான்னு கேட்டா முழிக்கிறாங்க. மக்களிடத்தில் சரியா அவங்க கொண்டு போயி சேர்க்கல என்பது தான் உண்மை. படிச்ச பலருக்கே இதை எப்படி உபயோகிக்கணும் என்ற வழிமுறையே தெரியாத போது மற்றவர்களை என்னவென்று சொல்ல?? இந்தியாவில் வெறும் 5 சதவீதம் மக்கள் மட்டுமே இந்த சட்டம் பற்றி அறிந்தவர்கள். அதிலும் 2 சதவீதம் மக்கள் தான் இதை பயன்படுத்தியிருக்காங்களாம். என்ன கொடுமை வைகை இது??? ;)

  ReplyDelete
 21. @பாலாஜி
  //மிகச் சரி சகோ!
  இந்தச் சட்டத்தாலதான் ஒரு சில தில்லுமுல்லாவது மக்கள் மத்தியில தெரிய வருது. அதுலயும் திருத்தம்னு சொல்லிட்டு ஆப்படிக்க ஆரம்பிக்கிராங்களே :( //
  பல பேர் வேலையை பதம் பாத்த சட்டமாச்சே இது!! அவங்க தில்லுமுல்லுக்கெல்லாம் இடஞ்சலா இருக்குன்னு தான் அப்படியே அமுக்க பாக்குறாங்க. சாதாரண குடிமகன் நிர்வாகத்தை கேள்வி கேட்க கூட பல படிகள் ஏற வேண்டியிருக்கு என்பது தான் கொடுமையான விஷயம்

  மிக்க நன்றி பாலாஜி

  ReplyDelete
 22. @அந்நியன்
  //ஆமி..இப்பலாம் நீங்கள் கருப்பு கவுனை மாட்டிகிட்டு மெட்ராஸ் ஹை கோர்ட்டிற்கு ஹாயா போகுவதைப் பார்த்தால் அந்நியனை உள்ளே பிடிச்சு போட்டுரிவியே போல தெரியுது.எதுக்கும் உங்களிடம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். //
  நல்லது செய்றவங்களுக்கு எப்பவும் தண்டனை கொடுப்பது தானே வழக்கம். அது தானே நம் நாட்டின் பாராம்பரியம்.
  அப்படியே பிடிச்சு போட்டா என்ன? முன்ன தான் ஓட்டைகள் இருந்துச்சு. இப்ப தான் பெரிய பெரிய கேட்டே இருக்கே ;)

  ReplyDelete
 23. ஹ்ம்ம் நல்ல அலசல் ஆமி . thagaval உரிமை சட்டம் பற்றி இலவசப் பட்டயப் படிப்பு உண்டு (ஆன்லைன்) இப்பதான் சேர்ந்து இருக்கேன். முடிச்சிட்டு பதில் போடறேன் . வர்ட்டா

  ReplyDelete
 24. சிறப்பான கோணத்தில் சிந்தித்து பகிர்ந்த இந்த இடுகைக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. அசத்தலான பதிவு, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. சாதாரண மக்களிடம் இந்த தகவல் சரியானபடி போய்ச்சேரலை என்பதுதான் உண்மை. அப்படியே தெரிந்திருந்தாலும் புலம்புவதைத் தவிர சாமான்யனால் வேர என்னதான் செய்யமுடியும்?

  ஆமி எனி குறை ஒன்ன்றுமில்லைப்ளக்கும் வாங்க. கருத்துக்களைச்சொல்லுங்க ஐயாம் வெயிட்டிங்க் ஃபார் யூஊஊஊஊஊஊஉ

  ReplyDelete
 27. சகோ,கலக்குரீங்க போங்க..ஒவ்வொரு பதிவுலையும்,வெரைட்டியான விஷயங்கள கொடுத்து அசத்துரீங்க.

  தகவல் அறியும் உரிமை சட்டத்த வச்சு,இனி ஒரு தகவலும் பெற முடியாதுன்னு,பக்கிங்க சொல்லாம சொல்லுதுங்க...

