நன்றி-கூகுள் |
நம்மளே ஏதோ கையில என்ன மசாலா பாட்டில் வருதோ அதுல உள்ளத எண்ணெயில கொட்டி சமைக்கிற கேஸ். கேஸ் இல்லாட்டி 10 நாள் சமைக்கலன்னா கஷ்ட்டப்பட்டு கத்துகிட்ட சமையலும் மறந்துடுமோன்னு மனசுக்குள்ள பயம். (கெட்டதுலையும் நல்லதுனா இது தான். கேஸ் வராத நாட்களில் எல்லாம் ஹோட்டல் சாப்பாடு;).
இன்னைக்கு விடவே கூடாதுன்னு வாசல்ல சேர் போட்டு மொபைல்ல
பாட்டை தட்டிவிட்டு போற வரவங்களையெல்லாம் வேடிக்கை பாத்தேன். அவங்களும் தான் என்னைய ஒரு லுக் விட்டுட்டே போனாங்க. இதெல்லாம் பாத்தா முடியுமா? நமக்கு தேவை இன்னைக்கு சிலிண்டர். வரலைன்னா கைல மாட்டுறவங்கள அவங்களுக்கு தெரியாத பாஷைலையே திட்டணும். இதான் நம்ம ப்ளான். நம்ம ப்ளான் சூரியனுக்கு யார் சொல்லி கொடுத்தான்னு தெரியல. ரொம்ப நாளா வராதவுக நான் வந்ததும் நலம் விஷாரிச்சுட்டு எதிரிலேயே ரொம்ப நேரம் டேரா போட்டாக. இதுக்குலாம் மசிவோமா??? கொள்கை தான் முக்கியம்.
நன்றி கூகுள் |
அப்ப தான் நேத்து அந்தம்மா என்கிட்ட கேஸ் காலியாகிடுச்சு புதுசு இருக்கா? இன்னைக்கு தான் பதிவு பண்ணேன். 1 வாரத்துல வந்ததும் கொடுத்துடுறேன்னு கேட்டுட்டு போன ஞாபகம் வந்துச்சு. இதுக்கு மேல எதாவது மூளைக்கு வேலை கொடுத்தா பியூஸ் போய்டும்னு அடுத்து எதை பத்தியும் யோசிக்காம வேக வேகமா கிச்சன்ல போய் ஒரு தட்டு எடுத்துட்டு அதுல பத்து முருக்கும் வச்சு அவுங்க வீட்டு வாசல்ல போய் நின்னேன். தலைக்குள்ள அந்த பக்கம் இந்த பக்கம்னு ஏதோ உருளுற மாதிரி இருந்துச்சு.(இன்னும் கொஞ்ச நேரத்துல மேட்டர் என்னான்னு தெரியலன்னா வெடிச்சுடும்னு சிக்னல் காட்டுறாங்களாம்)
யக்கோவ்...நேத்து தானே காலியாச்சுன்னு பத்ர காளி மாதிரி உன் மருமகள்கள காலி பண்ணிட்டு இருந்த? 1 வாரம் ஆகும்னு சொன்ன?இப்ப எப்படி வந்துச்சு?ன்னு ஆரம்பிச்சதும் தான் தலை அமைதியும் சாந்தியும் அடைந்தது. அட தெரியாதா உனக்கு? எக்ஸ்ட்ரா பணம் கொடுத்தா உடனே கொடுத்துட போறான்....!!ன்னு காக்க வைக்காம பட்டுன்னு ரகசியத்த புட்டு வச்சுட்டாங்க.
