ஜனவரி
சென்னை என்பதால் முதல் நாள் இரவு எங்கள் தெருவில் நியூ இயர் பயங்கர கொண்டாட்டம். வாழ்க்கைல முதல் தடவ சூரியன் FM க்கு பேசினேன். முதல் முயற்சியிலேயே வெற்றி.. ஏன்னா போன் போட்டது அதுல வேல பாக்குற பொண்ணு ;) என்னவர் வருஷா வருஷம் வாங்கி கொடுக்குற டைரி தான் என் நியூ இயர் ஸ்பெஷல்....
கத்திபாரா மேம்பாலத்துக்கு பக்கத்துலேயே ஹிந்துஸ்தான் காலேஜ்னு நெனைக்கிறேன் பேரு மறந்து போச்சு (உருப்படியா போனா தானே?! இருந்த 8 க்ளாஸ்ல 1 நாள் தான் போனேன்). அங்கே மெட்ராஸ் யுனிவர்சிட்டி பெர்சனல்
கான்டக்ட் ப்ரோக்ராம் வச்சாங்க. வாழ்க்கைல காலேஜ் தான் பாத்ததில்ல இதுக்காவது போகலாம்னு முடிவு பண்ணி சென்னைக்கு புதிது என்பதால் வழியறிய காலைல என் தம்பி பைக்ல கிளம்பினேன். இந்தியா ஏன் இப்படி இருக்குன்னு எடுத்ததும் பாடம் நடத்தி எடுத்து அறுக்க ஆரம்பிச்சுட்டார்.அவர் ஆரம்பிச்சதும் தான் மெரினா பீச்லையும், பார்க்லையும் ஏன் மாணவர்கள் கூட்டம் அதிகமா இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். இதுக்கு மேல உடம்புல தாங்கிக்க கூடிய எனர்ஜி இல்லைன்னு மதியம் உடனே கிளம்பிட்டேன். சரின்னு ரோடு க்ராஸ் பண்ணலாம்னு பாத்தா முடியவே இல்ல. சிக்னலும் இல்ல... பாலம் ஏறும்/இறங்கும் இடம் என்பதால் மேலே ஏறவும், கீழே இறங்கவும் வரும் வண்டிகள் அதிக வேகம் எடுக்கும். எப்படியோ என் பக்கத்துல வந்தவங்க பின்னாடியே போனேன். ஒரு ரோடு கஷ்ட்டப்பட்டு கடந்து நடுவுல நிக்கிறேன். பக்கத்துல வந்தவர் காணாம். ஏற்கனவே போயிட்டார் போல. எனக்கு அடுத்த ரோடு கிராஸ் பண்ண தெரியவே இல்ல. எல்லாரும் பாக்க ஓடி போறதுக்கும் கூச்சமா இருந்துச்சு. ட்ராபிக் போலீஸ் கண்ணுல மட்டும் மாட்டுனோம் அவ்வளவு தான் நடுரோட்ல நாரடிச்சுடுவான். 10 நிமிஷத்துக்கு அப்பறம் மனச தேத்திட்டு ஒவ்வொரு வண்டியா நிப்பாட்டி எப்படியோ கிராஸ் பண்ணிட்டேன். நடுவுல நிக்கும் போது என்னமோ எல்லாரும் நான் தப்பு பண்ண மாதிரி பாத்தத பாக்கும் போது கூச்சமா இருந்துச்சு. அன்னைக்கு முடிவு பண்ணது தான். இனிமே எங்கே போனாலும் SUB WAY வழியாதான் க்ராஸ் பண்ணனும்னு..... இப்ப வரைக்கும் சுரங்க பாதை வழி இருக்கான்னு கேட்டுட்டு தான் அடுத்த வழி பத்தி யோசிப்பேன்.
இதுவே பெரிய கொடுமைன்னு பாத்தா அதவிட பெரிய கொடும நடந்துச்சு. எல்லாரும் என்னையே பாத்துட்டு இருந்ததால எப்படியாவது எடத்த காலி பண்ணிடனும்னு தாம்பரம்னு போட்ட பஸ்ல ஏறிட்டேன். போக வேண்டியது பல்லாவரம். தாம்பரம் பஸ்ல ஏறுனா போற வழில விட்டுடுவாங்க. நானும் ஏறிட்டேன். பாத்தா அது வேற ரூட்ல போய்ட்டு இருக்கு. ஜன்னல் வழியா கடைல உள்ள போர்ட்ல பாத்துட்டே வந்தேன். ஆதம்பாக்கம்னு போட்டுருந்துச்சு. ஐய்யய்யோ தொலஞ்சு போக போறோமேன்னு பயம் :) கன்டக்டர்கிட்ட கேட்டா "ஏம்மா நீலாம் படிச்ச புள்ள தானே... போர்ட் பாக்க மாட்ட? கிழக்கு தாம்பரம்னு பெருஷா தானே போட்டுருக்கு"ன்னு சத்தமா திட்டிட்டான். அப்ப தான் சென்னைல இரண்டு இரண்டு ஏரியாவா இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்பறம் மறுபடியும் கிண்டி போக எதாவது பஸ் வருமான்னு பாத்தா one way! எந்த பஸ்ஸும் போகாதுன்னு சொல்லிட்டாங்க. ஒவ்வொரு ஆளூங்க கிட்டயா கேட்டுட்டு நடந்தே பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து பல்லாவரம் சேர்ந்தேன். இப்ப தான் எனக்குள்ள எவ்வளவு திறமை (??!! சும்மா ஒரு பில்டப்க்கு) இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னமோ பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரி வீட்டுல அளந்துவிட்டேன்.
பிப்ரவரி
இந்த மாசம் முழுசும் அலையுறதுலேயே போச்சு. லக்னோ என்னை வா வான்னு கூப்பிட்டதுனால எல்லா ஜாமானும் பேக் பண்ணுறது, தேவையில்லாத பொருட்களை ஊருக்கும், தேவையான பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பத்திரமா கட்டி லக்னோக்கு அனுப்புறதுன்னு பெரிய வேலை. தேவையில்லாத துணிகளை குப்பையில் கொட்ட மனமில்லாமல் கண்ணுக்கு மாட்டும் கஷ்ட்டப்படும் குழந்தைகளுக்கு நேரே போய் கொடுத்ததுல டயர்ட்டா படுத்துருந்தேன். அப்பவே என் அக்காவும் வந்தா சென்னையில் இருந்த 2 வருஷத்துல தியேட்டருக்கே போகாத என்னை வலுக்கட்டாயமா மாயாஜால் கூடிட்டு போனா எங்க அக்கா. என் விரதம் கலைக்கப்பட்ட நாள் ;( தியேட்டர வெறுக்குறதுக்கு பல காரணங்கள் இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி காரணம்னா 3 மணி நேரம் என்னை ஒரே இடத்தில் கட்டி போடும் அளவுக்கு இயக்குனருக்கும் திரைக்கதைக்கும் திறமை இல்லைன்னு பெரிய பில்டப்லாம் விடமாட்டேன். முதல் நாளே படத்த பாத்துட்டு அடுத்த நாளும் வந்து நல்ல வசனம் வரதுக்கு முன்னாடியே கேட்க விடாம கத்துற காட்டுவாசிங்க அதிகம் இருப்பதும், பொறுமை இல்லாததும் விருப்பம் இல்லாததும் சோம்பேறி தனமும், தொலைகாட்ட்சி வரலாற்றில் முதன் முறையாகன்னு டீவில போடுவதை பார்த்தாலே போதும் என்பதும் தான். கெஞ்சி கூத்தாடி கூப்பிட்டா. நானும் அர மனசா அர தூக்கத்தோடபோனேன். மதிய வெயிலுக்கும் அலைச்சலுக்கும் இதமா குளுகுளு ஏசி... . படம் முடிஞ்சு எல்லாரும் வெளியேறுனதுக்கு பிறகு வெளியே வந்த போது எங்கக்கா ஆத்துக்காரர்கிட்ட ஹீரோ யாருங்க மச்சான்? புதுசா இருக்கான்ல. ஹீரோயின் என்ன லட்சணத்துல இருக்கா? நடிக்கவே தெரியல. புதுசுகள போட்டா இப்படி தான் அப்படின்னு கேட்டது தான் தாமதம். எல்லாரும் என்னை பாத்து மொறைக்க ஆரம்பிச்சுட்டாங்க. படத்தோட பேரு விண்ணை தாண்டி வருவாயா... ஹீரோ யாருன்னு கேட்டா கோபம் வராதா? அப்ப தான் 3 மணி நேரம் நான் தூங்கிட்டு இருந்தது அவங்களுக்கு தெரிஞ்சுச்சு. தவளை தன் வாயால் கெடும்.
மார்ச்
கித்னா (எவ்வளவு) என்ற ஒரே வார்த்தை மட்டும் கத்துக்கிட்டு என்னை நம்பி என் அம்மாவும் மகனும் லக்னோக்கு ட்ரைனில் ஏறி சென்னைக்கு குட் பை சொன்ன நாள். அந்த வார்த்தைய வச்சுட்டே 36 மணி நேரம் எல்லாரையும் சாகடிச்சேன். காலைல லக்னோ இறங்குனதும் சரியா என்னவர் வந்ததால மக்கள் தப்பிச்சாங்க. எங்கே பாத்தாலும் வாயில் சிவப்பு கலர்ல வெத்தல மாதிரி ஏதோ மெல்லும் மக்கள், அரசுக்கு பெயிண்ட் செலவு வைக்காமல் அவர்களே சுவற்றை சிகப்பு பெயின்ட் அடிச்சு சேவை செஞ்சது, 6 மணிக்கே காலை டிபனாக ஜிலேபி சாப்பிடுவதுன்னு லக்னோவ பாத்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். ஆட்டோல ஏறியதும் 60 ரூபாய் கேட்டான். பல்லாவரத்துக்கும் சென்ட்ரலுக்கும் உள்ள அதே தூரம் சார்பாக் சென்ட்ரல் ரயிவே ஸ்டேஷனில் இருந்து. 350 ரூபாய் சென்னையில் கொடுத்தது தான் கண்ணுல வந்துட்டு போச்சு.
