வெளியூரில் இருந்து வந்த உறவினர் ஒருவரை சொந்தபந்தங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு கைக்கு வந்தது ( சரி சரி ஒத்துக்குறேன். சாயங்காலம் டீ போட்டு குடிக்க அலுப்புபட்டுதேன் :-) மாலை நேரம் புறப்பட்டோம்.
ரோட்ல போயிட்டிருக்கும் போதே வழிமறித்த ஒரு பெண்மணி என் உறவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் என் உறவினரிடம் "உங்க மகள (கணவனை இழந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது) இப்ப கட்டி கொடுத்தாச்சா?? எத்தனநாள் தான் வச்சுட்டிருப்பீங்க?"
உடனே என் உறவினர் , "சீ...சீ....சீ.... அதெல்லாம் எங்க இதுல கிடையாது"
________
பருவம் அடைந்த உடன் தன் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார் உறவினர். இப்ப படிப்பு தானே முக்கியம். ஏன் இப்படிலாம்? என கேட்டதற்கு "ஐய்யே..... அதெல்லாம் நம்ம இதுல கிடையாது. பொண்ணுங்க வீட்டோட இருந்தா தான் பாதுகாக்க முடியும்"
________
15 வயதே ஆன பெண்ணுக்கு திருமணம் நடத்தப்பட்டது. நல்லா படிக்கிற புள்ளையாச்சே ஏன் இப்படி கட்டி கொடுக்குறீங்க சீக்கிரமா? என கேட்டதுக்கு மணப்பெண்ணின் அப்பா "எங்க 'இதுல' அதெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்ததும் ஒடனே கட்டி கொடுத்துடணும்.
_______
இவையெல்லாம் ஒரு முஸ்லீமால்(?????????!!!!!!!!) தான் சொல்லப்பட்டது. இது அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வாததால் நீங்கள் அதிர்ச்சி ஆகவில்லை தானே? இப்படியே தான் தன் சமூகத்தை மேம்படுத்துவதாய் நினைத்து அதன் நல்ல சட்டதிட்டங்களை கொச்சைபடுத்துகின்றனர் சிலர். ஆனால் இதனை ஆழமாய் யாரும் ஆராய்வதில்லை. இதன் விளைவு என்ன தெரியுமா? :-)
ஹேமா- ஸ்கூட்டி வாங்க போறதா சொன்னியே? என்ன ஆச்சு?
ஆமி- இல்ல....... எங்க அம்மம்மா அதெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க.
ஹேமா- உங்க இதுல இப்படி தான் போ. (சளிப்புடன்)
ஆக்சுவலி ஏன் என் அம்மம்மா வேணாம்னு சொன்னாங்க என்ற காரணத்தையெல்லாம் அவ கேட்கல. பாட்டி வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னு சொன்ன அடுத்த நிமிஷமே சளிப்பை வெளிபடுத்தினாள். . தப்பு அவளிடத்தில் இல்லை. இஸ்லாம் மார்க்கத்தை தழுவியும், இஸ்லாமியராய் பிறந்தும் பலருக்கு முழுமையாய் இஸ்லாம்/குர் ஆன் சொல்லும் சட்டதிட்டங்கள், நபி வாழ்ந்த வாழ்க்கை முறை போன்ற அடிப்படை விஷயங்களும் தெரியாதவர்கள் அதிகம் (இருவருடங்களுக்கு முன் நானும் அப்படியே). அதை பற்றி என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்களை மட்டும் இப்பதிவில் பார்க்கலாம்.
சில விஷயங்கள் தெரிந்தாலும் அதை நடைமுறைபடுத்தினால் சமுதாயத்தில் தனித்து காட்டப்பட்டு தனிமைபடுத்தப்படுகின்றனர். இதனாலேயே பலபேரு தூங்குற மாதிரி நடிக்கிற கொழந்தைங்க தான். (பத்து முட்டாள்கள் அடங்கிய ஒரு குழுவில் ஒரு முட்டாள் மட்டும் திடீர்ன்னு அறிவாளியாய்ட்டா மிச்சம் இருக்குறவிங்களாம் வித்தியாசமா பாப்பாய்ங்களே???? அதே மாதிரி தான். தானும் அறிவாளியாகுறதில்ல... அடுத்தவனையும் விடுறதில்ல........). இது தவறுன்னு தெரியும், ஆனாலும் தட்டி கேட்கமாட்டோம்ல???? பின்ன? பின்விளைவுகள் தான் ரொம்ப மோசமா இருக்கே........
