கிருஸ்துமஸ் அன்று தான் ஆமியின் விடுமுறை பயணம் சென்னையில் தொடங்கியது (கெட்டக்காலம்).  சென்னைக்கு வந்துட்டுட்டு ஈஏ பாக்கலைன்னா நீயெல்லாம் மனுஷ ஜென்மமா என எல்லாரும் நாக்கை அவுட் பண்ணும்படியாக பேசிடுவாய்ங்க :-( ஒடனே புறப்பட்டோம். எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வாசலில் வண்டி நின்றது. இந்த இடத்துல தான் ஒரு பல்பு வாங்கிய ப்ளாஸ்பேக்..... ரா...ரா...ரா..(ரோசாப்பூ சின்ன ரோசாப்பு டியூன் செட் ஆகும்:-)

போனவருடம் சென்னை சென்றிருந்த போது  கண்ணூல ஒரு பெரிய கட்டடம் தட்டுபட்டுச்சு. EA-ன்னு எழுத்து வேற. நமக்கென்ன தெரியும்?? அந்த பிரம்மாண்ட கட்டடத்தின் வாசலில் ஒரு ஆட்டோக்காரர் கிட்ட திநகர்க்கு போக (அந்த நேரத்துல பொடிநடையா ராயபேட்டைல இருந்து திநகர்க்கு நடந்து போய்ருக்கலாம்) பேரம் பேசி, இடையிடையே ராயபேட்டையிலேயே  பொறந்து வளந்தவ கணக்கா டயலாக்லாம் விட்டு  180 ரூபாயை 80 ரூபாயாக்கிட்டு தான் ஆட்டோவில் ஏறினேன். ஆமினவா கொக்கா???

ஆட்டோ ரங்கநாதன் தெருவை நெருங்கிக்கொண்டிருக்கும் போது


ஆமி-அண்ணா....
ஆட்டோக்காரர்- என்னா?????
ஆமி- எக்ஸ்ப்ரஸ் அவன்யூ எக்ஸ்ப்ரஸ் அவன்யூன்னு சொல்லுறாய்ங்களே.... திநகர்ல இருந்து எப்படி போகணூம்??
ஆட்டோ- க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
(ஒழுங்கா EXPRESS AVENUE ன்னு போட வேண்டியது தானே? EAன்னு சுருக்கமா போட்டது அவிங்கதப்பு அவ்வ்வ்வ்வ்)

இப்படியாக எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டி கடைசியில் ஆட்டோக்காரர் கண்ணுல தீப்பொறி பாத்த அந்த நிகழ்ச்சி கண்ணு முன்னாடி.... சரி சரி விட்டு தள்ளு. ஒன்றா இரண்டா பல்புகள்? எல்லாம் சொல்லவே ஒரு பதிவு போதுமா?

சரி அவ்வளவு தான் ப்ளாஸ்பேக் முடிஞ்சுடுச்சு. இப்ப உள்ளே போகலாம்......


கிருஸ்துமஸ் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் அதிகமா இருக்கும்னு நெனச்சுட்டு தான் போனேன். ஆனால் பிரம்மாண்ட ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அவற்றுள் சில...
குரங்கு கைல பூமால = ஆமி கைல கேமரா =அதுனால சிரிச்சுருப்பாரோ... நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது அவ்வ்வ்வ்
அட லூசுப்பயலுகளா....... அங்கங்கே கிப்ட் தொங்க விடுறதுக்கு எனக்காச்சும் கொடுத்தா ஊர்க்கு திரும்பும் போது பந்தாவா போவேன்ல????

இந்த பொம்மை வீடு மட்டும் மால்க்கு வெளியே இருந்தா 4000 ரூபாய் வாடகைக்கு விடப்படும்னு போர்ட் மாட்டிடுவானுங்க...

