காலைக் கதிரவனோடு கண்விழித்து
கை எட்டும் தூரத்தில் இருக்கும் காஃபியை
கண்டு விட்டு அருந்தாமல்
மீண்டும் ஒரு குட்டி தூக்கம்
பின்பு
கலையாத தூக்கம் களைந்து
களைந்த கூந்தலை அள்ளி சொருகி
ஆறிக்கொண்டு இருக்கும் தேனீரை பருகி
வேலைக்கு செல்பவர்களே கூட
மேற்கொள்ளாத அவசரத்துடன்
வேக வேகமாய் தயாராகி 
வீட்டின் பால்கனியில் தொங்க விடப்பட்ட ஊஞ்சலில் ஓடி போய்
அமர்ந்து கொண்டு அதில் ஆடிக்கொண்டே (செய்திதாளை படிக்கலேனா கூட) படிப்பது போல் ஸ்டைலா ஒரு போஸ் கொடுத்து (அதுவும் இங்கிலீஸு பேப்பர்னா இன்னும் கெத்தா இருக்கும்) அப்பறம் தேவையே இல்லேனாலும் கூட "யாரங்கே! சூடா ஒரு காஃபி கொண்டு வா"னு அதிகாரமாய் சப்தமிட்டு கேட்க ஒரு ஆசை.


 அதனையடுத்து லஞ்சுக்கு என்ன பன்னலாம் sorry  என்ன சாப்பிடலாம்னு தீர்மானிக்க மெனுவை கொண்டுவானு வேலைக்காரியிடம் ஒரு அதட்டல் தொனியில் சொல்லி அவள் மெனுவை மனு கொடுப்பதுபோல் பவ்யமா கொடுக்க அதை பார்ப்பது போல் கொஞ்சம் நேரத்தை வீணடித்து கடைசியில் அதில் இல்லாத
ஒன்றை Choose செய்து விட்டு ஒரு ஜூஸ் வாங்கி அதில் பாதி மட்டும் சும்மா பந்தாவுக்காக குடித்துவிட்டு ஜம்முனு வெளியே கிளம்பி அப்படியே நம்ம டார்கெட் படி மார்க்கெட் பக்கமா போய் ஒரு கேரட்டை எடுத்து ஸ்டைலா மென்றுகொண்டே (ஏன்னா நமக்கு இந்த  தம் அடிக்கிற பழக்கம் இல்லை பாருங்க அதான்) விலை பேசாமல் பேரம் பேசி கடைசில அந்த கடையிலிருந்து நடையை கட்டி கடைசியில் இருக்கும் கடையில் ஐம்பது பைசாவுக்கும் ஒத்த ரூபாய்க்கும் High Decibel ல கத்தி கத்தி கத்திரிக்காய் உட்பட கருவேப்பிலை வரை அள்ளி போட்டுக்கொண்டு வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே ஆப்பிள் ஜூஸ் கொண்டுவா!! என்று மிரட்டி வாங்கிய ஜூஸை மிச்சம் வைக்காமல் குடித்துவிட்டு, வெயிலின் Hot ஐ விரட்டிய பின் hotmail ஓபன் செய்து (அங்கே inbox 0 தான் காட்டும், நாம் அதை வெளிக்காட்டாமல்) பழையமெயிலையே ஒரு தடவை படித்துவிட்டு. அப்பறம் என்ன செய்யலாம்னு யோசிச்சே மாலைவரை பொழுதை கழித்து, அதன் பின்பு எந்த வேலையும் இல்லாமலே தம்மாத்துண்டு Iriver Music Player ஐ செவியில் அணிந்துகொண்டு AR Rahman இசையுடன் அவசர அவசரமா வெளியே கிளம்பி
சாலையோர மரங்களுடன் சஞ்சரித்துக்கொண்டு இருக்கும் காற்றிடமும், விவாசயிகளின் உழைப்பை உரைக்கும் சேற்றிடமும் இயற்கையின் எழிலை அனுபவித்தவண்ணம் இசையை ரசித்தவண்ணம் நெடுஞ்சாலையில் ஒரு பாதயாத்திரை. முடியும்வரை நடந்து விட்டு வீடு திரும்பி இந்த களைப்புக்கு இதமாக ஒரு கப் சூப், அப்பறம் ஒரு சுகாதார நோக்குடன் ஒரு குளியல். இதனையடுத்து மீண்டும் ஹாட்மெயில் அதையடுத்து துயில்.

 How is this Life,  It's Wonderful na? இவ்வாறான ஒரு வாழ்க்கையை அடிக்கடி அசைப்போட்டதுண்டு..இப்படி ஒரு வாழ்க்கையை வாழ தேவை ஆறறிவு கொண்ட ஒரு மெஷின் அதுதான் வேலைக்காரி என்ற அறியப்பட்ட Maid Servant, இதெல்லாம் படிக்கும்போது கொஞ்சம் திமிரா இருக்குல்ல :))) ஓகே  Aaprt from the அலட்டல்..

இந்த வேலைக்காரி வேலைக்காரினு சொல்றோமே இங்கேதான் Knotty Problem starts.. ஒரு நான்கு வருடங்களாகவே எங்க ஊர்ல வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதான ஒன்றாகியது.

500 ரூபாய் கூலியில் பாத்திரம், துணி, வீடு முதலியனவற்றை கழுவி, சமையலும் செய்து முடிக்கவேண்டும். இந்த சம்பளத்துக்கு சம்மததுத்துடன் ஒரு வேலைக்காரி. வேலைக்காரி வைத்து வேலைகள் மேற்கொள்ள எனக்கும் ஒரு ஆசை (I am not sure Whether I am eligible for it).

நாங்க குடியிருக்கும் பக்கத்து வீட்டில் குடி கார குடும்பதலைவனுடன் ஒரு குடும்பம் குடியேறி குடித்தனம் ஆரம்பித்தது. வீட்டு வேலை செய்துதான் இவர்கள் வீட்டில் நிர்வாகம் நடக்கிறது என்பதை அறியமுடிந்தது. சிறிது நாட்களுக்கு பின் அந்த குடும்பம் எங்களுக்கு பழக்கமாகியது.அதில் ஒரு பெண் ரொம்ப நாளாக வேலைக்குச்செல்லாத காரணத்தால் ஆத்தா கண்டுபுடுச்சுட்டேன் என்ற ரேஞ்சில் வேலைகாரி கிடைத்ததாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நாள் அந்த வீட்டு பெண் என்னிடம் வந்து “அக்கா இந்த போன் வச்சுகிட்டு 1000 ரூயாய் தரீங்களா??"னு கேட்டாள், இதன்மூலம் தெரிந்து கொண்டேன் அவள் வேலை இழந்த காரணத்தை..இந்த சம்பவத்தால் எனக்கு வேலைக்கு ஆள் வைக்கும் ஆர்வம் போயிருச்சு.

அப்பறம் சென்னையில்....
இங்கே வேலைக்கு ஆள் ஏராளாமாகவே திரிந்தார்கள். ஒவ்வொரு வேலைக்கும் தனி தனியா விலை வைத்தார்கள்......
சமையலுக்கு 500 ரூபாய்
துணி துவைக்க 750 ரூபாய்
பாத்திரம் கழுவ 450 ரூபாய்
வீட்டை சுத்தம் செய்ய 300 ரூபாய்

இப்படி ஒரு Professional லாவே quotation கொடுத்தார்கள்.
anyways its ok. done! நான் இந்த 2000 ரூபாயும் தரேன் வீட்டோட வேலைக்காரியா வீட்டோட இருக்க சம்மதமானு கேட்டேன். என்னை 2000 க்காக நீங்கள் சிறை கொண்டால் என் குடும்பம் ரன் ஆகாதும்மோய்னு மறுப்பு சொல்லி நகர்ந்தாள்..அந்த தெருவில் 20 வீடுகளும் இவளது கவனிப்பில்தான். எனவேதான் இந்த கிராக்கி. எனிவே அவளுக்கு ஓகே சொல்லி வேலைக்கு அமர்த்தினேன்.

ஒருதடவை வேலைக்காரி வேலையை காட்டினாள். எங்க வீட்டில் கெஸ்ட் வந்திருந்த நாட்களில் அழுக்கு துணி அதிகமானதால் அதற்கு Extra Charge செய்தாள்..துணி அதிகமா இருக்கு அதுனால 200 ரூபாய் போட்டுக்கொடுனு வேட்டு வைத்தாள்..அவளோட இந்த ட்ரிக்கை பார்த்து எரிச்சல் வந்து வாசல்வரை சென்று பெரிய கும்புடு போட்டு வழியனுப்பிவிட்டு கதவை அடைத்தேன்.

ஒருநாள் அக்கா வீட்டுக்கு போனேன்.. நான் போன அக்கணமே அக்கா பதறியடுத்து என்னை தனியா அழைத்து சென்றாள். எதுக்குனு நான் கேட்பதற்கு முன்னாடியே அவளே சொன்னள்..அட உளறுவாய் ஆமினா அங்கே நின்னு நாம பேசுனா, நம்ம கதையை ஊர் பேசும். அதை வேலைக்காரி அப்படியே கேட்டு அடுத்த வீட்டில் போய் ஒலிபரப்பிவிடுவா. கூலி வாங்காமல் வேலைக்காரிகள் செய்ற ஒரே வேலை இந்த வேலைதான். ஒரு வேளை நீ அங்கே உளறியிருந்தா அடுத்த கணமே ஒலிபரப்புதான். நல்ல வேளை நான் உன்னைய இங்கே இழுத்துட்டு வந்துட்டேன். அந்த அக்கபோருக்கு பயந்துதான் அக்கா உன்னைய இங்கே இழுத்துட்டு வந்தேனு சொன்னா. அப்பதான் எனக்குமே ஞாபகம் வந்துச்சு எங்கிட்டேயுமே ஒருதடவை இன்னொரு குடும்ப விஷயங்களை ஒப்பித்துக்கொண்டு இருந்தாள். நல்ல வேளை நான் தப்பித்துக்கொண்டேன் இப்ப.

