எல்லாரும் நல்லாக்கீகளா? (நல்லா இல்லைன்னா மட்டும் என்ன பண்ண போற?
சாப்டீயளா? (சாப்டளைன்னா மட்டும் சரவண பவன்க்கு கூடிட்டு போகப்போறீயா?)
புள்ளகுட்டிலாம் சவுக்கியமா? (ஏன் I.A.S படிக்க வச்சு டாக்டராக்க போறீயா? இல்ல M.B.B.Sக்கு படிக்க வச்சு டாக்குடரு விஜயா ஆக்க போறீயா?)

வரவர சரக்கு கம்மியாய்ட்டே  போயி ஒரு வட்டத்துல (எத்தன நாள்தான் கட்டத்த சொல்றது?)  மொத்தமா தீர்ந்து போச்சு(கொள்ள காலமா அப்படிதானே எழுதிட்டிருக்க.. இப்ப மட்டும் என்ன புதுசா???) அதுனால இனிமே பதிவு போடவேண்டாம்னு நெனச்சுட்டிருக்கும் போது மண்டைல பல்பு எறிஞ்சுடுச்சு... அதெப்படி? நாம இல்லைன்னா பயபுள்ளைக ரொம்ப சந்தோஷமா இருக்குங்களே... விடுவோமா? (நல்லவையே நினை என்பது உன் அதிகாரத்திலேயே இல்லையா?)

யோசிச்சேன்.....யோசிச்சேன்... 4 வேளையும் சாப்பிட்டு யோசிச்சேன், ஆப்பிள் பழத்த சின்ன சின்ன துண்டா எங்காள கட் பண்ண சொல்லி ஊஞ்சல்ல உக்கார்ந்துக்கிட்டு ஆடுக்கிட்டே, சாப்டுக்கிட்டே யோசிச்சேன். சன்டீவில காலைல இருந்து நைட்டு தூங்குறவரைக்கும் போடுற நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான பல அழுவாச்சி காவியங்களை ஒன்னுவிடாம பார்த்துட்டே யோசிச்சேன்.  அப்ப தான் மறுபடியும் மண்டைக்குள்ள ப்ரகாசமா லைட்டு எறிஞ்சுடுச்சு... இனி அடுத்தவரின் பதிவு பார்த்து நாமளும் எழுதணும்னு... அது காப்பி பேஸ்ட்டு இல்லங்கண்ணா ... கான்சப்ட் மட்டும் எடுத்து (திருடி ஹி...ஹி..ஹி..) என் மூளைய கசக்கி, ராப்பகலா யோசிச்சு, அதுக்கு தலைப்பு வைக்க பாடாத பாடு பட்டு, சில இடங்களில் போல்ட் பண்ணி, சில இடங்களில் கலர் கொடுத்து, பதிவுக்கு சம்மந்தமே இல்லாத போட்டோவ தேடி கண்டுபிடிச்சு என் கற்பனையும்  புகுத்தி எழுதுவதால் (சொந்தமா யோசிச்சு பதிவு போட்டவிங்க கூட இந்த அளவுக்கு பில்டப் கொடுக்க மாட்டாய்ங்க ஹி..ஹி..ஹி..) இத ஆரும் காப்பிபேஸ்ட்டு சொல்லப்படாது சொல்லிபுட்டேன். இது ஒரு "அடுத்தவிங்க சரக்கு" பதிவு :-)  காப்புரிமை குட்டிசுவர்க்கத்துக்கே

(@பாலா..... பதிவர்களின் வகைகள் 2ம் பாகம் போட்டீங்கன்னா  குட்டிசுவர்க்கம் ஆமினா தோற்றுவித்த அடுத்தவிங்க சரக்கு பதிவர்கள்... என்ற வார்த்தை வரணும் சரியா??... வரலாறு மிக முக்கியம் பாலா சார் அவ்வ்வ்வ்)

பதிவுலக வருங்கால சூப்பர் ஸ்டார் தாமரைகுட்டியின் வேண்டுகோளுக்கிணங்க( 2 நிமிஷத்துக்குள்ள படிச்சு முடிக்கிற மாதிரி பதிவு போடவாம்) இந்த பதிவை இத்துடன் முடிக்கிறேன். நாளைய பதிவை படிக்க 1/2 மணி நேரம் ஒதிக்கி வச்சுட்டு வாங்க மக்கா...