  சரி,மேல நீங்க சொன்ன திருத்தங்கள் இல்லாம தகவல் வேணும்ன்னா என்ன செய்யனும்ன்னு,'தகவல்' அறிய,'தகவல்' அறியும் உரிமை சட்டம் மூலமா,'தகவல்' தெரிஞ்சு, எல்லாத்துக்கும் 'தகவல்' சொல்ல, 'தகவல்' தேவைன்னு யாருக்கு 'தகவல' மனுவா கொடுக்கனும்னு,'தகவல்' சொன்னீங்கன்னா..அந்த 'தகவல' வச்சு,'தகவல்' தெரிஞ்சு, எல்லாத்துக்கும் 'தகவல்' சொல்லீர்வேன்...(அப்டியே கவித மாதிரி இல்ல...{இல்லாங்குரீங்கலா??- ரைட்டு உடுங்க...)

  ஸ்ஸ்ஸபா....வெய்ட்டா கண்ணகட்டுதே...ஒரு ரைமிங்க இருக்கட்டும்னு ஆரமிச்சா,அது ரயில்மாறி நிக்காம போய்கிட்டேல இருக்கு...இழுத்து புடிச்சு முடிக்கிறதுக்குள்ள் அரமணிநேரம் ஆயிருச்சே!!!!
  இந்த நேரத்துல உருப்படிய ஒரு மனு எழுதி,தகவல்.....(அய்யயோ மறுபடியும் ஸ்டாட் பண்றானே..)

  ஓக்கே..இனிமே இத பட்டிக்கிரவங்க பாடு,நமக்கென்ன...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 28. தகவல் சட்ட உரிமை சட்டம் மிகப் பயனுள்ள ஒன்று.

  //தமிழ்நாட்டுகாரங்ககிட்ட இருந்து 40,000 மனு வருஷத்துக்கு//

  அப்படின்னா, அவ்வளவு விழிப்புணர்வு இருக்குன்னு சொல்லவா?
  இல்லை, அவ்வளவு பிரச்னைகள் இங்கே இருக்குன்னு சொல்லவா?
  இல்லை, வேலைவெட்டி இல்லாதவங்க இங்கதான் அதிகம்னு சொல்லவா? :-))))

  நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டிய சட்டத்தையும் சிலர் (தீண்டாமை சட்டம், 498ஏ போல) தவறாகப் பயன்படுத்துவதாலும் இந்தச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம். உதாரணமா, 10 ரூபாய்தான் செலவு என்பதால், சும்மா வரும்போதும், போகும்போது மனு கொடுப்போரும் உண்டு. சில மாதங்களுக்குமுன், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல் கேட்டபொழுது, அதைத் தரமுடியாததால் ஒரு அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.(விரிவான விபரங்கள் தெரியவில்லை). இதுபோன்றவற்றைத் தடுபப்தற்காகவும், சட்டத்தை மேம்படுத்துவதற்காகவும் மாற்றங்கள் இருக்கலாம். அத்தோடு, அரசியல்வாதிகள்/அதிகாரிகள் தம்மைப் பாதுகாக்கவும் சிலதைச் சேர்த்துக் கொண்டிருக்கலாம்.

  நான் எழுத நினைத்தவற்றை எழுத வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி.

  ReplyDelete
 29. இது முக்கியமா யாருக்கு பயன்படுதுன்னு பார்த்தால், எதிர்க்கட்சி காரனுக்கு, இவர்களின் வண்டவாளங்களை
  தன்டாவலத்தில் ஏற்றுவதற்கு. இந்த தகவல் அறியும் முறையை அறிமுகம் படுத்திய ஆட்சியாளருக்கு நன்றி.

