கடலலைகள் நம் பெயரை அழித்ததையே
என் மனம் ஏற்க மறுக்கும்-இனி
எங்கனம் உன்னை மறக்கும்
என் மனம் ஏற்க மறுக்கும்-இனி
எங்கனம் உன்னை மறக்கும்
நித்தமும் புதிதாய் மலர்ந்ததை கண்டு
கோபம் கொண்ட பொறாமை மலர்களும்
என்னை கேலி செய்யும்-இனி
என்ன சொல்லி நான் ஜெயிக்க இயலும்
கோபம் கொண்ட பொறாமை மலர்களும்
என்னை கேலி செய்யும்-இனி
என்ன சொல்லி நான் ஜெயிக்க இயலும்
வழக்கமாய் அமரும் பூங்காவின் இருக்கைகளும்
என்னை பாவமாய் பார்க்கும்
நீ தான் காரணம் என சொன்னாலும் நம்பாமல்
நம் பழைய சண்டைகளை நினைவுப்படுத்தி
என் மேல் பழி போடும்
என்னை பாவமாய் பார்க்கும்
நீ தான் காரணம் என சொன்னாலும் நம்பாமல்
நம் பழைய சண்டைகளை நினைவுப்படுத்தி
என் மேல் பழி போடும்
உயிரே
அழகிய மலர்வெளியில்
நெருஞ்சியை விதைத்தது யாரோ?
அழகிய மலர்வெளியில்
நெருஞ்சியை விதைத்தது யாரோ?
காலமும் மருந்தாகாத விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?
காதலா!
வெற்று மனதில் காதலை நிறைத்து-இன்று
வெறுமையாக்கி விட்டது நீயடா
கண்ணீர் துடைப்பவனே-என்
கண்ணீருக்கு காரணமானதும் ஏனடா
வெற்று மனதில் காதலை நிறைத்து-இன்று
வெறுமையாக்கி விட்டது நீயடா
கண்ணீர் துடைப்பவனே-என்
கண்ணீருக்கு காரணமானதும் ஏனடா
மழை நீருடனும் கடல் நீருடனும்
கனவிலும் நினைவிலும்
வழியும் விழிநீரை
உன்னையன்றி யாரறிவார்
கனவிலும் நினைவிலும்
வழியும் விழிநீரை
உன்னையன்றி யாரறிவார்
பூகம்பம் வந்தது போலும்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்
காகிதத்தில் வடித்ததை எளிதில் எரிப்பாய்
என் இதய கல்வெட்டில் செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்
என் இதய கல்வெட்டில் செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்
காதல் என்னும் சொர்க்கத்தில்
நான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்
நான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்
எல்லாம் இருந்தும் நீயில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை
நகரும் நரக நாட்களிலும்
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும் மெல்ல மெல்ல மறைகிறது
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும் மெல்ல மெல்ல மறைகிறது
Tweet | ||||
ஒரு வழியா நீங்களும் கவிதாயினி ஆகிட்டிங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆனா.....சோகமா எழுதாதிங்க சந்தோசமா எழுதுங்க!
//கடலலைகள் நம் பெயரை அழித்ததையே
ReplyDeleteஎன் மனம் ஏற்க மறுக்கும்//
அசத்தல்!
Kavithai Arumai,
ReplyDeletenaan ottu pottutten..
”எல்லாம் இருந்தும் நீயில்லை
ReplyDeleteஎல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை”
ஆமி கவிதை சூப்பர். எனக்குப்பிடித்தவரிகளை
விட்டு கண்கள் விலகவே மறுக்கின்றன.
பிரிவின் துயரை ஒவ்வொரு நிலையிலிருந்தும் மிக அழகாக செதுக்கி இருக்கீங்க சகோ!
ReplyDeleteகாகிதத்தில் வடித்ததை எளிதில் எரிப்பாய்
ReplyDeleteஎன் இதய கல்வெட்டில் செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்//
ம்ம் வரிகள் அப்படியே மனதில் நிற்கின்றன ....