இவர் தான் அவர்;) |
நமக்கு ஒதுக்கப்பட்டிருந்தும் அந்தந்த இடத்துக்கே நேராக போய் எடுத்துட்டு வரணும் மேல உள்ள படத்துல உள்ளது போல. ஆனா பணம் நீட்டுனா ராஜமரியாதை
என்னது? நானா?சமையலுக்கு என்ன செஞ்சேனா? எலக்ட்ரிக் ஸ்டவ், எலக்ட்ரிக் ரைஸ்குக்கர், ஓவன், இன்டக்ஷன் ஸ்டவ்,காப்பி மேக்கர்ன்னு இருக்கு... ஆனாலும் மின்சார சிக்கனம் தேவை இக்கணம்னு EB கார்ட் ல எப்ப அந்த வாசகத்தை படிச்சேனோ அப்ப இருந்தே அதை கடைபிடிக்குற ஆள். மதியத்துக்கு சிக்கன் பிரியாணியும், கபாபும் ஆர்டர் பண்ணியிருக்கேன். எத்தன நாளானாலும் கேஸ் இல்லாம சமைக்க மாட்டோம்னு முடிவே பண்ணி கொல்ல காலமாச்சு ;)
பின்குறிப்பு: அங்கே தான் வேலை பாக்குறேன். நானெல்லாம் அப்படி இல்லைன்னு சொல்றவங்களுக்கு பெரிய கும்புடு. ஏன்னா நான் சொன்னது உங்கள பத்தி இல்ல. சம்பளமும் போதாதென கிம்பளம் எதிர்பாக்கும் பிறவிகளுக்கு.
Tweet | ||||
இது எல்லா ஊர்லயும் ரொம்ப சகஜம். முக்கியமா, ஹோட்டல்களில் இது வாடிக்கை
ReplyDeleteமின்சாரத் திருட்டும் சிலிண்டர் பதுக்கலும் சர்வசாதாரண நடைமுறையாக இதுபோன்ற தட்டுப்பாட்டுக் காலங்களிலும்கூட சகல ஆசீர்வாதத்துடன் தொடர்வது வேதனை.....
ReplyDeleteதிருடர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பெரிய திருடர்கள் திருடர்களை ஆள்வதே ஜனநாயகம்... எல்லாருமே திருடங்கதான்..
மீண்டும் ஒரு ப்ராக்டிகலான பதிவு... வாழ்த்துக்கள்
நான் வேனில் வர்ற சிலிண்டர் தான் பார்த்து இருக்கேன்.சைக்கிளில்,ஆட்கள் தூக்கிட்டு வர்றது இதெல்லாம் நடக்குதா?டபுள் சிலிண்டர் இருந்தால் மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.முதல் சிலிண்டர் காலியானால் இரண்டாவதை மாட்டினால் இரண்டாவது காலியாவதற்குள் அப்ளை செய்தது எப்படியும் 1 மாதத்திற்குள் வந்திடும்ல.எல்லாம் விஷயத்தில் தான் இருக்கு போல. பகிர்வு அருமை.
ReplyDeleteஆம்ஸ்..மீண்டும் சூப்பர் பதிவு...இங்கே எங்க ஊரில் பகுதி நேர/குடிசை தொழில் ஏது தெரியுமா..இப்படி சிலிண்டர் விக்கிற பையன்ட சிலிண்டர் 200 கொடுத்து வாங்கி..அதை பதுக்கி வச்சிகிறது...ஹோட்டல் காரங்களுக்கு இக்கட்டான நேரத்தில் இவங்ககிட்டே அதிக பணம் கொடுத்து வாங்கிப்பாங்க..இப்படி ஒரு குரூப் பே மதுரையில் சுத்துது ஆமி...அவசரத்துக்கு எந்த நேரத்திலும் சிலிண்டர் கிடைக்கும்...ஆனால் செலவு ஜாஸ்தி ஆகும்..:))) ஸோ...சிலிண்டர் வந்தாலும்...காமிசுக்காதிங்க உங்க கணவர்கிட்டே...ஒரு வாரம் கொஞ்சம் நோகாமல் ரெஸ்ட் எடுங்க..என்ஜாய் தங்கமணி...:))..(இது தான் நல்ல சான்ஸ் ஆமி...ஹ ஹ )
ReplyDeleteவிலைவாசி உயர்ந்ததற்கு இந்த மாதிரியான பதுக்கலுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. இதன் விளைவுகளை எல்லோரும் அனுபவிக்க வேண்டிய நிலைமை தான் இப்போது.
ReplyDeleteநீங்க சொன்னது உண்மைதான் பணம் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கொடுத்தா ராஜ மரியாதைதான்..
ReplyDelete//மதியத்துக்கு சிக்கன் பிரியாணியும், கபாபும் ஆர்டர் பண்ணியிருக்கேன். எத்தன நாளானாலும் கேஸ் இல்லாம சமைக்க மாட்டோம்னு முடிவே பண்ணி கொல்ல காலமாச்சு ;)//
ReplyDeleteசரியான கொள்கை.