அங்கே எனக்கு மிகவும் பிடித்த அமைப்பு இது தான். தத்ரூபமா செஞ்சுருக்காங்க (முன்ன பின்ன கரடிய பாத்திருந்தா தானே)

 எப்பவும்  மிஷின் மாதிரி நிக்காத கால்கள் கொண்ட மனிதர்கள் வாழும் சென்னையில் இந்த டம்மி ரயிலில்  அனைத்தையும் சுத்தி பார்க்க  200க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் கால்கடுக்க நின்றது பார்த்து சிப்பு சிப்பா தான் வந்துச்சு....



வரிசையில் நின்றுகொண்டிருந்த 200க்கும் மேற்பட்டவர்களை தவிர என்னை போன்ற ஏனைய தொலைநோக்கு பார்வையும், சிந்தனையும் கொண்ட அறிவாளி  உள்ளங்கள் இப்படி தான் சுத்தி பார்த்தோம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப தெளிவாக ஹே...ஹே..... 2வது மற்றும் மூன்றாவது தளத்தில் இருந்து........




அனைவருக்கும் (தாமதமான) கிருஸ்துமஸ் தின  நல்வாழ்த்துக்கள்


, ,

55 comments:

  1. இனிய காலை வணக்கம் அக்கா,

    தீம்பார், சென்னை சுற்றுலா என்று ஹாலிடேயை இனிதாக கழித்திருக்கிறீங்க....
    சென்னைக்கு வர வேண்டும் எனும் ஆவலை இந்தப் படங்கள் தூண்டுகின்றது.

    ஆட்டோக்காரனுக்கே பல்பு கொடுக்க ட்ரை பண்ணியிருக்கிறீங்க. இல்லே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. உங்க ஆட்டோ அனுபவம் சுவை,புகைப்படங்கள் பார்க்க அழகு..பின் குறிப்பு சுவை..வாழ்த்துகள்..

    சரணடைகிறேன்

    ReplyDelete
  3. ஆமி நானும் உன்கூடவே E. A. வந்தேனே. உன் பின்னடிதேன் இருந்தேன் பாக்கலியா? போட்டோ பிடிப்பதில் நீ பிசியா இருந்தே அதான் என்னை கவனிக்கலியா?

    ReplyDelete
  4. என்னா ஒரு வில்லத்தனம்..கரடிய பாத்ததில்லையா..ஹிஹி..அதான் அண்ணன் டண்டனக்கா இருக்காரே ஹிஹி...நல்லாதான் சுத்தி காட்ராய்ங்கப்பா!

    ReplyDelete
  5. ஈ.ஏ.ன்னவுடனே, சரி அந்த மால்-ஐப் பத்திக் காரசாரமா (வழக்கம்போல உங்க பாணியில) எழுதிருப்பீங்கன்னு ஆவலா (அவலுக்கு) ஓடி வந்தேன். நீங்க என்னடான்னா, படங்களா போட்டு, படம் காட்டிட்டீங்க!! :-))))

    சுத்தி, சுத்தி அந்த வீட்டையே வளைச்சு வளைச்சு ஃபோட்டொ எடுத்துத் தள்ளிருக்கீங்களே!! நல்லவேளை அந்த வீடு மாலுக்குள்ள இருக்கு; இல்லைன்னா, அதை வளைச்சுப் போட்டிருப்பீங்க போல!!

    ReplyDelete
  6. @நிரூ

    வாங்க தம்பி. நலமா

    //
    ஆட்டோக்காரனுக்கே பல்பு கொடுக்க ட்ரை பண்ணியிருக்கிறீங்க. இல்லே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
    விதி வலியது :-)

    சிங்கப்பூர் பயணம் முடிச்சுட்டு சென்னைக்கு வந்துட்டுட்டு அப்பறமா இலங்கை போங்க :-)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி

    ReplyDelete
  7. @மதுமதி

    நல்ல கவிதைகள் எழுதிட்டு வரீங்க. தொடர்ந்து படிச்சுட்டிருக்கேன். வாழ்த்துக்கள்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  8. @லெட்சுமி மாமி

    ஆமா மாமி

    நான் கூட கே எப் சி வாங்கன்னு கூப்டதுக்கு அடுத்த ப்ளைட்லையே மும்பைக்கு பறந்தேளே? மறந்துடுவேனா? :-))

    ReplyDelete
  9. @விக்கி
    //அதான் அண்ணன் டண்டனக்கா இருக்காரே ஹிஹி..//

    உங்களையா சொல்றீங்க அவ்வ்வ்வ்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  10. பல்பு வாங்கிறதில நம்மளுக்கு போட்டியா நிறையப்பேரு இருக்காங்க போல! :-)
    நீங்கள் சொன்னமாதிரியே அந்தப் போலார் கரடி சூப்பரா இருக்கு!