நல்ல கவி வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்
இது என்ன கண்ணீர் வாரமா ?,
ReplyDeleteநேற்று மல்லி இன்று நீங்க இன்னும் யாரோ
ஸலாம் சகோ ஆமினா,,
ReplyDeleteகவிதை அருமை...என்ன நாங்க எழுத வேண்டியது,எங்களுக்கு பொருத்தமான கவிதை...ம்ம்..
நல்லாவே கவிதை எழுதுரீங்க..
அன்புடன்
ரஜின்
கவிதையெல்லாம் அருமையா வந்துட்டு இருக்கு அமி வாழ்த்துக்கள் .
ReplyDeleteபுகைப்படங்களை வலதுபக்கம் வைக்க ரொம்ப சிரமம் பட்டிங்க போல?
//"நீயில்லாத வாழ்க்கையா?"//
ReplyDeleteநீயில்லையென்றால் வாழ்க்கையும் இல்லை....
கவிதை சூப்பர் சகோ வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.....
கவிதை அருமை ஆமினா.//காகிதத்தில் வடித்ததை எளிதில் எரிப்பாய்
ReplyDeleteஎன் இதய கல்வெட்டில் செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்///அழகாய் செதுக்கிய வார்த்தைகள்.
நான் லவ்வுல கொஞ்சம் வீக்குங்க. அதனால ஓட்டு மட்டும் போட்டுட்டு கிளம்பறேன்.
ReplyDeleteகவிதை நல்லாருக்கு ஆமினா..
ReplyDeleteகாதலை கண்ணீரில் சொல்லிய விதம் நேர்த்தியா இருக்கு ஆம்ஸ்!!
ReplyDeleteஆமி நோ சோகம். உங்க கிட்டேந்து சந்தோஷமான உற்சாகமான கவிதைகள்வரணும்.
ReplyDeleteநறுக்குன்னு நாலு போட்டு விட்டு கிளம்பியாச்சு....
ReplyDeleteஅருமையான காதல் கவிதை ஆமினா...
ReplyDeleteகண்ணீர் நெடிதான் கொஞ்சம் தூக்கல் :)
அழகிய மலர்வெளியில்
ReplyDeleteநெருஞ்சியை விதைத்தது யாரோ?
காலமும் மருந்தாகாத விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?
அருமையான வார்த்தைப் பிரயோகங்களுடன், நல்லதொரு கவிதையைப் படித்த திருப்தி சோதரி!
மேலே உள்ள வரிகள் எனக்கு மிகவும் பிடித்துவிட்டன! எல்லாப் பிரச்சனைகளுக்கும் ' காலம் ' மிகச்சிறந்த தீர்வு என்று சொல்வார்கள்! அது உண்மையும் கூட! ஆனால் " காலமும் மருந்தாகாத விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ? " என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்! அருமை சகோதரி!
' அழகிய அனுபவம் பெற இங்கே வாங்க "
ம்..... மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்!!
இது எப்பயிருந்து..?;) கவிதை ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.... வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇ.இ.
காதல் என்னும் சொர்க்கத்தில்
ReplyDeleteநான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்///
அருமை சகோதரி..... வலி மிகுந்த வார்த்தைகள் ......
ஆமினா நலமா?எனக்கு இப்போதான் தெரியும் உங்களுக்கும் ப்ளாக் இருப்பது.
ReplyDeleteஎல்லாம் வாசித்தபின் கருத்தை கூறுகிறேன்.ப்ளாக்கில் சந்தித்தது மகிழ்ச்சி ஆமினா. நன்றி.
@தொப்பி தொப்பி
ReplyDelete//புகைப்படங்களை வலதுபக்கம் வைக்க ரொம்ப சிரமம் பட்டிங்க போல? //
இல்லையே அண்ணா...
முதல் சமையல் குறிப்பு (ரவா பாயாசம்) போடும் போது மட்டும் தான் ரொம்ப சிரமப்பட்டேன்... ஆனா கொஞ்சம் டெக்னிக்(?!!) பழகிகிட்டதால 2 வது (புரோட்டா சால்னா) சிரமமில்லாம போட்டேன்..