  ReplyDelete
 30. ஆமி சாதாரண ஆட்களிடமிருந்தே தகவல் அறிய குட்டிக்கரணம் போட வேண்டி இருக்கு. இதுல அரசாங்கத்திடமிருந்தா.னோ சான்ஸ்.
  பாருங்களேன் உங்களிடமிருந்து எனக்கு நிரைய தகவல்கள் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.(உங்களை இன்னமும் சாதாரண ஆளாகவே நினைப்பது எந்தப்புதான்.) அதுவே இன்னும் முடியலை.

  ReplyDelete
 31. @hussainamma

  anupitten.

  @amina
  please delete her comment with email id

  ReplyDelete
 32. @LK
  //முடிச்சிட்டு பதில் போடறேன் . வர்ட்டா//
  அதான் முடிய போகுதே?!! அப்பறமென்ன நீங்க வேற முடிச்சுட்டு வர போறீங்க? ;) ஆனாலும் நீங்க முடிச்சுட்டு வரதுக்குள்ள நம்ம அந்த சட்டம் இருந்த சுவடே இல்லாமல் போயிடும்னு நெனைக்கிறேன்....

  நான் சொன்னேன்னு சொல்லாம இருந்துடாதீங்க. என்ன அடிச்சீங்கன்னு சொல்லிடுங்க. இல்லைன்னா தல வெடிச்சுடும் ;)

  ReplyDelete
 33. @ஸாதிகா அக்கா
  //சிறப்பான கோணத்தில் சிந்தித்து பகிர்ந்த இந்த இடுகைக்கு என் வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி அக்கா....

  ReplyDelete
 34. @myth-buster
  மிக்க நன்றிங்க சகோ!!!

  ReplyDelete
 35. @ லெட்சுமிம்மா
  //சாதாரண மக்களிடம் இந்த தகவல் சரியானபடி போய்ச்சேரலை என்பதுதான் உண்மை. //
  உண்மை தான்ம்மா.... படிச்ச சொற்ப மக்களுக்கு மட்டுமே இதை பற்றி தெரிஞ்சுருக்கு....

  //ஆமி எனி குறை ஒன்ன்றுமில்லைப்ளக்கும் வாங்க. கருத்துக்களைச்சொல்லுங்க ஐயாம் வெயிட்டிங்க் ஃபார் யூஊஊஊஊஊஊஉ //
  அப்படியா.... தோ பறந்து வரேன் இருங்கோ....

  ReplyDelete
 36. @ரஜின்
  //சகோ,கலக்குரீங்க போங்க..ஒவ்வொரு பதிவுலையும்,வெரைட்டியான விஷயங்கள கொடுத்து அசத்துரீங்க.//
  உண்மையிலேயே இது ரஜின் தானா?? இல்லை ஒரே பேர்ல வந்த இன்னொரு ரஜினா?? ஐய்யோ என் கண்ண என்னாலேயே நம்ப முடியலையே............. ;)
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா........
  இப்ப தான் விலைவாசிகளை பாத்து மயக்கம் போட்டு விழுந்துட்டு வந்தேன். மறுபடியும் மயக்கமா??!!!!!

  //ஓக்கே..இனிமே இத பட்டிக்கிரவங்க பாடு,நமக்கென்ன...//
  நல்லஎண்ணம் சகோ உங்களுக்கு....!! உங்களுக்கு ஒரு காலம் வந்த மாதிரி எனக்கு ஒரு காலம் வராமலேயேவா போக போகுது. அப்ப ஏண்டா ஆமினா ப்ளாக்ல கவிதையை எழுதுனோம்னு வருத்தப்படுவீங்க ;)

  ReplyDelete
 37. @ஹுசைனம்மா
  அதே தான் பா எனக்கும் தோணூச்சு. ஏன் நம்ம தமிழ்நாட்டுல மட்டும் இவ்வளவு மனுன்னு?!!! :)))