சில உதாரணங்கள்
முன்பெல்லாம் எங்கள் ஊரில் மஹர் என்ற சொல்லையே அகராதில இருந்து எடுத்திருந்தாங்க. பாதி பேருக்கு அப்படின்னா என்னன்னு கூட தெரியாது. பொண்ணு வீட்டுக்காரங்க ஒரு லட்சம் கொடுத்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒரு பவுன்ல செயின் தரணும். இது தான் மஹர் என்ற அளவிலேயே எல்லோர்க்கும் சொல்லிக்கொடுக்கப்பட்டது/கருத்து திணிக்கப்பட்டது. எதிர்க்கும் சிலர் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கருத்தால் ஒடுக்கப்பட்டனர். தனிமைபடுத்தப்பட்டனர். எதுக்கு வம்பு... நாமளும் கூட்டத்தோட கோவிந்தா போட்டுட்டு போய்ட வேண்டியது தான்னு பலர் கம்முன்னிருந்துடுவாங்க.
சமுதாயத்தில் முஸ்லீம் பெண்கள் ஆணாதிக்க குணம் கொண்ட முஸ்லீம் ஆண்களால் ஒடுக்கப்பட்டுள்ளவர்கள் என்ற எண்ணம் இன்று வரை அழியாத கரையாக இருப்பதற்கு இப்படி எக்குதப்பா இஸ்லாத்தையும் குர் ஆனையும் புரிந்துக்கொண்டிருப்பவர்களால் தான்.
எங்கே தன் பேச்சை கேட்க மறுத்துவிட்டுவிடுவாளோ.... தன் பேச்சுக்கள் எடுபடாதோ? தன்னை விட இவள் கருத்துக்கள் சிறந்ததாய் அனைவரும் ஏற்பார்களோ என்ற சைக்கோ மனநிலையில் "நீ என் பேச்சை தான் கேட்கணும். பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூற தகுதியற்றவர்கள். இது தான் நம்ம இஸ்லாத்தில் சொல்லி கொடுத்தது" என தன்னை காப்பாற்ற இஸ்லாத்தை ஆயுதமாக இழுக்கும் சைத்தான்கள் இருக்கவே செய்கிறார்கள். நம்ம பெண்கள் தான் கணவனே கண் கண்ட தெய்வம்னு பொழம்புறவங்களாச்சே... ஒடனே "நீங்க சொன்னா சரிதாங்க"ன்னு ஓடிப்போயி அடுப்பாங்கரைல்ல அப்பளம் சுட்டுட்டிருப்பாங்க. ஆதாரம் எடுத்து கொடுன்னு ஒரு வார்த்தை கேட்டா ஒருவரும் வாய் திறக்க முடியாது என்பதை இந்த பெண்களும் மறந்து விடுகின்றனர்.
நபிமார்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை பற்றிய பெரும்பாலான ஹதீஸ் ஆதாரங்கள், பெண்கள் மூலமாக தான் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த பெண்கள் அன்று இஸ்லாமிய ஆண்களால் ஒடுக்கப்பட்டிருந்தால் எப்படி நமக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கும்? ஆனால் சபையில் அனைவரும் இருக்க, தன் கருத்தை ஒரு பெண் கூற முனைந்தால் அவள் வாய்க்கு பெவிக்விக் தான்??!!!!. பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண்கள் ஆண்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கருத்து கூறக்கூடாது என தங்களுக்குள்ளாகவே சட்டம் வகுத்து அதற்கு இஸ்லாமியச்சாயமும் பூசி அழகுபார்த்தனர் சில பிறவிகள்.
தனக்கு விருப்பமில்லை எனில் அங்கு விருப்பு வெறுப்புக்களை மட்டுமே
விவாதிக்கப்பட வேண்டுமே தவிர உடனே, "இஸ்லாம் அப்படி தான் சொல்லுது"ன்னு நல்லொழுக்கங்களையும் நன்மைகான பாதையை மட்டுமே காட்டும் இஸ்லாம் மார்க்கத்தை இழுப்பது எவ்விதத்திலும் நியாயமான செயல் இல்லையா? இஸ்லாம் என்ற ஒத்த வார்த்தை சொன்னா உடனே விவாதங்கள் அங்கே எழாது, தன் விருப்பமும் எளிதாய் நிறைவேறி விடும் என்று நினைக்கும் சுயநலவாதிகளால் தான் இஸ்லாம் கூறாத இணைவைக்கும் செயல்களும், மூடபழக்கவழக்கங்களும் அரங்கேறி விடுகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வை பற்றி உண்மையை தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் (ஆதார நூல்- 2: 171)
தீர்வு
குர்ஆன் தமிழாக்கத்தை படிங்க.

