போன முறை  கொலவெறியோட நடத்துன தாக்குதல பாத்து எங்க வீட்டு குட்டிபிசாசுங்க "எங்கே தெகிரியம் இருந்தா இந்த பாட்ட பத்தி எழுதுங்க"ன்னு சவால் (அதெப்படி ஆமி?  உங்க வீட்ல உள்ள சிறுசுகளும் உன்னைய மாதிரியே இருக்குதுங்க???)



சரி குட்டீஸ் விருப்பம். நிறைவேத்திடலாம்

அதாவது...
அதாகப்பட்டது....
எப்படி சொல்லி புரிய  வைக்கிறது??
 இந்த பாட்டு கஸ்தூரி ராஜாவின் மகனாகிய, செல்வராகவனின் தம்பியாகிய, ரஜினியின் மருமகனும் (யேய் போதும் நிப்பாட்டு!)


சரி விடுங்க. நமக்கு தெரிஞ்ச ஜென்ட்ரல் நாலேஜ்ஜை மத்தவங்களுக்கும் சேரிங் பண்ணலாம்னு நெனச்சேன் ஹி...ஹி..ஹி..

நேரடியா விஷயத்துக்கு மே ஐ கம்மின்? (எப்ப ஆமி இப்படி திருந்தின??)

தனுஷின் கொலவெறி தாக்குதல் தாறுமாறா எகிறியதன் தொடர்ச்சியா கொலவெறி பாட்டு போலவே ஒரு பாட்டை ரெடி பண்ணார். (பார்ட் 1,2ன்னு நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?). கொலவெறி அளவுக்கு ஹிட் ஆகலைன்னாலும் எல்லோராலும் ரசிக்கப்படுது. என்னை மிகவும் கவர்ந்த வரி என்றால்  ஒன் ப்ளஸ் ஒன்னு  டூவு டூவு.. மொதவரியிலேயே அசத்திட்டாரு தனுசு. ஆமினா போன்றவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமான அவரின்  உயர்ந்த தொலைநோக்கு எண்ணம் முதல் வரியிலேயே பிரதிபலித்தது வியப்புக்குரிய விஷயம்.  அதுக்கு மேல சொல்ல ஓன்னும் இல்ல. நீங்களே பாட்டு கேட்டு நீங்களாவே உங்க ரசனைக்கு தகுந்தபடி ரசிச்சுக்கோங்க (அட பைத்தியமே இத மொதல்லையே சொல்லியிருந்தா உன் மொகத்துலையே முழிச்சுருக்க மாட்டேனே???)

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். இந்த பாட்டும் கொலவெறி ரேஞ்ச்க்கு ஹிட் ஆய்ருந்தா பாரத ரத்னா என்ன nearஆவுறது? ஆஸ்கார், புவிட்சர், கிராமி, க்ளோபல், நோபல்ன்னு ஒலகத்துல இருக்குற எல்லா விருதையும் சச்சின் வீட்டுக்கு அனுப்பியிருப்பாய்ங்க.ஒரு பாட்டுக்காக விருந்துக்கு கூப்ட கூட்டம் இதையும் செய்யும்.. இதுக்கு மேலையும் செய்யும்.

ஆங்க் சொல்ல மறந்துட்டேனே நா படிக்கிற காலத்துல  இந்திய மாநிலங்களை இணைப்பது வேற்றுமையில் ஒற்றுமை ன்னு எங்க டீச்சரம்மா சொல்லி கொடுத்தாங்க. எம் மவன் படிக்கிற காலத்துல சச்சின் தான் 28 ஸ்டேட்ஸையும் ஒட்ட வைக்கும் பசையாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ் (அப்ப ரயில், ப்ளைட்லாம் தேவையில்ல போல ஹி...ஹி...ஹி..)

டிஸ்கி-  ஒன் ப்ளஸ் ஒன் = டூ  தான் வரும். ஆனா டூவு டூவுன்னு 2 தடவ சொல்லியிருக்கார்.  தப்புதப்பா கணக்க சொல்லிகொடுத்ததுக்காக கோர்ட்ல பொதுநல வழக்கு  போடலாம்னு இருக்கேன்.   என்ன சொல்றீங்க ஹி...ஹி...ஹி...

பாட்டுகேட்க

________
ஒரு மகிழ்ச்சியான விஷயம்.  அந்த மாணவனுக்கு உதவி கிடைத்துவிட்டது

, ,

44 comments:

  1. அந்த பாட்டை யு டியுப்பில் இருந்து தூக்கிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளம்பியதே?

    ReplyDelete
  2. பாட்டை இன்னும் கேட்கவில்லை. விமர்சனம் அருமை.