ஏப்ரல்
ஒரு மாதம் தான் லக்னோல இருந்தேன். அப்ப தான் மே மாசம் பரிட்சை ஞாபகம் வந்துச்சு. உடனே டிக்கெட் போட்டு கிளம்பி சென்னைக்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் இறங்கும் போது மணி 2 இருக்கும். போகும் வழியெல்லாம் ப்ளாட்பார்ம் முழுவதும் வீடில்லாதவர்கள் கொசுக்கடியிலும், பனியிலும் படுத்திருப்பதை பாத்து காரின் ஏசி கூட சுட ஆரம்பித்தது என்னை.... எனக்கு விவரம் தெரிஞ்சு இப்படி தான் இருக்காங்கன்னு அக்கா ஆத்துக்காரர் சொல்லும் போது இன்னும் வேதனையாவே இருந்துச்சு. பசிக்கு ஒரு குழந்தை எழுந்து அழுவதை கூட கண்டுக்கொள்ளாமல் அலுப்பில் தூங்கும் தாய். ஒரு வேளை அந்த குழந்தை உறக்கத்திலேயே நடந்து எங்கேயேவது ரோடு க்ராஸ் பண்ணா? வழியெல்லாம் இதே சிந்தனை தான்.
மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் தேர்வுகட்டணம் கட்ட கடைசி நாள் என்பதால் ஓவர் க்ரௌவ்ட். பேங்க்ல கியூ பாத்தா தல சுத்திடுச்சு. என் தம்பி எங்கேங்கேயோ சுத்தி கடைசில ஒரு பேங்க் ஈ ஓட்டிட்டு இருந்தத கண்டுபிடிச்சு பணம் கட்டியாச்சு. போனதும் வேலை முடிஞ்சு அப்ளிகேஷனும் பாக்ஸ்ல போட்டுட்டு வந்தாச்சு. 7 மணிக்கு ஊருக்கு போக ட்ரையின். திருவல்லிகேணில இருந்து 15 நிமிஷ பயணம் தான் ஸ்டேஷனுக்கு. 30 நிமிஷத்துக்கு முன்பே கிளம்பியாச்சு. ஆனா ஓவர் ட்ராபிக். நடந்து போனவன் கூட சீக்கிரமா போயிட்டான். அப்ப தான் தெரிஞ்சது ஐபிஎல் கிரிக்கெட் நடந்துட்டு இருக்குன்னு. "இந்த எழவுலாம் மெயின் ஏரியாவுலையா நடத்தணும்? ஊருக்கு வெளியே கிரவுண்ட் கட்டி வெலையாட வேண்டியது தானே.... பாக்குற முட்டாள்களுக்கும் அறிவு இல்ல. வீட்டுல தான் துல்லியமா அவுட்டா இல்லையான்னு சலிக்குற அவரை ரிப்பீட் பண்ணுவானுங்க. அது பத்தாது? இந்த கருமாந்திரம் புடிச்சவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறதுக்கு எங்க பொண்டாட்டி புள்ளைங்க ஒரு நாளைக்கு பட்னி கெடக்கணும்" இது ஒரு சாமானிய ட்ரைவரின் மன உளைச்சலில் இருந்து வெளிபட்ட வார்த்தைகள். ஒரு பாழாபோன மேட்ச்க்காக மக்களோட அன்றாட வாழ்க்கை எப்படிலாம் பாதிக்கப்படுதுன்னு நெனச்சு பயங்கர கோபம் தான் வந்துச்சு. ஆம்புலன்ஸ் போக கூட வழி இல்ல (பாவம் உள்ள எந்த உயிர் போராடிட்டு இருந்துச்சோ). அப்பறமென்ன ஓடுர ட்ரைன்ன ப்ரேக் போட்டு நிப்பாட்டவா முடியும்? பஸ்ல தான் ஊருக்கு சேந்தோம்.
மே
பல நாட்களாக காணாத உறவுகளை தேடி தேடி போய் சந்தித்ததும், திருமண விஷேஷங்களில்,விருந்துகளில் கலந்ததும்னு ஒரே பிஸி தான். குடும்பத்தோட சேர்ந்து கொடைக்கானல் போனதும் தனுஷ்கோடி போனதும் மறக்கமுடியாத அனுபவங்கள். மதுரையில் எக்ஸாம். தெப்ப குளத்த சுத்தியே தியாகராஜர்ன்னு பேரு போட்டு மொத்தம் 4,5 காலேஜ்... சுத்தி சுத்தி கண்டுபிடிச்சு ஒருவழியா போயி சேர்ந்தாச்சு. ஏதோ எழுதியாச்சு. போகும் போதும் வரும் போதும் 2 மணி நேரம் நின்றுக்கொண்டே பயணம் தான் எனக்கு பிடிக்காத விஷயமா இருந்துச்சு. எந்த தடிமாடுகளும் இடம் கொடுக்கல. தூங்குற மாதிரி நடிக்கிறாங்களாம். கரேக்ட்டா அதுக கிராமம் வரும் போது மட்டும் எந்துரிக்குங்களாம். பெண்கள் வந்தா வழிவிட்டு இடம் கொடுக்கணும் என்ற பண்பு செத்து சுடுகாட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சுன்னு இப்ப தான் தெரிஞ்சது. சப்போர்ட்க்கு ஆள் இல்லாததால லேடிஸ் சீட்ல ஏன் உக்காந்துருக்கன்னு கேள்வியும் கேக்க முடியல. ஏன்னா அதுல உக்காந்தவங்க எல்லாரும் ஆம்பளைங்க தான். நின்னுட்டு இருந்தவங்களும் கேக்கல, கண்டக்டரும் கண்டுக்கல.
ஜூன்
அடுத்து லக்னோக்கு கிளம்பணும். ப்ளைட்ல எனக்கு கண்டம் அப்படின்னு சொல்லியும் கேக்காம என் தம்பி அவனுக்கு வேலை அதிகம் என்பதால் (என்ன வேலை பாக்குறான்னு அவனுக்கே இன்னும் தெரியாது) துணைக்கு வர முடியாது சோ ப்லைட்லேயே போய் சேருன்னு சொல்லிட்டான். கடந்த 4 வருஷமா படுத்தா ப்ளைட் என் மேல விழுகுற மாதிரியே தான் காட்சி வந்துட்டு போகும். அதுனால தான் வேண்டாம்னு மறுத்தேன். கேட்டா தானே... நம்மள மேல(?!!) அனுப்புறதுலேயே குறியா இருக்குதுக ;( மீனம்பாக்கம் ஏர்போர்ட் வாசல்ல நுழஞ்சதும் துக்க வீட்டுல இருந்து வர மாதிரி அழுதுட்டே வராங்க எல்லாரும் (கணவனை,மகனை, பிள்ளைகளை பிரியும் சோகம்). அப்பவே சொன்னேன் கேக்கல ;( ஒரு வழியா சென்னை டூ டெல்லி, டெல்லி டூ லக்னோன்னு போய் சேந்தாச்சு. இந்த ப்ளைட்ல போக மாட்டேன், அந்த ப்ளைட்ல தான் போவேன்னு ஷாம் நச்சரிச்சதும், சொல்ல மறுக்கும் கதை. உயர உயர போனாலும் பல்ப் வாங்குறத நிப்பாட்டமாட்டோம்ல ;) அறுசுவைல சேர்ந்ததும், பல தோழிகள் கிடைச்சதும் வம்பு பண்ண என் சகோதரன் ஆஷிக் பிரண்ட் ஆனதும் இந்த மாசத்துல தான்.
ஜூலை
கூகுள், ஜீமெயில், ச்சாட், ஜீடால்க், பேஸ்புக், ஆர்குட் என சகலமும் பீஸ் இல்லாமலேயே கற்றுக்கொண்டது இந்த மாசத்தில் தான். அப்பறம் கவிதை,கதை, சமையல் குறிப்பு அறுசுவைக்கு அனுப்ப ஆரம்பிச்சதும் இந்த மாசத்துல தான். வெயிலின் வெப்பத்தோட சேர்ந்து போட்ட சண்டையில் ஏசியும், பிரிட்ஜும் கூட தோற்றுபோனது. லக்னோ zoo க்கு போனது மறக்க முடியாத அனுபவம்னுலாம் சொல்ல முடியாது. வண்டலூரோட கார்பன் காப்பி மாதிரி இருந்தது. ஆனா எதாவது கூளீங்கா குடிக்கலாம்னு கடைக்கு போய் கை நீட்ட அவன் தந்தது சூடா காப்பி... என்ன கொடும டா இது. என்னவர் பாத்தா பயங்கரமா கலாய்ப்பாருன்னு ஒன்னும் சொல்லாம குடிச்சுட்டேன்(ஊதுனா கூட ஹீட் குறையல).உடனே அவர் சந்தேகத்துல "அது சாக்லேட் மில்க் ஷேக்ன்னு நெனச்சு தானே கேட்ட?"ன்னு உண்மைய கண்டுபிடிச்சுட்டார். எல்லாம் நம்மூரோட முடியட்டும், இங்கேயும் பல்ப் வாங்க கூடாதுன்னு "இல்லையே மார்கழில ஐஸ் சாப்பிடுறது பிடிச்ச மாதிரி உச்சி வெயில் நேரத்துல சூடா காப்பி குடிக்கிறது எனக்கு புடிக்கும்"னு கப்பல் ஏற இருந்த மானத்தை நங்கூரமிட்டு நிறுத்தி தப்பிச்சதும் இன்று வரை மறக்க முடியாது
ஆகஸ்ட்
இந்த மாசம் எனக்கு ரொம்ப சோகமான மாசமா இருந்துச்சு. எல்லாம் நாசமா போச்சு.இப்படிலாம் நடந்துட கூடாதுன்னு தான் நான் வேண்டுனேன். ஆனா நடந்துடுச்சு. விதி வலியதுன்னு உணர்ந்ததும் இந்த காலகட்டத்தில் தான். "ஆமினா நீ பாஸாகிட்ட"ன்னு பிரண்ட்ஸ் சொல்லும் போது ரொம்ப அதிர்ச்சி. அது என் பேரா இருக்காதுன்னு அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லியும் கேக்கல (கடவுளே என் மேல ஏன் தான் எல்லாருக்கும் இத்தன நம்பிக்கையோ?). அவங்க கொடுத்த லிங்க்ல பாத்தா உண்மையிலேயே என் பேரு வித் இன்சியலோட (திருத்துனவங்களுக்கு மாலைகண் நோய் போல் முழு நேரம் கண் நோய் போல). இப்ப வரைக்கும் எனக்கு புரியவே இல்ல :( அடுத்த வருசமும் அதே மதுரை, அதே பஸ் பயணமான்னு நெனச்சு ஒரே கவலை. புனித நோன்புகளும் ரமலானும் உற்சாகத்தை கொடுத்தது.