    ReplyDelete
  11. @ஹுசைனம்மா

    //அந்த மால்-ஐப் பத்திக் காரசாரமா //

    என்னைய சண்டைக்காரின்னே முடிவு பண்ணிட்டீங்களா??? ஐயாம் பாவம் :-(

    அடுத்ததா மொத்த சென்னைக்கும் ஒரு காரசார அவல் பிரியாணி தரேன் :-))

    ReplyDelete
  12. @ஜீ

    //பல்பு வாங்கிறதில நம்மளுக்கு போட்டியா நிறையப்பேரு இருக்காங்க போல! :-)
    நீங்கள் சொன்னமாதிரியே அந்தப் போலார் கரடி சூப்பரா இருக்கு!//

    ஹா...ஹா...ஹா... பின்ன உங்கள் ப்ளாக்கில் பாலோவர்ஸ்ஸா சேர்ந்ததுக்கு பிறகு பல்பு வாங்கலைன்னா ஊர்ல நாலு பேரு நாலு விதமா உங்கள திட்ட மாட்டாங்கா ஹி..ஹி...ஹி...

    ReplyDelete
  13. //சென்னைக்கு வந்துட்டுட்டு ஈஏ பாக்கலைன்னா நீயெல்லாம் மனுஷ ஜென்மமா என எல்லாரும் நாக்கை அவுட் பண்ணும்படியாக பேசிடுவாய்ங்க// என்னைய மாதிரி சென்னையப் பத்தித் தெரியாத ஆளுங்கள்லாம் அதென்னாது ஈஏ-ன்னு மண்டையப் பிச்சுகினோமே,பதிவில முக்காவாசி படிக்கிறவரை? ;) அதுக்கு இன்னா சொல்றீங்கோ? :)

    நல்ல பதிவு ஆமினா..ஆங்காங்கே அழகாத் தமிழ்த்தூவிய காமெடிநடை நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. //என்னைய மாதிரி சென்னையப் பத்தித் தெரியாத ஆளுங்கள்லாம் அதென்னாது ஈஏ-ன்னு மண்டையப் பிச்சுகினோமே,பதிவில முக்காவாசி படிக்கிறவரை? ;) அதுக்கு இன்னா சொல்றீங்கோ? :)//

    ஹி..ஹி...ஹி... நான் வாங்கிய பல்பில் வெளிச்சம் பெறுக என்ற உயர்ந்த நோக்கில் ஆங்காங்கே இருட்டடிக்கப்பட்டது அவ்வ்வ்வ்வ்வ்வ்

    //தமிழ்த்தூவிய காமெடிநடை //
    எனி உள்குத்து :-)
    வருகைக்கு நன்றி மகி

    ReplyDelete
  15. வணக்கம் அக்கா
    எப்படி நலம்?
    உங்களுக்குள்ள ஒரு கேமரா மேன் ஒளிஞ்சிருக்கார் பாருங்களேன்.

    பல்பு வாங்குவதும் ஒரு கலைதான் ஹி.ஹி.ஹி.ஹி....