டேபிள்ல இருந்து பணத்தை எடுத்து கேபிள்காரர்கிட்ட கொடுக்கும்போது வீட்டோ இருந்து வேலை செய்ய ஆள் யாரும் கிடைப்பாங்களானு ஒரு விசாரிப்பு கொடுத்தேன். மறு நாள் வந்தது ஒரு ஆள் வந்தது. முதல் நாள் சொல்லிவிட்டதன் பலன்.

பேச்சுவார்த்தை தொடங்கியவுடனே மாசம் 4000ரூபாய்னு ஒரே போடு போட்டார். எதுக்குமே அசராதா எங்க ஆள் இதுக்கு ஆடி போய்ட்டார். ம்ஹும்..  Basicகே சரியில்லையே so நீயே பேசிக்கோ னு அவரு இடத்தை காலி பண்ணிட்டார்.

அப்பறம் வேலைக்கு வந்த ஆள் போட்ட நிபந்தனைகள் பாருங்க...
  • 1தேதி ஆனதும் கைக்கு பணம் வர மாதிரி பாத்துக்கோங்க
  • அப்பப்ப லீவ் எடுத்துக்குவேன். ஆனா சம்பளத்துல கழிக்க கூடாது.
  • நாயத்து கிழமை(ஞாயிறு) லீவ் வேணும்.
  • காலைல 10 மணிக்கு வருவேன் மதியம் கிளம்பி மாலை 5 மணிக்கு வருவேன். அடுத்து நைட் 8 மணிக்குள்ள வீட்டுக்கு போகணும்.
  • மதிய, இரவு சாப்பாட்டை வீட்டுக்கே கொண்டு போய்டுவேன்.
  • நோன்புக்கும்,ரம்ஜானுக்கும்,ஹஜ்ஜு பெருநாளைக்கும் துணி எடுத்து கொடுக்கணும்.காசா குடுத்துட்டாலும் நல்லது தான்.
  • என்னால தண்ணி குடத்த 5க்கு மேல தூக்க முடியாது. (வாரம் ஒரு முறைக்கு)
  • கட தெருக்குலாம் போக சொல்லாதீங்க எனக்கு பிரஷர் இருக்கு.
  • ஆள் அதிகமா வந்தா அப்போதை மட்டும் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துடுங்க.
இப்ப அந்தம்மா தான் வேலைக்கு வந்துருக்காங்களா இல்ல நாமதான் வேலைக்கு போயிருக்குமோனு குழப்பமே வந்துருச்சு போங்க!!!!!!!!

இன்னும் என்னன்னமோ சொன்னார். ஆரம்பிக்கும் போதே தலை சுத்தியதால் ஞாபகம் இல்ல. இப்போதைக்கு 3000 தரேன்.. போக போக பாத்துக்கலாம் என்றதும் பேரம் பேச ஆரம்பிட்டுட்டாங்க. என்னவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி அவர பேசச்சொல்ல உடனே தலையாட்டிட்டு போனாங்க.

அடுத்த நாள் வந்தார். வருவதற்கு முன்பே பாத்திரம் கழுவி விட்டதால் வேலை இல்லை. வாஷிங் மெஷினில் துணியை  போட்டுவிட்டு அலச மட்டும் கொடுத்தேன்.அலசி என் கையில் கொடுத்தார். தந்ததை வெயிலில் உலர்த்திவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தேன். தூசு தட்டி வீட்டையும் தோட்டத்தையும் பெருக்கினார்.  எல்லா காய்கறிகளும் நான் நறுக்கி கொடுக்க சமைத்து முடித்தார். அக்ரிமென்ட் படி 1 மணிக்கு போய்ட்டு சாயங்காலம் 5 மணிக்கு வந்துச்சு மகராசி. அப்பறம்  டீ போட்டு குடுச்சுட்டு எனக்கும் தந்துட்டு வேக வேகமா சமையலை முடிச்சு உடனே கூடையை தூக்கிட்டு கிளம்பிட்டார்.

 இதுக்காகவா நாம்ம பணம் குடுக்கணும்னு ஓவரா யோசிச்சு முடியே கொட்டி போச்சு. அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் வேலைக்காரிய வைக்க வேண்டிய எடத்துல வைக்கணும் பா. எந்த வேலையும் நீ பாக்காத என அட்வைஸ்.வீட்டோட வேலைக்காரின்னு சொல்லி இப்படி ஏமாந்து போயிருக்க?ன்னு என் அக்கா ஒரே திட்டு. இந்த வேலைக்கா 4000 என என்னவர் முறைக்க என் அம்மா மட்டும் அதே எடத்துல என்னை நெனச்சு பாத்தா உனக்கு அவங்க மேல பரிதாபம் தான் வரும். காசு போகுதுன்னு கவலப்படாத. மத்தவங்களுக்கு நன்மை செஞ்சா வேற வழியில கண்டிப்பா இறைவன் கொடுப்பான். நம்மனாலேயே நம்ம வீட்டு வேலைய பாக்க முடியாம தன் அவங்கள கூப்பிட்டுருக்கோம். நம்ம வீட்டு வேலைய செய்றதுக்கே நமக்கு எப்படி கஷ்ட்டமா இருக்கு? எல்லா வீட்டுலையும் பாக்குற அவங்களுக்கு எப்படி இருக்கும்? அவங்களுமே ஏதோ ஒரு கஷ்ட்டத்துக்காக தான் இந்த வேலைக்கு வந்துருப்பாங்க இல்லையா? அதெல்லாம் நெனச்சு பாரு.உன்னை நீயே குழப்பிக்க மாட்ட" ன்னு அர மணி நேரமா போனில் அட்வைஸ்.

இப்ப தெளிவாகிட்டேன். அம்மா சொல்றது தான் கரேக்ட். குடுக்குற பணத்த சம்பளம்னு நெனச்சா தான் கஷ்ட்டம். நன்மை செய்வதாக நெனச்சு கொடுக்கலாம். என்னவர் சொல்வதும் கரேக்ட். செய்ற வேலைக்கு தான் பணம். ஸோ நம்ம வேலை செய்ய கூடாது. அக்கா சொல்வதும் கரேக்ட். வீட்டோட வேலைக்காரியா இல்லைன்னாலும் நாம்ம சொன்ன நேரத்துக்கு தான் வரணும், நேரத்துக்கு தான் போகணும்.

அடுத்த நாள் அவரின் வருகைக்காக காத்திருந்தேன். வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. ஒரு வாரம் போனது. கேபிள் காரனிடம் என்ன ஆச்சுன்னு போன் போட்டு கேட்டா "வயசான அம்மான்னு கூட பாக்காம அந்த பொண்ணு என்னை பயங்கரமா வேல வாங்குது. சம்பளம் வேற கம்மியா கொடுத்தா எப்படி பொழப்ப நடத்துறது?ன்னு அந்தம்மா கேக்குறாங்கம்மா"ன்னு சொன்னதும் இடிஞ்சு போயி உக்கார்ந்தேன் :((
அடப்பாவிகளா என் மாமியார்கிட்ட கூட கெட்ட பேரு வாங்கினதே இல்ல. ஆனா வந்த ஒரே நாள்ல என்னைய கொடுமைக்காரின்னு சொல்லிட்டாங்களேன்னு அழுக்காச்சி தான் போங்க.

அதாவது,... Dedicated டா வேலை செய்றவங்ககிட்ட சம்பளம் கொடுக்கும்போது அது செலவா தெரியாது..in fact கொடுக்கும் போது நமக்குமே ஒரு மகிழ்ச்சி இருக்கும்.அவங்களோட பிரச்சனைகளையுமே நமக்கு Care பண்ண தோனும் இல்லையா? ஒரு Genuine Person க்கு உதவி செஞ்சா நமக்குமே நன்மைதானே இல்லையா??? சும்மா எதோ ஒரு Deal மாதிரி கராரா இருக்குறவங்களை பத்தி நாமளும் பெருசா அக்கரை எடுத்துக்க முடியாது.நாமளும் கராராதான் இருக்க தோனும்

எப்படியோங்க.....
பாவப்படலாம் பரிதாபப்படலாம்
ஏமாறக்கூடாது
உதவி செய்யலாம் ஒத்துழைக்கலாம்
உஷாரா இருக்கோணும்.
நீ வாழ பிறரை கெடுக்காதே

என்றும் அன்புடன்
ஆமினா



படங்கள்- கூகுளார் புண்ணியத்தில் கிடைத்தது

105 comments:

  1. ஆமி, எனக்கு இதில் அனுபவம் இல்லை. தன் கையே தனக்கு உதவின்னு இருக்கேன். வேலைக்காரி தேர்வு செய்யும் போது கவனமா தேர்வு செய்யணும்ன்னு சொல்வாங்க.

    ஏன் எங்க தலீவர் படம் போட்டிருக்கீங்க?????

