ரொம்ப யோசிச்சு யோசிச்சு பார்த்து கடைசியா இன்னைக்கு ஒரு மேட்டர பத்தி பேசலாம்னு ஐடியா?!! நீங்க என்ன சொல்றீங்க??? (எத பத்தி பேச போறன்னு சொல்லாமலேயே ஐடியா நல்லா இருக்கான்னு கேட்டா கெட்ட கோபம் வரும்னு சொல்றீங்க!!அதானே). நேத்து காலைல நாளைக்கு கிருஸ்மஸ் செலிப்ரேஷனுக்காக அமினாபாத்க்கு போனேன்(காரணம் கீழே). சென்னைக்கு திநகர் ரங்கநாதன் தெருன்னா லக்னோக்கு அமினாபாத். வேற எதுக்காக? பாதி துணிக்கடையே வெலைக்கு வாங்கி வீட்டை நிரப்ப தான். பீரோல தூங்கிட்டு இருந்த என் செல்போனை தூசுதட்டி என் கைல திணிச்சு எதாவது வழி தெரியமாம லக்னோ மக்களை தமிழில் வழிகேட்டு பாடாபடுத்தாம அவர கூப்பிடுறதுக்கு. நான் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம கேன் பேக்கில் வச்சுட்டார். செல்போன் இல்லைன்னா எங்கேயும் போகத்தேவையே இல்லைன்னு பிடிவாதம்.கடைதெரு பட்டுபுடவைலாம் வா வான்னு கூப்பிடுற மாதிரியே பீலிங். என்ன பண்ண நமக்கு செல்போனா முக்கியம்???  அதுபாட்டுக்கு ஒரு மூலைல கத்தட்டும்னு சொல்லி மனசுல நெனச்சுட்டு வண்டில ஏறிட்டேன்.

இவ்வளவு சண்டைக்கு அப்பறம் செல்போனை வேண்டா வெறுப்பா வாங்குன
ஆமினா தான் 6 வருஷத்துக்கு முன்னாடி அம்மாக்கிட்ட சண்ட போட்டு சாப்பிடாம அடம்பிடிச்சு செல்போன் வாங்குனான்னு சொன்னா நம்புவீங்களா?? நம்பி தான் ஆகணும்.  “படிக்கிற(??!!) புள்ளைக்கு செல்போன் எதுக்கு?” இது எங்கம்மா. என் பிரண்ட்ஸ்லாம் வச்சுருக்காங்க. எனக்கு சும்மா பந்தாவுக்காகவாவது வாங்கி தா. ஆனா காசுலாம் போட தேவையில்லன்னு அம்மாவ ஐஸ் வச்சு வாங்கிட்டேன். செல்போன் நோக்கியா 3310 பழைய மாடல் தான். வாங்கிட்டு வந்ததும் அதை எல்லாரும் தடவி தடவி பாத்தோம். டைனிங் டேபிளில் அதை வச்சுட்டு பக்கத்துலேயே சேர்போட்டு ரசிச்சுட்டே இருந்தேன். அந்த மொபைல் எல்லாருக்கும் பொது சொத்துன்னால ஒரே எடத்துல தான் இருக்கும் லேன்லைன் மாதிரி. செல் வாங்குனா போதுமா சிம் வாங்க வேண்டாமா? ஒரு வாரத்துக்கப்பறம் 250 ரூபாய் கொடுத்து HUTCH சிம் வாங்கியாச்சு. ஒரு நிமிஷத்துக்கு 1 ரூபாய் எடுப்பாங்க அப்படின்னு தம்பி சொன்னதும் எங்கம்மாக்கு நெஞ்சுவலியே வந்துடுச்சுன்னா பாத்துக்கோங்களேன். ஒடனே சமாதானப்படுத்திட்டு மிஸ் கால் கொடுக்க மட்டும் வச்சுக்கலாம்ம்மான்னு சொன்னதும் தான் மகராசி சும்மா இருந்தாங்க. எல்லாருக்கும் மிஸ் கால் மட்டும் தான். நம்ம உஷார்ன்னு பாத்தா அதுலயும் சில உஷார்பார்ட்டிகள் எப்ப கால் வரும்னு ஒத்தகால்ல வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க போல. ஒரு ரிங் முழுசா கூட போயிருக்காது அதுக்குள்ளையும் அட்டன் பண்ணி 1 ரூபாய்க்கு ஆப்பு வச்சுடுவாங்க. அப்பலாம் 1 செகண்ட்னாலும் 1 நிமிஷத்துக்கு உள்ள பணத்த எடுத்துக்குவாங்களே... அம்மாக்கிட்ட திட்டு வாங்கிட்டு கம்முன்னு இருக்குறது. ஒவ்வொரு தடவையும் பேலன்ஸ் எவ்வளவுன்னு பாத்துட்டே இருப்போம். 6 மாசத்துக்கு அப்பறம் என் தம்பி லைப் லாங் சிம் பத்தி சொன்னான். நேரம் முடிஞ்சதும் ரீசார்ஜ் பண்ணனும்னு அவசியமே இல்ல மா. பண்ணாம இருந்தாலும் நம்ம சிம் ம கேன்சல் பண்ண மாட்டாங்க. அம்மாவும் மாசம் மாசம் 150 ரூபாய் காலியாகுறதுக்கு இப்படி வாங்குலாம்னு ஆசைபட்டு கடைக்கு போனா ஒரு சிம் 1000 ரூபாய்ன்னு சொன்னாங்க. என் அறிவாளி தம்பி தான் ஒரு மாசத்துக்கு 150க்கு மேல போகுது. ஒரு வருஷத்துக்கு கணக்கு பண்ணு.ஒரு வருஷத்துலேயே 1000 ரூபாய்க்கு மேல காலியாகுறத விட்டுட்டு அதே காசுக்கு லைப் லாங் இருக்குற சிம் வாங்கலாம்லன்னு அம்மாவ ஆசை காட்டுனான். எங்க அப்பாவி அம்மாவும் பாவம் 1000 கஷ்ட்டப்பட்டு தேத்தி வாங்கி கொடுத்தாங்க. அதுவும் கட்ச் கார்ட் தான். அப்போதைக்கு அவங்க மட்டும் தான் அந்த ஸ்கீமை கொண்டு வந்தாங்க. அன்னைல இருந்து மிஸ் கால் கூட போடமுடியாத மாதிரி பண்ணிட்டாங்க அம்மா. ஏன்னா 1 நிமிஷத்துக்கு 2.50 எடுத்துக்குவாங்களாம். 

