தேர்தல் நடந்தப்ப எங்கம்மாவும் அத்தையும் டெரர் விவாதத்துல இருந்தாங்க. அதாவது மாமி ரெட்ட இலைக்கு ஓட்டு போட்டது அம்மாவுக்கு பிடிக்கல. அதுக்கு எங்கம்மா ஒரு காரணத்த சொன்னாங்க பாருங்க "கலைஞரு என்னன்ன செஞ்சாரு? கலர் டீவி பொட்டி, ஒத்த ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி…. அதெல்லாம் அனுபவிச்சுட்டு நன்றிய மறந்துட்டு  இப்படி பண்ணலாமா????????

ஹா...ஹா...ஹா...ஹா... இது செம காமெடி! சூப்பரா சொல்லியிருக்காங்க இல்ல?

இப்படிதான் பக்கத்துவீட்டு ஆன்டி கிட்ட பால்விலை,பஸ் டிக்கெட் விலை உயர்வு பத்தி புலம்பிட்டிருந்தேன். ஆனா அவங்க வாயை திறக்கவே இல்ல. ஒரு கட்டத்துல பொருமை இழந்து என்ன ஒன்னும் பேச மாட்ரீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "எனக்கு மாசம் மாசம் ஆயிரம் ரூபா ஒதவிதொக கொடுக்குற அம்மாவ கொற சொல்லி பேசலாமா?" 

ஹா ஹா ஹா இது செம காமெடி ! சூப்பரா சொல்லியிருக்காங்க இல்ல?


இப்படியாகத்தான்  நம்ம மக்கள்ஸ் இருக்காங்க.. பதிவுலகிலும் இப்படியான காமெடிகளை நீங்க அடிக்கடி பாக்கலாம். ஒருத்தன் ஒரு விஷயத்த பிடிக்குதுன்னு சொன்னாலும் கும்முவானுவ. பிடிக்கலைன்னு சொன்னாலும்  இலவசமா கொடுத்தவன ஆதரிக்காம வெறுக்குறானுவன்னு காமெடி பண்ணுவாய்ங்க. தெனமும் காமெடிதேன் போங்க....

நாம்ம என்ன சொல்லவரோம்னுலாம் காதுல கூட வாங்கமாட்டாங்க. ஆனாலும் செய்நன்றி மறவாச் செம்மல் திருநாட்டில் பொறந்தவுகன்னு  நிரூபிச்சுடுவாங்க.

சரி நமக்கென்ன மக்கா? அமெரிக்காகாரன் இலவசமா கொடுத்த ப்ளாக் இருக்கு.  அமெரிக்கா இந்தியா மேல் ஹிரோஷிமா தாக்குதல் நடத்துனாலும்  அமெரிக்கா வாழ்கன்னு கோஷம் போடுவோம் சரிதானே? நமக்கு விருப்பு வெறுப்பா முக்கியம்? எவன் இலவசமா கொடுத்தாலும் அவன காக்கா பிடிக்குறதும், நான் உனக்கு அடிமைன்னு காட்டுறதும் தானே முக்கியம்?

வாழ்க அமெரிக்கா


,

60 comments:

 1. ///எவன் இலவசமா கொடுத்தாலும் அவன காக்கா பிடிக்குறதும், நான் உனக்கு அடிமைன்னு காட்டுறதும் தானே முக்கியம்?///ரோசம் உள்ளவங்க பிறகு எதுக்கு அமெரிக்கனின் பிளாக்கை பாவிக்கிறிங்க? தூக்கி எறியவேண்டியது தானே.. 'அல்லா எமக்கு எழுத புது இணயத்தளம் கொடுப்பார்' என்று சொல்லிவிட்டு!

  ReplyDelete
 2. @தெகிரிய அனானி

  செம காமெடி போங்க.... ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
 3. ///பிடிக்கலைன்னு சொன்னாலும் இலவசமா கொடுத்தவன ஆதரிக்காம வெறுக்குறானுவன்னு காமெடி பண்ணுவாய்ங்க.// இப்ப பாருங்க பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பாக இருக்கு அதுக்காக அமெரிக்காவின் ஒவ்வொரு செயலையும் ஆதரிக்கிறது என்றா அர்த்தம்? உங்கள் பார்வையில் ஆதரிப்பது என்பது காக்கா பிடித்தல் என்று அர்த்தமா?

  உங்களை யார் ஆதரிக்க சொன்னது? எதுக்கெடுத்தாலும் அமெரிக்கன் தான் காரணம் என்று புலம்புவதை தவிர்த்து, நீங்கள் இந்த உலக மக்களுடன் ஒன்றித்து பயனிக்கலாமே! அதை விடுத்து எதற்க்கேடுத்தாலும் மதம், மார்க்கம் என்று உலகில் உங்களை மட்டும் பிரித்து வைத்திருந்தால் நிலைமை இவ்வாறு தான்.

  ReplyDelete
 4. @அனானி

  ஹி...ஹி...ஹி...

  மறுபடியும் மறுபடியும் காமெடி பண்ணாதீங்க அனானி.. சிரிப்பு சிரிப்பா வருது !!!