    ReplyDelete
  2. "Basicகே சரியில்லையே so நீயே பேசிக்கோ"

    Ethugai Monai...:)))

    ReplyDelete
  3. @வானதி

    ரொம்ப நாளா தேடி தெடி நானும் சளிச்சு போய் தன் கையே தனக்கு உதவின்னு பெரிய கொள்கையோடு தான் வாழ்ந்துட்டு இருக்கேன் ;)

    //ஏன் எங்க தலீவர் படம் போட்டிருக்கீங்க?????//
    ஔவை சண்முகி மாதிரியான ஆளை தான் தேடிட்டு இருக்காகளாம்!!!

    ReplyDelete
  4. @வலைபின்னுபவர்

    //"Basicகே சரியில்லையே so நீயே பேசிக்கோ"

    Ethugai Monai...:)))//

    ;))

    ReplyDelete
  5. ஹ ஹ...முக்கியமான அலசல் தான் ஆமி...:))) நாமலும் வாணி மாதிரி தான்..தன் கையே தனக்கு உதவி..:)))

    ReplyDelete
  6. ஆமி வேலைக்கரிகளிடம் இவ்வளவுதூரம் நொந்து போயிருக்கீங்களா? நா கூட இந்த மேட்டர் பத்தி அறுசுவைல மத்யஸ்த்தம்னு ஒரு கதை எழுதி யிருந்தேனே. படிச்சீங்கதானே. வீட்டுக்கு வீடு வாசப்பட்ங்கரமாதிரி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமா பிரச்சினை கொடுக்குராங்க.

    ReplyDelete
  7. ஹ்ம்ம். நல்ல கூத்துதான். சேலத்திலும் சரி இங்கயும் சரி வேலைக்காரி இல்லை.. என் மாமியார் வீட்டில் இந்த மாதிரி கூத்து நடந்து இப்ப வேண்டவே வேண்டாம் என்ற விட்டு விட்டார்கள்

    ReplyDelete
  8. ஆமி எனக்கும் இந்த அனுபவம்லாம் கிடையாது. தன் கையே தனக்கு உதவிதான். ஆனா என் மறுமகள்களுக்கு இந்த அனுபவங்கள் நிறையாவே உண்டு. அதைவேணா சொல்லமுடியும்.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு!ஆமா எதுக்கு தலைவர் படம்? சரி விடுங்க! :-)

    ReplyDelete
  10. சகோதர் ஆமினா....
    சலாம்ஸ் டு யு.

    எனக்கு ரொம்ப நாளாவே ஒரு கேள்வி. இவங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது?
    போகிற பிலாகிலேல்லாம் ஏற்கனவே கமென்ட்.
    இவங்க பிளாக்கில் தனித்தனியா எல்லாருக்கும் உடனுக்குடன் பதில் கமென்ட்.
    வாசகர் பரிந்துரையில் எல்லா பதிவிலும் ஒட்டுபோட்டிருப்பது.
    ரெண்டு நாளைக்கு ஒருதரம் கரக்பூர் பிளாட்பாரம் நீளத்துக்கு பதிவு...!
    ம்ம்ம்ம்..
    இப்பத்தான் புரியுது... எல்லாத்துக்கும் விலை 4000 ரூபாயா?
    சரி சரி... கலக்குங்க சகோ.

    //குடுக்குற பணத்த சம்பளம்னு நெனச்சா தான் கஷ்ட்டம். நன்மை செய்வதாக நெனச்சு கொடுக்கலாம்.//---தி பெஸ்ட் லைன் ஆஃப் திஸ் போஸ்ட்.(மனநிறைவுக்கு ஒரே மருந்து)

    ReplyDelete
  11. அலசல் அருமை

    ReplyDelete
  12. சிலபேர் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டார்கள்

    ReplyDelete
  13. ஸலாம் சகோ ஆமினா..
    நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் லாவகம் கூடிக்கொண்டே போகிறது.இந்த பதிவில் உங்கள் எழுத்தை தரம் உயர்த்தி இருப்பது தெரிகிறது.வாழ்த்துக்கள்..
    சரி மேட்டருக்கு வருவோம்..

    முதல் பாராவ படிச்ச ஒடன நாங்கூட உங்க டே டு டே லைஃf சைக்கிளத்தா எழுதீர்க்கீங்களோன்னு நெனச்சேன்..

    அது என்னமோ ஒருபக்கம் உண்மையா இருந்தாலும்..அப்ரம் வேலைக்கரிக்காக தாங்கள் மெனக்கெட்ட விஷயமும் மறுக்கமுடியாதது..

    //ஏன்னா நமக்கு இந்த தம் அடிக்கிற பழக்கம் இல்லை பாருங்க அதான்//

    அதெல்லா இப்போ சகஜமாகிடுச்சு..நேத்துதா பாத்தேன்..ஒரு 60 வயசு அம்மா,அழகா பர்தா போட்டுகிட்டு,ஒரு சிகரெட்'அ பத்த வச்சுட்டு,தன்னோட ஹபிக்கு ஒன்ன நீட்டிட்டு இருந்துச்சு..

    இந்த வேலைக்காரிங்க கிராக்கி இருக்கே யெப்பா..வீட்ல வேலைக்குன்னு ஒரு ஆள் நம்பிகையா நிதானமான சம்பளத்துல ஆளமத்துரதுக்கு,,,ஐடி கம்பெனிக்கே ஆள் எடுத்து முடிச்சிரலாம் போல இருக்கு...

    //இவங்க பிளாக்கில் தனித்தனியா எல்லாருக்கும் உடனுக்குடன் பதில் கமென்ட்.
    வாசகர் பரிந்துரையில் எல்லா பதிவிலும் ஒட்டுபோட்டிருப்பது.
    ரெண்டு நாளைக்கு ஒருதரம் கரக்பூர் பிளாட்பாரம் நீளத்துக்கு பதிவு...!
    ம்ம்ம்ம்..
    இப்பத்தான் புரியுது... எல்லாத்துக்கும் விலை 4000 ரூபாயா?//

    அப்ரம் சகோ ஆஷிகோட இந்த கமண்ட்'அ நானும் வழிமொழிகிறேன்..
    நாங்கள்ளாம் ஓஃபீஸ்ல ஓப்பி அடிச்சுட்டு..ஏதோ எழுதுரோம்..அதென்னமோ ரூம்க்கு போனா இதைலா தொட மனசே வரமாட்டுது..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  14. மூன்று தலைமுறையாக வேலைக்காரர்கள் இருந்த எங்க குடும்பத்தில் அம்மாதான் வேலைக்காரி வேண்டாம் என்று முடிவு பண்ணி எல்லா வேலைகளையும் செய்ததில்லாமல் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்து கொடுப்பார்கள்.மனைவியும் இதுவரை வேலைகாரி வேண்டாம் என்று 31 வருடங்களாக வாழ்க்கை நடத்திவருகிறார்.மகள் ஆபீசுக்கு ஏழு மணிக்கு கிளம்பு முன் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கிளம்புகிறார்.துணி,பாத்திரம் இரவில் ஒரு மணி நேரத்தில் சுத்தம் செய்துவிடுகிறார்.வேலைக்காரி வைப்பதால் பல சங்கடங்கள்.முதலில் ரகசியம் இல்லை.திருட்டு.வம்பு.etc ..தன கையே தனக்கு உதவி.

    ReplyDelete
  15. தங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
    http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

    ReplyDelete
  16. பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ..

    ReplyDelete
  17. தமிழ்நாட்டை விட்டு வெளியே போனால் இப்படித்தான் யோசிக்க தோணுமோ?

    ஹஹாஹா.............................

    தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் எனக்கு இதில் அனுபவம் இல்லை என்றுத்தான் பின்னூட்டம் போடுவாங்க, அனுபவம் இருக்குறவங்க கணினி பக்கம் வரமாட்டாங்க என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  18. //இப்பத்தான் புரியுது... எல்லாத்துக்கும் விலை 4000 ரூபாயா?//

    ஆஷிக், ஒருவேளை அவங்களுக்குத் தொடர் வேலைகளைச் செய்ய முடியாதபடி உடல் உபாதைகள் அல்லது வேறு முன்னுரிமைகள் ஏதாவது இருக்கலாம் இல்லியா?

    எங்க ஊர்களிலும் இதேபோலத்தான். வேலைகளில் உதவி செய்ய மட்டுமென்றால், ஒரு நாளைக்கு நூறு ரூபாய். நாகர்கோவிலில் வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து வீடு சுத்தம் செய்து கொடுக்க 350 ரூபாய் - இது கட்டிடத் தொழிலாளர்களின் ஒரு நாள் கூலி. இவ்வளவு கொடுத்தாலும் ஆள் கிடைப்பது சிரமம்.

    ReplyDelete
  19. எனக்கு ஏதாச்சும் வேலை கிடைக்குமா?

    ReplyDelete
  20. சகோதரி ஆமினா....

    அப்பா எவ்வளோ பெரிய பதிவு,
    இப்பதான் மூச்சு விட்டேன்.
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. தேவையான பகிர்வு, உபயோகமான பதிவு,எனக்கு அமைந்த வேலைக்காரிகள் அனைவரும் எனக்கு தோழிகள் தான்,மூக்கம்மா,வடிவு,செல்லம்மா ஒவ்வொரு ஊரில் இருக்கும் பொழுது என்னுடன் பயணம் செய்தவர்கள்.மறக்க முடியாதவர்கள்.இன்னமும் தேடி வந்து பார்ப்பவர்கள்.எதிர்பார்ப்பு இல்லாமல் அன்போடு பழகினார்கள்.நீங்கள் சொன்னது போல் இருந்தால் அப்பாடா வீட்டினுள் விட்டே இருக்க மாட்டேன்.நீங்களே பார்த்து தாங்கம்மா என்று தான் மூவரும் சொல்வது வழக்கம்.