இது மற்ற சகோதர/சகோதரிகளுக்கு
உங்கள் பார்வைக்கு முன் ஒரு முஸ்லீமானவன் தவறு செய்து அதை நியாயப்படுத்த முயன்றால் தட்டிகேளுங்கள். அவன் "இது தான் என் மார்க்கம் சொல்லி கொடுத்தது" என்றால் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆதாரம் கேளுங்கள். குர் ஆனும், ஹதீஸ்களும் அந்த தவறை தான் முஸ்லீம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது எனில் அதன் பின்னர் "முஸ்லீம்கள் தவறானவர்கள் தான்" என்று திட்டி தீர்க்க உங்களுக்கு உரிமை உண்டு (கவனிக்கவும் குர் ஆன் பரிந்துரைத்தால்) இல்லைன்னா என்கிட்ட சொல்லுங்க. நாளைக்கே ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு போட்டுடலாம் . சரிதானே??? :-) _______________________
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (ஆதார நூல்- குர்ஆன் 2-228)
நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்.(ஆதார நூல்- குர்ஆன் 9-71)
மறுமணத்துக்கு யாரும் தடை விதிக்க கூடாது (பார்க்க- குர்ஆன் 2:232)
பெண்களுக்கு விவாகரத்து உரிமை உள்ளது (பார்க்க- குர்ஆன்- 22:28)
***************************
இன்னும் அதிக முற்போக்கு விஷயங்கள் குர் ஆனில் கொட்டிக்கிடக்கின்றன. அடுத்தடுத்த பதிவுகளில் மார்க்கத்தில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்...
Tweet | ||||
எல்லோரும் அப்படி தவறுதலாக புரிதல் கொண்டிருக்கமாட்டார்கள். நிறைய சமூகத்தில்(ஜாதி) 'அதெல்லாம் எங்க இதுல கிடையாது' என்ற வார்த்தையை கேட்கலாம். இது பரம்பரை குணமோ அல்லது இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு தப்பித்தல் இதில் எதுவாகவும் இருக்கலாம்.
ReplyDeleteநான் வழக்கமா ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டுல சாப்புடுறது வழக்கம் சாப்டு முடிஞ்சதும் என்ன தட்ட எடுக்கவோ வுட
ReplyDeleteமாட்டாங்க அப்றமா கையும் அந்த தட்டுலே கழுவ சொல்லுவாங்க
அப்றமா அதுக்கு அவங்க நீங்க தட்டு எடுத்தா எங்களுக்கு அதுக்குள்ள பலன் கிடைக்காது அப்படின்னு சொன்னங்க ... இது குரான்ல எங்கயாவது சொல்லப்பட்டுருக்க இல்ல என்ன சமாளிக்க அவங்க பண்ணுன திட்டமா ????? Varun Prakash
சகோதரர் வருண் பிரகாஷ்,
ReplyDeleteஉங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
//அப்றமா அதுக்கு அவங்க நீங்க தட்டு எடுத்தா எங்களுக்கு அதுக்குள்ள பலன் கிடைக்காது அப்படின்னு சொன்னங்க ...//
:) :)
விருந்தாளிகளை கண்ணியப்படுத்துவது இஸ்லாம் கூறும் அழகான விசயங்களில் ஒன்று. எனினும் நீங்கள் சொல்வது போல எனக்கு தெரிந்தவரை குர்ஆனில் கிடையாது.
என் வீட்டில், விருந்தாளிகள் சாப்பிட்டு முடித்த பிறகு, விருந்தாளிகளின் தட்டுக்கள் அனைத்தையும் நாங்களே ஒன்றாக எடுப்பது வழக்கம்.
விருந்தாளிகள் சாப்பிட உட்காரும் போது கைகழுவ தண்ணீர் கொடுப்பது, சாப்பிட்ட பின் அந்த பாத்திரத்திலேயே கை கழுவ சொல்வது போன்ற வழக்கங்களும் (சில) முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றன.
உங்கள் முஸ்லிம் நண்பர் செய்வது உங்களுக்கு சங்கடத்தை தந்தால் அவர்களிடம் இதுக்குறித்து அழகான முறையில் கூறிவிடுங்கள். புரிந்து கொள்வார்கள்.