37 comments:

 1. இதுவும் நல்ல கான்சப்ட் தாங்க.நீங்க பெரிய ஸ்பஸலீஸ்ட்டாகப்போறீங்க.வாழ்த்துகள்

  ReplyDelete
 2. இனிய காலை வணக்கம் அக்கா,

  தாமரைக்குட்டிக்கே பல்பு கொடுத்திட்டீங்க எல்லே..

  அதென்ன வருங்கால சூப்பர் ஸ்டார்..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. //thirumathi bs sridhar said...

  இதுவும் நல்ல கான்சப்ட் தாங்க.நீங்க பெரிய ஸ்பஸலீஸ்ட்டாகப்போறீங்க.வாழ்த்துகள்
  //

  வராதவங்க வந்துருக்கீங்க... தேங்க்ஸ்ங்க. தூரமா ப்ரகாசமா லைட்டு எரியுது எனக்கு தெரியுது ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 4. @நிரூ

  //அதென்ன வருங்கால சூப்பர் ஸ்டார்..//

  நீங்களாம் ஒரு நாளைக்கு 4 பதிவுன்னு எழுதி பிரபலமாய்ட்டீங்க. ஆனா பாத்தீங்களா தாமரைய? 1 பாலோவர்ஸோட, இன்னும் எழுதப்படாத ப்ளாக்கோட இருந்துக்கிட்டே ப்ரபலமாய்ட்டாரு. இப்ப தெரியுதா ஏன் சூப்பர் ஸ்டார் என....
  ஹி...ஹி...ஹி..

  ReplyDelete
 5. சகோ ஆமினா! உங்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு என்று எமக்கு முன்பே தெரியும்! அதுக்காக இப்படியா? ஒரே சிரிப்புத்தான் போங்க!

  ( எதுக்கும் அட்வான்ஸா பாராட்டி வைப்போம்! இல்லேன்னா நம்மளையும் கடிச்சு வைச்சிடப் போறாங்க? :-) )

  ReplyDelete
 6. என்னது தாமரைக்குட்டி வருங்கால பதிவுலக சூப்பர்ஸ்டாரா?

  தாமரை அண்ணே, உங்க கால காட்டுங்க! அப்புடியே பொத்துன்னு விழுந்துடுறேன்! நம்ம ப்ளாக் பக்கமும் வாங்க!

  ReplyDelete
 7. @ஐடியா
  //
  ( எதுக்கும் அட்வான்ஸா பாராட்டி வைப்போம்! இல்லேன்னா நம்மளையும் கடிச்சு வைச்சிடப் போறாங்க? :-) )//

  நீங்க பாராட்டுனாலே பயம்மா இருக்கு சகோதரர் ஐடியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 8. @ஐடியா மணி

  // என்னது தாமரைக்குட்டி வருங்கால பதிவுலக சூப்பர்ஸ்டாரா?

  தாமரை அண்ணே, உங்க கால காட்டுங்க! அப்புடியே பொத்துன்னு விழுந்துடுறேன்! நம்ம ப்ளாக் பக்கமும் வாங்க!
  //

  இவரு நீங்கன்னு ஊருக்குள்ள பேச்சு அடிபடுதே... அப்படியா?? ஹி..ஹி...ஹி... (கோர்த்து விட்டாச்சு. இன்னைக்கு நிம்மதியா இருக்கலாம்)

  ReplyDelete
 9. சன்டீவில காலைல இருந்து நைட்டு தூங்குறவரைக்கும் போடுற நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான பல அழுவாச்சி காவியங்களை ஒன்னுவிடாம பார்த்துட்டே யோசிச்சேன்.//////

  ஆனாலும் இது ரொம்ப ஓவருங்க! மெஹா சீரியல் பார்த்துட்டே எப்படீங்க சகோ யோசிக்கமுடியும்?