செப்டம்பர்
நான் ஏன் பொறந்தேன்னு பல பேரு தலைல அடிச்சுட்டு இருக்குற காரணமான மற்றும் என்னவர் துக்க தினமா அனுசரிக்கும் செப்டம்பர் 29 வந்தது. வழக்கத்தை விட நிறைய பேரு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாங்க. ஆகஸ்ட்ல ஆரம்பிச்ச மழை இந்த மாசம் அதிகமா வேகம் எடுத்து பல ஏரி,கண்மாய் மற்றும் கோம்தி ஆற்றை பதம் பார்க்க ஆரம்பிச்சது. முன்னெச்சரிக்கை ஏற்பாட்டால் ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுக்கப்பட்டது. வடிகால் வாரியமும் தரமான துறை என உணர வச்சது. அவ்வளவு மழையிலும் நீர் தேங்காமல் இருந்தது பெரிய ஆச்சர்யம் கொடுத்தது.
அக்டோபர்
23 ஷாம் பிறந்த நாள் தான் ஸ்பெஷல். அறுசுவையிலும் நிறைய பேரிடத்திலிருந்தும் அவனுக்கு ஆசியும் வாழ்த்தும் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம். கடைக்கு ஷாமை கூடிட்டு போனா என்னா வேணும்னு மட்டும் கேக்க கூடாதுன்னு கத்துகிட்ட நாள் :) கடைல ஒன்ன கூட விட்டு வைக்காம எல்லா பக்கமும் கை நீட்டி கேக்க ஆரம்பிச்சுட்டான்.
பேஸ்புக்ல ஒரு பிரண்ட் மெசேஜ் அனுப்புனாங்க ஏன் நீங்க ப்ளாக் ஆரம்பிக்க கூடாதுன்னு. அப்ப தான் ஆசை அதிகமா வந்துச்சு. உடனே தூங்கிட்டு இருந்த ஆஷிக்கை எழுப்பி ப்ளாக்னா என்ன? நான் இப்பவே ஒன்னு ஓபன் பண்ணனும்னு கேட்டது இந்த மாசத்தின் தொடக்கத்தில் தான். அது என்ன டீ கடையா இல்ல பொட்டிகடையா ? ன்னு திட்ட ஆரம்புட்டாப்ல. தட்டு தடுமாறி எப்படியோ ஓபன் பண்ணியாச்சு. அப்ப தான் என்னவர் எல்லாத்தையும் கத்துட்டு அப்பறமா போஸ்டிங் போடுன்னு சொன்னார். ஒரு மாசமா சைலண்டா எல்லா ப்ளாக்குக்கும் போனேன்.படிச்சேன். அப்பறமா உங்க உயிரை வாங்க வந்துட்டேன் ;))
நவம்பர்
பூல்புலையா போனது முதன் முதலா குட்டி சுவர்க்கத்துக்கு விருது கிடைச்சது எல்லாமே இந்த மாசத்துல தான். பூல்புலைவா போயிட்டு வந்து வீட்டுக்கு வந்தும் அதன் அதிர்வலைகள் இருந்துட்டே இருந்துச்சு. அந்த guide ரகசியமா பேசுவது போலவே காதுகளில் ஒலிச்சுட்டே இருந்துச்சு. சமையலறையில் தனியா நின்னா யாரோ பக்கத்துல நிக்கிற மாதிரியே ஒரு பீலிங். இன்னொரு தடவ போனா சரியாகிடும்னு நலம்விரும்பிகள் சொன்னதால் சுதாரிச்சுட்டு ஒன்னுமில்லன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.
டிசம்பர்
//என்னவர் வருஷா வருஷம் வாங்கி கொடுக்குற டைரி தான் என் நியூ இயர் ஸ்பெஷல்.//
இந்த டிசம்பர் ஆரம்பத்துலையே பேப்பர்லாம் காலியாகிடுச்சு. டிசம்பர் மாச மளிகை சாமான் லிஸ்ட் எழுதி கிழிச்சு வாங்கிட்டு வர பேப்பர் ஒன்னு கூட இல்ல. வெறும் 2 அட்டையும் map, code பேப்பர் மட்டும் தான் இருந்துச்சு. என்ன பண்ண? ஜனவரி 1 க்காக வெயிட்டிங் (நேத்து தான் வாங்கிட்டு வந்தார். இந்த முறையாவது ஒழுங்க எழுதணும்னு ஆசை. பாக்கலாம்). என் தம்பியிடம் புக் வாங்கி தரும்படி பொறுப்பை ஒப்படச்சு ஆகஸ்ட்லையே சொல்லி டிசம்பர் 30ந்தேதி தான் புக்ஸ் கைக்கு வந்துருக்கு (என்னே ஒரு பொறுப்புணர்ச்சி). வழக்கம் போல எங்கேயோ தூங்கிட்டு இருக்கு. ஏப்ரல் தான் அத தேடி கண்டுபிடிச்சு ஊருக்கு போகணும். குளிர்க்கு ஆதரவு கொடுத்த கட்டைகள் திடீர்ன்னு பெய்த மழையில் நனஞ்சு குளிர்காய்வதற்கு முட்டுகட்டை போட்டுடுச்சு. இந்த மாசம் கிடைச்ச விருதுகள் அடுத்த பதிவில்....
365 பக்கத்த சுருக்கி கொடுத்தாச்சு. இருந்தாலும் பெரிசானதுக்கு மன்னிச்சு. இதனை தொடர நான் அழைக்க போவது
சாதிகா அக்கா, நிலாமதியின்பக்கங்கள், ஜெய்லானி, பாரத் பாரதி, நீரோடை மலிக்கா, பிரஷா, சிநேகிதி, பானு, ரஜின், அந்நியன், ஹாஜா
அவர்கள்உண்மைகள்
மேலும் ஐடியாக்களுக்கு பாருங்க,,,,,,,
Tweet | ||||
அப்பாடா ஒரு வழியாக முச்சுப்பிடிச்சி வாசிச்சு முடிச்சிட்டேன்,ஒரு மாதம் டயரி என்னுடைய வருஷ டயரிக்கு சமம் போல,அருமையான பகிர்வு.முதல் கமெண்ட்?
ReplyDeleteஎழுத்தில் நகைச்சுவை அதிகரித்துக்கொண்டே போகிறது, ஆரம்பமே அமர்க்களம்.
ReplyDeleteஉங்களுக்கு ஞாபக சக்தி அதிகம், எந்தெந்த மாசத்துல என்ன நடந்ததுனு இன்னும் தெரிஞ்சிருக்கு. உங்க டைரி உங்களை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது.
பரிச்சைக்கு கூட இப்புடி நான் படிக்கல, என்ன போய் படிக்க வச்சுட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
ReplyDeleteஇப்போலாம் தமிழ் சினிமா கொஞ்சம் பரவால்ல நல்ல படம்லாம் வருது!!!
Tamilmanam ottupattai velai seyyavillaiye
ReplyDeleteஇவ்வளவு எழுதுவீங்களா. அசத்திட்டீங்க போங்க.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தொடர் பதிவ காரணமா வச்சு உங்க ஒரு வருஷ புராணத்தை படிக்க வச்சுட்டிங்க. சொல்லியிருந்த விதம் ரொம்ப நல்ல இருந்தது, இயல்பா சொல்லி இருக்கீங்க, உங்க அளவுக்கு எங்களால் சொல்ல முடியுமா என்று தெரிய வில்லை. முயற்சி செய்கிறோம். எங்களையும் மதிச்சு தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
ReplyDelete//உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம், எந்தெந்த மாசத்துல என்ன நடந்ததுனு இன்னும் தெரிஞ்சிருக்கு//
ReplyDeleteநமக்கு இப்பவே கண்ண கட்டுதே...
தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி...
ReplyDelete(சும்மா கடந்த சங்க,தம்கட்டி ஊதீட்டீங்க...)
சகோ..டைரி எதும் எழுதுர பழக்கம் இருக்கா..இப்டி டீடைலா எழுதுரீங்க...
செமஸ்டர் எக்ஸாமுக்கு ரிவைஸ் பண்ரமாதிரி இனிமேதா எல்லாத்தையும் யோசிக்கனும்,,
சகோ மன்த்லி டீடைல் கண்டிப்பா தரனுமா??ஐயயோ..
எம் மண்டைக்குள்ள உள்ள மெமரி கார்ட்ல கொஞ்சம் தேய்மானம் ஆகிப்போச்சு..
ஓக்கே..கமிட் ஆகிட்டேன்..இன்ஷா அல்லாஹ் எழுதுறேன்..உங்க அளவுக்கு இல்லைனாலும்..ஏதோ..
உங்களுடைய ஓராண்டு குறிப்பு அருமை...
அன்புடன்
ரஜின்
மேலும் ஐடியாகளுக்கு என்ற உங்க லிங்கை தொடர்ந்து ஆவலாய் போக ,ஐடியா ஒண்ணும் கிடைக்கலையே, இது என்ன ஏப்ரல் மாசமா?
ReplyDeleteஎவ்ளோ பெரிய டைரி! நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க! வாழ்த்துக்கள்! :-)
ReplyDeleteஇந்த புத்தாண்டில் உங்களுக்கு எல்லா வளமும் கிடைக்க இறைவன் உதவி செய்வானாக.....( சாரி .....ரொம்ப லேட்டோ)
ReplyDeleteஉங்கள் ஒரு வருட டைரி குறிப்புகள் அருமை.....தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி....இன்ஷா அல்லா நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்......விரைவில்....