ஒரு வருஷம் இப்படி ஓடிடுச்சு.  நம்ம ஹீரோ என் கைல ஒரு பார்சல
வாக்கிங் வந்துருக்கேன்.
திணிச்சுட்டு பைக்ல பறந்துட்டார். புது மொபைல் nokia 1100 சிம் கார்டோட. நான் தான் நல்ல புள்ளையாச்சே(நம்புங்க. சத்தியமா). எங்கம்மாகிட்ட அப்படியே குடுத்து விஷயத்த சொன்னதும் அம்மா அப்படியே வாங்கி இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு அப்பறமா வாங்கி கொடுங்கன்னு திருப்பி கொடுக்க அப்பறம் என் பாசக்கார மாமியார் அதட்டி திரும்பவும் என்கிட்டையே கொடுக்க அடேங்கப்பா எனக்குன்னு தனியா மொபைல்ன்னு துள்ளி குதிச்சேன். சிம் வேற போட்டு அவருக்கு ரீசார்ஜ் பண்ணும்போது எனக்கும் சொல்லாம கொள்ளாம பணம் போடுவார். கரும்பு தின்ன கூலியா வேண்டும்னு நானும் கண்டுக்கல. புதுசு புதுசா ஸ்கீம் வந்துச்சு. எல்லாத்தையும் யூஸ் பண்ணி என்னா ஸ்கீம்னு பாத்துட்டு தான் மறு வேலை. அப்பறம் சொன்னபடியே 1 மாசத்துலேயே கல்யாணம் ஆயாச்சு . அந்த வருஷத்துல எழுதுன எக்ஸாம்ல தெரியாத்தனமா பாஸ் பண்ணிட்டேன்னு (உண்மையாவே.ஆனா எத்தன பிட்டு கொண்டு போனன்னு கேக்காதீங்க.ஏன்னா என்பக்கத்துல உக்காந்த புள்ள ரொம்ப அறிவாளி;)) நோக்கியா 6600 மாடல் வாங்கி கொடுத்தார். என் மாமியார் வீட்டில் முதல் செல்போன் வச்சுருந்த பெண் நாந்தான். சோ எல்லாரும் எங்கிட்ட தான் வாங்கிட்டு போய் பேசுவாங்க. அவங்க பேசிட்டு போக மிச்ச நேரத்துல கைக்கு என்ன மாட்டுதோ அதையெல்லாம் ஒரு க்ளிக் க்ளீக்...!!! தூங்குற நேரம் கூட கேம்ஸ் தான். பிடிச்ச பாட்டுலாம் ஒரு மாசத்துக்கு ஒன்னுன்னு மாத்திகிட்டே இருந்தேன். எங்க மாமியார் வீட்டுல ஒரு பழக்கம். யாருக்கு எது பிடிச்சாலும் அவங்க கிட்ட சொல்லி எக்சென்ச் பண்ணிக்கலாம். அவங்களும் ஒன்னுமே சொல்லாம/ விலைலாம் பாக்காம மாத்திகுவாங்க. இப்படியே தான் யாராவது புதுசா வாங்குனா ஒரு மாசத்துல என் மொபைல குடுத்து புதுசு மாத்திக்குவேன். ஒவ்வொரு தடவையும் வெளியே போகும் போது பிரண்ட்ஸ்லாம் பாப்பாங்க. ரொம்ப பெருமையா இருக்கும். ஒரு நாளைக்கு 100 மெசேஜ் ப்ரீ வேற. காலுக்கு நிமிஷத்துக்கு 50 பைசா வேற. சும்மா புகுந்து விளையாடியாச்சு. அப்பறமா ஆளாளுக்கு ஒவ்வொன்னு வாங்க ஆரம்பிச்சாங்க. மாமியார் வீட்டுல இருக்குற 20 பேருக்கும் 28 செல் வச்சுருந்தாங்க. ஒரு மொபைல் பத்தலன்னு பெர்ஸனலா இன்னொரு மொபைலாம். அந்த காலத்துலேயே 6 வரைக்கு படிச்ச எங்க மாமிக்கும் செல் வேண்டும்னு ஆசை வந்துச்சு. அவங்களுக்கு நெம்பர் டயல் பண்ண/அட்டன் பண்ண  மட்டும் சொல்லி கொடுத்தோம். பச்சை கலர் பட்டன் போன் வந்தா பேசுறதுக்கும் சிவப்பு பட்டன் பேசி முடிச்சதும் ஆப் பண்றதுக்கும்னு அவங்களும் டைரில குறிச்சு வச்சுக்கிட்டாங்க.