  சீரியல்கள் நம்மளைச் சிந்திக்கவிடுமா என்ன? :-(

  ReplyDelete
 10. கண்டிப்பா மேடம். ஒரே கல்வெட்டே போட்டுவிடுகிறேன்.

  ReplyDelete
 11. @ஐடியாமணி

  //
  சீரியல்கள் நம்மளைச் சிந்திக்கவிடுமா என்ன? :-(//
  நல்ல பன்ச் தான். ஆனா

  திருமதி செல்வம் ல செல்வம் சாகுற சீன் வந்தா அதுக்கு நாம ஒப்பாரி வைக்கலைன்னா எப்படி சகோ? ஊர் ஒலகம் நம்மல என்னான்னு சொல்லும்? ஹி...ஹி...ஹி...

  அடுத்தவரின் சுக,துக்கங்களில் பங்கெடுத்துக்குறது தான் மனிதநேயம் அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 12. @பாலா
  // கண்டிப்பா மேடம். ஒரே கல்வெட்டே போட்டுவிடுகிறேன்.
  //

  ஹி...ஹி..ஹி.. பெரிய கல்வெட்டா போடுங்க. திறப்பு விழாவுக்கு பிரதமர கூப்பிட்டுடுவீங்க தானே? :-)

  அப்பறம் அத தஞ்சாவூர் கோயில் வாசல்ல மட்டும் தான் வைக்கணும் சொல்லிபுட்டேன் :-)

  ReplyDelete
 13. ////இல்ல M.B.B.Sக்கு படிக்க வச்சு டாக்குடரு விஜயா ஆக்க போறீயா?)
  ////

  ஹா.ஹா.ஹா.ஹா. அது என்னமோ தெரியலைங்கா
  விஜயை எங்க கலாச்சாலும் அது புடிக்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 14. ////ஆப்பிள் பழத்த சின்ன சின்ன துண்டா எங்காள கட் பண்ண சொல்லி ஊஞ்சல்ல உக்கார்ந்துக்கிட்டு ஆடுக்கிட்டே, சாப்டுக்கிட்டே யோசிச்சேன். ////

  நல்லாத்தான் மொக்கை போடுறீங்க பாவம் உங்க ஆத்துக்காரர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 15. அட பார்டா..! ஆமினாவுக்கும் பப்பிளிக்குட்டி ஆசை வந்திட்டுபோல..? அதுதான் தாமரைக்குட்டிக்கு பல்பு கொடுத்து கல்வெட்டில் இடம்பிடிக்கப்போறீங்களா..?;-);-)

  ReplyDelete
 16. ஒன்னுமே இல்லாம இவ்வளவு சுவாரஸ்யமா எழுதுவது எப்படின்னு உங்க கிட்டதான் கற்று கொள்ள வேண்டும் சிஸ்டர்

  ReplyDelete
 17. //என் மூளைய கசக்கி,//

  Objection your honour. வழக்கிற்கு சம்மந்தம் இல்லாமல் பேசுகிறார்.

  ReplyDelete
 18. அன்பு சகோதரி,
  கேள்வியும் நானே..
  பதிலும் நானே..
  நீ ஒரு கேள்வி கேட்டா..
  நாங்களும் கேள்வி கேப்போமில்ல..

  இப்படியான ரீதியில் ஒரு அழகான
  நகையுணர்வுடன் பதிவு...
  ரசித்தேன் சகோதரி..

  ReplyDelete
 19. @குட்டிபையன்

  ////இல்ல M.B.B.Sக்கு படிக்க வச்சு டாக்குடரு விஜயா ஆக்க போறீயா?)
  ////

  ஹா.ஹா.ஹா.ஹா. அது என்னமோ தெரியலைங்கா
  விஜயை எங்க கலாச்சாலும் அது புடிக்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  //

  ஹி...ஹி...ஹி...