இதையெல்லாம் தாண்டி, விருந்தாளிகள் உண்ணும் பாத்திரங்களை விருந்தளிப்பவர்கள் எடுப்பதில் என்ன கவுரவ குறைச்சல் இருக்கப்போகின்றது? எனக்கு தெரிந்து பல முஸ்லிம்கள் இந்த விசயத்தில் இதையெல்லாம் பார்க்க மாட்டார்கள். ஆகையால், நீங்களும் அவர்களின் நடவடிக்கையால் சங்கடப்பட வேண்டாம் என்பது என் கருத்து.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
மாற்று மதத்தை குறை சொல்லாமல் தம் மதத்தில் உள்ள நிறை குறைகளை அலசிபார்க்கும் பதிவாக உங்கள் பதிவு இருக்கிறது. வாழ்த்துக்கள் ஆமினா அம்மா. மதத்தில் உள்ள உபயோகமான சிலவற்றை தமக்கு சாதகமாக்கி கொண்டு மற்றவைகளை மூடிமறைத்து வேசமிடும் மதவாதிகள்தான் இப்போது அதிகம்.
ReplyDeleteமதத்தை திவிரமாக பின்பற்றும் அரேபிய நாடுகளில் பெண்னை மணக்க விருக்கும் ஆண்தான் பெண்ணுக்கு அதிக பணம் கொடுத்து மணம் முடிக்க வேண்டும் ஆனால் அதே மதத்தில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் பெண் வீட்டாரிடம் இருந்து பணம் பறிக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிபட்ட செயலால் எத்தனை பெண்கள் மணம் முடிக்காமல் கஷ்டபடுகிறார்கள் என்பதை இந்த மத தலைவர்கள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
எனக்கு மதத்தைவிட மனித மனம் பிடிக்கும் அதனால்தான் நான் எந்த வித மதவாத பதிவுகளுக்கும் கருத்து ஈடமாட்டேன். உங்களின் நல்ல மனத்தை இந்த பதிவின் மூலம் அறிந்ததால்தான் இந்த நீண்ட கருத்து.
எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் செயல்களும் நல்லவையாக இருக்கும் என்று நினைப்பவன் நான். அதை நீங்கள் கடைபிடிப்பதால் உங்களுக்கு என் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
சகோதரி அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
மிக அழகான, அருமையான, ஆழமான விளக்கங்கள். ரொம்ப தெளிவாக எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள். ஜசாக்கல்லாஹு க்ஹைர்.
எதிர்கால தமிழ் இஸ்லாமிய உலகம் மிக பிரகாசமான ஒன்றாகவே தெரிகின்றது. காரணம், தூய இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிக நல்ல முறையில் முஸ்லிம்கள் மத்தியில் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் உண்மையான இஸ்லாத்தை ஒரு கிளிக்கில் அனைவரும் அறிந்துக்கொள்ளமுடியும் என்பதும் மற்றுமொரு காரணமாகும். யாரையும் நம்பி இருக்க தேவை இல்லை.
எனினும், சிலபல சுயநலவாதிகளால் இஸ்லாத்தில் இல்லாதவைகள் இன்னும் நடந்தேறி கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு முன்பு போல ஆதரவு இல்லை. இறைவன் உதவிக்கொண்டு மிக விரையில் இவை இல்லாத ஒரு அழகான இஸ்லாமிய சமூகத்தை காண்பேன் என்ற நம்பிக்கை உண்டு.
வஸ்ஸலாம்,
குறிப்பு: //பத்து பேர் விஜய் ரசிகனா இருந்து ஒருத்தன் மட்டும் அஜித் ரசிகரா இருந்தா எப்படி தனித்து காட்டப்படுவானோ அதே போல் தான் - எளிய உதாரணத்துக்காக. யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க மக்கா//
இந்த உதாரணம் இல்லாமல் இருந்தால் அல்லது வேறு மாதிரியான உதாரணம் இருந்தால் இந்த பதிவு மேலும் மெருகுரும்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ஸலாம் சகோ.ஆமினா,
ReplyDeleteநன்றாக எழுதியுள்ளீர்கள் சகோ.
//...எக்குதப்பா இஸ்லாத்தையும் குர் ஆனையும் புரிந்துக்கொண்டிருப்பவர்களால் தான்.//...எல்லா பிரச்சினையும் வருகிறது..!