சென்னையில் இருக்கும் போது பஸ்ஸாகட்டும், ட்ரைன் ஆகட்டும் ரொம்ப தூரம் போகணும் என்பதாலும் போர் அடிக்கும் என்பதாலும் சோனி எரிக்‌ஷன்க்கு மாறுனேன். பாட்டுலாம் 2 காதுக்கும் மாத்தி மாத்தி வந்து அடிக்கும். அதுவும் ஏ.ஆர் மியூசிக் வேற. அதுல இருந்து எங்க வீட்டுலையும் எல்லாரும் சோனிஎரிக்‌ஷனுக்கு மாறுனாங்க. என்ன புதுசா வந்தாலும் போட்டி போட்டு முதல் ஆளா வாங்குவது நான் தான் (அதுசரி நம்ம பணமா? ஹஸ் பணம் தானே) ஆனா வீடியோவும்,போட்டோஸும் தான் தெளிவாவே இல்ல ;(


சீக்கிரமா கஞ்சி கொண்டு வா
அப்பறம் ஒரு கட்டத்துல மொபைல் மேல இருந்த நாட்டமே இல்லாம போச்சு. எப்படினா குப்பை கொட்ட வாசலுக்கு போனேன். நான் உங்க வீட்டு பிள்ளை,இது ஊறரிந்த உண்மை”ன்னு பாட்டு கேட்டுச்சு, குப்பை கூடையை ஒரு கைல வாங்கிட்டு இன்னொரு கைல வந்த போன அட்டன் பண்றாரு அந்த குப்பை அள்ளுறவர். அப்பறம் தயிர்காரம்மா  “மகன் புதுசா வாங்கி கொடுத்தான் ஆனா அப்பத இருந்து சிணுங்கவே இல்ல.என்னன்னு பாரு ஆத்தா”னு சுருக்கு பைல இருந்து சுவிட்ச் ஆப் ஆன செல்போனை எடுத்து காமிச்சுச்சு. அயர்ன் பண்ண போன எடத்துல  “தாயீ எல்லாரும் பாட்டு வச்சுருக்காங்கள! அது மாதிரி  டைலாமோ பாட்டு வச்சு குடேன். மாசம் 30 ரூபாய் தானே”ன்னு எங்கிட்ட குடுத்தாரு. அப்பறம் சாயங்காலம் பூக்காரம்மா பூவ குடுத்துட்டு. “இது நல்லா இருக்கான்னு பாரேன். போன தடவ வாங்குனத என் மகன் வாங்கிபுட்டான் மறுபடியும் யென் வூட்டுக்காரவுக வாங்கி தந்தாவுக”ன்னு வாழை இலைல மறச்சு வச்சுருந்த மொபைல்ல குடுத்துச்சு. தென்ன மரத்துல எளநீ பறிச்சு கொடுக்க வந்தவர் போன் மேல இருந்து கீழ விழுந்தாலும் விழுகும்னு என்னை நம்பி அவர் 7000 ரூபாய் மொபைல குடுத்தார். செம காஸா இருக்கேன்னு கேட்டதுக்கு என் வூட்டுக்காரி இதவிட அதிக காசு போன்ன வச்சுருக்காம்மா. அவ தம்பி சவூதில இருந்து வாங்கிட்டு வந்து குடுத்தான்.இதுவும் அவென் குடுத்ததுதேன்”ன்னு இழிச்சார். இதை விட கொடும சென்னைக்கு போன புதிதில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷனில் சப்வேல ஒரு பொண்ணு உக்காந்துட்டு இருந்தா. பாக்க பாவமா இருந்துச்சு. பணம் கொடுக்க கேன் பேக்கை திறந்தேன். ஆனா 20 ரூபாய் தாளும், 50 நூறுமா இருந்துச்சு, உடனே அந்த பொண்ணு சில்லற மாத்தி தரேன்னு பக்கத்துல வச்சுருந்த பின்னல்கூடைல எடுத்துட்டு இருக்கும் போது செல்போன் கீழ விழுந்துச்சு. என்னை பார்த்ததும் டக்குன்னு உள்ள ஒளிச்சு வச்சா. நானும் கண்டுக்காம தட்டுல சில்லறைய போட்டுட்டு வந்துட்டேன்.