  ReplyDelete
 5. sutha.07@hotmail.com16 January 2012 at 05:21

  ராமனே ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும் நாம வாழ்ந்தால் சரிங்கோ.வாழும் பொது தூரோகம் பண்ணாம,முடிஞ்ச வரை நல்லவனாய் வாழ முயற்ச்சியாவது பண்ணுவம்.

  ReplyDelete
 6. எதுவுமே இலவசம் இல்ல, பின்னால் பெரிய வில்லங்கம் இருக்கும்.

  ப்ளாக் கொடுக்குறது பிசினஸ பெருக்க ஒரு யுக்தி.

  ReplyDelete
 7. சகோதரி சொல்லவந்ததில எது உங்களுக்கு பிளாக் எழுத ஆதரவா இருக்கு அத கப்பென்னு பிடிச்சிடுவிங்க?.. இப்ப பாருங்க ஈழ அகதிகள் இருபது வருசமா இந்தியாவில இருக்காங்க.. சவூதி குவைத் போன்ற நாடுகள்ல இருபது இருபத்தைந்து வருசமா இலங்கை இந்தியர்கள் இருக்கிறார்கள்.. ஆனா அமெரிக்காவிலும் மற்றைய ஐரோபிய நாடுகளிலோ இப்படி இருந்தா அவர்கள் அந்த நாட்டு பிரசைகள்.. அவர்கள் கணம் பண்ணுவது அப்படி.. இலங்கை இந்தியா மற்றும் மதிய கிழக்கு நாடுகள் அப்படியா ஒருத்தர் இவ்வளவு காலமா எங்கள் நாட்டில இருக்கிறார்கள் என்று கணம் பண்ணுவார்கள்? நான் அதிகமாக கவனித்த விடயம் என்னன்னா எத சொல்ல வந்தார் என்பதை விட்டுட்டு முட்டையில் maayir புடுங்கும் வேலை இது. இப்படித்தான் கொஞ்ச பேர் எத கேட்டலும் எதிர் கேள்வியா முதல்ல கோழியில இருந்து முட்ட வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததான்னு கேட்டு இதுக்கு முதல்ல மறுமொழி சொல்லு அதுக்கு பிறகு உனது கேள்விக்கு மறுமொழி சொல்கிறேன் என்பார்கள்.. நீங்களும் அப்படித்தான் போல? அமெரிக்காவில் உள்ள மற்ற எந்த விடயமும் உங்களுக்கு கண்ணில் தெரியாதா? அல்லது உங்களுக்கு காமாலை கண்ணா?

  ReplyDelete
 8. Ithula enna maadhiriyaana kuththu irukkuthunne theriyalaye akka...... Surukkamaa sonna puriyala

  ReplyDelete
 9. சொந்த நாட்டு பிரசைகளையே அந்நியனை போல நடத்தும் நாடுகளுக்கு முன்னாள் எனக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் சிறந்த நாடுகளாக தெரிகின்றது.. நான் இந்த நாடுகளை பார்த்து அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் சகோதரி..!

  ReplyDelete
 10. ஸலாம் சகோ.ஆமினா,
  பதிவு செம காமடி,
  காமடியில் லாஜிக் பார்க்கக்கூடாது...
  அதேபோல காமடி பதிவிலும்..!

  ReplyDelete
 11. நாம் எதை சொல்கிறோமோ அதே கருத்தை அடுத்தவரும் ஆதரிக்க வேண்டும் அல்லது ஆதரித்தே தீரவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம். நட்பு தொடர வேண்டுமானால் அடுத்தவரின் விரும்பங்களுக்கு ம் மதிப்பு கொடுத்து நம் விருப்பை திணிக்காமலும் இருக்க வேண்டும். நான் சொல்வதுதான் சரி என்கிற மனோபாவம் தான் எல்லாவற்றையும் காமெடி ஆக்கிவிடுகிறது.

  ReplyDelete
 12. நம்முடைய கருத்தைதான் அடுத்தவரும் ஆமோதிக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனோபாவம் தான் இந்த மாதிரி எல்லா காமெடிகளுக்கும் அடித்தளம்.

  ReplyDelete
 13. சகோ.ஆமினா,
  கருணாநிதி இலவசம் கொடுத்தார்னா அவரோட சொந்தக்காசா..?
  அது பல மக்கள் காசு... சிலருக்கு கொடுத்தாரு...

  இப்போ ஜெ. வந்து அதை எல்லாம் பால்/பஸ் டிக்கெட்/மின்சாரம் னு வட்டியும் முதலுமா வசூல் எல்லாரு கிட்டேயும் பண்ணுராக...

  இப்போ நீங்க ஜெ. கிட்டே வாங்குற இலவசங்களுக்கு அடுத்து வரப்போற ஸ்டாலின் வட்டியும் முதலுமா வசூல் பண்ண போறாரு...

  ஹா...ஹா...ஹா... அவ்ளோதான் மேட்டரு...

  ஆனா...

  கூகுள் கொடுத்த இலவச பிளாக்கர் அமெரிக்காவோடதா..? அமெரிக்க மக்களோடதா..? இல்லை கூகுளோட சொந்த காசா..? இதன் மூலம் mutual profit பாணியில்... கூகுள் சம்பாரிக்கிறது...