இதற்கு....//தீர்வு
குர்ஆன் தமிழாக்கத்தை படிங்க.//---அருமை..!
ஒரு பள்ளியின் சீருடை அணிந்த மாணவன் பள்ளி வேளையில்... ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமா தியேட்டரில் இண்டர்வேல்லில் ஒரு கையில் பீர் இன்னொரு கையில் தம் என்று நிற்பதை பார்த்தால்...
ReplyDelete"எல்லாம் அந்த ஸ்கூலில் உள்ள பாட புஸ்தகமும், அந்த ஸ்கூல் டீச்சர்களும் சொல்லி கொடுத்ததுதான்..!"
---என்று அந்த படத்தை பார்க்க வந்த வேறு ஒருவர் சொல்வாரேயானால்...
ஒன்று அவர் சிந்திக்காத முட்டாள்
அல்லது
அந்த ஸ்கூல் மீது அவருக்கு செமை கொலைவெறி வெறுப்பு..!
இந்த இடத்தில் அப்படி சொல்வோருக்கு...
//இது மற்ற சகோதர/சகோதரிகளுக்கு//
---இதுவும் மிகச்சரியான அறைகூவல்..!
@ அவர்கள் உண்மைகள்,
ReplyDelete//எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் செயல்களும் நல்லவையாக இருக்கும் என்று நினைப்பவன் நான். அதை நீங்கள் கடைபிடிப்பதால் உங்களுக்கு என் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்//---சூப்பர்..! சரியான ஒன்றை கடை பிடிக்கிறீங்க.
அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று இது சகோ.
"இன்னமல் அஃமாலு பின்னிய்யத்"--அதாவது--"எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்"---என்பது நபிமொழி.(புஹாரி)
நாம் நல்ல எண்ணங்களை கொள்வோம்.
தீய எண்ணங்களை கொல்வோம்.
நன்மை மற்றும் நற்செயல்கள் மட்டுமே எங்கும் நிலவ..!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
ReplyDeleteமிக அழகான, அருமையான, ஆழமான விளக்கங்கள். ரொம்ப தெளிவாக எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள். ஜசாக்கல்லாஹு க்ஹைர்
மிகவும் அழகாக தெளிவாக எடுத்து சொல்லி இருக்கின்றிர்கள் அக்கா. ஜசாக்கல்லாஹுஹைர்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...வபர...
ReplyDeleteமிகச்சிறந்த பதிவு. நிச்சயமாக இது போன்ற விடயங்கள் சமூகத்திற்கு எத்தி வைக்கப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.அந்த வகையில் உங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்
//தீர்வு
குர்ஆன் தமிழாக்கத்தை படிங்க//
நல்லா சொன்னீங்க! குர்ஆனை படித்து வியப்புற்று இஸ்லாத்தை நோக்கி பயணிக்கும் மாற்று மத சகோதரர்களிற்கு மத்தியில் இஸ்லாத்திலேயே இருந்து கொண்டே அதன் தத்துவத்தை விளங்கிக் கொள்ளாமல், எடுத்து கூறினாலும் ஏற்றுக்கொள்ள பின்வாங்கும் இம்மக்களை என்ன கூறுவது...
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோதரர் முஹம்மது ஆஷிக்..
//////ஒரு பள்ளியின் சீருடை அணிந்த மாணவன் பள்ளி வேளையில்... ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமா தியேட்டரில் இண்டர்வேல்லில் ஒரு கையில் பீர்
இன்னொரு கையில் தம் என்று நிற்பதை பார்த்தால்...
"எல்லாம் அந்த ஸ்கூலில் உள்ள பாட புஸ்தகமும், அந்த ஸ்கூல் டீச்சர்களும் சொல்லி கொடுத்ததுதான்..!"
---என்று அந்த படத்தை பார்க்க வந்த வேறு ஒருவர் சொல்வாரேயானால்...
ஒன்று அவர் சிந்திக்காத முட்டாள்
அல்லது
அந்த ஸ்கூல் மீது அவருக்கு செமை கொலைவெறி வெறுப்பு..!////////////////
சுப்ஹானல்லாஹ். அசத்தல் பிரதர். நீங்க இந்த பார்ம்ளையே விலாசுங்க... அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் கல்வி அறிவை, வாதிக்கும் ஞானத்தை கொடுக்க வேண்டும்..ஆமீன்..
வஸ்ஸலாம்..
