என்னதான் மூடநம்பிக்கைக்கு அழிவுகாலம் வந்துடுச்சுன்னு வசனம் பேசுனாலும் கூட அங்காங்கே கழுதைக்கும் மனுஷனுக்கும் கல்யாணம் போன்ற கேவலமான செய்திகளை கேட்கும் போது incredible india--ன்னு இததேன் சொல்றாய்ங்களோன்னு நெனச்சுபாக்குறதுண்டு. தாஜ்மஹாலும் விவேகானந்தர் பாறைகளும் மட்டுமல்ல நம் கலாச்சாரத்தை கேமராவுடன் அலையும் அயல்நாட்டவருக்கு எடுத்துகூற... வெறும் கட்டடங்களும் சிற்பங்களும் சிலைகளையும் தாண்டி மக்களின் வாழ்க்கை முறைகள் தான் இங்கே முதல் ஆதாரம்.
(சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுறதே வேலையா போச்சு... விஷயத்துக்கு வா :-)ஜனவரி 2ம் தேதி வாக்கில் லக்னோவில் அனைவரின் செல்போனுக்கும் ஒரு தகவல் பறந்தது பறவைகாய்ச்சல் போல்..... புதுவருடத்தில் உலகம் அழிய போகிறது. இரவில் தூங்குபவர்கள் சிலையாகி/கல்லாகி விடுகிறார்கள்(??!!). அதனால் யாரும் இரவில் தூங்கவேண்டாம்...... இந்த விஷயத்த கேட்டு படிக்காதவங்க மட்டுமில்ல ... படிச்சவங்க தான் ரொம்ப பயந்துட்டாங்க. ஏன்னா இந்த படிச்சபயபுள்ளைகளுக்கு தானே மாயன் காலண்டர பத்தி தெரியும்??? (இந்த காரணத்துக்காகதான் நாலாம் ரொம்ப படிக்கல ஹி..ஹி...ஹி...)
காலையில் என்னவர் ஆபிஸ் போன போது வாசலில் தீமூட்டிய விறகுகள் புகை மட்டும் கக்கியபடி பனியில் நனைந்துக்கொண்டிருந்தது. வேலை செய்பவர்கள் எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. எழுப்பிய பின் தான் விஷயம் அவருக்கு தெரிந்தது. ஊர்ல எல்லாபயளும் உயிருக்கு பயந்து குளிர்காய்ந்துக்கொண்டே விடியவிடிய முழுச்சுட்டிருந்துருக்காய்ங்க. நம்ம மட்டும் தூங்கியிருக்கோமேன்னு :-) யாரோ ஒரு லூசுபக்கி மெசேஜ் அனுப்புனா அத நம்புறதா என விஷாரிச்சபோது தான் உத்திரபிரதேஷ் முழுவதும் ஒரே மெசேஜ் பார்வர்ட் ஆனது தெரிஞ்சது. தூங்கி எழுந்தவர்கள் மனுஷங்களா வந்ததை பார்த்தும் கூட நம்பமாட்டேன்னு ஒரே அடம்... (அட மடப்பதர்களா... ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தமுடியாது- விவேக் சொன்னது:-)
போலீஸ் தான் பாவம். இரவு முழுவதும் ரோந்தில் ஈடுபட்டு மக்களுக்கு sms வெறும் வதந்திதான்னு எடுத்துசொல்லி வீட்டிற்குள் போகும்படி பணித்தார்கள். (எப்பவுமே நம்ம ஏரியா பக்கம் இப்படி போலீஸ் வந்து பாத்துருக்க???? அப்ப ஏதோ நடக்க போகுதுன்னு தானே அர்த்தம்?ன்னு சில கும்பல் வேற நியூஸ் பரப்பிடுச்சுங்க). 3 நாட்கள் தொடர்ந்தும் இப்படியாக தான் இரவு பகலாகவும், பகல் இரவாகவும் கழிந்தது. இன்னும் கிராமபுறங்களில் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை என டிரைவர்கள் சொல்லி வருத்தப்பட்டார்கள். பல கடைகளும் பூட்டப்பட்டிருந்தது. மக்களின் வாழ்க்கை நிலை எவ்விதத்திலும் பாதிக்கல (அவங்கதான் பகல்ல தூங்குறாங்களே பின்ன கட அடச்சாதான் என்ன அடைக்கலன்னா தான் என்ன?) ஒட்டு மொத்த மக்களும் முட்டாளாக்கப்பட்ட விஷயம் இப்போது தான் கேள்விபடுகிறேன் :-(