    சகோ.! டீ எப்ப வரும்?

    ReplyDelete
  3. நல்லாவே மொக்கை போடுறிங்களே! மொக்கை ராணி ஆமினா வாழ்க!

    ReplyDelete
  4. @சகோ ஹாஜா

    ஆமா ரிலீஸ் ஆன 2வது நாள் பார்த்தேன். அப்படி ஒரு அறிவிப்பு வந்தது. இப்ப சரியாய்டுச்சு :-)

    ReplyDelete
  5. பாட்டை இன்னும் கேட்கவில்லை. விமர்சனம் அருமை.

    சகோ.! டீ எப்ப வரும்?//

    நன்றிங்க.. :-)

    டீ ????? உங்களுக்கு இல்லாததா??? :-)

    ReplyDelete
  6. @அம்பலத்தார் அண்ணா

    //நல்லாவே மொக்கை போடுறிங்களே! மொக்கை ராணி ஆமினா வாழ்க!//

    ஹி...ஹி...ஹி.. இன்னொரு பட்டமா :-)
    தேங்க்ஸ்கண்ணா

    ReplyDelete
  7. இது உங்க ஸ்டைலில ஒரு கொலைவெறிதான் ஆமினா !

    ReplyDelete
  8. @ஹேமா

    ஏதோ என்னால முடிஞ்சது ஹி..ஹி...ஹி..

    ReplyDelete
  9. என்னத்த சொல்றது??? சொல்ற மாதிரியா இருக்கு......அடப் போங்க ஆமி....

    ReplyDelete
  10. என்னத்த சொல்லச் சொல்றீக....அடப் போங்க ஆமி....

    ReplyDelete
  11. வணக்கம் அக்கா, எங்க வூட்டிலையும், மயக்கம் என்ன பாட்டை ரொம்பவே ரசிச்சு கேட்பாங்க!

    வித்தியாசமான கற்பனைத் திறமைகள் தான் வெற்றியை குடுக்கும் அப்படீன்னு தனுஷ் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். போட்டிக்கு சிம்புவும் ஓர் பாட்டு ட்ரை பண்ணிப் பார்த்தாரு! ஆனா முடியல!

    ReplyDelete
  12. இன்றைய தலைமுறையினரின் ரசனையை பார்த்து மனம்
    கொதிப்படைந்தாலும்..
    இசை என்ற வடிவில் பார்க்கையில்
    ஏற்றுக்கொள்ளத்தான் தோன்றுகிறது..

    ReplyDelete
  13. அதாவது...
    அதாகப்பட்டது....
    எப்படி சொல்லி புரிய வைக்கிறது??
    இந்த பாட்டு கஸ்தூரி ராஜாவின் மகனாகிய, செல்வராகவனின் தம்பியாகிய, ரஜினியின் மருமகனும் (யேய் போதும் நிப்பாட்டு!)://///

    அட, தகவல் புதுஷா இருக்கே! பரீட்சையில கேட்பாய்ங்களா? எதுக்கும் மனப்பாடம் பண்ணி வைக்குறேன்!

    ReplyDelete
  14. Cini koothadikaluku pinna enna vealai.......?
    Ungalathu ponnana time'ai(minsaram eppovathu oru time varumpothu)
    ethai patri potu waste seiyalama aapa?!!!
    :) :) :)

    ReplyDelete
  15. நானும் பார்த்தேன் ஆமினாக்கா :) ஆனாலும் அனுஷ்கா இருந்தும்.... ஏனோ என்னை கவரவில்லை ... ஒரு வேலை நமக்கு கிரிகெட் புடிக்காது என்ரபடியாலோ :((( அவ்வவ்

    ReplyDelete
  16. அதாவது...
    அதாகப்பட்டது....
    எப்படி சொல்லி புரிய வைக்கிறது??
    இந்த பாட்டு கஸ்தூரி ராஜாவின் மகனாகிய, செல்வராகவனின் தம்பியாகிய, ரஜினியின் மருமகனும் <<<<
    என்னமா பொது அறிவில் கலக்குறீங்க?? அவ்வவ் ... ஹா ஹா

    ReplyDelete
  17. (எப்ப ஆமி இப்படி திருந்தின??)<<<<<

    எல்லாம் துஷி என்ற ஒரு தம்பியோட சேர்ந்த பின்புதான்.... ஹா ஹா

    ReplyDelete
  18. அருமைப் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. Theme music + Instrumental கேட்டால் சுகம்...