    ReplyDelete
  22. ஆகா, வேலைக்கு ஆள் தேடுவதில் இத்தனை பிரச்சனைகளா..

    அதிலும் ரெண்டாவது பேராவுல 'முற்றுப் புள்ளி' எங்க இருக்குன்னு தேடினேன். :)

    ReplyDelete
  23. இதுக்கு கூட கொடுத்து வச்சிருக்கணும்.இப்ப 5 வருடங்களாக வேறு வீட்டிற்கு வந்த பிறகு நானே வேலை அனைத்தும் செய்துக் கொள்கிறேன்.சுறுசுறுப்பா, சுத்தமாய் இருக்க முடியுது. ஆனால், அதற்கு முன்னல் அருமையான ஆட்கள் இருந்தார்கள்.

    ReplyDelete
  24. ஏன்அம்மணி !!!

    வேலைக்காரியை பிரிச்சு மேஞ்சது மாதுரி தெரியுது ?

    அதே நேரத்தில் மனித நேயத்தடுன் நடந்து கொண்டதிற்கு பாராட்டுகிறேன்,பாவம் என்ன செய்வது அவளும் ஒரு பெண் தானே அவளுக்கும் ஆயிரம் கனவுகளும் கற்பனைகளும் இருக்கத்தானே செய்யும் அப்படியுள்ளவளை வெறும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு வீட்டோடு வேலைக்காரியாக வைப்பதற்கு நீங்கள் ஆசைப் பட்டது வேதனைக்குரியது.

    காரணம்.... குடிகார புருசனுக்கு வடிச்சு கொட்டனும் பிள்ளைச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்பனும் தமது உடல் நிலையையும் பார்த்துக் கொள்ளனும் இப்படி பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு அவள் உங்கள் வீட்டில் நாள் பூரா தங்கி வேலை செய்தால் அவள் குடும்பத்தை யார் பார்ப்பது ?

    ரெண்டாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு ஒண்ணுமே செய்ய முடியாது இந்தக் காலத்தில்,அவள் நாலு வீடு ஏறி இறங்கினால்தான் குறைந்தது நாலாயிரம் சம்பாதிக்க முடியும்.குடும்பத்தையும் பாதி சிரமத்துடன் ஓட்ட முடியும்.
    நான் துபாய்க்கு வந்த புதிதில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே வேறு ரெண்டு கம்பெனியில் பார்ட்டைம் பார்த்தேன் காரணம் என் கம்பெனி தந்த சம்பளத்தை விட அந்த ரெண்டு கம்பெனிலேயும் இரண்டு மடங்கு அதிகமாத்தான் கிடைத்தது,வேலைப் பார்ப்பதற்கு முன்னவே நானும் சில நிபந்தனைகள் வைக்கத்தான் செஞ்சேன் கம்பெனிகளுக்கு,வியாழன் மதியமும் வெள்ளி முழுதும் விடுமுறை வேணும்,எட்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு நிமிஷம்.. "கூட" போனால் கூட ஒரு மணி நேரம் ஓவர் டயம் தரனும், டீ ப்ரேக்,லஞ்ச்,ப்ரேக்னு கட்டிங்க்ஸ் எதுவும் இருக்கக் கூடாது,மாதம் முடிவதற்கு முன்பே அதாவது இருபத்தி ஐந்தாம் தேதி சம்பளம் அக்கவுண்டில் வந்திருக்கணும்,என்று நிறையா கண்டிசனைப் போட்டுத்தான் வேலைக்கு சேர்ந்தேன்.

    இதே ஏன் சொல்லுகிறேன் என்றால் நமது பக்கம் உள்ளதை முன்பே சொல்லி வேலைக்கு சேர்வதுதான் நமக்கும் நல்லது வேலை தருபவருக்கும் நல்லது பிறகு பிரச்சினைகள் எதுவும் வராது.சவ்வா.....இழுத்ததற்கு மன்னிக்கவும் வேலைக்காரி பதிவு அனேகமாக தமிழ் நாடு பூரா பத்திக்கிட்டு எரியும்னு நினைக்கிறேன் ஜாக்கிரதையாக இருக்கவும்.

    அந்தக் குழந்தையின் போட்டோவை எடுத்து விடுங்கள்

    ReplyDelete
  25. ஊரில் தான் வேலைகாரி
    வைத்து கொள்வார்கள்

    எனக்கு இது வரை என் கை எனக்குதவி தான்.
    நானும் ஊரில் பார்த்த நிரைய வீட்டு அனுபவ்த்த போடனும்

    நீஙக்ள் சொல்லுவதேல்லாம் உண்டு

    ReplyDelete
  26. இரண்டாவது மற்றும் மூன்றாவது புகைப்படம் உங்கள் வீட்டில் எடுத்ததா?

    இல்லை கூகிள் ஆண்டவர் கொடுத்ததா?

    ReplyDelete
  27. உங்க சொந்த சோக கதைக்கு என்னோட ஆறுதல்கள் சகோ! வேற என்ன சொல்றது?! ;)
    ஆமா ஏன் அந்த ரெண்டாவது பாரா ஒரு "பின் நவீன" பாணியில எழுதியிருக்கீங்க? # டவுட்டு

    ReplyDelete
  28. சகோதரி இந்த முறை ஊர் சென்று இருக்கும் பொழுது தான்,இந்த பிரச்சினை முதன் முதலாக என்னுடைய பார்வைக்கு வந்தது. நானும் வேகமாக
    புறப்பட்டு போய் ஆள் தேடினேன். எனக்கு கிடைத்த பதில். கொத்து வேலைக்கு போனால் அன்றாட சம்பளம் 200 ரூபாய் ,அந்த சம்பளம் தருவதாக இருந்தால் ரெடி என்றார். ஒரு நிமிடம் தலை சுற்றியது.

    ReplyDelete
  29. //எப்படியோங்க.....
    பாவப்படலாம் பரிதாபப்படலாம்
    ஏமாறக்கூடாது
    உதவி செய்யலாம் ஒத்துழைக்கலாம்
    உஷாரா இருக்கோணும்.
    நீ வாழ பிறரை கெடுக்காதே//

    பஞ்ச் சூப்பர்♥♥♥

    ReplyDelete
  30. வீட்டுப் பணிப்பெண் என்று தமிழில் அழகான வார்த்தை இருக்கும் போது வேலைக்காரி என்று சொல்வது சற்று அநாகரிகமாவே படுகிறது. மாற்றுத்திறனாளிகளை நொண்டி,குருடு என்று சொலவது போலத்தான் இதுவும்.
    ஏதும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்வும்.

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    தங்கை ஆமினா அவர்களுக்கு
    ஒரு பத்து நாட்களாக ரொம்ப பிஸி
    என்னவளை சவூதிக்கி கூட்டிட்டு வர போகிறேன் அதற்கான விசா பார்மலிட்டிஸ் பாஸ்போர்ட்டில் என் மனைவியின் பெயரை சேர்ப்பது இதுபோன்ற வேலைகளை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது(இப்பதான் புள்ளைக்கி பொறுப்பு வந்திருக்கினு வீட்டுக்காரம்மா பாராட்டுனாங்க) திடிர்னு உங்க ப்ளாக்கை பார்த்தால் 5,6 இடுகைகள் என்னது?

    எழுத்து நடையை ஒங்ககிட்ட நான் கத்துகீற வேண்டியிருக்கு

    கலக்குங்க சகோ

    ReplyDelete
  32. இந்த் நாட்டில் வாழும் பெண்மணிகள் அநேகருக்கு இந்த அனுபவம் நிறைய உண்டு.ஆமினா நீங்கள் சுவை பட நகைசுவையாக கூறி இருப்பது இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது.

    ReplyDelete
  33. வேலைக்காரி இருந்தாலும் கஷ்டம்
    இல்லாவிட்டாலும் கஷ்டம்...

    ReplyDelete
  34. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    எனக்கு ஏதாச்சும் வேலை கிடைக்குமா////////////


    இங்க கோயில்ல ஒரு வேளை இருக்கு வர்றீகளா?

    ReplyDelete
  35. பதிவ பத்தி எனக்கு ஒன்னும் புரியலின்கோ!!!

    ReplyDelete
  36. //தங்கை ஆமினா அவர்களுக்கு//

    நண்பர் உங்களை இப்படி அழைத்ததை பார்த்தால் எனக்கும் உங்களை தங்கை ஆமினா என்று அழைக்கணும் போல் இருக்கு. ஆனால் நீங்க எனக்கு அக்காவா இருப்பிங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  37. இருங்க!! எல்லாமே நல்லாத்தான் எழுதி இருக்கீங்க!! அப்புறம் நான் ஏதாவது வம்பா சொல்லப் போய் 'சயனைடு' பாட்டிலை கையில் தூக்கிடீங்கன்னா!! அவ்வ்வ்வ்... பதிவு அருமை அமீ. வெல்டன்.

    ReplyDelete
  38. // Basicகே சரியில்லையே so நீயே பேசிக்கோ"//

    Ethugai Monai...:))) எது கை?? எது மோனை??