(இம்சை அரசன் 23ம் புலிகேசிக்கு ஒற்றன் லேட்டா வந்து நியூஸ் கொடுத்தானே? அதே போல் நேற்று என்னவருக்கு போன் போட்டு "உங்க ஊர்ல தூங்குறவங்களாம் கல்லாய்ட்டாங்களே அப்படியா??" என கேட்டது தான் தாமதம். (ஹி...ஹி..ஹி... வாங்கிய திட்டுக்களை அப்படியே சொல்ல நா என்ன சுயசரிதையா எழுதிட்டிருக்கேன். சோ அந்த சீன் வேணாம். நல்லவேள லீவ்க்கு நா லக்னோக்கு போகல.. இல்லைன்னா நானும் கல்லாய்ருப்பேன் ஹி...ஹி...ஹி.. :-))
உலகம் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கு :-) சுட்டிகாட்டப்பட்ட அறிகுறிகளும் அதற்கேற்றார் போல் கண்முன்னே நிகழும் காட்சிகளும் ஆதாரங்களாய் ஏன் அறிவியலும் கூட அதையே தான் உறுதிபடுத்துகிறது. ஆனால் இந்தமாதிரி வதந்திகளை பார்த்து முட்டாளாகும் மக்களை தான் பார்க்க பாவமா இருக்கு :-)
மறுஉலக வாழ்க்கைக்கு இன்றே சம்பாதித்தால் நாளைக்கே உலகம் அழிஞ்சா நமக்கென்ன??? :-) மறு உலக வாழ்க்கைக்கு நன்மைகளை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? :-) நன்றே செய்... இன்றிலிருந்தே செய்...
டிஸ்கி- முதல் பாராவுக்கும் இந்த லக்னோவிஷயத்துக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கே மறந்து போச்சு :-) நீங்களே ஊதி பெருசாக்கிக்கோங்க.
டிஸ்கி- ஒருவேள அப்படி நடந்துருந்தா.... தூங்கியவர்கள் கல்லானார்கள்- இவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என சொல்லி ஒரு கும்பல் பணம் பாக்கும் பாருங்க.... ஊரெல்லாம் காலே வைக்க முடியாத அளவுக்கு கல்லானந்தா கோயில்கள்தான் :-)
-ஆமினா முஹம்மத்
நம்புவோர் உலக அழிவை எதிர் பார்த்திருங்கள் அஃது நம்பாதோர் அதற்காக காத்திருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும். (ஆதாரம்- குர்ஆன் 77-7)
Tweet | ||||
:)
ReplyDeleteதூங்கியவர்கள் கல்லானார்கள்- இவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என சொல்லி ஒரு கும்பல் பணம் பாக்கும் பாருங்க.... ஊரெல்லாம் காலே வைக்க முடியாத அளவுக்கு கல்லானந்தா கோயில்கள்தான் :-)
ReplyDeleteஐயோடா தாங்கலியே ஆமி. நீ இன்னும் லக்னோவை விட்டு வெளியே வரலியா?
@மகி
ReplyDelete:-))
@லெட்சுமிமாமி
ReplyDelete//ஐயோடா தாங்கலியே ஆமி. நீ இன்னும் லக்னோவை விட்டு வெளியே வரலியா?//
மக்கள் எல்லாரும் நா லக்னோக்கு திரும்பணும்னு உண்ணாவிரதம் இருக்காங்களாம் மாமி. அதுனால அப்பப்ப லீவ்ல தலைய காமிச்சுட்டு வந்துடுவேன் :-) இப்ப பாம்பே இல்ல தெரியும்தானே?
பாம்பே இல்லியா அப்போ எங்கே? நீ சொன்னாதானே தெரியும்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDelete//மறுஉலக வாழ்க்கைக்கு இன்றே சம்பாதித்தால் நாளைக்கே உலகம் அழிஞ்சா நமக்கென்ன???//
அல்ஹம்துலில்லாஹ்..super perfect.