    Lyrics???? நல்ல கவிதை தேடி படிங்க...யாரோ ரெவெரி எப்பவாவது எழுதினா..-:)

    ReplyDelete
  20. @ஹிதாயத்

    என்னத்த சொல்றது??? சொல்ற மாதிரியா இருக்கு......அடப் போங்க ஆமி....

    //

    ரொம்ப தான் சளிச்ச்சுக்குறீங்க :-)

    ReplyDelete
  21. @நிரூ

    வாங்க நிரூ

    கண்டிப்பா. போட்டி உலகில் தன் இருப்பை நிலை நிறுத்த வித்தியாசமான முயற்சியும் அதிகப்படியான திறமையும் தேவை. இது எந்த துறைக்கும் பொருந்தும் :-)

    சிம்பு தானே? அவர் நம்மலையெல்லாம் ஒலகபாச தெரிஞ்சவர்ன்னு நெனச்சுக்கிட்டாரு என்ன செய்ய :-) ஆனா மியூசிக் அருமை. படமாக்கப்பட்ட விதமும் பக்கா. வரி புரியாததால் எடுபடல!

    ReplyDelete
  22. @மகேந்திரன்

    //இன்றைய தலைமுறையினரின் ரசனையை பார்த்து மனம்
    கொதிப்படைந்தாலும்..
    இசை என்ற வடிவில் பார்க்கையில்
    ஏற்றுக்கொள்ளத்தான் தோன்றுகிறது..//

    வேறு வழி இல்லை என்பதாலோ என்னவோ ஹி..ஹி...ஹி..

    ReplyDelete
  23. @ஐடியாமணி
    //அட, தகவல் புதுஷா இருக்கே! பரீட்சையில கேட்பாய்ங்களா? எதுக்கும் மனப்பாடம் பண்ணி வைக்குறேன்!//

    :-)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோதரர் மணி

    ReplyDelete
  24. @துஷி
    //நானும் பார்த்தேன் ஆமினாக்கா :) ஆனாலும் அனுஷ்கா இருந்தும்.... ஏனோ என்னை கவரவில்லை ... ஒரு வேலை நமக்கு கிரிகெட் புடிக்காது என்ரபடியாலோ :((( அவ்வவ்//

    ஹி..ஹி..ஹி..

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை :-)

    ReplyDelete
  25. @துஷி
    //நானும் பார்த்தேன் ஆமினாக்கா :) ஆனாலும் அனுஷ்கா இருந்தும்.... ஏனோ என்னை கவரவில்லை ... ஒரு வேலை நமக்கு கிரிகெட் புடிக்காது என்ரபடியாலோ :((( அவ்வவ்//

    ஹி..ஹி..ஹி..

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை :-)

    ReplyDelete
  26. @துஷி
    //(எப்ப ஆமி இப்படி திருந்தின??)<<<<<

    எல்லாம் துஷி என்ற ஒரு தம்பியோட சேர்ந்த பின்புதான்.... ஹா ஹா//

    அட
    நா கூட ரொம்ப நாளா குழம்பி போயிருந்தேன்.

    இப்ப தான் தெரியுது பக்கம் பக்கமா கத எழுதுனாலும் :-) :-( இப்படி மட்டும் கமென்ட் போடுற ஆள் கூட சேர்ந்ததுனால தான் நானும் திருந்திட்டேன்னு ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  27. @தனசேகரன்
    வருகைக்கு நன்றிங்க

    ReplyDelete
  28. @ரெவெரி
    //Theme music + Instrumental கேட்டால் சுகம்...

    Lyrics???? நல்ல கவிதை தேடி படிங்க...யாரோ ரெவெரி எப்பவாவது எழுதினா..-:)//

    தனுஷ்கிட்ட அப்படியே சொல்லிடுறேனுங்க... அவர் தூக்கு போட்ட நியூஸ் வந்தா உங்களுக்கு மொத தகவல சொல்லிடுறேன் :-)

    ReplyDelete
  29. @காட்டான் அண்ணா
    :-)
    வருகைக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  30. @சம்பத் குமார்
    என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிங்க சம்பத்

    ReplyDelete
  31. நேரடியா விஷயத்துக்கு மே ஐ கம்மின்//

    குட் லாங்வேஜ்...கீப் இட்

    ReplyDelete
  32. ஆங்க் சொல்ல மறந்துட்டேனே நா படிக்கிற காலத்துல //

    ஓ படிச்செல்லாம் இருக்கிறீங்களா? அவ்வ்வ்

    ReplyDelete
  33. கொலைவெறி ரெண்டு மூனு தடவை கேட்டேன்.. இது கேட்கவே இல்லை...