அது சரி உங்களுக்கு ஏன் டவுட் வந்துச்சு? ;)
@வைகை
ReplyDeleteகவிதாயினிலாம் இல்ல சகோ...
சும்மா மனசுல தோணூனத கிறுக்குனேன் எப்பவோ.... கரையான் அரிக்கிறதுக்கு முன்னாடி முன்னெச்சரிக்கையா பாதுகாத்துட்டேன் ;)
நன்றி ஜீ
ReplyDeleteநன்றி கருண்
நன்றி லெட்சுமிம்மா
நன்றி பாலாஜி
@அரசன்
//நல்ல கவி வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்//
கவிஞர் பாராட்டு ரொம்பவே உற்சாகபடுத்தியது. மிக்க நன்றி
@அரபுதமிழன்
//இது என்ன கண்ணீர் வாரமா ?,// நீங்க ஏன் அழுகுறீங்க? ;) மிக்க நன்றி
@சகோ ரஜின்
வஸ்ஸலாம்
//எங்களுக்கு பொருத்தமான கவிதை.// அடடா..... சொல்லவே இல்ல???? ;)
@தொப்பி தொப்பி
மிக்க நன்றி அண்ணா
@மாணவன்
//கவிதை சூப்பர் சகோ வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.....//
கண்டிப்பா சகோ.. மிக்க நன்றி
@சாதிகா அக்கா
மிக்க நன்றி அக்கா
@பாலா
//நான் லவ்வுல கொஞ்சம் வீக்குங்க// பூஸ்ட் வாங்கி குடிங்க ;)
மிக்க நன்றி
@அமைதி சாரல்
மிக்க நன்றி சகோ
@சகோ அப்துல் காதர்
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ;)
@கோமு
//ஆமி நோ சோகம். உங்க கிட்டேந்து சந்தோஷமான உற்சாகமான கவிதைகள்வரணும்.// அடிக்கடி சிரிச்சா நம்மல பைத்தியம்னு நெனச்சுடுவாங்க கோமு... அதான் இந்த முன்னெச்சரிக்கை ;)
ஆளாளுக்கு என்னமா எழுதுறாங்கயா.!!!
ReplyDelete....>>>என் மனம் சிதறி வெடித்தால்
ReplyDeleteநான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்
manadhaiththaiththa varikaLமனதை தைத்த வரிகள் சார்
நல்ல கவிதை ஆமினா. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ஹாஜா
ReplyDelete//நறுக்குன்னு நாலு போட்டு விட்டு கிளம்பியாச்சு....//
டெம்ளேட் கமெண்ட்க்கு ரொம்ப நன்றி சகோ ;)
@சுந்தரா
//கண்ணீர் நெடிதான் கொஞ்சம் தூக்கல் :)//
காதலின் பிரிவு சமாதனப்படுத்த முடியாத வலி இல்லையா? ;) மிக்க நன்றி சுந்தரா
@மாத்தியோசி
நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லிட்டீங்க... ரொம்ப நன்றி சகோ
@பானு
//இது எப்பயிருந்து..?;)// உங்க சிஸ்யை ஆனதிலிருந்து ;)
@ chammy fara
மிக்க நன்றி தோழி
எக்ஸ்க்யூஸ் மீ போன என் கமெண்ட்ல சார் - ரீப்ளேஸ் பை மேடம்.. ஹி ஹி இட மாறு தோற்ற பிழை
ReplyDelete@அம்முலு
ReplyDeleteஉங்க சமையலறையை பாத்த அன்னைக்கே உங்கள ப்ளாக்ல தேடி பாத்தேன். கிடைக்கல.. அதிரா ப்ளாக்ல தான் கண்டுபிடிச்சேன். ஆனா ப்ரோபைல ப்ளாக் இல்ல :(
உங்க வருகையை பார்த்ததும் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி அம்முலு...