    கவிப்பேரரசு இதை அவசியம் கவனிப்பாராக !!! :-௦)))

    ReplyDelete
  39. ஃஃஃஃ500 ரூபாய் கூலியில் பாத்திரம், துணி, வீடு முதலியனவற்றை கழுவி, சமையலும் செய்து முடிக்கவேண்டும்.ஃஃஃ

    அதைக் கொடுக்கவே எத்தனை பேருக்கு வயிறு எரியுதோ தெரியல...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

    ReplyDelete
  40. அருமையான தேவையான பதிவு சகோ. கலக்கல் வாழ்த்துக்கள். வார்த்தை பிரயோகம் சூப்பர்.

    ReplyDelete
  41. @அந்நியன்
    //என்ன செய்வது அவளும் ஒரு பெண் தானே அவளுக்கும் ஆயிரம் கனவுகளும் கற்பனைகளும் இருக்கத்தானே செய்யும் அப்படியுள்ளவளை வெறும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு வீட்டோடு வேலைக்காரியாக வைப்பதற்கு நீங்கள் ஆசைப் பட்டது வேதனைக்குரியது.
    //
    என் கணவரின் சம்பாதியத்தில் மிச்சம் போகத்தான் மற்றவற்றிற்கு ஒதுக்க வேண்டும் இல்லையா? வீட்டோட வா என அடியாட்களை வச்சு மிரட்டலையே... இஷ்ட்டம் இருந்தா வரப்போறாங்க. இல்லைன்னா வேலைய பாத்துட்டு போன்னு திட்டுட்டு போக போறாங்க. நான் கட்டாயப்படுத்தியுருந்தால் தான் வேதனையான விசயம்.
    //இப்படி பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு அவள் உங்கள் வீட்டில் நாள் பூரா தங்கி வேலை செய்தால் அவள் குடும்பத்தை யார் பார்ப்பது ?//
    வீட்டோட இருக்கும் ஆள் என்பதை கொத்தடிமை ரேன்ச்க்கு கற்பன பண்ணீக்கிட்டீங்களா அண்ணா?
    அதுவுமில்லாம நிறைய வீட்டில் வேலைபார்ப்பவருக்கு இருக்கும் சலுகை மிஞ்சி போனா வருஷத்துக்கு ஒரு முறை 300 ருபாய்க்கு புடவை. ஆனா ஒரே வீட்டில் வேலை பார்ப்பவருக்கு??? அவர் பெண்ணுக்கு திருமணம் என்ற போதும் நாம் கொடுத்து உதவ வேண்டும். மருத்துவச்செலவு இருந்தாலும் நாம் தான் பாத்துக்கணும். சொல்ல போனா நம்ம வீட்டில் அவரும் சக நபராக மாறிவிடுகிறார்.

    டீச்சரா இருக்காங்க.உக்காந்துட்டே பாடம் நடத்துறாங்க. சோ அவங்களுக்கு 4000 போதும்னு சொல்ல முடியுமா?

    வேலைக்கு அமர்த்துவதில் எந்த கட்டாயத்திற்கும்,திணிப்புக்கும் இடமில்லை. அவங்க போடும் கண்டிஷன் மாதிரி தான் நாமும் போட போறோம். அதான் கடைசில சொன்னேனே டெடிகேட்டடா வேலை பாத்தா கொடுப்பதில் எந்த சிரமும் இருக்காது. பத்தோட பதினொண்னா நம்ம வீட்டை ஆக்கும் போது தான் எரிச்சல் அதிகாரமாக பிறக்கும்.

    எந்த கண்டிஷனும் தவறில்லை. சொல்லும் விதம் தான் எல்லோரையும் வெறுப்புகளூக்குள் இழுத்துட்டு செல்கிறது.

    //வேலைக்காரி பதிவு அனேகமாக தமிழ் நாடு பூரா பத்திக்கிட்டு எரியும்னு நினைக்கிறேன் ஜாக்கிரதையாக இருக்கவும்.//
    ஏன் தமிழ்நாட்டுல மண்ணெண்ணெய் இலவசமா கொடுக்குறாங்களா? :))

    //அந்தக் குழந்தையின் போட்டோவை எடுத்து விடுங்கள்//
    என்ன ஆச்சு? அடுத்த என் பதிவே குழந்தை தொழிலாளர்களை பத்தி தான் சகோ ;))

    ReplyDelete
  42. @அந்நியன்
    //வேலைக்காரி பதிவு அனேகமாக தமிழ் நாடு பூரா பத்திக்கிட்டு எரியும்னு நினைக்கிறேன் ஜாக்கிரதையாக இருக்கவும்.//
    ஏன் தமிழ்நாட்டுல மண்ணெண்ணெய் இலவசமா கொடுக்குறாங்களா? :))

    //அந்தக் குழந்தையின் போட்டோவை எடுத்து விடுங்கள்//
    என்ன ஆச்சு? அடுத்த என் பதிவே குழந்தை தொழிலாளர்களை பத்தி தான் சகோ ;))

    ReplyDelete
  43. @ஆனந்தி
    //ஹ ஹ...முக்கியமான அலசல் தான் ஆமி...:))) நாமலும் வாணி மாதிரி தான்..தன் கையே தனக்கு உதவி..:))) //

    ம்ம்... நீங்களாம் நல்ல உழைப்பாளின்னு சொல்லுங்க ;)

    ReplyDelete
  44. @கோமு
    //வீடு வாசப்பட்ங்கரமாதிரி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமா பிரச்சினை கொடுக்குராங்க//
    கோமு இது எழுதும் போது மத்தியஸ்தம் தான் கண்ணுல வந்துட்டு போச்சு...!! நம்ம சொல்ற மாதிரி அவங்களுக்கும் நம்மகிட்ட நிறைய குற்றம் கண்டுபிடிக்க முடியும் கோமு!! இன்ஷா அல்லாஹ்... அடுத்த பதிவில் எழுதுறேன் ;)

    ReplyDelete
  45. @ எல்.கே
    //ஹ்ம்ம். நல்ல கூத்துதான். சேலத்திலும் சரி இங்கயும் சரி வேலைக்காரி இல்லை.. என் மாமியார் வீட்டில் இந்த மாதிரி கூத்து நடந்து இப்ப வேண்டவே வேண்டாம் என்ற விட்டு விட்டார்கள் //
    அந்தளவுக்கா கொடும அனுபவிச்சீங்க? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எல்.கே

    ReplyDelete
  46. @லெட்சுமிம்மா
    உங்க வேலையே நீங்களே பாத்துக்குறதுனால தான் இப்பவும் எங்க்கா.........இருக்கீங்கம்ம்மா ;))

    ReplyDelete
  47. @ஜீ
    //நல்ல பகிர்வு!ஆமா எதுக்கு தலைவர் படம்? சரி விடுங்க! :-) //
    ;) விடிய விடிய சந்திரமுகி படத்த பார்த்துட்டு விடிஞ்சதும் பேய்யா நடிச்சவ யாருன்னு கேட்டா என்ன சொல்றது? ;)

    ReplyDelete
  48. @ஆஷிக் அண்ணா
    வ அலைக்கும் சலாம் வரஹ்...
    //இப்பத்தான் புரியுது... எல்லாத்துக்கும் விலை 4000 ரூபாயா?
    சரி சரி... கலக்குங்க சகோ.
    //
    அட உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்களா? என் வீட்டுல எல்லா வேலையும் நான் தான் பாப்பேன்... காலைல 2 மணி நேரம், மதியம் 2 மணீ நேரம், நைட் தூங்குறதுக்கு முன்னாடி 2 மணீ நேரம்... இவ்வளவு தான் எனக்கு சிஸ்ட்டம் கிடைக்கும். தமிழ் டைப்பிங் ரொம்ப ஸ்பீடா வரதுனால எல்லாருக்கும் கமெண்ட் போடுறேன்.... மத்தபடி நானும் பிஸி ஆள் தான் பிஸியான ஆள் தான் ரொம்ப பிஸியான ஆள் தான் ;)

    மிக்க நன்றிங்கண்ணா....

    ReplyDelete
  49. @மகாதேவன்
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  50. @சிட்டிபாபு
    //சிலபேர் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டார்கள் //
    அது என்னமோ உண்மை தான் ;)

    ReplyDelete
  51. @ரஜின்

    கவனிச்சுட்டே வரதுக்கு மிக்க நன்றி சகோ..!!
    //முதல் பாராவ படிச்ச ஒடன நாங்கூட உங்க டே டு டே லைஃf சைக்கிளத்தா எழுதீர்க்கீங்களோன்னு நெனச்சேன்..//
    அந்தளவுக்குலாம் நமக்கு குடுப்பினை இல்லைங்க ;)

    //அதெல்லா இப்போ சகஜமாகிடுச்சு..நேத்துதா பாத்தேன்..ஒரு 60 வயசு அம்மா,அழகா பர்தா போட்டுகிட்டு,ஒரு சிகரெட்'அ பத்த வச்சுட்டு,தன்னோட ஹபிக்கு ஒன்ன நீட்டிட்டு இருந்துச்சு..//
    அப்ப ஆரம்பிச்சுடலாம்னு சொல்றீங்க ;)

    //,ஐடி கம்பெனிக்கே ஆள் எடுத்து முடிச்சிரலாம் போல இருக்கு...//
    உண்மை தான் சகோ... அவங்கள நம்பி தான் வீட்டை ஒப்படைக்க போறோம். சோ சரியான நபரை வைப்பதற்குள் உயிரே போய்விடும். கல்யாணத்த பண்ணி பார், வீட்டை கட்டி பாருன்னு சொல்ற பழமொழி இன்னும் கொஞ்ச நாள்ல மாறிடும்னு நெனைக்கிறேன் :))

    //நாங்கள்ளாம் ஓஃபீஸ்ல ஓப்பி அடிச்சுட்டு..ஏதோ எழுதுரோம்..அதென்னமோ ரூம்க்கு போனா இதைலா தொட மனசே வரமாட்டுது..
    ///
    அதுக்குலாம் என்னை மாதிரி நல்ல மனசு வேண்டும் சகோ!!!