  ReplyDelete
 14. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா சகோ.ஆமினா..?

  சென்ற மாதம் ஒபாமா அமெரிக்காவில் ஒரு புதிய சட்டத்தை, SOPA (Stop Online Piracy Act) என்ற பெயரில் கொண்டு வர முனைந்தார். இச்சட்டத்தினால் இனி எல்லா இணையதளங்களையும் அமெரிக்காவில் சுதந்திரமா பார்க்க முடியாது. முக்கியமா விக்கி லீக்ஸ் போன்ற அமெரிக்க அரசின் உண்மைகளை துகிலுரிக்கும் சில தளங்களை தடை செய்வதின் மூலம் தம் நாட்டின் நிஜ - நிழல் பிம்பங்கள் உலக அரங்கில் தெரியாதவாறு தடுத்து விடலாம் என்ற வில்லத்தனமான நோக்கில் முயற்சித்தார். ஒபாமாவின் இந்த முயற்சிக்கு அமெரிக்க மக்கள் மட்டுமல்ல; பிரபல இணைய நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தன..!

  அவற்றில் முன்னணியில் நின்னது "நம்ம" பிளாக்கர் வைத்து இருக்கும் Google தான்..! அப்புறம்... Twitter, Facebook, LinkedIn, Wikipedia போன்றவைகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன..!

  சகோ.ஆமினா...
  அமெரிக்க அரசு வேறு... கூகுள் பிளாக்கர் இலவசம் வேறு...
  இந்த உதாரணமும்...
  கருணாநிதி - ஜெ - இலவசம் உதாரணமும் பொருத்தமா இல்லை...

  அதுனாலத்தான் சொன்னேன் பதிவு லாஜிக் இல்லை என்றாலும்... ரசிக்கத்தக்க காமடி பதிவு. நன்றாக எழுதி உள்ளீர்கள்..!

  சிந்திக்கத்தூண்டிய பதிவுக்கு நன்றி சகோ.ஆமினா.

  ReplyDelete
 15. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. அடுத்தவன் கொடுத்தாலும் அது நல்ல விசயமாக இருந்தால் ஆதரிப்போம்.இலவசமாக இருந்தாலும் தீய விசயமாக இருந்தால் எதிர்ப்போம். ஆனா எது நல்லது? எது தீயது? அங்கதான் பிரச்சனையே ஆரம்பிக்குது.

  ReplyDelete
 17. ஆமினா said...

  @அனானி

  ஹி...ஹி...ஹி...

  மறுபடியும் மறுபடியும் காமெடி பண்ணாதீங்க அனானி.. சிரிப்பு சிரிப்பா வருது !!!///

  ஹி...ஹி.. நல்ல 'மத நல' வைத்தியராக சென்று பார்க்க வேண்டியது தானே?

  ReplyDelete
 18. @காட்டான் அண்ணா

  //உங்களுக்கு பிளாக் எழுத ஆதரவா இருக்கு அத கப்பென்னு பிடிச்சிடுவிங்க?..//

  இல்லை அண்ணா

  ஐடியா மணியின் அந்த பதிவு குறித்தான விவாதத்தை பேஸ்புக்கிலேயே முடித்துவிட்டேன். பார்க்கவில்லை என்றால் முழுதாக பார்த்துவிடவும். இந்த பதிவுக்கும் ஐடியாவிற்கும் எந்த விதத்திலும் சம்மந்தமில்லை.

  //அல்லது உங்களுக்கு காமாலை கண்ணா?///

  இந்த பதிவுக்காவது எதிர்கருத்து தெரிவிச்சீங்களே... மிக்க நன்றி :-)

  ReplyDelete
 19. என்னது ஓபாமா அதிபர் சீட்டில் ஒக்காந்துக் கொண்டு பிளாக் டிசைன் பண்ணி கொடுக்கிறரா?

  சொல்லவேயில்லை?

  ReplyDelete
 20. சாரி சகோதரி!
  காமாலை கண்ணோ? என்ற வார்த்தையை "மட்டும் " வாபஸ் வாங்கிக்கிறேன்!!

  ReplyDelete
 21. எழுத்து சுதந்திரம் கண்டிப்பாய் அங்கு உண்டு...

  ReplyDelete
 22. Assalamu alikum akka!
  Mega arumaiyaga kooriullirgal!

  Keep it up!

  ReplyDelete
 23. Assalamu alikum akka!
  Mega arumaiyaga kooriullirgal!

  Keep it up!

  ReplyDelete
 24. @sutha
  நல்லவனா இருந்து சில கருத்துக்கள் சொன்னா ஒடனே ஒரு கும்பல் வரும் பாருங்க... இவிங்களும் வாய மூடிட்டிருப்பாய்ங்க. பேசுறவங்களையும் கேலி பண்ணுவாய்ங்க. அவர்களுக்காக தான் இந்த பதிவு சகோ
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 25. @கார்பன் கூட்டாளி

  //ப்ளாக் கொடுக்குறது பிசினஸ பெருக்க ஒரு யுக்தி.//
  இது உங்களுக்கும் எனக்கும் புரியுது. சில மடப்பதர்களுக்கு புரியலையே சகோ :-( என்ன செய்ய???