@ தம்பி கூர்மதியன்
ReplyDelete//ஆளாளுக்கு என்னமா எழுதுறாங்கயா.!!!//
யாரோட ஆள்???? :)
மிக்க நன்றி தம்பி கூர்மதியன்
@நித்திலம்
மிக்க நன்றி தோழி
@சி.பி. செந்தில்குமார்
எப்படி சார்னு சொல்ல போச்சுன்னு பதிவு எழுத போனேன். நல்லவேளை உங்க இலக்கண தன்னிலை விளக்கம் படிச்சதும் கமெண்டா ஆக்கிட்டேன்
மிக்க நன்றி சகோ
ஆஹா சூப்பரா இருக்கு.!!! என்னாலும் நினச்சு பாக்க முடியல.. அவர் இல்லாத வாழ்க்கைய...
ReplyDeleteகவிதை நல்லா இருக்குதுங்க..
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}
ReplyDeleteகவிதை எப்பயிருந்து?
நல்லாருக்கு ஆமினா.வாழ்த்துக்கள்.
ஆஹா கவித கவித அபிராமி அபிராமி....
ReplyDeleteஅருமையான கவிவரிகள்
காதல் கவிதைனா எப்பவும் சோகத்தோடு சுடுகாட்டுவாசனை வருவது ஏன் ?
அட..நான் எழுதிய கவிதையை அப்படியே எந்த ஒரு மாற்றம் இல்லாமல் போட்டு விட்டிர்களே !!!
ReplyDeleteஇந்த கவிதையை நான் தமிழ் மனம் போட்டிற்கு அனுப்பி இருந்தேன் என்றால்,முதல் பரிசு
கிடைத்திருக்கும்.
இப்படிலாம் சொல்லலாம்னுதேன் பார்த்தேன்...
பூரி கட்டை பறந்து வந்தாலும் வந்திரும்னு நினைத்துக் கொண்டு வாழ்த்திட்டுப் போறேன்.
சகோ மலிக்கா போல திறமையுடன் கவி எழுதி புரட்சி செய்யுங்கள்..
மக்கள்களின் வறட்சியையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி !!!
//காதலா!
ReplyDeleteவெற்று மனதில் காதலை நிறைத்து-இன்று
வெறுமையாக்கி விட்டது நீயடா
கண்ணீர் துடைப்பவனே-என்
கண்ணீருக்கு காரணமானதும் ஏனடா//
அழகாய் செதுக்கப்பட்ட வார்த்தைகள் தோழி
http://harininathan.blogspot.com/2011/01/blog-post_26.html
காதல் என்னும் சொர்க்கத்தில்
ReplyDeleteநான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்
....very nice.....
வாழ்த்துக்கள்!!!!
//எல்லாம் இருந்தும் நீயில்லை
ReplyDeleteஎல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை//
காதலின் வார்த்தைகள். அருமை தோழி.
ஆமா இந்த வாரம் என்ன பெண்மன கவிதைகள் வாரமா?
நிறைய படிக்கிறேன்.
நாங்களும் எழுதுவோம் வந்து பாருங்க
(http://www.kavithai80.blogspot.com/)
"அழகிய அனுபவம் பெற விரும்பினால் இங்கே வாங்க"
ReplyDeleteவந்தேன் ,உண்மையிலே அழகிய அனுபவம்தான். வாழ்த்துக்கள்.
கவிதை அருமையாக உள்ளது.
ReplyDeleteதங்கள் மீது அமைதி உண்டாவதாக...
ReplyDeleteஎன்னாச்சு சகோ.? உங்க ஆள் வெளிநாடு போய்ட்டாங்களா.? சரி, சரி, சீக்கிரம் ஃபேமிலி விசாவிற்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க.
என் மானிட்டர் வழியா உங்கள் கண்ணீர் வாய்க்காலாய் வழிந்தோடுது...!
(அட..! கவிதைக்கு எழுதும் பின்னூட்டத்திலும் கூட பொய் புகுந்துவிடுகிறதே..?)
>>> என்னை மாதிரி அப்ரண்டிசுக்கு நல்லதோர் கவிதை பற்றி அறிய இது ஒரு இன்ஸ்பிரேஷன்
ReplyDeleteஅருமையான கவிதை ஆமினா... ரொம்ப ரசித்துப்படித்தேன்....