இந்த கொடுமை இங்கயும் நடந்துட்டு தான் இருக்கு. முதல் சிலிண்டர் வாங்கி 21 நாட்கள் பிறகுதான்
அடுத்த சிலிண்டருக்கு புக் பண்ணனும், அது வர்றதுக்கு 5 நாள் ஆகும். வேற வழி இல்லாம ப்ளாக்குல விக்கிற 700 ரூபாய் சிலிண்டர் வாங்க வேண்டி இருக்கு.
புகார் மின்னஞ்சல் அனுப்பி ஒரு பதிலும் இல்லை.
ஸலாம் சகோ,
ReplyDelete/பணம் எக்ஸ்ட்ரா 150 ரூபாய் கொடுத்தா போதும்(சென்னையில் ஒரு சிலிண்டருக்கு 750ரூபாய்ன்னு சங்கம் கூடி நிர்ணயம் பண்ணியிருக்காங்கன்னு சற்று முன் என் அக்காவிடமிருந்து கிடைத்த தகவல்/
என்ன சொல்ரீங்க...நான் பாத்த வரைக்கும் ஒரு சிலிண்டர் ரேட்டே 330 ரூபா தான அதுக்கு..150ரூபா லஞ்சமா? பாதிக்கு பாதி கேட்ட எப்புடி...அதும் 750 ரூபா....எதாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?...
அது சரி..இப்போ சிலிண்டர் ரேட் எவ்ளோ..(அது தெரியாம பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்)என்ன ஒரு 400 ரூபா ஆகிருக்குமா?...
இருந்தாலும்,இதெல்லா ஜாஸ்த்தி,வசதி இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க..
சகோ அன்னியன் ஸ்டைல்ல உங்களைலாம் கவனிக்கனும்..
5 பைசா லஞ்சம் குடுத்தா தப்பா?? அப்டீன்னு....
பாவம் இப்ப்டி வசதி இருக்குரவங்க செஞ்சா,அன்னக்கி தேதிக்கு ஒரு வசதி இல்லாத குடும்பத்துக்கு போகவேண்டிய சிலிண்டர்,அவங்களுக்கு போகாம உங்களுக்கு வந்துரும்..நியாயமா சகோ...
ReplyDeleteமின்சார சிக்கனம் தேவை இக்கனம் எல்லா சும்மா...
தமிழ்நாட்டுல உற்பத்தி ஆகுர மின்சாரம்,தண்ணி தரமேட்டேனுரவனுக்கேல்லாம் தாரவாக்கப்படுது..அது இல்லாம இப்போ இலங்கைக்கு வேர கைமாறுதாம்..
இங்க தன்னிறைவை எட்டாமல் எட்ட இருப்போருக்கு,கொடுப்பதும் இங்க இருக்குரவங்கள காயவக்கிரதும்..கொடுமைகள்..அதுனால மின்சாரத்த தேவைக்கு,நல்லபடியே பயன்படுத்துங்கள்..
வீண்விரையம் எல்லாத்திலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று..
(என்ன இன்னக்கி ரெம்ப பேசுறேன்..ம்ம்/
அன்புடன்
ரஜின்
எங்களுக்கு எல்லாம் முறுக்கு கிடையாதா? கேஸ் வந்தா முறுக்கு சுட்டு அனுப்புங்கம்மா? அட்லிஸ்ட் ஒரு முறுக்கு படமாது போட்டு இருக்கலாமல???
ReplyDeleteபிரபு எம் said... 2
ReplyDeleteமின்சாரத் திருட்டும் சிலிண்டர் பதுக்கலும் சர்வசாதாரண நடைமுறையாக இதுபோன்ற தட்டுப்பாட்டுக் காலங்களிலும்கூட சகல ஆசீர்வாதத்துடன் தொடர்வது வேதனை.....
திருடர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பெரிய திருடர்கள் திருடர்களை ஆள்வதே ஜனநாயகம்... எல்லாருமே திருடங்கதான்..
மீண்டும் ஒரு ப்ராக்டிகலான பதிவு... வாழ்த்துக்கள்
..... நான் சொல்ல வந்த கருத்தை, தம்பி பிரபு அப்படியே எழுதி இருக்காங்க....