  ஒரு விஷயத்தை எதிர்த்தா பாகிஸ்தான்க்கு ஓடுன்னு சொல்றதும், அமெரிக்காவை எதிர்த்தா ப்ளாக்கை எழுதாதன்னு சொல்றதுக்கும் நாம என்ன இவிங்க வீட்டு சொத்தை அழிச்சுட்டு நாம உக்கார்ந்துருக்குற மாதிரி ஓவ்வ்வ்வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ரா பீல் பண்றாங்க சகோ... தாங்க முடியல :-)

  ReplyDelete
 26. @ காட்டான் அண்ணா

  தனிமனித சுதந்திரத்தில் அந்நாடு காட்டும் அக்கறையை விரும்புகிறேன். ஆனால் வெறுப்பதற்கு வலுவான காரணம் இருந்தும் தட்டி கேட்காமல் ஊமையாய் இரு என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை தானே? அதுவும் வெறுப்பதற்கான காரணம் வலுவாய் இருக்கும் போதும் எப்படி ஐ லவ் அமெரிக்கா ஐ லவ் அமெரீக்கான்னு இரட்டை வேஷம் போட முடியும்? நீங்களே சொல்லுங்க. தன்னை வல்லரசாக்க வலிய நாடுகள் மேல் அமெரிக்கா தொடுக்கும் போர்-இதனை நீங்கள் விரும்புவீர்களா? வெறுப்பீர்களா?

  புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 27. @மௌனகுரு
  //Surukkamaa sonna puriyala//

  ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 28. @காட்டான் அண்ணா
  //சொந்த நாட்டு பிரசைகளையே அந்நியனை போல நடத்தும் நாடுகளுக்கு முன்னாள் எனக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் சிறந்த நாடுகளாக தெரிகின்றது.. நான் இந்த நாடுகளை பார்த்து அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் சகோதரி..!//

  நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது சகோ. ஒரு விசயம் ஒருவருக்கு பிடிப்பது போல் இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கும் இல்லையா? உங்களுக்கு பிரான்ஸில் சுதந்திரம் கிடைக்குது நீங்கள் விரும்புகிறீர்கள். ஒரு நாட்டு மக்கள் முழுவதும் நசுக்கப்படுகிறார்கள் நாங்கள் வெறுக்கிறோம். இதான் விஷயமே...

  ReplyDelete
 29. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  //காமடியில் லாஜிக் பார்க்கக்கூடாது...
  அதேபோல காமடி பதிவிலும்..!//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 30. @விஜயன்
  //நான் சொல்வதுதான் சரி என்கிற மனோபாவம் தான் எல்லாவற்றையும் காமெடி ஆக்கிவிடுகிறது.//

  இருபக்க நியாயங்களையும் ஆராய வேண்டும் என்று தான் நானும் வலியுறுத்தியுள்ளேன் சகோ. நீங்கள் சொல்வது போல் வலிந்து திணிக்கப்படும் ஒரு கருத்தும் தனிமனித சுதந்திரத்தை காவு வாங்கும் செயல் தான்.

  ReplyDelete
 31. @விஜயன்
  //நம்முடைய கருத்தைதான் அடுத்தவரும் ஆமோதிக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனோபாவம் தான் இந்த மாதிரி எல்லா காமெடிகளுக்கும் அடித்தளம்.//

  அருமையாக சொன்னீங்க சகோ. நீண்ட நாட்களுக்கு பின் வலைக்கு வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல

  ReplyDelete
 32. @சகோ ஆஷிக்
  //கூகுள் கொடுத்த இலவச பிளாக்கர் அமெரிக்காவோடதா..? அமெரிக்க மக்களோடதா..? இல்லை கூகுளோட சொந்த காசா..? இதன் மூலம் mutual profit பாணியில்... கூகுள் சம்பாரிக்கிறது...//

  இந்த சிம்பிள் லாஜிக் கூட புரிஞ்சுக்காம ஒருத்தர் அமெரிக்காகாரன் கொடுத்த ப்ளாக் மட்டும் எதுக்குன்னு கேட்டாரே பாக்கலாம்... ஹி...ஹி...ஹி.. அந்த காமெடி தான் இந்த காமெடி பதிவுக்கு அடித்தளம்.

  ReplyDelete
 33. @சகோ ஆஷிக்
  //அமெரிக்க அரசு வேறு... கூகுள் பிளாக்கர் இலவசம் வேறு...
  இந்த உதாரணமும்... கருணாநிதி - ஜெ - இலவசம் உதாரணமும் பொருத்தமா இல்லை...//
  ஹா...ஹா...ஹா.. சகோ ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க....

  ஆனா ஒரு விஷயம் தெரியுமா?