    ReplyDelete
  52. @தமிழன்
    எங்கள் வீட்டிலும் அப்படி தான். மாமியார் வீட்டிலும் அதே. ஆளாளுக்கு ஒரு வேலையை பிரித்துக்கொண்டு பேசிக்கொண்டே வேலையிலும் ஈடுபடும் சுகமே தனி. இதனால் மத்தவங்களோட விருப்பம், வெறுப்புகள், மனசுல உள்ள எண்ணங்கள் நல்லா தெரிஞ்சுக்க முடியுது. கருத்துக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  53. @பிரஷா

    விருதுக்கு மிக்க நன்றி பிரஷா... கண்டிப்பாக பெற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
  54. @தொப்பி தொப்பி
    //தமிழ்நாட்டை விட்டு வெளியே போனால் இப்படித்தான் யோசிக்க தோணுமோ?//
    எல்லா கொடுமையும் எனக்கு அங்கே தான் சகோ நடந்துச்சு.
    //தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் எனக்கு இதில் அனுபவம் இல்லை என்றுத்தான் பின்னூட்டம் போடுவாங்க, அனுபவம் இருக்குறவங்க கணினி பக்கம் வரமாட்டாங்க என்று நினைக்கிறேன். //
    ;))

    ReplyDelete
  55. @ஹூசைனம்மா
    //ஆஷிக், ஒருவேளை அவங்களுக்குத் தொடர் வேலைகளைச் செய்ய முடியாதபடி உடல் உபாதைகள்//
    என்னை நோயாளியாக்கி நிரந்தரமா பெட்ல படுக்க வச்சுடாதீங்கோ ;( இத்தன வருஷத்துல என் வீட்டுல மொத்தமே 5 நாள் தான் வேலை பாத்துருக்காங்க ;)
    //நாகர்கோவிலில் வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து வீடு சுத்தம் செய்து கொடுக்க 350 ரூபாய்//
    எங்க ஊரிலும் அப்படி தான். 150 ரூபாய் கொடுத்தா ஒட்டடை அடிச்சு சுத்தமா பெருக்கி, வீட்டை கழுவி கொடுப்பாங்க. ஒரு மாசத்துக்கு கேபிள்க்கு கொடுத்துடலாம்னு அதுக்கு கூட ஆள கூப்பிட மாட்டேங்குறாங்க.
    வேலைக்கு ஆள் வைப்பது பேஷனா இருந்த காலம் மாறி என் வேலைய நான் நான் பாப்பேன்னு பெருமையா சொல்ற காலம் வந்துச்சு. நானே கண்கூடா பாத்துட்டு இருக்கேன். கருத்துக்கு நன்றி ஹூசைனம்மா

    ReplyDelete
  56. @ரமேஷ்
    //எனக்கு ஏதாச்சும் வேலை கிடைக்குமா?//
    காக்கி சட்டை போட்டிருந்தா வாட்ச்மேன் வேலைக்கு தான் சரியா இருக்கும் ;) நீங்க என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  57. @சக்தி
    //அப்பா எவ்வளோ பெரிய பதிவு,
    இப்பதான் மூச்சு விட்டேன்.//
    போன பதிவுக்கான கமெண்டோ? ;)

    ReplyDelete
  58. @ஆசியா
    உங்களையெல்லாம் பாத்தா நல்லவங்க மாதிரி இருக்கு போல. என்னை பாத்தா மட்டும் ஏன் என்னை கொடுமைக்காரியாக்குறாங்கன்னே தெரியல... ;(
    மனசுல இடம் பிடித்தவர்களை தான் தேடி வந்து பாப்பாங்க ஆசியா. அந்த வகைல நீங்க அவங்கள வேலைககரியா நடத்தாம தோழியா நடத்தியிருக்கீங்க. கண்டிப்பா எல்லாரும் அவங்கள வெறும் வேலைக்காரியா பாக்காம அவர்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பழகணூம், பணம் வீசுவதால் அவர்கள் நமக்கு அடிமையில்லை என்பதை எல்லாரும் உணரணும்.. அதே இடத்தில் நாமாக இருந்தால் என்ன ஆகும் என ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும்.....
    கருத்துக்கு நன்றி ஆசியா

    ReplyDelete
  59. @இளங்கோ
    //அதிலும் ரெண்டாவது பேராவுல 'முற்றுப் புள்ளி' எங்க இருக்குன்னு தேடினேன். :)//
    காலைல வந்தா சாயங்காலம் தான் அவங்க வேலை முடியுது. அதான் கடைசில முற்றுபுள்ளி வச்சுருக்கேன் எப்ப்ப்ப்பூடி......... ;)

    ReplyDelete
  60. @அமுதா
    //.இப்ப 5 வருடங்களாக வேறு வீட்டிற்கு வந்த பிறகு நானே வேலை அனைத்தும் செய்துக் கொள்கிறேன்.்.சுறுசுறுப்பா, சுத்தமாய் இருக்க முடியுது. //
    சில சமயங்களில் சமயலறையில் சில மாற்றங்களை கொண்டு வர நினைப்போம், எந்த பொருள் எந்த எடத்துல எப்படி இருக்கணூம்னு, ஆனா வீட்டுக்கு யாராவது வந்தா அது முடியவே முடியாது. அவங்கவுங்க இஷ்ட்டத்துக்கு பொருட்களை வைச்சுடுறாங்க. இதுனாலேயே யாரையும் நான் அனுமதிக்கிறதில்ல அமுதா.... நீங்களும் அதே பாய்ண்ட் தான் சொல்றீங்க... வருகைக்கு மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  61. @ஜலீலாக்கா
    கண்டிப்பா உங்களுக்கு நிறைய அனுபவம் கிடைச்சுருக்கும். போடுங்க சீக்கிரம். நாங்களும் தெரிஞ்சுக்குறோம் ;)

    ReplyDelete
  62. @தொப்பி தொப்பி
    ஹூம்...ஹூம்.....
    எல்லாமே கூகுளார்கிட்ட சுட்டதுவே ;) நான் எடுக்கு போட்டோக்களீல் கண்டிப்பா என் ப்ளாக் அட்ரஸ் எழுதியிருக்கும் ;)

    ReplyDelete
  63. @பாலாஜி
    //வேற என்ன சொல்றது?! ;)//
    என் சோகம் உங்களுக்காவது புரியுதே.... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி சகோ!!!
    உங்க டவுட்ல எனக்கும் கொஞ்ச டவுட். அதாவது என்ன சொல்றீங்கன்னு புரியல (நமக்கு அந்தளவுக்கு மூளை இல்லைங்கோ;)

    ReplyDelete
  64. @இளம் தூயவன்
    இந்தாங்க முதல்ல ஜில்லுன்னு ஆப்பிள் ஜூஸ் குடிங்க!!!!
    காலம் மாறிவரும் போது நம் பொருளாதார சூழ்நிலையும் மாறுது.அதுக்கு தகுந்த மாதிரி விலைவாசியும் அதிகரிச்ச வண்ணம் தான் இருக்கு. ஆனா முன்பு உள்ள பணத்தையே இப்பவும் கொடுக்கணூம்னு நெனைக்கிறது நம்ம தப்பு தானோ.... ;) இப்படி என்னை நானே சொல்லிக்குவேன் சகோ....

    களை பறிக்க, நாத்து நட போன்ற விவசாய வேலைக்கு 150 குடுத்தா கூட அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் போவதில்லை. காரணம் இப்போது ஓங்கியிருக்கும் கட்டிட துறையில் வேலைபார்க்கும் ஆசை தான்.

    முன்னலாம் கணவனோட சண்ட போட்டுட்டா "பத்துவீட்டுல பத்து பாத்திரம் தேய்ச்சாவது என் குழந்தைய காப்பாத்திக்குவேன்னு சொன்னாங்க. இப்ப அப்படியே அந்த டயலாக் மாறிடுச்சு (சினிமாவில் தவிர;)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!!!

    ReplyDelete
  65. @பலே பிரபு
    //பஞ்ச் சூப்பர்//
    எனக்கு அறிவு ஜாஸ்தியாச்சுன்னு சொல்லுங்க ;) (இனி ஆமினாவை பாராட்டுவீயா? பாராட்டுவீயான்னு உங்களை நீங்களே அடிச்சுக்குற சவுண்ட் ஊருக்கே கேக்குது;)

    ReplyDelete
  66. @நாஞ்சில் பிரதாப்
    //வீட்டுப் பணிப்பெண் என்று தமிழில் அழகான வார்த்தை இருக்கும் போது வேலைக்காரி என்று சொல்வது சற்று அநாகரிகமாவே படுகிறது.//
    முன்னாள் முதல்வர் அண்ணாதுரை வேலைக்காரின்னு ஒரு நாடக நூலை எழுதி அது ரொம்பவே பிரபலமாச்சு. அப்ப அவருக்கு நாகரிகம் சுத்தமாவே இல்லைன்னு அர்த்தமா? :)

    மனைவியை வீட்டுக்காரின்னு சொல்றாங்க. அப்ப கணவன் மார்களுக்கு நாகரிகமே சுத்தமா இல்லைன்னு அர்த்தமா? ;)

    பணிப்பெண் என்ற வார்த்தை போடலாம் தான். ஆனா அது பேச்சு வழக்கில் நான் எழுதும் கட்டுரைக்கு சரியா வராது என்பதால் வேலைக்காரின்னு சேர்த்துருக்கேன். மத்தபடி யாரையும் புண்படுத்தும் எண்ணம் சுத்தமாவே இல்லை :)

    ReplyDelete
  67. @ஹைதர் அலி அண்ணா
    வ அலைக்கும் சலாம் வரஹ்..
    //(இப்பதான் புள்ளைக்கி பொறுப்பு வந்திருக்கினு வீட்டுக்காரம்மா பாராட்டுனாங்க)//
    மச்சி அந்த வீட்டுல இருக்குறதுல அந்த ஹவுஸ் ஓனரம்மாவுக்கு அப்படி என்ன வருத்தம்?? (சும்மா ஜாலிக்கு)

    மச்சி வந்துட்டாங்கன்னா அடுத்து உங்க பதிவுகள் அதிகம் பாக்கலாம்.அப்படி தானேண்ணா?!!