  //10 ரூபாய்தான் செலவு என்பதால், சும்மா வரும்போதும், போகும்போது மனு கொடுப்போரும் உண்டு//
  எனக்கு அதுல உடன்பாடு இல்லை ஹூசைனம்மா. நமக்கிட்ட காய்கறி காரன் 2 ரூபாய் அதிகமா வாங்குனாலே பல கேள்வி கேட்போம். ஆனா நம்ம பணத்த வச்சு காத்து வாங்குறதுமில்லாம ஊழல், அந்நியநாட்டு வங்கியில் கருப்பு பணம், பினாமி பேரில் சொத்துன்னு அவங்க பன்ற அராஜகம் தாங்க முடியல. இப்படிலாம் இவங்க திருத்தம் கொண்டு வந்து அந்த திட்டத்தை சாகடிக்கிறத விட்டுட்டு தனியா இதுக்குனே ஒரு விரிவான துறை ஒதுக்கலாம். கணக்கும்,தகவலும் வச்சுக்க வேண்டியது அவங்க பொறுப்பு. சாதாரண மக்கள் கேக்க்குற எந்த கேள்விக்கும் அவங்க பதில் கொடுத்தே ஆகணும். அப்படியே பதில் சொல்ல முடியாதவன் மடியில கணம் இருக்குன்னு தானே அர்த்தம். இன்னும் இத பத்தி நிறையா பேச நினச்சேன். ஆனா அதிகமா அரசியல் கலக்க கூடாதுன்னு விட்டுட்டேன். எனிவே அதான் எல் கே படிச்சுட்டு இருக்கார். முடிச்சுட்டு வந்து சொல்லிடுவார்ன்னு நெனைக்கிறேன் ;)

  //நான் எழுத நினைத்தவற்றை எழுத வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. //
  இதோட ஏன் விட்டுட்டீங்க. உங்க பார்வையில் இந்த திருத்தம் பத்தி பதிவு போடுங்க ஹூசைனம்மா....

  ReplyDelete
 38. @கோமு
  என்ன கோமு இப்படி சொல்லிட்டீங்க? அந்த அளவுக்கெல்லாம் பெரிய ஆளா ஆகல. இப்ப ஜீடால்க் பக்கம் போயே ரொம்ப நாளாச்சு (டைப் பண்ண கை வலிக்குது. வாய்ஸ்க்கு கூப்பிட்டா யாரும் வரதில்ல). அதனால தான் என்னவர் ஐடில இருந்து ஆஷிக் கிட்ட மட்டும் பேசிட்டு இருக்கேன். நீங்க வேண்டும்னா எனக்கு மெயில் அனுப்புங்க கோமு என்ன தகவல் வேண்டும்னு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்.

  ReplyDelete
 39. @ஆனந்தி
  தேங்க்ஸ் டா தங்கம் :)

  ReplyDelete
 40. //உண்மையிலேயே இது ரஜின் தானா?? இல்லை ஒரே பேர்ல வந்த இன்னொரு ரஜினா?? ஐய்யோ என் கண்ண என்னாலேயே நம்ப முடியலையே............. ;)//

  எதுனால இவ்ளோ சந்தேகம்???..பாராட்டுனதுனாலயா? இல்லை அதுக்கப்பரம் மொக்க போட்டதுனாலயா?(டேய் அது கவிதடா அவங்களே ஒத்துக்கிட்டாங்க..)

  இதுக்குதா நான் மெயில் ஐடி'ல லாகின் பண்ணி பின்னூட்டிக்கிட்டு இருக்கேன்..
  ஷாட் ஷாட் நானேதான்..இவ்ளோ சந்தேகமா????...நாம பாராட்ரதுல வஞ்சனையே வெக்கிரதில்லை சகோ.அதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும் பாருங்க..

  //அப்ப ஏண்டா ஆமினா ப்ளாக்ல கவிதையை எழுதுனோம்னு வருத்தப்படுவீங்க ;)//

  எப்டியோ கவிதைன்னு அதையும் ஒத்துகிட்டிங்களே..அதுவரைக்கும் சந்தோஷம் தான்..

  வருத்தம்லா படமாட்டோம்..