  மற்ற நாடுகளை அமெரிக்கா நசுக்கி தன் காலடியின் கீழ் கொண்டு வர நினைக்கும் மனோபாவத்தை ஒருசாரார் எதிர்ப்பதை ஒன்னு சரின்னு சொல்லணும். இல்லைன்னா இல்லைன்னு காரணம் சொல்லணும். அத விட்டுட்டு

  //அமெரிக்கா அழிந்து போகவேண்டும் என்று சிலர் அமெரிக்காக்காரன் இலவசமாகக் கொடுக்கும் பிளாக்கிலேயே எழுதுகிறார்கள் :):////
  இப்படி யாராச்சும் உங்க கிட்ட சம்மந்தா சம்மந்தம் இல்லாம சொன்னா உங்களுக்கு காமெடியா இருக்குமா இருக்காதா ????

  அந்த காமெடி சீனை பார்த்த ஒடனே தான் இந்த காமெடி பதிவு. அதனால் தான் பாவம் அம்மாவையும் தாத்தாவையும் துணைக்கு அழைக்கவேண்டியாகிவிட்டது சம்மந்தமே இல்லாமல் :-)

  ReplyDelete
 34. @ரத்னவேல் ஐயா
  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 35. @அனானி
  ..ஹி...ஹி.. நல்ல 'மத நல' வைத்தியராக சென்று பார்க்க வேண்டியது தானே?///

  நா வைத்தியரை பாக்குறது இருக்கட்டும். உங்க அட்ரஸை சொன்னீங்கன்னா பழைய சேலை,சுடிதார்லாம் அனுப்பி வைப்பேன்.

  ReplyDelete
 36. @ஹைதர் அண்ணா

  //என்னது ஓபாமா அதிபர் சீட்டில் ஒக்காந்துக் கொண்டு பிளாக் டிசைன் பண்ணி கொடுக்கிறரா?

  சொல்லவேயில்லை?//

  ஹா..ஹா...ஹா...ஹா...
  அண்ணா சிரிச்சு மாளல... கலக்கிட்டீங்க போங்க :-)

  ReplyDelete
 37. @காட்டான் அண்ணா
  //சாரி சகோதரி!//

  :-(

  // "மட்டும்"//

  :-)

  ReplyDelete
 38. ஓ..!
  இது அந்த மாதிரி 'சிந்தனை?சிற்பி'களுக்கான உள்குத்து பதிவா..? சூப்பர் கும்மாங்குத்து..! கலக்கிட்டீங்க...!
  நான் தான் அதை புரிஞ்சிக்காம அவசரப்பட்டு கமென்ட் போட்டுட்டேனா..?
  நேக்கு பெர்ர்ர்ரிய பல்பு..!
  ஆனாலும், உள்குத்து பத்தி சூசகமாவது டிஸ்கி போட்டிருக்கலாமே..!
  இனி நீங்க பதிவு போட்டு ரெண்டு நாள் கழிச்சு கமென்ட் போடறது சேஃப் போல..!

  ReplyDelete
 39. வணக்கம் அக்கா,
  முதல் இரு பந்திகளும் காமெடியாக அரசியல் இலவசத்தைச் சொல்லி நிற்கிறது.

  இறுதியில் செம காமெடியினை லாஜிக் கலந்து சொல்லியிருக்கிறீங்க.
  யார் என்ன இலவசமாக கொடுத்தாலும், தவறுகள் நிகழும் போது சுட்டிக் காட்டுவது தானே மனித இயல்பு!
  உங்கள் கருத்தினை சரியெனச் சொல்லி நான் வழிமொழிகிறேன்.
  நண்பனாக எனக்கு ஒருவன் இருந்து தவறு செய்வதை எப்படி ஏற்க முடியாதோ...
  அப்படித் தான் கூகிள் கொடுத்த அமெரிக்கன் ப்ளாக் ஊடாக அமெரிக்காவின் சில தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தவறேதும் இல்லை.

  ReplyDelete
 40. நான் என்ன சொல்லனும் சகோ..ஹிஹி..விடுங்க யாருக்கோ குறி வைக்கரோம்..யாரோ மனசு வருத்தப்படுராங்க ஹிஹி..என்ன பன்ன!

  ReplyDelete
 41. தங்கை ஆமீனா
  பெயரை மாற்றி வைத்துக் கொள்ளவும் அமெரிக்காவை தாங்கள் எதிர்த்து பதிவிட்டாதால் இதை செய்தே ஆக வெண்டும் இல்லாவிட்டால் எதிர்பதிவு போடுவோம்

  A அமெரிக்கா என்ற சொல்லின் முதல் எழுத்து அதனால்
  A என்பது ஆமீனா என்று ஆரம்பிப்பதால் நீங்கள் பாவிக்கப்பிடாது

  M.E.I இதுபோன்ற எழுத்துக்களையும் நீங்கள் நீக்க வேண்டும் துரதிஷ்டவசமாக பெரும்பான்மையான அமெரிக்கா என்ற சொல்லுக்கு பயன்படுத்துகிற எழுத்துக்கள் உங்கள் பெயரில் இருக்கிறது இவைகளை நீக்கி வேறு நல்லா பெயராக வைத்துக் கொள்ளவும்

  என்னது முடியதா? அமெரிக்காவை எதிர்த்து பதிவு எழுதுவதற்கு முன் இதையேல்லாம் நீங்கள் யோசித்திருக்க வேண்டும்.