ஜசாக்கல்லாஹ்.
நானும் முதல் பாராவுக்கும், லக்னோ விசயத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சு யோசிச்சு பார்க்குறேன். இதுவரை புலப்படல. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஏதாவது கிடைக்குதான்னு பாப்போம். :) :)
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நல்லா தான் பீதிய கிளப்பிடுதாங்க.. இப்படித்தான் 2000ல் உலகம் அழியப்போகுதுன்னு பீதிய கிளப்புனானுங்க.. இப்ப இப்படி?.. 12 12 2012ல் உலகம் அழியப்போகுதாம்மே.. அப்ப்....டியா?.. :))
ReplyDeleteமாயமான 2012....
மக்களோட சந்தோசத்தை அன்று இரவு குழி தோண்டி புதைச்சுட்டாங்களே.. சே! ஏன் இப்படில்லாம் இருக்காங்களோ. இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்தான்.. :((
ஸலாம் சகோ.ஆமினா,
ReplyDeleteஇதை படிச்சவங்களில் இனி நிறைய பேரு டிசம்பர் 12, 2012 வரை தூங்க போறதில்லை...!
ஏதோ உங்களாலே முடிஞ்சது....
//டிஸ்கி- முதல் பாராவுக்கும் இந்த லக்னோவிஷயத்துக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கே மறந்து போச்சு :-) நீங்களே ஊதி பெருசாக்கிக்கோங்க.//
---முதல் பாராவில் உள்ள மணல் சிற்பத்துகும் பதிவின் தலைப்பான 'கல்லாய்டுவீங்க'க்கும் உள்ள தொடர்பை போல...
//யாரோ ஒரு லூசுபக்கி மெசேஜ் அனுப்புனா ///
ReplyDeleteஎன்ன தங்கை ஆமீனா நம்ம இராமநாதபுர வட்டார மொழி வாடை அடிக்கிற மாதிரி இருக்கு.
//படிச்சவங்க தான் ரொம்ப பயந்துட்டாங்க. ஏன்னா இந்த படிச்சபயபுள்ளைகளுக்கு தானே மாயன் காலண்டர பத்தி தெரியும்???/
ReplyDeleteமாயன் காலண்டருன்னு சொல்றாய்ங்களே அப்புடியின்ன என்ன? எந்த சந்தையில் விக்கிது
இந்த கமெண்டைப் படிக்காதீர்கள்...கண்கள் பார்வை இழந்துவிடும்..ஹி ஹி...
ReplyDeleteஇன்னும் நம் மக்களிடம் அந்த நம்பிக்கை உள்ளது. நிறைய பேர் நம்பிட்டாங்க...நாமலும் நம்பித்தான் ஆகணும் அப்படிங்கற பயம்.
ReplyDeleteநீங்களே ஊதி பெருசாக்கிக்கோங்க. -:)
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
@லெட்சுமிமாமி
ReplyDelete//பாம்பே இல்லியா அப்போ எங்கே? நீ சொன்னாதானே தெரியும்.//
ஒருமாசம் ஆய்டுச்சு மாமி. ஆன்லைன்க்கு வந்தா சொல்லலாம்னு நினைத்தேன். நீங்க ரொம்ம்ம்ம்ம்ப பிசி போல ஹி...ஹி...ஹி...
