முக்கிய அறிவிப்பு :- இறைவனின் மகத்தான கிருபையால் இம்மாணவனுக்கு உதவி செய்ய அமெரிக்க தன்னார்வ தொண்டுநிறுவனம் முன்வந்துள்ளது.  பல இக்கட்டான சூழ்நிலைகளையும்  தாண்டி அந்த மாணவனுக்கு இந்த கல்விஉதவி பெற  வைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் முயன்ற அனைத்து உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றி( உழைத்தவர்கள் ஒன்றா இரண்டா தனித்தனியாக பெயர் கூற? :-). பலரிடத்திலும் பகிர்ந்து இந்த உதவியை கிடைக்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். அதற்கான கூலியை இறைவன் உங்களுக்கு அளிப்பான்.

 சென்னை,வடபழனியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வருபவர் சகோதரர் ஷாஹுல் ஹமீது.  பல சிரமங்களுக்கு மத்தியில் தன்னுடைய மகனை பி.இ முதலாம் ஆண்டு படிக்க வைத்து வருகிறார், அவர் தற்போது கல்லூரி கட்டணம் கட்ட சிரமப்பட்டு கொண்டிருப்பதால் சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு:

ஷாஹுல் ஹமீது,

தொலை பேசி:

இந்த தகவலை பலருக்கும் சேர்க்க உதவிய சகோதரர் மெட்ராஸ்பவன் சிவகுமாருக்கும், தகவலை திரட்ட உதவிய சகோதரர் எதிர்குரல் ஆஷிக்கிற்கும் மிக்க நன்றி.

இந்த தகவலை பலருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் உங்களுக்கும் நன்மையில் பங்குண்டு. செய்வீர்களா?

குறிப்பு- படங்களை பெரிதாக பார்க்க இங்கே க்ளிக்கவும்




23 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  எங்கேயோ போய்டீங்க சகோதரி. உங்களின் இந்த பணிக்கு வல்ல இறைவன் தகுந்த நற்கூலியை தருவானாக..ஆமீன்..

  நான் கூறியவுடன் எனக்கு தகவல் திரட்டி தந்த சகோதரர் அப்துல் அலீம் அவர்களுக்கு ஜசாக்கல்லாஹ்.

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 2. கண்டிப்பாக பலரிடம் இந்தத்தகவலை கொண்டு சேர்ப்போம்.நல்ல முயற்சி பாராட்டுக்கள் அக்கா

  ReplyDelete
 3. முதல் எண்ணுக்கு கால் செய்தேன். ரிங் போகிறது. எடுக்கவில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 4. சகோதரர் சிவகுமார்,

  உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

  //முதல் எண்ணுக்கு கால் செய்தேன். ரிங் போகிறது. எடுக்கவில்லை. //

  வேலை நேரத்தில் போன் எடுக்க மாட்டார். திரும்ப அவராகவே அழைப்பார் அல்லது இரவு ஒன்பது மணியளவில் தொடர்புக்கொள்ளவும்.

  நன்றி..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 5. @சிவா

  இப்போது தான் முதல் எண்ணிற்கு சகோதர சாகுல் ஹமீது உடன் பேசினேன். உதவி தேவைப்படுவதாக சொல்லியிருந்தார் சகோ.

  ReplyDelete
 6. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  துஆவிற்கு நன்றி சகோ. அப்துல் அலீம் அவர்களுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர். நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றால் அவர் பற்றிய முழுவிவரங்கள் கிடைக்காமல் போயிருக்கும். ஜஸக்கல்லாஹ்.

  ReplyDelete
 7. @ராஜ்

  மிக்க நன்றி தம்பி

  ReplyDelete
 8. சலாம் சகோ ஆமினா,
  சிவா போனில் பேசினார். சனிக்கிழமை சென்று நேரடியாக பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இன்ஷா அல்லாஹ் நானும் செல்ல முயற்சிக்கிறேன். நல்ல முயற்சி, உங்கள் அனைவருக்கும் இறைவன் நற்க் கூலி வழங்குவானாக.