இப்படியே தாங்க. இதெல்லாம் இன்னும் 5 வருஷத்துலேயோ 6 
வடபழனிக்கு வந்துடுங்க! அங்கே வாங்கிக்கிறேன்
வருஷத்துலேயோ அவுட் ஆப் பேஷனா ஆக போகுது. அதுக்கு முன்னாடி நாம்மளே தூக்கி போட்டுடுவோம்னு 3 வருஷத்துக்கு முன்னாடி என்னவர்கிட்ட குடுத்தது தான். தொடவே இல்ல. அத தான் பீரோல இருந்து தூசு தட்டி அதட்டி குடுத்தார். இப்ப ஏன் இந்த மேட்டர சொல்றேன்னு தானே நெனைக்கிறீங்க அமினாபாத்ல எறங்குனதும் ஒரு பெரிய கட்அவுட். ஒரு சிம் 5 ரூபாயாம். ஒரு சிம் வாங்குனா ஒன்னொரு சிம் இலவசமாம். லைப் லாங் சிம் 50 ரூபாயாம்(போக போக விலைவாசி ஜெட் வேகத்துல போகும்னு பாத்தா இப்படி சீப்பா போயிருக்கு). அதை பார்த்ததும் எங்கம்மா இன்னும் பத்திரமா பாதுகாத்து வச்சுருக்குறத நெனச்சு சிரிக்கிறதா பரிதாபப்படுறதான்னு தெரியல. இதெல்லாம் நெனச்சுட்டு இருக்கும் போதே கேன்பேக்ல 1 மணி நேரமா தூங்கிட்டு இருந்த மொபைலை எடுத்தா 10 மிஸ்டு காலும் ஒரு எஸ் எம் எஸ் வந்துச்சு.அந்த எஸ் எம் எஸ் ல  “கட தெருக்கு போனதா மகன் சொன்னான்.சின்ன கரை வச்சு பனாரஸா வாங்கிட்டு வா மா” இது எங்க மாமி(ரொம்ப முன்னேறிட்டாங்க :)) மறுபடியும் போன் வந்துச்சு.இப்பவும் எங்கமாமி தான். “அம்மா நான் கவனிக்கல. ஒரே எரச்சலா இருக்கு.அதான் சத்தம் கேக்கல. எப்படி மா இருக்கீங்க?” , “பரவால டா தங்கம் அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள்.இது சொல்ல தான் கூப்பிட்டேன்” அப்பறம் வரிசையா எங்க வீட்டு செல்லக்குட்டிங்க விஸ் பண்ணிட்டு பெரிய லிஸ்டே குடுத்துச்சுங்க.

//இன்னைக்கு காலைல நாளைக்கு கிருஸ்மஸ் செலிப்ரேஷனுக்காக அமினாபாத்க்கு போனேன்(காரணம் கீழே).//
காரணம் இது தான். 4 வருஷத்துக்கு முன்னாடி அதாவது டிசம்பர் 25 ந்தேதி பத்தாயிரம் பேர் சேர்ந்து என் கைல என்னவர ஒப்படைச்சு “வெங்காயம் வெட்டும் போது வர கண்ணீர மட்டும் தான் நாங்க பாக்கணும்னு”ஆனந்த கண்ணீர் விட்ட நாள் ;))


உலகில் உள்ள  எல்லாருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.  நல்லபடியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க. நாளைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான் குட்டி சுவர்க்கத்துக்கு லீவு.  26 ந்தேதி வழக்கம் போல கடை திறக்கப்படும். நமக்கு கடமை கண்ணியம் கட்டுபாடு ரொம்ப முக்கியம். அப்பறம் சொல்ல மறந்துட்டேனே  நேத்து நைட் 10 மணிக்கு வெளியே குளிர் காயும் போது சாண்டா தாத்தா ஷாம்க்கு சாக்லேட் குடுத்துட்டு போனார். ஆனா ஷாம் தான் பயந்துட்டார் :))

,

78 comments:

 1. ஐ..வடை எனக்கே எனக்கா?படிச்சுட்டு அப்புறமா வர்ரேன்.

  ReplyDelete
 2. திருமண நாள் வாழ்த்துக்கள் சகோ!
  பழைய நினைவுகளுக்கு உங்க கூட சேர்ந்து நானும் போயிட்டு வந்தேன் ;)

  ReplyDelete
 3. ஹை, ஆமி ஹேப்பி அனிவர்சரி.
  என்ன ஷாப்பிங்க் பண்ணினீங்க? சொல்லவே இல்லியே. ஒருகிலோ வெங்காயமா?!!!!!!!!!!!1

  ReplyDelete
 4. ஆமி செல்போன் பத்தி இதுக்குமேலயும்
  யாராலயும் “உபயோகமா” சொல்லமுடியாது.!!!!!!!!!!!!!!!!!
  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. திருமண நாள் வாழ்த்துக்கள்.....பதிவும் சூப்பர்.....

  ReplyDelete
 8. அலைபேசி தகவலுக்கு நன்றிங்க....

  திருமண நாள் மற்றும் கிருஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........

  ReplyDelete
 9. MANY MORE HAPPY RETURNS OF THE DAY..
  அருமை சகோ ஆமினா அவர்களுக்கு,இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...


  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 10. வெகு சுவாரஸ்யத்துடன் செல்போன் சரிதையை சொல்லி சிரிக்க வைத்துவிட்டீர்கள் ஆமினா.மனம் கனிந்த மண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!!

  ReplyDelete
 11. நல்லா இருக்கு உங்க நினைவலைகள்! திருமண நாள் வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 12. திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 13. திருமணநாள் வாழ்த்துக்கள்! ஆமா.. அது என்ன லவ் பண்ணாலும் ரீசார்ஜ் பண்ணனும், சரின்னு நிச்சயம் பண்ணாலும் மாப்ளதான் ரீசார்ஜ் பண்ணனுமா? நீங்கலாம் கொடுத்துவச்சவங்க!