எண்ணம் நல்லவைகளாக இருந்தால் எல்லாம் நல்லவைகளாக இருக்கும்.உங்களின் நல்ல எண்ணத்தை உங்களின் பதிவு மூலமாக அறிந்து கொண்டேன்.உங்கள் பதிவுகள் நல்ல நகைச்சுவையாக் இருந்தாலும் சில இடங்களில் மனதை மிகவும் தொட்டு, துவைத்து சிறு துளி கண்ணிரை வர வழைத்து விடுகிறீர்கள். இந்த பதிவில் என் மனதை தொட்டூ கண்களில் கண்ணிர் சொட்டு வரவழைத்தது இந்த வரிகள்தான்
ReplyDelete" ப்ளாட்பார்ம் முழுவதும் வீடில்லாதவர்கள் கொசுக்கடியிலும், பனியிலும் படுத்திருப்பதை பாத்து ******** காரின் ஏசி கூட சுட ஆரம்பித்தது என்னை....******* எனக்கு விவரம் தெரிஞ்சு இப்படி தான் இருக்காங்கன்னு அக்கா ஆத்துக்காரர் சொல்லும் போது இன்னும் வேதனையாவே இருந்துச்சு. ******பசிக்கு ஒரு குழந்தை எழுந்து அழுவதை கூட கண்டுக்கொள்ளாமல் அலுப்பில் தூங்கும் தாய். ஒரு வேளை அந்த குழந்தை உறக்கத்திலேயே நடந்து எங்கேயேவது ரோடு க்ராஸ் பண்ணா?******* வழியெல்லாம் இதே சிந்தனை தான். "
காரில் போகுபவர்களுக்கு ஸ்டார் ஹோட்டல்களும் சொகுசு பங்களாக்களும் மட்டுமே கண்களுக்கு தெரியும். ஆனால் உங்களுக்கு இதையும் பார்க்க தெரிஞ்ச்சிருக்கிறது.நல்ல இதயங்கள்தான் இதை கவனிக்க முடியும். இந்த புதிய ஆண்டிலும் உங்கள் பதிவு பயனத்தை தொடருங்கள். உங்கள் கணவர், சகோதரர்(நண்பர்) இவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது போல என்னைப் போன்ற இணைய பதிவர்களும் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், வாழ்க வளமுடன்
அஸ்ஸலாமு அழைக்கும் ஆமினா!
ReplyDeleteநீங்க டைரி எழுதினதை விட,
பதிவில் நகைசுவையாக
எழுதினது அருமை.வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்து அழகும் அதை இவ்வளவு தூரம் இழுத்து எழுதும்,பக்குவம் யாருக்கும் கிடையாது என்று நினைக்கிறேன் காரணம் ஒரு கைதியின் டைரி போலவே உங்களின் டைரி விறு விருப்பா போகுது.இதில் என்ன கொடுமைஎன்றால் என்னையும் டைரி எழுத அழைத்ததுதான்.
ReplyDeleteரொம்ப நன்றி உங்கள் அழைப்பிற்கு சகோ.....
என்னைப் பற்றி நான் என்ன எழுதுவது,எதைப் பற்றி சிந்தித்து எழுதுவது என்று,எனக்கே தெரிய வில்லையே ?
நான் ஒரு சாதாரண மனுஷன்,மற்றவர்கள் துன்பத்தில் பங்கு கொள்ள ஆர்வம் காட்டுவதுதான் எனது பொழுது போக்கு மற்றபடி என்னைப் பற்றி எனக்கே தெரியாது சகோ... உங்களின் எழுத்து நடையில் ஒரு அடிகூட என்னால் எழுத முடியாது,காரணம் நேற்று நடந்த சம்பவம் கூட இன்றைக்கு எனக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை இந்த நிலைமையில் இருக்கும் நான் பழைய நிகழ்வுகளை நான் எப்படி எழுதி நிரூபிக்க முடியும் ?
உங்களின் அன்பு அழைப்பிற்கும் எனது சொந்த தன்கையில் ஒருவராக நினைத்து உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி சகோ......உங்களின் எழுத்து ஆக்கத்தில் ஒரு மறுமலர்ச்சி தெரிகிறது நான் உங்களின் வாசகன் என்ற பெருமையோடு உங்களின் தளத்தை பின் பற்றி கருத்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வழர்க உங்களின் ஆக்கம் !!! நாங்கள் என்றும் உங்களுக்கு அளிப்போம் ஊக்கம் !!!
ஆமினா இணைய பதிவு தொடருக்கு மதிப்பு அளித்து என்னை அழைத்தற்கு நன்றி.நான் இதற்கு புதியவன். அதனால் அடுத்த முறை முயற்சி செய்கிறேன். எழுத இயலாததற்கு காரணங்கள்.
ReplyDelete1 நான் வசிப்பது அமெரிக்காவில் இங்கு யாரும் இந்தியாவை போல இலவச டைரி கொடுப்பது இல்லை.
2. ஞாபகசக்தி குறைவு. ( உதாரணம் ஒரு நாள் கணக்கு பாடத்தில் உதவி கேட்டு வந்த என் பெண்ணை இது கூட ஞாபகம் இல்லையா என்று சத்தம் போட்டுவிட்டு உதவி செய்தேன். பொண்னு கேட்டது 11 + 12 = ? அதற்கு பதில் சொல்லுவதற்க்காக கால்குலேட்டரை தேடிய நேரத்தில் சத்தம் போட்டேன். அந்த அளவிற்குதான் நம்முடைய ஞாபக சக்தி
3. ஹைக்கு அதிர்வு இணைய பதிவாளர் இதற்கு முன்பு ஒரு தொடர்பதிவுக்கு அழைக்க போவதாக கூறினார் அதற்கும் நான் மறுத்து விட்டேன். இப்போது உங்கள் அழைப்பை ஏற்று கொண்டாள் என்னை வறுத்து எடுத்து விடுவார்(நான் கொஞ்சம் பயந்த டைப்பு. அதிலும் பெண் பதிவாளர்களை கண்டால் பயம் ஜாஸ்தி)
4. நானோ புதிய ஆண் பதிவாளர். அதனால் என்னை ப்லோ செய்பவர்கள் எண்ணிக்கை குறைவு(பெண் பதிவாளர்கள் என்றால் ஈக்கள் மொய்யப்து போல ப்லோவர்கள் மொய்துவிடுவார்கள்). அதனால் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை அப்படி ஏற்றால் நான் பத்து பேரையாவது அழைக்க வேண்டும்.எனக்கு ப்லோ செய்வதோ பத்து பேர் அதில் நீங்களும் நீங்கள் ஏற்கனவே தொடருக்கு அழைத்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்( இப்படி என்னை தொடருக்கு அழைத்து என்னப் புலம்பஸ் செய்து வீட்டிர்களே அட ஆண்டவாஆஆஆஆ
5 இன்னும் பல காரணங்கள் அதை சொன்னால் உங்கள் கமெண்ட்ஸ் காலத்திலேயே நான் ஒரு பதிவு போட்டது போல இருக்கும். அப்புறம் உங்களை ப்லோ செய்பவர்களிடம் இருந்து கண்டனம் எழுந்து விடும் அதனால் இத்துடன் முடித்து கொள்கீறேன்
ஆறு செமஸ்டருக்கு ஒண்ணா படிச்ச மாதிரி இருக்குங்கோ! ஆனாலும் நல்லாயிருக்கு!
ReplyDeleteஇவ்வளாவு பெரிய கட்டுரையாஆஆஆஆஆஆஆ......நா பரிட்சைக்கு கூட இவ்வளவு படிச்சது இல்லை......அவ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரேன் ......முதல் மாசமே இன்னும் படிச்சி முடியல.. இன்னும் 11 மாசம் இருக்கு ..இது ஒரு நைட்டில படிச்சி முடியற மேட்டர் இல்ல ... :-)))))))))
ReplyDeleteஆஆஆஆ......என்னையுமா...??????? விஜியக்கா முதல்ல கூப்பிட்டாங்க ..இப்ப நீங்களுமா....!! பதிவுலகம் தாங்குமா..? ஹி...ஹி.. :-)))
ReplyDeleteநான் கவிதையா இருக்கும்னு வந்தேனுங்க நகைச்சுவையா அழகா சொல்லியிருக்கீங்க சகோதரி....
ReplyDeleteமறந்தே போச்சு ****இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்****
(அப்பவே இந்த மாதிரி படிச்சிருந்தா பத்தாங்கிளாஸ் பாசாகியிருந்திருப்பேனே)
உங்களது டைரி
ReplyDeleteசுவாரசியமாகவும் யதார்த்தம் கலந்த நகைச்சுவையுடன் சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள்....
டைரி பகிர்வுக்கு நன்றிங்க
தொடர்ந்து கலக்குங்க.......
//வைகை said...14
ReplyDeleteஆறு செமஸ்டருக்கு ஒண்ணா படிச்ச மாதிரி இருக்குங்கோ! //
எனக்கு எட்டு செமெஸ்டர் மாதிரி இருக்கு.. ஹி ஹி.. :)
//விண்ணை தாண்டி வருவாயா...//
என்னா வில்லத்தனம்? :)
//இல்லையே மார்கழில ஐஸ் சாப்பிடுறது பிடிச்ச மாதிரி உச்சி வெயில் நேரத்துல சூடா காப்பி குடிக்கிறது எனக்கு புடிக்கும் //
குடிச்சு முடிச்சதும் சிகரட் ஊதுற மாதிரி புகை வந்திருக்குமே?! அத பத்தி உங்களவர் ஒன்னும் சொல்லலியா? # டவுட்டு :)
//வெறும் 2 அட்டையும் map, code பேப்பர் மட்டும் தான் இருந்துச்சு //
தேவர் மகன் படத்துல ரேவதி சொன்ன வெறும் காத்து தான் வருதுன்னு சொன்ன வசனம் தேவையே இல்லாம நினைவுக்கு வருதே ஒய் சகோ?! ;)
ஸலாம் உண்டாவதாக...