  இதெல்லா கவிதைன்னு சொன்னீங்கன்னா...அப்போ நாள் பூரா இப்டிதேன பேசிட்டு இருக்கேன்.அப்பொ நா பேசுரதே கவிததானா????(டேய் ரஜின்..நீ பெரியாளுதாண்டா..)
  (kidding)

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 41. //
  நான் சொன்னேன்னு சொல்லாம இருந்துடாதீங்க. என்ன அடிச்சீங்கன்னு சொல்லிடுங்க. இல்லைன்னா தல வெடிச்சுடும் ;)///

  புரியலை சகோ

  ReplyDelete
 42. //பாராட்டுனதுனாலயா? இல்லை அதுக்கப்பரம் மொக்க போட்டதுனாலயா?(//

  நீங்க மொக்கை போடாம இருந்தா தாங்க அது அதிசயம். பாராட்டுனது தான் உலக மகா அதிசயம்!!!

  //அதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும் பாருங்க..//
  எதுக்கு அவ்வளவு பெருஷா மனச வச்சுட்டு. எங்க ஊர் அரசியல் வாதிகளுக்கும் கொஞ்சூண்டு கொடுங்களேன் ;)

  //எப்டியோ கவிதைன்னு அதையும் ஒத்துகிட்டிங்களே..அதுவரைக்கும் சந்தோஷம் தான்..//
  என்னால ஒரு வயசான தாத்தா சந்தோஷப்பட்டா அது பூர்வ ஜென்ம புண்ணியம் இல்லையா (எப்பூடி?????)

  //இதெல்லா கவிதைன்னு சொன்னீங்கன்னா...அப்போ நாள் பூரா இப்டிதேன பேசிட்டு இருக்கேன்.அப்பொ நா பேசுரதே கவிததானா????//
  இப்பவும் இப்படியா??? அப்ப கன்பார்மா????? ;)))

  ReplyDelete
 43. ////
  நான் சொன்னேன்னு சொல்லாம இருந்துடாதீங்க. என்ன அடிச்சீங்கன்னு சொல்லிடுங்க. இல்லைன்னா தல வெடிச்சுடும் ;)///

  புரியலை சகோ //
  ஒன்னுமில்ல. இப்ப தான் டீவில கமல் பேட்டி பார்த்தேன். அதான் நான் பேசுனது உங்களுக்கு புரியல.

  நான் எதாவது கிண்டலா பேசுனத சீரியஸா எடுத்துட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் பத்தி சொல்லாம விட்டுறாதீங்க. எல்லாருக்கும் சொல்லுங்க அப்படின்னு சொன்னேன். இப்ப புரியுதா??? புரியலன்னா மறுபடியும் கேளுங்க சொல்றேன் ;)

  ReplyDelete
 44. @தொப்பி தொப்பி

  //நல்ல அலசல்// மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 45. உருப்படியா இருந்ததே இந்த ஒரு சட்டம் தான் அதையும் கிழிச்சி சட்ட பைக்குள்ள போடா திட்டம் போடுறாங்களே .
  இந்த சட்டம் பற்றி தெளிவாக பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 46. @இளம் தூயவன்

  ////இது முக்கியமா யாருக்கு பயன்படுதுன்னு பார்த்தால், எதிர்க்கட்சி காரனுக்கு, இவர்களின் வண்டவாளங்களை
  தன்டாவலத்தில் ஏற்றுவதற்கு.///

  அதே தான். இதை வச்சே அரசியல் ஆதாயம் தேடுவாங்க. ஆனாலும் சில நேரங்களீல் தகவல் திரட்ட (பழைய கணக்கு பற்றி )அவர்களும் மாட்டுவதுண்டு இல்லையா?!!!