  ReplyDelete
 14. ரொம்ப சந்தோசங்க.. திருமண நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. //இன்னைக்கு காலைல நாளைக்கு கிருஸ்மஸ் செலிப்ரேஷனுக்காக அமினாபாத்க்கு போனேன்(காரணம் கீழே).//

  காரணம் இதுதான் ,நாற்ப்பது வருசத்திற்கு முன்னாடி அதாவது டிசம்பர் 25 ஆம் தேதி காலை 7 :30 மணிக்கு எட்டு பட்டி மக்களும் அந்நியனின் தாத்தாவுமா சேர்ந்து என் கையிலே என்னவரை ஒப்படைச்ச போது எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சு,காரணம் எல்லோரும் பெண்ணைத்தான் ஆணின் கையில் பிடித்துக் கொடுப்பார்கள் ஆனால் அந்நியனின் தாத்தா எட்டு பட்டிக்கும் நாட்டாமையா இருந்த காரனத்துனாலே எல்லாமே தலை கீளாததான் நடந்துச்சு.


  வேலைக்காரி : ஏம்மா அடிக்கடி உங்கள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேக்குதே அவ்வளவு சந்தோசமா ?

  வீட்டுக் காரி : போடி...நீ வேறே..ஆத்திரத்தில் பாத்திரத்தை எடுத்து அவர் மீது வீசுவேன் அவர்மேலே பட்டால் நான் சிரிப்பேன் படலைனா அவர் சிரிப்பார்.

  வேலைக்காரி : அதானே பார்த்தேன்.........
  -------------------------------------------------------------
  அமைச்சர் : மன்னா...மனைவியை அடிப்பவருக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா ?

  மன்னர் : வேண்டாம் அமைச்சரே அவ்வளவு தைரியசாலிகளை நம் படையில் சேர்த்து விடுங்கள்.

  -----------------------------------------------------------------

  கண் டாக்ட்டர் : அந்த போர்டிலே என்ன எழுதி இருக்குனு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்.

  நோயாளி : போர்டு எங்கே இருக்கு டாக்ட்டர் ?

  டாக்டர் : கிளிஞ்சது கிருஸ்ணகிரி.

  -----------------------------------------------------------------

  சரிங்கோ....கல்யாண வாழ்த்துக்கள் ... நீண்ட ஆயிளோடு நிறைந்த செல்வங்களோடு பதினாறும் பெற்று நோயின்றி,குறையின்றி,வாழ வாழ்த்துகிறேன்.( பதினாறு என்பது செல்வங்களை குறிக்கும் சொல் )

  ReplyDelete
 16. சகோதரி ஆமினாவுக்கு வணக்கமும், திருமண நாள் வாழ்த்துக்களும்.
  எனது வலைப்பூக்களை தொடர்ந்து வருவதை தமிழ் இன்ட்லி இணையப் பக்கத்தில் கண்டேன்.
  ஆதரவுக்கு நன்றி. அருமையாக பதிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.

  --
  'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
  ---------------------------------------------------
  பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
  ----------------------------------------------------
  வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
  வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

  ReplyDelete
 17. அருமை சகோ ஆமினா அவர்களுக்கு,
  இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...
  இறைவன் உங்களுக்கு நல்லருள் பாக்கியம் நல்கட்டும். மேலும் உங்கள் இருவர் மீதும் அபிவிருத்தியை பொழியட்டும். உங்கள் இருவரையும் நல்ல விஷயத்தில் ஒன்று சேர்க்கட்டும்.

  ReplyDelete
 18. >>> திருமண நாள் வாழ்த்துகள், ஆமினா!!
  //காரணம் இது தான். 4 வருஷத்துக்கு முன்னாடி அதாவது டிசம்பர் 25 ந்தேதி பத்தாயிரம் பேர் சேர்ந்து என் கைல என்னவர ஒப்படைச்சு “வெங்காயம் வெட்டும் போது வர கண்ணீர ////மட்டும் தான் நாங்க பாக்கணும்னு”ஆனந்த கண்ணீர் விட்ட நாள் //

  >>> நீங்க வேற எதுக்கு வெங்காயத்தை ஞாபகப்படுத்தறீங்க ...விக்கிற விலைவாசில..

  ReplyDelete
 19. @ஆனந்தி

  //happy anniversary aami:)))//
  மிக்க நன்றி ஆனந்தி

  ReplyDelete
 20. @ஸாதிகா அக்கா

  //ஐ..வடை எனக்கே எனக்கா?படிச்சுட்டு அப்புறமா வர்ரேன்.//
  ஒரு நிமிஷத்துல வட போச்சே.....!!!!
  பரவாயில்ல விடுங்கக்கா.... நான் வீட்டுக்கே வந்து தரேன் :))

  வருகைக்கு மிக்க நன்றி அக்கா

  ReplyDelete
 21. @ பாலாஜி
  மிக்க நன்றி சகோ

  அப்படியா? நல்ல வேளை வந்துட்டீங்க :)

  ReplyDelete
 22. @கோமு

  தேங்க்ஸ் கோமு

  //என்ன ஷாப்பிங்க் பண்ணினீங்க? சொல்லவே இல்லியே. ஒருகிலோ வெங்காயமா?!!!!!!!!!!!//

  அடுத்த பதிவு அது தான் :) 1 இல்ல 3 கிலோ வாங்கிட்டேன் :))

  ReplyDelete
 23. //ஆமி செல்போன் பத்தி இதுக்குமேலயும்
  யாராலயும் “உபயோகமா” சொல்லமுடியாது.!!!!!!!!!!!!!!!!!//

  ஓவரா பேசிட்டேனோ?!! :)

  மிக்க நன்றிம்மா!!!