ReplyDeleteஆமினா நீங்கள் அழைத்திருந்த தொடர்பதிவினை இன்று தான் பதிவிட்டேன்.தாமதமாக பதிவிட்டதற்கு மன்னிக்கனும் ஆமினா.
http://shanthythas.blogspot.com/2011/01/diary-2010.html
நிலா தேய்வதை நேரில் காண்பதுபோல் இருக்கிறது இந்தக்கவிதை.
ReplyDeleteஎன் வலைப்பூவுக்கு வந்து கருத்துரையிட்டதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com
சூப்பர் கவிதை..
ReplyDeleteஆமி, அழகான கவிதை.
ReplyDelete@தீபிகா
ReplyDeleteமிக்க நன்றி தீபிகா
@இளங்கோ
நன்றி இளங்கோ
@ஆயிஷா
வஸ்ஸலாம்
;)
மிக்க நன்றி தோழி
@பர்கான்
//அருமையான கவிவரிகள்
காதல் கவிதைனா எப்பவும் சோகத்தோடு சுடுகாட்டுவாசனை வருவது ஏன் ?//
சந்தோஷத்தில் இருக்கும் போது அது பற்றிய எண்ணங்களே மனதில் ஓடும். அருவருக்கும் புழுவை ரசிக்க தோணூம். நினைவெல்லாம் சந்தோஷ தருணங்களை மட்டுமே மனதில் படம் பிடிக்கும்/ அசை போடும். அதுக்கே நேரம் போதாது. ஆனா காதல் தோல்வியை தழுவும் போது நகரும் ஒவ்வொரு நொடியும் நகரமாய் தெரியும். அதனால் நிறைய எழுத தோணூம். அப்ப எழுதுனா இப்படி தான் சுடுகாடு வாசனை, டெட்பாடி வாசனைலாம் வரும் ;) இந்த விளக்கம் போதுமா? :)
மிக்க நன்றி பர்கான்
@அந்நியன்
மிக்க நன்றி அந்நியன்
@ஹரிணி
மிக்க நன்றி ஹரிணி
@சித்ரா
மிக்க நன்றி சித்ரா
@பலே பிரபு
மிக்க நன்றி சகோ
@மைதீன்
மிக்க நன்றி மைதீன்
@இளம்தூயவன்
மிக்க நன்றி சகோ
@சகோ ஆஷிக்
//உங்க ஆள் வெளிநாடு போய்ட்டாங்களா.?//
முன்பு போகும் போது எழுதுனது தான். திரும்பவும் பிடிச்சு உக்கார வச்சுட்டோம்ல ;)
@சிவகுமார்
என்ன இப்படி சொல்லிபுட்டேள்
மிக்க நன்றி சகோ
@தோழி பிரஷா
மிக்க நன்றி பிரஷா
@சந்தக்கவி.சூசைப்பாண்டி
மிக்க நன்றி சகோ
@ரியாஸ்
மிக்க நன்றி ரியாஸ்
@வானதி
மிக்க நன்றி வானதி
இந்தக் கவிதை நன்றாக இருக்கிறது என பின்னூட்டமிடாவிட்டால் எனக்குப் பாவம் பிடித்துவிடும். உங்கள் ப்ரொஃபைலில் கவிதாயினி என்ற பொய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோ!