  //இந்த தகவல் அறியும் முறையை அறிமுகம் படுத்திய ஆட்சியாளருக்கு நன்றி//
  பல போராட்டங்களுக்கு பிறகு தான் சட்டத்திறு உருவமும் உயிரும் கொடுக்கப்பட்டதுன்னு சொல்றாங்க(அதாவது கூலிக்கு ஆட்கள் வேலை செய்யும் போது குறைவாக கொடுத்ததால் சம்பள பதிவேட்டை கேட்க அதை நிர்வாகம் மறுக்க பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. எப்படியும் 30 ஆண்டுகளுக்கும் மேலேயே இது பற்றி விவாதம் நடந்துட்டு தான் இருக்கு. ஆனாலும் 2005ல தான் வந்துருக்கு). வரலாறு சரியா தெரியல. இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி தைரியமா கொண்டு வந்தவங்களுக்கு நன்றி தான் சொல்லணும் !!!!

  ReplyDelete
 47. //உருப்படியா இருந்ததே இந்த ஒரு சட்டம் தான் அதையும் கிழிச்சி சட்ட பைக்குள்ள போடா திட்டம் போடுறாங்களே .//
  ம்ம் :(
  நான் எழுதுன 20 மனு கூட கிழிச்சு பாலீதீன் பைக்குள்ள போட்டுட்டேன் :)

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 48. //(எப்பூடி?????)//

  ஆஹா..ரைட் உடுங்க...
  ம்ம்..
  வேர வழியே இல்ல... ஓக்கே..
  ------------------------------
  என்ன பாக்குரீங்க..இது அண்ணே போட்ட கோடு..(எது எது..யாரு அண்ணனா?... its me.)
  இந்த கோட்டத்தாண்டி,நீங்களும் வரக்கூடாது..நானும் வரமாட்டே..

  ஹ்ம்ம்..இந்த வீடியோவ பாத்ததுக்கப்பரமும் வாயக்குடுத்தேன்ல..எனக்கு வேணும்..

  http://www.youtube.com/watch?v=YfRX_CECR7U&feature=player_embedded

  SISTER உங்க அப்ரோச் எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு..பட் இந்த டீலிங்கி நமக்குள்ளயே இருக்கட்டும்..
  அண்ணனுக்கு எதிரா எதாச்சும் யோசிக்கப்படாது சரியா...

  //(எப்பூடி?????)//
  ஆமா இதுக்கு மேல ஏதோ எழுதீர்க்கீங்களே..என்னத்து..FONT ப்ராப்ளம்'னு நெனைக்கிறேன்..கட்டம் கட்டமா இருக்கு????

  எப்பா...எப்புடியெல்லா சமாளிக்க வேண்டியிருக்கு...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 49. @ரஜின்

  ஆஹா.....சகோ தங்கைட்ட சரண்டரா????? :))

  இப்படி தான் இருக்கணும் :))

  ReplyDelete
 50. அஸ்ஸலாமு அலைக்கும்... சகோதரி.

  ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

  பல விபரங்கள். விளக்கங்கள்.

  நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால்,

  இது...

  "தகவல் அறியும் உரிமையை பிடுங்கும் சட்டம்"

  போலத்தெறிகிறது.

  ஏதோ எக்குத்தப்பான மப்பில் இருக்கும்போது இச்சட்டத்தை தெரியாத்தனமா கொண்டுவந்துவிட்டு... இப்போது மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்பது நன்றாக தெரிகிறது.

  கூடிய சீக்கிரம் தூக்கிடுவாங்க பாருங்க.

  ReplyDelete
 51. நிறைய உண்மைகளை நகைச்சுவை கலந்து சொல்லிருக்கிங்க ...

  கலக்கலான பதிவு .. அதே நேரத்தில் நல்ல ஒரு சட்டம் பறிக்க படும்போது வலிக்கவும் செய்கிறது

  ReplyDelete
 52. உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.....நேரம் இருந்தால் எழுதுங்கள்....