  இப்போது காலம் கடந்து விட்டது

  ReplyDelete
 42. ம்...ம் என்னமோ நடக்குது.பதிவைவிட பின்னூட்டங்கள் பாடம் சொல்லுது !

  ReplyDelete
 43. சலாம் தோழி ஆமினா! சுருக்கமா சொன்னாலும் சுள்ளுன்னு உறைக்கிற மாதிரி இருக்கு :‍)

  அனானிக்கு பழைய சேலை, சுடீஸ் அனுப்பப் போறீங்களா? ;))) ஏதோ பயம்போல.. ஒளிஞ்சு வந்தா எத வேணும்னாலும் பேசலாம்னு தெரியாம வந்துட்டாங்க. விட்டுடுங்கபா பாவம் :-) லேடீஸ் டிரஸ்லாம் அனுப்பிடாதீங்க, பிழைத்துவிட்டு போகட்டும் :))))

  ReplyDelete
 44. சலாம் சகோ ஆமினா,

  அருமையான கருத்து, காமெடியா சொல்லி இருக்கீங்க. கூகிள் ஒன்னும் உலக மக்கள் தங்கள் கருத்துக்களை வலை உலகில் பதிந்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த சேவைகளை வழங்கவில்லை. அனைத்தும் வியாபார உத்திதான். அவன் அவன் வியாபாரத்திற்கு நம்மை பயன்படுத்துகிறான், நாம் நமது எண்ணங்களைச் சொல்ல அவனை பயன்படுத்துகிறோம். இதில் அதிகம் பயன்பெறுவது கூகிள் தான். பில்லியன் ல சம்பாதிக்கிறான். நாம நேரத்த கொன்னுகிட்டு இருக்கோம். ஹ்ம்ம்...யாருக்கு புரியுது????

  கூடுதல் தகவல், யாருக்காவது பயன்படக் கூடும். நான் வேலை செய்வதும் அமெரிக்க கம்பனிதான்...ஹி.. ஹி.. ஹி.....

  ReplyDelete
 45. இந்த பதிவை 2 நாட்களாக கவனிக்காமல் விட்டதற்கு எனது கண்டனங்கள்.... எனக்கு நானே...

  ReplyDelete
 46. /* சகோதரி சொல்லவந்ததில எது உங்களுக்கு பிளாக் எழுத ஆதரவா இருக்கு அத கப்பென்னு பிடிச்சிடுவிங்க?.. இப்ப பாருங்க ஈழ அகதிகள் இருபது வருசமா இந்தியாவில இருக்காங்க.. சவூதி குவைத் போன்ற நாடுகள்ல இருபது இருபத்தைந்து வருசமா இலங்கை இந்தியர்கள் இருக்கிறார்கள்.. ஆனா அமெரிக்காவிலும் மற்றைய ஐரோபிய நாடுகளிலோ இப்படி இருந்தா அவர்கள் அந்த நாட்டு பிரசைகள்.. அவர்கள் கணம் பண்ணுவது அப்படி.. இலங்கை இந்தியா மற்றும் மதிய கிழக்கு நாடுகள் அப்படியா ஒருத்தர் இவ்வளவு காலமா எங்கள் நாட்டில இருக்கிறார்கள் என்று கணம் பண்ணுவார்கள்? நான் அதிகமாக கவனித்த விடயம் என்னன்னா எத சொல்ல வந்தார் என்பதை விட்டுட்டு முட்டையில் maayir புடுங்கும் வேலை இது. இப்படித்தான் கொஞ்ச பேர் எத கேட்டலும் எதிர் கேள்வியா முதல்ல கோழியில இருந்து முட்ட வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததான்னு கேட்டு இதுக்கு முதல்ல மறுமொழி சொல்லு அதுக்கு பிறகு உனது கேள்விக்கு மறுமொழி சொல்கிறேன் என்பார்கள்.. நீங்களும் அப்படித்தான் போல? அமெரிக்காவில் உள்ள மற்ற எந்த விடயமும் உங்களுக்கு கண்ணில் தெரியாதா? அல்லது உங்களுக்கு காமாலை கண்ணா? */

  காட்டான் அண்ணே, பிரஜா உரிமை கொடுக்கிறது தான் உங்கள் பிரச்சனையா??? இதுக்கு நீங்க மத்திய கிழக்கு நாடுகளில் அல்லவா போராடவேண்டும். மேலும் அவர்கள் ஒன்றும் இந்தியா அல்லது ஏனைய நாடுகளின் இஸ்லாமியர்களுக்கு கொடுத்து மாற்று மதத்தவர்களுக்கு கொடுக்காமல் இருக்கிறார்களா??? யாருக்குமே தானே தரவில்லை. சரியோ தவறோ அவர்கள் நாட்டு சட்டத்தில் தெளிவாக வைத்து இருக்கிறார்கள், இது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் அந்தா நாடுகளுக்கு சென்றது நமது தவறு. குடி உரிமை வேண்டும் என்றால் அதைத் தரும் நாடுகளுக்கு செல்வதை விட்டு. அவர்களை திட்டுவது அறிவார்ந்ததாகப் படவில்லை. ஹைதர் அலி யும் தான் 10 வருசமா சவுதில இருக்காரு. முஸ்லிம் என்பதால் குடியுருமை கொடுத்துவிட்டார்களா?????