  ReplyDelete
 9. நல்ல முயற்சி...பாராட்டுக்கள்...மறுபடி முயன்று பார்க்கிறேன்...

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  பலரும் பார்வையிடும் தளத்தில் இதைப்போன்ற விசயம் பகிரப்படுவது மிக நன்று

  அல்லாஹ் உங்கள் எண்ணத்திற்கும் உதவி தேவைப்படும் அந்த சகோ' களுக்கும் நன்மை ஏற்படுத்துவானாக!

  ReplyDelete
 11. @சகோ சிராஜ்
  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  துஆவிற்கு நன்றி சகோ.

  //சனிக்கிழமை சென்று நேரடியாக பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இன்ஷா அல்லாஹ் நானும் செல்ல முயற்சிக்கிறேன்.//
  இருவரின் முயற்சிக்கும் மிக்க நன்றி. இறைவன் இதற்கான நற்கூலியை இரட்டிப்பாக்கி கொடுக்க வேண்டுகிறேன். இதனால் மேலும் பலதகவல்கள் கிடைக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. @ரெவெரி

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 13. @சகோ குலாம்

  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  வருகைக்கும் துஆவிற்கும் மிக்க நன்றி சகோ. தெரிந்தவர்களிடம் இந்த தகவலை சமர்பித்துவிடுங்கள்.

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்.அருமையான பணி சகோதரி உதவி தேவைப் படும் அந்த சகோதரருக்கு அவரின் எண்ணத்தை பூர்த்தி செய்வதற்கு அல்லாஹ்விடம் என் துஆ..

  இன்ஷா அல்லாஹ் நானும் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்..

  உங்களின் நல்ல எண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலியை தருவானாக.ஆமீன்.

  ReplyDelete
 15. ஸலாம்

  எங்கயோ போயிடீங்க சகோ ...

  இன்ஷா அல்லாஹ்... அந்த சகோதரின் என்னத்தை அல்லாஹ் பூர்த்தி செய்ய இறைவனிடம் வேண்டுகிறேன் ...

  அந்த சகோவை இதுக்கு முயற்சி பண்ண சொல்லுங்க ..

  உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

  முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .
  அஸ்ஸலாமு அழைக்கும்
  இணையத்தள சகோதரர்க்கு இதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
  தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!

  1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445
  2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
  3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
  4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
  5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
  6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
  7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
  8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
  9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
  10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03
  11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
  12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
  13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
  14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
  15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s
  16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
  17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
  18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18

  தயவுசெய்து, இவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்க்கு தெரியப்படுத்தவேண்டுகிறேன்.

  என்னோம நம்மளால முடிஞ்சது ... து ஆ தான் ... நானும் இக்கட்டான சூழ்நிலையில் ...

  அல்லாஹ் மிக அறிந்தவன் ....

  ReplyDelete
 16. உத‌வி ச‌ம்ப‌ந்த‌மான‌ ப‌திவுக்கு என்றுமே ஆத‌ர‌வு உண்டு..இத் த‌க‌வ‌லை ப‌ல‌ரிட‌த்தில் கொண்டு செல்லும் ஆமினாவுக்கு என் பாராட்டுக்க‌ள்..ம‌ற்றோர் துன்ப‌த்தில் ப‌ங்கு கொள்ளுத‌ல் மிக‌ப்பெரிய‌ ம‌ன‌சு உடைய‌வ‌ர்க‌ள்..ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும்..

  ReplyDelete
 17. @ஆயிசா பேகம்

  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  துஆவிற்கு வருகைக்கும் நன்றி ஆயிசா

  ReplyDelete
 18. @சிந்தனை

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  அருமையான தகவல். இதனால் பலருக்கும் உதவிகிடைக்கும். மிக்க நன்றி சகோ.

  இறைவன் இதற்கான நற்கூலியை தர பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 19. @அஹ்மத் இர்ஷாத்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ இர்ஷாத்

  ReplyDelete
 20. im duwa for allah

  ReplyDelete
 21. கட்டாயம் அடுத்த பதிவில் இணைத்து விடுகிறேன் அக்கா...

  ReplyDelete
 22. Well, nalla widayam.. thodarungal

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)