    ReplyDelete
  16. பாவம் மாலில் உள்ள கிறிஸ்மஸ் தாத்தா (santa claus) ரொம்ப ஒல்லியா இருக்காருங்க. அடுத்த தடவை போனா நல்ல சப்பாடா சமைச்சு கொண்டு போய் கொடுங்க...உங்களுக்கு எனது தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. 1.ஈஏவும் சில தருணங்களும்
    2.ஒன்றா இரண்டா பல்புகள்? எல்லாம் சொல்லவே ஒரு பதிவு போதுமா?
    3.தொலைநோக்கு பார்வையும், சிந்தனையும் கொண்ட அறிவாளி உள்ளங்கள்

    இதெல்லாம் தமிழ்த்தூவிய தருணங்கள்!:)

    1.எல்லாரும் நாக்கை அவுட் பண்ணும்படியாக பேசிடுவாய்ங்க
    2.ஆமி-அண்ணா....
    ஆட்டோக்காரர்- என்னா?????
    3.குரங்கு கைல பூமால = ஆமி கைல கேமரா =அதுனால சிரிச்சுருப்பாரோ..
    4.எப்பவும் மிஷின் மாதிரி நிக்காத கால்கள் கொண்ட மனிதர்கள் வாழும் சென்னையில்
    இது காமெடி நடை நடந்த தருணங்கள்!!

    ரெண்டும் ஒன்றாக கலந்து எழுதிருக்கீங்கன்னு சொல்லவந்தேன்.அதுக்குப்போயி /எனி உள்குத்து :-) / நல்லதுக்குக் காலமில்லே சாமீ! ;)))))))

    நாங்கள்லாம் டைரக்ட் அட்டாக்குதேன்..குத்துன்னா நச்சுன்னு டைரக்ட்டாக் குத்திருவோம்.பாராட்டுன்னாலும் மனசாரப் பாராட்டிருவோம்..பாராட்டுக்கள்! :))))

    ReplyDelete
  18. அருமையான அழகான புகைப்படங்கள் ஆமினா! கிறிஸ்மஸ் பண்டிகையின் அலங்காரங்களை நீங்கள் பதிவிலே வெளியிட்டது, இஸ்லாமியர்கள் பற்றிய எனது பார்வையினை மாற்றுகிறது! இந்த இணக்கமான நிலைப்பாடு மிகவும் பிடித்துள்ளது! உங்களை மேலும் மதிக்கத் தோன்றுகிறது!

    “ எம்மதமும் சம்மதமா? அது எப்படீங்க?” என்று ஒரு வீடியோ பார்த்து அதிர்ந்து போயிருந்தேன்! உங்களின் இப்பதிவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது!

    என்னுடைய பதிவொன்றில், “ ரம்ஸான்” பண்டிகையின் படங்கள் வெளிவருவதற்கு இப்பதிவு வழி சமைத்துள்ளது!

    நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது!

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்,

    எக்ஸ்பிரஸ் அவென்யு என்பது ஒரு ஷாப்பிங் மாலா?..இம்ம். இந்த பதிவு மூலமா தான் தேடி தெரிந்துக்கொண்டேன். தென் இந்தியாவிலேயே பெரியது என்று விக்கி சொல்லுது. இத்தன நாள் தெரியாம இருந்திருக்கின்றேன் :)

    படங்கள் அழகா இருக்கு.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  20. ஆட்டோகாரன் பாவம் மனசுக்குள்ளே ஆயிரம் திட்டு திட்டிட்டு அப்பிடி பார்த்துருப்பானோ ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  21. படங்கள் எல்லாம் அருமையா எடுத்துருக்கீங்க..!!!

    ReplyDelete
  22. ஹேப்பி கிறிஸ்மஸ், நல்லகாலம் அடுத்த மாசம் சொல்லாமல் இருந்தீங்களே ஹி ஹி...

    ReplyDelete
  23. ஆமினாக்கா புகைப்படங்கள் அழகா இருக்கு :)))) நீங்களா எடுத்தீங்க!!!!! ஹும்.... பாவம் அந்த ஆட்டோக்காரர்.... ஹா ஹா

    ReplyDelete
  24. 200க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் கால்கடுக்க நின்றது பார்த்து சிப்பு சிப்பா தான் வந்துச்சு....என் ஆத்துகாரர்ட்ட இதை காட்டனும் பார்த்தால் கடுப்பாகிடுவார் ஏன்னா அங்கு இருந்த 200 பேருல என் கணவர் 2 பிள்ளைகள் அடங்கும் ஹ ஹா....படங்களேல்லாம் அழகு :)