பகிர்வு அருமை ஆமீ.. ஊருல இவ்வளவு விசயம் நடக்குதா... ஊருக்கு போயிதான் பாக்கணும். கேஸ் காலியானதும் அப்ளை பண்ணினா ஒரு மாதம் கழித்துதான் கொண்டு வருவானுக.. இல்லைன்னா நாம கேஸ் கம்பெனிக்கு பைக்கில் சென்று எடுத்து வருவேன். இப்ப எல்லாத்துக்கும் பைசாவை நீட்டுனா காரியம் உடனே நடக்குது.. காலம் மாறிப்போச்சி.. நாமும் மாறித்தான் ஆகணும்.
ReplyDeleteநல்ல பகிர்வு ஆமி. வாழ்த்துகள்.
எல்லா இடம்களிலும் இதே கூத்துதான் நடக்குது....என்ன பண்றது...
ReplyDeleteஸலாம் டு யூ சகோ.ஆமினா...
ReplyDeleteஅட..! இதிலே இவ்வளவு விஷயங்கள் வெளிவர வேண்டி இருக்கிறதா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தங்களுக்கு நன்றி. நல்ல அலசல் எல்லாம் இல்லை... கசக்கி பிழிஞ்சு காய போட்டுட்டீங்க.
-----------------------------------
அப்புறம்... ஒரு முக்கிய விஷயம்.
என் பதிவின் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்...
http://www.petitiononline.com/megha00/petition.html
இந்த சுட்டியில் சென்று அந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
சிலிண்டர்ல இவ்வளவு பிரச்சினை இருக்கா..எல்லாமே புதுசா இருக்கே!
ReplyDeleteரைட்டு...!! சிலிண்டரப் பத்தி எழுதி இருக்கீங்க!! இதை எங்க தங்ஸ் பார்வைக்கு ஒப்படைத்து விட்டு, பதிவு நல்லா இருக்கு என்று சொல்லிகிறேங்க!!
ReplyDeleteஅப்போ. நேர்மைன்னா என்ன ஆமினாக்கா :)
ReplyDelete//ஸோ...சிலிண்டர் வந்தாலும்...காமிசுக்காதிங்க உங்க கணவர்கிட்டே...ஒரு வாரம் கொஞ்சம் நோகாமல் ரெஸ்ட் எடுங்க..என்ஜாய் தங்கமணி...:))..(இது தான் நல்ல சான்ஸ் ஆமி...ஹ ஹ ) //
ReplyDeleteஓ... இதுல இந்த மாதிரி சதி வேலை வேற நடக்குதா ....அடிப்பாவிகளா
ஆமினா , ஆனந்தி .....
BE CARE FULL
ரங்கமணிகள சொன்னேன் ....
unkal eluththin nadai rompa arumaiyaka ullathu...
ReplyDeleteஇண்டேன்' சட்ட விதிகள்படி ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக சமையல் எரிவாயு இணைப்புப்பெற உரிமை உண்டு.
ReplyDeleteஅப்படி நீங்கள் தனித்தனியாக இணைப்பு பெற்றுறிந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.
இந்திய அரசும் மாநில அரசும் எரிவாயுவிற்கு அதிக அளவில் மானியம் தந்தும் ப்ரோக்கர்கள் முறைகேடான வழியில் உங்களிடம் அரசு நிர்னியத்த தொகையை விட அதிகமாக வசூலிப்பார்கலேனில் தகுந்த ஆதரங்களோடு அவர்கள் மீது வழக்கு தொடரலாம்.
அப்படி உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வதற்கு அச்சமாக இருந்தால் பொது மக்கள்கள் சார்பில் பொதுநல மனுவை ஒரு வக்கீல் மூலமாகவோ அல்லது ஒரு அமைப்பின் மூலமாகவோ தாரளாமாக நீதிமன்றத்திற்கு எத்தி வைக்கலாம்.
சில பேர்களுக்கு நீதிமன்றங்களுக்கு போவதற்கு அச்சமாகவோ அல்லது வழக்கை நடத்துவதற்கு வசதி இல்லாதப் பட்ச்சத்திர்க்கு இந்த முறையையும் கை ஆளலாம்.