வணக்கம் அக்கா,
ReplyDeleteநல்லதோர் புரட்சிகரமான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
சமூகத்தில் உள்ள சில முரண்பாடான கருத்துக்களை மத அடிப்படையில் எவ்வாறு களையலாம் என்பதனை சொல்லி நிற்கிறது பதிவு!
இஸ்லாமியச் சகோதரிகளுக்கு இறுதியில் விடுத்திருக்கும் அழைப்பு சமூகத்தின் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையினைத் தெளிவுபடுத்துகிறது.
தொடருங்கள்.
Assalamu alikum
ReplyDeleteen anbirkiniya arumai akka' alhamdulilah
mega nanraga ullathu ungal pathivu
jazhkallahu kair
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கடமைகளையும் -உரிமைகளையும் மையப்படுத்திய பதிவு...
இஸ்லாத்தை 'போலியாய்' விமர்சிப்போர் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
பகிர்ந்த பதிவுக்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
நல்ல பதிவு ஆமினா. மாஷா அல்லாஹ். முஸ்லிம் பெண்களும் நல்ல முறையில் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள் என்பதற்கு நல்லதொரு சான்று.
ReplyDelete//உங்க மகள (கணவனை இழந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது) இப்ப கட்டி கொடுத்தாச்சா?? எத்தனநாள் தான் வச்சுட்டிருப்பீங்க?"
உடனே என் உறவினர் , "சீ...சீ....சீ.... அதெல்லாம் எங்க இதுல கிடையாது"//
ம்ம்... எங்க ஊரைப் பொறுத்தவரையில், என் பாட்டி, அம்மா காலத்தில் பெண்களின் மறுமணம் என்பது ஒரு பெரிய அதிசயமே இல்லை. ஆணைப் போலவே, பெண்களுக்கும் மறுமணம் செய்வதில் தடைகளிலிருந்ததில்லை. என் ஊரில் மறுமணம் செய்த பல பாட்டிகளை அறிவேன். ஆனால், இஸ்லாமிய விழிப்புணர்வு பெருகி வரும் இந்நாட்களில்தான் பெண்கள் மறுமணம் என்பது கவலைப்படுத்தும் கடினமானதாக மாறிவருகிறது என்று தோன்றுகிறது.
எப்படித் தெரியும்னு கேக்குறீங்களா? என் உறவில் விவாகரத்தான ஒர் பெண்ணுக்கு 2 வருடங்களாக வரன் தேடுகீறோம். விவாகரத்தான/மனைவியை இழந்த ஆண்கள்கூட மணமாகாத பெண்தான் வேண்டுமென்கிறார்கள்!! இதற்கிடையே அதே பெண்ணின் சகோதரியின் கணவரும் (30 வயது) இறந்துபோய்விட்டார். ஆணடவன்தான் வழிகாட்ட வேண்டும்!! துஆ செய்ங்க.
சகோதரி ஹுசைனம்மா அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
என் உறவினர் சகோதரி ஒருவருக்கு விவாரத்து ஆகி இருந்தது. மறுமணம் செய்து தற்போது அல்ஹம்துலில்லாஹ் ஒரு குழந்தையை பெற்றேடுத்திருக்கின்றார். மாஷா அல்லாஹ். அந்த சகோதருக்கு இதுவே முதல் திருமணம்.
//இதற்கிடையே அதே பெண்ணின் சகோதரியின் கணவரும் (30 வயது) இறந்துபோய்விட்டார்.//
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தாங்கள் அந்த சகோதரிகள் குறித்த விபரத்தை அனுப்பிவீர்கள் என்றால் என்னால் இயன்ற உதவியை இதில் செய்ய முயற்சிக்கின்றேன் இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
ReplyDeleteமாஷா அல்லாஹ். நல்ல தெளிவான விளக்கங்களுடன் கூடிய ஒரு நல்ல பதிவு தோழி.
ஜசாக்கல்லாஹு ஹைர்.
தெளிவான விளக்கங்களுடன் கூடிய சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கச்சி ஆமீனா
ReplyDeleteமனிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.
இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.
ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.
வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள்.
மதங்களின் மீதான இத்தகைய விமர்சன் ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.
ஒரு மதத்தை மற்றவர்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பதைப் பார்க்கக் கூடாது. மாறாக அம்மதம் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதையே அறிய வேண்டும்.