ReplyDeleteஒரு மாதம் ஒரு பதிவு என்று வரிசையா பன்னிரண்டு பதிவு போட்டுருக்கலாம்..!
(ஓஓஓஓ....ஊஊஊஊ....அங்கே என்ன ஒரே சத்தம் எல்லாரும் என் கத்துறாங்க... அமைதி.. அமைதி..)
சரி, அடுத்தவங்க டைரியை படிக்கிறது தப்பில்லையா?
//பக்கத்துல வந்தவர் காணாம். ஏற்கனவே போயிட்டார் போல//
ReplyDeleteபாவம். யார் பெத்த புள்ளையோ???
நல்லா இருக்கு, ஆமி.
டைரி எழுதுவீங்களா?? நல்ல பழக்கம். எனக்கும் ப்ளைட் என்றாலே நடுக்கம். அதோடு இந்த விமான நிலையங்களில் அதிகாரிகள் பண்ணும் அலப்பறை பார்த்தா வாழ்க்கையே வெறுத்து விடும்.
;
ReplyDelete::365 பக்கத்த சுருக்கி கொடுத்தாச்சு:: எப்படிங்கா? முடியுது??
ReplyDeleteவருடதொடக்கதில் எல்லமே டைரிலை குறிச்சுக்கனும்னு, பல்லு தேய்க்கிறதிலை இருந்து குறித்து வைத்தேன்.. மூன்றே மூண்று நாட்கள் தான் அப்புரம் எல்லம் வெறுமையான பக்கங்கள் தான் :)
அப்பாடா ஒரு வழியாக வாசிச்சு முடிச்சிட்டேன்.உங்க டைரி உங்களை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது.
ReplyDeleteபதிவில் நகைசுவை அருமை...
பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
ஆமி ஒரே வார்த்தைல சொல்லனும்னா சூப்பரோ, சூப்பர்மா.
ReplyDelete//எடுத்ததும் முதல் பத்தியும் கடைசி பத்தியும் படிச்சுட்டு ஓட கூடாது // பாடப்புத்தகத்தைத் தவிர மத்ததெல்லாம் கவர்2கவர் படிப்போம்ல...
ReplyDeleteரோடு க்ராஸ் பண்ணியது, பஸ் மாறி ஏறுனது, வாங்கின பல்பு...எல்லாம் பயங்கர காமெடி...
//நேத்து தான் வாங்கிட்டு வந்தார். இந்த முறையாவது ஒழுங்க எழுதணும்னு ஆசை. பாக்கலாம்// எது...மளிகை லிஸ்ட்டா?
பொறுமையா நல்லா ஞாபகம் வச்சு நகைச்சுவையுடன் எழுதியிருக்கீங்க... என்னது என்னையும் தொடரச் சொல்லியிருக்கீங்க..உங்க அளவுக்கு இல்லன்னாலும் ஏதோ முயற்சி பண்றேன்... அழைத்ததற்கு நன்றி.
ஆமினா,நீளமாக இருந்தாலும் பதிவு யதார்த்தமாக சுவாரஸ்யமாக இருந்தது.அழைப்புக்கு நன்ரி.விரைவில் எழுத முயலுகின்றேன்.(ஆனால் உங்கள் அளவு எனக்கு ஞாபகசக்தி கிடையாது)
ReplyDeleteஅருமையான பதிவுங்க ...
ReplyDeleteஅசத்தலான எழுத்துநடை ....
நகைச்சுவை ல கலக்கோ கலக்குன்னு கலக்கிருகிங்க ...
தொடரட்டும் உங்கள் பயணம் ....
நல்ல விடயங்களை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க....
வாழ்துக்கள்
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteடைரி பெரிதாக இருப்பினும் உங்க யதார்த்த வரிகள் அருமை.
உங்களுக்கு எங்களோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Salaams 2 U sis. Aaminaa...
ReplyDeleteஅடடா...! இப்டில்லாம பதிவு போடுவாங்க...! நல்லா யோசிக்கிறீங்களே..! மொத்த டைரியும் ஒரே பதிவில்...! இட்ஸ் டூ மச்...! இதில் தொடர் பதிவு போட நிறைய பேருக்கு அழைப்பு வேறு..! இறைவா எங்களை காப்பாற்று..!
நானும் பக்கத்தில் கலகத்தாவில் ஒன்றரை ஆண்டு 'குப்பை கொட்டினேன்'. அங்கும் இப்படித்தான். அண்ணார்ந்து பார்த்தால் எங்கும் சிகப்புக்கொடிகள். குனிதால் தரையெங்கும் சிகப்பு கரைகள். ஜர்தா, பாண், பீடா, குட்கா... என்று ஏதேதோ வாங்கி ... தப்....தப்... என்று கையில் வைத்து மூடி அடித்து, பின்னர் பெருவிரலால் உள்ளங்கையில் நிரண்டி... நிரண்டி... அப்புறம் மீண்டும் தப்...தப்... அப்புறம் ஒரே லபக்... அப்புறம்... சவ்...சவ்...சவ்.. சில மணிநேரம் கழித்து எந்த இடத்திலும் புளிச்... புளிச்... உவ்வே...!
ஜெயலலிதா பண்ணிய உருப்படியான மூன்றே மூன்று காரியங்களில் இந்த அசிங்கங்களை தமிழநாட்டில் ஒழித்ததும் ஒன்று.
diski:(!?)
ஆமினா said...///ஒரு முறை சைன்இன் பண்ணிய பிறகு சரியானது....///---ம்ம்ஹூம்... எனக்கு சரியாகவில்லை.... So... ஆஜ்கா 'தமஸ்-அப்' மெ நஹி தேதியா...!
2010 டைரிக்கான போட்டி வந்தால் முதலாம் இடம் உங்களுக்குத்தான் சகோதரி
ReplyDeleteஅத்தோடு வாக்குகளும் குத்தியாச்சு
வாழ்த்துக்கள்
ஆமினா தொடர்பதிவுக்கு என்னை அழைத்துள்ளீர்கள்..விரைவில் பதிவிடுகின்றேன் ... நன்றி ஆமினா..
ReplyDelete@ஆசியா
ReplyDelete//அப்பாடா ஒரு வழியாக முச்சுப்பிடிச்சி வாசிச்சு முடிச்சிட்டேன்,ஒரு மாதம் டயரி என்னுடைய வருஷ டயரிக்கு சமம் போல//
ஆசியாவுக்கு பன்னீர் சோடா ஒரு பார்சல்!!!!!!!!!!
என் மனசு போல என் பதிவும் இருக்குன்னு சொல்ல வரீங்க அதானே.. நமக்குபுகழ்சிலாம் பிடிக்காது ஆசியா ;))
@தொப்பி தொப்பி
ReplyDelete//
உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம், எந்தெந்த மாசத்துல என்ன நடந்ததுனு இன்னும் தெரிஞ்சிருக்கு.//
20 வருஷம் கழிச்சுகேட்டா கூட சொல்லுவேன்... ஏன்னு கேளுங்களேன்... அட சும்மா கேளுங்களேன்........ (உண்மையிலேயே டைரி எழுதுவேன் தினமும் அல்ல)
// உங்க டைரி உங்களை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது. //
எக்குதப்பா எதுவும் தப்பா நெனச்சுடாதீங்க.... உண்மையிலேயே நா ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவ ஆங் ;)
பலே பாண்டியா
ReplyDelete//பரிச்சைக்கு கூட இப்புடி நான் படிக்கல, என்ன போய் படிக்க வச்சுட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.// எல்லா தண்டனையும் உயிரோட இருக்கும் போதே அனுபவிச்சா தான் நேரா சொர்க்கத்துக்குபோக முடியும். நீங்க சொர்க்க வாசி ;)
ஐத்ரூஸ்..
ReplyDelete//Tamilmanam ottupattai velai seyyavillaiye//
வேலை செய்யுதே சகோ.. பாருங்க என்னை நம்பி 10 பேரு ஓட்டு போட்டுருக்காங்க ;)
@அக்பர்
ReplyDelete//இவ்வளவு எழுதுவீங்களா. அசத்திட்டீங்க போங்க.
//
அட இதுக்கு மேலேயே எழுதுவேன். உங்களுக்கு வேண்டும்னா ஒரு புத்தகம் அனுப்புறேன்... ஏன்னா வருங்காலத்தில் என் சுயசரிதையை எழுத சொல்லி ப்ளாங்க் செக்கா வரலாம். அதுக்காக இப்பவே தயாராகிட்டு இருக்கேன் ;)
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@பாரத் பாரதி..
ReplyDeleteஅளவுக்கு எங்களால் சொல்ல முடியுமா என்று தெரிய வில்லை. முயற்சி செய்கிறோம். //////
அட நான் கிருக்கி வச்சதையா இப்படி சொல்றீங்க?????? கண்டிபா நல்லதொரு வருஷ புராணத்தை எழுதி எல்லோரையும் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்க வாழ்த்துக்கள் ;)
@பாரத் பாரதி
ReplyDelete//நமக்கு இப்பவே கண்ண கட்டுதே...//
தங்கச்சிக்கு ஒரு எளநீ பார்சல்....
@சகோ ரஜின்
ReplyDelete//சகோ..டைரி எதும் எழுதுர பழக்கம் இருக்கா..இப்டி டீடைலா எழுதுரீங்க..//
கோபம் வரும் போதெல்லாம் எழுதுவேன் (கோபம் எப்பவாவது தான் வரும்னு சிம்பாலிக்கா காட்டுறாங்களாம்:))
//எம் மண்டைக்குள்ள உள்ள மெமரி கார்ட்ல கொஞ்சம் தேய்மானம் ஆகிப்போச்சு..//
அழகான புதுமையான டைரியை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ
@பாரத் பாரதி...