  ReplyDelete
 24. @வார்த்தை

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 25. @திலீப்

  மிக்க நன்றிங்க வாழ்த்துக்கு!!

  ReplyDelete
 26. @ எல் கே

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 27. @ஹாஜா

  மிக்க நன்றிங்க 2 வாழ்த்துக்கு :)

  ReplyDelete
 28. @ மாணவன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 29. @ரஜின்

  அடேங்கப்பா

  இவ்வளவு வாழ்த்துக்களா? மொத்தமாவாங்கிக்கிட்டேன்....

  ரொம்ப நன்றி சகோ

  ReplyDelete
 30. //வெகு சுவாரஸ்யத்துடன் செல்போன் சரிதையை சொல்லி சிரிக்க வைத்துவிட்டீர்கள் ஆமினா//

  நன்றிக்கா!!

  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!!

  ReplyDelete
 31. @ஜீ

  //நல்லா இருக்கு உங்க நினைவலைகள்!//

  அப்படியா? மிக்க நன்றி சகோ

  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 32. @ஜெய்

  மிக்க நன்றி ஜெய்

  ReplyDelete
 33. @வைகை

  //அது என்ன லவ் பண்ணாலும் ரீசார்ஜ் பண்ணனும், சரின்னு நிச்சயம் பண்ணாலும் மாப்ளதான் ரீசார்ஜ் பண்ணனுமா? //

  இப்படி இருக்குமோ...!!!

  இப்பவே பாத்துக்கோ... இப்படி தான் சம்பாரிச்சு உன்னை கண் கலங்காம பாத்துக்குவேன்னு சிம்பாலிக்கா காட்டுறாங்களோ என்னவோ?!! :)) ரீசார்ஜ் பண்ணி குடுக்குறது இப்ப ஒரு தகுதியாவே போச்சு ;))

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க!!

  ReplyDelete
 34. @பாபு

  மிக்க நன்றி பாபு

  ReplyDelete
 35. @அந்நியன் தாத்தா

  எல்லாரும் வாழ்த்து தான் சொன்னாங்க. நீங்க சிரிக்க வச்சு அதையே எனக்கு பரிசா கொடுத்துட்டீங்க!! ரொம்ப நன்றி தாத்தா...

  என்ன ஒரு கவல. முடிய முன்னாடி தொங்கப்போட்டுட்டு இருக்குறதுனால யாரும் உங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்களே... அதுவுமில்லாம முன்னாடி 3 பல் வேற காணாம். கண்ணு வேற சரியா தெரியல. என்ன பண்ண? கடவுள் விட்ட வழி!!!

  ஊருக்கே வழி காமிச்ச உங்களுக்கு இன்னும் வழி இல்லையே ;(

  :))

  ReplyDelete
 36. @அஸ்வின் ஜி

  மிக்க நன்றிங்க !!

  நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. @அமுதா
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 38. @ஆஷிக்

  மிக்க நன்றி சகோ மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு!!!

  ReplyDelete
 39. @முத்துலெட்சுமி

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 40. @சிவகுமார்

  மிக்க நன்றி சகோ
  //>>> நீங்க வேற எதுக்கு வெங்காயத்தை ஞாபகப்படுத்தறீங்க ...விக்கிற விலைவாசில..//
  எது நெனச்சாலும் காஸ்ட்லியா நெனைக்கணும்னு ஒரு கொள்கை தான் ;))

  ReplyDelete
 41. லக்னோ வில் குளிர் அதிகமாக இருக்குமே. இந்த மாதம்(4-7) ஒரு திருமண வைபவதில் கலந்துகொள்ள நானும் என் மனைவியும் கான்பூர் வந்திருந்தோம்(பதிவும் போட்டிருக்கிறேன்).நான் கான்பூரில் வேலை பார்த்த காலத்தில் லக்னோ வந்திருக்கிறேன்.அங்கே பூல்புலையா,படா இமாம்பாரா,சோட்டா இமாம்பாரா எல்லாம் பார்த்ததாக ஞாபகம். கொஞ்ச்ம் நெருக்கடியான ஊர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடம். லக்னோ சிக்கன்(இது வேற சிக்கன்) குர்தா மற்றும் சாரிகள் ரொம்ப ஃபேமஸ். சரி உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. @இனியவன்

  ஐய்யோ விஷப்பனிங்க. நம்மூர்ல மார்கழி பனிக்கே வீட்டுல ஒளிவாங்க. அத விட 20 மடங்கு அதிகமா இருக்கு(7*c ). மதியம் கூட :(

  இப்ப தான் உங்க கட்டுரை படிச்சுட்டு வந்தேன். நல்லா எழுதியிருக்கீங்க. பூல்புலையா பத்தி கட்டுரை எழுதியிருக்கேன், நேரம் இருக்கும் போது பாருங்க :))

  //சிக்கன்(இது வேற சிக்கன்) குர்தா மற்றும் சாரிகள் ரொம்ப ஃபேமஸ்.//
  சிக்கன்காரின்னு சொல்லுவாங்க :))

  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 43. @ ரவிகுமார்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 44. செல்போனில் இம்பூட்டு இருக்கா??
  இனிய மணநாள் வாழ்த்துக்கள். என்ன ஸ்பெசல்ன்னு வந்து சொல்லுங்க??