அந்த வகையில் இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதார நூல்கள் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை இலக்க எண்களோடு ஆதாரப்பூர்வமாக உங்கள் பதிவு பேசுகிறது
இங்குள்ள முஸ்லிம்களின் செயல்களைப் பார்த்து முடிவேடுப்பவர்களை ஆதார மூல நூலான
குர்ஆனை படித்து விளங்கிக் கொள்ள நீங்கள் விடுத்த அழைப்பு சரியான முன்மாதிரி.
பகிர்வுக்கு நன்றி தங்கை ஆமீனா
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDelete@ ஆஷிக் அஹமத்,
//என் உறவினர் சகோதரி ஒருவருக்கு விவாரத்து ஆகி இருந்தது. மறுமணம் செய்து தற்போது அல்ஹம்துலில்லாஹ் ஒரு குழந்தையை பெற்றேடுத்திருக்கின்றார். மாஷா அல்லாஹ். அந்த சகோதருக்கு இதுவே முதல் திருமணம்.?//
மாஷா அல்லாஹ்! அந்த சகோதரரிற்கு அல்லாஹ் கிருபை செய்யட்டும்
//என்னால் இயன்ற உதவியை இதில் செய்ய முயற்சிக்கின்றேன்//
தங்கள் சமூக அக்கறையை போற்றுகிறேன். ஏனெனில், சமூகத்தில் அநேகமானோர் இப்படிக்கூட உதவ முன்வருவதில்லை.
என் கேள்வி என்னவென்றால் நீங்களோ அல்லது நானோ தாங்கள் குறிப்பிட்ட சகோதரர் போல திருமணம் செய்து கொள்ள தயாரா? அல்லது நாம் தயாராக இருந்தாலும் எமது பெற்றோரை தான் இணங்க வைக்க முடியுமா? எம் ஈமானிலுள்ள குறைபாடுதான் இதற்கு காரணமா???
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ஆமினா,
ReplyDeleteசமூகத்தில் களை போல் வளர்ந்து விட்ட தவறான சிந்தனைகளை பிடுங்கி எறிய முயற்சிக்கும் தங்களிற்கு என் பாராட்டுகள்! தாங்கள் இதற்காக முன் வைத்த தீர்வு மிகச் சரியானது (குரானை கற்பது). அநேக மக்கள் இந்த சமூகத்தின் இவ்வாறான செயல்களை வெறுத்தாலும் முகஸ்துதியினால் ஏனையோர் போன்றே நடந்து கொள்கிறனர்.
அல்லாஹ் எம் சமூகத்தை நேரான வழியில் செலுத்தட்டும்!
சகோதரர் அனானி அவர்களுக்கு,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
//என் கேள்வி என்னவென்றால் நீங்களோ//
சகோதரர் இந்த கேள்விக்கு நான் பதிலளித்தால் சுயதம்பட்டம் அடித்தது போல் ஆகி விடும். எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்பினீர்கள் என்றால் விபரத்தை கூறுகின்றேன். இன்ஷா அல்லாஹ்..
உங்களை பொருத்தவரை நீங்கள் தான் இஸ்லாமை அளவுகோலாய் வைத்து மீள் ஆய்வு செய்துக்கொள்ளவேண்டும்.
//அல்லது நாம் தயாராக இருந்தாலும் எமது பெற்றோரை தான் இணங்க வைக்க முடியுமா?// - ஏன் முடியாது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
இப்படியான ஒரு விசயம் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் வீரியமாக இருக்கின்றது (எனினும் இறைவனே நன்கு அறிவான்) என்பது ஹுசைனம்மா அவர்களின் கருத்து மூலமாகவே அறிய வருகின்றேன். ஏனெறால், கணவரை இழந்தாலோ அல்லது விவாகரத்து ஆனாலோ, காத்திருக்கும் காலம் முடிந்தவுடன் திருமணம் செய்துக்கொள்ளும் சகோதரிகளையே நான் கண்டிருக்கின்றேன். எனக்கு இதில் விவகாரம் இருப்பதாகவே இதுவரை தெரியவில்லை. இது போன்ற விசயங்கள் களைய இறைவன் போதுமானவன்.