ReplyDelete@தமிழ்வினை
ReplyDelete//உங்கள் ப்ரொஃபைலில் கவிதாயினி என்ற பொய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோ!//
அதான் சொல்லிட்டீங்கலே சகோ பொய் என ;) அப்பறம் ஏன் சேர்த்துக்கணூம்? ;) கவிதாயினி என்ற பெயருக்குரிய மரியாதையை கெடுத்தால் நாளை வரலாறு என்னை கேள்வி கேட்டு நச்சரிக்கும் ;)
அடடா உங்களைப் புண்படுத்தி விட்டேனா ? மிகவும் வருந்துகிறேன். உங்களைப் பாராட்டும் நோக்கில்தான் profile - ல் இருப்பதை வைத்து நகைச்சுவைக்காகச் சொன்னேன். தவறாகி விட்டது. Sorry
ReplyDelete@தமிழ்வினை
ReplyDeleteசகோ நீங்க இப்படி பேசுறது தான் மனசை புண்படுத்துர மாதிரி இருக்கு. பாராட்டுயும், வஞ்ச புகழ்ச்சியும், திட்டுதலும் தெரியாத அளவுக்கு நான் விவரமறியாதவள் இல்லை. மற்றவர்களை போல் கரு, தலைப்பு கொடுத்ததும் கவிதை மடை திறந்த வெள்ளமாய் எனக்கு வராது. குறைந்தது ஒரு கவிதை எழுதவே 15 நாளாவது ஆகும். அதுக்காகதான் நான் கவிதாயினி இல்லைன்னு/ போட்டா வரலாற்று பிழையாகும்னு விளையாட்டாய் சொன்னேன். உங்கள இந்த அளவுக்கு எழுத வச்சுருக்குறதுக்கு ரொம்பவே பீல் பண்றேன். இறைவனுக்காக என்னை மன்னித்துவிடுங்கள்
அன்பு சகோதரி
ஆமினா
மீனவற்காக எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்.வாருங்கள்...
ReplyDelete//அறுசுவையில் நான் எழுதிய கவிதை இது.//
ReplyDeleteஎல்லா சுவை இருந்தாலும் சோகம் விஞ்சி நிற்க்கிறது.
கவிதை கை வந்து விட்டது. தொடர்ந்து கவிதைகள் தருக..
//பிரிவின் துயரை ஒவ்வொரு நிலையிலிருந்தும் மிக அழகாக செதுக்கி இருக்கீங்க சகோ!//
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்ம் ஆமினா...,மிகவும் அருமையான கவிதை இது...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.
//நிலா தேய்வதை நேரில் காண்பதுபோல் இருக்கிறது இந்தக்கவிதை.//
ReplyDeleteஆமினா உங்கள் உயர்ந்த உள்ளம் நெகிழ்ச்சியூட்டுகிறது. மன்னிப்பெல்லாம் கேட்டு உங்களைத் தாழ்த்திக் கொள்ளவேண்டாம். ஒரு வேளை தவறாக பேசிவிட்டேனோ என்ற நெருடலில் சொன்னேன், வேறொன்றுமில்லை. மற்றபடி உங்களைக் கவிதாயினி என்றழைப்பதில் மாற்றமில்லை. வரலாறு நச்சரித்தால் நான் பின்னூட்டமிட்டுக்கொள்கிறேன் நீங்க கவலைப்பட வேண்டாம்.
ReplyDeleteகண்ணீர் துடைப்பவனே-என்
ReplyDeleteகண்ணீருக்கு காரணமானதும் ஏனடா
பூகம்பம் வந்தது போலும்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்
எல்லாம் இருந்தும் நீயில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்-உன்
இடத்தை நிரப்ப ஆளில்லை
நகரும் நரக நாட்களிலும்
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும் மெல்ல மெல்ல மறைகிறது
இந்த வரிகள் எல்லாம் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ஆமினா
சோக கவிதை ஆமினாவிடமிருந்தா?
ReplyDeleteமனதை பிசைகிறது.நல்ல உணர்வுள்ள கவிதை.
என்ன ஆச்சி அமீனா. நீங்களுமா ?
ReplyDeleteகவிதையும் எழுதுவீங்களோ? சூப்பராக இருக்கு வரிகள்.
ReplyDeleteஉங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.
ReplyDeleteகவிதை நல்லாதான் இருக்கு ??
ReplyDelete/எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம் ??//
ஹ்ம்ம்... ஆமினா கலக்குங்க...
ReplyDeleteஅறுசுவையிலும் அருமையான சுவை கவிச்சுவை....ஹே யப்பா.. உங்க கவிதைய படிச்சதும் எனக்கே கவித வருதே.. அடுத்த போஸ்ட்டு கவிததான் போடணும்... நீங்களும் என் பழைய கவிதைகள படிச்சு பாருங்க... ஹி ஹி பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.. :))