    ReplyDelete
  25. ஈ ஏ வந்துட்டு எங்க கடை பக்கம் வரமா போயிட்டீங்கலே

    பகக்த்தில் தானே////
    ஆட்டோ , பல்பு ஹிஹி
    //எனக்கும் போய் இரங்கியதும் ஒன்னும் புரியல, //எனன் ஈஏ க்கு போயாச்சா இங்க தானே, அப்பரம் பார்த்தா எக்ஸ்ப்ரஸ் அவன்யு,

    நல்ல சுத்தி பார்த்தீங்கலா?
    பதிவு கம்மியா போச்சு போட்டாவா நிறம்பிடுச்சு.

    ReplyDelete
  26. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆமினா.
    அந்த பனிக்கரடி ரொம்ப அழகா இருக்குப்பா
    E A // சென்னைலயா இருக்கு ?? நாங்க சின்னதா இருந்தப்போ இப்படியெல்லாம் இல்லை .ரொம்ப சேஞ்சஸ் .சாண்டா தான் கொஞ்சம் வீக்கா இருக்கார் அதனால்தான் வெக்கப்பட்டு சிரிக்கிராரோ ???

    படங்கள் எல்லாமே சூப்பர்

    ReplyDelete
  27. @குட்டி பையன்

    மிக்க நலம் தம்பி.
    நீங்க நலம் தானே?

    //உங்களுக்குள்ள ஒரு கேமரா மேன் ஒளிஞ்சிருக்கார் பாருங்களேன்.
    //
    அட லொள்ளு பைய்யா :-)

    ReplyDelete
  28. @அவர்கள் உண்மைகள்
    குண்டு தாத்தா, ஒல்லிதாத்தா, குட்டை,நெட்டை, என எல்லா தாத்தாவும் இருந்தாங்க. கூட்டம் அலைமோதுனதுனால படம் பிடிக்க முடியல. அப்பறம் யூத் சாண்டா கூட இருந்தாரு. சைக்கிள் ஓட்டிக்கிட்டே....
    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  29. @மகி
    //இதெல்லாம் தமிழ்த்தூவிய தருணங்கள்!:)//
    நா அப்பவே நெனச்சேன். இந்த பயபுள்ள என்னமோ உள்குத்து தூவி பேசுச்சுன்னு. இப்ப தான் தெள்ள்ள்ள்ள்ளீவா புரியுது :-))

    //இது காமெடி நடை நடந்த தருணங்கள்!!//
    வேணா....... அழுதுடுவேன் :-)

    //.குத்துன்னா நச்சுன்னு டைரக்ட்டாக் குத்திருவோம்//
    ஆல்ரெடி நச்சுன்னு போட்டாச்சே அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  30. @ஐடியா மணி
    வாங்க சகோ. நலமா?
    உங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தவர் மதத்தையும் அவர்கள் சார்ந்த வழிபாடுகளையும் மதிக்க எந்த மதமும் தடைவிதிப்பதில்லையே சகோ :-)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ரஜீவன்

    ReplyDelete
  31. @சகோ ஆஷிக்
    வ அலைக்கும் சலாம் வரஹ்...
    //இந்த பதிவு மூலமா தான் தேடி தெரிந்துக்கொண்டேன்.//
    இந்த பக்கம் போனா பீச். அந்த பக்கம் முட்டுனா ப்ளைட்டும் ஆளும் இல்லாத ஏர்போர்ட்ன்னு சின்ன மாநிலத்துக்குள்ள இருந்தா இப்படித்தேன். பரந்து விரிந்த எங்கள் தமிழ்நாட்டின் அழகை கண்டீர்களா ஹி...ஹி....ஹி...