  ReplyDelete
 45. சகோ ஆமினா,ராப்தி சாகர் இரயிலை விட்டால் அங்கே(ஒரே வண்டியில்) போக வேறு இரயில் இல்லை. அந்த இரயிலை பொறுத்தவரையில் தென்னிந்தியாவை தாண்டிவிட்டால் ரிசர்வேசன் ,ஜெனரல் எல்லாம் ஒன்றுதான். குளிர்சாதன பெட்டியில் சென்றால் பிரச்சனை இருந் திருக்காது. குளிர்காலமாகையால் ஸ்லீப்பரில் சென்றோம். எனக்கும் ஸ்லீப்பர்தான் பிடிக்கும் அப்போதான் பிரயாண சுகத்தை அனுபவிக்க முடியும். தென்னிந்திய இரயில் நிர்வாகத்தை நோக்குகையில் வட இந்திய நிர்வாகம் வெறும் குப்பை(12 வருட அனுபவம்). என்னதான் சொல்லுங்கள் அங்கே ஒரு தமிழ் நண்பன் கிடைத்தால் அது மாதிரி சந்தோஷம் வேறு கிடையாது. எனக்கும் கிடைத்தார்கள் அந்த நாளை நினைக்கும் போது இன்றும் நெஞ்சு இனிக்கிறது. இப்போது என்னைப்போல் அவர்களும் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்கள், என்றாலும் நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் அவை.சரி நீங்கள் எப்படி அங்கே போய் சேர்ந்தீர்கள்?.

  ReplyDelete
 46. செல்போனை வைத்து
  எங்கும்
  'செல்'லாம
  'சொ'ல்லாம்
  படிக்க வைத்துட்டீங்க...

  ReplyDelete
 47. கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.....
  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...


  பாவம் உங்கள் கணவர் சந்தோசமும் துக்கமும் சேர்ந்தே வருதே என்ன பண்ணுவாரு.#நக்கல்ஸ்

  மிசஸ் வந்தா நிறைய மிஸ் ஆயிடுமா# டவுட்டு.

  ReplyDelete
 48. பழைய நினைவுகளை அனைவருடன் பகிர்ந்தது அருமை.

  ReplyDelete
 49. Happy marrage life aamina! this is the first time i visit your blog. great

  ReplyDelete
 50. @வானதி

  மிக்க நன்றி வானதி......

  பெருஷா என்னத்த ஸ்பெஷல்? எப்பவும் போல ட்ரஸ்,விருந்து,ஊர்சுற்றல் தான் ;))

  ReplyDelete
 51. @இனியவன்

  லக்னோ மெயில் அப்படின்னு ஒரு எழவு புடிச்ச வண்டி இருக்கு சார். சென்னைல இருந்து லக்னோக்கு ராப்தி சாகர் 36. ஆனா ஆனா அது 44 மணி நேரம். பட்டி தொட்டில உள்ள ஸ்டாப்லலாம் நிப்பாட்டுவான். கேண்டீன் வசதி இல்லாதது தான் பெரிய தொந்தரவு. அதுனாலேயே யாரும் அதை விரும்புறதில்ல. ஆனா ராப்தி ல உக்காந்தா ஊர் போய் சேரதுக்குள்ள 3 ஆயிரம் காலியாகிடும். வரிசையா சாப்பாடு போய்ட்டே இருக்கும். அதுனால தான் அது எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னவர் ட்ரான்ஸ்போர்டிங் கம்பெனி வச்சுருக்குறதுனால (உத்திர பிரதேஷ் முழுவதும்) இங்கே இருக்கோம். 2 மாசம் கான்பூர்ல தான் இருந்தேன்....

  வருகைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 52. @....

  (என்னங்க பேரு இது? ரொம்ப வித்தியாசமா இருக்கு. பட் ஐ லைக் இட்;)

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 53. @பலே பாண்டியா

  //பாவம் உங்கள் கணவர் சந்தோசமும் துக்கமும் சேர்ந்தே வருதே என்ன பண்ணுவாரு.//
  அது தான் தலவிதி சகோ. மதியோட விளையாடலாம் விதியோட விளையாட முடியுமா??

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 54. @இளம் தூயவன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 55. @ரஜீவன்

  thank you so much brother

  அடிக்கடி (கடிவாங்க) வாங்க ;))

  ReplyDelete
 56. உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

  ReplyDelete
 57. நானும் அந்த ஊருக்கு transport corporation of india ltd மூலமாகத்தான் வந்தேன். ஒரு வாரம் லக்னோ இருந்தேன். பின்னர் posting kanpur ல. தமிழ் பசங்க இருந்தனால எங்க சித்தப்பா( tci la regionalmanager) அங்கே போஸ்டிங் போட்டார். பானி, சாவல் என்பதை தவிர இந்தியில் வேறு வார்த்தை தெரியாத காலம் அது.பின்னர் தேறிவிட்டேன்.நன்றி