    நான் கூட ஏன் ரொம்ப பதிவு காணலன்னு ப்ளாக்ல போய் பார்த்தேன். அங்கேயும் பதிவில்ல. சரி ஊருக்கு வந்துருப்பீங்கன்னு கணீச்சுக்கிட்டேன்!!!

    நல்லபடியாக இறைவனின் துணையோட சவூதிக்கு வர துஆ செய்றேன்....

    //எழுத்து நடையை ஒங்ககிட்ட நான் கத்துகீற வேண்டியிருக்கு
    //
    எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டது தான் ;)

    ReplyDelete
  68. @ஸாதிகாக்கா
    //இந்த் நாட்டில் வாழும் பெண்மணிகள் அநேகருக்கு இந்த அனுபவம் நிறைய உண்டு//
    உண்மை தான் அக்கா. அவங்கவுங்க அனுபவிச்சு அதுக்கப்பறம் வேண்டாம் வேண்டாம்னு அழாத குறையாக வந்து புலம்புவதை பார்க்கும் போது சிரிப்பு தான் வரும் ;)

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா

    ReplyDelete
  69. @ஹாஜா
    //வேலைக்காரி இருந்தாலும் கஷ்டம்
    இல்லாவிட்டாலும் கஷ்டம்...//
    கரேக்ட் சகோ
    ஆனா நம்ம வேலையநாமே செய்ய பழகிட்டா அவங்க லீவ்போட்ட நாட்களில் மலைப்பாவே தெரியாது!!!

    ReplyDelete
  70. @வைகை
    //பதிவ பத்தி எனக்கு ஒன்னும் புரியலின்கோ!!!//
    முன்ன பின்ன செத்துருந்தா தானே சுடுகாடுக்கு போக வழி தெரியும் ;))

    ReplyDelete
  71. @தொப்பி தொப்பி
    //நண்பர் உங்களை இப்படி அழைத்ததை பார்த்தால் எனக்கும் உங்களை தங்கை ஆமினா என்று அழைக்கணும் போல் இருக்கு///

    கண்டிப்பா நான் உங்க தங்கை வயசுல தான் இருப்பேன். நீங்க அப்படியே கூப்பிடலாம்ண்ணா....

    ReplyDelete
  72. @அப்துல்காதர்
    //அவ்வ்வ்வ்... பதிவு அருமை அமீ. வெல்டன்.//
    நான் கூட நேத்து பதிவு போடும் போதே எக்ஸ்ட்ரா 2 பாட்டில் வாங்கி பன்னீர்ல கலந்து வச்சுருந்தேன்... வேஸ்ட்டா போச்சே ;))
    நன்றி சகோ

    //Ethugai Monai...:))) எது கை?? எது மோனை??

    கவிப்பேரரசு இதை அவசியம் கவனிப்பாராக !!! :-௦)))//
    அட கொஞ்சமாவது மனுஷங்கள பாராட்ட விடுங்கப்பா... ரொம்ப நேரமா காத்து வாங்கிட்டு இருக்கேன். அது பொறுக்கலையா ;)

    ReplyDelete
  73. @மதி சுதா
    //அதைக் கொடுக்கவே எத்தனை பேருக்கு வயிறு எரியுதோ தெரியல..//
    ஹா...ஹா...ஹா....
    நேர்ல பாத்த மாதிரியே சொல்றீங்களே மதி!!!

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  74. @myth-buster
    //அருமையான தேவையான பதிவு சகோ. கலக்கல் வாழ்த்துக்கள். வார்த்தை பிரயோகம் சூப்பர்.//
    மிக்க நன்றி சகோ!!!

    ReplyDelete
  75. சகோ. ஆமினா...
    [[[[[[[தமிழ் டைப்பிங் ரொம்ப ஸ்பீடா வரதுனால எல்லாருக்கும் கமெண்ட் போடுறேன்.... மத்தபடி நானும் பிஸி ஆள் தான் பிஸியான ஆள் தான் ரொம்ப பிஸியான ஆள் தான் ;)]]]]]]]
    -----------------------------------
    ///ஆமினா said... 41
    @அந்நியன்
    8 January 2011 19:35 ///


    ///ஆமினா said... 78
    @myth-buster
    8 January 2011 19:44 ///

    9 நிமிடங்களில்... 38 பின்னூட்டங்கள்
    -----------------------------------
    ---வேறு எங்காவது மொத்தமாய் முன்னரே ரெண்டு மணிநேரம் டைப் அடித்து பின்னர் அவரவர்க்கு காபி பேஸ்ட் பண்ணி உடனே உடனே பப்ளிஷ் பண்ணினீர்களா?

    இல்லை ஒவ்வொருத்தருக்கும் அப்பப்ப தனித்தனியா டைப் பண்ணி அப்பப்ப பள்ளிஷ் பண்ணினீர்களா?

    இரண்டாவதை 'ஆம்' என்றீர்கள் எனில்....

    உங்க டப்பிங் ஸ்பீட்!!!!!!!!!!!!!!!!

    மாஷாஅல்லாஹ்
    மாஷாஅல்லாஹ்
    மாஷாஅல்லாஹ்

    என் கருத்து வாபஸ்.

    ReplyDelete
  76. சலாம் ஆமிம்மா ரொம்ப நாளாச்சுடாபேசி எப்படி இருக்கே? ஷாம் குட்டிஎப்ப்டி இருக்கார் இந்த வேலைக்காரியை பத்தி நிறைய சொல்லனும் ஆனா எனக்கு கிடைத்தவள் ரொம்ப நல்லவள் என் வீட்டில் ஒருத்தி மாதிரிதான் அவள் பெயர் விஜயா என்னிடம் 15 வருடம் வேலை பார்த்தாள் இப்போ ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டாள அவளைத்தவிற வேற ஆள் எனக்கு பிடிக்கவில்லை அதனால் தன் கையே தனக்கு உதவி இன்னும் இருக்கு நேரம் கிடைக்கும் பொழுது சொல்கிறேன்

    ReplyDelete
  77. எல்லாம் சரிதான் ஆனா அவங்கவுங்க வேலையை அவுங்களே பாத்துகிட்டா இந்த பிரச்சினை வராது

    ReplyDelete
  78. அப்பாடா! வாசிச்ச எனக்கே இப்படி மூச்சு வாங்குதே....எப்படி ஆமினா இப்படி இப்படி படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்ட்டீங்க போங்க... இவ்வளவு சுறுசுறுப்பா டைப்படிக்கிற நீங்க வீட்டுவேலைகளையும் செம வேகமா செய்வீங்க போல!

    நான் வேலைக்கு ஆள் வச்சுக்காததுக்கு காரணம் என்னை மாதிரி அப்பாவிங்களை (அதாங்க ஏமாந்த சோனகிரி) விட வீட்டு வேலைக்கு வர்றவங்க ரொம்ப புத்திசாலிங்க.. அவங்க முகத்தை பாவமா வச்சுகிட்டு அவங்க வீட்ல பல்பு ஃப்யூஸாயிடுச்சுன்னு சொன்னாக்கூட கவுந்துடுவேன் (அதாவது நான் பல்பு வாங்கிடுவேன்). அவங்களை வேலை வாங்கற சாமர்த்தியமெல்ல்லாம் நமக்கு கிடையாது. என்னத்த அவங்ககிட்ட சொல்றது... நாம சும்மாதான இருக்கோம்..நாமளே செய்துடுவோம்னு நானே வேலையை இழுத்துப் போட்டு செய்துடுவேன்.

    ஆனாலும் ஒரு நாளைக்கு பல வீட்டுக்கு போய் வேலைக்கு செய்ற அவங்களைப் பார்த்தா பாவமாதானிருக்கு...அதுக்கென்ன பண்றது..நாமளும் கஷ்டப்பட்டு தானே சம்பாதிக்கிறோம். உங்க அம்மா, அக்கா, கணவர் சொல்றத விட நான் சொல்றதுதானே கரக்ட்? ஹி..ஹி..

    ReplyDelete
  79. @சகோ ஆஷிக்
    //வேறு எங்காவது மொத்தமாய் முன்னரே ரெண்டு மணிநேரம் டைப் அடித்து பின்னர் அவரவர்க்கு காபி பேஸ்ட் பண்ணி உடனே உடனே பப்ளிஷ் பண்ணினீர்களா?
    //
    இதுக்கு தான் ஆம் ;)
    எதுக்கு உங்க கிட்ட பொய் சொல்லணூம்..... ??? அப்பப்ப நோட்பேடில் டைப் பண்ணிட்டு மொத்தமா போடுவேன். உங்களூக்கு என் ஸ்பீட் பத்தி தெரியுணூம்னா இதுக்கு அடுத்து நான் அப்பப்ப டைப் பண்றேன் பாருங்க (ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா கற்பூரம் மாதிரி கப்புன்னு புடிக்கிறது?? ;))

    ReplyDelete
  80. @பாத்திமாம்மா
    எப்படி இருக்கீங்க!!!