எந்த வழக்காக இருந்தாலும் சொந்தமாக நடத்த வசதி இல்லாதவர்களுக்காக அரசாங்கம் ‘லீகல் எய்டு செல்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இருப்பார்கள். வசதி இல்லாதவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வெற்றித்தேடித் தருவார்கள். சென்னையில் வசிப்பவராக இருந்தால் ‘செகரட்டரி, லீகல் எய்டு செல், உயர்நீதிமன்றம் சென்னை-1’ என்ற முகவரிக்கும், வெளியூரில் வசித்தால் செகரட்டரி, லீகல் எய்டு செல், மாவட்ட நீதிமன்றமென்ற முகவரிக்கும் கடிதம் எழுதுங்கள். செகரட்டரி உங்களை அழைத்து விசாரிப்பார். வழக்கு நியாமானது; வசதி இல்லாதவர் என்று தெரிந்தால் அவரே வக்கீல் ஏற்பாடு செய்வார். செலவுகளை ‘லீகல் எய்டு செல்’ ஏற்றுக்கொள்ளும்.
இப்படி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால் பதுக்கல் பேர்வழிகளையும் ஊழல் பேர்வழிகளையும் அழித்து விடலாம் குற்றம் நிரூபணம் ஆகினால் அந்த பேர்வழிகளுக்கு குறைந்தது ஐந்து வருஷ தண்டனையும் ஐம்பது ஆயிரம் அபராதமும் கிடைக்க வாய்ப்பிருக்கு,அதே நேரத்தில் அந்த சட்டம் மரத்தால் செய்யப்பட்டிருந்தால் ஓட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கு !!!
நல்லதொரு அலசல் வாழ்த்துக்கள் ஆமினா.
நல்ல பதிவுங்க ஆமினா..
ReplyDeleteநம்ம ஊர்ல நிறைய பேர்.. அடிசனல் சிலிண்டர் வாங்கி வைச்சிக்கிட்டு.. அதை வாடகைக்கு கொடுக்கறாங்க.. அவசரத்துக்கு போய் வாங்கிக்க வேண்டியதுதான்.. :-)
நடமாடும் சிலிண்டர் அலுவலகம் (!!) பற்றி நல்லாச் சொல்லியிருக்கீங்க.. :)
ReplyDeleteஇதெல்லாம் சகஜமுங்க.. காசிருந்தா தான் எல்லாம்...
ReplyDeleteஆமி இங்க மும்பைல எல்லாம் பைப்
ReplyDeleteகேஸ்தான். சிலிண்டர் தலைவலியேஇல்லை. ஹா, ஹா,.
மின்சார சிக்கனம் தேவை இக்கணம்
ReplyDeleteஆமி, சிலிண்டரில் இம்பூட்டு இருக்கா. இதெல்லாம் எங்க அம்மாவே முன்னாடி பார்த்துக் கொள்வாங்க. இப்ப இங்கு எல்லாமே வீட்டிற்கு சப்ளை ( மின்சாரம் போல எரிபொருளும் பைப் வழியா ) வருவதால் இதில் இருக்கும் பிரச்சினைகள் தெரியவில்லை. என்ன ஒன்று ஒரு மாசம் பணம் கட்டாவிட்டால் எல்லாத்தையும் நிப்பாட்டி போடுவார்கள்.
ReplyDelete@எல்.கே
ReplyDelete//இது எல்லா ஊர்லயும் ரொம்ப சகஜம். முக்கியமா, ஹோட்டல்களில் இது வாடிக்கை//
உண்மை தான் எல்.கே
வெளிப்படையாக நடந்தும் அரசும் மற்ற துறையினர்களும் கண்டுக்கொள்ளாமல் தட்டுபாடு என அறிக்கை விடுவதை பார்த்தா தான் வெறுப்பா இருக்கு
@பிரபு
ReplyDelete//திருடர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பெரிய திருடர்கள் திருடர்களை ஆள்வதே ஜனநாயகம்... எல்லாருமே திருடங்கதான்..
//
;)
சரியா சொன்னீங்க..
வேதனைக்குரிய விஷயம் தான் சகோ...