ReplyDelete//மேலும் ஐடியாகளுக்கு என்ற உங்க லிங்கை தொடர்ந்து ஆவலாய் போக ,ஐடியா ஒண்ணும் கிடைக்கலையே, இது என்ன ஏப்ரல் மாசமா? //
அல்வா கைல குடுத்தா டக்குன்னு சாப்பிடணூம். ஸ்பூன் கேட்டு அப்பறம் ஊட்டிவிட சொல்ல கூடாது ;))
என்னன்ன எழுதணும்னு தெரியாம இருந்தா அத பாத்தா என்னன்ன எழுதணூம்னு ஐடியா கிடைக்கும்.... எதாவது புரிஞ்சதா? ;)
@ஜீ
ReplyDelete// எவ்ளோ பெரிய டைரி! நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க! வாழ்த்துக்கள்! :-)
//
பஞ்சதந்திரம் தேவியானியை ஞாபகப்படுத்துதே!!! ;)
@ஹாஜா.
ReplyDelete//.....( சாரி .....ரொம்ப லேட்டோ)//
நானும் ரொம்பலேட்டா வந்ததால பனிஷ்மென்ட் இல்ல ;)
அழைப்ப ஏற்றுகொண்டதற்கு மிக்க நன்றி சகோ
@அவர்கள் உண்மைகள்
ReplyDelete//ஆனால் உங்களுக்கு இதையும் பார்க்க தெரிஞ்ச்சிருக்கிறது//
வளர்ந்த சூழல் அப்படியா இருக்கலாம். கஷ்ட்டப்பட்டு நல்ல நிலையில் வந்தவர்களால் எளிதாக கடந்த காலத்தையும் கடந்த கால நிலையையும் மறக்க முடியாது இல்லையா :)
//உங்கள் கணவர், சகோதரர்(நண்பர்) இவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது போல என்னைப் போன்ற இணைய பதிவர்களும் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், வாழ்க வளமுடன் //
மிக்க நன்றி சகோ.....
@ஆயிஷா அபுல்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்...
//நீங்க டைரி எழுதினதை விட,
பதிவில் நகைசுவையாக
எழுதினது அருமை//
ரொம்ப நன்றி சகோதரி
@அந்நியன்
ReplyDelete//அதை இவ்வளவு தூரம் இழுத்து எழுதும்,பக்குவம் யாருக்கும் கிடையாது என்று நினைக்கிறேன் //
ஹா..ஹா..ஹா.... ரொம்ப இழுத்துட்டேனோ? ;))
கைதியின் டைரியா? நமக்கு யார் டைரி என்றாலும் விருவிருப்பா படிக்க பிடிக்கும்... சீக்கிரமா உங்க டைரியும் படிக்க ஆவல்...
//நான் உங்களின் வாசகன் என்ற பெருமையோடு உங்களின் தளத்தை பின் பற்றி கருத்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.//
இப்படி சொல்லி சொல்லியே உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிட்டாங்களே...
சும்மா வீட்டுல உக்காந்துட்டு சாப்பிட்டு தூங்குற நானே எழுதுறேன்... உங்களால கண்டிப்பா எழுத முடியும். உங்களை பற்றி கூடுதல் தகவல் கிடைக்க வாய்ப்பாக இருக்கும் ;)
@அவர்கள் உண்மைகள்
ReplyDeleteஉங்க கம்யூட்டருக்கும் என் ப்ளாக்குக்கும் அப்படி என்ன நட்பு சகோ?? ஒரே கமெண்ட் 20 முறை வந்துச்சு ;)
ஓக்கே ஓக்கே கூல்..... கூல்.....
உங்க புலம்பல் புரியுது. முடியாதுன்னு தைரியமா சொன்னதுக்கு மிக்க நன்றி... என் ஆதரவு உங்க ப்ளாக்கிற்கு உண்டு (இதுனால உங்க ப்ளாக்குக்கு வராம இருந்துடுவேனோன்னு நீங்க நெனச்சுட கூடாது என்பதற்காக இதை சொல்றேன்)
மிக்க நன்றி சகோ!!!!!!
@வைகை
ReplyDelete// ஆறு செமஸ்டருக்கு ஒண்ணா படிச்ச மாதிரி இருக்குங்கோ! ஆனாலும் நல்லாயிருக்கு!
//
இப்பவாவது படிக்கிற பழக்கம் வந்துச்சேன்னு வரவச்ச எனக்கு பெரிய சிலையா கட்டுங்க வைகை ;))
@ஜெய்லானி தாத்தா
ReplyDelete//ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரேன் ......முதல் மாசமே இன்னும் படிச்சி முடியல.. இன்னும் 11 மாசம் இருக்கு ..இது ஒரு நைட்டில படிச்சி முடியற மேட்டர் இல்ல ... :-))))))))) //
எழுத்து கூட்டி படிக்க இந்த வயசுல சிரமமா தான் இருக்கும். கவலைபடாதீங்க... வாசன் ஐ கேர் இருக்க பயம் ஏன்? ;))
@ஜெய்
ReplyDelete//ஆஆஆஆ......என்னையுமா...??????? விஜியக்கா முதல்ல கூப்பிட்டாங்க ..இப்ப நீங்களுமா....!! பதிவுலகம் தாங்குமா..? ஹி...ஹி.. :-))) //
அப்படியா? அப்ப கண்டிப்பா ஜெய்லானி டைரியை சீக்கிரமா படிக்கலாம் :))
@தினேஷ்குமார்
ReplyDelete//(அப்பவே இந்த மாதிரி படிச்சிருந்தா பத்தாங்கிளாஸ் பாசாகியிருந்திருப்பேனே) //
அட ஏன் கவல படுறீங்க? என்னை மாதிரி படிக்காமலேயே மேதை ஆகிடணூம்னா தமிழ்நாடு ஓபன் யுனிவர்சிட்டி இருக்குல...
@மாணவன்
ReplyDelete//உங்களது டைரி
சுவாரசியமாகவும் யதார்த்தம் கலந்த நகைச்சுவையுடன் சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள்....
டைரி பகிர்வுக்கு நன்றிங்க//
பொறுமையா படிச்சு சொன்னதுக்கு மிக்க நன்றி சகோ
@பாலாஜி
ReplyDelete//எனக்கு எட்டு செமெஸ்டர் மாதிரி இருக்கு.. ஹி ஹி.. :)//
அப்ப விவேகானந்தர் சிலைய நீக்கிட்டு என் சிலையை வச்சுடுங்கோ ;))
//என்னா வில்லத்தனம்? :)//
;)
//குடிச்சு முடிச்சதும் சிகரட் ஊதுற மாதிரி புகை வந்திருக்குமே?! அத பத்தி உங்களவர் ஒன்னும் சொல்லலியா? # டவுட்டு :)/
சுத்தி சுத்தி வந்தாங்க... நானும் சுத்திட்டே மறஞ்சு இருந்ததால என் கொடூர முகத்தை பாக்கும் பாக்கியம் கிட்டாமல் போய்விட்டது ;)
//தேவர் மகன் படத்துல ரேவதி சொன்ன வெறும் காத்து தான் வருதுன்னு சொன்ன வசனம் தேவையே இல்லாம நினைவுக்கு வருதே ஒய் சகோ?! ;)//
ஆஹா...... கமல் சுட்டுட்டாருன்னு நிரூபிக்கும் பதிவுலகில் கமல் பட வசனத்தை சுட்டு போட்டது என் தப்பு தானுங்கோ
@franco tosi
ReplyDeleteவஸ்ஸலாம்....
//சரி, அடுத்தவங்க டைரியை படிக்கிறது தப்பில்லையா? //
நமக்கு அந்த நல்ல பழக்கம்லாம் சுட்டாலும் வராதுங்க!!
//ஒரு மாதம் ஒரு பதிவு என்று வரிசையா பன்னிரண்டு பதிவு போட்டுருக்கலாம்..!//
இந்த மாசம் முதல் உங்க கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் (ஐய்யய்யோ... இதுக்கெல்லாம் மலைல இருந்து கீழ குதிச்சுடாதீங்க;)
@வானதி
ReplyDelete//பாவம். யார் பெத்த புள்ளையோ???// ;))
நீங்களாம் அமெரிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்கால இருந்து வரீங்கள? அதான் அப்படி..... ;) நான் போன போது லொட்டு லொசுக்கெல்லாம் அவங்க கைல தள்ளிவிட்டு ஒரு கையில் கேன்பேக்கும்,ஒரு கையில் மகனும்னு ரொம்ப ஜாலியா போனேன். அதனால அலப்பறைலாம் கொஞ்சமா தான் இருந்துச்சு. உள்ள விக்கிற பொருட்களின் விலையை பாத்து தான் வாழ்க்கையே வெறுத்து போச்சு ;((
@டி.சாய்
ReplyDeleteஎன்னமோ சொல்லவந்தீங்க.... எனக்கு காதும் கண்ணும் சரியா வேலை செய்யாது ;))
@டிசாய்
ReplyDeleteஓ இதானா??
//மூன்றே மூண்று நாட்கள் தான் அப்புரம் எல்லம் வெறுமையான பக்கங்கள் தான் :) //
என்னை மாதிரி எப்பவாது ஞானம் வரும் போது எழுதுங்க.... டெய்லி எழுதுனா எனக்கும் இப்படி தான் ஆரம்பிக்கும் "காலைல எழுத்ந்துருச்சேன், பல் தேய்ச்சேன், காபி குடிச்சேன், பாத்திரம் விலக்குனேன்...." யப்பா முடியல. !!!!!
@சக்தி ஸ்டெடி சென்டர்
ReplyDelete//அப்பாடா ஒரு வழியாக வாசிச்சு முடிச்சிட்டேன்.உங்க டைரி உங்களை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது.
பதிவில் நகைசுவை அருமை//
பெரிய சாதனை படைத்த அருமை சகோ அவர்களுக்கு பொன்மாலை அணிவிக்கப்படுகிறது ;)
டெம்ளேட் கமெண்ட் புரட்சி முடிந்ததும் எத்தனை பாலோவர்ஸ் சேர்ந்தாங்கன்னு சொல்லுங்க... நாங்களும் ரை பண்றோம் ;)
@லெட்சுமிம்மா
ReplyDeleteமிக்க நன்றி லெட்சுமிம்மா
@பானு
ReplyDelete//பாடப்புத்தகத்தைத் தவிர மத்ததெல்லாம் கவர்2கவர் படிப்போம்ல...//
நீங்க என் கட்சி ;)) விளம்பரத்த கூடவிடமாட்டேன் ;))
கண்டிப்பா என்னைவிட 100 மடங்கு அதிகமா எழுதுவீங்க.... உங்க எழுத்துக்கள் அப்படி !!!