    ஷாம் நலமே... உங்களுக்கு கிடைக்கிற மாதிரிலாம் 100ல 1 ஆளுக்கு தான்ம்மா கிடைக்கும். ஒரு ஆள் நம்ம மனசுல இடம் புடிச்சுட்டாங்கன்னா, இன்னொரு ஆள் நிரப்ப வரும் போதும் மனம் ஏற்றுக்கொள்ளாது இல்லையா? ;)

    மிக்க நன்றிம்மா

    ReplyDelete
  81. @தங்க ராசு
    //எல்லாம் சரிதான் ஆனா அவங்கவுங்க வேலையை அவுங்களே பாத்துகிட்டா இந்த பிரச்சினை வராது//

    சரி தான். ஆனாலும் எல்லாரும் அப்படியே நெனச்சுட்டா மத்தவங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? இல்லையா?? :)

    வருகைக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  82. @பானு
    எங்கம்மாவும் உங்கள மாதிரி தான் பானு....

    வீட்டுக்கு வேலைக்கு ஆள் வச்சா இவங்க வேலை பாத்து குடுப்பாங்க ;)அதுக்கு பயந்துட்டு அவங்களே இப்ப வரைக்கும் ஆள் வைக்கல ;))

    நீங்க சொல்றது தான் கரேக்ட்.... இனி நீங்க சொல்றத தான் நான் கேப்பேன் ;))

    ReplyDelete
  83. ஸலாம் சகோதரி. இன்று தான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகிறேன்.

    எழுத்து நடை பிரமிக்க வைக்கிறது.

    வேலைசெய்பவர்கள் (வேலைக்காரி ன்னு ஆண்கள் மரியாதை இல்லாம பேசக்கூடாது பாருங்க) எல்லா இடத்திலயும் இப்படித்தான். முன்பு எங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு கொடுத்தல், பண்டிகை காலங்களில் துணி, பணம் கொடுத்தல் என்பது சில வீடுகளில் மட்டும் தான் (எங்க வீட்டையும் சேர்த்து தான் சொல்றேன்) இருந்தது. அது ஈகை குனத்தால் கொடுப்பார்கள். ஆனால் இப்போது ரூல்ஸ் போடறட்ஹே அதே மாதிரி தான். இந்த எக்ஸ்ட்ரா சார்ஜ், அடிக்கடி லீவு (அதுவும் சொல்லாமையே லீவு)என்று அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

    பல நேரங்களில் எங்களுக்கு எரிச்சல் வரும், அப்போது உங்கள் தாய் சொன்னது போல் என் அம்மாவும் சொல்வார்கள்.

    நன்றி சகோ

    ReplyDelete
  84. ஆமி,நல்ல அலசல்.

    நானும் உங்கள போலத்தான்.ஆனால்,

    சென்னையில் கொஞ்சம் கம்மி தான்.

    உங்கள் எழுத்து நடைக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    ReplyDelete
  85. ஹா ஹா ஹா.. கடைசி வரிகள்ல சத்தமாகவே சிரிச்சுட்டேன்.. நான் ஒர்க் பண்ணலைன்னு ஆபீஸ்ல கண்டுபிடிச்சுட்டாங்க உங்களால.. :-)..

    ReplyDelete
  86. ஆமிக்கா எழுதிட்டேன் இங்க ஆசைப்படி

    மறக்க நினைக்காதவைகள்-நினைத்தாலும் முடியாதவைகள்.

    http://niroodai.blogspot.com/2011/01/blog-post_10.html.//

    நல்ல அலசல் நல்லதொரு சமூகம் சார்ந்த பதிவு.. வெளுதுவாங்குறீங்க..

    ReplyDelete
  87. வேலை செய்பவர்கள் இப்போ சங்கம் வைத்து இருக்கிறார்கள்!!எங்க சாந்தி இது போல தான் ஏகப்பட்ட கெடுபிடி.தீபாவளிக்கு கிருஷ்ணா மைசூர் மைசூர் பாகு ஒரு கிலோ வாங்கி தர வில்லை என்று .. (நான் அரை கிலோ கொடுத்தேன்.)நின்று விட்டது!!

    ReplyDelete
  88. @ராஜகிரி
    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    வருகைக்கு மிக்க நன்றி சகோ... இனி அடிக்கடி வாங்க ;)

    நீங்க சொல்வது உண்மை தான். யாரோ ஒருத்தவங்க பழக்கபடுத்து விட்டது இப்ப வழக்கமா போச்சு. கொடுக்கலைன்னா மிரட்டல் வேறு. நீங்களும் ரொம்ப சிரமப்பட்டுருப்பீங்க போல ;)

    ReplyDelete
  89. @ஆயிஷா
    //சென்னையில் கொஞ்சம் கம்மி தான்.//
    அட எல்லா கொடுமையும் எனக்கு சென்னைல தான் ஆயிஷா நடந்துச்சு :( உங்க ஏரியாவும் மக்களும் நல்லவங்க போல ;)

    ReplyDelete
  90. @பாபு
    //நான் ஒர்க் பண்ணலைன்னு ஆபீஸ்ல கண்டுபிடிச்சுட்டாங்க உங்களால.. :-)..//
    பல வருஷங்களா அப்படி தானே தல இருக்கீங்க ;))

    ReplyDelete
  91. @மலிக்கா
    அழைப்பை ஏற்று எழுதியமைக்கு மிக்க நன்றி மலிக்கா

    ReplyDelete
  92. @கீதா

    என்னங்க சங்கம்னு சொல்லி நடுங்க வச்சுட்டீங்க :(
    அவங்களாவது நின்னுட்டாங்க. நான் ஒரு டப்பா கொடுத்ததுக்கு திரும்ப என்கிட்டையே கொடுத்துட்டுபோயிட்டாங்க.... :)

    ReplyDelete
  93. நம்ம வீட்டு வேலைய செய்றதுக்கே நமக்கு எப்படி கஷ்ட்டமா இருக்கு? எல்லா வீட்டுலையும் பாக்குற அவங்களுக்கு எப்படி இருக்கும்?//

    உங்களைப்போல இல்ல உங்க அம்மா ரொம்ப நல்லவங்க போல.........!!!!!!

    ReplyDelete
  94. @இனியவன்

    ஹா...ஹா....ஹா...

    நீங்களாவது உண்மைய ஒத்துக்குறீங்களே நான் ...வன்னு (சொல்ல கூட என் நாக்கு அனுமதிக்க மாட்டேன்குதுன்னா பாத்துக்கோங்களேன் ;)

    ReplyDelete
  95. Maid Servant - அப்படினா யாருங்கோ.......இங்கே எல்லாமே நாங்கதாங்கோ..... பதிவில், முதலில் வந்த கனவு காட்சியில் நானும் join பண்ணிக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  96. @சித்ரா

    வான்ங்கோ....

    எங்க ஜோதியில் ஐக்கியமாக ;))

    ReplyDelete
  97. என்னமா ரொம்ப வேலையா?

    ReplyDelete
  98. @தொப்பி தொப்பி

    இப்ப தான் உங்க ப்ளாக்ல இருந்துட்டு வரேன் ;)
    //என்னமா ரொம்ப வேலையா?//
    இப்பவாவது ஒத்துக்குறீங்களா? என் வீட்டுல நான் தான் வேலை செய்றென்னு? கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்
    சாயங்காலம் பதிவு வந்துடும் அண்ணா

    தமிழ் மணத்தில் டாப் 20யில் 3ம் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  99. ப்ராக்டிகலான விஷயம்....
    ரொம்ப கரெக்ட் அத்தனையையும் அப்படியே ஏற்கிறேன் அனுபவப்பூர்வமாக...
    வேலைக்குப் போகிற குடும்பத்தலைவிகளுக்கு வீட்டுவேலைக்குக் கண்டிப்பாகப் பணியாள் தேவை...
    இருப்பினும் ஓர் இருபது பேருக்கு ஒருத்தங்க டீஸன்டானவங்களும் இருக்காங்க....
    ஆனால் "வேலைக்காரி" என்னும் ஜெனரல் கேரக்டருக்குள் பொருந்திப் போறவங்களே ஜாஸ்தி....
    உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்....

    ReplyDelete
  100. @பிரபு

    உண்மை தான் பிரபு. நம்பகமான ஆட்களை தான் பலரும் தேடி அலைகின்றனர். ஆனா சில பேர் கன்டிஷன் போடுறேன் பேர்வழின்னு பன்ற அலப்பறைக்கு கஷ்ட்டப்பட்டாவது நம்மலே வேல பாத்துடலாம்னு எண்ண தூண்டுது

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  101. nalla sonningal ponnga...ippave kanna kaatuthe...antha idathil nan irunthal....ayyoo...sh..sh...

    ReplyDelete
  102. @பாஸித்

    உனக்கு தான் கவலையே இல்லையே? கூட்டு குடும்பம்... நெனச்ச நேரத்துக்கு எல்லாமே கைலையே கிடைக்கும் ;)

    ReplyDelete
  103. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  104. வணக்கம்...

    அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  105. பகிர்வுக்கு நன்றி.இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)