ஒருபுறம் யார்யாரோ கொள்ளை அடிக்கிறாங்க. நாங்க 150 லாபம் பாக்குறதுல என்ன மா வந்துட போகுதுன்னு கேக்கும் போது பதில் சொல்ல முடியல
@ஆசியா
ReplyDelete//.சைக்கிளில்,ஆட்கள் தூக்கிட்டு வர்றது இதெல்லாம் நடக்குதா//
எங்க வீட்டுக்கு வரும் போது தான் ஆசியா அதெல்லாம் பாப்பேன். மத்த நாட்களில் வாசல்ல நின்னா போதும் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை போய்ட்டே இருக்கும். இதுல வீட்டுக்கு வீடு வேற போய் கேப்பாங்க. கேஸ் சிலிண்டர் பதிய அந்தந்த ஊர்ல இருக்குற மாதிரி ப்ரூப் கேக்குறாங்க பா. அதுக்குண்டு ஆளை பிடிக்க இல்ல ப்ரூப் வாங்குறதுக்குள்ள அடுத்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ;). அதுனால கொஞ்சம் சிரமம்.
@ஆனந்தி
ReplyDeleteஉங்க ஊர்லையுமா??
என் ஊரிலும் என் கண் முன்பே இந்த கொடுமைலாம் பாத்தேன். ப்லாக்ல சிலிண்டர் வாங்கிட்டு என்னன்னமோ மிஷின் மூலம் பெருசுல இருந்து சின்ன சிலின்டர்க்கு மாத்தி கடைகளுக்கு சப்ளை பண்றாங்க. கேஸ் அடைக்கும் போது கொஞ்சம் கேஸ் லீக் ஆகும். காத்துல மிதந்து நம்ம மூக்கை தொட்டா வாமிட் தான் வரும். எம்.சி கிட்ட சொல்லியும் ஒன்னும்பண்ண முடியல. அப்பறம் போலீஸ் வந்து தான் அப்புறப்படுத்துனாங்க
//ஸோ...சிலிண்டர் வந்தாலும்...காமிசுக்காதிங்க உங்க கணவர்கிட்டே...ஒரு வாரம் கொஞ்சம் நோகாமல் ரெஸ்ட் எடுங்க..என்ஜாய் தங்கமணி...:))..(இது தான் நல்ல சான்ஸ் ஆமி...ஹ ஹ )//
கண்டிப்பா உங்க தங்கைன்னு நிருபிக்காம விடமாட்டேன் செல்லம்
2ல ஒரு கை பாத்துட்டு தான் மறு வேலை..
நம்மளும் எப்ப தான் கால் மேல கால் போட்டு சாப்பிடுறது? ;)
@பாரத் பாரதி
ReplyDelete//விலைவாசி உயர்ந்ததற்கு இந்த மாதிரியான பதுக்கலுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. //
கண்டிப்பா பாரதி. அதுவும் தட்டுப்பாடு நேரத்தில் இவர்கள் நிர்ணயிக்கும் விலை இருக்கே....
சொந்தமா அமெரிக்காக்கு க்கூட போய்ட்டு வரலாம் ;)
@தொப்பி தொப்பி
ReplyDelete//வேற வழி இல்லாம ப்ளாக்குல விக்கிற 700 ரூபாய் சிலிண்டர் வாங்க வேண்டி இருக்கு.//
உண்மை தான் அண்ணா.. நம்ம நினைக்கிற நேரத்துக்கு கொண்டுட்டு வர மாட்டாங்க. அலையா அலையுறதுக்கு இப்படியே வாங்கிட தான் பெட்டர்ன்னு கூட தோணும். ஆனா அநியாயமா இத்தகைய திருட்டுகளூக்கு ஏன் துணை போகணூம்னு கஷ்ட்டபட்டாவது நாட்களை கழிக்கிறது. இந்த அக்கபோருக்கு தான் என் அம்மா இன்னுமே சிலிண்டர் வாங்காம கரண்ட் உதவியில் சமைக்கிறாங்க (இலவசமா கொடுத்த கேஸ் கூட வேண்டாம்னு சொல்லி ;)
@சகோ ரஜின்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? அப்படி கொள்ளையடிக்கிறாங்க சகோ...
லக்னோல இருக்குற ஏமாத்துற மக்கள் கூட ஏமாளிகளா இருக்குறதுனால தான் 320 ரூபாய் சிலிண்டருக்கு கூடுதலா 150 ரூபாய் கேக்குறாங்க. சென்னையில் 320 சிலின்டருக்கு 750 ரூபாய் கொடுத்தா அடுத்த நிமிஷம் நம்ம வீட்டு வாசல்ல நிக்கும்...