//எம் ஈமானிலுள்ள குறைபாடுதான் இதற்கு காரணமா???//
சகோதரர், இங்கு நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு வகையில் ஈமானில் குறைபாடுள்ளவர்கலாகவே இருக்கின்றோம். ஒருநாள் இருக்கும் இறையச்சம் அடுத்த நாள் இருப்பதில்லை. இதற்காகவே இறைவேதத்துடன் நெருக்கத்தில் இருக்க முயற்சிக்கின்றோம், தொழுகைகளை சரியான முறையில் நிறைவேற்ற முயற்சிக்கின்றோம், உண்மையான இறைநம்பிக்கையாலர்களுடன் நட்பு கொள்ள முயள்கின்றோம்.
ஈமானில் வரும் ஏற்றத்தாழ்வுகளை நபியவர்களும் அறியாமல் இல்லை.
''தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரலி), நூல்: முஸ்லிம் (148)
ஆகையால் சகோதரர், நம் ஈமானில் உள்ள குறைபாடுகளை அறிந்துக்கொண்டு அதனை இறைவன் உதவியோடு வென்றெடுக்க முயற்சிப்பதே இஸ்லாம் காட்டித்ததந்த வழியாகும்.
நீங்கள் உங்கள் மனதில் நடத்திக்கொண்டிருக்கும் இது போன்ற சங்கடங்களில் இருந்து வெளிவர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

salaam
ReplyDelete...........
பெண்களை அடக்கி வைக்க நினைப்பது ஆண்களே தவிர சமயம் இல்லை ஆமினா.அதோடு நாங்களாகவே சில சமயங்களில் விட்டுக்கொடுத்துப் பின்வாங்கிவிடுகிறோம்.பெண்கள் கண்டிப்பாய் வாசிக்கவேண்டிய நல்லதொரு பதிவு !
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅருமையான ப்டைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) சகோதரி
ReplyDeleteஅருமையான ஒரு ஆக்கம், இறைவன் தங்களின் இப்பணிக்கு நற்கூலி வழங்குவனாக.. ஆமீன்.
//நபிமார்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை பற்றிய பெரும்பாலான ஹதீஸ் ஆதாரங்கள், பெண்கள் மூலமாக தான் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த பெண்கள் அன்று இஸ்லாமிய ஆண்களால் ஒடுக்கப்பட்டிருந்தால் எப்படி நமக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கும்? ஆனால் சபையில் அனைவரும் இருக்க, தன் கருத்தை ஒரு பெண் கூற முனைந்தால் அவள் வாய்க்கு பெவிக்விக் தான்??!!!!. பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண்கள் ஆண்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கருத்து கூறக்கூடாது என தங்களுக்குள்ளாகவே சட்டம் வகுத்து அதற்கு இஸ்லாமியச்சாயமும் பூசி அழகுபார்த்தனர் சில பிறவிகள்.//
மிக அருமையாக கூறியுள்ளீர்கள்!, உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் அவர் ஆட்சியாளராக இருந்த பொழுது மணமாகாத ஆண்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பெண்கள் தங்களின் மஹர் தொகையைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறிய பொழுது அவர்களை இடைமறித்து ஒரு பெண் எழுந்து ஆட்சேபித்ததும், அதன் பிறகு உமர் (ரலி) தன் தவறுக்கு வருந்தி அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதும் நம் கண் முன்னால் வரலாறு காட்டிக்கொண்டிருக்கும் பாடம். பெண்களை போகப் பொருட்களாக, அவர்களுக்கு ஆன்மா உண்டா இல்லையா? என்று ஆராட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பெண் எழுந்து உரிமைக்காக குரல் கொடுக்க முடிகிறதென்றால் இது எவ்வளவு பெரிய புரட்சி.
//பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, பெண்கள் ஆண்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கருத்து கூறக்கூடாது என தங்களுக்குள்ளாகவே சட்டம் வகுத்து அதற்கு இஸ்லாமியச்சாயமும் பூசி அழகுபார்த்தனர் சில பிறவிகள்//
இப்படி தன் உண்மை மார்கத்தின் மகத்துவமறியா மூடர்களை என்ன செய்வது, இனியாவது இவர்கள் திருந்தட்டும் என்ற பிரார்த்தனையுடன்.
vena has left a new comment on your post "எங்க இதுல அதெல்லாம் கிடையாதாக்கும்??!! பழமையில் பு...":
ReplyDeleteஇம்புட்டு தூரம் வந்துட்டு மனசையே விட்டுட்டுப்போனப்பறம் என்னத்தச்சொல்றது
வாழ்த்துக்கள்.
பிரேம்சாகர் வெங்கட்டராமன்
_____________
தவறுதலாக அழிந்துவிட்டது. மன்னிக்கவும் சகோதரர்