@ஸாதிகா அக்கா
ReplyDeleteரொம்ப நன்றிக்கா அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு!!.....
//ஆனால் உங்கள் அளவு எனக்கு ஞாபகசக்தி கிடையாது) //
நானோ சிறுபுள்ளி, நீங்களோ எதுவும் மறைக்கவியலாத சூரியன்.... இப்படி சொல்லலாமா ?:))
@மகாதேவன்
ReplyDelete//2010 டைரிக்கான போட்டி வந்தால் முதலாம் இடம் உங்களுக்குத்தான் சகோதரி//
பரிசு தொகையா கொடுப்பாங்க தானே......
@விக்கி உலகம்
ReplyDeleteமிக்க நன்றி உங்க கருத்துக்கும் வாழ்த்துக்களூக்கும் சகோ!!!
@அரசன்
ReplyDeleteஇவ்வளவு உற்சாகம் கொடுக்குறீங்க... சீகிரமாவே உங்களுக்காகவே 2ம்பாகம் தொடங்கி 100 பாகம் வரை முடிக்கலாம்னு இருக்கென். நீங்க என்ன சொல்றீங்க சகோ ? ;)
@சகோ ஆஷிக்
ReplyDelete//இதில் தொடர் பதிவு போட நிறைய பேருக்கு அழைப்பு வேறு..! இறைவா எங்களை காப்பாற்று..!
//
இதுக்கே உங்கள அழைச்சுருப்பேன்... ஆனா பயம் தான்... ;) ஆனா அடுத்த தடவ மாட்டுவீங்க.... இப்பவே தயாராகிடுங்க ;))
//ஜெயலலிதா பண்ணிய உருப்படியான மூன்றே மூன்று காரியங்களில் இந்த அசிங்கங்களை தமிழநாட்டில் ஒழித்ததும் ஒன்று.
//
லாட்டரி தெரியும்... மத்தது என்ன சகோ...?? உங்க அளவுக்கு நமக்கு நாட்டுநடப்பு, அரசியல் தெரியாது ;)
என்னமோ ஹிந்தில சொல்றீங்க... இப்பன்னு பாத்து என் மொழிபெயர்ப்பாளர் இல்லையே....... மோசில்லா பயர்பாக்ஸ் யூஸ் பண்ணி பாருங்க!!!!
@பிரஷா
ReplyDelete//ஆமினா தொடர்பதிவுக்கு என்னை அழைத்துள்ளீர்கள்..விரைவில் பதிவிடுகின்றேன் ... நன்றி ஆமினா..//
மிக்க நன்றி தோழி
டைரி குறிப்புகள் செம சுவாரஸ்யம் ஆமி..கொஞ்சம் கொஞ்சம் அறுசுவையில் நீங்க அப்டேட் பண்ணி இருந்தாலும் கோர்வையா படிக்கும்போது நல்லாவே இருந்தது...சூப்பர் ஆமி...
ReplyDelete@ஜெய்
ReplyDelete//இவ்வளாவு பெரிய கட்டுரையாஆஆஆஆஆஆஆ......நா பரிட்சைக்கு கூட இவ்வளவு படிச்சது இல்லை......அவ்வ்வ்வ்வ்வ்வ்//
அட நீங்க எப்ப ஸ்கூல்க்குலாம் போனீங்க???
@ஆனந்தி
ReplyDelete//டைரி குறிப்புகள் செம சுவாரஸ்யம் ஆமி..கொஞ்சம் கொஞ்சம் அறுசுவையில் நீங்க அப்டேட் பண்ணி இருந்தாலும் கோர்வையா படிக்கும்போது நல்லாவே இருந்தது...சூப்பர் ஆமி..//
அப்படியா ஆனந்தி.....
ரொம்ப நன்றி டா.....
good post
ReplyDeleteசும்மா அசத்திட்டிங்க ,நல்ல பகிர்வு.
ReplyDeleteஉங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎவ்வளவு விசயங்கள்..
நல்ல ஃப்ளோல எழுதியிருக்கீங்க..
தொடர்ந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
இப்போதைக்கு...
ReplyDelete:)
//"கிறுக்கி முடித்த பக்கங்களை திரும்பவும் புரட்டி பார்க்கிறேன்"//
ReplyDeleteஅட ஆண்டவா.
எடுத்தவொடனே பஞ்ச் டயலாக்கா...
//நடுவுல நிக்கும் போது என்னமோ எல்லாரும் நான் தப்பு பண்ண மாதிரி பாத்தத பாக்கும் போது கூச்சமா இருந்துச்சு.//
ReplyDelete10 நிமிஷமா நடுரோட்ல நின்னா அப்டிதான் பாப்பாங்க......
//ஐய்யய்யோ தொலஞ்சு போக போறோமேன்னு பயம்//
ReplyDeleteகலிகாலங்க...அப்டியெல்லாம் நல்லது எங்க நடக்குது
//எங்கக்கா ஆத்துக்காரர்கிட்ட ஹீரோ யாருங்க மச்சான்? புதுசா இருக்கான்ல. ஹீரோயின் என்ன லட்சணத்துல இருக்கா? நடிக்கவே தெரியல. புதுசுகள போட்டா இப்படி தான் //
ReplyDeleteஹா..ஹா..ஹா.....
டோட்டல் டாமேஜ்..
//காரின் ஏசி கூட சுட ஆரம்பித்தது//
ReplyDelete:(
//இந்த கருமாந்திரம் புடிச்சவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறதுக்கு எங்க பொண்டாட்டி புள்ளைங்க ஒரு நாளைக்கு பட்னி கெடக்கணும்//
ReplyDeleteஉண்மையான வார்த்த...
//கண்டக்டரும் கண்டுக்கல//
ReplyDeleteஎல்லாம் பயம் தான்.
//ஒரு வழியா சென்னை டூ டெல்லி, டெல்லி டூ லக்னோன்னு போய் சேந்தாச்சு.//
ReplyDeleteஇப்ப எப்டிங்க...? முந்தி இந்த ரூட்ல போனாலும் 12 மணி நேரம் ஆகும்.
//"இல்லையே மார்கழில ஐஸ் சாப்பிடுறது பிடிச்ச மாதிரி உச்சி வெயில் நேரத்துல சூடா காப்பி குடிக்கிறது எனக்கு புடிக்கும்"னு கப்பல் ஏற இருந்த மானத்தை நங்கூரமிட்டு நிறுத்தி தப்பிச்சதும்//
ReplyDeleteஷாம் அப்பா, நோட்...... நோட்.... நோட்
//அடுத்த வருசமும் அதே மதுரை, அதே பஸ் பயணமான்னு நெனச்சு ஒரே கவலை.//
ReplyDeleteசென்டர மாத்தமுடியாதுங்களா.... லக்னோவுக்கு....?
//பேஸ்புக்ல ஒரு பிரண்ட் மெசேஜ் அனுப்புனாங்க ஏன் நீங்க ப்ளாக் ஆரம்பிக்க கூடாதுன்னு//
ReplyDeleteஹே...ஹெ....ஹே..... இப்டியெல்லாம் வேற பில்டப்பா...? நம்ப முடியலயே....?
(உண்மையா இருந்தா அவங்க ஊர் பேர் சொல்லுங்க, சூன்யம் வைக்க ஒரு குருப்பா அலையிறோம்....
//அது என்ன டீ கடையா இல்ல பொட்டிகடையா ? ன்னு திட்ட ஆரம்புட்டாப்ல. //
ReplyDeleteதப்புங்க. இந்த விஷயத்துல அவரு இப்டி பண்ணியிருக்க கூடாதுங்க. (சும்மா திட்டிட்டு, அலவ் பண்ணிடாரு. அவர் ரொம்ப கடுமையா நடந்து தடா போட்டிருந்தா, நாங்க இப்டி பொலம்புற நெலம வந்திருக்குமா. Better late than never, ஷாம் அப்பா எங்கள காப்பாதுங்க)
//டிசம்பர் மாச மளிகை சாமான் லிஸ்ட் எழுதி கிழிச்சு வாங்கிட்டு வர பேப்பர் ஒன்னு கூட இல்ல.//
ReplyDeleteஅத்தேன....என்னடா நல்லபடியாவே போகுதே....உங்க வேலய காட்டாம இருக்கீங்களேன்னு பாத்தா....
பினிஷிங் கமெண்ட்.....
ReplyDeleteநா இத்தன கமெண்ட் போட்டேங்குறதுக்காக நீங்க ஒவ்வொண்னுத்துக்கும் தனிதனியா பதில் போட்டு பின்னூட்டம் படிக்குறவங்கள படுத்த கூடாது.
ஆமினா said...
ReplyDelete@மகாதேவன்
//2010 டைரிக்கான போட்டி வந்தால் முதலாம் இடம் உங்களுக்குத்தான் சகோதரி//
பரிசு தொகையா கொடுப்பாங்க தானே......
3 January 2011 20:01
100%
http://kekkepikkuni.blogspot.com/2011/01/blog-post.html
ReplyDeleteஇங்கே பார்க்கவும் .
ஆமினா கோபம் வரும் போது டைரி எழுதுவீங்களா! அப்போ என் பேரு உங்க டைரில இருக்கா?? ;)
ReplyDeleteநெடிய பதிவு.. ஆனா சுவாரஸ்யமா இருக்கு உங்க பதிவுகளைப் படிக்க! அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்மா! :)
@வார்த்தைகள்
ReplyDelete//அட ஆண்டவா.
எடுத்தவொடனே பஞ்ச் டயலாக்கா...//
அட எதுக்கு அவர கூப்பிடுறீங்க? விஜய் சொன்னா ஒத்துப்பீங்க... நாங்க சொன்னா நெஞ்சம் பொறுப்பதில்லையோ...... ;))
//10 நிமிஷமா நடுரோட்ல நின்னா அப்டிதான் பாப்பாங்க......//
ReplyDeleteஅனுபவம் பேசுதோ????