எதுக்கும் துபாய்ல இருந்து ஊருக்கு வரதா இருந்தா நல்லா யோசிச்சுட்டு வாங்க ;)
@சகோ ரஜின்
ReplyDelete//சா,அன்னக்கி தேதிக்கு ஒரு வசதி இல்லாத குடும்பத்துக்கு போகவேண்டிய சிலிண்டர்,அவங்களுக்கு போகாம உங்களுக்கு வந்துரும்.//
அதுனால தான் எனக்கு வர லேட்டாகுதா சகோ ;)
என்னமோ தெரியல, இந்த கரண்ட் ஐட்டம்லாம் என்னை மட்டுமே சாக் அடிக்கிற மாதிரி பீலிங் (பக்கத்துவீட்டுல உள்ளவங்களாம் விருந்து நேரத்துல வாங்கிட்டு போய் யூஸ் பண்ணுவாங்க. ஆனா ஒன்னுமே ஆகாது) ஒரு வேளை எனக்கும் அதுக்கும் எதாவது பழைய பாக்கியான்னு தெரியல. அதான் மேல தூக்கி போட்டுட்டேன் (சமைக்காம ரெஸ்ட் எடுக்குறதுக்கு சொல்ற சாக்கு;)
@அவர்கள் உண்மைகள்
ReplyDelete//எங்களுக்கு எல்லாம் முறுக்கு கிடையாதா? கேஸ் வந்தா முறுக்கு சுட்டு அனுப்புங்கம்மா? அட்லிஸ்ட் ஒரு முறுக்கு படமாது போட்டு இருக்கலாமல???//
அடப்பாவமே.... ;))
@சித்ரா
ReplyDeleteநன்றி சித்ரா
@ஸ்டார்ஜன் அண்ணா
ReplyDeleteஇங்கேயும் அதே கொடுமை தான் அண்ணா..
பதிவு பண்ணிட்டு நாம்ம தான் அலையணும். அவங்க இடத்துக்கு போய்ட்டு நாம்ம தான் தூக்கிட்டு வர மாதிரி இருக்கு நிலமை... பணம் பத்தும் செய்யும் ;)
@ஹாஜா
ReplyDelete//எல்லா இடம்களிலும் இதே கூத்துதான் நடக்குது....என்ன பண்றது...//
தட்டி கேக்க வேண்டியவங்களே வேடிக்கை பாக்கும் போது என்னத்த சொல்றது?
@சகோ ஆஷிக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
நன்றி சகோ
நானும் என்னவரும் கையெழுத்திட்டாச்சு;)
@ஜீ
ReplyDeleteமுன்னபின்ன....
ஹா...ஹா..ஹா...
ஊர் பக்கம் வந்து எத்தன நாளாச்சு சகோ? :)
@அப்துல் காதர்
ReplyDelete//ரைட்டு...!! சிலிண்டரப் பத்தி எழுதி இருக்கீங்க!! இதை எங்க தங்ஸ் பார்வைக்கு ஒப்படைத்து விட்டு, பதிவு நல்லா இருக்கு என்று சொல்லிகிறேங்க!!//
ரைட்டு....
@சினேகிதன் அக்பர்
ReplyDelete//அப்போ. நேர்மைன்னா என்ன ஆமினாக்கா :)//
கேள்விக்குள்ளையே விடைய வச்சுட்டு என்கிட்ட கேட்டா எப்பூடி அக்பரண்ணா ;)
நேர்மைன்னா ஆமினா
ஆமினான்னா நேர்மை
இரண்டும் நகமும் சதையும் போல. பிரிக்கவே முடியாது
@வார்த்தை
ReplyDeleteயாராவது யாருக்கவது நல்லது சொன்னா பிடிக்காதே ;)
@ஜனா
ReplyDeleteமிக்க நன்றி ஜனா
@அந்நியன்
ReplyDeleteநீங்க வக்கீலா??? ட்ராபிக் ராமசாமியா இல்ல அவருக்கு அஸிஸ்..???
தீர்வுகள் எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுருக்கீங்களே....
கண்டிப்பாக எல்லா மக்களும் பயனடைய கூடிய தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி அந்நியன்
@பதிவுலகில் பாபு
ReplyDeleteஇதுல வாடகை வேறையா??