    //இத்தன நாள் தெரியாம இருந்திருக்கின்றேன் :)//
    நேரம் கிடைக்கும் போது வாங்க (இறைவன் நாடட்டும்)

    ReplyDelete
  32. @நாஞ்சில் மனோ
    //ஆட்டோகாரன் பாவம் மனசுக்குள்ளே ஆயிரம் திட்டு திட்டிட்டு அப்பிடி பார்த்துருப்பானோ ஹா ஹா ஹா ஹா....//
    நல்லவேளையா ரங்கநாதன் தெரு நெருங்குன போது கேட்டேன். இல்லைன்னா அந்த கொடுமையெல்லாம் கண்ணாடி வழியா பாத்திருப்பேன் :-)
    //ஹேப்பி கிறிஸ்மஸ், நல்லகாலம் அடுத்த மாசம் சொல்லாமல் இருந்தீங்களே ஹி ஹி...//
    இந்த போஸ்ட்டும் நியூயர் அன்றே எழுதுனது. சோம்பேறிதனத்தால லேட். ஒருவேள நீங்க சொன்னதும் நடந்துருக்கலாம் :-)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  33. @துஷி
    நலமா சகோ.

    //நீங்களா எடுத்தீங்க!!!!! ஹும்....//
    நம்பமாட்டீங்களே.... நல்லது செஞ்சாலே இந்த ஒலகத்துக்கு பிடிக்காது :-)

    ஆட்டோக்காரர் பாவமா? புளுவா ஆட்டோக்குள்ள இருந்த ஐயாம் தான் பாவம் அவ்வ்வ்....

    வருகைக்கு நன்றி தம்பி

    ReplyDelete
  34. @மர்யம்
    //அங்கு இருந்த 200 பேருல என் கணவர் 2 பிள்ளைகள் அடங்கும் ஹ ஹா....படங்களேல்லாம் அழகு :)//

    அப்படியா? 2 நிமிஷத்துல ஒரு முறை சுத்தி வரதுக்கு 2 மணிநேரமா நின்னா என்ன தான் பண்றதாம்.

    உங்களவரை கடுப்பாக வேணாம்னு சொல்லுங்க. ஒருவேள நானும் அடம்பிடிச்சு டிக்கெட் வாங்கி க்யூவில் நின்னிறூந்தா
    // மால்க்கு வந்துட்டு மால்க்காரன் ஏற்பாடு பண்ணி வச்சுருக்குற நிகழ்ச்சியை ஓசிக்கு பாக்குற ஜனங்கள பாக்கும் போது கடுப்பு கடுப்பா வந்துச்சு//ன்னு போட்டிருப்பேன. ஹி...ஹி...ஹி... எங்கே இருக்கோமோ அதுக்கு தகுந்தாப்ல மாத்திக்கவேண்டியது தானே? :-) வருகைக்கு நன்றி மர்யம்

    ReplyDelete
  35. @ஜலீலாக்கா
    சிட்டி சென்டர் போனப்ப உங்க நியாபகம் தான் வந்துச்சு. ஆனா போகும் போது அட்ரஸ் நோட் பண்ணி வைக்கல. அதான் வரமுடியல. மட்டுமில்லாமல் தானே வந்து என் ப்ளான்னையே மாத்திடுச்சு :-( சென்னைலையா இருக்கீங்க? மே மாத விடுமுறைக்கு வருவேன். அப்ப அப்படியே பெண்பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிடலாம் ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  36. @ஏஞ்சலின்
    மிக்க நன்றி ஏஞ்சலின். கிருஸ்துமஸ் நல்லவிதமாக கொண்டாடுனீங்களா? //நாங்க சின்னதா இருந்தப்போ இப்படியெல்லாம் இல்லை //
    ஸ்பென்சர் ப்ளாசா, சிட்டிசென்டர்ன்னு எல்லாமே இப்ப அவுட் ஆப் பேஷன் மாதிரி போயி எக்ஸ்ப்ரஸ் அவென்யூல தான் மக்கள் கூட்டம். 6 மாதத்திற்கு ஒரு முறை செல்லும் போதே பலமாற்றங்கள் ஏஞ்சலின். 2 வருடங்கள் சுற்றிய ஏரியாவுக்குளேயே இப்ப தனியா போனா மெயின்ரோட்டுக்கு வரதெரியாம முழிச்சுடுவேன் :-) அடுத்த முறை வரும் போது கண்டிப்பா எல்லா இடங்களும் பாருங்க. வருகைக்கு நன்றி ஏஞ்சலின்

    ReplyDelete
  37. ஆமினா said...
    @துஷி
    நலமா சகோ.