  ReplyDelete
 53. அருமையான கருத்தாழமிக்க பதிவு...ரைட் டி இன்ஃபொர்மேஷன் பற்றி நிறைய தெரிஞ்ச்சுக்கிட்டேன். நன்றி

  ReplyDelete
 54. மிகவும் கருத்தாழம் மிக்க பதிவு. RTA பற்றி பல வெளி வராத தகவல்களை வெளிக் கொணர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
 55. சகோதரி அவர்களுக்கு
  அருமையான பதிவு ஆழமான பார்வை
  இப்புடி சொல்லிட்டு எஸ்கேப் ஆயிருவேனு மட்டும் நெனைக்காதீக

  ஒங்களுக்கும் எனக்கும் ஒரு பஞ்சயத்து இருக்கு

  பாசமலரே அதேன்ன
  ///சகோதரன்னா///
  சகோதரனு சொன்ன அண்ணனையும் குறிக்கும் தம்பியையும் குறிக்கும்
  ஆனா நீங்க சகோதரண்ணா என்று சொல்வதில் பெரிய சதி இருக்கு
  எங்களையேல்லாம் அண்ணேன்னு சொல்லி ஒங்க வயச குறைக்க்கலாமுன்னு நெனச்சா விடமாட்டான் இந்த ஹைதர்
  நான் பிறந்தது 1978ல்
  இப்ப சொல்லுங்க நான் அண்ணனா இல்லை தம்பியா

  (ஒழுங்க சகோதரனு சொல்லியிருந்த இந்த வம்பு வந்துயிருக்காது)

  எங்கே தகவல்.. தகவல்..

  ReplyDelete
 56. @ சகோ முஹம்மது ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்....
  //
  "தகவல் அறியும் உரிமையை பிடுங்கும் சட்டம்"//

  அதே தான் சகோ....

  ஏதோ ஒரு மறதில கொண்டுட்டு வந்து நிதான நிலைக்கு வந்தபிறகு தான் ஏன் கொண்டு வந்தோம்னு முழிக்கிறாங்க. அதான் இப்படி திருத்தம் என்ற பெயரில் கொலை செய்றாங்க!!!
  வருகைக்கு மிக்க நன்றி சகோ!!!

  ReplyDelete
 57. @அரசன்
  //அதே நேரத்தில் நல்ல ஒரு சட்டம் பறிக்க படும்போது வலிக்கவும் செய்கிறது //
  ஆமாம் சகோ.....
  கைக்கு வந்த குழந்தையை முழுவதுமாய் கொஞ்சிடும் முன்பே யாராவது கையிலிருந்து பிடுங்கினால் மனம் படும் அதே வேதனை...

  பாக்கலாம்

  ReplyDelete
 58. @அதிரடி ஹாஜா

  இப்ப தான் சகோ பார்த்தேன். அழைத்தமைக்கு மிக்க நன்றி. கண்டிப்பா ஒரு வாரத்திற்குள்ளோ அல்லது அடுத்த பதிவோ தொடர்பதிவாக தான் இருக்கும் :)

  ReplyDelete
 59. @மூன்றாம் கோணம்
  மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 60. @ஹைதர் அலி அண்ணா
  மிக்க நன்றி அண்ணா...

  பஞ்சாயத்துன்னு சொல்லி நீங்களே மாட்டிட்டீங்களே....!!!என்னவருக்கே நீங்க ஒரு வயசுக்கு மூத்தவர் ;) (எனக்கும் உங்களுக்கும் உண்மையிலேயே அதிக வயசு வித்தியாசம் தான். ஆனாலும் என் வயசை சொல்ல மாட்டேனே ஹீ...ஹீ...ஹி.......))

  //(ஒழுங்க சகோதரனு சொல்லியிருந்த இந்த வம்பு வந்துயிருக்காது)
  //
  கமெண்டை பார்த்ததும் சும்மா இருந்தா இந்த வம்பு வந்துருக்காது :)))

  ReplyDelete
 61. ஆமி, நல்ல பதிவு. எனக்கு இந்த அரசியல் சம்பந்தமான நியூஸ் அலர்ஜி.