  இப்படி ஒரு பெரிய க்ரூப்பே அலையுது போல :-)

  ReplyDelete
 20. @குட்டிபையன்
  //
  நல்லாத்தான் மொக்கை போடுறீங்க பாவம் உங்க ஆத்துக்காரர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  மச்சான பாத்துலாம் வருத்தப்படக்கூடாது. அக்கா சொகுசா இருக்கான்னு மட்டும் பாருங்கோ :-)

  ReplyDelete
 21. @காட்டான் அண்ணா
  // அட பார்டா..! ஆமினாவுக்கும் பப்பிளிக்குட்டி ஆசை வந்திட்டுபோல..? அதுதான் தாமரைக்குட்டிக்கு பல்பு கொடுத்து கல்வெட்டில் இடம்பிடிக்கப்போறீங்களா..?;-);-)
  //

  ஹி...ஹி..ஹி...

  கைல சரக்கு இல்லைங்குறத இப்படி சொல்லலாம்னு நெனச்சேன். அது வேற மாதிரியா போயி முடியுது... ஆனாலும் சீக்கிரமே பிரபலபதிவராய்டுவேன்னு நம்பிக்க வந்துடுச்சு அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 22. @சிவகுமார்
  // //என் மூளைய கசக்கி,//

  Objection your honour. வழக்கிற்கு சம்மந்தம் இல்லாமல் பேசுகிறார்.
  //

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 23. @மகேந்திரன்
  வாங்க சகோ.. நலமா?

  //அன்பு சகோதரி,
  கேள்வியும் நானே..
  பதிலும் நானே..
  நீ ஒரு கேள்வி கேட்டா..
  நாங்களும் கேள்வி கேப்போமில்ல..

  இப்படியான ரீதியில் ஒரு அழகான
  நகையுணர்வுடன் பதிவு...//

  மிக்க நன்றி சகோ :-)

  ReplyDelete
 24. @ஹாஜா மைதீன்
  // ஒன்னுமே இல்லாம இவ்வளவு சுவாரஸ்யமா எழுதுவது எப்படின்னு உங்க கிட்டதான் கற்று கொள்ள வேண்டும் சிஸ்டர்
  //

  ஹி..ஹி...ஹி.. நானும் இன்னைக்கு தான் கத்துக்கிட்டேன் ப்ரதர் அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 25. நல்ல கடிக்குறீங்க போங்க சூப்பர் பதிவு.

  ReplyDelete
 26. ஆமி எங்கியோ போயிட்டே. வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. யோசிங்க... ஆனா! சூப்பரா கலக்கிடுவீங்க.

  ReplyDelete
 28. 4 வேளையும் சாப்பிட்டு யோசிச்சேன், ஆப்பிள் பழத்த சின்ன சின்ன துண்டா எங்காள கட் பண்ண சொல்லி ஊஞ்சல்ல உக்கார்ந்துக்கிட்டு ஆடுக்கிட்டே, சாப்டுக்கிட்டே யோசிச்சேன்.///
  நாலு வேளை சாப்பிட்டு, அதுக்கப்புறமும் பழங்கள் வேறா?....அப்படின்னா சீக்கிரமே வரப்போகும் பஞ்சத்திற்கு நீங்க தான் காரணம் சகோ

  ReplyDelete
 29. கொட்ட கொட்ட டிவி பார்த்துட்டும் ஒன்னும் சிக்கலியாயா எழுத...

  சானல மாத்திப்பாருங்க சகோதரி..அதைத்தான் நான் செய்வேன்..-:)

  ReplyDelete
 30. @தனசேகரன்
  //நல்ல கடிக்குறீங்க போங்க சூப்பர் பதிவு.//

  அச்சச்சோ... ஊசி போட்டுட்டீங்களா? தொப்புள் சுத்திலாம் தேவையில்ல இப்ப. கைல ஒரு ஊசி போதும். GHக்கு சீக்கிரம் போயிடுங்க ஹி...ஹி..ஹி.. வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 31. @மாமி
  //ஆமி எங்கியோ போயிட்டே. வாழ்த்துகள்.//

  எனக்கும் ஆச தான் மாமி. ஆனா இன்னும் பரமக்குடியிலேயே இருக்கேனே.. ஏதாச்சும் வழி சொல்லுங்களேன் ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 32. @விச்சு
  //யோசிங்க... ஆனா! சூப்பரா கலக்கிடுவீங்க.//
  இல்ல சகோ.