    //நீங்களா எடுத்தீங்க!!!!! ஹும்....//
    நம்பமாட்டீங்களே.... நல்லது செஞ்சாலே இந்த ஒலகத்துக்கு பிடிக்காது :-)

    ஆட்டோக்காரர் பாவமா? புளுவா ஆட்டோக்குள்ள இருந்த ஐயாம் தான் பாவம் அவ்வ்வ்....

    வருகைக்கு நன்றி தம்பி<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    நல்லா இருக்கேன்.... அக்கா.

    தேங்க்ஸ் அக்கா.. கூடவே சாரியும். ( ஏன் என்று புரியும் தானே...)

    நமக்கு ஏனோ தெரில்ல.... ரெம்ப கோபம் வருது :(

    இந்த ஆண்டில் இருந்து கோபத்துக்கு விடை கொடுத்தாச்சு.....

    சாரி..... :(

    ReplyDelete
  38. சென்னையிலேயே இவ்வளவு கலக்கலாக நத்தார் special நம்பமுடியலை. படங்கள் மீண்டும் தமிழகம் வரும் ஆவலை தூண்டுகின்றன.

    ReplyDelete
  39. //குரங்கு கைல பூமால = ஆமி கைல கேமரா =அதுனால சிரிச்சுருப்பாரோ...//
    குரங்குகளும் சிலவேளை நல்லவேலைகள்செய்யும் புரிஞ்சுகிட்டேன்.
    குரங்கு கைல பூமால =ஆமி கைல கேமரா=அசத்தல்

    ReplyDelete
  40. ஆமினா நீங்க எழுத அழைத்த இசையும் பாடலும் எழுதிவிட்டேன்
    நேரமிருக்கும்போது வந்து பாருங்க /.

    ReplyDelete
  41. @துஷி
    அடடா... நா அன்னைக்கே மறந்துட்டேன். காட்டான் அண்ணாவிடம் கூட அன்றிரவே சொல்லியிருந்தேன். //என்னதான் இருந்தாலும் துஷி என் தம்பி இல்லையா?// என்று...

    இனி வரும் நாட்கள் உங்களுக்கு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன் துஷி

    ReplyDelete
  42. @அம்பலத்தார்

    //சென்னையிலேயே இவ்வளவு கலக்கலாக நத்தார் special நம்பமுடியலை. படங்கள் மீண்டும் தமிழகம் வரும் ஆவலை தூண்டுகின்றன.//

    இன்னும் அதிகமா இருக்கு சகோ. கிருஸ்துமஸ் அன்று சென்னையில் எந்த பக்கம் போனாலும் கிருஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டங்கள் தட்டுபட்டுக்கொண்டே இருக்கும்.

    கூடிய விரைவில் தமிழகம் வாங்க.

    வருகைக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  43. @அம்பலத்தார்

    ////குரங்கு கைல பூமால = ஆமி கைல கேமரா =அதுனால சிரிச்சுருப்பாரோ...//
    குரங்குகளும் சிலவேளை நல்லவேலைகள்செய்யும் புரிஞ்சுகிட்டேன்.
    குரங்கு கைல பூமால =ஆமி கைல கேமரா=அசத்தல்//

    சிலவேளைக்கு தான். 100 போட்டோ எடுத்தா 10 போட்டோ தான் ஓரளவுக்க்கு இருக்கும் :-) வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  44. @ஏஞ்சலின்

    அருமையா எழுதியிருக்கீங்க ஏஞ்சலின். உங்கள் மற்றும் உங்களவர் தேர்வு அருமை. பிறகு வந்து கருத்து சொல்றேன்.

    தொடர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி ஏஞ்சலின்

    ReplyDelete
  45. ஆட்டோவில் வாங்கிய பல்பு - புகை படங்கள் அருமை அழகு - மொத்தத்தில் சுவை

    ReplyDelete
  46. @மனசாட்சி

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  47. //180 ரூபாயை 80 ரூபாயாக்கிட்டு தான் ஆட்டோவில் ஏறினேன்.//

    EA க்கு தி.நகர்ல இருந்து 60 ரூபாதான். எங்க ஊரு ஆட்டோ அண்ணாத்தாயா கொக்கா? 20 ரூவா போச்சா. சந்தோஷம்.