  ReplyDelete
 62. தகவல் அறியும் சட்டத்தின் படி நீங்கள் அடுத்து என்ன பதிவு போட போறீங்கனு தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கா? நீங்க நல்ல பதிவா போட்டு பெயர் தட்டிக்கிட்டு போய்றீங்க அப்ப எங்க்ளை மாதிரி ஆளுங்க எப்படிதான் பெயர் வாங்குறது? முன்னாடியே தெரிஞ்சா அதை நாங்க போட்டு பெயர் வாங்கலமுனு ஐடியா? நல்ல ஐடியாதனே

  ReplyDelete
 63. அருமையான பதிவுங்க.. இப்படி ஒரு சட்டம் இருப்பதே எனக்குத் தெரியாதுங்க.. தெரியப்படுத்தியதற்கு நன்றி.. ஆனால் இப்போ கொண்டு வந்திருக்கிற திருத்தங்களைப் பார்த்தால்.. ஒரு கேள்வியும் கேக்க முடியாது போல இருக்கே..

  எப்பவும் அரசியல் சம்பந்தமான செய்திகளைப் படிக்கமாட்டேன்.. ஆனால் பதிவின் முடிவு வரை சுவாரஸ்யமாக நீங்க சொல்லியிருக்கிற விதத்தில் படிச்சுட்டேன்.. நல்ல பதிவு..

  ReplyDelete
 64. ஆமினா தகவல் அறியும் உரிமை சட்டம்,நல்ல அலசல்.

  ReplyDelete
 65. இந்த சட்டம் உண்மையிலேயே சரியா இருந்திருந்தா 2ஜி , 3ஜி இத்தனை நாள் ஆடி இருக்குமா..? ஒரு பிரதமரே கிடப்பில போட்ட மேட்டர் அது.. இன்னுமா நம்புறீங்க ..? :-)

  ReplyDelete
 66. @வானதி
  //எனக்கு இந்த அரசியல் சம்பந்தமான நியூஸ் அலர்ஜி.//
  அப்படியா...!!!
  வருகைக்கு மிக்க நன்றி வானதி

  ReplyDelete
 67. @avarkal unmaikal
  //நீங்க நல்ல பதிவா போட்டு பெயர் தட்டிக்கிட்டு போய்றீங்க அப்ப எங்க்ளை மாதிரி ஆளுங்க எப்படிதான் பெயர் வாங்குறது? //

  நல்ல ஐடியா தான்...
  ஆனா நான் உங்க கிட்ட கேக்க வேண்டிய கேள்விய நீங்க என்கிட்ட கேட்டா பதிலை எங்கே தேடுவேன்?? :))

  ReplyDelete
 68. @பாபு

  அப்படியா? எனக்காக படிச்சதுக்கு மிக்க நன்றி தம்பி பாபு...!!!

  கண்டிப்பா எவனையும் இனி ஒரு கேள்வியும் கேட்க முடியாது தான். மெல்ல மெல்ல திருத்தி அதையே சாகடிச்சுட்டா இனி எப்படி கேள்வி கேட்பது. நாமல்லே விடையை உருவாக்கிக்கிட வேண்டியது தான்!!

  ReplyDelete
 69. @ஆசியா
  மிக்க நன்றி ஆசியா

  ReplyDelete
 70. @ஜெய்லானி

  2ஜியும் 3ஜியும் என்னான்னு எனக்கே கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும். அதுவும் பொதுநலன் கருதி எழுதும் ப்லாக்குகள் மூலம் தான். போன வருடமே இவ்விஷயம் கசிந்தாலும் இன்னும் பல மக்களுக்கு அதை பற்றிய பொது அடிப்படை அறிவு கிடையாது. ஏன்னா எல்லா ஊடகமும் ஒரு கட்சிக்கு அடியாளா இருக்குறாங்க. அது மாதிரி கேட்காம விட்டுருக்கலாம் இல்லையா?!! :)

  ReplyDelete
 71. அசத்தலான பதிவு, ஆமினா..

  ReplyDelete
 72. @பிரஷா
  //அசத்தலான பதிவு, ஆமினா..//

  மிக்க நன்றி பிரஷா

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)