@சகோ ஆஷிக் அஹ்மத்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
//னும் முதல் பாராவுக்கும், லக்னோ விசயத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சு யோசிச்சு பார்க்குறேன். இதுவரை புலப்படல.//
நானும் அததான் சகோ யோசிச்சுட்டிருக்கேன்.. எனக்கும் புலப்படல... 2 நாள் டைம் குடுங்க... யோசிச்சுபார்த்து சொல்றேன் :-))
@ஸ்டார்ஜன் அண்ணா
ReplyDelete//மக்களோட சந்தோசத்தை அன்று இரவு குழி தோண்டி புதைச்சுட்டாங்களே.. சே//
புத்தாண்டு கொண்டாடங்கள் 100க்கு 5 சதவீதம் தான் அங்கு நடக்கும் என்பது வேறு விஷயம் (விஷப்பனி காரணமாக). ஆனால் நீங்கள் சொல்வது போல் உயிரை கைய்யில் பிடித்துக்கொண்டு அவர்கள் நகர்த்திய இரவுகளை நினைத்தால் பாவமாதான் இருக்கு
@சகோ ஆஷிக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
இதுவும் நல்லா இருக்கே.. பேசாம எல்லா ப்ளாக்கிலும் டெம்ளேட் கமென்ட்டா இத போட்டுடலாம் :-)
////டிஸ்கி- முதல் பாராவுக்கும் இந்த லக்னோவிஷயத்துக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கே மறந்து போச்சு :-) நீங்களே ஊதி பெருசாக்கிக்கோங்க.//
---முதல் பாராவில் உள்ள மணல் சிற்பத்துகும் பதிவின் தலைப்பான 'கல்லாய்டுவீங்க'க்கும் உள்ள தொடர்பை போல...//
அதேதான்.. கண்டுபிடிச்சுட்டீங்களே
(கல்சிற்பம்னு தேடுனா கஜுராஹோ, எலிபெண்டா காட்டுது :-)
@ஹைதர் அண்ணா
ReplyDelete////யாரோ ஒரு லூசுபக்கி மெசேஜ் அனுப்புனா ///
என்ன தங்கை ஆமீனா நம்ம இராமநாதபுர வட்டார மொழி வாடை அடிக்கிற மாதிரி இருக்கு.//
ஊர் பேர இப்படியாவது காப்பதாலாம்னுதான் :-)
@ஹைதர் அண்ணா
ReplyDelete//மாயன் காலண்டருன்னு சொல்றாய்ங்களே அப்புடியின்ன என்ன? எந்த சந்தையில் விக்கிது//
சகோ ஆஷிக் அஹ்மத் தான் மாயன் பத்தி ஆராய்ச்சி பண்ணி ஒருபதிவு போட்டாரு. அவர்கிட்ட அந்த காலண்டர் இருந்தாலும் இருக்கும். பாண்டிச்சேரில இருந்து பார்சல்ல போட சொல்லிடலாம் :-)
@மயிலன்
ReplyDelete//இந்த கமெண்டைப் படிக்காதீர்கள்...கண்கள் பார்வை இழந்துவிடும்..ஹி ஹி..//
மயிலன் ப்ளாக்குக்கு போகாதீங்க.. வைரஸ் இருக்கு.....-----இது நல்லா இருக்குல? ஹி...ஹி...ஹி..
@ரெவெரி
ReplyDelete:-)
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
எங்காத்துக்கெல்லாம் வருவாருன்னு ரொம்ப நம்பினேன் நீயாவது சொல்லி இருக்கலாமில்லே.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹை...உலகம் அழியப்போகுதா... அப்பாடா... சேர்த்த பாவமெல்லாம் போதும்... இருக்கிற கொஞ்ச நஞ்ச நன்மைகளுக்கு இப்ப போனாலாவது சொர்க்கத்துல சின்னதா ஏதாவது இடம் கிடைக்குதான்னு பார்க்கலாம் ;)
ReplyDeletesuper perfect .....
ReplyDeleteஇப்படி ஏதாச்சும் புகைய கிளப்பிவிட்டுறதாலதான் பனி அதிகமா இருக்கோ...
ReplyDeleteஉலகமாவது அழியிறதாவது.அட்டகாசம் கூடிகிட்டே போகுதில்ல !
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
ReplyDeleteஅன்புள்ள தொம்பி அக்காவுக்கு எழுதுவது [ குறிப்பு : சண்டை போட வரலை ]
ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா
ஒருவர் சலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும்
முழுமையாகச் சொல்ல வேண்டுமா?
மன்சூர் தம்மாம்
ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
வபரகாத்துஹு என்று பூரணமாக சலாம் கூறும் போது நாமும்
அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி
வபரகாத்துஹு என்று பூரணமாக சலாத்திற்கு பதில் தர
வேண்டும்.
ஏனென்றால் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை
விட சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ்
கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் சலாம் முதலில் சலாம்
கூறியவரின் சலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது
அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய
முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்!
அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும்
கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 86)
ஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு சலாம்
சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய
சலாத்தை விட சிறந்த சலாத்தைக் கூறினார்கள். அந்த
மலக்குமார்கள் கூறிய சலாமே முஹம்மது நபியின்
சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய சலாமாகும்.
அல்லாஹ் ஆதமைத் தன்னுடைய உருவில் படைத்தான்.
அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது.
அவர்களைப் படைத்த போது நீங்கள் சென்று அங்கு அமர்ந்து
கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள்.
அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்
கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் உங்களது முகமனும்
உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன்
சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள்
(வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று
முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும்
உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (6227)
மேலும் பதில் சலாம் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் கடமை
என்று கூறியுள்ளார்கள். சலாம் கூறியவர் பூரணமாக சலாம் கூறி
நாம் குறைவாக பதில் சலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய
வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகி
விடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓரு முஸ்லிம் (இன்னொரு
முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.
1. சலாமிற்குப் பதில் சொல்லுதல்.
2. நோயாளியை நலம் விசாரித்தல்.
3. ஜனாசாவைப் பின்தொடர்ந்து செல்லுதல்.
4. அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்.
5. தும்மியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரலி
நூல் : ( புகாரி 1240 )
சலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவூத் (793)
சலாம் கூறியவருக்காக இறைவனிடம் சாந்தியை
வேண்டுவதுடன் இறைவனுடைய அருளையும்
அபிவிருத்தியையும் சேர்த்து வேண்டினால் நன்மைகள் அதிகம்
கிடைக்கும்.
''நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு
அலைக்கும் '' என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில்
ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்)
அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள்.
பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹ்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்
அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள்
''(இவருக்கு) இருபது (நன்மைகள்)'' என்று கூறினார்கள். பிறகு
மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு'' என்று கூறினார். அவருக்கு
நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி
(ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள்)'' என்று
கூறினார்கள்.''
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல் : அபூ தாவூத் (4521
ஜசகல்லாஹ் : பீ ஜே ..
//மறுஉலக வாழ்க்கைக்கு இன்றே சம்பாதித்தால் நாளைக்கே உலகம் அழிஞ்சா நமக்கென்ன??? :-) மறு உலக வாழ்க்கைக்கு நன்மைகளை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? :-) //நன்றே செய்... இன்றிலிருந்தே செய்...//
சிந்தனை - கடிவாளத்துடன் - தெளிவுடன் ......
கொஞ்ச நேரம் கிடைத்தது, அதி முக்கிய வேளையிலும் ... எனக்கும், என் கும்பதுக்கும் து ஆ செய்யுங்கள் ..
சிந்தனை ... இப்போது சோகத்துடன் ....
இன்ஷா அல்லாஹ் ...
//Aashiq Ahamed said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...//
ஆமினா said...
@சகோ ஆஷிக் அஹ்மத்
வ அலைக்கும் சலாம் வரஹ்..
இதுக்கு தான் முந்தின கமெண்ட் போட்டேன் ...
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய
முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்!
அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும்
கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (4 : 86)
கடமையில் குறைவு வைக்க கூடாது ...
சிந்தனை .... தெளிவுடன்
@சகோ சிந்தனை
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்...
வரஹ் பக்கத்துல ........ போட்டிருக்கேன் பாத்தீங்களா? அதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன்.
அதாவது "சலாம்" என்றால் முழுதாய் அர்த்தம் எடுத்துக்கொள்வது போல் வரஹ்... ன்னு யாரும் படிக்க மாட்டாங்க. சரிதானே? முழுசா தான் எல்லாரும் எடுத்துக்குவாங்கன்னு நெனைக்கிறேன். வார்த்தையில் சொல்லும் சலாமிற்கும் எழுத்தில் சொல்லும் சலாமிற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்க சகோ. மத்தபடி ஹதீஸ்க்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்
//
கடமையில் குறைவு வைக்க கூடாது ...
//
முயல்கிறேன்
Pudikala..eanna mulusaa padikkala.. veettukku poyp paakkalaamunnu irukken
ReplyDelete