//கலிகாலங்க...அப்டியெல்லாம் நல்லது எங்க நடக்குது//
கலிகாலம் என்பதால் தான் தொலஞ்சு போகல ;)ரொம்ப தான் ஆசை அப்பள வட ;))
//ஹா..ஹா..ஹா.....
ReplyDeleteடோட்டல் டாமேஜ்..//
அடுத்தவரின் டாமேஜில் சந்தோஷம் கொள்ளும் நீங்க தான் வரும் தேர்தலில் போட்டியும் வாக்கெடுப்பும் நடக்காமல் தேர்தெடுக்கப்படும் முதல் முதலமைச்சர்... உங்களுக்கு அதுக்காக எல்லா தகுதியும் இருக்கு சகோ...
//எல்லாம் பயம் தான்///
ReplyDeleteஎன் மேலேயா? ;))
//இப்ப எப்டிங்க...? முந்தி இந்த ரூட்ல போனாலும் 12 மணி நேரம் ஆகும்.//
ReplyDeleteசென்னை டூ டெல்லி 3 மணி நேரம் பயணம்.
அடுத்து டெல்லி டூ லக்னோ 35 நிமிஷ பயணம் (நான் போகும் போது புழுதி புயல் வீசியதால் இறங்க 15 நிமிடம் தாமதமானது. இல்லையேல் வழக்கம் போல 20 நிமிஷம் தான்)
இன்னும் கொஞ்ச நாள்ல இன்டர்நேஷனல் ஆக்க போறாங்க. விரிவாக்கப்பணி வேகமா நடந்துட்டு வருது.
//ஷாம் அப்பா, நோட்...... நோட்.... நோட்//
ReplyDeleteஒரு குயர் நோட்டா? 2 குயர் நோட்டா? அல்லது
லாங் சைஸ் நோட்டா? ஸ்மால் சைஸ் நோட்டா? அல்லது
ரூல்ட் நோட்டா? அன்ரூல்ட் நோட்டா?
எந்த நோட்டு வேண்டும்னு சொல்லவே இல்லையே சகோ??? அதுவும் 3 நோட் வேற கேட்டுருக்கீங்க.... ஒரே கவலையா இருக்கு ;(.... சிக்கிரம் சொல்லுங்க ;))
//சென்டர மாத்தமுடியாதுங்களா.... லக்னோவுக்கு....?
ReplyDeleteஇந்த பக்கம் வாரணாசி, அந்தபக்கம் அலகாபாத் மேலே போனா டெல்லி.... நடுவுல எங்கேயும் வரல :( மதுரைன்னா அத சாக்கா வச்சு அம்மா வீட்டுல 3 மாசம் என்ஜாய் பண்ணலாம்னு தான் :))
//உண்மையா இருந்தா அவங்க ஊர் பேர் சொல்லுங்க, சூன்யம் வைக்க ஒரு குருப்பா அலையிறோம்....//
ReplyDeleteசொன்னேனே... முன்னமே சொன்னேனே... நீங்க தான் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவருன்னு சொன்னேனே.... இப்பவாவது ஒத்துக்குறீங்களா? இப்படிலாம் சூனியம் வச்சு தான் ஆட்சி புடிக்க முடியும்... சீக்கிரம் சீறிபாய தயாராகுங்க ப்ரதர்...
//தப்புங்க. இந்த விஷயத்துல அவரு இப்டி பண்ணியிருக்க கூடாதுங்க. (சும்மா திட்டிட்டு, அலவ் பண்ணிடாரு. அவர் ரொம்ப கடுமையா நடந்து தடா போட்டிருந்தா, நாங்க இப்டி பொலம்புற நெலம வந்திருக்குமா. Better late than never, ஷாம் அப்பா எங்கள காப்பாதுங்க)//
ReplyDeleteஅது மட்டும் முடியாதுல.......
அடுத்தவங்க துன்பத்துல இன்பம் காண்பதை போல் பிரிதொறு இன்பம் இதுவரை கண்டிலேன்.....
//அத்தேன....என்னடா நல்லபடியாவே போகுதே....உங்க வேலய காட்டாம இருக்கீங்களேன்னு பாத்தா....//
ReplyDelete;))
//பினிஷிங் கமெண்ட்.....
ReplyDeleteநா இத்தன கமெண்ட் போட்டேங்குறதுக்காக நீங்க ஒவ்வொண்னுத்துக்கும் தனிதனியா பதில் போட்டு பின்னூட்டம் படிக்குறவங்கள படுத்த கூடாது.//
இப்படி சொன்னதுக்கு பிறகும் சொல் பேச்சை தட்டாம இருப்பேனா??? இனி போடுர கமெண்ட்க்குலாம் பின்னூட்டம் போட மாட்டேன் சகோ... நீங்க வேண்டா ட்ரை பண்ணி பாருங்க!!!
@மகாதேவன்
ReplyDelete//ஆமினா said...
@மகாதேவன்
//2010 டைரிக்கான போட்டி வந்தால் முதலாம் இடம் உங்களுக்குத்தான் சகோதரி//
பரிசு தொகையா கொடுப்பாங்க தானே......
3 January 2011 20:01
100%//
என்னங்க வெறும் 100%ன்னு சொல்லிட்டு அடுத்து எதுவும் போடாம விட்டுட்டீங்க? அதை என்னன்னு எடுத்துக்க? அடியா? உதையா? உண்மைக்குமே பணமா? ;)
@பலே பாண்டியா
ReplyDeleteகண்டேன்......படித்தேன்.....ரசித்தேன்......
@சாந்தினி
ReplyDeleteசாந்தினி எதுக்கு உங்க பேரு? ஓ பட்டி மன்றத்த சொல்றீங்களா? பேசும் போது மட்டும் தான் கோபம் வரும் (எல்லாம் மேடை பேச்சாளர்களை பார்த்து கத்துக்கிட்டது தான்). மத்தபடி பட்டி மன்ற விவாதம் வேற, நிகழ்கால நிகழ்வுகள் வேற... சாந்தினி மேல தனி மதிப்பே இருக்கு!!!!!
அடிக்கடி வாங்க சாந்தினி
//இப்படி சொன்னதுக்கு பிறகும் சொல் பேச்சை தட்டாம இருப்பேனா??? இனி போடுர கமெண்ட்க்குலாம் பின்னூட்டம் போட மாட்டேன் சகோ... நீங்க வேண்டா ட்ரை பண்ணி பாருங்க!!..//
ReplyDeleteமறுமடியும் முதல்ல இருந்தா.....!!!!!!!!
நா இல்ல இந்த ஆட்டைக்கு....
@வார்த்தை
ReplyDelete;)
பொறுமை இல்லை
ReplyDeleteமுன்று பகுதியா பிரித்து படித்து கொள்கீரேன்.
எந்த தடிமாடும் இடங்கொடுக்கலையா.
டிக்கெட் எடுத்துட்டா, அந்த சீட்டு அவர்கலுக்கும் மட்டும் தான் சொந்தம்
நானும் முதல் முதல் அலாஹா பாத் வந்த போது அஙக் அங்க சிவப்பு பெயிண்ட்,எருமை மாடுக|ள் போல அங்க் அங்க உச்சா..
ReplyDeleteஏன் தான் இன்னும் அந்த ஊர் அப்படி இருக்குன்னு தெரியல
ReplyDeleteஅப்படியே யாரும் பார்க்கிரார் கள் என்று கூட தெரியமா, உச்சா போய் கொண்டு இருக்கிறார்கள்.
smartahhh sweetahhhhh superbbahhhhhhh irukunka.
ReplyDeleteசலாம் ஆமி அப்பாடாஒருவழியா படிச்சு முடிச்சுட்டேன் நிறைய எதிர் பார்த்தேன் ச்ப்புன்னு போச்சு(நமக்குல்லாம் அடுத்தவீட்டு விசயம்னா அல்வா திங்ரமாதிரி சீரியல் மாதிரி கொண்டுபோவேன்னு பார்த்தா???போடா)
ReplyDeleteஉண்மைக்கே ந்ல்லா இருந்த்து எழுத்தில் உன்நகைச்சுவை அமர்க்கள்ம் இப்பணி மென்மேலும் வளரவாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...,
ReplyDeleteநலமா?இதோ உங்கள் பக்கத்தை தேடி கண்டுபிபிடிச்சு வந்துட்டோமுல்ல.... ரொம்ப நல்லா இருக்கு உங்கள் பதிவுகள்.நிஜமாவே ஒரு வருட நினைவுகளை பொருமையா யோசித்து எழுதுவது(ஸாரி டைப் செய்வது)சுலபமில்லை.நல்லா தெளிவாக இருக்கு.இனி ஒவ்வொன்றாக பார்வையிட்டு கருத்து தெரிவிக்கின்றேன் சரியா...ஆமின....?
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.
ungal 2010 varudam payanam miga swarisyamaaga irunthathu!
ReplyDeletesila varigal manathai thottana!!!
ungal payanam thodara vaalthugiren!
oru siriya kelvi?
neengal diary eppadi vadivamaitheergal!
athil oru azhagiya flash bak pogum
varigal athuvum tamilil eppadi?
@அன்பு செல்வம்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி அன்பு செல்வம்
சேவ் பண்ண போட்டோ மேல ரைட் கிளிக் பண்ணா Edit என்ற ஆப்ஷன் இருக்கும். அதுல போனா பெயிண்ட்ல கொண்டு வந்து நிப்பாட்டும் ;) அங்கே நமக்கு பிடிச்ச மாதிரி வாசகம் வச்சுக்கலாம்(nhm tamil writer உதவியோட)...
டைரி சூப்பர் ஆமினா. நீங்க தினமும் டைரி எழுதுவீங்களா? எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருந்து மிக நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.இப்போதான் ஒவ்வொன்றாக{உங்க பதிவுகள்}படித்துக்கொண்டுவருகிறேன். நன்றி.வாழ்த்துக்கள்.
ReplyDelete