  ReplyDelete
 47. /* சகோதரி சொல்லவந்ததில எது உங்களுக்கு பிளாக் எழுத ஆதரவா இருக்கு அத கப்பென்னு பிடிச்சிடுவிங்க?.. இப்ப பாருங்க ஈழ அகதிகள் இருபது வருசமா இந்தியாவில இருக்காங்க.. சவூதி குவைத் போன்ற நாடுகள்ல இருபது இருபத்தைந்து வருசமா இலங்கை இந்தியர்கள் இருக்கிறார்கள்.. ஆனா அமெரிக்காவிலும் மற்றைய ஐரோபிய நாடுகளிலோ இப்படி இருந்தா அவர்கள் அந்த நாட்டு பிரசைகள்.. அவர்கள் கணம் பண்ணுவது அப்படி.. இலங்கை இந்தியா மற்றும் மதிய கிழக்கு நாடுகள் அப்படியா ஒருத்தர் இவ்வளவு காலமா எங்கள் நாட்டில இருக்கிறார்கள் என்று கணம் பண்ணுவார்கள்? நான் அதிகமாக கவனித்த விடயம் என்னன்னா எத சொல்ல வந்தார் என்பதை விட்டுட்டு முட்டையில் maayir புடுங்கும் வேலை இது. இப்படித்தான் கொஞ்ச பேர் எத கேட்டலும் எதிர் கேள்வியா முதல்ல கோழியில இருந்து முட்ட வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததான்னு கேட்டு இதுக்கு முதல்ல மறுமொழி சொல்லு அதுக்கு பிறகு உனது கேள்விக்கு மறுமொழி சொல்கிறேன் என்பார்கள்.. நீங்களும் அப்படித்தான் போல? அமெரிக்காவில் உள்ள மற்ற எந்த விடயமும் உங்களுக்கு கண்ணில் தெரியாதா? அல்லது உங்களுக்கு காமாலை கண்ணா? */

  உங்களுக்கு குடியுருமை பிரச்சனை, அதனால் ஐரோப்பியர்களை ஆதரிக்கிறீர்கள். எங்களுக்கு உயிர் பிரச்சனை, அதனால் அமெரிக்காவை வெறுக்கிறோம். இலங்கை போன்று போரினால் பாதிக்கப் பட்டு, அந்த அவலங்களை பார்த்து நித்தம் நித்தம் அழுகிறோம் என்று கூறும் நீங்கள், பொய்யான காரணத்தை கூறி இராக் என்ற தேசத்தையே சின்னாபின்னப் படுத்திய அமெரிக்காவை ஆதரிப்பது வேதனை. என்ன செய்வது நமக்கு நடந்தால் அது வேதனை. அடுத்தவனுக்கு நடந்தால் "நமக்கென்ன ம.... போச்சு" அதானே உங்கள் நிலை???

  அமெரிக்கா செய்யும் நல்ல விசயங்களை நிச்சயம் ஆதரிப்போம். உதாரணத்திற்கு புதிய கண்டுபிடிப்புகளில் அது காட்டும் முயற்ச்சிகள்.


  டிஸ்கி 1 : ஒரு பெண்ணுடைய தளத்தில் இந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன். உங்களால் தான் இதுபோன்று தைரியமாக செயல்பட முடியும்.

  ReplyDelete
 48. /* நான் என்ன சொல்லனும் சகோ..ஹிஹி..விடுங்க யாருக்கோ குறி வைக்கரோம்..யாரோ மனசு வருத்தப்படுராங்க ஹிஹி..என்ன பன்ன! */

  விக்கி மாப்ஸ்...
  நீரு தெளிவாத்தான்யா பதிவுலகத்த கவனித்துக்கொண்டு வார.... அது சரி.. குறி வச்சது யாருக்கு???

  ReplyDelete
 49. @சகோ சிட்டிசன்

  //நேக்கு பெர்ர்ர்ரிய பல்பு..!//

  "கொல்ல" காலத்துக்கப்பறம் பல்பு வாங்கியிருக்கீங்க... ஹி...ஹி...ஹி... சாதிச்சுட்டோம்ல

  //ஆனாலும், உள்குத்து பத்தி சூசகமாவது டிஸ்கி போட்டிருக்கலாமே..! //

  காமெடி பீஸு அந்தளவுக்கு ஒர்த் இல்லைங்கோ... அதான் போடல...

  ReplyDelete
 50. @நிரூ
  //நண்பனாக எனக்கு ஒருவன் இருந்து தவறு செய்வதை எப்படி ஏற்க முடியாதோ...
  அப்படித் தான் கூகிள் கொடுத்த அமெரிக்கன் ப்ளாக் ஊடாக அமெரிக்காவின் சில தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தவறேதும் இல்லை.//

  அதே தான் நிரூ.. இந்த சின்ன விஷயம் கூட "சிலருக்கு" புரியலையே என்ன செய்ய?