இப்ப தான் இதை கேள்விபடுறேன் ;)
@இளங்கோ
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@வெறும்பய
ReplyDeleteம்ம்...
காசிருந்தா காசிய கூட வாங்கலாம் ;)
@லெட்சுமிம்மா
ReplyDeleteஅப்படியா? இந்தியாவுல வந்துடுச்ச்சா??? நான் மலேசியாவில் பாட்துருக்கேன். இங்கே வந்த விஷயம் இப்ப நீங்க சொல்லி தான் தெரியுது (நமக்கு அந்தளவுக்கு நாட்டுநடப்பு தெரியல;)
@பர்கான்
ReplyDelete;)
@வானதி
ReplyDelete//என்ன ஒன்று ஒரு மாசம் பணம் கட்டாவிட்டால் எல்லாத்தையும் நிப்பாட்டி போடுவார்கள்//
அதுக்கு இத்வே பரவாயில்ல வானதி...
அது இல்லைன்னா இதுன்னு வாழ்க்கை போயிட்டே இருக்கு ;)
@கவிதை காதலன்
ReplyDeleteஉண்மை தான் சகோ....
இப்பலாம் கைல காசு இல்லைன்னா ஒன்னும் பண்ண முடியாத சூழ்நில :(
நல்ல பகிர்வு ஆமினா.
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.
ஆமினா நீங்கள் அழைத்த தொடர்பதிவினை பதிவிட தாமதமாகின்றது மன்னிக்கனும் ஆமினா. விரைவில் பதிவிடுகின்றேன்..
இங்கெல்லாம் பைப் கேஸ்தான், ஒரு கல்யாண விருந்தே நடத்தினாலும் கேஸ் காலியாகாது. மும்பைல பைப் கேஸ்தான் யூஸ் பண்றாங்கன்னு லக்ஷ்மி அம்மா சொல்றத கேட்டவுடன் நம்ம ஊர் பக்கமும் அது மாதிரி வந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது. அதற்கு இன்னும் எத்தனை வருஷங்கள் ஆகுமோ..?!
ReplyDeleteஇதுல வேற வீட்டுக்கே காஸ் வருதாம். அதுக்கு எவ்ளோ கேப்பானுங்கனு தெரியல
ReplyDeleteஊரில் ஒரு மாத்ம, 15 நாள் ஆகும்
ReplyDeleteபைசா கொடுத்தா உடனே கிடைக்குமா
இங்கு கேஸ் காலியானதும் போன் செய்தா உடனே வ்ந்துடும்,
@பிரஷா
ReplyDeleteபரவாயில்ல பிரஷா
நேரம் கிடைக்கும் போது எழுதுங்க...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி
@அஸ்மா
ReplyDelete//இங்கெல்லாம் பைப் கேஸ்தான், ஒரு கல்யாண விருந்தே நடத்தினாலும் கேஸ் காலியாகாது. மும்பைல பைப் கேஸ்தான் யூஸ் பண்றாங்கன்னு லக்ஷ்மி அம்மா சொல்றத கேட்டவுடன் நம்ம ஊர் பக்கமும் அது மாதிரி வந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது.//
நீங்களாம் ரொம்ப குடுத்து வச்சவங்க ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி
@பலே பிரபு
ReplyDelete//இதுல வேற வீட்டுக்கே காஸ் வருதாம். அதுக்கு எவ்ளோ கேப்பானுங்கனு தெரியல//
இப்பவே அந்த கவலை வந்துடுச்சா???
அதுக்குலாம் பணம் கம்மி தான்.. ஆனா ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு காத்திருக்கணும் ;)
@ஜலீலாக்கா
ReplyDelete//ஊரில் ஒரு மாத்ம, 15 நாள் ஆகும்
பைசா கொடுத்தா உடனே கிடைக்குமா
இங்கு கேஸ் காலியானதும் போன் செய்தா உடனே வ்ந்துடும்,//
ம் ஆமாங்க்கா....
எல்ல்லாம் காசு இருந்தா தான் வேலையே நடக்குது :(
திடிர்னு நியாபகம் வந்து பார்த்தேன்.. நிஜமாவே குட்டி சுவர்கம் தான்.. நல்லா அமைச்சிருக்கிங்க.. குட்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteரம்யா கார்த்திக்