    ரெண்டுமே படு மொக்கை

    ReplyDelete
  34. இது ரொம்பவும் முக்கியமான தேசபக்தி பாட்டா இருப்பதால் நான் அடுத்த முதலமைச்சராக வந்தால் ஒன்னாங்கிளாஸ் பாட புத்தகத்தில் சேர்ப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியாக இதனால் அறிவிக்கிரேன் :-))

    ReplyDelete
  35. கொலவெறி அதிர்ச்சியில இருந்தே இன்னும் மீளவில்லை... அதுக்குள்ள இன்னொன்னா...... தமிழர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்குன்றத தனுஷ் தப்பா புரிஞ்சிகிட்டார்.... நல்லவேளை இந்த பாட்டு கேட்க ஆரம்பிக்கும்போது கரன்ட் கட்டாயிடுச்சு. ;) :(

    ReplyDelete
  36. ஆங்க் சொல்ல மறந்துட்டேனே நா படிக்கிற காலத்துல ///// இது பொய் தானே?????????? எதுக்கு இந்த பில்டப் எல்லாம்.........!!!!!!!!!!! நல்லா எழுதியிருக்கீங்கன்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க.ஆனாலும் மனம் கேட்கல சொல்லீட்டேன்.சூப்பர்.

    ReplyDelete
  37. @மது
    நேரடியா விஷயத்துக்கு மே ஐ கம்மின்//

    குட் லாங்வேஜ்...கீப் இட்//

    ஹி...ஹி...ஹி...
    தேங்ஸ்ங்க ப்ரதருங்க!

    ReplyDelete
  38. @மது
    //ஆங்க் சொல்ல மறந்துட்டேனே நா படிக்கிற காலத்துல //

    ஓ படிச்செல்லாம் இருக்கிறீங்களா? அவ்வ்வ்//

    அப்படி சைக்கிள் கேப்ல சொல்லிக்கிட்டாதான் உண்டு ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  39. @மது

    //கொலைவெறி ரெண்டு மூனு தடவை கேட்டேன்.. இது கேட்கவே இல்லை...

    ரெண்டுமே படு மொக்கை//

    நம்ம நாட்டின் இரு தேசிய கீதங்களை அவமானப்படுத்திய குற்றத்திற்காக உங்களுக்கு மரணதண்டனை கூட கொடுக்கலாம்!

    ReplyDelete
  40. @சிராஜ்

    ப்பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கமென்ட்க்கு மிக்க நன்றி சகோ :-)

    ReplyDelete
  41. @ஜெய்லானி

    //இது ரொம்பவும் முக்கியமான தேசபக்தி பாட்டா இருப்பதால் நான் அடுத்த முதலமைச்சராக வந்தால் ஒன்னாங்கிளாஸ் பாட புத்தகத்தில் சேர்ப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியாக இதனால் அறிவிக்கிரேன் :-))//

    ச்ச... மிஸ் பண்ணிட்டேன்..
    நீங்க முதலமைச்சரா இருக்கும் காலத்தில் நா படிக்கும் வாய்ப்பு கெடச்சுருந்தா எல்லா பாடத்துலையும் 100க்கு 101 வாங்கியிருப்பேன் ஹி..ஹி...ஹி..

    வருகைக்கு நன்றி ஜெய்

    ReplyDelete
  42. @என்றென்றும் 16

    //கொலவெறி அதிர்ச்சியில இருந்தே இன்னும் மீளவில்லை... அதுக்குள்ள இன்னொன்னா...... தமிழர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்குன்றத தனுஷ் தப்பா புரிஞ்சிகிட்டார்.... நல்லவேளை இந்த பாட்டு கேட்க ஆரம்பிக்கும்போது கரன்ட் கட்டாயிடுச்சு. ;) :(//

    கரன்ட் க்கூட சதி பண்ணுது பாத்தீங்களா அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  43. @விஜி
    //ஆங்க் சொல்ல மறந்துட்டேனே நா படிக்கிற காலத்துல ///// இது பொய் தானே??????????//

    ஹி...ஹி...ஹி... ஆருகிட்டையும் சொல்லிடாதீங்கோ :-)

    //எதுக்கு இந்த பில்டப் எல்லாம்.........!!!!!!!!!!! நல்லா எழுதியிருக்கீங்கன்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க.ஆனாலும் மனம் கேட்கல சொல்லீட்டேன்.சூப்பர்//
    உங்களுக்கு ப்ரன்டா இருந்துட்டு இப்படியெல்லாம் எழுதுலைன்னா எந்த பயலும் மதிக்கமாட்டாய்ங்க விஜி ஹி..ஹி..ஹி..

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)