    ReplyDelete
  48. //எப்பவும் மிஷின் மாதிரி நிக்காத கால்கள் கொண்ட மனிதர்கள் வாழும் சென்னையில் இந்த டம்மி ரயிலில் அனைத்தையும் சுத்தி பார்க்க 200க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் கால்கடுக்க நின்றது பார்த்து சிப்பு சிப்பா தான் வந்துச்சு.//

    என்ன ஒரு எகத்தாளம்.

    ReplyDelete
  49. ரெண்டு நாள் முன்ன EA போனேன். கிறிஸ்துமஸ் செட்டை எல்லாம் கலைச்சிட்டு இருந்தாங்க. ட்ரெயின்ல ஏறி நாலு சுத்து வர ஆசைப்பட்டேன். முடியல.

    ReplyDelete
  50. @சிவகுமார்

    //EA க்கு தி.நகர்ல இருந்து 60 ரூபாதான். எங்க ஊரு ஆட்டோ அண்ணாத்தாயா கொக்கா? 20 ரூவா போச்சா. சந்தோஷம்.//
    ட்ராவல் பேக்கும் சூட்கேஸுமா போனாலே இந்த நெலம தானா அவ்வ்வ்வ்வ்

    ஆனாலும் ஒரு சேப்டிக்கு அந்த ஆட்டோ நம்பர் குறிச்சு வச்சுருக்கேன். தேடிபிடிச்சாவது 20 ரூபாய வாங்கிடமாட்டேன் ஹி...ஹி...ஹி..

    ReplyDelete
  51. @ஷிவா
    //ரெண்டு நாள் முன்ன EA போனேன். கிறிஸ்துமஸ் செட்டை எல்லாம் கலைச்சிட்டு இருந்தாங்க. ட்ரெயின்ல ஏறி நாலு சுத்து வர ஆசைப்பட்டேன். முடியல.//

    ஹா...ஹா...ஹா.. அதுக்கெல்லாம் மனசு வேணும் (சும்மா :-) வருசா வருசம் போடுவாகளாமே.... அடுத்த வருடம் பார்க்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. @ஷிவா

    //என்ன ஒரு எகத்தாளம்.//

    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  53. ஆமினா... ரொம்ப லேட்டா உங்க பிளாக்குக்கு வர வாய்ப்பு கிடைச்சிருக்கு...என்னால சிரிப்புத்தாங்கல கெக்கே பிக்கேன்னு சிரிச்சிட்டேன். ஏன்னா நானும் இதே வேலைய செய்வேன். ஆட்டோகாரன்கிட்ட ரொம்ப தெரிஞ்ச மாதிரி... கடைசில நான் சொன்ன இடத்தைக் கடந்து போயிட்டிருப்பான். எங்க இவ்ளோ தூரம் வராதேன்னு கேட்டா (எவ்ளோ நேரம் ஆகும்னு விசாரிச்சு வச்சுக்குவோம்ல) நீங்க சொன்னதால உங்களுக்கு இடம் தெரியும்னு நெனச்சேம்பான் பாரு...
    ரொம்ப நல்லாருக்கு உங்க பதிவுகள்... நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாறேன்...

    ReplyDelete
  54. @சுமையா
    ஹி..ஹி...ஹி... நம்மள மாதிரியே பல்பு வாங்குனவங்கள பாக்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? (எது எதுல கூட்டணி வச்சுக்கணும்னு ஒரு இதே இல்லாம போச்சு ஆமிக்கு:-)
    உங்க கமென்ட் ரொம்பவே உற்சாகப்படுத்துது சுமையா. மிக்க நன்றி. அடிக்கடி வாங்க

    ReplyDelete
  55. naan etho America kimericca poyth tholachchitteengannu nenachchen.. thappichchen po..

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)