  எதிரியை அவன் இடத்தில் இருந்துக்கொண்டே எதிர்ப்பவன் :-)

  ReplyDelete
 51. @விக்கி
  //...

  நான் என்ன சொல்லனும் சகோ..ஹிஹி..விடுங்க யாருக்கோ குறி வைக்கரோம்..யாரோ மனசு வருத்தப்படுராங்க ஹிஹி..என்ன பன்ன!
  //

  ஹி...ஹி...ஹி...
  மீனுக்கு வலை விரிச்சா திமிங்கலம் மாட்டுது :-) என்ன பண்ண :-)

  ReplyDelete
 52. @ஹைதர் அண்ணா
  //பெயரை மாற்றி வைத்துக் கொள்ளவும் அமெரிக்காவை தாங்கள் எதிர்த்து பதிவிட்டாதால் இதை செய்தே ஆக வெண்டும் இல்லாவிட்டால் எதிர்பதிவு போடுவோம்//
  இத மெயில்ல பார்த்ததும் சரியான ஷாக்... கமென்ட்டை பார்த்ததும் தான் தெரிஞ்சது... செமையான கமென்ட்.. எப்படிதான் யோசிக்கிறீங்களோ?

  அப்ப இனி N தான் என் பேரா? அவ்வ்வ்வ்வ்

  //என்னது முடியதா? அமெரிக்காவை எதிர்த்து பதிவு எழுதுவதற்கு முன் இதையேல்லாம் நீங்கள் யோசித்திருக்க வேண்டும்.
  //

  அவ்வ்வ்வ்வ்.... லக்னோக்காரர் போன் போட்டு சிரிக்கிறார் இந்த கமென்ட்ட படிச்சுட்டு :-)

  ப்ளாக்கை ஓசின்னு சொன்னவிங்க இதையும் சொன்னாலும் சொல்லுவாய்ங்க அண்ணா

  ReplyDelete
 53. @மயிலன்
  //உஷ்ஷ்ஷ்ஷஷ்.....//
  நீங்க ஒளிஞ்சுக்கோங்க. யார் கேட்டாலும் மயிலன் இங்கே இல்லைன்னு சொல்லிடுறேன் :-)

  ReplyDelete
 54. @ஹேமா
  //ம்...ம் என்னமோ நடக்குது.பதிவைவிட பின்னூட்டங்கள் பாடம் சொல்லுது //

  :-)

  புரிஞ்சுக்கிட்டீங்க தானே :-)

  ReplyDelete
 55. @அஸ்மா
  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  //லேடீஸ் டிரஸ்லாம் அனுப்பிடாதீங்க,.. //
  நானும் பரிதாபப்பட்டு தான் அஸ்மா என் ட்ரஸ்லாம் அனுப்புறேன்னு சொன்னேன். பாவம் அவரே வாங்கிக்கிட்டாரு போல.. அட்ரஸ் அனுப்பவே இல்ல ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 56. @சகோ சிராஜ்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  //
  கூடுதல் தகவல், யாருக்காவது பயன்படக் கூடும். நான் வேலை செய்வதும் அமெரிக்க கம்பனிதான்...ஹி.. ஹி.. ஹி.....//
  உங்களதாய்ங்க தேடிட்டிருக்காய்ங்க...

  அமெரிக்கா கம்பெனியில் இருந்துக்கொண்டே அமெரிக்காவுக்கு "பய"டேட்டா தயாரிச்ச குற்றத்துக்காக நீங்க வேலைய விட்டு நின்னுடுங்கோன்னுலாம் நா சொல்ல மாட்டேன். ஆனா நீங்க இனிமே கே.எப்.சி, பெப்சி லாம் குடிக்க கூடாது சொல்லிப்புட்டேன் :-))

  //அனைத்தும் வியாபார உத்திதான்.//
  ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சரி சகோ. இந்த யுக்தியை கூட யூகிக்க முடியாத பக்கீஸ்.... என்ன செய்ய நமக்கும் பொழுது போகணுமே... அதான் ஒர்த் இல்லாத விஷயத்தையெல்லாம் போட்டுட்டிருக்கேன் :-))

  ReplyDelete
 57. @சகோ சிராஜ்
  // இந்த பதிவை 2 நாட்களாக கவனிக்காமல் விட்டதற்கு எனது கண்டனங்கள்.... எனக்கு நானே...
  //

  பொங்கல் சண்டை போட்டிட்டிருக்குறதா கேள்விபட்டேன். அதுனால நானும் பொழச்சு போங்கன்னு விட்டுட்டேன் ஹி..ஹி...ஹி...
  வருகைக்கு நன்றி சகோ

  ஆங்,,, சொல்ல மறந்துட்டேனே... உங்கள் பிந்தைய 3 கமென்ட்கள் என் மெயிலுக்கு வரவில்லை(அல்லது நான் கவனிக்கலையான்னு தெரியல). இப்போது தான் டாஸ்போர்ட்டில் கவனித்தேன். மன்னிச்சூ.. மன்னிச்சூ...

  ReplyDelete
 58. blogga freeya kuduththathum kuduththaanunga, namma aaminaa akkka romba jaaliyaa irukka

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)