  ReplyDelete
 58. நகைச்சுவை பதிவாளர் ஆமினா அவர்களுக்கு, எனது இதயங்கனிந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...
  ஆண்டவன் உங்கள் இருவருக்கும் நல் ஆசிர்வாதம் அருளட்டும்.இன்று போல் என்றென்றும் உங்கள் இருவரையும் மகிழ்வோடு இருக்க, ஆசிர்வாதம் பொழிய நான் பிரார்தனை செய்கின்றேன், தாமதமான வாழ்த்துதான் ஆனால் உள் அன்போடும் மனநிறைவோடும் உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன் ..வாழ்க வளமுடன்


  காரணம் இது தான். 4 வருஷத்துக்கு முன்னாடி அதாவது டிசம்பர் 25 ந்தேதி பத்தாயிரம் பேர் சேர்ந்து என் கைல என்னவர ஒப்படைச்சு “வெங்காயம் வெட்டும் போது வர கண்ணீர ////மட்டும் தான் நாங்க பாக்கணும்னு”ஆனந்த கண்ணீர் விட்ட நாள்


  உங்கள் கல்யாணத்திற்கு பத்தாயிரம் பேர் வந்திருந்து வந்தார்களா...அடேங்கப்பா? உங்களுக்கு தமிழ்கத்தில் கட்சி ஆரம்பிக்க நல்ல வாய்ப்புகள்.

  எனது கல்யாணத்திற்கு வந்த எண்ணிக்கையை பார்த்தால் நீங்கள் அதியப் பட்டு போவிர்கள். உங்கள் கல்யாணத்திற்கு வந்தவர்களீன் எண்ணிக்கையில் இருந்து (10,000) 9,995 பேரை கழித்து பார்த்தால் எவ்வள்வு கூட்டம் வந்ததோ அவ்வளவு கூட்டம் எங்கள் கல்யாணத்திற்கு வந்தனர்.( என்ன உங்களுக்கு கூட்டல் கழித்தல் தெரியும் தானே?) உங்களூக்கோ பெற்றோர்கள் உடன் இருந்து கூட்டத்தை சமாளித்து இருப்ப்பார்கள் ஆனால் நான் தனி ஒருவனாக இருந்து என் திருமண கூட்டத்தை சமாளீத்தேன்) என்ன எனக்கு " மாவீரன்" பட்டம் தரப்போகிறீர்களா? அதல்லாம் ரொம்ப அதிகமுங்க

  “A successful marriage requires falling in love many times, always with the same person"

  ReplyDelete
 59. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 60. வாழ்த்துக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 61. சகோ ஆமினா அவர்களுக்கு
  வழக்கம் போல எழுத்து நடை அருமை

  பிறந்த நாள்,திருமண நாள் இவைகளை கொண்டாடுகிற அல்லது
  வாழ்த்து சொல்கிற ஐரோப்பா ஆங்கில காலாச்சாரத்தை பின்பற்றுபவன் கிடையாது

  அதனால் சகோதரி அவர்களுக்கு என்னால் வாழ்த்து சொல்ல முடியவில்லை

  ReplyDelete
 62. என்றும் இனிக்கும் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.ஆமினா நீங்க எதைப்பற்றி சொன்னாலும் நல்ல சுவாரசியமாக சொல்வது தான் உங்க சிறப்பு.நல்ல பகிர்வு.பாராட்டுக்கள் பல.திருமணநாள் எப்படி கொண்டாடினீங்க,என்ன ஸ்பெஷல்?

  ReplyDelete
 63. எழுத்து நடை அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 64. @அப்துல் காதர்

  விருதுக்கு மிக்க நன்றிங்க!!!

  ReplyDelete
 65. @இனியவன்

  உண்மை தான். ட்ரைனில் ஏறினால் கான்பூரில் தான் தமிழ் மக்களை பாக்கலாம் :))

  ReplyDelete
 66. @அவர்கள் உண்மைகள்

  //நகைச்சுவை பதிவாளர் ஆமினா//

  பட்டமா? எனக்கு புகழ்ச்சி பிடிக்காது ஹி...ஹி...ஹி...

  வாழ்த்துக்கலுக்கு நன்றீ சகோ

  சும்மா 10.000ன்னு போட்டேன். சும்மா 2000 பேர் தான் வந்தாங்க:))
  உங்களது லவ் மேரேஜ்ஜா? அடேங்கப்பா....

  வாழ்த்துக்கள்ங்க. லவ் பண்றவங்கள விட லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்!!!

  உங்க மனைவிக்கும் என் வாழ்த்துக்கள சொல்லிடுங்கோ

  ReplyDelete
 67. @பிரியமுடன் ரமேஷ்

  வாழ்த்துக்களூக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 68. @தமிழ் தோட்டம்

  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 69. @ சகோ ஹைதர் அலி

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 70. @ஆசியா

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆசியா

  பெருஷா ஸ்பெஷல் எதுவும் இல்ல பா. புது ட்ரஸ் போட்டுட்டு என் கையாலையே அவருக்கு சமைச்சு கொடுமை படுத்திட்டு ஈவ்னிங் நகர்வலம்...

  ReplyDelete
 71. @தொப்பி தொப்பி

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 72. அருமையான பதிவு,

  திருமண நாள் நல்வாழ்த்துக்கள். சிறப்புடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 73. //Blogger myth-buster said...

  அருமையான பதிவு,

  திருமண நாள் நல்வாழ்த்துக்கள். சிறப்புடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)