  உக்கார்ந்து, நின்னுக்கிட்டு, தூங்கிட்டு கூட யோசிச்சு பார்த்துட்டேன். எதுவும் மண்டைக்கு ஏறல.... ஹி...ஹி...ஹி..
  நன்றிங்க

  ReplyDelete
 33. @சகோ கஸாலி
  //4 வேளையும் சாப்பிட்டு யோசிச்சேன், ஆப்பிள் பழத்த சின்ன சின்ன துண்டா எங்காள கட் பண்ண சொல்லி ஊஞ்சல்ல உக்கார்ந்துக்கிட்டு ஆடுக்கிட்டே, சாப்டுக்கிட்டே யோசிச்சேன்.///
  நாலு வேளை சாப்பிட்டு, அதுக்கப்புறமும் பழங்கள் வேறா?....அப்படின்னா சீக்கிரமே வரப்போகும் பஞ்சத்திற்கு நீங்க தான் காரணம் சகோ//

  கண்ணு வைக்காதீங்க சகோ. அப்பறம் பத்து இட்டிலி கம்மியா சாப்பிட போறேன் ஹி...ஹி...ஹி..

  ReplyDelete
 34. @ரெவரி
  // கொட்ட கொட்ட டிவி பார்த்துட்டும் ஒன்னும் சிக்கலியாயா எழுத...//

  கொட்ட கொட்டவா? யாரையும் நா கொட்டலையே சகோ ஹி...ஹி..ஹி..

  //சானல மாத்திப்பாருங்க சகோதரி..அதைத்தான் நான் செய்வேன்..-:)//
  நீங்க வேற... சீரியல்ல வச்சு சீரியல் விமர்சனம்னு ஒரு புதிய முயற்சியை தொடங்கலாம்னு இருக்கேன் :-)))

  ReplyDelete
 35. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

  என்னுடைய பல பதிவுகள் இம்மாதிரியான வட்டத்திற்குள் வருபவை தான்.

  பதிவுகளின் மொத்த கருவையும் எடுப்பதில்லை. ஒரு கட்டுரையை படித்து கொண்டே வரும் போது, அதில் ஒரு தகவல் அல்லது சில நம் கவனத்தை ஈர்க்கும். அப்படியான தகவல்களை நோட் செய்துக்கொண்டு அவை குறித்து தேடுவேன். இப்படியாக ஒரு பத்து இருபது கட்டுரைகள் படித்தால் ஏதாவது ஒரு விசயம் கிடைக்கும். அதனை வைத்து வடிவமைத்துவிடுவேன்.

  தகவல்களை திரட்டுவதர்கென்றே சிலபல தளங்களை வைத்துள்ளேன். அவைகளில் உலகில் நடக்கும் முக்கிய பல விசயங்களையும் தொகுத்து போட்டுவிடுவார்கள். நாம் அவற்றை தொடர்ந்து வாட்ச் செய்துக்கொண்டே இருந்து, நமக்கு பிடித்த விசயங்களை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து நம் தேடல்களை வகுத்துக்கொண்டு ஒரு பதிவை கொண்டுவந்துவிட வேண்டியது தான்.

  நல்ல முயற்சி. செய்யுங்கள், இறைவன் துணை நிற்பானாக..ஆமீன்

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 36. வ அலைக்கும் சலாம்..

  நம்மல யாரும் காப்பி பேஸ்ட் பதிவர்ன்னு சொல்லிடகூடாதே :-) அதான் முன்கூட்டியே சொல்லிவச்சுக்கிட்டேன் ஹி...ஹி...ஹி..

  நன்றிங்க சகோ

  ReplyDelete
 37. இது ஏன் ஷர்மி உனக்கு இத்தன நாளா தோனல?? :p ஹாஹாஹா.... ( என்னிக்கு மா நீ உன் சொந்த கற்பனைல பதிவு எழுதுனே?? அப்புடின்னு நம்ம ஆமினா சொல்றது கேக்குது)விடுங்க பாஸ் அரசியல்ல இதெல்லாம் சகஜம் :p

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)